Jump to content

சங்கரநயினார் கோவில் - ஓர் ஆய்வு


Recommended Posts

பெயர் மாற்றம்

அக்கோவில் சம்பந்தமான பழைய அச்சுப்பாரம் ஒன்றில் 'சங்கரநயினார்கோவில் தேவஸ்தானம் ஆபிஸ், 190 ம்வருஸத்து நிர், பேப்பர் சுருக்கம் அடக்கம் விபரம் பேப்பர்தெய்தி, வரவுதெய்தி, ஆர்டர்தெய்தி, ரவணாதெய்தி, முடிவுதெய்தி' என்பன அதற்கதற்குரிய இடத்தில் அச்சிடப் பட்டுள்ளன். 190 என்றதன் பக்கத்தில் 8 என்ற கையெழுத்திருக்கிறது. பேப்பர் தெய்தி 8-1-08 ஆகும். அக்கோவிலுக்கு 1908இல் சங்கரநயினார் கோவில் தேவஸ்தானம் என்ற பெயர் இருந்திருக்கிறதென அதனால் தெரியலாம்.

பின்னர் அக்கோவிலிலிருந்து 51 பக்கங்கள் கொண்ட கோஷ்பாராப் புத்தகமொன்று அச்சாகி வெளிவந்தது. 'உ ஸ்ரீ கோமதி ஸஹாயம், சங்கரநயினார் கோவில் கஸ்பா, ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி கோவில் தேவஸ்தானம், 1325-ம் பசலி வரவு செலவு கோஷ்பாரா, திருநெல்வேலி நூருல் இஸ்லாம் பிரஸில், பதிப்பிக்கப்பட்டது, 1917' என்பது அதனட்டையிற் கண்ட முகப்பு. 1917இல் அக்கோவில் ஸ்ரீசங்கரலிங்கசுவாமி கோவில் தேவஸ்தானம் என்ற பெயருடையதா யிருந்திருக்கிறதெனத் தெரியலாம்.

அக்கோவிலின் மற்றோ ரச்சுப்பாரத்தில் 'டூப்பிளிக்கேட், சங்கரநயினார் கோவிலித் தாலூகா, சங்கரநயினார் கோவில்க் கிராமம், ஸ்ரீசங்கரலிங்கசுவாமி கோவில்.....வரவு செலவுகளுக்குரிய வவுச்சர். வரவு ரூ.சிலவு.ரூ.பாபு பசலி ரூ.அ.பை செலுத்துகிற அல்லது பெற்றுக் கொள்பவர் கையொப்பம்.....19 ஷராப். பேஷ்கார். தர்மகர்த்தர்கள்' என வுள்ளது. அதனில் ஸ்ரீ சங்கரலிங்கசுவாமி கோவில் என்ற அச்செழுத்துக்குப் பக்கத்தில் தேவஸ்தானம் எனவும், தர்மகர்த்தர்கள் என்றதன் கீழ் 21-3-1921 எனவும் கையால் எழுதப்பட்டுள்ளன. 1921 இலும் அக்கோவிலின் பெயர் ஸ்ரீ சங்கரலிங்கசுவாமி கோவில் தேவஸ்தானம் எனத் தெரியலாம்.

Link to comment
Share on other sites

அக்கோவில் நூல் நிலயத்திலுள்ள புத்தகங்களின் அட்டையில் ஒட்டப்பட்டுள்ள துண்டு விளம்பரத்தில் 'ஸ்ரீ சங்கரலிங்கசுவாமி கோவில் தேவஸ்தானம் புஸ்தகசாலை, புஸ்தகம் லக்கம் N.A.V. Somasundaram Pillai & V.Thiruvengadam Pillai, Trustees' என அச்சிடப்பட்டிருப்பதை இன்றுங் காணலாம். N.A.V. சோமசுந்தரம் பிள்ளை, V.திருவேங்கடம் பிள்ளை என்பார் அக்கோவிலில் தருமகர்த்தர்களா யிருந்தபோதும் அதற்கு ஸ்ரீசங்கரலிங்கசுவாமி கோவில் தேவஸ்தானம் என்பதே பெயர் எனத் தெரிகிறது.

ஆனால் இப்போது அக்கோவில் ஸ்ரீசங்கரநாராயணசுவாமி தேவஸ்தானம் எனப் பெயர்மாற்றி வழங்கப்பட்டு வருகிறது. அம்மாற்றம் என்றிலிருந்து ஆரம்பம்? அதனைக் காணும் பொறுப்பு சைவசமயத்தாருக்கன்றி யாருக்குண்டு? சங்கரன்கோவில் சைவசமயப் பெருமக்களே அதனை விசேடமாகக் காண்டற் குரியார்.

Link to comment
Share on other sites

1917இல் சென்னை, கவர்ண்மெண்டு பிரஸில் அச்சான Madras District Gazetteers - Tinnevelly by H.R.Pate, I.C.S. Volume I.413,414 ஆம் பக்கங்களில் அக்காலை நெல்லை ஜில்லாக் கலெக்டராயிருந்த அந்தப் 'பேட்' என்பவர் 'The temple, conspicuous by its gopuram for many miles around, boasts of great antiquity. According to the stalapurana in the possession of the trustees, King Ugra Pandia "Lord of Korkai, the vanquisher of the tiger-flag of the Cholas and bow-flag of the Cheras," used to go daily to Madura to worship. One day, on reaching the village of Perungottur (two miles from Sankaranainarkoil) the elephant on which the king was riding plunged into a pit and refused to move. Whilst the king was marvelling at the portent, the god Ayyanar appeared and told him he need not go every day to Madura. At that moment a Paraiyan came and told the king he had found a cobra beside an ant-hill and on the king's request took him to the spot. There a lingam was found and a shrine was built. There a lingam was found and a shrine was built. Such was the origin of the Sankaranainarkoil temple. Here it was, the story goes on to say, that God Siva showed to his consort, Gomathi Amman, and to the two serpents, Sanka and Padman, who were quarrellling as to the relative importance of Siva and Vishnu, the unity of the two gods.' The story, which up to this point had referred only to Siva, thus suddenly introduces in allegorical form a theological discussion of the type which originated with the great Ramanujachariyar in the twelfth century. It is scarcely possible to doubt that this element of the story is a later interpolation, designed to associate the god Vishnu with the foundation of the temple and to lend support to the subsequent innovation by which the diety of the temple came to be called "SankaraNarayana" (i.e. Siva and Vishnu) instead of Sanakaranainar, "The Lord Shiva". The plan of the building makes it evident that orginally Vishnu had not a shrine in it. The temple consists of two main parts, the larger occupied by the lingam, the emblem of siva, and the smaller by the goddess Gomathi Amman. Between the two a third small shrine has been inserted for Narayana. but the building did not lend itself to this addition; for , while the lingam and the amman may, as it usual, be viewed from the main entrance through a continuous vista of doorways, so that the humblest worshipper may do homage from the street, it was found impossible to give the god Narayana similar accomodation. He has therefor been walled in and has no gateway. Instances of temples which, according to tradition at least, have been converted from the worship of Siva to that of Vishnu are not uncommon; the great temple of Tirupati (North Arcot) and the Perumal temple of Srivilliputtur (Ramnad) may be quoted. In Sankaranainarkoil the attempt which we may perhaps ascribe to the era of those aredent Vaishnavites, the kings of Vijayanagar, was met, it would appear, by the ingenious answer that already the temple contained both gods. Though the trustees of the present day make much of the co-existance in their temple of the two gods and are particular in having the pattas for the temple lands made out distinctly in the name of Sankaranarayana, the newer god who plays quite a minor role in the important rituals of the temple'

