Jump to content

கடவுளை நம்ப முட்டாளே போதும்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா மருதங்கேணி யாரோ ஒரு சாமியார் உங்களை நன்றாக ஏமாற்றிவிட்டார் போலத் தெரிகின்றது. அதனால் நான் சொன்ன சூனியம்பற்றிய விளக்கத்தை அந்தச் சாமியாரோடு தொடர்புபடுத்தி வழமைபோல உங்களது கருது கோளுக்குள் என்னைக் கொண்டுவரப் பார்க்கிறீர்கள். நீங்கள் ஏமாற்றப் பட்டதற்கு நானென்ன செய்யமுடியும். இருட்டில் இருந்தாலும் வெளிச்சத்தில் இருந்தாலும், இமயமலைக்குப் போனாலும் பசுபிக்கின் ஆழத்திற்குப் போனாலும் அந்தச் சூனியம் உங்களுக்குள்த்தானிருக்கும். அது உங்களைவிட்டு எங்கும் போய்விடாது. இது சாமியார் சொன்னதல்ல நான் சொல்வது. முடிந்தால் சிந்தித்துப் பாருங்கள். மூளையை விட்டு இந்தப் பிரபஞ்சத்தின் உண்மையென்ன அது எங்கிருந்து தோன்றுகிறது. நானுள்ள வரைதானே இந்தப் பிரபஞ்சம் இருக்கப்போகிறது. நான் போனால் வெறுஞ் சூனியந்தானே. அதை நான் உயிருள்ள போதே அறியவேண்டாமா என்று யோசியுங்கள். ஆர்வமுண்டாகும்.

சரணகமலாலயத்தை அரை நிமிட நேரமட்டில் தவமுறைத் தியானம் வைக்க அறிந்துவிட்டால் போதும் அது உங்கள் ஆயுள் உள்ளவரை உங்களைக் கவலையற்ற சாந்திநிலையில் வைத்திருக்கும். இது ஏமாற்று வித்தையென்று சொல்லி உங்களை நீங்களே ஏமாற்றிக்கொண்டால் நீங்கள் கொடுத்து வைத்தது அவ்வளவுதான். இது முழுக்க உங்களுக்கானது. எனக்கு உங்களால் ஒருபயனும் வரப்போவதில்லை. தற்செயலாக நல்ல பலன் பெற்றீர்களானால் என்னை அன்போடு நினைத்துக் கொள்ளுங்கள் அதுபோதும்.

Link to comment
Share on other sites

  • Replies 177
  • Created
  • Last Reply

அறிவியல் கடவுள் என்பதை நிராகரிக்கவும் இல்லை நிறுவவும் இல்லை. விஞ்ஞானத்துக்கு சமாந்தரமாக மெஞ்ஞானம் என்ற ஒன்றும் உள்ளது.

நெடுக்கண்ணை, இதில எனக்கு ஒரு சந்தேகம். இப்ப ஒரு கதைக்கு யாரவது பூமிக்கு 5000 கோடி மைல் தொலைவில நெப்போலியன் ஒரு கிரகத்தில வாழுறார் என்று எடுத்து விட்டால் விஞ்ஞானம் அதை எப்படி எடுத்து கொள்ளும்? அவர்களால் இல்லை என்று மறுக்கவும் முடியாது. இருக்கென்று நிறுவவும் முடியாது.ஆனால் ஒரு பொதுப்படையான அபிப்பிராயப்படி மறுக்கவே செய்வர். ஒரு விடையத்தை நிறுவும் வரை விஞ்ஞானத்தில் அதற்கு அறுதியிட்ட இடம் இல்லை அல்லவா. அதனால் தானே விஞ்ஞானம் மெய்ஞானம் போன்ற விண்ணாணங்கள் எல்லாம்?

அது மனிதனின் ஆழ்ந்த சிந்தனையின் உணர்வின் பால் எழுவது. உதாரணத்துக்கு "அன்பு" என்பதை உணரலாம். அதை அறிவியல் கொண்டு அடையாளம் காட்டிட முடியுமா.. அளந்திட முடியுமா..??! முடியாது. அது மனித மூளையில் உணரப்படும் ஒரு உள்ளுணர்வு சார்ந்தது. அதன் பிறப்பு.. மூலம் எதுவும் அறிவியலுக்குத் தெரியாது. ஆனால்.. உணரப்படுகிறது. அதற்காக அன்பு என்பதை அறிவியல் படி நேரடியாக அடையாளம் காணவோ நிறுவவோ முடியாததால் அப்படி ஒன்றில்லை என்பீர்களோ..??!

காதலும் ஒருவகை அன்பு தானே. பையன்கள் பெண்களைப் பார்த்ததும் டெஸ்டோஸ்டிரோன் அற்றினல் சுரப்பியிலிருந்து வெளிவரும். அது ரத்த ஓட்டத்தில் கலந்து இன்னோரன்ன வேலைகளைச் செய்கிறது. அதை மூளை உணர்கிறது. எவ்வளவு ஹோர்மோன் சுரந்தது என்பதை இலகுவாக அளக்கலாம். அதுதானே அன்பின் அளவுகோல்..? :D

இப்படியான மனித உள்ளுணர்வுகளை விளக்குவதுதான் மெஞ்ஞானம். அது மனித சிந்தனையின் படி உணர்ந்து கடவுளைத் துணிகிறது. ஆனால் அதை நிறுவிட முடிவதில்லை. அதற்காக கடவுள் இல்லை என்றும் கூறிட முடியாது இருக்கு என்றும் கூறிட முடியாது அறிவியல் ஆதாரமாக அவற்றைக் கொண்டு..!

மேலே சொன்னபடி "அன்பை" அளவீடு செய்யலாம்.

எனவே கடவுள் இருக்கென்று உள்ளுணர்வால் உணர்பவனை பழிக்க முடியாது..! :rolleyes:

கடவுளும் ஏதாவது ஒரு ஹோர்மோனோ?? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமே இருத்தலில் இருந்து வந்தவை.

இருத்தல் இருத்தலின்மையில் இருந்து வந்தது!

நாம் மனித சிந்தனையால் கட்டப்பட்டுள்ளவர்கள். பிரபஞ்சம் என்ற அளவு கோலுக்குள் நின்று கொண்டு ஆராய்ந்து கொண்டிருப்பவர்கள். முடிவிலி என்பது பிரபஞ்சத்தின் எல்லைக்கு முடிவை இட்டுள்ளதா..??! இல்லையே..!

நான் நினைக்கிறேன்.. கடவுளின் துகளைத் தேடும் விஞ்ஞானிகள் அணுக்களைப் பிளக்கின்றனர். உணர்வுகளுக்கான துகளைத் தேட எதைப் பிளக்கப் போகின்றனர்..???!

கடவுள் என்பது மனிதன் உருவாக்கி வணங்கும் வடிவத்தில் இருப்பவன் என்பதல்ல அர்த்தம். மெஞ்ஞானத்தை விளங்கிக் கொண்டிருப்பின்.. இந்தப் பரிகசிப்புக்கள் வராது. மெஞ்ஞானம் சொல்கிறது.. கடவுளை தேடி பிரபஞ்சத்தை அறியனும் என்பதல்ல. அந்தப் பிரபஞ்சத்தின் அடிப்படையே ஒவ்வொரு தனி மனிதனுக்குள்ளும் இருக்கிறது. எம்மைச் சூழவே எத்தனையோ மாயைத் தனங்கள் இருக்கின்றன. வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில்.. நாம் எங்கிருந்து பிறந்தோம்.. இறந்த பின் எங்கே போகின்றோம் என்பது எவருக்கும் தெரியாது..??!

மதங்கள் என்பன கடவுளைக் கண்டதன் விளைவுகள் அல்ல. மதங்கள் என்பன மனிதனை வழிநடத்த மனிதனால் உருவாக்கப்பட்ட நெறிமுறைகளைக் கொண்டவை. அவற்றுள் மனிதன் உருவாக்கிய கற்பனைகள்.. வக்கிரங்கள்.. சேர்ந்திருக்கலாம். அவை மதங்களில் தான் என்றில்லை. மனிதனின் எண்ணங்கள் எங்கினும்.. அது அரசியலாகட்டும்.. வாழ்வியலாகட்டும்.. வக்கிரத்தனத்துக்கு குறைவில்லை. அது மனித இயல்பு. அதை மதத்தின் இயல்பாகக் காட்டாக் கூடாது.

நாம் மதத்தில் மனிதனின் மெஞ்ஞான சிந்தனையையும்.. அது அகிலத்தை.. அதற்கும் அப்பாலும்.. உணர (நிறுவ அல்ல) விளைவதையும் நோக்குகின்றோமே தவிர.. சிவபெருமானும்.. நபிகளும்.. ஜேசுவும்... உண்மையில் வாழ்ந்தனரா வாழ்கின்றனரா என்று கேட்கக் கூடிய முட்டாள்கள் இல்லை. சிவபெருமான் என்ற அந்த மனித சிந்தனைக்குப் பின்னால்.. இந்த மனிதன் வாழ்க்கைச் சூழலில் மனித வாழத் தேவையான சாத்தியங்கள் சிந்திக்க விடப்பட்டுள்ளன. அதில் அவன் அதனை உணர்கிறான்.

இறைவனைப் பற்றி சொல்லும் மெஞ்ஞானிகள்.. அன்பே கடவுள் எங்கின்றனர். இன்னும் சிலர் எம்மை இயக்கும் உருத்தெரியாத ஆக்கவும் அழிக்கவும் முடியாத.. ஆனால் உணரக்கூடிய சக்தியே கடவுள் எங்கின்றனர். இன்னும் சிலர் எம்மை ஆக்கும் அம்மை அப்பனைக் கடவுள் எங்கின்றனர். இன்னும் சிலர் ஏழைக்கு உணவூட்டும் உபகாரியைக் கடவுள் எங்கின்றனர். இப்படி கடவுள் என்ற அந்தச் சிந்தனை மனிதன் சார்ந்து எழுவது. அதற்கு அவன் தனது உணர்வுக்கு ஏற்ப பல பரிமானங்களை வழங்குகிறான். அதனை அடிப்படையாகக் கொண்டு மனித வாழ்வியலை நெறிப்படுத்த மதங்களை உருவாக்குகிறான்.

இதற்கும்.. அகிலத்தின் அல்லது அதற்கும் அப்பால் இருக்கும்.. படைப்புலகம் அல்லது படைப்புக்கு அப்பாலான உலகம் என்று அவற்றை எல்லாம் பற்றி சாதாரண மனிதன் சிந்திக்கவில்லை. அப்படிச் சிந்திதால் மனித சிந்தனை முடிவின்றித் தொடரும். இறுதியில் மனிதன் சிந்தித்தே மடிய வேண்டியதுதான். அவன் சிந்தனைக்கு எல்லையிட்டு.. வாழ்க்கை என்ற ஒரு குறுகிய வட்டத்தை.. இனங்காட்டி.. அவனை அதற்குள் வாழும் வரையறை இட்டுக் கொள்வதும்.. அதற்கு வழிகாட்டுவதும் தான் இன்று நிகழ்கிறது. அதற்குள் தான் மதமும் கடவுளும்.. இருக்கின்றன. அவை மனிதன் செதுக்கிய வடிவில் மனிதருக்குள் உலவுகின்றன.

ஆனால்.. அதைக் கடந்து.. ஒரு விளங்க முடியாத.. தன்மை எம்முன்னே விரிந்து கிடக்கிறது என்பதை உணர்கையில்.. எம் மெய்யறிவு சொல்கிறது... உணர்கிறது.. அது கடவுளாக இருக்குமோ என்று. அதுதான் இற்றை வரை கடவுள் என்ற பதத்துக்கான இருப்பை வழங்கி இருக்கிறது.

அறிவியல் உள்ளதை ஆய்வது. உணர்வதை ஆயும் நிலை அறிவியலுக்கும் இல்லை. அறிவியலால் கோபத்தை அடையாளம் இட முடியுமா..??! அதை ஆக்கியுள்ளதை சொல்ல முடியுமா..??! அன்பும் கோபமும்.. இன்பமும் துன்பமும்.. உணர்வுகளாய் மூளையில் உணரப்படினும்... அவற்றிடையே வேறுபாடுகள் உள. அந்த வேறுபாட்டுக்கான காரணங்கள்.. அதை ஆக்கும் கூறுகள் என்ன.. என்றால்.. அதற்கு விடையில்லை எனும் போது.. மனிதன்.. அவற்றுள் கடவுள் என்ற தன்மையை இருத்திக் கொள்கிறான்.

உண்மையில் இந்த இயற்கையே தான் கடவுள். எம்முன்னே பரந்து கிடக்கும் இந்த இயற்கையை.. கடவுள் என்றால்.. அதுமிகையல்ல.

மனிதன் ஆற்றிய மதங்களும் இயற்கையை அடிப்படையாகப் பற்றித்தான் அமைகின்றன. அவை மனித வாழ்வியலுக்கான வழிகாட்டல்களாகவும் பிறக்கின்றன. மதங்களுள் இறைவனை தந்தது.. மனிதன். மனிதன் இயற்கையில் விளங்க முடியாததற்கு இடப்ப பெயர் கடவுள். விளங்கக் கூடியதற்கு இட்ட பெயர் அறிவியல். மனிதனால் விளங்க முடியாதது உள்ளவரை கடவுள் இருக்கும். ஆனால் மதங்கள்.. கடவுள் என்பதை அடிப்படையாகக் கொண்டிருப்பினும்.. அவற்றின் நோக்கம்.. மனித வாழ்வியலை நெறிப்படுத்துவதுதான்.

அந்த வகையில் மனித வாழ்வியல் மாற்றங்களோடு மதக் கோட்பாடுகளும் மாறிச் செல்ல வேண்டும். அப்போதுதான் அவை வெற்றிகரமான வாழ்வியல் நெறிகளை மனிதருக்குள் தர முடியும்.

மனித வாழ்வியலில்.. உடலும்.. உறவும் உள்ளவை. அவற்றை விபரிப்பது.. மனிதரிடை அவை பற்றிய அறிவை ஊட்டுவதற்கு. மதங்கள் எங்கனும்... கணவன் மனைவி.. ஆண் - பெண் உறவுகள் விபரிக்கப்பட்டு.. உள்ளன. ஆனால் அதனை மனிதன் கடவுள் என்பதன் பொருட்டு சித்தரிக்க முற்பட்டிருப்பது பொருத்தமானதல்ல. அவன் இயற்கையில் உள்ள ஆண் - பெண் நிலைகளைக் கண்டு.. அதில் கடவுளைப் புகுத்தி சித்தரித்துள்ளதுதான்.. அம்மையும் அப்பனும்.. சிவனும் பார்வதியும். இதை உணராமல்.. எங்கே சிவபெருமானைக் காட்டு.. சிவபெருமான் ஒண்டுக்குப் போவாரோ.. என்று கேள்வி கேட்கும் மூட நிலையை.. பகுத்தறிவு என்பதன் பெயரால் செய்யும்.. மூடத்தனத்தையே நான் வெறுக்கிறேன். அவர்கள் தம்மைத் தாமே மூடர்களாக்கிக் கொள்வதுமின்றி... வக்கிரத்தனங்களை விதைக்கின்றனர்.

