Sign in to follow this  
sathiri

செருப்புப் பூசை

Recommended Posts

செருப்புப் பூசை

இந்தவார ஒரு பேப்பரில்

apirami.jpg

அண்மையில் ஒரு நண்பர் மின்னஞ்சலில் கனடிய பத்திரிகையில் வந்த ஒரு விளம்பரத்தினை அனுப்பியிருந்தார்.விளம்பரத்??ில் இருந்த படத்தினை உற்றுப்பார்த்தேன். அட நம்மடை டென்மார்க் லலிதா. அவர் வேறுயாருமல்ல இதே ஒரு பேப்பரில் மூண்று ஆண்டுகளிற்கு முன்னர் நான் அந்த லலிதா தன்னை ஒரு அம்மனின் அவதாரம் என்று தனக்குத்தானே அபிராமி அம்மன் என்று பெயரையும் வைத்து மக்களை ஏமாற்றும் ஒரு போலி பெண்சாமியார் என்று கட்டுரையை எழுதியிருந்தேன்.

அந்தக் கட்டுரையின் பின்னர் எனக்கும் அந்த லலிதாவின் கணவர் மற்றும் அவரது ஆதராவளார்களிற்கும் பலதொலைபேசி உரையாடல்கள் வாக்குவாதங்கள் என்பன மட்டுமல்ல எனக்கு மிரட்டல்களும் மிரட்டலின் உச்சமாய் அம்மன் அவதாரமெடுத்து என்னை பழிவாங்குவார் என்று ஜெர்மனியில் இருந்து அவரது ஒரு பக்கதர் கடைசி எச்சரிக்கையும் தந்து .இரண்டாண்டுகள் ஓடி ஓய்ந்து போன நிலைமையில்.இந்த விளம்பரத்தில் இருந்த ஒரு வசனம் என்னை மீண்டும் எழுதத்தூண்டியது. அதாவது அபிராமி என்கிற லலிதாவின் பிறந்தநாளன்று (29.03.2008)அவரின் திருப்பாதுகைகளிற்கு விசேட அபிசேகமும் ஆராதனையும்.அவர் சாமியாடினாரா அவதாரமெடுத்தாரா.என்பதெல்லாம?? வேறு பிரச்சனை அனால் அவரின் செருப்பிற்கு அபிசேகம் செய்து பூசை செய்கிற அளவிற்கு எம்மவர் நிலைமை வந்து விட்டதா என்று நினைத்த பொழுது நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால் என்று பாரதியின் வரிகள் நினைவிற்கு வந்து.இந்தச் சம்பவம் நடந்தது அதீத மத நம்பிக்கையே மூட நம்பிக்கையாகி அறிவியல் வளர்ச்சியோ கல்லியறிவோ அற்று ஏதோ முலையில் இருக்கின்ற ஒரு இந்தியக் குக்கிராமத்தில் அல்ல.

கனடாவில் மொன்றியலில் days inn hotal( விளம்பரத்தில் பார்க்கவும்) என்கிற ஒரு விடுதியில் நடந்ததுள்ளது அதற்கு அங்:குள்ள ஒரு பத்திரிகையில் விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது மட்டுமல்ல எல்லாவற்றிற்கும் ஒரு படி மேலேபோய் கனடாவில் உள்ள ஒரு வானொலியில் அந்நத நிகழ்வு நேரடிஒலிபரப்பு வேறை நடந்தது.விளம்பரத்தினைப்பார்??்ததும் நான் அதில் உள்ள ஒரு இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அந்தப் பூசை பற்றிய விபரங்கள் பற்றிக் கேட்டேன். அன்று அபிராமி அன்னையின் படத்திற்கு பூசையும் பஜனையும் இடம்பெறும் என்றார்கள். சரி ஏதோ திருப்பாதுகைகளிற்கு ஏதோ அபிசேகமும் பூசையும் என்று விளம்பரத்திலை இருக்கே அது புரியவில்லை அப்படியென்றால் என்ன என்று கேட்டதற்கு.

அவை அம்மா அணிந்த பாதுகைகள் டென்மார்க்கில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளது அதற்குத்தான் பூசை என்றார்.திருப்பாதுகை என்றால் அது செருப்பா?? அல்லது சப்பாத்தா??என்கிற எனது அடுத்த கேள்வியை கேட்டதும் பதில் தந்தவர் பதறியவராய் அப்பிடியெல்லாம் சொல்லக்கூடாது.திருப்பாதுகை எண்றுதான் சொல்லவேண்டும் என்று சொன்னது மட்டுமல்லாமல் இராமாயணத்தில் இராமனின் பாதுகைகளை பரதன் அரியணையில் வைத்து பூசை செய்து ஆட்சி செய்தது போல தாங்களும் கனடாவில் அம்மனின் பாதுகைகளை வைத்து பூசை செய்கிறோம் என்று பரதன் பூசை செய்ததை பக்கத்தில் நின்று பார்த்தவரைப்போல எனக்கு ஒரு உதாரணமும் தந்து மேலதிகமாக டென்மார்க்கில் இருந்து கொண்டுவரப்பட்ட விபூதியும் பஞ்சாமிர்தமும் தேசிக்காயும் கொடுக்கப்படும் என்று சொல்லி தொடர்பினை துண்டித்து விட்டார். சரி டென்மார்க் குளிருக்கு லலிதாவால் செருப்பு போட இயலாது எனவே அந்த திருப்பாதுகை சப்பாத்தாகத்தான் இருக்கவேண்டும் என்று நானே முடிவுசெய்தாலும் எனக்கு இன்னொரு சந்தேகம். அந்தச் சப்பாத்து NIKE காய் இருக்குமா அல்லது ADIDAS சா?? இல்லாட்டி ஊர்ப்பழக்கத்திலை இன்னமும் BATA தானா??? பஞ்சாமிர்தத்தை டென்மார்க்கில் இருந்தா கொண்டுவரவேண்டும் கனடாவில் பழங்கள் கிடையாதா?? அதுதான் போகட்டும் தேசிக்காய் என்னத்திற்கு என்று ஏகப்பட்ட சந்தேகங்கள் தோன்றினாலும்.

