Jump to content

வெளிநாடுகளில நாங்கள் எப்பிடி வேலை செய்யுறம் எண்டு நீங்களும் எல்லாரும் கொஞ்சம் தெரிஞ்சு கொள்ளுங்கோ!


Recommended Posts

அனைவருக்கும் வணக்கம்,

வழமையா அரட்டை தான் அடிக்கிறது, இண்டைக்கு அதக்கொஞ்சம் பிரயோசனமா அடிப்பம் எண்டுற நல்ல நோக்கத்தில "வெளிநாடுகளில நாங்கள் எப்பிடி வேலை செய்யுறம் எண்டு நீங்களும் எல்லாரும் கொஞ்சம் தெரிஞ்சு கொள்ளுங்கோ!" எனும் தலைப்பில நான் கனடா நாட்டில எனது வேலை செய்த அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுறன். நீங்களும் உங்கட உங்கட நாடுகளில வேலை செய்த, மற்றும் செய்கின்ற அனுபவங்கள கொஞ்சம் பகிர்ந்து கொள்ளுங்கோ. முக்கியமா சுவிஸ், பிரான்ஸ், ஜேர்மனி, யூகே, நோர்வே மற்றது அவுஸ்திரேலியா ஆக்களிண்ட எண்ணப்பகிர்வுகளையும் அறிஞ்சு கொள்ள ஆவலாய் இருக்கிறன். மிச்ச நாட்டு ஆக்களும் கோவிக்காமல் உங்கட அனுபவங்கள சொல்லுங்கோ. 167 நாடுகளிண்ட பெயர்களையும் இதில எழுதுறது கஸ்டம் தானே.

நிறையப்பேர் வெளிநாடு எண்டதும் ஏதோ கனக்க எல்லாம் கற்பனை செய்துகொண்டு இருக்கிறீனம். குறிப்பா சிறீ லங்காவில இருக்கிற ஆக்களுக்கு எண்ணம் என்ன எண்டால் நாங்கள் வெளிநாடுகளில காச ஏதோ மரத்தில இருந்து புடுங்கிப் புடுங்கி எடுக்கிறம் எண்டுறமாதிரி! நானும் சிறீ லங்காவில இருந்து யாரும் கஸ்டப்பட்டு உழைச்சு அனுப்புற வெளிநாட்டு காசுல திண்டு ஏப்பம் விட்டுக்கொண்டு இருக்கேக்க இப்பிடித்தான் நினைச்சனான். எத்தின பெடியங்கள் ஒழுங்கா சாப்பிடாமல், நித்தா கொள்ளாமல் பல்லு மினுக்காமல், ஒழுங்கா கக்*சுக்கு போகாமல் சந்நியாசிகள் மாதிரி வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிக்காமல் இரவு பகலா கஸ்டப்பட்டு வெளிநாடுகளில வேலை செய்யுறாங்கள் எண்டுற விசயம் பலருக்கு தெரிஞ்சு இருக்காது. இந்தக்கருத்தாடல் மூலம் பல பயனுள்ள தகவல்களை பல்வேறு நாடுகளில வாழும் எம்மிடையே பரிமாறிக்கொள்ளலாம் எண்டு நினைக்கிறன்.

வெளிநாடுகளில நாங்கள் எப்பிடி வேலை செய்யுறம் எண்டு நீங்களும் எல்லாரும் கொஞ்சம் தெரிஞ்சு கொள்ளுங்கோ!

பகுதி 01

அவன், அவள் போய், அவர்கள் போய், அது போய், அதுகள் போய் கடைசியில நானும் எட்டு வருசத்துக்கு முன்னம் கோயிலுக்கு நேத்திக்கடன் வச்சு கடைசியில தூக்குகாவடி எடுத்தமாதிரி ஒரு மாதிரி கடவுள் புண்ணியத்தில கனடாவுக்க வந்து விழுந்தன். அலோலூயா!

வந்து இறங்கின கையோடையே வாற போற சனம் எல்லாம் எப்ப நீர் வேலைக்கு போகப்போறீர் எண்டு கேட்டு எனக்கு கரைச்சல் தரத்துவங்கீட்டிதுகள். நான் வாழ்க்கையில முன்னேறவேணும் எண்டு அப்பிடி சொல்லிச்சீனமோ இல்லாட்டி என்ன நக்கல் அடிச்சீனமோ எனக்கு தெரியாது. ஆனால் எனக்கும் வேலைக்கு உடனபோகவேணும் எண்டு சரியான ஆர்வம். ஏன் எண்டால் ஒரு புதுக்கார் ஒண்டு வாங்கி வடஅமெரிக்கா ஹைவேயிண்ட நீளத்த அளந்து பார்க்கிறதுக்கு மனதுக்க சரியான ஆசையாய் இருந்திச்சிது.

என்னில ஒரு குணம் இருந்திச்சிது / இருக்கிது. அத வேணுமெண்டால் வரட்டுகெளரவம் எண்டும் சொல்லிக்கொள்ளலாம். அதாவது, வேலைய நாந்தான் தேடி எடுக்கவேணும். மற்ற ஆக்களிண்ட கையக் கால பிடிக்கக்கூடாது எண்டு எனக்குள்ள ஒரு பிடிவாதம். ஏன் எண்டால் இஞ்ச ஆக்கள் என்ன செய்வீனம் எண்டால் முனியாண்டி விலாசில ஒரு சின்ன மாவாட்டுற வேலைய எடுத்து தந்துபோட்டு இல்லாட்டி இத்தாலியன் ரெஸ்டோரனிடில கோப்ப, கக்கூஸ் கழுவுற வேல ஒண்ட எடுத்து தந்துபோட்டு கடைசியில நாந்தான் இவன கனடாவுக்கு கூப்பிட்டு விட்டது, நாந்தான் இவன தூக்கிவிட்டது, நாந்தான் இவனுக்கு ஒண்டுக்கு இருக்கிறதுக்கு காட்டிக்குடுத்தது எண்டு கண்ட கண்ட இடங்களில கண்ட கண்ட ஆக்களுக்கு முன்னால கண்ட கண்ட நேரங்களில கண்டகண்ட மாதிரி கதைப்பீனம். இந்த விளையாட்டுக்கள எனக்கு கண்ணில காட்டக்கூடாது.

இதனால நானே கனடா அரசாங்க ஜொப்பாங்குக்கு இணையம் மூலமா தட்டித் தடவிச்சென்று ஒரு வேலைக்கு அப்ளை பண்ணினன். ஒருநாள் பின்னேரம் ரெண்டு மணி சொச்சம் ஒருத்தி எனக்கு கோல்பண்ணி இண்டர்வியூவுக்கு (?) வரச்சொன்னாள். நானும் ஏதோ எல்லாம் கற்பனை செய்துகொண்டு நல்ல வடிவா வெளிக்கிட்டுக்கொண்டு அந்த அட்றச தேடிப்பிடிச்சு போனன். எனக்கு வேலைக்கு அப்ளை பண்ணேக்க சரியா தெரியாது அது என்ன வேலை எண்டு. ஏதோ ஹெல்ப் எண்டு கேட்டு இருந்திச்சிது. கடைசியிலதான் விலாசத்த தேடிப்போகேக்க அந்த நம்பரப் பார்த்தால் அது ஒரு சைனீஸ் சாப்பாட்டு கடை எண்டு தெரிஞ்சிது. சரி இவ்வளவு தூரம் வந்திட்டம் இனி என்ன செய்யுறது சும்மா ஒருக்கால் போய் இண்டர்வியூவ பேஸ் பண்ணுவம் எண்டு நினைச்சுக்கொண்டு உள்ள போனன். ஒரு சைனீஸ்காரி என்னோட வந்துகதைச்சு இண்டர்வியூ (?) செய்தாள். எனக்கு கனடாவில வேலை செய்யுறதுக்கு அனுமதி இருக்கிதோ எண்டுதான் முதலாவது கேள்வி கேட்டாள். அவளுக்கு என்ன நல்லாப்பிடிச்சுப்போட்டிது. (கோப்ப கழுவுற வேலைக்கு டை எல்லாம் கட்டிக்கொண்டு போனால் யாருக்குத்தான் பிடிக்காது..) வேலை இரவு எட்டு மணிக்கு துவங்கினால் காலம்பற அஞ்சு மணிக்குத்தான் முடியும் எண்டு சொன்னாள்.

கனடாவில நான் ரெஸ்டோரண்டில வேல செய்யுறதா? வீட்டில ஒரு கோப்பை கழுவி இருக்கமாட்டன். இத எப்பிடி செய்யுறது? எனக்குள் தீவிர யோசனை! பெரிய போராட்டம்! மானப்(?)பிரச்சனை! ஆனா மனதில கெதியில புதுக்கார் வாங்கவேணும், ஆக்களுக்கு படம் காட்டவேணும், ஜாலியா கனடாவில வாழவேணும் எண்ட ஆசை வர, சரி எண்டு என்னை சமாதானப்படுத்திக்கொண்டு முதல்நாள் வேலைக்கு போனன். அங்க போன உடன எனக்கு ஒவ்வொருத்தரா சைனீஸ்காரர் வந்து அறிவுரைகள் சொன்னாங்கள். ஒருத்தன் பைப்ப பாவிச்சு சட்டி கழுவுறது எப்பிடி எண்டு சொல்லித்தந்தான். இன்னொருத்தன் மைக்கிரோவ எப்பிடி ஒன் பண்ணி, ஓவ் பண்ணுறது எண்டு சொல்லித்தந்தான். இன்னொருத்தன் கடதாசிப்பெட்டி எப்பிடி செய்யுறது எண்டு சொல்லித்தந்தான். இன்னொருத்தன் சின்ன பிளாஸ்ரிக் கப்புக்க ரெட் சோஸ எப்பிடி ஊத்திறது எண்டு சொல்லித்தந்தான். இப்பிடி ஆளாளா வந்து எனக்கு சமையல் பாடம் நடத்தினாங்கள். அவங்கள் சின்னச் சின்ன விசயங்களா நிறையக் காட்டித்தற காட்டித்தற எனக்கு அட உலகத்தில எனக்கு தெரியாத எவ்வளவு விசயங்கள் இருக்கிது எண்டு ஒரு ஆச்சரியம் ஏற்பட்டிது. (பகிடிக்கு சொல்ல இல்ல, உண்மையாத்தான் சொல்லிறன்) சிறீ லங்காவில இருக்கேக்க எனக்கு எல்லாம் தெரியும் எண்டுற இறுமாப்போட இருந்தன். இஞ்ச வந்தாப்பிறகுதான் தெரிஞ்சிது கக்கூஸ எப்பிடி சரியான முறையில கழுவுறது எண்டு.

பிறகு பத்துமணியப்போல ஒரு ரஷ்யன் காரன எனக்கு அறிமுகம் செய்து வச்சீனம். (அவனப் பார்த்தால் அல்ல அவன் உண்மையிலயே மாபியாக் கும்பலில இருந்து இருக்கவேணும் எண்டு இப்ப நான் நினைக்கிறன். அவன் தனது வாழ்க்கை பற்றி எனக்கு பிறகு சொல்லி இருந்தான். கனடாவிலை கம்பி எண்ணி இருந்தான்..) அவனுக்கு சுமார் நாற்பது வயசு இருக்கும். அந்த ஆசாமியோடதான் நான் வேல செய்யவேணும் எண்டு சொன்னாங்கள். அதாவது இரவு எட்டில இருந்து பத்துமணி சொச்சம் மட்டும் குசினியுக்க வேல. பிறகு அவனோட சாப்பாட்டு டிரக் ஒண்டில வேல. அவனும் நானும் அந்த டிரக்கில ஏறி டொரண்டோ டவுன் டவுனுக்க ஒரு இடத்துக்கு போனம். அவன் வாகனத்தை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு ஒவ்வொரு சாப்பாட்டு சாமானும் என்ன என்ன விலை, எப்பிடி விக்கிறது, எப்பிடி ஆக்களோட டீல் பண்ணுறது, இப்பிடி நிறைய விசயங்கள் எனக்கு சொல்லித்தந்தான். அந்த வண்டியில வச்சு நாங்கள் சிக்கன் போல்ஸ், சிக்கன் விங்க்ஸ், பிரைரைஸ் (சிக்கன், மட்டன்), பட்டீஸ், நூடில்ஸ் இப்பிடி டப்பாக்களில அங்க முன்னம் குசினியுக்க வச்சு ரெடி பண்ணின ஐட்டங்கள விக்கிறது.

எனக்கு கனடாவுக்கு வந்ததே புதுசு. அதுக்க இந்த வேலையும் புதுசு. ஆக்களையும் தெரியாது. எல்லாம் புதுசு. எல்லாத்தையும் பார்க்க சிதம்பர சக்கரம் மாதிரி இருந்திச்சிது. உண்மையில நல்லாப் பயந்தும் போனன். அடக்கடவுளே இந்தச்சின்ன வேலையே இவ்வளவு கஸ்டமா இருக்கிதே? நான் எப்பிடி இந்த நாட்டில வாழப்போறன் எண்டு அடிமனதில சரியான பயம் வந்திச்சிது. இவன் வேற இந்த ரஷ்யன்காரனப் பார்க்க பயமா இருந்திச்சிது. அவன் ஆள் சரியான உயரமும், மலை மாதிரி உடம்பும், கருமம்.. கருமம்... தலைமயிர் வேற பொம்பிளைகள் மாதிரி நீளமா வளர்த்து காதில ரெண்டு பக்கமும் தோடும் எல்லாம் போட்டு பார்க்கிறதுக்கு பெரிய ரவுடிமாதிரி இருந்தான். அவனுக்கு பக்கத்தில நிக்கவே எனக்கு வெட்கமா இருந்திச்சிது. சரி எல்லாம் தலைவிதி எண்டு நினைச்சுக்கொண்டு அவன் என்னமாதிரி சாமாங்கள் விக்கிறான் எண்டு அவதானிச்சுக்கொண்டு இருந்தன்.

அவன் பார்க்கிறதுக்கு முரடணா இருந்தாலும் நல்லா பகிடிவிட்டு என்னோட கதைச்சான். சாப்பாடு வாங்க வாற பெண்டுகளோட நல்லா வழிஞ்சுகொண்டு இருந்தான். அந்தமாதிரி அதுகளுக்கு அவன் ஜொள்ளு விட்டான். இதால அவனுக்கு அதுகள் தாராளமா டிப்ஸ் குடுத்திச்சிதுகள். அஞ்சு ரூவாக்கு ஒரு சாமான் வாங்கினால் பத்து ரூவாவ குடுத்துபோட்டு மிச்சம் வாங்காமல் அவனோட செல்லம் பொழிஞ்சுகொண்டு போச்சீனம். எனக்கு இதுகள எல்லாம் பார்க்கா என்னடா இழவு இஞ்ச நடக்கிது எண்டு ஒண்டுமா விளங்காமல் ஒரே குழப்பமா இருந்திச்சிது.

பிறகு ஒரு அர மணித்தியாலத்தால அவன் வாகனத்த இன்னொரு லொகேசனுக்கு ஓடிக்கொண்டுபோய் அங்க கதவு எல்லாம் திறந்து, காசுப்பெட்டி எல்லாம் செட்பண்ணி வச்சுப்போட்டு (உங்களுக்கு தெரியும் தானே இந்த சாப்பாடுகள் விக்கிற வாகனங்கள் பற்றி? மூண்டு பக்கமா கதவுகள திறந்து கடைமாதிரி விக்கலாம்?) கடைசியில எண்ட தலையில வாகனத்தவிட்டுப்போட்டு எங்கையோ ஜொள்ளு விடுறதுக்கு போட்டான். திருவிழாவில அப்பா, அம்மாவப் பிரிஞ்ச பிள்ளை மாதிரி என்னத் தனியாவிட்டது எனக்கு கண்ணக்கட்டிவிட்டது மாதிரி இருந்திச்சிது. ஆக்கள் சாப்பாடுகள் வாங்க வந்து இருந்தாலும் பரவாயில்ல. எனக்கு முதலாவதா கஸ்டமரா வந்தது யார் எண்டு தெரியுமோ? சிவப்பு, நீலம் எண்டு சுழட்டி சுழட்டி அடிக்கிற பெரிய வெளிச்சத்த போட்டுக்கொண்டு பொலிஸ்கார் ஒண்டு எங்கட வானகத்துக்கு பக்கத்தில வந்து நிண்டிச்சிது. பொலிஸ்காரன் வாகனத்தால இறங்கி அங்க நிண்டு கொண்டு எனக்கு தண்ட சுட்டுவிரல தன்பக்கமா இழுத்து இழுத்து காட்டி (நாங்கள் குழந்தைப் பிள்ளைகள வெருட்டேக்க காட்டுறமாதிரி..) என்ன வரச்சொல்லி கூப்பிட்டார். நான் எப்பிடி வாகனத்தவிட்டுட்டு போறது? எனக்கு சரியா பயம் வந்திட்டிது. இவன் என்னத்துக்கு வந்து இருக்கிறான் எண்டு எனக்குள்ள ஒரே யோசனை. காற்சட்டையோட ஒண்டுக்கு போகாத குறை..