மதங்கள்.. மனித உருவாக்கங்கள். அவற்றுள் வக்கிரத்தனம் என்பது கலந்தில்லை தூய்மையானது என்று சொல்ல முடியாது. மனித உருவாக்கங்கள் அனைத்திலும் இரண்டு பக்கம் இருக்கும். ஒன்று மனிதனின் மென்மைத் தன்மை. இன்னொன்று மனிதனின் காட்டுமிராண்டித்தனம். கடவுள் என்ற அந்தச் சிந்தனையின் பால் எழுந்த மதங்களுள்ளும் அது அடங்குகிறது. ஆனால் அதையும் கடந்து இயற்கையில் உள்ள விளங்க முடியாததற்கு சிந்தனை சார்ந்த உணர்வு ரீதியாக விளக்கம் தேடவும்.. அது வழிகாட்டுகிறது. அதையே நாம் மெஞ்ஞானம்.. ஆன்மீகம் எங்கிறோம்..!

இதற்கு மேல் இங்கு விவாதம் செய்வது.. விதண்டாவாதம். வக்கிரக்காரர்கள் தங்கள் வக்கிரத்தனத்தை மதத்தை விமர்சிக்கிறம் என்ற போர்வையில் எழுதிட்டுப் போகலாம். அதுதான் அவர்களின் நோக்கமும்..! அதற்கெல்லாம் பதிலிறுப்பதல்ல எமது தேவை...!

முற்றும். :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸின் விளக்கங்கள் அற்புதம். தம்பிமார் இங்கே தங்கடை பாட்டில் கடவுளெண்டு ஏதோவோர் கருத்துருவத்தைக் கீறிவிட்டு அல்லது கற்பனை செய்துவிட்டு அது இல்லை அது இல்லையெண்டு நிக்கினம். அவையின்ர கடவுள் உண்மையில இல்லைத்தான். ஏனெண்டால் அது அவையின்ர கற்பனை. ஆனால் நம்மளின்ர கடவுள் இருக்குது. ஏனென்றால் அது உண்மையின் இருப்பு.

அந்தவகையில் நாத்திக நண்பர்களே!

உங்கடை கடவுளென்னும் கருத்துருவம் உண்மையில் இல்லை. ஆனால் எங்கடை உண்மைக் கடவுள் இருக்கிறார். என்று கூறி இந்த விடயத்தை எனது பங்குக்கு நானும் நிறைவு செய்கிறேன். நன்றி, வணக்கம்.

Link to comment
Share on other sites

சூன்யம் என்றால் ஒன்றும் இல்லை.சூனியம் சமன் கடவுள், ஆகவே கடவுள் என்று ஒன்று இல்லை.

கடவுள் என்பவர்/என்பது இல்லாதா சூனியமான ஒன்று என்பதற்கான அருமையான விளக்கம். :unsure:

நன்றிகள்.

நீங்கள் சொல்வது வெற்றிடம்... சூனியம் அல்ல..

சூனியம் என்பதுக்கு அது பொருந்தாது... அங்கு எதுவுமே இல்லை என்பதை குறிக்க சூனியத்தை சொல்வார்கள்.. பெறுமதி இல்லாத இடமாகிலும் அங்கு காற்று போண்றவை கண்ணுக்கு தெரியாதவைகள் இருக்கலாம்... அதைத்தான் சூனியம் எனப்படும்.. சூனியம் என்பது பூச்சியம் எனும் சுளியத்தையும் குறிக்கும்... ஒண்றுடன் சூனியங்கள் சேரும் போது தொகைகள் அதிகரிக்கும்....!!

நீங்கள் சொல்லும் "வெற்று" என்பதுக்குதான் காற்று கூட இல்லாத எண்று பொருள்படும்... அங்கு சுளியம் கூட இல்லை என்பதுதான் பொருள்...

Link to comment
Share on other sites

இதற்கும்.. அகிலத்தின் அல்லது அதற்கும் அப்பால் இருக்கும்.. படைப்புலகம் அல்லது படைப்புக்கு அப்பாலான உலகம் என்று அவற்றை எல்லாம் பற்றி சாதாரண மனிதன் சிந்திக்கவில்லை. அப்படிச் சிந்திதால் மனித சிந்தனை முடிவின்றித் தொடரும். இறுதியில் மனிதன் சிந்தித்தே மடிய வேண்டியதுதான். அவன் சிந்தனைக்கு எல்லையிட்டு.. வாழ்க்கை என்ற ஒரு குறுகிய வட்டத்தை.. இனங்காட்டி.. அவனை அதற்குள் வாழும் வரையறை இட்டுக் கொள்வதும்.. அதற்கு வழிகாட்டுவதும் தான் இன்று நிகழ்கிறது. அதற்குள் தான் மதமும் கடவுளும்.. இருக்கின்றன. அவை மனிதன் செதுக்கிய வடிவில் மனிதருக்குள் உலவுகின்றன.

நண்பர் நெடுக்காலபோவான் சுட்டிக் காட்டிய படி, மனித சிந்தனைக்கு எல்லையிட்டு அவனை ஒரு குறுகிய வட்டத்துக்குள் வைத்ருப்பதையே மதங்கள் கடவுளின் பெயரால் செய்கின்றன.இதனை மறுதலித்து மனித சிந்தனை என்பது வரையறை அற்றதாக சுதந்திரமானாதாக இருக்கும் போதே உண்மைகளைக் கண்டறிய முடியும்.இந்த கட்டற்ற சிந்தனையே பகுத்தறிவு எனப்படுகிறது.இது எல்லா மனிதருக்கும் செய்யக் கூடிய ஒன்று தான் ஆனால் மதங்கள் மனிதர்களின் இந்த பகுத்து அறியும் திறனுக்கு எல்லைகள் இட்டு அவற்றை வரையறை செய்கின்றன.அதற்க்கப்பால் அவனைச் சிந்திக்க விடாமால் செய்கின்றன.

நெடுக்ஸின் விளக்கங்கள் அற்புதம். தம்பிமார் இங்கே தங்கடை பாட்டில் கடவுளெண்டு ஏதோவோர் கருத்துருவத்தைக் கீறிவிட்டு அல்லது கற்பனை செய்துவிட்டு அது இல்லை அது இல்லையெண்டு நிக்கினம். அவையின்ர கடவுள் உண்மையில இல்லைத்தான். ஏனெண்டால் அது அவையின்ர கற்பனை. ஆனால் நம்மளின்ர கடவுள் இருக்குது. ஏனென்றால் அது உண்மையின் இருப்பு.

அந்தவகையில் நாத்திக நண்பர்களே!

உங்கடை கடவுளென்னும் கருத்துருவம் உண்மையில் இல்லை. ஆனால் எங்கடை உண்மைக் கடவுள் இருக்கிறார். என்று கூறி இந்த விடயத்தை எனது பங்குக்கு நானும் நிறைவு செய்கிறேன். நன்றி, வணக்கம்.

உங்கட கடவுள் எங்க இருகிறர் எண்டா அவர் எமது உணர்வில் இருகிறார் என்று சொல்கிறீர்கள்.அதாவது உங்கள் கற்பனையில்.உங்கள் கற்பனையில் வரும் கடவுள் யார்? அவர் என்ன வடிவத்தில் வருகிறார் ? எப்போது வருகிறார் என்று சொன்னீர்கள் என்றால் அவரை நாங்களும் கண்டு கொள்ள முடியும் அல்லவா?

கடவுளிலையும் கற்பனைக் கடவுள் உண்மைக் கடவுள் எண்டு இருக்கா? உண்மைக் கடவுள் என்றால் யார் கற்பனைக் கடவுளென்றால் யார்?

Link to comment
Share on other sites

நீங்கள் சொல்வது வெற்றிடம்... சூனியம் அல்ல..

சூனியம் என்பதுக்கு அது பொருந்தாது... அங்கு எதுவுமே இல்லை என்பதை குறிக்க சூனியத்தை சொல்வார்கள்.. பெறுமதி இல்லாத இடமாகிலும் அங்கு காற்று போண்றவை கண்ணுக்கு தெரியாதவைகள் இருக்கலாம்... அதைத்தான் சூனியம் எனப்படும்.. சூனியம் என்பது பூச்சியம் எனும் சுளியத்தையும் குறிக்கும்... ஒண்றுடன் சூனியங்கள் சேரும் போது தொகைகள் அதிகரிக்கும்....!!

நீங்கள் சொல்லும் "வெற்று" என்பதுக்குதான் காற்று கூட இல்லாத எண்று பொருள்படும்... அங்கு சுளியம் கூட இல்லை என்பதுதான் பொருள்...

சென்னைப் பல்கலைக்கழக அகராதி:

சூனியம் cūṉiyam

, n. < šūnya. 1. Non-existence, vacuity, vacuum, non-entity, nothingness; இன்மை. யாவையுஞ் சூனியஞ் சத் தெதி ராகலின் (சி. போ. 7). 2. (Math.) Cipher;

...

உங்கடை கடவுளென்னும் கருத்துருவம் உண்மையில் இல்லை. ஆனால் எங்கடை உண்மைக் கடவுள் இருக்கிறார். என்று கூறி இந்த விடயத்தை எனது பங்குக்கு நானும் நிறைவு செய்கிறேன். நன்றி, வணக்கம்.

இதைத்தான் எல்லா மதங்களும் சொல்லிக்கொண்டு தமக்குள் மோதிக்கொள்கின்றன. :o

(உன்ர கடவுள் இல்லை, என்ர கடவுள் தான் இருக்கு)

Link to comment
Share on other sites

சென்னைப் பல்கலைக்கழக அகராதி:

சூனியம் cūṉiyam

, n. < šūnya. 1. Non-existence, vacuity, vacuum, non-entity, nothingness; இன்மை. யாவையுஞ் சூனியஞ் சத் தெதி ராகலின் (சி. போ. 7). 2. (Math.) Cipher;

அதில் என்ன வேறுபாடு கண்டீர்கள்..??

சூனியம் என்பது வட மொழி சொல்... அதை தமிழில் உள்ள அகராதியில் அர்த்தம் தேடுவதை என்ன என்ன எண்று சொல்வது... :o

"சூனிய" என்பதுக்கு இண்றும் ஹிந்தியில் சுளியம் என்பதுதான் அர்த்தம்...

நான் சொன்னவைகளில் இருந்து இவற்றை எப்படி வேறு படுத்தினீர்கள்....??

Non-existence - எதுவுமே இல்லாத.

vacuity - பொருள் அற்ற.

non-entity - உள் ஒண்றும் இல்லாத

nothingness - இல்லாமை.

யுத்த சூனிய பிரதேசம் எண்ற ஒண்றை சொல்வார்கள்... அதாவது " No man Land " எண்று... அங்கு மனிதர்கள் நடமாட்டார்கள்.. மற்றும் படி வெறுமை என சொல்லப்படும் அளவுக்கு மரங்கள், மண், மலைகள், ஆறுகள், புற்கள் இல்லாத ஒரிடமாக இருக்காது...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர் நாரதர் அவர்களே!

நான் இந்த விவாதத்தை என்பங்கில் நிறைவு செய்து விட்டேன். இதற்குமேல் இனி எழுத ஒன்றுமில்லை. ஆனாலும் நீங்கள் கேட்டுக்கொண்டதற்காக இதை இறுதியாக எழுதி முடிக்கிறேன்.

கடவுள் கற்பனையில் வருவதில்லை - கற்பனை கடந்த சோதி அவர். அவர் அனுபவப் பொருள். கருணையெ அவர் உருவம். அவரை அவரவர் தம் அனுபவத்தின் மூலமே கண்டறிய வேண்டும். அதற்குக் கற்பனைகளும் கருத்துருவங்களும் தடையாய் நிற்பதால் அவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு சித்தத்தை ஒருமுகப்படுத்தி அவரைத் தியானிக்க வேண்டும். சித்தத்துள் தித்திக்கும் தேனாய் அவர் உங்கள் சிந்தையில் நிறைவார். அது அமைதியும் சாந்தியும் பேரானந்தமும் நிறைந்த நிலையாகும். உங்கள் இதயமென்னும் கமல ஆலயத்தில் அரை நிமிடம் அந்தச் சூனியப் பெருவமைதி நிறைந்து விட்டாலே போதும் உங்கள் ஆயுள் பரியந்தம் அந்த அமைதி மிக்க சாந்தி நிலைத்து நிற்கும். விரும்பினால் முயன்று பாருங்கள். பொதுவாக நாத்திகம் பேசுபவர்களிடத்திலே இந்தத் தேடல் இருக்கும். மற்றவர்களோடு விவாதிப்பதை விட்டுவிட்டு உங்கள் உள்ளத்தைத் திறந்து அங்கே தேடுங்கள். உங்களுக்கு ஒரு பதிலும் கிடைக்கவில்லையென்றால் நீங்கள் நல்லவரென்றும் நம்பத் தகுந்தவர் என்றும் கருதும் இந்த உலகில் வாழும் அல்லது வாழ்ந்து மறைந்த ஒரு இறை நேசர் என்ன கூறுகிறார் என்பதையாவது சற்று விவாத நோக்கின்றிக் கேட்டுப் பாருங்கள்.

பரம்பொருள் தேடுபவர்களுக்கு என்றும் கிடைக்காமல் போவதில்லை. எந்தக் கறட்பனையும் வேண்டாம். யாரையும் மடக்கவேண்டுமென்னும் துருதுருப்பும் வேண்டாம். அறிந்து கொள்ள வேண்டுமென்னும் என்னும் ஆர்வத்தோடு தேடுங்கள். நிச்சயம் உங்கள் கேள்விக்கான விடை கிடைத்தே தீரும். நான் சொல்வது சத்திய வார்த்தையாகும்.

உள்ளம் பெருங்கோயில். ஊனுடம்பு ஆலயம். வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல். தௌ;ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவமாகும். கள்ளப் . புலனைந்தும் காளா மணி விளக்காகும்.

அன்பும் சிவமும் இரண்டல்ல. அன்பே சிவமாகும் அதை யாரும் இலகுவில் அறிவதில்லை. அன்பே சிவமென்பதை யாராவது அறிந்தால் அன்பேவடிவாய் அமர்ந்திருப்பாரே.

இங்கு அன்பென்பது யூனிவேசல் லவ்வைக் குறிக்கும். ஹோர்மோனல் லவ்வையல்ல.

தயவு செய்து இதனை வரிக்கு வரி சொல்லுக்குச் சொல் ஆழ வாசித்துச் சிந்திக்குமாறு வேண்டி மீண்டும் உங்களிடமிருந்து விடைபெறுகிறேன். முற்றும்.

Link to comment
Share on other sites

இறைவனை நம்புதல், எது இறைவன்? என்று பகுத்தறிவு தொடங்கிய விடயம் நன்றாகவே நகர்த்தப்படுகிறது.

எது கடவுள்? என்றவிடயத்திற்குள் புகுவதற்கு முன், பகுத்தறிவு என்றால் என்ன? அதை எவ்வாறு பயன்படுத்துவது? அதைக் குறளிலும் நண்பர் "பகுத்தறிவு" எடுத்துச் சொல்லியுள்ளார். மெய்ப் பொருள் காண்பது அதுவே பகுத்தறிவு.

