Jump to content

தோல்வி நிலையென நினைத்தால்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தோல்வி நிலையென நினைத்தால் - ஊமை விழிகள்

Link to comment
Share on other sites

அருமையான மனதை தொடும் பாடல். வீடியோ இணைப்பிற்கு நன்றி.

தாயக பாடல்கள் பெருமளவில் வெளிவராத காலகட்டத்தில் இந்த பாடல் நம்மிடையே பெரிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. பாடல் வரிகளை இதற்கு முன்பு இணையத்தில் எங்கோ பார்த்திருந்தேன். இப்போது காணக்கிடைக்கவில்லை.

Link to comment
Share on other sites

பாடல் வரிகள் இதோ......

தோல்வி நிலையென நினைத்தால்

மனிதன் வாழ்வை நினைக்கலாமா?

தோல்வி நிலையென நினைத்தால்

மனிதன் வாழ்வை நினைக்கலாமா?

வாழ்வை சுமையென நினைத்து

தாயின் கனவை மிதிக்கலாமா?

உரிமை இழந்தோம்

உடைமையும் இழந்தோம்

உணர்வை இழக்கலாமா?

உணர்வை கொடுத்து

உயிராய் வளர்த்த

கனவை மறக்கலாமா?

தோல்வி நிலையென நினைத்தால்

மனிதன் வாழ்வை நினைக்கலாமா?

விடியலுக்கில்லை தூரம்

விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்?

உன் நெஞ்சம் முழுவதும் வீரம்

இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்?

உரிமை இழந்தோம்

உடைமையும் இழந்தோம்

உணர்வை இழக்கலாமா?

உணர்வை கொடுத்து

உயிராய் வளர்த்த

கனவை மறக்கலாமா?

தோல்வி நிலையென நினைத்தால்

மனிதன் வாழ்வை நினைக்கலாமா?

வாழ்வை சுமையென நினைத்து

தாயின் கனவை மிதிக்கலாமா?

விடியலுக்கில்லை தூரம்

விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்?

உன் நெஞ்சம் முழுவதும் வீரம்

இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்?

யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும்

பாதை மாறலாமா?

ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும்

கொள்கை சாகலாமா?

உரிமை இழந்தோம்

உடைமையும் இழந்தோம்

உணர்வை இழக்கலாமா?

உணர்வை கொடுத்து

உயிராய் வளர்த்த

கனவை மறக்கலாமா?

யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும்

பாதை மாறலாமா?

ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும்

கொள்கை சாகலாமா?

Link to comment
Share on other sites

சில இயக்கங்கள் இந்த பாடலை தம் புரட்சி கீதமாக பாவிச்சவை

Link to comment
Share on other sites

சில இயக்கங்கள் இந்த பாடலை தம் புரட்சி கீதமாக பாவிச்சவை

நன்றி ரைகர் பிளாட,

என் நாவலுக்காக இந்தப் பாடலைத் தெடியபோது உங்கள் இணைப்பில் பார்த்தது மகிழ்ச்சி. இது வேழவேந்தன் அல்லது காளிமுத்து எழுதிய பாடல் ஒன்றும் முக்கியத்துவம் பெற்றிருந்ததல்லவா. அப்பாடல் இலங்கை வாமனொஇயிலும் தடை செய்யப் பட்டதே

விடுதலைப் படல்கள் வருமுன் முன்னணியில் இருந்த பாடல்கள் எவை?

இலக்கியமெது

நாடகங்கள் எவை

பபண்டார வன்னியன் நடகம் பார்த்தது ஞாபகம்.

Link to comment
Share on other sites

இணைப்பிற்கு மிக்க நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு முறை கேட்டாலும் அலுக்காத பாடல்.

Link to comment
Share on other sites

இந்தப் பாடலைப்போலவே எண்பதுகளில் அனைத்து ஈழத்து இளைஞர்களையும் கவர்ந்த ஒரு பாடல். பாடலை எழுதியவர் மு.மேக்தா ஆனால் படத்தின் பெயர் தெரியாது பாடல் வரிகள்.

