Jump to content

கடவுளை நம்ப முட்டாளே போதும்


Recommended Posts

நண்பரே!

பிறருடைய அனுபவம் உதவப்போவதில்லை நீங்களாகவே சிந்தித்துச் செயல்பட்டு கற்பனைகளற்ற அந்தச் சூன்யத்தில் மிதந்தால்தான் தெளிவு பெறமுடியும் என்று எத்தனையோ தடவை கூறியும் மீண்டும் மீண்டும் எனது அனுபவங்களை நீங்கள் நம்பத்தயாரில்லை என்கிறீர்களே நான் இதற்கு என்ன செய்ய முடியும்.

நான் என்ன அனுபவத்தைப் பற்றி உங்களிடம் கூறினேன். ஏதை நம்பச் சொன்னேன். கடவுளை நான் கண்டிருக்கிறேன். அவர் அப்படியிருப்பார் இப்படியிருப்பார். நீங்களும் நம்புங்கள் என்றேனா.

ஆரம்பத்திலேயே அந்த வெற்றிடச் சூனியத்தில் நுழைந்து நீங்களாகவே அனுபவித்துப் பாருங்கள் என்றுதானே சொன்னேன். சொல்லி வருகிறேன். உங்களுக்கு அதற்கான நேரத்தை ஒதுக்க முடியவில்லையென்றால் மன் இடந்தர வில்லையென்றால் நான் அதற்கு என்ன செய்யமுடியும்.

கடவுள் இல்லையென்று சிந்திக்க நீங்கள் நேரத்தை ஒதுக்கலாமென்றால் அதில் உங்களுக்கு ஆர்வமுண்டென்றால் அவர் இருக்கிறாரா என்று பார்த்துவிடவும் ஆர்வமும் நேரமும் இருக்கவேண்டுமே. இரண்டிற்கும் என்ன வித்தியாசம்.

ஓன்றில் நீங்கள் மூளையைச் சிந்திக்க விடுகிறீர்கள். மற்றயதில் மூளையை அமைதிப்படுத்தி ஆறுதலடைந்து அந்தச் சாந்தி எப்படிப்பட்டது என்று பார்க்கிறீர்கள்.

மூளையைக் கிட்னியை வெட்டிக் கையிலெடுத்து வைத்துக் கொண்டு கடவுளைத் தேடப் போகிறேனென்கிறீர்கள். இதற்கு நான் என்ன பதிலைச் சொல்ல முடியும். இறந்து போன மூளையும் கிட்னியும் உங்களுக்கு எதைச் சொல்லித்தரும். இது உங்களது ஆராய்ச்சியல்லவா. அனுபவமல்லவா அதற்கு வேறாட்களின் மூளை பயன்படாதே. எனது வார்த்தை களை ஏற்க முடியாது என்று (அதற்கு அவசியம் இங்கு இல்லாவிடினும் அப்படி நான் கூறவில்லையானாலும்) அடம் பிடிக்கும் நீங்கள் எனது செத்துப் போன மூளையை வைத்து எதைக் கண்டு பிடிக்கப் போகிறீர்கள்.

உங்களது மூளையை அல்லது கிட்னியைத் தானே நீங்கள் எடுத்து வைத்து ஆராய வேண்டும். கடவுளின் இருப்பிடத்தை அல்லது இல்லாமையை.

சரி: காதலுக்கு அடையாளமாக ஏன் மூளைக்கு நடுவிலே ஒரு அம்பைக் குத்தாமல் இரண்டு இதயங்களுக்கு நடுவிலே அம்பு குத்தியிருக்கிறது இந்த உலகம். உங்கள் கருத்துப்படி காதல் மூளையில் இருந்தல்லவா வருகிறது. காதலர்களின் மூளையை ஆராய்ந்து எதையாவது - அதாவது அந்த அன்பின் வலிமையைக் கண்டுபிடித்துவிட முடியுமா. எதிர் காலத்தில் முடியலாமென்று கருதினால் அதுவரை நீங்கள் காத்திருங்கள். என்னால் முடியாது. இந்தப் பிறப்பு முடியுமுன் நான் விடைதேட வேண்டுமென்றால் இந்தக் கணந்தான் அதற்குரியது. நாளை நிச்சயமானதல்ல. யாராவது ஒரு விஞ்ஞானி கடவுளை அல்லது காதலை மூளையில் தேடி முடிவு சொல்லும் வரை காத்திருப்பதற்கு.

நெஞ்சு பொறுக்குதில்லையே என்பார்கள். நெஞ்சம் மறக்குதில்லை என்பார்கள். என் இதயம் கவர்ந்தவளே என்பார்கள். ஆனால் உங்களுக்கோ எல்லாமே மூளையாய்த் தெரிகிறது.

இந்தப் பகுத்தறிவாளர்களுக்கு காதலின் குறி ஒரே ஒரு இதயம் போன்ற ஒன்றில் ஏற்றப்பட்ட ஒரு அம்புதானா.

அங்கே பரிசுத்தமான இரண்டு இதயங்களின் உணர்வுகளுக்கும் பாசத்திற்கும் அன்புக்கும் இடமேயில்லையா. எல்லாவற்றிற்கும் விஞ்ஞானமே பதில் சொல்ல வேண்டுமென்றால் இப்படித்தானே நினைக்க வேண்டியிருக்கிறது.

நண்பரே கடவுளையாயினும், காதலையாயினும் இதயத்தில் தேடுங்கள். நான் சொல்வதை நம்பாதீர்கள். நீங்கள் தேடுங்கள். இதைவிடத் தமிழ் எனக்குத் தெரியாது. தயவு செய்து உங்களது மூளையையோ கிட்னியையோ அல்லது இதயத்தையோ நெஞ்சத்தையோ நான் இயங்க வைக்க முடியாது. நீங்கள்தான் நீங்களேதான் இயக்கிப் பார்க்கவேண்டும். பிறரை விட்டுவிடுங்கள். வற்புறுத்தாதீர்கள். அதனால் ஒரு பலனும் வரப் போவதில்லை. தொடர்ந்து மூளைதான் வேலை செய்து கொண்டிருக்கும். இதயம் நிறையாது. இன்பம் பெருகாது.

கரு,

அன்பென்பது இதயத்தில் இருக்கிறது என்பது ஒரு குறியீடே அது ஒரு குருட்டு நம்பிக்கை.ஒருவர் சில இன்பகரமானதோ அல்லது துயரமான உணர்வை அடையும் போது அவர் இருதயம் அதிகமாகத் துடிக்கும் இதனை அவதானித்த பண்டைய மனிதன் அன்பு என்பது இருதயத்தில் இருப்பதாக நினைத்திருப்பான்.ஆனால் இன்று நாம் எமது உணர்வுகள் கற்பனைகள் எல்லாம் மூளையிலையே நடைபெறுவதாக அறிவியல் ரீதியாகத் தெரிந்து இருக்கிறோம்.ஆகவே இன்று அன்பைப் பெற நாங்கள் இதயத்தைக் கேட்க வேண்டியது இல்லை.இன்று இதயத்தில் இரத்த அழுத்தத்தில் எதாவது கோளறு என்றால் தான் மாற்று இருதய சத்திர சிகிச்சை செய்யும் காலமிது.அன்பைப் பெற எவரும் இருதய மாற்று சத்திர சிகிச்சை செய்வதில்லை.

ஆகவே சித்தனை கற்பனை உணர்வு எல்லாம் மூளையில் நடக்கும் இராசாயன மின்னியல் தக்கங்களால் தான் நடைபெறுகின்றன என்பதே அறிவியல்.இதில் நீங்கள் அனுபவிக்கும் சூனியம் என்பதும் உங்கள் மூளையில் நீங்கள் அனுபவிக்கும் ஒரு உணர்வே.அது தியானம் போன்ற செயற்பாடுகள் மூலம் சாத்தியமானது.இதற்கும் கடவுளுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.எல் எஸ் டி, கஞ்சா போன்ற இராசாயன போதை மாத்திரைகள் மூலமும் இவ்வாறான தியான நிலையைச் செயற்கையாக அடையலாம்.மனித உணர்வுகளுக்கும் ஹோர்மோன்களுக்கும் இருக்கும் சம்பந்தம் அறிவியலில் அறியப்பட்ட ஒரு விடயம்.தியானம் என்பதுவும் ஹோர்மோன்ங்கள் சம்பந்தப்பட்ட விடயம். நீங்கள் தியானத்தின் மூலம் அனுபவிக்கும் சூனியம் அத்தகையதே.