இறைவன் என்பது இல்லாத ஒன்றெனில், அதை இல்லையென்று சொல்லத் தேவையில்லை. இருக்கின்ற ஒரு பொருளைத்தான் இல்லையென்று சொல்வதற்கு வாதங்களும் ஆதாரங்களும் பயன்படும். அதனை இன்னுமொரு புறத்தால் சொன்னால் இல்லாத ஒன்றை ஆகாயம் என்று பெயரிட்டு அதற்கு நீலம் என்றொரு நிறத்தையும் காலங்காலமாகக் கொடுத்திருக்கின்றோம். அறிவாளிகளும், முட்டாள்களும் அவ்வாறே அதனை ஆகாயம் அது நீல நிறம் என்று ஏற்றுக்கொண்டு வருகின்றனர். இப்போது அது இல்லாத ஒன்றெனில் அது எவ்வாறு எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட காரணம், பார்வையில் தெரிவது என்ற ஒரே காரணமே.

இல்லை என்பதற்கு ஆதாரமே இருக்கிறது என்பதுதான். என்பது என்னுடைய வாதம். உண்டு என்பது + இல்லை என்பது - இவையிரண்டும் 0 இருந்தே தொடங்குகின்றன. இதையே பூஜ்ஜியத்தில் நிலைத்திருத்தல் என்பது. இறைத்தன்மையில் யோக்கியம் யோக்கியமற்ற தன்மை என்று எதுவுமில்லை. புராணங்கள் இதிகாசங்கள் என்பப எழுதியவர்களின் மனப்போக்கு. அவைகள் வெறும் கதைகளே. இதனைப் பகுத்தறிவு உள்ளோர் புரிந்து கொள்ளுதல் முக்கியமானது. உதாரணமாக ஒரு இலட்சத்திற்கும் சற்று மேற்பட்ட வெண்பாக்களால் ஆக்கப்பட்ட மகாபாரதம் மக்களின் மனதில் நிரந்தர இடம் பிடிக்க வேண்டுமென்றால் அதில் விவாதத்திற்குரிய சமாச்சாரங்கள் இடம்பெறவேண்டுமென்பதை அந்த நூலாசிரியர் புரிந்து கொண்டு சில விடயங்களைப் புகுத்தியுள்ளார். புகுத்தப்பட்ட அந்த விடயந்தான் மகாபாரதம் என்று சொல்லமுடியுமா?

இறைவனுக்கு உருவமில்லை என்று கூறும் மதங்களில் இருந்து அதாவது கிருஸ்தவம் இஸ்லாம் ஆகிய மதங்களின் ஆரம்ப நூலான பழைய ஏற்பாட்டில் " இறைவன் தனது சாயலில் மனிதனைப் படைத்தான் " எனக் கூறப்பட்டுள்ளது. அப்படியானால் இறைவனுக்கு உருவம் உண்டென்பதுதானே அர்த்தப்படுகிறது. எல்லாம் வல்லவன் இறைவன் அனைத்துமுடையவன் இறைவன் என்றெல்லாம் அவர்கள் சொல்லும்போது, உருவம் என்ற இல்லாமை இறைவனுக்கு இருக்கிறதா.?

சமஸ்கிருதம், வேதம் என்பதெல்லாம் சாதாரண மனிதருக்குத் தெரியாத விடயம். தமிழ் மறை எனப்படும் திருமுறைகள் யாவராலும் அறியக் கூடிய ஒன்று. அப்படிப்பட்ட ஒரு நூல்தான் திருமந்திரம். திருக்குறளைப்போன்றே தெளிவானது. அங்கே இறைவன்பற்றிச் சொல்லப்படுவதாவது,

அறிவு வடிவென்று அறியாத என்னை

அறிவு வடிவென்று அருள் செய்தான் நந்தி

அறிவு வடிவென்று அருளால் அறிந்தே

அறிவு வடிவென்று அறிந்து இருந்தேனே.

இவ்வாறு அறிவுதான் இறைவன் என்று திருமூலர் கூறுகின்றார். அது பகுத்தறிவல்ல. பரத்தின் அறிவு. இந்த அண்டங்கள் அறிவினால்தான் ஆளப்படுகின்றது. மனிதனுக்கும் இறைவனுக்குமிடையில் அறிவுதான் தொடர்பாடலாகவுள்ளது. அறிவைக் கொண்டே இறைவனை அடையலாம். இந்த உலகமும் அறிவினால்தான் ஆளப்படுகிறது.

நன்றி.

Link to comment
Share on other sites

நண்பர் நாரதர் அவர்களே!

நான் இந்த விவாதத்தை என்பங்கில் நிறைவு செய்து விட்டேன். இதற்குமேல் இனி எழுத ஒன்றுமில்லை. ஆனாலும் நீங்கள் கேட்டுக்கொண்டதற்காக இதை இறுதியாக எழுதி முடிக்கிறேன்.

விவாதத்தை தொடருவதும் முடிப்பதும் உங்கள் சித்தம் நண்பரே :o .

கடவுள் கற்பனையில் வருவதில்லை - கற்பனை கடந்த சோதி அவர். அவர் அனுபவப் பொருள். கருணையெ அவர் உருவம். அவரை அவரவர் தம் அனுபவத்தின் மூலமே கண்டறிய வேண்டும். அதற்குக் கற்பனைகளும் கருத்துருவங்களும் தடையாய் நிற்பதால் அவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு சித்தத்தை ஒருமுகப்படுத்தி அவரைத் தியானிக்க வேண்டும். சித்தத்துள் தித்திக்கும் தேனாய் அவர் உங்கள் சிந்தையில் நிறைவார்.

மேலே நீங்கள் எழுதிய ஒவ்வொன்றையும் பார்ப்போம்.

'கற்பனை' என்றால் என்ன? நான் எனது மூளையில் சிந்திப்பது எனது கற்பனை.

அனுபவம் என்றால் என்ன? நான் எனது மூளையால் நான் அமிழ்ந்திருக்கும் இருக்கும் சூழலை உணருவது அல்லது அர்த்தப்படுத்துவது .இதுவும் எனது மூளையில் எனது சிந்தனையில் தான் நடக்கிறது.

கடவுள் உங்கள் 'சிந்தனையில் ' தோன்றுவார் என்று முடித்து உள்ளீர்கள்.இங்கே சிந்தனை நிகழ்வது எங்கே உங்கள் மூளையில்.மொத்தத்தில் எல்லாம் உங்கள் சிந்தையில், அதாவது மூளையில் தான் நிகழ்கிறது.அதனைத் தான் நான் முன்னரும் சொல்லி இருக்கிறேன்.உங்கள் சிந்தனையில் உங்கள் ஆள்மனதில் படிந்த படிமங்களின் தொகுப்பே உங்கள் சிந்தனை ,அனுபவம்,உணர்வு கற்பனை எல்லாம்.இந்தப் படிமங்கள் சிறு வயது முதலே உங்கள் சூழலால் உங்கள் மேல் உருவேற்றப்படுகின்றன.அதன் அடிப்படையிலையே உங்கள் சிந்தனை, கற்பனை ,உணர்வு எல்லாம் கடிவாளம் இடப்பட்டு ஒரு குறிப்பிட்ட வடத்துக்குள்ளே செயற்படுகிறது.மாற்றாக உருவேற்றப்பட்ட படிமங்களைக் கடந்து அவற்றைக் கேள்விக்கு உள்ளாக்கி சிந்தீப்பீர்கள் என்றால் நீங்களும் ஒரு சுதந்திரமன சிந்தனையாளராக முடியும்.

அது அமைதியும் சாந்தியும் பேரானந்தமும் நிறைந்த நிலையாகும். உங்கள் இதயமென்னும் கமல ஆலயத்தில் அரை நிமிடம் அந்தச் சூனியப் பெருவமைதி நிறைந்து விட்டாலே போதும் உங்கள் ஆயுள் பரியந்தம் அந்த அமைதி மிக்க சாந்தி நிலைத்து நிற்கும். விரும்பினால் முயன்று பாருங்கள். பொதுவாக நாத்திகம் பேசுபவர்களிடத்திலே இந்தத் தேடல் இருக்கும். மற்றவர்களோடு விவாதிப்பதை விட்டுவிட்டு உங்கள் உள்ளத்தைத் திறந்து அங்கே தேடுங்கள். உங்களுக்கு ஒரு பதிலும் கிடைக்கவில்லையென்றால் நீங்கள் நல்லவரென்றும் நம்பத் தகுந்தவர் என்றும் கருதும் இந்த உலகில் வாழும் அல்லது வாழ்ந்து மறைந்த ஒரு இறை நேசர் என்ன கூறுகிறார் என்பதையாவது சற்று விவாத நோக்கின்றிக் கேட்டுப் பாருங்கள்.

நண்பரே எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்று வள்ளுவர் மிகத் தெளிவாகப் பகுத்தறிவைப் பற்றிச் சொல்லி உள்ளார்.பகுத்தறிவு என்பது யார் எதைச் சொன்னாலும் அதனை விவாத நோக்கில் அது சரியா பிழையா என்று பார்ப்பது தான் .எனது பகுத்து அறியும் திறனைத் துறந்து நான் யரோ ஒருவர் சொல்வதை ஏற்றுக் கொள்வதென்பது அறிவுடமையாகாது.

பரம்பொருள் தேடுபவர்களுக்கு என்றும் கிடைக்காமல் போவதில்லை. எந்தக் கறட்பனையும் வேண்டாம். யாரையும் மடக்கவேண்டுமென்னும் துருதுருப்பும் வேண்டாம். அறிந்து கொள்ள வேண்டுமென்னும் என்னும் ஆர்வத்தோடு தேடுங்கள். நிச்சயம் உங்கள் கேள்விக்கான விடை கிடைத்தே தீரும். நான் சொல்வது சத்திய வார்த்தையாகும்.

உள்ளம் பெருங்கோயில். ஊனுடம்பு ஆலயம். வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல். தௌ;ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவமாகும். கள்ளப் . புலனைந்தும் காளா மணி விளக்காகும்.

அன்பும் சிவமும் இரண்டல்ல. அன்பே சிவமாகும் அதை யாரும் இலகுவில் அறிவதில்லை. அன்பே சிவமென்பதை யாராவது அறிந்தால் அன்பேவடிவாய் அமர்ந்திருப்பாரே.

இங்கு அன்பென்பது யூனிவேசல் லவ்வைக் குறிக்கும். ஹோர்மோனல் லவ்வையல்ல.

தயவு செய்து இதனை வரிக்கு வரி சொல்லுக்குச் சொல் ஆழ வாசித்துச் சிந்திக்குமாறு வேண்டி மீண்டும் உங்களிடமிருந்து விடைபெறுகிறேன். முற்றும்.

நண்பரே அன்பே சிவம் என்றால் எமக்கு அன்பு ஒன்றே போதுமே, கடவுள் எதற்கு? எதற்குச் சிவன் கோவில் எதற்கு கோவில் உண்டியல் எதற்குச் சிவனுக்கு ஒரு மனைவி குழந்தை குட்டிகள் புராணக்கள் வேதங்க சாஸ்திரங்கள் சாதிகள் பிராமணர்கள் சூத்திரர்கள் இந்து மதம் மத வெறி எல்லாம் எதற்காக? அன்பே சிவம் என்றதால் தான் ஆயிரம் சமணரைக் கழுவில் ஏற்றினார்களா? இன்றும் இசுலாமியர்களை கொன்று குவிப்பதும் அன்பினாலா? சாதிய ஒடுக்குமுறைகள் எல்லாம் அன்பினாலா? .அன்பே சிவம் என்று சொல்லிக் கொள்ள நன்றாகத் தான் இருக்கிறது,ஆனால் இந்து மதமும் அல்லது சைவமும் இதன் அடிப்படையில் இயங்கியதும் இல்லை இன்றும் இயங்குவதில்லை.சமயம் என்பது மனிதர் பின் பற்றும் ஒரு நடைமுறை.எந்தச் சமயத்தின் பயன் பாடும் அதன் நடைமுறையில் இருந்து தான் நோக்கப்படும்.பிரயோகத்தில் இருந்து தான் ஒரு கோட்பாடு நோக்கப்படுமே தவிர வெறும் வார்த்தைகளில் இருந்து அல்ல.எல்லாச் சமயங்களில்லும் இது தான் நிலமை.

அன்பே சிவம் என்றால் சிவன் கடவுள் இல்லை.அன்பென்பது ஒருவர் இன்னொருவர் மேல் செலுத்தும் உறவு நிலை.அதனைத் தான் நாங்கள் மனித நேயம் என்கிறோம்.கடவுள் என்று ஒன்றில்லை நீங்கள் மற்ற மனிதர்களை நேசியுங்கள் எல்லோரையும் சமனாக நடதுங்கள் என்று சொல்கிறோம்.பெரியாரின் வாழ்க்கையில் இதனை நீங்கள் நன்கு காணலாம் .அவர் போதித்தது மனித நேயத்தை.ஆனால் அன்பே சிவம் என்று நீங்கள் சொல்லும் சமயமாகவா இந்து/சைவ மதங்கள் இருக்கின்றன?இல்லையே.

அன்பே சிவம் என்றால் அங்கு கடவுளும் இல்லை, பக்தனும் இல்லை மதமும் இல்லை. :huh:

Link to comment
Share on other sites

இறைவனை நம்புதல், எது இறைவன்? என்று பகுத்தறிவு தொடங்கிய விடயம் நன்றாகவே நகர்த்தப்படுகிறது.

எது கடவுள்? என்றவிடயத்திற்குள் புகுவதற்கு முன், பகுத்தறிவு என்றால் என்ன? அதை எவ்வாறு பயன்படுத்துவது? அதைக் குறளிலும் நண்பர் "பகுத்தறிவு" எடுத்துச் சொல்லியுள்ளார். மெய்ப் பொருள் காண்பது அதுவே பகுத்தறிவு.

இறைவன் என்பது இல்லாத ஒன்றெனில், அதை இல்லையென்று சொல்லத் தேவையில்லை. இருக்கின்ற ஒரு பொருளைத்தான் இல்லையென்று சொல்வதற்கு வாதங்களும் ஆதாரங்களும் பயன்படும். அதனை இன்னுமொரு புறத்தால் சொன்னால் இல்லாத ஒன்றை ஆகாயம் என்று பெயரிட்டு அதற்கு நீலம் என்றொரு நிறத்தையும் காலங்காலமாகக் கொடுத்திருக்கின்றோம். அறிவாளிகளும், முட்டாள்களும் அவ்வாறே அதனை ஆகாயம் அது நீல நிறம் என்று ஏற்றுக்கொண்டு வருகின்றனர். இப்போது அது இல்லாத ஒன்றெனில் அது எவ்வாறு எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட காரணம், பார்வையில் தெரிவது என்ற ஒரே காரணமே.

