Jump to content

சாதி மத பேதமின்றி அனைத்து மக்களுக்காகப் போராடும் சங்கபரிவார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அவர் மேற்கோள் காட்டிய எவராவது திராவிடக்குஞ்சுகள் இல்லாதவர்களா? எல்லோரும் குட்டையில் ஊறிய மட்டைகள் தானே?

வள்ளலார், சித்தர்களை உதாரணம் காட்டுகின்றார். அவர்கள் மூடநம்பிக்கைகளை, பிற விரோதங்களை எதிர்த்தார்கள். சுவாமி விபுலானந்தரும், இராமகிருஸ்ணரும் அதைத் தான் செய்தார்கள். ஆறுமுகநாவலரும் அதைத் தான் செய்தார். பக்திக்குள் மூடநம்பிக்கை இல்லாதது ஒழிக்கவேண்டும் என்பது நல்லதொன்று. அதற்காகப் பக்தி வேண்டாம் என்று சொன்ன திராவிடக்குஞ்சுகளோடு ஒப்பிடுவது என்பது ஆகலும் ஏமாற்றுத்தனமாக இல்லை??

மூடநம்பிக்கையை நீக்கினால் பக்தியில் மிஞ்சுவது என்ன? பகுத்தறிவு பற்றி இப்போதாவது பேசுவோமென்கின்றார். தமதாமனது என்றாலும் தரமான முடிவு.

Link to comment
Share on other sites

  • Replies 130
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

என்ன தயாண்ணை

வாசகன் எழுதுறது 4 கருத்து. அதுவும் யாரையும் திட்டத் தான் எழுதுவார். அந்தக் கருத்துப் பயந்து ஓடினால் மரியாதையில்லை.

மருதங்கேணியார் பகுத்தறிவு என்றால் என்னவென்று தெரிஞ்சு கொண்டு கதைக்கின்றாரோ, அல்லது யாராவது மண்டை கழண்டதுகள் இது தான் பகுத்தறிவு எனச் சொல்வதைக் கேட்டு அதை நம்பிக் கதைக்கின்றாரோ தெரியாது.

ஆனால் இந்துமதத்தில் பகுத்தறிவு என்பது என்றைக்குமே இருக்கின்றது. அதனால் தான் அஞ்ஞானம் என்று, ஒரு மனிதன் பிறக்க முன்பு, இறந்த பின்பு என்ன ஆகும் என்பதைப் பற்றிப் பலர் தேடல் செய்திருக்கின்றார்கள். தீர்வு ஏதும் இதுவரைக்கும் கிடைக்காதபடியால் அது ஊழ்வினை, மறுபிறப்பு பற்றிய கருத்தோட்டமாகவும் இருக்கின்றது.

எனவே பகுத்தறிவு என்பது பற்றி தமிழனுக்குப் படிப்பிக்க கன்னடன் தேவையில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தயாண்ணை

வாசகன் எழுதுறது 4 கருத்து. அதுவும் யாரையும் திட்டத் தான் எழுதுவார். அந்தக் கருத்துப் பயந்து ஓடினால் மரியாதையில்லை.

மருதங்கேணியார் பகுத்தறிவு என்றால் என்னவென்று தெரிஞ்சு கொண்டு கதைக்கின்றாரோ, அல்லது யாராவது மண்டை கழண்டதுகள் இது தான் பகுத்தறிவு எனச் சொல்வதைக் கேட்டு அதை நம்பிக் கதைக்கின்றாரோ தெரியாது.

ஆனால் இந்துமதத்தில் பகுத்தறிவு என்பது என்றைக்குமே இருக்கின்றது. அதனால் தான் அஞ்ஞானம் என்று, ஒரு மனிதன் பிறக்க முன்பு, இறந்த பின்பு என்ன ஆகும் என்பதைப் பற்றிப் பலர் தேடல் செய்திருக்கின்றார்கள். தீர்வு ஏதும் இதுவரைக்கும் கிடைக்காதபடியால் அது ஊழ்வினை, மறுபிறப்பு பற்றிய கருத்தோட்டமாகவும் இருக்கின்றது.

எனவே பகுத்தறிவு என்பது பற்றி தமிழனுக்குப் படிப்பிக்க கன்னடன் தேவையில்லை

ஏதோ உலகத்தில் பக்தியை வாழ்நாள் முழுதும் கடைபிடித்து அப்படியே தரம்கெட்டு செத்தவரே உலகில் இல்லை என்று யாரோ சொல்லியது போல் எழுதுகின்றீர்கள்?

செத்தபின்பு.... சாகுமுன்மு...... பிறக்குமுன்பு என்று எத்தனையோ பேர் கதையளந்துதான் வாழ்கையை ஓட்டுகிறார்கள். யாராவது ஒரு அடிமுட்டாள் எதாவது ஒன்றை ஆதாரத்துடன் நிருபித்திருக்கிறார்களா?

வாழ்கையின் முடிவுநாட்கள் மெல்ல மெல்ல கிட்டவரத்தான் நாம் அனியாயமாக வாழ்கையை தொலைத்துவிட்டோமே என்று எண்ணி வெளியிலும் சொல்ல முடியாது உள்யேயும் வைத்திருக்க முடியாமல் மண்டைதடடிய நிலையை. முத்திநிலை என்று செல்லமாக பெரும் வைத்துவிட்டு செத்துவிடுவார்கள்.

பகுத்தறிவு என்றால் ஏதோ பெட்டகம் என்று தான் இங்கு சிலர் நினைத்துகொண்டு பினாத்துகிறார்கள். அந்த பெட்டகத்தை பெரியார் தனது பெயரில் உயில் எழுதி வைத்திருந்ததுபோல் யாரோ இவர்களுக்கு கதையளந்திருக்கிறார்கள். அதுதான் இத்தனை அசிங்கமாக ஒரு நாடே பெரியமனிதனாக பின்பற்பவரையற்றி தரம்தாழ்ந்து தனக்கு தானே சேற்றை பூசுகிறார்கள். தத்துவஞனம் என்பது பொதுவானது ஆனாலும் எல்லா தத்துவங்களும் எல்லோராலும் ஏற்றுகொள்ளபடுவதில்லை............ ஏற்றுகொள்ளவும் முடியாது. தத்துவாந்த சிந்தனைகளுடன் முரண்படுவது ஒன்றும் பிழையானது அல்ல. ஆனால் தத்துவஞானிகளுடன் முரண்படுவதென்பது.

இவர்கள் எவ்வளவு அறிவை கொண்டிருக்கிறார்கள் என்பதை பிறர் புரிந்துகொள்ள ஏதுவாக அமையும்.

அதை இந்த யாழ்களம் நன்றாக புரிந்துவிட்டது. ஏன் மீண்டும் மீண்டும் முயற்சி செய்கிறார்கள் என்பதுதான் புரியமுடியாமலிருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயவன் தயா போன்றவர்களுக்கு பெரியாரிடம் மாற்றுக்கருத்துக்கள் இருப்பதில் தவறில்லை அதற்காகா தவறான தகவல்களை தரவேண்டாம்.

தமிழ்த்தேசியத்தை அண்ணாத்துரை வைத்ததாகவும் பெரியார் அதை எதிர்த்ததாகவும் அப்பட்டமான பொய்களை அள்ளி வீசுகின்றனர். பெரியாரைப் போன்று அண்ணாவும் திராவிடம் பேசியவர்தான். 1938 ஆம் ஆண்டு பெரியார்தான் தமிழ் நாடு தமிழருக்கே என்று முதன் முதலாக கோரிக்கை வைத்தார். அண்ணா அப்போது பெரியாரின் கீழ்தான் இயங்கிக்கொண்டிருந்தார். 1956 ஆம் ஆண்டு பெரியார் திராவிடத்தைத் தூக்கிப் போட்டுவிட்டு தமிழ் நாட்டு விடுதலையை முன் வைக்கிறார். அண்ணா 1962 வரை திராவிடத்தைக் கைவிடவில்லை. இறுதியில் அண்ணாவும் திராவிடத்தை கைவிடுகிறார்.

இது தொடர்பாக நான் தோழர் சபேசன் நடத்தும் வெப்ஈழம் தளத்தில் "பெரியார், அண்ணா, தமிழ், திராவிடம்" என்ற கட்டுரையை எழுதியுள்ளேன். http://webeelam.com/PeriyarDravidam.htm போதிய விளக்கங்களை கொடுத்திருப்பதாக நம்புகிறேன். மேலதிக செய்திகளுக்கு பேராசிரியர் சுப.வீரபாண்டியன் எழுதிய "பெரியாரின் இடது சாரித் தமிழ்த் தேசியம் "என்ற நூலையும் விடுதலை ராஜேந்திரன் எழுதிய "பெரியாரைக் கொச்சைப் படுத்து குழப்பவாதிகள்" என்ற நூலையும் படித்துப் பாருங்கள் உண்மை தெரியும்.

அடுத்து பெரியார் ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுக்கவில்லை என்பது திட்டமிட்டு அவர் மீது பரப்பப் படும் அவதூறு. ஈழப் பிரச்சனை தமிழ் நாட்டில் பெரும் பூகம்பமாக வெடித்தது 1983 இற்கு பிறகுதான் அப்போது பெரியார் இல்லை. அப்போது அனைத்துக் கட்சிகளையும் கூட்டி மதுரையில் மிகப் பெரிய கண்டனக் கூட்டத்தை திராவிடர் கழகம்தான் முதன் முதலாக ஏற்பாடு செய்ததை நாம் மறந்து விட முடியாது. ஈழத்தமிழர்களுக்காக பெரும் உதவிகளைச் செய்த எம்.ஜீ.ஆர் அவர்களும் 1983 இற்கு முன் அது பற்றி தெரியாத ஒருவராகவே இருந்திருக்கிறார்.

ஆனால் பெரியார் 1968 இல் சிங்கள அரசைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். இதற்கான ஆதாரம் என்னிடம் இல்லை. (29.12.2005 இல் பெரியார் திடலில் நடைபெற்ற ஈழத்தமிழர் ஆதரவுக் கூட்டத்தில் இது தொடர்பான செய்திகளை வீரமணி அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்)

திரு சத்தியசீலன் அவர்களை பலர் அறிந்திருப்பீர்கள், ஈழத்தில் ஆயுதப் போராட்டத்திற்கு வித்திட்டது இவர் தோற்றுவித்த தமிழ் மாணவர் பேரவை என்ற அமைப்புத்தான். தற்போது இலண்டனில் வெண்புறா அமைப்பின் நிர்வாகப் பொறுப்பாளராக உள்ளார் அவரை வஜ்ரம் எனும் இதழுக்காக நான் நேர்காணல் செய்தேன் அதில் நான் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதிலை இங்கு தருகிறேன்

தமிழ் நாட்டில் நீங்கள் தந்தை பெரியாரை சந்தித்து பேசியிருக்கிறீர்கள். உங்களின் ஆயுதப் போராட்டத்திற்கு அவர் ஆதரவு தந்திருந்தாரா?

நான் தமிழ் நாட்டில் தங்கி பிரச்சாரத்தை மேற்கொண்ட போது. நானும் மகா உத்தமனும் ஞானம் என்பவரும் தமிழ் நாட்டுத் தலைவர்களைச் சந்தித்து அவர்களிடமிருந்து ஆதரவு பெறுவதற்காக பெரியர் ஈ.வே.ரா., ஜி.டி. நாயுடு, கி.ஆ.பெ. விசுவநாதம், மா.பொ.சி. இந்த நால்வரையும் சந்திப்பதற்காக புறப்பட்டோம். 1971 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நாங்கள் பெரியாரைச் சந்தித்தோம். அப்போது பெரியார் உடல் நலமில்லாமல் திருச்சியில் தங்கியிருந்தார். அவரைச் சந்தித்து எங்களின் போராட்டத்தை விளக்கினோம். அப்போது அவர் சிங்களவன் பெரிய பெரிய டாங்கிகள் பீரங்கிககாளல் உங்கள் எல்லாரையும் நசுக்கிப் போடுவானே என்று கவலைப் பட்டுக்கூற, நாங்கள் இல்லை ஐயா அதையும் எதிர்த்து நாங்கள் உறுதியாகப் போராடுவேம் என்றோம். அவர் உடனே நீங்கள் உங்கள் போராட்டத்தை விளக்கி எனக்கு எழுதித் தாருங்கள் நான் விடுதலையில் போட்டுவிடுகிறேன் என்றார் நான் அந்த இடத்தில் வைத்தே, தமிழர்களுக்கு ஒரு நாடு வேண்டும் அதை இலங்கையில் அமைக்க முடியும் அந்த நாட்டை அமைப்பதற்காக நாங்கள் சிங்கள அரசை எதிர்த்து ஆயுதம் தாங்கிப் போராடப் போகின்றோம் அதற்கு உங்கள் ஆதரவு தேவை என எழுதிக் கொடுத்தேன். அவரும் செய்வதைக் கவனமாகச் செய்யுங்கள் என புத்திமதி கூறினார். பெரியார் ஏங்களுக்கு ஆதரவு தந்தது நல்ல சந்தோஷம். சொன்னது போல் நான் எழுதிய அந்தக் கடிதத்தை அவர் தனது விடுதலையில் போட்டார். பிறகு நாங்கள் தொழில் மேதை ஜி.டி. நாயுடுவை கோவையில் சந்தித்தோம். எங்களின் போராட்டத்தை அவருக்கு விளக்கும் போது தனது விஞ்ஞான ஆய்வுகூடத்திற்கு எங்களைக் கூட்டிக் கொண்டு போய்க் காட்டினார். அப்போது எங்களுக்கு ஒரு வாக்கிடாக்கி தேவையாக இருந்தது நாங்கள் அதைக் கேட்டபோது அவரும் தர சம்மதித்தார். அதற்குமுன் நீங்கள் எல்லோரிடமும் ஆதரவைப் பெறவேண்டும் என்று கூறி எங்களை வாழ்த்தியனுப்பினார். கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் எங்களை நல்ல முறையில் வரவேற்றார். ம.பொ.சி. யைச் சந்திக்கும்போது அவர் எங்களை ஆதரிக்கவில்லை நீங்கள் சின்னப் பொடியன்கள் போய் படிக்கிற வேலையைப் பாருங்கள் என்றார். நாங்கள் ம.பொ.சி யைப் பற்றி கேள்விப் பட்டது வேறு. அவர் நடந்து கொண்டது வேறு விதமாக இருந்தது.

இது நடந்தது 1971 இல், அப்போது பெரியாருக்கு 92 வயது உயிர் ஊசலாடிக்கொண்டிருந்த தள்ளாத வயது. அந்த நேரத்தில் இதைத்தவிர அவர் வேறு என்ன செய்திருக்க முடியும். எந்த ஒரு மனிதரும் 100 விழுக்காடு சரியானவர்கள் அல்ல. தவறு செய்யாத மனிதர்கள் எங்கேயுமே கிடையாது. அந்த வைகையில் பெரியாருடைய போராட்டங்களில் சில சில தவறுகள் ஏற்பட்டிருக்கலாம். அதைச் சுட்டிக்காட்டுங்கள் நியாயமாக இருந்தால் ஏற்றுக் கொள்கிறோம் இல்லை என்றால் மறுப்பை தெரிவிக்கிறோம் அதை விடுத்து வேண்டு மென்று மனம் போன போக்கில் எழுதாதீர்கள்

காலம் எல்லாம் தமிழனின் சுயமரியாதைக்காக அல்லும் பகலும் உழைத்து விட்டு தன்னால் என் தமிழனுக்கு முழு விடுதலையையும் வாங்கிக் கொடுக்க முடியவில்லையே என்ற வேதனையையும் கூறிவிட்டு மறைந்து போன ஒரு மனிதரைப்பற்றி நாக்கில் நரம்பில்லாமல் பேசினால் தமிழ்த் தாயே மன்னிக்க மாட்டாள்!

மக்களின் நலனை முன்வைத்து பெரியார் பேசிய தமிழ்த்தேசியம் ஒர் உண்மையான தேசியம். கண்ணகி, கற்பு என பழம் பெருமை பேசுவது அல்ல. அந்த வகையில்தான் அவர் தமிழ்த் தேசியத்தை எதிர்த்தார்.

பெரியாரைப் பற்றி மூன்று சொற்களில் சொல்லி விடலாம்

அவர் நேசித்தது மனிதம்

அவர் வெறுத்தது ஆதிக்கம்

அவர் காண விரும்பியது சமத்துவம்

இதற்கு குறுக்கே வந்த அனைத்தையும்அவர் போட்டுடைத்தார்.

Link to comment
Share on other sites

யாழ்கள செயலரங்கம் எண்ட பகுதி எண்டது நீண்டகாலமாக இருக்கிறது... அங்கெல்லாம் உங்களின் செயல்பாடுகள் அதிகமாகி விட்டதால் எங்களுக்கு வேலை இல்லாமல் போட்டுது...!!

http://www.yarl.com/forum3/index.php?showforum=124

ஆதலால் நீங்கள் ஒருவரே எல்லாத்தையும் எடுத்து செய்வீர்கள் எண்டு நம்பி விடை பெறுகிறோம்....

பஞ்சு:- முட்டையிலை புடுங்கலாம் ஆனால் மயிரிலை முட்டை புடுங்கப்படாது...

என்ன தயாண்ணை வாசகன் எழுதுறது 4 கருத்து. அதுவும் யாரையும் திட்டத் தான் எழுதுவார்.

மோகன் களத்தின் முதன்மை நோக்கத்தை தெளிவாக சொல்லி இருக்குறார் தயா. உதவி செய்யும் அளவுக்கு நேரமோ அறிவோ இல்லாட்டிக்கு கூட உபத்திரம் செய்யாத அளவுக்கேனும் பண்பு இருக்கு.

என்ன தூயவன் நானும் வழமையா திட்டுறது எவரும் கண்டுகொள்ளுறதில்லை. எல்லாம் வழமைதான் :)

Link to comment
Share on other sites

தூயவன் தயா போன்றவர்களுக்கு பெரியாரிடம் மாற்றுக்கருத்துக்கள் இருப்பதில் தவறில்லை அதற்காகா தவறான தகவல்களை தரவேண்டாம்.

தமிழ்த்தேசியத்தை அண்ணாத்துரை வைத்ததாகவும் பெரியார் அதை எதிர்த்ததாகவும் அப்பட்டமான பொய்களை அள்ளி வீசுகின்றனர்.

1938 ல் இந்தியா சுதந்திரம் அடைந்து இருக்க வில்லை.. அப்போ தமிழ்்நாடு சென்னை பட்டணம் எண்று அழைக்கப்பட்டதாக தான் நான் கேள்விப்பட்டேன்... அது பொய்யா...?? அப்போ தமிழ்்நாடு எண்று பெயர் வைத்தவர் பெரியாரா...??

சரி கீழே இருக்கும் சொற் பொழிவை பெரியார் ஆற்றினாரா இல்லையா..??

  • தேசிய உணர்ச்சி என்பதானது இன்று உலகப் பொதுமக்கள் அதாவது உலகில் எங்கும் பெரும்பான்மையான மக்கள் பாமரராயும், தொழில் இன்றியும், தொழில் செய்தாலும் ஜீவனத்திற்க்கும் வாழ்விற்க்கும் போதிய வசதிகள் இன்றியும் கஷ்டப்படும் மக்கள் ஒன்று சேர்ந்து தங்களுடைய நிலைமைக்குப் பரிகாரம் தேடுவதைத் தடைப்படுத்தவும் ஆங்காங்குள்ள செல்வந்தர்களாலும் அதிகாரப்பிரியர்களாலும் சோம்பேறி வாழக்கைச் சுபாவிகளாலும் கற்பிக்கப்பட்ட சூழ்ச்சியாகும். தேசியம் என்பதும் மனிதனுக்கு ஒரு மயக்கமும் வெறியும் உண்டாக்கும் வார்த்தையாக ஆகிவிட்டது

அப்படி பேசியவர் பெரியார் இல்லையா..??? அப்போ இதை சொன்னவர் யார்...?? தேசியம் என்பது தான் உங்கள் பார்வையில் என்ன...???

Link to comment
Share on other sites

1938 ல் இந்தியா சுதந்திரம் அடைந்து இருக்க வில்லை.. அப்போ தமிழ்்நாடு சென்னை பட்டணம் எண்று அழைக்கப்பட்டதாக தான் நான் கேள்விப்பட்டேன்... அது பொய்யா...?? அப்போ தமிழ்்நாடு எண்று பெயர் வைத்தவர் பெரியாரா...??

சரி கீழே இருக்கும் சொற் பொழிவை பெரியார் ஆற்றினாரா இல்லையா..??

  • தேசிய உணர்ச்சி என்பதானது இன்று உலகப் பொதுமக்கள் அதாவது உலகில் எங்கும் பெரும்பான்மையான மக்கள் பாமரராயும், தொழில் இன்றியும், தொழில் செய்தாலும் ஜீவனத்திற்க்கும் வாழ்விற்க்கும் போதிய வசதிகள் இன்றியும் கஷ்டப்படும் மக்கள் ஒன்று சேர்ந்து தங்களுடைய நிலைமைக்குப் பரிகாரம் தேடுவதைத் தடைப்படுத்தவும் ஆங்காங்குள்ள செல்வந்தர்களாலும் அதிகாரப்பிரியர்களாலும் சோம்பேறி வாழக்கைச் சுபாவிகளாலும் கற்பிக்கப்பட்ட சூழ்ச்சியாகும். தேசியம் என்பதும் மனிதனுக்கு ஒரு மயக்கமும் வெறியும் உண்டாக்கும் வார்த்தையாக ஆகிவிட்டது

அப்படி பேசியவர் பெரியார் இல்லையா..??? அப்போ இதை சொன்னவர் யார்...?? தேசியம் என்பது தான் உங்கள் பார்வையில் என்ன...???

தேசியம் என்றால் நீங்கள் என்ன நினைகிறீர்கள்?

சிறிலங்கா அரசு பேசுவதும் தேசியம் , இந்திய ஆளும் வர்க்கம் பேசுவதும் தேசியம் என்னும் போது, தேசியம் என்றால் எதோ புனிதமானது என்று ஒரு கற்பனை உங்களிடம் இருப்பதாகத் தெரிகிறது.

தேசியம் என்பது ஒரு பொதுமையான உணர்வு அந்தப் பொதுமையான உணர்வை இன்னொரு இனக் குழுமத்தை அடக்குவதற்காகவும் பாவிக்கலாம்.அதனைத் தான் பெரியார் எதிர்த்தார்.

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் என்பது சிங்களப் பெருந் தேசிய அடக்கு முறைக்கு எதிராகப் பிறந்த ஒன்று.

இங்கே தமிழ்த் தேசியம் என்பது அடக்குமுறைக்கு எதிராக எதிர் நிலையாக இயங்குவது.பெரியார் தமிழ் நாட்டு விடுதலையை முன் நிறுத்திப் பேசியது, வட நாட்டாரால் பார்ப்பனரால் தமிழகம் இந்தியத் தேசியம் என்னும் கருத்தின் அடிப்படையில் அடக்கப்பட்டதால்.அதனால் தான் அவர் இந்தியத் தேசியம் என்பது தமிழர்களை அடக்குகிறது அதற்கு எதிர்னிலையாக நாம் இந்தியத் தேசியத்தில் இருந்து வெளியேறிப் போரிட வேண்டும் என்று ஆரம்பத்தில் திராவிடத் தேசியத்தையும் பின்னர் தமிழ்த் தேசியத்தையும் முன் நிறுத்துகிறார்.

தமிழத் தேசியம் என்பதும் ,தமிழர்கள் மத்தியில் இருக்கும் வேறு பாடுகளை மறுதலித்து ஒற்றை நோக்கில் ஒரு சமயத்தினதோ சாதியினதோ அடையாளத்தை மறையவர்கள் மீது திணிக்கும் போது அது அதன் முற்போக்கான தன்மையை இழந்து விடுகிறது.அவ்வாறு சாதிய சமய அடையாளங்களைத் துறந்த ஒரு தமிழத் தேசியமே தமிழர்களை ஒன்று படுத்த வல்லது.

ஆனால் பலர் தேசியம் என்றால் என்ன என்பதை விளங்கிக் கொள்ளாத நிலையிலையே , பெரியாரின் கூற்றுக் களை விளங்கி கொள்ளாதவர்களாக இருக்கின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேசியம் என்பதுக்கு ஆளாளுக்கு விளக்கம் அளிக்க வெளிக்கிட்டு.. தங்கட தங்கட சுயநிலைப்பாடுகளை அதுக்க கலந்தடிச்சு இங்க வழங்கிட்டு இருக்கினம்.