பேசாமல் முளுசிக்கொண்டு நிக்க கடைசியில அவரே என்னட்ட வந்து, வாகனத்த அந்த ஸ்பொட்டில நிப்பாட்டி சாப்பாட்டு சாமாங்கள் விக்கிறதுக்கு முனிசிப்பல் லைசன்ஸ் இருக்கிதோ எண்டு கேட்டார். அட தூ! இதுவா விசயம்? நான் என்னமோ எல்லாம் நினைச்சு பயந்துகொண்டு இருந்தன். நான் சொன்னன் அப்பு ராசா இண்டைக்குதானடி குஞ்சு நான் முதலாவது நாள் இஞ்ச வேலை செய்யவாறான். எனக்கு ஒரு சாம்பிராணி பற்றியும் தெரியாது. கொஞ்சம் பொறு. மாபியாக்காரன் இன்னும் கொஞ்ச நேரத்தில வருவான் அவனையே கேள் எண்டு சொன்னன். பொலிஸ் பிள்ளைக்கு சரியான கோவம் வந்திட்டிது. இதில நீ நிக்க ஏலாது. உடன வாகனத்த அங்கால எடுத்துக்கொண்டு போ எண்டு உருக்கமா சொன்னார். நான் என்ன அங்கால போறதுக்கு விருப்பம் இல்லாமலே நிக்கிறன்? அடப் பாவமே, எனக்கு வாகனம் அப்ப ஓடத்தெரியாது. லேனேர்ஸ் லைசன்ஸ் கூட இல்ல. கோன் அடிக்கிறதே எப்பிடி எண்டு தெரியாத நிலமை. நான் என்ன செய்யுறது? சிரிப்புத்தான் வந்திச்சிது. கடைசியில மாபியாக்காரன் வந்து பொலிசிண்ட பிரச்சனைய சின்ன நாய்க்குட்டிக்கு விசுக்கோத்து போடுறமாதிரி கதைய வெட்டிக்கதைச்சு மாத்தி தீர்த்துப்போட்டு அப்பிடியே வாகனத்தக்கொண்டு இன்னொரு லொகேசனுக்கு போனான்.

எனக்கு நித்தா வருகிது. பகுதி 01 மிச்சம் பிறகு சொல்லிறன்.

(இருட்டுக்க அரை நித்தாவில இருந்து எழுதினது. எழுத்துப்பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

*** எமது சொந்த முயற்சி சுயதணிக்கை செய்யப்படுகிறது.

Link to comment
Share on other sites

அதென்ன? தூக்குக்காவடி எடுத்து இங்க வந்து விழுந்தாப்புறம் அல்லேலுயா.? வெளிநாடு என்று வந்துவிட்டால் பிழைப்பதற்கு ஏதாவது செய்துதானே ஆக வேண்டும். இதிலென்ன கேவலம்.

Link to comment
Share on other sites

நான் இப்படியெல்லாம் வேலை செய்ததில்லை.

ஆனால் இப்படி வேலை செய்பவர்கள் எத்தனை தூரம் கஸ்டப்பட்டிருப்பார்கள் என்பது தெரியும்.

நான் முதல் வருட பல்கலைக்கழகம் சென்ற நேரம் எனக்கு சீ++ படிப்பித்த ஆசான், அதே பல்கலைக்கழகத்தில் இரவு வேளைகளில் அவரின் சகோதரருக்கு உதவியாக வேலைக்கு வருவார். என்ன வேலை தெரியுமா? சுத்தம் செய்தெல்.

அன்று எனக்கு எத்தனையோ விடயங்கள் புரிந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பகுதியில நானும் எழுத விரும்புறன். எனக்குத் தெரிஞ்ச ஒரு பையன் பாசை தெரியாததால கிடந்து கஸ்டப்பட்டவன். ஆனாலும் அவன் விடயில்ல.

தமிழ்க் கடையில எல்லாம் நீ சமாளிக்க மாட்டாயெண்டு கலைச்சுப் போட்டாங்கள். கடைசியில ஒரு மாதிரி ஒரு தமிழ் ரேக் அவேயில வேலை கிடைச்சுது. இவனுக்குச் சமைக்கத் தெரியாது. வேறும் தேங்காய் திருவுற வேலை. ஒரு நாளைக்கு எட்டு மணித்தியாலம் தேங்காய் திருவி அதுக்கு மேல ஓவர் ரைமுஞ் செய்து காசு சம்பாரிச்சு மனுசனா வந்திற்றான். பிறகு கலியாணங்கட்டி குடும்பத்தையும் ஏடுத்தவன்.

தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்

மெய்வருந்தக் கூலி தருமெண்டு ஒரு குறளிருக்குது.

இவனைப் பொறுத்த அளவில

“முயற்சி திருவிலையாக்கிப் போட்டுது.”

இன்னொரு பெடியன் ஜெர்மனியில சந்திச்சன். அங்கை பாசைப் பிரச்சனை படுமோசம். ஜேர்மன் ஒரு மண்ணும் தெரியாம வேலை தேட வெளிக்கிட்டுட்டான்

தயவு செய்து உன்னட்டை வேலை ஏதுமிருக்க எண்டு கேக்கிறதுக்கு “காபன் சி ஆபைற் பிற்ற”

எண்டு கேக்க வேணும். ஆக்கள் ஆரோ சொல்லிக் குடுத்ததப் பாடமாக்கிக் கொண்டு போய் ஒரு மக் டொணால்சில

“ஆபன் சி காபைற் பிற்ற” எண்டு மாறிச் சொல்லிப் போட்டான். முதலாளி அவன்ர பரிதாபத்தைப் பார்த்துப் போட்டு ஒரு வேலை குடுத்தவர்.

மக்டொனால்ஸ் எண்டு எழுதி அம்புக்குறிகாட்டின ஒரு அட்டையப் பிடிச்சுக் கொண்டு ஆக்கள் போற சந்தியில நிக்கிறதுதான் வேலை. அதால உழைச்சு ஊருக்க் காசனுப்பித் தன்ர சகோதரங்களையும் கரைசேர்த்துப் போட்டான்.

வாயிருந்தால் வங்காளம் போகலாமெண்டிற பழமொழி இவனைப் பொறுத்த அளவில உண்மையாப் போயிற்றுது. நான் மற்றவையளப் பற்றி எழுதிப் போட்டு என்னைப் பற்றி எழுதாமல் மறைக்கக் கூடாது. நான் பார்த்த வேலையளையும் பற்றிச் சொல்லுறன். நான் யூரோப்புக்குள்ள வந்தது படிக்கத்தான். பிறகு ஊர்திரும்பயில்ல.

பாசை தெரியாத ஒரு நாட்டில:

• கோப்பை கழுவுனது, சலாட் போட்டுக்குடுத்தது, குசினி கழுவினது உட்பட அசிஸ்டண்ட் செவ்.

• நகர சுத்தித் தொழிலாளர் பிரிவில நாய்க் கழிவு டிவிசனில கலெக்டர்.

• சிமெற்றியளில வைக்கிற மலர் வளையங்களச் செய்ய எடுத்;ததுபோக மிச்ச மரத்;தைத் அரைச்சுத் தூளாக்கிறது.

• கோதுமை வைக்கோல் கட்டுகளைக் கொண்டு வந்து வின்ரரில மாடுகளுக்காக சேமிக்கிறது.

• பிள்ளையளுக்குப் ரியுசன் சொல்லிக் குடுத்தது.

பாசை தெரிஞ்ச நாட்டுக்கு வந்தாப் பிறகு தெரிஞ்சாக்களின்ர கடைவழிய நிண்டு பிறகு சொலிசிற்றர் மாரோட வேலை செய்து மொழிபெயர்ப்பாளர் வேலை பார்த்துக் கடைசியில தொண்டுவேலை செய்தன். என்னோட வேலை செய்தவனுக் கெல்லாம் சம்பளத்துக்கு வழிசெய்து குடுத்தன்.

ஆனால் அங்க இருந்தவனுக் கெல்லாம் குப்பைப் புத்தி. செய்த உதவிய மறந்து நம்மளையே வெட்டப் பார்க்கிறது, நாம நல்லது செய்ய வெளிக்கிட்டா தங்களுடைய மவுசு குறைஞ்சு போமெண்டு ஒண்டையும் செய்ய விடாமல் சதி செய்யிறது. பின்னால கதைக்கிறது.

சமூகத்தில தாங்கள்தான் பெரிய ஆட்களா இருக்க வேணும் மற்றவை அவையளுக்கு கூசா தூக்கவேணுமெண்டு நினைக்கிறது. திறமையில்லாட்டியும் தாங்கள் பெரிய ஆக்களா இருக்கிறதுக்காக தேசிய முனைப்பு உள்ள ஆட்கள்போல நடிக்கிறது. ஒண்டுக்கும் ஏலாட்டி பிரதேச வாதத்தைக் கையில எடுக்கிறது, பொறுப்பில இருக்கிற என்னைக் கலந்து கொள்ளாமல் அநீதியா நடந்து ஒரு தகுதியுமில்லாத ஆனால் தங்கடை ஆட்களை வேலையளுக்கு நியமிக்கிறது எண்டு கன சுத்துமாத்துகள் தில்லுமுல்லுகள் செய்துகொண்டு அதேநேரம் பெரிய மனிசர்மாதிரி நடிச்சாங்கள். எனக்கு உதுகள் சரிவரயில்ல. பேசாமல் சரியான காலமும் வர, குடும்பத்துக் கெண்டு சொந்த பிஸினஸ் இருக்கைக்குள்ள உவங்களுக்கெல்லாம் ஏன் அடிபணிய வேணுமெண்டு விலகீற்றன்.

Link to comment
Share on other sites

நல்ல தலைப்பு...

இஞ்ச கொஞ்சம் பரவாயில்லை.. படிக்கின்ற மாணவர்கள் என்றால் ஓட்டல், அல்லது கடை வெளிய வேலை எடுக்கலாம். ஓட்டல் வேலை கொஞ்சம் கஷ்டம்.. ஆனால் சம்பளம் நல்லம்.. கடை வேலை பெரும்பாலும் பெண்களுக்கு தான் கிடைக்கும்..!

நான் இஞ்ச வந்து ஒரு கிழமையில் அதுவும் வோர்க் பெர்மிட் கிடைக்க முன் வேலைக்கு போனனான். கேட்டரிங்...ஞாயிறு என்ற படியால் ஒரே நாளில் 3 விழாக்களுக்கு போகவேண்டியிருந்தது..! முதுகு கழன்று விட்டது..! போதாக்குறைக்கு சாப்பாடு பார்சல் பண்ணினவர் பண்ணிய எண்ணிக்கை தவறுக்காக நான் கஷ்டமரிடம் பேச்சு வாங்க வேண்டியிருந்தது..! முதல் கொஞ்ச நாள் கஷ்டமாக இருந்தது.. பிறகு பழகிவிட்டது..!

இந்த அனுபவங்கள் காரணமாக நான் எப்போதும் உணவகத்தில் சாப்பிடும் போது பரிமாறுபவரிடம் அன்பாக பழகுவது.. இங்க சிலதுகள் தொட்டதுக்கும் "I want to See the Manager" என்று கத்துங்கள்..நம்மவர் தான் இதில் அதிகம்

Link to comment
Share on other sites

ம்ம்ம்..வணக்கம் குருவே..(வந்துட்டோமல)...அட நம்ம குரு நன்னா தான் வேலை செய்திருக்கிறார்..(நிசமா முடியல்ல)..சரி நம்ம பிளாஸ்பக்கை கேளுங்கோ..(ஜம்மு பேபியின் சாட் பிளாஸ்பக் :lol: )..

ம்ம்...நம்மளையும் ஒரு மாதிரி அவுசிற்கு வர விட்டிட்டாங்க..(என்ன பார்க்கிறியள் பின்ன என்னை எல்லாம் அவுஸ்சிற்கு விட்டா)..சரி மாட்டருக்கு வாரேன் வந்ததும் நம்ம குரு மாதிரி தான் சா...சா கார் வாங்கிற ஆசை எல்லாம் நம்மளிற்கு இருக்கல்ல...(ஊர் சுத்த எல்லாம் காசு வேண்டுமே)..அப்ப கட்டாயம் வேலைக்கு போகணும்..சோ எங்கன்ட வீட்டிற்கு பக்கத்தில தமிழ் ஆட்களின்ட..(பெட்ரோல் செட்)..இருந்தது அங்க வெயிகன்சி இருந்தது அப்ப நாமளும் போனோம் இதுவரை வேலை செய்த அநுபவம் என்றதே நம்மளுக்கு இல்ல... :)

ம்ம்...போய் கேட்க தமிழ் ஆள் ஒருவர் தான்..(என்ன பார்த்தவுடனே)..தம்பி பிரச்சினை இல்ல எக்ஸ்பீரியன்ஸ் இல்லாட்டியும் பரவால்ல வந்து இங்க நின்று பழகும்..(பிறகு நான் உமக்கு சிவ்ட் போட்டு தாறேன் என்று)..எனக்கோ சரியான சந்தோஷம் பாருங்கோ..பின்ன நேக்கு எக்ஸ்பீரியன்சும் இல்ல ஒன்னுமில்ல என்ன பார்த்து ஓமோம் வேலைக்கு வர சொன்னா எப்படி இருக்கும்...நேக்கு சரியான கப்பி.. :)

ம்ம்..அடுத்த நாளே போயிட்டேன் டிரெயினிங்கிற்கு..(முதலில ஒன்னுமே விளங்கள்ள சரியான கஷ்டமா இருந்தது)...போக போக பிடித்துவிட்டேன் அக்சுவலா இரண்டு நாளிள அந்த பெட்ரோல் சேட்டை என்னால மனேர்ஜ் பண்ணுறதிற்கு ஏலுமா இருந்தது..(ம்ம்..பட் காஸ் வில் பண்ணுறது தான் கொஞ்சம் கஷ்டமா இருந்தது)...நான் கிளவுஸை போடாம காஸ் வில் பண்ண விரலை எரித்து போட்டு..(சரியான எரிவு)...என்ட பிழை தானே கிளவுஸ் போடாம வில் பண்ணிணது சோ ஒன்னுமே செய்ய ஏலாது தானே இப்படி ஒரு கிழமைகுள்ள நேக்கு அந்த பெட்ரோல் செட்டில எல்லா வேலையும் ஓரளவிற்கு தெரியும் போல வந்திட்டு.. :D

ம்ம்ம்..இப்படியே இரண்டு கிழமை போன பிறகு..(அந்த ஓனரிட்ட கேட்டன் இப்ப நேக்கு எல்லாம் ஒகே மாதிரி இருக்கு சிவ்ட் போட்டு தாங்கோ என்று)...அவர் சொன்னார் இல்ல தம்பி இன்னும் கொஞ்ச நாளைக்கு செய்யும் நானே சிவ்ட் போட்டு தருவேன் என்று நானும் ஒகே என்று வேலை செய்தேன்..(கிட்டதட்ட ஒரு மாதம் ஆச்சு)...என்னும் சிவ்ட் போட்டு தரல்ல..நானும் கேட்கிற நேரம் எல்லாம் ம்ம்ம்..தம்பி இன்னும் கொஞ்ச அநுபவம் தேவை என்று சொல்லி கொண்டு இருப்பார் ஆனால்..(அந்த பெட்ரோல் செட் முழுவதும் மனேஜ் பண்ணிணது நான் தான்).. :lol:

இப்படி 2 மாசம் காசே இல்லாம வேலை செய்தனான் அங்க...(இது தான் நான் வாழ்கையில செய்த முதல் வேலை மறக்கவே ஏலாது)...ம்ம்ம்...ஒரு பக்கம் கோபம் இப்படியும் ஆட்களா என்று ஆனா என்ன நேக்கு நன்ன எக்ஸ்பீரியன்ஸ் கிடைத்து விட்டது என்று சந்தோஷம்.. :lol:

என்ன எல்லாரும் பார்க்கிறியள்..(இஸ்ட பார்ட் ஒவ் ட கேம்)...உதுக்காக ஜம்மு பேபி பீல் பண்ணல்ல கையில துட்டு வேண்டும்..(எஞ்ஜோய் பண்ண)...அப்ப யூனி பிரண்ட் சொன்னான் வாட ஒரு வேளை இருக்கு என்னோட சேர்ந்து செய்யலாம் என்று..

