Sign in to follow this  
Jamuna

மனிசியிட்ட அடி வாங்கினியளோ!!

மனிசியிட்ட அடி வாங்கினீங்களோ!!  

14 members have voted

 1. 1. மனைவியிடம் அடி வாங்கினீங்களா???

  • ஆம்!!
   1
  • இல்லை!!
   13
 2. 2. கணவன் மனைவிகிடையும் நடக்கும் சண்டை ஆக கூடியது எத்தனை நாளைக்கு!!

  • சில மணித்தியாலங்கள்!!
   4
  • இரவு மட்டும்!!
   1
  • 1 நாள்!!
   2
  • 2 நாள்!!
   1
  • 3 நாள்!!
   0
  • 4 நாள்!!
   0
  • 1 கிழமை!!
   1
  • சண்டை பிடிக்க மாட்டோம்!!
   5


Recommended Posts

மனிசியிட்ட அடி வாங்கினியளோ!!

sunset7eq3.jpg

எல்லாருக்கு மறுபடி வணக்(கம்)...மறுபடி வந்துட்டானே என்று பார்க்கிறது விளங்குது..(யாரும் நினைக்காத நேரத்தில கரக்டா வருவோமல :) )..எப்ப வாரது என்பதும் முக்கியமல்ல எப்ப போறது என்பது முக்கியம்மல இடையில என்ன செய்தோம் என்பது தான் முக்கியம்..(இன்றைய நற்சிந்தனை ஜம்மு பேபியின்)..

சரி எனி மாட்டருக்கு வருவோம் என்ன..அன்னைக்கு இப்படி தான் ஜம்மு பேபி விசிட் போயிருந்தது ஒரு வீட்ட...(நேக்கு உந்த விசிட் போறது என்றா விருப்பமே இல்லை)...நான் வாறதில்ல என்று மம்மியிட்ட போட்டு கொடுக்கிறாங்களே என்று என்ன செய்யிறது என்று போனது,அங்க போனா..(சும்மா சொல்ல கூடாது நல்லா தான் வரவேற்றவை பாருங்கோ)..நானும் அவையோட இருந்து கதைத்து கொண்டு இருந்தனான்... :lol:

பட் என்னவென்றா அந்த அங்கிளும்,ஆண்டியும் ஒருவரை ஒருவர் பார்த்து கதைக்காம என்னவோ எனிமி மாதிரி இருந்துச்சீனம் நான் கண்டிட்டேன் வெளியாள காட்டி கொள்ள கூடாது என்று போட்டு நல்ல பிள்ளையாட்டம் இருந்தனான் என்றா பாருங்கோ... :lol:

இப்படி அவையோட பேசி கொண்டிருக்கும் போது அவையின்ட மகள் வந்தாள்..வந்தவா எனக்கு ஒரு "காய்" சொன்னா நானும் சொன்னனான் திருப்பி..(ஏனேன்றா மகள் பரவால்லாம தான் இருந்தவா அது தான் :( )...என்னோட கதைத்து போட்டு..(டாடி,மம்மி உங்க கோபம் போயிட்டா என்று கேட்டா)..எனக்கு ஒரு இலவும் விளங்கல்ல..(பட் என்னவோ நடந்திருக்க வேண்டும் என்பதை மட்டும் கண்டி பிடித்து போட்டன் உதில நாம யார்)..

அந்த அங்கிளும்,ஆண்டியும் சிரித்து மழுப்ப நேக்கு கொஞ்சம் விளங்கிட்டு..(உவையளுக்கிடையே என்னவோ பிரச்சினை என்று)..உடன அவையின்ட மகள்..(தமிழை கொஞ்சம் கஷ்டபட்டு கதைத்தா தானே உங்க ஸ்டைல் அந்த ஸ்டைலில)...அண்ணா இங்க பாருங்கோ என்று சொல்ல..(எனக்கு சரியான கோபம் பின்ன நல்ல நல்ல பிகர் எல்லாம் என்னை அண்ணா என்று சொன்னா எப்படி இருக்கும் நீங்களே யோசியுங்கோ :D சப்பை பிகர் எல்லாம் என்னை அண்ணா என்று சொல்லலாம் அதில நேக்கு பிரச்சினை இல்ல அதுக்காக என்ட தங்கச்சிமார்கள் எல்லாம் கோவித்து போடாதையுங்கோ என்ன)...

ம்ம்..எங்க விட்டனான்..(அண்ணா என்றதில தானே)...நானும் ஒம் தங்கச்சி சொல்லுங்கோ என்று சொன்னனான் பட் நிசமா தங்கச்சியா எல்லாம் நினைக்கல அது வேற மாட்டர்..அவா சொன்னா மம்மிக்கும்,டாடிக்கும் சண்டை..(உவையின்ட சண்டை எனக்கு பெரிய விசர் என்று சொன்னா)..உவா சொல்ல மம்மியும்.டாடியும் ஒருவரை பார்த்து ஒருவர் நெளியீனம்..(நேக்கு சிரிப்பா இருந்துச்சு ஆனா வெளியாள காட்டி கொள்ளவில்லை என்றா பாருங்கோ :D )...