தமிழ் தேசியம் என்பதன் வளர்ச்சியில் மதங்கள் வெளிப்படையாக எந்த ஆளுமையையும் செய்யவில்லை என்பது வெளிப்படை உண்மை. இனத்துவ அடிப்படையில் பொது கலாசார பண்பாட்டு விழுமிய.. வரலாற்றியல் அடிப்படையில்.. மொழி.. நில ஒருமைப்பாட்டோடு எழுந்ததே.. தமிழ் தேசியம். அது மதம் அல்லது சாதியம் சார்ந்து உருப்பெற்ற ஒன்றல்ல. அவற்றால் அது செல்வாக்குப் பெறுவதற்கு. ஆனால் தமிழ் தேசியம் என்பது தேச விடுதலை மற்றும் சமூக விடுதலையை வாங்க நிற்கும் ஒரு இனத்தின் குரலின் அடிப்படையாக இருப்பதால்.. சாதியப் பாகுபாடு என்பது இனத்துவ அடையாளங்களுக்கு அப்பால்.. அதன் இருப்பு சமூக ஒடுக்குமுறைக்குப் பயன்படுவதால்.. இன ஒருமைப்பாட்டுக்கு தேவையற்ற ஒன்று என்ற என்ற அடிப்படையில் அது தவிர்க்கப்படச் செய்ய கோரப்படுகிறது. மதம் என்பது அப்படியான ஒன்றல்ல. அது இனத்துவக் காரணிகளோடு பின்னிப் பிணைந்த ஒன்று. அதனாலேதான் உலகில் எல்லா தேசிய இனத்துக்கும் மத அடையாளம் என்பது சுயாதீன முடிவடைப்படையில் எடுக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறது..! ஒரு இனத்தின் தேசியத்தை மதம் ஒரு போதும் சிதைக்காது..! மொழி நிலையை விட..மதத் தேசியம் என்பது கூட மக்களை ஒருநிலைக்குள் வைக்க உதவக் கூடியது. அது மதம் சார் கலாசார பண்பாட்டியல் அடிப்படையில் எழும்..!

புலம்பெயர் தேசங்களில் வாழும் வேற்று மொழி பேசும்.. தமிழர்கள் இந்துக்களாக வாழின் அவர்களை அந்த கலாசார பண்பாட்டுக் கோலம்.. தமிழ் தேசியத்தோடு கலக்கச் செய்யும். இன்றேல்.. அவர்கள்.. தங்கள் தேசிய அடையாளத்தை இழந்து.. பிற தேசியத்துள் உள்வாங்கப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்..!

இன்றும் மொரிசீயஸ்.. தென்னாபிரிக்காவில் தமிழ் மொழி தெரியாத தமிழ் தேசிய உணர்வாளர்கள் வாழ்கிறார்கள் என்றால் அவர்களை அதன் வழியில் வைத்திருப்பதில்.. மதத்துக்கு குறிப்பிடத்தக்க பங்குண்டு..!

Nationalism is a term referring to doctrine[1] or political movement[2] that holds that a nation, usually defined in terms of ethnicity or culture, has the right to constitute an independent or autonomous political community based on a shared history and common destiny.[3] Most nationalists believe the borders of the state should be congruent with the borders of the nation.[4] Extreme forms of nationalism, such as those propagated by fascist movements in the twentieth century, hold that nationality is the most important aspect of one's identity, while some of them have attempted to define the nation in terms of race or genetics.

Nationalism has had an enormous influence on Modern history, in which the nation-state has become the dominant form of societal organization. Historians use the term nationalism to refer to this historical transition and to the emergence and predominance of nationalist ideology. Nationalism is closely associated with patriotism.

http://en.wikipedia.org/wiki/Nationalism#R...ous_nationalism

Link to comment
Share on other sites

தேசியம் என்றால் நீங்கள் என்ன நினைகிறீர்கள்?

சிறிலங்கா அரசு பேசுவதும் தேசியம் , இந்திய ஆளும் வர்க்கம் பேசுவதும் தேசியம் என்னும் போது, தேசியம் என்றால் எதோ புனிதமானது என்று ஒரு கற்பனை உங்களிடம் இருப்பதாகத் தெரிகிறது.

தேசியம் என்பது ஒரு பொதுமையான உணர்வு அந்தப் பொதுமையான உணர்வை இன்னொரு இனக் குழுமத்தை அடக்குவதற்காகவும் பாவிக்கலாம்.அதனைத் தான் பெரியார் எதிர்த்தார்.

அப்பிடி ஒரு பொதுமையும் இல்லை புதுமையும் இல்லை... புதுசா எல்லாம் நல்லாத்தான் கண்டு பிடிக்கிறீயள்...

நான் தமிழன். அதுபோல நீங்களும் தமிழர் ... நீங்கள் உங்கள் வீட்டை நேசிப்பீர்கள் (பின்னர் உங்களின் ஊரை நேசிப்பீர்கள்.பின்னர் மாவட்டம், )அதன் பின்னர் உங்களால் தாயகமாக நினைக்கபடும் நாடு அல்லது அதுக்கான ஒரு பிரதேசம்...! நிலம் மட்டும் இருந்தால் போதாது.. அங்கே உங்களால் நேசிக்கப்படும் உறவுகள் வாழவேண்டும்... அங்கே உங்களால் நேசிக்கப்படும் கலாச்சாரம் வேண்டும்... அங்கே உங்களால் நேசிக்கப்படும் ஒரே மொழி வேண்டும்... இது எல்லாம் உங்களவர்களுக்கு 300 ஆண்டுகளுக்கு மேல் அவை சொந்தமாக இருந்தால் "ஐநா" உங்களை தேசிய இனமாக அங்கீகரிக்கும்... அதுதான் தேசியம்....!! உங்களுடையதும் என்னுடையதும் தமிழ் தேசியம்....!

அப்படியான தேசிய உணர்வெளுச்சி மக்களை ஒண்று திரட்ட பயன் படும்...!! தமிழன் ஒண்று திரள்வதால் பெரியாருக்கு என்ன கவலை....??? தேசியம் என்பது என்ன சாதி கட்ச்சி எண்றா நினைக்கிறீகள் ....??

சும்மா கதை அளைக்கிறதை வேலையாக வைத்து இருக்காதீர்கள்....

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் என்பது சிங்களப் பெருந் தேசிய அடக்கு முறைக்கு எதிராகப் பிறந்த ஒன்று.

இங்கே தமிழ்த் தேசியம் என்பது அடக்குமுறைக்கு எதிராக எதிர் நிலையாக இயங்குவது.பெரியார் தமிழ் நாட்டு விடுதலையை முன் நிறுத்திப் பேசியது, வட நாட்டாரால் பார்ப்பனரால் தமிழகம் இந்தியத் தேசியம் என்னும் கருத்தின் அடிப்படையில் அடக்கப்பட்டதால்.அதனால் தான் அவர் இந்தியத் தேசியம் என்பது தமிழர்களை அடக்குகிறது அதற்கு எதிர்னிலையாக நாம் இந்தியத் தேசியத்தில் இருந்து வெளியேறிப் போரிட வேண்டும் என்று ஆரம்பத்தில் திராவிடத் தேசியத்தையும் பின்னர் தமிழ்த் தேசியத்தையும் முன் நிறுத்துகிறார்.

1937ம் வருடம் தமிழர் மானிலத்தை வேண்டி பெரியார் தமிழ்நாடு தமிழருக்கே எண்று பிரகடனப்படுத்தினாராம்... அதே பெரியார் 1939 ம் ஆண்டு தனியன நாடு(பாக்கிஸ்தான்) கேட்டு வந்த ஜின்னாவை சந்திக்கிறார்... சந்தித்த பின்னர் வந்து திராவிட நாடு திராவிடர்கே எண்று முழங்குகிறார்... இதில் இருந்து தெரியவில்லையா பெரியாரை இயக்கியது எப்போதும் மற்றவர்கள் எண்று...!!

1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்த போது பாக்கிஸ்தான் பிரிந்தது ஆனால் திராவிட நாடு பிரியவில்லை... அதுக்கான அரசியல் பலம் இல்லாமல் இருந்தவர் பெரியார்... அப்போது இந்தியாவின் சுதந்திரநாளை கறுப்பு நாளாக பெரியார் அறிவித்தார்... அதை பெரியாரின் வலது கரமான அண்ணாத்துரை அவர்கள் எதிர்த்தார்....! இவ்வளவு மாறாட்டம் கொண்துதான் பெரியாரின் வரலாறு..!!! அதை நீங்கள் திரிக்காது இருந்தால் நல்லது...!

தமிழத் தேசியம் என்பதும் ,தமிழர்கள் மத்தியில் இருக்கும் வேறு பாடுகளை மறுதலித்து ஒற்றை நோக்கில் ஒரு சமயத்தினதோ சாதியினதோ அடையாளத்தை மறையவர்கள் மீது திணிக்கும் போது அது அதன் முற்போக்கான தன்மையை இழந்து விடுகிறது.அவ்வாறு சாதிய சமய அடையாளங்களைத் துறந்த ஒரு தமிழத் தேசியமே தமிழர்களை ஒன்று படுத்த வல்லது.

தேசிய உனர்ச்சி என்பது எல்லாரையும் சாதிகள், மதம்கள் , கொஞ்சம் மாறுபட்ட ( அதிகமாக அல்ல) கலாச்சாரம் கொண்டவர்க்களையும் இணைத்து ஒண்று படுத்தி போராடிக்காட்டும் தமிழ்ஈழம், நீங்கள் சொல்வது போன்ற சிக்கல்களுக்குள் இல்லை... இண்று நேபாளத்தில் தேர்தல் மூலம் அதிகாரத்துக்கு வர இருக்கும் "மாவோயிஸ்ற்" க்களும் அதை செய்து காட்டி இருக்கிறார்கள்...!!

ஆனால் பலர் தேசியம் என்றால் என்ன என்பதை விளங்கிக் கொள்ளாத நிலையிலையே , பெரியாரின் கூற்றுக் களை விளங்கி கொள்ளாதவர்களாக இருக்கின்றனர்.

இதை உங்களுக்கு திருப்பி சொல்ல வேண்டிய நிலையில் இருக்கிறேன்...!!!! தேசியம் என்பதின் அடிப்படை அறிவுக்கு அருகில் கூட தாங்கள் இல்லை என்பது பரிதாபம்....!

Link to comment
Share on other sites

//இது எல்லாம் உங்களவர்களுக்கு 300 ஆண்டுகளுக்கு மேல் அவை சொந்தமாக இருந்தால் "ஐநா" உங்களை தேசிய இனமாக அங்கீகரிக்கும்... அதுதான் தேசியம்....!! உங்களுடையதும் என்னுடையதும் தமிழ் தேசியம்....! //

ம் அப்படியானால் ஐ நா ஏன் தமீழத்தை அங்கீகரிக்கவில்லை?

//அப்படியான தேசிய உணர்வெளுச்சி மக்களை ஒண்று திரட்ட பயன் படும்...!! தமிழன் ஒண்று திரள்வதால் பெரியாருக்கு என்ன கவலை....??? தேசியம் என்பது என்ன சாதி கட்ச்சி எண்றா நினைக்கிறீகள் ....?? //

இதையே மர்றிக் கேட்டால் சிங்களவன் ஸிறிலங்கா தேசத்தில் சிறிலங்கன் என்னும் தேசிய அடையாளத்தில் தானே தமிழர்களை ஒன்று படச் சொல்கிறான்? கேலௌறுமையவும் மகிந்த சிந்தனையும் இந்தத் தேசிய அடையாளத்தைத் தானே கோரி நிற்கின்றன? தேசியம் என்றால் தமிழ்த் தேசியம் மட்டும் தானா இருக்கிறது?

//இதில் இருந்து தெரியவில்லையா பெரியாரை இயக்கியது எப்போதும் மற்றவர்கள் எண்று...!! //

மற்றவர்கள் தான் இயக்குகிறார்கள், எங்களைச் சிங்கள தேசம் இயக்குவதைப்போல்.

//மொழி நிலையை விட..மதத் தேசியம் என்பது கூட மக்களை ஒருநிலைக்குள் வைக்க உதவக் கூடியது. அது மதம் சார் கலாசார பண்பாட்டியல் அடிப்படையில் எழும்..!//

அந்த வகையில் தான் சிங்களத் தேசியம் என்பது பவுத்த மத பேரினவாதா அடக்கு முறையில் தமிழ் மக்களை அடக்க் முற்படுகிறது.அதே நிலையைத் தமிழ்த் தேசியம் இந்து சமய அடிப்படையில் எடுக்குமாயின் அதுவும் இசுலாமிய மற்றுக் கிரித்துவ மதத்தைப் பின் பற்றும் தமிழர்களை அடக்க முற்படும்.இதுவே தமிழர் என்னும் அடிப்படையில் அனைத்துத் தமிழரும் ஒன்று படுவதை மறுதலிக்கும்.அதே நிலை தான் சாதியதிலும் காணப்படுகிறது.சாதியதைத் துறந்த தமிழத் தேசிய அடையாளம் இல்லாது போகின் தலிதுக்கள் வெள்ளாளர் என்று சாதி அடிப்படையிலும் தமிழ்த் தேசியம் என்பது தகர்ந்து போகும்.

//Extreme forms of nationalism, such as those propagated by fascist movements in the twentieth century, hold that nationality is the most important aspect of one's identity, while some of them have attempted to define the nation in terms of race or genetics.///

மற்றவர்களை அடக்க முற்படும் தேசியம் என்பது பாசிசமாக வளரும் என்பதையே வரலாறு காட்டி இருக்கிறது.

இங்கே தேசியம் என்பது எவ்வகையானது அதன் குணாம்சம் என்ன அது அடக்குகிறதா இல்லை அடக்கு முறையில் இருந்து விடுபட உதவுகிறதா என்பதைலையே அதன் முற் போக்குத் தன்மை இருக்கிறது.

தயா,

எல்லாம் தெரிந்த நீங்கள் தேசியம் என்றால் என்ன என்று வரயறை செய்வீர்களா?

அதனைத் தானே நான் ஆரம்பதிலையே கேட்டிருந்தேன்?

Link to comment
Share on other sites

யாழ்க் களத்தில் இளைஞன் முன்னர் இணைத்த எஸ் போவின் கருதுக்கள் சில,

வணக்கம்...

இங்கு தேசியம் என்றால் என்ன என்கிற கேள்வியும் அது சார்ந்து தேசியத்துக் ஆதரவாய் செயற்படுதல் என்றால் என்ன என்கிற கேள்வியும் எழுந்தது. எனவே முழுமையாக அதற்கு விடையளிக்க முடியாவிட்டாலும் பின்வரும் கட்டுரை உதவியாக அமையும் என்று நம்புகிறேன். வாசித்துப் பயன் பெறுக:

எஸ்.பொவின் தமிழ்த்தேசியம்

Badri Seshadri,

Chennai, Tamil Nadu, May 2004

ஈழத்தமிழ் எழுத்தாளர் எஸ்.பொ "தமிழர் தேசியம்: வரலாற்றுத் தேடல்" என்ற தலைப்பில் படித்துறை என்னும் சிற்றிதழின் (சித்திரை 2004) முதல் இதழில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். கட்டுரையின் முக்கியப் பகுதி இலங்கை என்னும் இன்றைய நாட்டின் நிலப்பரப்பில் தமிழர் தேசியக் கோட்பாட்டின் வரலாறு மற்றும் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தமிழர் தேசியம் எவ்வாறு தடம்புரண்டுள்ளது ஆகியவற்றைப் பற்றி விவரிக்கிறது.

என் பதிவுகளைப் பொறுத்தமட்டில் நான் வரிசையை சிறிது மாற்றியமைத்துள்ளேன். முதலில் எஸ்.பொ தேசியத்தையும், (ஈழத்)தமிழ்த் தேசியத்தையும் எவ்வாறு வரையறுக்கிறார் என்று அவரது வார்த்தைகளிலேயே காண்போம்.

தமிழ்த்தேசியம் என்றால் என்ன? 'தமிழன் என்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா' என்று தொண்டை வரளக் கோஷிப்பது அல்ல தேசியம்.

அலங்கார மேடைப் பேச்சுகளினாலே, தமிழ்த் தேசியத்தை வனைந்தெடுக்க முடியாது. அடிப்படையில், அது நிபந்தனையற்ற தமிழர் சுயாதீனத்தை வலியுறுத்துவது. தமிழ்மொழி மூலம் தமிழருடைய வாழ்வையும், வளத்தையும் அரண் செய்வது; அணி செய்வது. கலை-இலக்கிய வாழ்க்கையிலே தமிழ்ப்படைப்புகள் மூலம் சுகம் பெறுவது. தமிழின் வளத்தையும் ஞானத்தையும் புதிய உச்சங்களுக்குக் கொண்டு செல்ல உதவும் அந்த மகத்தான உந்துதலுக்கும் உணர்ச்சிக்கும் பெயர்தான் தமிழ்த்தேசியம்.

அது தமிழர் சமூகத்தை ஊழல்களிலிருந்து மீட்கும் மந்திர சக்தி பெற்றது. அது தமிழர் சமூகத்திற்கு உயிர்த்துவம் அளித்து, புதிய பொற்பங்கள் சாதிக்கப் புதிய திசையும் திறனும் அருளுவது. பிறரைக் காலில் விழுந்து வணங்காத வீரத்தை அளிப்பது. தமிழ் விரோதச் செயல்களை வேருடன் அறுக்கும் மறத்தை அருள்வது. அதுவே வாழ்வின் அனைத்து அறங்களின் ஊற்றாய் நிற்பது.

இந்தத் தமிழ்த் தேசிய உணர்வு ஈழத்தமிழர் நிகழ்த்தும் விடுதலைப் போருடன் இணைக்கப் பட்டதினால், பூரண அர்த்தச் செறிவும் பெறலாயிற்று. ஓர் இனம் தன் அடையாளத்தினை எவ்வாறு முதன்மைப்படுத்த விரும்புகிறதோ அதுதான் அந்த இனத்தின் தேசியம்.

ஈழத் தமிழர்கள் இன்று தங்களை தமிழ்மொழி பேசும் ஓர் இனம் என்றே அடையாளப்படுகிறார்கள். அந்தத் தமிழ் மொழியைப் பேசும் மக்கள் வாழும் பிரதேசத்திற்கு இறைமை உள்ள ஓர் அரசை நிறுவப் போராடுகிறார்கள். போரின் பல்வேறு பட்ட இழப்புகளினாலும் இத்தேசியம் தனித்துவமான மூர்க்கம் பெற்றுள்ளது.

எஸ்.பொ இலங்கையில் தமிழ்த் தேசியத்தின் வரலாறாக கீழ்க்கண்டவற்றைக் குறிப்பிடுகிறார்:

* 1505 ஆண்டு போர்த்துக்கீயர் வருகைக்கு முன்னர் வரை நல்லூரைத் தலைமையாகக் கொண்டு யாழ்ப்பாணத் தமிழரசு ஆட்சி செலுத்தி வந்தது.

* 17ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத் தமிழரசின் கடைசி மன்னன் சங்கிலியன் வீழ்ந்தான்.

* போர்த்துகீயர்களைத் தொடர்ந்து ஒல்லாந்தரும் (Hollander - Dutch), ஆங்கிலேயரும் இலங்கைக்கு வந்து கடலோரப் பகுதிகளில் ஆட்சி செலுத்தி வந்தனர். அப்பொழுதும் கண்டி பகுதிகளில் தமிழ் மன்னர்களின் தலைமையில் தமிழாட்சி இருந்து வந்தது.

* 1815இல்தான் இலங்கை முழுவதும் ஆங்கிலேயர் வசம் வந்தது. அப்பொழுதும் கூட தமிழ்ப்பகுதிகளும், சிங்களப் பகுதிகளும் தனித்தனி அலகுகளாகப் பிரிந்து இருந்ததால் தமிழ் மொழி, கலை மரபுகள் தனித்துவத்தோடே இருந்து வந்தன. அதனால் தமிழ்த் தேசியமும் தொடர்ந்து இருந்து வந்தது.

* 1832இல்தான் இலங்கை முழுவதும் ஒற்றை ஆட்சி முறையின் கீழ்க் கொண்டுவரப்பட்டது. இந்தியா பெரிதும் சொல்லிக்கொண்டிருக்கும் 'The sovereignty and territorial integrity' என்னும் கருத்து ஆங்கிலேயர்களாலே சுதேசிகளான சிங்களர் மற்றும் தமிழர்கள் மீது 1832இல்தான் திணிக்கப்பட்டது.

* நிர்வாக வசதிக்காக இலங்கை அப்பொழுது வடக்கு, மேற்கு, கிழக்கு, தெற்கு, மையம் என்று ஐந்து மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது. இதனால் தமிழர்களின் பாரம்பரிய நிலப்பரப்பு தொலைந்து போனது. தமிழர், சிங்களர் இருவருமே தமது தேசியத்தினைத் தொலைக்க நேர்ந்தது.

* தமது தற்கால வரலாற்றை எழுதும் சிங்களவர் அநகாரிக தர்மபாலாவை (1864-1933) மையப்படுத்தி மேன்மைப்படுத்துவர். இலங்கையில் இன்று ஏற்பட்டுள்ள அநர்த்தங்கள் அனைத்துக்குப் அதிபிதா இந்த தர்மபாலாவே. [எஸ்.பொவின் சொற்களை அப்படியே தருகிறேன் இங்கு]

* சிங்கள இனவாதக் கோட்பாட்டினை முன்வைத்து தர்மபாலா ஏற்றிவைத்த இனவாதத் தீ 1915இல் கண்டியிலும், கம்பளையிலும் துவங்கியது. முஸ்லிம் மக்களினி சங்காரத்துடன் துவங்கி இன்றுவரை புற்றுநோய் போன்று இலங்கையின் ஆரோக்கியமான அரசியலை அரித்து நிரந்தர நோயாளி ஆக்கிக் கொண்டே இருக்கின்றது.

* கைலாசபதி போன்ற சிலர் தர்மபாலாவுக்கு இணையாக ஆறுமுக நாவலர் தமிழர் தேசியத்தை முன்மொழிந்தார் என்கின்றனர். அது உண்மையன்று. ஆறுமுக நாவலர் தமிழ்த் தேசியம் பற்றிய பிரக்ஞை இன்றே வாழ்ந்து மறைந்தார். சைவமும் தமிழும் என்று பேசிய அவரது செய்கை கிறித்துவ மதப்பிரசாரத்துக்குமேதிராக இருந்ததுவே தவிர தமிழர் தேசியத்துக்கு ஆதரவாக இருந்ததில்லை. ஆங்கிலேயருடைய ஆட்சியை ஏற்றுக்கொண்டதோடு மட்டுமல்லாமல் அதன் நீட்சியையும் விரும்பினார். ஆங்கிலேயர் அதிகாரத்தில் கார்காத்த சைவ வேளாளரே ஆட்சி அதிகாரம் உடையோராய் இருக்க வேண்டும் என்று மனதார விரும்பினார்.

* தமிழ்த் தேசியம் சிங்கள் இன ஆதிக்கத்தின் எதிர்வினையாகவே ஈழத்தில் உருவானது. வரிசையாக நிகழ்ந்த இனப்படுகொலைகள், 1983 இலே முழு அளவில் தமிழர்கள் மீது அவிழ்த்துவிடப்பட்டபோதுதான் புத்துயிர் பெற்று வெளியானது தமிழ்த் தேசியம்.

நன்றி: தமிழ்த்தேசியம்.அமை

தொடுப்பு: http://www.tamilnation.org/diaspora/articles/espo.htm

தமிழ்த் தொன்மை மாயைகளை உடைத்த முதல் சிந்தனையாளர்

இன்குலாப்

தமிழ்ச் சிந்தனைகள், வரலாற்று அடிப்படையில் இன்னும் முழுமையாகத் தொகுக்கப்படவில்லை. பிற துறைகளில் காணப்படும் வரலாற்று வறட்சிக்குத் தமிழ்ச் சிந்தனை மரபும் தப்பியதாகத் தெரியவில்லை. ஆளும் வர்க்கங்களின் கருத்துகளே தமிழ்ச் சிந்தனையின் ஆதியும் அந்தமாய் காட்டப்படும் போக்கு, இன்றும் அதிகாரத்தில் இருக்கிறது. இந்தப் பழமைப் பிடிப்பு, காலமாற்றங்களை மறுதலிக்கும் ஒரு நோய் மனோபாவத்தை உண்டாக்கி வருகிறது.

சாதியொழிந்த விடுதலை பெற்ற மானுடம் என்ற கோட்டில் அம்பேத்கரும் பெரியாரும் கைகோர்த்தே செல்லுவதை நாம் பார்க்க முடியும். இப்படி மானுட விடுதலையை முன்னிறுத்திய இந்தச் சிந்தனையாளர்கள் மீது விமர்சனம் என்ற பெயரில், அவதூறுகளும் கண்டனங்களும் எழுவது புதிதல்ல. இத்தகைய அவதூறுகளுக்கு பதிலுரையாக பெரியாரியத்தின் பகுத்தறிவு, தன்மானம், பெண் விடுதலை, சமத்துவம், தமிழர் விடுதலை முதலிய பன்முகப் பார்வைகளின் தொகுப்பு நோக்காக "பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம்' என்ற நூலை சுப. வீரபாண்டியன் எழுதியுள்ளார்.

