Jump to content

சாதி மத பேதமின்றி அனைத்து மக்களுக்காகப் போராடும் சங்கபரிவார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டிற்குச் சேவையா?

இன்றைக்கு கன்னடன் தமிழ்நாட்டிற்குத் தண்ணி தரமாட்டான் என்கின்றான். நீதிமன்றத்தை மதிக்கமாட்டன் என்கின்றான். அடிக்கின்றான். உடைக்கின்றான்.

தமிழனால் ஏதும் பேச்சுக்காவது முடியுமா? முடியாது. ஏன் என்றால் தடா, போடா, வடா எல்லாம் தமிழனின் மேல் தான் பாயும். அப்படி ஒரு நிலையை உருவாக்கி வைத்தது யார் என்றால்....

தமிழனைத் தண்ணிக்குப் பிச்சை, மொழிக்குப் பிச்சை, ஒற்றுமைக்குப் பிச்சை எடுக்க வைத்த மகான்.

Link to comment
Share on other sites

  • Replies 130
  • Created
  • Last Reply

எப்போதும் தன்னை பாலைக்காடு என்று பிரகடனம் செய்யவில்லை.

MGR பிறந்த காலம் பாலக்காடு தமிழகத்துக்கு சேர்த்தி... பாலக்காட்டை சேர்ந்தவர்கள் மலயாளிகளும் கிடையாது...! கலப்பு மொழி பேசுபவர்கள்...

Link to comment
Share on other sites

தமிழ்நாட்டிற்குச் சேவையா?

இன்றைக்கு கன்னடன் தமிழ்நாட்டிற்குத் தண்ணி தரமாட்டான் என்கின்றான். நீதிமன்றத்தை மதிக்கமாட்டன் என்கின்றான். அடிக்கின்றான். உடைக்கின்றான்.

தமிழனால் ஏதும் பேச்சுக்காவது முடியுமா? முடியாது. ஏன் என்றால் தடா, போடா, வடா எல்லாம் தமிழனின் மேல் தான் பாயும். அப்படி ஒரு நிலையை உருவாக்கி வைத்தது யார் என்றால்....

தமிழனைத் தண்ணிக்குப் பிச்சை, மொழிக்குப் பிச்சை, ஒற்றுமைக்குப் பிச்சை எடுக்க வைத்த மகான்.

அதற்கு காரணம் சில அரசியல் சுயநலவாதிகள்....! . இரண்டு பக்கமும் இருக்கின்றார்கள்...! உண்மையை உணர்ந்து பேசுங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையை நீங்கள் தான் உணரவில்லை. தமிழன் கையைத் தூக்கினால் வெட்டிப் போடுகின்ற சந்தேகிக்கின்ற நிலையை உருவாக்கி வைத்தவர் இவர் தான். தனித்தமிழ்நாடு என்று முட்டாள்தனமான செய்கை செய்யப் போய், ஒன்றுமே செய்யாமல் தமிழனைச் சந்தேகத்தோடு எல்லோரும் பார்க்க வைத்துள்ளார்.

ஒற்றுமையாக இருந்து தம் அடையாளங்களைப் பேணலாம் என்பதை கியுபேக், கனடாவின் இதர பிரதேச மக்களிடம் இருந்து படித்துக் கொள்ளலாம். ஆனால் எல்லாத்தையும் பிரித்து வைத்து தமிழனுக்குத் தண்ணீருக்கே கண்ணீர் விட வைத்த பெருமை இந்த மகானைத் தான் சாரும்.

வெளிப்படையாகச் சொல்லுங்கள். தமிழன் யாரோடு ஒற்றுமையாக இருக்கின்றான். மற்றவர்களோடு பகையை வளர்த்து அழிந்து போவதா தமிழரின் பண்பாடு. இந்த உலகத்தில் தானே தமிழன் வாழ்ந்தாக வேண்டும்.

மக்களைக் கொள்கைரீதியாக வளர்க்கத் தெரியாமல் அடுத்தவன் கூடத் தூரத்தில் வைத்தால் தனித்துவம் காக்கலாம் என்பது சுத்த முட்டாள்தனம்.

Link to comment
Share on other sites

உண்மையை நீங்கள் தான் உணரவில்லை. தமிழன் கையைத் தூக்கினால் வெட்டிப் போடுகின்ற சந்தேகிக்கின்ற நிலையை உருவாக்கி வைத்தவர் இவர் தான். தனித்தமிழ்நாடு என்று முட்டாள்தனமான செய்கை செய்யப் போய், ஒன்றுமே செய்யாமல் தமிழனைச் சந்தேகத்தோடு எல்லோரும் பார்க்க வைத்துள்ளார்.

ஒற்றுமையாக இருந்து தம் அடையாளங்களைப் பேணலாம் என்பதை கியுபேக், கனடாவின் இதர பிரதேச மக்களிடம் இருந்து படித்துக் கொள்ளலாம். ஆனால் எல்லாத்தையும் பிரித்து வைத்து தமிழனுக்குத் தண்ணீருக்கே கண்ணீர் விட வைத்த பெருமை இந்த மகானைத் தான் சாரும்.

வெளிப்படையாகச் சொல்லுங்கள். தமிழன் யாரோடு ஒற்றுமையாக இருக்கின்றான். மற்றவர்களோடு பகையை வளர்த்து அழிந்து போவதா தமிழரின் பண்பாடு. இந்த உலகத்தில் தானே தமிழன் வாழ்ந்தாக வேண்டும்.

