Jump to content

''தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் கோழைகள்!''


Recommended Posts

''மரத்திலிருந்து உதிரும் இலை எங்கே செல்ல வேண்டும் என்று காற்றுதான் தீர்மானிக்கும்; இலை அல்ல! அப்படி, காற்றில் மிதக்கும் இலை போல என் வாழ்வு சென்றுகொண்டு இருக்கிறது. ஈழத்தில் பிறந்தேன்; கனடாவுக்குப் புலம் பெயர்ந்தேன்; சென்னை என் தற்காலிக வேடந்தாங்கல். அடுத்து, எங்கே என்று தெரியாது. காலம்தான் தீர்மானிக்க வேண்டும்!'' என்கிற கவிஞர் தமிழ்நதி, கொழும்புவுக்குப் புறப்படத் தயாராகிக்கொண்டு இருந்தார்.

தமிழ்நதி, ஈழத்தின் முக்கியப் பெண் கவிஞர்களான சிவமணி, ஊர்வசி, மைத்ரேயி, ஒளவை போன்று நவீன தமிழ்க் கவிதையில் தடம் பதித்தவர். 'சூரியன் தனித்தலையும் பகல்', 'நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதுவது' ஆகிய படைப்புகள் எழுத்துலகில் தமிழ்நதிக்குத் தனித்த இடத்தைப் பெற்றுத் தந்தன.

p69bg1.jpg

''நான் நாடோடியாகவும் அகதியாகவும் அலைந்து திரிகிறேன். கனடாவுக்குப் புலம்பெயர்ந்ததால் என்னிடம் இருப்பது கனடா பாஸ்போர்ட். இந்தியாவில் எனக்கு இன்னும் குடியுரிமை கிடைக்கவில்லை. ஆறு மாதத்துக்கு ஒரு முறை இலங்கை போய், இந்திய விசா வாங்கி வர வேண்டும். இப்படி நானும் என் பெற்றோரும் இலங்கைக்குத் தொடர்ந்து போய் வருவதிலேயே பொருளாதாரம்பாதிக் கிறது. கணவர் இருப்பது கனடாவில். நீங்கள் சென்னையை விட்டு மதுரைக்குப் போய் வசிக்க நேர்ந்தால் எவ்வளவு கஷ்டப்படுவீர்கள்? நாங்களோ நாடுவிட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம் என அலைந்துகொண்டு இருக்கிறோம். அலைவதே வாழ்க்கையாகிவிட்டது. நான் மட்டுமல்ல, எல்லா ஈழத் தமிழர்களுமே இப்படித்தான் அலைகிறார்கள்!''

''சென்னை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?''

''அண்ணா சாலையில் ஸ்பென்சர், பாண்டி பஜாரில் போத்தீஸ், பனகல்பார்க்கில் புக் லேண்ட், கிரீம்ஸ் ரோட்டில் அப்போலோ...இப்படியாகத்தான் சென்னை என் மூளையில் பதிந்திருக்கிறது. நான் பேசும் தமிழை வைத்து மலையாளமா என்கிறார் காய்கறிக்காரர். என்னைத் தமிழச்சி என்று ஒப்புக்கொள்ள அவர் தயாராக இல்லை. ஈழத் தமிழர்களுக்கு இங்கே வாடகைக்கு வீடு கொடுக்கவே பயப்படுகிறார்கள்.

சினிமாவும் அரசியலும் இங்கே ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந் தைகள் போல இருக்கின்றன. அண்ணா சாலையில் பேனர் மயம். யாரோ ஒரு நடிகையும்நடிக ரும் சதா காதல் பார்வை பார்த்த படி, கட்டிப்பிடித்துக்கொண்டு வெயிலிலும் மழையிலும் நனைந்து கொண்டு இருக்கிறார்கள். இளம் பெண்களும் நாகரிகக் குமரன்களும் கோந்துவைத்து ஒட்டியது போல பைக்கில் பறக்கிறார்கள்.அம்மாவும் அப்பாவும் மற்றொரு பக்கம் டிஜிட்டல் சிரிப்பு சிரித்துக் கொண்டு இருக்கிறார்கள். இது தான் சென்னை!''

''ஈழப் பிரச்னையில் தமிழ் நாட்டு அரசியல்வாதிகளின் நிலைப்பாடுகள் சரியானவையா?''