இப்படியே அவா தொடந்தா..(நானும் என்ன செய்யிறது கேட்க வேண்டிய நிலமை கேட்டு கொண்டு இருந்தேன்)...எப்ப பார்த்தாலும் உவைக்கு சண்டை தான் அண்ணா..(சண்டை பிடித்து போட்டு கதைக்காம இருப்பீனம் எனக்கு தான் விசராக இருக்கும் என்று சொல்ல)...எனக்கு வாய் வந்தது தான் உங்களுக்காக தான் நான் இருக்கிறேன் என்னோட கதைக்கலாமே என்று ஆனா அப்படி எல்லாம் சொல்லவில்லை.. :unsure:

உடன அந்த அண்டி அவனே இருந்து போட்டு தான் வீட்ட வருவான்..(அவனை எனி வர பண்ணாம பண்ணிடுவாய் போல இருக்கு என்று)...அவாவும் சிரித்து கொண்டு இல்லை உண்மையை தான் சொன்னன் எப்ப பார்த்தாலும் இரண்டு பேருக்கும் இதுவே வேளை எனக்கு என்னவோ சரி அண்ணா பாய் என்று போயிட்டு போக..(சா அதுகுள்ள போக போறியளா என்னும் கொஞ்சம் நிற்கலாம் என்று வாய் வந்தது ஆனா சொல்லவில்லையே பாய் மட்டும் தான் சொன்னனான் பாருங்கோ :lol: )..

அவள் இப்படி சும்மா தம்பி என்று அங்கிள் சமாளிக்க..(நானும் சும்மா சிரித்து விட்டு வாரேன்)..என்று சொல்லி வெளிகிட..(இல்ல தம்பி சாப்பிட்டு போகும் என்று அவை சொல்ல எனக்கு ஒரே பயம் உவை இரண்டு பேருக்கும் சண்டை சாப்பாட்டில பொயிசன் வைத்தா நம்ம பாடு என்ன என்று போட்டு இல்ல அங்கிள் இன்னொரு நாள் வாரேன் இப்ப வேலை இருக்கு என்று போட்டு நான் ஒரு மாதிரி அந்த கோஷ்டியிட்ட இருந்து எஸ்கேப் ஆகிட்டன் அல்லோ...

ம்ம்ம்...அவையின்ட வீட்ட விட்டு வெளியாள வந்தா பிறகு நேக்கு ஒரே சிரிப்பு..(அடக்கி வைத்திருந்தனான் அப்படியே சிரித்து போட்டன் என்றா பாருங்கோ)..அப்ப தான் யோசித்தன் கல்யாணம் ஆகினவை எல்லாம் இப்படி தான் இருக்கீனம் என்று..(நிசமா என்னால முடியல்ல)..

அப்ப நம்மன்ட கு.சா தாத்தா,கந்தப்பு தாத்தா,சாத்திரி அங்கிள் எல்லாம் எவ்வளவு பாவம் என்று யோசித்தனான் என்றா பாருங்கோ..(அப்ப தான் நெடுக்ஸ் தாத்தா சொன்னா சில பொன் மொழிகள் எல்லாம் நேக்கு ஞாபகம் வந்தது :unsure: )..

ம்ம்..அப்ப கல்யாணம் கட்டினா பிறகு இப்படி எல்லாம் சண்டை வருமோ..(அப்படி வரக்க என்ன செய்வீங்க நீங்க??)..யாரும் மனிசியிட்ட அடியும் வாங்கி இருக்கிறீங்களோ???...சண்டை பிடித்து போட்டு கதைக்காம இருந்தா சரியா??..

இப்படி நேக்கு பல டவுட்டுகள் கல்யாணம் ஆகின பெரியவா தான் இந்த டவுட்டை எல்லாம் கிளியர் பண்ணி வைக்க வேண்டும் சொல்லிட்டன்..

ம்ம்ம்..அக்சுவலா நீங்க மனிசி கூட சண்டை பிடித்தா அல்லது கணவனோட சண்டை பிடித்தா..(எத்தனை நாளிற்கு கதைக்க மாட்டியள்)...அப்ப சாப்பாடு எல்லாம் என்ன மாதிரி என்று சொன்னா இன்னும் நன்னா இருக்கும் பாருங்கோ..(இப்படியான நேரத்தில அவைய ரொம்ப மிஸ் பண்ணுற மாதிரி பீல் பண்ண மாட்டியளோ)..இல்ல அவையாய வரட்டும் என்று போட்டு இருப்பியளோ..??

சில பேர் சொல்லுவீனம்..(அப்பப்ப சண்டை வந்தா தான் நெருக்கம் கூடுமாம் உண்மையோ)..நிசமா இதை பற்றி எல்லாம் நேக்கு தெரியாது நான் பேபியாக்கும்..நீங்க பெரியவாக்கள் தான் சொல்லி தர வேண்டும்..(மனிசியிட்ட அடி வாங்கினாலும் வெட்கபடாம சொல்லுங்கோ என்ன )..

