Jump to content

வெங்காய சம்பல்


Recommended Posts

Onion%20Sambal.JPG

மிகவும் இலகுவாக, உடனே தாயாரிக்க கூடிய பக்க உணவு என்றால் அது வெங்காய சம்பல் தான். இதையே onion salad / onion raita என்றும் அழைக்கிறார்கள். நாங்க வெங்காய சம்பல் என அழைப்போம். "சம்பல்" என்ற வார்த்தையை மொத்தமா குத்தகைக்கு எடுத்திருக்கமே!

அசைவ உணவு வகைகளுக்கு இந்த வெங்காய சம்பல் சுவையை அதிகமாக்கும். பிரியாணி, சப்பாத்தி, ரொட்டி, பூரி என எதுவாகினும் சேர்த்து உண்ண அசைவம் இருக்கும் வேளையில், இந்த வெங்காய சம்பல் போல ஒரு உற்ற தோழன் கிடைக்கமாட்டுது.

தேவையானவை:

வெங்காயம் 1

மிளகாய் 1

மிளகு தூள் 1 தே.க

தயிர் 3 மே.க

உப்பு தேவைக்கேற்ப

செய்முறை;

1. வெங்காயத்தின் தோலை உறித்து, நீரில் கழுவி, நீளவாக்கில் மெல்லியதாக அரிந்துகொள்ளுங்கள். [என் நேரம் இதையெல்லாம் எழுதிட்டு. எழுதாட்டியும் பிரச்சனை.கிகிகி]

2. பச்சை மிளகாயை நீரில் கழுவி, சிறிய துண்டுகளாக அரிந்தெடுங்கள்.

3. ஒரு சட்டியில் மேற்கூறிய அனைத்து பொருட்களையும், அரிந்தெடுத்த வெங்காயம், மிளகாயோடு சேர்த்து நன்றாக கலக்கி எடுங்கள். மிகவும் சுவையான வெங்காய சம்பல் ஆயத்தம்!

மாற்று முறைகள்:

* தயிருக்கு பதில் பால் சேர்க்கலாம். தேசிக்காய் புளி சேர்க்கலாம்.

* மிளகை உடனே அரைத்து போட்டால் சுவை அதிகமாகும்.

* பச்சை மிளகாய்க்கு பதில் சிவப்பு நிற மிளகாயும் சேர்க்கலாம். பார்ப்பதற்கும் நன்றாக இருக்கும்.

* வெங்காயத்தில் காரத்தை பொறுத்து, எவ்வளவு மெல்லியதாக அரியலாம் என கணக்கிட்டு கொள்ளுங்கள்.

கவனிக்க வேண்டியவை:

* வீரத்தை காட்டுறேன் என்று கையில் வைத்து வெங்காயத்தையோ, மிளகாயையோ அரியாதீர்கள். வெட்டும் பலகையில் வைத்து வெட்டுங்கள்.

Link to comment
Share on other sites

கொஞ்சம் சின்னதாக வெங்காயத்தை வெட்டினால் நல்லது என்று நினைக்கிறேன்..! :lol:

அப்புறம் தக்காளி சிறு துண்டு..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது நல்ல சுவையான சம்பல்.

ஆனால் சனி, ஞாயிறு நாட்களில் சாப்பிட்டால் தான் நல்லது . அல்லது வேலை இடங்களில் பிற நாட்டவர்கள் ஒரு மாதிரி பார்ப்பார்கள்.

எல்லோருக்கும் உள்ளி , வெங்காய வாசனை பிடிக்காது. குறிப்புக்கு நன்றி தூயா.

Link to comment
Share on other sites

கொஞ்சம் சின்னதாக வெங்காயத்தை வெட்டினால் நல்லது என்று நினைக்கிறேன்..! :(

அப்புறம் தக்காளி சிறு துண்டு..!

உண்மை. அவரவர் விருப்பத்தையும், வெங்காயத்தில் காரத்தையும் பொருத்து வெட்டலாம். :D

இது நல்ல சுவையான சம்பல்.

ஆனால் சனி, ஞாயிறு நாட்களில் சாப்பிட்டால் தான் நல்லது . அல்லது வேலை இடங்களில் பிற நாட்டவர்கள் ஒரு மாதிரி பார்ப்பார்கள்.

எல்லோருக்கும் உள்ளி , வெங்காய வாசனை பிடிக்காது. குறிப்புக்கு நன்றி தூயா.

கிகிகிகிகி சாப்பிட்ட பின்னர் ஒரு மின்ற் போட்டால் சரி தானே..

இந்த சம்பல் பிரியாணிக்கு தான் அருமை..இல்லையா சிறி?