நானும் சந்தோஷாமா போனேன் அந்த வேளைக்கு..(அது வந்து கார்வோசிங்)..ம்ம் ஒரு காரை ஈசியா முடிதிட்டோம் இரண்டு பேரும் சேர்ந்து பார்த்தா அப்படியே ஒரு வரிசையா கார்கள் நிற்குது அன்னைக்கு காலையில இருந்து பின்னேரம் வரைக்கு கார்வோஸ் பண்ணி கை எல்லாம் வீங்கி போட்டு..(நேக்கு இப்படி எல்லாம் செய்து பழக்கமே இல்ல)...ம்ம் சொல்ல போனா நேக்கு அந்த வேலையிலையும் காசு கிடைக்கல..(பிகோஸ் நான் அந்த வேர்கிற்கு அடுத்தா நாள் போகவே இல்ல)..இப்படியே நம்ம இரண்டாவது வேர்கும் போச்சு.. :(

ம்ம்..மனசில கொஞ்சம் இப்ப பீலிங் உவ்வளவு கஷ்டபட்டு வேலை செய்தும்..(கையில துட்டு கிடைகல என்று)..ம்ம்..சோ கொஞ்ச காலதிற்கு வேலைக்கு போகாம படித்து கொண்டிருந்தன்..அப்பப்ப லோக்கல் நீயூஸ் பேப்பரில வேயிகன்சி பார்பன் அப்படி பார்க்கும் போது..(ரெஸ்சுரன்டில ஒரு வேலை)...ம்ம்..வடிவா சி.வி எல்லாம் செய்து கொண்டு போய் கொடுத்தன் அக்சுவலா அது வந்து சைனிஸ் ரெஸ்சுரண்ட் தான்..(அவனுக்கு இங்கிலிசே தெரியாது என்று பிறகு தான் தெரியும்)..மிணகட்டும் சி.வி அடித்தது தான் மிச்சம் பாருங்கோ.. :)

ம்ம்..அவனும் நம்ம..(சி.வி யை)...இரண்டு தரம் பார்த்தார் என்ன தான் விளங்கிச்சோ தெரியல அவருக்கு தெரிந்த இங்கிலிசில நாளையிள இருந்து வேலைக்கு வர சொல்லிட்டார்..(நேக்கு மறுபடி சந்தோஷம்)...

ம்ம்..அடுத்த நாள் நானும் வடிவா வெளிகிட்டு கொண்டு போனா..அங்க கோப்பை கழுவுற வேலை தான்..(ம்ம்..வீட்ட என்ட கோப்பையே மம்மி தான் கழுவுவா)..என்ன செய்யிறது என்று போட்டு கழுவினது தான்..அப்படி அங்கையும் 1 கிழமை வேலை செய்திட்டன்..(அதுக்கு பிறகு அந்த சப்பை அது தான் சைனிஸ்காரன் வந்து சொன்னார் அடுத்த கிழமையில இருந்து 3 நாளைக்கு வேலைக்கு வர சொல்லி)..

ம்ம்..நானும் 3 நாள் போய் வேலை செய்ய தொடங்கின..(வேலை பெரிய கஷ்டமா இருக்கல்ல)...அப்படியே இரண்டு கிழமை போனா பிறகு..முதன் முதலில $50 தந்தார் சம்பளமாக..(அத என்னால மறக்கவே ஏலாது அது தான் எனக்கு கிடைத்த முதல் சம்பளம்)...ஆனா கொஞ்சம் கோபமும் தான் இவ்வளவு வேலை செய்து இது தான சம்பளம் என்று..சம்பளத்திள அரைவசியை முருகனிற்கு போட்டுவிட்டு..(இல்லாட்டி மம்மி ஏசுவா அல்லோ)..மிச்சத்தை வைத்து ஒன்னும் செய்ய ஏலாது அடுத்த கிழமை வேலைக்கு வர டிரேயின் வீக்லி பாஸ் எடுக்க தான் காணும்... :wub:

என்ன செய்யிறது அப்படியே ஒரு இரண்டு மாசம் அங்க வேலைக்கு போனது தான்..(பிறகு சப்பைக்கு என்னில நல்லா பிடித்து போச்சு சலரியும் கூட்டி தந்தவர் கூட்டினது என்றா பெரிசா அல்ல ஒரு $150 தந்தார்)..எனக்கு அது பெரிய காசு பிகோஸ் நாமளா உழைத்த காசு அல்லோ..அப்ப நாம என்னவும் செய்யலாம் தானே ஆனா துட்டு பெரிசா காணாது அல்லோ அப்ப உங்க 3 நாள் வேலை அல்லோ...(வெப்பில போய் மக்கி,வூலிஸ்,கோல்ஸ்,மயர்ஸ் என்று எல்லாதிற்கும் அப்பிளை பண்ணி பார்க்கிறது)...ஆனா என்ன ஒருத்தரும் என்ன கூப்பிடல்ல..

அப்படி இருக்கும் போது நேக்கு மறுபடி..(பெட்ரோல் செட்டில)....வேலை கிடைத்தது எனக்கு தெரிந்த அண்ணா தான் எடுத்து தந்தவர்..(ம்ம்..நேக்கும் வேலை பிடித்து போச்சு)..டிரெயினிங்கும் முடிந்திட்டு நேக்கு நைட் சிவ்ட் தான் கிடைத்தது..எனக்கு நைட்டில தனியா நிற்கிறது என்றா பயம் பட் என்ன செய்யிறது கிடைத்த வேலையை விட ஏலாது அல்லோ..

நாமளும் நின்றது தான்..(இடைகிடை பயம் வாறது தான்)...பட் அப்பப்ப எல்லாம் பிள்ளையாரை கும்பிட்டு கொண்டு நிற்கிறது தான் பாருங்கோ..அதுவும் ஒரு மாதிரி பழகி போச்சு..பிறகு மோர்னிங் சிவ்டும் கிடைத்தது ம்ம்ம்..முதல் முதலா நன்ன சலரி அந்த வேளையிள தான் கிடைத்தது நேக்கு..(சோ நான் வெரி கப்பி)..

ஆனா என்ன உங்க வேலை செய்ய...(சில பேர் வருவீனம் பிரச்சினை படவே)..அவையோட தான் பெரிய கரச்சலா இருக்கும்..ம்ம் சில நேரம் ஊசியை கொண்டு வந்து காட்டுவாங்க..(எயிட்ஸ் ஊசி குத்தி போடுவன்)...சிக்கிரட் பொக்ஸை தர சொல்லுவாங்க...ம்ம்ம் நாமளும் அப்படியே எல்லாத்தையும் எடுத்து கொடுக்கிறது தான்..

பிகோஸ் நம்ம அவுஸ் சட்டம் சொல்லுது..(இப்படி பிரச்சினை வரக்க அவர்களோட மோத வேண்டாம் இருக்கிறது எல்லாத்தையும் கொடுத்து உங்களை பாதுகாத்து கொள்ளுங்கோ என்று)...

சோ...நம்மளிற்கு பிரச்சினை இல்ல இருக்கிற எல்லாத்தையும் கொடுத்து விடுவன்..(ஆனா என்ன உப்படியான ஆட்களை கண்டவுடன் கொஞ்சம் பயம்)...மாறி ஊசியை குத்தி போட்டாங்க என்றா நம்ம கதி..(என்ன பார்க்கிறியள்)..

ம்ம்..அதில நிற்கிற நேரம் தான் பயம் தெரியும்..(ம்ம்..ஆனா நல்ல வேளை)..நின்று கொண்டு தான் வேலை செய்யனும் கால் எல்லாம் நோகும் என்ன செய்யிறது நிற்கிறது தான்..வின்டர் நாட்களிள தான் வேலைக்கு போக விசரா இருந்தது பிறகு போக போக அதுவும் பழகி போச்சு..

பிறகு இந்த வேர்க் எக்ஸ்பீரியன்ஸை வைத்து..(இப்படியனா வேலைகள் கிடைத்தது)..நன்ன துட்டும் வந்தது சந்தோஷமா நானும் வேலை செய்தன்..

ம்ம்...அக்சுவலா நேக்கு பல அநுபவங்கள் இந்த வேலைகளாள என்று சொல்லாம் பாருங்கோ...(முதல் நேக்கு ஒரு வேலை கூட செய்ய தெரியாது)...ஆனா பல புதிய அநுபவங்கள் இதால..(லோகத்தை கூட நன்னா புரிந்து கொள்ள முடிந்தது பாருங்கோ)..

ம்ம்..இப்ப ஒரு மாதிரி படிக்கிற துறையோட சம்பந்தபட்ட வேலை..பிடித்திருக்கு..(ஆனா என்ன மேல நான் செய்த வேலைகள் எல்லாம் இந்த வேலைக்கு எனக்கு மிகவும் உதவுது)..ஏன் அப்படி சொல்லுறன் என்றா அவுஸ் நாட்டை பொறுத்தவரை..(மனேஜர் தான் தன்ட ரூமை கூட்ட வேண்டும்)..

பட்..நம்ம ஆட்கள் இருக்கீனம்..(அங்க நல்ல வேளையிள இருந்து போட்டு இங்க வந்து)..அவைக்கு இப்படி செய்ய எல்லாம் அவையாள முடியாது அது வெள்ளைகளுக்கு பிடிகாது இதால நம்ம ஆட்கள் படுற பிரச்சினை பெரிய பிரச்சினை பாருங்கோ..

ம்ம்..குருவே..(இது தான் ஜம்மு பேபியின் பிளாஸ்பக்)..பிறகு அழுதிடாதையுங்கோ என்ன ஆனா என்ன நான் செய்த வேலை ஒன்னையும் தரகுறைவா நினைக்கல..ஏனேன்றா அவுஸ்சிற்கு வாறோம் என்றா..(நீங்க எப்படி வேண்டும் என்றாலும் நாட்டில இருந்திருக்கலாம்)...ஆனா உங்க வரக்க அதை எல்லாத்தையும் விட்டு போட்டு என்னவும் செய்ய ரெடியா வந்தீங்க என்றா நீங்க முன்னேறலாம் இல்லாட்டி..(அத வேற நான் சொல்லனுமா என்ன)..

சோ..ஜ லைக் அவுசி..(பிகோஸ் நம்மள கூட மனிசன் ஆகி விட்டது அல்லோ).. :lol:

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா என்ன வேலை செய்யிறோம் என்பது முக்கியமல்ல வேலை செய்தோம் என்பது தான் முக்கியம்"

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

நன்றி நெடுக்காலபோவான், தூயா, கரு, லீ... உங்கட நாடுகளில நீங்கள் வேலை செய்யேக்க பட்ட அனுபவங்கள், பிரச்சனைகள், துன்பங்கள் இதுகள் பற்றியும் கொஞ்சம் விரிவாக சொன்னால் நல்லது. அப்பத்தான் உங்கட உங்கட நாடுகளில என்ன என்ன சிக்கலுகள் இருக்கிது எண்டு அறிஞ்சு கொள்ளலாம். ஜமுனா உங்கட விரிவான தகவல்களுக்கு நன்றி. ஓசிக்கு வாற ஆக்கள் வேலை செய்யுறது சம்மந்தமா தெரிஞ்சுகொள்ள வேண்டிய ஏதாவது முக்கிய விசயங்கள் இருந்தால் அதுபற்றியும் சொல்லுங்கோ.

இறைவன் அண்ணை... தூக்குகாவடி, அலோலூயா எல்லாம் உங்களுக்கு தெரியாதோ? நாம் எல்லா மதங்களிலும் ஆயுட்கால உறுப்பினரா இருக்கிறம். அதுதான்..

சரி இனி..

பகுதி 01 மிச்சம்..

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

வெளிநாடுகளில நாங்கள் எப்பிடி வேலை செய்யுறம் எண்டு நீங்களும் எல்லாரும் கொஞ்சம் தெரிஞ்சு கொள்ளுங்கோ!

அப்ப அடுத்த லொக்கேசனுக்கு போய் வாகனம் நிண்டுச்சிது. இதுதான் பிரதான மெயின் லொகேசன். சரியான கலகலப்பான பிசியான இடம். பார்டிக்கு போறதுக்கு நிறைய இளம் பெடி, பெட்டைகள் மிகவும் நீளமான லைனில ஒருவர் பின் ஒருவராக நிண்டுச்சீனம். சக்கு சக்கு சிக்கு சிக்கு... கும் கும் கும் கும் எண்டு காது அதிற சத்தமாக மியூசிக் போய்க்கொண்டு இருந்திச்சிது. எங்க பார்த்தாலும் ஒரே ஜொள்ளா இருந்திச்சிது. பெடியங்கள் கூட்டம் கூட்டமாவும், சிங்கிளாவும், சோடியாவும் போறதும் வாறதுமா இருக்க... அங்காளப்பக்கம் பெண்டுகள் கூட்டம் கூட்டமாவும், சிங்கிளாவும், சோடியாவும் போறதும் வாறதுமா இருக்க... ஒரே திருவிழாவா இருந்திச்சிது. ரோடு எல்லாம் ஒரே வாகனங்கள், நிறைய டாக்ஸீகள், கோன் அடிக்கிற சத்தங்கள், இடைக்கிடை பொலிஸ் ரோந்துகள்... இப்பிடி சரியான பிசியாய் இருந்திச்சிது. எனக்கு இதுகள் எல்லாத்தையும் பார்க்க என்னடா இஞ்ச நடக்கிது எண்டு ஆச்சரியமா இருந்திச்சிது. நான் வேலையில கவனம் செலுத்தாமல் வாற போற ஆக்கள வாய் பார்க்கத் துவங்கினன்.

கொஞ்ச நேரத்தில பன்னிரண்டு ஒரு மணி சொச்சம் வரேக்க சனம் கும்பல் கும்பலா சாப்பாடு வாங்க வந்திச்சிதுகள். எங்கட யாவாரம் சூடுபிடிக்க துவங்கீட்டிது. அவன் ஒருபக்கத்தால விக்க நான் ஒரு பக்கத்தால விக்க கொண்டு வந்த சாப்பாடுகள் எல்லாம் கட கட எண்டு முடிஞ்சுகொண்டு போச்சிது. ஆரம்பத்தில டிரக் நிறைய சாப்பாடுகள் இருக்க எனக்கு சந்தேகமா இருந்திச்சிது எப்பிடி இவ்வளவத்தையும் வித்து முடிப்பம் எண்டு. ஆனா.. இப்ப சில ஐட்டங்கள் வித்து தீர்ந்துவிட்டன. கூடுதலா சிக்கன் விங்க்ஸ் அந்தமாதிரி வில்பட்டு முடிஞ்சிது. எண்ட பொக்கற்றுக்கயும் நிறைய காசு சேரத்துவங்கிச்சிது. எனக்கு அப்ப என்ன பெரிய பிரச்சனை வந்துது எண்டால் காசைவாங்கி சரியாக கணக்கு பார்த்து மிச்ச காச சரியா குடுக்கிறது. கையில கல்குலேட்டர் ஒண்டு இல்ல. எல்லாம் மனக்கணிதம். முதல்தரம் அதுவும் கிடுகிடு எண்டு ஏதோ சோதனை செய்யுறமாதிரி ஏதோ சமாளிச்சன். என்னச்சுற்றி ஆக்கள் நிண்டு அவசரப்படுத்தி டென்சன் வேறு தந்துகொண்டு இருந்தாங்கள்.

