Jump to content

ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார்


Recommended Posts

சத்தியராஜ் ரொம்ப தான் பொங்கி விட்டார்....! கொஞ்சம் எல்லயையும் மீறி...

Link to comment
Share on other sites

  • Replies 64
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் ? லீ.

Link to comment
Share on other sites

வார்த்தை பிரயோகங்கள். சில தவிர்க்கப்பட்டிருக்கலாம்....! முழு உரையயும் கேளுங்கள் தமிழ்சிறி..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் கடவுள் தொடர்பாக சத்தியராஜின் வேண்டுகோள் ஏற்கக்கூடியதாக இருந்தாலும், ஏன் வடநாட்டவர்கள் கடவுளை மட்டும் எதிர்க்க வேணும். கிறிஸ்தவ, இஸ்ஸாமியத்தை எதிர்க்க ஏன் முடியவில்லை? இந்துக்கள் தான் இழிச்சவாயர்கள், மற்றவர்களைப் பற்றிக் கதைச்சால் அடித்து விடுவார்கள் என்ற பயமா?

Link to comment
Share on other sites

தூயவன்.. எதுக்கு இங்க உந்த பிரச்சினை...? அவரே உணர்ச்சி வசப்பட்டு கொஞ்சம் அதிகமாகவே பேசி விட்டார். ஒரு மனிதாபிமான போராட்டதில் மதத்தை திணிக்காதீர்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்குத்தெரியும். ஆனால் தமிழுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களுக்கு ஊக்கம் கொடுக்கலாமே.

லீ, தூயவன் ஏன் மத பிரச்சினையை கொண்டு வருகின்றார் என்று எனக்கு விளங்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பிரச்சனையில் அவர் வலிந்து திணித்த மதம் பற்றிய கருத்திற்குத் தான் கருத்துச் சொன்னேன். அவர் உணர்ச்சி வசப்படலாம். ஆனால் அதற்குள் மதம் பற்றிய திணிப்பு எதற்காக?

வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல, தங்களுடைய நாஸ்திகச் சிந்தனைகளை இப்படி விதைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாதது.

இது மனிதாபிமானப் போராட்டம் என்பதற்கு அப்பால், ரஜனியை மடக்க வேண்டும் என்று அமைத்த போராட்டம் போலத் தான் எனக்குத் தோன்றுகின்றது. பலர் ஆழ்ந்து வனித்த விடயமும் அது தான். அங்கு பாதிக்கப்படுகின்ற மக்களை விட யாழ் களத்தில் கூட ரஜனி பங்குபற்றுவது தொடர்பாகத் தான் அதிக செய்திகளும் வருகின்றன.

மக்களின் பிரச்சனைகளை அணுகுகின்ற நல்ல நோக்கம் இப்படித் திசை மாற்றப்படுவது நல்ல விடயமாகத் தெரியவில்லை. எல்லா விடயங்களும் இவ்வாறு தான். வேறு காரணத்தைக் காட்டி யார் மீதோ, எவர் மீதோ பழி போட்டோ தப்பித்துக் கொள்கின்றார்கள்.

சாதியம் தொடர்பாக வடயங்களிலும் அனுபவித்தவர்கள், அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் மதங்கள் மேலே பழியைப் போட்டு இன்னமு;ம அனுபவித்துக் கொண்டு தான் இருக்கின்றார்கள்

சத்தியராஜ் ஈழத்தமிழருக்காக போராடுகின்ற நல்ல மனிதர். ஆனால் நான் இப்போது என் மனதில் படுகின்ற விமர்சனங்களைத் தான் சொன்னே;ன. அவருடைய நல்ல மனிதனின் சிந்தனைகள் திசை மாற்றப்படக் கூடாது என்பது தான் என் விருப்பங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இறுதியில் சொன்னது நல்லது தூயவன்.

ஆனால் நாம் இப்போதுள்ள பிரச்சினைகளில் இவைகளெல்லாம் விவாததிக்கின்ற நேரமல்ல.