// எதிர் காலத்தில் முடியலாமென்று கருதினால் அதுவரை நீங்கள் காத்திருங்கள். என்னால் முடியாது. இந்தப் பிறப்பு முடியுமுன் நான் விடைதேட வேண்டுமென்றால் இந்தக் கணந்தான் அதற்குரியது//

தெரியாத கேள்விகளுக்குக்கான உண்மையா விடயைக் கண்டு பிடிக்க வேண்டுமென்றால் காத்திருக்கத் தான் வேண்டும்.அவ்வாறு காத்திராமல் பிழையான விடைகளை உங்கள் கற்பனையில் இருந்து கண்டு கொள்வது உங்களை நீங்களே ஏமாற்றும் செயல்.ஒரு பிழையான கற்பனையான விடையைப் பார்க்கிலும் எனக்கு உண்மையே முக்கியம் அதற்காக நான் காத்திருக்கத் தயார்.ஏனெனில் பொய்களைச் சொல்லி என்னை நானே ஏமாற்றிக் கொள்ள விரும்பவில்லை.

.

Link to comment
Share on other sites

  • Replies 177
  • Created
  • Last Reply

ஆகவே சித்தனை கற்பனை உணர்வு எல்லாம் மூளையில் நடக்கும் இராசாயன மின்னியல் தக்கங்களால் தான் நடைபெறுகின்றன என்பதே அறிவியல்.இதில் நீங்கள் அனுபவிக்கும் சூனியம் என்பதும் உங்கள் மூளையில் நீங்கள் அனுபவிக்கும் ஒரு உணர்வே.அது தியானம் போன்ற செயற்பாடுகள் மூலம் சாத்தியமானது.இதற்கும் கடவுளுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.எல் எஸ் டி, கஞ்சா போன்ற இராசாயன போதை மாத்திரைகள் மூலமும் இவ்வாறான தியான நிலையைச் செயற்கையாக அடையலாம்.மனித உணர்வுகளுக்கும் ஹோர்மோன்களுக்கும் இருக்கும் சம்பந்தம் அறிவியலில் அறியப்பட்ட ஒரு விடயம்.தியானம் என்பதுவும் ஹோர்மோன்ங்கள் சம்பந்தப்பட்ட விடயம். நீங்கள் தியானத்தின் மூலம் அனுபவிக்கும் சூனியம் அத்தகையதே.

நீங்கள் சொல்லும் விடயத்தில் மாற்று கருத்து எனக்கு இல்லை. ஆனால் சொல்லும் மேற்கோள்களில் உண்டு.

மூளையில் தான் உணர்ச்சி பிறக்கிறது என்பது 100% உண்மையானது இல்லை. காரணம் மூளை செயற்படுவதுக்காக ஒட்சியேற்றப்பட்ட இரத்தம் இதயத்தில் இருந்துதான் போகிறது.

நீங்கள் சொல்லும் கஞ்சா, வலி நிவாரணிகள் எல்லாம் இரத்தம் மூலம்தான் மூளைக்கு செய்தியை கொண்டு செல்கிறது. ஆகவே அது ஆரம்பிக்கும் இடம் இதயம்.

காதலுக்கான ( காமம்) ஹோமோன்கள் கூட இதயத்தில் இருந்துதான் சுரப்பதாக ஆராந்தவர்கள் சொல்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன்!, (இது நாரதருக்குமான பதில்)

சூனியத்துள் அன்பு சாந்தி அமைதி கருணை ஞானம் (அறிவு) அனைத்தும் அடங்கியுள்ளது. நீங்கள் முன்பு ஒரு தடவை குறிப்பிட்ட மோட்சம் கூட இருக்கலாம். அதுவும் ஒரு குணவியல்பானால். நீங்கள் இவற்றை மறுக்கிறீர்களென்றால் இவற்றிற்கு எந்த வடிவத்தைக் கொடுக்கப் போகறீர்கள். அன்புக்கு யாதாவது வடிவமுண்டா. அது சார்பற்ற நிலையில் உணரப்படவேண்டியவோர் குணவியல்பல்லவா! அது சூன்ய வடிவில்த்தானே இருக்கமுடியும். தெரிந்து கொண்டே வேண்டுமென்று கேட்பதுபோல இருக்கிறதே.

சரி அன்பையுணரும் இதயத்துக்கு வருவோம்.

நீங்கள் வார்த்தைகளால் உங்கள் காதலியிடம் அல்லது மனைவியிடம் அன்பு செய்கிறீர்களென்று வைத்துக் கொள்ளுங்கள். அவள் நெகிழ்ந்து போய் உங்கள் தலையையா கட்டிப் பிடிப்பாள். உங்கள் வார்த்தைகள் மூளையிலிருந்து வருகின்றதென்று. உங்கள் நெஞ்சிலல்லவோ சாய்ந்து கொள்வாள். உங்கள் இதயத் துடிப்பையல்லவோ உணரத் தலைப்படுவாள். அது ஏன் தெரியுமா? அவளின் காதலும் அங்குதான் இருக்கிறது என்பதால்.

நாரதர் வேண்டுமானால் தனது காதலியின் தலையைக் கட்டிக் கொள்ளட்டும். அல்லது கட்டிக் கொள்ளத் தலையைக் கொடுக்கட்டும். நீங்கள் அப்படிச் செய்து விடாதீர்கள். பிறகு எல்லாமே விபரீதமாகிவிடும். சமீபத்தில்த்தான் திருமாணமாகியிருக்கிறீர்களெ

Link to comment
Share on other sites

நீங்கள் சொல்லும் விடயத்தில் மாற்று கருத்து எனக்கு இல்லை. ஆனால் சொல்லும் மேற்கோள்களில் உண்டு.

மூளையில் தான் உணர்ச்சி பிறக்கிறது என்பது 100% உண்மையானது இல்லை. காரணம் மூளை செயற்படுவதுக்காக ஒட்சியேற்றப்பட்ட இரத்தம் இதயத்தில் இருந்துதான் போகிறது.

நீங்கள் சொல்லும் கஞ்சா, வலி நிவாரணிகள் எல்லாம் இரத்தம் மூலம்தான் மூளைக்கு செய்தியை கொண்டு செல்கிறது. ஆகவே அது ஆரம்பிக்கும் இடம் இதயம்.

காதலுக்கான ( காமம்) ஹோமோன்கள் கூட இதயத்தில் இருந்துதான் சுரப்பதாக ஆராந்தவர்கள் சொல்கிறார்கள்.

அகிலன்,

கஞ்சா புகைக்கும்போது நுரையீரல் வழியாகத் தான் ஒட்சிசன் இரத்தத்தில கலக்கிறது. அதனால நுரையீரல்தான் ஆரம்பிக்கும் இடமா?

எங்கு எது ஆரம்பித்தாலும் மூளையே அதனை உணரும் இடம். கோமாவில் உள்ளவனுக்கு இரத்ததில் எது கலந்து மூளைக்குச் சென்றாலும் எதுவுமே தெரியப்போவதில்லை. :D

Link to comment
Share on other sites

சரி அன்பையுணரும் இதயத்துக்கு வருவோம்.

நீங்கள் வார்த்தைகளால் உங்கள் காதலியிடம் அல்லது மனைவியிடம் அன்பு செய்கிறீர்களென்று வைத்துக் கொள்ளுங்கள். அவள் நெகிழ்ந்து போய் உங்கள் தலையையா கட்டிப் பிடிப்பாள். உங்கள் வார்த்தைகள் மூளையிலிருந்து வருகின்றதென்று. உங்கள் நெஞ்சிலல்லவோ சாய்ந்து கொள்வாள். உங்கள் இதயத் துடிப்பையல்லவோ உணரத் தலைப்படுவாள். அது ஏன் தெரியுமா? அவளின் காதலும் அங்குதான் இருக்கிறது என்பதால்.