நீங்க சொல்லுறது நம்ம குரு மாதிரி கல்யாணம் கட்ட போற ஆட்களிற்கு ரொம்ப யூஸ்புல்லா இருக்கும் பாருங்கோ..(நான் பேபி அல்லோ)...அதோட மனிசியிட்ட இருந்து அடி விழுந்தாலும் தப்பி கொள்ளளாம் அல்லோ..(எப்படியோ குருவிற்கு கட்டாயம் அடி விழும் :( என்று நேக்கு நன்னா தெரியும் சோ அவரையும் காப்பாற்றின போல போயிடும் அல்லோ)...

அதோட அநேகமான சண்டை ஏன் உங்களுகுள்ள வாறது என்று ஒருக்கா சொல்லி விடுங்கோ என்ன..(ஏனேன்றா அது ரொம்ப இம்போட்டன்ட் ஆக்கும்)...ம்ம் குருவே கவனமா கேளுங்கோ உங்களுக்கு ரொம்ப யூஸ்புல்லா இருக்கும் பாருங்கோ..(கல்யாணம் கட்டினா பிறகு அடி விழக்க பிறகு சிஷ்யனை கூப்பிட கூடாது என்ன நான் அந்த பக்கம் எட்டியும் பார்க்க மாட்டன் ஒகேயா)..

அப்படியே உங்கள் பொன்னான வாக்குகளையும் இட்டு செல்லுங்கோ என்ன..வேறேன்னதிற்கு மனிசியிட்ட அடி வாங்கி இருக்கிறீங்களா மற்றும்..(கணவன்,மனைவிக்கிடையி??் நிகழும் சண்டை ஆக கூடியது எத்தனை நாளைக்கு)...நான் அறிந்தவரை இரவுக்கு கூடுதலான சண்டை முடிந்திடுமாம்..உண்மையாவோ..

(நிசமா நேக்கு தெரியாது நான் பேபியாக்கும்) ..

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா வாழ்க்கையில சண்ட வரணும் ஆனா வாழ்க்கையே சண்டை ஆகிட கூடாது"

அப்ப நான் வரட்டா!!

Share this post


Link to post
Share on other sites

அடி எல்லாம் என்னத்துக்கு, பேச்சு வாங்கினாலே வாழ்க்கை வெறுத்து போகுமே? :lol: எங்கட வீட்டில இப்பிடித்தான் நடக்கிது எண்ட அம்மா அப்பாவிக்கிடையில.. :unsure:

Share this post


Link to post
Share on other sites

2 பேர் சண்டையே பிடிக்க மாட்டோம் என்று வாக்களித்து ஏப்ரல் முட்டாள் ஆக்கி விட்டார்கள்.

Share this post


Link to post
Share on other sites

இன்று யம்முவின் ஸ்பெசல் அடியா? :unsure:

Share this post


Link to post
Share on other sites

எனக்கு இதில வாக்களிக்க தகுதியில்லை.

உலகத்தில நான் மனிசிட்ட அடிவாங்கிற ஆண்களை இன்னும் காணேல்ல. பெண்களும் வாயால வார்த்தையால அடிப்பாங்களே தவிர.. பிசிக்கலா.. ரச் பண்ணுறது ரெம்பக் குறைவு. எல்லாம் ஒரு சேவ்ரி மெசருக்கு என்றுதான் நினைக்கிறேன். ஆண்கள் மீதுள்ள அனுதாபமாத் தெரியல்ல..! :lol::unsure:

Share this post


Link to post
Share on other sites

மனிசியிட்ட அடிவாங்குகிறது ... என்னைப்பற்றி எழுதுகினமோ...

எட ஒன்றும் எழுதவில்லை. நான் தான் தெரியாமல் உளரிவிட்டேனோ.....

Share this post


Link to post
Share on other sites

அடி எல்லாம் என்னத்துக்கு, பேச்சு வாங்கினாலே வாழ்க்கை வெறுத்து போகுமே? எங்கட வீட்டில இப்பிடித்தான் நடக்கிது எண்ட அம்மா அப்பாவிக்கிடையில..

ம்ம்..அப்படியோ குருவே..(ம்ம்ம்..அன்பான ஆட்கள் ஏசினா நேக்கும் பீலிங்கா தான் இருக்கும் :unsure: )...அட உங்க வீட்டையும் அப்படியா முடியல என்னால..அது சரி குருவே உங்களுக்கு கல்யாணம் ஆகினா பிறகு(கண்டிப்பா மனிசியிட்ட ஏச்சு விழும் என்று நேக்கு தெரியும் :lol: )..சரி..சரி அது நம்மளுகுள்ள இருகட்டும் என்ன :D ..அப்படி எச்சு விழும் போது எப்படி சமாளிப்பீங்க என்று ஒருக்கா சொல்லுங்கோ என்ன.. :lol:

அப்ப நான் வரட்டா!!