புரிந்து கொள்ளுவீர்கள் என்று நம்புகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்நிகழ்வில் நடிகர் சத்யராஜ் பேசியதாவது:

உங்களை சிரிக்க வைப்பதற்காக உங்களிடம் கைதட்டல் வாங்குவதற்காக சில ஐயிட்டங்களை அள்ளி வீசுவேன். இப்ப அதெல்லாம் எதுவும் செய்யப்போறதுல்ல.

ஏன்னா என்னைப் பொறுத்தவரை இது தமிழனோட உணர்ச்சியை வெளிப்படுத்துவதற்காக நடத்துகிற கூட்டம். பொதுவாக சில மேடைகளில் சில பேர் பெயரைச் சொன்னால் கைதட்டல் வாங்கலாம்.

யாருடைய பேரைச் சொன்னா நீங்க கைதட்டுவீங்களோ அவங்களோட பேரையெல்லாம் சொல்லி கை தட்டல் வாங்கலாம்.

(ஆவேசமாக) ஆனால் அப்படி அவங்க பேரைச் சொல்லி நான் கைதட்டல் வாங்கறதுக்குப் பதிலா நான் நாக்கைப் பிடுங்கிகிட்டுச் சாவேன்யா இங்க வந்தது வித்தை காட்டுறதுகில்ல..

கர்நாடகத்துல தமிழனை கன்னடன் அடிக்கிறான். அதுக்கு கண்டனம் தெரிவிக்க வந்திருக்கோம்.

ஒவ்வொரு நடிகன் பேரைச் சொல்லி கைதட்டல் வாங்கறதுக்காக வரலைய்யா.

அதிகமா சம்பளம் வாங்குற நடிகன் பேரைச் சொன்னா அதிகமா கைதட்டுவ...

அதைவிட கம்மியா சம்பளம் வாங்குற நடிகன் பேரைச் சொன்னா அதைவிட கம்மியா கைதட்டுவ..

அப்படி அவங்க பேற சொல்லி கை தட்டல் வாங்குறதைவிட நாக்கைப் புடுங்கிட்டுச் சாவான்யா இந்தத் தமிழன்.

உலகில் வாழும் 10 கோடி தமிழர்களுக்குப் போய்ச் சேருவதற்காக பேசும் பேச்சு இது.

மானமுள்ள தமிழர்களுக்குப் போய்ச் சேருவதற்காக பேசும் பேச்சு.

பொதுவா நான் என்னை மனுசன்னு சொல்லிக்கத்தான் ஆசைப்படறேன்..

ஆனா இன்னையிலிருந்து நான் மனுசன் இல்லை... தமிழன்னு சொல்லிக்கத்தான் ஆசைப்படறேன்.

அப்ப உங்க எல்லாத்துக்கும் ஒரு சந்தேகம் வரும். அப்ப மனுசன் தமிழன் இல்லையா? அப்படின்னு ஒரு சந்தேகம் வரும்.

அப்படி ஒரு சந்தேகமே உங்களுக்கு வேண்டாம்யா... தமிழன் மனுசன் இல்லை.... மரம். அப்படின்னுதான் நினைச்சுகிட்டு இருக்காங்க.

தமிழன் ஒரு மனுசனா இல்லாம மரமா இருந்தா என்ன என்ன நடக்கும்?

ஒரு நாய் காலை தூக்கிட்டு வந்து அங்கு சிறுநீர் கழிக்கும். அதை அந்த மரம் சகிச்சுக்கும்.

அந்த வழியா போற ஒருத்தன் அந்த மரத்தை வெட்டிட்டுப் போயி அந்த மரத்துல கட்டில் செய்து கால் மேல கால் போட்டு ஆட்டிகிட்டு இருப்பான்.

அப்புறம் மேசை நாற்காலி செய்து அது மேலயே உட்கார்ந்துக்குவான்.

இதையெல்லாம் சகிச்சுக்கிட்டு நாம மரமா வாழ்ந்திகிட்டு இருந்தா நமக்கு மரியாதையே இல்லாம போயிடும்.

மரமா வாழுற தமிழனை மனுசா வாழு-தமிழனா வாழுன்னு சொல்றேன்.