கரு,

காதலி நாலு அன்புவார்த்தை பேசினால் காதலன் எப்படிக் கட்டிப்பிடிப்பான்? அவன் தலை எங்கேயும் சாயாது தனியாகத்தானே இருக்கும்? அதனால் அன்பை காதலியிடம் அவளில் எங்கும் காணமுடியாது என்று அர்த்தமா? நெடுக்கண்ணையின் கொள்கையை வழிமொழிவீர்கள் போல் உள்ளதே? :D

இதற்கெல்லாம் உயர வித்தியாசமே காரணமே தவிர அன்பு இதயத்தில் இருப்பதால் அல்ல. :D

Link to comment
Share on other sites

நீங்கள் சொல்லும் விடயத்தில் மாற்று கருத்து எனக்கு இல்லை. ஆனால் சொல்லும் மேற்கோள்களில் உண்டு.

மூளையில் தான் உணர்ச்சி பிறக்கிறது என்பது 100% உண்மையானது இல்லை. காரணம் மூளை செயற்படுவதுக்காக ஒட்சியேற்றப்பட்ட இரத்தம் இதயத்தில் இருந்துதான் போகிறது.

நீங்கள் சொல்லும் கஞ்சா, வலி நிவாரணிகள் எல்லாம் இரத்தம் மூலம்தான் மூளைக்கு செய்தியை கொண்டு செல்கிறது. ஆகவே அது ஆரம்பிக்கும் இடம் இதயம்.

காதலுக்கான ( காமம்) ஹோமோன்கள் கூட இதயத்தில் இருந்துதான் சுரப்பதாக ஆராந்தவர்கள் சொல்கிறார்கள்.

நான் படித்து எனது நாபகத்தில் இருப்பதில் இருந்து, மூளை தான் எல்லாவற்றிற்க்கும் மையமானது.தனிச்சையான செயற்பாடுகளைத் தவிர்த்து.இரத்தம் எல்லாவற்றையும் காவிச் செல்வது என்பது சரிதான் ஆனால் எல்லாமும் பகுப்பாயப்பட்டு தேவையான முடிவுகள் எடுக்கப்படுவது மூளையில் தான்.ஹோமோன்கள் பல்வேறு இடங்களில் சுரக்கின்றன ஆனால் அவை எல்லாமுமே கட்டுப்படுத்தப்படுவது, தன்னிச்சையான விழைவுகளைத் தவிர மற்றெல்லாமுமே மூளையில் இருந்து தான்.

இவற்றில் எதாவது தகவற் பிழையிருந்தால் மேலும் அறிந்து திருத்திக் கொள்லலாம்.ஆனால் இங்கே மூளை என்பதே கற்பனை உணர்வு சிந்தனை எல்லாவற்றிக்கும் முதன்மையானது என்பதே பிரதானமான கருத்து.

Link to comment
Share on other sites

மூளையில் எந்த பகுதி உணர்வுகளுக்கு பொறுப்பாக இருக்கிறது எவ்வாறு என்பது பற்றிய ஒரு விரிவுரை,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூளையில் எந்த பகுதி உணர்வுகளுக்கு பொறுப்பாக இருக்கிறது எவ்வாறு என்பது பற்றிய ஒரு விரிவுரை,

">

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது இப்பகுதிக்கான சமயம் சார் கருத்து முற்றுப் பெற்றிருப்பினும்.. மூளையின் எந்தப் பகுதி எதை உணர்கிறது என்பதைக் காட்டி.. உணர்வுக்குரிய ஆக்கலடிப்படையைக் கண்டிறித்திருப்பதாகச் சொல்வது மிக மோசனமான அறிவியலற்ற செயற்பாடு.

மூளையின் தொழில்பாட்டு அனுசேபங்களைக் கொண்டு எந்தெந்தப் பகுதிகளால் என்னென்ன உணர்வுகள் உணரப்படுகின்றன என்று அறியப்பட்டுகின்றனவே தவிர.. உணர்ச்சிக்குரிய ஆக்கள் அலகை அடையாளம் கண்டு அல்ல..! அன்பு கோபம் போன்ற உணர்ச்சிகள் எப்படி தூண்டப்படுகின்றன என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது..! அவற்றின் தூண்டல் வடிவம் என்ன என்பதும் மாயைத்தனமாகவே இருக்கிறது..! :D

ஒரு மனிதனுக்கு அவனுடைய தேவைகளை நிவர்த்தி செய்ய உடல் உறுப்புகள் இருப்பது போல கோபம், அன்பு போன்ற உண்ர்ச்சிகளும் ஒரு மனிதன் தன்னை அடையாளம் கண்டு கொள்ளுவத்ற்காக தூண்டப்படுகின்றன. ஒரு மனிதன் கோபப்படும் போது அல்லது அன்பு செலுத்தும் போது தான் அவன் தன்னை அல்லது அவனை மற்றையோரால் அறிந்து கொள்ள முடிகின்றது. உதாரணமாக கோபத்தை எடுத்துக்கொண்டால், இந்த உணர்ச்சியை ஊக்குவிக்கும் இரண்டு முக்கிய காரணிகள் உண்டு. ஒன்று, உண்மை நிலை மீது தப்பாக ஒரு எண்ணத்தை வைப்பது (Irrational perception of reality என்று சொல்லலாம்) மற்றயது என் வழி அல்லது வேறு வழி இல்லை (a low frustration point என்று சொல்லலாம்) என்று இருப்பது.

ஒரு மனிதன் தனது உணர்ச்சிகளதும், உடல் அவயவங்களினதும் ஆற்றல் அறிந்து அதனை முழுமையாக பயன் படுத்தும் போதே முழு மனிதனாக வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டிம்,மனிதன் தனது உணர்ச்சிகளை பற்றி முழுதாக அனுபவித்து அறிய வேண்டும். அதாவது கோபபடும் போது அவன் என்ன எல்லாம் செய்வான் அல்லது அதிகமாக யாரவது அன்பு செலுத்தினால் என்ன செய்வான் போன்ற விடயங்களை அறிந்து வைக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

ஐம்பூதங்களான நிலம், நீர் , நெரும்பு, விண் , காற்று என்பவற்றை கட்டுப்படுத்தும் சக்தி மனிதனுக்கு உண்டா...??

அல்லது இவற்றால் ஏற்படும் பயன் , துன்பங்களை 100% துல்லியமாக முன்கூட்டியே சொல்லத்தான் முடிகிறதா...??

ஐம்பூதங்களால் மனிதன் கட்டுக்குள் இயக்கப்படுகிறான்... ஆனால் அவற்றை மனிதனால் கட்டுக்குள் வைத்து இருக்கமுடியாது...!

இதை நான் கடவுள் எண்று எல்லாம் சொல்ல வரவில்லை... ஆனால் மனிதனை மீறிய சக்தி தன்னை இயக்குகிறது என்பதை உணர்ந்த மனிதன் அதனை வணங்க தலைப்பட்டான்....

மனிதனில் ஒருவர் மிகவும் திறமை சாலியாக இருக்கும் பட்ச்சத்தில் அவர் தலைவர் ஆகிவிடுகிறார்... அதேபோல மனிதனிலும் சக்தி மிக்க இயக்கை கடவுள் ஆகியது...!

Link to comment
Share on other sites

எனது இப்பகுதிக்கான சமயம் சார் கருத்து முற்றுப் பெற்றிருப்பினும்.. மூளையின் எந்தப் பகுதி எதை உணர்கிறது என்பதைக் காட்டி.. உணர்வுக்குரிய ஆக்கலடிப்படையைக் கண்டிறித்திருப்பதாகச் சொல்வது மிக மோசனமான அறிவியலற்ற செயற்பாடு.

மூளையின் தொழில்பாட்டு அனுசேபங்களைக் கொண்டு எந்தெந்தப் பகுதிகளால் என்னென்ன உணர்வுகள் உணரப்படுகின்றன என்று அறியப்பட்டுகின்றனவே தவிர.. உணர்ச்சிக்குரிய ஆக்கள் அலகை அடையாளம் கண்டு அல்ல..! அன்பு கோபம் போன்ற உணர்ச்சிகள் எப்படி தூண்டப்படுகின்றன என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது..! அவற்றின் தூண்டல் வடிவம் என்ன என்பதும் மாயைத்தனமாகவே இருக்கிறது..! :D

'உணர்வுக்குரிய ஆக்கலடிப்படை' என்றால் என்ன? இதனைக் கண்டறிந்திருப்பதாக யாரால் எங்கே கூறப்பட்டது?

