Jump to content

குண்டுத் தாக்குதலில் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே பலி


Recommended Posts

ஜெயராஜ் பொனாண்டோ புள்ளே தாக்குதலில் பலி

வெலிவேரியா என்னும் பகுதியில் புத்தாண்டையொட்டிய மரதன் போட்டியை ஆரம்பித்து வைக்கச் சென்ற புள்ளே பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Jeyaraj dead

Minister Jeyaraj Fernandopulle was killed following the blast in Welliweriya this morning. The blast occurred when he was about to flag off a marathon run as part of a Sinhala New Year celebration event.

ஆதாரம் Daily Mirror

Link to comment
Share on other sites

  • Replies 86
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குண்டுத் தாக்குதலில் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே பலி

சிறிலங்காவின் கம்பகா மாவட்டத்தில் உள்ள வெலிவெரியாவில் இன்று காலை இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் சிறிலங்காவின் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே உள்ளிட்ட 10 பேர் கொல்லப்பட்டுள்ளள கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிங்களப் புதுவருட கொண்டாட்ட நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்ள வந்தவேளையில் அவர் மீது இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் 10-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதுடன் பெருமளவிலானோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

puthinam

Link to comment
Share on other sites

சிறிலங்காவின் கம்பகா மாவட்டத்தில் உள்ள வெலிவெரியாவில் இன்று காலை இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் சிறிலங்காவின் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே உள்ளிட்ட 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

Link to comment
Share on other sites

பிறப்பில் தமிழராக இருந்தபோதும் தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்திற்கு எதிரான பரப்புரைகளை மிகவும் கீழ்த்தரமாக மேற்கொணடு வந்தவர் ஜெயராஜ் பெனான்டோ புள்ளே. சிங்கள கடும்போக்கு அரசியல் வாதிகளிற்கு எந்தவகையிலும் தான் சளைத்தவர் இல்லை என்றவைகயில் தமிழர் விரோத போக்குடன் செயற்பட்டு வந்தவர்.

அண்மையில் இவருடைய அமைச்சுப் பொறுப்பை தனது உடன்பிறப்பிற்கு வழங்குவதற்காக மகிந்த பறிக்க முயன்றபோதும் அதற்கு இடம்கொடுக்காது தனது பதவியைக் காப்பாற்றிக் கொண்டவர். எனவே மகிந்த தரப்பையும் அமைச்சரின் கொலையுடன் தொடர்பு படுத்திப் பார்ப்பது தப்பில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் என்றைக்கும் தமிழனாக நினைத்ததில்லை. மறைந்த மகேஸ்வரன் அவர்களைக் கூடப் பல தடவை எச்சரித்திருந்தார். " இவ்வளவு நீர் பேசியும் தமிழன் என்பதால் விட்டு வைத்திருக்கின்றோம் என்றால் சிங்களவர்களின் பொறுமையைப் புரிந்து கொள்க" என்ற கணக்கில்...

ஒளிப்பதிவில் பதிவாகி இருக்கும் குண்டு வெடிப்பு!!!!!

http://www.youtube.com/watch?v=nmAsvuvr3Uo

Link to comment
Share on other sites

ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே குண்டு வெடிப்பில் பலி

[ த.இன்பன் ] - [ ஏப்பிரல் 06, 2008 - 04:45 AM - GMT ]

சிறிலங்காவின் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே உட்பட 10 வரையானோர் இன்று காலை கம்பகா மாவட்டத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கம்பகா மாவட்டத்தில் உள்ள வலிவெரியாய நகரில் இன்று காலை நடைபெறவிருந்த நீண்டதூர ஓட்டப்போட்டி ஒன்று நடைபெறவிருந்தது.

வலிவெரியாய நகரில் இருக்கும் காந்தி விளையாட்டரங்கில் நடைபெறவிருந்த இந்த ஓட்டப்போட்டியின் தொடக்க நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சிறிலங்காவின் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் ஜெயராஜ் பெனான்டோ புள்ளே கலந்து கொண்டிருந்தார்.

