Jump to content

சாதி மத பேதமின்றி அனைத்து மக்களுக்காகப் போராடும் சங்கபரிவார்


Recommended Posts

திராவிட கொள்கைகளில் முக்கியமானது இந்துத்துவ எதிர்ப்பு என்பது உள்ளங்கை நெல்லிக்கனி... அதோடு கிறிஸ்தவ , முஸ்லீம் சகோதரர்கள் என்கிறீர்கள்...! ஏற்றத்தாள்வுக்கு வகை செய்பவது இந்துத்துவம் என்கீறீர்கள்...! அதை எதிர்ப்பதாக சொல்கிறீர்கள்...! எதிர்ப்பவர் என்பது எதிரி தானே..! (அப்போ அதை இந்து நண்பன் எண்றா சொல்வது) பின்னர் நான் எங்கே சொன்னேன் என்கிறீர்கள்...

நான் மேலே எழுதி இருப்பதைத் திரும்ப வாசியுங்கள். நான் இந்துத்வாக்கு எதிரி எனில் அது சக மனிதர்களை அடக்குகிறது கொல்கிறது என்பதால்.இசுலாமிய மதத்தைப் பின் பற்றுவதாகச் சொல்லும் ஒருவர் அது போதிக்கும் சகோதரத்துவத்தை மறுதலித்து விட்டு மற்ற மதத்தை வணங்குபவரைக் கொல்ல வேண்டும் என்றால் அவரும் எதிரி தான்.

அத்தோடு இந்துத்துவா என்பதற்கும் இந்து என்பதற்கும் வேறுபாடு இருக்கிறது.இந்துவா என்பது இந்தியா இந்துக்களின் தேசம் என்பது மற்ற மதத்தவரைக் கொலை செய்வது கொள்ளை அடிப்பது மதத்தின் பெயரால் வாக்குக் கேட்பது அரசியல் செய்வது.

உயர்வு தாள்வு இல்லாத இடமே இல்லை...

சாதிய உயர்வு தாள்வுக்கு காரணம் பொருளாதாரம் மட்டும்தான்... உலகிலை இரண்டே இரண்டு பிரச்சினை. ஒருவன் உள்ளவன் மற்றவன் இல்லாதவன்...! இருப்பவன் பலமானவன், இல்லாதவன் கையேந்துபவன்... இருப்பவன் ஏவல் செய்வான் இல்லாதவன் அடிமையாவான், இருப்பவன் செருக்கோடு இருப்பான் இல்லாதவன் துணிவில்லாது இருப்பான்... இதில் இருந்துதான் அரசியல் தோண்றியது...! இந்த பிரச்சினையை போக்க எதையும் அழிப்பதனால் தீராது...! மாற்றம் கொண்டு வரவேண்டும்.... அது சோசலீசமாக இருக்கலாம்...

குடும்ப தலைவர், குழுத்தலைவர் எண்று விலங்குகளுக்குள் இருக்கிறது... அவைதான் இருப்பவர்களில் உயர்ந்தவர்கள்...! இது பலத்தின் அடிப்படையில் தோண்றியது... !

இது உங்களின் பார்வையாக இருக்கலாம்.ஆனால் போராடும் மக்கள் அவ்வாறு நினைக்கவில்லை அதனால் தான் போராட்டம் நடக்கிறது.

மேலே பெரியார் சொன்னதை வாசிதீர்கள் என்றால் இதற்கான பதில் அதில் இருக்கிறது.

//

பொருளாதார சம்பந்தமே பெரிதும் மற்ற நாடுகளில் இருக்கின்றன. நம் நாட்டுச் சமுதாய உயர்வு தாழ்வானது, பிறவியிலேயே வகுக்கப்பட்டு, அதை மதத்தோடு பொருத்தி, அதற்கு அரசியல் பாதுகாப்பளிக்கப்பட்டு இருந்து வருகிறது.அரசியலில் உள்ள பாதுகாப்பை உடைப்பது என்று முதலில் ஆரம்பித்தால், அதற்கு நம் நாட்டு மக்கள், அதுவும் பொருளாதாரத்தால் மிகவும் நொந்து ஏழ்மை நிலையில் இருக்கும் மத நம்பிக்கை கொண்ட பாமர மக்கள் என்பவர்களே சிறிதுகூட ஒப்பமாட்டார்கள் என்பதோடு மாத்திரமல்லாமல், அவர்களே நமக்கு எதிரிகளாயும் இருப்பார்கள்.

ஏனெனில், பிறவி காரணமாய் உள்ள உயர்வு தாழ்வு மதத்தில் சம்பந்தப்பட்டு, அம்மதம் பாமர மக்கள் ரத்தத்தில் ஊறி இருக்கிறபடியாலும், அதுவே அரசியலுக்கு ஆதாரமாய் இருப்பதாலும், அதை மாற்றாமல், அதை மாற்றுவதற்குத் தகுந்த முயற்சி எடுக்காமல் மேல்நாட்டுச் சமதர்மம் பேசுவது, பாலைவனத்தில் இருந்து சத்தம் போடுவது போலவே ஆகும். முதலில் சமுதாயத்தில் பிறவியின் பேரால் உள்ள பேதங்களை ஒழித்தாக வேண்டும். அதுவே இந்நாட்டு சமதர்மத்துக்கு முதற்படியாகும். நிற்க.

