Jump to content

ஒதுங்கிக் கொள்கிறேன்


Recommended Posts

எனக்கு ஒத்துழைத்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. ஏற்கனவே சொன்னது போல இக்களத்தில் இருந்து ஒதுங்கிக் கொள்கின்றேன். தனிப்பட்ட விதத்தில் தொடர்பு கொள்ள விரும்புவர்கள் yarlthuyawan@hotmail.com என்பதூடாகத் தொடர்பு கொள்ளுங்கள்.

நன்றி

மற்ற பெயர்களில் உங்கள் விவாதங்களை தொடர்ந்து செய்யுங்கள் தூயவன்! காத்திருக்கிறோம்... :unsure::rolleyes::wub:

Link to comment
Share on other sites

  • Replies 71
  • Created
  • Last Reply

சந்தோஷமாக போய் வாருங்கள் தூயவன்.

அண்மைக்காலமாகத்தான் உங்கள் கருத்துக்களை உன்னிப்பாக கவனித்தேன், அதில் அனேகமானவை சிந்திக்க வைக்கும் ஆக்கபூர்வமானவை.

Link to comment
Share on other sites

எனக்கு தெரிந்த வரை வேறு பெயரில் தூய்ஸ் வரமாட்டார்.

முடிவை மாற்ற சொன்னால் மனம் இன்னும் கடினமாகிவிடும்.

தூய்ஸ் என்றும் எங்கள் சகோதரன் நீங்கள்...எங்களை விட்டு போய்விடவா போறிங்க...:lol:

Link to comment
Share on other sites

வணக்கம் தூயவன், விலகுவதும் விலகாது இருப்பதும் உங்கள் தனிப்பட்ட விருப்பு, என்னைப்பொறுத்த வரைக்கும் நீங்கள் நல்லதொரு நண்பர் கருத்தாளன், ஆரம்பகாலத்தில் எத்தனை பேரை ஓட ஓட விரட்டி இருப்போம், பிடித்து வைத்து கடித்து இருப்போம், எத்தனைபேரை கல்லால் அடித்து விரட்டியிருப்போம். களவிதிகளுக்கு ஏற்ப எமது ஆயுதங்களும் மாறி மாறிக்கொண்டே இருக்கும், இருவரை கல்லால் இரத்தம் வர வர அடித்து துரத்தியது ஞாபகம் இருக்கும் என நினைக்கிறேன்.

காலம் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை அது தன் பாட்டுக்கு ஓடுகிறது அதனோடு சேர்ந்து ஓடுபவவர்கள் தம் இருப்பை உறுதி செய்து கொள்கிறார்கள், சோர்ந்து இருப்பவர்கள் மறைந்து விடுகிறார்கள். நீங்கள் சோர்ந்து இருக்ககூடாது என்பதுதான் என் விருப்பம். இதேபெயரில் தொடர்ந்து எழுதலாம், அல்லது வேறுபெயரில் வரலாம், அல்லது வந்து வந்து பார்த்துவிட்டு போகலாம். எதற்கும் ஒரு பெயர் வைத்து இருப்பது வசதி, பெயர் இங்கு முக்கியம் அல்ல கருத்தாளனின் கருத்துதான் முக்கியம்.

சமயம் என்னும் சிறைக்குள் அடைந்து விடாதீர்கள், அது உங்கள் நம்பிக்கை எனது நம்பிக்கை எனக்கு எப்படி முக்கியமோ அதேபோன்று உங்கள் நம்பிக்கையையும் நான் மதிக்கிறேன், ஆனால் அதை விட பரந்த உலகம் உங்களுக்காக காத்து இருக்கிறது, எமகென பல தேள்வைள் இருக்கிறது.