Link to comment
Share on other sites

இதன் தமிழாக்கத்தின் சாரம்சம் என்னவென்றால் திருப்பதி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ள சைவக் கோவில்கள் பின்னாளில் வைணவர்களால் வைணவக் கோயில்களாக மாற்றப்பட்டது. அதன் ஆதாரம் தான் பேட் என்பவர் கொடுத்துள்ளார்

என அச் சங்கரநயினார் கோவிலைப் பற்றிய வரலாரொன்று தீட்டியிருக்கிறார். அக்கோவிலின் வெளியீடாக 1957-இல் 'சங்கரன்கோவில் வரலாறு' என்றொரு புத்தகம் வந்திருக்கிறது. அதில் அவ்வாங்க்கிலத்தின் தமிழ்ப்பெயர்ப்புச் சுருக்கத்தைக் காணலாம். 'இக்காலத்திய தருமகருத்தர்கள் இந்தக் கோவிலில் இரண்டு தெய்வங்களும் இருப்பதைப்பற்றிப் பிரமாதப்படுத்தி வருவதோடு, நிலங்களுக்குப் பட்டாவைச் சங்கரநாராயணர் என்ற பெயருக்கே ஆக்கி வருகிறார்கள்' என அதிலிருக்கிறது. அதனால் அக் கோவிற் பட்டாவை மூலவராகிய சங்கரலிங்கப் பெருமான் பேரால்லாமல் 'புதுத் தெய்வம்' ஆகிய சங்கரநாராயணர் பேரால் தருமகர்த்தர்களே ஆக்கி வருகிறார்களெனத் தெரிகிறது. உரிமைப்பட்ட ஒருவர் பேருக்கு ஆக்கவேண்டிய பட்டாவை உரிமையில்லாத வேறொருவர் பேருக்கு ஆக்கி வைப்பது நியாயமா? முன் வந்து போன தருமகருத்தர்கள் போல் தாமும் செய்து வருவதாகப் புகல் சொல்லிப் பின் வந்துள்ள தருமகருத்தர்கல் தப்பப்பார்ப்பதும் நியாய மன்று. தருமகருத்தர்ப் பதவியை ஏற்றுக்கொண்ட ஒருவர் தம் கோவிலில் முந்திய தருமகர்த்தர் காலத்தில் தவறு ஏதேனும் நடந்துள்ளதா என முதலில் ஆராய வேண்டும். அது காணப்படின் அதனைக் களைதல் அவசியம். அப்போதுதான் தருமத்தைக் காத்து வளர்க்க முடியும். ஆகவே உரிமையற்ற சங்கரநாராயணர் பேருக்குள்ள எல்லாப் பட்டாக்களையும் உரிமையுள்ள சங்கரலிங்கப் பெருமான் பேருக்கு மாற்றி வைக்க இப்போதுள்ள கோவிலதிகாரிகள் முற்படுவார்களாக. பரிவார தெய்வங்கள் எந்தத் தெய்வத்தின் கைங்கரியத்துக்கென விடப்பட்ட சொத்தானாலும் அதன் பட்டா மூலவர் பெயருக்குத்தானே எழுதி வாங்கப்பட வேண்டும்?

Link to comment
Share on other sites

கலவடப் பிரசங்கம்

கலவடம் என்பது கலப்படம் என வழங்கப்படுகிறது. 'அரனின் கூறுதான் அரி' எனத் 'தான்' சேர்த்துச் சொன்னது அக் கோவிலின் 1963-64 நாட்குறிப்பு. அரன் அமிசி, அவனது அமிசமே அரி என்ற கொள்கை வைணவ சாத்திர வல்லுநருக்குச் சிறிதும் அங்கீகாரமன்று. அதனால் சங்கரநாராயண மூர்த்தியை அவர் கண்ணெடுத்தும் பாரார். ஆகலின் ' வைணவப் பெருமக்களுக்கு ஆடித் தவசு உற்சவத்தில் ஸ்ரீ சங்கரநாராயண மூர்த்தியாகக் காட்சி தந்தருளுகிறார்' என அந்நாட்குறிப்புச் சொன்னதில் அர்த்தமில்லை.

சிவன் வேறு. விஷ்ணு வேறு என்று பிரிவு படுத்துவது தவறு எனச் சைவசமயமுஞ் சொல்லாது, வைணவ சமயமும் சொல்லாது. அவ்விரு சமயங்களுக்கும் வேறான மாயாவாத சமயமே சொல்லும். சிவாகமங்களுக்கும், சைவாலயங்களும் உள்ளதொன்றுதொட்ட தொடர்பை அறுத்தெரிந்து சைவாலயங்களை அம்மாயாவாத சமய வாழ்வுக்கே இடமாக்கிக் கொண்டு சிவாகமங்காத் தடந் தெரியாமல் செய்துவிடுவதே அச் சொல்லால் விளையக்கூடிய பயன். சைவ சமூகத்துக்கே அது பிராணஹானி யென்பது அச்சமூகத்தின் உள்ளத்தை உறுத்தவில்லை. சிவவிஷ்ணுக்கள் அபேத மென்பதை ஆதரித்து விளம்பரஞ் செய்துவரும் பிரசாரகருள் முதலிடம் சிருங்கேரிமடத்து அதிபராகிய சங்கர முனிவரும், காஞ்சிகாமகோடி பீடத்து அதிபராகிய சங்கரமுனிவருமாவர். அதைக் காண வேண்டும். முதலில் சிருங்கேரி முனிவர் பேச்சை எடுத்துக்கொள்ளலாம்.

அவர் பிரசங்கமொன்று 29-7-1960 தினமணியில் வந்திருக்கிறது`:-

"சிவபுராணத்தில் பத்மாசூரன் கதை குறிப்பிடப்பட்டிருக்கிறது.....

