Sign in to follow this  
பகுத்தறிவு

கடவுளை நம்ப முட்டாளே போதும்

Recommended Posts

கடவுளை நம்ப முட்டாளே போதும்

என்னைப்பற்றிச் சொல்ல வேண்டுமானால் கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்றோ, இல்லையென்றோ சொல்ல முன் வரவில்லை. அதுபோலவே நீங்கள் அனைவரும் என் பேச்சைக் கேட்டுத்தான் ஆக வேண்டுமென்று கூறவில்லை. இன்னொன்றும் சொல்கிறேன், கடவுள் இருக்கிறார் என்று சொல்லிக் கொள்ள அறிவாளி தேவையில்லை. சாதாரணமாக ஒரு முட்டாள்கூட சொல்லிவிடலாம். ஆனால், கடவுள் இல்லையென்று மறுத்துக்கூற ஒரு அறிவாளியால்தான் முடியும். மறுப்பதற்கான பல ஆதாரங்களைச் சொல்ல வேண்டும்; சிந்தித்து அதற்கான காரணங்களைக் கூற வேண்டும். உலகில் இன்று கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் சுமார் 100 கோடி மக்கள் இருப்பார்கள். கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள் சற்றுக் கூடுதலாக இருப்பார்கள்.

நாம் எல்லோரும் கடவுள் நம்பிக்கை உடையவர்களா? அப்படியானால் முகம்மதியர், கிறித்தவர் இவர்கள் நிலை என்ன? கிறித்தவர், முகம்மதியர்களுக்கு கடவுள் ஒன்று தானே! கிறித்தவர், முகம்மதியர்களை, உங்கள் கடவுள் எப்படியிருக்கிறார் என்று கேட்டால், யோக்கியமான கடவுள் என்கிறான்; அதற்கு உருவம் கிடையாது என்று சொல்லுகிறான். ஒழுக்கமே உருவானவர், கருணையை உடையவர், அவருக்கு ஒன்றும் தேவையில்லை என்று வேறு சொல்லுகிறான். ஏன் அப்படிப்பட்ட கடவுள் உங்களுக்கு இருக்கக்கூடாது என்று கேட்கிறேன்.

அவனுக்கு ஒரே ஒரு கடவுள் என்றால் நமக்கு எத்தனை ஆயிரம் கடவுள்கள்? அவர்களின் பெயர்களை எழுத வேண்டுமென்று ஆரம்பித்தால் மைதான் தீர்ந்துவிடுமே தவிர பெயர்கள் முடிவடையாதே! அதற்கெல்லாம் என்ன ஆதாரம்? யாராவது ஒரு பார்ப்பானைக் கேளுங்கள் எப்படி அந்தக் கடவுள்கள் ஏற்பட்டன, எப்போது, எங்கே என்று கோடிக்கணக்கிலா நமக்குக் கடவுள்கள் இருப்பது? நாங்கள் தலையெடுத்து இதையெல்லாம் கேட்காமல் விட்டிருந்தால் மைல் கற்கள், பர்லாங்குக் கற்கள் எல்லாம் கடவுள்களாகி இருக்குமே. படுத்திருக்கிற அம்மிக்கல்லை எடுத்து நிறுத்திவைத்து குங்குமம் மஞ்சள் பூசி விட்டுவிட்டால் அதுவும் ஒரு கடவுள். இதையெல்லாம் யார் கேட்கிறார்கள். இதைப்பற்றி நீங்கள் சிறிதளவாவது சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

யானை, பன்றி, மீன், காக்கை, எருமை, பாம்பு இந்த உருவமுள்ளது எல்லாம் நமக்குக் கடவுள்கள், இவை எல்லாம் எதற்காக? புற்றைக் கண்டால் பால் ஊற்றுகிறான்; கழுகு ஆகாயத்தில் பறந்தால் கன்னத்தில் அடித்துக் கொள்கிறான்; மாட்டைப் பார்த்தால் கும்பிடுகிறான். ஒரு கடவுளுக்கு யானை முகம், மூன்று முகம் அய்ந்து முகம், 10 முகம், பானை வயிறு; இன்னொரு கடவுள் ஆயிரம் தலையுடையாள், இரண்டாயிரம் கையுடையாள். இந்த கடவுள்களுக்கெல்லாம் என்ன வேலை?

எதையும் சிந்திக்கும் குணம் மக்களுக்கு இருக்க வேண்டியது அவசியம். அக்குணம் நமக்கு இல்லாததால்தான் மற்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் நம் நாட்டில் ஏற்படவில்லை. யார் எதைச் சொன்னாலும் காதுகொடுத்துக் கேட்க வேண்டும். நம் பெரியார் வள்ளுவர் சொல்லியிருக்கிறார்; ``எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு'' என்று ஆகவே, சிந்தித்து உண்மையைக் கண்டு பிடிப்பதுதான் அறிவுடைமைக்கு அடையாளம். மற்றுமோர் குறளில், ``எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு'' என்று எழுதியுள்ளார். சிந்தித்தால் பாவம், நினைப்பதும் பாவம் என்று அடக்கி வைத்து இருக்கிறார்கள் சில கூட்டத்தார்!

எந்தத் தன்மையுடையதனாலும் சரி ஆராய வேண்டும். ஆனால் சில விஷயங்களில் அதாவது கடவுள், சாஸ்திரம், புராணம், இதிகாசம் முதலியவற்றை ஆராய்வதில் நம் அறிவு பயன்படுத்தப்படுவதில்லை. இது எப்படிப்பட்ட அடக்குமுறை? சொந்த அறிவை உபயோகித்தால் உபயோகிப்பவன் ``நாஸ்திகன்'', அவன் பாவி, அவன் வெளியேற்றப்பட வேண்டும் என்பது நீதியா? ஆகவேதான் நான் சொல்லுகிறேன், கடவுள் துறையிலே நாம் காட்டுமிராண்டிகளாகிவிட்டோம

Share this post

Link to post
Share on other sites

கடவுளை நம்ப முட்டாளே போதும் என்கிறீர்கள்....

ஆனால் போட்டுத்தாக்குவது இந்துக்கடவுள்களை.....

கடவுள் என்றாலே இந்துக்கடவுள்கள்தானா......

சரி அதை விடுவோம்...

எப்போதும் பிரச்சினைகளை மட்டுமே சொல்கிறீர்கள் தீர்வை மட்டும் சொல்ல மாட்டேங்கிறீங்க.....

என்ன எல்லா இந்துக்களும் முஸ்லீமாகவோ கிறிஸ்தவனாகவோ மாறினால் உங்க பிரச்சினைய்யெல்லாம் தீர்ந்து வேற பிரச்சினை பற்றி பேசுவீங்களா.....

இன்னும் எவ்ளோ காலம் தான் பகுத்தறிவு புண்ணாக்கு பற்றி பேசிக்கொண்டிருக போகிறீர்கள்....

பெரியாரிசம் எப்போதோ செத்துவிட்டது....

இன்னமும் பொணத்த தூக்கிட்டு அலையாதிங்க....