நீ பெரிது நான் பெரிது என வாழாது எம் தேசம் பெரிது, தேச விடுதலை பெரிது என வாழ்வோம், யாழ்களத்தில் உங்கள் கருத்துகள் எமக்கு என்றும் தேவை. :lol:

Link to comment
Share on other sites

என்ன இருந்தாலும் எத்தினயோ பேரோட இணையத்தில பகிரங்கமா மல்லுப்பிடிச்ச, மல்லுப் பிடிக்கின்ற, மற்றும் மல்லுப் பிடிக்கப்போகும் சாத்திரி அண்ணை யாழில இருந்து தான் ஒதுங்கிக்கொள்ளுறன் எண்டு சொல்லாமல் இருக்கிறத நினைக்க எனக்கு பெருமையா இருக்கிது.

நான் ஒரு வருசம் சேர்ந்து... இதுவரை யாழைவிட்டு ஓட வெளிப்படையாக ஒரு தடவையும், மறைமுகமாக பல தடவைகளும் முயற்சி செய்து இருக்கிறன். சாத்திரி அண்ணை இப்ப மூண்டு வருசமா சுடலை வைரவர் மாதிரி யாழை விட்டு ஓடாமல் நிக்கிறார் எண்டால் அது பெருமைக்குரிய விசயமே... இல்லாட்டிக்கு சாத்திரி அண்ணை, நீங்கள் தான் மோகன் அண்ணையோ? ஹாஹா..

முரளி அதுதான் நீங்களே எழுதிப் போட்டீங்களே சுடலை வைரவர் எண்டு அதேதான் எனக்கு எரியிற பிணமும் ஒண்டுதான் எரியப் போகிற மனிசரும் ஒண்டுதான். அடடடா என்ன தத்துவம். :lol:

இது என்ன கருத்துக்களம் பலபேர் வந்து பலவிதமான கருத்துக்களையும் சொல்லுவினம்.அதிலை எங்களுக்கு விரும்பினதும் இருக்கும் விரும்பாததும் இருக்கும் இது தெரிஞ்சுதானே எழுத வாறம். இல்லாட்டி தனிய ஒரு லைப்பூவை தொடங்கி நாங்கள் விரும்பினதை மட்டும் எழுதிக் கொண்டிருக்கலாமே. :lol:

என்னுடைய எழுத்துக்களுக்கும் தான் வெட்டு விழுது. நான் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் எனக்கு எதை எழுதத் தோன்றுகிறதோ அதை எழுதிக் கொண்டேதான் இருக்கிறேன்.நானும் யாழில் ஆரம்பத்தில் பழைய மட்டிறுத்துனர் இராவணனிடம் எக்கச் சக்கமாய் வெட்டு வாங்கியிருக்கிறன். சின்னப்புவை கேட்டால் தெரியும். :lol: ஒரு முறை யாழினி என்கிற மட்டிறுத்துனருடன் சண்டையும் பிடித்திருக்கிறேன். :lol:

காலப்போக்கில் அனுபவங்களாகி முடிந்தளவுக்கு வெட்டு வாங்காமல் சாதுரியமாக வசனங்கள் எழுதபழகிக் கொண்டேன் அவ்வளவுதான். எனக்கும் தனி வலைப்பூ தனித்தளம் இருக்கு ஆனாலும் யாழில் இப்பிடி பிடுங்குப்பட்டு எழுதுகிற சுகமே தனி. :lol: அதாலைதான் கொவமாய் வெறியே போறன் என்று போனவர்கள் பலர் தொடர்ந்தும் வேறு பெயர்களில் மீண்டும் இங்கு எழுதிக் கொண்டேயிருக்கினம். :lol:

Link to comment
Share on other sites

தூயவன்,

கள பக்கம் அடிக்கடி வராமையால் உங்களுடைய முடிவின் பின்ணணி எனக்கு தெரியவில்லை. எதற்காக இருந்தாலும் அவற்றை மறந்து யாழில் தொடர்ந்து இணைந்திருங்கள்.