.பத்மாசூரன்...சிவனைக் குறித்து கடும் தபசு செய்தான். ஈஸ்வரனும்......'யாது வரம் வேண்டு' மென்று கேட்டான். 'நான் யார் தலைமேல் கை வைக்கிறேனோ அவன் பஸ்மமாய் போய்விட வேண்டும்' என்று வேண்டினான். 'கொடுத்தேன்' என்றான் ஈஸ்வரன், பத்மாசூரன் உடனே இதை 'டெஸ்ட்' பண்ண வேண்டுமே என்றார் 'யார் தலைமேல்' என்று கேட்டதுமே 'உங்கள் தலைமேல்' தான் என்று சொல்லி சிவபெருமானை அணுகிறான். ஈஸ்வரனும் அங்கிருந்து ஓட ஆரம்பித்தார்.....பகவான் உடனே மோஹினி ரூபமெடுத்து பத்மாசூரன் முன்.....ஆட ஆரம்பித்து விட்டார். (அவ்வசுரனும்) மோஹினியைப் போலவே அபிநயங்கள் செய்யலானான். பகவான் (மோஹினி) தன் தலையில் கையை வைத்ததும், பத்மாசூரன் அதேபோல் தன் தலைமேல் தன் கையை வைத்தான். உடன் தானே பஸ்பமாய் விட்டான். விஷ்ணு இவ்வாறாக சிவனே இக்கட்டான நிலைமையிலிருந்து விடுவித்து 'இனிமேல் வரம் கொடுப்பதில் ஜாக்கிரதையா யிரு' என்று கூறிச் சென்றாராம்"

Link to comment
Share on other sites

என்றது அம் முனிவர் பிரசங்கம். இக்கதை இப்படி யிருக்குமானால் இது சிவனது பெருமை கூற வந்த சிவபுராணத்தில் இடம் பெற்றிருக்குமா? அறிஞர் சிந்திக்க. விநாயக புராணம் உடுண்டி விநாயகர் திருவவதாரப் படலத்திலும் இக்கதை உண்டு. 1 முதல் 13 முடியவுள்ள பாடல்கள் காண்க:-

'அப்பொழுதே சோதிப்ப வமலர்திரு முடிமீதே

துப்புடைய பிரமசுரன் தொடிக்கரம்வைப் பானடுத்தா

னொப்பரிய வரங்கொடுத்த வொருதாமே யழித்துவிடல்

செப்பமல வெனவிறைவர் செறிந்தவியா பகரானார்'

என்றது 4 ஆம் பாடல். வரங்கொடுத்த பிறகு தன் ஸ்வரூபமாகிய வியாபக நிலையைச் சிவன் எய்தினான். அதனை 'அங்கிருந்து ஓட ஆரம்பித்தார்' என்றார் அம்முனிவர். அவ்வசுரன் பெற்ற வரம் விஷ்ணுவால் திதித்தொழிலுக்கே ஆபத்தாயிற்று. அவன் உயிருடன் இருந்தால் முச்சகமும் சாம்பலாக்குவன். அவன் இறந்தாலன்றி அவ்விஷ்ணுவுக்குத் தன் காத்தற்றொழில் நடைபெறாது. அதற்கஞ்சினான் அக்கடவுள். அதனாற்றான் அவன் அவ்வசுரனை வஞ்சனையாற் கொன்றான். அது அவனது காத்தற்றொழிலைக் காத்துக் கொள்வதற்காகவன்றிச் சிவனைக் காப்பதற்காக வன்று.

Link to comment
Share on other sites

'விச்சுவரு பனையிந்த வெய்யவன்காண் பானல்ல

னச்சிவனா லழியாத வழிதக்க வரம்பெற்றான்

முச்சகமு மினிநீறாய் முடிப்பனொரு வஞ்சனையா

னச்சியுயிர் குடித்துமென நலத்தருமோ கினியானான்'

என்றது 6-ஆம் பாடல்.

இன்னொன்று. அவ்வசுரன்முன் விஷ்ணு தன் உண்மை வடிவிற் சென்றிலன். சென்றிருந்தானாயின் அவன் தலையில் கைவைத்து அவனைச் சாம்பாலாக்கியிருப்பான் அவ்வசுரன். ஆகலின் அச்சிவ வரத்துக் கஞ்சியே விஷ்ணு மோஹினி யென்ற பெண் வடிவந்தாங்கி அவ்வசுரன்முன் வந்து ஆடினான். ஆக விநாயக புராணஞ் சொன்னதே இக்கதையின் எதார்த்த வடிவம். சிருங்கேரி முனிவர் சொன்னது அங்ஙனமன்று.

அப் பத்திரிகையில் விஷ்ணுவைத் தாழ்த்தி ஒரு கதை பேசியிருக்கிறா ரவர். அக்கதை எப் புராணத்திலுள்ளது? அதை அவர் தெரிவிக்கவில்லை. அக்கதையின் தரத்தை விசாரிப்பது வைணவரின் வேலை. ஆகலின் இங்கு விடப்பட்டது. மேலும் இப்படி மனம்போனபடி கதைகளையே சொல்லிப் போவதுதானா சிவவிஷ்ணு அபேதஞ் சாதிப்பதற்கு மார்க்கம்? முதல் நூலை அடியாகக் கொண்டு உத்தேசம், லட்சணம், பரீஷை என்ற முறையில் தெய்வ நிச்சயம் பண்ணுவதே நியாயம். அந்த நியாயவழிச் செல்வது சிவஞான போதம் என்ற நூல்.

Link to comment
Share on other sites

அடுத்து காமகோடி பீட முனிவரின் பிரசங்கமொன்றைக் கவனிக்கலாம். அது 24-11-1957 தினமணியில் வந்திருக்கிறது. ' ' எனபதற்கிடையிலுள்ள வாக்குகள் அப்பிரசங்கத்திலுள்ளவை. 'ராமேஸ்வரன்' என்ற பதத்தின் பொருள் யாது? எனத் தேவர்கள் விஷ்ணுவிடங் கேட்டார்கள். ராமனுக்கு ஈஸ்வரன் என அவ் விஷ்ணு பொருள் கூறித் 'தனக்கும் சிவன் ஈஸ்வரன் தான்' என்று விடை தந்தான். இது தத்புருஷஸமாஸம் பற்றிக் கொள்ளப்பட்ட பொருளாம். அடுத்து அத்தேவர்கள் அவ்வினாவைக் சிவனிடங் கேட்டார்கள். ராமனை ஈசுரனாக உடையவன் என அச்சிவன் பொருள் கூறித் 'தான் ராமனை ஈஸ்வரனாக உடையவன்' என்று விடை தந்தான். இது பஹ¤வ்ரீஹி ஸமாஸம் பற்றிக் கொள்ளப்பட்ட பொருளாம். இவ்விரண்டு விடைகளிலும் தேவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. அவர்கள் 'மத்யஸ்தரான பிரம்மாவைப் போய் கேட்போமென்று அவரிடம் போனார்கள்'. ராமன் என்கிற ஈசுவன் என அப்பிரமன் பொருள் கூறி 'ராமன் தான் ஈஸ்வரன்' என விடை தந்து விட்டான். இது கர்மதாராயஸமாஸம் பற்றிக் கொள்ளப்பட்ட பொருளாம். இப்படி ஒரு கதை கண்டார் அம்முனிவர். ராமந்தான் ஈசுரன் அதாவது ராமனும் ஈசுரனும் ஒன்று என்ற அம்மத்தியஸ்தனது தீர்ப்பை அவருஞ் சம்மதித்தாரெனத் தெரிகிறது. இராமேசுர வரலாற்றைக் கூறுவது சேது புராணம். அத்தலம் சிவதலம் என்பதை மனிதருட் குழந்தையும் அறியும். பிரமன் தேவனாயிருந்தும் அப்புராணத்தையுங் கற்றிலன், அத்தலத்தில் எழுந்தருளியிருக்கிற சிவலிங்கப்பெருமானையுந் தரிசித்திலன் போலும். அதனால் அக்குழறுபடைத் தீர்ப்பை அவன் கூறினான்.