மக்களைக் கொள்கைரீதியாக வளர்க்கத் தெரியாமல் அடுத்தவன் கூடத் தூரத்தில் வைத்தால் தனித்துவம் காக்கலாம் என்பது சுத்த முட்டாள்தனம்.

இதே கருத்தை நம் தலைமைகளிடம் கூட நீங்கள் முன்மொழியலாமே...? அவர்கள் கஷ்டப்பட்டு சண்டை பிடிக்க வேண்டியதில்லையே....?

எல்லாரும் ஒற்றை ஆட்சியில் குடை பிடிக்காலாம்.. வாங்கோ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் உங்களுக்கு ஈழப்போரும் தெரியாதா? அகிம்சை வழியில் தந்தை செல்வா எவ்வளவோ முயற்சி செய்தார். அதில் இருந்து அவர் தோற்றுப் போகின்றபோது தான் தனிநாடு தேவை என்ற தோற்றப்பாடு எழுந்தது. ஏன் சென்ற பேச்சுவார்த்தையில் கூடத் தலைவர் இலங்கைக்குள் தீர்வு காண வரச்சொல்லி, சிங்கள அரசைக் கேட்டார். இடைக்கால நிர்வாகசபையைத் தயாரித்தார். சிங்கள தேசம் தான் வரவில்லை. தமிழன் என்றைக்குமே போர் விரும்பியோ பிரிவினைவாதியோ கிடையாது என்பதற்கு இது தான் சான்று.

ராமசாமி அப்படியா செய்தார்இ தனிநாடு பிரிக்க வேணும், புடுங்க வேண்டும் என்று மேடைமேடையாகக் கூச்சல் போட்டார். ஒரு சின்னக் கத்தியைக் கூட அவரால் அந்தத் தனிநாட்டுக் கோரிக்கைக்காகத் தூக்க முடியவில்லை. இவரது வாய் வீச்சால் தான் மற்றவர்கள் எம்மைச் சந்தேகத்தோடு நோக்க வைத்தது. தமிழகத்தினைத் தவிர, இதர தென்மாவட்டங்கள் திராவிடக் கொள்கையில் இருந்து விலத்திப் போயின. முன்னேறியும் கொண்டிருக்கின்றார்கள்.

அதை மெல்லவும், முடியாமல் விழுங்கவும் முடியாமல் இவர்கள் படும் அவஸ்தையிருக்கே வேடிக்கையாக இருந்தாலும் வேதனையானதும் கூட

Link to comment
Share on other sites

ராமசாமி அப்படியா செய்தார்இ தனிநாடு பிரிக்க வேணும், புடுங்க வேண்டும் என்று மேடைமேடையாகக் கூச்சல் போட்டார். ஒரு சின்னக் கத்தியைக் கூட அவரால் அந்தத் தனிநாட்டுக் கோரிக்கைக்காகத் தூக்க முடியவில்லை. இவரது வாய் வீச்சால் தான் மற்றவர்கள் எம்மைச் சந்தேகத்தோடு நோக்க வைத்தது. தமிழகத்தினைத் தவிர, இதர தென்மாவட்டங்கள் திராவிடக் கொள்கையில் இருந்து விலத்திப் போயின. முன்னேறியும் கொண்டிருக்கின்றார்கள்.

தூயவன்..!! பெரியார் எப்போதும் தனிநாட்டு கோரிக்கையை வைக்க வில்லை... ஏன் தமிழ் தேசியம் எண்று முதலில் தனிநாட்டுக்காக முழங்கிய அறிஞர் அண்ணாதுரையை கடுமையாக எதிர்த்தவர் அவர்... ! அதனால்தான் அண்று காங்கிரஸ் காமராஜருக்காக அரசியல் பிரச்சாரம் எல்லாம் செய்தார்... ஆனால் அறிஞர் அண்ணாதுரை வெண்றார், பெரியார் ஆதரித்த காமராஜர் தோல்லியுற்றார்...!

பெரியார் எப்படியான ஆழுமையை கொண்டு இருந்தார் என்பதுக்கு இது நல்ல உதாரணம்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம். தமிழருக்குத் தனிநாடு என்பது தவறு தான். சென்னையைத் தலைநகரமாகக் கொண்ட தென்மாவட்டத்திற்கு என வந்திருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

தந்தை பெரியார் தனிநாடு கோரவில்லையா? நல்ல கூத்து

இந்தியா வெள்ளைக்காரர்களிடம் இருந்து விடுதலை பெறுவதற்கு முன்னமேயே தந்தை பெரியார் தமிழர்களுக்கு தனிநாடு கோரினார். இதுதான் வரலாறு.

தமிழர்களுக்கு என்று நாடு அமைக்க முயன்ற முதலாவது தமிழர் தந்தை பெரியார். அவருடைய போராட்டம் இன்று வரை தொடர்கிறது.

தந்தை பெரியார் தமிழர்களுக்கு என்ன செய்தார் என்று கேட்பவர்களைப் பார்த்து நகைக்கத்தான் முடியும்.

நீங்கள் விரும்புகிறீர்களோ இல்லையோ, உங்களுடைய வாழ்க்கையில் ஏதோ ஒரு வகையில் தந்தை பெரியாரின் போராட்டத்தின் சுவடு இருக்கிறது.

இங்கே நாம் கணணி மூலம் கருத்தாடுவதால், நான் எழுத்துச் சீர்திருத்தத்தை சுட்டிக் காட்டினேன்.