//அன்பு கோபம் போன்ற உணர்ச்சிகள் எப்படி தூண்டப்படுகின்றன என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது..! அவற்றின் தூண்டல் வடிவம் என்ன என்பதும் மாயைத்தனமாகவே இருக்கிறது//

மேற்காட்டிய முடிவுகளுக்கான ஆதாரம், அல்லது ஆய்வு மூலத்தைத் தரவும்.

Link to comment
Share on other sites

//ஹோமோனினாலும் மூளையின் செல்களில் நடக்கும் இரசாயனத் தாக்கங்களாலும் ஏற்படும் காதல் அந்தச் சுரப்புக்களும் தாக்கங்களும் நின்று போனதும் ஓடிவிடவேண்டும். சிலருக்கு ஆசை அறுபதுநாள் மோகம் முப்பது நாள் என்பார்கள். அதன்பிறகு சுரப்புக்களெல்லாம் வற்றிவிடும். தாக்கவேகம் நின்றுவிடும். இவைபற்றி நான் இங்கே பேசவரவில்லை.//

உங்கள் கடந்தகால அனுபவங்கள் மூளையில் சேமித்து வைக்கப் படாமால் வேறு எங்கே சேமித்து வைக்கபடுகின்றன? நாபக சக்தி என்பது எங்கிருக்கிறது? உங்களது காதலி யார் என்பதை எப்படி நீங்கள் நாபகம் வைத்திருக்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்பரே உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன். இது யாழ்ப்பாணத்தில் நடந்தது.

ஒருவர் மோட்டார் சைக்கிளில் போனார். எதிரே ஒரு லொறி வந்தது. அந்த லொறியின் பின்பகுதியில் வெளி நீட்டிக் கொண்டிருந்த இரும்புச் சட்டமொன்று மோ. சைக்கிளில் போனவரின் கழுத்துப் பகுதியைத் துண்டாடிவிட்டது. அவர் சளைக்கவில்லை. தலையறுந்த நிலையிலும் கிட்டத்தட்ட 100 யார் தூரத்திலிருந்த அவரின் வீட்டு ஒழுங்கைக்குள் சைக்கிளைத் திருப்பி ஓட்டிச் சென்று விழுந்து இறந்து கிடந்தார். தலை மெயின் றோட்டில் கிடந்ததாம். நெஞ்சம் மறப்பதில்லை அது நினைவை இழப்பதில்லை. என்பதைக் கவனித்தீர்களா.

கடவுளை மூளையிலுணர்ந்தாலென்ன, நெஞ்சத்திலுணர்ந்தாலென்ன, கிடணியாலுணர்ந்தாலென்ன, ரெஸ்ரிக்கிள்ஸால் உணர்ந்தாற்தானென்ன. வேண்டியது தெளிவும் புரிவும் அதன்பலனான அமைதியும் சாந்தியுமே.

கடவுளை மூளையால்தான் உணர வேண்டுமென்றால் உணர்ந்துவிட்டுப் போங்களேன். யார் தடுத்தார்கள். வேண்டியது அந்த சூனியத்தை அதன் இயல்பைக் குணாம்சங்களை அறிவது மட்டுமே.

இதயம் என்றால் அல்லது நெஞ்சம் என்றால் குருதியைப் பம் செய்துகொண்டிருக்கும் இதயமென்றதல்லக் கருத்து. உங்களை நீங்கள் உங்கள் தன்னுணர்வினால் எங்கே உணர்கிறீர்களோ அந்த இடமே இதயம் அல்லது உள்ளமாகும். கண்னை மூடி ஒருதடவை அவ்விடத்தில் கவனத்தைப் போட்டால் நீங்கள் உங்களை எவ்விடத்தில் உணர்கிறீர்களோ அதுவே இங்கு நான் குறிப்பிடும் இதயம். குருதியை உடலெங்கும் அனுப்பிக் கொண்டிருக்கும் ஹாட்டையல்ல இங்கே இதயமெனக் குறிப்பிட்டது. அந்த தன்னை எண்ணும் தானெனும் உள்ளம் எங்கிருந்தாலும் அதைச் சூனியத்தில் லயப்படுத்த வேண்டுமென்றே நான் குறிப்பிடுகிறேன். அப்போதுதான் ஒன்றுமில்லா நிலையில் இறைபற்றிப் புரிந்து கொள்ள முடியும்.

கடவுளை மறுப்பவர்கள் பொதுவாகத் தாங்கள் கடவுளைப்பற்றிய ஓர் கற்பனையான எண்ணக்கருவைத் தம் அகத்தில் அல்லது அவர்களது பாசையில் சொல்வதானால் மூளையில் கொண்டிருப்பதால் அக்கருத்தையேதான் நம்பமறுக்கின்றனர். அல்லாவிடில் அடம்பிடிக்க வேண்டிய அவசியமேயில்லை. சென்றுதான் பார்த்துவிடுவோமே என்ன நடந்துவிடும் என்றுதான் ஆர்வமும் ஆய்வுணர்ச்சியும் கொண்டோர் எண்ணுவர்.

மனத்திடமற்ற சிலர் தாங்கள் மூளைச்சலவைக்குள்ளாகித் தம் சுயத்தை இழந்துவிடுவோமோ என்றும் வீணாகப் பயப்படுகின்றனர். அப்படியெல்லாம் ஒரு போதும் நடவாது. முதலில் சூனியத்தை உணர்வதென்பதே இலகுவான காரியமல்ல. ஆனால் முயற்சித்தால் அந்த நிலைக்குள் போகமுடியாதென்பதுமல்ல.

ஒரு அரை நிமிட நேரம் அந்தச் சூன்ய நிலைக்குப் போய்விட்டால் வாழ்நாள் முழுவதும் அந்த உள் அமைதி அகத்தில் நிறைந்துவிடுமென்று கூறகிறார்கள். பலருக்கு இது வாய்ப்பதில்லை.

எல்லாம்; எங்கள் எண்ணங்களை நிறுத்தி சிந்தனையோட்டத்தைத் தடைசெய்து அமைதியடையும் திறமையிலேயே உள்ளது. நாம் இங்கே சும்மா வாதிட்டாலும் இலகுவில் இந்தக் காரியம் நடந்துவிடாது.

புத்தர் போன்ற ஞானிகள் இந்த உயர் நிலையை அடையப் பல காலம் படாத பாடுபட்டிருக்கிறார்கள்.

நம்மால் அடையப்பட முடியாத விடயத்துக்காகச் சும்மா நாம் அடிபட்டதில் என்ன பிரயோசனம்.

Link to comment
Share on other sites

கடவுளைக் கண்டவர்கள் பற்றிய பிபிசி விவரணம்.(Horizon)

கடவுளைக் கண்ட ஞானிகள் மூளையில் ஏற்பட்ட வலிப்பினாலையே (temporal lobe epilepsy) அவ்வாறான கற்பனைகளைக் (halocinations) கண்டார்கள் என்கிறது.

Link to comment
Share on other sites

God On The Brain

These people suffer from one of the strangest of all brain disorders. It makes them think they have been touched by god. But their unusual condition is giving scientists a unique insight into faith and the human mind. As a result researchers are now asking one of them most explosive questions of all - could it be that the physical makeup of our brain programmes us to believe in god?

Link to comment
Share on other sites

இந்தப் பிரபஞ்சத்தின் அடிப்படை மூலங்களான இலத்திரன், நியூட்ரான், புரோட்டான் போன்ற துகள்களைச் சுக்கு நூறாய் கோடிகோடியாய்த் தூள்தூளாக்கும் போது ஒரு ஒன்றுமில்லாத சூன்யம் மிஞ்சி நிற்கும்.

அந்த ஒன்றுமில்லாச் சூன்யத்திலிருந்து தோன்றியதுதூன் இந்தப் பிரபஞ்சமும் நாமும்.

அந்தச் சூன்யமே கடவுள். அவனே நம்மை ஆக்கிய சிருஷ்டிகர்த்தா. அவனை நம்பாமல் இருக்க முடியாது. ஏனெனில் காரணமின்றிக் காரியமில்லை.

அந்தச் சூன்யன் அனுபவப் பொருளாவானேயன்றி எமது மூளையால் கிரகிக்கக்கூடியவனல்ல.

அவனை அனுபவிக்க அந்த ஒன்றுமில்லாச் சூனியத்திற்குள் செல்லவேண்டும். அது எங்கேயிருக்கிறது தெரியுமா? சித் அம்பரவெளியல் (சிதம்பரவெளி) அதாவது சித்தாகாசத்தில் இருக்கிறது.