"இந்திய விடுதலையும் பகத்சிங்கும்' நூலுக்குப் பிறகு சுபவீயின் ஆய்வு முயற்சியுடன் கூடிய நூலாக இந்நூல் அமைந்திருக்கிறது. அய்ந்து இயல்களாக இயங்கும் இந்நூலில் 2, 3, 4 இயல்களில் பெரியாரியத்தின் தேசியப் பார்வை, பல்வேறு தரவுகளுடனும் தர்க்கங்களுடனும் விளக்கப்படுகிறது. "தேசிய இனச் சிக்கலும் தமிழ்த் தேசியம்' என்ற முதல் இயலும், "தமிழ்த் தேசியம் இன்றைய சூழலில்' என்ற இறுதி இயலும், நூல் நுதலும் பொருளுக்கான முன்னுரைகளாகவும், முடிவுரைகளாகவும் அமைந்திருக்கின்றன. முதல் இயலில், தமிழ்த் தேசியம் என்ற கருத்தாக்கம் எவ்வாறு வளர்ச்சி பெற்று வந்தது என்பதை இலக்கியத்தரவுகளிலிருந்து கட்டமைக்கிறார். இக்கட்டமைப்பு, மரபுவழிப்பட்ட புலவர்களின் பார்வையை ஒத்தே தொடக்கத்தில் செல்கிறது.

சமண பவுத்தர்களை தமிழறியாதவர்கள் என்று சைவக் குரவர்கள் சொல்வதை சுபவீ சுட்டிச் செல்கிறார். இந்தக் கூற்றின் மீது வரலாற்று வகைப்பட்ட திறனாய்வைச் செய்திருக்க வேண்டும். ஏனெனில், அய்ம்பெருங்காப்பியங்களும், அய்ந்து இலக்கணங்களும் சமண பவுத்தர் தொட்டதனால் தோன்றியவை. அதற்கும் அப்பால், வேள்வியாலும் வேதங்களாலும் அதிகாரத்தில் அமர்ந்து வைதீகத்துக்கு அறைகூவல்களாகவும் விளங்கியவை சமண பவுத்தங்களே. சைவ வைணவத்தின் பெயரால், பார்ப்பனிய அதிகாரம் தன்னைப் பதுக்கிக் கொண்டது தமிழ்ச் சமுதாயம் இன்றளவும் உணராமல் இருக்கிற அறியாமையாகும்.

இந்நூலின் தலைப்பு, இரண்டு வகையான விளக்கங்களைப் பெறுதல் வேண்டும். "பெரியாரின் இடதுசாரித் தமிழ்' என்றும், "பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம்' என்றும் அவ்விளக்கங்கள் அமைதல் வேண்டும். இடதுசாரித் தமிழ் என்பது, மொழிவகைப்பட்ட, பண்பாட்டு வகைப்பட்ட அனைத்து மூடத்தனங்களுக்கும் எதிராக நிற்பது. மொழித் தோற்றம் என்பதை தெய்வீகம் சார்ந்ததாக சைவம் உள்ளிட்ட வைதீக நோக்கர்கள் கதை கட்டிய காலத்தில், மொழிக்கு அறிவியல் அடிப்படையில் விளக்கம் சொன்னது சமணம் பவுத்தம்தான். "மொழி முதற்காரணமாம் அணுத்திரள் ஒலி எழுத்து என்பது சமணர் தேற்றம்' அதனால் பெரியாரின் இடதுசாரித் தமிழ் குறித்த தேடுதலுக்குச் சமண பவுத்த சமயங்களின் பங்களிப்புதான் பேரளவுக்கு உதவும்.

எனினும், தமிழ் உணர்வை சைவ மரபில் தேடும் ஆய்வாளர்கள், சமணம் பவுத்தம் தமிழுக்கும், கலைகளுக்கும் எதிராக நின்றன என்ற கூற்றை தமிழ்ச் சிந்தனை மரபில் உடுக்கடித்துப் பதிய வைத்துள்ளனர். சமயம் தவிர்த்த மொழியை முன்னிறுத்திய பெரியாரின் பார்வையை இன்றளவும் தனித்தமிழ் ஆர்வலர்களும், அறிஞர்களும் புறந்தள்ளுவதற்கான கால வித்து இங்குதான் அமைந்திருக்கிறது.

விரிவான இந்த இயலில் வேறொரு செய்தியும் பேசப்பட்டிருக்க வேண்டும். செவ்விலக்கிய தமிழ் மரபுக்கு உழைக்கும் மக்கள் வழங்கிய பங்களிப்பு, இன்னும் விரிவாக ஆராயப்பட வேண்டும். வடமொழியும், தெலுங்கும், உருதும், ஆங்கிலம், பிரெஞ்சும் அதிகார மொழிகளாகக் கோலோச்சிய காலங்களில், பீடத்திலிருந்தோர் எல்லாம் இம்மொழிகளின் அன்பர்களாக நின்றார்கள். பக்தி சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய புலவர்களுக்கு, வடமொழியின் இருப்பும் பயன்பாடும் உறுத்தியதாகத் தெரியவில்லை.

இக்கால கட்டங்களில் எல்லாம், தமிழின் தனித்தன்மையைக் காப்பாற்றி நின்றவர்கள் உழைக்கும் வெகுமக்களே. அவர்கள் "நீரை' "ஜலம்' ஆக்கவில்லை. "சோற்றை' "சாதம்' ஆக்கவில்லை. செவ்விலக்கியங்களாக அவர்கள் எதையும் வழங்கவில்லைதான். இருந்தாலும், முத்தமிழின் இசையை அவர்கள் வயல்களிலும் வாய்க்காலிலும், கடலிலும் கரையிலும், தொட்டிலிலும் கட்டிலிலும் வளர்த்தார்கள். ஒருபோதும் எழுத்தாக்கப்படாத நாடகத்தை, தங்கள் வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் கூத்தாக ஆடினார்கள்.

இந்நூலில் மிகச் சரியாக விமர்சிக்கப்படும் ம.பொ. சிவஞானத்தின் வடமொழி ஆதரவு, அவர் காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்து நின்றதிலோ, தமிழரசுக் கழகத்தைத் தொடங்கியதிலோ தோற்றம் கொள்ளவில்லை. பழஞ் சைவ மரபின் புதுக் கொழுந்துதான் சிவஞானம் என்பதைச் சேர்த்துச் சுட்ட வேண்டும். தமிழ்த் தேசியத்தின் தோற்றுவாய்களை சுப. வீரபாண்டியன் பெருமுயற்சி செய்து தொகுத்திருக்கிறார். எனினும், மேற்சொல்லப்பட்ட திறனாய்வுப் பார்வைகள், இன்னும் வாய்க்கவிருக்கும் கருத்துகள், இந்த இயலுக்கு வலுவூட்டும். உ.வே.சா.வின் பதிப்பு முயற்சிகளை நன்றியோடு நினைவுகூறும் சுபவீ, அவரின் வடமொழிச் சார்பையும் சாதியத் தள்ளாட்டத்தையும் தெளிவாகவே அடையாளம் காட்டுகிறார். இத்தகைய அடையாளம் காட்டும் முயற்சிகள்தாம், ஒரு இடதுசாரித் தமிழ்ப் பார்வையை அடைய உதவும்.

மொழி குறித்தும், தேசிய இனத்தின் உரிமை குறித்தும், உலக இடதுசாரிகள் கொண்டிருந்த கருத்துகள் பெரியாரிடம் தீவிரம் கொள்கின்றன. ருஷ்ய மொழியின் தனித்துவத்திலும் தூய்மையிலும் அக்கறை கொண்டவர் லெனின். அது அவரது தாய்மொழி. ஆனால், ருஷ்ய மொழி ருஷ்யா முழுவதுக்கும் ஆட்சி மொழியாக வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டபோது, அதை லெனின் மறுத்தார். “சின்னஞ்சிறு சுவிட்சர்லாந்து ஒரேயொரு ஆட்சி மொழியை கொண்டது அல்ல. ஜெர்மன், பிரெஞ்சு, இத்தாலியன் ஆகிய மூன்று ஆட்சி மொழிகளைப் பெற்றுள்ளது. இதனால், அதற்கு எந்தக்கேடும் ஏற்பட்டு விடவில்லை; நன்மையே உண்டாகி இருக்கிறது'' ("தேசிய இனப் பிரச்சினைகளும் பாட்டாளி வர்க்க தேசியவாதம்' பக்கம்: 20).

தமிழின் மீது சமஸ்கிருத அதிகாரத்தை எதிர்த்தது போலவே, தமிழின் சைவ, வைணவ சாதிய அதிகாரத்தையும் பெரியார் எதிர்த்தார். தமிழின் தொன்மை என்பதும், வளம் என்பதும் தமிழ் மக்களின் விடுதலைக்கும் முன்னேற்றத்துக்கும் எந்த வகையில் உதவும் என்று கேட்டார். இதுதான் அவரை, மறைமலை அடிகள் போன்ற வலதுசாரித் தேசியவாதிகளில் இருந்து துல்லியமாக அடையாளம் காட்டுகிறது. பெரியாரின் இந்தத் தனித் தன்மையை சுபவீ, எவ்விதத் தயக்கமுமின்றி விளக்குகிறார்:

“முதலாவதாக, தமிழ் முன்னேற்றமடைந்து உலக பாஷை வரிசையில் அதுவும் ஒரு பாஷையாக இருக்க வேண்டுமானால், தமிழையும் மதத்தையும் பிரித்துவிட வேண்டும். தமிழுக்கும் கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தைக் கொஞ்சமாவது தள்ளி வைக்க வேண்டும்...'' இது தொடர்பான கருத்துகளை இன்னும் நெடிதாகவே மேற்கோள் காட்டி ஏற்கும் சுபவீ, இதைத் தொடர்ந்து கூறுவது மிக மிகச் சரியானதாகும்: "தமிழரின் முன்னேற்றம், தமிழரின் மேம்பாடுபற்றியே காலமெல்லாம் எண்ணிக் கொண்டிருந்த பெரியார், அதற்குத் தடையாக எது வந்தாலும் அது தமிழாகவே இருந்தாலும் எதிர்த்தார் என்பதைத்தான் மேற்காணும் வரிகள் நமக்கு உணர்த்துகின்றன'' (பக்கம்: 138).

பெரியாரின் மனித விடுதலையை அடிப்படையாகக் கொண்ட இத்தகைய பார்வைதான்,பெண் விடுதலை என்ற நோக்கில் திருக்குறளையும் கேள்வி கேட்க வைத்தது. வள்ளுவர் பாராட்டும் கற்பு, கணவனைத் தொழுதெழுதல், பரத்தைமையைக் கண்டித்தல் இவற்றையெல்லாம், எவ்விதத் தயக்கமின்றிப் பெரியார் கேள்வி கேட்டார். திருக்குறளை அவர் பாராட்டினார் என்பது உண்மைதான். ஆனால் நிபந்தனைகள் எதுவுமில்லாமல் பாராட்டவில்லை.

மொழி பற்றிய பெரியாரின் இந்த அணுகுமுறை, பெர்டோல்ட பிரக்ஸ்ட் என்ற ஜெர்மானிய நாடகாசிரியரின் ஒரு கூற்றை எனக்கு நினைவுபடுத்துகிறது: “ஜெர்மானிய மொழியை நாம் சலவை செய்ய வேண்டும்.'' இதை நான் அடிக்கடி மேற்கோள் காட்டுகிறேன். அத்துடன் கூட ஒன்றையும் சேர்த்துச் சொல்கிறேன்: “தமிழ் மொழியையோ வெறும் சலவை செய்தால் போதாது; அதை வெள்ளாவிப் பானையில் வைத்து அவிக்க வேண்டும்.''

பெரியாரின் ஆங்கில ஆதரவு, தமிழன்பர்களால் கண்டனம் செய்யப்படுகிறது. இது குறித்தும் சுபவீ தெளிவான வாதங்களை முன்வைக்கிறார். இதில் சுபவீ, மறைமலை அடிகளின் ஆங்கில நாட்குறிப்பு, தேவநேயப் பாவாணரின் ஆங்கிலம் குறித்த கருத்து (பக்கம்: 142), “தமிழர் தமிழையும் ஆங்கில மொழியையும் அமிழ்தெனக் கற்க ஆங்கிலம் பெறுகவே'' என்று பெருஞ்சித்திரனாரைக் காட்டும் மேற்கோள் ஆகியவை, ஆங்கிலத்தை தன்மைப்படுத்தும் நோக்கிலானவை அல்ல; தமிழுக்குரிய தலைமையை உறுதிப்படுத்த வேண்டும், அதே நேரத்தில் உலகத் தொடர்புகளை மேம்படுத்த ஆங்கிலத்தின் தேவையை மறுதலிக்க முடியாது என்ற நோக்கில்தான்.

இந்நூலின் மிக முதன்மையான பகுதி "பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம்' என்பதுதான். இதில் பெரியாரின் தமிழ் குறித்த பார்வை, திராவிடம் - திராவிட நாடு என்று முதலில் கூறினாலும், அது தமிழ்த் தேசியமாகவே உருவான தன்மை, தனித் தமிழ் இயக்கம் கண்ட மறைமலையடிகளோடு பெரியார் முரண்பட்ட நூலை, பெரியாருக்கு முந்தியே தமிழின உணர்வு, சமூக விடுதலை ஆகியவற்றை முன்மொழிந்த அயோத்திதாசப் பண்டிதரின் பங்களிப்பு, அதன் நிறை குறைகள், இப்படி நிறையவே பெரியாரியத்தை வகைப்படுத்திக் கொண்டு வந்தவர், பெரியாரியத்தின் சாரமாகப் பின்வரும் முடிவைக் கண்டடைகிறார்:

"... சமூக மொழித் தேசியவாதத்தை, இடதுசாரித் தன்மையுடன் முன்னெடுத்த பெரியார், சாதி ஒழிப்பு, பெண் விடுதலை ஆகிய இரண்டினையும் தமிழ்த் தேசியத்தின் இரு கூறுகளாகக் காலம் முழுவதும் எடுத்துச் சென்றுள்ளார்.''

இத்துடன் கூட ஒன்றையும் சேர்த்துச் சொல்ல வேண்டும். புராண மாயைகளை மட்டுமின்றி, தமிழ்த் தொன்மை குறித்த மாயைகளையும் உடைத்த முதல் சிந்தனையாளர் பெரியார்தான். தமிழ் மாயைகளை மறுத்த பெரியாரை, தமிழ்த் தேசிய மறுப்பாளராகவே சித்தரிக்க முயலும் அ. மார்க்சையும் உரிய வகையில் சுபவீ மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் பெரியார் எழுதியதையும் பேசியதையும் போராடியதையும் சுபவீ விரிவாகவே எழுதியுள்ளார். ரவிக்குமாரின் பெரியார் மறுப்பு வாதங்களுக்கு இப்பகுதியும் வலுச்சேர்க்கும். பெரியார், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

//மொழி நிலையை விட..மதத் தேசியம் என்பது கூட மக்களை ஒருநிலைக்குள் வைக்க உதவக் கூடியது. அது மதம் சார் கலாசார பண்பாட்டியல் அடிப்படையில் எழும்..!//

அந்த வகையில் தான் சிங்களத் தேசியம் என்பது பவுத்த மத பேரினவாதா அடக்கு முறையில் தமிழ் மக்களை அடக்க் முற்படுகிறது.அதே நிலையைத் தமிழ்த் தேசியம் இந்து சமய அடிப்படையில் எடுக்குமாயின் அதுவும் இசுலாமிய மற்றுக் கிரித்துவ மதத்தைப் பின் பற்றும் தமிழர்களை அடக்க முற்படும்.இதுவே தமிழர் என்னும் அடிப்படையில் அனைத்துத் தமிழரும் ஒன்று படுவதை மறுதலிக்கும்.அதே நிலை தான் சாதியதிலும் காணப்படுகிறது.சாதியதைத் துறந்த தமிழத் தேசிய அடையாளம் இல்லாது போகின் தலிதுக்கள் வெள்ளாளர் என்று சாதி அடிப்படையிலும் தமிழ்த் தேசியம் என்பது தகர்ந்து போகும்.

//Extreme forms of nationalism, such as those propagated by fascist movements in the twentieth century, hold that nationality is the most important aspect of one's identity, while some of them have attempted to define the nation in terms of race or genetics.///

மற்றவர்களை அடக்க முற்படும் தேசியம் என்பது பாசிசமாக வளரும் என்பதையே வரலாறு காட்டி இருக்கிறது.

இங்கே தேசியம் என்பது எவ்வகையானது அதன் குணாம்சம் என்ன அது அடக்குகிறதா இல்லை அடக்கு முறையில் இருந்து விடுபட உதவுகிறதா என்பதைலையே அதன் முற் போக்குத் தன்மை இருக்கிறது.

ஈழத்தில் தமிழ் தேசியம்.. மதம்.. சாதி சார்ந்து எழவில்லை. இவை இரண்டிலும் தமிழ் தேசிய இருப்பு நிலை கொண்டிருக்கவும் இல்லை. தமிழ் தேசியத்துக்குள் மத எதிர்ப்பு வாதங்களையும்.. சமூகப் பிரிவினை.. வாதங்களையும் குறிப்பாக வேளாளர் தலித்து என்ற புதிய பாகுபாடுகளையும் புகுத்துவது முற்போக்கல்ல. கடைந்தெடுத்த பிற்போக்குத்தனம்.

தமிழ் தேசியம் தந்தை செல்வா காலத்தில் இருந்து உருப்பெற்று வந்திருக்கிறது. அவர்கள் மதம் சாதி சார்ந்தல்ல அந்தக் கொள்கையை முன்னெடுத்தது. தமிழர்களின் பாரம்பரியம்.. நிலம்.. மொழி.. கலாசாரம் பண்பாடு என்று தான் அதனை தமிழர்களின் சிந்தனையில் ஒருங்கிணைத்தனர். தமிழ் தேசியத்துக்கு எதிரான சிங்கள தேசியத்தின் அடக்குமுறையும் தமிழர்களுக்கு தங்கள் தேசியத்தின் பால் அக்கறையை நிறுவச் செய்தது..!

ஒரு இனம் பிளவுபடுவதற்கு மதம் மட்டும் காரணமாக இருக்க முடியாது. ஈழத்தை எடுத்துக் கொண்டால் இன்று சாதியவாதத்தை விட.. மத வாதத்தை விட பிரதேசவாதம் தலைவிரித்தாடுகிறது. இன்றைய வேளையில் ஈழத்தில் தமிழ் தேசிய சீரழிவுக்கு.. பிரதேசவாதம்.. அதுவும் பொருளாதார அடிப்படையில் எழுந்த வாதம் முன்னிற்கிறது. முற்போக்கு என்ற போர்வையில்.. மத கலாசார பண்பாட்டு கோலங்கள் மக்களை ஒருங்கிணைப்பதை குலைக்கும் செயலை ஊக்குவிப்பதல்ல.. தமிழ் தேசியத்தின் இருப்புக்கு வகை செய்யவல்லது.

இல்லாத தலித்தியத்தை திணிப்பதும்.. வேளாளர் என்று பிரித்துக்காட்டி.. பாசிசவாதத்தை ஒரே இன மக்களுக்குள் வேறு வேறு குழுமப் பிரிப்புகளைச் செய்து கக்குவதுமல்ல.. முற்போக்கு. எப்போ தலித்தியம் என்று பிரித்து உரிமை என்பதை புகுத்துகிறார்களோ.. அப்பவே சாதியத்தை பிறிதொரு வடிவில் திணிக்கிறார்கள் என்பதுதான் அர்த்தம்..!

அதேபோல் தான்.. மத நல்லிணக்கம் என்பது முற்போக்கு. மத அழிப்பு என்பது.. மதத்துக்கு எதிரான பாசிச நிலைப்பாடு. கிட்லரால்.. யூத தேசிய இனத்தை மதத்தை மையப்படுத்தி அழிக்க எடுக்கப்பட்ட முயற்சிகள்.. இங்குள்ள சிலரின் பார்வையில் முற்போக்கு என்றால்.. இவர்களின் தலைவர் கிட்லரா..???! ஒரு நாசியவாதத்தை முன்னெடுப்பவர்களும்.. மத நல்லிணக்கத்துக்கு எதிராக செயற்படும் சக்திகளும்.. அவர்கள் முன்னெடுக்கும்.. தலித்தியம்.. வேளாளம் என்று சமூகத்தைப் பிரித்தாண்டு.. உரிமைப்பகுப்புச் செய்யும் அனைத்துச் செயல்களும்.. தமிழ் தேசியத்துக்கு ஆபத்தானது. இது இன்று கிழக்கில்.. சிலரின் அரசியல் தேவைக்காக கிளறப்பட்டு நிலை கொண்டுள்ள பிரதேசவாதம் போல எப்பவும் கொழுந்துவிட்டு.. தமிழ் தேசிய எழுச்சியை சிதைக்க பயன்பட எதிரிகளால்.. எண்ணை ஊற்றப்படக் கூடியது. ஆனால்.. மத நல்லிணக்க சூழலில்.. சாதிய களைவுகள் உள்ள ஒரு சமூகத்தில்... பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அற்ற ஒரு சூழலில்.. நிச்சயம் பாசிச நாசிய போக்குகள் அற்ற ஒரு இணக்கப்பாட்டை சமூகங்களுள் உருவாக்கி.. தமிழ் தேசியத்தின் இருப்பை காக்கலாம் என்பதே முற்போக்குப் பார்வையாக இருக்கும்..! :wub:

Link to comment
Share on other sites

நீங்கள் இணைத்த கட்டுரைகளின் சுருக்கம்தான் மேலே நான் சொன்னவை... நீங்கள் தந்த கருத்துக்கு அணி சேர்க்க அது உதவ வில்லை... எனது கருத்தை பலவீன படுத்தவும் இல்லை..

பெரியாரை யாரோ இயக்கினார்கள் என்பதை ஒத்துக்கொண்டீர்கள் மகிழ்ச்சி... ஆனால் தமிழ் தேசியத்தை சிங்களவன் இயக்குகிறான் என்கிறீர்கள் அது தவறு... சிங்களவன் ஈழத்தமிழர்களை தூண்டி விடுகிறான்... என்ன ஆயுதத்தை எடுக்க வேண்டும் எனும் தூண்டுதல்... அதை இப்படியும் சொல்லாம் ஒரு தற்காப்பு நிலையை எடுத்து தங்களை காப்பத்தி கொள்ள தூண்டினா சிங்களவன் எண்று... ஆனால் பெரியார் தூண்டபட வில்லை இயக்க பட்டார் எனபதுக்கு தான் ஜின்னாவினுடனான சந்திப்பை சுட்டி காட்டினேன்...!

1937 தமிழர் தேசம் தமிழருக்கே எண்று மானில சுயாட்ச்சியை பேசினாலும் 1938ல் தேசியம் என்பதுக்கு எதிராக குரல் கொடுத்தவர் 1939ல் திராவிட தனிநாடு கோருகிறார்... ஏன் இந்த மாறாட்டம்...

1937 முதல் 1947 வரையான காலத்தில் பெரியார் ஒரு தனி நாட்டுக்கான அலகு எதையுமே பலப்படுத்த வில்லை... ஆனால் இந்தியாவை பெரிய அளவில் துண்டாடி பலவீனப்படுத்த நினைத்த ஜின்னா செய்து வைத்தார்...! அரசியல் ரீதியில் பெரியார் பலமாக இருக்கவில்லை... ஆனால் ஜின்னா இருந்தார்... பாக்கிஸ்தானில் இருந்தவர்களின் தொகை திராவிடர் நாட்டின் மக்களின் தொகையில் அதிகம்கூட இல்லை...! ஆனால் பெரியார் அப்படியான ஒரு அலகுக்கு எதையும் செய்தவராக இல்லை...

ஜின்னாவால் முடிந்தது எண்றால், ஏன் பெரியாரால் முடியவில்லை என்பதுக்கான காரணத்தை சொல்லுங்கள்...!

நான் சொல்லும் காரணம் என்ன எண்றால் பெரியார் அவ்வளவு ஆளுமை உள்ள தலைவர் கிடையாது...

நீங்கள் கேட்ட தமிழீழத்தை ஐநா ஏன் அங்கீகரிக்க வில்லை என்பதுக்கான காரணம் சொல்வதுக்கும் முன்னர் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது தமிழரை ஐநா மட்டும் அல்ல அனேக நாடுகள் தேசிய இனமாக அங்கீகரித்து விட்டன... அதனால்தான் பேச்சு வார்த்தைக்கு போகுமாறு இலங்கை அரசுக்கு நிர்பந்தம் கொடுக்கின்றன...!!