Link to comment
Share on other sites

மதன்

முதலில் நீங்கள் திரும்பவும் மட்டுறுத்தினராக இணைந்திருப்பதில் மகிழ்ச்சி. இந்த மகிழ்ச்சியிலாவது தூயவனும் வன்னியனும் தங்கள் முடிவை மாற்றிக் கொள்வார்களென நம்புகின்றேன். :lol::lol:

Link to comment
Share on other sites

வணக்கம்,

எல்லாரும் தூயவனுக்கு நிறைய விசயம் சொல்லி இருக்கிறீங்கள். இவ்வளவு காலமும் என்னுடன் தூயவன் கருத்தாடல் செய்தபோது பெற்ற அனுபவங்கள், மற்றும் தூயவன் எழுதியவற்றை வாசித்தவன் என்ற வகையில தூயவனுக்கு நான் சில கருத்துக்களை சொல்ல விரும்புறன். ஒரு சகோதரம் எனும் வகையில் நான் கூறும் கருத்துக்களை சரியான முறையில் தூயவன் நீங்கள் உள்வாங்கிக்கொள்வீர்கள் என்று நினைக்கின்றேன்.

1. இஞ்ச எல்லாரும் சொன்னமாதிரி நீங்கள் தூயவன் எனும் பெயரில தொடர்ந்து எழுதவேணும் எண்டுற தேவை இல்லை. நான் கூட ஆரம்பத்தில் மாப்பிளை எனும் பெயரில் எழுதி, பிறகு கலைஞனாகி, இப்போது முரளியாகிவிட்டேன். இன்னும் ஏதாவது பிறப்புக்கள் யாழில் எனக்கு இருக்கிதோ எண்டு காலம் தான் பதில் சொல்லவேணும். ஆனால், இதில நீங்கள் கவனிக்க வேண்டிய விசயம் என்ன எண்டால், ஒவ்வொரு பிறப்பையும் ஒரு படிமுறை வளர்ச்சியாகவே நான் பார்க்கின்றேன். முன்பு செய்த தவறுகளை இப்போது செய்யாது இருப்பதற்கு புதிய பிறப்புகள் எனக்கு உதவி இருக்கின்றன என்றும் சொல்லலாம். இந்தவகையில...

நீங்களும் யாழில் உங்கள் உண்மையான பெயருடன் அல்லது வேறு ஒரு புனைபெயருடன் தொடர்ந்து எழுதலாம். உங்களுக்கு தனிப்பட்ட பிரச்சனைகள் இருக்குமாயின் அதாவது படிப்பு, வேலை, மற்றும் இதர வாழ்க்கைப் பிரச்சனைகள்... இருந்தால் நீங்கள் ஒதுங்கிக்கொள்வதில் எதுவித தவறும் இல்லை. நான்கூட இனி எவ்வளவு காலம் தொடர்ந்து யாழுக்கு வருவதற்கு எனது தனிப்பட்ட வாழ்க்கை இடம்கொடுக்கும் என்பது கேள்விக்குறியே. ஆனால் அவ்வாறாக இல்லாது.. நிருவாகம், கள உறவுகள்.. இவர்களிற்கு இடையில் மனக்கசப்பு ஏற்பட்டு நீங்கள் ஒதுங்கிக்கொள்வதாய் இருந்தால் என்னைப்போல் புதிய ஒரு பிறப்பு எடுப்பதே சிறந்த ஒரு முடியாவாக இருக்கும்.

2. உங்களுக்கு நிறையத் தமிழ் அறிவு இருக்கின்றது, பல விடயங்கள் பற்றிய நல்ல சிந்தனைகள் இருக்கின்றது, நான் முன்பு ஒரு முறை எம்.எஸ்.என் இல் உங்களுடன் கதைத்தபோது நீங்கள் கம்பன் கழகத்தில் இருந்தனீங்களா என்று கேட்டு இருந்தேன். இதுபோல், யாழ் இணையம் அகவை ஒன்பது சம்மந்தமான விவாத அரங்கில் நீதிபதியாக யாரைப்போடலம் என்று யோசித்தபோது முதலாவதாக உங்கள் நினைவுவந்து உங்களிற்கு மடலும் அனுப்பி இருந்தேன். அவ்வளவு தூரம் நீங்கள் எனது கவனத்தை ஈர்த்து இருந்தீர்கள். ஆனால்... பிறகு கருத்தாடல்கள் செய்தபோது உங்களில் நான் கண்ட குறைகள் எவை?