- - -

Edited by வலைஞன்
நீக்கப்பட்டுள்ளது

Share this post

Link to post
Share on other sites

டியர் பகுத்தறிவு! கொஞ்சம் இதை ஆழந்து வாசியுங்கள்.

இந்தப் பிரபஞ்சத்தின் அடிப்படை மூலங்களான இலத்திரன், நியூட்ரான், புரோட்டான் போன்ற துகள்களைச் சுக்கு நூறாய் கோடிகோடியாய்த் தூள்தூளாக்கும் போது ஒரு ஒன்றுமில்லாத சூன்யம் மிஞ்சி நிற்கும்.

அந்த ஒன்றுமில்லாச் சூன்யத்திலிருந்து தோன்றியதுதூன் இந்தப் பிரபஞ்சமும் நாமும்.

அந்தச் சூன்யமே கடவுள். அவனே நம்மை ஆக்கிய சிருஷ்டிகர்த்தா. அவனை நம்பாமல் இருக்க முடியாது. ஏனெனில் காரணமின்றிக் காரியமில்லை.

அந்தச் சூன்யன் அனுபவப் பொருளாவானேயன்றி எமது மூளையால் கிரகிக்கக்கூடியவனல்ல.

அவனை அனுபவிக்க அந்த ஒன்றுமில்லாச் சூனியத்திற்குள் செல்லவேண்டும். அது எங்கேயிருக்கிறது தெரியுமா? சித் அம்பரவெளியல் (சிதம்பரவெளி) அதாவது சித்தாகாசத்தில் இருக்கிறது.

அதாவது உங்கள் உள்ளத்தினுள்ளே தன்னுணர்வைக் கடந்து செல்லும்போது அச் சூனியத்தை அனுபவிக்க முடியும்.

கடவுளைப் பற்றி உங்கள் மூளை வைத்திருக்கும் கருதுகோள்களையெல்லாம் தூக்கி எறிந்து விட்டு அச் சூனியவெளியுள் செல்லுங்கள். கடந்து செல் உள்ளே அங்குதான் கடவுளைக் காணலாம் - அல்ல அல்ல அனுபவிக்கலாம். அந்த அனுபவத்திற்கு எல்லையேயில்லை. போகப்போக இன்னும் கட உள், கட உள், கடவுள்தானுண்டு.

ஆதியந்தமில்லா அரும்பெருஞ் சோதியாய் அவன் மிளிர்கிறான்.

நோக்கரிய நோக்காய் நுணுக்கரிய நுண்ணுணர்வாய் போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனாய் அவன் அங்கே உள்ளானய்யா. சத்தியமாய்ச் சொல்லுகிறேன் அவன் அங்கேயுள்ளான். அனுபவித்துப் பாரும்.

கடவுளென்றால் யாரென்று சிந்தியாமல் சும்மா சமயங்கள் கூறும் தெய்வங்களைப்பற்றி வேண்டுமானால் முட்டாள்களோடு பொழுது போக்காக வாதிட்டுக்கொண்டிருக்கலாம். ஆனால் அது எல்லாரிடமும் செல்லாது.

அந்தச் சூன்யமே கடவுள்.

அருமையான கருத்து. சரியாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள். வணக்கங்களும் பாராட்டுக்களும். இதை பயிற்சி செய்பவர்கள் தோற்பதில்லை.

பூஜ்யத்துக்குள்ளே ஒரு ராஜ்யத்தை ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன்!

அவனை புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்.!!

இது புத்தகங்களின் மூலம் தெரிந்து கொண்டதோ, பத்திரிகைகளில் வரும் கட்டுரைகளை வாசித்து அறிந்து கொண்டதோ அல்ல! பயிற்சியின் மூலம் புரிந்து கொண்டது.

ஒரு பகுதி ஏன் வெட்டப்பட்டதென்றே புரியவில்லை! எவரையும் குறித்து எழுதப்பட்டதும் அல்ல!! ஆனாலும் தேவையற்ற மனக்கசப்புகளை தவிர்ப்பதற்காக கருத்து திருத்தப்படுள்ளது ****நன்றி****

***

Edited by vettri-vel

Share this post

Link to post
Share on other sites

சூன்யம் என்றால் ஒன்றும் இல்லை.சூனியம் சமன் கடவுள், ஆகவே கடவுள் என்று ஒன்று இல்லை.

கடவுள் என்பவர்/என்பது இல்லாதா சூனியமான ஒன்று என்பதற்கான அருமையான விளக்கம்.

நன்றிகள்.

***

கரு சொல்ல வருவது.. மனித அறிவால் அறியப்படாத அந்தச் சூனியத்துள்... (சூனியம் - ஒன்றுமில்லாதது என்பது தற்போதைய நிலையில் மனித அறிவுக்கு மட்டுமே) இருப்பது இறைவனின் கூறாகலாம் என்பதைத்தான். அறிவியலும் கடவுளின் துகள் என்று தேடுவதும்.. அந்தச் சூனியத்துள் என்னென்ன அடங்கும் என்பதை அறியவே அன்றி.. கடவுள் என்பதை இல்லையெனவோ.. இருக்கெனவோ நிறுவவல்ல. அதற்கான அறிவுமட்டம் மனிதனிடம் இன்னும் உருவாகவில்லை..! இதை உணராமல் இருக்கின்றனர் பலர். கருவின் கருத்து அருமையான ஒரு விளக்கம்..! பாராட்டுக்கள். :wub:

Edited by இணையவன்
*** உறுப்பினர் பற்றிய கருத்து நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

Share this post

Link to post
Share on other sites

ஒரு கதை உண்டு. ஒரு நெசவாளார் / தையல்காரர் தங்கத்தில் ஆடை ராசாவிற்கு செய்யப்போவதாக கூறிவிட்டு நல்லவர்கள் கண்களுக்கு மட்டும் தான் அந்த ஆடை தெரியும் என கூறினானாம். ப்வாங்கும் தங்கத்தையெல்லாம் அபேஸ் செய்துவிட்டுவானாம். நெய்வதை பார்க்கவரும் பொழுது வெறும் கைத்தறியை ஆடை நெய்வது போல நடிப்பனாம். ஏற்கனவே அந்த தெரியும் தெரியாது கண்டிசனால் இல்லாத ஆடை ஒன்றை இருப்பதாக அனைவரும் ஒப்புக்கொண்டனர். வேறுவழி.

