Jump to content

தமிழ் சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்.


Recommended Posts

இதை தமிழ்பேசும் முஸ்லிம் , கிறிஸ்தவ மக்களும் கொண்டாடினமா?

இலங்கையில் வாழும் இந்துக்களும் சிங்களமக்களும் கொண்டாடுவது தானே வழமை. பொளத்த மதத்தை பின்பற்றும் ஏனைய நாடுகளை சேர்ந்தவர்களும் கொண்டாடுவதில்லை. சிங்களவர்கள் தம்மை ஆரிய இனம் என்று கருத்துருவாக்கம் செய்யும் போது சில பண்டிகைகளும் உள்வாங்கப்பட்டது. சிங்களமக்கள் எம்மை அடக்கி ஒடுக்கி அழிவுகளை செய்தாலும் அதன் ஆரிய கருத்துருவாக்கத்திற்கு இந்து அடிப்படையில் தமிழர்கள் எதிரானவர்கள் இல்லை என்பதும் அவர்களுக்கு கீழ் பட்டவர்கள் என்பதும் சூட்சுமம். இந்த அடிப்படைக்கருத்தியல் ஒற்றுமை இந்திய ஆரியவம்சாவழியினரும் ஏற்றுக்கொண்ட ஒன்று.

http://www.youtube.com/watch?v=MoZyL-3HQvA...feature=related

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அணைவருக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

புதுவருட நல் வாழ்த்துக்கள்!!

7562001111078eb6.gif

எல்லாருக்கும் வணக்(கம்)..மலர்ந்திருக்கும் இனிய புதுவருடம் உலகில் பரந்து கிடக்கும் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் இனியதொரு நல்வருடமாக அமைய வாழ்த்துகிறேன் :) ..(எங்க எல்லாரும் ஜோரா கையை தட்டி விடுங்கோ எவ்வளவு கஷ்டபட்டு டயலக் சொன்னான் பாருங்கோ :D )..

இனிய யாழ்கள உறவுகளுக்கும் ஜம்மு பேபியின் ஜம்மியான புதுவருட நல்வாழ்த்துக்கள்..(அது சரி பேபிக்கு எங்க கைவிசேஷம் பாருங்கோ அது ரொம்ப முக்கியம் :lol: )..அதுகாக பேபி காலில எல்லாம் விழும் என்று நினைக்கபடாது பிகோஸ் நேக்கு காலில விழுறவனையும் பிடிகா காலை வாறுறவனையும் பிடிகா..(அப்பாடா ஒரு மாதிரி சமாளித்தாச்சு)..

எல்லாம் சரி எங்க நம்ம குரு அவரிட்ட தான் முதல் கைவிசேசம் பெறவேண்டும்..(அப்ப தான் இந்த வருசம் நன்னா கலக்சன் வரும் பாருங்கோ)..

ம்ம்..எல்லாரும் புது வருடத்தை முன்னிட்டு ஸ்டேட்மன்ட் எல்லாம் விடுகிறார்கள்..(ஜம்மு பேபி விடாட்டி என்ன ஆகும்) நாம கூட்டதோட கூட்டமா அறிக்கை விட மாட்டோம் அல்லோ அது தான் இன்னைக்கு நம்ம அறிக்கை..இப்பவே அறிக்கை விட்டு பழகினா தானே நாளைக்கு அவுஸ் பிரதமர் ஆகினா ஈசியா இருக்கும் பாருங்கோ..(ம்ம்..நான் அவுஸ் பிரதமர் ஆனா என்னுடைய பேர்சனல் செக்ரிட்டரி வந்து வேற யார் நம்ம குரு தான் பாருங்கோ)...என்ன பார்க்கிறியள் அப்ப தானே நாம அரசியலில நின்று பிடிக்கலாம்..(நிசமா என்னால முடியல :( )..

சோ..வரும் கால அவுஸ் பிரதமர் (வேற யார் நான் தான்)..என் சார்பாக குரு எனது அறிக்கையை வாசிப்பார்...(அட நன்னா இருக்கே இது)..

வரும்கால அவுஸ் பிரதமர் மதிபுகுரிய ஜம்மு பேபியின் புத்தாண்டு செய்தி..(ஏன் நாம செய்தி விட கூடாதோ)..

புலர்ந்திருக்கும் இன்றைய புது வருடம் பரந்து கிடக்கும் அனைத்து டமிழ்சிற்கும் புத்துணர்ச்சியை தரும் வருடமாக அமைய வாழ்த்துக்கிறேன் :) ..அனைத்து டமிழ்சும்..(நான் பெரிசு நீ பெரிசு என்று)..ஒவ்வொருகொருவர் போடும் போட்டியை இந்த வருடமும் தொடர வாழ்த்துக்கிறேன்..மற்றும் புத்தாண்டை கொண்டாடுவது நன்னதா எப்ப கொண்டாடுவது போன்ற கண்டி பிடிப்புகளை கண்டு பிடித்து..(நோபல் பரிசு பெறவும் வாழ்த்துக்கிறேன்)..

