Jump to content

சாதி மத பேதமின்றி அனைத்து மக்களுக்காகப் போராடும் சங்கபரிவார்

Recommended Posts

பெரியார் தமிழ் நாட்டிதானே வாழ்ந்தார்...?? அவருக்கு எதுக்கு திராவிடம்... திராவிடம் எனும் சொல்லுக்கூட சமஸ்கிருதம்... அப்படியான கடன் வாங்கலை ஏன் செய்ய வேண்டும்..??? தமிழர்களுக்கு தேசியம் என்பது தவறு எண்று விடுதலையிலும் மேடைகளிலும் போதிப்பு , திராவிட நாட்டுக்காய் ஜின்னாவின் ஆதரவு எண்று ஏன் இரட்டை முகம்....??

தமிழ்நாடு தமிழருக்கே சரியானதுதானே....??? பிறகு எதுக்காக ஜின்னாவுடன் சேர்ந்து திராவிட நாடு..?? ஜின்னாவுக்கோ இல்லை இண்றைய பாக்கிஸ்தானுக்கோ இந்தியா பலவீனப்பட வேண்டும் என்பது ஆசை...! அப்படி இந்தியா பலவீனம் அடைய தமிழ்நாடு பிரிந்து போகாமல் திராவிட நாடு பிரிந்து போனால் இன்னும் சந்தோசம்.. அவர்கள் ஆசைப்படட்டும் அதுக்கு ஏன் பெரியார் பலியானார்...??

ஜின்னாவை நம்பிய பெரியார் ஏன் தமிழர்களை நம்பவில்லை...?? ஜின்னாவிலும் திறண் மிக்கவர்களாக தமிழர்கள் இருக்கவில்லையோ...??

இந்தியத் தேசியம் என்னும் வடிவில் பார்ப்பன இந்துத்வாத் தேசியம் தமிழர்கள் மேல் திராவிடர் மேல் ஆதிக்கம் செலுத்தும் என்பதை உணர்ந்தே பெரியார் திராவிட நாடு தமிழ் நாடு கேட்டார்.அவர் தனது கோரிக்கையில் வெற்றி பெற்றிருந்தால் இன்று தமிழருக்கென ஒரு தனி நாடு இருந்திருக்கும்.இந்த நோக்கத்தின் அடிப்படையிலையே அவர் ஜின்னாவிடம் தனி நாடாவதற்கான அரசியல் ஆதரவைக் கோரி இருந்தார்.

Link to comment
Share on other sites

  • Replies 130
  • Created
  • Last Reply

பெரியார் பேசுகிறார்

சுதந்திரப் போராட்டம் அல்ல; ஆரியர், திராவிடர் போராட்டமே!

இந்தியாவை விட்டு பிரிட்டிஷ் ஆட்சி அடியோடு விலகப்போகிறதா, இல்லையா என்பது நமக்குத் தெரியாது. சீக்கிரத்தில் நாடு கழுதை புரண்ட களம் என்பது போல் சீரழியப் போகிறது என்பதுதான் காணக்கூடியதாக இருக்கிறது. தூது கோஷ்டி தோல்வி அடையப் போகிறது; அடைந்து விட்டது என்கிறார்கள் -பத்திரிகை செய்திக்காரர்கள். காங்கிரசார் பதவி ஏற்ற இந்தக் காலத்துக்குள்ளாகவே மக்களுக்கிடையே ஒரு சமரச முடிவு இல்லையானால், நாடு சீரழியப் போவது நிச்சயம்.

இதனால் பிரிட்டிஷ்காரர்களுக்கு நஷ்டமில்லை. அவர்கள் ஆதிக்கம் இன்னும் பல நாளைக்குப் பலப்படத்தான் இடமாகும். ஆரியர்களுக்கும் கஷ்டமில்லை. ஆரியர் பிரிட்டிஷாருடன் இன்னும் பலமான ஒப்பந்தம் செய்து கொள்ளுவர். காந்தியாருக்கும் குறைவு வராது. அவர் அவதாரக் கடவுள் தன்மை மாறி உண்மைக் கடவுளாகி விடுவார். தொல்லைப்படப் போவது நாம்தான் : முஸ்லிம், திராவிடர், ஷெட்யூல்டு வகுப்பார் ஆகியவர்களும் இக்கூட்டத்தில் உள்ள ஏழை, எளியவர், தொழிலாளர் கூலியாட்கள் ஆகிய பாட்டாளி மக்களும்தான்.

அதோடு மாத்திரமல்ல. கண்டிப்பாக இந்து -முஸ்லிம் ரத்தம் சிந்துதலும், மேல் ஜாதி, கீழ் ஜாதி ரத்தம் சிந்துதலும், சோம்பேறி பாட்டாளி ரத்தம் சிந்துதலும், முதலாளி, தொழிலாளி ரத்தம் சிந்துதலும் நடந்துதான் தீரும். இந்த முப்பது வருஷ காலமாக நம் மக்கள், நான் முதல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்பட பொது நலனுக்கு என்று பாடுபட்ட, கஷ்ட நஷ்டமனுபவித்த தியாகம் என்பதற்கு இதுதானா பலன் என்று பாருங்கள். இந்த சந்தர்ப்பத்தில் பார்ப்பனப் பத்திரிகையில் செய்து வரும் அட்டூழியம் கொஞ்ச நஞ்சமல்ல. அவை இந்து முஸ்லிம் கலகத்தையும், கீழ் ஜாதி மேல் ஜாதி கலகத்தையும், திராவிடர்களுக்குள் ஒருவருக்கொருவர் குத்து, வெட்டு, அடி, உதை, கொளுத்து ஆகிய போராட்டங்களையும் வளர்த்து விடுகின்றன.

இன்றைய அரசியல் போராட்டம் என்பது என்ன? இந்தியன் வெள்ளையன் போராட்டமா? இல்லையே. இன்றைய இந்தியப் பிரச்சினை, சுயராஜ்யப் பிரச்சினை அல்லவே; சுதந்திரப் பிரச்சினை அல்லவே, ஆங்கிலேயே அந்நியன் பிரச்சினை அல்லவே. இந்து, முஸ்லிம் பிரச்சினையாகத்தானே காணப்படுகின்றன. இந்து முஸ்லிம் ஆதிக்கத்தில் இருந்து விடுபடுவதும், இந்து மதம் காப்பாற்றப்படுவதும், இஸ்லாம் காப்பாற்றப்படுவதுதானே இன்று சுதந்திரப் போராக ஆகிவிட்டது. இதே நிலையில்தானே ஆரியம், திராவிடம் என்கின்ற பிரச்சினையும் இருக்கிறது. திராவிடன் ஆரிய ஆதிக்கத்தில் இருந்து மீண்டு தனித்தன்மை பெறுவதை சுயராஜ்யம் என்கிறான். ஆரியன் திராவிடரை அடக்கி அழுத்தி வைப்பதை, மனு ஆட்சி புரிவதை சுயராஜ்யம், தர்மராஜ்யம், ராமராஜ்யம் என்கின்றான்.

தோழர்களே! தூது கோஷ்டி வெற்றி பெற்றாலும் நாம் சூத்திரர், பறையர், 4ஆவது 5ஆவது ஜாதியாகத்தான் இருப்போம். தூது கோஷ்டி தோல்வியுற்றாலும் நாம் 4ஆவது 5ஆவது ஜாதிதான். காங்கிரசுக்கும் நமக்கும் என்ன பேதம்? காங்கிரஸ் அந்நியன் ஆதிக்கத்தில் இருந்து விலக வேண்டும் என்கின்றது. நாமும், ஆம் அது சரி அதுதான் முதல் வேலை என்கிறோம். ஆனால் அந்நியர் என்கின்ற பட்டியில் திராவிடனல்லாதவன் எவனும் அந்நியன் என்று விளக்கம் எழுதிக்கொள் என்கின்றோம். ஒப்புக் கொள்ளுகிறதா காங்கிரஸ்? ஆங்கிலேயன் தவிர மற்றபடி இந்தியன் என்ற பெயரால் எவன் பிழைத்தாலும், எவன் திராவிட நாட்டைக் கொள்ளை கொண்டாலும் சரி என்கிறது காங்கிரஸ்.

நாம் திராவிட நாட்டை திராவிடத்தில் நிரந்தரமாய் வாழும் திராவிட நாட்டுக் குடிகள் தவிர, பிர்லா, பஜாஜ், காந்தி, நேரு, பட்டேல், பட்டானி, குஜராத்தி, மார்வாரி, பனியா, சிந்தி, காஷ்மீரி, பட்டான், மேமன் எல்லைப்புறக்காரன் எவரும் சுரண்டக்கூடாது என்கின்றோம். இந்தியன் மட்ட ஜாதியல்ல; வெள்ளையன் உயர்ந்த ஜாதி அல்ல. இருவருக்கும் மாத்திரமல்ல. மூவருக்கும் அதாவது திராவிடன், ஆரியன், வெள்ளையன் ஆகிய மூவருக்கும் சம உரிமை வேண்டும். திராவிடன் சூத்திரனல்ல; பறையன் அல்ல; தீண்டப்படாதவன் அல்ல; ஆரியன் பிராமணன் அல்ல, மேல் ஜாதி அல்ல; பூதேவன் அல்ல.

சம உரிமையில் சம விகிதாசாரத்தில் சம போக போக்கியத்தில், சம உழைப்பில் இருக்க வேண்டிய மக்கள் என்கின்றது திராவிடர் கழகம். இந்தியா முழுமைக்கும் ஒரு சுயராஜ்யம் போதும் என்கிறது காங்கிரஸ். பிரிக்கப்பட்ட ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனி சுயராஜ்யம் வேண்டும். ஜின்னா பிரிவினை கேட்டால் -அவர் தேசத்துரோகி, முட்டுக் கட்டைவாதி. அம்பேத்கர் மனிதத்தன்மை, சம உரிமை கேட்டால் -அவர் தேசத்துரோகி, முட்டுக் கட்டைவாதி; கம்யூனிஸ்டுகாரர்கள் கேட்டால் அவர்கள் ஒழிக்கப்பட வேண்டிய இழிமக்கள்; திராவிடர்கள் பாதுகாப்பு சமுதாய உரிமை கேட்டால் -அவர்கள் தேசத்துரோகி! தோழர்களே! கலகத்தில் காலித்தனத்தில் ஆரியன் எவனாவது சிக்கிக் கொள்கிறானா? திராவிடன் கையில் சாணி உருண்டையும் கல்லையும் கொடுத்து திராவிடன் மீதே எறியச் சொல்லிவிட்டு, மறைவில் இருந்து வேடிக்கை பார்க்கிறானே! இதுவா விடுதலை முயற்சி?

(பள்ளிகொண்டாவில் நடைபெற்ற கூட்டத்தில் ஆற்றிய உரை - 'விடுதலை' 15.6.1946)

http://www.keetru.com/dalithmurasu/sep07/periyar.php

Link to comment
Share on other sites

^_^களத்தை உருவாக்கியவரின் முதன்மை நோக்கம்

7) யாழ்க் களம் தேசிய விடுதலைப் போராட்டாத்தில் எத்தகைய பங்கை வகிக்க முடியும் என்று கருதுகிறீர்கள்?

யாழ் இணையம் முழுக்க முழுக்க தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு பங்களிப்பினை வழங்க வேண்டும் என்பதே எனது முக்கிய நோக்கமாக / விருப்பமாக இருக்கின்றது. ஆனால் அப்படி ஒரு நிலை இங்கில்லை என்பது மிகவும் வருத்தத்துக்குரியது. யாழ் இணைய வாசகர்கள், குறிப்பாக கருத்துக்கள உறுப்பினர்கள் நினைத்தால், கருத்தியல் அடிப்படையிலும் கூட்டு முயற்சிகளின் அடிப்படையிலும் தேசவிடுதலைப் போராட்டத்திற்கு உறுதுணையாக இருக்க முடியும் என நம்புகின்றேன். :wub:

நீங்கள் எல்லோரும் சோறுதானே விழுங்குறனிங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு!

சாதிய அடையாளங்கள் மத அடிப்படைவாதங்கள் களையப் பட வேண்டும் என கூறி தமிழ்த் தேசியத்தைப் பலப்படுத்த நாங்கள்தான் முனைகின்றோம் உங்களைப் போன்றவர்கள் இந்துத்துவத்திற்கு வால் பிடித்து அதை தமிழ்த் தேசியத்திற்குள் கலக்கும் செயலை செய்கின்றார்கள். உமது எழுத்துக்களே இதற்கு சாட்சி.