இல்லை என்பதற்கு ஆதாரமே இருக்கிறது என்பதுதான். என்பது என்னுடைய வாதம். உண்டு என்பது + இல்லை என்பது - இவையிரண்டும் 0 இருந்தே தொடங்குகின்றன. இதையே பூஜ்ஜியத்தில் நிலைத்திருத்தல் என்பது. இறைத்தன்மையில் யோக்கியம் யோக்கியமற்ற தன்மை என்று எதுவுமில்லை. புராணங்கள் இதிகாசங்கள் என்பப எழுதியவர்களின் மனப்போக்கு. அவைகள் வெறும் கதைகளே. இதனைப் பகுத்தறிவு உள்ளோர் புரிந்து கொள்ளுதல் முக்கியமானது. உதாரணமாக ஒரு இலட்சத்திற்கும் சற்று மேற்பட்ட வெண்பாக்களால் ஆக்கப்பட்ட மகாபாரதம் மக்களின் மனதில் நிரந்தர இடம் பிடிக்க வேண்டுமென்றால் அதில் விவாதத்திற்குரிய சமாச்சாரங்கள் இடம்பெறவேண்டுமென்பதை அந்த நூலாசிரியர் புரிந்து கொண்டு சில விடயங்களைப் புகுத்தியுள்ளார். புகுத்தப்பட்ட அந்த விடயந்தான் மகாபாரதம் என்று சொல்லமுடியுமா?

இறைவனுக்கு உருவமில்லை என்று கூறும் மதங்களில் இருந்து அதாவது கிருஸ்தவம் இஸ்லாம் ஆகிய மதங்களின் ஆரம்ப நூலான பழைய ஏற்பாட்டில் " இறைவன் தனது சாயலில் மனிதனைப் படைத்தான் " எனக் கூறப்பட்டுள்ளது. அப்படியானால் இறைவனுக்கு உருவம் உண்டென்பதுதானே அர்த்தப்படுகிறது. எல்லாம் வல்லவன் இறைவன் அனைத்துமுடையவன் இறைவன் என்றெல்லாம் அவர்கள் சொல்லும்போது, உருவம் என்ற இல்லாமை இறைவனுக்கு இருக்கிறதா.?

சமஸ்கிருதம், வேதம் என்பதெல்லாம் சாதாரண மனிதருக்குத் தெரியாத விடயம். தமிழ் மறை எனப்படும் திருமுறைகள் யாவராலும் அறியக் கூடிய ஒன்று. அப்படிப்பட்ட ஒரு நூல்தான் திருமந்திரம். திருக்குறளைப்போன்றே தெளிவானது. அங்கே இறைவன்பற்றிச் சொல்லப்படுவதாவது,

அறிவு வடிவென்று அறியாத என்னை

அறிவு வடிவென்று அருள் செய்தான் நந்தி

அறிவு வடிவென்று அருளால் அறிந்தே

அறிவு வடிவென்று அறிந்து இருந்தேனே.

இவ்வாறு அறிவுதான் இறைவன் என்று திருமூலர் கூறுகின்றார். அது பகுத்தறிவல்ல. பரத்தின் அறிவு. இந்த அண்டங்கள் அறிவினால்தான் ஆளப்படுகின்றது. மனிதனுக்கும் இறைவனுக்குமிடையில் அறிவுதான் தொடர்பாடலாகவுள்ளது. அறிவைக் கொண்டே இறைவனை அடையலாம். இந்த உலகமும் அறிவினால்தான் ஆளப்படுகிறது.

நன்றி.

இறைவன் எனக்கு ஒரு சந்தேகம் அறிவு என்றால் என்ன ?

பரத்தின் அறிவு என்றால் என்ன? அது எங்கே இருக்கிறது?

அறிவு தான் இறைவன் என்றால் , எவ்வாறு அறிவைக் கொண்டு இறைவனை அடையலாம் என்று சொல்கிறீர்கள்?

அறிவு தான் இறைவன் என்றால் நான் அறிவைப் பெற்றால் நானே இறைவன் ஆகிறேன்.ஆகவே நானே கடவுள் ,இவ்வாறு எல்லோரும் கடவுள் ஆனால் அறிவைப் பெற்ற மனிதர் எல்லோரும் கடவுள் தானே.

அப்படியாயின் ஏன் நாம் எம்மைக் கடவுள் என்று அழைத்துக் கொள்வான். அறிவைப் பெற்ற மனிதர் என்றே அழைத்துக் கொள்ளலாமே?

Link to comment
Share on other sites

" அறிவுக்கு அழிவில்லை ஆக்கமும் இல்லை

அறிவுக்கு அறிவல்லது ஆதாரம் இல்லை

அறிவே அறிவை அறிகின்றது என்றிட்டு

அறைகின்றன மறை ஈறுகள் என்றுமே. "

என்கிறார் திருமூலர். அறிவுதான் அதற்கு ஆக்கமுமில்லை, ஆதாரமுமில்லை. அறிவின் மூலமே அறிவை அறியலாம் அடையலாம்.

நாரதர் சொல்வது முற்றிலும் உண்மை. அறிவை நாம் எங்கிருந்து பெறுகின்றோம். அதை இல்லாத இடத்திலிருந்தா? இல்லையே. அது இருக்கின்ற இடத்திலிருந்துதான் அறிவைப் பெறமுடியும். அறிவு இந்த உலகத்தில் இல்லாத ஒன்றா? அது இந்த அண்டம் முழுவதும் விரிந்துகிடக்கின்றது. அதுவே பரத்தின் அறிவு. அதில் மனிதன் பெற்றது அறிவு. அதுவும் சிற்றறிவு.

அறிவில்லாதவன் என்று எவருமெயில்லை. எதுவுமேயில்லை. எல்லாமே அறிவின் வழிப்பட்டது. இப்போது உங்களது கேள்விக்கு வருகின்றேன். உதாரணமாக இயேசு நாதர், நீர்மேலும் நடந்து பெரிய கூட்டத்திற்கு உணவை வரவழைத்துக் கொடுத்து, காற்றையும் கடலையும் அடக்கி அற்புதங்களை மட்டுமே செய்திருந்தால் அவரது இறைவனாகக் கருதப்பட்டு இந்த மனிதர்களிடையே நிலைத்து நின்றிருக்க முடியுமா? இல்லை என்பதுதான் எனது முடிவு. அவரது கருத்துக்கள் போதனைகள் மூலந்தான் இயேசு நாதர் இன்றும் உலகில் வாழ்கின்றார்.

அறிவாத்மமான கருத்துக்களும், அறிவியல் வளர்ச்சியும் நிலைத்திருக்கின்றதெனில் அது இறைவன் சம்பந்தப்பட்டதுதான். புத்தர் போதிமர நிழலில் ஞானத்தைப் பெற்றார். இயேசு யோவான் என்ற ஞானியினால் ஞானத்தைப் பெற்றார். முகமது நபியவர்கள் மலைக் குகையுள் தூங்கும் போது ஞானத்தைப் பெற்றார். மாணிக்கவாசகர் குருந்தை மர நிழலில் குரு ஒருவரின் மூலம் ஞானத்தைப் பெற்றார். திருமூலர் இடையனாயிருந்து ஞானத்தைப் பெற்றார். ஆக ஞானம் என்பது அறிவு எனப்படுவதுதான்.

அந்த அறிவு எங்கிருக்கிறது? எங்குமேயிருக்கிறது. அறிவு பேரறிவிடமிருந்து பெறப்படுகிறது. அறிந்துவிட்டோம் என்றெண்ணும் பொழுது அறிவு மேலும் விரிந்து செல்லும். அதுவே இறையின் தன்மை.

இறைவன்,

அறிவு என்றால் என்ன எங்கிற கேள்விக்கு நீங்கள் தெளிவான பதில் சொல்லவில்லை.

அறிவு என்றால் அறிதல், அறிதல் என்றால் என்ன? இருக்கின்ற அதாவது எம்மைச் சூழ உள்ளவற்றைப் பற்றி அறிதல்.

நாம் எவ்வாறு அறிகிறோம். எமது புலங்கள் மூலம் அறிகிறோம் எமது புலனுக்குப் புலப்படாதானவற்றைக் கருவிகள்,பரிசோதனைகள் மூலம் அறிகிறோம்.இன்றைய அறிதல் முறமைகளை நாம் எமது சிந்தனையின் செயற்பாட்டின் மூலமே கண்டு பிடித்தோம்.மனித அறிவு வளர்ச்சி என்பது வளர்ந்து வரும் ஒன்று.இங்கே மனிதனுக்கும் மிருகங்களுகுமான அடிப்படை மனிதனால் பகுத்து அறிந்து கொள்ள முடியும் என்பதே.தான் பெறும் தகவல்களைச் சரி பார்த்து தனது மூளையில் தர்க்கித்து அறிவதே பகுத்தறிவு.

ஏனையவர்கள் பகுதறிந்ததை நாங்கள் புத்தகம் வாயிலாக தொடர்பாடல் மூலம் அறிந்து கொள்கிறோம்.அவ்வாறு மனித வரலாற்றில் அந்த அந்தக் காலகட்டங்கலில் பல அறிதல் முறைகள் இருந்தன.சில மனிதருக்கு இந்தப் பகுத்தறியும் தன்மை அதிகமாக இருக்கும்.இவர்கள் சொல்வதை ஒவ்வொரு மனிதரும் உள் வாங்கி பகுத்தறிந்து கொள்கின்றனர்.இவ்வாறு பலராலும் ஏற்றுக் கொள்ளப்படும் கருதுக்கள் கோட்பாடுகள் அந்த அந்த காலகட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.அவ்வாறே சமயக் கோட்பாடுகளும் யேசு நபிகள் புத்தர் போன்ற மனிதர்களும் உருவானார்கள்.அவர்கள் சொன்னவற்றை ஆராய்ந்து அதனை மேலும் விருத்தி செய்யாமால் அவர் பின் வந்தவர்கள் இவற்றை நம்பிக்கை ஆக்கினர். நம்பிக்கை என்பது அறிதல் அல்ல.அது ஒரு வட்டதுக்குள் ஒரு காலகட்டத்தில் சொல்லப்பட்டவற்றை அப்படியே நம்புவது.இது அறிவு அல்ல.

நாம் இன்று இருபத்திரண்டாம் நூற்றாண்டில் இருக்கிறோம் இன்றைய அறிதல் முறைமைகள் வெகுவாக வளர்ந்து விட்டன.ஐம்புலனாலும் அறிய முடியாதன்வற்றை இன்று எம்மால் அறிய முடிகிறது.மனிதனின் அறிவாற்றல் பன் மடங்காக வளர்ந்து உள்ளது.இந்த நிலையில் நாம் பின் நோக்கிச் செல்வது அறிவுள்ள செயலாகுமா?

பண்டைய மனிதர் தமது வரையறுக்கப்பட்ட அறிதலில் இருந்து உருவாக்கிய மத கோட்பாடுகள் இன்று பயன் உள்ளவையா? இன்றைய அறிதல் அறிவியல் முறைமைகளால் ஆனது.அறிவியல் வளர்சியை அதன் பயன்பாடுகளை நாங்கள் உள் வாங்க முடியாமல் இருப்பது ,பண்டைய அறிவினுள் இன்றும் நாங்கள் வாழ்வதால்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர் நாரதர் அவர்களே!

நீங்கள் என்னை மீண்டும் அழைக்கிறீர்கள். என்ன செய்வதென்று தெரியவில்லை. ஏனென்றால் இதில் என்ன பயன் எனக்கும் உங்களுக்கும் கிடைக்குமென்று தெரியவில்லை. சும்மா விவாதிக்கும் நோக்கிருந்தால் ஒன்றும் கிடைக்கப்போவதில்லை. இருப்பினும் உள் நுழைகிறேன்.

உங்களை என் வார்த்தைகளைச் சொல்லுக்குச் சொல் வாசிக்குமாறு வேண்டினேன். நீங்கள் அதைச் செய்யவில்லை. இறைவன் சித்தத்துள் தித்திக்கும் தேனாய் உங்கள் சிந்தையில் நிறைவார் என்றே எழுதியுள்ளேன். சிந்தனையிலல்ல. சிந்தனை மனித மூளையின் செயற்பாட்டினால் வருவது. சிந்தை உங்கள் உள்ளத்தை அதாவது அகத்தைக் குறிக்கிறது.

மனித மூளைகளின் கற்பனைகளற்ற சிந்தை அடங்கி (அதாவது உள்ளம் ஒருமுகப்பட்டு) சூன்யத்தில் திளைக்கும் நிலையையே நான் குறிப்பிட்டேன். அங்கே நீங்கள் கருதுவதுபோல் எவ்வித சமயவழித் தெய்வங்களின் கற்பனை உருவங்களும் இருக்காது. அத்தகைய உருவ வழிபாடுகளில் எனக்கு நம்பிக்கையில்லை. நான் கூறுவது எதிலும் சார்ந் நிற்காத சூன்யத்தைப் பற்றியது.

உங்களுக்கு நல்லவர் நம்பத்தகுந்தவர் என்று நீங்கள் கருதுபவரை உங்கள் துணைக்கு வைத்துக்கொள்ளும்படிதான் நான் கூறிNனேயன்றி அவரை அப்படியே பின்பற்றுங்கள் என்று கூறவில்லை. அவர் மீது உங்களுக்குச் சிறிதளவாவது நம்பிக்கையிருந்தால் அவர் கூறுவதையிட்டுச் சிந்தித்துப் பாருங்கள். முடிவு உங்கள் கையில்தானேயுள்ளது. ஏனெனில் அது அனுபவப் பொருளல்லவா. உங்களது நம்பிக்கைக்குப் பாத்திரமான அந்த இறைநேசர் போகும் நீங்கள் வழி தெரியாமல் தடுமாறும் போது கொஞ்சம் வழிகாட்டியாய் இருக்கலாமல்லவா. இது கட்டாயமென்றில்லை. ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி போன்ற பல அறிஞர்கள் இவ்விடயத்தில் வழிகாட்டி கட்டாயமில்லையென்றே கூறுகின்றனர். ஆனால் இந்த அவசர உலகத்தில் கொஞ்சம் குறுக்கு வழிகளைப் பாவித்துத் தேடிப் பார்ப்பதில் தவறில்லையென்றே நான் கருதுகிறேன். அது உங்களுக்குப் பொருந்தாது என்றால் விட்டுவிடுங்கள்.

சிவத்தை அன்பின் வடிவமாய் எழுதினேன். என்னைப் பொறுத்த அளவில் சிவம் கடவுளென்னும் பதத்திற்கு மற்றொரு பெயர். அது குறிப்பது கைலையில் இடபாரூடராகக் காட்சியளிக்கும் சிவபெருமானையல்ல. எனக்கு அதிலெல்லாம் நம்பிக்கையில்லை. உங்களுக்கும் சிவமென்ற வார்த்தை பிடிக்கவில்லையானால் அதையும் தூக்கி எறிந்து விடுங்கள். தேவையில்லை.