ஏன்னா எந்த மேடையில் எதைச் சொல்லி கைதட்டல் வாங்கறதுன்னு எனக்கும் தெரியும்.

கர்நாடகத்தில நம்ம சகோதரனை அடிக்கிறான். அதனால் அது சம்பந்தமா மட்டும்தான் நான் பேசுவேன்.

காந்தி சொல்லியிருக்கார்.. கண்ணுக்கு கண் என்று ஆரம்பிச்சா உலகத்தில இருக்கிற 600 கோடி பேரும் கண்பார்வையற்றவர்களாகத்தான் இருக்கனும். அதனால பழிவாங்குற உணர்ச்சி இருக்கக் கூடாதுன்னு காந்தி சொன்னாரு.

ஆனால் இப்ப அது சரிப்பட்டு வராதுங்க..

ஏன்னா தமிழனோட கண்ணை மகராட்டிரத்துல பால்தாக்கரேன்னு ஒரு ஆள் சிவசேனானு ஆரம்பிச்சு பிடுங்க ஆரம்பிச்சான்...

மலேசியாவுல தமிழன் கண்ணை பிடுங்கறான்...

நம்ம ஈழத்தில் தமிழன் கண்ணை பிடுங்கறான்...

இப்ப கர்நாடகவிலேயும் தமிழனோட கண்ணை பிடுங்கறான்...

கண்ணுக்கு கண் கூடாதுக்கு காந்தி சொன்னதை நாம கடைப்பிடிச்சா இந்த உலகத்துல இருக்கிற 600 கோடி பேரில் 10 கோடி தமிழன் மட்டும் குருடனா இருப்பான்...

மீதி 590 பேரு கண்ணோட சுத்திகிட்டு இருப்பான்.. மறந்துடாதீங்க...

590 பேரு கண்ணோட சுத்திகிட்டு இருப்பான்.. 10 கோடி தமிழன் மட்டும் தான் குருடனா சுத்திகிட்டு இருப்பான்.

ஏற்கெனவே தமிழன் கருத்துக் குருடனாகவும்- சிந்தனைக் குருடனாகவும் சுத்திகிட்டு இருக்கான்.

அவனுக்கு கண்ணும் குருடாகிப் போச்சுன்னா அவனுக்கு வாழ்க்கை மயிர் மாதிரி இருக்கும்... ஞாபகம் வச்சுக்க...

இது இன்னைக்கு நேத்தைக்கு நடக்கிற பிரச்சனை இல்லீங்க...

கர்நாடக முதல்வராக குண்டுராவ் இருந்தபோது தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். விருந்துக்குச் சென்றார்.

விருந்தில் நன்றாக சாப்பிட்ட எம்.ஜி.ஆர்., கடைசியில் ஒரு தம்ளர் நீரை அருந்த மறுத்துவிட்டார்

அங்க என் தமிழன் நீரில்லாமல் சாகிறான் என்று நீர் அருந்த மறுத்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.

அவர் தமிழர்களுக்காகவே வாழ்ந்தவர்.

எல்லா வகையிலும் கன்னடர்களுக்கு நம்மீது எரிச்சல்.

சாய்குமார் என்ற பிரபல ஒரு கன்னட நடிகர் தனக்குப் பிடித்த நடிகர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்று ஒரு பேட்டியிலே கூறியபோது,

ஏன் கன்னட நடிகர் ராஜ்குமாரை பிடித்த நடிகர்னு சொல்லுன்னு சொல்லி அடித்து உதைத்தது.

இதுக்குப் பேர்தான் கன்னட வெறிங்கிறது.

சந்தனக் கடத்தல் வீரப்பன் அட்டூழியத்தைப் பார்த்து நானே ரொம்ப நொந்து போயிருக்கேன். ஆனால் பல வீரப்பன்களை நீங்கள் இப்போது உருவாக்கிவிடாதீர்கள். அது உங்க கையில்தான் இருக்கிறது.

"நாம் எடுக்கும் ஆயுதம் எது என்பதை நமது எதிரிகள்தான் தீர்மானிக்கிறார்கள்" என்று மாசேதுங் சொல்லியிருக்காரு..