தந்தை பெரியார் தமிழர்களுக்கு என்ன செய்தார் என்பதற்கு என்னால் ஆயிரக் கணக்கில் சொல்ல முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதாரங்களோடு சொல்லுங்களேன் சபேசன். என்ன செய்தார் என்று.. நானும் நீங்கள் வந்த காலம் தொடக்கம் கேட்டுக் கொண்டே இருக்கின்றேன். கடைசி வரைக்கும் சென்ரிமெண்டாகவே வைச்சு வைச்சு எங்களின் ஆர்வத்தைக் கூட்டிக் கொண்டு செல்கின்றீர்களே, தவிர இது வரைக்கும் ஒன்றுமே சொல்லவில்லையே....

கணனி மூலம் கருத்தாடுவதால் எழுத்துச் சீர்திருத்தம். கணனி கண்டு பிடிக்க முன்பே, அது பற்றிய தோற்றத்தைக் கொண்டு வந்தார் என்கின்றீர்களா? ஆதர் சி கிளாக் போல பெருமை மிக்க இவரை, இநதப் பார்ப்பானக் கும்பல் உலகிறியச் செய்ய விடாமல் தடுத்துவிட்டதே..

என்னுமொரு நண்பர் சொன்னதின்படி, பெண்கள் கருத்தருக்கக்கூடாது என்று சொன்னதன் மூலம் ரெஸ்ரியுப் குழந்தையை உலகிற்கு அறிமுகம் செய்தவர் அண்ணல் ராமசாமி...

தமிழ் நூல்களை இவருக்கு முன் எப்பவோ அச்சுக்கோர்த்த உ.வே. சாமிநாத ஐயராகட்டும், ஆறுமுகநாவலராகட்டும்... எவ்வளோ தமிழுக்குச் சாதித்து விட்டு பேசாமல் இருக்கின்றார்கள். இந்தக் கன்னடருக்கு காலில் விழுந்து வணங்குங்கோ என்று ஆயிரம் தரம் சொல்லி விட்டீர்கள்.. இருந்தாலும் பரவாயில்லை... வேறு சொல்லுங்கள்

Link to comment
Share on other sites

இந்துக்களுக்காக குரல் கொடுப்பதற்க்கு பாதுகாப்பதற்க்கு சில தீவிர கொள்கை உடைய அமைப்புகள் தேவை அந்த வகையில் இந்த அமைப்பினர்ருடைய மனிதாபிமான சேவைகளட பாரட்டத்தக்கது...

Link to comment
Share on other sites

தந்தை பெரியார் எழுத்துச் சீர்திருத்தத்தை பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் நடைமுறைக்கு கொண்டு வந்தது கணணியில் எழுதலாம் என்ற சிந்தனையில் அல்ல. அப்பொழுது தந்தை பெரியாரிடம் கணணி பற்றிய சிந்தனையும் இருந்திருக்க வாய்ப்பில்லை.

தமிழர்கள் இலகுவாக தமது மொழியை கற்க வேண்டும் என்பதுதான் அவருடைய நோக்கம். இன்றைக்கு எமக்கு அது கணணியில் பயன்படுகிறது.

தந்தை பெரியார் என்ன செய்தார் என்று கேட்பவர்கள் வரலாறு அறியாதவர்கள். நேற்று கட்சி தொடங்கிய கடவுள் நம்பிக்கையுள்ள விஜயகாந்த் கூட தன்னுடைய கட்சித் தொடக்க விழாவில் பெரியார் படத்தை வைக்கிறார்.

பிள்ளையார் சிலையை போட்டுடைத்த தந்தை பெரியாரின் சிலையில் சிறு கீறல் விழுந்தால் கூட தமிழ்நாடு கொந்தளிக்கிறது.

அட, இத்தைனயும் ஏன்? வட இந்தியாவில் கூட தந்தை பெரியாரின் படத்தை தமது கட்சி மாநாடுகளில் வைக்கிறார்கள்.

எதுவுமே செய்யாத தந்தை பெரியாருக்கா இவ்வளவு மரியாதை?

தெரிந்து கொண்டே கேட்கின்ற கேள்விகளக்கு பதில் எழுதுவது அல்ல என்னுடைய வேலை.

தமிழர்களுக்கு சிந்திக்க கற்றுக் கொடுத்ததே தந்தை பெரியார்தான். அதனால்தான் என்றைக்கும் அவருடைய தொண்டர்கள் எம்முடைய போராட்டத்தை ஆதரிக்கிறார்கள். இந்த மாறாத ஆதரவுக்கு ஒரே காரணம் தந்தை பெரியார் உருவாக்கிய அடித்தளம்.

பார்ப்பனர் இந்து ராம் விடுதலைப் புலிகளை ஆதரிப்பது போன்று ஒரு காலத்தில் எழுதினார். ராஜீவ்காந்தி கொலையோடு எதிர்த்து எழுதுகிறார். இப்படி ஒவ்வொரு சம்பவங்களோடு பலர் மாறி விட்டார்கள்.

தந்தை பெரியாரின் உண்மையான தொண்டர்கள் என்றும் மாறாது எமக்கு குரல் கொடுக்கிறார்கள்.

நாம் இங்கே தந்தை பெரியார் நடைமுறைப்படுத்திய எழுத்துச் சீர்திருத்தத்தின் காரணமாக இலகுவாக கருத்தாட முடிவதால், எழுத்துச் சீர்திருத்தம் பற்றி குறிப்பிட்டேன். நாம் ஈழத் தமிழர்களாக இருப்பதால், இப்பொழுது இதைக் குறிப்பிடுகிறேன்.