எனக்கு கடவுள் தொடர்பாக எந்தக்கற்பனைப் படிமங்களும் கிடையாது. நான் உருவ வழிபாட்டையோ, சமயம் சார்ந்த நெறிகளையோ ஏற்பவனல்ல. ஒரு வகையில் ஒரு முழு நாத்திகன். ஆனால் யாருடைய நம்பிக்கையின்மீதும் சேற்றை வாரக்கூடாது என்னும் கொள்கையுடையவன். அதற்காக மூடநம்பிக்கைகளை இச்சமூகம் தொடர்ந்தும் கொண்டிருக்கவேண்டுமென்றும் கூறவரவில்லை. இதை நான் ஏன் சொல்கிறேனென்றால் நீங்கள் புரிந்து கொள்ளாமல் எழுதும் கருத்துக்கள் எனது இயல்புக்கு முற்றிலும் மாறாயுள்ளன.

தத்வம் அஸி என்று ஓர் உபநிஷத் கூறுகின்றது. அகம் ப்ரம்மாஷ்மி என்றும் கூறுகின்றது. அதன் உட்பொருள் நான் அவனே. என் அகமே பிரமத்தின் இருப்பிடமென்பதாகும்.

தேடிக் கண்டுகொண்டேன் தேடிக் கண்டு கொண்டேன் தேடித் தேடொணாத் தேவனையென்னுள்ளே தேடிக் கண்டு கொண்டேன் என்கிறார் ஒரு ஞானி.

ஆக மொத்த்தில் நீங்களே அந்த இறைவனின் இருப்பிடமென்பதைப் புரிந்துகொள்ளுங்கள். அவனைக் கைவல்ய நவநீதன் என்பார்கள். ஏனெனில் அவன் நம் கையிலே இருக்கும் நெய்போன்றவன். நாமோ அவனையறியாது வெண்ணெய்க்காய் வேறெங்கோ அலகிறோம்.

உங்களைக் கடவுளென்று நான் கூறுவதால் அதைஓர் குற்றச்சாட்டாகவோ இழிவாகவோ எடுத்துக் கொள்ளாதீர்கள். ஏனென்றால் உங்களைப் பொறுத்த அளவில் கடவுள் உலகின் பாவங்கள் அனைத்திற்கும் துணைபோகிறவராயிருக்கிறார்.

நான் கூறும் கடவுள் அன்பேவடிவானவராயிருக்கிறார். அந்த அன்பு மட்டும் இவ்வுலகில் வியாபித்து நிற்கவில்லையென்றால் உயிரினங்களே இருந்திருக்காது. மனித இனமே என்றோ அழிந்து போயிருக்கும்.

உலகில் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் எப்போதுமே போட்டியிருக்கும். அதர்மத்தை அன்புநிறைந்த தர்மம் அழித்துக்கொண்டேயிருக்கும். அதைப்பற்றிய ஆராய்வுக்கெல்லாம் போகுமுன் நாம் நம்மைத் தாங்கி நிற்கும் பெருங்கருiணைப் பேராறாம் சூன்யனென்னும் இறைவனைப் புரிந்து கொள்ளவேண்டும்.

நம்முள்ளே ஓம்காரமாகி உறைகின்ற மெய்பொருளாம் உயிர்மூச்சின் பெறுமதியைப் புரிந்துகொள்ளவேண்டும். சமயநெறிகளல்ல.உயிரில்லையென்ற

Link to comment
Share on other sites

ஆதிகாலத்திலை மனிதனை ஒரு கட்டுப்பாட்டிற்கை வச்சிருக்கச் சமயம் என்ற புச்சாண்டி தேவைப்பட்டுது. ஆனால் இன்றைய காலத்தில் மக்களை நெறிப்படுத்தச் சட்டம் கைவசமிருக்கச் சமயம் வெறும் சம்பிரதாயமாப்போச்சு.இனியும் இப்படியே அரைச்சமாவை அரைச்சுக்கொண்டிருக்கிறதை விட்டிட்டு எதாவது உருப்படியான விசயங்களைக் கதையுங்கோ.

Link to comment
Share on other sites

நண்பர் நாரதர் அவர்களே!

நீங்கள் என்னை மீண்டும் அழைக்கிறீர்கள். என்ன செய்வதென்று தெரியவில்லை. ஏனென்றால் இதில் என்ன பயன் எனக்கும் உங்களுக்கும் கிடைக்குமென்று தெரியவில்லை. சும்மா விவாதிக்கும் நோக்கிருந்தால் ஒன்றும் கிடைக்கப்போவதில்லை. இருப்பினும் உள் நுழைகிறேன்.

உங்களின் கருதுக்களை அறிந்த்துகொள்ளவும் எனது கருதுக்களைச் சரி பார்த்துக் கொள்ளவுமே எனக்கு இந்த விவாதம் பயன் படும் என்று நினைப்பதால் தான் விவாதிக்கிறேனே தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை.

உங்களை என் வார்த்தைகளைச் சொல்லுக்குச் சொல் வாசிக்குமாறு வேண்டினேன். நீங்கள் அதைச் செய்யவில்லை. இறைவன் சித்தத்துள் தித்திக்கும் தேனாய் உங்கள் சிந்தையில் நிறைவார் என்றே எழுதியுள்ளேன். சிந்தனையிலல்ல. சிந்தனை மனித மூளையின் செயற்பாட்டினால் வருவது. சிந்தை உங்கள் உள்ளத்தை அதாவது அகத்தைக் குறிக்கிறது. .

சிந்தை உள்ளம் அகம் எல்லாம் எங்கே இருக்கிறது?எல்லாம் தலையில் இருக்கும் மூளையில் தானே? நீங்கள் என்ன சொல்லவருகிறீர்கள் என்று எனக்கு விளங்கவில்லை? உள்ளம் என்பது மனித உடலில் எங்கே இருக்கிறது?

மனித மூளைகளின் கற்பனைகளற்ற சிந்தை அடங்கி (அதாவது உள்ளம் ஒருமுகப்பட்டு) சூன்யத்தில் திளைக்கும் நிலையையே நான் குறிப்பிட்டேன். அங்கே நீங்கள் கருதுவதுபோல் எவ்வித சமயவழித் தெய்வங்களின் கற்பனை உருவங்களும் இருக்காது. அத்தகைய உருவ வழிபாடுகளில் எனக்கு நம்பிக்கையில்லை. நான் கூறுவது எதிலும் சார்ந் நிற்காத சூன்யத்தைப் பற்றியது.

உங்களுக்கு நல்லவர் நம்பத்தகுந்தவர் என்று நீங்கள் கருதுபவரை உங்கள் துணைக்கு வைத்துக்கொள்ளும்படிதான் நான் கூறிNனேயன்றி அவரை அப்படியே பின்பற்றுங்கள் என்று கூறவில்லை. அவர் மீது உங்களுக்குச் சிறிதளவாவது நம்பிக்கையிருந்தால் அவர் கூறுவதையிட்டுச் சிந்தித்துப் பாருங்கள். முடிவு உங்கள் கையில்தானேயுள்ளது. ஏனெனில் அது அனுபவப் பொருளல்லவா. உங்களது நம்பிக்கைக்குப் பாத்திரமான அந்த இறைநேசர் போகும் நீங்கள் வழி தெரியாமல் தடுமாறும் போது கொஞ்சம் வழிகாட்டியாய் இருக்கலாமல்லவா. இது கட்டாயமென்றில்லை. ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி போன்ற பல அறிஞர்கள் இவ்விடயத்தில் வழிகாட்டி கட்டாயமில்லையென்றே கூறுகின்றனர். ஆனால் இந்த அவசர உலகத்தில் கொஞ்சம் குறுக்கு வழிகளைப் பாவித்துத் தேடிப் பார்ப்பதில் தவறில்லையென்றே நான் கருதுகிறேன். அது உங்களுக்குப் பொருந்தாது என்றால் விட்டுவிடுங்கள்.

சிவத்தை அன்பின் வடிவமாய் எழுதினேன். என்னைப் பொறுத்த அளவில் சிவம் கடவுளென்னும் பதத்திற்கு மற்றொரு பெயர். அது குறிப்பது கைலையில் இடபாரூடராகக் காட்சியளிக்கும் சிவபெருமானையல்ல. எனக்கு அதிலெல்லாம் நம்பிக்கையில்லை. உங்களுக்கும் சிவமென்ற வார்த்தை பிடிக்கவில்லையானால் அதையும் தூக்கி எறிந்து விடுங்கள். தேவையில்லை.

எனக்கு கடவுள் தொடர்பாக எந்தக்கற்பனைப் படிமங்களும் கிடையாது. நான் உருவ வழிபாட்டையோ, சமயம் சார்ந்த நெறிகளையோ ஏற்பவனல்ல. ஒரு வகையில் ஒரு முழு நாத்திகன். ஆனால் யாருடைய நம்பிக்கையின்மீதும் சேற்றை வாரக்கூடாது என்னும் கொள்கையுடையவன். அதற்காக மூடநம்பிக்கைகளை இச்சமூகம் தொடர்ந்தும் கொண்டிருக்கவேண்டுமென்றும் கூறவரவில்லை. இதை நான் ஏன் சொல்கிறேனென்றால் நீங்கள் புரிந்து கொள்ளாமல் எழுதும் கருத்துக்கள் எனது இயல்புக்கு முற்றிலும் மாறாயுள்ளன.

தத்வம் அஸி என்று ஓர் உபநிஷத் கூறுகின்றது. அகம் ப்ரம்மாஷ்மி என்றும் கூறுகின்றது. அதன் உட்பொருள் நான் அவனே. என் அகமே பிரமத்தின் இருப்பிடமென்பதாகும்.

தேடிக் கண்டுகொண்டேன் தேடிக் கண்டு கொண்டேன் தேடித் தேடொணாத் தேவனையென்னுள்ளே தேடிக் கண்டு கொண்டேன் என்கிறார் ஒரு ஞானி.

ஆக மொத்த்தில் நீங்களே அந்த இறைவனின் இருப்பிடமென்பதைப் புரிந்துகொள்ளுங்கள். அவனைக் கைவல்ய நவநீதன் என்பார்கள். ஏனெனில் அவன் நம் கையிலே இருக்கும் நெய்போன்றவன். நாமோ அவனையறியாது வெண்ணெய்க்காய் வேறெங்கோ அலகிறோம்.

உங்களைக் கடவுளென்று நான் கூறுவதால் அதைஓர் குற்றச்சாட்டாகவோ இழிவாகவோ எடுத்துக் கொள்ளாதீர்கள். ஏனென்றால் உங்களைப் பொறுத்த அளவில் கடவுள் உலகின் பாவங்கள் அனைத்திற்கும் துணைபோகிறவராயிருக்கிறார்.

நான் கூறும் கடவுள் அன்பேவடிவானவராயிருக்கிறார். அந்த அன்பு மட்டும் இவ்வுலகில் வியாபித்து நிற்கவில்லையென்றால் உயிரினங்களே இருந்திருக்காது. மனித இனமே என்றோ அழிந்து போயிருக்கும்.

உலகில் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் எப்போதுமே போட்டியிருக்கும். அதர்மத்தை அன்புநிறைந்த தர்மம் அழித்துக்கொண்டேயிருக்கும். அதைப்பற்றிய ஆராய்வுக்கெல்லாம் போகுமுன் நாம் நம்மைத் தாங்கி நிற்கும் பெருங்கருiணைப் பேராறாம் சூன்யனென்னும் இறைவனைப் புரிந்து கொள்ளவேண்டும்.

நம்முள்ளே ஓம்காரமாகி உறைகின்ற மெய்பொருளாம் உயிர்மூச்சின் பெறுமதியைப் புரிந்துகொள்ளவேண்டும். சமயநெறிகளல்ல.உயிரில்லையென்ற

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்பரே!

மூளையின் சிந்திக்கும் செயற்பாடுகளும் எண்ண ஓட்டங்களுமற்ற நிர்ச்சலன சிந்தையொன்று இருக்கின்றது. அதில்தான் ஞானிகள் தம் மனத்தைக் குவித்து அந்தச் சூனியத்தை அனுபவிக்கிறார்கள்.

ஆரம்பத்தில் நீங்கள் புறத்திலிருந்து உள்ளே செல்வதால் உங்களுக்கு மனம் இருக்கும். பின்னர் படிப்படியாக மனமும் அதன் எண்ண ஓட்டங்களும் செயற்படாமல் நின்றுவிடும். அங்கே மூளைக்கு வேலையிருக்காது. காண்பதுவும் காட்சிப்பொருளும் நீங்களாகி ஐக்கியப்பட்டு நிற்கும் நிலை அதுவாகும். ஏன்னால் இதனை விபரிக்க முடியாது. ஏனெனில் இது அவரவர் அனுபவித்திலிருந்தே அவரவருக்குக் கிடைக்கவேண்டும். பிறர் சொல்லியல்ல. அப்படி யாதாயினும் எதிர்பார்ப்புகளுடன் உட்சென்றால் மனமும் அதை இயக்கும் மூளையும் தடையாய் நின்று உங்களை நீங்கள் மனத்தால் எதை எதிர்பார்க்கிறீர்களோ அதைச் சுற்றிச்சுற்றியே வைத்திருக்கும். கடைசியில் எந்தப் பலனுமில்லாமல் எழுந்து விடவேண்டியதுதூன். அதற்காகத்தான் நிர்க்குணனான சூன்யப் ப்ரம்மத்தை அனுபவிக்க எந்தக் கற்பனைகளும் எதிர்பார்ப்புகளும் உதவாது, அவை தடையாய் மட்டுமே நிற்குமென்கிறேன்.

நாம்; பாவிக்கும் சொற்கள் தமிழ் அல்லது வடசொற்களாகும். அதைவிட நாம் புதிதாக எந்தச் சொல்லையும் உருவாக்க முடியாது. அதனால் சமயங்கடந்த இறைவனைப் பற்றிப் பேசும்போதும் அத்தகைய சொற்களையே பாவித்து விளக்க வேண்டியிருக்கிறது. நீங்கள் அச்சொல்லின் உட்கருத்தை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். அது சமயச் சொல் என்று அர்த்தம் கொள்ளாதீர்கள்.

அன்புக்கு நான் வேறு எந்தச் சொல்லைத் தேடிப்பிடிக்க முடியும். உருவற்ற இறைவனை நான் அவனென்று கூறுகிறேன். அதுவென்று கூறினால் திருப்தியடைவீர்களா.

மூச்சாயிருந்து உள்ளே சப்திப்பவனை ஓங்காரன் என்கிறேன். அவனை ரீங்காரன் என்னட்டுமா. பிரச்சனையேயில்லை. எந்தப் பெயராலும் அழைக்கலாம்.

மீண்டும் உங்களைக் குழப்புவதாக எண்ணாதீர்கள்:

~ஒரு நாமம் (கடவுள்) ஓர் உருவம் (சூன்ய ரூபம்) உள்ளானை ஆயிரம் திருநாமம் பாடித் தௌ;ளோணங் கொட்டுவதில் தவறென்ன இருக்கிறது. தவறென்றால் விட்டுவிடுங்கள். சாற்றை எடுத்துவிட்டுச் சக்கைகளைத் தூக்கியெறியுங்கள்.