2 பேர் சண்டையே பிடிக்க மாட்டோம் என்று வாக்களித்து ஏப்ரல் முட்டாள் ஆக்கி விட்டார்கள்.

அப்படி போடுங்கோ நுணா அண்ணா அரிவாள.. :( (ஆமாம் இப்ப மூனு பேர் ஆகிச்சு)...அது சரி உங்க வீட்ட எப்படி அண்ணா..(அண்ணி எப்படி ஆக்கும் :( )...ஏச்சோ அல்லது உதையோ.. :unsure:

அப்ப நான் வரட்டா!!

இன்று யம்முவின் ஸ்பெசல் அடியா?

அதே தான் கறுப்பி அக்கா :) ..(ஆனா நான் யாரிட்டையும் இன்னைக்கு அடி வாங்கல பாருங்கோ)...எனி விழுதோ தெரியாது..கறுப்பி அக்கா உங்களுக்கு வாறவர் நோட்டியா இருந்தா அடிப்பீங்களோ.. :D (ஒருக்கா சொல்லுங்கோ :lol: )..

அப்ப நான் வரட்டா!!

Share this post


Link to post
Share on other sites

எனக்கு இதில வாக்களிக்க தகுதியில்லை.

உலகத்தில நான் மனிசிட்ட அடிவாங்கிற ஆண்களை இன்னும் காணேல்ல. பெண்களும் வாயால வார்த்தையால அடிப்பாங்களே தவிர.. பிசிக்கலா.. ரச் பண்ணுறது ரெம்பக் குறைவு. எல்லாம் ஒரு சேவ்ரி மெசருக்கு என்றுதான் நினைக்கிறேன். ஆண்கள் மீதுள்ள அனுதாபமாத் தெரியல்ல..!

ம்ம்..தாத்தவிற்கு வாக்களிக்க தகுதி இல்லையா..(வாக்களிக்கிற வயசு தானே தாத்தா :( )..!!

அட மனிசியிட்ட அடி வாங்கின ஒரு ஆணையும் நீங்க காணலையா..(நான் சிட்னியில் கண்டிருக்கிறன் தாத்தா பொய் இல்லை உண்மையாவே :unsure: )..நேக்கு முழு கதையும் தெரியாது உந்த கந்தப்பு தாத்தாவிற்கு தான் தெரியும் அது...(கந்தப்பு தாத்தா அவரை பற்றி கொஞ்சம் சொல்லுங்கோவன் கேட்போம் :D )...

வாயால வார்த்தைகளாள் அடிக்கிறதில என்ன பிரயோசனம் தாத்தா..(அதை இந்த காதால கேட்டு அந்த காதால விட்டிடுவீனம் தானே :lol: )...போங்கோ தாத்தா இப்ப பெண்களுக்கு "கராட்டி" எல்லாம் நல்லா தெரியும் பாருங்கோ..(ஆண்கள் தான் எனி சேவ்டியா இருக்க வேண்டும் :) )...

அப்ப நான் வரட்டா!!

மனிசியிட்ட அடிவாங்குகிறது ... என்னைப்பற்றி எழுதுகினமோ...

எட ஒன்றும் எழுதவில்லை. நான் தான் தெரியாமல் உளரிவிட்டேனோ.....

அட..அட கந்தப்பு தாத்தாவிற்கு நேற்று இராத்திரியும் அடியாம்..(நிசமாவோ :lol: )...ஆமாம் அடி வாங்கின பயத்தில உளறிட்டியள் இங்க என்று நினைக்கிறன் :unsure: ..(என்னால முடியல :lol: )...

அப்ப நான் வரட்டா!!

Share this post


Link to post
Share on other sites

இப்ப பெண்களுக்கு "கராட்டி" எல்லாம் நல்லா தெரியும்

கராட்டி.. புருசன் கிட்ட எப்படி.. உதவும்..! அடிவாங்கிற புருசன் அப்புறம் சந்தர்ப்பம் கிடைகேக்க.. பழிவாங்கிடலாம் இல்லையா. அதுதான் சொன்னேன்.. ஒரு சேவ்ரி மெசருக்காக கராட்டி தெரிஞ்சிருந்தாலும் பிசிக்கலா ரச்... பண்ண முயலுறதில்ல (பொதுவா.. சில விதிவிலக்குகள் இருக்கலாம்) பெண்கள்.. எல்லாம் அவங்க சுயநலனில தானே தவிர புருசன் பாவமென்றில்ல..! :unsure:

Edited by nedukkalapoovan

Share this post


Link to post
Share on other sites

ஜம்ஸ்! அங்க இங்க தொட்டு அந்தரங்கத்துக்குள்ளேயே வந்திட்டீங்கள். நம்மளுக்கும் உங்ளை விட்டா வேறு யாரிருக்கினம் இதையெல்லாம் அன்பாய்! கேட்பதற்கு.