''நான் புலம்பெயர்ந்தவள். நாடோடி. இங்குள்ள அரசியல் சூழல் பற்றி வெளிப்படையாகப் பேச முடியாது. இருப்பினும், கேட்டதற்காகச் சொல்கிறேன். ஈழ மக்களின் அவலத்தைப் பயன் படுத்திக்கொள்ளுதல் அல்லது பாராமுகமாக இருத்தல் என்னும் இரண்டு நிலைப்பாடுகளில் ஒன்றைத்தான் இங்குள்ள அரசியல் வாதிகள் எடுக்கின்றனர். வைகோ, நெடுமாறன், சுப.வீரபாண்டியன், திருமாவளவன் போன்றோரின் அரசியல் நிலைப்பாடுகள் திருப்தி அளிக்கின்றன. ஈழப் பிரச்னையில் நடுநிலைமை வகிக்கிறோம் என்று சொல்வது மனித சமூகத்துக்கு எதிரானது. ஒரே மொழி பேசும் இனத்துக்குள் ஒரு சாராரின் படு கொலைகளைக் கண்டும் காணாமல் இருப்பது உறுத்தலாக இருக்கிறது!''

''உலகில் நடக்கும் ஒடுக்கு முறைகள் பற்றி எழுத்தாளர்கள் மாய்ந்து மாய்ந்து எழுதுகிறார்கள். ஆனால், 25 ஆண்டுகளாக ஈழத்தில் நடக்கும் இனப் படுகொலைகள் பற்றி அதிகமான பதிவுகள் இல்லையே, ஏன்?”

''ஆம், ஒரு சிலரைத் தவிர்த்து, எவரும் ஈழப் பிரச்னை தொடர்புடைய படைப்புகளைப் படைப்பதில்லை. காரணம், அரசியல்சூழ் நிலையின் காரணமாக, ஈழமக் களின் பிரச்னையையும்பயங் கரவாதத்தையும் ஒன்றெனப்பார்க் கும் நிலை இவர்களுக்கு ஏற்பட்டு உள்ளது. அதனால்தான், லத்தீன் அமெரிக்க இலக்கியம் பேசும் இவர்கள் காதில், பக்கத்திலேயே தினமும் கேட்கும் வெடிகுண்டு ஓசைகள் விழுவதில்லை. இவர்களுக்குத் தங்கள் வாழ்க்கை, உயிர் குறித்த பயம் இருக்கிறது. அதை இழக்க இவர்கள் தயாரில்லை. இதை மீறி எழுதுவதுதான் உண்மையான எழுத்தாக இருக்க முடியும். அப்படிப் பார்த்தால், தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் அனைவரும் கோழைகள்தான். இதில் என்னையும் உள்ளடக்கித்தான் கூறுகிறேன்.''

''பெண் கவிஞர்களான சல்மா, கனிமொழி, தமிழச்சி ஆகியோர் அரசியலுக்கு வந்துவிட்டார்கள். இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?''

''பெண்கள் அரசியல் அதிகாரத்தைக் கையில் எடுத்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆனால், அரசியல் என்பது ஒரு சூதாட்டம். கபட வேடதாரிகளுக்கே அது கச்சிதமாகப் பொருந்தும். எழுத்தாளராக இருக்கும் போது உள்ள தார்மிக கோபம், நேர்மை எல்லாம் அரசியல்வாதியாக மாறும்போது தொலைந்து போய்விடக்கூடிய ஆபத்து இருக்கிறது.''

''ஈழத் தமிழ் இலக்கியத்தின் இன்றைய நிலை என்ன?''

''தமிழ்நாட்டு எழுத்தாளர் ஒருவரையும் பதிப்பகம் ஒன்றையும் 'ஃப்ரெண்டு' பிடித்துக்கொண்டால் செல்வாக்காக இருக்க முடியும் என்ற மூட நம்பிக்கை ஈழ எழுத்தாளர்களுக்கு இருக்கிறது. இது முட்டாள் தனமானது. இப்படி வருகிற புலம் பெயர்ந்த எழுத்தாளர்களின் வேட்டிகளை இங்குள்ள பதிப்பகங்கள் உருவிக்கொண்டுதான் அனுப்புகின்றன. அவர்கள் கொண்டுவருகிற பணம், டாய்லெட் கழுவிச் சம்பாதித்த பணம்; கோப்பை கழுவிச் சம்பாதித்த பணம். அப்படிக் கஷ்டப்பட்டு சம்பாதித்துக் கொண்டுவருகிற பணத்தை இங்குள்ளவர்கள் கபளீகரம் செய்யக் கூடாது!'' உறுமல் ஓசை போல முடிக்கிறார் தமிழ்நதி.

