Jump to content

ஒருவருட காதல்


Recommended Posts

ஒருவருட காதல்

nilaql0.jpg

வருடப்பிறப்பு அன்று கோயிலில்

திருவிழாக் கால மக்கள் திரளுள்

கருவிழியாள் உன் பார்வையால்

அரும்பியது என்னுள் காதல்

தைப்பொங்கல் வரும்வரையில்

தையலுன் பின்னால் தினமும்

அலைந்த என் காதலுள்

தொலைத்தாய் உன் இதயத்தை

மாசி வந்ததும் நாமிருவரும்

பேசி பேசி காதல் செய்தோம்

பங்குனி மாதத்தில் உன்

சங்கு கழுத்தில் முத்தமிட்டேன்

சித்திரை மாதம் வந்ததும்

நித்திரையின்றி புரண்டேன்

வைகாசி பூத்ததும் நாமிருவரும்

கைராசி பார்த்து சந்தோசப்பட்டு

ஆனி வந்ததும் உல்லாசமாக

தேனீக்கள்போல பறந்து திரிந்து

ஆடி வந்ததும் இருவரும்

பாடி மகிழ்ந்தோம் ஒருவருக்கொருவர்

ஆவணி உதித்ததும் உனக்கு நான்

தாவணி வாங்கி தந்து அழகுபார்க்கையில்

புரட்டாதியும் வந்தது நமக்குள்

புரட்சி வந்து வரட்சியானது நம்காதல்

ஐப்பசி வெகுவிரைவில் வந்தது

பப்பாசிப்பாலாக கசந்தது நம் உறவு

கார்த்திகை பூக்க தொடங்கையில்

பூர்த்தியானது நம் தொடர்பு

மார்கழி முடியும் வேளையில் எனக்கு

மூர்க்கம் வந்தது காதல் மேல்..

சந்தோசமாக மலர்ந்த காதல்

சந்தேகத்தால் உதிர்ந்தது.

மீண்டும் வருடம் பிறந்தது

கண்டேன் பல பெண்களை ஆனாலும்

வேண்டாம் எனக்குள்

இன்னொரு காதல்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன வெண்ணிலா சூடா இருக்கிறியள். காதல் சுட்டு விட்டதா. :D

கவிதை உண்மையாயிருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் படிச்சதுக்குள்ள சற்று வித்தியாசமான சிந்தனையில் அமைந்த கவிதை. பாராட்டுக்கள். :lol:

என்ன வெண்ணிலா சூடா இருக்கிறியள். காதல் சுட்டு விட்டதா. :D

கவிதை உண்மையாயிருக்கு

பிள்ள.... காதல் உண்மையானதா இருந்தா சுடாது. சுட்டிச்சின்னா.. அது காதலில்ல. அதற்காக கவலைப்படவோ வருந்தவோ.. ஏமாந்ததாவோ கருதக் கூடாது. ஏமாத்திற கூட்டம் காதலென்ற வேசம் போட்டும் அலையும்.. என்றதை மனசில இருந்திக்கனும் எப்பவும்..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிள்ள.... காதல் உண்மையானதா இருந்தா சுடாது. சுட்டிச்சின்னா.. அது காதலில்ல. அதற்காக கவலைப்படவோ வருந்தவோ.. ஏமாந்ததாவோ கருதக் கூடாது. ஏமாத்திற கூட்டம் காதலென்ற வேசம் போட்டும் அலையும்.. என்றதை மனசில இருந்திக்கனும் எப்பவும்..! :lol:

சரியா சொன்னியள் தாத்தா. இப்ப காதலென்ற போர்வையில் கனக்க விசயங்கள் நடக்குது ஆனா உண்மை தெரிய வரேக்கை பாதிக்கபட்டவர்களின் நிலைமை தான் பாவம். :lol:

ஆனா இதிலிருந்து தப்பிக்க காதலிக்காம இருக்கிறது தான் வழியா தாத்தா :D ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உணர்வுள்ள வரிகள், இதுவரை நான்படித்த உங்கள் கவிதைகளில் இந்த கவிஞருக்கு காதல் பிடித்திருக்கிறது,, ஆனால் தோல்வி இவரை துரத்துகிறது. கவிதைகளில் மட்டும் தோல்விகள் தொடர வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சே என்ன கொடுமையிது! மாதங்களைப் பண்ணிரண்டாக மட்டும் வைத்தது யார்? இன்னும் இரண்டு மாதத்தைக் கூட்டிவைத்தால் குறைந்தா போய் விடுவார்கள்! அப்போதாவது அந்தக் காதல் இணைந்திருக்குமே!!! :D:)

