Jump to content

எங்கட மீசை, தாடியை நாங்கள் என்ன செய்யலாம்? தமிழ் மக்களிடம் இருந்து விளக்கம் தேவை..


Recommended Posts

அனைவருக்கும் வணக்கம்...

கனகாலமா யாழில ஆராய்ச்சிகள் ஒண்டும் செய்ய இல்லை. இப்போதைய ஆராய்ச்சி இந்த மீசை, தாடி பற்றியது. இண்டைக்கு சலூனுக்கு நான் தலைமயிர் வெட்டப்போனனான். அதான் மீசை, தாடி பற்றி இஞ்ச கதைக்கவேண்டி வந்திட்டிது.

முதலில ஒரு விசயம் எனக்கு மீசை, தாடி இல்லை. நான் மீசை வளர்ப்பது இல்லை. பார்க்கிறதுக்கு ரவுடி மாதிரி இருக்கும் எண்டுறதாலையும் (இப்ப ஏதோ திறம் எண்டு சொல்லிறதுக்கு இல்ல), சனத்த - முக்கியமா குழந்தைப் பிள்ளைகளை பயப்படுத்தாமல் இருக்கலாம் என்ற நல்ல நோக்கத்தாலையும் நான் மீசை, தாடி வளர்ப்பதில்லை. இதைவிட மீசை, தாடியோட நிண்டு மினக்கட எனக்கு நேரமும் இல்லை.

ரெண்டு நாளைக்கு ஒருக்கால் முகத்துக்கு பேஸ்டை அப்பிப்போட்டு (பல்லு மினுக்கிற பேஸ்ட் இல்ல) அப்பிடியும் இப்பிடியுமா ரெண்டு இழுவை பிளேடால இழுத்துவிட்டால் விசயம் முடிஞ்சிது. இவ்வளவுதான் நான் மீசை, தாடிக்கு கொடுக்கின்ற முக்கியத்துவம்..

நான் முதன்முதலா எனது மீசையை அறுத்து எறிந்தது கொழும்புக்கு யாழ்ப்பாணத்தில இருந்து போனநேரம். அப்ப கொஞ்சக்காலம் கம்பளையில இருக்கவேண்டி இருந்திச்சிது கொழும்பில சரியான பிரச்சனையா இருந்தபடியால்... அந்தநேரம் மீசையை அறுத்தால் பார்க்கிறதுக்கு சிங்களவன் மாதிரி இருக்கும் எண்டு நினைச்சுப்போட்டு பிளேடால சீவித்தள்ளினது.

எண்டாலும் கடைசியில மீசை இல்லாத நிலையிலும் கொழும்பில போலிஸ் என்னப்பிடிச்சு சிறையுக்கு போய்வந்தது அடுத்த சோகக்கதை. அவங்கள் தமிழ் ஆக்களப்பிடிக்கேக்க மீசையப் பார்த்து பிடிக்க இல்லை எண்டு பிறகு விளங்கிச்சிது.

யாழ்ப்பாணத்த விட்டு நான் கிளம்பினதோட என்னிடம் இருந்து பறிபோன பலவிசயங்களில எனது மீசையும் ஒண்டு. இதுக்காக அழவா முடியும்.. எல்லாம் காலம் இப்ப மாறிப்போச்சிது. மீசை வச்சு இருக்கிறதவிட இல்லாமல் இருக்கிறது எவ்வளவோ சுகமா இருக்கிது.

ஆனா... மாண்புமிகு தமிழ் மக்கள் மீசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறமாதிரி தெரியுது. யாழுக்கையும் நிறைய மீசைக்கார நண்பர்கள் இருப்பார்கள் என்று நினைக்கிறன். பாரதியார் மீசை வச்சு இருந்தார் எண்டுறதுக்காக யாராவது மீசை வச்சுக்கொள்ளுறீனமோ தெரியாது.

இதேபோல சிலர் தங்களை ஞானிகள், மேதாவிகள் மாதிரி காட்டிக்கொள்ளுறதுக்கு தாடி வைக்கிறீனமோ தெரியாது..

மேலும், மீசைக்கும் தமிழுக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்கிதோ எண்டும் எனக்கு தெரியாது.

nl2002sx0mz.jpg

தலைவரே மேல படத்தில மீசை இல்லாமல் எவ்வளவு அழகா இருக்கிறார். இதில இருந்து என்ன விளங்கிது? நாங்களும் மீசை இல்லாமல் அழகா புரபசனலான லுக்குடன் இருக்கிறதில பிழை ஒண்டும் இல்லை எண்டு விளங்கிது..