நான் செய்த முதலாவது பிழை என்ன எண்டால் எனக்கு அந்த நேரம் டிப்ஸ் எண்டால் என்ன எண்டு சரியா தெரியாது. நாங்கள் காந்தி பரம்பரையில வந்தனாங்கள் தானே? எண்டபடியால் எமக்கு தரப்படும் காசுகளக்கூட எப்பிடி எண்ட பொக்கற்றுக்க தனியா போடுறது எண்டுற விசயம் எனக்கு விளங்க இல்ல. நான் ஒரு பெனி எடுத்து எண்ட பொக்கற்றுக்க போட்டால் கூட அது பாவம், தொழிலுக்கு ஆகாது, பிழை எண்டு நினைச்சு.. வஞ்சகம் இல்லாமல் அகிம்சை வழியில வேலை செய்தன். ஆனா அதனால எனக்கு நல்ல பெயரும் மாபியாக்காரனுக்கு கெட்டபெயரும் வந்திச்சிது. அது என்ன எண்டு பிறகு சொல்லிறன்.

எலலாம் வித்துமுடிஞ்சு சுமார் நாலு மணி அஞ்சு மணி சொச்சம் நாங்கள் திரும்பி எங்கட கடைக்குபோனம். பிறகு அங்க எங்கட சாமாங்கள் எல்லாத்தையும் திருப்பி வச்சு குசினிய கொஞ்சம் ஒழுங்குபடுத்திபோட்டு வீட்டபோய்ச் சேரேக்க காலம்பற அஞ்சு அரை சொச்சம் ஆயிட்டிது. பிறகு அடுத்தநாள் எண்ட வாழ்க்கையில பெரிய திருப்பம் ஒண்டு வந்திச்சிது. அடுத்தநாள் மாபியாக்காரனுக்கு வேல என்ன வாகனத்தோட லொகேசனில கொண்டுபோய் விடுறது மாத்திரம்தான். விட்டுபோட்டு அவன் வேற டெலிவரி வேலைகளுக்கு போயிடுவான். அந்த பெரிய டிரக் வண்டியும், சாமாங்களும் எண்ட கட்டுப்பாட்டுக்க வந்திச்சிது. முதலில சரியான பயமா இருந்திச்சிது இதுகள நான் எப்பிடி சமாளிக்கப்போறன் எண்டு. ஆனா அந்தக்கடை சைனீஸ் முதலாளி அவன் எனக்கு உற்சாகம் தந்தான். அவன் நாந்தான் தனிய இண்டைக்கு விக்கவேணும் எண்டு பிடிவாதமா நிண்டான். ஏதாவது அவசர உதவி தேவப்பட்டால் தான் வருவன் எண்டு சொன்னான். அவனுக்கு மாபியாக்காரனில பெரிய நம்பிக்கை இல்லாமல் இருந்ததுதான் இதுக்கு காரணம் எண்டு பிறகு அறிஞ்சுகொண்டன்.

பிறகென்ன..? அடுத்தநாள் நம்மோட ராச்சியம்தான் டொரண்டோ டவுன் டவுனுக்க! முதலாளி என்ன தனியா "நீ தான் தம்பி முதல்வன்!" எண்டு சொல்லிவிட்ட உடன எனக்கு கொஞ்சம் குசி ஏறீட்டிது. எனக்கு வாகனம் ஓடத்தெரியாது. கோன் அடிக்கத்தெரியாது எண்டுறது தவிர அந்தநேரம் தகுதிக்குறைவு எண்டு ஒண்டும் இருக்க இல்ல. நானும் மாபியாக்காரன் நேற்று சொல்லித்தந்த மாதிரி பல டெக்னிக்குகள பாவிச்சு யாவாரத்த துவங்கினன். நான் சரியா திட்டமிட்டு ஒழுங்கா வேலைகளை செய்யும் ஒரு ஆள். அதுவும் இப்பிடி வெளி ஆக்கள் சம்மந்தப்படுற வேலை - கஸ்டமர் விசயங்கள் எண்டால் நான் சரியான கவனம். அந்தமாதிரி எல்லாம் பிளான் பண்ணி விக்கத் துவங்கினன். மாபியாக்காரன் மாதிரி இடைக்கிடை சத்தமா சவுண்டும் விட்டன். உரத்த குரலில "சிக்கின் விங்க்ஸ் ... போல்ஸ்... " அப்பிடி இப்பிடி எண்டு. எண்ட தோற்றத்த வச்சு நான் தமிழ் ஆள் எண்டு ஒருத்தராலையும் அப்ப கண்டுபிடிச்சு இருக்க ஏலாது. அப்பிடித்தான் நான் வெளியில எண்ட உடுப்புக்கள் - நடை, உடை, பாவனைகள். அது எங்களுக்கு ஒரு விதத்தில பாதுகாப்பும் தானே? இப்பவும் கூட எங்கையாவது பொது இடங்களில சப்வேயில போனால் கூட நிறையத் தமிழ் ஆக்கள் நானும் ஒரு தமிழ் ஆள் எண்டு தெரியாமல் எனக்கு முன்னாலையே தங்கட வீட்டு, குடும்ப ரகசியம் எல்லாம் கதைப்பீனம். எனக்கு சிலது சிரிப்பாய் இருக்கும். சிலது சரி இல்லை எண்டுபோட்டு ஹாய் நானும் தமிழ்தான் எண்டு சொல்லி அவையோட கதைக்கிறது.

அப்ப கேளுங்கோ... நான் சத்தம் எல்லாம் போட்டு சாமான் வித்துக்கொண்டு இருந்தன். வாறவன் போறவன் எல்லாம் என்ன பொஸ் பொஸ் எண்டு கூப்பிட எனக்கு மனதுக்க இன்னும் சரியான புளுகம். கிடு கிடு எண்டு மாபியாக்காரன் மாதிரி வித்தன். கொஞ்ச நேரத்திலயே சாப்பாடுகள் விக்க விக்க நிறைய டெக்னிக்குகள கண்டுபிடிச்சு எல்லாம் சிமூத்தா (smooth) போறமாதிரி பார்த்துக்கொண்டன். கடைசியில எல்லாம் வித்துமுடிஞ்சு கடைக்கு போகேக்கதான் அண்டைக்கு ஒரு பிரச்சனை வந்திது.

நான் சொன்னனான் தானே முன்னம் அந்த டிப்ஸ் பற்றி? நான் எனக்கு கிடைச்ச டிப்சுகள பிரிம்பா எண்ட பொக்கற்றுக்க போடாமல் எல்லாத்தையும் ஒண்டடியா காசுப்பெட்டியுக்க போட்டிட்டன். அவன் சைனீஸ் முதலாளி கடைசியில கணக்கு வழக்கு பார்க்கேக்க.. சுமார் $ 50 சொச்சம் கூடுதலான காசு வந்துட்டுது. அவனுக்கு இதப்பார்த்த உடன சரியான கோவம். மாபியாக்காரனுக்கு அதக்காட்டி அவன கண்டபடி பேசினான். பிறகுதான் எனக்கு மாபியாக்காரன் செய்த விளையாட்டுக்கள் விளங்கிச்சிது. அவன் டிப்சுகள தான் வச்சுக்கொள்ளுறது மட்டும் இல்லாமல் சிலது சாமாங்களை குறைஞ்ச விலைக்கு வித்தனான்.. அப்பிடி இப்பிடி சில காரணங்கள சொல்லி சைனீஸ்காரன ஏமாத்துறது. ஆனால் இண்டைக்கு அவரிண்ட குட்டு உடைஞ்சு போச்சிது. சைனீஸ்காரனுக்கு பதில் சொல்ல ஏலாமல் முளுசிக்கொண்டி இருந்தான். சைனீஸ் முதலாளி எண்ட முதுகில தட்டி கெட்டிக்காரன் எண்டு சொல்லிப்போட்டு டிப்சில நான் குடுத்ததில $ 20 ஐ எனக்கு தந்தான்.

பிறகு அடுத்தநாள் எனக்கு மாபியாக்காரன் நிறைய அறிவுரைகள் தந்தான். என்னில அவனுக்கு கோபம் ஒண்டும் பெரிசா இல்ல. ஆனா டிப்ஸ் - அது உண்ட காசு, நீ வச்சுக்கொள்ளு. சைனீஸ்காரனுக்கு காட்டாதை எண்டு சொன்னான். டிப்ஸை ஏன் பேயன்மாதிரி முதலாளிக்கு குடுத்தனி எண்டு பேசினான். இனி என்ன? அடுத்தநாள் வேலை செய்யேக்க நான் சேர்ந்த டிப்ஸிண்ட அரைவாசிய எண்ட பொக்கற்றுக்க போட்டுக்கொண்டு டிப்சிண்ட அரைவாசிய மட்டும் சைனீஸ் முதலாளியிட்ட குடுத்தன். பிறகு கொஞ்ச காலத்தால முழு டிப்ஸயும் நானே வச்சுக்கொள்ளுறது. ஏன் எண்டால் காலம் போகப்போக நான் செய்த வேலைக்கு ஏற்ற சம்பளம் கிடைக்க இல்லை எண்டுறது போக வேலையும் சரியான கஸ்டமாய் இருந்திச்சிது. பிறகு மூண்டு கிழம சொச்சத்தால எனக்கு வேற வேலை தரப்பட்டது. டிரக்கில இல்லாமல் கடையில நிண்டு செய்யுற வேலை.

கனக்க எழுத கை நோகிது. பகுதி 01 - கனடாவில நான் செய்த முதலாவது வேலை பற்றி இன்னும் இருக்கிற மிச்ச கதைகள பிறகு சொல்லிறன்.

Link to comment
Share on other sites

நல்ல வியாபாரியாகிட்டிங்க என்று சொல்லுங்க மாப்ஸ்..;)

Link to comment
Share on other sites

ஓம் தூயா வெளிநாட்டுக்கு இன்னும் கொஞ்சம் முன்னுக்கு வந்து இருந்தால் பில் கேட்ஸ் மாதிரி எழும்பி இருக்கலாம். நான் குடுத்து வச்சது இவ்வளவுதான். :rolleyes:

வெளிநாடுகளில நாங்கள் எப்பிடி வேலை செய்யுறம் எண்டு நீங்களும் எல்லாரும் கொஞ்சம் தெரிஞ்சு கொள்ளுங்கோ!

பகுதி 01 தொடர்ச்சி

இப்ப கடையுக்க வேல. நானும் ஆரம்பத்தில கடையுக்க வேலை எண்ட உடன ஏதோ புரமோசனாக்கும் எண்டு நினைச்சன். பிறகுதான் விளங்கிச்சிது அது எவ்வளவு அரியண்டம் பிடிச்ச வேலை எண்டு. ஏன் எண்டால் டிரக்கில நிக்கேக்க நாந்தான் ராஜா. ஆனா கடையில நிக்கேக்க வாறவன் போறவன் எல்லாரிட்டையும் பேச்சு வாங்க வேணும். சரி இனி..

கடையுக்க என்ன வேலை எண்டால் கடை பின்பக்கத்தில நான் டிரக்கில வித்த அதே சாமாங்கள விக்கிறது. இதவிட ஆக்களிட்ட ஓடர் எடுத்து உள்ளுக்க குடுக்க சமையல்காரங்கள் உடன உடன தேவையான சாப்பாடுகள - டேக் அவுட் செய்து தருவாங்கள். இஞ்ச நான் நிறைய சிக்கல்பட வேண்டி வந்திச்சிது. ஏன் எண்டால் நிறைய வேலை.

மற்றது இப்ப நான் போனது இது பழைய கடை லொகேசன் இல்ல. அவங்களுக்கு ரெண்டு லொகேசன் இருந்திச்சிது. இப்ப நான் டவுண் டவுனுக்க இருக்கிற மற்ற லொகேசனுக்கு இரவு எட்டு மணிச்சொச்சம் போகவேணும். அங்க ஆக்களும் புதுசு. நான் வேல செய்யுறது - அது எங்கட கடையிண்ட பின்பக்கம். கடையச்சுத்தி ஏராளம் கேளிக்கை இடங்கள் (உங்களுக்கு தெரியும் தானே? சத்தமா மியூசிக்க போட்டுட்டு டீஜே ஒருத்தர் கொமாண்ட் பண்ண இதுகள் எல்லாம் தண்ணி அடிச்சுப்போட்டு அரைகுறை உடுப்புகளோட காக்கா வலிப்பு வந்து துடிச்சுக்கொண்டு இருக்கிங்கள்? அந்த பார்டி இடம் தான்.. எங்கட கடையச் சுத்தி..)

இனி நான் இரவு எட்டு மணியில இருந்து வீட்ட திரும்பி போகும்மட்டும் என்ன செய்யுறனான் எண்டு பொயிண்ட்ஸ் போர்மில சொல்லிறன். கேளுங்கோ. பந்தியா எழுதினா எனக்கும் கஸ்டம் உங்களுக்கும் விளங்காது.

1. யாராவது ஒருத்தன் வந்து கடையத் திறக்கும் மட்டும் வெளியில நிண்டு வாய் பார்த்துகொண்டு இருக்கிறது.

2. கடை ஏற்கனவே திறந்து இருந்தால் உள்ள போறது. (ஆனா உள்ள போகமுன்னம் கொஞ்சம் எச்சரிக்கை வேணும். கடையுக்கு செக்கியூரிட்டி எலார்ம் இருக்கிது. கடைய திறந்ததும் அந்த எலார்மை ஓவ் செய்யவேணும். தற்செயலா ஓவ் செய்ய முன்னம் நான் நுழைஞ்சால் அது கீயோ மாயோ எண்டு பயங்கரமா சத்தம் போட்டு கடைசியில பொலிஸ் வந்திடும். நான் ஒருக்கால் இப்பிடி போய் அது எலார்ம் அடிக்கத் துவங்கி பிறகு கடைய திறந்தவன் உடன ஓவ் பண்ணிப்போட்டான்)

3. எண்ட பின்பக்க ஏரியாவுக்கு போய் எல்லாத்தையும் ஒழுங்கு செய்யுறது. பின் கேற்றை திறக்கிறது, விளம்பர லைட்டுக்கள் போடுறது, விளம்பர பலகையில அழகா சோக்கால மெனுயூ எழுதுறது. (எண்ட எழுத்து நல்ல வடிவா இருக்கிது எண்டு முதலாளி அடிக்கடி சொல்லுவான்).

4. அந்த இடம் குப்பையா இருந்தால் கஞ்சல பொறுக்கி துப்பரவு செய்யுறது.

5. இனி குளிர்பான பிரீசர் பெட்டியில இருந்து சின்னக்கடை போடுறதுக்கு தேவையான எல்லா பெட்டிகளையும் (சில்லு இருக்கிது வண்டில் மாதிரி) தள்ளிக்கொண்டு வந்து செட்பண்ணி கடைமாதிரி ஆக்கிறது. (உங்களுக்கு தெரியும் தானே ஹோட் டோக் சொசேஜ் விக்கிற பெட்டிக்கடைகள்? அதுமாதிரி. ஆனா இது கொஞ்சம் பெரிசு.)

6. இப்ப நான் கடைமாதிரி செய்தாப்பிறகு வெளி ஆக்கள் உள்ளுக்க வற ஏலாது. இனி எண்ட பெரிய கடையுக்க - உள்ளுக்க போய் தேவையான எல்லாச் சாமாங்களையும் எண்ட சின்னக் கடையுக்க கொண்டு வந்து வைக்கிறது. சாமாங்கள் எண்டு சொன்னால் - முள்ளுக்கரண்டி, கரண்டி, விதம் விதமான சோஸ்கள், கெச் அப்கள், கோலாக்கள், பெப்ஸி.. (எனக்கு இன்று வரை விளங்காத ஒரு விசயம். நான் கோலாக்கள் விக்கேக்க 100 க்கு 80% சனம் ஐஸ்டீ தான் வாங்குறதுகள். கோக், பெப்ஸி எல்லாம் ஐஸ்டீ இல்லை எண்டால்தான் மட்டும்தான் வாங்குங்கள். ஐஸ்டீயில அப்பிடி விசேசமா என்ன இருக்கிது எண்டு எனக்கு தெரிய இல்ல. சிலது காக்கா வலிப்பு வந்தால் ஐஸ்டீ நல்ல பரிகாரமா இருக்குமோ தெரியாது.)

