Jump to content

சொர்க்கம் நரகம் உள்ளதா?


Recommended Posts

சொர்க்கம் நரகம் உள்ளதா?

அன்பானவர்களே!

இன்றைய நாட்களில் உடனே பதில் சொல்ல முடியாத கேள்விகளில் இதுவும் ஒன்று என்று கூறலாம். கடவுள் உண்டா இல்லையா என்று ஆதார பூர்வமாக நிரூபிக்க முடியாதது போல, நரகம் சொர்க்கத்தை பார்த்தவர்கள் கூட இதுதான் நரகம் என்று அடுத்தவருக்கு காட்ட முடியாத ஒரு இடமே நரகம், பாதளம் போன்றவை. எனவே இதை பற்றி சற்று ஆராய்வது நல்லது என்று நினைக்கிறேன்.

இன்று ஒருவரிடம் சொர்க்கம் நரகம் உள்ளதா என்று கேட்டால் கீழ்க்கண்ட பதில்களில் ஒன்றை தான் கூற முடியும்

சொர்க்கம் நரகம் இல்லை.

சொர்க்கம் இருக்கா இல்லையா என்று தெரியாது.

சொர்க்கம் நரகம் உண்டு

1.சொர்க்கம் நரகம் இல்லை;

இன்று உலகில் அனேகர் சொர்க்கம் நரகம் என்று ஒன்று கிடையாது என்றும், இந்த உலகம் தான் எல்லாமே என்றும் வாதிடுகின்றனர்.

நம் கண்ணுக்கு தெரியவில்லை என்ற காரணத்தினால் எந்த ஒன்றையும் இல்லை என்று சொல்வது சரியான பதில் அல்ல. நம்முடைய உயிரை கூட நமது கண்ணால் பார்க்க முடியாது அனால் உயிர் இல்லை என்றால் மனிதன் ஒரு பிணமே! சுமார் 1000 வருடத்துக்கு முன்பு மின்சாரம் ஒன்று இருக்கிறதா என்று கேட்டால் யாருக்கும் தெரியாது. அப்படி எதுவும் இருக்க வாய்ப்பு இல்லை என்று தான் சொல்வார்கள் ஆனால் இன்று நாம் அதன் மேம்பட்ட பயனை அனுபவித்து வருகிறோம். அது போல் எத்தனையோ வருடங்களாக சூரியன் தான் பூமியை சுற்றுகிறது என்று நினைத்தார்கள் ஆனால் உண்மை வேறாக இருந்துள்ளது.

இன்று இல்லை என்று இருப்பது நாளை உண்மை என்று நிரூபிக்கப்படாலம், ஒரு பொருளை அல்லது இடத்தை உண்டு இல்லை என்று தீர்மானிக்க நமது கண் ஒரு அளவுகோல் அல்ல. எனவே சொர்க்கம் நரகம் இல்லை என்று சொல்வது தவறான வாதம் "அது இருக்கிறதா இல்லையா தெரியாது என்பதே சரியான பதில்.

2. சொர்க்கம் நரகம் இருக்கிறதா என்று தெரியாது.

எதாவது ஒரு முக்கியமான காரியம் நமக்கு தெரியவில்லை என்றால் நாம் அதை பற்றி தெரிந்தவர்களிடம் விசாரித்து தெரிந்து கொள்கிறோம் அல்லது அது சம்பந்தமான புத்தகங்கள், செய்திகள் இவற்றை கேட்டு தெரிந்து கொள்கிறோம்.