இரவும் ஒருநாள் விடியும் அதனால்

புறப்படுவாய் தோழா

புலியும் புயலும் உறங்குவதில்லை

புறப்படுவாய் தோழா

களத்தினில் சொந்தம் பார்ப்பதில்லை

இலட்சிய வீரர் தோற்பதில்லையென்று இந்தப்பாடல் வரிகள் தொடரும்

ஜேசுதாஸ் பாடியிருந்தார் யாரிற்காவது ஞாபகம் இருந்தால் தேடி இணைத்தால் நல்லது

Link to comment
Share on other sites

இந்தப் பாடலைப்போலவே எண்பதுகளில் அனைத்து ஈழத்து இளைஞர்களையும் கவர்ந்த ஒரு பாடல். பாடலை எழுதியவர் மு.மேக்தா ஆனால் படத்தின் பெயர் தெரியாது பாடல் வரிகள்.

அன்புகுரிய Sathiri,

இந்தக் காலக் கட்ட பாடல்கள் நாடகங்கள் சுவரொட்டிகள் பற்றி உங்களுக்கு ஞாபகத்தில் உள்ளதை எழுதுவீர்களா. ஒருபாடல் வேழவேந்தனோ காளிமுத்துவோ எழுதியிருக்க வேணும் அது இலங்கை வாமனொலியில் தடை பட்டது. புலியே என்று ஒரு சொல் வருவதாக ஞாபகம். நினைவில் இருக்கா.

Link to comment
Share on other sites

இந்தப் பாடலைப்போலவே எண்பதுகளில் அனைத்து ஈழத்து இளைஞர்களையும் கவர்ந்த ஒரு பாடல். பாடலை எழுதியவர் மு.மேக்தா ஆனால் படத்தின் பெயர் தெரியாது பாடல் வரிகள்.

இரவும் ஒருநாள் விடியும் அதனால்

புறப்படுவாய் தோழா

புலியும் புயலும் உறங்குவதில்லை

புறப்படுவாய் தோழா

களத்தினில் சொந்தம் பார்ப்பதில்லை

இலட்சிய வீரர் தோற்பதில்லையென்று இந்தப்பாடல் வரிகள் தொடரும்

ஜேசுதாஸ் பாடியிருந்தார் யாரிற்காவது ஞாபகம் இருந்தால் தேடி இணைத்தால் நல்லது

படம்: மதுரைக்கார தம்பி

Link to comment
Share on other sites

முழுமையான பாடல் வரிகள் இதோ...

என்னிடம் காணொளி பாடல் இல்லை

mp3 பாட்டுத்தான் இருக்கு...

இரவும் ஒருநாள் விடியும்

அதனால் எழுந்திடுவாய் தோழா

புயலும் புலியும் அழுவது இல்லை

புறப்படுவாய் தோழா!

சாவினை எண்ணி

தைரியம் இழந்தால்

தாயகம் நமக்கேது..

உலகினை ஜெயிக்கும்

நாள்வரை நமது

உறைவாள் உறங்காது!

இரவும் ஒருநாள் விடியும்

அதனால் எழுந்திடுவாய் தோழா

புயலும் புலியும் அழுவது இல்லை

புறப்படுவாய் தோழா!

தேகமும் ஒருநாள்

ஓய்ந்திடக் கூடும்

தாகங்கள் ஓயாது..

தலைமுறை வாழ

தலை தருவோரை

சரித்திரம் மறக்காது

களத்தினில் சொந்தம் பார்ப்பதில்லை

லட்சிய வீரர் தோற்பதில்லை!

களத்தினில் சொந்தம் பார்ப்பதில்லை

லட்சிய வீரன் தோற்பதில்லை!

ஏழைகள் இங்கே கோழைகளானால்

உரிமைகள் கிடைக்காது..

உழைப்பவர் ஒன்றாய் சேர்ந்திடும்போது

ஜெயித்திட ஆளேது!

ஊமைகள் பேசும் காலம் வரும்

உயர்த்திய கைகள் வெற்றிபெறும்!

ஊமைகள் பேசும் காலம் வரும்

உயர்த்திய கைகள் வெற்றிபெறும்!

இரவும் ஒருநாள் விடியும்

அதனால் எழுந்திடுவாய் தோழா

புயலும் புலியும் அழுவது இல்லை

புறப்படுவாய் தோழா!

Link to comment
Share on other sites

அன்புகுரிய Sathiri,

இந்தக் காலக் கட்ட பாடல்கள் நாடகங்கள் சுவரொட்டிகள் பற்றி உங்களுக்கு ஞாபகத்தில் உள்ளதை எழுதுவீர்களா. ஒருபாடல் வேழவேந்தனோ காளிமுத்துவோ எழுதியிருக்க வேணும் அது இலங்கை வாமனொலியில் தடை பட்டது. புலியே என்று ஒரு சொல் வருவதாக ஞாபகம். நினைவில் இருக்கா.