7. இனி டப்பாக்களில அடைக்கப்பட்ட சாப்பாடுகள (டிரக்குக்க வச்சு விக்கிற சாமாங்கள் - சிக்கன் போல்ஸ், சிக்கன் விங்க்ஸ்...கொண்டு வந்து வைக்கிறது.) ஆனால் முக்கியமான ஒரு விசயம் கவனிக்கவேணும். சிறீ லங்காவ விட இஞ்ச கள்ளர் கூட. ஒரு செக்கன் எங்கையாவது வாய்பார்த்தால் காணும். ஏமாத்திப்போடுவாங்கள். அப்ப நான் என்ன செய்யுறது எண்டால் இன்னொரு ஆள காவலுக்கு வச்சுப்போட்டுத்தான் உள்ளுக்க சாமான் எடுக்கபோறது. இல்லாட்டி நான் உள்ளுக்க போய் திரும்பி வாறதுக்கு இடையில எண்ட சின்னக்கடையில இருக்கிற சாமாங்கள யாராவது காக்காமாதிரி கொத்திக்கொண்டு போயிடுவாங்கள்.

8. கடைசியா காசுப்பெட்டிய தூக்கிக்கொண்டு வாறது. எனக்கு குவாட்டர் (25 சதம்), அஞ்சுசதம், பெனி (ஒரு சதம்), பத்துசதம், லூனி (ஒரு டொலர்) டூனி (ரெண்டு டொலர்) எண்டு ஒவ்வொண்டுலையும் தாராளமா சில்லறைக்காசுகள் தருவீனம். பக்கற்றுகளுக்க காசு இருக்கும். ஒவ்வொரு பக்கற்றா உடைச்சு ஒவ்வொரு விதமான சில்லறைகளா தருவீனம்.

9. இனி என்ன? எல்லாம் வந்திட்டிது. யாவாரம் துவங்க வேண்டியதுதான்.

10. சுமார் ஒன்பது மணியில இருந்து ஆக்கள் வருவீனம். பத்து அரை சொச்சம் யாவாரம் சூடுபிடிக்க துவங்கும். இரவு ஒரு மணியுக்கு பீக் டைம் எண்டு சொல்லவேணும். இந்தநேரம்தான் எனக்கு ஆகவும் சரியான வேலையா இருக்கும். சனம் எண்ட கடைய ஈ மாதிரி மொச்சுக்கொண்டு இருக்கிங்கள். இந்தநேரம்தான் வாழ்க்கையே வெறுக்கும். ஏன் கனடாவுக்கு வந்தம் ஊருக்கையே இருந்து இருக்கலாம் எண்டு நினைப்பு வரும். இந்தநேரம் மிகவும் கிரவுடா இருக்கும்.

11. இந்தநேரத்தில எனக்கு வாறமிகப்பெரிய சலஞ்ச் என்ன எண்டால் குயிக்கா எப்பிடி ஆக்கள சமாளிக்கிறது எண்டுறது. வாறவன் போறவன் எல்லாம் அவசரப்படுத்திக்கொண்டு இருப்பாங்கள். தூசணத்தால கண்டபடி பேசுவாங்கள் (நானும் இஞ்சதான் தூசணம் பழகினது..). நான் மாத்திரம் என்ன சும்மாவே? ரெண்டு நாள் எல்லாருட்டையும் பேசாமல் கேட்டு படிச்சுப்போட்டு பிறகு யாராவது சேட்டை விட்டால் நானும் தூய ஆங்கிலத்தில திருப்பி ஆட்லறி தாக்குதல் செய்யுறது. யாராவது ப.. எண்டு சொன்னால் நான் இன்னும் அழுத்தமாவும் தெளிவாவும் ப... யூ எண்டு சொல்லி அதோட ஆ.. ஹோ.. எண்டுற அடைமொழியையும் சேர்க்கிறது. எனக்கு யாருட்டையும் பேச்சு வாங்க வேணும் எண்டு தலைவிதி இல்லத்தானே? எண்டபடியால் நானும் திருப்பி தூசணம் சொல்ல பயப்படுறதோ வெட்கப்படுறதோ இல்ல.

இஞ்ச முக்கியமா என்ன கவனிக்க வேணும் எண்டால்.. வாற பெடியங்களில முக்கால்வாசி கள்ளர் கூட்டம். ஆக்களப் பார்த்தால் மட்டும் அந்தமாதிரி உடுப்புகள்... வாசனைகள் எண்டு இருக்கும். ஆனா செய்யுற கள்ள வேலைகள் கொஞ்ச நஞ்சம் இல்ல. ஒரு டொலர் காசுக்கு பத்து நிமிசம் நிண்டு வாதாடுவாங்கள். நிறையப்பேர் என்ன செய்வாங்கள் எண்டால் சரியான சனமா இருக்கிற நேரமா பக்கத்தில நிண்டுபோட்டு பிறகு காசு தராமலே நான் உனக்கு ஏற்கனவே காசு தந்திட்டன் எண்டு பொய் சொல்லி ஏமாத்துவாங்கள். சாப்பாட ஓடர் செய்துபோட்டு ஓடர் வந்த உடன சாப்பாட வாங்கேக்க காசு தராமலே நான் உனக்கு ஏற்கனவே காசு தந்திட்டன் எண்டு சொல்லி பம்மாத்து விடுவாங்கள். நான் மட்டும் என்ன விட்டனே? ஒரு ப... சொல்லி மிச்சம் ஏதும் பிரச்சனை எண்டால் உள்ளுக்க கடையுக்க போய் முதலாளியோட கதை எண்டு சொல்லிப்போடுவன். அவேள் எனக்கு திரும்பவும் கொஞ்ச நேரம் தூசணம் சொல்லி வெருட்டி எல்லாம் பாத்துபோட்டு கடைசியில ப.. ப.. ப எண்டு சொல்லி பஜனை பாடிக்கொண்டு இடத்த காலி பண்ணுவீனம்...

மற்றது நிறையப் பெடிப்பிள்ளைகள் என்ன செய்வீனம் எண்டால் ஊரில சந்தையில மரக்கறி வாங்கிறமாதிரி.. சாப்பாட்ட குறைஞ்ச விலைக்கு தரச்சொல்லி டீல் பேசிக்கொண்டு இருப்பீனம். நான் சிலது பாவம் பார்த்து குறைஞ்ச விலைக்கு குடுக்கிறது. முதலாளியும் சொல்லுவான். சிலது அம்பது சதம் குறைஞ்சாலும் பரவாயில்ல வித்துவிடு எண்டு. இதால இப்பிடி செய்யுறது.

மற்றது... அவேள் காக்கா வலிப்பு வந்து மணித்தியாலக் கணக்கில ஆடுறது தானே? அப்ப அந்தநேரம் அவேக்கு சரியான பசியா இருக்கும். ஆனா பரதேசிகளிண்ட பொக்கற்றுக்க காசு இருக்காது. தெருப்பிச்சைக்காரங்கள் மாதிரி எண்ட கடையுக்க முன்னால வந்துநிண்டு கெஞ்சிக்கொண்டு இருக்கிங்கள். மனிதாபிமானமும் பார்த்து சிலருக்கு சும்மாவும் சாப்பாடு குடுத்து இருக்கிறன். பசியில ஆகவும் கெஞ்சி அழுதால் வேற என்னத்த செய்யுறது?

ஆனா ஒரு விசயம் சொல்ல வேணும். முக்கியமா நெடுக்காலபோவான் இந்த பொயிண்ட கவனிக்க வேணும். நான் பார்த்ததில வாற பெண்களுல ஒருவருமே இப்பிடி பிரச்சனை ஒண்டும் செய்யுறது இல்ல. ஒரு பெண் கூட இப்பிடி கள்ள வேலை செய்ய இல்ல.. (சிலது பெடியங்கள் எல்லாரிண்ட பொக்கற்றுக்க இருந்த காசையும் இவேள் காக்கா வலிப்பு வந்து ஆடேக்க அம்பேஸ் செய்து போட்டீனமோ தெரியாது. இதால பெண்களுக்கு காசுப்பிரச்சனை இருக்க இல்லையோ தெரியாது..) உண்மையா நான் கண்ட அனுபவத்தில பெண்கள் மிகவும் கண்ணியமா நடந்து கொண்டிசீனம். ஒரு கள்ள வேலைகூட செய்ய இல்ல. காசக்குறைச்சும் சாப்பாடு கேட்க இல்ல. பிச்சைகாரரிண்ட விளையாட்டுகளும் காட்ட இல்ல. மற்றது எனக்கு டிப்சும் பெண்களிடம் இருந்துதான் ஏராளம் கிடைக்கும்.

12. சனம் ஆட்டம் பாட்டம் எல்லாம் முடிஞ்சு சுமார் அதிகாலை 1.30 சொச்சத்தில இருந்து மெல்ல மெல்ல கலையும். காலை 2.00 மணி அளவில சரியா குறைஞ்சிடும். மூண்டு மணி அளவில இன்னும் சரியா கிரவுட் குறைஞ்சிடும்.

13. வேலை செய்யேக்க நான் எண்ட சின்னக்கடையுக்க இருக்கிற சாமாங்கள் விக்கிறதோட மட்டும் இல்லாமல் ஓடருகளும் எடுத்து உள்ளுக்க குடுக்கவேணும். என்னோட இன்னொரு வெள்ளக்காரன் உதவிக்கு நிப்பான். அவன் உள்ளபோய் ஓடருகள் செய்து முடிஞ்சதும் கொண்டுவந்து தருவான். ஆனா நாந்தான் காச டீல் பண்ணுறது. சேருற டிப்ஸ நானும் அவனும் பிரிச்சு எடுக்கிறது.

14. ஆக்களிண்ட எண்ணிக்கைய பொறுத்து நல்லா சனம் குறைஞ்ச உடன நான் எண்ட சின்ன பெட்டிக்கடைய மூடுறது. நேரஞ்செல்ல யாரும் வந்தால் அவேள பெரிய கடையுக்கபோகச்சொல்லிறது.

15. பிறகு என்ன? ஆரம்பத்தில நான் இரவு 8.00 மணிக்கு வரேக்க எப்பிடி எல்லாம் இருந்திச்சிதோ அதுமாதிரி எல்லாத்தையும் திருப்பிகொண்டுபோய் வைக்கவேணும். பெட்டி வண்டில்கள திரும்பவும் பழைய இடத்தில வைக்கிறது.

16. நான் சாமான் வித்த இடம் சரியான ஊத்தையா இருக்கும். பேப்பருகள், கஞ்சலுகள், சாப்பாடுகள் எண்டு எல்லாம் ஒரே நரகமா இருக்கும். அப்ப அடுத்த வேல எல்லாத்தையும் கூட்டி துப்பரவு செய்யுறது.

17. கடைசியா எல்லாம் பழையமாதிரி வந்தாப்பிறகு விளம்பர பலகைய உள்ளுக்க கொண்டுபோய் வச்சுப்போட்டு, விளம்பர லைட்டை நூத்துப்போட்டு (அது பெரிய வேலை... ஆயிரம் வயருகளும் லைட்டுகளும் எண்டு பத்து நிமிசம் மினக்கடவேணும்..) பிறகு இரும்புக்கதவ சாத்தி லொக்கை போட்டிட்டு உள்ளுக்க போறது.

18. உள்ளுக்க போய் செய்யுற முதலாவது வேல எண்ட காசுக்கணக்குகள சரிபார்த்து கடையில நிக்கிற மனேஜரிட்ட இல்லாட்டி பொறுப்பான ஆளிட்ட குடுக்கிறது.

19. சிலது இனி கடையுக்க முன்பக்கத்தில நிண்டும் வேலை செய்யுறது, விக்கிறது, துடைக்கிறது, கூட்டிறது...மொப்பண்ணுறது... க**ஸ் கழுவுறது (இதப்பற்றி - கனடா க**ஸ் கழுவின அனுபவங்கள் பற்றி பிறகு விரிவா சொல்லிறன்..). இப்பிடி வழமையான ரெஸ்டோரண்ட் வேலைகள் செய்யுறது..

20. எல்லாம் முடிய வீட்ட போறது. ரெண்டு கிழமைக்கு ஒருக்கால் எனக்கு சம்பளம் தருவாங்கள். காசாத்தான் தாறது. செக் இல்ல. ஆனா வேலையில சேர்ந்து முதல் கிழம செய்யுற வேலைக்கு சம்பளம் இல்ல. எனக்கு ஒவ்வொரு நாளும் டிப்ஸ் சேரும். நான் கிடைக்கிற எல்லாக் காசையும் வீட்ட போகும் முன்னமே பாங்க் மெசினுக்கால எண்ட எக்கவுண்டில டிப்பொசிட் செய்யுறது. டொரணடோ டவூண்டவுன் முழுக்க ஒரே பாங்குகள் தானே? மற்றது ஒவ்வொரு நாளும் கடை முடியேக்க... மிஞ்சிற சாப்பாடுகள் எல்லாம்.. (ஆக்கள் சாப்பிட்ட மிச்சம் இல்ல, வில்பாடாத மிச்சம்..) பசி எண்டால் சாப்பிடுறது. இதவிட ஒவ்வொரு நாளும் ஒரு நேரம் எனக்கு விருப்பமான சைனீஸ் சாப்பாட்ட காசு இல்லாமல் ஓடர்போட்டு வாங்கி சாப்பிடலாம். நான் அந்தநேரம் மச்சம் சாப்பிடுறது இல்ல. அப்ப ஒவ்வொருநாளும் வெஜிட்டபில் சோ மீன் தான் வாங்கி சாப்பிடிறது. நல்ல சூப்பரா இருக்கும் சாப்பிட...

இனி என்ன நடந்திச்சிது எண்டால் ஒரு மாதத்தால எண்ட வேலைய திரும்பவும் மாத்திப்போட்டாங்கள். இதுதான் இஞ்ச ஆகவும் கஸ்டமான வேலை. இந்தவேலைய செய்யச்சொல்லி எனக்கு தந்தாப்பிறகுதான் நான் இந்த ரெண்டோரண்ட் வேலைக்கே டாட்டா காட்டிபோட்டு வேலைய குயிட் பண்ணினது. எனக்கு நித்தா வருது. அது என்ன எண்டு பிறகு சொல்லிறன்.

(இருட்டுக்க அரை நித்தாவில இருந்து எழுதினது. எழுத்துப்பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்.)

Link to comment
Share on other sites

வெளிநாடுகளில நாங்கள் எப்பிடி வேலை செய்யுறம் எண்டு நீங்களும் எல்லாரும் கொஞ்சம் தெரிஞ்சு கொள்ளுங்கோ!

பகுதி 01 தொடர்ச்சி

புது வேலை என்ன எண்டால் கடை முன்பக்கத்தில ஒரு சைட்டில கூடாரம் போட்டு அதுக்க இருந்து ஹொட் டோக் சொசேஜ் விக்கிற வேலை. இது பன்பலான வேல சமருக்கு செய்யுறதுக்கு. ஆனால் குளிர்காலத்தில இதுமாதிரி வேதனையான நசல் பிடிச்ச வேலை வேற ஒண்டும் இருக்காது. நான் இப்ப கூட தெருவில போகேக்க ஹொட் டோக் சொசேஜ் விக்கிற ஆக்கள பார்த்தால் எனது பழைய நினைவுகள் வர சரியான பாவமா இருக்கும். தனிப்பட்ட பிஸ்னஸ் செய்தாலும் கூட, விண்டர் டைமில குளிருக்க நிண்டு அந்த வேலை செய்யுறது துன்பகரமானது.

இஞ்ச கனடா குளிர் எல்லாருக்கும் தெரியும்தானே? தெருவில குளிருக்க நிண்டு வேலை செய்தால் எப்பிடி இருக்கும் எண்டு நான் சொல்லி உங்களுக்கு விளங்கவேண்டியதில்ல. ஹீட்டரும் இல்ல... ஒரு கோதாரியும் இல்ல. ஆக அந்த அடுப்பு சூட்டுக்க நான் நிண்டு குளிர்போக்கிக் கொள்ள வேண்டியதுதான். நான் உள்ளுக்க நல்ல உடுப்புகள் போட்டு கிளவ், பூட்ஸ் எல்லாம் போட்டு ஒழுங்காத்தான் வெளிக்கிட்டு போறது ஆனாலும்.. அதுக்கு மேலால குளிரும்.. மற்றது..