அதாவது உங்கள் உள்ளத்தினுள்ளே தன்னுணர்வைக் கடந்து செல்லும்போது அச் சூனியத்தை அனுபவிக்க முடியும்.

கடவுளைப் பற்றி உங்கள் மூளை வைத்திருக்கும் கருதுகோள்களையெல்லாம் தூக்கி எறிந்து விட்டு அச் சூனியவெளியுள் செல்லுங்கள். கடந்து செல் உள்ளே அங்குதான் கடவுளைக் காணலாம் - அல்ல அல்ல அனுபவிக்கலாம். அந்த அனுபவத்திற்கு எல்லையேயில்லை. போகப்போக இன்னும் கட உள், கட உள், கடவுள்தானுண்டு.

ஆதியந்தமில்லா அரும்பெருஞ் சோதியாய் அவன் மிளிர்கிறான்.

நோக்கரிய நோக்காய் நுணுக்கரிய நுண்ணுணர்வாய் போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனாய் அவன் அங்கே உள்ளானய்யா. சத்தியமாய்ச் சொல்லுகிறேன் அவன் அங்கேயுள்ளான். அனுபவித்துப் பாரும்.

கடவுளென்றால் யாரென்று சிந்தியாமல் சும்மா சமயங்கள் கூறும் தெய்வங்களைப்பற்றி வேண்டுமானால் முட்டாள்களோடு பொழுது போக்காக வாதிட்டுக்கொண்டிருக்கலாம். ஆனால் அது எல்லாரிடமும் செல்லாது.

மனித மூளையால் கிரகிக்க முடியாத அனுபவப்பொருள் என்பது எவ்வாறு சாத்தியப்படுகின்றது? உண்மையில் புரியவில்லை. தன்னுணர்வை கடந்து செல்லும் நிலை என்ன? தன்னுணர்வில்லாத நிலையில் எந்த அனுபவம் சாத்தியப்படும்? தன்னுணர்வை கடந்த நிலையில் நடக்கும் ஒன்றை நினைவுக்கு எவ்வாறு கொண்டுவர முடியும்?

சும்மா சமயங்கள் கூறும் தெய்வங்கள் என்று சொல்லும் அதே நேரம் நோக்கரியநோக்காய் என்று சிவபுராணத்தையும் சமயத்தில் இருந்து சொல்லும் அதே நேரம் அவன் அங்கே இருக்கின்றான் என்று சத்தியம் செய்து கூறும் நீங்கள் எவன் என்று கேட்டால் சூனியம் என்பீர்கள். சூனியத்தை உணர தன்னுணர்வை கடந்து செல்லவேண்டும் என்கின்றீர்கள்.

அஞ்சும் அடக் கென்பார் அறிவிலார்

அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில்லை

அஞ்சும் அடக்கி அசேதன மாமென்றிட்

டஞ்சும் அடக்கா அறிவறிந் தேனே !

-திருமந்திரம்

ஐம் புலன்களையும் அடக்கியாவர்கள் எங்கே இருக்கின்றார்கள்? நீங்கள் கூறும் தேவலோகத்திலும் இல்லை. அஞ்சும் அடக்கினால் ஓரறிவும் இல்லாத சடப்பொருளாகிவிடுவாய். அவற்றோடு கூடியிருந்தே வாழ்க்கை பயனை அடைய வேண்டும் என்கின்றார்.

---------------------------------------------------------------------

சூனியம் என்பதுக்கு அது பொருந்தாது... அங்கு எதுவுமே இல்லை என்பதை குறிக்க சூனியத்தை சொல்வார்கள்.. பெறுமதி இல்லாத இடமாகிலும் அங்கு காற்று போண்றவை கண்ணுக்கு தெரியாதவைகள் இருக்கலாம்... அதைத்தான் சூனியம் எனப்படும்.. சூனியம் என்பது பூச்சியம் எனும் சுளியத்தையும் குறிக்கும்... ஒண்றுடன் சூனியங்கள் சேரும் போது தொகைகள் அதிகரிக்கும்....!!

ஒரு பொருள் எவ்வாறு எந்த மூலத்தில் இருந்து தோன்றியது என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் அது இல்லாத ஒன்றில் இருந்து தோன்றியது என்று கூறுவதுண்டு. இந்த சூனியம் என்பது எதுவும் இல்லாத ஒன்று என்று பொருள்படாமல் காற்று போன்றவை கண்ணுக்கு தெரியாதவைகளாக இருக்கலாம் என்றால் அக் காற்று போன்றவை எதிலிருந்து தோன்றியது என்று கேள்விகள் தொடரும். கடவுளை படைத்த கடவுள் யார் என்ற கேள்விக்கு இந்த அர்த்தத்தில் சூனியம் இறுதிப்பதிலாக அமையுமா?

----------------------------------------------------------

கடவுள் கற்பனையில் வருவதில்லை - கற்பனை கடந்த சோதி அவர். அவர் அனுபவப் பொருள். கருணையெ அவர் உருவம். அவரை அவரவர் தம் அனுபவத்தின் மூலமே கண்டறிய வேண்டும். அதற்குக் கற்பனைகளும் கருத்துருவங்களும் தடையாய் நிற்பதால் அவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு சித்தத்தை ஒருமுகப்படுத்தி அவரைத் தியானிக்க வேண்டும். சித்தத்துள் தித்திக்கும் தேனாய் அவர் உங்கள் சிந்தையில் நிறைவார். அது அமைதியும் சாந்தியும் பேரானந்தமும் நிறைந்த நிலையாகும். உங்கள் இதயமென்னும் கமல ஆலயத்தில் அரை நிமிடம் அந்தச் சூனியப் பெருவமைதி நிறைந்து விட்டாலே போதும் உங்கள் ஆயுள் பரியந்தம் அந்த அமைதி மிக்க சாந்தி நிலைத்து நிற்கும். விரும்பினால் முயன்று பாருங்கள். பொதுவாக நாத்திகம் பேசுபவர்களிடத்திலே இந்தத் தேடல் இருக்கும். மற்றவர்களோடு விவாதிப்பதை விட்டுவிட்டு உங்கள் உள்ளத்தைத் திறந்து அங்கே தேடுங்கள். உங்களுக்கு ஒரு பதிலும் கிடைக்கவில்லையென்றால் நீங்கள் நல்லவரென்றும் நம்பத் தகுந்தவர் என்றும் கருதும் இந்த உலகில் வாழும் அல்லது வாழ்ந்து மறைந்த ஒரு இறை நேசர் என்ன கூறுகிறார் என்பதையாவது சற்று விவாத நோக்கின்றிக் கேட்டுப் பாருங்கள்.

----------------------------------------------------------

நான் கூறும் கடவுள் அன்பேவடிவானவராயிருக்கிறார். அந்த அன்பு மட்டும் இவ்வுலகில் வியாபித்து நிற்கவில்லையென்றால் உயிரினங்களே இருந்திருக்காது. மனித இனமே என்றோ அழிந்து போயிருக்கும்.

--------------------------------

சூனியத்துள் அன்பு சாந்தி அமைதி கருணை ஞானம் (அறிவு) அனைத்தும் அடங்கியுள்ளது. நீங்கள் முன்பு ஒரு தடவை குறிப்பிட்ட மோட்சம் கூட இருக்கலாம். அதுவும் ஒரு குணவியல்பானால். நீங்கள் இவற்றை மறுக்கிறீர்களென்றால் இவற்றிற்கு எந்த வடிவத்தைக் கொடுக்கப் போகறீர்கள். அன்புக்கு யாதாவது வடிவமுண்டா. அது சார்பற்ற நிலையில் உணரப்படவேண்டியவோர் குணவியல்பல்லவா! அது சூன்ய வடிவில்த்தானே இருக்கமுடியும். தெரிந்து கொண்டே வேண்டுமென்று கேட்பதுபோல இருக்கிறதே.

-----------------------------------------------

ஒரு அரை நிமிட நேரம் அந்தச் சூன்ய நிலைக்குப் போய்விட்டால் வாழ்நாள் முழுவதும் அந்த உள் அமைதி அகத்தில் நிறைந்துவிடுமென்று கூறகிறார்கள். பலருக்கு இது வாய்ப்பதில்லை.