உண்மையை யாராலும் மாற்ற முடியாது. தந்தை பெரியார் தமிழர்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியல்லை சபேசன் ஒன்றுமே சொல்ல முடியாது. உங்களால் எதுவுமே பட்டியலிட முடியாது. திராவிடக் கொள்கை எது என்று கேட்டபோதும் இது வரை உங்களால் ஒன்றைக் கூடச் சொல்லமுடியவில்லை.

ஏன் என்றால் சொன்னால், அது தோற்றுப் போய்விட்டது என்று ஆதாரம் காட்டப்படும் என்ற பயம் தான்.

திராவிடர்களைப் பாதுகாக்கத் திராவிடம் என்றீர்கள் என்றால், ஏன் அது தமிழ்நாட்டைத் தவிர மற்றவர்கள் ஏற்கவில்லை. என்ற கேள்விக்கு உங்களால் பதிலளிக்க முடியாது. தமிழனத்தைப் பாதுகாக்கத் தான் திராவிடம் என்றால் ஏன் மற்றய மானிலத்தையும் முதலில் சேர்த்தார்கள் என்ற கேள்வி எழும். தமிழிற்கு என்ன சாதித்தது என்ற கேள்விக்குப் பதில் சொல்ல முடியாது. இன்றைக்குத் தமிழ் அழியக்காரணம் தாங்கள் தான் என்பதற்குப் பதில் சொல்ல முடியாது.

ஆக மொத்தம் உங்களால் எதுவுமே சொல்ல முடியாது. தியாகி, வீரப்புதல்வன், என்று வாழ்த்துச் சொல்லிப் பிழைப்பை ஓட்டிக் கொண்டிருங்கள்.

ஒரு காலத்தில் எதிர்த்துப் பேசினால் திட்டு வரும் என ஆதரித்தார்கள். இப்போது அவர் தொண்டர்கள் அந்தப் பணியைத் தொடர்கின்றார்களோ என்னமோ?

வட இந்தியன் அம்பேத்தாரைத் தமிழுக்குள் கொண்டு வந்த நன்றிக்கடனுக்காக ராமசாமி அங்கே போனராக்கும்.

மாக்கிசவாதியாகிய இந்து ராமைப் பார்ப்பானி என்பதன் மூலம், வழமையான கன்னடப்புத்தியைக் காட்டுகின்றீர்கள்.

திரு வீரமணி மேல் மரியாதையுண்டு. ஆனால் ஒரு காலத்தில் ஜெயலலிதா ஆட்சியின்போது, ஆட்சிக்கு நெருக்கமாக இருந்தபோது, இதே ஆதரவு அமழ்ந்து தானே இருந்தது. தவறு எனச் சொல்லமாட்டேன்...

இதுவும் கடந்து போகும் என்பதைத் தான் சொல்ல முடியும்.

Link to comment
Share on other sites

தந்தை பெரியார் திராவிட நாடு கேட்டதன் காரணம் பலமுறை விளங்கப்படுத்தப்பட்டு விட்டது.

சென்னை மாகாணமாக அனைத்து திராவிட இன மக்களும் இணைந்து வாழ்ந்த பொழுது தந்தை பெரியார் திராவிட நாடு கேட்டார். பின்பு தமிழ்நாடு உருவாகிய போது, தந்தை பெரியார் தனித் தமிழ்நாடு கேட்டார். இது வரலாறு.

நீங்கள் வரலாறு அறியாமல் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். ஈழத் தமிழர்களைப் பார்த்து ஏன் 50இற்கு 50 கேட்கிறீர்கள் என்று இன்றைக்கு கேட்பது போல் இருக்கிறது உங்கள் கேள்வி. நாம் தமிழீழத்தின் காலத்தில் நிற்கிறோம்.

பெரியார் கைவிட்ட ஒரு கோரிக்கையை வைத்துக் கொண்டு, அதை ஏன் கேட்டார் என்றால் என்ன சொல்வது?

நாம் அன்றைக்கு சமஸ்டி கேட்டதற்கு ஒரு காரணம் இருந்தது. 50இற்கு 50 கேட்டதற்கு ஒரு காரணம் இருந்தது. இன்றைக்கு தமிழீழம் கேட்பதற்கு காரணம் இருக்கிறது.

அப்படி தந்தை பெரியார் திராவிட நாடு கேட்டதற்கும் காரணம் இருக்கிறது. பின்பு தமிழ்நாடு கேட்டதற்கும் காரணம் இருக்கிறது.

திராவிடம், திராவிட நாடு, திராவிட இனம் என்கின்ற மூன்றும் வேறு வேறு பொருட்களை தருவன. அவைகளை அப்படியே பொருள் கொள்ளக் கூடாது. இவைகள் பற்றி நான் பல முறை விளக்கமாக எழுதியிருக்கிறேன்.

நான் எதுவும் எழுதவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

தந்தை பெரியார் தனிநாடு கோரவில்லையா? நல்ல கூத்து

இந்தியா வெள்ளைக்காரர்களிடம் இருந்து விடுதலை பெறுவதற்கு முன்னமேயே தந்தை பெரியார் தமிழர்களுக்கு தனிநாடு கோரினார். இதுதான் வரலாறு.

1932ம் ஆண்டு இலங்கையில் பெரியார் தேசியம் பற்றி உரையாற்றி இருக்கிறார் தேடி படித்து பாருங்கள்...!