இது ஏதோ விண்வெளியில போறமாதிரி நான் பாரமா உடுப்புக்களையும் போட்டுக்கொண்டு வேலையும் செய்யேக்க பிறகு வேர்த்து வியர்க்க துவங்கினால் விசர்தான் பிடிக்கும். எனக்கு ஆரம்பத்தில முதலாளி இந்த வேலையச் செய்யச் சொல்லி கேட்க மறுப்பு ஒண்டும் சொல்ல இல்ல. முதலாவது நாள் அந்த வேலயச் செய்தாப்பிறகுதான் எவ்வளவு ஹெவியான வேலை எண்டு விளங்கிச்சிது.

முதலில எண்ட ஏரியாவ கிளீண் பண்ணுறது, பிறகு காஸ் சிலிண்டர கொண்டுபோய் அடுப்ப பத்த வச்சு ரெடி பண்ணுறது. பெரிய குடை ஒண்டு விரிக்கிறது சின்னக் கடைமாதிரி. பிறகு சாமாங்கள கொண்டுபோய் வச்சுபோட்டு - பன், ஹொட்டோக், சொசேஜ், கத்திகள், கரண்டிகள், மிச்சம் தொட்டு சாப்பிடுற கலவைகள்... இதுகள் எல்லாம்.... செய்துமுடிச்சுப்போட்டு சின்ன பிளாஸ்ரிக் பெட்டி ஒண்டுக்கு மேல குந்தி இருந்து ஆக்கள் யாரும் வாங்க வருவீனமோ எண்டு காவல் காத்துக்கொண்டு இருக்கிறது.

சனம் முன்பு சொன்னமாதிரி பத்துமணி சொச்சம் வரத் துவங்கினால் ஒண்டு அரை சொச்சம் சரியான பிசியாகும். பிறகு மூண்டு மணி சிலது நாலு மணி சொச்சம் ஆக்கள் வாறது குறைஞச உடன அடுப்ப நூத்துபோட்டு எல்லாத்தையும் திருப்பி அந்த அந்த இடங்களில கொண்டுபோய் வைக்கிறது. அடுப்பில இருக்கிற அந்த கரிப்பிடிச்ச கம்பித் தட்டுக்கள், கரிப்பிடிச்ச கரண்டிகள் எண்டு கிளீன் பண்ணுற வேலையும் கடைசியில இருக்கிது.

இஞ்சயையும் முன்பு சொன்ன அதே பிரச்சனைகள். மற்றது சிலது பன் முடிஞ்சால் ஒண்டும் செய்ய ஏலாது. பன்னுக்க வச்சுத்தானே அடுப்பில சுட்ட ஹொட்டோக், சொசேஜ குடுக்கலாம். முதலாளி கொஞ்சம் கஞ்சல் பிடிச்சவன். இப்ப நான் இண்டைக்கு அடுப்பில சுட்ட ஹொட்டோக், சொசேஜ் மிஞ்சி இருந்தால் அவன் அத பிரீசருக்க வச்சுப்போட்டு அடுத்தநாள் திரும்பவும் அத அடுப்பில சுட்டு விக்கச் சொல்லி சொல்லுவான். ஆனா இப்பிடி செய்தத சாப்பிட்டால் டேஸ்ட் ஆக இருக்காது. சிலது இப்பிடியானதுகள நான் குடுத்தால் அவங்கள் அத வாங்கித் திண்டு போட்டு தூசணத்தால எனக்கு பேசுவாங்கள். ஒருவன் எனக்கு சொன்னான் "எண்ட வாழ்க்கையில இவ்வளவு கேவலமான ஹொட்டோக்க நான் சாப்பிட இல்ல" எண்டு. இனி எங்கட கடைப்பக்கம் வரமாட்டன் எண்டும் சொன்னான். இது எண்ட பிழை இல்ல. நான் என்ன செய்யுறது? கஞ்சல் பிடிச்ச முதலாளி பழசுகள வில் எண்டு சொல்லேக்க நான் ஒண்டும் செய்ய ஏலாது தானே?

ஆனால் எனக்கு சிலது அவங்கள பார்க்க சரியான பாவமா இருக்கும். ஏன் எண்டால் தெரியும்தானே அதிகாலை ரெண்டு மூண்டு மணி சொச்சம் சரியான பசியாய் இருப்பாங்கள். நான் நாறின ஹொட்டோக்க அடுப்பில சுட்டு அவங்களுக்கு குடுத்தால் அவங்கள் பாவம் என்ன செய்வாங்கள்? ஒவ்வொருக்காவும் ஹொட்டோக்க இல்லாட்டி சொசேஜ குடுக்கேக்க எனக்கு தெரியும் அதுண்ட தரம் என்ன எண்டு. யாவாரம் எண்டு வரேக்க ஆக்கள எப்பிடி நைசா ஏமாத்துறது எண்டு இஞ்சதான் படிச்சுக்கொண்டன். எல்லாருக்கும் பழைய பழுதாபோன சாப்பாடுகள குடுக்கிறது இல்ல. ஆக்களிண்ட மூஞ்சியை பேர்சனாலிட்டியை பார்த்து யாராவது இளிச்சவாயன் வரேக்கதான் பழசுகள தள்ளிவிடுறது. அப்பிடிச் செய்யேக்க எனக்கே சரியான கவலையாய் இருக்கும். ஆனால் நான் ஒண்டும் செய்யமுடியவில்ல. அது எண்ட கடை இல்லத்தானே? முதலாளி சொல்லிறபடிதான் நான் வேலை செய்யமுடிந்தது.

எண்டாலும் புதுசான நல்ல பிரஸ்சான ஹொட் டோக் சொசேஜ அந்த மாதிரி சுட்டு குடுப்பன். எல்லாரும் வாங்கித் திண்டுபோட்டு அந்தமாதிரி டேஸ்டா இருக்கிது சூப்பர் எண்டு சொல்லுவாங்கள். இஞ்ச ஒரு பகிடி என்ன எண்டால் நான் அப்ப மச்சம் சாப்பிடுறது இல்ல. எனக்கு நான் செய்து சுட்டு குடுக்கிற சாப்பாடு - ஹொட்டோக், சொசேஜ் எப்பிடி இருக்கும், அதிண்ட சுவை என்ன எண்டு தெரியாது. நான் அதுகள ஒருநாளும் நான் வாயில கூட வைக்க இல்ல. பிறகுதான் இப்ப கொஞ்சகாலமா மச்சம் சாப்பிடுறது.

எண்ட கஸ்டமர்ஸ் எண்டு பார்த்தால் நிறைய இடங்களில இருந்து ஆக்கள் வருவாங்கள். கூடுதலா நியூ யோர்க்கில இருந்து வாற அமெரிக்கன் கிரவுட், மற்றது கனடா மன்ரியலில இருந்து நிறைய சனம் வரும். வாற நிறையச் சனம் நல்லா பிரன்ச் மொழி கதைக்குங்கள். இதுதவிர பிரான்ஸ், இத்தாலி, சுவிஸ், ஜேர்மன் எண்டு கனடாவுக்கு வந்த யூரோப்பியன் ஆக்களும் நிறைய வருவாங்கள். தெருவில ரோந்துபோற பொலிசும் சாப்பாடு வாங்க வரும். ஒண்டு ரெண்டு தமிழ் ஆக்களும் வருவீனம் அதிசயமா.. அதில ஒருத்தன் நினைவு இருக்கிது யூரோப்பில இருந்து வந்து இருந்தான். தான் யாழ்ப்பாணம் சென்.பற்றிஸ் கல்லூரியில படிச்சதாய் சொன்னான். வாற ஆக்களோட கண்டபடி அலட்டுறது தானே. சிலது அப்பிடி அலட்டேக்க இப்பிடியான விசயங்கள் எல்லாம் தெரியவரும்.

எந்தநேரம் அதிக சனம் வரும் எண்டு தெரியும். அந்தநேரமா பார்த்து முன்னுக்கே அட்வான்சா அடுப்பில ஹொட்டோக், சொசேஜ சுட்டு வைக்கிறது. ஏன் எண்டால் அடுப்பில போட்டால் அது வேகி சாப்பிடுறதுக்கு நல்ல ருசியா வாறதுக்கு மூண்டு நாலு நிமிசம் எடுக்கும். ஒரே நேரத்தில ஒரு பத்து ஹொட்டோக், சொசேஜுக்கு மேல அடுப்பில போட ஏலாது, இடம் இல்ல. அப்ப ஒரே நேரத்தில நிறைய ஆக்கள் வந்தால் சமாளிக்க ஏலாது. ஆக்கள் இதுக்கு பெரும்பாலும் நீண்ட லைனில நிக்க விரும்பமாட்டாங்கள். எண்டபடியா அவேள நான் மினக்கடுத்தினால் எனக்க்குத்தான் நட்டம். கஸ்டமர்கள மிஸ் பண்ணிவிடுவன். இதால காசு இழப்பு. எண்டபடியால் நான் சரியான குயிக்கா எல்லாம் பிளான்பண்ணிச் செய்யுறது. நிறைய வித்தால் தானே எனக்கும் நல்ல டிப்ஸ் கிடைக்கும்.

நான் வழமையா $250 - 300 டொலர் சொச்சத்துக்கு நான் வேலை செய்யேக்க ஒருநாளைக்கு (இரவு 10 மணி தொடக்கம் காலை 3.3 மணி வரை) ஹொட்டோக் சொசேஜ் விப்பன். அதில எனக்கு டிப்ஸ் ஒரு $10 - 15 டொலர் மட்டும்தான் வரும். ஏன் எண்டால் ஒரு ஹொட்டோக்கிண்ட விலை அப்ப - $2.00, ஒரு சொசேஜ் விலை - $2.50. இதுகள் விலை குறைஞ்ச சாமான் எண்டபடியால் டிப்ஸும் எனக்கு பெரிசா முன்பு மாதிரி கிடைக்காது. முதலாளியோட என்னவும் கொளுவல் எண்டால் நான் வேணுமெண்டு சிலோ பண்ணி வேலை செய்யுறது. அப்பிடியான நேரத்தில ஆக $150 - 200 டொலருக்குத்தான் விப்பன். நான் நல்ல மூட்டில எனேர்ஜியோட இருந்தால் ஒரு நாளைக்கு $ 400 அளவுக்கும் விப்பன். எவ்வளவு ஸ்பீடா வேலை செய்யறம் எண்டுறதிலதான் எங்களுக்கு எவ்வளவு காசு உழைக்கிறம் எண்டுற விசயம் முக்கியமா தங்கி இருக்கிது. எண்டாலும் சிலநாட்களில ஆக்கள் வராட்டிக்கு யாவாரம் படுத்திடும்.

கனடாவில நான் செய்த முதலாவது வேலை பற்றி - பகுதி 01 - இன்னும் இருக்கிற மிச்சம் பிறகு சொல்லிறன்..

Link to comment
Share on other sites

நான் இங்கு வந்த புதிதில் வேலை தேடி களைத்து போய் தமிழர் ஒருவரிடம் வேலைக்கு சேர்ந்தேன் [பெட்ரோல் செட்] சம்பளம் என்னவென கேட்காமல் வேலை செய்ய தொடங்கியாச்சு ரெயினிங் என 1 மாதம் சம்பளமில்லாத வேலை வேலைத்தளத்துக்கு போக 2 மணித்தியாளம் பிரயாணம் என வெட்டியாக 1 மாதம் வேலை செய்தேன் பிறகு ஒரு மாதிரி வேலைக்கு சம்பளம் போடத்தொடங்கினார் சம்பளம் என்றால் 8 டொலர் ஒரு மணித்தியாளத்துக்கு ஆனால் இங்கு இப்படியான வேலைக்கு சராசரியான சம்பளம் 16-20 டொலர் பயணத்தூரத்தை கணக்கில் எடுத்து 24 மணிநேர சிப்டாக 3 நாள் செய்திருகிறேன்

பிறகு ஒருமாதிரி கோல்ஸில் வேலை கிடைத்தது இன்னும் 2 வருடங்களில் எனது கனவு வேலைக்கு செல்லும் வரை இப்படியே குப்பை கொட்டி கொண்டு இருகிறேன் 4 நாள் இரவில வேலை 5 நாள் பகலில படிப்பு என நாயாய் அலைகிறேன் :)

Link to comment
Share on other sites

ஐயோ இவ்வளவு கஸ்டங்களா? யோசித்து பார்த்தேன் எல்லோரையும் நினைக்க பாவமாக இருக்குதுங்க.

:):)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் இப்படிக் கஸ்டப்படுகினம் என்றில்ல. குடும்ப உறுப்பினர் ஒருவர் வந்து அசைலம் அடிச்சோ என்னவோ செய்து கஸ்டப்பட்டு நிலை பெற்றதின் பின் அவரைக் காட்டி நுழையுறவை.. இப்படியான கஸ்டங்கள் படுவது குறைவு.

குறிப்பாக இங்கு வந்து கஸ்டப்பட்டு உழைத்து முன்னுக்கு வரும் வரை இளைஞர்களின் கஸ்டத்தில் 1% கூட பங்களிக்காத பெண்கள்.. ஊரில இருந்து கலியாணம் என்று கட்டி.. வருகினம் எல்லோ.. அவையில பலருக்கு.. தெரியாது கஸ்டம். அதேபோல.. தகப்பன்.. அல்லது தாய் இங்கு வந்து சேர்ந்து கஸ்டப்பட்டு முன்னேற.. அவயைக் காட்டி வாற பிள்ளைகளுக்கு கஸ்டம் தெரியாது. அவைதான் இங்க வந்து குழப்படி செய்யுறது கூட. மேற்குலக நாகரிகத்துக்க தவழ நேரமிருக்கிறதும் அவைக்குத்தான்..!

குறிப்பாக ஸ்ருடண்டா வாறவங்க பாடு மேற்கில கொஞ்சம் அதிகம் கஸ்டம் தான். வேர்க் பெமிட் எடுத்து வந்தாலும்.. வேலை நிரத்தரமில்லை என்றால் அதுவும் கஸ்டம்..! அசைலம் அடிக்கிறவைக்கு அது கிடைச்சிட்டா.. அப்புறம் பெனிபிட் எடுத்துக் கொண்டு அவை.. பெரியாக்கள் ஆகிடுவினம்..! எப்படியோ.. முதலில தனிய வாற எல்லாரிடத்திலும் ஒரு கஸ்டம் இருக்கும். ஆனால் குடும்பத்தோட.. அல்லது குடும்ப உறுப்பினரைக் காட்டி வாறவைக்கு இப்படிக் கஸ்டங்கள் இருப்பது குறைவு. அதேபோல.. வந்தவைக்கு பிறந்த பிள்ளைகளுக்கும் கஸ்டம் தெரிவதில்லை..! ஆனால் அவைக்கு கஸ்ரம் வேற வடிவில.. அவையே உருவாக்கிக்குவினம். அது வேற மாற்றர்..! :):)

Link to comment
Share on other sites

எல்லாரும் இப்படிக் கஸ்டப்படுகினம் என்றில்ல. குடும்ப உறுப்பினர் ஒருவர் வந்து அசைலம் அடிச்சோ என்னவோ செய்து கஸ்டப்பட்டு நிலை பெற்றதின் பின் அவரைக் காட்டி நுழையுறவை.. இப்படியான கஸ்டங்கள் படுவது குறைவு.

குறிப்பாக இங்கு வந்து கஸ்டப்பட்டு உழைத்து முன்னுக்கு வரும் வரை இளைஞர்களின் கஸ்டத்தில் 1% கூட பங்களிக்காத பெண்கள்.. ஊரில இருந்து கலியாணம் என்று கட்டி.. வருகினம் எல்லோ.. அவையில பலருக்கு.. தெரியாது கஸ்டம். அதேபோல.. தகப்பன்.. அல்லது தாய் இங்கு வந்து சேர்ந்து கஸ்டப்பட்டு முன்னேற.. அவயைக் காட்டி வாற பிள்ளைகளுக்கு கஸ்டம் தெரியாது. அவைதான் இங்க வந்து குழப்படி செய்யுறது கூட. மேற்குலக நாகரிகத்துக்க தவழ நேரமிருக்கிறதும் அவைக்குத்தான்..!