ஒருநாள் தைத்து முடித்ததாக கூறி ராசாவுக்கு ஆடை அணிவிப்பதாக கூறி நடித்தானாம். உண்மையில் ஆடை அணியாமல் ராசாவும் அம்மணமாய் கேள்வி கேக்காமல் ஊர்கோலம் போனானாம். தெருவழியே செல்லும் பொழுது யாரும் பேசமால் ராசவை வேடிக்கை பார்க்க ஒரு சிறுவன் ராசாவின் கோலத்தைப்பார்த்து கைகொட்டிச் சிரித்தனாம். ராசாவும் வெட்கித்தலைகுனிந்தானாம். இக்கதை போல இல்லாத ஒன்றை அதோ பார் துகள் இதோ பார் துகள் அதுதான் கடவுள் என கூறி நடித்துக் கொண்டிருப்பவர்களை எண்ணி தலையில் அடித்துக் கொள்ளவேண்டியது தான். :wub:

Share this post

Link to post
Share on other sites

***

கரு சொல்ல வருவது.. மனித அறிவால் அறியப்படாத அந்தச் சூனியத்துள்... (சூனியம் - ஒன்றுமில்லாதது என்பது தற்போதைய நிலையில் மனித அறிவுக்கு மட்டுமே) இருப்பது இறைவனின் கூறாகலாம் என்பதைத்தான். அறிவியலும் கடவுளின் துகள் என்று தேடுவதும்.. அந்தச் சூனியத்துள் என்னென்ன அடங்கும் என்பதை அறியவே அன்றி.. கடவுள் என்பதை இல்லையெனவோ.. இருக்கெனவோ நிறுவவல்ல. அதற்கான அறிவுமட்டம் மனிதனிடம் இன்னும் உருவாகவில்லை..! இதை உணராமல் இருக்கின்றனர் பலர். கருவின் கருத்து அருமையான ஒரு விளக்கம்..! பாராட்டுக்கள். :wub:

மனித அறிவுக்கு எட்டாததை நீங்கள் எவ்வாறு எட்டியதாக, கடவுளாகச் சிதரிபீர்கள்? அதற்க்கு கற்பனையான வடிவத்தைக் கொடுபீர்கள்?இவ்வறு கற்பனைகளில் மிதப்பது அறிவியல் அல்ல.

தெரியாத அறியாத விடயத்தைத் தெரியாது என்று தான் கூற வேண்டும்.கடவுளைப்பற்றி தெரியாது என்றால் தெரியாது என்று தான் கூற வேண்டும்.தெரியாத ஒன்றுக்கு வடிவம் கொடுத்து அதனை வணங்குவது அறிவிலித்தனம்.

அறிவியல் ரீதியான பார்வை தெரியாததைத் தெரிந்து கொள்ள முயற்ச்சிப்பது.கற்பனைகள் அறிவியல் அல்ல.

அணுத்துகளைப் பிளந்து உப அணுக்களைக்கண்டு கொண்டிருப்பது அறிவியல் .அதற்கான கருவிகளை வடிவமைத்து அதனைகாண்பதற்கான் பரிசோதனைகளைச் செய்வது அறிவியல்.

கடவுள் என்று ஒரு கற்பனையான வடிவைதைக்கொடுத்து வெறும் கற்பனைகளின் அவனைக் கண்டேன் என்று மிதப்பது அறிவியல் அல்ல.பலராலும் பிரதியீடு செய்து மீள நிகழத்தப்படக் கூடிய பரிசோதனைகளின் வாயிலாகவே அறிவியல் வெளிப்படுகிறது.

:lol:

Edited by இணையவன்
மேற்கோள் காட்டப்பட்ட கருத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. - இணையவன்

மனிதன் சான்றுகளூடு நிரூபிக்க முடியாது இருக்கிறானே தவிர உணராமல் இல்லை. இப்போ கையில் சுடுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்தச் சுடுகிறதைச் செய்வது என்ன..???! வெப்பம்.. அந்த வெப்பத்தை ஆக்கியுள்ளது என்ன..??! அதை மனிதனால் நிறுவ முடியுமா..??! இல்லை. ஆனால் வெப்பத்தை உணர முடியும்.

அதேபோல் தான்.. கடவுள் என்ற அந்த சிந்தனையை மனிதன் உணர முடிகிறது. ஆனால் நிறுவ முடிவதில்லை. நிறுவ முடியவில்லை என்பதற்காக அது இல்லை என்பதாகிடாது. அப்படி என்றால் மனிதனால் நிறுவ முடியாத பலதும் இல்லை என்றாகி இருக்க வேண்டும். அப்படி இருந்திருந்தால் இன்று கண்டுபிடிப்புக்களுக்கே தேவை எழுந்திராது..! :wub:

Share this post

Link to post
Share on other sites

GODISNOWHERE

மேலே உள்ளதை GOD IS NOW HERE என்றும் வாசிக்கலாம் அல்லது GOD IS NOWHERE என்றும் வாசிக்கலாம். அது அவர் அவர் வாசிக்கும் விதத்தை பொறுத்தது. அது போல் அனுபவங்களும் மனிதருக்கு வேறு வேறானவை தான் :wub:

Edited by vettri-vel

Share this post

Link to post
Share on other sites

//மனிதன் சான்றுகளூடு நிரூபிக்க முடியாது இருக்கிறானே தவிர உணராமல் இல்லை. இப்போ கையில் சுடுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்தச் சுடுகிறதைச் செய்வது என்ன..???! வெப்பம்.. அந்த வெப்பத்தை ஆக்கியுள்ளது என்ன..??! அதை மனிதனால் நிறுவ முடியுமா..??! இல்லை. ஆனால் வெப்பத்தை உணர முடியும்.

அதேபோல் தான்.. கடவுள் என்ற அந்த சிந்தனையை மனிதன் உணர முடிகிறது. ஆனால் நிறுவ முடிவதில்லை. நிறுவ முடியவில்லை என்பதற்காக அது இல்லை என்பதாகிடாது. அப்படி என்றால் மனிதனால் நிறுவ முடியாத பலதும் இல்லை என்றாகி இருக்க வேண்டும். அப்படி இருந்திருந்தால் இன்று கண்டுபிடிப்புக்களுக்கே தேவை எழுந்திராது..! //

வெப்பம் என்றால் என்ன ?அது எதனால் ஆனது? அதனை எவ்வாறு அளவிட முடியும் அதற்கான பரிசோதனைகள் என்ன ? என்பதெல்லாம் பவுதீகம் தெரிந்த எந்த பாடசாலைக் குழந்தைக்கும் தெரிந்த விடயங்கள்.இது பற்றி மேலும் சொன்னால் அது கருதாடலைத் திசை திருப்பி விடும் மேலும் தெரிந்து கொள்ள வேண்டியவர்கள் இந்த இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.

http://en.wikipedia.org/wiki/Heat

மனித உணைவுகளால் அறிவியல் நிறுவப்படுவதில்லை.பல மன வியாதி கொண்டவர்கள் போதையில் மிதப்பவர்கள் எல்லோரும் பல் வேறு உணர்வுகலுக்கு ஆளாகிறார்கள்.இவை எல்லாம் அறிவியல் என்றால் மனப் பிறழ்வுகளைக் கொண்டவர்கள் போதை ஏறியவர்கள் கஞ்சா அடித்தவர்கள் சித்தப்பிரமை கொண்டோர் சொல்லும் உணர்வுகள் தான் அறிவியல் என்றாகி விடும்.இவ்வாறானவர்கள் தாங்கல் கடவுளைக் கண்டதாகச் சொல்லி உள்ளார்கள்.இவற்றை எல்லாம் அறுவுள்ள மனிதரோ அறிவியலோ கணக்கில் எடுக்க முடியுமா?