நாங்கள் ஆயுதத்தை எடுக்க விரும்பவில்லை. ஆயுதத்தை எடுக்கக்கூடிய சூழ்நிலையை தயவு செய்து உருவாக்கி விடாதீங்க.

ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டத்தால் கர்நாடகவுக்கு எதுவித நட்டமும் இல்லை.

நம்ம நீரை நாமே பயன்படுத்துகிறோம்...

என் பொண்டாட்டி கூட நான் படுக்கிறேன். உனக்கு ஏண்டா வேகுது?

ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டத்தால் உனக்கு எந்தவித பிரயோசனமும் இல்லை. நீ எதையாச்சும் சொல்லி அரசியல் பண்ணுவதற்காக பேசுகிறீர்கள்.

வாட்டாள் நாகராஜூன்னு ஒரு பெரிய காமெடியன் இருக்கான். நல்லவேளை அவன் சினிமாவில நடிக்கலை. நம்ம வடிவேலு எல்லாம் கிட்டயே வரமுடியாது.

அந்த வட்டாள் நாகாராஜூ சொல்றாரு, ஈரோடு எல்லாம் கர்நாடகத்துக்கு வந்து சேரனுமாம்.

ஈரோடு- கிருட்டிணகிரி- இந்த சென்னை- கடற்கரை எல்லாம் கர்நாடகத்துக்கு போய் சேரணும். நாம வாயில்ல விரலை வெச்சிகிட்டுப் போகனும்.

வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு-

இதையே பேசிகிட்டு இருக்காதே.. நீ கே.பு. ஆகிடுவ...

வந்தாரை வாழ வைக்கவும் தெரியனும்--

வாலை ஆட்டுனா ஒட்ட நறுக்கவும் தெரியனும்யா....

அவன் தாண்டா தமிழன்...

சும்மா வந்தாரை வாழவைப்பேன்னு சொல்லிகிட்டே இருந்தா உம்மேல குதிரை ஏறிட்டுத்தான் இருப்பான்.

நீ குனிஞ்சா ஏறத்தான் செய்வான்.. குனியாம- நிமிர்ந்து நில்லு!

ஒவ்வொரு தொழில் செய்வோருக்கும் ஒவ்வொரு சங்கங்கள் இருக்கின்றன. பிரச்சினைகள் வரும்போது ஒரு சங்கத்தினர் போராடினால் மற்றவர்கள் தார்மீக ஆதரவு தரலாம்.

ஆனால் ஒரு தமிழன் தாக்கப்படும்போது தமிழர்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.

எங்க இருந்துமே தமிழனுக்கு தண்ணீர் வரக்கூடாதுன்னு சொல்றான்யா...

காவிரியிலிருந்து வரக்கூடாது

கிருஷ்ணாவிலிருந்து வரக்கூடாது...

முல்லைப் பெரியாறு இருந்து வரக்கூடாதுன்னு சொல்றான்..

சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றவே கூடாதுங்கறான்..

எனக்கு மனுசனா வாழனும்தான் ஆசை.

தமிழன் - தமிழன்னு சொல்லி பிரிவினையை பேச எனக்கு ஆசையே இல்லை...

ஆனா பிரிவினை பேச வேண்டிய சூழ்நிலையை- தமிழன்னு மார் தட்டிக்க வேண்டிய சூழ்நிலையை நீதான் கொண்டுவந்திருக்க...

தமிழர்களே உங்களுக்கு அனைத்துக்கும் ஒரு தமிழன் இருக்கிறான்.

மத்தவங்கள தூக்கி வெச்சுக்கிட்டு ஆட வேண்டிய அவசியமே இல்லை.

அய்யா.. நீ சாமி கும்பிட ஆசைப்பட்டா கூட உனக்குத் தமிழ்க் கடவுள் முருகன் இருக்கிறான்...

பழனி முருகன் இருக்கான்...

வடபழனி முருகன் இருக்கான்

திருச்செந்தூர் முருகன் இருக்கான்...