--------------------------------

அன்பு சாந்தி அமைதி கருணை ஞானம் போன்ற குணவியல்புகள் வடிவமில்லாத சூன்ய வடிவிலானைவை என்று கூறுவது போல் துன்பம் கவலை அழுத்தம் போன்றனவும் சூன்ய வடிவிலானவை என்றுதான் கருதமுடியும்.

பசியோடு ஒருவனை பார்க்கும் போது கருணை என்னும் உணர்ச்சி மேலிடுகின்றது அதுபோல் ஒருவர் எமக்கு தீங்கு செய்யும் போதோ அல்லது துன்புறுத்தும் போதோ வேதனைப்படுகின்றோம். இந்த வடிவமில்லா குணவியல்புகளை புறநிலைக் காரணிகள் மிக இலகுவாக தூண்டுகின்றன.

அமைதி என்பது சாத்தியப்பட வேண்டுமானால் புறநிலைக்காரணிகள் ஒத்துளைக்க வேண்டும். ஏர்பிடிக்காவிட்டல் முற்றிலும் துறந்த முனிவனும் வாழ முடியாது என்று ஒரு கூற்று உண்டு. இந்த சூனிய அமைதி (கடவுள்) என்பது புறநிலைகளை கடந்த தீர்வு ஆகாது. நிறைவு பெற்ற அமைதி ஆகாது. அதற்கு ஒரு வாய்பும் இல்லை.

ஒரு அரை நிமிட நேரம் அந்தச் சூன்ய நிலைக்குப் போய்விட்டால் வாழ்நாள் முழுவதும் அந்த உள் அமைதி அகத்தில் நிறைந்துவிடுமென்று கூறகிறார்கள். பலருக்கு இது வாய்ப்பதில்லை.

இது எவ்வாறான ஒரு நிலையை சுட்டிக்காட்டுகின்றது என்று தெரியவில்லை. இக் கூற்றின் படி அகத்தில் அமைதியை நிறைத்துக்கொண்டவர் ஒருவரின் குடும்பம் சுனாமியிலோ அல்லது நிலநடுக்கத்திலோ அல்லது ஏதோ ஒரு விபத்தில் அவரை விட்டு பிரிந்தால் அல்லது அவருக்கு பல துன்பங்கள் சூழ்ந்து கொண்டால் இந்த அமைதி என்னவிதமான பங்கை வகிக்கும்? இந்த சூனிய அமைதி கடவுள் போன்றவற்றால் அந்த நபருக்கு ஏற்படும் துன்பங்களை தடுக்க முடியாது. அவ்வாறு அவர் சாதரண வாழ்வில் ஏற்படும் துயரங்களையும் கடந்து சத் சித் ஆனத்தத்தத்தை உணர்ந்து கொண்டிருந்தால் அதற்கு அர்த்தம் என்ன?

இந்த சூனியக் கடவுளின் முக்கியத்துவம் என்ன? அதை உணர்வதால் நிரந்தர அமைதியும் பாதுகாப்பும் கிடைக்குமா? நடக்கும் இயற்கை அனர்த்தங்கள் அழிவுகள் எல்லாம் இயல்பாக நடந்து கொண்டுதான் இருக்கப்போகின்றது. மனதின் அமைதிக்கு புறநிலையில் ஒத்துழைப்பு மிக அவசியம்.

கடவுள் என்பதை ஒரு அறிதல் ஆராய்தல் என்ற கருத்தாக பயன்படுத்துவது வேறு அந்தவகையில் இந்த சொல்லாடல் முடிவில்லாத ஒன்று. எந்த ஒன்றின் மீதும் இந்த சொல்லை பிரயோகிக்க முடியும். அதை விடுத்து இந்த சொல்லுக்கு ஒரு வரையறையை ஒரு உருவத்தை ஒரு முடிவை கொடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே உள்ளது. எப்படி சுற்றி சுற்றி சுழண்டாலும் இறுதியில் சூனியம் அவன் சோதி சிதம்பரம் அன்பு சிவம் என்று இவை திரும்ப திரும்ப ஒரு இடத்திற்கு வரவே செய்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாரதரே!

(நண்பர் சுகருக்கும்)

ஹலுசினேசன் என்னும் மாயக் காட்சிகள் பொதுவாக உருவங்களாகவே தென்படும். நெடுநாட் தூக்கமின்மை களைப்பு, சிலவகை நோய்கள், போதைப் பொருள், மருந்து போன்றவற்றாலேயெ இந்தக் காடசிகள் ஏற்படுகின்றன. மூளையில் ஏற்படும் சில குழறுபடியான நிகழ்வுகளாலேயே இந்த வியாதி ஏற்படுகின்றது.

மூளையின் சிந்தனையோட்டத்தை நிறுத்தி அதை ஓய்வு நிலைக்குக் கொண்டு வரும் ஆழ்ந்த தியான நிலையில் மூளை பலப்பட்டு மேலும் உறுதிபெறுமே ஒழிய களைப்படைதில்லை.

தற்காலத்தில் யோகா நவீன மருத்துவத்தின் ஒரு கூறாக வந்து கொண்டிருக்கின்றது. மூளையை ஆரோக்கியமாக வைத்து அதன் பலனாய் உடலிலும் ஆரோக்கியத்தைப் பேணும் முறைகளை மேல்நாட்டு மருத்துவம் யோகாவிலிருந்து பெற்றுக் கொள்ளத் தொடங்கிவிட்டது.

நீங்கள் ஏதோ கடவுளைக் கண்டேன் என்று சொன்ன ஆடகளுக்கு மூளையில் வலிப்பேற்பட்டதென்று கூறுகிறீர்கள். அவர்கள் எந்த வகையான கற்பனைக் கடவுளைக் கண்டார்களோ நானறியேன். சிலவேளை யாதாயினும் கற்பனை உருவங்களைக் கண்டிருக்கக் கூடும்.

நண்பர் சுகனுக்கு!

புதிதாக வந்த ஒரு நண்பர் சுகர் இந்த விவாதத்தின் ஆரம்பப் புகுதியை மீண்டும் மேற்கோள்களாக எடுத்து வாதிடுகிறார்.

இந்தப்பிரபஞ்சம் ஒன்றுமற்ற சூன்யப் பெருவெளியிலிருந்து அதாவது இல்லாமையிலிருந்து இருப்பாய் உருவானதால் காரண காரியத் தொடர்பின்படி இருப்புக்குக் காரணமானவனை இல்லாமைக்குச் சென்றே அறியமுடியும்.

பிரபஞ்சம் உள்ள அளவும் இல்லாமையைப் புறத்தே கொண்டுவரமுடியாது. சூன்யம் அங்கே இல்லை. இதை மிகவும் நுட்பமாய் உணர்ந்து கொண்ட ஞானிகள் அகத்திலே அந்த இல்லாமையைத் தேடினார்கள் அது அங்கே அவர்களுக்குக் கிடைத்தது. அவர்கள் அது அப்படியிருக்குமோ இப்படியிருக்குமோ என்கின்ற சிந்தனைகளையெல்லாம் விட்டுத் தங்களின் அகத்தினுள்ளே ஒருமுகப்பட்டு நோக்கியபோது அவர்களுக்கு ஏற்பட்ட பேரமைதியை ஞானம் என்று கூறினார்கள்.

இதற்குக் கடவுள் என்னும் பெயரைப் புத்தர் போன்ற ஞானிகள் வைக்கவில்லை. ஞானம் அல்லது அறிவென்றே குறிக்கப்பட்டது. மகா நிர்வாணம் என்றும் அது குறிக்கப்பட்டது. பொதுவாக எல்லோரும் விளங்கிக் கொள்வதற்காக இங்கே கடவுளென்னும் பெயரால் நான் அதைக் குறிப்பிடுகிறேனேயொழிய அதைக் கட்டாயம் கடவுளென்று கூறவேண்டுமென்றில்லை. அதற்கு அவரவர் தமக்குப் பிடித்தமான பெயரெதுவோ அதை வைத்துக் கொள்ளலாம்.

தயவு செய்து சொற்களைப் பார்த்து மருண்டு போகாதீர்கள். இவ்விடத்தில் அவற்றின் கருத்துக்கள்தான் முக்கியம். உங்களுக்கு முன்பு இச்சொற்களின்மேல் சிலவேளை வேறு கருத்துக்கள் தென்பட்டிருக்கலாம். இங்கே அவை அந்தத் தொனியில் சொல்லப்படவில்லை.