Link to comment
Share on other sites

அவன் அப்பரத்துவ நிச்சய விசாரணையில் மத்தியஸ்தனாயிருந்து தீர்ப்புக் கூறத் தகுதியுள்ளவன் தானா? அதனை அம்முனிவர் வாய்மொழி கொண்டுங் காணலாம். சிவன், விஷ்ணும் பிரமன் என்பார் மும்மூர்த்திகள். அவருள் ஒவ்வொருவரிடமும் ஸ்வருபம், காரியம் என இரண்டு விஷயங்களுள. 'ஸ்வரூபங்களைக் கொண்டு பார்த்தால் பகவான் கருப்பு வர்ணமுடையவர். (கருப்பு தமஸ¤க்கு அடையாளம்). தூக்கத்தில் இருப்பவர். அதுவும் தமஸ¤க்கு அடையாளம். ஈச்வரன் வெளுப்பு நிற முடையவர். அவர் அணியும் திருநீறு முதலிய எல்லாம் வெளுப்பு. அதாவது ஸத்வம். 'மஞ்சள், சிவப்பு கலந்தது ரஜோகுணம்'. அக்குணம் பிரமனுக்குரியது. ஆகவே ஸ்வரூபத்தில் சிவன் சாத்துவிகன், விஷ்ணு தாமசன், பிரமன் ராஜசன் என்பது தெரிகிறது. இனி விஷ்ணு ஜகத் ரக்ஷணத்தை செய்கிறார்..... ஈச்வரன் சம்ஹாரத்தைச் செய்து பிரளயமாகிற இருட்டை உண்டு பண்ணுகிறார்'. 'பிரம்மா ஜகத் சிருஷ்டியாதிகளை செய்கிறார்.' ரக்ஷணம் சாத்விக காரியம். ஸ்வரூபம், காரியம் என்ற இரண்டனுள் ஸ்வரூபம் இயற்கைத் தருமம், காரியம். செயற்கைத் தருமம். ஸ்வரூபத்தால் சாத்துவிகனான சிவன் காரியத்தால் தாமசமாகிய சம்ஹாரத்தையும், ஸ்வரூபத்தால் தாமசனான விஷ்ணு காரியத்தால் சாத்துவிகமாகிய ரக்ஷணத்தையும், ஸ்வரூபத்தால் ராஜசனான பிரமன் காரியத்தாலும் ராஜஸமாகிய சிருஷ்டியையும் செய்கின்றாரென அக்காமகோடி முனிவர் சொன்னார். ஸ்வரூபம், காரியம் 'இரண்டிலும் ரஜோ குணத்தவரான பிரம்மாவை யாரும் ஆதரிக்கவில்லை. இதனால் மும்மூர்த்திகளில் பிரம்மாவுக்கென ஒரு பக்த கோஷ்டியோ கோவிலோ இல்லை' என்பதும் அவர் சொன்னதெ. அங்ஙனமாக ஸ்வரூபத்தால் சத்துவகுண மூர்த்தியாகிய சிவனை விட்டு ஸ்வரூபத்தால் தாமசகுண மூர்த்தியாகிய விஷ்ணுவைப் பரம்பொருளென்றோ அல்லது ராமனும் ஈசுரனும் ஒன்றென்றோ ஸ்வரூபத்தால் ராஜஸகுண மூர்த்தியாகிய பிரமன் தீர்ப்புக் கூறினால் அது சாத்துவிகர்களுக்கு ஏற்புடையத்தாமா? ராஜசத்துக்குச் சாத்துவிகத்தை மதிப்பிட முடியாது. சாத்துவிகம் மேற்பட்டது. அதற்குக் கீழ்ப்பட்டது ராஜசம். அதனினும் இழிந்தது தாமசம். அம்முனிவரும் அத் தீர்ப்பை ஆமோதித்தார். அவரை அங்ஙனம் ஆமோதிக்க வைத்தது அவரது மாயாவாத மதம்.

Link to comment
Share on other sites

தாமச காரியமாகிய சம்ஹாரத்தைப் பிறர்க்கு உபகாரமாகும்படி அளவறிந்து செய்யவேண்டும். ஸ்வரூபத்தால் சாத்விகனாயுள்ளவனாற்றான் அது முடியும். அதனாற்றான் சிவன் அச்சம்ஹாரத்தைத் தன்காரியமாக வைத்துக் கொண்டான். ஸ்வரூபத்தால் தாமசனாயுள்ளவனிடம் சாத்துவிகமாகிய ரக்ஷண காரியங் கொடுக்கப்பட்டால் அத்தாமசகுணம் அக்காரியத்தல் அடக்கப்பட்டு விடும். அக்காரியத்தை அவன் தன் மேலதிகாரிக்குப் பயந்து செய்வான். அதனால் ஸ்வரூபத்தால் கீழ்க்குணமுடைய விஷ்ணுவிடம் காரியத்தால் மேலாய ரக்ஷணங் கொடுக்கப்பட்டது. பிரமன் ஸ்வரூபத்தாலும், காரியத்தாலும் ராஜசன். ஆகவே பரத்துவ நிச்சயத்துக்கு ஸ்வரூபம் போல் காரியம் ஒரு சிறந்த ஏதுவாக மாட்டா தென்க.