அந்த கதையை கேட்டதால்தான் ஈழத்து தமிழ் செம்மறி தலைவர்கள் ஒண்று பட்ட இலங்கையாக்கினர் எண்ட எனது சந்தேகம் இன்னும் தீர இல்லை...!! இப்ப ஈழத்தமிழர் படும் பாடு பெரியார் போட்ட விதை...!

அதை படித்தால் ஈழத்தமிழருக்கு பெரியார் வஞ்சனை செய்தார் என்பதை புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பக்கா மதவெறி இயக்கமான சங்பரிவார் கும்பல்களுக்கு ஓரு ஈழத் தமிழன் வக்காலத்து வாங்குவது வேதனையிலும் வேதனை.

தூயவன் போன்ற மதப் பித்தர்களுக்கு நாம் என்ன விளக்கம் கூறினாலும் ஏறாது. இந்து மதத்தை பெரியார் மட்டும் எதிர்க்கவில்லை. வடலூர் வள்ளலார், சித்தர்கள் மற்றும் பல இறையியலாளர்களே சாட்டையால் விளாசித் தள்ளியிருக்கிறார்கள்.

இன்று தமிழினத்திற்காக குரல் கொடுப்பவர்கள் யார்?

பெரியாரிஸ்டுகளா? சங்பரிவார் கும்பல்களா? ஒரு காலத்தில் இதே கும்பல்கள் மகாராஷ்ட்ராவிலிருந்த தமிழர்களை அடித்து விரட்டவில்லையா?

இவர்களுக்கு பெரியார் இந்து மதத்தைத் திட்டி விட்டார் என்பதுதான் கோபம்!

அட ஞான சூனியங்களா!

புரட்சிக்கவி பாரதிதாசன்

தில்லை நடராசரையும் சீரங்க நாதரையும் பீரங்கி வைத்து தகர்க்க வேண்ம் என்று சொன்னதற்கு என்ன பதில் சொல்லப் போகின்றீர்கள்??????

அறிஞர் அண்ணா முதலமைச்சராகப் பதவியேற்ற பின் சட்ட மன்றத்திலிருந்த அத்தனை படங்களும் (இந்துக் கடவுள்களின் படங்கள்) குப்பைத் தொட்டிக்குள் போகவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்ததற்கு என்ன விளக்கம் அளிக்கப் போகின்றீர்????

தேடுகின்ற புராணம் எல்லாம் பொய்யே என்பேன் ஆடுகின்ற தீர்த்தம் எல்லாம் அசுத்தம் என்பேன் என்ற சித்தர் சிவவாக்கியரின் வரிகளுக்கு என்ன பதில் கூறப் போகின்றீர்????

தேவர் அனையர் கயவர் அவரும்தாம்

மேவன செய்தொழுக லான் (குறள் 1073)

என்ற குறளுக்கு பொருளாவது தெரியுமா?

நக்கிற மாட்டிற்கு செக்கேது சிவலிங்கம் ஏதென்று தெரியாது செக்கை நக்கின மாடு செக்கோடு சேர்த்து சிவலிங்கத்தை நக்கட்டும் நமக்கு அதைப் பற்றிக் கவலையில்லை சிவலங்கத்தை நக்கிப் பார்க்க வழிகிடைத்து விட்டதால் பகுத்தறிவாளர்களை நக்கிப் பார்க்க வெளிக்கிட வேண்டாம் !!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தந்தை பெரியார் திராவிட நாடு கேட்டதன் காரணம் பலமுறை விளங்கப்படுத்தப்பட்டு விட்டது.

சென்னை மாகாணமாக அனைத்து திராவிட இன மக்களும் இணைந்து வாழ்ந்த பொழுது தந்தை பெரியார் திராவிட நாடு கேட்டார். பின்பு தமிழ்நாடு உருவாகிய போது, தந்தை பெரியார் தனித் தமிழ்நாடு கேட்டார். இது வரலாறு.

நீங்கள் வரலாறு அறியாமல் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். ஈழத் தமிழர்களைப் பார்த்து ஏன் 50இற்கு 50 கேட்கிறீர்கள் என்று இன்றைக்கு கேட்பது போல் இருக்கிறது உங்கள் கேள்வி. நாம் தமிழீழத்தின் காலத்தில் நிற்கிறோம்.

பெரியார் கைவிட்ட ஒரு கோரிக்கையை வைத்துக் கொண்டு, அதை ஏன் கேட்டார் என்றால் என்ன சொல்வது?

நாம் அன்றைக்கு சமஸ்டி கேட்டதற்கு ஒரு காரணம் இருந்தது. 50இற்கு 50 கேட்டதற்கு ஒரு காரணம் இருந்தது. இன்றைக்கு தமிழீழம் கேட்பதற்கு காரணம் இருக்கிறது.

அப்படி தந்தை பெரியார் திராவிட நாடு கேட்டதற்கும் காரணம் இருக்கிறது. பின்பு தமிழ்நாடு கேட்டதற்கும் காரணம் இருக்கிறது.

திராவிடம், திராவிட நாடு, திராவிட இனம் என்கின்ற மூன்றும் வேறு வேறு பொருட்களை தருவன. அவைகளை அப்படியே பொருள் கொள்ளக் கூடாது. இவைகள் பற்றி நான் பல முறை விளக்கமாக எழுதியிருக்கிறேன்.

நான் எதுவும் எழுதவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

திரு சபேசன் அவர்கள்!