போய் முருகனைக் கும்பிடு...

மதுரை வீரனைக் கும்பிடு

சுடலை மட சாமியைக் கும்பிடு...

உனக்குத் தமிழ்க் கடவுள் 1008 சாமி இருக்கான்யா....

வட நாட்டு சாமி இராமர் சாமியில்ல... இராகவேந்திரர் தேவையில்ல... கேரளா அய்யன் உனக்குத் தேவையில்லை..

முருகன் போதும் உனக்கு.

அந்த அளவுக்கு தமிழனை உணர்ச்சிவசப்பட்டு பேச வைக்கிறாங்க... இது என்ன இந்தியா? கர்நாடகத்துல என்ன வேண்டுமானாலும் செய்வீன்ன நீ இந்தியன் கிடையாதா?.

தமிழா! தமிழா! விழித்துக் கொள்!

ஒவ்வொரு விடயத்திலும் தமிழனுக்குத் தீங்கு நடந்தா குரல் கொடு!

இங்க மட்டுமல்ல இலங்கையில் நம்ம தமிழர்கள் தாக்கப்படுகிறார்களா? குரல் கொடுய்யா..

இலங்கையில் இருக்கிற தமிழன் உன் சகோதரன் யா...உன் சகோதரி..

அந்த உணர்ச்சி உனக்கு வேண்டாமா?

இலங்கையில செஞ்சோலைங்கிற பள்ளிக்கூடத்து மேல இலங்கை இராணுவம் குண்டுபோட்டு 60 தமிழ்க் குழந்தைகள் சாகுறாங்க...

அந்த இலங்கை இராணுவத்துக்கு நம்ம இந்திய அரசாங்கம் உதவி செய்யலாமா?

செய்யக்கூடாதுன்னு சொல்லு... சொல்றா....செய்யக்கூடாதுன்னு....

தமிழன் எந்த மூலையிலும் நசுக்கக் கூடாது.. தமிழா நீ குனியாதே...உன் மேல எவனும் குதிரையேற அனுமதிக்காதே... நீ முட்டா...ஆயிடுவ.. என்றார் சத்யராஜ்.

Puthinam

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சங்கர்லால்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் கடவுள் தொடர்பாக சத்தியராஜின் வேண்டுகோள் ஏற்கக்கூடியதாக இருந்தாலும், ஏன் வடநாட்டவர்கள் கடவுளை மட்டும் எதிர்க்க வேணும். கிறிஸ்தவ, இஸ்ஸாமியத்தை எதிர்க்க ஏன் முடியவில்லை? இந்துக்கள் தான் இழிச்சவாயர்கள், மற்றவர்களைப் பற்றிக் கதைச்சால் அடித்து விடுவார்கள் என்ற பயமா?

உண்மை தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சத்யராஜுக்கு ராமகோபாலன் கண்டனம்

Saturday, 05 April, 2008 12:25 PM

சென்னை, ஏப். 5: இந்துக்கள் வழிபடுகின்ற தெய்வங்களுக்கு விரோதமாக நடிகர் சத்யராஜ் பேசியதற்கு இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தொடர்பாக கர்நாடகத்தில் சில இடங்களில் நடந்த வன்முறை சம்பவங்களை எதிர்த்து திரைஉலகத்தினர் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் நடிகர் சத்யராஜ், இந்துக்கள் வழிபடுகின்ற தெய்வங்களுக்கு விரோதமாக பேசிய பேச்சை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

தன்னை நாத்திகன் என்று கூறிக் கொள்ளும் இவர், தமிழ்நாட்டில் முருகன் இருக்கும் போது கேரளத்து ஐயப்பனையும், கர்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் உள்ள தெய்வங்களை ஏன் வழிபட வேண்டும்? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

முருகன் புகழ்பாடும் சத்யராஜ் எத்தனை முருகன் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தியிருக்கிறார்? முருகன் கடவுள் இருக்கிறார் என்பதை ஒத்துக் கொள்கிறாரா? கி.வீரமணியிடம் முருகன் புகழ்பாடுவாரா?