பொதுவாகவே சமதர்மம் என்பது எந்தக் கருத்தில் இருந்தாலும், சமுதாயம் முக்கியமானாலும், அதற்குக் கடவுள் உணர்ச்சி, மத நம்பிக்கை என்பவற்றின் எதிராகவே இருந்து வருகின்றன. சர்வதேச மதவாதிகளும் பெரிதும் கடவுள் உணர்ச்சியும், மத நம்பிக்கையையும், சமதர்மத்திற்கு விரோதமானது என்றுதான் சொல்லி இருக்கிறார்கள். ஆதலால், எந்த சமதர்மவாதிக்கும் இதைப் பொறுத்தவரையில் அபிப்பிராய பேதம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. இந்த வேலை அபிப்பிராய பேதமில்லாமல் நடந்துதான் தீரும்.

நம் நாட்டிற்கு இன்று முதலில் ஜாதி பேதங்கள் ஒழிந்து, மக்கள் யாவரும் பிறவியில் சமம் என்பதான சமதர்ம முயற்சியே முதலில் செய்ய வேண்டியதாயிற்று. ஜாதி, பேதம், பிரிவு ஆகியவை ஒழிந்தால்தான் சமூக வாழ்க்கையில் சமதர்மமாய் மனிதன் வாழ முடியும். பொருளாதார பேதத்துக்கும், சமூக ஜாதி பேத முறைதான் பெரிதும் காரணமாய் காவலாய் இருந்து வந்திருக்கிறது. இன்றும் பெருவாரியான மக்களுக்கு ஜாதி பேதமே, பொருளாதார சமதர்ம முறையை நினைக்கக்கூட இடம் தராமல் அடக்கி வருகின்றதுடன் பொருளாதார பேதத்துக்கு இடமளித்தும் வருகிறது.

//

Link to comment
Share on other sites

  • Replies 130
  • Created
  • Last Reply

நான் மேலே எழுதி இருப்பதைத் திரும்ப வாசியுங்கள். நான் இந்துத்வாக்கு எதிரி எனில் அது சக மனிதர்களை அடக்குகிறது கொல்கிறது என்பதால்.இசுலாமிய மதத்தைப் பின் பற்றுவதாகச் சொல்லும் ஒருவர் அது போதிக்கும் சகோதரத்துவத்தை மறுதலித்து விட்டு மற்ற மதத்தை வணங்குபவரைக் கொல்ல வேண்டும் என்றால் அவரும் எதிரி தான்.

அத்தோடு இந்துத்துவா என்பதற்கும் இந்து என்பதற்கும் வேறுபாடு இருக்கிறது.இந்துவா என்பது இந்தியா இந்துக்களின் தேசம் என்பது மற்ற மதத்தவரைக் கொலை செய்வது கொள்ளை அடிப்பது மதத்தின் பெயரால் வாக்குக் கேட்பது அரசியல் செய்வது.

இந்துக்களுக்குள் தான் இந்துத்துவம் அடங்குகிறது.. இந்துத்துவம் என்பது ஒரு வகை கொள்கை... அந்த கொள்கையை நியாயப்படுத்துவது எனது நோக்கம் அல்ல... ஆனால் இந்துக்கள், கிறிஸ்தவர், முஸ்லீம்கள் எண்று பாகு பாடு ஏற்படுத்தி காட்டியவர்களுடன் பெரியாருக்கு இருந்த நெருக்கம் எனும் குழறுபடிதான் பிரச்சின...!

மனிதருள் ஏற்றத்தாள்வு என்பதை எதிர்க்க வேண்டியவர்.. இந்துக்களுக்கு எதிராய் இருப்பவருடன் கூட்டணி என்பது அந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவதுக்கு பயன்படும் என்பதை விட அவர்களின் நடவடிக்கைகளை தீவிரபடுத்தும் என்பதை அறியாதவரா நீங்கள்....?

கேரளத்தில் இப்போது தொழில் கட்ச்சிகள் தலையெடுத்த பின்னர் ஒரு மலையாளி தன்னையும் தனது தொழிலையும் பெருமையாக சொல்கிறான்.. நான் தென்னை ஏறி கள் எடுக்கும் தொழில் சார் குடும்பத்தை சார்ந்தவன் என்கிறான்...! இதன் உண்மையை விளங்க நீங்கள் கேரளாவரை ்செல்ல வேண்டி இருக்கும்...! இதை ஏன் பெரியாரால் சாதிக்க முடியவில்லை...??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களை அழவைத்து நிகழ்ச்சி செய்தால் ஆதரவு கூடும் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் நன்றாகவே தெரிந்து வைத்திருக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

பெண்களை அழவைத்து நிகழ்ச்சி செய்தால் ஆதரவு கூடும் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் நன்றாகவே தெரிந்து வைத்திருக்கின்றார்கள்.
பிளாஸ்ரிக் சேர்ஜரி செய்து மூக்கை கொஞ்சம் நீட்டி பூணூலும் ஒன்று போட்டு நோக்கு நேக்கு என்று சொல்லிக்கொண்டு கொஞ்சக்காலம் இருப்பீர்களானால் உங்கள் வியாதி கொஞ்சம் குணமடையும் என்று நினைக்கின்றேன்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படிக்காமல் வைத்தியப்பட்டம் வாங்குவதற்கு நான் தான் உங்களுக்குக் கிடைச்சனோ? ஆனா உங்களுக்கு வந்திருக்கின்ற இந்த வியாதி தீரவே தீராது.

நேரமிருந்தால் மஞ்சள் சிவப்புத் துண்டைப் போட்டு "ஏனு சமச்சரா??,"என்று கன்னடம் பேசித் திரிய வேண்டியது தானே

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.