Link to comment
Share on other sites

பின்நவீனத்துவம் ,தேசியம் ,சோசலிசம் ,கலாச்சாரச் சார்புவாதம் : இஜாஸ் அஹமது

தமிழில் : யமுனா ராஜேந்திரன்

(இஜாஸ் அஹமது அமெரிக்க, ஐரோப்பிய, இந்திய அறிவுத்துறை வட்டாரங்களில் அதிகமும் அறியப்பட்டவர்.. ஆதார மார்க்சிய நுால்களில் ஆழ்ந்த படிப்பு கொண்டவர். இவரது கட்டுரைகள் சோசல் ஸயின்டிஸ்ட், நியூ லெப்ட் ரிவியூ, பிரண்ட லைன், மன்த்லி ரிவியூ போன்ற இதழ்களில் வெளியாகியிருக்கிறது. இவருடைய ஆன் தியரி புத்தகத்தை இலண்டனிலிருந்து வெர்ஸோ பதிப்பகமும், இந்தியாவில் ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிடி பதிப்பகமும் வெளியிட்டிருக்கிறது. இந்திய மார்கசியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்தியலாளர்களில் ஒருவர். பின்நவீனத்துவம், தேசியம், மதம், கலாச்சார சார்புவாதம், சோசலிச அனுபவம் போன்றவை குறித்த தனது கருத்துக்களை இங்கு வெளியாகும் அவரது உரையாடலில் பதிந்திருக்கிறார். இஜாஸ் அஹமது தற்போது தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் நுாலகராகப் பணியாற்றி வருகிறார். எனது உரையாடலின் மொழியாக்கத்தைச் செம்மைப்படுத்திய கோலை பாரதியார் பல்கலைக்கழக சமூகவியல் பேராசிரியர் எனது நண்பன் டாக்டர். ஆர் உதயகுமாருக்கு இத்தருணத்தில் நன்றி சொல்வது என் கடமை.)

ரேடிகல் பிலாஸபி: உங்களது நூலைக் கட்டமைக்கிற கருதுகோள்களில் முக்கியமானதொரு விஜயமாக இருப்பது நீங்கள் மூன்று உலகக் கோட்பாட்டை நிராகரிக்கிறீர்கள். இந்த உங்கள் நிலைப்பாட்டுக்கு காரணம் என்னவெனில், வித்தியாசப்படுத்திக் காட்ட முடியாத வகையில் மூன்றான் உலகத்தை காலனியம் காலனிய எதிர்ப்பு எனும் கட்டுக்குள் அடங்கி இருக்கும் ஒரே விஜயம் தேசியம் என்பதாக ஐரோப்பியக் கோட்பாட்டாளர்கள் கட்டமைத்து வைத்திருக்கிறார்கள். உலக அளவில் இருக்கிற இவ்வகைப் பார்வையில் வர்க்கப் போராட்டம் என்கிற விஷயம் மூன்றாம் உலக நாடுகளில் இருந்து அகற்றப்பட்டிருக்கிறது என்கிறீர்கள்.

இன்னொரு இடத்தில், ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் இன்று நூற்றுக்கணக்கான தேசியங்கள் இருக்கின்றன. சில தேசியங்கள் முற்போக்கானவை; சில அவ்வாறு இல்லை. தேசியம் ஒரு முற்போக்கான கலாச்சார நடவடிக்கையைக் கொண்டிருக்குமா என்பது சில விஷயங்களைச் சார்ந்து இருக்கிறது. கிராம்ஸிய அர்த்தத்தில் சொல்ல வேண்டுமானால், ஒரு பொருண்மைச் சக்தியாக தேசியத்தைக் கையிலெடுத்திருக்கிற அதை உபயோகப்படுத்துகிற அதிகார சக்தியானது மேலாதிக்கத்தைத் தன் நோக்கிற்காகக் கொண்டிருக்கும் சக்தியானது எவ்வகையிலானது என்பதைக் கொண்டுதான் தீர்மானிக்க முடியும் என்கிறீர்கள். நீங்கள் இன்னும் முற்போக்கான தேசியங்கள் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் இருக்கிறது என்று சொல்வீர்களா ?

இஜாஸ் அஹமது: இங்கு வேறு வேறு வகை தேசியங்கள் இருக்கின்றன. ஒருவர் தேசியம் எனும் போது எந்தத் தேசியம் பற்றிப் பேசுகிறார் என்பது புரிந்து கொள்ளப்படுவதில் நிறையப் பிரச்சினைகள் இருக்கின்றன. நம் உலகின் இறையாண்மை கொண்ட அரசுகள் என்பது பற்றி - தேசிய அரசுகள் பல்தேசிய அரசுகள் - இவைகளின் முறைமை பல்வேறு சமயங்களில் குழுக்களால் சிறிது பெரிதான குழுக்களால் சவாலுக்கு உள்ளாகின்றன. அவை தம்மைத் தேசங்கள் என்று அழைத்துக் கொள்கின்றன. இது ஒரு வகைத் தேசியம். இதை நாம் பிரிவினைத் தேசியம் என்கிறோம். இன்னும் பிற அதிதேசிய தேசங்கள் இருக்கின்றன. இதில் குறிப்பானது இஸ்லாமிய தேசியம். இது கோரிக் கொள்வது என்னவென்றால், நடைமுறையிலிருக்கும் தேசிய அரசுகள் - பல்வேறு முஸ்லீம் சமூகங்களாகப் பிரிந்திருக்கிறதையும் உள்ளிட்டு - இந்த அரசுகள் மதச்சார்பற்ற நவீனத்துவத்தின் உற்பத்திகள். ஆகவே முஸ்லீம் அல்லாத அரசுகள் - இவையுள்ள இஸ்லாமிய அரசு வேண்டும் என்கிறார்கள். மூன்றாவதாக நாம் அரசியல் தளத்தில் நடக்கும் போட்டிகளைப் பார்க்கிறோம். அது கலாச்சார தளத்திலும் வெளிப்படுகிறது. அது மிக வெளிப்படையாக சாராம்சத்தில் இன்றிருக்கிற தேசிய அரசுகள் பற்றியதாக இருக்கிறது. இந்திய தேசிய அரசு இதில் எந்த வகையில் பொருந்துகிறது ? இந்திய அரசு என்பதுதான் என்ன ? மதநீக்க சக்திகள் கோருகிற மாதிரி இது பலஇன நாடா ? அல்லாது தனித்துவமான கலாச்சாரம் கொண்ட மக்களைக் கொண்ட - இறுதியாக ஒரு மதத்தில் வேர்கொண்ட - இந்தியாவுக்கு அது பூர்வீகமானது. பெரும்பான்மையான மக்களால் பின்பற்றப்படுவது. அதன்வழி மற்றவர் அனைவரும் சிறுபான்மையினர். அவர்கள் பெரும்பான்மையானவர்களின் தாட்சன்யத்தின் கீழ் வாழ்கிறார்கள் என்று சொல்வதா ? நான் இதை பின் சொன்ன விதத்தில் முன்வைக்கிறேன். இப்போது இவ்வகை நிலைப்பாடு இந்தியாவின் மிகப்பெரும் இயக்கத்தினால் முன்வைக்கப்படும் நிலைப்பாடு - அதாவது பாசிச உள்ளடக்கத்துடன் வைக்கப்படும் நிலைப்பாடு.

என்னுடைய விவாதம் என்னவென்றால், இந்தியா போன்ற ஒரு நாட்டில் தேசியம் வலதுசாரிகளிடம் எதிர்ப்பின்றி விட்டுக் கொடுக்க இயலாது என்பதுதான். இந்தியாவில் ஒரு பலம்வாய்ந்த தேசிய இயக்கம் தோன்றியது. காலனியாதிக்க எதிர்ப்பு தேசியம் - இந்த தேசிய அரசு சில அளவுகோல்களை முன்வைத்தது. மதநீக்கம், ஷனநாயகம், பொருளாதார தளத்தில் சில கூட்டுத்தன்மை - இதுதான் இதன் மரபின் பகுதியாக இருக்கிறது. இடதுசாரிகள் அந்த வெளியை எடுத்துக் கொண்டு அதை அகலிக்க வேண்டும். இந்தியாவில் உலகமயமாக்கலின் மூலதனம் மக்களின் பல்வேறு கூட்டமைப்புகளின் பொருளாதார வளங்களை அழித்து விட்டது. இதற்கு எதிரான இயக்கத்தை காலனியாதிக்க எதிர்ப்பு மரபிலிருந்தே நாம் திரட்ட வேண்டும்.

ஆகவே நீங்கள் அந்த எல்லையை விட்டுக் கொடுக்க முடியாது. ஆனால் குறுகிய அர்த்தத்தில் நீங்கள் தேசியவாதியாக இருக்கத் தேவையில்லை. இந்தியா இந்தியர்களுக்கானது என்று நீங்கள் சொல்ல வேண்டும். ஆனால் தனித்த இந்திய அடையாளம் என்று ஏதும் இல்லை. இந்திய தேசியம் என்பது அடையாளம் சம்பந்தமானது இல்லை. அது குறிப்பிடுவது என்ன மாதிரி சமூகம் நாங்கள் என்பதுதான். இந்த தேசியம் என்ன என்கிற வரையறையைத் தருவதற்கான வாய்ப்பை வலதுசாரிகளுக்குக் கொடுப்பதை நிராகரிக்க வேண்டும். காந்தி ஒரு அதிதீவிர வலதுசாரியால் சுடப்பட்டார் - குறிப்பாக இன்று இந்தியாவை ஆள்கிற நபரைப் போன்ற ஒருவரால். காந்தி அவர் அளவில் இந்துவாக இல்லை என்பதுதான் பிரச்சினை.

இன்றைய அதிவலதுசாரிகள் புதியவர்கள் அல்ல. உண்மையில் டால்ஸ்டாய், ரஸ்கின் போன்றவர்களின் மகத்தான மாணவனாகிய காந்தியை உந்தித் தள்ளிய விஜயம் எது ? அவர் இந்து சீர்திருத்தவாதி ஆனதற்கான காரணம் என்ன ? அவர் இந்து சீர்திருத்தவாத வெளியை எடுத்துக் கொள்ளவில்லை எனில், இந்தியா இந்து பாசிசமாகப் போவதற்கான வாய்ப்பு அன்று இருந்ததுதான். பாசிசம் இந்திய தேசியத்தில் மதநீக்க தேசியத்தால், இடதுசாரி தேசியத்தால் சவால் விடப்பட்டு எதிர்த்துப் போராடப்பட்டது. அதே மாதிரி இந்தியா என்கிற நாடு பிரிவினையில் தோன்றியது. நான் கொஞ்சம் முன் போற்றிப் புகழ்ந்த இந்த நாடு தன்னுடைய எல்லைகளைக் காத்துக் கொள்ள முடியவில்லை - தன்னுடையை இணைந்த கலாச்சார எல்லை என்று அது கோரிக் கொள்வது. நீடித்த விளைவுகளினால் - உதாரணமாக காஷ்மீர் பிரச்சினை - ஒரு ஜனநாயக சமூகத்தில் அந்த தேசத்தின் ஒரு பகுதியாக இருக்கிற ஒருவர் தொடர்ந்து அதற்குள் இருக்க முடியாது எனில் நீங்கள் என்ன சொல்லி அவர்களைத் தொடர்ந்து இருக்கச் செய்ய முடியும் ?

ரே.பி.: அனுபவ அறிவின் பலத்தின் அடிப்படையில் நீங்கள் முன்வைக்கும் விவாதத்தை தேசியம் பற்றிய உங்கள் பொதுமைப்படுத்தல்களுக்கு ஆதரவாக நீங்கள் முன்வைக்கும் போது ஒருவர் பாராட்ட வேண்டியே இருக்கும். கிராம்ஸியைப் பற்றி நீங்கள் சொன்னீர்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் ஏர்னஸ்ட் லக்லாவ் ஞாபகம் வருகிறார். உங்கள் புத்தகத்தில் அவரை நீங்கள் விமர்சித்திருக்கிறீர்கள். லக்லாவ் தேசியத்திற்கு வர்க்கச் சார்பு இல்லை என்று சொல்கிறார். தேசியத்தின் வலியுறுத்திப் பேசப்படுகிற இந்தப் பண்பு தீர்மானிக்க முடியாதபடி நெகிழ்ச்சியுடையது. தேசியத்தை சுவீகரித்துக் கொள்ளும் சமூக சக்திக்கேற்ப, அதனது ஒப்புக்கொள்ளலுக்கேற்ப, அது அடிப்படை கொண்டிருக்கும். தேசியத்தின் வர்க்கத் தன்மை மிகுந்த வித்தியாசங்களைக் கொண்டிருக்கும். தேசியம் என்கிற உரையாடல் வர்க்க முரண்பாட்டை இதன் மாறச் செய்துவிடவில்லையா ? இரண்டாம்பட்சம் ஆக்கிவிடவில்லையா ? பாலியல், பால் வேறுபாடு போன்ற அம்சங்களோடு சேர்த்து அது அனைத்தையும் ஓரங்கட்டி விடுவதில்லையா ? அதனது இயல்பால் அது ஒரு கரைத்துவிடும் பண்பு கொண்டிருப்பதை நீங்கள் பார்க்கவில்லையா ? ஒன்றுபடுத்தும் சக்தியல்ல, மாறாக கரைத்துவிடும் சக்தி அது. பிற முரண்பாடுகள் அனைத்தையும் இரண்டாம் பட்சமானவை என்று பிரகடனப்படுத்தி விடும். இந்தப் புள்ளியிலிருந்து அல்லவா - தேசியத்தோடு நேர்மறையான உறவு கொள்வதற்கு எல்லைகள் இருக்கிறது - அது தேசியவாதத்துடன் மட்டுமல்ல, தேசியம் குறித்த உரையாடலிலும் இருக்கிறது என்றல்லவா ஒரு கம்யூனிஸ்டான நீங்கள் சொல்ல வேண்டும் ?

அஹமது: நான் மேற்கொண்டிருந்த அரசியல் விவாதத்திற்கு நான் மறுபடியும் திரும்புகிறேன். கம்யூனிஸ்டுகளிலிருந்து பாசிஸ்டுகள் வரை எல்லோருமே காங்கிரஸின் பகுதியாக இருந்தோம். அறுதியில் இந்திய தேசியம் என்பது முதலாளித்துவவாதிகளால் தலைமை தாங்கப்பட்டது. பிற்பாடு முதலாளித்துவ அரசை அமைத்தது. இந்த உலகில் காந்தியும் நேருவும் ஒரு முதலாளித்துவ மேலாதிக்கத்தை நிறுவினர். மிக நுட்பமான அசாதாரணமான ஒரு வகை. இவ்வகையிலான தேசிய மேலாதிக்கம் தேசத்தின் உருவத்தை அதன் ஆதாரங்களை இல்லாததாக்கியது. இன்றைய இந்தியாவில் அத்தகைய தேசியம் காத்து நிற்கு முடியாதது. அந்த தனித்த அதிகார அமைப்பின் கீழ், அதனது தலைமையின் கீழ் காத்து நிற்க முடியாதது. தேசியம் என்பது அதனளவில் குறிப்பிட்ட வர்க்கத் தன்மை கொண்டதல்ல என்கிற நம்பிக்கையை நான் தொடர்ந்து கொண்டிருக்கும் அதே போது, நான் ஏர்னஸ்ட் லக்லாவ் கொண்டிருக்கும் அர்த்தத்தில் அப்படி நம்பவில்லை. அது எந்த குறிப்பிட்ட ஒரு தருணத்திலும் ஒரு குறிப்பிட்ட வர்க்கத் தன்மையுடன் இனங்காணப்பட முடியும் என்று நான் நம்புகிறேன். லக்லாவுடையதும் கிராம்ஸியுடையதுமான கருத்துக்களுக்கு இடையில் என்ன வித்தியாசம் எனில், முறைபோக்கான தேசியப் பகுதி என்பது கம்யூனிஸ்ட் கட்சியினால் உருவாக்கப்பட வேண்டும் என்பதுதான் கிராம்ஸிய நிலைப்பாடு.

தேசியக் கருத்தியலின் பிரதானமாக ஆதிக்கம் செலுத்தும் குணம் என்னவெனில், அது தேசிய சமூக முரண்பாடுகளையும் எதிர் சக்திகளையும் மறுக்கும் அந்த மறுப்பை வன்முறையினால் நிலைநாட்டும். இதுவன்றி இன்றைய முதலாளித்துவம் தேசிய அரசுகளின் எல்லைகளுக்குள் செயல்படுவதால் இந்த தேசிய அரசுகளின் அமைப்புக்குள்தான் இந்த உறவுகள் பார்க்கப்பட வேண்டும். இந்தியாவில் குறிப்பான வர்க்கப் போராட்டம் என்பது இந்திய மண்ணில் அடிப்படை கொண்டிருக்கும் வர்க்க சக்திகளுக்கிடையில் தான் நிகழ வேண்டும். அதுதான் தொடுவானம் - எல்லையிடப்பட்ட தொடுவானம். இந்த அலகுக்குள் தான் தேசியம் பற்றிய முதலாளித்துவ நிர்ணயத்தை எதிர்த்துப் போராட வேண்டும். இந்தப் பதட்டம் சுலபமாகத் தீர்த்துவிடக் கூடியது அல்ல. ஒரு தளத்தில் மிகவும் நுட்பமான ஒரு கருத்தியல் பற்றி கவனம் கொண்டிருக்கிறீர்கள். மறுதளத்தில் உறுதியான பரந்துபட்ட அடிப்படையைக் கொண்டிருக்கிற ஒரு அமைப்பை கவனம் கொண்டிருக்கிறீர்கள். அது தேசிய அரசு. இந்தியாவில் ஒரு பிற்படுத்தப்பட்ட முதலாளித்துவ நாட்டில் இது அசாதாரணமாக வளர்ச்சியடைந்த அமைப்பாக இருக்கிறது.

மன்த்லி ரிவியூ: நிறைய தேசியங்கள் குறித்து நீங்கள் சந்தேகப்படுகிறீர்கள் என்று சொன்னீர்கள். எந்தச் சந்தர்ப்பத்தில் தேசியம் முற்போக்கானதாக இருக்கிறது ? எந்தச் சந்தர்ப்பத்தில் பாசிசத் தன்மையை எய்துகிறது ?

அஹமது: மறுபடியும் என்னவிதமான தேசியம் குறித்து நாம் பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதில்தான் அடிப்படை இருக்கிறது. அது என்ன சூழலில் எழுந்தது என்பதிலும் பதிலிருக்கிறது. வரலாற்று ரீதியில் தேசியம் என்பது காலனியாதிக்கத்திற்கு எதிராக முற்போக்கான பாத்திரம் வகித்திருக்கிறது. அவர்கள் வெற்றி பெறுவதற்கு முன்பே ஒரு தேசத்தைக் கொண்டிருந்தார்கள் என்பதனால் அல்ல; அல்லது தேசம் என்பது தனித்ததொரு முன்விதித்தமைந்த உரிமை என்பதனாலோ அல்ல. பிரதானமாக அவர்கள் அந்நிய ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடினார்கள். நவீன அரசியலிலிருந்து வெளியிலிருந்த வெகுஷனங்களை அதன் மூலம் அரசியல்மயப்படுத்தினார்கள். அவ்வாறு அரசியல்மயப்படுத்தப்பட்ட மக்களுக்கிடையில் தமது உரிமைகள் பற்றிய கேள்விகளை எழுப்பினார்கள். இந்த அர்த்தத்தில்தான் காலனியாதிக்க எதிர்ப்பு தேசியத்தில் கறாரான ஷனநாயகமயமாக்கல் அம்சம் இருந்தது. இவ்வாறான தேசியங்கள் இன்னும் முற்போக்கான பாத்திரம் வகித்தது. தனித்தவொரு வகையில் குறுகிய கண்ணோட்டத்துடன் இருந்த பல மத, இன, மொழி, பூர்வகுடி சமூகங்களை நவீன அரசுடன் ஒன்றுபடுவதற்கான ஆக்கபூர்வமான காரியங்களைச் செய்தார்கள்.

நான் பிரதானமாக பன்மொழி, பல்லின அரசியல் ஒற்றுமைகளை விரும்புகிறேன். சோவியத் யூனியனிலும் யூகோஸ்லாவியாவிலும் நிகழ்ந்தவை இருந்தாலும் கூட நான் அதைத்தான் விரும்புகிறேன். சுத்திகரிக்கப்பட்ட ஒற்றைப்பட்டைத் தன்மை கொண்ட தேசியங்களுக்கான அவாக்களை நான் எதிர்க்கிறேன். அதிகளவில் தேசியம் குறித்துச் சிந்திப்பதன் மூலம் இந்நிலைப்பாட்டுக்கு வருகிறேன். நான் இந்தியாவில் வாழ்கிறதான அனுபவம் இந்த நிலைப்பாட்டுக்கு வந்து சேருவதற்கான பிரதான காரணியாகச் சொல்வேன். இந்தியாவின் முற்போக்குவாதிகள் இதைச் சுவீகரித்திருக்கிறார்கள். நாங்கள் மிகப்பெரும் வித்தியாசமான மொழிகளைக் கொண்டிருக்கிறோம். பற்பல இலக்கியங்களை, நடன, இசை மரபுகளைக் கொண்டிருக்கிறோம். ஒரு ஒற்றை அரசியலுக்குள் பல்வேறு தனித்துவம் வாய்ந்த கலாச்சார மரபுகளைக் கொண்டிருக்கிறோம். நாங்கள் இன்று ஒரு ஒன்றுபட்ட தேசியத்தைப் பெற்றிருக்கிறோம். ஸ்லோவாக்கியா மாதிரி நாட்டில் என்னைப் போன்றவர்களைக் கற்பனை செய்வது கடினம் என்றே நினைக்கிறேன். நாட்டில் பல்வேறு மொழி பேசுவதைப் பற்றி நாங்கள் பெரிதாகக் கவலைப்படுவதில்லை. இன்னும் கோட்பாட்டளவில் பிற இந்தியர்களுடன் நேரடியாகப் பேசுகிறதைக் கூடச் செய்வதில்லை என்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஒரு பல்முரண்கூறுகளைக் கொண்ட நாட்டில் இருப்பதானது மிகுந்த மனிதார்த்தம் கொண்டதாகவும் சாந்தம் தருவதாகவும் இருக்கிறது.

பிரச்சினையில் சிக்கல் என்னவெனில், பெரும்பாலான தேசியங்களின் தர்க்கம் கலாச்சார பன்முகத் தன்மையை நோக்கியோ, உள்ளார்ந்து கொள்வதை நோக்கியோ, பல்முரண் தன்மையை உள்ளடக்கியது நோக்கியோ இல்லை. மாறாக, தனித்ததொரு தன்மையை, சுத்திகரித்தலை அல்லது பெரும்பான்மைவாதத்தை நோக்கித்தான் இருக்கிறது. இந்தச் சாய்வினால்தான் நமது காலத்தில் தேசியம் என்பது இனவாத நிறவாதத்துக்கு நெருங்கிய சொந்தமாக இருக்கிறது. சோசலிசத்தின் கனவென்பது - நீங்கள் அதை கற்பனாவாத உபரி என்று சொல்லலாம் - ஒரு போது மனிதரெல்லாம் சமம் எனவும் உலகமயமானதாகவும் இருந்த சமூகத்திலிருந்து ஒரு மனிதார்த்தமான நாகரிகம் நோக்கி நாம் போகிறோம். அது ஒரு போது சுயநிர்ணய உரிமையைப் பேசியது. பொருண்மையாக பல்கலாச்சார சமூகத்தை உருவாக்கியது. அவரில் எவருக்கும் சிறப்பான தனியுரிமைகள் என்பது இல்லை. ஆனால் கீழ்மை இந்த சமூகங்களில் இடம் பெற்றது. தாம் உத்திரவாதம் செய்ததற்கு மாறாக இது நேர்ந்தது. ஆனால் இரண்டு விஜயங்களை நாம் மனதில் இருத்த வேண்டும் என நினைக்கிறேன். முதலாளித்துவ சமூகத்தின் வரலாறு என்பது மிக மோசமானது. ஐரோப்பாவில் பாசிசத்தை எடுத்துக் கொண்டாலும் சரி, அமெரிக்காவின் நிறவாதத்தை எடுத்துக் கொண்டாலும் சரி, இதனோடு ஒப்பிட சோசலிசம் உலகமயமான மதிப்பீடுகளுக்கும் பல்கலாச்சார சமூகங்களின் சமவுரிமைக்கும் கொஞ்சமாக ஆசையேனும் பட்டது. ஆனால் சந்தை அம்மாதிரியான சமூகத்தை உருவாக்க கோட்பாட்டு ரீதியிலும் கூட நோக்கம் கொண்டிருக்கவில்லை. எனது உணர்வெல்லாம் நம் காலத்தின் பல தேசியங்கள் ஒடுக்குமுறையானதாகவும் இன்னும் பாசிசமாகவும் வந்துவிட்டது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், சமத்துவம், உலகமயமான நாகரீகம், பல்கலாச்சாரம் போன்றவற்றை அது மறுத்து விட்டது.