நானோ அல்லது மதச் சுதந்திரத்தை வேண்டி நிற்கும் எந்த கருத்தாளனுமோ இங்கு மத அடிப்படை வாதத்தில் ஊறித்திளைத்திருப்பதாக.. மத வெறியில் இருப்பதாக நான் உணரவில்லை. ஆனால் உங்கள் போன்ற சிலர் அவ்வாறான ஒரு தோற்றப்பாட்டை எழுப்பி.. அதன் பின்னணியில் மாறுபட்ட ஒரு கருத்தை வழங்குவதாகவும்.. அதற்கு முற்போக்கு என்று பெயரிட்டுக் கொட்டும்.. மக்களிடையே.. கொடிய மோசமான.. சாதிய சித்தாந்த இருப்புக்களையும்.. பிராமண சமூகம்.. மற்றும் அவர்கள் சார்ந்த குறித்த ஒரு மதத்தின் மீதும் கொடிய மத ரீதியான பாசிச வாதத்தை முன் வைத்துச் செயற்பட்டு வருகிறீர்கள்.

நாங்கள் மக்களின் மதச் சுதந்திரத்தை அங்கீகரித்து நிற்கும்.. எல்லோரையும் போன்ற சுதந்திரம் விரும்பி மனிதர்கள். நாங்கள் எங்களைப் பகுத்தறிவாளன் என்று கொண்டு பிறரை பகுத்தறிவற்ற கூர்ப்பில் பிந்தங்கிய கூட்டம் என்று பிதட்டித் திரிபவர்கள் அல்ல. எல்லா மனிதர்களையும் நாம் ஒரே வகைக்குள் வைப்பதோடு.. அவர்களின் அடிப்படை உரிமைகளை அவர்கள் விரும்பிய வடிவில் அனுபவிக்க அனுமதிப்பதோடு.. ஓர் இனத்தை அதன் அடக்குமுறை சக்திகளிடமிருந்து காத்து.. அதன் தனித்துவத்தோடு இந்த உலகில் அந்த இனமும்.. பிற மனித இனக்குழுமங்களுகளோடு நிகர்த்த உரிமைகள் பெற்று ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதுதான் எங்களின் கருத்தியல் இலக்கு..!

மனிதர்கள் எல்லோரும் ஒரே வகையினன் ஆயினும்.. உலகில்.. மனிதர்கள் மத்தியில் பால் ரீதியான அடக்குமுறைகள் இருக்கின்றன, நிற ரீதியான அடக்குமுறைகள் இருக்கின்றன.. பொருளாதார ரீதியான அடக்குமுறைகள் இருக்கின்றன.. பிராந்திய ரீதியான அடக்குமுறைகள் இருக்கின்றன.. இராணுவ ரீதியான அடக்குமுறைகள் இருக்கின்றன.. சமூக ரீதியான அடக்குமுறைகள் இருக்கின்றன.. சில இடங்களில் மத ரீதியான அடக்குமுறைகள் இருக்கின்றன. நாம் இவை அனைத்துக்கும் எதிரானவர்கள். வெறுமனவே ஒரு சில தேவைகளுக்காக விளம்பர நோக்கங்களுக்காக.. கருத்தியல் உலகில் ஆதிக்க செய்ய வேண்டும்.. முற்போக்கு வாதி என்று போலிப் பெயர் தரிக்க வேண்டும் என்று கூக்குரல் போடும் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல.

ஒரு கருத்தியல் வெளிப்பாட்டின் சமூகவியல் தாக்கம்.. அதன் உலக வடிவம்.. நடைமுறை மனித நாகரிகப் போக்கு.. என்று பல அம்சங்கள் சார்ந்து வெளிப்படும் ஒரு சமூக மாற்றத்தை வேண்டும் கருத்தே உலகில் நடைமுறை மாற்றங்களுக்கு வித்திட்டுள்ளது.

வெறுமனவே ஒரு குழும மக்கள் மீதும்.. ஒரு மதத்தின் மீதும் காழ்ப்புணர்ச்சிகளை.. வெறுப்புணர்ச்சிகளை.. பாசிச நாசிச சித்தாந்தங்களை விதைப்பது ஒருபோதும்.. மானுட ஒற்றுமைக்கோ.. அல்லது இனத்துவ இருப்புக்கோ உதவப் போவதில்லை.

சமூக சார் விடயங்களில் கடந்து போன பிளவுகளின் அடிப்படையில் உரிமைகள் என்று பேச வெளிக்கிட்டு.. அந்தப் பிளவுகளின் ரணங்களை மக்கள் மத்தியில் விதைத்து.. பிளவுகளுக்கு புத்துயிர்ப்பளிக்கும் கொடிய செயலை.. சாதிய அழிப்பு.. அல்லது ஒழிப்பு என்று கொள்ள முடியாது. மனிதன் எல்லோரும் அடிப்படையில் ஒத்தனன். அடக்குமுறைகளுக்கு ஒரு சமூகம் காரணமல்ல. மொத்த உலக ஒழுங்கும்.. செல்வாக்குக் காரணிகளுமே அதற்குக் காரணம்.

மூடநம்பிக்கையை களைகிறோம் என்று கொண்டு.. அவற்றைப் பிரச்சாரப்படுத்தவும்.. அதைத் தாங்கும் சமூகத்தை பரிகசிப்பதும் அதன் மீது வெறுப்புணர்வை ஊட்டுவதுமல்ல.. மனிதப் பகுத்தறிவின் நிலை. மூடநம்பிக்கை எங்கிருக்கோ அங்கு அறிவியலை ஊட்ட வேண்டும். தோழமை அணுகுமுறை வேண்டும். அறியாமையில் உள்ள மக்களோடு கலந்து அவர்களை அந்தச் சிறைக்குள் இருந்து விடுவிக்க வேண்டுமே தவிர.. அவர்களின் அறியாமையை பலவீனமாகக் கருதிக் கொண்டு.. அவர்களை அவர்களின் வாழ்வியலைச் சிதைப்பதல்ல... மானுடம். ஈ வெ ராமசாமி போன்ற சமூகவியல் அறிவற்ற ஒரு சிலர் பிராமண சமூகத்தின் மீது செய்ததும் இதுவே. ஆனால் இன்று அந்த நிலையில்லை. தமிழகத்தில் கூட நல்ல மாற்றங்கள் பிறந்திருக்கின்றன. சமத்துவபுரங்களில் மக்கள் சமூகப் பிரிவினைகள் மறந்து வாழப்பழகி இருக்கின்றனர். இன்றைய வாழ்க்கை முறையில்.. தொடர்மாடிக் குடியிருப்புகளில் மக்கள் எந்த சமூக வேறுபாட்டுக்கும் இடமின்றி ஒற்றுமையாக வாழ்கின்றனர்.

கீழை நாடுகளில் ஏற்பட்டு வரும் பொருளாதார அபிவிருத்தி என்பது கணிசமான அளவுக்கு சமூகப் பிரிவினைகளுக்கான பொருளாதாரக் காரணியை அகற்றி விடும் போது.. சமத்துவம் என்பது தானாக மலரும். அதேபோன்று மக்களின் கல்வி அறிவு சமூக அறிவு.. மனித நாகரிக அறிவு முன்னேறுகின்ற போது.. மனிதர்களிடையே பகுத்தறிவு என்ற நிலை சாதாரணமாக இருக்கும். ஒரு சிறு கூட்டம் அதற்கு உரிமை கோரித் திரியும் நிலை இல்லாது போகும்..!

எனவே அடிப்படையில் உங்களின் செயற்பாட்டுத்தளம் கேலிக்கூத்தானதும்.. மானுட ஒருங்கிணைவுக்கு எதிரானதும் ஆகும். மானுட சுதந்திரத்தை இழிவு படுத்துவதுமாக உள்ள நிலையில்.. அதற்கு எதிரான கொள்கை உடைய நாம் உங்களை கருத்தியல் ரீதியில் எதிர்ப்போம். அப்படி எதிர்க்கவில்லை என்றால்.. அது நாம் சார்ந்த மானுடத்துக்கே செய்யும் துரோகமாகும்..! :wub:

Link to comment
Share on other sites

அதோடு மாத்திரமல்ல. கண்டிப்பாக இந்து -முஸ்லிம் ரத்தம் சிந்துதலும், மேல் ஜாதி, கீழ் ஜாதி ரத்தம் சிந்துதலும், சோம்பேறி பாட்டாளி ரத்தம் சிந்துதலும், முதலாளி, தொழிலாளி ரத்தம் சிந்துதலும் நடந்துதான் தீரும். இந்த முப்பது வருஷ காலமாக நம் மக்கள், நான் முதல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்பட பொது நலனுக்கு என்று பாடுபட்ட, கஷ்ட நஷ்டமனுபவித்த தியாகம் என்பதற்கு இதுதானா பலன் என்று பாருங்கள். இந்த சந்தர்ப்பத்தில் பார்ப்பனப் பத்திரிகையில் செய்து வரும் அட்டூழியம் கொஞ்ச நஞ்சமல்ல. அவை இந்து முஸ்லிம் கலகத்தையும், கீழ் ஜாதி மேல் ஜாதி கலகத்தையும், திராவிடர்களுக்குள் ஒருவருக்கொருவர் குத்து, வெட்டு, அடி, உதை, கொளுத்து ஆகிய போராட்டங்களையும் வளர்த்து விடுகின்றன.

http://www.keetru.com/dalithmurasu/sep07/periyar.php

இப்பவும் பாருங்கோ... :wub: பெரியாரின் குழறு படிகளைத்தான் போட்டு உடைக்கிறீர்கள்....! இந்து முஸ்லீம் இரத்தம் சிந்தும் என்பது தெரிந்து இருந்தும், அதுக்கு காரணமான முக்கிய மனிதர் ஜின்னாவுடன் கூட்டணி வைத்தவர் பெரியார் என்பதுக்குதான் இந்த கட்டுரை பயன் பட்டது....

இந்துக்களை எதிர்ப்பாராம் பெரியார், ஆனால் முஸ்லீம் மதத்தின் தலைவருடன் கூட்டு வைப்பாராம்... இதைத்தான் திராவிடம் என்கிறீர்களோ..?? இதுதான் பெரியாரின் பலவீனமே...!! அவர் பௌத்தத்தையும், இஸ்லாத்தையும் ஆதரித்து கொண்டே இந்துக்களை சாதியவாதிகள் எண்று எதிர்க்கிறார்... ஏன் பௌத்தர்களில் ஏற்றத்தாள்வு இல்லையா...?? இல்லை இஸ்லாத்தவர்களில் சாதிகள் இல்லையா...?? தனது விருப்பு வெறுப்புக்களை மக்களிடம் புகுத்தியதை தான் பகுத்தறிவு என்கிறீர்களோ..??

கம்யூனிசத்தில் இருந்து கடன் வாங்கி பெரியார் சமதர்மத்தை மக்களிடம் புகுத்த முனைந்தார்.... அது மட்டும்தான் பெரியாரை கொஞ்சமாவது உயர்த்தி நிக்கிறது...! மற்றும்படி பெரியார் எதையும் சாதிக்கவில்லை...!

மீண்டும் மீண்டும் ஒரே விடயத்தைச் சொல்லிக் கொண்டிருப்பதில் எந்தப் பயனும் இல்லை.ஜின்னா ,இந்தியாவில் முசிலிம்களைப் பாதுகாக்கவே தனி நாடு கேட்டார்.அதற்கான அடிப்படைக் காரணம் இந்துத்வா .பெரியாரும் திராவிடரை இந்துத்வா வெறியரிடம் இருந்து பாதுகாக்கவே திராவிடத் தனி நாடு கேட்டார்.இருவரின் நோக்கமும் அந்தச் சமயத்தில் ஒன்றாக இருந்தது.அத்தோடு ஜின்ன பிரிடிசாரிடம் தமது பக்க நியாயதைச் சொல்லி அதில் வெற்றியும் கண்டிருந்தார்.அந்தச் சந்தர்ப்பத்தை பெரியார் அரசியல் ரீதியாக திராவிடரருக்குச் சாதகமாகப்பயன் படுத்த முயன்றார்.