மற்ற மதங்களை பற்றி பேச தைரியமற்ற கோழை, இந்து மதத்தை மட்டும் இழிவுபடுத்தி பேசுகிறார். நடிகர் சங்கம் இதை கண்டிக்க வேண்டும்.

"தமிழ் உணர்வு' சத்யராஜ் தமிழ்நாட்டு பெண் நடிகைகளுடன் மட்டும் தான் நடிப்பேன். வேறு மாநில நடிகைகள் வேண்டாம் என்று சொல்வாரா?

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் சீக்கிரம் நிறைவேற அரசை வற்புறுத்துகிறோம். மத மோதலை உருவாக்கும் சத்யராஜை வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Maalaisudar

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=Its9OX5ixck

இவர்கள் எல்லாம் தமிழ்நாட்டிற்குத் தண்ணி கொடுக்கவில்லை என்று கவலைப்படுகின்றார்களாம். அறிவிப்பாளர் ஒரு நடிகையை இச்சந்தர்ப்பத்தில் தமிழ்நாட்டின் கனவுக்கன்னி என்று விளிக்கின்றார். ஏன் என்றால் இங்கே களளியாட்டம் தானே நடக்கின்றது. அந்த நடிகையும் வந்தவுடன் எல்லோருக்கும் "ஹாய்" காட்டுகின்றார். பல்லைக் காட்டுகின்றார்.

விளம்பரம் தேடுவதற்காக கூத்துக் காட்டுகின்றார்கள். அங்கே திரையரங்குகள் தாக்கப்பட்டது தான் இவர்களின் படம் ஓடாமல் போய்விடும் என்ற பிரச்சனை தான் இப்படி படம் காட்ட வைத்திருக்கின்றது போல.

ஒரு சிலர் தமிழ் உணர்வாளர்கள் போலிருந்தார்கள். அவர்களும் இந்தச் சினிமாத்தனமான ஏமாற்று வேலைக்குள் அழிந்து விட்டார்கள். பலர் ரஜனி பார்க்கவும், கட்சிக்கு வாக்குத் தேடவும் தான் வந்திருப்பார்கள்.

Link to comment
Share on other sites

தமிழ் கடவுள் தொடர்பாக சத்தியராஜின் வேண்டுகோள் ஏற்கக்கூடியதாக இருந்தாலும், ஏன் வடநாட்டவர்கள் கடவுளை மட்டும் எதிர்க்க வேணும். கிறிஸ்தவ, இஸ்ஸாமியத்தை எதிர்க்க ஏன் முடியவில்லை? இந்துக்கள் தான் இழிச்சவாயர்கள், மற்றவர்களைப் பற்றிக் கதைச்சால் அடித்து விடுவார்கள் என்ற பயமா?

இல்லையேல்.

இப்படியும்இருக்கலாம்அல்லவா? முதலில்எம்வீட்டைசுத்தம்செ ய்யுவோம்.

அப்புறம்மற்றவர்வீட்டுஅழுக் கை விமர்சிப்போம்என்றும்இருக்க லாம்இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாயால் தானே சொன்னார். சொல்லும்போது மற்றவர்களையும் சுத்தம் செய்யச் சொல்லக் குறைந்தா போனார். வாயால் சொல்வதற்குக் கூடவா பெரிதாகக் கஸ்டப்பட வேணும். இருக்கப் போற காலத்தில் எல்லாத்தையும் ஒன்றாகச் சுத்தம் செய்வது தானே

நோன்புக்கு கஞ்சி குடிக்கப் போறவர்களும், சேர்ச்சில் அப்பம் சாப்பிடப் போகின்றவர்கள் எல்லாம் தங்களின் வீட்டைச் சுத்தம் செய்து விட்டு அடுத்த வீட்டைச் சுத்தம் செய்ய்ப போகினமாம். இந்த 100 வருடத்தில் இவர்கள் கிழித்த கிழிப்பு நாங்கள் பார்க்காததா?