இவ்வாறு செய்ய வேண்டியதுகளை மறந்து செய்ய தேவையற்ற விடயங்களிள் அனைத்து டமிழ்சும் காட்டும் அக்கறைக்கு நான் முதலில் தலை வணங்குகிறேன்..(அதை மேலும் இந்த வருடமும் தொடர மனபூர்வமான வாழ்த்துக்கள்)..

முக்கியமா ஒரு விசயத்தை மறந்து போயிட்டேன் இந்த வருசம் ரஜனி படம் வந்தால்..(அவுஸ் ரஜனி எதிர்ப்பு சங்க தலைவர் மதிபுகுரிய கந்தப்பு தாத்தா)..அவர்கள் தலைமையில் ரஜனியின் படத்தை புறகணிப்போம் என்று கோஷம் போட்டவாறு எல்லாரும் விஜய் மற்றும் அஜித் படங்களை பார்க்கும் படியும் மேலும் கேட்டு கொள்கிறேன் :D மேலும் என் அன்பான வாக்காள பெருமக்களே..(நேக்கு என்ட நாட்டு மாட்டரை கவனிக்கவே நேரமில்ல சோ அப்பப்ப இப்படியான வங்சனிற்கு தான் நான் வாழ்த்து செய்தி தெரிவிப்பன்)..அதையாவது செய்யிறன் என்று சந்தோசபடாமா என்னை திட்டினா உதுக்கு எல்லாம் நான் கோவிக்கவா போறன் பிகோஸ்..(உங்க இருந்து புலம்புவது எனக்கு கேட்கவா போகுது :lol: )..நிசமா என்னால முடியல..

ம்ம்..அத்துடன் ஒரு சிறிய கதையை சொல்லிட்டு போகவோ...அது தான் இம்போர்ட்டன் மெசேஜெ..(எல்லாரும் கவனமா கேளுங்கோ என்ன :lol: )..

"தேள் ஒன்று கங்கையில் மிதந்து சென்றது.அதன் மீது பரிதாபப்பட்ட ஒரு சந்நியாசி,அதை எடுத்து வெளியில் விட முயன்றார்.அது அவரை கொட்டி விட்டு மறுபடி நீரில் விழுந்தது.மீண்டும் அவர் எடுத்து விட்டார்.மீண்டும் அது கொட்டிற்று."ஏன் இப்படிச் செய்தீர்கள்?'என்று ஒருவர் கேட்டார்.சந்தியாசி சொன்னார்:'கடைசிவரை அது தன் சுபாவத்தை விடவில்லை;நான் ஏன் என்னுடைய சுபாவத்தை விட வேண்டும் என்று..சோ நன்மை செய்ய வேண்டும் என்று தீர்மானித்தா நன்றி கெட்டவனுக்கு கூட செய்வது தான் சரி என்று நான் சொல்லல்ல :) ..(யாரோ சொன்னதை நான் ரிப்பிட்டு அப்ப தானே நேக்கும் நாலு விசயம் தெரிந்த மாதிரி காட்டி கொள்ளளாம் பாருங்கோ)..

இறுதியாக அனைவருக்கும் என் இனிய புதுவருட நல்வாழ்த்துக்கள்..(நாம லேட்டா சொன்னாலும் ஏதாச்சும் சொல்லுவோமல)..ம்ம்..இப்படி எல்லாம் சொல்லிட்டன் என்று பிறகு எனக்கு வாக்கை போடாம விட்டிடாதையுங்கோ என்ன.. :)

சாலைகள் மிகவும்

நீளமானது..

சந்திபுக்கள்

அதிகம்..

என்று கூறி கொண்டு என்னுடைய அறிக்கையை இத்துடன் முடித்து கொள்கிறேன்..(அப்பாடா அறிக்க விடுறது உவ்வளவு கஷ்டமா இப்ப தான் தெரிந்தது பாருங்கோ)..

மதிபுகுரிய,

வரும்கால,

அவுஸ் பிரதமர்,

டாக்டர்.ஜம்மு பேபி!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தை முதல்நாள் தான் தமிழர்களின் புத்தாண்டு தொடக்க நாள் என்றாலும்,

சித்திரைத் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மட்டமற்ற மகிழ்ச்சி அடைகிறேன். :D:lol::lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.