உண்மையென்பார் சிலர், அன்பென்பார் சிலர், அறிவென்பார் சிலர், சாந்தியென்பார் சிலர். சத் சித் ஆனந்தம் (உண்மையான சித்தத்தின் ஆனந்தம்) என்பார் சிலர். ஆனால் கருப்பொருள் ஒன்றே. அதை உணரும்போதுதான் தெளிவு பிறக்கும். நான் கூறியோ பிறர் கூறியோ அது பிறக்காது. இதுவும் சத்திய வாத்தைகளே.

Link to comment
Share on other sites

நாரதரே உங்கள் கேள்விக்குப் பதில் உங்களாலேயே கூறப்பட்டுவிட்டது. அறிவு என்றால் வளர்ந்து செல்லுதல் விரிந்து செல்லுதல் என்றும் கூறலாம் என நினைக்கின்றேன். அதைவிடவும் அம்பலத்தாரும் அறிவைப்பற்றி நகைச்சுவையான உண்மையைக் கூறியிருக்கிறார்.

மாற்றங்களை அடைவதுதான் அறிவு. கண்மூடித்தனமாக இருப்பவர்களை சீர்திருத்தப் பயன்படுவதுதான் பகுத்தறிவு. அம்பலத்தார் கருத்துப்போல ஆரம்பகாலத் தேவைகளுக்காக உருவாக்கப்பட்ட நெறிகள் இன்று சட்டமாகவுள்ளன. இவைகளுக்கெல்லாம் அத்திவாரம் எது? ஆரம்பகாலச் சமய நெறிகள்தான். சமயம் பிரிவுகள் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. இறைவன் என்ற அறிவின் சக்தியில் எனக்கு உடன்பாடு உண்டு. அந்த அறிவின் வழிதான் இந்த அண்டங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அந்தச் சூரியனையும் இந்தப் பூமியையும் அதனதனிடத்திலிருந்து செயற்பட வைக்கின்ற பரத்தின் அறிவானது, அளவற்றது. அதைத்தான் மாணிக்க வாசகர் " அலகிற் சோதியன் அம்பலத்தாடுவான்" என்று கூறியுள்ளார்.

அறியாமை எது? என்று சிந்திக்கும் போது அறிவு எது, என்பது தானே தெரியவரும். அறிவென்பது ஒருக்காலும் பின்னோக்கிச் செல்லாது. அதன் தன்மையே விரிந்து செல்வதுதான். உலகில் மனிதனால் ஏற்படும் மாற்றங்கள் அறிவின்பாற்பட்டதுதான். அந்த அறிவு எங்கிருந்து பெறப்படுகிறது. மனிதனின் புலன்களால் அறியமுடியாத "சுனாமி" போன்ற அழிவினை மிருகங்கள் எப்படி அறிகின்றன. அவை எப்படி அதிலிருந்து தப்பின? 22 ஆம் நூற்றாண்டில் வாழும் மனிதக் கூட்டம் ஏன் அவ்வாறு அழிந்தது.? அவனது பகுத்தறிவிற்கு என்ன நடந்தது.

அங்கே இறைவன் உண்டு. இங்கே பால் குடிக்கிறது. இதோ கண்ணீர்விடுகிறது, இந்தக் கூப்பாடுகளில் எனக்கு நம்பிக்கை கிடையாது. இப்படிப்பட்ட விடயங்களை இல்லாமற் செய்வதுதான், பகுத்தறிவாளரின் நோக்கமும் கூட. நாரதரின் நிலையும் இதுதான் என நான் எண்ணுகின்றேன். இப்படியான ஏமாற்றுத்தனங்களில் மக்கள் ஈடுபடுவதுதான் அறியாமை. அந்த அறியாமையை அகற்றுவதுதான் அறிவு.

அறிவு என்பது சிந்திப்பதால் பெருகுவது. மெய்ப் பொருள் காண்பதுவே அறிவு. இதற்கு முன்னொரு கேள்வியும் நாரதரால் கேட்கப்பட்டிருந்தது. அறிவு பெற்றவர்கள் தம்மைத் தாமே இறைவன் என்று கூறலாமா? என்பது. தம்மைத்தாமே அர்ச்சிக்கலாம் என்றே திருமூலர் கூறுகின்றார்

"தன்னை அறியத் தனக்கொடு கேடில்லை

தன்னை அறியாமல் தன்னைக் கெடுக்கின்றான்

தன்னை அறியும் அறிவை அடைந்தபின்

தன்னை அர்ச்சிக்கத் தான் இருந்தானே."

புலன்கள் உள்ளதே உணர்ந்து அறியத்தான்.

Link to comment
Share on other sites

எட்டடுக்கு மாளிகையில் ஒன்பது ஓட்டை

அதில் நல்ல ரத்தம் உள்ள மட்டும் எத்தனை சேட்டை!!! :) :) :D

Link to comment
Share on other sites

மனிதனே கடவுளை ஏற்படுத்தினான்

மனிதன், கால்கள் இரண்டோடு கைகள் இரண்டையும் ஊன்றி விலங்குகளைப் போல் தவழ்ந்து பச்சை இறைச்சியை உண்டும். பிறந்த உடலோடு குகைகளிலும் மரங்களிலும் வாழ்ந்தும், மொழி எதுவும் தெரியாமல் தனித்து இருந்தும் வந்த காலம் ஒன்றுண்டு அந்தக் காலத்தில் அவனுக்குக் கடவுளைப் பற்றிய எண்ணம் இருந்திருக்குமா?

“அனைத்தையும் கடந்ததாய், எல்லாம் வல்லதாய், எல்லாம் நிறைந்ததாய், எங்கும் உறைவதாய், ஒரு கடவுள் இருக்கிறார். அவர், உயிர்களைப் படைத்தார்@ அவ்வுயிர்கள், தம் ஆணவக்கட்டினின்றும் நீங்கிக் கடவுள் அடியை அடைவதே அவற்றின் பேரின்பம்! அதற்காக ஆன்மாக்கள் கடவுட்குக் கோயில் எழுப்பவும் மலர் பால் பழம் கொண்டு வணங்கவும் வேண்டும்” என்ற கோட்பாட்டில் நு}றாயிரத்தில் ஒரு பங்கையாவது நான், முற் குறிப்பிட்ட காலத்து மனிதன் எண்ணியிருப்பானா?

தனக்குப் பால் பழத்தை அறியாதவன்@ தனக்கு ஆடை ஒன்றை ஏற்படுத்தாதவன்@ தனக்கு ஒரு சிறு குடிசை யாவுதல் காணாதவன்@ தனக்கென்று ஒருமொழி இல்லாதவன். மேற்கண்டவாறு எண்ணியிருப்பானா? ஒரு போதும் அவன், கடவுளையோ கோயிலையோ பூசையையோ ஆன்ம ஈடேற்றத்தைப் பற்றியோ எண்ணியிருக்க முடியாது! இது தான் உண்மை.

கடவுள் எண்ணம் இல்லாத ஒரு காலத்திலே மனிதன் வாழ்ந்திருக்கிறான் என்பதைத் தெரிந்து கொண்டோம். இதிலிருந்து, கடவுள் என்ற எண்ணம் மனிதன் தோன்றிய காலத்திலேயே தோன்றிய தன்று என்றும் இடைக் காலத்திலே அவன், சிறுகச் சிறுக வளர்ந்து கொண்டிருந்த காலத்திலே தான் அவ்வெண்ணம் தோன்றிய தென்றும் தெரிந்து கொள்ளலாம். இதிலிருந்து நாம், அறியக் கூடிய தொன்று உண்டு. அதாவது: கடவுளும் அதன் கோட்பாடுகளும் மனிதனால் ஆக்கப்பட்டனவே!

கடவுள், மனிதனால் ஆக்கப்பட்டது என்று கொள்ளாவிட்டால், நாட்டுக்கு நாடு இனத்துக்கு இனம் வௌ;வேறு உருவமுடைய கடவுளும் வேறு வேறான சடங்குகளும் கொள்கைகளும் உண்டாமாறு இல்லை என்க.

அச்சமே கடவுள் கொள்கையின் அடிப்படை!

மனிதன் கடவுளை ஏன் ஏற்படுத்தினான்? காடுகளிலும் குகைகளிலும் வாழ்ந்த மனிதன், கொடிய விலங்குகளோடு போரிட்டுக் கொண்டிருந்த காலம்@ தொலைவிலே சிறு ஒலி, அசைவு ஏற்பட்டாலும் குகையிலும் மரங்களிலும் அஞ்சி நடுங்கிக் கொண்டு ஒளித்திருந்த காலம்@ இயற்கையின் பல கொடுமைகளையும் தாங்க வேண்டியிருந்த அறிவு வளராத காலம்@ அக்காலத்தில் மரஞ்செடி கொடி மலை எல்லாவற்றையும் வேரோடு புரட்டி எறியும் பெருங்காற்;றை, காய்ந்த மரங்கள் ஒன்றோடொன்று உரோஞ்சுவதனால் ஏற்பட்டுப் பற்றிக் கொண்ட காட்டுத் தீயை, கலங்க வைக்கும் இடியோடும் கண்ணைப் பறிக்கும் மின்னலோடும் சேர்ந்து பெய்யும் விடா மழையை அவன் கண்டான். அவை, அவன் வாழ்க்கையைப் பெரிதும் தாக்கின. எனவே, அஞ்சினான்@ அவையெல்லாம் தங்களிலும் வலிமை மிக்க மனிதர்கள் (கடவுள்கள்) மறைந்து நின்று செய்யும் கடிய செயல்கள் என நம்பினான். கையெடுத்து வணங்கினான்@ இனாமாக ஏதும் தருவதாக வாக்களித்தான். அவற்றைப் போற்றினான்@ புகழ்ந்தான். இப்படியே இக் கொள்கை, அச்சம் காரணமாகவும் அறியாமை காரணமாகவும் வளரலாயிற்று.

பண்டு;, இயற்கை வணக்கம் ஏற்பட்டதற்கும் கடவுள்கள் பயங்கர உருவங்களில் படைக்கப்பட்டமைக்கும் முகில்களை ஊர்தி என்றும் இடியைக் கடவுள், கோபங் கொண்டு போருக்கழைக்கும் குரல் என்றும் மின்னலை வாள் வீச்சென்றும் இப்படிப்பட்ட கற்பனைப் புராணங்கள் எழுந்தமைக்கும் காரணம்: அச்சமே என அறிவுடையோர் தெரிந்து கொள்வர்.

கடவுள் திருத்தப்பட்டார்

மனிதனுக்கு அறிவு வளர வளர நல்ல எண்ணங்கள் வளர நாகரிக வளர்ச்சிக் கேற்ப கடவுள்களும் வளர்ந்து வந்துள்ளன. மனிதன், பிறருக்குத் தீங்கு செய்யாத நல்லவனாக இருக்க ஒருவன் எப்படி இருக்க வேண்டும் என்று எண்ணினானோ, அப்படியே கடவுளைத் திருத்தினான். கடவுள்களின் பயங்கர உருவங்களை மாற்றினான்@ தங்கள் நாகரிகத்துக் கேற்றவாறு கடவுள்களுக்கும் உடை அணிவித்தான்@ நல்ல அன்பு அருள் முதலியவற்றைக் கடவுளின் முதன்மைக் குணம் எனக் கூறினான். இப்படிக் கடவுளைத் திருத்தும் முயற்சியில் மனிதரில் ஓரளவு அறிவு பெற்றோர் ஈடுபட்டனர். அறிவிற் குறைந்தவர்கள் தாங்கள் படைத்த கடவுளுக்குத் தாங்களே அஞ்சினார்கள். பழைய காலப்படியே எல்லாம் நடக்க வேண்டும், ஆடு மாடு கோழி முதலிய உயிர்ப்பலிகளைக் கொடுக்க வேண்டும். இல்லாது விட்டால் கடவுள், கொடிய அம்மை நோயை, கடும் புயலை, பெருவெள்ளத்தை விட்டுத் தண்டிப்பார் எனக் கூறித் தங்கள் கொள்கையினின்றும் வழுவாதிருந்தனர்@ இருந்து வருகிறார்கள். இதுதான் கடவுட் கொள்கை வளர்;ந்த வரலாற்றின் சுருக்கம்.

நாத்திகம் அல்லது பகுத்தறிவு

காற்றையும் மழையையும் தீயையும் கண்டு அஞ்சி அவற்றைக் கையெடுத்து வணங்கிய காலம் போலவே என்றும் மனிதன், இருந்திருந்தால், அவற்றைப் பயன்படுத்தவும் எதிர்த்து முன்னேறவும் வியக்கத்தக்க மாறுதல்கள் அடையவும் புதிய புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிக்கவும் முடிந்திருக்குமா?

அம்பு வில்லு முதல் அதிரவைக்கும் பீரங்கி வரை ஏர் முதல் எந்திரக் கலப்பை வரை - கட்டுமரம் முதல் பெருங் கப்பல்கள் வரை - மாட்டுவண்டி முதல் விரைந்து செல்லும் றொக்கெட்டு வரை, எவ்வளவு மாறுதல்கள்! இப்பேர்ப்பட்ட மாறுதல்களை அடையக் காரணந்தான் என்ன? மனிதன், தனது பகுத்தறிவை அச்சமின்றி ஆராய்ச்சித் துறையில் எல்லாவற்றிலும் பயன்படுத்தியதுதான், இப்பெரும் வளர்ச்சிக்குக் காரணமாயிற்று!

பொருள்களின் உண்மையான இயல்பையும் அவற்றின் இயக்கங்களையும் கண்டறிய முற்பட்டதன் விளைவே, இன்று உலகெங்கும் நீக்கமறப் பிணைந்து நிற்கும் அறிவியல் (விஞ்ஞானம்) ஆகும்.

அறிவியலுக்கு வழிகோலிய அன்றைய அறிஞர்கள்தாம், நாத்திகர்கள் என்றும் கடவுள் நிந்தனைக்காரர் என்றும் து}ற்றப்பட்டார்கள்@ கல்லறையிலும் கடுஞ்சிறையிலும் அடைக்கப்பட்டார்கள்@ நாடு கடத்தப்பட்டார்கள்@ நஞ்சூட்டியும் சித்திரவதை செய்தும் கொல்லப்பட்டார்கள்.

மன்னர்கள் மதகுருமார் கைகளிலும் மதகுருமார், அறியாமையின் பிடியிலும் இருந்து அறிவுக் கருத்துக்களை வெளியிட்டவர்களை வதைத்தார்கள். கொன்றார்கள். அப்பப்பா! அறிஞர்கள் பட்ட தொல்லைகள் தாம் எத்தனை? ஆனால், பல இன்னல்களுக்கும் பழமொழிகளுக்கும் ஆளாகியும், தாம் கொண்ட கொள்கையினின்றும் பகுத்தறிவினி;ன்றும் மாறினார்கள். இல்லை. அவர்கள் அழிக்கப்பட்டாலும் அவர்களின் அறிவின் முடிவான கருத்தை அழிக்க மதகுருமாரால் முடியவில்லை. உண்மை என்றும் அழியாது என்ற உண்மையைத் தெரிந்து கொண்டார்கள்@ பல ஆண்டுகள் கடந்த பின்! எனவே, மதகுருமார்கள் தங்கள் கடவுளையும் கொள்கையையும் காப்பாற்ற, தங்கள் கொள்கைகளிலே மாற்றஞ் செய்ய வேண்டியதாயிற்று. அதனால், தங்கள் கடவுளுகளுக்கும் செய்கைகளுக்கும் கொள்கைகளுக்கும் புதுப் புது விளக்கங்கள் அளிக்கலாயினர். பாவம்! முற்றாக ஒருநாள் அழிந்துவிடும் இம் மூடகொள்கையைக் கொண்டு இவர்கள் எத்தனை நாள்தான் பிழைக்கப் போகிறார்கள்?

