Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

''மணிரத்னம், ஷங்கர்கிட்டே அசிஸ்டென்ட்டா வேலை பார்க்கணும்!'' (விகடன்)


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

ஆசைப்படுகிறார் பாரதிராஜா

வண்ணத் திரைக்கு 'பொம்மலாட்டம்', சின்னத் திரைக்கு 'தெக்கித்திப் பொண்ணு' என இரட்டைக் குதிரைகளுடன் இருக்கிறார் டைரக்டர் பாரதிராஜா.

''சினிமாவைக் கிராமத்துக்கு இழுத்துட்டுப் போனவன், இப்போ டி.விக்குள்ளேயும் கிராமத்தைக் கூட்டிட்டு வர்றேன். இதை முழு நீள சினிமான்னே சொல்லலாம். அதாவது சீரியல் என்ற பேர்ல வர்ற க்ளீன் க்ரீன் சினிமா!'' விழிகளும் விரல்களும் விளையாடப் பேசுகிறார்.

''இந்த மண்ணோடும், மக்களோடும், கலாசாரத்தோடும், மொழியோடும், உணர்வோடும் உட்கார்ந்து பார்க்க டி.வியில் எதுவுமே இல்லைன்னு நம்ம எல்லாருக்கும் ஒரு குறை இருந்ததே... அது இனி இருக்காது. 'தெக்கித்திப் பொண்ணு'... மூணு தலைமுறை மனுஷங்களோட கதை, கலைஞரின் விருப்பத்துக்காகச் செஞ்ச வேலை. 'ரொம்ப நல்லாயிருக்குய்யா... இந்த மண்ணை இவ்வளவு அழகா பதிவு செய்ய உன்னாலதான் முடியும்யா!'ன்னு படம் பார்த்த கலைஞர் நெகிழ்ந்து சொன்னார்!''

''காவிரி நீர்ப் பிரச்னையின்போது, திரையுலகத்தைத் திரட்டி நெய்வேலியில் போராட்டம் நடத்தியவர் நீங்க. ஆனா, இப்போ ஒகேனக்கல் பிரச்னைக்காக மொத்தத் திரையுலகமும் உண்ணாவிரதம் இருந்தபோது, அதில் ஏன் கலந்துக்கலை?''

''காவிரி நீர்ப் பிரச்னையில் பங்கீட்டு நடுவர் மன்றத்தை நிராகரித்து, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவையும் கர்நாடக அரசு கைவிட்டப்போ, நெய்வேலியில் உணர்ச்சிமிகு ஊர்வலம் நடந்தது. ஆனா, அதுக்கு மறுநாளே இங்கே தனியா உண்ணாவிரதம் இருந்தாரே ஒரு நடிகர். அதுக்கும் நெய்வேலி வந்த அத்தனை பேரும் போய் கலந்துக்கிட்டாங்க. அது, ஏன் எதுக்குன்னு எனக்குப் புரியலை... அதனால், அப்போ நான் போகலை. அப்படின்னா, அதுக்கு முன்னாடி என் தலைமையில் நடந்த நெய்வேலி ஊர்வலம் தப்பா? எனக்கு அப்போ அதுக்கு யாரும் பதில் தரலை. அதனால், இப்போ இந்த உண்ணாவிரதத்துக்குப் போகணும்னு தோணலை!''

''முதல் தடவையா ரஜினி தமிழர்களின் உணர்வுகளை மதிச்சு, வெளிப்படையாகக் குரல் கொடுத்ததா, பரவலாக பெரிய கருத்து இருக்கு. அதைப்பற்றி என்ன நினைக்கிறீங்க?''

''ரஜினி, எப்பவும் யாருக்கும் பயப்படுற ஆள் கிடையாது. ரஜினி என்னிக்கும் தன் கருத்துக்களை மத்தவங்களுக்காக ஒளிச்சும் மறைச்சும் சொல்ற ஆள் இல்லை. எனக்கு ரஜினி காவிரி பிரச்னையில் தனியா உண்ணாவிரதம் இருந்தது மட்டும்தான் பிடிக்கலை. தனிப்பட்ட முறையில், நான் பார்த்த நடிகர்களில் பொய் சொல்லாத நடிகன். தமிழ் நீரோட்டத்தில் ரஜினி கலந்துட்டார். இனிமேல் யாரும் அவரைத் தனிமைப்படுத்திப் பேசக் கூடாது. அவர் தமிழ்நாட்டுக்கு விசுவாசமாகவும் உணர்வுபூர்வமாகவும் இருக்கார். இதுதான் நல்ல மாற்றம். இந்த உண்ணா விரதம் அவரை அசலா வெளியே கொண்டுவந்திருக்கு!''

''சத்யராஜின் பேச்சு எப்படி இருந்தது?''