அதில் இருந்த மற்றைய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அந்த பூசை பற்றிய ஏதாவது படங்கள் கிடைக்குமா என்று விசாரித்தேன். படங்கள் அந்த நிகழ்வினை ஒழங்கு பண்ணியவர்களின் அனுமதி தந்தால் தரமுடியும் என்றார்கள் அந்த நிகழ்வினை ஒழுங்கு பண்ணியவர் யாரென்று விசாரித்தப் பார்த்தால் அவர் எனக்கு எற்கனவே இந்த டென்மார்க் லலிதா பற்றிய கட்டுரை சம்பந்தமாக என்னுடன் தொலைபேசியில் வாக்குவாதப்பட்டவர்தான். இவர் சுவிஸ் நாட்டில் இருக்கின்ற லலிதாவின் ஏழாலை கிராமத்தை சேர்ந்த ஒரு ஆசிரியை இவர் எற்கனவே சுவிசில் லலிதாவிற்கு கிளைகளை ஆரம்பித்தள்ளார். அதன் விரிவாக்கம் தான் இந்த கனடாவில் செருப்புப் பூசை என்று தெரியவந்தது. எங்கள் ஊரில் சைவத்திற்கும் தமிழிற்கும் மிகப்பெரிய தொண்டு செய்த விபுலானந்த அடிகள் யோகர் சுவாமிகள் ஆறுமுக நாவலர் போன்றவர்களே தாங்கள் கடவுளின் அவதாரம் என்று மக்களை ஒரு போதும் ஏமாற்றிது இல்லை பாதணிகளையோ ஏன் பாதடிகளையோ கூட யாரும் பூசை செய்தது கிடையாது.

ஆனால் சிலர் தாங்கள் அவதாரம் என்றும் அற்புதம் செய்கிறோம் என்று ஊரில் வித்தை காட்டிய அனைவரும் கம்பங்களில் கட்டிவைத்து அடித்த அடியில் அவர்களது அற்புதங்களும் மறைந்து அந்த அவதாரங்களும் காணமல்போனதை நானறிவேன். தான் பராசக்தியின் அவதாரம் என்று கதைவிடும் லலிதாவிற்கு உண்மையிலேயே கடவுளின் அவதாரம் என்றால் என்னவென்று உண்மையான அர்த்தம் தெரியுமா என்று சந்தேகமே. புராணக் கதைகளிலும் இதிகாசங்களிலும் கடவுளின் அவதாரம் என்பது பூவுலகில் அனியாயமும் அக்கரமமும் அதிகரிக்கும் பொழுது நியாயத்தை நிலைநாட்டவும் எவ்வித பாவமும் செய்யாது துன்பப்படும் மக்களை காப்பாற்றவே கடவுளின் அவதாரங்கள் சித்திகரிக்கப் பட்டுள்ளது.

lalitha3.jpg

புராணங்களில் எந்தக் கடவுளின் அவதாரமும் நாடுநாடாய் மக்களிடம் உண்டியல் குலுக்கியதாகஎழுதப்பட்டிருக??கவும் இல்லை நான் படிக்கவும் இல்லை. லலிதா கடவுளின் அவதாரமாக இருந்தால் தினம் தினம் துன்பப்பட்டும் வேதனைகள் சோதனைகளிற்கு மத்தியிலும் படுகொலை செய்யப்பட்டுக்கொண்டும் இருக்கும் அவரின் இனமாகிய தமிழினத்தை முதலில் காப்பாற்றலாமே.தினம் தினம் எமது மக்களின் மீதும் எந்தப் பாவமும் அறியாத சிறுவர்கள் மீதும் விழுகின்ற விமானக் குண்டுகளை தன்னுடைய அற்புத சக்தியால் அதனை போட்டவன் வீட்டிலேயே விழ வைக்கலாமே.அவதாரம் என்பதே அனியாயத்தை அழிக்கத்தானே வடிவெடுக்கின்றது அப்படியானால் சிறீலங்கா இராணுவமுகாம்கள் அனைத்தையும் ஒரு நொடியில் அழித்து சாம்பலாக்கலாமே.அதை விட்டு விட்டு அவதாரமெடுத்தது நாடு நாடாய்: உண்டியல் குலுக்கி ஏன் தன்னுடைய சக்தியை வீணடிக்கிறார்.

lalitha4.jpg

அதுமட்டுமா பெண்தெய்வங்களின் உருவப்படங்களில் தன்னுடையை படத்தை ஒட்டி கிராபிக் விழையாட்டுகள் செய்தும் (வெளிநாடு வருவதற்காக கள்ள பாஸ்போட்டில் தலை மாத்தின பழக்கதோசமாய் இருக்கலாம்) அரை மி.மீ அளவு மாணிக்கக்கல்லை வாயாலை எடுத்து அற்புதம் செய்கிராராம். மனிதன் மனிதனின் காலில் விழுவதையே மிகப்பெரும் கேவலமாக நினைக்கின்ற ஈழத்தவர்கள் இன்று புலம்பெயர்ந்து வந்த தேசத்தில் அறிவியல் உலகில் நின்று கொண்டு கடவுள் நம்பிக்கைக்கும் அப்பாற்பட்டு மூட நம்பிக்கைக்குள் வீழ்ந்து ஒரு போலி பெண்சாமியாரின் பாதடிகளை வணங்குவதை நினைத்தும் மக்களிற்கு வழிகாட்டியாய் இருந்து வழிநடாத்தவேண்டிய ஊடகங்களான் பத்திரிகைகள் மற்றும் வானொலிகளும் லலிதான் ஏமாற்றிற்கு துணைபோய் மக்களையும் மூட நம்பிக்கைக்கு துணைபோகத்தூண்டுவதை நினைத்தும் என்னுடய திருப்பாதுகையை கழற்றி( சப்பாத்தைத்தான்) எனக்கு நானே அடித்துகொள்கிறேன்.

Edited by sathiri

Share this post


Link to post
Share on other sites

சாத்திரி அண்ணை அது அவரவர் விருப்பம், கடவுள் நம்பிக்கை..