முடியும் என்று திரும்ப திரும்ப முயற்சி செய்கின்றீர்கள். எனக்கென்னவோ வீண் முயற்சி போல்தான் தெரிகிறது.

ஆனாலும் விடாமுயற்சியே வெற்றின் மூத்த காரணியென்பார்கள்.

அதற்காக கல்லிலும் நார் உரிக்கலாமா?

உண்மைக்கும் பொய்யிற்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான் உண்டு. ஒன்று உண்மை ஒன்று பொய் . இதை தாமகத்தான் புரிய வேண்டும். மீனுக்கு நீந்துவதற்கு யாரலும் கற்று கொடுக்க முடியாது. அது தானாகத்தான் நீந்த வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூது மிக்க சமணர்களின் கையாள் இளங்கோவிற்கு சங்கபரிவார் மீது கோபம் இருப்பதில் தப்பில்லை. தோற்றுப் போன பித்தர்டடலங்கள் மக்கள் மனங்களில் எடுபடாவிட்டால், கவலை வரத்தான் செய்யும். இன்று தமிழனத்துக்காகக் குரல் கொடுப்பவர்கள் யார் என்று கேட்பதன் மூலம், ராமசாமி சொல்லித் தான் ஈழப்போராட்டத்திற்கு ஆதரவு கொடுப்பது போலக் கதை விட நினைக்கின்றார்கள் போலும். இதை விட இவர்களால் ஒன்றுமே சொல்ல முடியாது.

ஏதோ தமிழனுக்காக கன்னடர்கள் செய்தது போலச் சமூகத்தை ஏமாற்றிக் கொள்கின்ற இவர்களின் பிழைப்பில் சங்கபரிவார் போன்ற சமூக அமைப்புக்களை அறிமுகம் செய்தால் மண் விழுந்துவிடுமே என்ற பயம் தான் இந்தச் சமணப்பித்தின் ஒப்பாரிகளுக்கும், அழுகைகளுக்கும் காரணம்.

வெறுமனே மேடை போட்டு முழங்கியது தமிழ்நாட்டில் பலனளித்ததோ இல்லையோ, தமிழனை மற்றவர்கள் எதிரியாகப் பார்க்க வைத்தது. இந்த விடயத்தில் ராமசாமியைப் பாராட்டத் தான் வேண்டும். நல்லது செய்வது போல நாடகம் ஆடித் தமிழனை நாட்டாற்றில் நிற்க வைத்து விட்டாரே. முட்டாள் ஆக்கி தன் பின்னால் சுத்த வைத்து விட்டாரே.

பகுத்தறிவாளர்கள் என்று தங்களைத் தாங்களே மார்தட்டுகின்ற முட்டாள்களை யாருமே நக்கமாட்டார்கள். ஏன் என்றால் இந்த அசிங்கத்தை நாய் கூட நக்காதபோது மனிதன் போய் நக்குவானா?

Link to comment
Share on other sites

திரு சபேசன் அவர்கள்!

முடியும் என்று திரும்ப திரும்ப முயற்சி செய்கின்றீர்கள். எனக்கென்னவோ வீண் முயற்சி போல்தான் தெரிகிறது.

ஆனாலும் விடாமுயற்சியே வெற்றின் மூத்த காரணியென்பார்கள்.

அதற்காக கல்லிலும் நார் உரிக்கலாமா?

உண்மைக்கும் பொய்யிற்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான் உண்டு. ஒன்று உண்மை ஒன்று பொய் . இதை தாமகத்தான் புரிய வேண்டும். மீனுக்கு நீந்துவதற்கு யாரலும் கற்று கொடுக்க முடியாது. அது தானாகத்தான் நீந்த வேண்டும்.

ஆகவே தமிழருக்கு பெரியார் தனிநாடு கோரினார் என்பதை நம்புகிறீர்களா என்ன...??

1932ம் வருடம் பெரியார் 11 மாத உலக வலம் போனார். போய்விட்டு திரும்பி வரும் வளியில் இலங்கை வந்தார்... வந்தவர்(இது இலங்கை சுதந்திரம் அடைவதுக்கும் முன்னர்) மூண்று வாரங்கள் தங்கி இருந்து கொழும்பு, , யாழ் , கண்டி , ஹற்றன் போண்ற இடங்களுக்கு எல்லாம் போய் மகாநாடுகளையும், மேடை பிரகடனங்களையும் செய்தார்...

அவர் மேடைகளில் முழங்கி தமிழரின் தனிநாடு, தேசியம் எனும் சிந்தனையோட்டதை மழுங்கடித்து ஒண்று பட்ட இலங்கை எனும் விதையை தூவி செண்றார்...

பெரியாரின் இலங்கை பிரகடனம்...