3. நீங்கள் கருத்தாடல் செய்யும்போது என்னுடனும் சரி மற்றவர்களுடனும் சரி... கூடிய அளவு தனிப்பட்ட வாழ்க்கையை கிளறி அல்லது அந்தரங்க விசயங்களினுள் நுழைந்து மற்றவர்களும் உங்களுடன் கருத்தாடல் செய்யும்போது வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் கருத்தாடல் செய்து இருக்கிறீங்கள். ஒரு கருத்தாடல் செய்யும்போது சொல்லப்படும் கருத்தை பார்க்காது, சொல்லப்படுபவரைப் பார்த்து இருக்கின்றீர்கள். நானும் கருத்தாடல் செய்யும்போது இப்படி பிழைகள் விடுவது உண்டு. ஆனால்.. நான் அவதானித்த அளவில் ஒப்பீட்டளவில் நீங்கள் தனிநபர்களைப் பற்றி விமர்சனம் செய்வது அதிகம் என்று கூறுவேன். இதுவே, உங்களிற்கும் மற்றவர்களிற்கும் பல்வேறு விதமான மன உலைச்சல்கள் ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணியாக அமைகின்றது.

உதாரணத்திற்கு, இப்ப நான் எனது தனிப்பட்ட வாழ்வில் தாயகம் பற்றி எதுவித அக்கறையும் இல்லாதவனாக இருக்கலாம். அதற்காக யாழில் நான் தாயகப் போராட்டத்திற்கு ஆதரவாக வலுவூட்டும் கருத்துக்களை எழுதக்கூடாது என்று இல்லை. ஆனால், சிலவேளைகளில் நீங்கள் எனது தனிப்பட்ட வாழ்வு பற்றி சரியாக அல்லது பிழையாக அறிந்துவிட்டு... கருத்தாடல் செய்யும்போது நான் சொன்ன கருத்தினை பாராது என்னைப் பார்த்துவிட்டு விமர்சனம் செய்து இருக்கின்றீர்கள். இது தவறானது. இனிவரும் காலங்களில் கூடுதலான அளவு கருத்தினை கருத்தினால் வெல்லப்பாருங்கள். தனிநபர்கள் பற்றி பார்க்காதீர்கள்.

4. வாதங்கள் தவிர மற்றைய பகுதிகளிலும் கவனம் செலுத்துங்கள். இப்போது என்னால் யாழில் இவ்வளவுக்காவது நிண்டு பிடிக்கக்கூடியதாய் இருக்கின்றது என்றால் இதற்கு காரணம் நான் எல்லாப் பகுதிகளிற்கும் சென்றுவருவேன். எல்லாப்பகுதிகளையும் பார்வையிடுவேன். இப்படிச் செய்வது குறிப்பிட்ட ஒரு விடயம் உங்களிற்கு தொடர்ந்து அழுத்தம் தருவதை தவிர்க்க உதவும்.

5. சுய ஆக்கங்கள் படையுங்கள். எதையாவது எழுதுங்கள். நான் அவதானித்த அளவில் நீங்கள் சுயமாக ஏதாவது எழுதி அதை நான் வாசித்ததாக நினைவு இல்லை. சுயமாக ஒன்றைச் செய்யும்போது உலகத்தை இன்னொரு கோணத்தில் தரிசனம் செய்ய உதவும். இது உங்கள் வளர்ச்சிக்கு உதவும்.

இவ்வளவுதான் எனக்கு இப்போதைக்கு உங்களுக்கு கூறமுடிகின்றது. நான் கூறிய கருத்துக்களை சரியான முறையில் உள்வாங்கிக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் இதைப் பதிகின்றேன்.

நன்றி!

Link to comment
Share on other sites

5. சுய ஆக்கங்கள் படையுங்கள். எதையாவது எழுதுங்கள். நான் அவதானித்த அளவில் நீங்கள் சுயமாக ஏதாவது எழுதி அதை நான் வாசித்ததாக நினைவு இல்லை. சுயமாக ஒன்றைச் செய்யும்போது உலகத்தை இன்னொரு கோணத்தில் தரிசனம் செய்ய உதவும். இது உங்கள் வளர்ச்சிக்கு உதவும்.