ஓட்டப்போட்டியை அமைச்சர் ஜெயராஜ் பெனான்டோ புள்ளே காலை 7.30 மணியளவில் தொடக்கி வைத்தவேளை சரியாகக் குண்டு வெடித்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மரதன் ஓட்ட வீரர் போன்று வந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்ததாக வலிவெரியாய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தக் குண்டு வெடிப்பில் ஜெயராஜ் பெனான்டோ புள்ளே உட்பட 10 பேர்வரை கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொல்லப்பட்டவர்களில் மரதன் ஓட்டவீரர் கருணாரத்தின சிறிலங்காவின் தேசிய உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர் லக்மன் டி அல்விஸ் ஆகியோரும் அடங்குகின்றனர். 40 பேர்வரை காயமடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

படுகாயமடைந்தவர்களில் சிறிலங்கா காவல்துறையின் கம்பகா மாவட்ட தலைமை அதிகாரியன வெக்டர் தர்மசிறியும் அடங்குவதாகவும் அவர் உயிராபத்தான நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

ஈழத்தமிழ்

http://www.eelatamil.net/index.php?option=...5&Itemid=67

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மடுமாதாவை அகதியாக்கதில் கிறிஸ்தவர் ஜெயராஜை பலி எடுத்துவிட்டது. மடுமாதாவுடன் விளையாடியவர்களுக்கு இதுதான் கதி. இலங்கையின் வருங்காலப் பிரதமர் இன்றந்துவிட்டார் அவ்வளவுதான்

Link to comment
Share on other sites

எதிரிகளை கூட மன்னித்துவிடலாம்! ஆனால் துரோகிகளை???! துரோகிகளின் விதியை அவர்களே தான் எழுதிக்கொள்கிறார்கள்!!!

தன் இனத்தை விற்று ஈனப்பிழைப்பு நடத்துபவர்கள் பரலோகத்திலும் இரட்சிக்கப்பட மாட்டார்கள்!

Link to comment
Share on other sites

கம்பஹா குண்டுத்தாக்குதலில் அமைச்சர் ஜெயரஜ் பெர்னாண்டோ புள்ளே உயிரிழந்துள்ளார்

வீரகேசரி இணையம் - இன்று காலை கம்பஹா வெலிவேரியாவில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே காலமானார் இன்று 7.30 மணியளவில் வெலிவேரியாவில் மரதனோட்ட போட்டியை ஆரம்பித்து வைக்கச் சென்ற வேளை இக் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இக்குண்டு தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் 50 பேர் வரை காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் என். கே.இலங்ககோன் தெரிவித்தார்.

வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற பகுதியில் மக்கள் செல்வதற்கு தடைசெய்யப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு படையினர் சோதனை நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளனர்.அதேவேளை கம்பஹா மாவட்ட செரேஷ்ட பொலிஸ் அத்தியர்சர் ஹெக்டர் தர்ம சிறியும் காயமடைந்து கம்பஹா வைத்தியசலியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்று காலை கம்பஹா வெலிவேரிய காந்தை விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மரதனோட்டப் போட்டியை வீதி நெடுஞ்சாலைகள் அபிவித்தி அமைச்சரும்,அரசாங்கத்தின் பிரதம கொரடாவுமான ஜெயராஜ் பனாண்டோ புள்ளே ஆரம்பித்து வைக்க சென்றிருந்த வேளை இக்குண்டுதாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Link to comment
Share on other sites

(3ம் இணைப்பு)குண்டுத் தாக்குதலில் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே பலி

[ஞாயிற்றுக்கிழமை, 06 ஏப்ரல் 2008, 08:27 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]

சிறிலங்காவின் கம்பஹா மாவட்டத்தில் உள்ள வெலிவெரியாவில் இன்று காலை இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் சிறிலங்காவின் பெருந்தெருக்கள் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே உட்பட 10-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். 50-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்களில் கம்பகா மாவட்ட பிரதி காவல்துறைமா அதிபர் கெக்டர் தர்மசிறியும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இவரது நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

வெலிவேரியா நகரில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7:30 மணியளவில் சிங்களப் புதுவருட கொண்டாட்ட நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொள்ள வந்த வேளையில் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மரதன் ஓட்டப்போட்டியை ஆரம்பித்து வைப்பதற்கு என வெலிவெரியாவில் உள்ள கந்தை விளையாட்டு மைதானத்திற்கு வருகை தந்தபோது அங்கு நின்ற தற்கொலை குண்டுதாரி அமைச்சர் ஜெயராஜ் பெர்னான்டோபுள்ளேயை இலக்கு வைத்து தாக்குதலை நடத்தியுள்ளார்.