தேசியத்திற்கும் பாசிசத்திற்குமான உறவு பற்றிச் சொல்ல வேண்டுமானால், எல்லா பாசிசங்களும் அதிதேசியக் கருத்தியலினால் தான் கட்டப்பட்டன. ஆனால் எல்லாத் தேசியங்களும் பாசிசத்தை நோக்கிச் செல்ல வேண்டியதில்லை. தேசியம் தன்னளவில் சாராம்சமாக எந்த சமவெட்டு வளைகோட்டுத் தன்மையையும் கொண்டிருக்கவில்லை. அந்த சாராம்சமானது அதற்குக் கொடுக்கப்படுகிறது. குறிப்பிட்ட சூழ்நிலையில் கொடுக்கப்படுகிறது. அந்தப் பிரச்சினையை எடுத்துக் கொள்கிற அதிகாரப் பகுதியால் கொடுக்கப்படுகிறது. இதனோடு சேர்த்து சமூக ஷனநாயகத்தின் முற்போக்கு சக்திகள் தோற்கடிக்கப்படுகின்றன அல்லது வீழ்ந்து போகின்றன. அந்த நீட்சியில் தேசியங்கள் ஒடுக்குமுறைத் தன்மை கொண்டதாக பாசிசத் தன்மை கொண்டதாக மாறுகிறது. பாசிசம் இன்று உலக அளவில் பல்வேறு பிரதேசங்களில் தோன்றி வருகிறது. குறிப்பாக இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் பாசிசத்தை எதிர்த்து யுத்தம் புரிந்த நாடுகளில் எழுந்து வரும் பாசிச ஆபத்து அதிகரித்து வருகிறது. அந்த பழைய கணக்கு மறுபடியும் தீர்க்கப்பட வேண்டியிருக்கிறது போலத் தோன்றுகிறது. யூகோஸ்லாவியாவின் பல பிரதேசங்களில அரை நூற்றாண்டுக்கு முன்பு முறியடிக்கப்பட்ட பாசிசம் மறுபடி நிகழ்வதைப் பார்க்க முடிகிறது.

ரே. பி.: இந்த தொடரும் முற்போக்கு தேசியம் பற்றிய சாத்தியத்தை நகர்மயமான உலகத்துக்கும் பொருத்திப் பார்க்க முடியுமா ? அல்லது சமீபத்தில் விடுதலை பெற்றிருக்கிற தேசியங்கள் பற்றிய உரையாடல் குறித்துத்தான் நீங்கள் சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்களா ?

அஹமது: வளர்ச்சியடைந்த முதலாளித்துவத்தினது நகர்மய உருவாக்கம் என்பது அதனது தேசியம் குறித்த உரையாடல் என்பது நகர்மய தொழிலாளி வர்க்கத்தின் நலன்கள் குறித்த ஏகாதிபத்திய நிர்ணயத்துடன் நெருக்கமாக இணைக்கப்பட்டிருக்கிறது. காலனியத்தின் சுமையாக இன்று எங்கும் இருக்கிற ஒரு அம்சம் குடியேற்றக்காரர்கள். தேசியம் பற்றிய உரையாடலை இதுதான் கட்டியமைக்கிறது. ஏகாதிபத்திய நிறவெறி நிர்ணயங்களை தேசியத்திற்கு இது வழங்குகிறது. எனது உணர்தலில் நகர்மய தேசியங்கள் அனைத்துமே வித்தியாசமில்லாமல் இணைந்தபடி அடக்குமுறைத் தன்மை வாய்ந்தது. மூலதனத்தின் செயல்பாட்டை வித்தியாசமான ஒரு தளத்தில் இப்போது நீங்கள் அணுக வேண்டும். ஐரோப்பாவில் நீங்கள் ஐரோப்பிய யூனியன் பற்றிப் பேசுகிறீர்கள். எவ்வாறு தேசியங்களின் பொருளாதார நலன்களில் ஏற்படும் மோதலை நீங்கள் கட்டுப்படுத்தப் போகிறீர்கள் ? தேசிய அரசுகளின் சமமின்மைகளை மட்டுப்படுத்தி அதிதேசிய ஐரோப்பிய தேசியத்தை நீங்கள் கட்டமைக்கிறீர்கள். நடைமுறையில் ஐரோப்பாவுக்கு இது நல்ல விஜயம்தான். ஆனால் இது அதீத ஐரோப்பிய தேசியம். பிற உலகினரோடு ஒப்பிடுகையில் அப்படித்தான் பார்க்க வேண்டும். ஐரோப்பாவுக்கு வெளியில் இந்த ஐரோப்பிய தேசியம் ஒரு இரும்புத் திரையாகும்.

ரே. பி.: மூலதனத்தின் உலகமயமாதலோடு இணைந்திருக்கிற இந்தப் புதிய சர்வதேசிய நிறுவனங்கள் உலகளவில் வளர்ச்சி சார்ந்த திட்டங்களை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு விட்டன. திட்டமிட்டு இவை தேசிய அரசுகளின் அமைப்புசார் எல்லைகளைத் தாண்டிச் செல்கின்றன. இதைக் குறித்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ? இது இப்படியே போகுமானால் இனி தேசிய அரசுகள் தமது எல்லைகளில் நடக்கும் அரசியல் போராட்டங்களது எல்லைகளை நிர்ணயிக்கக்கூடியவையாக இனி இருக்க முடியாது. இந்தப் பன்னாட்டு மூலதன தளத்தில் போராட புதிய வகையிலான போராட்ட வடிவங்கள் தோன்ற வேண்டும். அது புதியதொரு மொழியுடனும் அதிகாரம் செயல்படும் புதிய எல்லைகளுடனும் தொடர்புடையதாகும்.

அஹமது: இடதுசாரிகளிடம் இந்த அரசு சாரா இயக்கங்கள் பற்றி நிறைய அக்கறைகள் இருக்கின்றன. ஒரு வாசிப்பில் இவர்கள் இரண்டாம் அகிலத்தின் ஆயுதங்கள் என்று சொல்லலாம். எந்த அரசியலையும் சாராதவர்களுக்கு அந்தக் குழுக்களைச் சார்ந்தவர்களுக்கு உதவி செய்து கொண்டிருந்தவர்கள், எங்கே கம்யூனிஸ்டுகள் எந்தப் பணவசதியும் அற்று வேலை செய்கிறார்களோ அந்தக் குறிப்பிட்ட இடங்களில் இவர்கள் வேலை செய்வதற்கு இந்த உதவிகள் அளிக்கப்படுகின்றன. இந்த ஆட்கள் நிறைய பணவசதியுடன் அங்கே செல்கிறார்கள். கம்யூனிஸ்டுகள் விவசாயக் கமிட்டிகள் மிகக் கடினத்துடன் சாதிக்க முடியாத விஜயங்களை இவர்கள் சாதிக்கிறார்கள். இந்த அரசு சாரா நிறுவனங்கள் அதிகரித்தபடியில் தேசிய அரசுகளின் அதிகார வர்க்கத்தவருடன் பிணைக்கப்பட்டிருக்கிறார்கள

Link to comment
Share on other sites

நீங்கள் இணைத்த கட்டுரைகளின் சுருக்கம்தான் மேலே நான் சொன்னவை... நீங்கள் தந்த கருத்துக்கு அணி சேர்க்க அது உதவ வில்லை... எனது கருத்தை பலவீன படுத்தவும் இல்லை..

பெரியாரை யாரோ இயக்கினார்கள் என்பதை ஒத்துக்கொண்டீர்கள் மகிழ்ச்சி... ஆனால் தமிழ் தேசியத்தை சிங்களவன் இயக்குகிறான் என்கிறீர்கள் அது தவறு... சிங்களவன் ஈழத்தமிழர்களை தூண்டி விடுகிறான்... என்ன ஆயுதத்தை எடுக்க வேண்டும் எனும் தூண்டுதல்... அதை இப்படியும் சொல்லாம் ஒரு தற்காப்பு நிலையை எடுத்து தங்களை காப்பத்தி கொள்ள தூண்டினா சிங்களவன் எண்று... ஆனால் பெரியார் தூண்டபட வில்லை இயக்க பட்டார் எனபதுக்கு தான் ஜின்னாவினுடனான சந்திப்பை சுட்டி காட்டினேன்...!

1937 தமிழர் தேசம் தமிழருக்கே எண்று மானில சுயாட்ச்சியை பேசினாலும் 1938ல் தேசியம் என்பதுக்கு எதிராக குரல் கொடுத்தவர் 1939ல் திராவிட தனிநாடு கோருகிறார்... ஏன் இந்த மாறாட்டம்...

1937 முதல் 1947 வரையான காலத்தில் பெரியார் ஒரு தனி நாட்டுக்கான அலகு எதையுமே பலப்படுத்த வில்லை... ஆனால் இந்தியாவை பெரிய அளவில் துண்டாடி பலவீனப்படுத்த நினைத்த ஜின்னா செய்து வைத்தார்...! அரசியல் ரீதியில் பெரியார் பலமாக இருக்கவில்லை... ஆனால் ஜின்னா இருந்தார்... பாக்கிஸ்தானில் இருந்தவர்களின் தொகை திராவிடர் நாட்டின் மக்களின் தொகையில் அதிகம்கூட இல்லை...! ஆனால் பெரியார் அப்படியான ஒரு அலகுக்கு எதையும் செய்தவராக இல்லை...

ஜின்னாவால் முடிந்தது எண்றால், ஏன் பெரியாரால் முடியவில்லை என்பதுக்கான காரணத்தை சொல்லுங்கள்...!

நான் சொல்லும் காரணம் என்ன எண்றால் பெரியார் அவ்வளவு ஆளுமை உள்ள தலைவர் கிடையாது...

வரலாறு என்பது முரண்பாடுகளால் எழுதப்படுவது.வினை வினைக்கான எதிர்வினை என்னும் அடிப்படையில் நிகழ்வது.பெரியார் ஏன் அப்படி எதிர்வினை யாற்றினார்,பிரபாகரன் ஏன் அப்படி எதிர்வினை யாற்றினார் என்பதைப் புரிந்து கொள்ள அவர்கள் மேல் புரியப்பட்ட வினைகளைப் பார்க்க வேண்டும்.

ஈழத் தமிழர்கள் ஏன் முதலில் அய்பதுக்கு அய்பது கோரினார்கள், ஏன் சாத்வீக ரீதியில் போராடுனார்கள் ஏன் தந்தை செல்வா பண்டாரனாயாக்கவுடம் ஒப்பந்தம் செய்தார் என்பதைப் பார்க்க வேண்டும்.எல்லாப் போராடங்களும் அந்தக் காலகட்டதின் விளைவுகள்.பெரியாரும் அவ்வாறே ஒவ்வொரு காலகட்டதிலும் இயங்கினார்.அவரால் அவர் நினைத்தை முழுமையாகச் செய்து முடிக்க இயலவில்லை என்பது உண்மை தான்.அதனை அவரே சொல்லி இருக்கிறார்.அதற்காக அவர் வருதப்பட்டும் இருகிறார்.அதற்காக அவர் தமிழர் நலனின் பாற்பட்டு இயங்கவில்லை என்று எந்தவித அடிப்படைகளும் அற்று எழுதிக் கொண்டிருகிறீர்கள். தமிழருக்காக தனது முதுமையிலும் இயங்கிய ஒரு மனிதர் மேல் எந்தவித அடிப்படைகளும் இன்றி வெறும் அவதூறுகளை மட்டுமே எழுதிக் கொண்டிருகிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தயா!

பெரியாரைப் பற்றி கட்டயாம் அறிந்து வைத்திருங்கள் என்று கூற வரவில்லை ஆனால் அவரைப் பற்றி கதைக்க வருகிறவர்கள் ஓரளவாவது தெரிந்து வைத்துக் கொண்டுதான் வரவேண்டும் அல்லது தெரிந்தவர்கள் சொல்லும்போது அதனைக் கேட்டு உள்வாங்க வேண்டும். உங்களுக்கு அடிப்படையே தெரியவில்லை.

பெரியார் 1939 ஆம் ஆண்டு திராவிடம் கேட்கவில்லை, அதுவும் ஜின்னாவை சந்தித்ததற்குப் பின் கேட்கவில்லை. 1940 ஆம் ஆண்டு தான் தமிழ் நாடு என்ற கோரிக்கை திராவிட நாடாக மாற்றம் பெறுகிறது. பெரியார் ஜின்னாவைச் சந்தித்தது 1941 இல். வரலாற்றை நீங்கள்தான் திரிபு படுத்துகின்றீர்கள்.

அடுத்து நெடுக்காலபோவானின் கருத்துக்கு பதில் கூற விரும்புகிறேன்.

தலித்தியம் என்பது சாதிய அடையாளம் அல்ல. தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் இணைக்கும் ஒரு போராட்டக் கருவி. ஈழத்த தமிழர் மத்தியில் இன்றும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன. அதனைக் களைய துப்பில்லாதவர்கள் தலித்தியத்தை எதிர்க்க வெளிக்கிடுகிறார்கள் இந்தியத் துணைக் கண்டத்தில் தலித்தியம் என்ற பதம் நிச்சயம் தேவை. ஈழத்திற்கு அது தேவையற்றது என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் சாதிய வக்கிரங்களும் உயர்சாதி ஆணவத் திமிர்களும் இல்லை என்று மறுத்துவிட முடியாது. நிலவுகின்ற சமூகத்தில் ஒரு சாதி ஆணவம் இருக்கும் பொழுது அவற்றை எதிர்ப்பது சாதிய வேறுபாட்டைக் களைந்து அவர்களை ஒன்றாக்கும் நோக்கிற்காவே தவிர அவர்களை வெறுத்து ஒதுக்குவதற்காக அல்ல. பார்ப்பனியத்தை எதிர்த்த பார்ப்பனர்கள் இல்லையா.!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்து நெடுக்காலபோவானின் கருத்துக்கு பதில் கூற விரும்புகிறேன்.

தலித்தியம் என்பது சாதிய அடையாளம் அல்ல. தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் இணைக்கும் ஒரு போராட்டக் கருவி. ஈழத்த தமிழர் மத்தியில் இன்றும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன. அதனைக் களைய துப்பில்லாதவர்கள் தலித்தியத்தை எதிர்க்க வெளிக்கிடுகிறார்கள் இந்தியத் துணைக் கண்டத்தில் தலித்தியம் என்ற பதம் நிச்சயம் தேவை. ஈழத்திற்கு அது தேவையற்றது என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் சாதிய வக்கிரங்களும் உயர்சாதி ஆணவத் திமிர்களும் இல்லை என்று மறுத்துவிட முடியாது. நிலவுகின்ற சமூகத்தில் ஒரு சாதி ஆணவம் இருக்கும் பொழுது அவற்றை எதிர்ப்பது சாதிய வேறுபாட்டைக் களைந்து அவர்களை ஒன்றாக்கும் நோக்கிற்காவே தவிர அவர்களை வெறுத்து ஒதுக்குவதற்காக அல்ல. பார்ப்பனியத்தை எதிர்த்த பார்ப்பனர்கள் இல்லையா.!

அதென்ன தாழ்த்தப்பட்டவர்கள். அதற்கான அடையாளங்கள் என்ன. கூர்ப்பில் பிந்தங்கிய ஒரு இனமா அவர்கள்..??! உண்மையில் இந்தத் தாழ்த்தப்பட்டது அனைத்தும் சாதியத்தை அடிப்படையாக வைத்துத்தான் எழுகின்றன. பழைய கள் புதிய பானையில்.. இந்திய வடிவில் ஈழத்துள் சாதிய இருப்பைக் காத்து தமிழினத்தைக் கூறுபோட்டு அழிக்க புகுத்தப்படுகிறது இந்தத் தலித்திய வேளாளப் பாகுபாடு. ஈழத்தில்.. தலித்தியமோ தாழ்த்தப்பட்ட வகுப்போ.. வேளாள வகுப்போ கிடையாது.. தமிழ் தேசிய உச்சரிப்புக்கு முன்னால். அப்படி இருக்க முடியாது.

தாழ்த்தப்பட்டவர்கள் என்றால் எவ்வகையில்.. பொருளாதார ரீதியிலா.. அதற்கு.. வேறு பல பெயரிடல் செய்யலாம்.. உரிமை என்றால் எவ்வகை உரிமைகள்.. சாதிய அடிப்படையில் எழுந்த பாகுபாடுகளால் தாழ்த்தப்பட்டவைதானே.. ஓ.. அப்ப இது சாதியம் சாராத சொல்லோ..???! தயவுசெய்து.. வாதங்களை உருப்படியா முன் வையுங்கள். ஒளிப்பு மறைப்புக்கு இங்கு இடமில்லை. ஒளிப்பு மறைப்புச் செய்து ஒரு இனத்தின் ஒற்றுமையில் கட்டியெழுப்பப்பட்ட தமிழ் தேசியத்தை சிதைக்க எந்தச் சக்திக்கும் எந்த முற்போக்குக் குரல் என்று கத்திக் கொண்டு வந்தாலும்.. எந்த வடிவிலும் அனுமதி அளிக்க முடியாது..!

சாதிய அடிப்படையில் பிரிக்கப்பட்ட சமூகங்களை தாழ்த்தப்பட்ட தாழ்த்தப்படாத வகுப்புகளுள் வகுத்து சாதியத்தைக் கட்டிக்காக்க முனையும் கொடூர பிற்போக்குத்தனத்தை தமிழ் தேசியம் ஒரு போது உள்வாங்காது. அதேபோன்று.. மத நல்லிணக்க சூழலை சிதைத்து.. மத அழிப்புச் சிந்தனையுள்ள.. பாசிச நாசியக் கொள்கைகளையும்.. தமிழ் தேசியம் உள்வாங்காது. :wub:

Link to comment
Share on other sites

தமிழ்த் தேசியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தமிழ்த் தேசியம் ஒரு பல்முக சிக்கலான கருத்துருவம். அனைவரும் ஏற்றுக்கொண்ட அல்லது நிலையான வரையறை தமிழ்த் தேசியத்துக்கு இல்லை. பல்வேறு காலகட்டங்களில், சூழமைவுகளில், நிலைகளில் தமிழ்த் தேசியம் வெவ்வேறு போக்குகளில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிற

Link to comment
Share on other sites

தலித் எழுச்சியே தமிழ்த் தேசியத்தை உருவாக்கும்''

சென்ற இதழில் வெளிவந்த ஞான. அலாய்சியஸ் அவர்களின் பேட்டி இந்த இதழிலும்...

அயோத்திதாசர் ஒரு சிந்தனையாளராக மட்டுமின்றி அவர் ஒரு மருத்துவராக, ஒரு பத்திரிகையாளராக, ஓர் இயக்கவாதியாக, பல்வேறு பரிமாணங்கள் உள்ளவராகத் திகழ்ந்திருக்கிறார். தாங்கள் ஆய்வு செய்த போது, அவருடைய பிற பரிமாணங்களைக் கண்டறிந்திருப்பீர்கள். அது குறித்துச் சொல்லுங்கள்

கிராம்சி என்னும் இத்தாலிய நாட்டு அறிஞர், அறிவுஜீவிகளை இரண்டு வகையாகப் பிரிக்கிறார். ஒன்று class intellectuals அதாவது, வர்க்கத்தில் வேரூன்றியோர். தெரிந்தோ தெரியாமலோ, தனது வர்க்கப் பின்னணியில் மூழ்கி, அந்த வர்க்கக் கருத்துகளையும் நலன்களையும் பிரதிபலிப்பவர். இரண்டாவது வகை, organic intellectuals அதாவது, தனது வர்க்கப் பின்னணியில் வேரூன்றியிருந்தாலும், அதனையும் கடந்து சிந்தித்து முழு சமூகத்தின் நலன்களைத் தனது எண்ணங்கள் மூலம் நிலை நிறுத்துபவர்; தன் குழுமத்தின் நலன்களையும் பெரும் சமுதாயத்தின் நலன்களுடன் இணைத்தும் ஒன்றுபடுத்தியும் பார்ப்போர். அயோத்திதாசர் இந்த இரண்டாம் வகையைச் சேர்ந்தவர். நீங்கள் சொல்வது போல, அவர் பல பரிமாணங்களைக் கொண்ட அறிவு ஜீவியாகத் திகழ்கிறார். இப்பரிமாணங்கள் மேலோட்டமாகவே தென்படுகின்றன. ஆனால், இவற்றைத் தாண்டி அயோத்திதாசர் சிந்தனையில் பல தளங்கள் காணப்படுகின்றன. தன் குழும நலன்களை உள்ளடக்கிய இன்றைய பெரும் சமுதாயத்தின் நலன் என்னும் உரைகல் கொண்டு தமிழ், இந்திய சமுதாயங்களின் பண்பாடு, வரலாறு, இலக்கியம், சமயம் ஆகியவற்றை அலசுகிறார். அவற்றை ஆய்ந்தெடுத்து இன்றைய தேவைக்காக கட்டமைக்கிறார். அவருக்கென்று சிறப்புத்தளம் இல்லை. வாழ்க்கையின் எல்லாத் தளங்களுமே அவருக்குப் பாடம். ஏனெனில், அவரது நோக்கம், சமூகத்தின் ஒட்டுமொத்தமான நலனும் முன்னேற்றமுமே.

அயோத்திதாசரை நான் இவ்வாறு வர்ணிக்கும்போது, நான் அவர் கூறும் எல்லாவற்றையுமே விமர்சனமின்றி ஏற்றுக் கொள்கிறேன்; அல்லது மற்றவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென நினைக்கிறேன் என்றாகாது. ஆனால், அயோத்திதாசரின் எழுத்துகளை முழுமையாகப் படித்துணரும்போது, ஓர் புதிய கோணம் முற்றிலும் நவீனமான கோணம், கண்ணோட்டம் உருவாகும் என்பது நிச்சயம். இன்றைய காலகட்டத்தில் எல்லா சமூக இயக்கங்களும், சிறப்பாக தலித் இயக்கங்களும் ஓரளவுக்கு மேல் முன்னேற முடியாமலும், முயற்சி செய்து பெற்ற சில நன்மைகளை நிலைநிறுத்த முடியாமலும் திணறுவதை நாம் காண்கிறோம். ஆனால், இரு துருவங்களாகப் பிரிந்து கிடக்கும், கலாச்சாரத் தளங்கள் அயோத்திதாசர் சிந்தனையால் கட்டாயமாக வளம் பெறும். மூன்றாவது உத்தி உருவாகவும் உறுதி பெறவும் வழிவகுக்கும்.

"அயோத்திதாசர் சிந்தனைகள்' வெளிவந்து அய்ந்தாண்டுகளுக்கு மேலாகின்றன. குறிப்பிட்ட அளவு பிரதிகளே அச்சடிக்கப்பட்டு வெளியாகியுள்ளதால் பரவ வேண்டிய அளவுக்கு அது பரவவில்லை. பரவிய பிரதிகளும் கவனமாக வாசிக்கப்படவில்லை என்றே தெரிகிறது. தமிழகத்தைப் பொருத்த மட்டிலும், சமுதாய முன்னேற்றத்தை விரும்பும் அறிவுஜீவிகள், அவர்கள் தலித்தாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி நேர்மையுள்ளவராக இருந்தால் அயோத்திதாசர் சிந்தனைகள், வற்றாத ஊற்றாக வருங்காலத்தில் உதவும் என்பதை உணர்வார்கள். இது, அவரைப் பின்பற்றிச் செல்வோருக்கும் அவரிடமிருந்து மாறுபட்டுச் செல்வோருக்கும் பொருந்தும்.

அயோத்திதாசர் முன்வைத்த தமிழ்த் தேசியம், இன்றைய நிலையில் எந்த அளவுக்குப் பொருந்தி வருகிறது?

அய்யா ஆனைத்து அவர்கள், அயோத்திதாசர் பற்றிய ஒரு மதிப்பீட்டுரையில், அயோத்திதாசரே முதன் முதலாக "தமிழன்' என்ற அடையாளத்தை முன்வைத்தார் என்று குறிப்பிட்டார். அயோத்திதாசர் பணி செய்த காலம், கீழ்மட்டத்தினர் சிறப்பாக பறையர்கள் தங்களுக்கென நவீனத்தில் புதியதொரு சமூக அரசியல் அடையாளத்தைத் தேடி நின்றனர். திராவிடர், ஆதி திராவிடர், பஞ்சமர், பிள்ளை என்னும் பல்வேறு முன்வைப்புகளுக்கிடையே அயோத்திதாசர் "தமிழன்' என்னும் அடையாளத்தை முன்வைக்கிறார். சாதியை விட்டொழித்தவன் தமிழன், ஆதித்தமிழன்; சாதியில் ஒட்டிக் கொண்டவன் பாதித் தமிழன், மீதித்தமிழன். ஏனென்றால் அவன் சாதித் தமிழன். இதுதான் பண்டிதர் பார்வை.

அதே காலகட்டத்திலும் அதற்குச் சற்றுப் பின்னும், இந்திய நாடெங்கும் உள்ள தாழ்த்தப்பட்ட குழுமங்களைச் சேர்ந்தோர், தங்களுக்கென புதுப் புது அடையாளங்களைத் தேடிக் கொண்டனர். 150க்கும் மேற்பட்ட அடையாள மாற்ற விண்ணப்பங்கள் செய்யப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். இவைகளில், ஒன்றிலாவது மொழி, பண்பாடு அனைத்தையும் சுற்றி வளைத்து உரிமை கொண்டாடும் அடையாளம் கோரப்படவில்லை. ஆனால், அயோத்திதாசர் மட்டுமே "தமிழன்' என்ற அடையாளத்தைத் துணிவுடனும் நம்பிக்கையுடனும் முன்வைக்கிறார்; சர்ச்சைக்கு உள்ளாக்குகிறார். ஓர் பரந்துபட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயம், நவீன எழுச்சியின் காலகட்டத்தில் பெரியதொரு இனக்குழுவின் அடையாளத்தை மேற்கொள்ள முனைவது அரசியல், தேசிய அரசியல் நடவடிக்கையாகும். தேசம் என்பது முன்னர் கூறியபடி, தள்ளப்பட்ட சமூகத்தினர் முன்னுக்கு இழுக்கப்பட்டு, எல்லாருக்கும் உரித்தான சமநிலையடைவதே. இந்த நிலைக்கு அயோத்திதாசர் தனது முன்னுரிமையைப் பிரகடனப்படுத்துகிறார்.