தோழர்களே! கடவுள், மதம், ஜாதியம், தேசியம், தேசாபிமானம் என்பவை எல்லாம் மக்களுக்கு இயற்கையாக தானாகவே ஏற்பட்ட உணர்ச்சிகள் அல்ல. சகல துறைகளிலும் மேல்படியிலுள்ளவர்கள் தங்கள் நிலை நிரந்தரமாயிருக்க ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கட்டுப்பாடான ஸ்தாபனங்களின் மூலம் பாமர மக்களுக்குள் புகுத்தப்பட்ட உணர்ச்சிகளேயாகும். இந்தப்படி புகுத்தப்பட வேண்டிய அவசியமும், காரணமும் என்னவென்று பார்த்தால், அவை முற்றும் பொருளாதார உள் எண்ணத்தையும், அன்னியர் உழைப்பாலேயே வாழவேண்டும் என்கின்ற உள் எண்ணத்தையும் கொண்ட பேராசையும், சோம்பேறி வாழ்க்கைப் பிரியமுமேயாகும். ஆதியில், மனிதர்கள் காடுகளில் தனிமையாய் - சுயேச்சையாய்த் திரிந்த - இயற்கை வாழ்க்கையிலிருந்து சமூகக் கூட்டு வாழ்க்கைக்கு வரும்போது அவனவன் தன் தனக்கு வேண்டிய சகல காரியங்களையும் தானே செய்துகொண்டும், ஒரே சமூகமாய் சமத்துவமாய் வாழலாம் என்றும் எண்ணியே ஒழிய, மற்றபடி மற்றொருவனை அடிமைப்படுத்தி அவனிடம் தனக்கு வேண்டிய எல்லா வேலையையும் வாங்கிக் கொண்டு ஏய்த்து, அவனை உலக சுகபோகங்களில் பட்டினிபோட்டு, தான் மாத்திரம் சோம்பேறியாய் இருந்து வாழ்ந்து கொண்டு, எல்லா சுகபோகங்களையும் தானே அனுபவித்துக் கொண்டு, இருப்பதற்கோ, அல்லது மற்றவனுக்கு அடிமையாய் இருந்து கஷ்டப்பட்டு உழைத்து, அவ்வுழைப்பின் பெரும்பயனை மற்றவன் அனுபவிக்க விட்டு விட்டு, தான் பட்டினி கிடப்பதற்கோ அல்ல என்பது நேர்மையுள்ள மனிதர் யாவரும் ஒப்புக் கொள்ளத்தக்க விஷயமாகும்.

http://www.periyar.org.in/v/content/view/117/101/lang,en/

எனக்கு பெரியார் ஈழத்தமிழருக்கு செய்த நய வஞ்சகமாகத்தான் இது படுகிண்றது...!

Link to comment
Share on other sites

தூயவன்!

இளங்கே உங்களை தாக்கினார். பதிலுக்கு நீங்களும் தாக்கி விட்டீர்கள். நல்லது. இப்பொழுது இளங்கோ கேட்டிருக்கும் சில கேள்விகளுக்கு பதில் சொல்லுங்களேன்!

Link to comment
Share on other sites

தயா,

1932ஆண்டு ஈழத் தமிழர்களிடம் இருந்த தேசியம் எது என்று உங்களுக்குத் தெரியாதா? அன்றைக்கு தமிழீழ மக்கள் இலங்கைத் தேசியத்தை ஆதரித்தார்கள். சமஸ்டி கேட்ட சிங்களவர்களையே தமிழீழத் தலைவர்கள் எதிர்த்து "இலங்கைத் தேசியத்திற்காக" குரல் கொடுத்தார்கள். யாழ்ப்பாண வேளாள சாதியமும் இலங்கைத் தேசியமும்தான் தமிழர்கள் மத்தியில் கோலோச்சியது.

இந்தப் பின்புலத்தை புரிந்து கொண்டு பெரியாரின் உரையைப் படியுங்கள்.

ஒரு விடயத்தை சொல்ல விரும்புகிறேன். எனக்குப் பிடிக்காத தலைவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மீது நான் இல்லாத பொல்லாத அவதூறுகளைப் பரப்புவது இல்லை.

இங்கே உள்ள சிலருக்கு தந்தை பெரியாரை பிடிக்காது இருப்பதற்கோ, அவர் மீது வெறுப்புக் கொள்வதற்கோ ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் அதற்காக பொய்களைப் பரப்பக் கூடாது.

உதாரணமாக "நான் வணங்குகின்ற பிள்ளையார் சிலையை பெரியார் உடைத்து விட்டார், அதனால் அவரை எனக்குப் பிடிக்காது" என்று சொல்கின்ற ஒருவரை என்னால் புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் இங்கே சிலர் வைக்கின்ற வாதங்கள் நேர்மையானவை அல்ல. உண்மையை மறைத்து மேலும் கீழும் துண்டித்து கருத்துக்களை வைத்து வரலாற்றையே சிதைக்கிறார்கள். இது நேர்மையான கருத்தாடல் அல்ல.

1938ஆம் ஆண்டு "தமிழ்நாடு தமிழருக்கே" (கவனியுங்கள்! திராவிட நாடு அல்ல) என்று குரல் கொடுத்தவர் தந்தை பெரியார். தமிழ்நாடு விடுதலை பெற வேண்டும் என்ற சிந்தனையை தமிழர்களிடம் தந்தை பெரியாரின் உரைகள் விதைத்தன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன்!

இளங்கே உங்களை தாக்கினார். பதிலுக்கு நீங்களும் தாக்கி விட்டீர்கள். நல்லது. இப்பொழுது இளங்கோ கேட்டிருக்கும் சில கேள்விகளுக்கு பதில் சொல்லுங்களேன்!

அவர் மேற்கோள் காட்டிய எவராவது திராவிடக்குஞ்சுகள் இல்லாதவர்களா? எல்லோரும் குட்டையில் ஊறிய மட்டைகள் தானே?

வள்ளலார், சித்தர்களை உதாரணம் காட்டுகின்றார். அவர்கள் மூடநம்பிக்கைகளை, பிற விரோதங்களை எதிர்த்தார்கள். சுவாமி விபுலானந்தரும், இராமகிருஸ்ணரும் அதைத் தான் செய்தார்கள். ஆறுமுகநாவலரும் அதைத் தான் செய்தார். பக்திக்குள் மூடநம்பிக்கை இல்லாதது ஒழிக்கவேண்டும் என்பது நல்லதொன்று. அதற்காகப் பக்தி வேண்டாம் என்று சொன்ன திராவிடக்குஞ்சுகளோடு ஒப்பிடுவது என்பது ஆகலும் ஏமாற்றுத்தனமாக இல்லை??