மரதன் ஓட்டப் பந்தய வீரர் போன்று நின்ற ஒருவரே தாக்குதலை நடத்தியிருக்கின்றார்.

அமைச்சர் ஜெயராஜ் பெர்னான்டோ புள்ளே மரதன் ஓட்டப் போட்டியினை ஆரம்பித்து வைக்கும் நோக்கில் மரதன் ஓட்டப் பந்தய வீரர்களுக்கு கைலாகு கொடுக்க ஆரம்பித்த போதே மரதன் ஓட்டப் பந்தய வீரர் போன்று நின்ற தற்கொலை குண்டுதாரி குண்டை வெடிக்க வைத்துள்ளார்.

சம்பவ இடத்திலேயே ஜெயராஜ் பெர்னான்டோபுள்ளே கொல்லப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

கம்பகா மாவட்ட மருத்துவமனைப் பணிப்பாளரும் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கொல்லப்பட்டதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

தாக்குதலில் 10-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதுடன் 50-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

கடுமையான காயங்களுக்குள்ளானோர் கம்பகா மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற பேச்சுக்களின் போது சிறிலங்கா அரசாங்கத்தின் பேச்சுவார்த்தைக் குழுவின் பிரதான உறுப்பினர்களில் ஒருவரான கொல்லப்பட்ட ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே, அரசாங்கத்தின் காய் நகர்த்தல்களுக்குரிய முக்கிய அமைச்சராகவும் திகழ்ந்தார்.

இந்த வருட ஆரம்பத்திலிருந்து சிறிலங்காவில் இரண்டு அமைச்சர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

புதினம்

http://www.puthinam.com/full.php?2b24OOy4b...3f1eW0cc3mcYAde

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப அந்த ஓட்டப்போட்டி தொடர்ந்து நடக்குமா நடக்காதா? :lol:

Link to comment
Share on other sites

அடப்பாவிகளா.. ஜெயராஜ் பெர்ணாண்டோ பிள்ளை ஒரு தமிழ் ஆளா? நான் இவ்வளவுகாலமும் இது ஒரு சிங்களவன் எண்டு அல்லோ நினைச்சு இருந்தன். பெர்ணண்டோ எண்டு இருந்திச்சிது. நான் தமிழராக இருப்பார் என்று எதிர்பார்க்கவில்லை.

என்ன இருந்தாலும் இவர் மிகவும் துவேசமான முறையில் தமிழ் மக்களை துவேசித்து வந்துள்ளார். கத்தி நீட்டியவனுக்கு கத்தியால் பதில் சொல்லப்பட்டு இருக்கிது. வேறு அனுதாபப்பட முடியவில்லை.

தமிழராக இருந்தும் தமிழரில் இவ்வளவு துவேசமாக தனது வாழ்வை கழித்தது இப்படி இறந்ததைவிட மிகவும் பரிதாபமானது. இதற்கு எனது அனுதாபங்கள்.

தனது மொழியை, இனத்தை வெறுப்பவன் இப்பத்தான் இறக்கின்றான் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. இவர் இறந்து எவ்வளவோ காலமாச்சிது. இதற்காக மீண்டும் அனுதாபங்கள்!

Link to comment
Share on other sites

இராணுவம் மடுப் பகுதியைக் கைப்பற்றியவுடன் மடுமாதா கோயிலுக்கு பெரும் பரிவாரத்துடன் செல்வதற்கான ஒழுங்குகளைச் செய்து கொண்டிருந்தவர் இந்த

ஜெயராஜ் பெர்னாண்டோ பிள்ளை

Link to comment
Share on other sites

தமிழ் பெயரை வைத்துக்கொண்டு இருப்பதால் மட்டும் ஒருவர் தமிழர் ஆகிவிட முடியாது! தனது வீட்டில் கூட

சிங்களத்திலேயே பேசும் இவர் எப்படி தமிழர் ஆவார்? இவரை தமிழராக காட்டவும், ஏதோ தமிழ் மக்களுக்காகவே வாழ்ந்தது போல் காட்டவும் டெய்லி மிரர் போன்ற பத்திரிகைகளின் கருத்துக்களங்கள் முயற்சி செய்கின்றன.