நான் மீசை வைத்துக்கொள்ளாதது பற்றி கவலைப்படுறது முக்கியமா எண்ட அம்மாதான். அக்காமாரும் நான் மீசை இல்லாமல் இருக்கிறது பற்றி சிலது என்னைப் பேசுவார்கள்.

மற்றது, பெண்களுக்கு ஆண்கள் மீசை வச்சுக்கொள்ளுறது பிடிக்குமோவும் தெரியாது. சிலருக்கு பிடிக்கலாம். இன்னும் சிலருக்கு பிடிக்காமல் விடலாம் என்று நினைக்கிறன்.

மீசை பற்றிய உங்கட அனுபவங்களையும், தத்துவங்களையும், விருப்பங்களையும் கொஞ்சம் எடுத்துவிடுங்கோ. எனது கதைகள நான் மிச்சம் பிறகு சொல்லிறன்..

உங்கள் கருத்துக்களிற்கு நன்றி!

Link to comment
Share on other sites

மீசை அனைவருக்கும் பொருந்தாது

பொருந்துபவர்களுக்கு அது கம்பீரம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியாச் சொன்னீங்கள். தேவதாசுக்கு.. தாடி மீசை அழகு. ஆனால் எனக்கு தாடி மீசை வைச்சால் என்னையே எனக்கு அதிகம் பிடிக்காது..! பட் நான் சில வேளை வைச்சுக்குவன். ஒரு போதும் மீசை மட்டும் வைச்சிக்கிட்டதே இல்ல வாழ்க்கையில..! :D

Link to comment
Share on other sites

சரியாச் சொன்னீங்கள். தேவதாசுக்கு.. தாடி மீசை அழகு. ஆனால் எனக்கு தாடி மீசை வைச்சால் என்னையே எனக்கு அதிகம் பிடிக்காது..! பட் நான் சில வேளை வைச்சுக்குவன். ஒரு போதும் மீசை மட்டும் வைச்சிக்கிட்டதே இல்ல வாழ்க்கையில..! :D

உங்களையே உங்களுக்கு பிடிக்காதுன்னா, ஏன் வைச்சிங்க? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இன்னும் மீசை முளைக்கும் வயது வரவில்லை.எத்தனை வயதில் மீசை முளைக்கும்?

Link to comment
Share on other sites

எனக்கு இன்னும் மீசை முளைக்கும் வயது வரவில்லை.எத்தனை வயதில் மீசை முளைக்கும்?

நம்பிட்டம் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களையே உங்களுக்கு பிடிக்காதுன்னா, ஏன் வைச்சிங்க? :D

எப்பவும் என்னை நான் அழகாவே பார்க்க நினைக்கிறனா.. சோ.. அசிங்கமாவும் பார்க்க வேணாமா.. தற்ஸ் மீன்.. என்ர உண்மைக் கோலத்தை நானே காண வேணாமா என்றுதான். :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனா... மாண்புமிகு தமிழ் மக்கள் மீசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறமாதிரி தெரியுது. யாழுக்கையும் நிறைய மீசைக்கார நண்பர்கள் இருப்பார்கள் என்று நினைக்கிறன். பாரதியார் மீசை வச்சு இருந்தார் எண்டுறதுக்காக யாராவது மீசை வச்சுக்கொள்ளுறீனமோ தெரியாது.

என்ன முரளி சார் அறுக்க எண்டே கிளம்பிட்டிங்களா,

நம்ப மீசை தாடியை சப்ஜக்ட்டா எடுத்து ரொம்பதான் பிளேடு போடுறீங்க.

Link to comment
Share on other sites

கொழும்பில நான் படிக்கேக்க பாடசாலைக்கு மீசையுடன் போகமுடியாது.. அது அரும்பு மீசையாக இருந்தாலும் கூட... தினமும் என்னை வாசலில் நிக்கவைத்து விடுவார்கள்..! சோகத்துடன் மீசையை எடுத்தவுடன் நண்பர்களின் எல்லாரும் மச்சான் நீ வயசுக்கு வந்துட்டே என்ற நக்கல் வேறு.. அந்த நேரம் இளைஞர்கள் எல்லாரும் காதல் தேசம் அப்பாஷ் கிரேசுடன் அலந்த நேரம்.. சரி நானும் அப்பாஷ் மாதிரி என்று தேற்றிக்கொண்டது தான்..!