இது, இன்றைய நிலைக்கு எப்படிப் பொருந்தும் என்பதே கேள்வி! உலகமயமாகும் இந்நாளில் மொழிவழி தேசம், குறுகிய வட்டமாகாதா என்ற கேள்விக்கு இரண்டு பதில்கள் உள்ளன. ஒன்று, பண்பாட்டுக் கண்ணோட்டத்திலிருந்து; மற்றது அதிகாரக் கண்ணோட்டத்திலிருந்து. உலகமயமாகும் பொழுதே இன்னொரு இயங்கியலும் உடன் வருவது கவனிக்கத் தக்கது. நவீனத்தில் உருவான அரசியல் அமைப்புக்குப் பெயர் தேசம் அரசு. சுருக்கமாக இதன் உட்கருத்து ஒரு அதிகாரம் அரசு. இது கொள்கையளவில் உருவான ஒரு கற்பனை. ஆனால், உண்மையில் இன்று காணப்படுவது உலகெங்கும் பல பண்பாடு ஒரு அரசு; அல்லது ஒரு பண்பாடு பல அரசு. பொருளாதார ரீதியில் உலகம் ஓர்மையடையும் காலகட்டத்தில், பண்பாட்டு ரீதியில் ஒவ்வொரு பண்பாடும், இது காறும் ஒரு அரசுக்குள் இருந்தவை, தனக்கென தனியரசு கோரி போராட்டங்கள் நடத்துவது கண்கூடு. இப்போராட்டத்திலிருந்து வெகுசில தேச அரசுகளே தப்பியுள்ளன.

காரணம் என்னவெனில், தேசம் என்பது பண்பாடும், அதிகாரமும் ஒருங்கிணைந்த சமூக அமைப்பே. ஓர் அரசமைப்பில் பண்பாடுகளுக்கிடையில் பொருளாதாரம், தன்மானம் முதலியவற்றில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிறது. இதனைப் போக்க, தொடக்க காலத்தில் ஜனநாயகப் போராட்டங்கள் நடந்தாலும், இருக்கும் அரசியல் அமைப்புகளுக்குள் ஏற்றத் தாழ்வுகள் மறைய வழியில்லை. எனவே, தனிநாடு கோரிக்கை எழும்புகிறது. இது இன்றைய உலகில் ஏறக்குறைய எல்லா தேச அரசுகளிலும் நடப்பவை. சமூக அறிவியலாளர் இதனை Internal Colonialism- உள்காலனியம் என்று கணித்திருக்கின்றனர். பன்னாட்டு அமைப்புக்குள் எல்லா பண்பாடுகளும், முன்னேற்றப்பாதை தடைபடுவதை உணர்கின்றனர். இது, பண்பாடு ரீதியான கண்ணோட்டம்.

ஆனால், தலித்துகளின் நிலையிலிருந்து பார்க்கும்போது, அதிகாரரீதியான கண்ணோட்டம் இதைவிட முக்கியத்துவம் அடைகிறது. பண்பாட்டுக் குழுக்கள் அதிகாரத்தின் சமபங்கீடே. அதிகாரம் சமநிலைப் படுத்தப்படுவதே தேசம் என்று முன்பு கண்டோம். நவீனத்திற்கு முற்பட்ட காலத்தில் படிநிலைப் படுத்தப்பட்ட சமூக அமைப்பு, மொழி பண்பாடு மூலமாகவே உருவாக்கப்பட்டு, அவை மூலமாகவே நிலைநிறுத்தப்பட்டு, அவை மூலமாகவே திரும்பத் திரும்ப உருவாக்கப்படுகிறது. இந்நிலையை மாற்ற வரலாறு, மொழி, சமயம், பண்பாட்டு குறியீடுகளின் வாயிலாக உருப்பெற ஏற்றத்தாழ்வுகள் ஒவ்வொன்றாக உருக்குலைக்கப்பட வேண்டும். இந்த உருக்குலைப்பு, எந்த வழியாக சமுதாயம் உருப்பெற்றதோ அந்த வழியாகவே நடைபெற வேண்டும். அயோத்திதாசர் மொழியில் சொல்ல வேண்டுமானால், “எந்த வழியாக நாம் தாழ்த்தப்பட்டோமோ அதே வழியாகவே சென்றுதான் நாம் உயர முடியும்.''

இந்தியாவில் ஏற்றத்தாழ்வான வரலாற்று மூலம் உருவான சமூதாய அமைப்பு ஒன்றல்ல; பல. பிறப்பினால் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளைக் கற்பிக்கும் சாதி / வர்ண முறைகள் ஒன்றல்ல, பல. சாஸ்திரங்களில் மட்டுமே ஓர்மையான வர்ண முறையைச் சந்திக்க முடியும். சமுதாயத்தில் அது பண்பாட்டுக்குப் பண்பாடு மாறுபட்டும் வேறுபட்டுமே வெளிப்படும். சாதியை ஒழிக்க, ஏற்றத் தாழ்வுகளை எதிர்கொண்டு சமூகத்தில் வெற்றி பெற முனையும் தனிநபர்களும், குழுக்களும் சாதி முறையை அதன் மாறுபாடான சமூகத் தளத்தில்தான் சந்திக்க வேண்டும். சாஸ்திரத்தில் அல்ல.

பெருவாரியான தலித் மக்களின் எதிர்காலம் சாதி ஒழிப்பில்தான் அடங்கியிருக்கிறது என்பதே என் முடிவு. இது உண்மையானால், சாதிமுறையின் பண்பாட்டு அம்சத்தை சந்தித்தே ஆகவேண்டும். பண்பாட்டுக்குள் அதிகார சமத்துவ நிலை ஓங்குவதே தேசம் தேசியம். எனவே, பண்பாட்டுக் குழுவின் அடிமட்டத்தில் இருக்கும் தலித்துகளின் முன்னேற்றம் உயர்வுமே தேச உருவாக்கமும், தலித் விடுதலையுமாகும். இவை இரண்டும் ஒன்றேயன்றி இரண்டல்ல. படிநிலைப் படுத்தப்பட்ட பண்பாட்டை உருக்குலைத்து, சமநிலைப் பண்பாடு, அதாவது தேசம் உருவாவது தலித் எழுச்சியினால்தான் சாத்தியமாகும்.

மொழி, தனிப்பட்ட வரலாறு, பெருவாரி மக்களின் சமய நடவடிக்கைகள் இவற்றிற்குள்புகுந்தே இந்த தலித் எழுச்சி உயிரெடுக்க வேண்டும். அப்பொழுதுதான் பண்பாட்டுச் செயல்பாடுகள் மறைவதற்குப் பதிலாக மாறும்; சமநிலைநோக்கி உருவெடுக்கும், பண்பாட்டு அடிப்படையிலான சமத்துவமே நிலைநிற்கும். நவீன கொள்கையான சமத்துவம், அசமத்துவ பண்பாட்டுக்குள் ஆணியடித்து நிலைநிறுத்தப்பட வேண்டும். அப்பொழுது தான் ஒட்டுமொத்தமாக எல்லா தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் விடுதலை கிட்டும்.

நமது சூழலில், தமிழ்த் தேசியம் சமத்துவத்தை நோக்கிய தலித் எழுச்சியும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களே. சமத்துவமில்லாத தமிழ்த் தேசியம், மேல் மட்டத்தினரின் வெற்றுக் கூக்குரலாகவே இருக்கும். தலித் போராட்டம், தமிழ்த் தேசியம் இல்லாவிட்டால் வரையறுக்கப்படாத, தனி நபர்களின் முன்னேற்றமாகவும், அடைந்த சாதனைகள் நிலைநிறுத்தப்படாமலே அழிந்து போகும். சமத்துவத்தை நோக்கிய போராட்டம், பண்பாட்டு வரையறுப்புக்குள் நிகழும்போது அதுவே தேசியமாகிறது

நேர்காணல் : பாண்டியன்

http://keetru.com/dalithmurasu/aug05/aloysius.php

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்கு!

சாதிய அடையாளங்கள் மத அடிப்படைவாதங்கள் களையப் பட வேண்டும் என கூறி தமிழ்த் தேசியத்தைப் பலப்படுத்த நாங்கள்தான் முனைகின்றோம் உங்களைப் போன்றவர்கள் இந்துத்துவத்திற்கு வால் பிடித்து அதை தமிழ்த் தேசியத்திற்குள் கலக்கும் செயலை செய்கின்றார்கள். உமது எழுத்துக்களே இதற்கு சாட்சி.

தனிப்பட்ட இறை நம்பிக்கை வேறு மத அடிப்படை வாதம் வேறு. தமிழ்த் தேசியத்திற்குள் ஆத்திகரான நெடுமாறனும் இருக்கலாம் நாத்திகரான சுபவீயும் இருக்கலாம் ஆனால் சோ இருக்கலாமா? இராம. கோபாலன் இருக்கலாமா??

இந்தப் பதிவிற்கு சாதி மத பேதமின்றி அனைத்து மக்களுக்காகவும் போராடும் சங்பரிவார் என்று தலைப்பிட்டிருக்கிறார் தூயவன்

நல்ல வேடிக்கை விசயம் தெரியாமல் இருக்கிறார்களா அல்லாது முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக் முயல்கிறார்களா தெரியவில்லை!

கிறிஸ்தவர்களையும் முஸ்லீம்களையும் அழிப்பதற்கு கத்தி கடப்பாரையோடு அலையும் கூட்டம்தான் சாதி மத பேதமின்றி போராடுகிறதாம்!!!! நல்ல கூத்து

இதன் முக்கிய தலைவர் ( அசோக் சிங்கா அல்லது தொல்காடியா இருவரில் ஒருவர் யாரென்று சரியாகத் தெரியவில்லை) சிவனின் சூலத்தை வைத்து பின்வருமாறு விளக்கமளித்தார்.

" சூலத்தில் இருக்கும் முதல் வேல் முஸ்லீம்களை கழுவறுக்க, மூன்றாவது வேல் கிறிஸ்தவர்களை கழுவறுக்க நடுவில் இருக்கும் பெரிய வேல் மதச்சார்பற்றவர்களை (அதாவது எங்களைப் போன்றவர்களை) கழுவறுக்க "

இப்படிச் சொன்னவர் ஒரு கடைத்தரப் பேர்வழி அல்ல ஒரு முக்கிய தலைவர். இதுதான் சமூகக் கட்சியாம் யாரை ஏமாற்று கிறார்கள் இதை சமூகக் கட்சி என்று சொன்னால் சோ சுப்பிரமணிய சுவாமி வகையறாக்களே விழுந்து விழுந்து சிரிப்பார்கள். அல்லது சங்பரிவார் கைகளில் தூயவன் போன்றோர் மாட்டினால் அவர்களே தோலை உரித்து காயப் போட்டு விடுவார்கள்!

Link to comment
Share on other sites

மொழியும் சமத்துவமுமே தேசியத்தின் அடித்தளம்

சென்ற இதழில் வெளிவந்த ஞான. அலாய்சியஸ் அவர்களின் பேட்டி இந்த இதழிலும்...

நீங்கள் முன்வைக்கும் தேசியம் என்பது சோஷியலிசத்துடன் நெருங்கி வருமா?

கட்டாயமாக! இந்திய சோஷியலிஸ்டுகள், சோஷியலிச கம்யூனிசக் கொள்கையை ஏதோ புதியதொரு வேதமாகக் கொண்டு, எங்கிருந்தோ சமத்துவத்தைக் கொண்டு வந்து திணிப்பது போல் செயல்படுகின்றனர். சமத்துவம், பண்பாட்டின் இருதயத்திலிருந்து துளிர்க்க வேண்டும். துளிர்க்கும் சமத்துவமுமே என்றும் நிலைநிற்கும்; அ-சமத்துவ மனப்பான்மை, வழி முறைகளை எதிர்கொண்டு அவற்றை வென்றால்தான் அடுத்த படிக்குச் செல்ல முடியும். க, இந்தியச் சூழலில் சாதி ஒழிப்பின்றி சமத்துவம் இல்லை. சாதி ஒழிப்பின்றி தேசியம் இல்லை, சாதி ஒழிப்பின்றி கட்டாயமாக, சோஷியலிசமோ, கம்யூனிசமோ இல்லை. இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது அரசியல் தேசியம் - Political Nationalism சோஷியலிசத்தை நோக்கிச் செல்லும் வழியில் ஒரு மைல்கல். அரசியல் தேசியத்தைத் தாண்டித்தான் (தவிர்த்து அல்ல) சோஷியலிசத்துக்குச் செல்ல முடியும். இந்தியாவிற்கு மட்டும் தனியாக விதியொன்றும் இல்லை. பிரான்ஸ் நாட்டிலும் மூன்று Orders அல்லது Estates இருந்தன: கும்பிடுவோர், போரிடுவோர், ஏர்பிடிப்போர் என்று அங்கும் குழுக்களிடையே பல தடைகள் இருந்தன. இம்மூன்று Ordersம் ஏறக்குறைய பிறப்பால் அமைந்தவையே.

ஏர்பிடிக்கும் பெருவாரியான கூட்டம், நம் நாட்டின் ‘கீழ்சாதி'கள் இருக்கும் நிலையில் இருந்தன. அவர்களுக்கு ‘ஆன்மா' இல்லை என்றுகூட வேதியியலார் எழுதினர். கிறிஸ்துமஸ் பண்டிகையின் நடனங்களில்கூட, ஒருவர் மீது ஒருவர் பட்டுவிடக்கூடாதென்பதற்காக, குழுக்களின் இடையே கயிறு கட்டி நடனமாடினர். ஆனால், இவையெல்லாம் புரட்சியின் போது மறைந்து ஒழிந்தன. மூன்று சமூகங்களும் ஒன்றாயின. அப்படி ஒன்றாகியே தேசம் என்னும் பெருஞ்சமுதாயம் உருவானது.

இதேபோல் ஜெர்மனியில் Folk என்னும் பொதுக் கருத்து உருவாகி, அதுவே குடிமகன் நிலைக்கு உயர்த்தப்பட்டது. இங்கிலாந்தில் அதற்குச் சமமாக உழைக்கும் வர்க்கம் என்னும் கருத்து முன்வைக்கப்பட்டது. க, பிரான்சின் விவசாய அடிமைகள், ஜெர்மனியின் நாட்டுப்புறத்தார், இங்கிலாந்தின் உழைப்போர் இவர்களே தேசம் உருவாக அடித்தளமாக அமைந்து, குடிமகன் என்னும் நிலைக்கு உயர்த்தப்பட்டனர். அந்தக் கணக்கில் இந்நாட்டின் கீழ்ச் சாதிகள் என்படும் பெருவாரியானோரின் முன்வருகையும் சமூக உயர்த்தலுமே தேசம் என்று கொள்ளப்படும். ஆனால், நடந்தது என்ன? ‘கீழ்சாதி'கள் எனப்படும் உழைப்போர், தேச அரசு உருவாக்கப்படும் பட்சத்தில் இன்னும் கீழே தள்ளப்பட்டு, அதில் பலர் தீண்டாதோர் என்னும் நிலையில் உறுதி செய்யப்பட்டனர். தேசத்தை உருவாக்கும் நேரத்தில், ஆளும் வர்க்கம் நடந்து கொள்ளும் முறைபற்றி அம்பேத்கர் அருமையாக விளக்குகிறார். பிரான்சில் "நோபிள்ஸ்' என்றழைக்கப்படும் ஜமீன்தார்கள், காலம் மாறுவதைக் கண்டு, தங்களது எதிர்காலத்தைக் கணித்து, பிறப்பினால் பெற்ற சலுகைகள் மூலம் ஆதிக்கம் செலுத்தும் முறையை விட்டுவிட முன்வந்தனர். பிறகு தொழில் செய்து, தமது சாதனையால் மேலோங்க முனைந்தனர். இதேபோல் ஜப்பானின் ‘சாமுராய்'களும் குறிப்பிட்ட காலத்தில் வழிவழியாக வந்த தமது நில உரிமைகளை விட்டுக் கொடுக்க முன்வந்தனர். இந்த மாதிரியான விட்டுக் கொடுத்தலால், பிரான்ஸ், ஜப்பான் நாடுகளும் அதன் மக்களும், வலுவான தேசத்தைச் சமைத்தனர். ஆனால், இதற்கு மாறாக இந்தியாவின் ஆளும் வர்க்கங்களான ஆதிக்க சாதிகள், தேச அரசு உருவாக்கும் காலகட்டத்தில் தமது பரம்பரைச் சலுகைகளை இன்னும் விரிவுபடுத்தினர்; உறுதிப்படுத்தினர். அதனால்தான் இன்று இந்தியா இந்நிலையில் உள்ளது.

சோஷியலிசத்தின் உட்கரு சமத்துவம் என்றால், அதன் ரம்பம் அரசியல் தேசியமே. அதனைச் சமைப்போர் இதுகாறும் தள்ளப்பட்டு, இப்போது முன்வரத்துடிக்கும் பெருவாரியான "கீழ் சாதி'களே.

பார்ப்பனர்கள் காலனிய எதிர்ப்பை, தேசியம் என்கிறார்களே!

ஆதிக்கச் சாதியினர் தமது ‘தேசியத்தை' காலனிய எதிர்ப்பு தேசியம் என்று வர்ணிக்கின்றனர். இது, பண்பாட்டுத் தேசியத்தின் மறு பெயரேயன்றி வேறல்ல. பண்பாட்டுத் தேசியத்திற்கும், இனத்தேசியத்திற்கும் (Racial Nationalism) வேறுபாடு அதிகமில்லை. இவ்வகையான தேசியம் சில காணக்கூடிய, பிறப்பால் உண்டான அடையாளங்கள் நிறம், உடல்வாகு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது. இங்கு அது இந்தியன் வெள்ளையன் என்ற முரண்பாட்டை உள்ளடக்கியது. இவ்வகையான பிறப்பால் உண்டான வேறுபாடு, நவீன சமூக உறவுகளுக்கும் அரசியல் அமைப்புகளுக்கும் ஒவ்வாதது. மேலும் "இந்தியத் தேசியம்' காலனியாதிக்கத்தின் கீழ் எழுந்த காலனிய கட்டமைப்பைக் கட்டவிழ்ப்பதற்காக எழவில்லை. மாறாக, காலனிய ஆதிக்கத்தாரான வெள்ளையரை விரட்டி அவ்விடத்தில் இந்தியரை அமரச் செய்து, காலனிய கட்டமைப்பை தொடரச் செய்வதே நோக்கம்.

இதில் ஒரு சிறப்பு என்னவென்றால், சாதி ஒழிப்பு இயக்கத்தவர்தான் காலனிய கட்டமைப்புக்குச் சாவுமணி அடித்தனர். முன்சாதி, பின்சாதி என்ற பாகுபாட்டை ஏற்க மறுத்து எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற கூக்குரல் எழுந்தபோதுதான் ஆங்கிலேயராட்சி அர்த்தமற்றுப் போகத் தொடங்கியது. எல்லாருக்கும் எல்லாம் கிடைத்தால், அந்நியனுக்கு என்ன மிஞ்சும்? காலனியத்தால் அவன் அடையும் பயன் என்ன? பெருவாரியான உழைக்கும் பெருமக்கள் சமூக அரசியல் விழிப்புணர்வு அடையும் வரையில்தான் காலனியம் சரிப்பட்டு வரும். எனவே, மெய்யான காலனிய எதிர்ப்பாளர் யார் என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஒரே மொழியைக் கொண்டவர்கள்தான் ஒரு தேசமாக மாறியிருக்கிறார்கள் என்றொரு கருத்து இருக்கிறதே!

உண்மைதான். மொழி என்பது ஒரு விரிந்து பரந்த சதாயத்தை, நிவீனத்திற்கு முற்பட்ட காலத்தில் கட்டிக் காத்து வருவது. மொழி ஒரு தொடர்பு சாதனம் மட்டுமல்ல; அது ஒரு சமூக உறவு சாதனமும்கூட.

சமநிலைப்படுத்தப்பட்ட தனிமனிதர்களைக் கொண்டதுதான் தேசியம் என்றால், அம்மாதிரியான நிலையை அடைவதற்கு மொழிச் சமுதாயமே மிகச் சரியான அடித்தளம். சமத்துவ மனப்பான்மை, செயல் முறைகள் மொழிவழியே வெளிப்படுகின்றன. நவீனத்தில் சமத்துவம் இலக்காகும்போது, இம்மாதிரியான சமத்துவக் கோட்பாடுகளும் வழிமுறைகளும் மொழிவழியே அழிக்கப்பட்டு, புது நியாய உறவுகள் மொழிவழியே வெளிப்படுகின்றன. உலகில் மாறுதலடைந்து முன்னுக்கு வந்துள்ள தேசங்களின் பெரும்பான்மையானவை மொழிச் சமுதாயங்களேயாகும்.

ஆனால், மொழி என்பதையும் மாற்ற முடியாத பிறப்படையாளங்களாக, இனத் தேசியமாக மாற்றிவிடக் கூடாது. மொழி தாரம். ஆனால், நவீனத்தில் அந்த மொழியும், மொழி மூலம் வெளிப்படும் பண்பாடும், சமத்துவத்தை நோக்கி மாற வேண்டும். புதிய மொழியும் பண்பாடும், பழமையை மாற்றி உருவாக்கப்பட வேண்டும். தமிழ் மொழியையும், தமிழ்த் தேசியத்தையுமே எடுத்துக்கொள்வோம். பன்மொழி, பல பண்பாடுகள் கொண்ட இந்தியா ஒரு தேசமாக மாறுவதைவிட, ஒரு மொழி ஒரு பண்பாடு கொண்ட தமிழகம் தேசமாக மாற வாய்ப்புகள் அதிகமுண்டு. ஆனால், இந்தத் தமிழ் மொழியும் தமிழ்ப் பண்பாடும், வழிவழிவந்த செயல்முறைகளையும் மொழி மரபுகளையும் குறிப்பிடுவன அல்ல. மாறாக, இவை நவீனத்துக்குள், சமத்துவப்படுத்தப்பட்ட மொழியும், பண்பாடுமே தமிழ் மொழியும் தமிழ்ப் பண்பாடும். இதுவே தமிழ்த் தேசியம்.

சமத்துவப்படுத்தப் படவில்லையெனில் அந்தத் தமிழ் மொழிக்கும், தமிழ்ப் பண்பாட்டுக்கும் பின்னால் பெருவாரியான மக்கள் அணிவகுக்க முன்வர மாட்டார்கள். சுருங்கச் சொன்னால், ஒரு மொழிச் சமுதாயத்துக்குள்தான், பிறப்பால் உண்டான ஏற்றத்தாழ்வுகளை அழிப்பது சாத்தியம். ஆனால், அந்த சாத்தியத்தை நடைமுறைப்படுத்தினால்தான் மொழிவழி தேசியம் அரசியல் தேசியமாக உருவெடுக்கும். தமிழ்த் தேசியத்தை வெற்றியாக்கும் ஒரே யுக்தி சாதியை ஒழித்து, சமநிலைப் படுத்தப்பட்ட அரசியல் சமுதாயத்தைத் தமிழகத்தில் ஏற்படுத்துவதே!

தேசத்திற்கு மொழியைத் தவிர, வேறு என்ன கூறுகள் தேவை?

Ernest Geller என்னும் அறிஞர், தேசியம் ஒரு சமுதாயத்தில் எப்பொழுது எழுகிறது என்று குறிப்பிடுகிறார்: ஒரு சமுதாயத்தின் அடித்தளம் வேளாண்மையிலிருந்து தொழில்மயமாக மாறும் பொழுதே அதற்கு தேசியம் தேவைப்படுகிறது என்கிறார். இது பற்றி விவாதங்கள் செய்யலாம். ஆனால், அவர் சொல்வதில் ஒரு மறுக்க முடியாத உண்மை இருக்கிறது. பிறப்பால் ஏற்றத் தாழ்வு கற்பிக்கும் சாதிமுறை, வேளாண்மையை அடித்தளமாகக் கொண்டது. இதனை உடைப்பது மிகவும் அவசியம். தொழில் மயம் என்பதன் அர்த்தம் என்னவென்றால், இதுவரை உற்பத்தி அரசியல் இரண்டிலும் ஒரு சில சாதிகளே இடத்தை அடைத்துக் கொண்டிருந்தனர். தொழில்மயமாகும் பட்சத்தில் பொது இடம் விரிவடைந்து, அதில் தள்ளப்பட்ட மக்கள் வந்து நிலைக்க வாய்ப்பு உண்டாகிறது.