இதுவரை அடி வாங்கேல்ல. எதிர்காலத்தில என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். எல்லாம் நம்ம கையிலா இருக்குது. ஆனால் குருஜி கூறியது மாதிரி அவங்க பேசுற பேச்சுக்கும், புறுபுறுப்புக்கும் பதிலா ரெண்டு போட்டுட்டு போய்க்கொண்டே இருக்கலாம். அவங்களும் வேறுயாரிட்டத்தான் தம் கோப தாபங்களைக் காட்ட முடியும் என்ன நான் சொல்றது. அப்பப்ப நாக்கப் பிடுங்கிக்கலாம் போலத்தான் இருக்கும்.ஆனால் அதுக்கும் ஆதிஷேசன் மாதிரி மினிமம் ஆயிரம் நாக்காவது வேண்டும். இருக்கிற ஒரு நாக்கையும் பிடுங்கிப் போட்டு என்ன செய்யிறது? ஆனால் அந்தக் கோபமும், ஊடலும் தீர்ந்ததும் அவங்கள் காட்டும் அன்புக்கு எல்லைதான் ஏது? அதற்காகவாவது எவ்வளவு ஏச்சும் வாங்கலாம். அட யாரது ஏதோ மான, ரோசம் என்று கேட்ட மாதிரியிருக்குது? அந்த நரம்பத்தானே அப்பு தாலியாக்கி பீரோவில சீ கழுத்தில தொங்கவிட்டுக் கொண்டு திரியறாங்கள்!!! :unsure::lol:

Share this post


Link to post
Share on other sites

எனக்கு விளங்குது .மருமேன் கலியாணம் செய்யப்போறார் போலை

எதற்கும் உசாராக தகவல்களை சேகரிக்கின்றார்.

மருமேன் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தால் அடி விழாது.

வாழ்க்கையிலை கொடுக்கல் வாங்கல் சகஜம் :unsure::lol::unsure::):lol::lol::(

Share this post


Link to post
Share on other sites

உங்க வாக்கெடுப்கை உங்களுக்குள்ளேயே நடத்திக்குங்க, நான் ஒரு அனுமார் பக்தனாக்கும் சொல்லிட்டேன்.

Share this post


Link to post
Share on other sites

ஜம்முவெல்லாம் விசிட் போகுது. ஆச்சரியமாக இருக்குது

ஜம்மு நீங்கள் எடுக்கும் வாக்கெடுப்பு சூப்பர். ஆனால் கல்யாணம் செய்தவர்களோ இதுக்கு கொமன்ஸ் சொல்ல முடியும்?. :icon_mrgreen:

இருப்பினும் ஒரு பொண்டாட்டி புருசனை அடிக்க கை ஓங்கினால் அக்கையை ஒடிச்சிடணும். ஹாஹா யாருகும் யாரும் அடிக்கும் உரிமை இல்லைப்பா. சும்மா வாய்தகராறு செய்யலாம். அதுக்காக அடி எல்லாம் ரூ மச். :lol:

Share this post


Link to post
Share on other sites

கராட்டி.. புருசன் கிட்ட எப்படி.. உதவும்..! அடிவாங்கிற புருசன் அப்புறம் சந்தர்ப்பம் கிடைகேக்க.. பழிவாங்கிடலாம் இல்லையா. அதுதான் சொன்னேன்.. ஒரு சேவ்ரி மெசருக்காக கராட்டி தெரிஞ்சிருந்தாலும் பிசிக்கலா ரச்... பண்ண முயலுறதில்ல (பொதுவா.. சில விதிவிலக்குகள் இருக்கலாம்) பெண்கள்.. எல்லாம் அவங்க சுயநலனில தானே தவிர புருசன் பாவமென்றில்ல..!

ம்ம்..தாத்தா சொல்லுறது சரி தான்..(ம்ம்..சந்தர்ப்பம் வரக்க புருசன் பழி வாங்கிடலாம் சரி :lol: )..ஆனா நித்தா கொள்ளக்க தலையில என்னத்தையும் தூக்கி போட்டு விட்டாங்க என்றா..(இது எப்படி இருக்கு தாத்தா)..யாருக்கு தெரியும் தாத்தா எப்ப என்ன செய்வீனம் என்று... :lol:

என்னவோ தாத்தா சொல்லுறார் பிசிக்கலா தச் பண்ணமாட்டீனம் என்று...(தச் பண்ணிட்டீனம் என்றா அதற்கு பிறகு என்னத்தை செய்யிறது :o )..ஒரு படத்தில வடிவேல் சொல்லுற மாதிரி கோட்டை கீறி போட்டு உந்த கோட்டை தாண்டி நானும் வரமாட்டன் நீங்களும் வரபாடாது :lol: ..(என்ன இருந்தாலும் பேசி தீர்த்து கொள்வோம் என்று சொல்லுறது தான் நல்லதா படுது தாத்தா :icon_mrgreen: )...

அப்ப நான் வரட்டா!!