அறிவின் முதிர்ச்சிதான், து}ய தெளி;ந்த உண்மையான பகுத்தறிவின் கொள்கைதான் நாததிகம். நாத்திகம், எதையும் ஏன்? எப்படி? என்று ஆராய்ந்து, மனம் ஏற்றுக்கொண்டதை ஏற்றுக்கொள் என்கிறது. “அறிவு, ஒரு எல்லைக்குள் அடங்குவதில்லை அது சுதந்திரமாக எங்கும் எதிலும் சென்று தனது ஆற்றலைப் பயன்படுத்தி உண்மையைக் கண்டறிய வேண்டும்” என்று நாத்திகம் கூறுகிறது.

கடவுளின் மேல் கோயிலின் மேல் அதன் கொள்கை மேல் மதகுருமாரின் மேல் ஆராய்ச்சிகூடாது. வேதப் புத்தகம் கூறுவதையும் மதகுருமார் சொல்வதையும் அப்படியே நம்பு என்று மதங்கள் போதிக்கின்றன. ஆராய்ச்சி கூடாதென்றால், மூளை இல்லாமல் அல்லவா இருந்திருக்க வேண்டும்? அல்லது உங்கள் கடவுள் ஆராயும் எண்ணத்தை யாவுதல் நாத்திகர்களின் மூளையிலிருந்து எடுத்திருக்க வேண்டும்!

நாம், ஆராய்ந்து பார்க்கக் கூடாத அளவு கொள்கையோடு ஒரு கடவுளும் வேதப் புத்தகமும் ஒளிந்து நின்று கொண்டு நம் மீது ஆதிக்கம், அடக்குமுறை செலுத்துவ தென்றால், அந்தக் கடவுளும் வேத நு}லும் நமக்கு எதற்கு?

மதகுருமார் சிந்தக்கவும் முடிவு சொல்லவும் உரிமை உண்டு. நமக்கு மட்டும் சிந்திக்கவும் சிந்தித்ததின் விளைவால் மனதிலே பட்ட உண்மையான முடிவை வெளிப்படுத்தவும் உரிமை இல்லையா?

இவ்வாறு உரிமைப்போர் - அறிவுப்போர் தொடுத்து வருவது தான் நாத்திகம் அல்லது பகுத்தறிவு!

நாத்திகர்களின் கொள்கை

இயற்கை, மனிதனை ஆக்கிவிட்டது. இவ்வுலகில் பிறந்த நமக்கு இவ்வுலகின் தோற்றத்தைப் பற்றி எதுவும் தெரியாது. தெரிய வேண்டிய தேவையும் இல்லை! ஐந்து பருப்பொருட்களினால் (ஐம்பூதங்கள்) ஏற்பட்ட பொருள்களின் இயல்பையும் இயக்கங்களையும் உள்ளவாறு அறிந்து அவற்றைப் பயன்படுத்தி நாம், முன்னேறவும் இன்பம் அடையவும் தெரிந்து கொண்டால் போதும்!

கடவுள் என்ற எதுவும் இல்லை. அது மனிதனின் பொருளற்ற கற்பனை. அப்படி ஒன்று இருப்பதாக நிறுவச் சான்றுகளும் இல்லை.

மதம், குருமார்களின் வயிற்றுப் பிழைப்புக்காக ஏற்பட்ட கொள்கை. மனிதன் இன்பமாய் வாழ்வதற்கு மதம் தேவையுமில்லை.

நாத்திகர்கள் இல்வாழ்க்கையிலும் இவ்வுலக இன்பங்களிலும் பெரிதும் நம்பிக்கை உடையவர்கள்.

“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது” - என்ற உயரிய நோக்கை உடையவர்கள். பொய், களவு, கள்ளுண்ணல், சூது, அறமில்லாக் காமம் முதலியவற்றை நீக்கி பிறருக்குத் தீங்கில்லாத வகையில் அன்பாகவும் பண்பாகவும் நடந்து உதவி செய்வதே குறிக்கோளாக இருக்க வேண்டும் என்றும் கூறுபவர்கள்.

எனவே, நாத்திகத்தைக் கண்டு யாரும் அஞ்சத் தேவை இல்லை. அதன் விரிவைத் n;தரிந்து கொண்டு ஆராய்ந்து சரியென்று கண்டால் ஏற்றுக் கொண்டு நடப்பதே அறிவுடைமையாகும்.

http://www.noolaham.net/project/02/155/155.htm

Link to comment
Share on other sites

நண்பரே!

மூளையின் சிந்திக்கும் செயற்பாடுகளும் எண்ண ஓட்டங்களுமற்ற நிர்ச்சலன சிந்தையொன்று இருக்கின்றது. அதில்தான் ஞானிகள் தம் மனத்தைக் குவித்து அந்தச் சூனியத்தை அனுபவிக்கிறார்கள்.

நண்பரே நான் கேட்கும் கேள்வி மிக இலகுவானது.மனித உடற்கூறுகள் இன்று அறிவியல் ரீதியாக பெருமளவில் அறியப்படுள்ளன.மனித உடலை ஆய்வு செய்தவர்கள் என்ன என்ன உறுப்புக்கள் என்ன என்ன வேலைகளை எப்படிச் செய்கின்றன என்பதெல்லாம் இன்று உடற்கூற்று அறிவியலின் மூலம் தெரிந்த விடயங்கள்.இதில் நீங்கள் சொல்லும் நிர்ச்சலன சிந்தை மனித உடற்கூற்றில் எங்கே இருக்கிறது.அந்த உறுப்பு எவ்வாறு தொழிற்படுகிறது? இந்த உறுப்பு மனித மூளைக்கு வெளியால் இயங்குகிறது என்றால் அதன் தொழிற் பாடு பற்றிய ஆய்வுகள் ஆதாரங்கள் அதனை யார் செய்தார்கள் என்று எதாவது இருந்தால் தாருங்கள் வாசித்து அறிந்து கொள்கிறேன்.ஏனெனில் இதுவரை நான் படிந்த எந்த மருத்துவ உடற்கூற்று அறிவியல் புத்தகங்களிலும் இதனை நான் காணவில்லை.யரோ ஒரு ஊர்பெயர் தெரியாத ஞானி சொன்னதை விட மனித உடற்கூற்றை வெட்டிப் பிழந்து அல்லது ஸ்கான் செய்து எனப் பலவாறாக துறை சார் அறிவியளாளர்களால் செய்யப்பட்ட ஆய்வுகளை நான் நம்புகிறேன்.அத்தோடு நில்லாமால் இறந்த உடல்களைப் பிளந்து அவற்றில் எந்த உறுப்பு எந்த இடத்தில் இருக்கிறது என்பதை நான் எனது கண்ணாலும் பார்த்திருக்கிறேன்.

ஆரம்பத்தில் நீங்கள் புறத்திலிருந்து உள்ளே செல்வதால் உங்களுக்கு மனம் இருக்கும். பின்னர் படிப்படியாக மனமும் அதன் எண்ண ஓட்டங்களும் செயற்படாமல் நின்றுவிடும். அங்கே மூளைக்கு வேலையிருக்காது. காண்பதுவும் காட்சிப்பொருளும் நீங்களாகி ஐக்கியப்பட்டு நிற்கும் நிலை அதுவாகும். ஏன்னால் இதனை விபரிக்க முடியாது. ஏனெனில் இது அவரவர் அனுபவித்திலிருந்தே அவரவருக்குக் கிடைக்கவேண்டும். பிறர் சொல்லியல்ல. அப்படி யாதாயினும் எதிர்பார்ப்புகளுடன் உட்சென்றால் மனமும் அதை இயக்கும் மூளையும் தடையாய் நின்று உங்களை நீங்கள் மனத்தால் எதை எதிர்பார்க்கிறீர்களோ அதைச் சுற்றிச்சுற்றியே வைத்திருக்கும். கடைசியில் எந்தப் பலனுமில்லாமல் எழுந்து விடவேண்டியதுதூன். அதற்காகத்தான் நிர்க்குணனான சூன்யப் ப்ரம்மத்தை அனுபவிக்க எந்தக் கற்பனைகளும் எதிர்பார்ப்புகளும் உதவாது, அவை தடையாய் மட்டுமே நிற்குமென்கிறேன்...

உங்கள் உணர்வு நிலைப்பட்ட அனுபவ வயப்பட்ட கற்பனை என்பது நீங்கள் எதை எதிர்பார்க்கிறீர்களோ அதன் வயப்பட்டே இயங்கும் என்பதே நீங்களே கூறி உள்ளீர்கள்.ஆகவே இதனை ஒரு ஆதாரமாக நாம் எடுக்க முடியாது.

ஆகவே நீங்கள் நான் மேலே கேட்டுக் கொண்ட மூளைக்கு வெளியால் இயங்கும் சித்தம் என்னும் உறுப்பு பற்றிய தகவல்களை ஆதரங்களைத் தராமல் கருதாடலில் முன் செல்ல முடியாது. நான் முதலிலையே சொல்லி விட்டென் உங்கள் அனுபவங்களை நம்ப நான் தயாரகவில்லை.எனக்கு வேண்டியது அறிவியல் ரீதியான ஆதாரங்கள்.ஒரு தனிப்பட்டவரின் வெறும் அனுபவமும் கற்பனையும் உணர்வும் ஆதாரங்கள் அல்ல.அவை உங்கள் எதிர்ரிபார்ப்பால் விழைந்த அனுபவங்கள்.

நாம்; பாவிக்கும் சொற்கள் தமிழ் அல்லது வடசொற்களாகும். அதைவிட நாம் புதிதாக எந்தச் சொல்லையும் உருவாக்க முடியாது. அதனால் சமயங்கடந்த இறைவனைப் பற்றிப் பேசும்போதும் அத்தகைய சொற்களையே பாவித்து விளக்க வேண்டியிருக்கிறது. நீங்கள் அச்சொல்லின் உட்கருத்தை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். அது சமயச் சொல் என்று அர்த்தம் கொள்ளாதீர்கள்.

அன்புக்கு நான் வேறு எந்தச் சொல்லைத் தேடிப்பிடிக்க முடியும். உருவற்ற இறைவனை நான் அவனென்று கூறுகிறேன். அதுவென்று கூறினால் திருப்தியடைவீர்களா....

அன்புக்கு வேறு சொல் ஏன் வேண்டும், அன்பென்பதை அன்பென்றே பாவிக்கலாமே என்பதே எனது கேள்வி?

மூச்சாயிருந்து உள்ளே சப்திப்பவனை ஓங்காரன் என்கிறேன். அவனை ரீங்காரன் என்னட்டுமா. பிரச்சனையேயில்லை. எந்தப் பெயராலும் அழைக்கலாம்.

மீண்டும் உங்களைக் குழப்புவதாக எண்ணாதீர்கள்:

~ஒரு நாமம் (கடவுள்) ஓர் உருவம் (சூன்ய ரூபம்) உள்ளானை ஆயிரம் திருநாமம் பாடித் தௌ;ளோணங் கொட்டுவதில் தவறென்ன இருக்கிறது. தவறென்றால் விட்டுவிடுங்கள். சாற்றை எடுத்துவிட்டுச் சக்கைகளைத் தூக்கியெறியுங்கள்.

உண்மையென்பார் சிலர், அன்பென்பார் சிலர், அறிவென்பார் சிலர், சாந்தியென்பார் சிலர். சத் சித் ஆனந்தம் (உண்மையான சித்தத்தின் ஆனந்தம்) என்பார் சிலர். ஆனால் கருப்பொருள் ஒன்றே. அதை உணரும்போதுதான் தெளிவு பிறக்கும். நான் கூறியோ பிறர் கூறியோ அது பிறக்காது. இதுவும் சத்திய வாத்தைகளே.

மீண்டும் மீண்டும் வெறும் அர்த்தமற்ற சொற்களைப் பாவித்து விட்டு கடைசியில் இவற்றை நீங்கள் உணரத்தான் முடியும் அதற்கு வேறு ஆதாரம் எதுவும் இல்லை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.உங்கள் உணர்வை விளக்க உங்கள் உணர்வையே அழைப்பது எந்தவகையிலொரு பகுத்தறிவு மிக்க கருத்தாக இருக்க முடியும்? ஒரு சொல்லை பொருளை விளக்க உங்களுக்கு அவசியமானது தர்க்கம், தகவல்,தகவல்களை நியாயப்படுத்தக் கூடிய துறைசார் ஆதாரங்கள்.இவை எவையும் அற்று எனது உள் உணர்வை நம்பு நம்பு என்றால் ஒரு தனிப்பட்டவரின் உணர்வை நம்ப நான் தயாராக இல்லை.ஏனெனில் அது நீங்கள் எதனை நிறுவ முற்படுகிறீர்களோ அதன் வயப்பட்டே உணரும் அல்லது கற்பனை செய்யும் என்பதை நீங்களே மேலே கூறு விட்டீர்கள்.

Link to comment
Share on other sites

நாரதரே உங்கள் கேள்விக்குப் பதில் உங்களாலேயே கூறப்பட்டுவிட்டது. அறிவு என்றால் வளர்ந்து செல்லுதல் விரிந்து செல்லுதல் என்றும் கூறலாம் என நினைக்கின்றேன். அதைவிடவும் அம்பலத்தாரும் அறிவைப்பற்றி நகைச்சுவையான உண்மையைக் கூறியிருக்கிறார்.

அறிவு என்பது விரிந்து செல்லும் போது, முன்னைய அறிவென்பது இல்லாது போய் விடுகிறது.அன்றைய மனிதன் இயற்கையில் நடக்கும் சம்பவங்கள் பல கடளர்களால் செய்யப்படுவதாக நம்பினான்.ஆனால் இன்று நாம் எமது அறிவு வளர்ச்சியின் மூலம் இவறிற்கான காரணங்களை அறிந்து கொண்டுள்ளோம்.முன்னைய அறிவை இன்றும் நாம் நம்பிக் கொண்டிருக்க வேண்டியதில்லை.அப்படி நம்பிக் கொண்டிருப் போமாயின் நாம் வளர முடியாது.