அதாவது ஒரு தேசம் உருவாகிறது என்றால் அதன் உற்பத்தி அரசியல் பொது இடம், மக்கள் மயப்படுத்தப்பட்டு, பல்வேறு புதுத் துறைகள் மக்களின் தகுதிக்கும் தேவைக்கும் ஏற்ப விரிந்து, சமூக உறவுகளின் நெருக்கம் அதிகரிக்க இடம் உண்டாகிறது. கார்ல்டாய்ச் என்னும் அறிஞர், "தேசம் என்பது, சமூகத் தொடர்புகளும் உறவுகளும் அதிகரிக்கப்பட்ட பொது இடமே' என்கிறார். பல்தொழில் வளர்ச்சி, சமத்துவத்தை வளர்ப்பதோடு, பொது இடத்தை மக்கள் மயப்படுத்தும். இறுதியாக, புதிய கண்ணோட்டங்கள், புதிய கருத்துகள், குறிப்பாக தள்ளப்பட்ட மக்களின் பார்வையால் எழும் புதுக் கோணங்கள் இவற்றை ஒரே நேர்காணலில் விளக்குவது கடினம். இவற்றின் மொத்த தொகுதியே என்னுடைய Nationalism without a Nation என்னும் ஆங்கில நூல். தமிழ் மக்கள் சிறப்பாக கடைநிலைப்படுத்தப்பட்டோர், இந்நூலைக் கூர்ந்து வாசிக்க வேண்டுகிறேன். அதற்குப் பிறகு பல்வேறு அரங்குகளில் அதனை விவாதிக்கலாம்.

இன்றைக்கு நீங்களும் நானும் ஒரே தேசத்தைச் சார்ந்தவர்கள் என்றால், நீங்கள் என்னை இன்னொரு குடிமகனாக மதிப்பதால்தான்! Brother Citizen -Fraternity. உங்களுடைய சுதந்திரத்தை நான் மதிக்கிறேன்; என்னுடைய சுதந்திரத்தை நீங்கள் மதிக்கிறீர்கள். உங்களுக்கும் எனக்கும் சமத்துவம் இருக்கிறது. நீங்கள் என்னை ஒரு சகோதரனாக மதிக்கிறீர்கள். அது நம் உள்ளே இருக்கும் அசமத்துவத்தை கொஞ்ச கொஞ்சமாக உடைத்து, அவிழ்த்து மீதியை நவீனத்திற்கு முன்பிருக்கிற பண்பாடு மூலம் அதைப் பாதுகாத்து வைத்திருப்பதுதான் தேசம்.

அப்போது வெறும் மொழி மட்டுமே போதாது என்கிறீர்களா?

போதவே போதாது. இதற்கு நான் ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன். பிரான்சில் "அல்சேட்ஸ்' என்றொரு இடம் இருக்கிறது. இந்தப் பகுதியில் பேசக்கூடிய மொழி ஜெர்மன். பிரான்சுக்கும் ஜெர்மனிக்கும் இடையே பிரச்சினை எழுந்தது இந்த ‘அல்சேட்ஸ்' எங்கே போக வேண்டும் என்று. ‘அல்சேட்ஸ்' காரர்களிடமே கேட்கிறார்கள். நீங்கள் மொழியில் ஜெர்மனியுடன் சேர வேண்டியவர்கள். ஆனால், அவர்கள் என்ன சொன்னார்கள் என்றால், நாங்கள் மொழி அடிப்படையில் ஜெர்மனியுடன் ஒன்றாக இருக்கலாம். ஆனால், நாங்கள் இருக்க விரும்புவது பிரான்சுடன்தான். இது ஏன் எனில், தேசம் என்பது இறந்த காலம் மட்டுமல்ல; நிகழ்காலமும் இன்னும் சிறப்பாக எதிர்காலமும்.

அவர்கள் பிரான்சுடன் செல்ல விரும்புவதற்குக் காரணம், அங்கு ஓரளவுக்கு ஜனநாயகம் கடைப்பிடிக்கப்பட்டது. ஜெர்மனியில் இருந்தால் எங்களுக்கு அதிகாரம் கிடைக்காது என்று சொன்னார்கள். பிரான்சில் எங்களுக்கு சமத்துவம் கொடுக்கத் தயாராக இருக்கிறார்களே என்று சொன்னார்கள். பிரெஞ்சு மொழியை பிரான்ஸ் நாடு முழுவதும் பரப்ப, அங்கு மாபெரும் போராட்டம் நடந்தது. சமூக உரையாடல்கள் நிகழ்ந்தன. வெறும் வார்த்தை உரையாடல்கள் அங்கு நிகழவில்லை. இந்த சமூக உரையாடல் மூலம் நெருக்கமும், அடர்த்தியும் பெருகுகின்ற போதுதான் தேசம் என்பது உருவாகிறது.

தேசிய உருவாக்கத்தில் மொழியைச் சமூக மாறுதல்களை வெளிப்படுத்தும் களமாகக் காண வேண்டும். மொழியும் ஜனநாயகத்தை நோக்கி மாறுதல் அடைய வேண்டும். நவீனத்திற்கு முன், மொழி பல்வேறு பிரிவினைகளில் அடைபட்டுக் கிடக்கிறது. பார்ப்பனர் மொழி, ‘மேல்சாதி' மொழி, ‘கீழ்சாதி மொழி' என்றும், வட்டார மொழிகளென்றும் வேறுபட்டுக் கிடக்கின்றன. நவீனத்தின் எழுச்சியில் அதாவது தேசம் உருவாகும் காலகட்டத்தில், வேறுபாடுகளும் மாறுபாடுகளும் மொழியிலிருந்து மறைய வேண்டும். ‘புது மொழி', ‘நவீன மொழி', ‘தேசிய மொழி' என்ற ஒன்று உருவாக வேண்டும். இந்தப் புதுமொழி, பொது மொழியின் உருவாக்கம், சமூக உறவுகளில் ஏற்படும் சமத்துவத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகும். எந்த அளவுக்கு சமூக உறவுகள் ஜனநாயகப்படுத்தப்படுகிறதோ, அந்த அளவுக்கே மொழியும் பொது மொழியாக, புதிதாக உருவெடுக்கும். மொழி மட்டும் போதுமா என்ற கேள்விக்கு போதும் என்றும், போதாது என்றும் சொல்லலாம். ‘பழமை' மொழி கட்டாயமாக போதாது. ‘புதுமை' மொழி போதும். புதுமை மொழி என்பது, மேலே விளக்கியது போல் பண்பாட்டுக்குள் சமத்துவப்படுத்தப்பட்ட மொழி. சமூக உறவுகளில் ஏற்படும் சமத்துவம், மொழியில் பிரதிபலிக்க வேண்டும்.

இப்படி உருவாகிய புதுமொழியில் சமூகத்தின் பல்வேறு குழுக்களின் உரையாடல்களும் அடங்கியிருக்கும். ஒரு குறிப்பிட்ட குழுவின் மொழியே, அதிகாரத்தின் மூலம் பொது மொழியாக்கப்படுமானால், அது தேசிய மொழியாகாது. புது மொழி என்பது சிதறுண்டு கிடக்கும் பல்வேறு பேச்சு வழக்குகளை ஜனநாயக முறையில் ஒருங்கிணைக்கப்பட்ட composite மொழியாகும். இப்படி ஒருங்கிணைக்கப்பட்ட புது மொழிக்குள், இதுகாறும் ஒதுக்கப்பட்ட சமூக குழுக்கள், தங்களுடைய பேச்சு வழக்குகள், செயல் முறைகள் பிறவற்றைக் காண முடியும். அப்படி இனங்கண்டு கொள்வதால் மட்டுமே தள்ளப்பட்ட குழுக்களுக்கு, புது மொழியின் மீது பற்றுதல் ஏற்படும். தன் மொழி என்ற உணர்ச்சி ஏற்படும். இந்த புது, பொது, நவீன, தேசிய மொழியே பள்ளிப் பாடப் புத்தகங்கள் மூலம், தினசரி செய்தித்தாள்கள் மூலம், சினிமா முதலான ஊடகங்கள் மூலம் பரப்பப்பட்டு, புது முறையான ஒற்றுமைக்கு அடிகோலும். மாறாக, மொழித் தேசியம் என்ற பெயரில் அதிகாரக் குழுக்களின் பேச்சு, எழுத்து வழக்குகளைத் தூக்கிப் பிடிப்பதும், வழக்கத்தில் உள்ளதை இன்னும் உறுதிப்படுத்துவதும், மாறுதலடையாத மொழியை (அதாவது மாறுதலடையாத பண்பாட்டை) காப்பதற்கான இயக்கங்கள் நடத்துவதும் உண்மையிலேயே தேசியம் உருவாவதைத் தடுத்து நிறுத்தவே செய்யும். மக்களிடையே பிரிவினைகளை அதிகப்படுத்தும்.

தேசத்தின் ஒருமைப்பாட்டை, உருவாக்கத்தை எப்படி விளக்கலாம்?

தேசம் என்ற சமூக ஒருங்கிணைப்பு முயற்சி, இரண்டு விதமாக விளக்கப்படுகிறது. 1. பண்பாடு 2. அதிகாரம். ஆதிக்கவர்க்கத்தினர் தங்கள் ஆதிக்க நிலையை தொடர வைப்பதற்காக பண்பாட்டு ஒற்றுமையைச் சுட்டிக்காட்டி, "பண்பாட்டு தேசம்' என்ற கருத்தை முன்வைக்கின்றனர். சமத்துவத்தை நோக்கி நடைபெறும் சமூக மாறுதல்களைத் தடைசெய்வதுதான் இந்தப் பண்பாட்டுத் தேசத்தின் உள்நோக்கம். சமூக உறவுகளில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை ‘நமது பண்பாடு' என்று விளக்குவது; இதனால், அந்தப் பண்பாட்டில் கை வைப்பவன் தேச எதிரியாகிறான். அடிமைப்படுத்தப்பட்ட வர்க்கத்தினர், தங்கள் நிலையிலிருந்து மீள வேண்டி முன்வைப்பது அதிகாரத் தேசியம். சமூகத்துக்குள் சமப்படுத்தப்பட்ட சமூக அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்ட தேசிய ஒருமைப்பாடு. இங்கு பண்பாடு அல்ல. மாறாக, சமநிலையே ஒற்றுமைக்கு அடித்தளமாகிறது. எல்லாருக்கும் சம அதிகாரம் என்ற கருத்தும், உணர்வும் மக்களிடையே சகோதரத்துவத்தை உறுதிப்படுத்துகிறது. புதுமுறையான சமூக அதிகாரப் பங்கீட்டால் வரும் ஒற்றுமையே தேசம். இதுவே ஒதுக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்பும் முயற்சியுமாகும்.

ஆனால், உண்மைநிலை என்பது இரண்டிற்கும் இடைப்பட்ட process- தொடர்ந்த முயற்சியும் இயக்கமும். ‘பண்பாட்டிலிருந்து அதிகாரத்தை நோக்கி' என்பதே உண்மையான தேசத்தின் உருவாக்கம். ஆதிக்க வர்க்கத்தினருக்கு பண்பாடு' எவ்வளவு முக்கியமோ, அதே அளவு அடிமை வர்க்கத்தினருக்கும் அது முக்கியம். பண்பாடு தவிர்த்த தேசியத்திற்கு அடித்தளம் இல்லை. அது நிலைக்காது. தேசிய ஒருங்கிணைப்பு என்பது அரசு மூலமோ, அரசின் பல்வேறு சட்டங்கள், ஒழுங்கு முறைகள் மூலமோ கொண்டுவர இயலாது. மேலும், பல நூற்றாண்டுகளாக உருவாகிவந்த சமூக உறவுக்களங்களை ஒரேயடியாக அப்புறப்படுத்தவும் முடியாது. தேசம் என்பது எவ்வளவு புதுமையோ அவ்வளவு பழமையும் ஆகும். ஆனால், பிரச்சனை என்னவென்றால் எந்தப் பண்பாடு எந்தப் பழமை என்பதே. சாதிமுறை பழமை என்றால், சாதி எதிர்ப்பும் பழமையே. பாகுபாடுகள் பண்பாடென்றால், பாகுபாடற்ற சமுதாயத்தை உருவாக்கும் முயற்சிகளும் பண்பாடே. எந்தப் பண்பாட்டை எடுத்துக் கொண்டு நவீனத்தை நோக்கி நடைபோடுவது என்பதில்தான் பிரச்சனை. ஆதிக்கவர்க்கங்கள் சாதியைப் பண்பாடென்று கூறும் பொழுது, அடிமை வர்க்கங்கள் சாதி எதிர்ப்பு பரம்பரையை பண்பாடு என்று முன்வைக்கும்.

பண்பாடு என்றால் என்ன?

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், சமூக அதிகாரத்தின் உருவே பண்பாடு. Culture is power. எல்லா சமூக உறவுகளும் அடித்தளத்தில் அதிகாரப் பங்கீட்டு முறைகளே. ஒரு சமூகத்தின் அதிகாரப்பங்கீடு எப்பொழுதுமே மாறிக் கொண்டேயிருக்கும் என்றாலும், அவற்றில் இரண்டு பெரும் இயக்கங்களைக் காண முடியும். மாறுதலை நோக்கி நடைபோடுவது ஒன்று; மாறுதலைத் தவிர்க்க முயலுவது மற்றொன்று. இவை இரண்டும் பின்னிப் பிணைந்து அன்றாட சுமுகமான செயல்பாட்டில் கருத்திணக்கம் கொண்ட முழுமையையே ப‎ண்பாடு என்கிறோம்.

பண்பாடும், அதிகாரமும் ஒரே நாணயத்தின் இருபக்கங்களே: சாதியை எடுத்துக் கொண்டால், சாதியால் பயனடையும் குழுக்கள், அதனைப் பண்பாடென்று வர்ணிப்பதும், சாதியால் இழப்படையும் குழுக்கள் அதனை, அநியாயமான அதிகாரப் பங்கீடு என்று கண்டிப்பதும் கண்கூடு. ஒரு சிறிய எடுத்துக்காட்டு : இரண்டு நாற்காலி ஒரு அறையில் இருக்கிறது. மூன்று பேர் உள்ளே வருகிறோம். மூன்று பேருக்கு இடையில் போராட்டம் நடந்து இரண்டு பேர் நாற்காலியில் அமர்ந்து விடுகிறார்கள். ஒருவர் தரையில் அமர வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அன்றைய நிகழ்ச்சி முடிந்து போய்விட்டார்கள். அடுத்த நாளும் அதே மூன்று பேர் வருகிறார்கள். அதே மாதிரி சண்டை நடக்கிறது. நேற்று கீழே அமர்ந்தவருக்கு, இன்றைக்கு சண்டை போட்டதில் பாதி பலம் குறைந்து விட்டது. நேற்று விட்டுக் கொடுத்து விட்டாரே. இன்றைக்கு புதிய பலத்தை அவர் எங்கிருந்து பெறுவார்? இன்னும் அரைகுறை மனத்துடன்தான் கிடைத்தாலும் கிடைக்கும் என்றுதான் போராடுகிறார். ஆனால், மூன்றாவது நாளும் அவரே முதலில் வந்தாலும், பேசாமல் எதுக்கு வீண்வம்பு என்று கீழே போய் அமர்ந்து விடுகிறார். நான்காவது நாள், வேறொருவர் வந்து ஏம்பா நீ மேலே உட்கார்ந்திருக்க; அவர் கீழே இருக்கிறாரே என்று சொன்னால், மேலே உட்கார்ந்திருப்பவரே சொல்கிறார் இதுதாங்க எங்க வழக்கம். எங்க கலாச்சாரமே இப்படித்தாங்க என்கிறார்.

கீழே உட்கார்ந்திருப்பவர் ஏதும் சொல்ல மாட்டார். பலசாலி இடத்தைப் பிடித்துக் கொண்டார், என்ன செய்ய முடியும் என்பார். இது தொடர்ந்து ஒரு பண்பாடாகவே மாறி விடுகிறது. அதிகாரப் போராட்டம். சமூக அதிகாரத்துக்கான ஒரு போராட்டம். பழக்க வழக்கம் மூலம் இதுவே பண்பாடாக மாறிவிடுகிறது. பிறகு கொஞ்ச நாளில் மறந்து விடுகிறோம். போராட்டத்தின் மூலம் இவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பதை மறந்துவிட்டு இது நம்ம வழக்கம்தானே என்றும் அதற்கு ஒரு காரணம் நான் கறுப்பாக இருக்கிறேன் குட்டையாக இருக்கிறேன், என்றும் சொல்லிக் கொண்டு, அதற்குப் பிறகு எனது பிள்ளையும் கீழேதான் உட்கார வேண்டும் என்று சொல்லிக் கொள்வது. சில காலத்திற்குப் பிறகு எப்படி இந்தக் கலாச்சாரம் வந்தது என்று நினைக்கும்போது இது போராட்டத்தில் தொடங்கிய விஷயம் போலிருக்கிறதே என்று சொல்லி, மாற்றப்பட்டுள்ள இன்றைய சூழலில் இன்னொரு போராட்டத்தை நடத்திப் பார்க்கலாமே என்று சொல்லி இது இடைப்பட்ட காலத்தில்தானே வந்தது என்று சொல்லி, சண்டையிட்டு சில சமயம் வெற்றி பெற்று விடுகிறார்கள். அவர் மேலே வந்துவிடுகிறார்; மேலே இருந்தவர் கீழே போய்விடுகிறார்.

இதற்குப் பிறகு இந்தப் புதிய அதிகாரப்பங்கீடும் பண்பாட்டுமயமாக்கப்படுகிறது. இதேபோல்தான் தேச உருவாக்கமும். பாகுபாட்டுப் பண்பாடு கீழே தள்ளப்பட்டு, சமத்துவப் பண்பாடு நிலை நிறுத்தப்படுவதே தேசம் தேசியம். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இந்தப் புதிய சமத்துவநிலை உறுதி பெறுவதற்கு, எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு அதே பண்பாட்டு அடித்தளமே தேவைப்படுகிறது. பண்பாட்டில் வேறூன்றாத சமத்துவம் நிலைக்காது. எல்லாவித சமூக அரசியல் சூழல்களிலும் சமத்துவ நிலை நிலைபெறாது. அதற்கென சில வரைமுறைகள் உண்டு. இதுவே நவீனத்திற்கு முன் பல்லாண்டுகளாக உருவாகி வந்த மொழி - பண்பாடு ஒரே தன்மை அல்லது இந்த Objective Similarity தான் நவீனத்தில் Subjective Unity ஆக மாறவேண்டும். இந்த மாற்றம், ஜனநாயகப் படுத்துதல் மூலமே ஏற்படும்.

தேசிய உருவாக்கமென்பது இதுதான்: பிரிவினைகளாலும் ஏற்றத் தாழ்வுகளாலும் முடங்கிக் கிடந்த பண்பாட்டுக்குழுவொன்று, நவீனத்தின் எழுச்சியில், கொள்கை அளவிலும் செயல்பாடுகளிலும் ஏற்றத்தாழ்வை ஒழித்து, பிரிவினைகளை நீக்க தனி உரிமை, சமத்துவம், சகோதரத்துவம் என்ற கோட்பாடுகளினால் கட்டப்பெற்று முழுமை பெறுவதே. இந்தப் புதுமுழுமை ஆதிகாலத்திலிருந்தே வருவதாக, புதியதொரு வரலாற்றை உருவாக்கும். புதியதொரு பண்பாட்டைக் கண்டெடுக்கும். அதாவது பழமையையே புதுப்பிக்கும். இதையே ஆங்கிலத்தில் Invention of Tradition என்பர். ஆகவே, பண்பாடு -> அதிகார மாற்றம் -> பண்பாடு இதுவே தேச உருவாக்கம்.

நேர்காணல் : பாண்டியன்

பேட்டி அடுத்த இதழிலும்

http://keetru.com/dalithmurasu/july05/aloysius.php

Link to comment
Share on other sites

தயா!

பெரியாரைப் பற்றி கட்டயாம் அறிந்து வைத்திருங்கள் என்று கூற வரவில்லை ஆனால் அவரைப் பற்றி கதைக்க வருகிறவர்கள் ஓரளவாவது தெரிந்து வைத்துக் கொண்டுதான் வரவேண்டும் அல்லது தெரிந்தவர்கள் சொல்லும்போது அதனைக் கேட்டு உள்வாங்க வேண்டும். உங்களுக்கு அடிப்படையே தெரியவில்லை.

பெரியார் 1939 ஆம் ஆண்டு திராவிடம் கேட்கவில்லை, அதுவும் ஜின்னாவை சந்தித்ததற்குப் பின் கேட்கவில்லை. 1940 ஆம் ஆண்டு தான் தமிழ் நாடு என்ற கோரிக்கை திராவிட நாடாக மாற்றம் பெறுகிறது. பெரியார் ஜின்னாவைச் சந்தித்தது 1941 இல். வரலாற்றை நீங்கள்தான் திரிபு படுத்துகின்றீர்கள்.

மன்னித்து கொள்ளுங்கள் பெரியார் ஜின்னாவை சந்தித்தது 1939 எண்று தவறுதலாக சொல்லி விட்டேன்...! இரண்டாம் உலக போர் ஆரம்பித்ததின் விளைவாக பிரிட்டிஸ் நிர்வாகம் பலவீனமானது இந்திய தேசியம் ஏற்றுமுகம் கண்ட காலம் தான் 1939 புரட்டாதிமாதம்... அதற்ற்கும் முதல் காங்கிரஸ் தமிழ் நாட்டில் ஆளுகையில் இருக்க பெரியாரின் நீதிக்கட்ச்சி எதிர்கட்ச்சியாக இருந்த போது 1939 ஐப்பசியில் பெரியாரின் நண்பர் ராஜாஜி ஆட்ச்சியை கலைத்து இடைக்காக ஆழுனராக பெரியாரின் பெயரை முன் மொழிகிறார் தனிப்பட்ட ரீதியில் கேட்க்கிறார்... ஆனால் பெரியார் மறுத்து விடுகிறார்... அதுதான் 1939 நடந்தது... அதை மாறுதலாக பதிந்து விட்டேன்...! தவறுக்கு வந்துகிறேன்...!

1940ல் தைமாதம் 5ம் நாள் மும்பையில் பெரியார் அம்பேத்கார் அவர்களின் வீட்டின் விருந்து கொள்கிறார். அதன் பின்னர் இருவருமான 1940 தை 8ம் நாள் முகமது ஜின்னாவை சந்திக்கிறார்கள்....!! அப்போது திராவிட நாடு சம்பந்தமாக கலந்துரையாடினார்கள், காங்கிரஸ் எதிர்ப்பு ஒப்பந்தமும் கையொப்பமிடுகிறார் பெரியார்...... பின்னர் தமிழகத்தில் தை 21 ம் நாள் ஆளுனரால் ஹிந்தி கட்டாய பாடமாக வேண்டியதில்லை எனும் சட்டமூலம் கொண்டுவரப்பட , அதை செய்ய வைத்தமைக்காக ஜின்னா பெரியாருக்கு வாழ்த்து தந்தி அனுப்பி வைக்கிறார்...! திராவிட நாடு கோசமும் வலுப்பெறுகிறது...!

Link to comment
Share on other sites

இந்தியாவின் "பொது எதிரிகள்'' - II

பூங்குழலி

கோத்ரா ரயில் எரிப்பு நடைபெற்ற அன்று இரவு இரண்டு கூட்டங்கள் நடத்தப்பட்டன. அகமதாபாத்தில் ஒன்று. பரோடாவில் ஒன்று. ஏறத்தாழ 65 முதல் 70 முக்கிய நபர்கள் பங்கேற்ற அந்தக் கூட்டத்தில், நாங்கள் எங்கள் திட்டங்களை வகுத்தோம். எவ்வாறு ஆயுதங்களை அளிப்பது? காவல் துறை கைது செய்தால் என்ன செய்ய வேண்டும்? இந்துக்களுக்கு அடிபட்டால், அவர்களை எப்படி மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்? எப்படியெல்லாம் உதவ வேண்டும்? எல்லாம் திட்டமிட்டோம். ஒரு வழக்குரைஞர் குழுவை அமைத்தோம். மூன்றடி நீள இரும்புத் தடிகளை தயாரித்தோம். இரும்புக் கம்பிகள். பஜ்ரங்தளை சேர்ந்தவர்களாக இருந்தால் திரிசூலங்கள். ஆயுதங்களை சேகரிப்பதற்கும் அதை விநியோகிப்பதற்கும் திட்டம் வகுத்தோம். ஆயுதங்களை அளித்த பிறகு இந்துக்கள் பெரும் உற்சாகம் அடைந்தனர். இதுவரை எங்கள் நடவடிக்கைகளில் நேரடியாகப் பங்கு பெறாதவர்களையும் சந்தித்துப் பேசினோம். காவல் துறை மற்றும் வழக்குரைஞர்கள் கொண்ட குழுவை அமைத்திருப்பதை அவர்களிடம் சொன்னோம். அதனால் அவர்கள் கைது செய்யப்பட்டாலும், சிறைக்குச் சென்றாலும் அவர்களை நாங்கள் விடுவிப்போம் என்று உறுதி அளித்தோம். இது நன்றாக வேலை செய்தது.