பிரமனுக்கு ஒரு கோவிலுமில்லை யென்றார் அம்முனிவர். அவரது மாயாவாத மதத்துப் பரம்பொருள் தான் நிர்விசேஷ சைதன்ய வஸ்து என அவராற் பாராட்டப்படுகிற பிரமம். அப்பிரமத்துக்கு எங்காவது ஒரு கோவிலதானு மிருக்கிறதா? இல்லை. இது பரப்பிரமக் கோவில், இது பரம் பொருட் கோவில், இது பரமாத்மாக் கோவில் என ஒரு கோவில் எந்த வூரிலுங் கிடையாது.

மும்மூர்த்திகளில் பிரமன் ஒருவனாதல் போல் உருத்திரன் இன்னொருவன். அவ்வுருத்திரனையே சிவன் ஈசுரன் முதலிய சொற்களால் வழங்கி வருகிறார் அம்முனிவர். அவ்வுருத்திரனுக்கு எங்காவது கோவிலுண்டா? இல்லவே யில்லை. அம்முனிவரும் அவ்வுண்மையை அறிந்திருக்க வேண்டும். ஆயினும் அவர் பேச்சு வேறாயிருக்கிறது. எல்லாச் சிவாலயங்களும் அவ்வுருத்திரன் கோவில்களேயெனச் சாமானியர் எண்ணுமாறு அவர் பேசுகிறார். சைவ சமயத்தில் பரம்பொருளெனக் கொண்டு வழிப்படப்படும் சிவபெருமான் பிரமவிஷ்ணுருத்திரராகிய மும்மூர்த்திகளையுங் கடந்தவன். 'மூவரும் முப்பத்துமூவரும் மற்றொழிந்த தேவருங் காணாச் சிவபெருமான்' என்றது திருவாசகம். அந்தச் சிவபெருமானே எல்லாச் சிவாலயங்களிலும் சிவலிங்கத் திருமேனி தாங்கி மூலவராக எழுந்தருளியிருக்கிறான். அவன் முக்குண வசத்தராகிய மும்மூர்த்திகளில் ஒருவனாய உருத்திரனல்லன், மாயாவாத மதப் பிரமமுல்லன்.

Link to comment
Share on other sites

விஷ்ணுவின் கருணையினால் மோக்ஷம் ஏற்படுகிறது. சிவனுடைய கருணையினால் ஸம்ஹாரம் ஏற்படுகிறது. இருவரும் ஒரே பரம் பொருளின் ஸ்வரூபம் தான்' என்றார் அம்முனிவர். மோக்ஷத்தை ஸத்வஸ்வரூபனான சிவன் கொடுக்கமாட்டான், தமஸ¤ ஸ்வரூபமான விஷ்ணுவே கொடுப்பான் என்பது அமரத்துவத்தை அமிர்தந் தராது, ஆலாலமே தரும் என்பது போலிருக்கிறது.

'ஒரே பரம்பொருளின் ஸ்வரூபந்தான்' என்றாரே அம்முனிவர். அப்பரம்பொருளுக்கு ஏகோவா, அல்லா, விஷ்ணு, சிவன் என அவ்வம்மதச் சார்பான சிறப்புப் பெயர் ஏதேனுமுண்டா? அல்லது பரம்பொருள் என்பது தானே அதன் சிறப்புப் பெயரா? அதனை அவர் தெரிவித்திலர். அப்பெயரையும், மாயாவாதம் என்ற தம்மதப்பெயரையும் பகிரங்கமாகத் தெரிவிக்கக்கூடிய மனோபாவம் தம்மிடம் இருக்குமானால் அவர் சைவாலயங்களிற் புகுந்து தமக்குச் சம்பந்தமில்லாத காரியங்களை அங்குச் செய்ய இடம் பெறுவாரா?

இங்குச் சிருங்கேரி முனிவர் பேச்சொன்றும், காமகோடி முனிவர் பேச்சொன்றும் ஆராயப்பட்டன. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்பார்த்தல் என்ற நியாயத்தில் அவ்வாராய்ச்சி நிகழ்ந்தது. மும்மூர்த்திகளுட்பட்ட உருத்திரனையும் விஷ்ணுவையும் ஒரே பரம்பொருளின் ஸ்வரூபந்தான் எனக் கூறி வருகிற மாயா வாதமதக் கொள்கையைச் சைவருள்ளுஞ் சிலர் பற்றிக் கொண்டு சங்கரநயினார் கோவிலிலுள்ள சங்கரநாராயணவுருச்சிவவிஷ்ணு

Link to comment
Share on other sites

முடிப்புரை

இதுகாறுஞ் சிலவே கூறப்பட்டன. எடுத்துக்கொண்ட விஷயத்தை இவையே விளக்கிவிடும். முன் ஆங்கில் ஆட்சியி லிருந்தது பாரத தேசம். அப்போதும் படித்தவர் இங்கிருந்தனர். அடிமை வாழ்வின் அவமானம் அப் படிப்பால் உறுத்தப்படவில்லை. அவரும் சுகமாக உண்டனர், உடுத்தனர், உறங்கினர், இறுதியில் பேரும் மறையுமாறு செத்தொழிந்தனர். சமீப காலத்தில் புறப்பட்டனர் சில பெருமக்கள். சுதந்திரத்தின் அவசியத்தால் அவர் உந்தப்பட்டனர். ரோஷம் தலைக் கொண்டது. அவரின் இடைவிடா உழைப்பாலுந் தியாகத்தாலும் தேச சுதந்திரம் கிடைத்தது. தேசத்தவரின் மானம் மீட்கப்பட்டது.

தேச சுதந்திரத்துக்கு முந்திய காலத்திலும் மற்றச் சமயத்தவர் தம் சமய சுதந்திரத்தை யிழந்ததாகத் தெரியவில்லை. சைவ சமயத்தவர் மாத்திரம் அவர்போலிருந்தனரொனச் சொல்ல முடியாது. அவர் விபூதி யணிந்தனர், உருத்திராக்கந் தரித்தனர், அச்சாகிக் கையகப்பட்ட மதப் புத்தகங்கள் எச்சமயத்தனவாயினும் அவற்றைப் படித்தனர், கோவிலுக்குப் போயினர், கும்பிட்டனர், உண்டியலில் பணம் போட்டனர், விழாவைத் தரிசித்தனர், விரதோபவாசங்களை யனுட்டித்தனர், எல்லாஞ் செய்தனர். ஆனால் தம் சமயத்தின் பெயர் இது. அச்சமயக் கடவுள் இது. அச் சமயப் பிரமாண நூல் இது. அச்சமயத்தைப்பிரகாசிப்பித்த ஆசாரியன்மார் இவர், அச்சமயத்தின் அடிப்படைக் கொள்கைகள் இவை என்றறியும் வியவஸ்தை மாத்திரம் அவருட் பெரும்பாலோரைவிட்டு மறைந்தது. அவரைச் சைவசமயத்தவரென எப்படிச் சொல்வது? தேசம் சுதந்தர மடையாத போது அன்னவர் மிகுந்துள்ள பிற்காலத்தில் அவரது பரிபாலனத்தில் தப்பினதாகத் தெரியவில்லை. தப்பியிருந்தால் அக்கோவில் சங்கரநாராயண சுவாமி தேவஸ்தானமென்ற பெயர் மாற்றத்தை நிச்சயமாகப் பெற்றிராது.