Link to comment
Share on other sites

ம்ம்..ஒரு வருட காதலில் இவ்வளவு வலிகளா??..(நிசமா முடியல்ல :( )..ஒரு வருட காதலையும் ஒரு கவிகுள் அடக்கி சென்றது நிலா அக்காவின் தனித்துவம் வாழ்த்துக்கள் அக்கா.. :lol:

ம்ம்...நிலா அக்கா காதலர்கள் வேண்டும் என்றா பிரிந்து போகலாம் அதற்காக காதல் தோற்குது என்று எல்லாம் சொல்லபடாது என்ன.. :lol: (எப்பவுமே நாம ஒன்னை காதலிக்கிற படியா தான் இன்னுமெ சந்தோசமாக இருக்க முடியுது).. அக்சுவலா நான் முதலாவதா காதலிக்கிறது மம்மியை அடுத்து வேற யாரையும் இல்லை என்னை தான்.. (என்ன பார்க்கிறியள் :D )..எப்பவுமே நம்மளே நாம காதலித்தா தான் மற்றவையள் நம்மளை காதலிப்பீனம் பாருங்கோ..(இது எப்படிக்கா இருக்கு :( )..

ம்ம்..இறுதி வரியை வாசிக்கும் போது அந்த ஆள் ரொம்பவே நொந்து போயிட்டார் போல இருக்கு..(இதுக்கே இப்படி என்றா)...வாழ்க்கையில எத்தனை குரோசிங் லைனை கடக்க வேண்டும் அச்சோ அச்சோ :D ...ம்ம் காதல் எங்களை எக் காரணம் கொண்டு வெறுபதில்ல நாம ஏன் வெறுக்க வேண்டும் காதலை :) ..இப்ப பாருங்கோ பூங்காவனத்தில சில ரோஜாக்கள் அழகாக இருக்கும் ஆனா நறுமணம் குன்றி இருக்கும்..(ஏன் அழகில் மயங்கி நறுமணம் இல்லாத ரோஜாவை நோக்கி பயணிப்பான்)..இப்படி நான் சொன்னேன் என்று அவருக்கு சொல்லுங்கோ என்ன நிலா அக்கா.. :D

ஜம்மு பேபி சிட்டுவேசன் கவிதை -

மீண்டும் வருடம் பிறந்தது

மீண்டும் இதயம் என்னிடம் வந்தது

மீளவும் இன்னொருத்தி அருகில் வர

மீண்டும் இதயம் படபடத்தது..!! :wub:

சிட்டுவேசன் சோங் -

கேட்கலையோ கண்ணது கானம்

பூக்களையோ பூக்களையோ பூக்கள் நெஞ்சில் நாணம்

என்னை விட்டு எங்கே போனாலும்

என் உள்ளம் மட்டும் உன்னை விட்டு

எங்கையும் போகாது!! :lol:

அப்படியே சிட்டுவேசன் சோங் கஸ்தூரிமான் படத்தில இருந்து இந்த பாட்டு நன்னா இருக்கும்..(யாருக்கும் அந்த பாட்டு கிடைத்தா இணைப்பை தாங்கோ)..நேக்கு அந்த பாட்டு என்றா நன்னா விருப்பம் ஏன் என்று எனக்கே தெரியாது..

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

என்ன வெண்ணிலா சூடா இருக்கிறியள். காதல் சுட்டு விட்டதா. :wub:

கவிதை உண்மையாயிருக்கு

:D வெண்ணிலா சூடா இருக்கவில்லையுங்கோ. ஹீஹீ காதல் இருந்தால் தானே சுடுறதுக்கு :lol:

கவிதை சாதாரணமாக இருக்குது. நீங்கள் வாசிக்கையில் உண்மையென நினைச்சு வாசிக்கிறீங்க. :(

நான் படிச்சதுக்குள்ள சற்று வித்தியாசமான சிந்தனையில் அமைந்த கவிதை. பாராட்டுக்கள். :lol:

நன்றிகள் நெடுக் தாத்தா.

உணர்வுள்ள வரிகள், இதுவரை நான்படித்த உங்கள் கவிதைகளில் இந்த கவிஞருக்கு காதல் பிடித்திருக்கிறது,, ஆனால் தோல்வி இவரை துரத்துகிறது. கவிதைகளில் மட்டும் தோல்விகள் தொடர வாழ்த்துக்கள்.

:) இதுவரையில் காதல் பிடித்திருந்தாலும் காதலில் தோல்வி வந்தால் எப்படி இருக்கும் என்பதை நினைச்சு பதிச்ச கவி இது.