ஆனந்தவிகடன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

''ஈழத் தமிழ் இலக்கியத்தின் இன்றைய நிலை என்ன?''

''தமிழ்நாட்டு எழுத்தாளர் ஒருவரையும் பதிப்பகம் ஒன்றையும் 'ஃப்ரெண்டு' பிடித்துக்கொண்டால் செல்வாக்காக இருக்க முடியும் என்ற மூட நம்பிக்கை ஈழ எழுத்தாளர்களுக்கு இருக்கிறது. இது முட்டாள் தனமானது. இப்படி வருகிற புலம் பெயர்ந்த எழுத்தாளர்களின் வேட்டிகளை இங்குள்ள பதிப்பகங்கள் உருவிக்கொண்டுதான் அனுப்புகின்றன. அவர்கள் கொண்டுவருகிற பணம், டாய்லெட் கழுவிச் சம்பாதித்த பணம்; கோப்பை கழுவிச் சம்பாதித்த பணம். அப்படிக் கஷ்டப்பட்டு சம்பாதித்துக் கொண்டுவருகிற பணத்தை இங்குள்ளவர்கள் கபளீகரம் செய்யக் கூடாது!'' உறுமல் ஓசை போல முடிக்கிறார் தமிழ்நதி.

என்ன தான் இருந்தாலும் புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்களின் சுயரூபத்தை இப்படிச் சொல்லி இருக்கக் கூடாது..! அவர்களைப் பயன்படுத்திக்கிற.. தமிழக பதிப்பகங்கள் மீதான சாடல் வரவேற்கத்தக்கது. ஆனா திருந்துவாய்ங்கள் என்று நினைக்கிறீங்க..! ம்ங்கும்.. அது மட்டும் நடவாது..! :rolleyes:

Link to comment
Share on other sites

கருத்து வெளிப்பாட்டுக்கான சுதந்திரம் என்பது நாம் ஆதரிக்கும் கருத்துக்களுக்கான சுதந்திரம் மட்டுமல்ல. நம்மை அதிர்ச்சி அடையச் செய்யும் கருத்துக்களுக்கான சுதந்திரமும்கூட"" - நோம் சோம்ஸ்கி

ஏப்ரல் 9,2008 எனத் திகதியிடப்பட்ட இவ்வார ஆனந்த விகடனில் எனது நேர்காணல் வெளிவந்திருக்கிறது. அதை வாசித்த எனது நண்பர்கள் அதிர்ச்சியடைந்திருக்கக்கூட

Link to comment
Share on other sites

இப்படியான நேர்காணல்களை ஒலிப்பதிவு செய்வார்கள். தமிழ்நதி ஆனந்தவிகடனை அணுகி அடுத்த இதழில் தவறை சுட்டிக்காட்டி அதே பத்திரிகையளரை மன்னிப்பு கேட்கவைக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நதியை நன்கு அறிந்தவர்களுக்கு ஆனந்தவிகடனின் தலைப்பு பெரும் அதிர்ச்சியைக் கொடுக்கும். ஊடகங்கள் தத்தம் பரபரப்புக்காக படைப்பாளிகளின் மனங்களை நோகடிக்கக் கூடிய வகையில் நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது. தமிழ்நதியின் எதிர்வினையை அதே ஊடகத்தில் தெளிவாகப் பதிந்து எதிர்காலத்தில் அத்தகைய தவறுகள் நடக்காதவண்ணம் பார்த்து கொள்ளவேண்டும்.

தமிழ்நதி, காலநதியில் ஈழத்து உறவுகள் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். உறவுகள் திசைக்கொன்றாய் தேங்கி, தோள்சாயமுடியாப் பெருநெருப்பில் தீய்கிறது. காலம் எமக்கானதாக வரும் என்ற நம்பிக்கை மட்டுமே எங்கள் நாட்களைக் காவிச் செல்கின்றன. காத்திருக்கும் பொழுதுகள் காய்க்கத் தொடங்கிவிட்டன. விழியோரக் கசிவிலெல்லாம் அனல் பிறக்க ஆரம்பித்துவிட்டன. நெஞ்சக் கூட்டறைக்குள் நிலவு கொஞ்சி விளையாடும் கனவுகள் கூடக் காணாமல் போய் சூரிய நெருப்பு சீறிக் கனல்கிறது. இப்போது இந்த வலைப்பின்னலும் வார்த்தைகளும் மட்டுமே எம்மை ஆற்றுப்படுத்தும் நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