சூன்யன் என்னும் சொல் என்னைப் பொறுத்த அளவில் பொருத்தமான பெயராயிருக்கிறது.

ஒரு மனிதனின் சிந்தனைகள் அடங்கி பேரமைதியொன்று ஏற்படுவதற்கு மூளையின் செயற்பாடு வேண்டியதில்லை. மூளை செயற்படாமல் இருப்பதே அங்கு தேவையானது.

குணங்கடந்த அதாவது சூன்ய நிலையில் உணரப்படும் சாந்தியானது மனிதனின் மூளை இயங்கத் தொடங்கி

அவன் விழிப்பு நிலையடையும் போதும் அழிந்து போவதில்லை. அதனாலேயே அரை நிமிடம் ஆயுட்காலத்திற்கும் போதும் என்கிறார்கள்.

எந்தச் சுனாமியும் எந்த இழப்பும் அவனது அகத்தின் அமைதியைப் பாதிக்கப்போவதில்லை.

சாந்தியைப் பெற்றவன் விழிப்பு நிலையில் பிரபஞ்சத் தொடர்பால் அன்பை உணர்கிறான். அதனாலேயே

அன்புதான் இன்ப ஊற்று அன்புதான் இதய ஜோதி அன்புதான் உலக மகா சக்தியென்னும் கோசம் பௌத்தத்தில் உருவாயிற்று.

சூன்யத்தில் நாம் ஒன்றித்துப் போகமுடியாமைக்கு வெளிப்புறப் பிரபஞ்சத்தின்மீதான பற்றே காரணமென்றும், அதுவே எமது சிந்தனைகளை அடக்க விடாமற் செய்கிறதென்றும் கூறுவர். அதையே புத்தர் ஆசை என்று குறிப்பிடுகிறார். உலகத்தில் எமக்குள்ள அனைத்துக் கவலைகளுக்கும் இந்த ஆசை காhரணமானதால் ஒரு ஞானி ஆசை அறுமின் ஆசை அறுமின் ஈசனோடாயினும் ஆசை அறுமின் என்கிறார்.

அதாவது அந்தச் சூன்ய நிலையை அடைய அதை உணர்ந்துவிடவேண்டுமென்னும் ஆசைகூட இருக்கக்கூடாது என்கிறார்.

அப்படியிருக்கையில் மூளை மூளை மூளையின் கற்பனைதான் எல்லாமென்று நண்பர்கள் கிளிப்பிள்ளைகள் போல் கூறுகின்றனர்.

கற்பனையே இல்லாது கண்டுணர வேண்டியதை

எப்படித்தான் இவ்வாறிம்புவரோ நானறியேன்.

Link to comment
Share on other sites

அண்டங்கள் இயற்கை வழி இயங்குகின்றன. அறிவு வழி இயங்குகின்றது என்பது மனித அறிவைப் பற்றிக் கூறியதாக நினைத்து விட்டீர்கள். அண்டங்கள் பரத்தின் அறிவு வழி இயங்குகின்றது. அதனை நீங்கள் இயற்றை என்கிறீர்கள். கிரகங்கள் இருக்கவேண்டிய இடத்தில் இருந்து விலகாமல் இருந்து கொண்டே சுழன்று கொண்டிருக்கிறதே அது ஒரு அறிவு.

மனிதன் உணர்வினால் அறிவைப் பெறுகிறான். எங்கிருந்து? நீங்கள் சொன்ன இயற்கையிலிருந்து. அவனுக்கு சிந்திக்கத்தான் முடியும். அறிவு என்பது பிறக்கும்போதே மூளையில் பதிந்திருப்பதில்லை. சிந்திப்பதின் மூலம் இயற்கையிலிருந்து கிடைக்கிறது.

நமது உடலில் உயிர் எங்கேயிருக்கிறது என்ற கேள்வி கேட்கப்படின் அறிவுள்ள சிந்திக்கத் தெரிந்த மனிதர்களால் என்ன பதில் சொல்லப்படும். அறிய முடியாததினால் அப்படியொன்று உடலில் இல்லை என்று சொல்வார்களா?

ஆஸ்திகம் நாஸ்திகம் பற்றிக் கதைப்பவர்கள், ஒரு மையப் பொருளை வைத்துத்தானே கருத்துக்களை முன்னெடுத்துச் செல்கிறார்கள். புதிய அறிவுகளைப் பெறும்போது பழைய அறிவு மறைந்துபோகாது. புதிய அறிவின் அடிப்படையாக பழைய அறிவு இருக்கும். என்னுடைய வாதம் மனிதனுடைய சிற்றறிவு பற்றியதல்ல. பேரறிவு பற்றியது.

Link to comment
Share on other sites

அண்டங்கள் இயற்கை வழி இயங்குகின்றன. அறிவு வழி இயங்குகின்றது என்பது மனித அறிவைப் பற்றிக் கூறியதாக நினைத்து விட்டீர்கள். அண்டங்கள் பரத்தின் அறிவு வழி இயங்குகின்றது. அதனை நீங்கள் இயற்றை என்கிறீர்கள். கிரகங்கள் இருக்கவேண்டிய இடத்தில் இருந்து விலகாமல் இருந்து கொண்டே சுழன்று கொண்டிருக்கிறதே அது ஒரு அறிவு.

மனிதன் உணர்வினால் அறிவைப் பெறுகிறான். எங்கிருந்து? நீங்கள் சொன்ன இயற்கையிலிருந்து. அவனுக்கு சிந்திக்கத்தான் முடியும். அறிவு என்பது பிறக்கும்போதே மூளையில் பதிந்திருப்பதில்லை. சிந்திப்பதின் மூலம் இயற்கையிலிருந்து கிடைக்கிறது.

நமது உடலில் உயிர் எங்கேயிருக்கிறது என்ற கேள்வி கேட்கப்படின் அறிவுள்ள சிந்திக்கத் தெரிந்த மனிதர்களால் என்ன பதில் சொல்லப்படும். அறிய முடியாததினால் அப்படியொன்று உடலில் இல்லை என்று சொல்வார்களா?

ஆஸ்திகம் நாஸ்திகம் பற்றிக் கதைப்பவர்கள், ஒரு மையப் பொருளை வைத்துத்தானே கருத்துக்களை முன்னெடுத்துச் செல்கிறார்கள். புதிய அறிவுகளைப் பெறும்போது பழைய அறிவு மறைந்துபோகாது. புதிய அறிவின் அடிப்படையாக பழைய அறிவு இருக்கும். என்னுடைய வாதம் மனிதனுடைய சிற்றறிவு பற்றியதல்ல. பேரறிவு பற்றியது.

இறைவன்,

நாங்கள் தமிழில் கருதாடுவது என்றால் தமிழ்ச் சொற்களைப் பாவிக்கிறோம் என்றால் முதலில் சொற்களுக்கான அர்த்ததைத் தெளிவாக வரையறை செய்து கொள்வோம்.

அறிவு என்றால் என்ன என்பது பற்றி முதலில் வரையறை செய்து கொள்வோம்.

விகியில் அறிவு என்றால் என்ன என்று இவ்வாறு எழுதப்பட்டுள்ளது,

//அறிவு என்பது ஒரு மனிதனைப் பற்றியோ, ஒரு நிறுவனத்தைப் பற்றியோ அல்லது ஏதாவது ஒரு பொருள் பற்றியோ (அறிந்து)தெரிந்து கொள்வது ஆகும். இந்த அறிவைப் பெறும் வழிகள்: 1.கூரிய நோக்கு(perception) 2.கல்வி கற்கும் முறை(learning process) 3.விவாதித்து முடிவுக்கு வருதல்(debates) 4.செவிகளைத் திறந்து வைத்துக் கொள்ளுதல்(open ears) - கேள்வி அறிவு 5.தனக்குத்தானே விவாதிக்கும் முறை(reasoning)

நாம் அனுபவத்தினாலோ, புத்தகங்களைப் படிப்பதன் மூலமாகவோ அல்லது ஏதாவது காரண, காரியங்களினாலோ பெறுகிறோம். அறிவு என்பதன் முழுமையான விளக்கம் நம் தத்துவ மேதைகளிடையே காலம் காலமாக நடந்து வரும் விவாதமாகும். இன்றும் இந்த விவாதம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அறிவு என்பதற்கு சரியான விளக்கம் தரவேண்டுமென்றால் ஒரு செயல் ஏரண விதிகளால்(logically) நியாயப்படுத்தபட்டதாகவும், உண்மையாகவும், அனைவராலும் நம்பக்கூடியதாகவும் இருக்க வேண்டும். (Plato) ஆனால் இவை மட்டுமே ஒரு செயலை அறிவு என்று சொல்லுவதற்கு தகுதியான அளவுகோல் இல்லை என்று வாதிடுவோரும் உண்டு. அறிவு பல வகைப்படும்.