Share this post


Link to post
Share on other sites

ஜம்ஸ்! அங்க இங்க தொட்டு அந்தரங்கத்துக்குள்ளேயே வந்திட்டீங்கள். நம்மளுக்கும் உங்ளை விட்டா வேறு யாரிருக்கினம் இதையெல்லாம் அன்பாய்! கேட்பதற்கு.

இதுவரை அடி வாங்கேல்ல. எதிர்காலத்தில என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். எல்லாம் நம்ம கையிலா இருக்குது. ஆனால் குருஜி கூறியது மாதிரி அவங்க பேசுற பேச்சுக்கும், புறுபுறுப்புக்கும் பதிலா ரெண்டு போட்டுட்டு போய்க்கொண்டே இருக்கலாம். அவங்களும் வேறுயாரிட்டத்தான் தம் கோப தாபங்களைக் காட்ட முடியும் என்ன நான் சொல்றது. அப்பப்ப நாக்கப் பிடுங்கிக்கலாம் போலத்தான் இருக்கும்.ஆனால் அதுக்கும் ஆதிஷேசன் மாதிரி மினிமம் ஆயிரம் நாக்காவது வேண்டும். இருக்கிற ஒரு நாக்கையும் பிடுங்கிப் போட்டு என்ன செய்யிறது? ஆனால் அந்தக் கோபமும், ஊடலும் தீர்ந்ததும் அவங்கள் காட்டும் அன்புக்கு எல்லைதான் ஏது? அதற்காகவாவது எவ்வளவு ஏச்சும் வாங்கலாம். அட யாரது ஏதோ மான, ரோசம் என்று கேட்ட மாதிரியிருக்குது? அந்த நரம்பத்தானே அப்பு தாலியாக்கி பீரோவில சீ கழுத்தில தொங்கவிட்டுக் கொண்டு திரியறாங்கள்!!!

அட..பெரியப்பா..(நம்மளுகுள்ள என்ன ஒழிவு மறைவு :icon_mrgreen: )...அது தானே நான் இருக்கிறன் அன்பா கேட்கிறதிற்கு..(பிகோஸ் பெரியவை என்ன சொல்லி இருக்கீனம் வெள்ளம் வர முன்னம் அணை கட்ட வேண்டும் என்று அல்லோ :lol: )..

அட இன்னும் அடி வாங்கலையா..(கேட்கவே சந்தோசமா இருக்கு)..வெகு கெதியில அடி வாங்க என் வாழ்த்துக்கள் :D ..ஏன் பெரியப்பா அவை புறு புறுக்கிறது அவ்வளவு கொடுமையா இருக்குமா என்ன..(அப்ப ஜம்மு பேபி பாவம் என்ன இல்ல ஒரு காலத்தில ஜம்மு பேபிக்கு கல்யாணம் நடந்தா அத பற்றி யோசித்தனான் பாருங்கோ :lol: )..அட அப்ப கோபம் வந்து முடிய கூடுதலா அன்பு கிடைக்குமா பெரியப்பா..(அப்ப கோவிக்கலாம் என்ன :o )..அப்ப நாளைக்கு குருவோட கோவிக்க வேண்டும் அப்ப தான் எனக்கும் அவருக்கும் அன்பு கூடும் என்ன..(முடியல என்னால :D )..

அப்ப பெரியப்பா நீங்க பெரியம்மாவோட சண்டை பிடித்தா யார் முதலில போய் கதைப்பியள்..(இல்ல கேட்டனாம் பாருங்கோ)..மற்றது யார் சமைப்பியள்??...இல்லாட்டி கடை தானோ...அப்ப கல்யாணம் கட்டுறவை எல்லாம் மானம்.ரோசம் இல்லாத ஆட்கள் என்று சொல்லுறியளோ பெரியப்பா :lol: ..(உதுக்கு பிறகு குரு கல்யாணம் கட்ட தானா வேண்டும் என்ன :D )..

அப்ப நான் வரட்டா!!

Share this post


Link to post
Share on other sites

எனக்கு விளங்குது .மருமேன் கலியாணம் செய்யப்போறார் போலை

எதற்கும் உசாராக தகவல்களை சேகரிக்கின்றார்.

மருமேன் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தால் அடி விழாது.

வாழ்க்கையிலை கொடுக்கல் வாங்கல் சகஜம்

அச்சோ நடா அங்கிள் மருமோன் இன்னும் சின்ன பிள்ள அல்லோ :lol: ..(அதுக்கு கனகாலம் இருக்கு)..நீங்க இல்லாம என்ட கல்யாணமா கட்டாயம் வர வேண்டும் என்ன :D ..அட எனக்கு உசாருக்கு இல்ல நடா அங்கிள் யாழ்களத்திள இருக்கிற கல்யாணம் ஆகின மற்றும் ஆக போற ஆண்களை காப்பாற்ற தான்..(அது சரி உங்களுக்கு கல்யாணம் ஆகிட்டோ :o )..