நானும் இந்தக் கோயிலுக்கு போய் இருக்கிறன் ஆக்களோட சும்மா பார்க்கிறதுக்கு. நான் அவவ பார்க்க போக இல்ல. நான் போனநேரம் கோயில்கட்டுப்பட்டுக்கொண்டு இருந்திது.

வெளியில சின்னச் சின்னக் கடைகளில வியாபாரமும் நடந்திது. நாங்கள் ஒரு மாம்பழப் பெட்டி மாத்திரம் வாங்கினனாங்கள். மரக்கறி அது இது எண்டு வேறு சில சாமான்களும் கோயில் வாசல் கடைகளில வில்பட்டிது.

நிறையப்பேர் அங்க போறீனம் எண்டுறதோட நம்பிக்கையுடனும் இருக்கிறீனம்.

எனக்கு நம்பிக்கை இல்லை, ஆனால் கிண்டலடிக்கவும் விரும்பவில்லை.

Share this post


Link to post
Share on other sites

சாத்திரி அண்ணை அது அவரவர் விருப்பம், கடவுள் நம்பிக்கை..

நானும் இந்தக் கோயிலுக்கு போய் இருக்கிறன் ஆக்களோட சும்மா பார்க்கிறதுக்கு. நான் அவவ பார்க்க போக இல்ல. நான் போனநேரம் கோயில்கட்டுப்பட்டுக்கொண்டு இருந்திது.

வெளியில சின்னச் சின்னக் கடைகளில வியாபாரமும் நடந்திது. நாங்கள் ஒரு மாம்பழப் பெட்டி மாத்திரம் வாங்கினனாங்கள். மரக்கறி அது இது எண்டு வேறு சில சாமான்களும் கோயில் வாசல் கடைகளில வில்பட்டிது.

நிறையப்பேர் அங்க போறீனம் எண்டுறதோட நம்பிக்கையுடனும் இருக்கிறீனம்.

எனக்கு நம்பிக்கை இல்லை, ஆனால் கிண்டலடிக்கவும் விரும்பவில்லை.

முரளி இங்கு நான் எழுதிய விடயம்கடவுள் நம்பிக்கை பற்றியது அல்ல மூட நம்பிக்கை பற்றியது கடவுளை கும்பிடுங்கள் அது உங்கள் நம்பிக்கை கடவுள் பெயரால் ஏமாற்றும் மனிதரை கும்பிடாதீர்கள் அது உங்கள் முட்டாள்த்தனம்

Share this post


Link to post
Share on other sites

கடவுள் பெயரை சொல்லி காசு பறிக்கும் இப்படியான

கும்பலுகளை என்ன பண்ண முடியம்...

ஒருவேளை உண்மையான அம்மனே வந்து சொன்னாலும்

சனம் நம்பாது..

இதெல்லாம் ஒருவித மூளைச்சலவை.. வாய்மொழி பரப்புரைகள் மூலம் கடவுள் நம்பிக்கையுள்ள

அப்பாவி மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கின்றனர்.. கோவிலில் இதுக்கென்றே சிலரை செட்டப்

செய்து வைத்திருப்பார்கள்.. புதிய அப்பாவி பக்தர்கள் காதில் விழும்படியாக அற்புதங்கள் பற்றி

அளந்துவிட சம்பளத்துடன் ஆட்கள் இருக்கு..

டென்மார்க்கில மட்டுமல்ல ஒவ்வொரு நாடுகளிலும் இப்படியான முகவர்கள் இருக்கிறார்களாம்..

அவர்கள் அம்மன் அற்புதங்கள் பற்றி அளந்துவிட: வாய் திறந்து கேட்கும் எமது அப்பாவி மக்கள்

தங்கள் துன்பங்கள் தீர ஒரு வடிகாலாக எண்ணி பணத்தை கொட்டி பரிகாரம் தேடப்பார்க்கிறார்கள்..

இது இயல்பு.

இதற்கு என்ன செய்ய வேண்டும்?

ஒரே வழி முள்ளை முள்ளால தான் எடுக்க வேண்டும்... :lol:

lalitha4.jpg

என்னால முடியல... :D

எங்க ஜம்மு?

ஒரு பஞ்ச் ப்ளீஸ்.......... :D

Share this post


Link to post
Share on other sites

மூஞ்சயில் அஸிட் அடிக்க வேணும்.

Share this post


Link to post
Share on other sites

முரளி இங்கு நான் எழுதிய விடயம்கடவுள் நம்பிக்கை பற்றியது அல்ல மூட நம்பிக்கை பற்றியது கடவுளை கும்பிடுங்கள் அது உங்கள் நம்பிக்கை கடவுள் பெயரால் ஏமாற்றும் மனிதரை கும்பிடாதீர்கள் அது உங்கள் முட்டாள்த்தனம்

சாத்திரி அண்ணை, முக்கியமா என்ன பிரச்சனை எண்டால் நான் அறிஞ்சவரையில ஆக்கள் இவவ தரிசனம் செய்யபோறதா தெரிய இல்ல. டென்மார்க்கில கோயில் எண்டால் இது ஒண்டுதான் இருக்கிது போல. இந்தக்கோயில் பிரபலமா வந்திட்டிது. கொஞ்சம் காலம் முன்னம் இது பன்றி வளர்க்கிற பண்ணையுக்க இருந்திச்சாம் இந்தக்கோயில். பிறகு இப்ப வேற ஒரு இடத்தில கோயில் மாதிரி கட்டப்பட்டு இருக்கிது.

டென்மார்க் தமிழ்ச் சனமும் கோயில் எண்டு ஒரு இடமும் இல்லை எண்டால் எங்கையாவது போகத்தானே வேணும்?

இப்ப கோயிலுக்கு போறது சாமி கும்பிட எண்டு இல்லை தானே? நிறைய சொந்தக்காரர், ஊர் ஆக்கள், உறவுகளை கோயிலுக்கு போனால் தான் காணலாம், இதவிட இப்ப மரக்கறி, பழம் எண்டு சாமாங்களும் வாங்கக்கூடியதா இருக்கிது.