Link to comment
Share on other sites

நன்றி தூயா..

பிரியாணியுடன் சாப்பிட இது சுவையாக இருக்கும் என்றீர்கள்..

இன்டைக்கு வீட்டில இதுக்காகவே பிரியாணி செய்திட்டாப்போச்சு.. :(

இந்த வெங்காய சம்பல நிறைய தயிர் போட்டு பிஞ்சு வெள்ளரிக்காயை

சின்னதா வெட்டி சேர்த்தும் செய்யலாம்.. உடம்புக்கு நல்லது. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் தூயா, பிரியாணிக்கு நல்லசுவையாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெங்காயத்தை குறுக்காலை அரிவதிலும் பார்க்க சொஞ்சம் மெல்லியதாயும் நீளப்பாட்டுக்கு அரிந்து செய்தால் பார்க்க இன்னும் அழகாக இருக்கும். அது என்ன மரமொண்டு கீரை மாதிரி முளைவிட்டு வளருது? அதையும் என்னெண்டு சொல்லுங்கோவன் !

அடுத்ததாக வாயில் மின்ற் போட்டாலும் அவ்வளவு இலகுவா தப்பேலாது. காரணம் வெங்காயமும் உள்ளியும் வாயில் மட்டுமல்ல உடம்பிலும் இருந்து மணக்கும் தன்மையுள்ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது என்ன மரமொண்டு கீரை மாதிரி முளைவிட்டு வளருது? அதையும் என்னெண்டு சொல்லுங்கோவன் !

அது மின்ற் இலை. வடிவுக்கு வைக்கிறது.

அடுத்ததாக வாயில் மின்ற் போட்டாலும் அவ்வளவு இலகுவா தப்பேலாது. காரணம் வெங்காயமும் உள்ளியும் வாயில் மட்டுமல்ல உடம்பிலும் இருந்து மணக்கும் தன்மையுள்ளன.

மற்றவர்களுக்கு மணக்கும் என்பதற்காக சாப்பிடாமல் விடமுடியுமோ?

Link to comment
Share on other sites

நன்றி தூயா..

பிரியாணியுடன் சாப்பிட இது சுவையாக இருக்கும் என்றீர்கள்..

இன்டைக்கு வீட்டில இதுக்காகவே பிரியாணி செய்திட்டாப்போச்சு.. :D

இந்த வெங்காய சம்பல நிறைய தயிர் போட்டு பிஞ்சு வெள்ளரிக்காயை

சின்னதா வெட்டி சேர்த்தும் செய்யலாம்.. உடம்புக்கு நல்லது. :D

வசிண்ணா பிரியாணி செய்திங்களா?

Link to comment
Share on other sites

ம்ம்..தூயிஸ் நன்னா இருக்கு..(நேக்கு இது ரொம்பவே விருப்பம் அல்லோ :wub: )...அக்சுவலா விரைட் ரைஸ் சிக்கன் அதோட கூடவே வெங்காய சம்பலும் இருந்தா பேஷ்..பேஷ்..ஜம்மு பேபியின் வேவரிட் சாப்பாடு அல்லோ..(ஆனா மம்மி வந்து வெங்காயத்தை சின்னதா தான் வெட்டி போடுறவா :lol: )...

ம்ம்..நேக்கு எப்ப சமைத்து தர போறியள் அத சொல்லுங்கோ...(சமைத்து தாறன் என்று சொல்லி சொல்லி என்னுமே இல்ல உது நன்னா இல்ல சொல்லிட்டன் :lol: )..பிறகு வீட்டையே வந்திடுவன் சொல்லிட்டன்.. :lol:

தாங்ஸ் ரெசிபிற்கு தூயிஸ்...(என்ன யூனி கொலிடேயா அது தான் நன்னா சமையல் நடக்கு போல :wub: )...

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

கொத்தமல்லி இலை பிடிக்கும் என்றால், ஒரு கையளவு அரிந்து போட்டால் சுவையாக இருக்கும். பிரியாணிக்கு மிகவும் ஏற்றது.

Link to comment
Share on other sites

கொத்தமல்லி இலை பிடிக்கும் என்றால், ஒரு கையளவு அரிந்து போட்டால் சுவையாக இருக்கும். பிரியாணிக்கு மிகவும் ஏற்றது.

உண்மை தான். :rolleyes:

தாங்ஸ் ரெசிபிற்கு தூயிஸ்...(என்ன யூனி கொலிடேயா அது தான் நன்னா சமையல் நடக்கு போல :rolleyes: )...

அதே அதே.... ;)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.