இந்தப் பாடலையா கேட்டீர்கள்? :D

இது தாய் பிறந்த தேசம்

எம் தந்தை ஆண்ட தேசம்

இது நாம் வணங்கும் தேசம்

உயிர் நாடி இந்த தேசம்

மண் பெரிதா உயிர் பெரிதா

பதில் தரவா இப்போதே

வா புலியே

நம் வாழ்வும் சாவும் யார் வசம்

வீரனை குண்டுகள் துழைக்காது

வீரனை சரித்திரம் மறக்காது

நாட்டை நினைக்கும் நெஞ்சங்கள்

வாடகை மூச்சில் வாழாது

இழந்த உயிர்களோ கணக்கில்லை

இருமிச் சாவதில் சிறப்பில்லை

இன்னும் என்னடா விளையாட்டு

எதிரி நரம்பிலே கொடியேற்று

நிலத்தடியில் புதைந்திருக்கும்

பிணங்களுக்கும் மனம் துடிக்கும்

Link to comment
Share on other sites

இந்தப் பாடலையா கேட்டீர்கள்? :D

இது தாய் பிறந்த தேசம்

எம் தந்தை ஆண்ட தேசம்

இது நாம் வணங்கும் தேசம்

அன்பின் வசிசுதா இதுவும் முக்கியமானதுதான். இது எந்த ஆண்டு வந்தது. எனினும் அது இன்னொருபாடல்

Link to comment
Share on other sites

வசிண்ணாக்கு இதெல்லாம் எப்படி தெரியும்.

Link to comment
Share on other sites

இதுவும் முக்கியமானதுதான். இது எந்த ஆண்டு வந்தது. எனினும் அது இன்னொருபாடல்

இது சிறைச்சாலை படப்பாடல்.. நீங்கள் கேட்டது ஈழத்துப்பாடலா?

வசிண்ணாக்கு இதெல்லாம் எப்படி தெரியும்.

இப்படியான பாடல்கள் எல்லாம் சேர்த்து வைத்திருக்கிறேன் தூயா :D

Link to comment
Share on other sites

சூப்பரான பாட்டு பிளேடு...

நான் சின்னனில எனக்கு கவலைகள் வரேக்க இந்தப்பாட்ட வாயில முணுமுணுப்பன். ஆனா இது இயக்கப்பாட்டு எண்டு நினைச்சு இருந்தன். சினிமாப் பாட்டு எண்டு இப்பதான் தெரியும்.

Link to comment
Share on other sites

அன்புகுரிய Sathiri,

இந்தக் காலக் கட்ட பாடல்கள் நாடகங்கள் சுவரொட்டிகள் பற்றி உங்களுக்கு ஞாபகத்தில் உள்ளதை எழுதுவீர்களா. ஒருபாடல் வேழவேந்தனோ காளிமுத்துவோ எழுதியிருக்க வேணும் அது இலங்கை வாமனொலியில் தடை பட்டது. புலியே என்று ஒரு சொல் வருவதாக ஞாபகம். நினைவில் இருக்கா.