பவுத்ததிலோ இசுலாத்திலோ சாதியம் என்பது இந்துசமயத்தில் இருந்து மதம் மாறியவர்கள் பண்பாட்டு ரீதியாக அதனைக் காவிச் சென்றதால் தான் இருக்கிறது.எவரும் ஒரு மவுலவியாகவோ அல்லது பவுத்த துறவியாகவோ ஆகலாம்.அது பிறப்பால் நிச்சயிக்கப் படுவதில்லை.

ஜின்னாவால் முடிந்தது பெரியாரால் முடியவில்லை என்பது பெரியார் மீதானா நியாயமான விமரிசனம்.தமிழர்களை திராவிடர்களை ஒரே அணியில் அவரால் திரட்ட முடியாமால் போனது.கன்னடரும், மலையாளிகளும் மிக அதிகளவில் சமஸ்கிரத மயமாக்கலுக்கு இலக்காகி இந்துவா மாயையில் அதிகம் சிக்குண்டவர்கள்.அதற்காகப் பெரியார் முயற்ச்சிக்கவில்லை திராவிடரின் தமிழரின் எதிர்காலம் பற்றிச் சிந்தித்து செயலாற்றவில்லை என்பது நியாயமன விமரிசனம் அல்ல.

ஈழத்தில் தமிழர்களை ஒன்று திரட்டியது சிங்களப் பேரினவாதாம்.அவ்வறான ஒரு மோசமான வெளிப்படியான ஒடுக்குமுறை அந்தக் காலகட்டத்தில் இருந்திருந்தால் சில வேளைகளில் பெரியாரால் வெற்றி கண்டிருக்க முடியும்.

ஆனால் பெரியார் உருவாக்கிய அரசியலால் தான் இன்று கூட தமிழ் நாட்டில் எந்தத் தேசிய கட்சியாலும் ஆட்சி அமைக்க முடியாது இருக்கிறது. ஆகவே பெரியார் நினைத்ததை முழுமையகச் சாதிக்காவிட்டாலும், அவரின் எண்ணங்கள் தூர நோக்கானவை என்பது வெளிப்படை.

Link to comment
Share on other sites

மீண்டும் மீண்டும் ஒரே விடயத்தைச் சொல்லிக் கொண்டிருப்பதில் எந்தப் பயனும் இல்லை.ஜின்னா ,இந்தியாவில் முசிலிம்களைப் பாதுகாக்கவே தனி நாடு கேட்டார்.அதற்கான அடிப்படைக் காரணம் இந்துத்வா .பெரியாரும் திராவிடரை இந்துத்வா வெறியரிடம் இருந்து பாதுகாக்கவே திராவிடத் தனி நாடு கேட்டார்.இருவரின் நோக்கமும் அந்தச் சமயத்தில் ஒன்றாக இருந்தது.அத்தோடு ஜின்ன பிரிடிசாரிடம் தமது பக்க நியாயதைச் சொல்லி அதில் வெற்றியும் கண்டிருந்தார்.அந்தச் சந்தர்ப்பத்தை பெரியார் அரசியல் ரீதியாக திராவிடரருக்குச் சாதகமாகப்பயன் படுத்த முயன்றார்.

நீங்கள் சொல்வதை பார்த்தால் ஜின்னா எதோ தீவிரமான அகிம்சா வாதி போல காட்ட முனைவது தெரிகிறது..!

ஜின்னாவை போல ஒரு தீவிர மத வெறியர் இந்தியா கண்டதில்லை... முஸ்லீம்களும் இந்துகளும் லட்ச்சக்கணக்கில் கொல்லப்பட்ட போது ஜின்னா உதிர்த்த வசனங்கள் அதுக்கு சாட்ச்சி..! அவர் அண்று விதைத்ததுதான் இண்றுவரை முஸ்லீம் இந்து பிரச்சினைகளுக்கே அடித்தளம்... இந்தியாவில் கிறிஸ்தவர்களும் கோடிக்கணக்கில் இருகிறார்கள்... அவர்களுக்கும் மற்றய மதத்தவர்களுக்கும் இல்லாத பிரச்சினை இஸாமியர்களுக்கு மட்டும் எப்படி...??

இதே ஜின்னாதான் பாக்கிஸ்தானில் இருந்த இந்துக்களை அடித்தும் விரட்டினார்... பாக்கிஸ்தான் ஒரு முஸ்லீம் அடிப்படை வாதம் கொண்டு இண்று வெறித்தனமாக செயல்படுவதுக்கு அடித்தளம் இட்ட ஜின்னாவை பற்றி பேசுகிறீர்கள் என்பதை மறந்து விட வேண்டாம்...

பவுத்ததிலோ இசுலாத்திலோ சாதியம் என்பது இந்துசமயத்தில் இருந்து மதம் மாறியவர்கள் பண்பாட்டு ரீதியாக அதனைக் காவிச் சென்றதால் தான் இருக்கிறது.எவரும் ஒரு மவுலவியாகவோ அல்லது பவுத்த துறவியாகவோ ஆகலாம்.அது பிறப்பால் நிச்சயிக்கப் படுவதில்லை.

.

இந்துத்துவத்திலும் கப்புறாளை எனப்படும் பூசாரியாக யார் வேண்டுமானாலும் ஆகலாமே...! எவர் வேண்டுமானாலும் ஒரு கோயிலை நிறுவமுடியும்...! அவர் யாரை வேண்டுமானாலும் பூசகர் ஆக்கலாம்...!!

இந்து மதத்தில் இருந்து சாதியத்தால்தான் முஸ்லீம்களில் சியாக்களும், சுன்னிக்களும், குர்தீஸ்களும் தோண்றினரோ..?? ஏன் தமிழ் நாட்டில் ராவுத்தர், மரிக்கார், லெப்பை என்பதெல்லாம் இந்து மதத்தில் இருக்கும் சாதிகள் என்பீர்கள் போல இருக்கே....!!

ஐரோப்பிய நாடுகளில் Butler, smith, lord என்பது எல்லாம் சாதிகளாகத்தானே இருந்தன... பொருளாதார வழர்ச்சிதான் அவர்களை சமமானவர்களாக மாத்தியது... pirate of the caribbean திரைப்படத்தில் ஓரளவுக்கு சொல்லி இருக்கிறார்களே..! இந்த நிலையை அடைய அவர்களை கைக்கொண்ட சோசலீசத்தை பெரியார் பேச்சளவோடு ஏன் நிறுத்தினார்...!

Link to comment
Share on other sites

நீங்கள் சொல்வதை பார்த்தால் ஜின்னா எதோ தீவிரமான அகிம்சா வாதி போல காட்ட முனைவது தெரிகிறது..!

ஜின்னாவை போல ஒரு தீவிர மத வெறியர் இந்தியா கண்டதில்லை... முஸ்லீம்களும் இந்துகளும் லட்ச்சக்கணக்கில் கொல்லப்பட்ட போது ஜின்னா உதிர்த்த வசனங்கள் அதுக்கு சாட்ச்சி..! அவர் அண்று விதைத்ததுதான் இண்றுவரை முஸ்லீம் இந்து பிரச்சினைகளுக்கே அடித்தளம்... இந்தியாவில் கிறிஸ்தவர்களும் கோடிக்கணக்கில் இருகிறார்கள்... அவர்களுக்கும் மற்றய மதத்தவர்களுக்கும் இல்லாத பிரச்சினை இஸாமியர்களுக்கு மட்டும் எப்படி...??

இதே ஜின்னாதான் பாக்கிஸ்தானில் இருந்த இந்துக்களை அடித்தும் விரட்டினார்... பாக்கிஸ்தான் ஒரு முஸ்லீம் அடிப்படை வாதம் கொண்டு இண்று வெறித்தனமாக செயல்படுவதுக்கு அடித்தளம் இட்ட ஜின்னாவை பற்றி பேசுகிறீர்கள் என்பதை மறந்து விட வேண்டாம்...

இந்துத்துவத்திலும் கப்புறாளை எனப்படும் பூசாரியாக யார் வேண்டுமானாலும் ஆகலாமே...! எவர் வேண்டுமானாலும் ஒரு கோயிலை நிறுவமுடியும்...! அவர் யாரை வேண்டுமானாலும் பூசகர் ஆக்கலாம்...!!

இந்து மதத்தில் இருந்து சாதியத்தால்தான் முஸ்லீம்களில் சியாக்களும், சுன்னிக்களும், குர்தீஸ்களும் தோண்றினரோ..?? ஏன் தமிழ் நாட்டில் ராவுத்தர், மரிக்கார், லெப்பை என்பதெல்லாம் இந்து மதத்தில் இருக்கும் சாதிகள் என்பீர்கள் போல இருக்கே....!!

ஐரோப்பிய நாடுகளில் Butler, smith, lord என்பது எல்லாம் சாதிகளாகத்தானே இருந்தன... பொருளாதார வழர்ச்சிதான் அவர்களை சமமானவர்களாக மாத்தியது... pirate of the caribbean திரைப்படத்தில் ஓரளவுக்கு சொல்லி இருக்கிறார்களே..! இந்த நிலையை அடைய அவர்களை கைக்கொண்ட சோசலீசத்தை பெரியார் பேச்சளவோடு ஏன் நிறுத்தினார்...!

இசுலாமிய அடைப்படை வாதத்தை வைத்து இந்துதுவா அடிப்படை வாதத்தை நியாயப்படுத்தி விட முடியாது.

மதம் என்பதே மேற் கொண்டு சிந்திக்காது முடிந்த முடிபுகளீன் அடிப்படையில் இயங்குவது..

இந்து மதத்தை சீர்படுத்த எழுந்த பவுத்ததிற்கும் அது மதமாக்கப்பட்ட போது இது தான் நடந்தது.ஆனால் ஜின்னாவின் அன்றைய கோரிக்கை இந்துமத ஆதிக்கவாதிகளின் வினைக்கு எதிர்வினையாக எழுந்தது.காந்தியயைக் கொன்றதும் அதே இந்துத்வ வெறி தான்.மேலே தூயவன் காட்ட முனையும் சாதிகள் மதங்களை கடந்தது அல்ல இந்துத்வா.அப்படி காட்ட முயல்வது மோசடியான கருத்தாடல்.

ஒரு குறிப்பட்ட மதம் வெவ்வேறு பிரதேசங்களுக்குச் செல்லும் போது அந்த அந்தப் பிரதேச பண்பாட்டுகளை உள் வாங்கும். நீங்கள் சொல்லும் இராவுத்தர் லெப்பை என்னும் பிரிவுகள் ஏன் மத்திய கிழக்கில் இருக்கும் இசுலாமியரிடம் இல்லை? அங்கே ஏன் சுன்னிகளும் சியாக்களும் இருக்கிறார்கள்?இவர்கள் எவ்வாறு தோற்றம் பெற்றார்கள்?

பொருளாதர வளர்ச்சிதான் சாதிகளை இல்லாது ஒழிக்கும் எனில் எவ்வகையில் புலத்தில் சாதியம் இன்றும் இருக்கிறது?

வேளான் பொருளதாரா அமைப்பில் இருந்து தொழிற்துறை வளர்ச்சி அடையும் போது சாதிய அமைப்புக்கள் தகர்வது என்பது உண்மை தான்.ஆனல் சாதியம் என்பது தொடர்ந்தும் பண்பாட்டுத் தளத்தில் இருந்து கொண்டு தானே இருக்கிறது.இன்றும் பண்பாட்டுத் தளத்தில் சாதியம் இருக்கிறது.பண்பாடு என்பது மீள மீள நிர்மாணம் செய்யப்பட வேண்டும்.தேவயற்றவை களையப்பட்டு தமிழ் அடையாளம் சாதிகளற்றதாக சமயச் சார்புகள் அற்றதாக இருக்க வேண்டும்.இசுலாமியரிடம் சாதி இருக்கிறது என்பதன் மூலம் இந்து மததில் இருக்கும் சாதியத்தை நியாயப்படுத்தி விட முடியாது.இசுலாமியத்தில் சாதியம் இருக்குமாயின் அதனையும் களையத் தான் வேண்டும்.ஒரு பிழையை வைத்து இன்னொரு பிழையை நியாயப்படுத்தி விட முடியாது. நீங்கள் இந்து மததில் சாதியத்தை களைந்தால் ஏன் தாழத்தப்பட்ட மக்கள் இசுலாத்துக்கும் கிரிதுவத்துக்கு பவுததிற்க்கும் மாறுகிறார்கள்?