அப்ப இப்பிடி மற்றப்பக்கமா கிடைக்கிற பலாபலன்கள பார்க்கேக்க... இவ செய்யுற சேட்டைகள் பெரிசா தெரிய இல்ல சாத்திரி அண்ணை.

வேணுமெண்டால் நீங்கள் ஒரு கோயில டென்மார்க்கில திறந்து பாருங்கோ.

Share this post


Link to post
Share on other sites

சாத்திரி சொல்வது போல இறைவழிபாட்டைக் கொச்சைப்படுத்துகின்ற கும்பல்கள் இவர்கள். அது சாய்பாபா ஆக இருக்கட்டும். இந்த டென்மார்க் பித்தலாட்டமாக இருக்கட்டும். இவர்களை அகற்றுவதே பக்தியின் உண்மைத் தன்மை நிலைக்க உதவும்.

சுவடி பார்ப்பது என்று ஒன்று இரு;ககின்றது தொடர்பாக அனைவரும் அறிவீர்கள். என் நண்பன் ஒருவனுக்கு அப்படி பார்க்க நேர்ந்தது. இது தான் உன் சுவடி ஒன்று குறித்தவர் படித்துக் காட்டியப்புறம் நண்பன் கேட்டான். என் சுவடி என்று சொல்கின்றீர்கள். என்னை அடையாளம் கண்டு விட்டீர்கள். பிறகேன் அந்தச் சுவடியை வைத்துக் கொண்டிருக்கின்றீர்கள். என்னிடம் தரலாமே என்று.

குறித்தவர் பதில் சொல்ல முடியாமல் திணறினார்.

Share this post


Link to post
Share on other sites

செருப்புப் பூசை

புராணங்களில் எந்தக் கடவுளின் அவதாரமும் நாடுநாடாய் மக்களிடம் உண்டியல் குலுக்கியதாகஎழுதப்பட்டிருக??கவும் இல்லை நான் படிக்கவும் இல்லை. லலிதா கடவுளின் அவதாரமாக இருந்தால் தினம் தினம் துன்பப்பட்டும் வேதனைகள் சோதனைகளிற்கு மத்தியிலும் படுகொலை செய்யப்பட்டுக்கொண்டும் இருக்கும் அவரின் இனமாகிய தமிழினத்தை முதலில் காப்பாற்றலாமே.தினம் தினம் எமது மக்களின் மீதும் எந்தப் பாவமும் அறியாத சிறுவர்கள் மீதும் விழுகின்ற விமானக் குண்டுகளை தன்னுடைய அற்புத சக்தியால் அதனை போட்டவன் வீட்டிலேயே விழ வைக்கலாமே.அவதாரம் என்பதே அனியாயத்தை அழிக்கத்தானே வடிவெடுக்கின்றது அப்படியானால் சிறீலங்கா இராணுவமுகாம்கள் அனைத்தையும் ஒரு நொடியில் அழித்து சாம்பலாக்கலாமே.அதை விட்டு விட்டு அவதாரமெடுத்தது நாடு நாடாய்: உண்டியல் குலுக்கி ஏன் தன்னுடைய சக்தியை வீணடிக்கிறார்.

.

என்ன சாத்திரி லொள்ளா அவ என்ன வைச்சுக்கொண்டா வஞ்சனை பண்ணுறா சட்டியிலை இருந்தால்தானே அகப்பையிலை வரும்

ஐயோ சாமி குற்றம் வரப்போகுது இதுக்கு என்ன பரிகாரம் செய்யலாம் யாராவது சொல்லுங்கோ

Share this post


Link to post
Share on other sites

இப்படிப் போன்றவர்களை சுட்டுக்கொல்லவேண்டும்

Share this post


Link to post
Share on other sites

சாத்திரி நான் அறிஞ்ச விசயங்கள் கொஞ்சம் தாறன்:

1. டென்மார்க்கில இருக்கிற ஆக்கள விட கூடுதலாக சுவிஸ், ஜேர்மன், பிரான்ஸ் ஆக்கள் தான் இந்தக்கோயிலுக்கு போறவர்களாம்.

2. இவவுக்கு இப்படியான அருள் கிடைத்தது 40வது வயதிலாம்.

3. அதற்கு முன் கோழி இறைச்சி எல்லாம் தங்கட வீட்டுக்கு வந்து சாப்பிட்டு இருக்கிறா என்று ஆக்கள் சொல்லுறீனம்.

4. அவவுக்கு ஒரு மகன் இருக்கிறாராம். இப்பிடி அருள் வந்ததும் தான் இனி இல்லற வாழ்க்கையில ஈடுபடமாட்டன் என்று சொல்லி புருசனை வேறு ஒரு கலியாணம் செய்யச் சொன்னதா கேள்வி. உண்மை பொய் தெரியாது.

5. தேரில இவவ ஏத்தித்தான் இழுக்கிறதாம். உண்மைபொய் தெரியாது.

6. இவவுக்குத்தான் சாமிக்கு செய்யுறது மாதிரி அளங்காரம் செய்து பூசை செய்யுறதாம்.

7. மொத்தத்தில இது நடமாடும் உண்மையான அம்மனாக கருதப்படுகிதாம்.

இவ்வளவு தகவல் தான் இப்போதைக்கு சேகரிக்க முடிஞ்சிது.

