Jump to content

இவர்தான் பெரியார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே ஒரு திசை திருப்பலும் நடக்கவில்லை. இந்து மதம் மட்டும் தர்ன தீண்டாமை கொண்டது என கதை விடுகின்றபோது ஜேசுநாதர் யூதரைத் தவிர வேறு ஒருத்தனுக்கும் உதவமாட்டேன் என இனவெறி கொண்டு கதைத்ததை இணைத்ததில் என்ன திசை திருப்பல் இருக்கின்றது. இவர் யாரை மேற்கோள் காட்டினார் என்பதற்காக நான் இவரைக் காட்டக்கூடாதோ.

***

Link to comment
Share on other sites

  • Replies 110
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான் எனும் ஒரு சக உறவின் கேள்வி..

கோவிலுக்குள் நுழைந்தவர்.. மசூதிக்குள் நுழையவில்லை. தேவாலயத்துக்குள் நுழையவில்லை... ஏன்..??!கேள்விக்கான என்னுடைய பதில்.......

இந்து சமயம் போல் நாம் தேவர்கள் நாம் தேவ துதர்கள் நீங்கள் சேவகர்கள் நீங்கள் எதையுமே தீண்டதகாதவர்கள் என்ற பிரிவினைகளை மற்றைய சமயங்கள் வைத்திருக்கவில்லையே.

மதத்தின் பெயரால் மறுமனிதனை துன்புறுத்தியதில் பெரும்பங்கு இந்துசமயத்திற்கே உரியது. என்ற பெருமை எப்போதும் இந்து சமயத்திற்கு உண்டு.

நபிகள் நாயகம் ஷல் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பைப் படித்துப் பாருங்கள். அவர் தீண்டாமை அழிக்க குரல் கொடுத்திருப்பதை காணலாம். இல்லாத ஒன்றுக்காய் ஏன் குரல் கொடுக்க வேண்டும்..???! :mellow:

இந்தியாவில் முஸ்லீம்கள் மத்தியில் சாதி புரையோடிப்போய் உள்ளது. அது எதனடிப்படையில். அதற்கும் நீங்கள் உச்சரிக்கும் பார்பர்னமா காரணம். இஸ்லாமிய மன்னர்களிடம் சாதி காக்கும் வழமை இருந்து வந்துள்ளது. ஏன் அரபுக்களிடமும் அரபு நாடுகளிலும் தீண்டாமை இருக்கிறது..!

"இங்கே ஒரு விஷயம் கவனிக்கத் தக்கது. இஸ்லாத்தில் ஜாதிகள் இந்தியாவில் மட்டும்தான் இருக்கிறது என்றில்லை. இஸ்லாம் பிறந்த சவுதியிலேயே இன்னும் ஜாதிகள் இருக்கின்றன. உயர் சாதி அரபிப்பெண்ணை தாழ்ந்த சாதி முஸ்லீம் மணப்பது ஷரீயத்துக்கு முரணானதாக, கடவுளுக்கு பிடிக்காததாக கருதப்படுகிறது. சாதி என்பதை 'ட்ரைப்' என்று ஆங்கிலத்தில் எழுதுவதால் பல சமயம் அது சாதி என்பதை நாம் கவனிக்காமலேயே இருந்துவிடுகிறோம் அவ்வளவுதான். இன்னும் சொல்லப்போனால், இந்தியாவின் ஜாதி முறையை விட கடுமையான ஜாதிக்கட்டுப்பாடுகள் அரபுகளிடையே உண்டு. "

http://www.thinnai.com/?module=displaystor...amp;format=html

Link to comment
Share on other sites

இங்கே ஒரு திசை திருப்பலும் நடக்கவில்லை. இந்து மதம் மட்டும் தர்ன தீண்டாமை கொண்டது என கதை விடுகின்றபோது ஜேசுநாதர் யூதரைத் தவிர வேறு ஒருத்தனுக்கும் உதவமாட்டேன் என இனவெறி கொண்டு கதைத்ததை இணைத்ததில் என்ன திசை திருப்பல் இருக்கின்றது. இவர் யாரை மேற்கோள் காட்டினார் என்பதற்காக நான் இவரைக் காட்டக்கூடாதோ.