ஒருக்கா பாடசாலையில் உப அதிபரிடம் இது பற்றி பிரச்சினை எழுப்பிய போது... அவரின் பதில் .."மீசையோட உங்களை பாத்தா வில்லன் மாதிரி இருக்கும் . லேடி டீச்சர் மார் பயப்படுவினம்..." :D

அப்ப நாங்கள் திருப்பி கேட்டோம்.." அப்ப மீசையை எடுத்து நாங்கள் HERO ஆகி பிறகு ஏதாவது நடந்தால்...?

Link to comment
Share on other sites

மீசை அனைவருக்கும் பொருந்தாது

பொருந்துபவர்களுக்கு அது கம்பீரம்

அதாவது ரவுடிமாதிரி இருக்கிறதை கம்பீரம் எண்டு சொல்லிறீங்கள் சரிதானே?

அட நெடுக்காலபோவானுக்கும் தாடி, மீசை இல்லையோ? அதான் நாங்கள் ரெண்டு பேரும் யாழில அறிவாளிகளா இருக்கிறமோ? :D

லீ நீங்கள் கொழும்பில எந்த ஸ்கூலில படிச்சீங்களோ தெரியாது. ஆனா நான் சென்.ஜோன்சில படிக்கேக்க 15 வயது பெடியங்களுக்கு யேசுநாதர் வளர்த்து இருக்கிற ரேன்ஞ்சில மீசை இருக்கும். அங்க தாடி மாத்திரம் வச்சு இருக்க ஏலாது. மீசை வச்சு இருக்கலாம்.

நான் சின்னனில படிக்கேக்க ஒரு பெடியனுக்கு 13 வயசிலையே அந்தமாதிரி மீசை இருக்கும். ரியூசனுக்கு வருவான். வாத்தி அவனப் போட்டு டேய் மீசைக்காரா, மீசைக்காரன் எண்டு அறுத்து நக்கல் அடிச்சுக்கொண்டு இருக்கும்.

வணங்காமுடி.... உங்கட பெயரிலையே முடி இருக்கிது. எண்டபடியா உங்களுக்கும் மீசை இருக்கிது எண்டு விளங்கிது. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலைஞா,

அதெப்படி உங்களுக்கு மாத்திரம் அபூர்வமான அதிசயக்கத்தக்க சிந்தனைகள் தோன்றுதோ? ( அடிக்கடி கற்பனை உலகில் சஞ்சரிப்பீங்களோ).

மீசை இல்லையெண்டால்....'அது உடுப்புக்கடையில் நிற்கிற ஆண் பொம்மைகள் மாதிரி இருக்கும். எனக்கு மீசை பிடிக்கும்(எனக்கு முளைக்காது :D) எங்கள் நாட்டவர்களுக்கு மீசைதான் அழகு என்பது என் எண்ணம். சீன,ஜப்பான் காரருக்கு மீசை முளைக்கிறது குறைவு அப்படியே முளைச்சாலும் :lol:) சகிக்க முடியாது. பொதுவாக ஈழப்பெண்களின் கருத்து மீசை இருப்பதுதான் அழகு.

எனக்கு தலைவரின் மீசை வைச்சிருக்கும் படம் தான் மிகவும் பிடிக்கும் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் மீசை வைத்துக்கொள்ளாதது பற்றி கவலைப்படுறது முக்கியமா எண்ட அம்மாதான். அக்காமாரும் நான் மீசை இல்லாமல் இருக்கிறது பற்றி சிலது என்னைப் பேசுவார்கள்

வடிவேலு மாதிரி பென்சிலில் முயற்சிக்கலாம் தானே :D

photo86.jpg

தலைவரின் இந்த மீசைப்படத்தைப் பார்த்துத் தான் இந்தியாவில் உள்ள பல தமிழ்மக்கள் தலைவரை வேறுபடுத்தி அடையாளம் கண்டு கொண்டார்கள்.

தலைவருக்கு மீசை எப்பவுமே அழகு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீசைக்கும் தமிழுக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்கிதோ எண்டும் எனக்கு தெரியாது.

மீசைக்கும் தமிழுக்கும் சம்பந்தம் இருக்கா எண்டு தெரியல ஆனா மீசைக்கும் வீரத்துக்கும் சம்பந்தம் இருக்கலாம்.