Share this post

Link to post
Share on other sites

வெப்பம் என்றால் என்ன ?அது எதனால் ஆனது? அதனை எவ்வாறு அளவிட முடியும் அதற்கான பரிசோதனைகள் என்ன ? என்பதெல்லாம் பவுதீகம் தெரிந்த எந்த பாடசாலைக் குழந்தைக்கும் தெரிந்த விடயங்கள்.இது பற்றி மேலும் சொன்னால் அது கருதாடலைத் திசை திருப்பி விடும் மேலும் தெரிந்து கொள்ள வேண்டியவர்கள் இந்த இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.

***

வெப்பம் என்பது சக்தியின் ஒரு வடிவம். அதை மறைமுகமாக அளவிடுவது என்பது பெளதீகத்தில் உள்ள விடயம். நான் கேட்டது அவையல்ல. அந்த வெப்ப சக்தியை ஆக்கியுள்ளதற்கான கூறு அல்லது அடிப்படை என்ன..??! இன்னும் விளக்கமாகக் கூறின் சக்தியை ஆக்கவோ அழிக்கவோ முடியாது என்பதாயின்.. ஆரம்பத்தில் அது எப்படி ஆக்கப்பட்டது..??! சக்தியை ஆக்கியுள்ள கூறு என்ன.. என்பதுதான்..!

வெப்பத்தை அளவிடக் கருவி நேரடியாக இல்லை. வெப்பமானி வெப்பநிலையை அளக்கும் கருவி. வெப்பத்தை அளப்பதல்ல. வெப்பநிலை அது சார்புக் காரணி ஆகும்..!

***

Edited by இணையவன்
*** உறுப்பினர் பற்றிய கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. - இணையவன்

Share this post

Link to post
Share on other sites

நான் எழுதியதைப் பாராட்டி ஆதரித்த வெற்றிவேலுக்கும், நாரதருக்கும், நெடுக்ஸ{க்கும் முதற்கண் நன்றி கூறுகிறேன். இருபக்கத்தாராலும் பாராட்டப்படுவது மகிழ்ச்சி தருகிறது. ஆனாலும்

இது நாரதருக்கான பதில்:

நண்பரே! இருக்கின்ற சூனியத்தை இல்லையென்று கூறி அந்தச் சூன்யனையே மறுக்கும் உங்களை எதில் சேர்ப்பது என்று புரியவில்லை. ஏனெனில் பகுத்தறிவாளர்களே இதை மறுத்ததில்லை.

ஐயா! அந்தச் சூனியப் பரவெளியில்தான் நாம் இருக்கிறோம் அதை இல்லையென்றால் நீங்களே இல்லையென்பதை அறிவீர்களா! தப்பு. உணர்வீர்களா!

நீங்கள் தங்கியிருக்கும் பரவஸ்துவையே மறுக்கிறீர்களே உங்கள் சிந்தையை எது மறைத்து நிற்கிறது.

மரத்தை மறைத்தது மாமத யானை

மரத்தில் மறைந்தது மாமத யானை

அதுபோல

பரத்தை மறைத்தது பார்முதற் பூதம்

பரத்தில் மறைந்தது பார் முதற் பூதம்

பூதமென்பது ஐம்பூதங்களைக் குறிக்கும் அவை நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்பன.

(வேண்டுமானால் நிலத்தையும் நீரையும் தீயையும் காற்றையும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள 108 - இந்த எண்ணிக்கை ஒன்றிரண்டு கூடலாம் அல்லது குறையலாம் - மூலகங்களுக்குள்ளும் வகுத்துக் கொள்ளுங்கள்).

அப் பூதங்கள் தங்கி நிற்கும் ஆகாயத்தைத் தாங்கியபடி பரந்து நிற்கிறதையா இந்தப் பரவெளி. அந்தப் பரமனாம் சூன்யவெளி. அதையா இல்லையென்கிறீர்கள்.

இதை லொஜிக் என்று நினைத்துக் கொண்டீர்களா? உங்களது மூளையைக் கொண்டு மாற்றிப் பிடித்து வாதம் புரிவதற்கு.

இது உண்மை. அனுபூதிமான்கள் கண்ட அனுபவப் பேருண்மை.

தயவு செய்து உள்ளே செல்லுங்கள். கண்டறிவீர்கள்.

தட்டுங்கள் திறக்கப்படும். தேடுங்கள் கிடைக்கும். ஆம். கண்டடைவீர்கள். இது சத்தியம்.

போக வழி தெரியாவிட்டால் வழியையும் காட்டித்தரலாம். கேளுங்கள். தரப்படும்.

Share this post

Link to post
Share on other sites

***

இன்னும் விளக்கமாகக் கூறின் சக்தியை ஆக்கவோ அழிக்கவோ முடியாது என்பதாயின்.. ஆரம்பத்தில் அது எப்படி ஆக்கப்பட்டது..??! சக்தியை ஆக்கியுள்ள கூறு என்ன.. என்பதுதான்..!

உங்களின் அடிப்படைக் கேள்வி சக்தி எங்கிருந்து வந்தது என்பதே.அணுவும் சக்தியும் இரு கூறு நிலைகள்.சக்தியி அணுவாக்கூடியது அணு சக்தியாகக் கூடியது.ஆனால் இரண்டும் எங்கிருந்து வந்தது என்பது எவருக்கும் தெரியாதது.அதனைத் தெரிந்தால் இந்த உலகம் எங்கிருந்து வந்தது என்று தெரிந்துவிடும்.

மேற் சொன்ன கேள்விகளுக்கு அறிவியலில் விடை காணப்படவில்லை.மனிதர்களால் இன்னும் அவற்றிற்கான விடைகல் காணப்படவில்லை.இவற்றை நாங்கல் மனிதக்கற்பனைகளில் இருந்து விளக்க முடியாது.இல்லாத ஒன்றை உருவகிப்பது தெரியாத ஒன்றை அது இங்க்ருன்டு வந்திருக்கலாம் என்றெல்லாம் ஊகிப்பது அறிவியல் அல்ல.சக்தியோ அணுவோ இங்க்ரிந்து தன வந்தது என்றி நிறுவுவதே அறிவியல்.

மாற்றாக மதம் என்பது தெரியாத கேள்விகலுக்கா விகளை கற்பனைகளில் இருந்து தெரிவிக்கிறது.

Edited by இணையவன்
*** மேலே தணிக்கை செய்யப்பட்ட கருத்திற்கான பதில் நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

Share this post

Link to post
Share on other sites

***

உங்களின் அடிப்படைக் கேள்வி சக்தி எங்கிருந்து வந்தது என்பதே.அணுவும் சக்தியும் இரு கூறு நிலைகள்.சக்தியி அணுவாக்கூடியது அணு சக்தியாகக் கூடியது.ஆனால் இரண்டும் எங்கிருந்து வந்தது என்பது எவருக்கும் தெரியாதது.அதனைத் தெரிந்தால் இந்த உலகம் எங்கிருந்து வந்தது என்று தெரிந்துவிடும்.