அது அது வெறும் கருத்தாடல்கள் எப்பவும் எல்லாராலும் செய்யக் கூடியதே சுயமாக ஒரு படைப்பை வைத்து விட்டு அதற்கான விமரிசனங்களையும் எதிர் பாருங்கள் சிலவேளை அது இதைவிடக் கடினமாகவும் இருக்கும். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தூயவன்!

அந்த செம்மறிகள் இங்கிருந்து விலகி ஓடட்டும்.நீங்கள் யாழுடன் இணைந்திருங்கள்.

அரைகுறைகள் அகிலத்திற்கு அறிவூட்டுகிறார்களாம் கேட்கவே வேடிக்கையாக இருக்கின்றது.

உங்கள் கருத்துக்களை எங்கும் முன் வையுங்கள்.அன்புடன் அழைக்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயவனின் பெரியாரைச் சிறுமைப்படுத்தும் கருத்துக்களில் உடன்பாடு இல்லாவிட்டாலும், பல்வேறு விடயங்களில் அவர் வைக்கும் வித்தியாசமான கருத்துக்கள் விவாதத்தைச் செழுமைப்படுத்தியாதாகவே அமைந்துள்ளது. இப்படியானவர்கள் யாழை விட்டு விலகினால் சில "மேய்ப்பர்கள்" தாங்கள் சொல்லுவது எல்லாம் சரி என்று ஆக்கிவிடுவார்கள்..

தேடிச்சோறு நிதந்தின்று

பல சின்னஞ்சிறு கதைகள் பேசி

மனம் வாடித் துன்பமிக உழன்று

பிறர் வாடப் பல செயல்கள் செய்து

நரை கூடிக் கிழப்பருவமெய்திக்

கொடுங்கூற்றுக் கிரைஎனப் பின்மாயும்

பலவேடிக்கை மனிதரைப் போல்

நான் வீழ்வேன் என நினைத்தாயோ ?

என்று பாரதி கூறிய துணிவுள்ளவர்களில் நீங்களும் ஒருவர் என்று நினைத்தேன்..

Link to comment
Share on other sites

இப்படியானவர்கள் யாழை விட்டு விலகினால் சில "மேய்ப்பர்கள்" தாங்கள் சொல்லுவது எல்லாம் சரி என்று ஆக்கிவிடுவார்கள்..

தேடிச்சோறு நிதந்தின்று

பல சின்னஞ்சிறு கதைகள் பேசி

மனம் வாடித் துன்பமிக உழன்று

பிறர் வாடப் பல செயல்கள் செய்து

நரை கூடிக் கிழப்பருவமெய்திக்

கொடுங்கூற்றுக் கிரைஎனப் பின்மாயும்

பலவேடிக்கை மனிதரைப் போல்

நான் வீழ்வேன் என நினைத்தாயோ ?

என்று பாரதி கூறிய துணிவுள்ளவர்களில் நீங்களும் ஒருவர் என்று நினைத்தேன்..

அருமையான கருத்து கிருபன்ஸ்! பாராட்டுக்கள்!!

இதை தூயவனும் சிந்திப்பார் என எதிர்பார்க்கிறேன்!!!

Link to comment
Share on other sites

அச்சோ நேக்கு என்னவோ செய்யுது..(யாராச்சும் என்ன ஆசுபத்திரிக்கு கூட்டி கொண்டு போங்கோ) :D ..இது என்ன கொடுமை..சோதனை மேல் சோதனை போதுமடா சாமி.. :wub:

அண்ணா தூயவன் அண்ணா நீங்களே இப்படி சொல்லலாமா :lol: ...நீங்க எத்தனையோ விசயத்தை செதுக்குவியள் என்று நினைத்தன் கடசியில எல்லாத்தையும் ஒதுக்கிட்டியளே..(முடியல).. :D