குறிப்பாக ஸ்ருடண்டா வாறவங்க பாடு மேற்கில கொஞ்சம் அதிகம் கஸ்டம் தான். வேர்க் பெமிட் எடுத்து வந்தாலும்.. வேலை நிரத்தரமில்லை என்றால் அதுவும் கஸ்டம்..! அசைலம் அடிக்கிறவைக்கு அது கிடைச்சிட்டா.. அப்புறம் பெனிபிட் எடுத்துக் கொண்டு அவை.. பெரியாக்கள் ஆகிடுவினம்..! எப்படியோ.. முதலில தனிய வாற எல்லாரிடத்திலும் ஒரு கஸ்டம் இருக்கும். ஆனால் குடும்பத்தோட.. அல்லது குடும்ப உறுப்பினரைக் காட்டி வாறவைக்கு இப்படிக் கஸ்டங்கள் இருப்பது குறைவு. அதேபோல.. வந்தவைக்கு பிறந்த பிள்ளைகளுக்கும் கஸ்டம் தெரிவதில்லை..! ஆனால் அவைக்கு கஸ்ரம் வேற வடிவில.. அவையே உருவாக்கிக்குவினம். அது வேற மாற்றர்..! :):)

அத்தனையும் உண்மை...

என்னோட வகுப்பில் ஒரு பையன் எப்பவும் அப்பிள் சாப்பிடுவார்..

நான் நினைச்சன் அவருக்கு அது பிடிக்கும் என

கொஞ்ச நாளில் தான் தெரிந்தது, அது தான் அவரோட உணவு என்று

தெரிந்த போது எனக்கு நிஜமாவே நெஞ்சு வலித்தது

அதன் பின்னர் நானே உணவு கொண்டு செல்வேன்

அவருக்கு மட்டும் குடுத்தால். அது அவருக்கு கஸ்டம் என்பதால்

இன்னும் ஒருவருக்கும் சேர்த்து எடுத்து செல்வேன்..

இன்று பெரிய வேலையில் இருக்கிறார்..ஆனால் அடிக்கடி என்னை பார்க்க வருவார்..வந்தால் சமைத்து தா என கேட்டு வாங்கி உண்பார்..அதில் தான் அன்பு இருக்கு என சொல்வார்..

இப்போ ஒரு சகோதரனாகிவிட்ட அவருக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளது...

Link to comment
Share on other sites

படித்து கொண்டு வேலை செய்வது கஷ்டம்தான்...! ஆனால் அதில் கிடைக்கும் அனுபவங்கள் உங்கள் எதிர்கால கனவு வேலைக்கு, வாழ்க்கைக்கு பதப்படுத்தும்..!

Link to comment
Share on other sites

என்னோட வகுப்பில் ஒரு பையன் எப்பவும் அப்பிள் சாப்பிடுவார்..

நான் நினைச்சன் அவருக்கு அது பிடிக்கும் என

கொஞ்ச நாளில் தான் தெரிந்தது, அது தான் அவரோட உணவு என்று

தெரிந்த போது எனக்கு நிஜமாவே நெஞ்சு வலித்தது

ஆப்பிள் சாப்பிட்டுக்கொண்டு ஆஸ்திரேலியாவில் படிப்பதெல்லாம் வறுமையின் அடையாளமா?! :D

அரைவயிற்று கஞ்சிக்கே வழியில்லாமல் படித்து மேதையானவர்கள் பலரையும் இந்த உலகம் கண்டிருக்கிறது!

எமக்காவது உழைப்பதற்கு வலுவான உடல் இருக்கிறது, ஆனால் வலுவிழந்த உடலுடன் மரணம் எப்போது

வேண்டுமானாலும் வந்து விடலாம் என்ற உடல் நிலையுடன், படித்து பட்டம் பெற்று இன்று உலகம் போற்றும் மாபெரும் விஞ்ஞானியாக வலம் வந்து கொண்டிருக்கும் STEPHEN HAWKING போன்றவர்கள் எத்தனை பெரிய சாதனையாளர்கள். இவர்களின் சாதனைகளை படிக்கும் போது என்னை ஒரு ஆறு அங்குல மனிதன் போல் உணர்ந்திருக்கிறேன். நல்ல உடல் வலுவும் கல்வியும் தந்த இறைவனுக்கு மனதார நன்றியும் சொல்லி இருக்கின்றேன்.

உழைத்து ஓடாகி சாவதை தவிர வேறுவழி இல்லை என்று அல்லல் படும் கோடிக்கணக்கானவர்கள் வாழும் உலகத்தில் கஷ்டப்பட்டு உழைத்தால் சாதித்து விடலாம் என்னும் எங்கள் நிலை, எமது அதிர்ஷ்டம் என்றே சொல்வேன்!

Professor Hawking

Professor Hawking leaving Cambridge Union Chamber

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றிவேல், STEPHEN HAWKING அவர்களை பல தடவைகள் நினைத்துப் பார்த்து என்னைத் தேற்ற யாருமே அருகில் இல்லாத பொழுதுகளில் நானே என்னைத் தேற்றி இருக்கிறேன். அவன் அறிவியல் உலகுக்கு மட்டுமல்ல.. மானிட உலகுக்கே ஒரு நல்ல வழிகாட்டி என்று கூறலாம்..!

Link to comment
Share on other sites

வெற்றிவேல், STEPHEN HAWKING அவர்களை பல தடவைகள் நினைத்துப் பார்த்து என்னைத் தேற்ற யாருமே அருகில் இல்லாத பொழுதுகளில் நானே என்னைத் தேற்றி இருக்கிறேன். அவன் அறிவியல் உலகுக்கு மட்டுமல்ல.. மானிட உலகுக்கே ஒரு நல்ல வழிகாட்டி என்று கூறலாம்..! :D

உங்களை போலத்தான்! என்னையும் பல தடவைகள் தேற்றிய அருமருந்து அவர். வாழ்வில் எப்போதாவது கொஞ்சம் நம்பிக்கை குறைவது போல் தோன்றும் போதெல்லாம் நான் STEPHEN HAWKING இன் வீடியோக்களை பார்ப்பதுண்டு. வாழ்வை பற்றிய நம்பிக்கை உடனே வந்துவிடும்!!!

Link to comment
Share on other sites

எல்லாரிண்ட கருத்துக்களுக்கும் நன்றி! நான் எண்ட முதலாவது வேலபற்றி சொல்லி முடிக்கிறதே பெரும்பாடா இருக்கிது. அது சரியான நீளமா வரத்துவங்கீட்டிது. எண்டபடியால் இந்தக் கருத்துடன் பகுதி 01 ஐ நிறைவு செய்யுறன். நிலமையப் பார்த்து பகுதி 02 ஐ எழுதுறன். இவ்வளவு நேரமும் நான் சம்பவங்கள சொன்னது சீகுவன்ஸா - வரிசைக்கிரமத்தில. இனி... இதுல எதேச்சையா வாற நினைவுகளை எழுந்தமானமா எழுதுறன்.

வெளிநாடுகளில நாங்கள் எப்பிடி வேலை செய்யுறம் எண்டு நீங்களும் எல்லாரும் கொஞ்சம் தெரிஞ்சு கொள்ளுங்கோ!

பகுதி 01 இறுதி

* அங்க வேலை செய்யேக்க நாந்தான் குப்பையக் கொண்டுபோய் கொட்டிப்போட்டு வரவேணும். ஏன் எண்டால் நான் தானே புதுஆள் அங்க. குப்பை கொட்டுற வேலய செய்து முடிக்க ஆகக்குறைஞ்சது எப்பிடியும் ஒரு பதினஞ்சு இருவது நிமிசமாவது எடுக்கும். ஏன் எண்டால் குப்பை கொட்டுற இடம் சுமார் ஐம்பது மீற்றர் தொலைவில இருக்கிது. நான் ஒவ்வொரு குப்பைத் தொட்டியிலயும் இருக்கிற குப்பை பாக்குகள வெளியில எடுத்துப்போட்டு அதற்கு பதிலா புதிய கார்பேஜ் பாக்கை போடவேணும். பிறகு நிரம்பின குப்பை பைய இழுத்துக்கொண்டு போகவேணும். ஒவ்வொரு குப்பைப் பையும் சரியான பாரமா இருக்கும். மற்றது இது ஊத்தை தானே? எண்டபடியால் குழந்தைப்பிள்ளைகள தூக்குறமாதிரி தூக்க ஏலாது. தெருவில அத இழுத்துக்கொண்டு போறது. சரியான களைப்பா இருக்கும் இதச்செய்யேக்க.

* கடை முன்பக்கம், பின்பக்கமும் கூட்டுற வேலைகள் இருக்கும். கூட்டேக்க சிலது பத்து டொலர், ரெண்டு டொலர், ஒரு டொலர் எண்டு காசுகள் நிலத்தில சிலது விழுந்து கிடக்கும். இதுவும் ஒருவிதமான டிப்ஸ்தான் எனக்கு. வெளியில வைக்கிற விளம்பர பலகை சரியான பெரிசு. சரியான பாரம். அத திருப்பி உள்ளுக்க வைக்கவேணும். இதுக்கு ரெண்டுபேர் வேணும். பிறகு கடைய கூட்டி மொப் பண்ணுற வேலையும் எல்லாம் செய்யுறது. கதிரைகள மேசைக்கு மேல அடுக்கிப்போட்டு மொப்பண்ணுறது. கடைசியா வோஸ்ரூம் - அதுதான் நம்ம கக்கூஸ் கிளீன் பண்ணுற வேல..

* வழமையா கடைகளில கஸ்டமர்ஸ் மட்டும்தான் கக்கூஸ் பாவிக்கலாம். சும்மா வெளி ஆக்கள் அவசரம் எண்டால் வோஸ்ரூம் பாவிக்க எங்கட கடையில விட மாட்டாங்கள். சனங்கள், குறிப்பா பெண்டுகள் நான் பின்பக்கம் நிக்கேக்க என்னட்ட வந்து கெஞ்சி பிளீஸ் பிளீஸ் எண்டு சொல்லி கூத்தாடுங்கள் தங்களுக்கு நம்பர் 01 அவசரமா வருகிது.. நம்பர் 02 சரியான அவசரமா வருகிது.. உள்ளுக்க போக அனுமதி தரச்சொல்லி! நான் விடமாட்டன். நான் விட்டால் பிறகு என்னத்தான் உள்ளுக்க நிக்கிற சமையல் காரர் கண்டபடி பேசுவாங்கள். ஏன் எண்டால் பின்பக்கத்தால் வெளி ஆக்கள் கடையுக்க போறதுக்கு அனுமதி இல்லை.

* வோஸ்ரூம பார்த்தால் சண்டை நடந்துமுடிஞ்ச முகமாலை போர்க்களம் மாதிரி எல்லாம் நாறிப்போய் கிடக்கும். அந்தக் கருமத்த எப்பிடி இதுல எழுதுறது எண்டு தெரிய இல்ல. மூக்கப்பொத்திக்கொண்டு முதலில மருந்துகள தெளிச்சுப்போட்டு கையில கிளவ், முகத்துக்கு துண்டு எல்லாம் கட்டிக்கொண்டு கடைசியில உந்த செஞ்சிலுவைச் சங்க ஆக்கள் இறந்த ஆமிக்காரரிண்ட உடலங்கள பொறுப்பு ஏற்கிறது மாதிரி நான் கக்கூசுக்க களம் ஆடுறது. இதுதான் கடையில நான் செய்யுற இறுதிபோர்.

* கக்கூசும் எல்லாம் கிளீன் பண்ணிப்போட்டு எண்ட கை, முகம் எல்லாத்தையும் வடிவா நாலஞ்சு தரம் மருந்துகள் போட்டு கழுவிப்போட்டு முன்பக்கத்தில கடையுக்க நிக்கிற முதலாளியிட்ட போனால் அவன் கணக்குப்பார்த்து கையில காச தருவான் ரெண்டு கிழமைக்கு ஒரு தரம். எனக்கு ரெண்டு கிழமைக்கு ஒருக்கால் $ 550 - $ 750 அளவு கிடைக்கும். நான் நிறைய நேரம் வேலை செய்து இருந்தால் நிரம்ப காசு. இல்லாட்டி கொஞ்ச காசு கிடைக்கும். கடை முடிய முதலாளி வில்படாத சாப்பாடுகள வேணும் எண்டால் எடுத்துக்கொண்டு போ எண்டு சொல்லுவான். சிலது பசி எண்டால் ஏதும் எடுத்துக்கொண்டு போறது. பிறகு சுமார் 100 மீற்றர் தொலைவில ஸ் ரீட் காருக்காக (தமிழில இதுக்கு என்ன பெயர் எண்டு தெரிய இல்ல. தெருவில போற புகையிரதம் எண்டு சொல்லலாமோ?) காத்து நிக்கிறது. ஸ் ரீட் கார் மட்டும் 24 மணித்தியாலமும் ஓடும். எண்டபடியால் நான் இதில தான் அப்ப போய் வாறது.

* ஒருநாள் என்ன நடந்திச்சிது எண்டால் நான் கடையுக்க இருக்கிற பெரிய நீளமான இரும்பு மேசைகள மருந்துபோட்டு துடைச்சுக்கொண்டு இருக்கேக்க பக்கத்தில நிண்ட சைனீஸ் சமையல்காரன் எனக்கு ஏதோ சிங் சங்க் சுங்க் எண்டு சைனீசில பேசிப்போட்டு கடைசியில நிண்ட சுப்பவைசர கூப்பிட்டு என்னக்காட்டி கண்டபடி சைனீசில திட்டினான். எனக்கு சரியான கோவம் வந்திட்டிது. நானும் எனது பங்குக்கு ப... எண்ட ஆங்கில தூசணத்தால ஆட்லறி தாக்குதல் நடத்திப்போட்டு சுப்பர்வைசருக்கு சொன்னன் போங்கடி.. நீங்களும் உங்கட வேலையும்.. நாய்களே.. நான் இனி வரமாட்டன். வீட்ட போறன். ஐ குயிட் த வேர்க் எண்டு சொல்லிப்போட்டு நான் வீட்ட போக வெளிக்கிட்டன். அப்ப அவள் கேட்டாள் உனக்கு சம்பளம் வேணாமோ எண்டு. நான் அத நீயே வச்சுக்கொள்ளு.. இப்பிடியான லூசங்களோட என்னால வேலை செய்ய ஏலாது எண்டு பேசிப்போட்டு வீட்டபோட்டன்.

* அவேயுக்க நான் இல்லாதது பெரிய திண்டாட்டமா போச்சிது. வேலை செய்யுறதுக்கு ஆள் இல்ல. அதுவும் என்ன மாதிரி வஞ்சகம் இல்லாமல் உடம்ப முறிச்சு வேலை செய்ய யாராவது கிடைக்க மாட்டாங்கள் தானே? எண்டபடியால் அடுத்தநாள்... அதுக்கு அடுத்தநாள் எண்டு வீட்டுக்கு கோல் எடுத்துக்கொண்டு இருந்திச்சீனம். சரி எண்டு பிறகு ரெண்டு மூண்டு நாளையால திரும்பவும் அங்க வேலைக்கு போனது.

* சைனீஸ் முதலாளி நல்லா ஜொள்ளு விடுவான். அவன் கடைசியா அப்ப நான் வேலை செய்யேக்க ஒரு நல்ல லுக்கான வடிவான வெள்ளைக்காரி ஒருத்திய கடையுக்கு சுப்பர்வைசரா போட்டு இருந்தான். அவவும் அந்தமாதிரி உடுப்புக்கள், வாசனைகள் எல்லாம் போட்டுக்கொண்டு வந்து அழகு காட்டிகொண்டு இருப்பாள். எனக்கு அவளப்பார்த்தால் சரியான கோவம் வரும். ஏன் எண்டால் அவவுக்கு நினைப்பு அவவிண்ட கு** கழுவத்தான் நான் அங்க வேலை செய்யறன் எண்டு. நான் ஒரே அவளோட சண்டை. அவளுக்கும் என்னக் கண்டால் பிடிக்காது. நான் ஒருக்கால் என்ன செய்தன் எண்டால் இவளப்பற்றி என்ன வேலைக்கு இண்டர்வியூ செய்த மனுசிக்கு போனுக்கால வத்தி வச்சு விட்டன். அவளுக்கும் அந்த கடையில பங்கு இருக்கிது. இந்த விசயம் எப்பிடியோ அந்த வெள்ளக்கார ஆட்டக்காரிக்கு தெரிஞ்சு போச்சிது. அதுக்கு பிறகு அவள் என்னோட ஆகவும் முரண்டுபிடிக்க துவங்கீட்டாள். இந்த தமிழ் சினிமாப் படங்களில வரும்தானே? அதுமாதிரி.. நான் மட்டும் என்ன இளிச்சவாயனே? அவளுக்கு விட்டுக்குடுக்கிறது இல்ல. அவள் ஏதாவது சொன்னாள் காதில போடுறதும் இல்ல. எனக்கு விருப்பமான மாதிரி வேலை செய்யுறது.