***

இப்போது என்ன சொல்ல வருகிறீர்கள்? கிறிஸ்தவ மதமும் தீண்டாமையை வலியுறுத்துவதால் தீண்டாமை ஒரு மனிதநேயச் செயல் என்று சொல்லவருகிறீர்களா? :mellow::wub:

Link to comment
Share on other sites

இப்போது என்ன சொல்ல வருகிறீர்கள்? கிறிஸ்தவ மதமும் தீண்டாமையை வலியுறுத்துவதால் தீண்டாமை ஒரு மனிதநேயச் செயல் என்று சொல்லவருகிறீர்களா? :mellow::wub:

ஆமைகளை தீண்டாமல் இருப்பதுதான் நல்லது... :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது என்ன சொல்ல வருகிறீர்கள்? கிறிஸ்தவ மதமும் தீண்டாமையை வலியுறுத்துவதால் தீண்டாமை ஒரு மனிதநேயச் செயல் என்று சொல்லவருகிறீர்களா? :):)

மருதங்கேணியார் இந்து மதத்தில் மட்டும் தான் தீண்டாமை இருக்கின்றது எனச் சொன்னதற்கான பதில் என விளக்கமாகத் தானே கொடுத்திருக்கின்றேன். ஏன் உங்களின் பகுத்தறிவு என்றது குதர்க்கவழியில் எப்போதும் சிந்திக்கின்றது?

தீண்டாமை என்பதை அவர்கள் தெளிவாக அழித்து மக்களை ஒற்றுமைப்படுத்தினார்கள். நீங்கள் பிரிவினைகளை உருவாக்கி வைத்தீர்கள்.

Link to comment
Share on other sites

தீண்டாமை என்பதை அவர்கள் தெளிவாக அழித்து மக்களை ஒற்றுமைப்படுத்தினார்கள்.

எப்படி ஒற்றுமைப்படுத்தினார்கள்? :)

கோயிலுக்குள் பார்ப்பனர்களுக்கு மட்டுமே அனுமதி. மற்ற சாதியினர் கோயிலுக்கு வெளியே என்பதை நடைமுறைப்படுத்தி ஒற்றுமைப்படுத்தினார்களா?

இல்லையேல் அக்ரஹார வீதிகளுக்குள் பார்ப்பனரல்லாதோர் நடமாடக்கூடாது என்று சொல்லி ஒற்றுமைப்படுத்தினார்களா?

காமெடிக்கு ஒரு அளவில்லையா தூயவன்? :rolleyes::):D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோவிலைக் கட்டி பார்ப்பானர்களின் கையில் கொடுத்தது, நீங்கள் தானே?

ராமசாமியார் கோவில் தர்மகத்தாவாக இருந்தபோது, பார்ப்பானர்களைச் சம்பளத்திற்கு லைன் கட்டி வைத்து, பணம் கொடுத்தாரே. அப்போது தர்மகத்தாவால் ஏன் கோவிலுக்குள் நுழைய வைக்கமுடியவில்லை?

பெயர் தேடுவதற்காக நாடகம் போடுவார்களாம். இவர்கள் நடிப்பார்களாம்

Link to comment
Share on other sites

கோவிலைக் கட்டி பார்ப்பானர்களின் கையில் கொடுத்தது, நீங்கள் தானே?

ராமசாமியார் கோவில் தர்மகத்தாவாக இருந்தபோது, பார்ப்பானர்களைச் சம்பளத்திற்கு லைன் கட்டி வைத்து, பணம் கொடுத்தாரே. அப்போது தர்மகத்தாவால் ஏன் கோவிலுக்குள் நுழைய வைக்கமுடியவில்லை?

பெயர் தேடுவதற்காக நாடகம் போடுவார்களாம். இவர்கள் நடிப்பார்களாம்

அவர் கடைசி வரைக்கும் அந்த கோயில் நிர்வாக பதவியை துறக்க இல்லை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் கடைசி வரைக்கும் அந்த கோயில் நிர்வாக பதவியை துறக்க இல்லை...

அப்படியென்றால் நாத்திகம் என்னாச்சு? ஊருக்கு உபதேசம் உனக்கில்லை என்ற கதை தானோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோவிலைக் கட்டி பார்ப்பானர்களின் கையில் கொடுத்தது, நீங்கள் தானே?

ராமசாமியார் கோவில் தர்மகத்தாவாக இருந்தபோது, பார்ப்பானர்களைச் சம்பளத்திற்கு லைன் கட்டி வைத்து, பணம் கொடுத்தாரே. அப்போது தர்மகத்தாவால் ஏன் கோவிலுக்குள் நுழைய வைக்கமுடியவில்லை?

பெயர் தேடுவதற்காக நாடகம் போடுவார்களாம். இவர்கள் நடிப்பார்களாம்

இந்துமதம் எங்கே போகிறது என்ற கட்டுரையை படித்திருக்கிறீர்களா? அதில் எப்படி பார்ப்பனர்கள் கோவில்களை ஆக்கிரமிப்பு செய்தார்கள் என எழுதியிருப்பதை படித்திருக்கிறீர்களா?