எமக்கானா தமிழ்த் தேசிய அடையாளம் தமிழ் மொழியின் அடிப்படையில் தமிழர் எல்லோரும் சமமே என்னும் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட வேண்டும்.அவ்வாறு அல்லாதா ஒரு தமிழ்த் தேசிய அடையாளம் தோல்வியையே சந்திக்கும்.இன்று இது உணரப்படுள்ள போதும் கடந்த காலத்தில் விடப்பட்ட தவறுகள் பலவற்றிற்கான அடிப்படை மதத்தின் அடிப்படையிலும் சாதியத்தின் அடிப்படையிலும் தமிழத் தேசிய அடையாளம் நிற்மாணிக்கப்பட்டு இருந்ததே.

//ஐரோப்பிய நாடுகளில் Butler, smith, lord என்பது எல்லாம் சாதிகளாகத்தானே இருந்தன//

இதை எங்கே இருந்து எதன் அடிப்படையில் சொல்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

//History

Ali is the central figure at the origin of the Shia / Sunni split which occurred in the decades immediately following the death of the Prophet in 632. Sunnis regard Ali as the fourth and last of the "rightly guided caliphs" (successors to Mohammed (pbuh) as leader of the Muslims) following on from Abu Bakr 632-634, Umar 634-644 and Uthman 644-656. Shias feel that Ali should have been the first caliph and that the caliphate should pass down only to direct descendants of Mohammed (pbuh) via Ali and Fatima, They often refer to themselves as ahl al bayt or "people of the house" [of the prophet].

//

சியாக்களுக்கும் சுன்னிக்களுக்குமன பிளவு பிறப்பின் அடிப்படையில் அல்லாது முகம்மதுக்கும் பின் அலி என்பவர் எத்தினைனையாவது சீடர் என்பதில் ஆரம்பமானது.இதற்கும் பிறப்பின் அடிப்படையில் படிமுறைகளைக் கொண்ட இந்து மதச் சாதியத்திற்கும் என்ன தொடர்பு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திராவிடத்துவம் என்பது திராவிடர்கள் என்ற உண்மையானதோ, பொய்யானதோ ஒரு நோக்கத்தைக் கொண்டு செயற்படுவது போல், இந்துத்துவம் என்பது ஒரு மதநோக்கத்தைக் கொண்ட செயற்பாடு. ஆனால் மேலே நான் இணைத்த ஒளிக்காட்சிகள் சங்கபரிவார் அமைப்புக்களின் சாதி, மதப் பார்வையற்ற ஒரு சேவை. திரேசா எனும் பெண்மணி கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்காக எடுக்கின்ற ஆதவற்றோர் செயற்பாட்டை நியாயமாக எடுக்கின்ற செயற்பாட்டை ஏன் சங்கபரிவார் செய்கின்ற போது ஏன் ஆதரிக்க முடியவில்லை. இத்தனைக்கும் மதம் பரப்புவதற்காக இச் சமூகசேவையைச் செய்யவில்லை.

மேலும் சங்கபரிவார் பிராமணர்களால் மட்டும் கட்டிக் காக்கப்படுகின்ற அமைப்பே கிடையாது. நீங்கள் சொல்கின்ற தாழ்த்தப்பட்ட என்கின்ற மக்கள் தான் அதிகமாக உறுப்பினர்களாக இருக்கின்றார்கள். இந்தியாவில் உள்ள பிராமணர்களின் அளவு 5 வீதம். ஆதாவது 5 கோடி அளவு தான் வரும் என்கின்றார்கள். ஆனால் சங்கபரிவார், அது சார்ந்த அமைப்புக்களின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 10க் கோடி.

காந்தியைக் கொன்றது நாடு அடிப்படையிலான பிரச்சனையின் வெளிப்பாடு. பாகிஸ்தான் என்ற என்னுமொரு நாட்டிற்கு 200 கோடி பணத்தை இந்தியா வழங்க வேண்டும் என்ற காந்தியின் பரிந்துரை தான் அவரைக் கொல்லத் தூண்டியதாகச் சொல்லப்படுகின்றது. இருப்பினும் ஒரு மனிதனின் மதத்தை மட்டும் வைத்துக் கொண்டு, அதை மதச் சாயம் பூசுவது தவறானது.

Link to comment
Share on other sites

//English-speaking countries

In Britain, hereditary surnames were adopted in the 13th and 14th centuries, initially by the aristocracy but eventually by everyone. By 1400, most English and Scottish people had acquired surnames, but many Highland Scots and Welsh people did not adopt surnames until the 17th century, or even later. Henry VIII (1509 - 1547) ordered that marital births be recorded under the surname of the father. [4]

Most surnames of British origin fall into seven types:

Occupations (e.g., Smith, Sawyer, Clark, Cooper, Cook, Carpenter, Forrester, Archer, Baker, Dyer, Walker, Woodman, Taylor, Turner, Knight, Weaver)

Personal characteristics (e.g., Short, Brown, Black, Whitehead, Long)

Geographical features (e.g., Hill, Bridge, Lee, Wood, Forest, Fields, Stone, Morley—Old English for mōr lēah = marsh in the woodland clearing)

Place names (e.g., Washington, London, Leighton, Hamilton, Sutton, Flint, Laughton)

For those descended from land-owners, the name of their holdings, manor or estate (the name Washington can also fall into this category, Old English components Hwæssa-inga-tūn "estate of the descendants of Wassa)

Patronymics, matronymics or ancestral, often from a person's given name (e.g., from male name: Richardson, Williams, Thompson, Johnson or female names Molson (from Moll for Mary), Madison (from Maud), Emmott (from Emma), Marriott (from Mary) or from a clan name (for those of Scottish origin, e.g., MacDonald, Forbes) with "Mac" Scottish Gaelic for son.

Patronal, from patronage (Hickman meaning Hick's man, where Hick is a pet form of the name Richard) or strong ties of religion Kilpatrick (follower of Patrick) or Kilbride (follower of Bridget).

The original meaning of the name may no longer be obvious in modern English (e.g., a Cooper is one who makes barrels, and the name Tillotson is a matronymic from a diminutive for Matilda). A much smaller category of names relates to religion, though some of this category are also occupations. The names Bishop, Priest, or Abbot, for example, may indicate that an ancestor worked for a bishop, a priest, or an abbot, respectively, or possibly took such a role in a popular religious play (see pageant play).//

http://en.wikipedia.org/wiki/Family_name

Family_name உருவானதற்கான காரணக்கலுக்கும் இந்து சமயத்தில் இருக்கும் படி நிலைச் சாதியத்திற்க்கும் என்ன சம்பந்தம்?

இங்கே மததின் பெயரால் ஏற்படுத்தப்படுள்ள சாதிய அடுக்கு எங்கே இருக்கிறது? smith என்னும் பெயரை உடையவர்கள் எல்லாம் கொல்லர் தொழைலையா செய்தனர்?

Link to comment
Share on other sites

இசுலாமிய அடைப்படை வாதத்தை வைத்து இந்துதுவா அடிப்படை வாதத்தை நியாயப்படுத்தி விட முடியாது.

மதம் என்பதே மேற் கொண்டு சிந்திக்காது முடிந்த முடிபுகளீன் அடிப்படையில் இயங்குவது..

இந்து மதத்தை சீர்படுத்த எழுந்த பவுத்ததிற்கும் அது மதமாக்கப்பட்ட போது இது தான் நடந்தது.ஆனால் ஜின்னாவின் அன்றைய கோரிக்கை இந்துமத ஆதிக்கவாதிகளின் வினைக்கு எதிர்வினையாக எழுந்தது.காந்தியயைக் கொன்றதும் அதே இந்துத்வ வெறி தான்.மேலே தூயவன் காட்ட முனையும் சாதிகள் மதங்களை கடந்தது அல்ல இந்துத்வா.அப்படி காட்ட முயல்வது மோசடியான கருத்தாடல்.

இந்துக்களுக்கு தலைவலியை கொடுக்க வேணும் என்பதுக்காக ஒரு லட்சம் இந்துக்களை (இந்தியர்களை) கொண்றதுக்கு பொறுப்பாக ஜின்னா இருந்தது உங்களுக்கு எதிர்வினையாக தெரிகிறது... இந்துக்கள் சாவதுக்கு இஸ்லாமியர் காரணமாக இருந்தாலும் ஜின்னாவை வெற்றி பெற வைத்த காந்தியை ஒருவர் கொலை செய்கிறார்.. அதை இந்து மத வன்முறைகாக பார்க்கிறீர்கள்... இது உங்களின் குழப்பமான நடவடிக்கை...

ஒரு லட்சம் இந்தியர்கள் (இந்துக்கள்) இறந்தது சரியானது ஆனால் அதுக்கு அடித்தளமிட்டவர்களில் ஒருவராக இனங்காணப்பட்ட காந்தியை கொண்றது வெறிச்செயல் அப்படியா....??? காந்தி வாங்கி கொடுத்த சுதந்திரத்தை பெரியார் எதிர்த்தாரே அவரையும் நீங்கள் எதிர்பீர்களோ..?

அப்படியானால் அல்லோப் கிட்லர் செய்ததும் சரி எண்று வாதிடுவீர்கள்... வாதிட வேன்டும்.. செய்வீர்களா...?? மேற்கத்திய மேலாண்மையை எதிர்த்த வீரன் கிட்லர் எண்று சொல்வீர்களா..???

இஸ்லாமியர் பற்றியது...

மத்திய கிழக்கிலும் இந்தியாவிலும் இஸ்லாமியர்களில் சாதி இருப்பதை ஒத்து கொண்டீர்கள்... அப்படியே இந்தியாவில் இர்17 கோடி முஸ்லீம்கள் இருக்கிறார்கள்.. அவர்களிடம் சாதியை இந்துத்துவம் கொடுத்தது எண்று நீங்கள் சொல்வதை எடுத்து கொள்வோம்...

இந்திக்களின் சாதிய கொடுமை தாங்காமல் மதம் மாறிய உயர்சாதியினர் முஸ்லீம்களில் சாதியை தோற்றுவித்தனர் எண்று எடுத்து கொள்ளலாமா..? இல்லை இந்தியாவில் இருக்கும் சாதியை மதம் மாற்றினாலும் ஒளிக்க முடியாது எண்று எடுத்து கொள்ளலாமா..? ஒருவேளை மதமே இல்லாமல் ஒளித்தால் மட்டும் சாதியம் ஒளிந்து விடும் எண்று எதை வைத்து சொல்கிறீர்கள் எண்று கேள்வி எழுகிறதே...!!!

அப்போ பெரியார் செய்தது எல்லாம் வீண்வேலை என்கிறீர்கள்....!! இதைத்தான் நானும் சொல்கிறேன்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாதியம் தொடர்பான இவரது கருத்துக்கள் முரண்பாடனவையாக இருக்கின்றது. சாதியம் ஒழிக்கப்பட வேண்டும் என்கின்ற ஆர்வம் இருப்பது பாராட்டக் கூடியது. ஆனால் அது எவ்வகையில் வெளிப்படுகின்றது என்றால், இந்துத்துவம் தான் சாதியத்துக்குக் காரணம் என்று குற்றம் சாட்டுவதில் மட்டுமே மட்டுப்படுத்திக் கொள்கின்றது.

சாதியத்தை ஒழிக்க இந்து மதம் அழிக்கப்பட வேண்டும் என்ற வாதத்தை முன் வைக்கின்றார்கள். அப்படி இந்து மதத்தை அழித்தாலும் சாதியம் ஒழியாது. மற்றய மதங்களில் இனஅடிப்படையில் உள்ளவனவே என்று சொல்லுகின்றபோது, திரும்பவும் சாதியத்திற்குக் காரணம் இந்து மதம் என்றே முடிக்கப்படுகின்றது.