Share this post


Link to post
Share on other sites

முரளி நீங்கள்சொல்லியதில் பலது உண்மை இவரை ஓரளவு எனக்கு ஊரிலேயெ தெரியும் ஊரில்தனக்கு 6வயதில் சாமி வந்தது என்று சொல்லித் திரிந்தவர் ஆனால் ஊரில் பெரியளவு எடுபடவில்லை அதற்கு காரணம் இயக்கத்தின்கட்டுப்பாட்டில் அவரது ஊரும் இருந்தது அந்த நேரம்.கடவுளை காட்டு எண்டு இயக்கம் கட்டி வைச்சு அடிச்சிருந்தால் இவரால் காட்ட முடியாமல் போய்இருக்கும். அதனால் அவர் அளவுடன் நிறுத்திவிட்டார். பின்னர் டென்மார்க் வந்தபின்னர் அதே விழையாட்டு ஆனால் ஆரம்பத்தில் அவரது வீட்டு நிலவறையில் ஒரு அம்மன் படத்தை வைத்துதத்தான் கோயிலை தொடங்கினார்.இவரது வேறு நடவடிக்கைகள் காரமாக அவரது கணவன் பாலன் என்பவர் பிரிந்து போனதும் எனக்குத் தெரியும்.ஆனால் இவரிற்கு புகளும் பணமும் வந்து சேரத் தொடங்கியதும் அவர் வந்து ஒட்டிக் கொண்டார் அவர் தான் இன்று பூசாரி. அவர்களிற்கு ஒரு மகன் உண்டு அவரும் இப்ப முருகக் கடவுள்.ஆனால் டென்மார்க்கில் யாரும் இவரை மதிப்பதில்லை அவரிட்டை போறது எல்லாம் யெர்மன் சுவிஸ் கொலண் காரர் தான் அதுவும் இப்ப குறைஞ்சதாலை கனடாப் பக்கம் தன்னுடைய வியாபாரத்தை விரிவாக்கிஇருக்கிறார்.இதிலை கொடுமை என்னவெண்டால் அவா தான் தான் சாமி எண்டு அவாவை புருசன் பூசை செய்வார் தேரிலை வைச்சு இழுப்பினம் ஆராத்தி காட்டுவினம்.காலிலை விழுந்து கும்பிடுவினம்.இதுவரைக்கும் அவா ஒரு அற்புதமும் செய்து கிடையாது முளியை பிரட்டுறதும்.வாயாலை வீணீர் வடிக்கிறதும் தான் அவாவின்ரை அவதாரம்.இவங்களை மாதிரி ஆக்களாலைதான் சைவ சமயத்திற்கே அவமானம்

Edited by sathiri

Share this post


Link to post
Share on other sites

சாத்திரி அங்கிள் வேணுமென்டா என்ட சப்பாத்தை தரட்டோ :lol: அது தான் நீங்களே உங்களை அடிக்கிறியள் அது தான் கேட்டனா பாருங்கோ..ம்ம் நான் தான் அனுமானின் மறு அவதாரம் என்னை கும்பிடமாட்டியளே :lol: ..(எல்லாரையுஊ??் கும்பிடுறியள் என்ன கும்பிட்டா என்ன வந்திட்டு)..சோ நாளையில் இருந்து என்னையும் கும்பிடுங்கோ வசி அண்ணா எனக்கு ஒரு கெல்ப் அதாவது அனுமானின்ட படத்தில என்ட முகத்தை கிராபிக்சில செய்து தருவியள் தானே :lol: ..(எனக்காக இதை கூடவா செய்ய மாட்டியள் பாருங்கோ)..

சோ..எனக்கு வடை மாலை போட வேண்டியவர்கள் மற்றும் என் பொற் பாதங்களை விழுந்து கும்பிட்டு..(நாசமாக போக வேண்டியவர்கள் :( )...எல்லாரும் சாத்திரி அங்கிளை உடனடியாக தொடர்பு கொள்ளும் படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.. :lol:

(ராம ஜெயம்..ராம ஜெயம்)..ம்ம் எல்லாம் கரக்டா சொல்லுறன் தானே அது சரி முக்கிய குறிப்பு நேக்கு கல்யாணம் ஆகின லேடிஸ் பிடிகாது..(நான் பிரமச்சாரி எனக்கு பக்கத்தில வர கூடாது சொல்லிட்டன் :D )..கல்யாணம் கட்டாத இளம் பெண்கள் மட்டும் தான் எனகருகில் வரவேண்டும் என்பதனையும் அறிய தருகிறேன்..அதை மிஞ்சி வந்தா தெய்வ குற்றம் ஆகிடும் பிறகு சிட்னியில யாரின்ட வீட்டு கூரைக்கு மேலையும் போய் இருந்திடுவன் :lol: கீழே வராம சொல்லிட்டன்...(பிறகு சிட்னியில மழை பெய்யாது சொல்லிட்டன் :( )...

எல்லாம் அவன் செயல்...எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது..(ராம ஜெயம்..ராம ஜெயம் :lol: )..

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா சாமி ஆசாமி ஆகவும் முடியாது ஆசாமி சாமி ஆகவும் முடியாது"

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

Share this post


Link to post
Share on other sites

ஹாஹா ஜம்முபேபி அனுமானின் அவதாரமா? ஐயோ இதை நான் நம்பவே மாட்டேன். ஜம்மு இதெல்லாம் கொஞ்சம் ஓவராக இல்லையா? அதுதான் பிரமச்சாரி என சொல்லிட்டு கல்யாணம் ஆகாத பெண்கள் உங்களருகில் வரலாம் என்பதை சொன்னேன்

Share this post


Link to post
Share on other sites

ஜம்மு உங்கடை வால் அளவை சே கால் அளவை அனுப்பி விடுங்கோ நானே அந்த அளவிற்கு ஒரு செருப்பை வாங்கி பூசையிலை வைக்கிறன்.உங்களுக்கு செருப்பு அனுப்பிற செலவு மிச்சம். ஆனால் வருகிற வருமானம் எனக்குத்தான் :D:D

Share this post


Link to post
Share on other sites

lalitha3.jpg

ஆத்தாவிற்குப் படைக்கின்ற புரியாணி, சிக்கின் கொத்தில் அடுத்த முறை உறைப்பைக் குறைச்சுப் போடுங்கோ! மிளகாய் கடிச்சு, உறைப்புத் தாங்க இயலாமல் நாக்கை நீட்டுகின்றார். உங்களுக்கு எல்லாம் நக்கலாகப் போச்சு என்ன?

Edited by தூயவன்

Share this post


Link to post
Share on other sites

சிட்னியிலையும் இலலிதாச் சாமியார் வந்தால் நல்லாய் உழைக்கலாம். இங்குள்ளவர்கள் செருப்பு, என்ன சப்பாத்தையும் கொடுப்பார்கள். தாயகத்துக்கு உதவுவது என்றால் ஒன்றுமில்லை என்பினம். இப்படிச் சாமியார் வந்தால் கடன் வாங்கியாவது சாமியாருக்கு உதவி செய்வினம்.