ம்ம்..நடா அங்கிள் விட்டுகொடுக்கிறது பிரச்சினை அல்ல..(ஆனா ஒரு லிமிட்டிற்கு தான் விட்டு கொடுக்கலாம் என்ன நினைக்கிறியள் :icon_mrgreen: )..வாழ்க்கையில கொடுக்கல் வாங்கல் சகஜம் தான் ஆனா..(கொடுக்கல் கூடினா தான் ஆபத்து என்ன நடா அங்கிள் :lol: )..

அப்ப நான் வரட்டா!!

உங்க வாக்கெடுப்கை உங்களுக்குள்ளேயே நடத்திக்குங்க, நான் ஒரு அனுமார் பக்தனாக்கும் சொல்லிட்டேன்.

ம்ம்..இப்ப எல்லாம் அனுமார் பக்தர்களை தான் நம்பவே கூடாது பாருங்கோ :lol: ..(அனுமாருக்கு வடை மாலையும் போட்டு கொண்டு வேற யாருக்கும் மாலையும் போடுவாங்க :D )...

அப்ப நான் வரட்டா!!

Share this post


Link to post
Share on other sites

ஜம்முவெல்லாம் விசிட் போகுது. ஆச்சரியமாக இருக்குது

ஜம்மு நீங்கள் எடுக்கும் வாக்கெடுப்பு சூப்பர். ஆனால் கல்யாணம் செய்தவர்களோ இதுக்கு கொமன்ஸ் சொல்ல முடியும்?.

இருப்பினும் ஒரு பொண்டாட்டி புருசனை அடிக்க கை ஓங்கினால் அக்கையை ஒடிச்சிடணும். ஹாஹா யாருகும் யாரும் அடிக்கும் உரிமை இல்லைப்பா. சும்மா வாய்தகராறு செய்யலாம். அதுக்காக அடி எல்லாம் ரூ மச்.

ம்ம்..என்ன செய்யிறது என்று போட்டு போனது அல்லோ அக்கா..(நேக்கு உந்த விசின் போறது எல்லாம் பிடிகாது என்று தெரியும் தானே :lol: )...

அட..வாக்கெடுப்பு சூப்பரா தாங்ஸ் நிலா அக்கா..(ம்ம்..கல்யாணம் கட்டினவை தான் உதுக்கு கொமன்ஸ் சொல்ல ஏலும் என்ன :icon_mrgreen: )..பட் எனி கல்யாணம் செய்யிற போற ஆட்களுக்கு கெல்புல்லா இருக்குமல்லோ அக்கா..(இது எப்படி இருக்கு :o )..

அப்ப நிலா அக்கா அடிகபடாது என்று சொல்லுறியள்..(ஆனா நம்ம குரு என்ன சொன்னவர் என்றா அடிகிற கை தானாம் அணைக்குமாம்)..உதுக்காக எனக்கு அடிகிறதில்ல சொல்லிட்டன் என்ன.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Share this post


Link to post
Share on other sites

ஜம்முவைப் பற்றி தெரியாமலா? ஆனாலும் ஜம்மு அந்த கேர்ள் உங்களை அண்னா என்று கூப்பிட்டது ரொம்ப கொடுமை தான்.

:icon_mrgreen: அடிக்கிற கை அணைக்குமா? உதுக்காக எல்லோரிடமும் அடி வாங்கலாமோ ஜம்மு? ஹீஹீ ஜம்மு நான் அடிக்கும் முதல் நீங்கள் எனக்கு அடிச்சிட மாட்டியளா என்ன? :lol:

Share this post


Link to post
Share on other sites

ஜம்மு அண்ணா நீங்களே பேபியாக இருந்து கொண்டு

இந்த கருத்தை கேட்கிறீங்களே??

எனக்கு இதில் எல்லாம் எப்போது அநுபவம்

உண்டாகுமோ என்று தெரியவில்லை.. :D

கணவன் மனைவிக்கிடையில் வரும் சண்டையை விட

காதலன்,காதலிக்கிடையில் வரும் பிரச்சினையை

எனக்கு சொல்வது இலகுவாக இருக்கும்.. :lol:

அடிபடையில் புரிந்துணர்வு இருந்தால்

சண்டையோ பிரச்சினையோ,கருத்து வேறுபாடோ

எதுவுமே யாரையும் எதுவும் செய்யாது.

காதலன்,காதலி - கணவன்,மனைவி -நட்புள்ளங்கள் என்று

நீண்டு கொண்டு போகலாம். :D

இதுவே என்னுடையை கருத்து.

Share this post


Link to post
Share on other sites

ஜம்முவைப் பற்றி தெரியாமலா? ஆனாலும் ஜம்மு அந்த கேர்ள் உங்களை அண்னா என்று கூப்பிட்டது ரொம்ப கொடுமை தான்.

அடிக்கிற கை அணைக்குமா? உதுக்காக எல்லோரிடமும் அடி வாங்கலாமோ ஜம்மு? ஹீஹீ ஜம்மு நான் அடிக்கும் முதல் நீங்கள் எனக்கு அடிச்சிட மாட்டியளா என்ன?