அதுதானாக்கும் ஆண்கள் அடிக்கடி மீசையை முறுக்கி காட்டுகிறார்கள். :D

Link to comment
Share on other sites

கனகாலமா யாழில ஆராய்ச்சிகள் ஒண்டும் செய்ய இல்லை. இப்போதைய ஆராய்ச்சி இந்த மீசை, தாடி பற்றியது. இண்டைக்கு சலூனுக்கு நான் தலைமயிர் வெட்டப்போனனான். அதான் மீசை, தாடி பற்றி இஞ்ச கதைக்கவேண்டி வந்திட்டிது.

வணக்கம் முரலி,ஆராய்ச்சி என்பது மனிதனுக்கு முகவும் முக்கியம் தான்,

இந்த மீசை தாடி பெற்றி நாங்கள் கட்டாயம் கதைக்கத்தான் வேணும்....இந்த விடயம் என் மனதில் தோன்றியது உண்டு

பலருக்கு பல ரசனை,ஆனால் சில ஆண்களின் மீசையை கண்டால் எரிச்சலாகத்தான் இருக்கும்...

முதலில ஒரு விசயம் எனக்கு மீசை, தாடி இல்லை. நான் மீசை வளர்ப்பது இல்லை. பார்க்கிறதுக்கு ரவுடி மாதிரி இருக்கும் எண்டுறதாலையும் (இப்ப ஏதோ திறம் எண்டு சொல்லிறதுக்கு இல்ல),

மீசை வைத்தவன் எல்லாம் ரவுடி என்றால் வைக்காதவன் எல்லாம் திறமையா...

சிறிப்புத்தான் வருது... என்ன சின்ன மிள்ளைத்தனமாக இருக்கு... இந்த பலங்காலப்பெச்ச விட்டு நீங்கள் என்னம் வெளிய வரவில்லையா.... :D:lol::)

மற்றது, பெண்களுக்கு ஆண்கள் மீசை வச்சுக்கொள்ளுறது பிடிக்குமோவும் தெரியாது. சிலருக்கு பிடிக்கலாம். இன்னும் சிலருக்கு பிடிக்காமல் விடலாம் என்று நினைக்கிறன்.

மீசை வைப்பது இந்தகாலத்து பெண்கலளுக்கு பிடிப்பதில்லை என்பது என் கருத்து!!

உண்மையில் இதில் என்ன அழகு இருக்கு என்று எனக்கு தெரியவில்லை... மீசை,தாடி இதிலும் பல வடிவங்கள் உண்டு

எங்கள் முதியேர்கள் வைக்கும் மீசைகள் எங்களுக்கு பிடிப்பதில்லை...

இங்குள்ள இளைர்கள் இப்படி வைப்பது மிக முறைவு..... சில ஆண்கள் அதாவது நான் தமிழ் திரைப்படத்தில் பார்த்தால் சின்ன வயது ஆண்களை இந்த மீசை அசிங்கமாகவும், வயதுபேன ஆண் மாதிரி காட்டும்.....

ஏன் இருக்கிர அழகை குறைத்துக்கொள்ளுறீங்கள் ஆண்களே!! சற்று சிந்தியுங்கள்... நாங்கள் பார்த்து மயங்காவிட்டாலும்,ஒரு அலவுக்கு முகம் பார்க்க கூடியதாக இருங்கள்

அதர்க்காக பெண்கள் சார்பில் நன்றிகள்!!

அன்புடன் இனியவள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைகளும் மீசை வைக்கிறதில்லை, ஆனாபடியால் நானும் என்களுடய சில் டமிழ்ஸ்சும் மீசையை எடுத்து போட்டோம் :D:lol::)

Link to comment
Share on other sites

லீ நீங்கள் கொழும்பில எந்த ஸ்கூலில படிச்சீங்களோ தெரியாது. ஆனா நான் சென்.ஜோன்சில படிக்கேக்க 15 வயது பெடியங்களுக்கு யேசுநாதர் வளர்த்து இருக்கிற ரேன்ஞ்சில மீசை இருக்கும். அங்க தாடி மாத்திரம் வச்சு இருக்க ஏலாது. மீசை வச்சு இருக்கலாம்.

உண்மை யாழ்ப்பாண பாடசாலைகளில் மீசைக்கு தடா கிடையாது.. கொழும்பில் தான் இந்த தடை....பெரும்பாலான பாடசாலைகளில்...! நான் படித்த கொழும்பு இந்துக் கல்லூரியில் (பம்பலபிட்டி) கொஞ்சம் ஒவராகவே கெடுபிடி..!