Link to comment
Share on other sites

தயா,

1932ஆண்டு ஈழத் தமிழர்களிடம் இருந்த தேசியம் எது என்று உங்களுக்குத் தெரியாதா? அன்றைக்கு தமிழீழ மக்கள் இலங்கைத் தேசியத்தை ஆதரித்தார்கள். சமஸ்டி கேட்ட சிங்களவர்களையே தமிழீழத் தலைவர்கள் எதிர்த்து "இலங்கைத் தேசியத்திற்காக" குரல் கொடுத்தார்கள். யாழ்ப்பாண வேளாள சாதியமும் இலங்கைத் தேசியமும்தான் தமிழர்கள் மத்தியில் கோலோச்சியது.

அப்படியான கதைகளை உங்களால் மட்டும்தான் சொல்லமுடியும் அது துளியளவும் உண்மை இல்லை... ! உங்களின் பகுத்தறிவு எவ்வளவு, எப்படி எண்று எனக்கு விளங்கவில்லை... இதைத்தான் நீங்கள் பகுதறிவு என்கிறீர்களோ..??

ஈழத் தமிழ் தலைவர்கள் அவ்வளவு முட்டாள்களும் இல்லை.. பெருண்பாண்மை சிங்களவன் தான் ஆட்ச்சியில் இருப்பான் என்பதை அறியாமலா அரசியல் செய்தார்கள்...! அதேகாலத்தில் தமிழர்களை விட ரஜரட்ட , உடரட்ட , கெமுனு எண்று சிங்களவனே சாதிகளால் பிரிந்து குலைந்து இருந்த போது தமிழர் மட்டும் ஒற்றுமையாக இருக்க விரும்பினார்களா..?? அப்படி விரும்பினால் அது பெரியார் போட்ட தூபத்தினால் மட்டும்தான் என்பதை ஏன் மறைக்கிறீர்கள்...

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது உங்களுக்கே புரிகிறதா..?? பெரியார் இலங்கை வந்தாரம் தமிழர்களின் ஆசைக்கு அமையை தேசியம் என்பது தவறு ஆகவே சிங்களவர்களைப்பார்த்து தேசியதை மறந்து வந்து ஒண்றாக இருந்து கொள்ளுங்கள் எண்றாராம்..! அப்படியா சொன்னார்... இதைதான் அறிவு பூர்வம் என்பதா..?? இதை செய்த பெரியாரைதான் பகுத்தறிவாளன் என்கிறீர்களா...?? அங்கு பெரியார் உரையை சிங்களவருக்காக ஆற்றவில்லை என்பது தெரியுமா இல்லையா..... ??

உங்களது சப்பை கட்டுகளை புனைகதைகள் எதையாவது எழுத பயன் படுத்துங்கள் அதுதான் நல்லது...!!

Link to comment
Share on other sites

களத்தை உருவாக்கியவரின் முதன்மை நோக்கம்

7) யாழ்க் களம் தேசிய விடுதலைப் போராட்டாத்தில் எத்தகைய பங்கை வகிக்க முடியும் என்று கருதுகிறீர்கள்?

யாழ் இணையம் முழுக்க முழுக்க தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு பங்களிப்பினை வழங்க வேண்டும் என்பதே எனது முக்கிய நோக்கமாக / விருப்பமாக இருக்கின்றது. ஆனால் அப்படி ஒரு நிலை இங்கில்லை என்பது மிகவும் வருத்தத்துக்குரியது. யாழ் இணைய வாசகர்கள், குறிப்பாக கருத்துக்கள உறுப்பினர்கள் நினைத்தால், கருத்தியல் அடிப்படையிலும் கூட்டு முயற்சிகளின் அடிப்படையிலும் தேசவிடுதலைப் போராட்டத்திற்கு உறுதுணையாக இருக்க முடியும் என நம்புகின்றேன்.

திரு மோகன் அவர்களே உங்கள் தளம் பகுத்தறிவுவாதிகள் மதவாதிகள் கைகளில் சிக்குப்பட்டு திசை கெட்டுப் போகிறது. ஆழ்ந்த அநுதாபங்கள்்.

Link to comment
Share on other sites

திரு மோகன் அவர்களே உங்கள் தளம் பகுத்தறிவுவாதிகள் மதவாதிகள் கைகளில் சிக்குப்பட்டு திசை கெட்டுப் போகிறது. ஆழ்ந்த அநுதாபங்கள்்.

யாழ்கள செயலரங்கம் எண்ட பகுதி எண்டது நீண்டகாலமாக இருக்கிறது... அங்கெல்லாம் உங்களின் செயல்பாடுகள் அதிகமாகி விட்டதால் எங்களுக்கு வேலை இல்லாமல் போட்டுது...!!

http://www.yarl.com/forum3/index.php?showforum=124

ஆதலால் நீங்கள் ஒருவரே எல்லாத்தையும் எடுத்து செய்வீர்கள் எண்டு நம்பி விடை பெறுகிறோம்....

பஞ்சு:- முட்டையிலை புடுங்கலாம் ஆனால் மயிரிலை முட்டை புடுங்கப்படாது...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.