இதனை முறியடிக்கும் விதத்தில், டெயிலி மிரர் போன்ற கருத்துக்களங்களில் யாழ் கள வாசகர்கள் கருத்து வைக்க வேண்டும்!

டெய்லி மிரர் நிர்வாகம் கருத்துக்களை கொஞ்ச நேரத்தில் வெட்டி எறிந்தாலும், அதற்குள் உங்கள் கருத்துக்கள் ஒரு சில வாசகர்களையாவது அடைந்து விடும்.

டெய்லி மிரர் இணையதள்த்தின் முகவரி கீழே

http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmHome.aspx

Link to comment
Share on other sites

பட்டினி கிடந்தாலும் மக்கள் போருக்கு ஆதரவு வழங்குவர் என்ற பெரும் கண்டுபிடிப்பை நேற்றைய தினம் தான் வெளியிட்டிருந்தார். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இராணுவம் மடுப் பகுதியைக் கைப்பற்றியவுடன் மடுமாதா கோயிலுக்கு பெரும் பரிவாரத்துடன் செல்வதற்கான ஒழுங்குகளைச் செய்து கொண்டிருந்தவர் இந்த

ஜெயராஜ் பெர்னாண்டோ பிள்ளை

பாவம் அவருக்கு கொடுத்துவைக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா.. தமிழ்நாட்டிலையும் கொஞ்சப் பேர் இவருக்காக அழப்போகினம். இப்ப தானே மதுரைக்குப் போய்.. அளந்திட்டு வந்தவர். அட கடவுளே நேற்று மட்டக்களப்பில கண்டேனே.. பிள்ளையானை... கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிட அழைச்சுக் கொண்டு போனதை..! அதற்குள்ள இப்படி ஆச்சா. சோ சாட்.

Link to comment
Share on other sites

சீஎன் என் இல இப்ப பாத்தன். பாவிகள் இப்பிடியும் எழுதுறாங்கள். சிங்களம் இல்லையாம் இந்து புதுவருட நிகழ்ச்சி ஒண்டில இப்பிடி நடந்திச்சிதாம்...!! வெலிவெரயாவில எங்க இந்துக்கள் இருக்கிறீனம்?? சீஎன் என் இண்ட தவறோ இல்லாட்டி நியூஸ் குடுத்தவரிண்ட தவறோ எண்டு தெரிய இல்ல.

COLOMBO, Sri Lanka (CNN) -- A senior Sri Lankan cabinet minister and at least nine other people, including police and government officials, were killed when a suicide bomb exploded at the start of a marathon race in a town just outside of the capital city Colombo, Sr Lankan police said.

Jeyaraj Fernandopulle was the highway minister and the chief government whip in Parliament. At least 50 people were wounded, police said.

Jeyaraj Fernandopulle, who was the highway minister and the chief government whip in Parliament, died when the suicide bomber stepped forward and detonated his explosives.

Fernandopulle was waving the starting flag for the race which was part of the Hindu New Year celebration in Weliveriya town, police said. The bombing is the latest to hit Sri Lanka since the government's January withdrawal from a cease-fire with the Tamil Tigers. The rebel group has fought for an independent Tamil homeland in northern Sri Lanka for more than two decades. Nearly 200 people have been killed in a wave of attacks on buses, train stations and other public places since the start of the..

http://edition.cnn.com/2008/WORLD/asiapcf/...ref=mpstoryview

Link to comment
Share on other sites

COLOMBO, Sri Lanka (CNN) -- A senior Sri Lankan cabinet minister and at least nine other people, including police and government officials, were killed when a suicide bomb exploded at the start of a marathon race in a town just outside of the capital city Colombo, Sr Lankan police said.

Jeyaraj Fernandopulle was the highway minister and the chief government whip in Parliament. At least 50 people were wounded, police said.

Jeyaraj Fernandopulle, who was the highway minister and the chief government whip in Parliament, died when the suicide bomber stepped forward and detonated his explosives.