மேற் சொன்ன கேள்விகளுக்கு அறிவியலில் விடை காணப்படவில்லை.மனிதர்களால் இன்னும் அவற்றிற்கான விடைகல் காணப்படவில்லை.இவற்றை நாங்கல் மனிதக்கற்பனைகளில் இருந்து விளக்க முடியாது.இல்லாத ஒன்றை உருவகிப்பது தெரியாத ஒன்றை அது இங்க்ருன்டு வந்திருக்கலாம் என்றெல்லாம் ஊகிப்பது அறிவியல் அல்ல.சக்தியோ அணுவோ இங்க்ரிந்து தன வந்தது என்றி நிறுவுவதே அறிவியல்.

மாற்றாக மதம் என்பது தெரியாத கேள்விகலுக்கா விகளை கற்பனைகளில் இருந்து தெரிவிக்கிறது.

***

இப்போ விடயத்துக்கு வருவோம்..

அறிவியல் கடவுள் என்பதை நிராகரிக்கவும் இல்லை நிறுவவும் இல்லை. விஞ்ஞானத்துக்கு சமாந்தரமாக மெஞ்ஞானம் என்ற ஒன்றும் உள்ளது. அது மனிதனின் ஆழ்ந்த சிந்தனையின் உணர்வின் பால் எழுவது. உதாரணத்துக்கு "அன்பு" என்பதை உணரலாம். அதை அறிவியல் கொண்டு அடையாளம் காட்டிட முடியுமா.. அளந்திட முடியுமா..??! முடியாது. அது மனித மூளையில் உணரப்படும் ஒரு உள்ளுணர்வு சார்ந்தது. அதன் பிறப்பு.. மூலம் எதுவும் அறிவியலுக்குத் தெரியாது. ஆனால்.. உணரப்படுகிறது. அதற்காக அன்பு என்பதை அறிவியல் படி நேரடியாக அடையாளம் காணவோ நிறுவவோ முடியாததால் அப்படி ஒன்றில்லை என்பீர்களோ..??!

இப்படியான மனித உள்ளுணர்வுகளை விளக்குவதுதான் மெஞ்ஞானம். அது மனித சிந்தனையின் படி உணர்ந்து கடவுளைத் துணிகிறது. ஆனால் அதை நிறுவிட முடிவதில்லை. அதற்காக கடவுள் இல்லை என்றும் கூறிட முடியாது இருக்கு என்றும் கூறிட முடியாது அறிவியல் ஆதாரமாக அவற்றைக் கொண்டு..!

எனவே கடவுள் இருக்கென்று உள்ளுணர்வால் உணர்பவனை பழிக்க முடியாது..! :rolleyes:

Edited by இணையவன்
*** தணிக்கை செய்யப்பட்ட கருத்திற்கான பதில் நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

Share this post

Link to post
Share on other sites

கரு அவர்களே,

நீங்கள் சொல்லும் சூன்யத்தை உணர்வதால் எனக்கு மோட்சம் கிட்டுமா?

Share this post

Link to post
Share on other sites

***

இப்போ விடயத்துக்கு வருவோம்..

அறிவியல் கடவுள் என்பதை நிராகரிக்கவும் இல்லை நிறுவவும் இல்லை. விஞ்ஞானத்துக்கு சமாந்தரமாக மெஞ்ஞானம் என்ற ஒன்றும் உள்ளது. அது மனிதனின் ஆழ்ந்த சிந்தனையின் உணர்வின் பால் எழுவது. உதாரணத்துக்கு "அன்பு" என்பதை உணரலாம். அதை அறிவியல் கொண்டு அடையாளம் காட்டிட முடியுமா.. அளந்திட முடியுமா..??! முடியாது. அது மனித மூளையில் உணரப்படும் ஒரு உள்ளுணர்வு சார்ந்தது. அதன் பிறப்பு.. மூலம் எதுவும் அறிவியலுக்குத் தெரியாது. ஆனால்.. உணரப்படுகிறது. அதற்காக அன்பு என்பதை அறிவியல் படி நேரடியாக அடையாளம் காணவோ நிறுவவோ முடியாததால் அப்படி ஒன்றில்லை என்பீர்களோ..??!

இப்படியான மனித உள்ளுணர்வுகளை விளக்குவதுதான் மெஞ்ஞானம். அது மனித சிந்தனையின் படி உணர்ந்து கடவுளைத் துணிகிறது. ஆனால் அதை நிறுவிட முடிவதில்லை. அதற்காக கடவுள் இல்லை என்றும் கூறிட முடியாது இருக்கு என்றும் கூறிட முடியாது அறிவியல் ஆதாரமாக அவற்றைக் கொண்டு..!

எனவே கடவுள் இருக்கென்று உள்ளுணர்வால் உணர்பவனை பழிக்க முடியாது..! :rolleyes:

ஆகவே தெளிவாக அறிவியல் ரீதியா கடவுள் உண்டு என்று சொல்லமுடியாது என்பதை ஏற்றுக்கொள்கிறீர்கள்.

அடுத்தாக இந்த உள் உணர்வு என்பது என்ன?

உணர்வு என்பது என்ன? மனித உட் சிந்தனை.மனிதனின் உட் சிந்தனை எதனால் நிகழ்கிறது?

வெளி உலகதில் இருந்து அவன் பெறும் அனுபவங்கள்,கற்பிதங்கள் வாயிலாக, சுய சிந்தனை வாயிலாக, அவனது உடற் கூற்று நிலைக்கு ஏற்ப எனப் பல காரணிகளைச் சொல்லலாம்.இவை மனிதருக்கு மனிதர் வித்தியாசப்படும்..ஆபிரிக்காவ

ில் ஒருவர் சிவனைக் காணமாட்டார், அராபியாவில் ஒருவர் முருகனைக் காணமாட்டார் ஏனெனில் அவர்கள் அவ்வாறான ஒரு புற வயச் சூழலால் வளர்க்கப்படவில்லை.குடி போதையில் ஒருவர் கடவுளைக் கண்டதாகச் சொல்வார்,ஒருவர் தான் போதை மருந்து உட் கொண்ட நிலையில் ஏற்படும் மன விகார நிலையில் கண்டதாகச் சொல்வார் .இவ்வாறாகப் பலபேர் பலவிதமாகச் சொல்வார்கள்.ஆகவே ஒருவரின் உணர்வு நிலையில் இருந்து கடவுள் உண்டு என்னும் ஒரு முடிவுக்கு எவரும் வர முடியாது.