Link to comment
Share on other sites

ஆங்கிலேயர் விலகினர். இத்தேசம் விடுதி பெற்றது. அவ்விலக்கந்தானா விடுதி? ஆமெனின் அ·தாகுக. இப்போது எல்லாருமே இந்நாட்டு மன்னராய் விட்டனர். சைவ சமயத்தவரும் இந்நாட்டு மன்னர் தான். அவருக்கு இச்சுதந்திரம் ஏன்? உண்ணவா? உடுக்கவா? உறங்கவா? அடிமை வாழ்விலும் அவர் நலக்க உண்டனர், சிறக்க உடுத்தனர், அழுந்த உறங்கினர். ஆகலின் சுதந்திரம் அதற்கன்று என்பதை அவர் அறிய வேண்டும். உடம்பை உறவெனக் கொண்ட உயிர் வாழ்க்கை, உடம்பை மிகையெனக் கொண்ட உயிர்வாழ்க்கை என உயிர் வாழ்க்கை இரண்டு வகைப்படும். அவற்றுள் முதலாமது மனிதவர்க்கம் மிருகவர்க்கம் முதலிய அனைத்து வர்க்கங்களுக்கும் பொது. இரண்டாமது மனித வர்க்கத்துக்குமட்டே யுரியது. அதுவே மனிதனாவானுக்கு வாழ்க்கை லட்சியமாகும். அதற்காக வாழும் மனிதனே தேவனாவான். அவ்வாழ்க்கை சைவ சமயமொன்றனே சித்திக்கும்.

'மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க

லுற்றார்க் குடம்பு மிகை' என்றார் வள்ளுவர்.

Link to comment
Share on other sites

அவர் வகுத்த லட்சியத்தை யடையுமாறு வாழவே சைவ சமயத்தினர் சுதந்திரம் பெற்றனர். அவர் தம் சைவ சமயத்தில் பிற சமயங்கள் கலக்க இடங் கொடுக்கலாமா? கலவடமே கேடுகளுக்கெல்லாங் காரணம். சங்கரநயினார்க்குச் சங்கரநாராயணரெனப் பெயர் மாற்றம் வந்தது அக்கலவடத்தாலே யாம். அவரது சமயக் கோவில்கள் சிலவற்றின் கர்ப்பக் கிருகத்துள் மாயாவாத சமயகுரு பிரவேசித்து மூல மூர்த்திகளுக்கு அபிஷேகம், பூஜை முதலியன செய்துவருவதும் அக்கலவடத்தாலேயாம். பின்வரும் சைவ சந்நிதிகளுக்குப் பெருந்தொல்லை தருமேயென்ற முன்யோசனையின்றிச் சைவசமயத்துக்கும் புறம்பான மாயாவாத மதச் சார்பாய சங்கர மடங்கள் கட்ட அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

Link to comment
Share on other sites

'Abdullahites Are planning A Mosque On Shankaracharya Hill' என்ற தலைப்பில் June 14, 1965 Organiser என்ற பத்திரிகையில் ஒரு செய்தி வந்துள்ளது. 'Abdullahites in Kashmir are conspiring for communal trouble in the Valley. For this purpose they are hatching a clandestine plan to construct a mosque in front of the famaous thousand-year old Shankaracharya Temple on top of Gopadari hill - also known as Sankaracharaya Hill - in Srinagar, according to strong indications available from circles close to Sheikh Mohammed Abdulla...Abdullahites have already started saying that Shankaracharaya Hill is a Muslim property as the place of temple was a Muslim seat....' என்பது அச்செய்தி. Abdullahites என்ற விடத்தில் சிருங்கேரி, காமகோடி சங்கராச்சாரியர் வகையறா என்றதையும், a mosque என்ற விடத்தில் அச் சங்கர மடங்கள் என்றதையும், in front of the famous thousand-year old Shankaracharya Temple என்ற விடத்தில் சிவாகமோக்தமான சைவாலயங்களின் மலையில் என்றதையும், Sankaracharya Hill is a Muslim property as the place of temple was a Muslim seat என்ற விடத்தில் சைவாலயங்களெல்லாம் மாயாவாத மதக் கோவில்கள் என்றதையும் வைத்து வாசித்தால் சிவாக மோக்த சைவாலயங்களெல்லாம் சிவாகம விரோதமான மாயாவாத மதக் கோவில்களாக எதிர்காலத்தில் விரைந்து மாறிவிடக்கூடும் என்பது தெரியலாம். அதற்கு அக் கலவடப்பேச்சே மூலம். சைவ சமயிகள் அச்செய்தி முழுவதையும் வாசிப்பாராக.

இவற்றை யெல்லாம் பார்த்துக் கொண்டிருக்குங் கண்வலி சைவசமுதாயத்துக்கு எப்படித்தான் வந்ததோ?

'ஒரு மொழிக்குள் மற்றொரு மொழி ஊடுருவுவது அதை

நசுக்குவ தாகும்; மொழி வளர்ச்சியை தடைப்படுத்தும்

அபாயம் ஏற்படும்' (21...4...1963 தினமணி) என்றார் பிரதமர் நேரு. மொழிவிஷயத்தில் அவ்வூடுருவல் ஓரளவாவது நலஞ் செய்யலாம். ஆனால் சமய விஷயத்தில் அப்படியன்று. ஒரு சமயம் ஊடுருவ இடங் கொடுத்த் இன்னொரு சமயம் முழுக்க நசுங்கிப் போவது நிச்சயம். அக்கேட்டைச் சைவபரிபாலகர் சிந்திக்க. சிந்திப்பாராயின் சங்கரநாராயணசுவாமி தேவஸ்தானம் மீண்டும் சங்கரலிங்கசுவாமிகோவில் தேவஸ்தான மெனப் பெயர் மாறாமற் போய்விடுமா?

Link to comment
Share on other sites

இவற்றை யெல்லாம் பார்த்துக் கொண்டிருக்குங் கண்வலி சைவசமுதாயத்துக்கு எப்படித்தான் வந்ததோ?