இப்படியான செயற்பாடுகள் மூலம் சாதியம் அழிக்கப்பட வேண்டும் என்ற ஆர்வம் இவர்களுக்கு எள்ளவும் இல்லை என்றே தோன்றுகின்றது. தலித், பிராமணியம் என்பதை இல்லாவிட்டால் பலப்படுத்தியிருக்கமாட்டார்

Link to comment
Share on other sites

இந்துக்களுக்கு தலைவலியை கொடுக்க வேணும் என்பதுக்காக ஒரு லட்சம் இந்துக்களை (இந்தியர்களை) கொண்றதுக்கு பொறுப்பாக ஜின்னா இருந்தது உங்களுக்கு எதிர்வினையாக தெரிகிறது... இந்துக்கள் சாவதுக்கு இஸ்லாமியர் காரணமாக இருந்தாலும் ஜின்னாவை வெற்றி பெற வைத்த காந்தியை ஒருவர் கொலை செய்கிறார்.. அதை இந்து மத வன்முறைகாக பார்க்கிறீர்கள்... இது உங்களின் குழப்பமான நடவடிக்கை...

ஒரு லட்சம் இந்தியர்கள் (இந்துக்கள்) இறந்தது சரியானது ஆனால் அதுக்கு அடித்தளமிட்டவர்களில் ஒருவராக இனங்காணப்பட்ட காந்தியை கொண்றது வெறிச்செயல் அப்படியா....??? காந்தி வாங்கி கொடுத்த சுதந்திரத்தை பெரியார் எதிர்த்தாரே அவரையும் நீங்கள் எதிர்பீர்களோ..?

அப்படியானால் அல்லோப் கிட்லர் செய்ததும் சரி எண்று வாதிடுவீர்கள்... வாதிட வேன்டும்.. செய்வீர்களா...?? மேற்கத்திய மேலாண்மையை எதிர்த்த வீரன் கிட்லர் எண்று சொல்வீர்களா..???

இஸ்லாமியர் பற்றியது...

மத்திய கிழக்கிலும் இந்தியாவிலும் இஸ்லாமியர்களில் சாதி இருப்பதை ஒத்து கொண்டீர்கள்... அப்படியே இந்தியாவில் இர்17 கோடி முஸ்லீம்கள் இருக்கிறார்கள்.. அவர்களிடம் சாதியை இந்துத்துவம் கொடுத்தது எண்று நீங்கள் சொல்வதை எடுத்து கொள்வோம்...

இந்திக்களின் சாதிய கொடுமை தாங்காமல் மதம் மாறிய உயர்சாதியினர் முஸ்லீம்களில் சாதியை தோற்றுவித்தனர் எண்று எடுத்து கொள்ளலாமா..? இல்லை இந்தியாவில் இருக்கும் சாதியை மதம் மாற்றினாலும் ஒளிக்க முடியாது எண்று எடுத்து கொள்ளலாமா..? ஒருவேளை மதமே இல்லாமல் ஒளித்தால் மட்டும் சாதியம் ஒளிந்து விடும் எண்று எதை வைத்து சொல்கிறீர்கள் எண்று கேள்வி எழுகிறதே...!!!

அப்போ பெரியார் செய்தது எல்லாம் வீண்வேலை என்கிறீர்கள்....!! இதைத்தான் நானும் சொல்கிறேன்...!

பெரியார் உனக்கு மதம் வேண்டு மென்றால் உன்னைத் தாழ்ந்தவனாகாச் சொல்லாத மதத்தை எற்றுக் கொள் என்றே சொன்னார்.மதம் தேவயற்றவனுக்கு இவை ஒன்றும் தேவயில்லை.பெரியார் இசுலாத்துக்கோ வேறு எந்த மதத்திற்கோ மாறவில்லை,அதற்கான தேவையும் இல்லை.மதம் இல்லாமால் கடவுள் நம்பிக்கைகள் இல்லாது வாழ முடியாதவர்களுக்கே அதனைச் சொன்னார்.ஒப்பீட்டளவில் சாதிய ஒடுக்குமுறைகள் குறைந்த மதத்தைச் தழுவச் சொன்னார்.அன்றைய சூழலில் இந்து மதத்தை விட கிரித்துவ மதத்தை விட அன்றிருந்த இசுலாமிய மதத்தில் சாதிய ஒடுக்குறைகள் குறைவாக இருந்தன.பண்பாட்டு ரீதியாக சாதிய எச்சங்கள் பாதிப்பைச் செலுத்தினாலும் இசுலாம் அடிப்படையில் சகோதரத்துவத்தை சமதர்மத்தைப் போதிப்பது.

பெரியார் செய்தது வீண் வேலையா இல்லை என்பதைத் தமிழ் நாட்டு மக்கள் தான் தீர்மானிக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமியம் பெண்கள் தொடர்பாகக் கொடுக்கின்ற அடக்குமுறைகளை ஏன் அவர் கருதவில்லை. அப்படிப் பார்த்தால் இவர் கொண்டிருந்த பெண்விடுதலை தொடர்பான சிந்தனைகளுக்கும், இதற்கும் முரண்பாடாக இல்லையா?

Link to comment
Share on other sites

பெரியார் உனக்கு மதம் வேண்டு மென்றால் உன்னைத் தாழ்ந்தவனாகாச் சொல்லாத மதத்தை எற்றுக் கொள் என்றே சொன்னார்.மதம் தேவயற்றவனுக்கு இவை ஒன்றும் தேவயில்லை.பெரியார் இசுலாத்துக்கோ வேறு எந்த மதத்திற்கோ மாறவில்லை,அதற்கான தேவையும் இல்லை.மதம் இல்லாமால் கடவுள் நம்பிக்கைகள் இல்லாது வாழ முடியாதவர்களுக்கே அதனைச் சொன்னார்.ஒப்பீட்டளவில் சாதிய ஒடுக்குமுறைகள் குறைந்த மதத்தைச் தழுவச் சொன்னார்.அன்றைய சூழலில் இந்து மதத்தை விட கிரித்துவ மதத்தை விட அன்றிருந்த இசுலாமிய மதத்தில் சாதிய ஒடுக்குறைகள் குறைவாக இருந்தன.பண்பாட்டு ரீதியாக சாதிய எச்சங்கள் பாதிப்பைச் செலுத்தினாலும் இசுலாம் அடிப்படையில் சகோதரத்துவத்தை சமதர்மத்தைப் போதிப்பது.

அப்ப சாதியத்துக்கும், பிரிவினைக்கும் ஏற்றத்தாள்வுக்கும் ஏதுவானவர்களாய் ஜின்னா கோஸ்ரி பெரியாரால் அடயாளம் காணப்பட வில்லை என்பதை ஒத்து கொள்கிறீர்கள்...!!!

இஸ்லாத்தில் சாதிய ஒடுக்குமுறைகள் குறைவாக இருந்ததினால் பெரியார் அங்கு கை கோர்த்தார் எண்றால் அது அழுக்கான இடத்தை சுத்தம் செய்ய அழுக்கு கொஞ்சம் குறைவான துணியை உபயோகிப்பது போண்றது என்பது அவருக்கு தெரியாதா...???

சிங்கள பேரின வாதத்தை எதிர்க்க நாங்களும் இஸ்லாமிய மதவாத்தத்தோடு கைகோர்க்கலாம் என்பதாக இருக்கிறது உங்களது பெரியார் பற்றிய போதனைகள்...! அதாவது பேயை ஒடுக்க பிசாசோடு கூட்டணி...

பெரியார் செய்தது வீண் வேலையா இல்லை என்பதைத் தமிழ் நாட்டு மக்கள் தான் தீர்மானிக்கிறார்கள்.

பிறகு எதுக்காக நீங்கள் குத்தி முறிகிறீர்கள்....?? :lol:

எங்களை வளிகாட்ட எங்களுக்கு ஒரு தேசியம் இருக்கிறது அதுக்கு சிறந்த தலைமையும் இருக்கிறது, அவர்களுக்கு 30 வருடங்களுக்கும் மேல் அனுபவமும் இருக்கிறது... அவர்களின் வளிகாட்டல் மட்டுமே போதுமானது...! எனக்கு பெரியார் ஓதியவை தேவையும் இல்லை...! அவரை தூக்கி பிடிக்காதவரை எனக்கு எந்த பிரச்சினையும் கிடையாது...!

நான் மொழியாலும் இனத்தாலும் தமிழன், அதுவும் ஈழத்தமிழன் திராவிடன் அல்ல...!

Link to comment
Share on other sites

கடவுள்- மதமும் மக்களும்!

மதம் என்பது ஒரு கட்டுப்பாடு. மதத்தில் ஈடுபட்ட ஒரு மனிதன் அவன் எவ்வளவு அறிவாளியாய் இருந்தாலும் அந்த கட்டுப்பாட்டுக்கு அடங்கி நடக்க வேண்டும் என்பதைத் தவிர மற்றபடி அந்த மனிதனுக்கு எந்தவிதமான பயனும் ஏற்படப்போவதில்லை. ஒரு மதவாதிக்கு மதம் காரணத்தால் ஏற்பட்ட கடவுள், மோட்சம், நரகம், வேதம், மதத்தர்மம், மதத்தலைவன், என்பனவெல்லாம் அந்த அதாவது அவன் சார்ந்திருக்கிற மதக் கட்டுப்பாட்டினால் ஏற்பட்டவையே ஒழிய உண்மைப் பொருளோ உண்மைத் தத்துவமோ அல்ல என்பதோடு அவை எல்லாம் செயற்கையே ஒழிய இயற்கையுமல்ல.ஒரு மதவாதிக்கு அவன் எந்த மதத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும், அவனுக்குக் கடவுள் அது எப்படிப்பட்ட கடவுளானாலும், அது செயற்கைக் கடவுளே ஆகும். இதில் இயற்கை செயற்கை என்பதற்கு என்ன விளக்கம் என்றால் இயற்கை என்பது உணவு உட்கொள்வது மலஜலங் கழிப்பது பார்ப்பது கேட்பது, மூச்சுவிட்டு இழுப்பது, பேசுவது, வலிகாண்பது, பசி தோன்றுவது, தூங்குவது, விழித்திருப்பது, காம உணர்ச்சி, துக்கம், சுகம், சூரியன், சந்திரன், வெளிச்சம், இருட்டு, பஞ்சப்பூதங்கள் முதலியவை இயற்கையாகும். இவை எல்லா மக்களுக்கும் பொது என்பதோடு யாராலும் மறுக்க முடியாதவை. மற்றபடி இத்தன்மைகளல்லாத கடவுள், மதம், மோட்சம், நரகம், சன்மானம், தண்டனை, செல்வம், சிறுமை, பெருமை, பக்தி, பிராத்தனை, வேதம் முதலியவை அடியோடு கற்பனையேயாகும்.இந்த இயற்கை, செயற்கைகள் அறியப்படுவதற்கு ஆதாரம் முறையே பிரத்தியட்ச அறிவும் - பிரத்தியட்ச அறிவுக்குப்புறம்பான நம்பிக்கையுமேயாகும்.

ஆகவே, உலகில் உள்ள எப்படிப்பட்ட மதக்காரனும், கடவுள் உணர்ச்சிக்காரனும், நம்பிக்கைவாதி ஆவானே ஒழிய, அறிவுவாதி ஆகவேமாட்டான். உதாரணமாக "கிறிஸ்து" என்றால் "பைபிள்" என்றால் கிறிஸ்துவை ஏற்று அவரில் நம்பிக்கை வைத்து பைபிளை ஒப்புக் கொண்டவருக்குத் தான் "கிறிஸ்துவே" தவிர "பைபிளே" தவிர அவை, நம்பிக்கையில்லாதவருக்கு உண்மையாய் தத்துவமாய் இருக்க முடியாது.அதுபோலவே, "முகமது நபி" என்றால், "குரான்" என்றால் முகமது நபியை ஏற்று, அவரின் மீது நம்பிக்கை வைத்து குரானை ஒப்புக் கொண்டவருக்குத் தான் நபியே தவிர, குரானே தவிர, நம்பிக்கை இல்லாதவருக்கு எப்படி நபியாகவும், குரானாகவும், இருக்க முடியும்? அப்படியே தான் மற்ற மதங்களும் வேத சாஸ்திரங்கள் முதலியவையுமாகும். ஆகவே நம்பாதவனுக்கு ஏற்காதவனுக்கு எது எது இல்லையோ அவை எல்லாம் பெரிதும் செயற்கையே ஆகும். கடவுளும், கடவுள் நம்பிக்கையும் அதில்பட்டதுதான். ஒரு மனிதனை மற்றொரு மனிதன் "நீ கிறிஸ்துவை நம்பித் தான் ஆக வேண்டும்? பைபிளை நம்பித்தான் ஆக வேண்டும் இல்லாவிட்டால் நரகத்தில் அழுந்துவாய்" என்று சொல்பவனும் "நீ நபியை நம்பித்தான் ஆக வேண்டும்; இல்லாவிட்டால் எரி நரகில் அழுந்துவாய்" என்று சொல்பவனும் எவ்வளவு அறிவற்றவனாவானோ அவ்வளவு அறிவற்றவனே ஆவான். ஒரு மனிதனைப் பார்த்து, நீ கடவுளை நம்பித்தானாக வேண்டும். இல்லாவிட்டால் நீ நரகத்தில் அழுத்தப்படுவாய் என்று சொல்கிறவனும் என்பதை மதவாதிகளும் உணரவேண்டும். கடவுளும் மதமும் அறிவற்றவனைத்தான் ஆகட்டும் என்பதோடு வெறியனாகவும், பைத்தியக்காரனாகவும் கூட ஆக்கிவிடும்.