உள் உணர்வால் உணருகிறோம் என்று சொல்பவர்களிடம் நாங்கள் கூறுகிறோம் நாங்கள் உங்களை நம்பத் தயாரில்லை என்று. நாங்கள் எமது அறிவைப் பாவித்து அறிவியல் ரீதியாகச் சிந்திக்கிறோம்.அறிவியல் ரீதியான ஆதரங்களைத் தாருங்கள் எங்கிறோம்.வெறுமையான உங்கள் சொற்களை நாங்கள் நம்பத் தயாரில்லை எங்கிறோம்.எனெனில் இந்த உலகில் எமது கண் முன்னால் நிகழும் வளர்ச்சி முன் நேற்றம் எல்லாவற்றிற்க்கும் அறிவியல் தான் காரணமாக இருக்கிறது.கற்பனையில் கடவுள்களைப் பறக்க வைத்தன சமயங்கள்.ஆனால் அதனை நிஜத்தில் நிகழ்த்திக் காட்டியது அறிவியல்.ஆகவே நீங்கள் சொல்வதை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று சொல்கிறோம்.இப்படிச் சொல்வது

எமது உரிமை.இதில் பழிப்பதற்கு ஒன்றும் இல்லை. :lol:

Share this post

Link to post
Share on other sites

நண்பர் சபேசன் அவர்களே!

சூன்யத்தை உணர்வதால் மோட்சம் கிடைக்குமா என்ற கேள்வியைக் கேட்டு என்னை மடக்கிவிட்டீர்கள். நான் தோற்றுப்போய் நிற்கிறேன். ஏனென்றால் எனக்கு மோட்சத்தைப் பற்றி அறவே எதுவும் தெரியாது. மேலும் சூனியமென்ற ஒன்றுக்குள் மோட்சமென்று இன்னொன்று இருக்கக்கூடுமென்றும் நான் இதுவரை நினைத்திருக்கவில்லை. சிலர் கைலாயமலையில் சிவபெருமான் சன்னதியில் மோட்சமிருப்பதாகக் கூறுகிறார்கள். சிலர் வைகுண்டத்தில் - (அது எங்குள்ளதோ நானறியேன்) உள்ளது என்கிறார்கள். உங்களிடம் அந்த மோட்சத்தைப்பற்றிக் கதையளந்தவர்கள் என்ன சொன்னார்களோ தெரியாது. மோட்சமென்றாலென்ன? அதுபற்றிய உங்கள் கருதுகோள் என்ன என்பதைப்பற்றிக் கூறினால் மட்டுமே அது உங்களுக்குக் கிட்டுமா கிட்டாதா என்பதைப்பற்றி என்னால் கொஞ்சமாவது சிந்தித்துக் கூறமுடியும்.

நான் முன்பே கூறிவிட்டேன். அந்தச் சூன்யப் பரவெளியை யாருங்கூறியோ அல்லது புத்தகங்களில் வாசித்தோ அறியமுடியாது. அது அனுபவப்பொருள் என்று. அதாவது அவரவர் அனுபவித்தே அதனை அறியவேண்டும். ஆனால் நண்பர்களோ புரிந்து கொள்ளாமல் கிளிப்பிள்ளைகளாய் நீங்கள் சொல்வதை நாங்கள் நம்பமுடியாது என்கிறார்கள். நண்பர்களே நம்பாதீர்கள். நம்பி விளங்கிக்கொள்ளும் பொருளல்ல இது. இது அனுபவப் பொருள். அனுபவித்து அறியுங்கள்.

மாம்பழத்தை அறியாதவனிடம் அதைப்பற்றி எத்தனை விளக்கங்களைக் கூறினாலும் அவன் அதைப் புரிந்துகொள்ளமாட்டான். அப்பழத்தில் ஒருதுண்டை வெட்டிச் சுவைத்துப்பார்த்தாலொழிய அவனால் அதன் சுவையைக் கற்பனையில் அறியமுடியாது. அவ்வாறுதான் கேட்பதும் வாசிப்பதும். புத்தகங்களெல்லாம் சுட்டுவிரல்களே. அவை சுட்டிநிற்கும் உண்மைப்பொருளை அனுபவித்துத்தான் அறியமுடியும். இங்கே யாரையும் எதையும் நம்பும்படி நான் கூறவரவில்லை. அப்படிக் கூறுவது முட்டாளத்தனமாகும்.

Share this post

Link to post
Share on other sites

***

வெப்பம் என்பது சக்தியின் ஒரு வடிவம். அதை மறைமுகமாக அளவிடுவது என்பது பெளதீகத்தில் உள்ள விடயம். நான் கேட்டது அவையல்ல. அந்த வெப்ப சக்தியை ஆக்கியுள்ளதற்கான கூறு அல்லது அடிப்படை என்ன..??! இன்னும் விளக்கமாகக் கூறின் சக்தியை ஆக்கவோ அழிக்கவோ முடியாது என்பதாயின்.. ஆரம்பத்தில் அது எப்படி ஆக்கப்பட்டது..??! சக்தியை ஆக்கியுள்ள கூறு என்ன.. என்பதுதான்..!

வெப்பத்தை அளவிடக் கருவி நேரடியாக இல்லை. வெப்பமானி வெப்பநிலையை அளக்கும் கருவி. வெப்பத்தை அளப்பதல்ல. வெப்பநிலை அது சார்புக் காரணி ஆகும்..!

***

நீங்கள் கூறவருவது உண்மைதான்................ ஆனால் இப்போது கேள்வி மாறுகிறது

ஒன்றுமே இல்லாத ஒன்றில் உங்களின் கடவுள் எவ்வாறு உண்டானார்.

விடைதெரிந்தால் நேரத்தை வீணடித்து எழுதவேண்டாம்............ அவ்வாறே அணுவும் உண்டாகியிருக்கலாம்தானே எனும் கேள்வி ஒன்றும் உங்களிடம்மிருந்தால் போதும். விடைகள் காத்திருக்கின்றன!

இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமே இருத்தலில் இருந்து வந்தவை.

இருத்தல் இருத்தலின்மையில் இருந்து வந்தது!

Edited by Maruthankerny

Share this post

Link to post
Share on other sites

நண்பர் சபேசன் அவர்களே!

சூன்யத்தை உணர்வதால் மோட்சம் கிடைக்குமா என்ற கேள்வியைக் கேட்டு என்னை மடக்கிவிட்டீர்கள். நான் தோற்றுப்போய் நிற்கிறேன். ஏனென்றால் எனக்கு மோட்சத்தைப் பற்றி அறவே எதுவும் தெரியாது. மேலும் சூனியமென்ற ஒன்றுக்குள் மோட்சமென்று இன்னொன்று இருக்கக்கூடுமென்றும் நான் இதுவரை நினைத்திருக்கவில்லை. சிலர் கைலாயமலையில் சிவபெருமான் சன்னதியில் மோட்சமிருப்பதாகக் கூறுகிறார்கள். சிலர் வைகுண்டத்தில் - (அது எங்குள்ளதோ நானறியேன்) உள்ளது என்கிறார்கள். உங்களிடம் அந்த மோட்சத்தைப்பற்றிக் கதையளந்தவர்கள் என்ன சொன்னார்களோ தெரியாது. மோட்சமென்றாலென்ன? அதுபற்றிய உங்கள் கருதுகோள் என்ன என்பதைப்பற்றிக் கூறினால் மட்டுமே அது உங்களுக்குக் கிட்டுமா கிட்டாதா என்பதைப்பற்றி என்னால் கொஞ்சமாவது சிந்தித்துக் கூறமுடியும்.