Link to comment
Share on other sites

வாயால் தானே சொன்னார். சொல்லும்போது மற்றவர்களையும் சுத்தம் செய்யச் சொல்லக் குறைந்தா போனார். வாயால் சொல்வதற்குக் கூடவா பெரிதாகக் கஸ்டப்பட வேணும். இருக்கப் போற காலத்தில் எல்லாத்தையும் ஒன்றாகச் சுத்தம் செய்வது தானே

நோன்புக்கு கஞ்சி குடிக்கப் போறவர்களும், சேர்ச்சில் அப்பம் சாப்பிடப் போகின்றவர்கள் எல்லாம் தங்களின் வீட்டைச் சுத்தம் செய்து விட்டு அடுத்த வீட்டைச் சுத்தம் செய்ய்ப போகினமாம். இந்த 100 வருடத்தில் இவர்கள் கிழித்த கிழிப்பு நாங்கள் பார்க்காததா?

தூயவன்

நான்கூறியதை நீங்கள்தப்பாய் எடுத்துவிட்டீர்கள்.

சொல்லப்போனால் நான்இந்துமதம் தினமும்கடவளைவணங்குபவன்.

எனக்கு இந்துமததைபற்றிதான்தெரியும் அப்படிஇருக்கையில் நான்எப்படி மற்றமதத்தைபற்றி கதைப்பது?

தெரியாதஒருவிடயத்தை தெரிந்ததாககாட்டி விதண்டாவாதம்பண்ணுவதில் என்க்கும் உடன்பாடுஇல்லை.

எனது மதத்தில்மட்டுமல்லாமல் மற்றையமதங்களின்பெயரில்நடக் கும் அநியாயஞ்களைகண்டு மனம்வருந்துபவன்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரு.ராஜா

ஒரு விடயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். அங்கே சத்தியராஜ் சொன்னது தமிழ்கடவுளை வணங்குங்கள், வடகடவுளை ஏன் வணங்க வேண்டும் என்ற கருத்தைத் தான். இதைச் சொல்வதற்கு மற்றய மதங்கள் பற்றிய எவ்விதமான அறிவும் தேவையில்லை. அல்லது கிறிஸ்தவம், பௌத்தம், சமணம், இஸ்லாம் எல்லாமே தமிழர் வழிபாடு இல்லை என்பதைப் புரிந்து கொள்வதற்கு பெரியளவிலான பட்டறிவு ஒன்றும் தேவையில்லை.

அதைப் பற்றித் தானே அங்கே கதைத்தார்.

எனவே சொல்லுங்கள்...

கிறிஸ்தவம், இஸ்லாம் சமணம், பௌத்தம் என்கின்ற வழிபாட்டு முறைகளைத் தமிழர் வழிபாடு இல்லை என்று சத்தியராஜ் அறியமாட்டார் என்கின்றீர்களா? இந்த அடிப்படை அறிவு கூட அவருக்கில்லை என்று சொல்வது வருந்தத்தக்கது. இதற்கு எல்லாம் வீடு சுத்தம் பண்ணுவது பற்றிய எடுத்துக்காட்டு ஒன்றும் தேவையில்லை

Link to comment
Share on other sites

இன்னொரு மதத்தில் இருப்பவனிடம் போய் "நீ முருகனை வணங்கு" என்று சொல்ல முடியாது.

ஆனால் முருகனை வணங்குகின்ற மதத்திற்குள் இருப்பதாக சொல்பவன், முருகனை விட்டு விட்டு ஐயப்பனை வணங்குகின்ற பொழுது அவனை கேள்வி கேட்கலாம்.

ஆகவே இரண்டிற்கும் மிகப் பெரிய வேறுபாடு இருக்கிறது. இதை புரிந்து கொள்ள சற்று பகுத்தறிவு வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் உங்களுக்கு நிறையப் பகுத்தறிவு உண்டு என்பதை ஒத்துக் கொள்கின்றேன். பல தடவை வார்த்தைச் சித்துக்களில் அந்த உண்மை தெளிவாக்கப்பட்டிருக்கின்றன.

முருகனை வழிபடுபவனோ எவனோ, இதைத் தான் நீ வழிபட வேண்டும் என்று சொல்வதற்கு எந்த இலயக்கும் கிடையாது.