ஆனால், பகுத்தறிவு எப்படிப்பட்ட தன்மையுள்ள கடவுளும், மதமும் பகுத்தறிவுவாதி இருக்கிற பக்கம் எட்டிக்கூடப் பார்க்க முடியாது.எப்போதுமே நான் கடவுளையும், மதத்தையும் அவை சம்பந்தப்பட்டவை எவற்றையுமே, "வெங்காயம்" என்று தான் சொல்லுவேன். வெங்காயம் என்றால் வித்து இல்லாதது. வெறும் சதை. அச்சொல்லின் பொருள் வெங்காயம் - வெறும் காயம்; உயிரற்ற உடல்; விதை இல்லாதது உரிக்க உரிக்கத் தோலாகவே – சதையாகவே வந்து முடிவில் சூனியமாய் விதை இல்லாத தன்மையாய் முடிவது என்பது பொருள். ஆகவே விதை -வித்து இல்லாத காரணத்தால் தான் அதற்கு வெங்காயம் என்ற பெயர் உண்டாயிற்று. அது போன்றவைதான் கடவுளும் மதமுமாகும். இச்சொற்களுக்கு இயற்கைப் பொருளே இல்லை. கற்பிக்கிறவர்கள் சொல்லும் பொருள்தான். ஆனால், சூரியன், சந்திரன் முதவானவைகளை அப்படிச் சொல்ல முடியுமா? முடியாது. ஏனென்றால் அவை உண்மையானவை. எவ்வளவு மடையனும், எப்படிப்பட்ட பகுத்தறிவாதியும் அவைகளை மறுக்க மாட்டான் என்பதோடு, "எனக்கு அவை இல்லை", "என் கண்ணுக்கு – என் புத்திக்கு அவை தென்படவில்லை", "நான் ஒப்புக்கொள்ளமாட்டேன்" என்று சொல்லவே மாட்டான். இதுதான் இயற்கைக்கும் - உண்மை பகைக்கும் ஏற்ற உதாரணமாகும்.மற்றும், கடவுள், மதவாதியாக இருப்பவர்கள் "ஒரு மனிதன் மதத்தை ஏன் மறுக்கிறான்?" என்பதைப்பற்றி சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

அது போலவே ஒரு மனிதன் கடவுளை ஏன் மறுக்கிறான் என்பதையும் (கடவுள்வாதி) சிந்தித்துப் பார்க்க வேண்டும். மற்றும் கடவுள், மவாதிகள், கடவுள் -மத மறுப்பாளர்களை விட எந்த விதத்தில் அறிவாளிகள்? எந்தவிதத்தில் உயர்ந்த இந்திரியங்களை (மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவைகளை) உடையவர்களாக இருக்கிறார்கள்? என்பதையும் சிந்தித்து பார்க்க வேண்டும்.மனிதனுக்கு மிக அருமையான அறிவும், பகுத்தறியும் சக்தியும், ஆழ்ந்து சிந்திக்கும் தன்மையும், அனுபவத்திற்கு ஏற்ப நடக்கும் உரிமையும் இருக்கும் போது கடவுள் எதற்காக வேண்டும்? என்பதையும் மனிதன் நல்ல வண்ணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.கடவுள் என்ற பொருளுக்கு மனிதன் கற்பித்து இருக்கும் குணம் என்னவென்றால் கடவுள் யாவற்றையும் படைத்து (படைத்ததோடல்லாமல்) யாவற்றையும் நடத்துகிறவன் என்பதாம்.அதாவது நன்றோ செய்வேன், தீதோ செய்வேன், நானா அதற்கு நாயகன், நீ நடத்துகிறபடி நடத்தப்படுகிறவன்தானே? என்பது தான் கடவுள் நம்பிக்கைக்காரர்கள் கடவுளைப்பற்றி மக்களுக்குச் சொல்லும் இலட்சணம். இந்தக் கருத்து ஒரு கடுகளவாவது மனிதனுக்குப் பயன்படுகிறதா? மற்ற மனிதர்களுக்குத்தான் சொல்லப்படுகிறதே ஒழிய, எவனுக்காவது தன் விஷயத்தில் நம்பவோ நம்பி நடக்கவோ வாழ்க்கையில் கொள்ளவோ பயன்படுகிறதா? மக்கள் மடையர்ளாக இருந்த வரையில் அதாவது சிந்திக்கும் தன்மை இல்லாதவர்களாக இருந்தவரையில் - இருக்கிறவரையில் கடவுளுக்கு சர்வ சக்தி, சர்வ செயல் "இருந்திருக்கலாம்". இன்று அறிவாளிக்கு – அறிவுவாதிக்கு அந்த எண்ணம் சரி என்று தோன்ற முடியுமோ? தவிரவும் கடவுளும், மதமும் மனிதனுக்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கற்பிக்கப்பட்டவை அல்லது தோன்றியவை என்பதை யாரும் மறுக்க முடியாது. அக்காலக் கற்பனையானது காலக்கிரமத்தில் மாறுதலடைந்து கொண்டே வந்திருக்கிறது என்பதையும் யாராவது மறுக்க முடிகிறதா?

இந்த நிலையில் 2000 - ஆண்டுகளுக்கு முந்தைய கிறிஸ்துவ மதமும், கிறிஸ்துவக் கடவுளும் 1500 - ஆண்டுகளுக்கு முந்தைய நபி மதமும், அடைந்துள்ளபோது, பலப்பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஆரியக் கடவுள்களும், ஆரிய மதமும் மாற்றமடையக் கூடாது என்றால் அது எப்படிப் பகுத்தறிவுக்குப் பொருத்தமாக இருக்க முடியும்?இவைகள் எல்லாம் மனிதர்களால் அமைக்கப்பட்டனவே அன்றி மனிதப் பிறவியில் மனிதத் தன்மைக்கு மேற்பட்ட சக்தி கொண்டு ஒரு மனித உருவால் அமைக்கப்பட்டது என்று சொல்லப்படுமானால், அது பெரும்புரட்டாகத்தான் இருக்க முடியுமே ஒழிய, அப்படிச் சொல்வதில் சிறிதாவது உண்மையோ, அறிவுடைமையோ இருக்காது என்பதுடன், அதில் யோக்கியப் பொறுப்பும் இருக்க முடியாது என்பதுடன் அதில் யோக்கியப் பொறுப்பும் இருக்க முடியாது என்று வற்புறுத்திக் கூறுவேன். ஏனென்றால், இன்றைய மக்கள் தன்மை - இன்றைய விஞ்ஞான அறிவு சக்தித்தன்மை 10000- 5000- 2000- 1500 ஆண்டுகளுக்கு முன் இருந்ததைவிட எத்தனையோ மடங்கு அதிகமானது. அக்காலக் கடவுளும் மதமும் இவைகளைக் கற்பித்தவர்களும், அக்கால மனிதத் தன்மைக்கு மேற்பட்டவர்களும் "ஏழைகளுக்கு உதவி செய்தால் உனக்கு "மோட்சம்", "சன்மானம்" கிடைக்கும் என்று சொன்னார்கள். அவர்களால் சொல்லப்பட்ட வேத சாஸ்திரங்களும் அப்படியே சொல்கின்றன. இன்றைய வெகு சாதாரண விஞ்ஞான அறிவு, ஏழைகள் ஏன் இருக்க வேண்டும்? அவர்கள் பிறப்பிக்கப்பட என்ன அவசியம்? அவர்கள் யாரால் எதனால் பிறப்பிக்கப்பட்டாலும் சரி, இன்று அவர்கள் கண்டிப்பாக மனித உலகத்தில் இருக்கக்கூடாது" என்று கூறுகிறது. இதற்கு யாரால் தான் எந்தத் தெய்வீகப் புருஷனால்தானாகட்டுமே என்ன பதில் சொல்ல முடியும்?

ஆகவே, கடவுள், மதம், தெய்வீகப் புருஷர்கள் என்பவற்றை எப்படிப்பட்டவர்களானாலும் பாதுகாக்க வேண்டுமானால், அவர்களைப் பொறுத்தவரை அடக்கமாக வைத்திருத்தால் காக்கப்பட்வர்கள் ஆவார்கள். அப்படிக்கினறி, தான் பெரிய கடவுள் பக்தன் மத பக்தன் என்கின்ற கர்வங்கொண்டு அவற்றைக் காப்பாற்ற வெளிக்கிளம்புவானேயானால், அவன் கண்டிப்பாக வெளிக்கிளம்புவானேயானால் அவன் கண்டிப்பாக அவர்களை ஒழிக்க – அவற்றின் "பெருமை"யை அழிக்கப் புறப்பட்டவனே ஆவான்.கடவுள், மதம், தெய்வீகப் புருஷர்கள் என்பவற்றில் கடவுளைவிட மோசமானது, மக்களை அலைக்கழித்து வேற்றுமை உணர்ச்சியை உண்டாக்குவது மதமாகும். மதத்தைவிட மக்களுக்கு மடமையையும், அகம்பாவத்தையும் உண்டாக்குவது தெய்வீக சக்தி உள்ள மனிதத் தன்மையைவிட மேற்பட்ட சக்தி உள்ள மனிதன் மனிதப் பிறவி என்பதாகும்.

எனவே, பெரிய ஆட்கள் அதாவது 25- வயதுக்கு மேற்பட்டவர்களிடம் இந்த கடவுள், மத உணர்ச்சி இருந்தாலும், 24 - அல்லது 30- வயதிற்கு உட்பட்ட மக்களிடம் கண்டிப்பாக இந்த உணர்ச்சி இருக்கவே கூடாது என்பது என் ஆசை.அப்படி இந்தக் கடவுள், மத உணர்ச்சி இல்லாமல் இருந்தால் தான் மனிதப் பண்பு, மக்கள் யாவரையும் ஒன்றுபோல கருதும் உணர்ச்சி இல்லாமல் தான் மனிதப் பண்பு மக்கள் யாவரையும் ஒன்று போல கருதும் உணர்ச்சி, நேர்மை நல்லதைப் போற்றவும், தீயதைக் கண்டிக்கவுமான துணிவு, யாவையும் ஒன்று போல் கருதிச் செய்யும் பொதுத் தொண்டு உணர்ச்சியும் ஏற்பட முடியும்.இன்று இவை சுத்த சத்தமாய் இல்லாததற்குக் காரணம் இந்தக் கடவுள், மதம், மனிதத் தன்மைக்கு மேற்பட்ட தன்மையுள்ள மனிதப் பிறப்பு என்கின்ற உணர்ச்சிதான் என்பது எனது தாழ்மையான முடிந்த முடிவு.