பணம் சம்பாதிப்பதில் இருந்து பக்கத்து தெருவுக்கு போவது வரை எல்லாவற்றையும் பிறரிடம் கேட்டு தெரிந்துகொள்ளும் நாம் இந்து மதத்தில் இருந்து கிறிஸ்த்தவம், இஸ்லாம் என்று எல்லா மதங்களும் நரகம் என்று ஒரு இடம் இருக்கிறது என்று திட்டவட்டமாக சொல்லும் அந்த இடத்தை பற்றி ஏன் கேட்டு தெரிந்துகொள்ள விரும்புவதில்லை என்பது பெரிய புதிராக உள்ளது. தெரிந்து கொண்டால் நாம் நினைத்தபடி வாழ முடியாது என்ற பயமா அல்லது பொய் சொல்லக்கூடாது என்று திட்டவட்டமாக கட்டளையிடும் மதங்களே இப்படி சொர்க்கம் நரகம் உண்டு என்று பொய் சொல்கிறது என்று நினைக்கிறீர்களா?

நெருப்பில்லாமல் புகையாது என்பார்கள் அதுபோல் அப்படி ஒரு இடம் இல்லாமல் அதை பற்றி எல்லா மதமும் குறிப்பிட வாய்ப்பு இல்லை. சொர்க்கம் நரகத்தை பார்த்தவர்கள் எழுதிய அனேக புத்தகங்கள் உலகில் உண்டு "நரகத்தை பற்றிய ஒரு தெய்வீக வெளிப்பாடு"

"நான் கண்ட நரகமும் பாதாளமும்" " பரலோக வாசலும் நரக அக்கினியும்" இது போல் புத்தகம் எழுதியவர்களை தவிர இன்னும் எத்தனையோபேர் பேர் அந்த இடங்களை பார்த்துள்ளனர் நரகத்தின் மிக மிக கொடிய தன்மையை விளக்கியுள்ளனர் ஏன் நான் கூட நரகம் பாதளம் இவற்றை நேரடியாக பார்ப்பதுபோல் பார்த்து கதறி துடித்துள்ளேன். .

"தெரியவில்லை" என்ற பதில் யாருக்கும் மன்னிப்பை கொடுக்காது. சட்டத்தை பற்றி தெரியாது என்று சொல்லி தப்பு செய்பவருக்கு தண்டனை கிடைக்காமல் போவது இல்லை. இந்த அற்ப கால வாழ்க்கை உள்ள உலகில் சுகமாக வாழ்வதற்கு எவ்வளவு முயற்சி எடுக்கிரீர்களோ அதோடு ஒருபடி அதிக முயற்சி எடுத்து நித்யமாக இருக்க்போகும் இடத்தை பற்றி ஆராய்ந்தால் அதன் உண்மை தன்மையை அறிய முடியும்.

3. சொர்க்கம் நரகம் உண்டு:

சொர்க்கம் நரகம் உண்டு என்று நம்பும் நண்பர்களே நீங்கள் நரகம் என்ற அந்த கொடிய இடத்துக்கு போக மாட்டீர்கள் என்ற நிச்சயம் உங்களிடம் உண்டா?

ஒரு பொய் சொன்ன தர்மன் நரகத்தை பொய் பார்த்தான் என்று இந்து மதம் சொல்கிறது "பொய்யன் இரண்டாம் மரணமாகிய அக்கினி கந்தகம் எரியும் இடத்தில் பங்கடைவான் என்று கிறிஸ்த்தவ மதம் சொல்கிறது, "இறுதி நாளில் பொய்யர்கள் நஷ்டம் அடைவார்கள் என்று திருக்குரான் சொல்கிறது.

பொய் சொல்வது மட்டுமே உங்களை நரகத்துக்கு பாத்திரவானாக மாற்றும் என்றால் நமது வாழ்க்கையில் இந்நாள் வரை இன்னும் எத்தெத்தனை இறைவனுக்கு பிடிக்காத செயல்கள் செய்துள்ளோம் எனவே நாம் எப்படி தப்பிப்போம்.

நான் நரகம் போகும் அளவுக்கு பெரிய பாவி அல்ல சின்ன சின்ன பாவங்கள் தான் உண்டு என்று சொல்கிறீர்களா?