* வேலை முடிஞ்சாப்பிறகு முதலாளி அந்த வெள்ளக்காரிய தண்ட சொகுசு வாகனத்தில ஏத்திக்கொண்டு ஊர்வலம் போவான். அவ வாகனத்துக்க இருந்து வெக்கப்பட்டுக்கொண்டு "I don't know where I am going.." எண்டு செல்லமா சொல்லுவா. இவள் ஒரே ஒரு விசயத்தில மட்டும் நல்லவள். என்னதான் என்னோட சண்டை பிடிச்சாலும்... நான் வெளியில குளிருக்க நிண்டு சாப்பாடு விக்கேக்க... இடக்கிடை வந்து "ஆர் யூ ஓகே?" எண்டு கேப்பாள். "உண்ட கையத் தா நான் அத எண்ட கையால தேய்ச்சு சூடு ஏத்திவிடுறன்" எண்டும் சொல்லுவாள். நான் சிரிச்சுப்போட்டு பேசாமல் நிக்கிறது. கடையுக்க நிண்டு வேலை செய்யுற வேற ஒருநாய்களும் என்ன வெளியில வந்து எட்டியும் பாக்காதுகள். சிலது ஏதாவது முடிஞ்சால், சாமான் ஏதாவது தேவைப்பட்டால் நான் வெளியில நிக்கிற சனத்திட்ட சொல்லிவிடுறது உள்ளுக்க போய் ஒருக்கால் இந்த மூதேவிகளை வரச்சொல்லி. அந்தநேரத்தில் எனக்கு சரியான கோவம் வரும். சத்தம் போட்டு கூப்பிட்டு, பிறகு சைட்டில இருக்கிற கண்ணாடிக்கால தட்டி கடைசியில.. வந்த கஸ்டமரிட்ட உதவி கேட்க வேண்டிய நிலை.

* வேலை செய்யேக்க நிறைய ரவுடிகள் எல்லாம் வருவாங்கள். ஒருத்தன் என்ன செய்தான் எண்டால் எனக்கு கத்தியக்காட்டி இப்ப எனக்கு ஹொட் டோக் ஒண்டு பிரீயா தரப்போறியா இல்லையா எண்டு கேட்டான். எனக்கு குளிர் வேற... வேலையில எரிச்சல் வேற... சரியான கோவம் வந்திச்சிது. பொறடா மவனே வாறன் எண்டு நானும் பெரிய கரண்டி கத்தி எல்லாம் எடுத்துக்கொண்டு அவேசமா அவனநோக்கிப் போக மச்சான் திரும்பிப் பார்க்காமல் ஒரே ஓட்டமா ஓடீட்டான். அந்த நேரத்தில நானும் இவங்களப்பார்த்து கொஞ்சம் முரடன் மாதிரித்தான் இருந்தது. யாராவது சண்டைக்கு வந்தால் விட்டுக்க்குடுக்கிறது இல்ல.

* எங்கட கடையுக்க அடிக்கடி பெரிய அடிபாடுகள் எல்லாம் வரும் கடையுக்கு வாற கஸ்டமர்களுக்க. பெரும்பாலும் யாராவது போய்பிரண்ட், கேர்ள்பிரண்ட் இல்லாட்டி.. பொறுக்கிகள் இதுகளுக்க சண்டை வரும். பிறகு என்ன? போத்தலுகள், முள்ளுக்கரண்டிகள் எண்டு கையில என்ன அகப்படுதோ அதால எறிபட்டு அடிபடுங்கள். நாங்கள் பொலிசுக்கு 911 ஐ அடிக்கிறது. பொலிஸ் உடன வரமாட்டான். அவங்களுக்கும் இப்பிடி ஒவ்வொரு நாளும் பிரச்சனைகள் பார்த்து அலுத்து இருக்கும் எண்டு நினைக்கிறன். இதாலதான் பொலிஸ் உடன ரென்ஸ்போண்ஸ் பண்ணுறது குறைவு. எல்லாம் அடிபாடு முடிஞ்சாப்பிறகுதான் முப்பது நிமிசம் கழிச்சு பொலிஸ் சும்மா சம்பிரதாயத்துக்கு வந்து பார்த்துப்போட்டு போகும் ( ஆனால் இந்த விசயங்களில மாத்திரம் தான் இப்பிடி. டொரண்டோ பொலிஸ் எண்டால் சும்மா நினைக்ககூடாது. ஏதாவது சூடுபாடு, கள்ளர் எண்டால் நாலு பக்கத்தால பொலிஸ் காருகள் சீறிக்கொண்டு வந்துடும்.. குயிக் ரெஸ்போன்ஸ்!).

* தெருவில கடையுக்க எல்லாம் சனம் ஒரே தூசணம்தான் கதைக்குங்கள். அத ஆரம்பத்தில கேட்க எனக்கும் கஸ்டமாத்தான் இருந்திச்சிது. கடைசியில எனக்கும் வேலைகூடி பிரச்சனைகள் கூடக்கூட நான் அதுகள ரசிக்கப் பழகீட்டன். பெடி, பெண்டுகளுக்கு இடையில சண்டை நடக்கேக்க ஒரே முஸ்பாத்தியா இருக்கும். அவேள் கதைக்கிற தூசணங்கள்... கடவுளே... அத என்ன எண்டு சொல்லிறது. இஞ்ச கடையில வேலை செய்யத் துவங்கினாப்பிறகுதான் நான் அதிக அளவில ஆங்கில ரப் பாடல்கள் கேட்கிறது. சரியா நான் கஸ்டப்படேக்க அந்த ஆங்கில ரப் பாடல்களை கேட்க கொஞ்சம் ஆறுதலா இருக்கும். ஒவ்வொரு வரியிலையும் தூசணமா இருக்கும். எண்டாலும் அந்தநேரம் அப்படியான பாடல்கள்தான் எனக்கு மருந்துமாதிரி இருந்து தன்னம்பிக்கையை தந்து என்னை உயர்த்திவிட்டது. இப்ப நான் அப்பிடி பாடல்களை கேட்பது சரியான குறைவு.

* நான் அங்க வேலை செய்யேக்க நல்ல படிச்ச பண்பான சனங்களையும் சந்திச்சன். காவாளிகளையும் சந்திச்சன். ஹொலிவூட் நடிக நடிகைகள் மாதிரி மிகவும் அழகான பேர்சனாலிட்டியான... செல்வந்தமான ஆக்கள் எல்லாம் வருவாங்கள். ஒவ்வொருத்தரையும் பார்க்க ஒவ்வொருவிதமா இருக்கும். மற்றது கடை முழுக்கவும் ஒரே இரைச்சல். கடையுக்கையும் பாட்டு மியூசிக் போகும். அக்கம் பக்கம் எல்லாம் ஒரே மியூசிக்கா இருக்கும். இதுதவிர காரில போறவன் வாறவன் எல்லாம் கும் கும் எண்டு எல்லாம் அதிரும்படியா மியூசிக்க சத்தமா போடுவாங்கள். இதனால ஒருநிமிசம் அமைதியா இருக்கவோ இல்லாட்டிக்கு அமைதியா எதையாவது சிந்திக்கவோ ஏலாது. செயற்கையான ஒரு கற்பனை உலகத்தில பறந்துகொண்டு இருப்பது தவிர வேற வழி இல்ல.

* நான் கடைசியில இந்த ஹொட்டோக், சொசேஜ் விக்கிற வேலை சரியான கஸ்டமா இருந்தபடியாலையும், மற்றது டன்வுண்ட் டவுனில இருந்துபோட்டு பிறகு கொஞ்சம் தூரமா மிசிசாகா எண்டுற இடத்துக்கு வீடு மாறினதாலையும் இந்த வேலைய விட்டுட்டன். முக்கியமா குளிருக்க நிண்டு தெருவில என்னால கஸ்டப்பட முடியவில்ல. இதுதான் நான் இந்த வேலைய விட முக்கிய காரணம்.

* இந்த வேலை மூலம் நான் வாழ்க்கையில எவ்வளவோ விசயங்கள கற்றுக்கொண்டன். உலகம் இந்த வேலையச் செய்தாப்பிறகு எனக்கு கொஞ்சம் அல்ல நிறையவே வித்தியாசமா தெரிஞ்சிது. ஒரு இடத்தில குந்தி இருந்து படிச்சுப்போட்டு பிறகு இன்னொரு இடத்தில மேசையில குந்தி இருந்து உத்தரவு போட்டு வேலை செய்யுறது இல்ல வாழ்க்கை எண்டு விளங்கிச்சிது. எனது வாழ்க்கை பற்றி நாந்தான் அக்கறைப்படவேணும். இன்னொருத்தன் எனது வாழ்க்கை பற்றி அக்கறைப்படமாட்டான் எண்டும் விளங்கிச்சிது. உலகத்தில ஒவ்வொருத்தனும் எப்பிடி எப்பிடி எல்லாம் கஸ்டப்பட்டு உழைக்கிறாங்கள், கஸ்டப்பட்டு சீவிக்கிறாங்கள் எண்டு உணரக்கூடியதா இருந்திச்சிது. இந்த வேல செய்தாப்பிறகுதான் எனக்கு வேலையில உயர்ந்தது, தாழ்ந்தது எண்டும் ஒண்டும் இல்ல. எல்லாம் வயிற்றுப்பாட்டுக்கு செய்கின்ற வேலை எண்டு விளங்கிச்சிது. இந்தவகையில ஏராளம் துன்பங்களை அடைந்து இருந்தாலும் கடனாவில நான் செய்த இந்த முதலாவது வேலைய நான் வாழ்க்கையில மறக்க ஏலாது.

எழுத்துப்பிழை இருந்தால் திருத்தி வாசியுங்கோ. கனடாவில நான் செய்த அடுத்த வேலை பற்றி பிறகு சொல்லிறன்..

Link to comment
Share on other sites

* வேலை முடிஞ்சாப்பிறகு முதலாளி அந்த வெள்ளக்காரிய தண்ட சொகுசு வாகனத்தில ஏத்திக்கொண்டு ஊர்வலம் போவான். அவ வாகனத்துக்க இருந்து வெக்கப்பட்டுக்கொண்டு "I don't know where I am going.." எண்டு செல்லமா சொல்லுவா. இவள் ஒரே ஒரு விசயத்தில மட்டும் நல்லவள். என்னதான் என்னோட சண்டை பிடிச்சாலும்... நான் வெளியில குளிருக்க நிண்டு சாப்பாடு விக்கேக்க... இடக்கிடை வந்து "ஆர் யூ ஓகே?" எண்டு கேப்பாள். "உண்ட கையத் தா நான் அத எண்ட கையால தேய்ச்சு சூடு ஏத்திவிடுறன்" எண்டும் சொல்லுவாள். நான் சிரிச்சுப்போட்டு பேசாமல் நிக்கிறது.

கைய அவளிட்ட நீட்டியிருந்தால் அனேகமா சைனீஸ் முதலாளி மாப்பிளையை அப்பவே துரத்தி விட்டிருப்பான்.. :lol:

Link to comment
Share on other sites

எனக்கு இன்னொருவருக்கு அடிமையாய் கைகட்டி வேலை செய்வது அறவே பிடிக்காது இடையில் ஒரு 6 மாதம் ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வேலை செய்தேன் வெள்ளை கிழவன் ஒருவந்தான் மனேஜர் முதலாளியும் வெள்ளைதான் வகுப்பறை பயிற்சி என 30 மணிநேரம் வச்சு அறுத்தவங்கள் சேர்டிபிகட் தரவில்லை நான் வேலை செய்யும் போது டீசல் முடிந்துவிட்டது காலையில் கனக்க சீடல் தேவை ஏற்படும் டீசல் ஓடர் பண்னுவது மனேஜரின் வேலை அவன் செய்யவில்லை நான் டீசல் முடிந்துவிட்டது என நாட்குறிப்பில் எழுதி போட்டு வந்திட்டன் அண்டைக்கு எண்டு முதலாளி மனேஜரை விட நேரத்துக்கு வந்திட்டான் நாட்குறிப்பை பார்த்துவிட்டு மனேஜருடன் சண்டை அதற்கு பிறகு மனேஜர் என்னிடம் அரசியல் காட்ட தொடங்கீட்டான் சிப்டை குறைகிறது அது இது என அது மட்டுமல்ல தோட்டவேலை செய்யனுமாம் வரட்டுமாம் என கரைச்சல் வேற

எனது பயிற்சி நெறிக்கும் சேர்டிபிகட் தரமுடியாது என சொன்னான் நான் உடனே சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிவரும் என மிரட்ட அடுத்த நாள் காலையில சேர்டிபிகட்டினை தந்தான் அவனுக்கு முன்னுக்கே சேர்டிபிகட்டை நாலாக கிழித்து குப்பைதொட்டியில போட்டேன் சரியான அவமானமாய் போட்டுது அவனுக்கு ஆனாலும் என்னுடன் சண்டை பிடிக்க முடியவில்லை ஏன் எனின் வேலை செய்பவர்களில் 3 பேர் விடுமுறை நானும் இன்னும் இருவருமே இருந்தோம் இப்படி ஒருமாதம் கழிந்தது எல்லோரும் விடுமுறை கழிந்து வேலைக்கு வந்திட்டாங்கள் மீண்டும் என்னிடம், அரசியல் கிட்டத்தட்ட 2 கிழமை வேலை தரவில்லை அந்த காலப்பகுதியில் எனக்கு நான் செய்யிற வேலை கிடைத்திட்டுது.ஒரு நாள் இரவு 10 மணிக்கு போனடித்து இரவு 12 மணிக்கு வேலை செய்பவனுக்கு வருத்தமாம் என்னை வேலை செய்ய முடியுமா என கேட்டான் மனேஜர் ஆம் என சொல்லி போட்டு போனை நிப்பாட்டிபோட்டு படுத்திட்டன் அண்டைக்கு என்னை பெசிபேசி மனேஜரே இரவு வேலை செய்தவன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் புத்தகங்கள் சொல்லித் தராததை ஒரு அனுபவம் துல்லியமாகச் சொல்லித் தந்து விடும். பிறகு சந்திக்கிறேன். :lol::)

Link to comment
Share on other sites

ஆயிரம் புத்தகங்கள் சொல்லித் தராததை ஒரு அனுபவம் துல்லியமாகச் சொல்லித் தந்து விடும். பிறகு சந்திக்கிறேன். :lol::lol:

உண்மைதான் பெற்றோரின் பாதுகாப்பில் இருக்கும் போது நாம் வாழ்ந்த வாழ்கைக்கும் நிறைய வித்தியாசம் உண்டு

ஊதாரித்தனமாக காசு செலவளிக்கும் போதும் அப்பரின் பேர்சில் இருந்து காசு சுடுவதிலும் இவை எல்லாம் குடும்பத்தின் பட்ஜெட்டை எப்படி இடித்திருக்கும் என விளங்கியது

பல மனிதர்கள் அவர்களின் உண்மை முகம்களை அவர்களின் குனத்தினை பார்த்து கண்டுபிடிக்க முடிகின்றது.இந்த அனுபவங்கள்[கஸ்டங்கள் என சொல்ல முடியாதவை இவை] எம்மை இன்னும் வழப்படுத்தும் வாழ்வினை வெற்றிகரமாக அமைக்க பேருதவியாகவே இருக்கும்

Link to comment
Share on other sites

உழைக்க நினைப்பவனிற்கும் உள்ளத்தால் நிறைந்தவனிற்கும் எந்தவேலையும் கடினம் இல்லை. என்னைப்பொறுத்தவரை எதுவாகினும் மனம் நிறைவாக இருந்தால் போதும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.