-எம்.எஸ். பல்கலைக்கழகத்தின் தலைமை கணக்காயர் (ஆடிட்டர்) திமாந்த் பட்

அண்மையில் "தெகல்கா' ஆங்கில வார இதழ் துணிவுடன் புலனாய்வு செய்து, கோத்ராவிற்குப் பின்னான குஜராத் கலவரங்களில் நேரடியாக ஈடுபட்டவர்களிடம் பெற்று வெளியிட்டுள்ள வாக்குமூலங்கள்-இத்தனை ஆண்டுகளாக மனித உரிமையாளர்கள் உரத்த குரலில் கூறி வந்த பல அதிர்ச்சிகரமான உண்மைகளுக்கு சான்றுரைக்கின்றன. திமாந்த் பட் போன்று கல்வியிலும் சமூக நிலையிலும் உயர் நிலையில் இருப்பவர்கள் உட்படப் பலர் இந்துத்துவ வெறியுடன்-கலவரத்தின் மூளையாகவும் முன்னணியாகவும் செயல்பட்டுள்ளனர். அவர்கள் சொற்களாலேயே தாங்கள் செய்ததை சற்றும் குற்ற உணர்ச்சியோ, கூச்ச நாச்சமோ, அச்சமோ இன்றி, இன்னும் சொல்லப் போனால் மிகுந்த பெருமிதத்துடன் கூறியுள்ளனர்.

"முஸ்லிம்களை கொன்ற பிறகு நான் வீட்டிற்குச் சென்று, உள்துறை அமைச்சரை அழைத்து அனைத்தையும் கூறினேன். அந்த நிமிடம் நான் என்னை மகாராணா பிரதாப் போல் உணர்ந்தேன். பெருமிதத்துடன் உறங்கச் சென்றேன்'' என்கிறார் பஜ்ரங்தள் தலைவர் பாபு பஜ்ரங்கி. எத்தனை நேர்த்தியாகத் திட்டமிட்டு, எத்தனை கொடூரமாக இந்த கலவரங்கள் நடத்தப்பட்டுள்ளன என்பதற்கு இந்த வாக்குமூலங்களே சான்று பகர்கின்றன.

கோத்ரா ரயில் எரிப்பு நிகழ்வும், அதில் எரிந்து போனவர்களின் உடல்களும் தொலைக்காட்சிகளில் தொடர்ந்து காட்டப்பட்டுள்ளன. அது இந்துக்களிடையே வெறியூட்டப் பயன்படுத்தப்பட்டுள்ளது. வெறியூட்டப்பட்ட இந்துக்களுக்கு விதம் விதமான ஆயுதங்கள் விநியோகிக்கப்பட்டன. துப்பாக்கிகள், எறி குண்டுகள், வாள், கத்தி, இரும்பு கம்பிகள், லிட்டர் லிட்டராக பெட்ரோல், மண்ணெண்ணெய், தடிகள், திரிசூலங்கள் எல்லாம் அளிக்கப்பட்டன. கோத்ரா எம்.எல்.ஏ. ஹரேஷ் பட்டின் வாணம் தயாரிக்கும் தொழிற்சாலையில் விதவிதமான குண்டுகள் தயாரித்து விநியோகிக்கப்பட்டன.

"ஆயுதங்களை ஏற்றிச் செல்லும்போது காவல் துறையினர் வழி மறித்தால், "ஜெய் சிறீராம்' என்று சொல்வோம். காவல் துறையினரும் இந்துக்கள் தானே! உடனே எங்களுக்கு வழி விட்டுவிடுவார்கள்''-இது வி.எச்.பி.யை சேர்ந்த தவால் ஜெயந்தி படேலின் வாக்குமூலம். கையில் ஆயுதங்கள், வெறியூட்டப்பட்ட மனநிலை இவற்றோடு, முஸ்லிம்கள் வாழும் பகுதிகளுக்குள் நுழைந்து கொலை வெறியாட்டம் நடத்தியுள்ளனர். தாக்குதலுக்கு உள்ளாகும் முஸ்லிம்களை காக்க வேண்டிய காவல் துறையினரோ, தாக்க வந்தவர்களுக்குப் பாதுகாவலாக நின்றிருந்தனர். நரோதா பாட்டியா என்றொரு முஸ்லிம் குடியிருப்பு. அதனுள் நுழைந்த கொலைவெறிக் கூட்டம் வீடு வீடாக புகுந்து, ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்ற பாகுபாடின்றி அனைவரையும் வெட்டியும் எரித்தும் கொன்றிருக்கிறது. தப்பி ஓடியவர்களை திட்டமிட்டு ஒரே திசையில் துரத்தி, அவர்களை ஒரு கிணற்றிற்குள் தஞ்சம் புக வைத்துப் பின்னர் அந்த கிணறையே ஒட்டுமொத்தமாக எரித்திருக்கின்றனர்.

"நாங்கள் பாட்டியாவை முற்றிலும் அழித்துவிட்டு வந்த பிறகு, இரவு காவல் துறையினர் எங்களை வந்து அழைத்தனர். ஒரு சாக்கடையில் சிலர் தப்பிச் சென்று பதுங்கியிருப்பதை காட்டினர். அந்த சாக்கடைக்குள் 7 அல்லது 8 பேர் இருந்திருப்பார்கள். அவர்களைப் பிடிக்க உள்ளே சென்றால் பிரச்சினை என்று நாங்கள் அந்த சாக்கடையை அழுத்தமாக மூடினோம். அதன் மேல் கனமான பொருட்களை வைத்து அதைத் திறக்க முடியாதவாறு செய்தோம். காலையில் காவலர்கள் அந்த சாக்கடையிலிருந்து பிணங்களை எடுத்தார்கள்.'' தாக்குதல் முடிந்த பிறகு காவல் துறையினர் செய்த உடனடி வேலை, கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வழி வகையை செய்வது.

கொல்லப்பட்டவர்களின் உடல்கள் லாரிகளிலும், காவல் துறையின் ஜீப்களிலும் ஏற்றப்பட்டு, நகரெங்கும் பல இடங்களில் மொத்தமாக புதைக்கப்பட்டன. இப்படுகொலையை முன்னின்று நடத்திய பஜ்ரங்தள் தலைவர் பாபு பஜ்ரங்கியின் கூற்றுப்படி, குறைந்தபட்சம் 200 பேர் அன்று கொல்லப்பட்டுள்ளனர். ஆனால், காவல் துறை காட்டிய கணக்கு 105 மட்டுமே. சிதைக்கப்பட்ட, கொடூரமாக வெட்டப்பட்ட, குத்துப்பட்ட, பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட உடல்கள் வலுவான ஆதாரங்களாகிவிடும் என்பதால், அவை உடலாய்விற்கு உட்படுத்தப்படவில்லை. ஏறத்தாழ 41 உடல்கள் அவ்வாறு உடலாய்விலிருந்து தவிர்க்கப்பட்டன. இதற்கு எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. 58 உடல்கள் மட்டுமே உடலாய்விற்கு உட்படுத்தப்பட்டன.

மக்கள் ஒட்டுமொத்தமாக எரிக்கப்பட்ட அந்த கிணறு, இந்தப் படுகொலையின் மிக முக்கிய ஆதாரமாக இருந்திருக்கக் கூடியது. ஆனால் இந்த கிணறு,ஆய்விற்கு உட்படுத்தப்படவேயில்லை. பா.ஜ.க. எம்.எல்.ஏ. மாயாபென் கொட்நானிதான் கொலை வெறிக்கும்பலை வழிநடத்தியதாக, நரோதா படுகொலையில் தப்பித்தவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், அவரது பெயர் வழக்கில் சேர்க்கப்படவே இல்லை. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மிக நீண்ட நாட்களுக்குப் பிறகே கைது செய்யப்பட்டனர். அதன் பிறகும் அவர்களிடமிருந்து எவ்வித ஒப்புதல் வாக்குமூலமும் பெறப்படவில்லை.

இம்மாதிரியான தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் சாதாரண மக்கள் மட்டுமல்ல. காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ஜாப்ரியையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. குல்பர்காவில் ஜாப்ரி, முஸ்லிம்களிடையே மிகுந்த செல்வாக்கு மிகுந்தவராகத் திகழ்ந்தார். அவர்களுக்குப் பெரும் பாதுகாப்பாகவும் அவர் இருந்தார். அதனால் அவரை நீண்ட நாட்களாக குறி வைத்திருந்தவர்கள், இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்திக் கொண்டனர். காவல் துறை கண்காணிப்பாளர் எர்தாவின் பாதுகாப்போடு குல்பர்கா சொசைட்டிக்குள் புகுந்தனர். "உங்களுக்கு 2 அல்லது 3 மணி நேரம்தான் அவகாசம். அதற்குள் என்ன செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்து முடியுங்கள்'' என்று உத்தரவிட்டார் எர்தா.

வேகமாக உள்ளே நுழைந்த அந்த வெறிக் கும்பல், அங்கிருந்த அத்தனை பேரையும் எரித்துக் கொன்றது. இதற்கிடையே எர்தா சில முஸ்லிம்களை ஒரு வண்டியில் ஏற்றிக் கொண்டிருந்தார். அவர்களை ஏன் காப்பாற்றுகிறீர்கள் எனக் கேட்ட வன்முறைக் கும்பலிடம், "வண்டி சிறிது தூரம் சென்றவுடன் வண்டியின் பாதுகாப்பிற்கு இருக்கும் காவலர் ஓடி விடுவார். பின்னர் வண்டியை ஒட்டுமொத்தமாக கொளுத்திவிடுங்கள். அத்துடன் முழு கதையும் முடிந்தது'' என்றார். கலவரக் கும்பலும் அப்படியே செய்தது.

பின்னர் குல்பர்கா சொசைட்டிக்குள் இருந்த முன்னாள் காங்கிரசு எம்.பி. ஜாப்ரி, காவல் துறையினருக்கும் அரசியல் தலைவர்களுக்கும் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்து அவர்களை காப்பாற்றுமாறு கெஞ்சினார். ஆனால், எதுவும் நடக்கவில்லை. வேறு வழியின்றி ஜாப்ரி, கலவரக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். அதில் சிலருக்கு காயமேற்பட்டுள்ளது. பின்னர் அவர், தான் பணம் கொடுப்பதாகவும் தன்னையும் பிற முஸ்லிம்களையும் விட்டுவிடுமாறு கலவரக்காரர்களிடம் கெஞ்சியுள்ளார். உடனே கலவரக்காரர்கள் அவரை பணத்துடன் வெளியே வருமாறு அழைத்துள்ளனர். பணத்தை எடுத்துக் கொண்டு வெளியே வந்த ஜாப்ரி, பணத்தை வீசிவிட்டு அவசரமாக உள்ளே திரும்ப முயன்றார். ஆனால், அதற்குள் அவர் மீது பாய்ந்த கலவரக்காரர்கள் அவரை வெளியே இழுத்து வந்து நன்றாக அடித்து உதைத்தனர். பின்னர், அவரது கை, கால்கள் என உடல் உறுப்புகளை ஒவ்வொன்றாகத் துண்டாக்கினர். அதன் பின்னர் உயிரோடு அவர் மீது மண்ணெண்ணையை ஊற்றி அவரை எரித்துக் கொன்றனர்.

இவ்வாறு மிகக் கொடூரமாக நடந்த இந்த இரு படுகொலை வழக்கிலும் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் தற்போது வரை வெளியில் உள்ளனர். நரோதா பாட்டியா படுகொலையில் ஈடுபட்ட மக்களை, அன்று இரவே நரேந்திர மோடி நேரில் சென்று பாராட்டியுள்ளார். அப்படி இருக்க அவர்கள் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க முடியும்? நரோதா பாட்டியா வழக்கில் குற்றவாளிகளுக்காக வாதாடிய வழக்கறிஞர் சேத்தன் ஷா, பின்னர் குல்பர்கா சொசைட்டி வழக்கில் அரசுத் தரப்பு வழக்குரைஞராக நியமிக்கப்பட்டார். இவர் விஸ்வ இந்து பரிஷத் உறுப்பினர். விஸ்வ இந்து பரிஷத்தின் சபர்கந்தா மாவட்டத் தலைவர்தான் அம்மாவட்ட அரசு வழக்குரைஞர்.

குஜராத் கலவரங்கள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நானாவதி -ஷா கமிஷனில் அரசு வழக்குரைஞராக நியமிக்கப்பட்டவர் அரவிந்த் பாண்டியா. "மோடி இல்லையென்றால் இந்துக்கள் கோத்ராவிற்கு பழி வாங்கியிருக்கவே முடியாது'' என்று இவர் பெருமிதத்தோடு சொல்கிறார். இவரை அரசு வழக்குரைஞராக நியமித்துக் கொண்டு வழக்கை நடத்தினால், நீதியும் நியாயமும் கிடைக்குமா?

முஸ்லிம்கள் மீதான வெறுப்பும் பகைமை உணர்ச்சியும் திட்டமிட்டுப் பரப்பப்படுகிறது. இது இந்துக்களின் நாடு; இங்கு முஸ்லிம்கள் ஏன் வாழ வேண்டும் என்ற உளவியல், சாதாரண மக்கள் மத்தியிலும் வெகு ஆழமாக எடுத்துச் செல்லப்படுகிறது. மோடி தலைமையிலான அரசு, இந்த உளவியலை எல்லா வகையிலும் நியாயப்படுத்துகிறது. அண்மையில் வெளிவந்த ‘போலி மோதல்' படுகொலைகள் குறித்த செய்திகளும் முஸ்லிம்களுக்கு எதிரான இவ்வாறான செயல்பாடுகளின் தொடர்ச்சியே. போலி மோதல் படுகொலைகளில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் முஸ்லிம்கள் என்பதும், அவர்கள் அனைவருமே மோடியை கொலை செய்யும் நோக்கத்துடன் வந்ததாக குற்றம் சாட்டப்பட்டு கொல்லப்பட்டனர் என்பதும் தற்செயலானது அல்ல.

தங்கள் கருத்துப் பரப்பலுக்கு வலு சேர்க்கும் விதத்திலேயே அவ்வப்போது இத்தகைய மோதல் படுகொலைகள் நடத்தப்பட்டு வந்திருக்கின்றன. எரிகின்ற வெறுப்புத் தீயை அணையாமல் காக்கும் நோக்கிலேயே அவை நிகழ்த்தப்பட்டு வந்திருக்கின்றன. மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட அந்த வழக்குகளின் நிலையும் இன்று கிணற்றில் போட்ட கல்லாகவே இருக்கிறது.

காவல் துறை மற்றும் அரசு அதிகாரிகளின் உதவியோடு நடைபெற்ற அப்பாவிகளின் படுகொலைகள், நேர்மையற்ற விசாரணை, மறுக்கப்பட்ட நீதி... இவையெல்லாம் எங்கோ இருக்கும் குஜராத்தில் மட்டுமல்ல, கோத்ராவிற்கு முன்பே அவற்றை நம் தமிழ்நாடு சந்தித்து விட்டது. 1997 ஆண்டு நவம்பர்-டிசம்பர் மாதங்களில் கோவையில் நடைபெற்ற மதக் கலவரங்களில் இதே விதமான அநியாயங்கள் நடந்தேறின. அந்த கலவரத்திற்குப் பிறகு 1998 பிப்ரவரி 14 அன்று நடைபெற்ற குண்டு வெடிப்பு வழக்கில், ஏறத்தாழ ஒன்பதரை ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில் தீர்ப்பு வெளிவந்திருக்கிறது. ஆனால், 1997இல் நடைபெற்ற கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணமோ, நியாயமான வழக்கு விசாரணையோ நடைபெற்றதா? -அடுத்த இதழில் பார்ப்போம்

"மோடி முதல்வராக இல்லாதிருந்தால் முஸ்லிம்கள் மீது குண்டு வீசியிருப்பார்''

குஜராத் கலவரங்களை ஆய்வு செய்வதற்காக அதிகாரப்பூர்வமாக அமைக்கப்பட்ட "நானாவதி-ஷா ஆணையம்' கடந்த சில ஆண்டுகளாக வாக்குமூலங்களைப் பதிவு செய்து வருகிறது. ஆனால், குஜராத் அரசு வழக்குரைஞர் அரவிந்த் பாண்டியா, ஆணையத்தின் செயல்பாடுகளை எவ்வாறு திறமையாக சமாளித்து வருகிறார் என்ற உண்மையை வெளிப்படுத்தியுள்ளார்.

அரசின் முக்கிய தகவல்களை மட்டுமல்ல, மோடியின் சொந்த எண்ணங்களையும் அறிந்திருப்பவராகவே பாண்டியா இருக்கிறார். 2002 கலவரங்களின் பின்னணியில் இருந்து அதற்கு ஊக்கம் அளித்ததாக மோடியின் மீதும், அவரது அரசின் மீதும் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளிலிருந்து அவர்களை விடுவிக்க-கடந்த 5 ஆண்டுகளாக வழக்குரைஞர்கள் குழு ஒன்றை தலைமை ஏற்று நடத்தி வரும் பாண்டியா, கலவரங்களின்போது இந்துக்களுடன் இருக்குமாறு மோடி காவல் துறையினருக்கு வாய்மொழி உத்தரவு அளித்ததாக "தெகல்கா' பத்திரிகையாளரிடம் சொல்கிறார்.

"கோத்ரா ரயில் எரிப்பு நிகழ்வுக்குப் பிறகு மோடி தனிப்பட்ட முறையில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார். விட்டிருந்தால் அவரே நேரடியாக அகமதாபாத்திற்கு அருகில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியான ஜுஹாபுராவில் குண்டு வீசியிருப்பார்'' என்கிறார் பாண்டியா. ஆனால் முதலமைச்சர் என்ற பொறுப்பு அவரை கட்டுப்படுத்தியதாகவும் கூறுகிறார்.

நானாவதியோடு சேர்ந்து ஆணையத்தை தலைமையேற்று நடத்தும் கே.ஜி. ஷா, பா.ஜ.க. அனுதாபி என்கிறார் பாண்டியா. நானாவதியை பொருத்தவரை, அவருக்கு பணம் தான் முக்கியம் என்கிறார். சூன் 8 அன்று அகமதாபாத்தில் உள்ள பாண்டியாவின் வீட்டில் ‘தெகல்கா'விற்கும் பாண்டியாவிற்கும் இடையில் நடந்த உரையாடலின் ஒரு பகுதி கீழே அளிக்கப்பட்டுள்ளது :

தெகல்கா : கலவரங்களின்போது யார் முன்னணியில் இருந்தார்கள்?

அரவிந்த் பாண்டியா : ஒரு சிலர் இருந்தார்கள் என்றோ ஒரு சிலர் இல்லை என்றோ சொல்வது தவறு. நடைமுறையில் பார்த்தால், களத்திற்குச் சென்றவர்கள் அனைவரும் பஜ்ரங்தள் மற்றும் வி.எச்.பி.யை சேர்ந்தவர்கள். எந்த தலைவர்கள் எங்கு சென்றார்கள்? யார் என்ன பங்காற்றினார்கள்? யார் சந்தேகத்திற்குரிய பங்காற்றினார்கள்? இந்த விவரங்கள் அனைத்தும் எல்லா கைப்பேசி எண்களும் யார் எங்கு சென்றார்கள், அந்த இடங்கள் குறித்த விவரங்கள்... என எல்லா தகவல்களையும் ஆணையத்தின் முன் வைத்திருக்கிறோம்.

தெகல்கா : ஆம். சில விவாதங்கள்கூட நடந்தது.

அரவிந்த் பாண்டியா : யாருடைய கைப் பேசி எண்கள் இருந்தன என்று எனக்கு தெரியும். யார், யாரிடம், எங்கிருந்து பேசினார்கள் என்பதற்கு என்னிடம் ஆவணங்கள் உள்ளன.

தெகல்கா : இதனால் இந்துக்களுக்கும் ஜெய்தீப் பாய் போன்றவர்களுக்கும் ஏதேனும் சிக்கல் வருமா?

அரவிந்த் பாண்டியா : அரே பாய். நான்தான் வழக்காடப் போகிறேன். கவலைப்படாதீர்கள். இதைப்பற்றி கவலையே வேண்டாம். இங்கு எந்த சிக்கலும் இருக்காது. அப்படி ஏதேனும் சிக்கல் இருக்குமானால், நான் அதை தீர்த்துக் கொள்வேன். நான் இத்தனை ஆண்டுகளாக யாருக்காக உழைத்திருக்கிறேன்? என்னுடைய சொந்த ரத்தத்திற்காக.

தெகல்கா : ஆணையத்தின் அறிக்கை இந்துக்களுக்கு எதிராக சென்றுவிடுமா?

அரவிந்த் பாண்டியா : இல்லை இல்லை. காவல் துறையினருக்கு சில சிக்கல்களை உண்டாக்கலாம். அவர்களுக்கு எதிராகப் போகலாம். பாருங்கள். இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நீதிபதிகள் காங்கிரசை சேர்ந்தவர்கள்.

தெகல்கா : ஆமாம். நானாவதி மற்றும் ஷா.

அரவிந்த் பாண்டியா : அதுதான் ஒரே சிக்கல். நமது தலைவர்கள் அந்த நேரத்தில் அவசரப்பட்டு ஒரு விவாதத்தை எழுப்பிவிட்டார்கள். நானாவதி சீக்கியர்கள் மீதான கலவரத்தில் தொடர்பு கொண்டிருந்ததால், ஒரு காங்கிரஸ் நீதிபதியை பயன்படுத்திக் கொண்டால் சிக்கல் இருக்காது, எந்த கேள்வியும் இருக்காது என்று நினைத்தார்கள்.

தெகல்கா : அப்படியானால் நானாவதி உங்களுக்கு முற்றிலும் எதிராக இருக்கிறாரா?

அரவிந்த் பாண்டியா : நானாவதி ஒரு புத்திசாலி மனிதர். அவருக்கு பணம் தேவை. இரண்டு நீதிபதிகளில் கே.ஜி. ஷா தான் உண்மையில் புத்திக் கூர்மை மிக்கவர். அவர் நம்ம ஆள். அவர் நம் மீது கரிசனம் உடையவர். நானாவதிக்கு பணம் தான் முக்கியம்.

தெகல்கா : நானாவதி-ஷா ஆணையம் இந்துக்களுக்கு எதிராக செல்லலாம்.

அரவிந்த் பாண்டியா : அவர்கள் ஆணையத்தைப் பல ஆண்டுகளாக நடத்துகிறார்கள். அவருக்கு பணம் தேவை. வேறு எதுவும் இல்லை. அவர் ஒரு காங்கிரஸ்காரர்.

தெகல்கா : அப்படியானால் ஷா?

அரவிந்த் பாண்டியா : இல்லை. ஷா நம்ம ஆளு. ஆனால் நானாவதி ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி. ஷா ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி.

http://keetru.com/dalithmurasu/index_july05.php

Link to comment
Share on other sites

.பெரியாரும் அவ்வாறே ஒவ்வொரு காலகட்டதிலும் இயங்கினார்.அவரால் அவர் நினைத்தை முழுமையாகச் செய்து முடிக்க இயலவில்லை என்பது உண்மை தான்.அதனை அவரே சொல்லி இருக்கிறார்.அதற்காக அவர் வருதப்பட்டும் இருகிறார்.அதற்காக அவர் தமிழர் நலனின் பாற்பட்டு இயங்கவில்லை என்று எந்தவித அடிப்படைகளும் அற்று எழுதிக் கொண்டிருகிறீர்கள். தமிழருக்காக தனது முதுமையிலும் இயங்கிய ஒரு மனிதர் மேல் எந்தவித அடிப்படைகளும் இன்றி வெறும் அவதூறுகளை மட்டுமே எழுதிக் கொண்டிருகிறீர்கள்.

பெரியார் தமிழ் நாட்டிதானே வாழ்ந்தார்...?? அவருக்கு எதுக்கு திராவிடம்... திராவிடம் எனும் சொல்லுக்கூட சமஸ்கிருதம்... அப்படியான கடன் வாங்கலை ஏன் செய்ய வேண்டும்..??? தமிழர்களுக்கு தேசியம் என்பது தவறு எண்று விடுதலையிலும் மேடைகளிலும் போதிப்பு , திராவிட நாட்டுக்காய் ஜின்னாவின் ஆதரவு எண்று ஏன் இரட்டை முகம்....??

தமிழ்நாடு தமிழருக்கே சரியானதுதானே....??? பிறகு எதுக்காக ஜின்னாவுடன் சேர்ந்து திராவிட நாடு..?? ஜின்னாவுக்கோ இல்லை இண்றைய பாக்கிஸ்தானுக்கோ இந்தியா பலவீனப்பட வேண்டும் என்பது ஆசை...! அப்படி இந்தியா பலவீனம் அடைய தமிழ்நாடு பிரிந்து போகாமல் திராவிட நாடு பிரிந்து போனால் இன்னும் சந்தோசம்.. அவர்கள் ஆசைப்படட்டும் அதுக்கு ஏன் பெரியார் பலியானார்...??

ஜின்னாவை நம்பிய பெரியார் ஏன் தமிழர்களை நம்பவில்லை...?? ஜின்னாவிலும் திறண் மிக்கவர்களாக தமிழர்கள் இருக்கவில்லையோ...??

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.