அதே ராமசாமி கோவிலில் அனைவரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என கூறினாரே. அதற்கு என்ன பதில். இப்போது தானே சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

உண்மையில் உங்களுக்கு வரலாறு தெரிந்து தான் எழுதுகிறீர்களா அல்லது தெரியாமல் பெரியாரை எதிர்க்கவேண்டும் என்பதற்காக எழுதுகிறீர்களா.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர்தான் பெரியார்

குலக்கல்வித் திட்டம்

குலக்கல்வித் திட்டம் எனப்படும் புதிய கல்வித் திட்டத்தை ராஜகோபாலாச்-சாரியார் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தபோது 1953இல் கொண்டு வந்தார். அதன்படி பாதி நேரம் படிப்பு. மீதே நேரம் தொழில் செய்தல் என்ற பெயரில் மாணவர்-களின் தந்தை, பாட்டன் செய்த தொழிலைச் செய்தல். அந்த முறையில் பார்ப்பனர் அல்லாதாருக்காவது ஒரு தொழில் இருக்கும். பார்ப்-பனருக்கு? அந்தப் பிள்ளை-கள் இருவேளையும் படிக்கும்.

இந்தப் புதிய கல்வித் திட்டத்தை ராஜாஜி சட்ட-மன்றத்தில் கூறி, விவாதித்து, முடிவெடுத்துச் செய்தாரா என்றால், கிடையாது! தானா-கவே உத்தரவு போட்டு-விட்டார். பலத்த எதிர்ப்பு பலதரப்பிலும்!

தந்தை பெரியார் மிகப் பெரிய கிளர்ச்சியைச் செய்தார். கத்தி வைத்துக் கொள்ளுங்கள், நான் சொல்லும் போது குத்தவேண்டும் என்றார். பெட்ரோலும் தீப்பந்தமும் வைத்துக் கொள்ளுங்கள், நான் சொல்லும்போது கொளுத்த வேண்டும் என்றார். ஆச்சாரியார் பயந்து பதவியை ராஜிநாமா செய்துவிட்டுப் போனார்.

அந்த நேரத்தில் தந்தை பெரியாரைக் கேள்வி கேட்டார் ஒரு பார்ப்பனப் பெரியவர். ராஜாஜி பார்ப்பனர் என்ற காரணத்திற்-காகத்தானே நீங்கள் அவர் கொண்டு வந்த நல்ல கல்வித் திட்டத்தை எதிர்த்தீர்கள்?

தந்தை பெரியார் சிரித்துக்கொண்டே சொன்னார், ஆச்சாரி-யாரின் கல்வித் திட்டத்தை நான் மட்டும் எதிர்த்து இருந்தால், நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்வேன். எந்த மாணவர்-களுக்காகக் கொண்டு வந்தாரோ அந்த மாணவர்களின் பெற்றோர்-களே எதிர்த்தார்கள். பள்ளிக்கூட ஆசிரியர்களும் எதிர்த்தார்கள். எதிர்க்கட்சிக்காரர்கள் மட்டும் அல்ல, ஆச்சாரியாரின் கட்சிக்காரர்களே எதிர்த்தார்கள்.

இன்றைக்கு (1957இல்) ஆச்சாரியாருக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யும் முத்துராமலிங்கத் தேவரே கூட சட்டசபை-யில் எதிர்த்துப் பேசினாரே! இப்படிப்பட்ட கல்வித் திட்டத்தை அமல் நடத்துவதற்கு ஆச்சாரியாரின் அகந்தை, ஆணவம்தான் காரணம் என்றே பேசினார். ஆச்சாரியார் அதற்கு என்ன பதில் சொன்னார் தெரியுமா என்று பெரியார் கேட்டு விட்டுப் பதில் சொன்னார்.

சங்கரரும் புத்தரும் மற்றவர்களைக் கலந்து ஆலோசித்துத்தான் நல்ல விஷயங்களை போதனை செய்தார்களா என்று ஆச்சாரியார் பேசினார். உடனே ஆவேசமாகப் பேசிய தேவர், புத்தரையும் சங்கரரையும் தன்னுடன் ஒப்பிட்டுப் பேசுவதற்கு ஆச்சாரியாருக்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்று கேட்டார். உண்மை இப்படியிருக்கையில், பார்ப்பன துவேசத்தினால் நான் எதிர்த்தேன் என்று சொல்வது எப்படி முறையாகும் என்று பெரியார் பார்ப்பனப் பெரியவரைக் கேட்டார். அவர் பதில் பேசாமல் வேறு ஒரு சங்கதியைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்துவிட்டுப் போய்விட்டார்.

இப்படித்தான் உண்மை தெரியாத பல பேர்கள் தந்தை பெரியாரைப் பற்றிப் பலவிதமாகப் பேத்தி வருகிறார்கள்.

- செங்கோ

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.