Share this post


Link to post
Share on other sites

ஹாஹா ஜம்முபேபி அனுமானின் அவதாரமா? ஐயோ இதை நான் நம்பவே மாட்டேன். ஜம்மு இதெல்லாம் கொஞ்சம் ஓவராக இல்லையா? அதுதான் பிரமச்சாரி என சொல்லிட்டு கல்யாணம் ஆகாத பெண்கள் உங்களருகில் வரலாம் என்பதை சொன்னேன்

ம்ம்..நிலா அக்கா ஜம்மு பேபி அனுமானின் மறு அவதாரம்..(பார்க்க தெரியலையோ :D )..நிசமா முடியல என்னால..ராம ஜெயம்..அச்சோ கன்னத்தில போடுங்கோ கன்னதில போடுங்கோ தெய்வ குற்றம் ஆக போது..(பின்ன ஜம்மு பேபியை பார்த்து உது ஓவரா தெரியல என்று கேட்டா :D )..

ம்ம்..கல்யாண பெண்கள் வரவே கூடாது ஒன்லி கல்யாணம் கட்டாத பெண்கள் மட்டும் தான் வரமுடியும் அவைக்கு தான் என்னுடைய ஆசிர்வாதம் இருக்கும் சொல்லிட்டன் :D ..(அதுக்காக நீங்க எல்லாம் வரபடாது சொல்லிட்டன் :D )..

அப்ப நான் வரட்டா!!

Share this post


Link to post
Share on other sites

ஜம்மு உங்கடை வால் அளவை சே கால் அளவை அனுப்பி விடுங்கோ நானே அந்த அளவிற்கு ஒரு செருப்பை வாங்கி பூசையிலை வைக்கிறன்.உங்களுக்கு செருப்பு அனுப்பிற செலவு மிச்சம். ஆனால் வருகிற வருமானம் எனக்குத்தான் :D:lol:

ஓமோம் நீங்க சொன்னா பிறகு தான் நேக்கு வால் வேற இருக்கு என்ன..(உந்த பக்தர்களை நம்ம ஏலாது :( )..வாலை கேர்ட் பண்ணிட்டாலும்..(அதுக்கு என்ன செய்யலாம் சாத்திரி அங்கிள் :D )..ம்ம் செருப்பின்ட சைஸ் தானே..(அனுமான் செருப்பு போடுறவறோ)..யார் கண்டது சரி அத விடுவோம் என்ன.. :D

ம்ம்..ஒகே சாத்திரி அங்கிள் தான் பிரான்ஸ் நாட்டிற்கு பொறுப்பு :D ..(ஆனா கிடைக்கிற அமோண்டில கொஞ்சம் உங்கால வெட்ட வேண்டும் என்ன :D )..

அப்ப நான் வரட்டா!!

Share this post


Link to post
Share on other sites

ம்ம் நான் தான் அனுமானின் மறு அவதாரம் 245']

சாத்திரி அங்கிள் வேணுமென்டா என்ட சப்பாத்தை தரட்டோ :lol: அது தான் நீங்களே உங்களை அடிக்கிறியள் அது தான் கேட்டனா பாருங்கோ..என்னை கும்பிடமாட்டியளே :lol: ..(எல்லாரையுஊ??் கும்பிடுறியள் என்ன கும்பிட்டா என்ன வந்திட்டு)..சோ நாளையில் இருந்து என்னையும் கும்பிடுங்கோ வசி அண்ணா எனக்கு ஒரு கெல்ப் அதாவது அனுமானின்ட படத்தில என்ட முகத்தை கிராபிக்சில செய்து தருவியள் தானே :o ..(எனக்காக இதை கூடவா செய்ய மாட்டியள் பாருங்கோ)..

சோ..எனக்கு வடை மாலை போட வேண்டியவர்கள் மற்றும் என் பொற் பாதங்களை விழுந்து கும்பிட்டு..(நாசமாக போக வேண்டியவர்கள் :lol: )...எல்லாரும் சாத்திரி அங்கிளை உடனடியாக தொடர்பு கொள்ளும் படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.. :D

(ராம ஜெயம்..ராம ஜெயம்)..ம்ம் எல்லாம் கரக்டா சொல்லுறன் தானே அது சரி முக்கிய குறிப்பு நேக்கு கல்யாணம் ஆகின லேடிஸ் பிடிகாது..(நான் பிரமச்சாரி எனக்கு பக்கத்தில வர கூடாது சொல்லிட்டன் :lol: )..கல்யாணம் கட்டாத இளம் பெண்கள் மட்டும் தான் எனகருகில் வரவேண்டும் என்பதனையும் அறிய தருகிறேன்..அதை மிஞ்சி வந்தா தெய்வ குற்றம் ஆகிடும் பிறகு சிட்னியில யாரின்ட வீட்டு கூரைக்கு மேலையும் போய் இருந்திடுவன் :wub: கீழே வராம சொல்லிட்டன்...(பிறகு சிட்னியில மழை பெய்யாது சொல்லிட்டன் :lol: )...

எல்லாம் அவன் செயல்...எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது..(ராம ஜெயம்..ராம ஜெயம் :wub: )..

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா சாமி ஆசாமி ஆகவும் முடியாது ஆசாமி சாமி ஆகவும் முடியாது"

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு உங்களுடைய போட்டோவை பார்க்கும் போதெல்லாம் நான் நினைப்பதுண்டு என்னட இந்த பிள்ளை குரங்கு குட்டிபோல் உள்ளதே என்று. அட நிங்கள் அனுமானின் அவதாரமா? சாயல் அப்படியே உள்ளது.

இந்த அம்மனுடைய இரவு பூஜை வீடியோ போடடோக்கள் இருந்தால் தயவுசெய்து தந்து உதவவும். நெட்டில போட்டு நாங்களும் ஒரு வியாபாரத்தை தொடங்கலாமெண்டுதான்...........