(21-09-1973 "விடுதலை" நாளிதழில் தந்தை பெரியார் எழுதிய தலையங்கம். "பெரியார் களஞ்கியம்". தொகுதி:2 … பக்கம்:117)

Link to comment
Share on other sites

பிறவி ஜாதியை ஒழிப்பதற்கு நாம் நாத்திகர்களாகியே தீர வேண்டும் - I

சமதர்மம் என்கின்ற வார்த்தை ஒரு பொது வார்த்தை. இது, ஆங்கிலத்தில் உள்ள ‘சோஷலிசம்' என்னும் வார்த்தைக்கு தமிழ் மொழி பெயர்ப்பாகக் கையாளப்படுகிறது என்றாலும், சோஷலிசம் என்ற வார்த்தையே தேசத்துக்கு ஒருவிதமான அர்த்தத்தில் பிரயோகிக்கப்படுகிறது. அனேகமாக அவ்வார்த்தை அந்தந்த தேச தகுதிக்கும், சவுகரியத்துக்கும், அரசாங்கத்துக்கும் தகுந்தபடி

தான் பிரயோகிக்கப்படுகின்றது. சில இடங்களில் சட்டதிட்டங்களுக்கு மீறினதாயும் உள்ள பொருள்களுடன் சமதர்மம் என்கின்ற வார்த்தை பிரயோகிக்கப்படுகின்றது.

இங்கு சமதர்மம் என்ற வார்த்தைக்கு, சமூகத் துறையிலும், பொருளாதாரத் துறையிலும், மக்கள் உயர்வு, தாழ்வு இல்லாமல் சமத்துவமாய் வாழ வேண்டும் என்பதையே சமதர்மம் என்று நான் கருத்துக் கொண்டு, சமதர்மம் என்கின்ற வார்த்தையை இங்கு பிரயோகிக்கின்றேன்.

ஏனெனில், மற்ற நாட்டில் சமூகத் துறையில் நம் நாட்டில் உள்ளது போன்ற பிறவி, உயர்வு, தாழ்வு பேதம் இல்லை. பொருளாதார சம்பந்தமே பெரிதும் மற்ற நாடுகளில் இருக்கின்றன. நம் நாட்டுச் சமுதாய உயர்வு தாழ்வானது, பிறவியிலேயே வகுக்கப்பட்டு, அதை மதத்தோடு பொருத்தி, அதற்கு அரசியல் பாதுகாப்பளிக்கப்பட்டு இருந்து வருகிறது.அரசியலில் உள்ள பாதுகாப்பை உடைப்பது என்று முதலில் ஆரம்பித்தால், அதற்கு நம் நாட்டு மக்கள், அதுவும் பொருளாதாரத்தால் மிகவும் நொந்து ஏழ்மை நிலையில் இருக்கும் மத நம்பிக்கை கொண்ட பாமர மக்கள் என்பவர்களே சிறிதுகூட ஒப்பமாட்டார்கள் என்பதோடு மாத்திரமல்லாமல், அவர்களே நமக்கு எதிரிகளாயும் இருப்பார்கள்.

ஏனெனில், பிறவி காரணமாய் உள்ள உயர்வு தாழ்வு மதத்தில் சம்பந்தப்பட்டு, அம்மதம் பாமர மக்கள் ரத்தத்தில் ஊறி இருக்கிறபடியாலும், அதுவே அரசியலுக்கு ஆதாரமாய் இருப்பதாலும், அதை மாற்றாமல், அதை மாற்றுவதற்குத் தகுந்த முயற்சி எடுக்காமல் மேல்நாட்டுச் சமதர்மம் பேசுவது, பாலைவனத்தில் இருந்து சத்தம் போடுவது போலவே ஆகும். முதலில் சமுதாயத்தில் பிறவியின் பேரால் உள்ள பேதங்களை ஒழித்தாக வேண்டும். அதுவே இந்நாட்டு சமதர்மத்துக்கு முதற்படியாகும். நிற்க.

பொதுவாகவே சமதர்மம் என்பது எந்தக் கருத்தில் இருந்தாலும், சமுதாயம் முக்கியமானாலும், அதற்குக் கடவுள் உணர்ச்சி, மத நம்பிக்கை என்பவற்றின் எதிராகவே இருந்து வருகின்றன. சர்வதேச மதவாதிகளும் பெரிதும் கடவுள் உணர்ச்சியும், மத நம்பிக்கையையும், சமதர்மத்திற்கு விரோதமானது என்றுதான் சொல்லி இருக்கிறார்கள். ஆதலால், எந்த சமதர்மவாதிக்கும் இதைப் பொறுத்தவரையில் அபிப்பிராய பேதம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. இந்த வேலை அபிப்பிராய பேதமில்லாமல் நடந்துதான் தீரும்.

நம் நாட்டிற்கு இன்று முதலில் ஜாதி பேதங்கள் ஒழிந்து, மக்கள் யாவரும் பிறவியில் சமம் என்பதான சமதர்ம முயற்சியே முதலில் செய்ய வேண்டியதாயிற்று. ஜாதி, பேதம், பிரிவு ஆகியவை ஒழிந்தால்தான் சமூக வாழ்க்கையில் சமதர்மமாய் மனிதன் வாழ முடியும். பொருளாதார பேதத்துக்கும், சமூக ஜாதி பேத முறைதான் பெரிதும் காரணமாய் காவலாய் இருந்து வந்திருக்கிறது. இன்றும் பெருவாரியான மக்களுக்கு ஜாதி பேதமே, பொருளாதார சமதர்ம முறையை நினைக்கக்கூட இடம் தராமல் அடக்கி வருகின்றதுடன் பொருளாதார பேதத்துக்கு இடமளித்தும் வருகிறது.

எந்தக் காரணத்தைக் கொண்டாவது இன்று நாட்டிலுள்ள பொருள்களையெல்லாம் எல்லா மக்களுக்கும் சமமாக்கி வைத்து விட்டாலும், நமது ஜாதி முறைகள் மறுபடியும் வெகுசீக்கிரத்தில் பழைய நிலைமையைத்தான் உண்டு பண்ணிவிடும். மற்ற நாட்டு மக்களுக்கு பொருளாதார சமதர்ம உணர்ச்சி ஏற்பட்ட காரணம் எல்லாம், அவர்களின் பிறவியில் கீழ்மேல் நிலை இருக்கும்படியான ஜாதி பேதம் இல்லாததேயாகும். நம் மக்களுக்கு வெறும் பொருளாதார சமதர்மம் சுலபத்தில் புரியவே புரியாது.

ஜாதி பேதம் ஒழிப்பது என்ற சமதர்மத்தைச் சொல்லி, பொருளாதார சமதர்மம் சொன்னால்தான் உண்மையாகக் கஷ்டப்படுகின்ற மக்களுக்கு உணர்ச்சி உண்டாக்க முடிகின்றது. ஆகவே, சமூக சமதர்மம் ஏற்பட ஆசைப்படுகிற நாம், ஜாதி பேதத்தை ஒழிக்க வேண்டும் என்று கருதுகிற நாம், பொருளாதார சமதர்மத்துக்காகவே, பிறவி ஜாதியை ஒழிக்க வேண்டியிருக்கிறது என்றும், பிறவி ஜாதியை ஒழிப்பதற்கு அதற்கு ஆதாரமான மதத்தைப் பற்றியோ, மதத்தில் உள்ள ஏதாவது ஒரு கொள்கையைப் பற்றியோ பேசினாலும், அதை ஒழிக்க வேண்டும் என்று சொன்னாலும், அதை நாத்திகம் என்று சொல்லி விடுகிறார்கள். அதனால்தான் சமதர்மம் பேசுகின்ற யாரும் கண்டிப்பாய் நாத்திகர்களாகியே தீரவேண்டி இருக்கிறது.

(குடிஅரசு - 18.06.1949)

Link to comment
Share on other sites

அப்ப சாதியத்துக்கும், பிரிவினைக்கும் ஏற்றத்தாள்வுக்கும் ஏதுவானவர்களாய் ஜின்னா கோஸ்ரி பெரியாரால் அடயாளம் காணப்பட வில்லை என்பதை ஒத்து கொள்கிறீர்கள்...!!!

இஸ்லாத்தில் சாதிய ஒடுக்குமுறைகள் குறைவாக இருந்ததினால் பெரியார் அங்கு கை கோர்த்தார் எண்றால் அது அழுக்கான இடத்தை சுத்தம் செய்ய அழுக்கு கொஞ்சம் குறைவான துணியை உபயோகிப்பது போண்றது என்பது அவருக்கு தெரியாதா...???

சிங்கள பேரின வாதத்தை எதிர்க்க நாங்களும் இஸ்லாமிய மதவாத்தத்தோடு கைகோர்க்கலாம் என்பதாக இருக்கிறது உங்களது பெரியார் பற்றிய போதனைகள்...! அதாவது பேயை ஒடுக்க பிசாசோடு கூட்டணி...

பிறகு எதுக்காக நீங்கள் குத்தி முறிகிறீர்கள்....?? :lol:

எங்களை வளிகாட்ட எங்களுக்கு ஒரு தேசியம் இருக்கிறது அதுக்கு சிறந்த தலைமையும் இருக்கிறது, அவர்களுக்கு 30 வருடங்களுக்கும் மேல் அனுபவமும் இருக்கிறது... அவர்களின் வளிகாட்டல் மட்டுமே போதுமானது...! எனக்கு பெரியார் ஓதியவை தேவையும் இல்லை...! அவரை தூக்கி பிடிக்காதவரை எனக்கு எந்த பிரச்சினையும் கிடையாது...!

நான் மொழியாலும் இனத்தாலும் தமிழன், அதுவும் ஈழத்தமிழன் திராவிடன் அல்ல...!

மீண்டும் மீண்டும் ஒரே விடயத்தைச் சொல்லிகொண்டிருப்பதில் பயன் இல்லை.

இசுலாமிய அடிப்படை வாதாம் பிசாசா இல்லை இந்துத்வ அடிப்படைவாதாம் பிசாச என்பது அவர் அவர் பார்வையைப் பொறுத்து.ஒரு இந்து அடிப்படை வாதிக்கு இசுலாமிய அடிப்படை வதம் மட்டுமே பிசாசாகத் தெரியும்.அதே வேளை ஒரு இசுலாமிய அடிப்படைவாதிக்கு இந்துதுவா மட்டுமே பிசாசாகத் தெரியும்.மதம் அற்றவர்களுக்கு இரண்டும் பிசாசாகத் தெரியும்.இதில் எந்தப் பிசாசு நமது காரியத்துக்கு கை கொடுக்கிறதோ அதன் ஆதரவைப் பெறுவதில் எந்தப் பிழையும் இல்லை.அதேயே தான் சுபாஸ் சந்திர போசும் செய்தார், இந்தியப் படைகளை அகற்ற வேலுப்பிள்ளை பிரபாகரனும் அதனையே செய்தார்.பிச்ச்சைப்பாவிப்பத

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலக்கம் செய்பவரின் வழமையான கருத்தியல் இயலாமை தேசியத்தலைவரை இழுத்து வந்து கதைப்பதன் மூலம், தப்பிக்கப் பார்க்கின்றது

Link to comment
Share on other sites

மீண்டும் மீண்டும் ஒரே விடயத்தைச் சொல்லிகொண்டிருப்பதில் பயன் இல்லை.

மீண்டும் ஒரே விடயம் பேசப்படுகிறது எண்று அலுத்து கொள்ளவது உங்களின் இயலாமை... மதவாதி ஜின்னாவுடனா பெரியாரின் கூட்டணியை உங்களால் நியாயப்படுத்த முடியவில்லை, உங்கள் சப்புகட்டலை நான் ஏற்கவில்லை என்பதாகும்...!

ஏற்றத்தாள்வை எதிர்க்க ஒரு இன, மதவாதியுடன் கூட்டணிவைத்ததை பாராட்டும், நியாயப்படுத்தும் பக்குவம் உங்களுக்கு இருக்கும் தான்... :lol:

இசுலாமிய அடிப்படை வாதாம் பிசாசா இல்லை இந்துத்வ அடிப்படைவாதாம் பிசாச என்பது அவர் அவர் பார்வையைப் பொறுத்து.ஒரு இந்து அடிப்படை வாதிக்கு இசுலாமிய அடிப்படை வதம் மட்டுமே பிசாசாகத் தெரியும்.அதே வேளை ஒரு இசுலாமிய அடிப்படைவாதிக்கு இந்துதுவா மட்டுமே பிசாசாகத் தெரியும்.மதம் அற்றவர்களுக்கு இரண்டும் பிசாசாகத் தெரியும்.இதில் எந்தப் பிசாசு நமது காரியத்துக்கு கை கொடுக்கிறதோ அதன் ஆதரவைப் பெறுவதில் எந்தப் பிழையும் இல்லை.அதேயே தான் சுபாஸ் சந்திர போசும் செய்தார், இந்தியப் படைகளை அகற்ற வேலுப்பிள்ளை பிரபாகரனும் அதனையே செய்தார்.பிச்ச்சைப்பாவிப்பத
Link to comment
Share on other sites

பாக்கிஸ்தானின் தந்தையான ஜின்னா சுதந்திரம் அடைந்து சிறிது காலத்தில் இழந்ததும் பாக்கிஸ்தான் ஒருவகையில் மத அடிப்படைவாதத்தை நோக்கி சரியக்காரணம். ஜின்னா அடிபடைவாதி அல்ல. அவர் ஒரு மென்போக்கான மேற்குல வாழ்கைமுறையை உள்வாங்கிய இஸ்லாமியர்.