'ஒரு மொழிக்குள் மற்றொரு மொழி ஊடுருவுவது அதை

நசுக்குவ தாகும்; மொழி வளர்ச்சியை தடைப்படுத்தும்

அபாயம் ஏற்படும்' (21...4...1963 தினமணி) என்றார் பிரதமர் நேரு. மொழிவிஷயத்தில் அவ்வூடுருவல் ஓரளவாவது நலஞ் செய்யலாம். ஆனால் சமய விஷயத்தில் அப்படியன்று. ஒரு சமயம் ஊடுருவ இடங் கொடுத்த் இன்னொரு சமயம் முழுக்க நசுங்கிப் போவது நிச்சயம். அக்கேட்டைச் சைவபரிபாலகர் சிந்திக்க. சிந்திப்பாராயின் சங்கரநாராயணசுவாமி தேவஸ்தானம் மீண்டும் சங்கரலிங்கசுவாமிகோவில் தேவஸ்தான மெனப் பெயர் மாறாமற் போய்விடுமா?

வாய்ப்பாட்டு, கருவியிசை, நாட்டியம், விகடம், வில்லடி முதலியன சைவாலய விழாக்களில் கூட்டந் திரட்டுகின்றன. அவை கண்ணுக்குக் காதுக்குமே இன்பமாம். மக்கள் அவற்றை ரஸிக்கின்றனர். அவர்களையும் பக்தகோடிகளென்பது என்னையோ? அவ்வாய்ப்பாட்டு முதலியவற்றால் சைவசமய ஞானம் சிறிதளவாவது கிடைக்கிறதா? இல்லை. அவற்றை அனுமதிப்பதேன்? மக்கள் உலகவின்பச் சேற்றிற் புரள்வது தான் கண்ட பலனாயிருந்து வருகிறது. கோவில்கள் களியாட்டரங்கங்கள் ஆக்கப்படுகின்றன. பணமும் விரயமாகிறது. மக்கள் விரும்புகின்ற காரணத்தால் அவையும் விழாக்களின் அங்கமாகக் கொள்ளப்பட்டன என்னலாம் பரிபாலகர். அது மக்களை மதியாமை, அவர்நலனைக் கருதாமை யாகும்.

Link to comment
Share on other sites

'மக்களைச் சரியான வழியில் அழைத்துச் செல்வதுதான் தலைவருக்கு அழகேயொழிய மக்கள் இழுத்தபக்கம் எல்லாம் செல்வது அழகாகாது' (15..2...1963 தினமணி) என்றார் ஒரு விமர்சகர்.

'மக்களுக்குப் பிடிக்காது. அவர்களுக்குப் பிடிக்காததைச் செய்தால் செல்வாக்குப் போய்விடும் என்ற அச்சத்தால். நியாயமான, அவசியமான பணிகளைச் செய்ய தலைவர்கள் தயங்கக் கூடாது. ஜனநாயகம் தழைக்க இந்த நெஞ்சுறுதி அவசியம் என்று மந்திரி ஸ்ரீ தேசாய் சொன்னார். நியாயத்தைச் செய்ய தலைவர்களே அஞ்சுவார்களானால் ஜனநாயகத்துக்கு கேடுகாலம்வந்துவிடும்'( 16...4...1963 தினமணி) என்றார் அம்மந்திரி.

'ஒரு காரியம் சரியா, சரியில்லையா என்று பார்க்க வேண்டுமே யொழிய சிலர் புகார் செய்வார்களே என்பதற்காக சரியான பாதையைக் கைவிடுவது உசிதமல்ல' (22...4...1963 தினமணி) என்றது ஆசிரியப் பகுதி. ஜனநாயகம் என்ற விடத்தில் அச்சமய நிலய பரிபாலகர் என்றதையும் வைத்துப் பார்க்க. அப்படிப் பார்த்தால் சைவ சமயம் தன் தனித்தன்மையை யிழந்து, உருக்குலைந்து மக்களுக்கு உதவாமல் இப்போது உள்ள நிலையில் இருந்து வருவதற்குத் தாம் எந்த மட்டில் காரணம் என்பதை அப் பரிபாலகர் உணரக்கூடும். விழாக் காலங்களில் சைவசமயஞானம் வரண்ட ஆரவாரங்களைப் புகுத்தி மக்களை அச்சமயத்துக்கு வெளியில் தள்ளி வைத்தால் அச்சமயத்துக்குக் கேடு காலம் வரத் தடையில்லை. கேடு காலமாவது அச்சமயத்தின் பயனை மக்கள் அடையாமற் போகுங் காலம். அவர்களை அங்ஙனம் அப் பரிபாலகர் புறம் போக்கினால் சங்கரநயினார் கோவிலுக்குச் சங்கரநாராயணசுவாமி தேவஸ்தானம் என்ற பெயர் இன்னும் இருந்துகொண்டுதானிருக்கும். அதற்குக் காரணம் அப்பரிபாலகரா? மக்களா?

Link to comment
Share on other sites

மேடைப் பேச்சுக்கள் மிகுந்துள்ள காலம் இது. சைவசமயப் பிரசாரகரும் அதிகரிக்கலாயினர். அதற்கு ஊக்கமளித்து வருபவர் அப்பரிபாலகர். அது நல்லதே. ஆனால் அப்பிரசாரங்கள் சைவ சாத்திர வரம்புட்பட்டனவா? அவற்றால் பொதுமக்களுக்கு அச்சமய நலன் ஏதேனும் விளைகிறதா? அவற்றை அப்பரிபாலகர் அவ்வப்போது நாடிசோதனை செய்யும் மருத்துவன் போலிருந்து கவனித்துவர வேண்டாமா எமது சமயம் இது, எமது வணக்கத்துக்குரிய தெய்வம் இது, எமது சமயவரம்பாயுள்ள பிரமாண சாத்திரங்கள் இவை, எம் சமய சந்தான பாஷ்ய ஆசாரிய மூர்த்திகள் இவர்கள், எமக்குரிய ஆசார அனுஷ்டானாதிகள் இவை என்பனவாதியவற்றை மக்கள் உணர்ந்திருக்கிற அளவைக் கொண்டுதான் அப்பரிபாலகர்கள் அப்பிரசாரகர்களை நியமிப்பதன் தரம் கணிக்கப்படும். மக்களைச் சைவத்துறையில் உண்மை காணும்படி செய்வதே அதிமுக்கியம். அவர்களிடம் சைவசமய வுணர்வை ஊட்டுக் நோக்கமின்றிப் பிரசாரகர்களை நியமிப்பது அவர்களின் உலக வாழ்க்கைக்கே உதவும். இவர் வறியவர். இவர் இனத்தவர், இவர் உறவினர், இவர் சிபார்சுக் கடிதம் வாங்கி வந்தவர் என்பதற்காகச் சைவ சமய வரம்பழிந்த பிரசாரகர்களையும் அந்நிய சமயப் பிரசாரகர்களையும் அப்பரிபாலகர்கள் நியமித்தால் அப்பரிபாலகர்களுக்கே சைவ சமயம் இது. பிற சமயங்கள் இவை எனக் காண்கிற ஆற்றல் இல்லைப் போலுமென உலகஞ் சந்தேகிக்க இடமுண்டாகும். சமய வளர்ச்சியில் அவர் உதாசீன மனமுடையவரென எண்ணவும் படுவர். அப்பிரசாரகர்கள்பால் இரக்கங்காட்டுகிற பரிபாலகர்கள் தம் சொந்தப் பணத்தைக் கொடுத்து அவர்களைப் பராமரிக்கலாம். அவ்விரக்கத்துக்குக் கோவிற்பணமா இரை? சைவ சமயாபிவிருத்திக்கே அது செலவு செய்யற்பாலது. பரிபாலகர்கள் பாதுகாப்பதற்குமட்டில் கோவிற் சொத்துக்களைத் தம் சொந்தச் சொத்துப் போற் கருத வேண்டும். செலவிடும் வகையில் அது சைவதருமச்சொத்தாகலின் அ·தத் தருமத்திற்கே செலவாதல் வேண்டும். பயிரையுங் களையையும் பகுத்தறியக் கூடியவரே களையைப் பறித்தெறிந்து பயிரைப் போற்றி வளர்த்துப் பயன் காண்பர். அவரே உழவரா யிருக்கத் தகுதி பெற்றவர். அவர்போல் பரிபாலகரும் பிரசாரகரும் சைவ சமயம் இது. பிற சமயங்கள் இவையென விவேகித்துணர வல்லராதல் அவசியம். அங்ஙனமாயின் மக்களுக்குச் சமயக்கண் விரைவில் திறக்கப்படும். அவர்களும் அப்பரிபாலகருக்கு உறுதுணை யாவார்கள். அதனால் சங்கரநாராயண சுவாமி தேவஸ்தானம் என்ற புதுப்பெயர் போய்ச் சங்கரநயினார் கோவில் தேவஸ்தானம் என்றப் பழம் பெயர் விரைந்து இடம் பெறும்.