Share this post


Link to post
Share on other sites

ஜம்மு உங்களுடைய போட்டோவை பார்க்கும் போதெல்லாம் நான் நினைப்பதுண்டு என்னட இந்த பிள்ளை குரங்கு குட்டிபோல் உள்ளதே என்று. அட நிங்கள் அனுமானின் அவதாரமா? சாயல் அப்படியே உள்ளது.

இந்த அம்மனுடைய இரவு பூஜை வீடியோ போடடோக்கள் இருந்தால் தயவுசெய்து தந்து உதவவும். நெட்டில போட்டு நாங்களும் ஒரு வியாபாரத்தை தொடங்கலாமெண்டுதான்...........

அட பாவிகளா..நினைத்தனான் இப்படி எல்லாம் நினைப்பாங்க என்று..(அப்படியே நினைத்திட்டீனம் :wub: )...என்றாலும் உப்படி சொல்லி இருக்க கூடாது ஜம்மு பேபியை பார்த்து :lol: ..(ஆனா உதுக்கு எல்லாம் ஜம்மு பேபி பீல் பண்ணாது :lol: ) பிகோஸ் மம்மியிட்ட அடிகொருக்கா மங்கி ஏச்சு வாங்கிறனான் அல்லோ சரி அதை எல்லாம் கண்டுகாதையுங்கோ என்ன..(இஸ்ட பார்ட் ஒவ் ட கேம் :lol: )..

ம்ம்..நான் தான் அனுமானின் மறு அவதாரம்..(உந்த லோகத்தில பாவம் கூடி போச்சு உதை குறைக்க தான் நான் வந்திருக்கிறன் :lol: )..படத்தில கப்டன் விஜகாந் வாற மாதிரி..முடியல என்னால.. :o

சா.சா ஏன் அவாவின்ட படம் எல்லாம் அண்ணா நானிருக்கிறன் அல்லோ..(நீங்க இருக்கும் நாட்டில நேக்கு ஏஜென்ட் நீங்க தான்)..குழந்தை பிரச்சினையா??குழந்தை இல்லையா...நாடுங்கள் ஜம்மு அனுமான் சாமியார் என்று போர்ட் போடுங்கோ என்ன :lol: ..(பேஷா எல்லாருக்கு குழந்தை பாக்கியம் கொடுத்திடுவோம் என்ன)..எல்லாம் அவன் செயல்..நல்லதே நடகட்டும்... :D

"சாய் ராம்..சாய் ராம்" :wub:

அப்ப நான் வரட்டா!!

Share this post


Link to post
Share on other sites

ஆஆஆஆஆஆ........யம்மு அனுமானின் மறுஅவதாரமா, அப்பவே நினைச்சன். டக் டக் எண்டு எல்லாம் மனசுல்ல பட்டதை எல்லாம் பக் பக் எண்டு பக்கம் பக்கமா எழுதக்கே நினைச்சன் இந்த யமுனாவுக்குள்ள ஏதோ ஒரு சக்தி வந்து ஆட்டிப்படைக்குது எண்டு. :lol::D

Share this post


Link to post
Share on other sites

ம்ம்..நிலா அக்கா ஜம்மு பேபி அனுமானின் மறு அவதாரம்..(பார்க்க தெரியலையோ :wub: )..நிசமா முடியல என்னால..ராம ஜெயம்..அச்சோ கன்னத்தில போடுங்கோ கன்னதில போடுங்கோ தெய்வ குற்றம் ஆக போது..(பின்ன ஜம்மு பேபியை பார்த்து உது ஓவரா தெரியல என்று கேட்டா :wub: )..

ம்ம்..கல்யாண பெண்கள் வரவே கூடாது ஒன்லி கல்யாணம் கட்டாத பெண்கள் மட்டும் தான் வரமுடியும் அவைக்கு தான் என்னுடைய ஆசிர்வாதம் இருக்கும் சொல்லிட்டன் :wub: ..(அதுக்காக நீங்க எல்லாம் வரபடாது சொல்லிட்டன் :lol: )..

அப்ப நான் வரட்டா!!

பேபி உங்கட கன்னத்தை காட்டுங்கோ 2 பளார் பளார் னு தாறன் :lol::D

தம்பி இது நன்னாவே இல்லை. கல்யாணம் கட்டாத பொண்ணுகளுக்கு ஆசீர்வாதம் வழங்குங்கோ அதுக்காக ஒரு அக்காவை பார்த்து இபப்டி சொல்லி இருக்க கூடாது :(

Share this post


Link to post
Share on other sites

ஆஆஆஆஆஆ........யம்மு அனுமானின் மறுஅவதாரமா, அப்பவே நினைச்சன். டக் டக் எண்டு எல்லாம் மனசுல்ல பட்டதை எல்லாம் பக் பக் எண்டு பக்கம் பக்கமா எழுதக்கே நினைச்சன் இந்த யமுனாவுக்குள்ள ஏதோ ஒரு சக்தி வந்து ஆட்டிப்படைக்குது எண்டு.

ம்ம்..கறுப்பி அக்கா நான் அனுமானின் மறு அவதாரமே தான் :lol: ..(பார்க்க தெரியுது தானே :D )..ம்ம்ம்..கறுப்பி அக்கா இருந்தா போல என்னை அறியாமலே எனக்குள்ள ஒரு சத்தி சா சக்தி வந்திட்டு பிறகு பார்த்தா :) ...

ஆ..ஊஊஊ...ஆ..ஊஊ....அ..ஊஊஊஊஊஊஊஊஉ....ஆஆஅ...

(நான் அனுமான் வந்திருக்கிறன்)..ஊஊஊஊஊ யாருங்க வலைஞன் எங்கிருந்தாலும் இங்க வா..ங்..கோ...எனக்கு பிடிகல...பிடிகல.. :lol:

இப்ப என்ன நடந்தது நான் எங்க இருக்கிறன் :) ..(கறுப்பி அக்கா உங்களோட தானே கதைத்து கொண்டிருந்தனான் அதுகுள்ள என்ன ஆச்சு எனக்கு :wub: )...எதில விட்டனான் ஒரே கன்வீயூசனா இருக்கு.. :(

அப்ப நான் வரட்டா!!