ஜெயபாலன் நீங்கள் சொல்லவது எந்தப் பாடல் என்று உடனடியாக ஞாபகத்திற்கு வரவில்லை நண்பர்களை கேட்டு பார்க்கிறேன்.நான் நினைக்கிறேன் எங்கள் தமிழினம் தூங்குவதோ சொந்த மண்ணில் வாழ்விற்கு ஏங்குவதோ என்று தொடங்கி புலியே புலியே விழித்து எழு பூட்டிய விலங்கை உடைத்துவிடு என்கிற பாடல் இந்தப் பாடலை பழைய இலங்கை வானொலி அறிவிப்பாளர் கே.எஸ் .ராஜா அவர்கள் இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிக்க விட்டதால் அவரிற்குபிரச்சனை வந்தது என்றும் அந்தப் பாடலும் தடைசெய்யப் பட்டது என்றும் அறிந்தேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியன் ஆமி மக்களை எல்லாம் அழித்து யாழ்ப்பாண நகரத்தை பிடித்துப் பின்னர் எங்கள் ஊருக்குள்ளும் புகுந்து முகாம் அமைத்திருந்தார்கள்.. முகாம் சுற்றாடலில் இருந்த வீட்டுக்காரர் எல்லாரும் இரவு வேளையில் வேறு உறவினர்களின் வீடுகளுக்குப் போய்விடுவார்கள்.. நாங்கள் சின்னனாக இருந்ததாலும், வீட்டை விட்டு வேறிடம் போக விருப்பமில்லாததாலும் வீட்டிலேயே இருந்தோம். ஒரு மைலுக்கு அப்பால் நடக்கும் நிகழ்வுகளைக் கூட பிபிசி தமிழோசை, வெரித்தாஸ் வானொலி மூலம்தான் அறியவேண்டிய காலம் அந்தக்காலம். அப்படியான ஒரு நாளில் சிற்றலை மூலம் வரும் வெரித்தாஸ் வானொலியை எமது காதுகளுக்குக் கூட மட்டுமட்டாகக் கேட்கக்கூடிய குறைந்த ஒலியளவில் கேட்டுக் கொண்டிருந்தபோது "தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா" பாட்டைப் போட்டார்கள்.. இந்தியன் ஆமியின் அழிப்புக்களால் சோர்ந்தும் பயந்தும் போயிருந்த எனக்கு உடலெல்லாம் சிலிர்த்து எப்போதுமே தோற்கக்கூடாது என்ற உணர்வைத் தந்தது பாடல் வரிகள்.. கேட்கும்போதெல்லாம் பாடல் காட்சியைவிட வெரித்தாஸ் வானொலி கேட்ட அந்தநாள்தான் நினைவில் வரும்..

Link to comment
Share on other sites

ஜெயபாலன் நீங்கள் சொல்லவது எந்தப் பாடல் என்று உடனடியாக ஞாபகத்திற்கு வரவில்லை நண்பர்களை கேட்டு பார்க்கிறேன்.நான் நினைக்கிறேன் எங்கள் தமிழினம் தூங்குவதோ சொந்த மண்ணில் வாழ்விற்கு ஏங்குவதோ என்று தொடங்கி புலியே புலியே விழித்து எழு பூட்டிய விலங்கை உடைத்துவிடு என்கிற பாடல் இந்தப் பாடலை பழைய இலங்கை வானொலி அறிவிப்பாளர் கே.எஸ் .ராஜா அவர்கள் இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிக்க விட்டதால் அவரிற்குபிரச்சனை வந்தது என்றும் அந்தப் பாடலும் தடைசெய்யப் பட்டது என்றும் அறிந்தேன்

நன்றி சாத்திரி,

எங்கள் தமிழினம் தூங்குவதோ சொந்த மண்ணில் வாழ்விற்கு ஏங்குவதோ என்ற பாடல்தான். யார் எழுதியது? மிகவும் நன்றி. கொக்குவிலில் ஒரு ரொட்டிக்கடையில் எப்ப போனாலும் மாறிமாறி தொலிவி நிலையென, எங்கள் தமிழினம் போன்ற பாடல்களைப் கேட்டுக்கொண்டு ரொட்டி சாப்பிடலாம். தயவு செய்து அந்தக்கால பாடல்கள் நாடகங்கள் பற்றி எழுதுங்கள். அதற்க்குமுன் வெளிக்கிடடி விஸ்வமடுவுக்கு வந்தது பார்த்தேன். பின் அரியாலையில் ஒரு தென்னம் பிள்ளைக்குக்கீழ் நட்கர் நடிகை தற்கொலை செய்து கிடந்ததையும் போய்ப் பார்த்தேன் . அது 70கள் என்று நினைக்கிறேன் நினைவிருக்கா. சாஸ்திரிக்கு என் நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த கால கட்டத்தில் பல ஈழத்து பாடல்களும் வந்திருக்கும் ஆனால் இந்த பாடல்கள் போல் பிரபலயம் அடையவில்லை இவை பிரபலயம் அடைய காரணம் சினிமா என்று நினைக்கிறன். :icon_mrgreen:

Link to comment
Share on other sites

அட....அட நேக்கு இந்த பாட்டு பிடிகல..பிடிகல...(எப்பவுமே தோற்றிட்டோம் என்று போட்டு இப்படியான பீலிங்கான சோங் எல்லாம் பாடுறது நேக்கு பிடிகாது :D )...எப்பவுமே ஜெயிக்கனும் என்று இறங்கனும் அப்படி இறங்கியும் தோற்று போனா..(ஏன் தோற்றோம் என்பதை மட்டும் தான் யோசிக்கனும்)..இது தான் ஜம்மு பேபியின்ட "ஜம்" பொலிசி பாருங்கோ... :o

ம்ம்ம்...இப்ப பாருங்கோ சுவரில எறும்பு ஏறி கொண்டிருக்கும் எத்தனை தரம் விழுந்தாலும்..(மறுபடி எழும்பி ஏறும் :D )..எறும்பே மறுபடி எழும்பி ஏறும் போது நாம பாட்டு எல்லாம் பாட கூடாது ஏன் விழுந்தோம் என்பதை மட்டும் பார்கணும் அப்ப தான் எழும்ப ஏலும் பாருங்கோ.. :D

ம்ம்..இப்ப நான் பாடுறன் பாருங்கோ..(வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம் கொள்கை வெல்வதே நான் கொண்ட இலட்சியம் :o )..எப்படி இருக்கு பாட்டு..ம்ம்ம்..டைகர் பிளேட் அண்ணா இணைப்பிற்கு நன்றி பட் நேக்கு பாட்டு பிடிகல..பிடிகல பாருங்கோ...அடுத்த முறை நேக்கு பிடித்த பாட்டா போடுங்கோ... :D

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா வாழ்க்கையில ஒன்னுமே நிலை இல்லை நிலை இருந்தா அது வாழ்க்கையே இல்ல" :o

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஹீஹீ ஜம்மு எப்படி இபப்டி எல்லாம் சிந்திக்கிறியளோ

சரி ஜம்முவுக்காக ஒரு பாட்டு. ஜம்மு கூல்

Link to comment
Share on other sites

ஹீஹீ ஜம்மு எப்படி இபப்டி எல்லாம் சிந்திக்கிறியளோ

சரி ஜம்முவுக்காக ஒரு பாட்டு. ஜம்மு கூல்

">

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தப் பாடலை நான் சிறுவயதில் (தாயகத்தில்) கேட்டிருக்கிறேன். அடிக்கடி பக்கத்து கடையில் (பெரும்பாலும் இரவு வேளைகளில்) ஒலித்துக்கொண்டிருக்கும். இந்தப் பாடலை கேட்க்கும்போது மனதில் பெரும் உற்சாகம் தோன்றும்.

இதில் வரும் ஒவ்வொரு வரிகளும் என் மனதில் மிகவும் ஆழமாக பதிந்துள்ளது.

தங்கை யமுனா கேட்டதிற்க்கிணங்க ஒரு பாடல்:

அச்சமில்லை அச்சமில்லை:

Link to comment
Share on other sites

இந்தப் பாடலை ஈழ விடுதலை இயக்க மொன்றுக்காக எழுதியவர் கவிஞர் மேத்தா.இசையமைத்தவர் ஜெமினி ஒளிப்பதிவுநிலைத்தின் பிரதான ஒலிப்பதிவு பொறியியலாளராக இருந்த கர்நாடக சங்கீத வித்துவான் ரகுநாதன் என்பவர். 1984 ம் ஆண்டு இதை ஒலிப்பதிவு செய்வித்தவர் எனது கணவர். இந்தப் பாடல் ஊமைவிழிகள் இயக்குனருக்கு பிடித்துவிட்டதால் அந்த ஈழ விடுதலை இயக்திடமிருந்து அந்தப் பாடலின் உரிமையை அவர் பணம் கொடுத்து வாங்கிவிட்டார். எனது கணவர் தமிழகத்திலிருந்து அப்போது நடத்திய தமிழீழத்தின் குரல் வானொலியில் இந்தப் பாடல் அடிக்கடி ஒலிபரப்பாகி வந்தது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
    • நிச்சயமாக  @goshan_cheக்கு புதிய சம்பவம் என்று அவருக்கு தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்.... அவர் @பெருமாள் யும், @பையன்26யும் கலாய்ப்பதற்காக அடி மட்டத்திற்கு இறங்கி... "தூர் வாரியிருக்கிறார்". 😂 நமக்கும் அவரை கலாய்ப்பதில் ஒரு அலாதி இன்பம். 🙂
    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.