மாற்றங்களை அடைவதுதான் அறிவு. கண்மூடித்தனமாக இருப்பவர்களை சீர்திருத்தப் பயன்படுவதுதான் பகுத்தறிவு. அம்பலத்தார் கருத்துப்போல ஆரம்பகாலத் தேவைகளுக்காக உருவாக்கப்பட்ட நெறிகள் இன்று சட்டமாகவுள்ளன. இவைகளுக்கெல்லாம் அத்திவாரம் எது? ஆரம்பகாலச் சமய நெறிகள்தான். சமயம் பிரிவுகள் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. இறைவன் என்ற அறிவின் சக்தியில் எனக்கு உடன்பாடு உண்டு. அந்த அறிவின் வழிதான் இந்த அண்டங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அந்தச் சூரியனையும் இந்தப் பூமியையும் அதனதனிடத்திலிருந்து செயற்பட வைக்கின்ற பரத்தின் அறிவானது, அளவற்றது. அதைத்தான் மாணிக்க வாசகர் " அலகிற் சோதியன் அம்பலத்தாடுவான்" என்று கூறியுள்ளார்.

அறிவின் வழி அண்டங்கள் இயங்குவதில்லை.அவை இயற்கையில் இயங்கிக் கொண்டிருக்கிறன.அவை எவ்வாறு இயங்கின்றன என நாம் அறியும் பொதே அது எமது அறிவு ஆகின்றது.அறிதல் முறமைகள் மூலம் நாம் அறிந்ததைத் தான் அறிவு என்று நாம் ஏற்கனவே வரையறை செய்திருக்கிறோம்.ஆகவே எதோ ஒரு அறிவு எங்கோ இருந்து எல்லவற்றையும் இயக்குகிறது என்பது அறிவுடைய அல்லது பகுத்தறிவான விளக்கம் அல்ல.அறிவென்பது எம்மிடம் இருந்து தான் வருகிறது.அது எமக்கு வெளியால் இல்லை. பரத்துக்கு எவ்வாறு அறிவு இருக்க முடியும்?

அறியாமை எது? என்று சிந்திக்கும் போது அறிவு எது, என்பது தானே தெரியவரும். அறிவென்பது ஒருக்காலும் பின்னோக்கிச் செல்லாது. அதன் தன்மையே விரிந்து செல்வதுதான். உலகில் மனிதனால் ஏற்படும் மாற்றங்கள் அறிவின்பாற்பட்டதுதான். அந்த அறிவு எங்கிருந்து பெறப்படுகிறது. மனிதனின் புலன்களால் அறியமுடியாத "சுனாமி" போன்ற அழிவினை மிருகங்கள் எப்படி அறிகின்றன. அவை எப்படி அதிலிருந்து தப்பின? 22 ஆம் நூற்றாண்டில் வாழும் மனிதக் கூட்டம் ஏன் அவ்வாறு அழிந்தது.? அவனது பகுத்தறிவிற்கு என்ன நடந்தது.

மனிதனின் புலங்களை விட சில மிருகங்களுக்கு அவற்றின் புலங்கள் விருத்தி அடைந்தவை என்பது ஒரு அறிவியல் உண்மை.அதற்காகத் தான் நாய்களை மோப்பம் பிடிப்பதற்க்குப் பயன் படுத்துகிறார்கள்.ஆனால் மனிதன் தனது அறிவால் கருவிகளைக் கண்டு பிடித்து தனது புலன் உணரும் சக்தியைப் பல் மடங்காகப் பெருக்கி உள்ளான்.சுனாமி வரப்போகிறது என்பதை அறிய அதனால் தான் கருவிகளைப் பொருத்தி தொடர்ந்து அவதானிதுக் கொண்டிருக்கிறான்.சுனாமி ஏற்படும் என்னும் அறிவிப்பு அது தாக்கப்போகும் மக்களுக்குத் தெரியாமால் போனதால் தான் அத்தகைய அனர்த்தம் ஏற்பட்டது என்பது நாம் அறிந்த ஒரு விடயம்.அடிக்கடி சுனாமிகள் ஏற்படும் பசுபிக் தீவுகளிலும் ஜப்பானிலும் மக்கள் சுனாமிகளை அறிந்து அதற்கு ஏற்றவாறு பல ஆண்டுகளாகத் தற்காப்பு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறார்கள் என்பது நாம் அறிந்த இன்னொரு தகவல்.

அங்கே இறைவன் உண்டு. இங்கே பால் குடிக்கிறது. இதோ கண்ணீர்விடுகிறது, இந்தக் கூப்பாடுகளில் எனக்கு நம்பிக்கை கிடையாது. இப்படிப்பட்ட விடயங்களை இல்லாமற் செய்வதுதான், பகுத்தறிவாளரின் நோக்கமும் கூட. நாரதரின் நிலையும் இதுதான் என நான் எண்ணுகின்றேன். இப்படியான ஏமாற்றுத்தனங்களில் மக்கள் ஈடுபடுவதுதான் அறியாமை. அந்த அறியாமையை அகற்றுவதுதான் அறிவு.

அறிவு என்பது சிந்திப்பதால் பெருகுவது. மெய்ப் பொருள் காண்பதுவே அறிவு. இதற்கு முன்னொரு கேள்வியும் நாரதரால் கேட்கப்பட்டிருந்தது. அறிவு பெற்றவர்கள் தம்மைத் தாமே இறைவன் என்று கூறலாமா? என்பது. தம்மைத்தாமே அர்ச்சிக்கலாம் என்றே திருமூலர் கூறுகின்றார்

"தன்னை அறியத் தனக்கொடு கேடில்லை

தன்னை அறியாமல் தன்னைக் கெடுக்கின்றான்

தன்னை அறியும் அறிவை அடைந்தபின்

தன்னை அர்ச்சிக்கத் தான் இருந்தானே."

புலன்கள் உள்ளதே உணர்ந்து அறியத்தான்.

நான் முன்னர் சொன்னதைப் போல் சித்தர்களால் அன்றைய மதச் சிந்தனைக்கு முரணாகப் பல கருத்துக்கள் கூறப்பட்டன.இந்து/சைவ சமயம் என்னும் சமயத்தவர்கள் இவற்றை எல்லாம் உள் வாங்கி அவையும் இந்து /சைவ மதச் சிந்தனைகள் தான் என ஆக்கி விட்டார்கள்.அதாவது கடவுள் மறுப்பாளர்களையும் கடவுளின் தூதர்கள் ஆக்கி விட்டார்கள்.ஆகவே எந்தக் கருத்தையும் நான் எனது பகுத்தறிவால் ஆராய்ந்தே ஏற்றுக் கொள்கிறேன்.கடவுள் மறுப்பென்பது தமிழர் மரபுகளில் ஒன்று என்பதை நான் பல முறை இங்கு சொல்லி இருக்கிறேன்.

அந்த வகையில் நீங்கள் சுட்டிக் காட்டி உள்ள திருமூலரின் அறிவைப் பெறுதல் அறிவார்ந்து சிந்தித்தல் அரிவைப் பெருக்குதல் என்பவை ஏற்றுக்கொள்ளக் கூடிய கருத்துக்கள்.ஆனால் இவை இந்து சைவ மதங்கள் நடைமுறையில் இயங்கும் விதத்திற்கும், இந்து /சைவ மதத்தில் புகுத்தப்பட்டுள்ள ஏனைய கோட்பாடுகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் முக்கியமாக கடவுள் என்னும் கருதுருவாக்கதுக்கும் முற்றிலும் முரண்பாடானவை என்பதை எலவே சுட்டிக் காட்டி உள்ளேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்பரே!

பிறருடைய அனுபவம் உதவப்போவதில்லை நீங்களாகவே சிந்தித்துச் செயல்பட்டு கற்பனைகளற்ற அந்தச் சூன்யத்தில் மிதந்தால்தான் தெளிவு பெறமுடியும் என்று எத்தனையோ தடவை கூறியும் மீண்டும் மீண்டும் எனது அனுபவங்களை நீங்கள் நம்பத்தயாரில்லை என்கிறீர்களே நான் இதற்கு என்ன செய்ய முடியும்.

நான் என்ன அனுபவத்தைப் பற்றி உங்களிடம் கூறினேன். ஏதை நம்பச் சொன்னேன். கடவுளை நான் கண்டிருக்கிறேன். அவர் அப்படியிருப்பார் இப்படியிருப்பார். நீங்களும் நம்புங்கள் என்றேனா.

ஆரம்பத்திலேயே அந்த வெற்றிடச் சூனியத்தில் நுழைந்து நீங்களாகவே அனுபவித்துப் பாருங்கள் என்றுதானே சொன்னேன். சொல்லி வருகிறேன். உங்களுக்கு அதற்கான நேரத்தை ஒதுக்க முடியவில்லையென்றால் மன் இடந்தர வில்லையென்றால் நான் அதற்கு என்ன செய்யமுடியும்.

கடவுள் இல்லையென்று சிந்திக்க நீங்கள் நேரத்தை ஒதுக்கலாமென்றால் அதில் உங்களுக்கு ஆர்வமுண்டென்றால் அவர் இருக்கிறாரா என்று பார்த்துவிடவும் ஆர்வமும் நேரமும் இருக்கவேண்டுமே. இரண்டிற்கும் என்ன வித்தியாசம்.

ஓன்றில் நீங்கள் மூளையைச் சிந்திக்க விடுகிறீர்கள். மற்றயதில் மூளையை அமைதிப்படுத்தி ஆறுதலடைந்து அந்தச் சாந்தி எப்படிப்பட்டது என்று பார்க்கிறீர்கள்.

மூளையைக் கிட்னியை வெட்டிக் கையிலெடுத்து வைத்துக் கொண்டு கடவுளைத் தேடப் போகிறேனென்கிறீர்கள். இதற்கு நான் என்ன பதிலைச் சொல்ல முடியும். இறந்து போன மூளையும் கிட்னியும் உங்களுக்கு எதைச் சொல்லித்தரும். இது உங்களது ஆராய்ச்சியல்லவா. அனுபவமல்லவா அதற்கு வேறாட்களின் மூளை பயன்படாதே. எனது வார்த்தை களை ஏற்க முடியாது என்று (அதற்கு அவசியம் இங்கு இல்லாவிடினும் அப்படி நான் கூறவில்லையானாலும்) அடம் பிடிக்கும் நீங்கள் எனது செத்துப் போன மூளையை வைத்து எதைக் கண்டு பிடிக்கப் போகிறீர்கள்.

உங்களது மூளையை அல்லது கிட்னியைத் தானே நீங்கள் எடுத்து வைத்து ஆராய வேண்டும். கடவுளின் இருப்பிடத்தை அல்லது இல்லாமையை.

சரி: காதலுக்கு அடையாளமாக ஏன் மூளைக்கு நடுவிலே ஒரு அம்பைக் குத்தாமல் இரண்டு இதயங்களுக்கு நடுவிலே அம்பு குத்தியிருக்கிறது இந்த உலகம். உங்கள் கருத்துப்படி காதல் மூளையில் இருந்தல்லவா வருகிறது. காதலர்களின் மூளையை ஆராய்ந்து எதையாவது - அதாவது அந்த அன்பின் வலிமையைக் கண்டுபிடித்துவிட முடியுமா. எதிர் காலத்தில் முடியலாமென்று கருதினால் அதுவரை நீங்கள் காத்திருங்கள். என்னால் முடியாது. இந்தப் பிறப்பு முடியுமுன் நான் விடைதேட வேண்டுமென்றால் இந்தக் கணந்தான் அதற்குரியது. நாளை நிச்சயமானதல்ல. யாராவது ஒரு விஞ்ஞானி கடவுளை அல்லது காதலை மூளையில் தேடி முடிவு சொல்லும் வரை காத்திருப்பதற்கு.

நெஞ்சு பொறுக்குதில்லையே என்பார்கள். நெஞ்சம் மறக்குதில்லை என்பார்கள். என் இதயம் கவர்ந்தவளே என்பார்கள். ஆனால் உங்களுக்கோ எல்லாமே மூளையாய்த் தெரிகிறது.

இந்தப் பகுத்தறிவாளர்களுக்கு காதலின் குறி ஒரே ஒரு இதயம் போன்ற ஒன்றில் ஏற்றப்பட்ட ஒரு அம்புதானா.

அங்கே பரிசுத்தமான இரண்டு இதயங்களின் உணர்வுகளுக்கும் பாசத்திற்கும் அன்புக்கும் இடமேயில்லையா. எல்லாவற்றிற்கும் விஞ்ஞானமே பதில் சொல்ல வேண்டுமென்றால் இப்படித்தானே நினைக்க வேண்டியிருக்கிறது.

நண்பரே கடவுளையாயினும், காதலையாயினும் இதயத்தில் தேடுங்கள். நான் சொல்வதை நம்பாதீர்கள். நீங்கள் தேடுங்கள். இதைவிடத் தமிழ் எனக்குத் தெரியாது. தயவு செய்து உங்களது மூளையையோ கிட்னியையோ அல்லது இதயத்தையோ நெஞ்சத்தையோ நான் இயங்க வைக்க முடியாது. நீங்கள்தான் நீங்களேதான் இயக்கிப் பார்க்கவேண்டும். பிறரை விட்டுவிடுங்கள். வற்புறுத்தாதீர்கள். அதனால் ஒரு பலனும் வரப் போவதில்லை. தொடர்ந்து மூளைதான் வேலை செய்து கொண்டிருக்கும். இதயம் நிறையாது. இன்பம் பெருகாது.

Link to comment
Share on other sites

கரு,

நீங்கள் சூனியமே கடவுள் என்றீர்கள். சூனியம் எப்படி அன்பின் வடிவாக இருக்க முடியும்? ஒரு சூனியத்திற்கு மனிதனுக்கு உள்ள குணவியல்புகள் இருக்கும் என்று எதன் அடிப்படையில் நம்புகிறீர்கள்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இயற்கை வரைந்த ஓவியம் அழகு 
    • 👍.......... தமிழில் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களே இல்லை என்று சொன்னாரே பாருங்கள்......அது தான் ஆகக் கூடிய கொடுமை....🫣 சில மாதங்களின் முன் கூட, ஒரு மாவட்ட கலெக்டர் தன் மகனை அரசுப் பள்ளியில் தமிழில் படிக்க வைக்கின்றார் என்ற செய்தி இருந்தது. ஜெயமோகன் அவரது மகன் அஜிதனை அரசுப் பள்ளியிலே படிக்க வைத்ததாக எழுதியிருந்ததாக ஒரு ஞாபகம். 25 வருடங்களின் மேல் தமிழ்நாடு மற்றும் இந்திய மக்களுடன் வேலை செய்து வருகின்றேன். இதில் தமிழ் மொழி மூலம் படித்தவர்கள் எக்கச்சக்கமானவர்கள். அவர்களில் சிலர் பள்ளிப் படிப்பின் பின் அண்ணா பல்கலைக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். வேறு சிலர் மிகச் சிறந்த அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். அவர்களில் எவரும் எந்த விதத்திலும் எவருக்கும் குறைந்தவர்கள் அல்லர். மனமிருந்தால் இடம் உண்டாக்கும்...............
    • In the aftermath of the highly contested 2000 Presidential election, Congress funded three billion dollars for states to replace voting machines that in some cases had been in use for fifty years. Old machines were replaced with machines designed with the latest technology. Despite efforts to make voting fair and transparent, some claim that these new machines are vulnerable to both software glitches and hackers and provide no paper trail for how voters cast their ballots. https://ny.pbslearningmedia.org/resource/ntk11.socst.civ.polsys.elec.ballotbox/ballot-boxing-the-problem-with-electronic-voting-machines/
    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.