என்ன எல்லாரும் தூயவன் அண்ணாவை வர சொல்லி கூப்பிடுறியள் அவர் நீங்க நினைக்கிற மாதிரி திருப்பி வருவாரா என்ன தூயவன் அண்ணா..(அவர் றோயல் பமிலி உறுப்பினராக்கும்).. :)

ம்ம்..கடசியா நான் என்ன சொல்ல வாறேன் என்டா..ஒதுங்குவது முக்கியமல்ல என்னதிற்காக ஒதுங்குகிறோம் என்பது தான் முக்கியம் :) இப்ப மழை பெய்யக்க ஒதுங்கி நிற்கிறோம் மழை முடிய வெளியாள வாறதில்ல என்ன தூயவன் நானா,எப்ப மழை நிற்குதோ அப்ப உங்களை கண்டால் மகிழ்ச்சி :D ...அது வரை கவனமா ஒதுங்கி இருங்கோ என்ன தூயவன் நானா..

பிறகு என்னன்டா அப்ப நான் போயிற்று வரட்டே :lol: ...(இப்ப கூட என்ன வந்து திட்ட வேண்டும் என்று தூயவன் நானாவிற்கு கை துடிக்கும் ஆனா முடியாதே)..நன்ன காலம் நான் தப்பிட்டன்.. :)

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா கையால அடைக்கிறதிற்கு நானொன்னும் வாய்கால் இல்ல காட்டாறு" :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

தூய்ஸ் உங்கட முடிவை மாத்துங்க என்று என்னால சொல்ல முடியாது ஏனெண்டா உங்கள இந்த முடிவு எடுக்க தூண்டியதற்கான காரணம் அல்லது காரணங்கள் பற்றி எனக்கு தெரியாது :unsure:

நான் களத்தில எழுத நேரம் இல்லாiமையால எழுதுவதில்லையே தவிர உங்கட கருத்துகளை வாசிக்கிறனான்.

தயவு செய்து போக வேண்டாம் என்பது எனது கருத்து. பதில் வருமா தூய்ஸ்

Link to comment
Share on other sites

எனக்கு ஒத்துழைத்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. ஏற்கனவே சொன்னது போல இக்களத்தில் இருந்து ஒதுங்கிக் கொள்கின்றேன். தனிப்பட்ட விதத்தில் தொடர்பு கொள்ள விரும்புவர்கள் yarlthuyawan@hotmail.com என்பதூடாகத் தொடர்பு கொள்ளுங்கள்.

நன்றி

ஏன் என்ன நடந்தது நானும் கன காலமாய் இங்கு இல்லை...யாராவது சொல்லுங்கோவன்???

Link to comment
Share on other sites

ஏன் என்ன நடந்தது நானும் கன காலமாய் இங்கு இல்லை...யாராவது சொல்லுங்கோவன்???

வாங்கோன்னா வாங்கோ..(எங்க ஆள காணவே இல்ல?? :unsure: )...என்ன நடந்ததோ அத நானே சொல்லுறன் என்ன கேட்டு போட்டு பிறகு என்ன ஏசகூடாது சொல்லிட்டன்.. :wub:

"எது வெட்டுபட்டதோ அது நன்றாகவே வெட்டுபட்டது

எது வெட்டுபட போகிறதோ அது நன்றாகவே வெட்டுபடும்

எதை நீ எழுதினாயோ அது வெட்டுபடுவதிற்கே

எதை நீ எழுத போகிறாயோ அதுவும் வெட்டுபடுவதிற்கே

இன்றைய வெட்டு உனக்கென்றால்

நாளை மற்றொருவருக்கு

மற்றொரு நாள் அது இன்னொருவருக்கு

இந்த மாற்றமே யாழ்கள நியதி" :unsure:

விளங்கிச்சோ இப்ப...இது வந்து கருத்து வெட்டபட்ட சோகத்தில இருந்த யாழ்கள மெம்பருக்கு ஜம்மு பேபியால் உபதேசிக்கபட்டது என்றா பாருங்கோவேன் :wub: ..இப்ப உங்களுக்கு விளங்கிச்சோ அண்ணா இதுக்கு மேலையும் விளங்கபடுத்தனுமா??.. :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

quote name='Jamuna' date='May 16 2008, 09:51 AM' post='410662']

[

"எது வெட்டுபட்டதோ அது நன்றாகவே வெட்டுபட்டது

எது வெட்டுபட போகிறதோ அது நன்றாகவே வெட்டுபடும்

எதை நீ எழுதினாயோ அது வெட்டுபடுவதிற்கே

எதை நீ எழுத போகிறாயோ அதுவும் வெட்டுபடுவதிற்கே

இன்றைய வெட்டு உனக்கென்றால்

நாளை மற்றொருவருக்கு

மற்றொரு நாள் அது இன்னொருவருக்கு

இந்த மாற்றமே யாழ்கள நியதி" :unsure:

விளங்கிச்சோ இப்ப...இது வந்து கருத்து வெட்டபட்ட சோகத்தில இருந்த யாழ்கள மெம்பருக்கு ஜம்மு பேபியால் உபதேசிக்கபட்டது என்றா பாருங்கோவேன் :unsure: ..இப்ப உங்களுக்கு விளங்கிச்சோ அண்ணா இதுக்கு மேலையும் விளங்கபடுத்தனுமா??.. :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஜம்முவுக்கு ஞானம் பிறந்திடிச்சு போல

ஜம்மு நன்னா எழுதி இருக்கிறியள்.

ஹீஹ்ஹீ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயவன் வளர்ந்து வரும் தற்பெருமையற்ற, விளம்பர நோக்கமற்ற, தாயக மற்றும் தமிழ் தேசியப் பற்றுள்ள ஒரு நல்ல கருத்தாளன்.

- - -

நாம் எமது கருத்தை முன் வைப்பதற்கு எவருக்கும் அஞ்சத் தேவையில்லை. யாழ் களத்தில் உள்ள சில பேருடன் ஏற்படும் பிரச்சனைகளுக்கு யாழ் களம் பொறுப்பாக முடியாது.

எனினும் உங்கள் தனிப்பட்ட காரணங்களை யாழுக்காக கொஞ்சம் மாற்றி அமைக்க முடியும் என்றால் அமைக்க கேட்டுக் கொள்கின்றேன்.

ஒரு வளர்ந்து வரும் இளம் கருத்தாளனை இழப்பது என்பது மனவருத்தத்துக்குரிய ஒன்று..! :wub:

<<

நெடுக்ஸ் அண்ணை,

கருத்துக்களில் பலவற்றில்(குறிப்பாக பெண்களை மட்டம் தட்டும்போது) உங்களுடன்முரண் பட்டாலும் யாழை விட்டுப்போகின்றோம் என்று சொல்கின்ற உறவுகளை அரவணைப்பதில் நீங்க முதல் ஆள் அண்ணை.

தூயவன்,

நிலாவுக்கு பயந்து பரதேசம் செல்லமுடியாது என்பார்கள். அலை ஓய்ந்தால் தான் தலைமுழுக முடியும் என்றால் அது நடவாத காரியம்.

அநீதிகளை எதிர்த்து நில்லுங்கள் துணிந்து செல்லுங்கள். 'இப்படி விலகுகின்றேன் என்று சொல்வதெல்லாம் இன்றைய வரலாற்றில் சரித்திரம் படைக்கும் தேசியத்தலைவரின்" பிள்ளைகளுக்கு அழகல்ல!!

பொது இடங்களில் கேலிகளுக்கும்,கிண்டல்களுக்க

Link to comment
Share on other sites

எங்கே தூயவனை இன்னும் காணோம்?

Link to comment
Share on other sites

எங்கேப்பா ரோயல்பமிலி மெம்பர்?

ஆதியும் இங்கதானே கிடந்து காய்கிறேன். அவ்வளவு சீக்கிரமா தூயவன் விட்டுட்டு ஓட முடியுமா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.