Fernandopulle was waving the starting flag for the race which was part of the

Hindu New Year celebration in Weliveriya town, police said. The bombing is the latest to hit Sri Lanka since the government's January withdrawal from a cease-fire with the Tamil Tigers. The rebel group has fought for an independent Tamil homeland in northern Sri Lanka for more than two decades. Nearly 200 people have been killed in a wave of attacks on buses, train stations and other public places since

சீஎன் என் இல இப்ப பாத்தன். பாவிகள் இப்பிடியும் எழுதுறாங்கள். சிங்களம் இல்லையாம் இந்து புதுவருட நிகழ்ச்சி ஒண்டில இப்பிடி நடந்திச்சிதாம்...!! வெலிவெரயாவில எங்க இந்துக்கள் இருக்கிறீனம்?? சீஎன் என் இண்ட தவறோ இல்லாட்டி நியூஸ் குடுத்தவரிண்ட தவறோ எண்டு தெரிய இல்ல.

இவை எல்லாம் CNN இன் தவறும் அல்ல செய்தி கொடுத்தவரின் தவறும் அல்ல! எமது போராட்டத்தை இந்துக்களுக்கு எதிரானதாக காட்ட முயற்சிக்கும் சிங்கள பேரினிவாதிகளின் சதி! இப்படியான திசை திருப்புகள் மூலம் யாருக்கு லாபம் என்பதை இனியாவது புரிந்து கொள்வோம். கடந்த ஒருவருடமாக சிங்களம் இது போன்ற பிரசாரங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

அந்த பிரசாரத்திற்கு நாமும் துணைபோவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நான் சில கருத்துக்களை இந்த களத்தில் பதிய வைத்திருக்கிறேன். அரசியல் என்பது உணர்ச்சிவசப்பட்டு உளறித்தள்ளுவது அல்ல! இலாப நட்ட கணிப்பின்

அடிப்படையில் திட்டங்கள் வகுப்பது. இனியாவது புரிந்து கொள்வோம் !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மின்னல் நீங்கள் இணைத்துள்ள படத்தை கறுப்பு வெள்ளைக்கு மாற்றினீர்கள் என்றால் அதிர்ச்சியில் இருந்து காக்கலாம்.

rajapaksa_fernandopulle.jpg

பெர்னோண்டா புள்ளே மகிந்தவின் நெருங்கிய கூட்டாளி மட்டுமன்றி தெந்தமிழீழப் பிளவுகளை ஆழப்படுத்திய ஒரு கொடிய பேரினவாதி..!

Link to comment
Share on other sites

தமிழ் பெயரை வைத்துக்கொண்டு இருப்பதால் மட்டும் ஒருவர் தமிழர் ஆகிவிட முடியாது! தனது வீட்டில் கூட

சிங்களத்திலேயே பேசும் இவர் எப்படி தமிழர் ஆவார்? இவரை தமிழராக காட்டவும், ஏதோ தமிழ் மக்களுக்காகவே வாழ்ந்தது போல் காட்டவும் டெய்லி மிரர் போன்ற பத்திரிகைகளின் கருத்துக்களங்கள் முயற்சி செய்கின்றன.

இதனை முறியடிக்கும் விதத்தில், டெயிலி மிரர் போன்ற கருத்துக்களங்களில் யாழ் கள வாசகர்கள் கருத்து வைக்க வேண்டும்!

டெய்லி மிரர் நிர்வாகம் கருத்துக்களை கொஞ்ச நேரத்தில் வெட்டி எறிந்தாலும், அதற்குள் உங்கள் கருத்துக்கள் ஒரு சில வாசகர்களையாவது அடைந்து விடும்.

டெய்லி மிரர் இணையதள்த்தின் முகவரி கீழே

http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmHome.aspx

வீட்டில்கூட சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் பேசும் லக்ஸ்மன் கதிர்காமரைத்தான் சிறீலங்கா அரசு தமிழன் என்று அடையாளப்படுத்திக் கொண்டிருந்தது. ஆனால் ஜெயராஜ் பெர்ணான்டோ பிள்ளைக்கு அவ்வாறு பிரச்சாரப்படுத்த முடியவில்லை. ஏனெனில் அவரை அவ்வாறு பிரச்சாரப்படுத்துவதானால் அரசாங்கம் செய்த இனவழிப்பு வெளித் தெரிந்துவிடும். பாட்டன் தமிழனாக இருக்க பேரன் சிங்களவனாக இருக்கிறான் ஜெயராஜ் இன் வாழ்க்கை வரலாற்றில். திட்டமிட்டு தமிழர்களை சிங்களவர்களாக்கிய பேரினவாத அரசின் குழந்தை ஜெயராஜ் பெர்ணான்டோபிள்ளை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.