Link to comment
Share on other sites

மீண்டும் ஒரே விடயம் பேசப்படுகிறது எண்று அலுத்து கொள்ளவது உங்களின் இயலாமை... மதவாதி ஜின்னாவுடனா பெரியாரின் கூட்டணியை உங்களால் நியாயப்படுத்த முடியவில்லை, உங்கள் சப்புகட்டலை நான் ஏற்கவில்லை என்பதாகும்...!

ஏற்றத்தாள்வை எதிர்க்க ஒரு இன, மதவாதியுடன் கூட்டணிவைத்ததை பாராட்டும், நியாயப்படுத்தும் பக்குவம் உங்களுக்கு இருக்கும் தான்... :lol:

ஆகவே உங்களில் தேவைக்காக கொள்கைகளை வளைத்து கொள்வீர்கள்... அது சரி பெரியாரின் திராவிடர் கொள்தான் நிலையானது கிடையாதே...

உங்களின் நிலைப்பாட்டை தமிழீழ தேசியமும் எடுத்து இருந்தால் தமிழீழம் இப்போது மலர்ந்து இருக்கும்... என்ன இந்தியர்களின் வளிகாட்டல் கொஞ்சம் அதிகமாக இருந்து இருக்கும்...!

உங்களுக்கு கிறீஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் சகோதரர்கள், இந்துக்கள் எதிரி.... ஆனால் எனக்கு தமிழ் பேசும் எல்லாரும் சகோதரர்கள்...! பாக்கிஸ்தான் காறன் எனக்கு சகோதரன் கிடையாது...!

எனக்கு இந்துகள் எதிரி என்று எங்கே சொல்லி இருக்கிறேன் சுட்டிக் காட்ட முடியுமா?

உங்களின் கருத்தியல் பண்பாடு என்பது சொல்லாத ஒன்றைச் சொன்னதாகக் கூறி அதற்குப் பதில் சொல்வது.

ஜின்னாவின் ஆதரவுக்காக பெரியார் எந்தக் கொள்கையை விட்டுக் கொடுத்தார் என்று கூற முடியுமா?

எனக்கும் தமிழர்கள் எல்லோரும் சகோதரர்கள், அவர்கள் என்ன மத்த்தைத் தழுவி இருந்தாலும்.ஆனால் மதத்தின் பெயரால் இன்னொரு தமிழனை அடக்குபவனையும்,மதத்தின் பெயரால் ஒருவனின் பிறப்பை அடிப்படையக வைத்து உயர்வு தாழ்வு பேசுபவனும், மதத்தின் பெயரால் மற்றவர்களை ஏமாற்றிப் பிழைப்பவனும் மதத்தின் பெயரால் இன்னொரு மனிதனை கொலை செய்பவனும் எனக்கு எதிரி.கொலை செய்பவர்களை ஏமாற்றுபவர்களை ஒடுக்குபவர்களை நியாயப்படுத்த முயல்பவர்களும் எதிரி தான்.

கலக்கம் செய்பவரின் வழமையான கருத்தியல் இயலாமை தேசியத்தலைவரை இழுத்து வந்து கதைப்பதன் மூலம், தப்பிக்கப் பார்க்கின்றது

இவ்வாறான சில்லறைத் தனமான தனி நபர் தாக்குதல்களை விட்டு விட்டு உங்களால் உருப்படியாக எதாவது கருதுக்களைச் சொல்ல முடிந்தால் சொல்லுங்கள். :lol:

Link to comment
Share on other sites

எனக்கு இந்துகள் எதிரி என்று எங்கே சொல்லி இருக்கிறேன் சுட்டிக் காட்ட முடியுமா?

உங்களின் கருத்தியல் பண்பாடு என்பது சொல்லாத ஒன்றைச் சொன்னதாகக் கூறி அதற்குப் பதில் சொல்வது.

ஜின்னாவின் ஆதரவுக்காக பெரியார் எந்தக் கொள்கையை விட்டுக் கொடுத்தார் என்று கூற முடியுமா?

திராவிட கொள்கைகளில் முக்கியமானது இந்துத்துவ எதிர்ப்பு என்பது உள்ளங்கை நெல்லிக்கனி... அதோடு கிறிஸ்தவ , முஸ்லீம் சகோதரர்கள் என்கிறீர்கள்...! ஏற்றத்தாள்வுக்கு வகை செய்பவது இந்துத்துவம் என்கீறீர்கள்...! அதை எதிர்ப்பதாக சொல்கிறீர்கள்...! எதிர்ப்பவர் என்பது எதிரி தானே..! (அப்போ அதை இந்து நண்பன் எண்றா சொல்வது) பின்னர் நான் எங்கே சொன்னேன் என்கிறீர்கள்...

இண்று ஞாயிறு விடுமுறை நல்ல மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் போல... :lol:

சொல்லி விட்டு இல்லை எண்டு அடம்பிடிப்ப்பதுதான் உங்கள் கருத்தாடல் பண்போ...?? :lol: இது வழமையாக உங்களினால் நடப்பதினால் நான் பெரியாத எடுக்கவில்லை...

எனக்கும் தமிழர்கள் எல்லோரும் சகோதரர்கள், அவர்கள் என்ன மத்த்தைத் தழுவி இருந்தாலும்.ஆனால் மதத்தின் பெயரால் இன்னொரு தமிழனை அடக்குபவனையும்,மதத்தின் பெயரால் ஒருவனின் பிறப்பை அடிப்படையக வைத்து உயர்வு தாழ்வு பேசுபவனும், மதத்தின் பெயரால் மற்றவர்களை ஏமாற்றிப் பிழைப்பவனும் மதத்தின் பெயரால் இன்னொரு மனிதனை கொலை செய்பவனும் எனக்கு எதிரி.கொலை செய்பவர்களை ஏமாற்றுபவர்களை ஒடுக்குபவர்களை நியாயப்படுத்த முயல்பவர்களும் எதிரி தான்.

ஆகவே பெரியாரை ஏமாத்தி தனது காரியத்துக்கு துணை வைத்த ஜின்னாவையும் எதிர்க்க வேண்டும்... ஆனால் செய்ய வில்லை... தனிநாட்டுக்கு ஆதரவு தருவதாக சொன்ன ஜின்னா மேலும் தெற்கிலும் அரசுக்கு நெருக்கடிதர பெரியாரையும் பாவித்தார்...! தனது காரியம் கைகூடிபின்னர் கைகழுவி விட்டார்...!! அதாவது கருவேப்பிலை மாதிரி...

உயர்வு தாள்வு என்பது யாழ் களத்துக்கேயே இருக்கிறது... நீங்கள் ஒருவரை நாய் எண்று திட்ட முடியும். ஆனால் நான் திட்டினால் அது தூக்கப்படும் அல்லது எச்சரிக்கை வழங்கப்படும்... இதை சம நிலை எண்று அறிவுள்ள யாரும் சொல்ல மாட்டார்கள்... பழய உறுப்பினர் புதிய உறுப்பினர் எண்று எல்லாம் இங்கை இருக்கிறது... அதுவும் ஏற்றத்தாள்வுதான்... ஏன் அது உங்களின் வேலைத்தளத்தில் இல்லையா...??

உயர்வு தாள்வு இல்லாத இடமே இல்லை...

சாதிய உயர்வு தாள்வுக்கு காரணம் பொருளாதாரம் மட்டும்தான்... உலகிலை இரண்டே இரண்டு பிரச்சினை. ஒருவன் உள்ளவன் மற்றவன் இல்லாதவன்...! இருப்பவன் பலமானவன், இல்லாதவன் கையேந்துபவன்... இருப்பவன் ஏவல் செய்வான் இல்லாதவன் அடிமையாவான், இருப்பவன் செருக்கோடு இருப்பான் இல்லாதவன் துணிவில்லாது இருப்பான்... இதில் இருந்துதான் அரசியல் தோண்றியது...! இந்த பிரச்சினையை போக்க எதையும் அழிப்பதனால் தீராது...! மாற்றம் கொண்டு வரவேண்டும்.... அது சோசலீசமாக இருக்கலாம்...

குடும்ப தலைவர், குழுத்தலைவர் எண்று விலங்குகளுக்குள் இருக்கிறது... அவைதான் இருப்பவர்களில் உயர்ந்தவர்கள்...! இது பலத்தின் அடிப்படையில் தோண்றியது... !

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கிருபனின் மணிக்கூடு என்ன சொல்லுதோ தெரியாது?
    • உங்க‌ளுட‌ன் சேர்த்து 17 உற‌வுக‌ள் போட்டியில் க‌ல‌ந்து இருக்கின‌ம்🙏🥰................................  
    • நித‌ர்ச‌ன‌ உண்மை ப‌ற‌க்கும் ப‌டை இல்லை தூங்கிம் ப‌டை...................இந்த‌ தேர்த‌ல் ஜ‌ன‌நாய‌க‌ முறைப்ப‌டி ந‌ட‌ந்த‌ தேர்த‌ல் மாதிரி தெரிய‌ வில்லை சென்னையில் போட்டியிட்ட‌ நாம் த‌மிழ‌ர் வேட்பாள‌ர் ஈவிம் மிசிலில்  மைக் சின்ன‌த்தை ஒரு ஜ‌யா அம‌த்த‌ மைக் சின்ன‌ம் வேலை செய்ய‌ வில்லை இவ‌ர்க‌ள் அதை த‌ட்டி கேட்க்க‌ ப‌தில் இல்லை  கைது செய்து பிற‌க்கு விடுவித்த‌ன‌ர்.................எம்பி தேர்த‌லில் நிக்கும் வேட்பாள‌ர் அவ‌ரின் தொகுதியில் மைக் சின்ன‌த்துக்கு ஓட்டு விழ‌ வில்லை என்றால் அது தேர்த‌ல் ஆணைய‌த்தின் பிழை............................விவ‌சாயி சின்ன‌ விடைய‌த்தில் ம‌ற்றும் வைக்கோவுக்கு திருமாள‌வ‌னுக்கு ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ம்  அனைத்தும் உண்மை புல‌வ‌ர் அண்ணா....................அந்த‌ ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சி த‌மிழ் நாட்டில் ஏதாவ‌து ஒரு தொகுதியில் பிர‌ச்சார‌ம் செய்த‌தை பார்த்திங்க‌ளா ஒரு ஊட‌க‌த்திலும் காண‌ வில்லை..................எல்லாம் போலி நாட‌க‌ம்................................
    • 09.59 இற்குப் போடடியில் குதித்து விட்டேன்.வேலை முடிந்து வந்து அவசரமாகப் பதிந்த படியால் சில தவறுகளும் ஏற்பட்டிருக்கலாம்.
    • பொதுவாக கிராமப்புறங்களில் அதிக வாக்கு சதவுதமும் நகர்ப்புறங்களில் குறைந்த சதவீதமும் வாகக்குப்பதிவு இருக்கும். கிராம்புற அப்பாவிப் பொதுமக்கள் அரசியல்வாதிகள் சொல்லும் வாக்குறுதிகளை நம்பி வாக்குப் போடுவார்கள். அவர்களின் வாக்குச் சாவடிகள் அவர்களின்  வசிப்பிடங்களுக்கு அருகிலேயே இருக்கும். சென்னையில் இருப்பவர்கள் வாக்குச் செலுத்துவதை பெரிய அளவில் விரும்புவதில்லை. இந்த முறை வழமைக்கு மாறாக சென்னையில் வாக்கு சதவுpதம் அதிகரித்திருப்பது. மாற்றத்தை விரும்பி அவர்கள் கோபத்தில் வாக்களித்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இது ஆளும்வர்க்கங்களுக்கு எதிரானதாகவே பார்க்க வேண்டும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.