Link to comment
Share on other sites

சில வருடங்களுக்குமுன் னிருந்தோர் அப் புதுப்பெயரை அக் கோவிலுக் கிட்டனர். அவர் எவரேனுமாக. அவர் அவ்வூர் மக்களுக்கு முன்னறிவிப்புக் கொடுத்து அப்பெயர் மாற்றஞ் செய்தனரா? அ·தன்றி மறைமுகமாகச் செய்தனரா? அதுவும் எ·தேனுமாக தல புராணத்தையேனும் அவர் படித்திருந்தாரெனச் சொல்லமுடியவில்லை. எப்படியோ நடந்தது நடந்து விட்டது. இப்போது அவர் பின்னுள்ளார் இருந்து வருகின்றனர். அவருங் கெதானு கெதிக (ஒருவர் பின் ஒருவர் என்ற ) முறையில் இருந்து போகத்தான் வந்திருக்கின்றனரா? பாரத தேசம் சுதந்திரம் பெறப் பாடுபட்ட பெருமக்கள் பல்லாயிரவ ராவர். அவருட் சைவ சமயத்தினருஞ் சேர்ந்திலரெனச் சொல்லமுடியாது. அவரும் சுதந்திர வீரரே, சமர்த்தரே, தியாக புருடரே. அவர் சங்கரநாராயணசுவாமி தேவஸ்தானம் என்ற இடைநுழை பெயரை மாற்றிச் சங்கரநயினார் கோவில் தேவஸ்தானம் அல்லது சங்கரலிங்கசுவாமி தேவஸ்தானம் என்ற பெயரை அக்கோவிலுக்கு முன்போல் வழங்குமாறு செய்ய ஏன் ஒருப்பட் டெழக்கூடாது? இச்சுதந்திர நேசத்தில் எல்லாச் சமயங்களும் சுதந்திரமாயிருந்து தம்மை யாசரிக்கு மக்களுக்கு நலஞ் செய்து வருகின்றன. சைவ சமயமாத்திரம் மாயாவாத முதலிய புறச்சமயங்களால் உருக்குலைந்து கிடக்கின்றது. அதைக் காணுங் கண்ணும், கண்டு கலங்கும் நெஞ்சமும் சைவப் பொது மக்களுக்கு இன்னுமா இல்லை? உரிமையைப் பறிகொடுப்பதுமா பரந்த நோக்கம்? சைவசமயாபிவிருத்தியில் அவர் அசிரத்தை காட்டுவாராயின் தேச சுதந்திரப் போராட்டத்தில் அவர் கொண்ட பங்கு சம்சயத்திற்கே யிடனாம். தேரிழுப்பவர் பலர். சிலர் வடத்தைத் தொட்டுக் கொண்டே சில தூரம் போய்த் தாமுந் தேரிழுத்ததாகச் சொல்லிக் கொள்வர். அவர் போலவே அப்போராட்டத்தில் அச்சைவரும் நடந்து கொண்டனரென எண்ண வேண்டிவரும்.

Link to comment
Share on other sites

சீனர் ஆக்கிரமிப்பு விஷயத்திலும் அவர் காட்டிவரும் ரோஷம் அவ்வளவுதான்போலும் என அவர் ஏன் கருதப்பட மாட்டார்? அவர் தரத்துக்கு அ·தாகுமா? சங்கரநயினார் கோவிலி லுள்ள ஸ்ரீ சங்கரலிங்கசுவாமி தேவஸ்தானத்திற்குச் சங்கரநாராயண சுவாமி தேவஸ்தானம் என்பது சிறிதும் உரிமையற்ற பெயர், ஆதலின் விரைந்து நீக்கப்படவே தக்கது. சங்கரநயினார்கோவில் தேவஸ்தானம் அல்லது சங்கரலிங்கசுவாமி தேவஸ்தானம் என்பதே முற்றிலும் உரிமையான, பழமையான, சாஸ்திரோக்தமான, சர்க்கார் ஆதாரபூர்வமான, நியாயமான பெயரென்பது அசைக்க முடியாத உண்மை. சங்கரநயினார்கோவில் நகரப் பெருமக்கள் இதில் தனிப்பட்ட சிரத்தைகாட்டி ஆவண உடனே செய்யுங் கடப்பா டுடையவர்கள் என்பதை நான் அவர்களிடம் பணிவுட தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

"பெண்டைக் கொடுத்தாலும் பேருலகில் நிந்தையிலை

தொன்றுதொட்டு வந்தசைவந் தோற்கில்நிந்தை - பெண்டைவிற்றும்

பெற்றான் சிவகதியைப் பேரரிச் சந்திரனும்

உற்றான் பழியிந் திரன்." (அபியுக்தர்)

சங்கரநயினார்கோவில் என்னும் இந்நூல் முற்றிற்று

ஸ்ரீமத் சிவஞான சுவாமிகள் திருவடி வாழ்க.

Link to comment
Share on other sites

  • 4 years later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.