''சத்யராஜ் ரொம்ப உணர்ச்சிபூர்வமாப் பேசினார். ஆனா, மனசுல நினைக்கிறதையெல்லாம் வெளியே கொட்டுறது தப்பு. சக கலைஞனை அதே மேடையில் வெச்சுக்கிட்டு, கொஞ்சம் ஒரு லைன் தாண்டிப் பேசிட்டாருங்கிறது வருத்தமா இருக்கு. ஆனா, பலவீனப்பட்டு இருந்த சமயத்தில் சத்யராஜ் ஓங்கிச் சத்தமிட்டாரே... அதைப் பாராட்டணும். மனுஷனுக்கு ஆவேசம் இல்லைன்னா, அவன் தமிழனே கிடையாதே!''

''ஆனா, கலைஞர் இந்த விஷயத்தை ஆறப்போட்டு இருக்கிறாரே!''

'' அட, இதெல்லாம் ஒரு நாளில் முடிகிற விஷயமில்லைங்க. நாம கொதிக்கிறதைப் பார்த்து, அங்கே கர்நாடகத்தில் தமிழர்களிடம் அவங்க விளையாடிவிடக் கூடாதுன்னு கலைஞர் நினைச்சிருக்கலாம். எலெக்ஷன் முடிஞ்ச பிறகு, எந்த அரசு வந்தாலும் நாகரிகத்தோடு மத்திய அரசை வெச்சு நெருக்கடி கொடுப்போம், நியாயத்தைப் பேசுவோம். கலைஞர் இந்தத் திட்டத்தைக் கிடப்பில் போட்டுட்டேன்னு சொல்லலியே. அவர் மிகச் சிறந்த அரசியல்வாதி மட்டுமில்லை, மிகச் சிறந்த தந்திரசாலி என்பதன் அடையாளம்தான் இது. சாதிச்சுக்க்காட்டுவார் பாருங்க!''

''என்னது, உங்க மகன் மனோஜ், இப்போ ஷங்கரிடம் உதவியாளராச் சேர்ந்திருக்காரே?''

''மனோஜ் ஒரு நாள் என்கிட்டே வந்தான். 'ஷங்கர் சார் ரோபோ பண்ணப்போறார். அதில் இருந்தா, ஒரு காலேஜ்ல படிச்ச மாதிரி இருக்கும். ஷங்கர் சார்கிட்டே கேட்கப்போறேன்னு சொன்னான். நான் சிபாரிசு பண்ண மாட்டேன்னு சொல்லிட்டேன். இவனே ஷங்கர்கிட்டே போயிருக்கான். அவருக்கு ஷாக். 'நீங்களே ஒரு டைரக்டரின் பையன். உங்களை நான் எப்படி வெச்சுக்க முடியும்?'னு கேட்டிருக்கார். 'நான் பாரதிராஜாவுக்குப் பையன்கிறது எங்க வீட்டோடு முடிஞ்சுபோயிடும். அப்பாகிட்டே, மணி சார்கிட்டே இருந்தேன். இன்னும் பத்தலையோன்னு தோணுது சார்'னு சொல்லியிருக்கான். மூணு தடவை கூப்பிட்டுப் பேசி, அவனைத் தன் அசிஸ்டென்ட்டா சேர்த்துக்கிட்டார். அட, எனக்கே மணிரத்னம், ஷங்கர்கிட்டே ஒரு அசிஸ்டென்ட்டா வேலை பார்க்கணும்னு ஆசையா இருக்குங்க!''

''எந்த சேனலைத் திருப்பினாலும் குத்தாட்டமாவே இருக்கே, கவனிக்கிறீங்களா?''

''நானே சின்னத் திரைக்கு வந்துட்டேன். இந்த ஆட்டம் எல்லாம் நடுக்கூடத்தில் வெச்சு எல்லோரையும் பார்க்கவெச்சுட்டாங்க. ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் வேண்டியதுதான். வீரபாண்டித் திருவிழாக்கள்லயே ரெக்கார்ட் டான்ஸ் இருந்த காலம் உண்டு. ஆனா, சின்னப் பசங்களுக்கு அங்கே அனுமதி இல்லை. இது இப்போ சேனல்ல வர்றதையெல்லாம் பார்த்தா, பசங்க மனசை, மனப்பக்குவத்தைக் கெடுத்திடும்கிறது உண்மை. இது இந்த அளவோடு நிக்கணும். ஒண்ணை மட்டும் பார்த்தா, உலகத்தில் நடக்கிறது தெரியாமல் போயிடும். கதவையும் திறந்து பார்க்கணும், புழக் கடையையும் திறந்து பார்க்கணும். அப்ப தான் வீடு பாதுகாப்பா இருக்கும்!