நான் முன்பே கூறிவிட்டேன். அந்தச் சூன்யப் பரவெளியை யாருங்கூறியோ அல்லது புத்தகங்களில் வாசித்தோ அறியமுடியாது. அது அனுபவப்பொருள் என்று. அதாவது அவரவர் அனுபவித்தே அதனை அறியவேண்டும். ஆனால் நண்பர்களோ புரிந்து கொள்ளாமல் கிளிப்பிள்ளைகளாய் நீங்கள் சொல்வதை நாங்கள் நம்பமுடியாது என்கிறார்கள். நண்பர்களே நம்பாதீர்கள். நம்பி விளங்கிக்கொள்ளும் பொருளல்ல இது. இது அனுபவப் பொருள். அனுபவித்து அறியுங்கள்.

மாம்பழத்தை அறியாதவனிடம் அதைப்பற்றி எத்தனை விளக்கங்களைக் கூறினாலும் அவன் அதைப் புரிந்துகொள்ளமாட்டான். அப்பழத்தில் ஒருதுண்டை வெட்டிச் சுவைத்துப்பார்த்தாலொழிய அவனால் அதன் சுவையைக் கற்பனையில் அறியமுடியாது. அவ்வாறுதான் கேட்பதும் வாசிப்பதும். புத்தகங்களெல்லாம் சுட்டுவிரல்களே. அவை சுட்டிநிற்கும் உண்மைப்பொருளை அனுபவித்துத்தான் அறியமுடியும். இங்கே யாரையும் எதையும் நம்பும்படி நான் கூறவரவில்லை. அப்படிக் கூறுவது முட்டாளத்தனமாகும்.

நானும் அவ்வாறே பலமுறை செய்து பழக்கபட்டுவிட்டேன். ஆனால் என்னால் யாருமே இல்லாத ஒரு இடத்தில் இருட்டுக்குள் இருந்து மட்டுமே அந்த இன்மான சூன்யத்தை காணமுடிகின்றது. நான் சூன்யத்தை காணும் நிலை வரும்போது எனது உடலோடு சேர்ந்து உயிரும் உயர உயர பறந்து போகிறது. இரண்டு மூன்று தடவைகள் நான் ஐந்து மணித்தியாலங்கள் கழித்தே பூமிக்கு திரும்பினேன். இதை எனது பெற்றோருக்கும் செய்து காட்டா எண்ணி பலமுறை முயற்சி செய்கிறேன் ஆனால் முடியுதில்லை..... யாருமே இல்லாத சமயத்தில்தான் அது என்னால் முடிகிறது. ஓரே ஒரு தடவை மட்டும் நான் உயர சென்று கொண்டிருக்கையில் சிலர் ஏதோ கதைப்பது போல் கேட்டது ......... எனக்கு சரியாக விழங்கவில்லை அது சமஸ்கிருத மொழிபோல்தான் இருந்தது. நேரம் அதிகம் ஆனதால் பூமியில் விடிந்து இருள் நீங்கிவிடும் என்ற அச்சத்தால் திரும்பிவிட்டேன். தொடர்ந்தும் எனது அனுபவங்கள் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைபடுகிறேன். உங்களுக்கு உடன்பாடு இருந்தால் அறிய தாருங்கள்.

Share this post

Link to post
Share on other sites

***

இப்போ விடயத்துக்கு வருவோம்..

அறிவியல் கடவுள் என்பதை நிராகரிக்கவும் இல்லை நிறுவவும் இல்லை. விஞ்ஞானத்துக்கு சமாந்தரமாக மெஞ்ஞானம் என்ற ஒன்றும் உள்ளது. அது மனிதனின் ஆழ்ந்த சிந்தனையின் உணர்வின் பால் எழுவது. உதாரணத்துக்கு "அன்பு" என்பதை உணரலாம். அதை அறிவியல் கொண்டு அடையாளம் காட்டிட முடியுமா.. அளந்திட முடியுமா..??! முடியாது. அது மனித மூளையில் உணரப்படும் ஒரு உள்ளுணர்வு சார்ந்தது. அதன் பிறப்பு.. மூலம் எதுவும் அறிவியலுக்குத் தெரியாது. ஆனால்.. உணரப்படுகிறது. அதற்காக அன்பு என்பதை அறிவியல் படி நேரடியாக அடையாளம் காணவோ நிறுவவோ முடியாததால் அப்படி ஒன்றில்லை என்பீர்களோ..??!

இப்படியான மனித உள்ளுணர்வுகளை விளக்குவதுதான் மெஞ்ஞானம். அது மனித சிந்தனையின் படி உணர்ந்து கடவுளைத் துணிகிறது. ஆனால் அதை நிறுவிட முடிவதில்லை. அதற்காக கடவுள் இல்லை என்றும் கூறிட முடியாது இருக்கு என்றும் கூறிட முடியாது அறிவியல் ஆதாரமாக அவற்றைக் கொண்டு..!

எனவே கடவுள் இருக்கென்று உள்ளுணர்வால் உணர்பவனை பழிக்க முடியாது..! :rolleyes:

நெடுக்காலபோவான் உங்களுடை இந்த கருத்து உண்மையில் எனது மனதுக்குள்...... அதாவது எனக்குள் நானே நடத்தும் விவாதத்தில் அடிக்கடி வரும்.

நான் சிலவேளைகளில் சிந்திப்பேன்..... சிறிய வயதில் இருந்தே அன்பு அன்பு என்ற படலம் எம்மீது படர்ந்ததால்தான் நாம் அவ்வாறு ஒன்று இருப்பதாக நினைக்கின்றோமோ என்று? உண்மையில் அன்பென்ற ஒன்று இருப்பின்...... எமது தேசத்திலேயே எவ்வாறு இந்த தேசவிரோத கும்பல்கள் உருவாக முடியும்? உதாரணத்திற்கு இந்த பிள்ளையான் கும்பல்களையே பாருங்கள் கிழக்கிலேயே பிறந்து கிழக்கிலேயே வளர்ந்தவர்கள்..... கிழக்கு மக்களின் சோற்றை தின்று வளர்ந்ததுகள். இன்று அதே மக்களை எவ்வாறு எல்லாம் கொடுமை படுத்துகிறார்கள் என்று கண்ணாலேயே பார்க்கிறோமே. மனிதரை பொறுத்து அன்பும் பண்பும் மாறுபடுகின்றது என்பதில் எனக்கும் உடன்பாடு உண்டு. ஆனால் இந்த காதல் அன்பு போன்றவிடயங்களை ஏற்கவும் முடியுதில்லை மறுக்கவும் முடியுதில்லை..... எனக்குள் ஒரு குழப்பமான நிலையே இருக்கின்றது. அது இல்லாத வாழ்வும் இயந்திரதனத்திற்கு வழிவகுக்கும் அதுபோல் இருக்கின்ற வாழ்வும் ஏமாற்றங்களுக்கு வழிவகுக்கின்றதே?