Link to comment
Share on other sites

உண்மை யாழ்ப்பாண பாடசாலைகளில் மீசைக்கு தடா கிடையாது.. கொழும்பில் தான் இந்த தடை....பெரும்பாலான பாடசாலைகளில்...! நான் படித்த கொழும்பு இந்துக் கல்லூரியில் (பம்பலபிட்டி) கொஞ்சம் ஒவராகவே கெடுபிடி..!

லீ என்னைத் தொடர்ந்து வர்றாப்போல தெரியுது.. :lol: பம்பலப் பிட்டியில எந்த வருசம் எந்த வகுப்பு? சிங்கப்ப்புரில எவிடம்? :D

Link to comment
Share on other sites

இதையும் ஒருக்கால் பாருங்கோ... :lol:

சர்வதேச தாடி, மீசைக்கான வெற்றிக்கிண்ணம் - World Beard & Moustache Championships

இதில சுவிஸ்லாந்து நாட்டினை சேர்ந்த ஒருத்தரிண்ட மீசைக்கு வெற்றி கிடைச்சிது. அதப்பார்க்க மீசை மாதிரி தெரிய இல்ல. அரிவாள் மாதிரி இருக்கிது. :D

Link to comment
Share on other sites

அதாவது ரவுடிமாதிரி இருக்கிறதை கம்பீரம் எண்டு சொல்லிறீங்கள் சரிதானே?

ரௌடிமாதிரி என்பதற்கும் கம்பீரத்திற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை.

மேலே மாமாவின் படம் பார்த்தீர்கள் தானே..அங்கு தெரிவது கம்பீரம்...ரௌடித்தனம் அல்ல..

Link to comment
Share on other sites

ரௌடிமாதிரி என்பதற்கும் கம்பீரத்திற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை.

மேலே மாமாவின் படம் பார்த்தீர்கள் தானே..அங்கு தெரிவது கம்பீரம்...ரௌடித்தனம் அல்ல..

நன்றி தூயா விளக்கத்துக்கு..

மேற்கோள் காட்டபட்ட கருத்தும் பதில் கருத்தும் நீக்கப்பட்டுள்ளது.-யாழ்பிரியா

Link to comment
Share on other sites

ம்ம்ம்..வணக்(கம்) குருவே அட நானே தான் வந்துட்டோமல...நன்ன டொபிக் ஒன்னை டிஸ்கஸ் பண்ணுறியள் அது தான் ஜம் பண்ணி வந்துட்டோமல.. :D

ம்ம்ம்..குருவே பொண்ணுகளுக்கு வந்து எப்படி கூந்தல் அழகோ அத மாதிரி பையன்களுக்கு மீசை அழகு...(கண்ணுக்கு மை அழகு பையன்களின்ட முகதிற்கு மீசை அழகு :o )..இது எப்படி இருக்கு குருவே...ம்ம் நேக்கு கூட மீசை என்றா ரொம்ப நன்ன விருப்பம் பாருங்கோ..(பட் மம்மியிட்ட ஏச்சு அல்லோ விழும்)...ம்ம் மீசை எல்லாத்தையும் எடுத்தா என்ட வேஸ் வந்து பேபி வேஸ் மாதிரி அல்லோ இருக்கும்..(நிசமா என்னால முடியல்ல :D )...

ம்ம்ம்...பொண்ணுகளுக்கு மீசை பிடிகாதா யார் சொன்னது..(இப்ப பொண்ணுகளுக்கு மீசை ரொம்ப நன்னா பிடிக்கும் :D )...நான் மீசையை எல்லாம் எடுத்து கொண்டு யூனி போனா முதல் கேள்வியே ஏன்டா மீசையை எடுத்தனி என்று தான் பாருங்கோ குருவே... :o

ம்ம்ம்..ஆனால் பாட்டிகார்களுக்கு எல்லாம் பிடிகாது பாருங்கோ அவையிட்ட தான் கூடுதலா ஜம்மு பேபிக்கு மீசைக்கு ஏச்சு விழுறது பாருங்கோ..ம்ம் பொண்ணுங்க மீசை நன்னா இருக்கு என்று சொல்லுறாங்க ஜம்மு பேபிக்கு பாட்டிமார்கள் அசிங்கம் என்று சொல்லீனம் நான் என்ன செய்ய என்று எனகே கொன்வீயூசன் பாருங்கோ :D ..பட் மீசைய வைத்து கொண்டு போனா நம்மளை வழமைக்கு மாறுதலாக கூட பேர் நம்மள பார்க்கிற மாதிரி நம்மளுக்கு ஒரு எண்ணம்...(ஆனா நிசமா நம்மள தான் பார்கீனமோ என்று நேக்கு தெரியல)... :o