வாழ்க்கையில் தோல்வியும் வெற்றியும் இன்பமும் துன்பமும் காலையும் மாலையும் போல தானே சித்தனே.

வாழ்த்துக்கு நன்றிகள் :lol:

Link to comment
Share on other sites

சே என்ன கொடுமையிது! மாதங்களைப் பண்ணிரண்டாக மட்டும் வைத்தது யார்? இன்னும் இரண்டு மாதத்தைக் கூட்டிவைத்தால் குறைந்தா போய் விடுவார்கள்! அப்போதாவது அந்தக் காதல் இணைந்திருக்குமே!!! :wub::lol:

:D மாதம் கூடினால் என்ன மனம் எல்லோ கூடணும் ஒன்றோடு ஒன்று. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தையில் தைத்து,

மாசியில் பேசி,

பங்குனியில் சங்கமித்து,

சித்திரையில் புரண்டு,

ஆனியில் அலைந்து,

ஆடியில் பாடி,

ஆவணியில் அணி தந்து,

புரட்டாசி வரட்சியுற்று,

ஐப்பசியில் கசந்து,

கார்த்திகையில் தொடர்பறுந்து,

மார்கழியில் முடிந்ததா காதல்?

தொடர்ந்து தை வருமே.... வெண்ணிலா :D:):wub:

Link to comment
Share on other sites

வெண்ணிலா கவலை வேண்டாம்...

மீண்டும்..ஒரு

மார்கழி மழையில் கண்டு

மனதிலே காதல் கொண்டு...

தையிலே கவிதை நெய்து

கையிலே தரலாம் தைத்து

மாசியில் கூச்சம்விட்டு

பேசியோர் முடிவுக்குவரலாம்..

பங்குனி பகலில் தொட்டு

பனிவிழும் இரவை விட்டு

சித்திரை சேதியைச் சொன்னால்..

சத்திர முகவரி தேடி..

வைகாசி.. விருந்துக்கு வாறன்..

வெண்ணிலா வெட்கம் பாரன்!!

Link to comment
Share on other sites

ம்ம்..ஒரு வருட காதலில் இவ்வளவு வலிகளா??..(நிசமா முடியல்ல :( )..ஒரு வருட காதலையும் ஒரு கவிகுள் அடக்கி சென்றது நிலா அக்காவின் தனித்துவம் வாழ்த்துக்கள் அக்கா.. :lol:

ம்ம்...நிலா அக்கா காதலர்கள் வேண்டும் என்றா பிரிந்து போகலாம் அதற்காக காதல் தோற்குது என்று எல்லாம் சொல்லபடாது என்ன.. :huh: (எப்பவுமே நாம ஒன்னை காதலிக்கிற படியா தான் இன்னுமெ சந்தோசமாக இருக்க முடியுது).. அக்சுவலா நான் முதலாவதா காதலிக்கிறது மம்மியை அடுத்து வேற யாரையும் இல்லை என்னை தான்.. (என்ன பார்க்கிறியள் :rolleyes: )..எப்பவுமே நம்மளே நாம காதலித்தா தான் மற்றவையள் நம்மளை காதலிப்பீனம் பாருங்கோ..(இது எப்படிக்கா இருக்கு :) )..

ம்ம்..இறுதி வரியை வாசிக்கும் போது அந்த ஆள் ரொம்பவே நொந்து போயிட்டார் போல இருக்கு..(இதுக்கே இப்படி என்றா)...வாழ்க்கையில எத்தனை குரோசிங் லைனை கடக்க வேண்டும் அச்சோ அச்சோ ...ம்ம் காதல் எங்களை எக் காரணம் கொண்டு வெறுபதில்ல நாம ஏன் வெறுக்க வேண்டும் காதலை : ..இப்ப பாருங்கோ பூங்காவனத்தில சில ரோஜாக்கள் அழகாக இருக்கும் ஆனா நறுமணம் குன்றி இருக்கும்..(ஏன் அழகில் மயங்கி நறுமணம் இல்லாத ரோஜாவை நோக்கி பயணிப்பான்)..இப்படி நான் சொன்னேன் என்று அவருக்கு சொல்லுங்கோ என்ன நிலா அக்கா.. :

ஜம்மு பேபி சிட்டுவேசன் கவிதை -

மீண்டும் வருடம் பிறந்தது

மீண்டும் இதயம் என்னிடம் வந்தது

மீளவும் இன்னொருத்தி அருகில் வர

மீண்டும் இதயம் படபடத்தது..!! :unsure:

சிட்டுவேசன் சோங் -

கேட்கலையோ கண்ணது கானம்

பூக்களையோ பூக்களையோ பூக்கள் நெஞ்சில் நாணம்

என்னை விட்டு எங்கே போனாலும்

என் உள்ளம் மட்டும் உன்னை விட்டு

எங்கையும் போகாது!!