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • அருமையான‌ வ‌ரிக‌ள் நொச்சி ஜ‌யா / வித்தாகி போன‌ த‌ள‌ப‌திக‌ளுக்கு வீர‌ வ‌ண‌க்க‌ம் / மீண்டு எழுவோம் என்ற‌ ந‌ம்பிக்கை ப‌ல‌ர் ம‌ன‌தில் இருக்கு / பொறுத்தார் பூமி ஆள்வார் , 
  • ட்ரம்ப்பின் கோரிக்கை நிறைவேறுகிறது: அமெரிக்காவுக்கு மருந்துகளை அனுப்ப இந்தியா முடிவு!         by : Litharsan அமெரிக்காவுக்கு ஹைட்ரொக்சிகுளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா வைரஸால் அமெரிக்காவில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் கொரோனா பாதிப்பு சிகிச்சைகளுக்கு ஹைட்ரொக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை வழங்குவது நல்ல பலனளிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறி வருகிறார். மலேரியா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ஹைட்ரொக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை இந்தியாவிடம் இருந்து அமெரிக்கா அதிக அளவில் வாங்கி வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஹைட்ரொக்ஸிகுளோராகுயின் உள்ளிட்ட சில மருந்துகளை ஏற்றுமதி செய்ய இந்தியா தடை விதித்தது. இதனால், அமெரிக்கா ஹைட்ரொக்ஸிகுளோராகுயின் மருந்துகளை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் பேசிய டிரம்ப், அமெரிக்கா ஏற்கனவே கேட்டிருந்த ஹைட்ரொகிஸிகுளோரோகுயின் மருந்துகளை இந்தியா அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதன் தொடர்ச்சியாக, இந்தியாவைச் சார்ந்துள்ள அண்டை நாடுகள் மற்றும், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு ஹைட்ரொக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இதேவேளை, ஏற்கனவே கேட்டிருந்த ஹைட்ரொக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை இந்தியா அனுப்பவில்லை என்றால் தக்க பதிலடி கொடுப்போம் என ட்ரம்ப் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/ட்ரம்ப்பின்-கோரிக்கை-நிற/
  • இலங்கையில் கொரோனா வைரஸால் 6 ஆவது உயிரிழப்பு!         by : Jeyachandran Vithushan இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 6 ஆவது உயிரிழப்பு பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 80 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/இலங்கையில்-6-ஆவது-நோயாளிய/
  • அற்ப விடயங்களுக்காக வீடுகளை விட்டு வௌியேறுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் – இராணுவத் தளபதி           by : Benitlas ஊரடங்கு அனுமதிப்பத்திரத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம் என மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “அத்தியாவசிய தேவைக்காக வழங்கப்பட்டுள்ள ஊரடங்கு அனுமதிப்பத்திரத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம். இந்த விடயம் தொடர்பில் பொதுமக்களிடம் இருந்து பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. நோய்த் தடுப்பிற்கான ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த சட்டத்தை மதித்து அனைத்து பிரஜைகளும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். அற்ப விடயங்களுக்காக அநாவசியமாக வீடுகளை விட்டு வௌியேறுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். சுகாதார நிலையுடனான போராட்டம் காரணமாக ஒவ்வொரு பிரஜைகளும் தங்களின் பொறுப்புகளை சரிவர நிறைவேற்ற வேண்டும். தொழில் நிமித்தம் வௌிமாவட்டங்களுக்கு சென்று சிக்கலை எதிர்நோக்கியுள்ளவர்கள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடப்பட்டுள்ளது. எனினும், கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு முன்னெடுக்கப்படும் ஒரு வழி முறையாகவே அவர்களை அனுப்பி வைக்காதுள்ளோம். ஆகவே, இந்த விடயம் தொடர்பில் பகிரப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம். அனைத்து பிரஜைகளுக்கும் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான ஒழுங்குகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது“ எனத் தெரிவித்துள்ளார். http://athavannews.com/அற்ப-விடயங்களுக்காக-அநாவ/
  • சமூர்த்தி பயனாளிகளுக்கு எவ்வித பேதமும் இன்றி கொடுப்பனவு வழங்கப்படும் – டலஸ்!          by : Benitlas கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களில் சமூர்த்தி பயனாளிகளுக்கு எவ்வித பேதமும் இன்றி கொடுப்பனவு வழங்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடக பிரதானிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் டலஸ் அழகப்பெரும இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “அனைத்து சமூர்த்தி பயனாளிகளுக்கும் நாட்டில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இவ்வாறு கொடுப்பனவு வழங்கப்படவில்லை. எந்த வேறுபாடும் இன்றி இவ்வாறு கொடுப்பனவு வழங்கப்பட்டதை எனது அரசியல் வாழ்வில் நான் பார்க்கவில்லை. நூற்றுக்கு 80 வீதம் கட்டாய சேமிப்பு உள்ளவர்களுக்கு மாத்திரம் சமூர்த்தி நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கம் சமூர்த்தி நிவாரணங்களை வழங்கிய போது அதனைப் பெற்றுக்கொண்ட யாருக்கும் 80 வீத கட்டாய சேமிப்பு காணப்படவில்லை. தற்போது அந்த முறைமை நீக்கப்பட்டுள்ளது. 80 வீத கட்டாய சேமிப்பு உள்ளவர்களுக்கு மாத்திரம் சமூர்த்தி நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்ற முறையை தற்போதும் நடைமுறையில் இருந்திருந்தால் கடந்த அரசாங்கத்தில் நிவாரணம் பெற்ற எவருக்கும் தற்போது கிடைக்கப்பெறாது. எனினும் அவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்காது எவ்வித பேதமும் இன்றி இம்முறை எமது அரசாங்கத்தால் சமூர்த்தி நிவாரணம் வழங்கப்படவுள்ளது. ஆனால் இந்த தீர்மானம் சமூகமயப்படுத்தப்படவில்லை. அரசியல்வாதிகளால் முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் பரவலடைந்துள்ளன. இதுவே உண்மை நிலைமையாகும்“ எனக் குறிப்பிட்டுள்ளார். http://athavannews.com/சமூர்த்தி-பயனாளிகளுக்க-3/