Share this post

Link to post
Share on other sites

உங்கள் அனுபவத்தை அறிந்து எனக்கு என்ன ஆகப்போகின்றது. நான் இங்கே பலதடவைகள் கூறிவிட்டேன் அது அவரவர் அனுபவித்து அறியவேண்டியது என்று. அத மீண்டும் மீண்டும் சொல்வதில்பலனில்லை. உங்களுடைய அதிஷ்டம் அல்லது துரதிஷ்டம் நீங்கள் உங்கள் கற்பனைகளையும் தூக்கிக்கொண்டு எங்கோவெல்லாம் பறந்திருக்கிறீர்கள். ஆம்ஸ்ரோங்குக்கு அரபிப் பாங்கு சந்திரனில் கேட்டதுபோல சமஸ்கிருதத்தை வேறு வானத்தில் கேட்டிருக்கிறீர்கள். இப்படியும் சிலபேர் கடைசியில் போய் நின்றிருக்கிறார்கள். நீங்களும் அதில் ஓராள். உங்களை அந்தப் பகுத்திறைவன் காப்பாற்றுவாராக. ஆமென்.

அனுபவிப்பவர்கள் அனுபவித்துவிட்டு அப்படியே இருந்துவிட்டால் அடுத்தவருக்கு அதை அனுபவிக்கும் பாக்யம் கிடைக்காது போய்விடும் அல்லவா?

விற்பனைக்கு விளம்பரங்கள் எப்படி முக்கியமோ..... ஆண்மீகத்திற்கு அதை மற்றவருடன் பகிரும் அறிவும் முக்கியமல்லவா? எதையும் நன்கு அவித்தால் தானே அது அவியும்.

இப்போதைக்கு நான் நடுகடலில் இல்லை........ அப்படி எனக்கு ஏதும் ஆபத்து என்றாலும் யாரும் வரமாட்டார்கள் என்பதே எனது கொள்கை நானேதான் என்னை காப்பற்றவேண்டும்............ அவ்வாறு வாழ்ந்தோர்தான் இந்த உலகில் காப்பாற்றபட்டும் இருக்கிறார்கள் என்பது வேறுவிடயம்.

Edited by Maruthankerny

Share this post

Link to post
Share on other sites

நான் எனது சூன்யத்தை கண்ட அனுபவத்தையும்........... அது பற்றிய அறிவையும் ஆர்வம் உள்ளவர்களோடு பகிர்ந்துகொள்ள ஆசைபடுகிறேன். அதற்காக மற்றைய சாமிகள்போல் நான் ஏதும் அறவிடபோவதில்லை. வரும் ஆகஸ்ட் மாதம் என்கு இரண்டு கிழமைகள் விடுமுறை வருகின்றது அந்த காலத்தை இதற்காக செலவிட உத்தேசித்துள்ளேன். நீங்கள் வசிக்கும் நாட்டிற்கு வருவதற்கான விமான டிக்கேட்டையும் தங்மிட மற்றும் உணவு வசதியை மட்டும் செய்தாலே போதுமானது. இரண்டு கிழமைகளில் நீங்கள் முழுமையாக அதுபற்றிய அறிவை பெற்றுவிடலாம்.... பின்பு நீங்கள் முறைபடியே இருளுக்குள் இருந்தவாறே பயிற்சி செய்துவரும்போது உங்களால் நிச்சயமாக நான் கண்ட அதே சூன்யத்தை காணலாம்.

கவனத்தில் கொள்க. மனக்கட்டுப்பாடு உள்ளவர்களுக்கே இது உகந்தது அப்படியல்லாதார் தயவுசெய்து மனக்கட்டுப்பாட்டு பயிற்சிகளை செய்துசவிட்டு என்னை தொர்புகொள்ளவும் காரணம்...... நீங்கள் உயர உயர செல்லும்போது மிகவும் ஆனந்த நிலைஒன்று பிறக்கும் அந்த ஆனந்தநிலையில் நீங்கள் பூமிக்கு திரும்பவேண்டும் என்பதை மறந்துவிட கூடாது அப்படி மறந்தால் பூமியில் இருள் நீங்கி ஒளிவந்துவிடும் அப்படி ஒளிவந்துவிட்டால் உண்மையிலேயே நீங்கள் இங்கே இருக்கமாட்டீர்கள்............ ஆனாலும் இங்கே இருப்பவர்களுக்கு நீங்கள் அப்படியே இருப்பது போன்ற ஒரு மாயை வந்துவிடும்.......... அப்படி மாயைகள் செய்து அடுத்த மனிதரை ஏமாற்றுவதை ஆண்மீகங்கள் வன்மையாக கண்டிக்கின்றன அதலால் எந்த இன்பநிலை வருனும் இருள் போகுமுன்னே பூமிக்கு நான் வருவேன் என்ற மன உறுதி உள்ளவர்க்கே இது சாத்தியம்!

Share this post

Link to post
Share on other sites

இங்கே நான் ஆன்மீகத்தைப் பற்றிப் பேசவோ அதை வைத்து யாதாவது வியாபாரம் பண்ணவோ வரவில்லை. சம்பந்தமில்லாமல் பேசுவதில்பலனில்லை என எண்ணுகிறேன். ஆன்மீகமென்னும் சொல்லையே நான் பாவிக்கவில்லை. உங்களுக்கு விருப்பமான சொற்களையெல்லாம் போட்டு விடயத்தைத் திசை திருப்ப முடியாது. நான் கடவுளென்னும் கருதுகோளுக்கே விளக்கமளித்தேன். எந்தக் கொம்பனாலும் அந்த விளக்கத்தை மறுக்க முடியாது. திசையைத் திருப்பி வேண்டுமானால் எதையாவது தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கலாம். நான் இதுவரை இந்தக் கருத்துக் களத்தில் எழுதிய சூனியப் பெருவெளியையும் அதனுட் சென்று காண்பவனும் காடசிப் பொருளுமற்ற சித்தானுபவத்தில் ஆனந்தம் பெறுவதுபற்றியும் யாரும் சிந்தனை செய்வதை விட்டுவிட்டுத் தங்களுக்குத் தெரிந்த தாங்கள் ஏமாற்றப்பட்ட கருதுகோள்களைச் சுற்றிச் சுற்றியே கருத்தெழுதிக் கொண்டிருக்கிறார்கள். இதில் எவ்வித பலனுமில்லை. உங்களது கருத்துகளுக்குள் நான் வரமுடியாது. கடவுளைப் பற்றி எனது பார்வை வேறுபட்டது. முடிந்தால் புரிந்துகொள்ளுங்கள். அதற்கெதிராய் நேரடியாய் மறுப்பெழுதுங்கள். இதை அவரவர் விரும்பிச் சிந்தித்து உணரத் தலைப்பட்டாலொழியப் புரியப்போவதில்லை. உங்களுக்குப் புரியும் மொழியில் கூறுவதானால் அது இதுதான். நான் இங்கே எந்த ஆத்திகக் கருத்தையும் முன்வைக்கவில்லை. நானும் ஒரு முழு நாத்திகனே.

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this