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • வசதியாக குந்தியிருந்து கடந்தகாலத்தை  இரைமீட்பதை போன்ற சுகமான அனுபவம் உண்டா?  
  • நேற்று இந்தக் காணொளியை பார்க்க நேர்ந்தது.. இவர் கூறும் கூற்றில் மெய், பொய் தெரியாது, பார்வையளர்களின் முடிவுக்கு விட்டுவிடலாம்..! 🤔  காலத்திற்குள் செய்யாத உதவியும், எல்லாம் முடிந்த பின் மக்களின் மனநிலைக்கு ஏற்ப புகழ்ந்து தள்ளுவதும் குப்பைக்கு சமம் என்ற உண்ர்வே மேலிட்டது.    
  • 1) திருமணம் சுபமுகூர்த்தத்தில் நிறைவேறியது.  காதல் கரிநாள் ஆனது  ..... 2) உறவுகள் பறிபோனது.  காதல் வந்தது.  .... 3) நொடி மூச்சு நிலையில்லை.  காதல் நிலையானது.  ... 4) கண்ணால் காதல் வந்தது.  இதயம் நொறுங்கிப்போனது.  ... 5) நித்திரையில் சிரித்தேன்.  திட்டி எழுப்பினார் அம்மா  @ கவிப்புயல் இனியவன் 
  • பூமியில் விதைக்கப்பட்ட விதை கூட எதிர்ப்பைச் சமாளித்து முளைத்துக் காட்டுகிறது! . ஒவ்வொரு நாளும் காட்டில் சிங்கத்தால் கொல்லப்படுகின்ற நிலையில் உயிர் வாழும் மான் கூட பிரச்சனைகளை சமாளிக்கின்றது ! பெரிய மீன்களால் ஆகாரத்திற்காக விழுங்கப்படும் நிலையிலிருக்கும் சிறிய மீன்களும் கடலில் புலம்பாமல் வாழ்கின்றன ! மனிதர்களால் எப்பொழுது வேண்டுமானாலும் வெட்டப்படுகின்ற வாழ்க்கையை அனுபவிக்கின்ற மரங்களும் நிமிர்ந்து நிற்கின்றன ! ஒவ்வொரு நாளும் ஆகாரத்திற்காக பல மைல்கள் தூரம் பறந்தாக வேண்டிய பறவைகளும் மனம் சலிப்படையாமல் முயற்சி செய்கின்றன ! சிறியதான உடலையும், பல கஷ்டங்களையும் சமாளிக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கும் எறும்புகள் கூட துவண்டு போகாமல் வாழ்ந்து காட்டுகின்றன ! தண்ணீரே இல்லாத பாலைவனத்தில் உயிர் தரிக்க வேண்டிய நிலையிலிருக்கும் ஒட்டகங்களும், எங்கும் ஓடிப்போகாமல் அதில் வாழ்ந்து காட்டுகின்றன ! ஒரு நாள் மட்டுமே வாழ்க்கை என்ற நிலையிலிருக்கும் பலவகை பூச்சிகளும், அந்த ஒரு நாளில் உருப்படியாக வாழ்கின்றன ! இப்படி பலகோடி உயிரினங்கள் உலகில் வாழ முடியுமென்றால் உன்னால் வாழ முடியாதோ? அதை ஏன் புலம்பிக்கொண்டு வாழ்கின்றாய் ! அதை ஏன் நொந்துபோய் வாழ்கின்றாய் ! அதை ஏன் வெறுத்துக்கொண்டு வாழ்கின்றாய் ! அதை ஏன் அழுதுகொண்டு வாழ்கின்றாய் ! வாழ்க்கையைக் கவனிக்கவே நேரம் இல்லாமல், எதையோ தேடி ஓடிக்கொண்டே இருந்துவிட்டு, ஒருநாள் புஸ் என்று போய்விடுவது சாதனை இல்லை, வேதனை. . சந்தோஷமாகத்தான் வாழ்ந்து பாரேன் ! இது உன் வாழ்க்கை... அதை ஆனந்தமாக வாழ். . . https://www.facebook.com/நல்லதே-நினைப்போம்-நல்லதே-நடக்கட்டும்-1639711246245226/photos/சிந்தனைசெய்-மனமேநன்றி-தே-சௌந்தர்ராஜன்அவன்-சொன்னான்-இவன்-சொன்னான்-என்று-எதையும்-ந/1752318084984541 திருவாசகத்தில் ஒரு வாசகம் -39    
  • பழைய காலத்தில் தான் பாம்பை முடிந்தால் அடித்து கடி வாங்கியவருடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டிய தேவை இருந்தது. இப்போது polyvalent antivenom என்று நாகம், புடையன், கண்டங்கருவளை என பல பாம்புகளின் விஷத்தை முறிக்கும் மருந்து ஒன்றாகவே பாவனையில் இருக்கிறது.  இந்த மருந்துகளை பாம்புக் கடி வாங்கிய நாய்களுக்கு ஏற்றிய அனுபவம் இருக்கிறது. 
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.