நமது தலமைகளும் கவனிக்க வேண்டிய ஒன்று...! சில ஊடகங்கள் ஊதிப்பெருசாக்குவதில் வல்லவர்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்த விகடன் இதையெல்லாம் கண்டுக்காது.. தமிழின் பிரபல எழுத்தாளர் ஜெயமோகனுக்கும் அண்மையில் பிரச்சினைகள் ஏற்படச் செய்தார்கள்.. வளர்ந்துவரும் எழுத்தாளர்களுக்கா இடம் கொடுப்பார்கள்?

உள்ளுணர்வு எச்சரித்தும் பேட்டி கொடுத்தது சரியாகப்படவில்லை.. ஆனந்தவிகடனுக்குப் பிழைப்பு முக்கியம்.. அதற்காக எங்கள் போராட்டத்தையும் பாவிக்கிறார்களா தெரியவில்லை.. தெரிந்தவர்கள் அறிந்து சொல்லவும்..

பிரச்சினை நம் ஊடகங்களிலேயே என்பது மீண்டும் உறுதியாகிவிட்டது. நம் மக்களை மூளையில்லாத கும்பலாக அணுகவே அவை ஆசைபப்டுகின்றன. விகடனின் எதிர்பார்ப்பும் கட்டுரையின் தொனியும் அதையே காட்டின

பொதுவாக இதழ்களின் தலையங்கம் அவ்விதழின் இதயம் என்பார்கள். நம் இதழ்களின் இதயங்கள் ஜனநாயகந் மனிதாபிமானம் என்ற லப்-டப் ஒலியில் இயங்குகின்றன. விகடனுக்கு இரட்டை இதயம்

ஆனால் விகடன் அதன் செயலைக் கண்டித்து வந்த எந்த கடிதத்தையுமே பிரசுரிக்கவில்லை என்பதை அதன் இணைய பக்கத்தை பார்த்தவர்களே உணரலாம். அவர்களின் பொறுப்பின்மையால் பாதிக்க்கப்பட்ட நான் எழுதிய நியாயமான மறுப்பைக்கூட பிரசுரிக்கவில்லை. சில வரிகளே இருந்தது அது. இவர்களை எனக்கு நன்றாகவே தெரியும். நீண்ட கடிதம் போட்டால் அதில் இருந்து சம்பந்தமில்லாத வரியை பிடிங்கி போட்டு இடமில்லாத காரணத்தால் சுருக்கினோம் என்பார்கள். அதை விட எழுத்தாளர்கள் சேர்ந்து அனுப்பிய கடிதத்தையும் போடவில்லை. அந்தக் கடிதம் திண்ணை இணைய தளத்தில் உள்ளது.

விகடனின் ஜனநாயகம் இதுவே. இத்தகைய ஊடகங்களால்தான் நம் கலாச்சாரச் சூழல் சிறுமைப்படுகிறது. சினிமாவால் அல்ல. அரசியலாலும் அல்ல என்று படுகிறது

http://jeyamohan.in/?p=278

Link to comment
Share on other sites

ஆனந்தவிகடன், குமுதம் உட்பட பல பத்திரிகைகள் பரபரப்பிற்காகவும் வியாபார நோக்கத்திற்காவும் கருத்துக்களை திரிவுபடுத்தி வேறு ஒரு பொருள்படகூடியதாக வெளியிடுவது வழக்கம். அவர்கள் நமக்கு சார்பான கருத்துக்களை பிரசுரித்தால் அந்த வரையில் மகிழ்ச்சிப்பட வேண்டியது தான். அதற்கு மேல் என்ன சொல்ல ...

கிருபன்,

ஜெயகாந்தனின் வலைப்பதிவை தேடிக்கொண்டிருந்தேன். அறிய தந்தமைக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன்,

ஜெயகாந்தனின் வலைப்பதிவை தேடிக்கொண்டிருந்தேன். அறிய தந்தமைக்கு நன்றிகள்.

இணைப்பு ஜெயமோகனின் வலைப்பதிவு.. ஜெயகாந்தன் வலைப்பதிவு வைப்பிருப்பதாகத் தெரியவில்லை..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.