ஒரு கால் டம்ப்ளர் சாக்கடை தண்ணியுடன் எவ்வளவு தான் நல்ல சுத்தமான தண்ணீரை கலந்தாலும் நம்மால் அதை குடிக்க முடியாது அது போல நம்மிடம் உள்ள ஒரு சின்ன பாவம் கூட நம்மை இறைவன் ஏற்றுக்கொள்ள தகுதி அற்றவனாக மாற்றிவிடும்.

எனவே நம்மிடம் நிறைந்துள்ள எல்லா அசுத்தமான செயல்கள், எண்ணங்களையும் முழுவதும் கீழே கொட்டிவிட்டு பாவங்களை கழுவ சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தம் என்னும் டெட்டால் போட்டு கழுவினால் மட்டுமே நமது பாவம் மன்னிக்கப்பட்ட ஒரு முழு நம்பிக்கை நமக்கு ஏற்படும். மற்றும் நமது மனம் இறைவனுக்கு ஏற்றதாக மாறும் நாமும் நரகத்தை தவிர்த்து இறைவனிடம் போக முடியும்.

அதை அனுபவித்து பாருங்கள் புரியும்.

நன்றி: முத்தமிழ் மன்றம்

Link to comment
Share on other sites

ம்ம்..சொர்க்கம்,நரகம் இருக்கு..(என்ன பார்க்கிறியள் :) )..அது உங்க லைவில தான் இருக்கு இதை எல்லாம் தேடி போக தேவைல பாருங்கோ :lol: ..வாழ்க்கையே ஒரு சொர்க்கம் தானே பட் அதையே நரகமாக பார்கீனம்...(ஜம்மு பேபி அப்படி இல்ல).. :wub:

இந்த லைவை விட ஒரு சொர்க்கம் வேண்டுமா என்ன...(ஆனால் அந்த சொர்க்கத்தை அநுபவிக்காம)..நரகத்தை மட்டுமே பார்க்கிறீங்க :unsure: ..ம்ம் அது தான் எப்பவுமே நம்மள பற்றி யோசிக்காம நாம் எப்பவுமே மற்றவனை பற்றி தானே யோசிபோம் அது தான்..(எரிச்சல்,பொறாமை).. :wub: இதை எல்லாம் மனதில இருந்து எடுத்து விட்டு உங்களையும் உங்க லைவையும் காதலியுங்கோ..

(ம்ம்..அடுத்தவனையும் காதலியுங்கோ ஆனா அடுத்தவனின்ட கேள் பிரண்டை காதலித்து போடாதையுங்கோ என்ன).. :(

இது எல்லாம் கொஞ்சம் கஷ்டம் தான் பாருங்கோ...(அது தான் இன்னும் நாம நரகத்தில இருக்கிறோம்)...இதை எல்லாம் விட்டுவிட்டால் நம்ம லைவே ஒரு சொர்க்கம் தான் பாருங்கோ.. :D

இத எக்சாம்பிளிள சொல்ல போனால் நாம பூமியில இருக்கிறோம்...(அது சொர்க்கம் இல்லை என்று போட்டு நிலாவிற்கு போக விரும்பினா நம்மளிற்கு சொர்க்கம் கிடைத்திடுமா)..இல்லையே பிகோஸ் அங்க போனாலும் நம்ம மனசு சொர்க்கமா இருக்காதே.. :(

எப்பவுமே உங்க மனசில தான் சொர்க்கம்,நரகம் இருக்கும்...உங்க மனசு சொர்க்கமா இருந்தா நீங்களும் சொர்க்கத்தில இருப்பியல் இல்லாட்டி..(அத வேற நான் சொல்லனுமா என்ன)..