அது தானே ஜம்மு பேபியை பற்றி அக்காவிற்கு தெரியாமலா என்ன அக்கா.. :lol: (ம்ம்ம்..ஜம்மு பேபியின்ட ஒரு வேஸை தான் பார்த்திருக்கிறியள் :lol: )..அதுக்காக யாழில மற்ற வேஸ் என்ன என்று கேட்கபடாது..(நிசமா ஒன்னு தான் :lol: )..முடியல என்னால..ம்ம்ம் ரொம்ப கொடுமை என்ன நிலா அக்கா என்ன பார்த்து என் கண்ணை பார்த்து அண்ணா என்று சொன்னா என்னால தாங்கி கொள்ளவே முடியல்ல பாருங்கோ.. :(

ம்ம்..குரு தான் சொன்னவர் அடிக்கிற கை அணைக்கும் என்று...ம்ம் எல்லாரிட்டையும் அடி வாங்க ஏலாது தான் நிலா அக்கா..(பட் சூப்பரான பிகரிட்ட அடி வாங்கினா :lol: )...அடிக்கவாது தொட்டா என்று சில பேர் சந்தோசபடுவீனம் என்று சொல்ல வந்தனான்..(என்ன சுண்டல் அண்ணா).. :lol:

நா...நா நான் எப்பவும் பெரியாட்களுக்கு அடிக்க மாட்டன்..(நான் குட் பேபி அல்லோ :lol: )...என்ட ஒரு கன்னத்தில அடித்தா நான் மறு கன்னத்தை காட்டுவன் என்றா பாருங்கோவன்.. :D

அப்ப நான் வரட்டா!!

Share this post


Link to post
Share on other sites

ஜம்மு அண்ணா நீங்களே பேபியாக இருந்து கொண்டு

இந்த கருத்தை கேட்கிறீங்களே??

எனக்கு இதில் எல்லாம் எப்போது அநுபவம்

உண்டாகுமோ என்று தெரியவில்லை..

கணவன் மனைவிக்கிடையில் வரும் சண்டையை விட

காதலன்,காதலிக்கிடையில் வரும் பிரச்சினையை

எனக்கு சொல்வது இலகுவாக இருக்கும்..

அடிபடையில் புரிந்துணர்வு இருந்தால்

சண்டையோ பிரச்சினையோ,கருத்து வேறுபாடோ

எதுவுமே யாரையும் எதுவும் செய்யாது.

காதலன்,காதலி - கணவன்,மனைவி -நட்புள்ளங்கள் என்று

நீண்டு கொண்டு போகலாம்.

இதுவே என்னுடையை கருத்து.

ம்ம்..கனி தங்கா நான் பேபி தான் ஆனா..(இப்படியான கருத்தை எல்லாம் கேட்பன் :D )...அல்லோ அப்ப தானே ஜம்மு பேபி வளர்ந்தா பிறகு யூஸ்புல்லா இருக்கு...எப்பவுமே வெள்ளம் வர முன்னம் அணையை கட்டி போடனும் வெள்ளம் வந்தா பிறகு கட்டுறது கஷ்டம் தான் என்ன நான் சொல்லுறது சரி தானே கனி தங்கா.. :D

ம்ம்ம்..வெகு கெதியில அநுபவம் கிடைகட்டும் என்ன..(அதுக்காக மனிசனை போட்டு அடித்து போடாதையுங்கோ அவர் பாவம் என்ன விளங்கிச்சோ :lol: )..ம்ம்ம்...உங்களுக்கு காதலன்,காதலிக்கிடையில் வரும் சண்டையை சொல்வது இலகுவா ம்ம்ம் நல்லா சொல்லுறியள்..(முடியல என்னால)..அப்ப தங்கச்சியின்ட காதலன் ரொம்ப பாவம் போல இருக்கு சரி..சரி கோவிக்காதையுங்கோ என்ன.. :D

அட நிசமாவோ..(அப்ப புரிந்துணர்வு இருந்தா)...மாட்டர் ஈசி என்று சொல்லுறியள்..இல்ல தங்கா எது எப்ப நடக்கும் என்று யாருக்கும் தெரியாது பாருங்கோ..(ஒரு சில செக்கனில எடுக்கும் சில பிழையான முடிவுகள்)...புரிந்துணர்வை எல்லாத்தையும் இல்லாம செய்து போயிடும் பாருங்கோ..என்ன நான் சொல்லுறது சரியா?பிழையா?.. :D .

நட்புள்ளங்களை பெருக்கலாம் புரிந்துணர்வு உண்மையாக இருந்தா..(ஆனா பலர் புரிந்துணர்வு உள்ள மாதிரி நடிக்கிறார்கள் தவிர அவர்களின் சிந்தனைகள் வேறொன்றாகவும் இருக்குது)...அப்படியான சந்தர்ப்பங்களில் எப்படி நீள்வது கனி தங்கா...(முடியல என்னால).. :(

அது உங்க கருத்து இது என்ட கருத்து..(இது எப்படி இருக்கு :D )...

அப்ப நான் வரட்டா!!

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this