ம்ம்..பட் எல்லாருக்கும் மீசை சூட் பண்ணாது...(சூட் பண்ணுறவைக்கு நன்னா இருக்கும் பாருங்கோ)...ம்ம்ம் நேக்கு மீசை சூட் பண்ணுதோ இல்லையோ என்பது நேக்கே டவுட்டா தான் இருக்கு..(ம்ம்..ஜம்மு பேபியை தெரிந்த யாழ்கள மெம்பர்ஸ் தான் சொல்ல வேண்டும் ஜம்மு பேபிக்கு மீசை நன்னா இருக்கா இல்லையா என்று அப்ப தான் நாம அதன் படி செய்ய முடியும் பாருங்கோ)..பொய் எல்லாம் சொல்லபடாது என்ன... :D

ம்ம்..மற்றது தாடி அது நேக்கு பிடிகாது...(ஜ கேட் தாடி)...ம்ம்ம் நேக்கு என்ன பிரச்சினை என்றா சேவ் பண்ண நேக்கு தெரியாது எப்ப சேவ் எடுத்தாலும் கண்டிப்பா இரத்தம் வரும்..(உது தான் நேக்கு பயமே)...ம்ம்ம் முதன் முதலா மம்மி தான் நேக்கு சேவ் எடுத்து விட்டவா அதற்கு பிறகு சலூன் தான்..இருந்திட்டு வீட்ட எடுத்தா அவசரதிற்கு கண்டிப்பா "பிளட்" வரும் உது தான் நேக்கு பிடிகாத விசயம் பாருங்கோ... :D

ம்ம்..நேக்கு சின்ன வயதில இருந்து மீசை என்றா நன்ன விருப்பம் சோ என்ன பொறுத்தவரை நேக்கு மீசை பிடிக்கும்..(பார்க்கிறவைக்கு என்ன மாதிரியோ யாருக்கு தெரியும்)...சில ஆட்களுக்கு மீசை பேர்சனாலிட்டி லுக்கை கொடுக்கும் சிலருக்கு மீசை இல்லாட்டி நன்ன பேர்சனாலிட்டியா இருக்கும் குருவே.. :D

ம்ம்ம்..அடுத்தது தாடி அக்சுவலா தாடி வளர்க்கிறதே சோகதிற்கு அல்லது காதல் தோல்வி என்று ஆகிட்டு..(யாரும் தாடி வளர்த்தா எல்லாரும் கேட்கிற முதல் கேள்வி இது தான்)...சோ...நான் உந்த ரிஸ்க் எல்லாம் எடுக்க போறதில்ல பாருங்கோ..

மற்றது பாருங்கோ குருவே நாலு பேர் அடிக்க வந்தா...(மீசை இருந்தா கொஞ்சம் பயப்பிடுவீனம் பாருங்கோ)..இல்லாட்டி எல்லாமே போச்சு உது தான் முக்கியம் பாருங்கோ உதுக்காகவே ஜம்மு பேபி மீசை வளர்க்கும் பாருங்கோ..(நிசமா என்னால முடியல்ல)...

ம்ம்..குருவிற்கு மீசை வடிவிருக்காது என்பது என்னுடைய கற்பனை..(பட் ஜம்மு பேபிக்கு எப்படி இருக்கும் என்று யாரச்சும் சொல்லுங்கோ)...அப்ப தான் நான் மீசை வளர்கிறதோ இல்லையோ என்று டிசைட் பண்ண தான் பாருங்கோ என்னொன்னு சொன்னா ஒருத்தரும் பேபியை ஏசமாட்டியள் தானே அது வந்து அக்சுவலா கேள்பிரண்டிற்கு "உம்மா" கொடுக்கும் போது மீசை இருக்கிறது தான் அவைக்கு பிடிக்குமா..(உது நான் சொல்லல்ல சுண்டல் அண்ணா தான் சொல்லி தந்தவர் எனக்கு)...நான் பேபி ஆக்கும்..இது எல்லாம் நிசமாவோ..

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா மீசை வளர்க்கிறது முக்கியமல்ல ஆம்பிளையா இருக்கிறது தான் முக்கியம்"

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

சூப்பர் பஞ்ச் ஜம்ஸ்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.