எப்பவுமே உங்க மனசை திறந்து வையுங்கோ பூட்டி வைக்காதையுங்கோ..(அக்சுவலா கேள்சிற்கு)..அப்ப தான் பசங்க எல்லாம் காதல் என்ற சொர்க்கத்தில மிதந்து பிறகு நரகத்தில தள்ளாடுவாங்க... :wub:

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா வாழ்க்கை என்பதே ஒரு சொர்க்கம் அதை நீ அறியாட்டி அது நரகம்" :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஜம்மு, ஒவ்வொருவரின் மனசில் தான் சொர்க்கம், நரகம் இருக்கிறது என்னும் கருத்து என்னை கவர்ந்துள்ளது.

சொர்க்கம், நரகம் இருக்கிறதா? இல்லையா? என்பதைத் தீர்மானிக்க மதங்களின் உதவி அவசியமில்லை. வாழ்வின் நோக்கத்தை வைத்து தீர்மானித்து விடலாம்.

உதாரணமாக: உணவை எடுத்துக்கொள்வோம். உணவின்றி மனிதன் உயிர் வாழ முடியாது. உணவைத் தேடுவதில் இருவழிகள் உள்ளன.

ஒன்று: நேர்மையான உழைப்பின் மூலம் பொருளீட்டி உண்ணுவது.

இரண்டு: தவறாக பொருளைக் களவாடி உண்ணுவது.

இருவரின் நோக்கமும் ஒன்றுதான் பசி,

பசி இயல்பு, இயல்பை நிறைவேற்றிக்கொள்ள இருவழிகள்.

உழைத்து சாப்பிட்டாலும் பசியடங்கும், திருடிச் சாப்பிடாலும் பசியடங்கும். இருவரின் நோக்கமும் நிறைவேறியது ஆனால் எது சரி? கண்ணை மூடிக்கொண்டு சொல்லி விடலாம் ''உழைப்பால் உண்பதே சரி'' என்று.

திருடுவதை எவரும் சரி காண்பதில்லை திருடர்களைத் தவிர.

உழைப்பும், திருட்டும் ஒன்றல்ல, இரண்டிற்கும் ஒட்டுமில்லை உறவுமில்லை எனும் அளவிற்கு பெரும் வேறுபாடு உண்டு இதை அனைவரும் ஒப்புக்கொள்வோம்.

உழைப்பே உயர்வு என்றால் உழைப்பவர்க்கு ஏதாவது பரிசு கிடைக்க வேண்டுமல்லவா?

களவு தாழ்மை என்றால் தவறு செய்பவர்க்கு தண்டனை உண்டல்லவா?

உழைப்பால் முன்னேறியவரும், திருட்டால் முன்னேறியவரும் சமமல்ல என்றால் லஞ்சம், ஊழல், மோசடி, திருட்டு எனத் தவறான வழியில் பொருளீட்டுபவர்கள் பலர் தமது குற்றத்திற்குத் தண்டனை பெறாமல் நீதியிலிருந்து தப்பித்துக்கொள்கின்றனர். அல்லது நீதியை விலைக்கு வாங்கி விடுகின்றனர்.

உழைப்பவனுக்கு பரிசு இல்லை, திருடியவனுக்கு தண்டனை இல்லை எனில், உடலை வருத்தி நேர்மையாக உழைப்பவனுக்கு என்ன லாபம்? வினாக்களின் விடைகளில் சொர்க்கமும், நரகமும்.

Link to comment
Share on other sites

"கண்ணா வாழ்க்கை என்பதே ஒரு சொர்க்கம் அதை நீ அறியாட்டி அது நரகம்"

:unsure::unsure::unsure:

தகவலும் ஜம்முபேபி நுணவிலான் இருவரது கருத்தும் நன்று.

இருப்பினும் சொர்க்கமோ நரகமோ அது ஒவ்வொருவரது வாழ்க்கை முறையில் அவர்கள் நடந்துகொள்ளும் விததை வைத்து வாழ்வின் இறுதியில் தீர்மானிக்கப்படும். அதை இப்ப ஏன் ஆராயணும்? வாழும்வரை சொர்க்கம் என நினைச்சு சந்தோசமாக வாழ்க்கையை முடிப்பதே சாலச் சிறந்தது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.