அப்படியே சிட்டுவேசன் சோங் கஸ்தூரிமான் படத்தில இருந்து இந்த பாட்டு நன்னா இருக்கும்..(யாருக்கும் அந்த பாட்டு கிடைத்தா இணைப்பை தாங்கோ)..நேக்கு அந்த பாட்டு என்றா நன்னா விருப்பம் ஏன் என்று எனக்கே தெரியாது..

அப்ப நான் வரட்டா!!

ஹாஹா ஒருவருடத்தில் இத்தனை வலிகளா என கேட்டு முடியலை என்கிறியளே. அனுபவிச்சால் எப்படி இருக்கும். ஹீஹீ எனக்கும் அனுபவிக்கணும் போல இருக்கு ஜம்மு என்ன பார்க்கிறியள் நான் சொன்னது காதலை அனுபவிக்கணும் னு.

ஜம்மு அம்மாவையும் உங்களையும் காதலிக்கிறியளா. கிரேட் ஜம்மு. :wub: நிசமா நன்னா இருக்குங்கோ உங்களாஇ நீங்க காதலிச்சால் உங்களை யாராவது காதலிப்பினம் என்ற நம்பிக்கை ரொம்ப பிடிச்சிருக்கு. ஆனாலும் பேபிக்கு இது கொஞ்சம் ஓவராக இல்லையோ.

பூங்காவனத்து ரோசாவின் நறுமணம் பற்றி நல்லா சொல்லி இருக்கிறீங்க. இதை ஜம்மு சொன்னது என எபப்டி சொல்லலாம்? அந்தாள் தான் உயிரோடை இல்லையே. உது எப்படி இருக்கு ஜம்மு.

ஆகா ஆஹா சிட்டுவேசன் கவிதை சூப்பர் ஜம்மு. எப்படி ஜம்மு உங்களால் இப்படி எல்லாம்.

ஆஹா சிட்டுவேசன் சோங் ............. ஜம்ஸ்

http://www.isaithenral.com/Songs/free/inde...shthoori%20Maan இந்த லிங்க் இல் உங்கள் பாட்டை தரவிறக்கலாம்

ஏன் இந்த பாட்டு பிடிச்சிருக்கு :icon_mrgreen:

Link to comment
Share on other sites

கவிதை நன்றாக இருந்தது வாழ்த்துக்கள்.

அவசர காதல் தான் அவலத்திற்கு காரணமோ?

Link to comment
Share on other sites

தையில் தைத்து,

மாசியில் பேசி,

பங்குனியில் சங்கமித்து,

சித்திரையில் புரண்டு,

ஆனியில் அலைந்து,

ஆடியில் பாடி,

ஆவணியில் அணி தந்து,

புரட்டாசி வரட்சியுற்று,

ஐப்பசியில் கசந்து,

கார்த்திகையில் தொடர்பறுந்து,

மார்கழியில் முடிந்ததா காதல்?

தொடர்ந்து தை வருமே.... வெண்ணிலா :rolleyes::unsure:

:huh::wub: : அட இப்படி சிம்பிளாக சொல்லிட்டியளே. 12 வரியில் முடிச்சிட்டியள். ரொம்ப நன்னா இருக்குங்கோ. ஐயோ எனக்கு எப்பவும் வசந்தகாலம் தான். எத்தனை தை வந்தாலும் நான் நானாக தான் இருக்கிறேனுங்கோ. :lol: இக்கவி எழுதினது வெண்ணிலாவாக இருக்கலாம். ஆனால் உணர்வுகள் என்னது இல்லை :)

வெண்ணிலா கவலை வேண்டாம்...

மீண்டும்..ஒரு

மார்கழி மழையில் கண்டு

மனதிலே காதல் கொண்டு...

தையிலே கவிதை நெய்து

கையிலே தரலாம் தைத்து

மாசியில் கூச்சம்விட்டு

பேசியோர் முடிவுக்குவரலாம்..

பங்குனி பகலில் தொட்டு

பனிவிழும் இரவை விட்டு

சித்திரை சேதியைச் சொன்னால்..

சத்திர முகவரி தேடி..

வைகாசி.. விருந்துக்கு வாறன்..

வெண்ணிலா வெட்கம் பாரன்!!

:( விருந்துக்கு வாறியளோ.............. ஜம்மு எங்கை தாமரை இலை பந்திக்கு போடுங்கோ.