உங்களின் பெற்றோர்கள் இதைத் தான் வணங்கவேண்டும் என்று சொன்னால் இப்போது அதைச் செய்ய தாங்கள் உடன்பாடா?

அந்த முருக வழிபாட்டைச் செய்யச் சொல்லி சத்தியராஜ் அவர்களைக் கேட்டால் கன்னட நாஸ்திகக் கொள்கையைத் தூக்கி எறிந்து விட்டு, முருக வழிபாட்டைச் செய்வாரா?

உங்களின் சித்தாங்கள் மற்றவர்களுக்கு மட்டும் பாவிக்கப் பயன்படுத்தாதீர்கள்.

Link to comment
Share on other sites

மீண்டும் புரிய வைக்கிறேன்.

நாம் எதையும் வழிபட வேண்டாம் என்று சொல்கிறோம்.

ஆனால் வழிபட்டுத்தான் தீருவேன் என்று அடம்பிடிப்பவனுக்குத்தான் எம்முடை ஆலோசனையை சொல்கிறோம்.

என்ன சொல்கிறோம்?

"உன்னுடைய காசைக் கொண்டு போய் கேரளாவில் உள்ள உண்டியலில் போடுகிறாயே, போடுகிறதுதான் போடுகிறாய், அதை தமிழ்நாட்டின் பழனியில் போய் போட்டால், பணம் தமிழனுக்காவது பயன்படுமல்லவா"

இதைத்தான் சொல்கிறோம்.

இந்துவாக இருக்கின்ற தமிழனுக்கு, அந்த மதத்தில் இருந்தபடியே வணங்குவதற்கு நிறைய கடவுள்கள் உண்டு. அதுவும் தமிழ் மண்ணில், தமிழ்பெயர்களோடு கடவுள்கள் இருக்கின்றன.

இந்தக் கடவுள்களில் பெரும்பாலானவை தமிழ் பண்பாட்டு முறையில் வழிபடப்படுபவை என்பதையும் இந்த இடத்தில் நினைவில் கொள்ளுங்கள்.

தமிழ் கடவுள்களை வழிபடக் கோரும் அறைகூவலில் தமிழ் பண்பாட்டை, தமிழ் மொழியை, தமிழர்களின் நிதியை பாதுகாக்கின்ற அறைகூவல் இருக்கிறது.

இதை சற்று பகுத்தறிந்து சிந்தித்தால் புரிந்து கொள்ள முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னொரு மதத்தில் இருப்பவனிடம் போய் "நீ முருகனை வணங்கு" என்று சொல்ல முடியாது.

ஆனால் முருகனை வணங்குகின்ற மதத்திற்குள் இருப்பதாக சொல்பவன், முருகனை விட்டு விட்டு ஐயப்பனை வணங்குகின்ற பொழுது அவனை கேள்வி கேட்கலாம்.

ஆகவே இரண்டிற்கும் மிகப் பெரிய வேறுபாடு இருக்கிறது. இதை புரிந்து கொள்ள சற்று பகுத்தறிவு வேண்டும்.

...

சபேசன் ஐயா கொஞ்சம் யோசியுங்கள். பேசத் தொடங்கும் போது ஒக்னேகால் பிரச்சனையைப் பற்றி மட்டும்தான் பேசுவேன் என்று சொல்லித்தானே பேச்சைத் தொடங்கினார் நடிகர் சத்யராஜ்...அதை அப்படியே பின்பற்றி இருக்கலாமே...பொது இடத்தில் தனிப்பட்ட காழ்புணர்ச்சிகளைக் காட்டக் கூடாது. "நம்மால் செய்ய முடிந்ததைச் செய்ய வேண்டும் அடுத்தவனைத் திணிப்பதோ இல்லைத் திட்டுவதனாலோ...நம்மை நாமே தாழ்த்திக்கொள்கின்றோம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓகோ இதைத்தான் சொல்வதோ சுத்தி சுத்தி சுப்பற்றை கொல்லைக்குள் என்று :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னால முடியலயப்பா.......... :lol::lol::lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.