எனக்கு கவலை எதுவும் இல்லை விகடகவி :lol: நன்றிகள் நன்றாக கவிதையில் விருந்துக்கு வருவதை சொல்லி இருக்கிறியள். அது சரி ஏன் வெண்ணிலா வெட்கம் பாரன்! அபப்டின்னா என்னங்க? :icon_mrgreen:

Link to comment
Share on other sites

கவிதை நன்றாக இருந்தது வாழ்த்துக்கள்.

அவசர காதல் தான் அவலத்திற்கு காரணமோ?

:icon_mrgreen: நீண்டகாலத்தின் பின் உங்கள் வாழ்த்து கேட்டதில் மகிழ்ச்சி. நன்றிகள்.

ம்ம் இருக்கலாம் அவசரம் தான் அவலத்திற்கு காரணம்.

"பதறாத காரியம் சிதறாது" :rolleyes:

Link to comment
Share on other sites

வெண்ணிலாக்கா,

வருட முடிவில் காதலையும் முடித்து

விட்டீர்களே.

சோகமாக இருக்கிறது

கவிதையால் காதல் வரையவில்லை

காதலால் கவிதை வரைந்திருக்கிறீர்கள். :D

Link to comment
Share on other sites

நல்ல ரசனையான வரிகள்,

கவிதை கவிதையாகவே ஆகட்டும்.

நிஷம் நிஷமாகவே இருக்கட்டும்.

பாராட்டுக்கள் நிலா!

Link to comment
Share on other sites

நீண்ட நாட்க்களின் பின் உங்கள் கவிதையை ரசிப்பதில் மகிழ்ச்சி!!

அசத்தல் வெண்ணிலா.......

வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

இன்னொரு காதலில் விழ வாழ்த்துக்கள் நிலா :D

:lol::) விழுறதுக்கு எல்லாம் வாழ்த்து சொல்லுறீங்க இது நன்னாவா இருக்கு? :D:lol:

உண்மையை கவிதையாக வடித்திருக்கிறீங்கள்... கவிதை நன்றாக உள்ளது... :D

நன்றிகள் கவரிமான்.

ஓ சிலரது வாழ்க்கை இபப்டித்தான் அமைந்திருக்கு போல. நான் என்னமோ சும்மா எழுதினேன் பா. நீங்கள் உண்மை உண்மை என சொலுறீங்க. அப்படின்னா.............. :D:lol:

கவிதை ரொம்பவே நல்லா இருக்கு வெண்ணிலா

ரொம்ப நன்றிகள் செவ்வந்தி :)

Link to comment
Share on other sites

வெண்ணிலாக்கா,

வருட முடிவில் காதலையும் முடித்து

விட்டீர்களே.

சோகமாக இருக்கிறது

கவிதையால் காதல் வரையவில்லை

காதலால் கவிதை வரைந்திருக்கிறீர்கள். :D

:lol: கனிஷ் வாங்கோ. கவிதையில் தான் வருடமும் காதலும் முடிந்தது :)

நல்ல ரசனையான வரிகள்,

கவிதை கவிதையாகவே ஆகட்டும்.

நிஷம் நிஷமாகவே இருக்கட்டும்.

பாராட்டுக்கள் நிலா!

:D நன்றிகள் வல்வை அண்ணா.

நிஜங்கள் எப்போதும் நிஜங்கள் தானே. நிஜம் எப்போதும் நிழலாகாது தானே :D

நீண்ட நாட்க்களின் பின் உங்கள் கவிதையை ரசிப்பதில் மகிழ்ச்சி!!

அசத்தல் வெண்ணிலா.......

வாழ்த்துக்கள்

நீண்ட நாட்களாக உங்களையும் கவிதையும் காணவில்லையே இனி.

உங்கள் கவிதையையும் எதிர்பார்க்கின்றேன்.

நன்றிகள்.

Link to comment
Share on other sites

கவிதை நல்லாயிருக்கு நிலா.சோகம் தான் முடியல :D

கவிதைக்கு வந்த பதில்கள் பலே..

Link to comment
Share on other sites

கவிதை நல்லாயிருக்கு நிலா.சோகம் தான் முடியல :(

கவிதைக்கு வந்த பதில்கள் பலே..

:( சோகம் சோகம் என்கிறீங்க. எனக்கென்றால் அக்கவியில் சோகமே தெரியவில்லை. ஏன்னா உதைவிட எவ்வளவோ சோகங்கள் இருக்கும் போது இது ஜஸ்ட் ஒரு வருட காதல் தானே :lol::(

நன்றிகள் தூயா பபா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.