ஒவ்வொரு கணத்திலும் நாம் பாடுபட்டு(அநுபவித்து) அறியும் அறிவு பட்டறிவு(experience). ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஏற்படும் அறிவுத்திறனை சூழ்நிலை அறிவு என்று வகைப்படுத்தலாம். புத்தகங்களில் பெறுவதை புத்தக அறிவு என்றும், சமூக வழி பெறுவதை சமூக அறிவு என்றும் பல வகை உண்டு. சூழ்நிலை அறிவு மொழி, கலாசாரம், பண்பாடு இவற்றோடு நெருங்கிய தொடர்பு உடையது.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது//

//அறிவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

[தொகு] பெயர்ச்சொல்

அறிவு

[தொகு] விளக்கம்

கல்வி மற்றும் அனுபவத்தால் கிடைக்கும் செயல் திறன்(அல்லது)தகவலறிவு.

புரிந்து கொள்ளுதல். //

மேற்கூறிய அனைத்திலும் அறிவென்பது மனிதர் கல்வி மற்றும் அனுபவத்தில் பெறும் தகவல் எனவே கூறப்படுகிறது.

நீங்கள் கூறினீர்கள் பிரபஞ்சத்தின் அறிவென்று , நான் உங்களிடம் கேட்டது பிரபஞ்சத்திற்கு எவ்வாறு அறிவு இருக்கமுடியும் என்று.

அடுத்தகாச் சொல்கிறீர்கள் சிற்றறிவு, பேரறிவு என்று, சிற்றறிவு என்றால் என்ன பேரறிவு என்றால் என்ன? அதனை எதன் அடிப்படையில் இனம்பிரிகிறீர்கள் என்று சொல்லவும்.

// கிரகங்கள் இருக்கவேண்டிய இடத்தில் இருந்து விலகாமல் இருந்து கொண்டே சுழன்று கொண்டிருக்கிறதே அது ஒரு அறிவு. //

கிரகங்களைக் கடவுள்கள் என்று பண்டைய மனிதன் நம்பினான்.கிரேக்க கடவுளர்கலில் இருந்து இந்து மதக்கடவுளர்கள் வரை அவ்வாறு தான் நம்பினார்கள்.அந்த மத நம்பிக்கைகளை உடைத்து, அவையும் புவியைப்போன்ற கோள்கள் தான் அவை ஒன்றோடு ஒன்றோடான ஈர்ப்பு விசையால் உந்தப்பட்டே நிலையான இடங்களில் இருந்து சுழல்கின்றன என்று மனிதனே அறிந்து கொண்டான்.அப்போது முன்னைய அறிவென்பது தகர்ந்து போனது.அதனையே இன்றும் நம்புவது என்பது நம்பிக்கை சார்ந்த விடயமே தவிர அது அறிவு சார்ந்த விடயம் அல்ல.

Link to comment
Share on other sites

நமது உடலில் உயிர் எங்கேயிருக்கிறது என்ற கேள்வி கேட்கப்படின் அறிவுள்ள சிந்திக்கத் தெரிந்த மனிதர்களால் என்ன பதில் சொல்லப்படும். அறிய முடியாததினால் அப்படியொன்று உடலில் இல்லை என்று சொல்வார்களா?

உயிர் என்றால் என்ன என்று சொல்லுங்கள். அது உடலில் இருக்கிறதா இல்லையா அப்படி இருந்தால் எங்கு இருக்கிறது என்று சொல்லலாம். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உயிரென்பது தன்னுணர்வுடன் தன் இருப்பைப் பிற உணரவும் செய்யும் இயல்பாகும். வைரசுக்கள் தொடங்கி மனிதர்வரையான சகல உயிர்களுக்கும் இவ்வியல்பு இருக்கும்.

ஒரு உயிரின் தன்னுணர்வை அறிய அதனைச் சூழல்மாற்றத்திற்கு உட்படுத்திப் பார்க்கலாம். உதாரணமாக வெப்பம் அல்லது குளிர் போன்ற சூழலை ஏற்படுத்தி உயிரில் ஏற்படும் மாற்றங்களை அதாவது அவற்றின் அசைவு, வாடல் போன்றவற்றை அவதானிக்கலாம்.

விஞ்ஞானம், தன் இனத்தைப் பெருக்கவும் தனது அனுசேபச் செய்முறைகளால் புறத்தே இருந்து சக்தி மூலத்தைப்; பெற்றுக் கொள்ளவும் (உ-ம்: ஒளித்தொகுப்பு உணவுண்ணல், வெளி;ப்புறச் சமிபாடு முதலியன) அச்சக்தி மூலத்தை உடைத்துச் சக்தியைப் பெற்றுக் கொள்ளவும் (உ-ம்: சுவாசம்) கூடிய இயல்பு கொண்டவொன்றை உயிரென வரையறுக்கின்றது. இதற்கும் மேலாயத் தற்போது மேலும் வரைவிலக்கணங்கள் இருக்கலாம்.

உயிர்ப்புக்கான காரணங்களை அனுசேபச் செயற்பாடுகளைக் (மெற்றாபோலிசம்) காட்டி விளக்கலாமாயினும் உயிரின் தன்னுணர்வு எப்படி எங்கே எந்த மூலத்திலிருந்து தோன்றியது என்பதற்கு இன்னும் விடைகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

உயிரின் அடிப்படை மூலங்களான டி என் ஏ, ஆர் ஏன் ஏ போன்றவற்றை செயற்கை முறையில் தொகுக்கலாமாயினும் அவற்றில் உயிரைப் புகுத்தும் பொறிமுறைகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

தற்போதைய விஞ்ஞானம் குளோனிங் முறைகளின் மூலம் ஓருயிரிலிருந்து பிறிதோர் உயிரை உருவாக்கக் கூடியவரையிலேயே முன்னேறியுள்ளது. வெறும் சட்ப் பொருட்களை அதாவது மூலகங்களைக் கொண்டு உயிரொன்றை உருவாக்கக்கூடிய அளவுக்கு விஞ்ஞானம் வளரவில்லை வளரப் போவதுமில்லை

Link to comment
Share on other sites

உயிரென்பது தன்னுணர்வுடன் தன் இருப்பைப் பிற உணரவும் செய்யும் இயல்பாகும். வைரசுக்கள் தொடங்கி மனிதர்வரையான சகல உயிர்களுக்கும் இவ்வியல்பு இருக்கும்.

ஒரு உயிரின் தன்னுணர்வை அறிய அதனைச் சூழல்மாற்றத்திற்கு உட்படுத்திப் பார்க்கலாம். உதாரணமாக வெப்பம் அல்லது குளிர் போன்ற சூழலை ஏற்படுத்தி உயிரில் ஏற்படும் மாற்றங்களை அதாவது அவற்றின் அசைவு, வாடல் போன்றவற்றை அவதானிக்கலாம்.

விஞ்ஞானம், தன் இனத்தைப் பெருக்கவும் தனது அனுசேபச் செய்முறைகளால் புறத்தே இருந்து சக்தி மூலத்தைப்; பெற்றுக் கொள்ளவும் (உ-ம்: ஒளித்தொகுப்பு உணவுண்ணல், வெளி;ப்புறச் சமிபாடு முதலியன) அச்சக்தி மூலத்தை உடைத்துச் சக்தியைப் பெற்றுக் கொள்ளவும் (உ-ம்: சுவாசம்) கூடிய இயல்பு கொண்டவொன்றை உயிரென வரையறுக்கின்றது. இதற்கும் மேலாயத் தற்போது மேலும் வரைவிலக்கணங்கள் இருக்கலாம்.

உயிர்ப்புக்கான காரணங்களை அனுசேபச் செயற்பாடுகளைக் (மெற்றாபோலிசம்) காட்டி விளக்கலாமாயினும் உயிரின் தன்னுணர்வு எப்படி எங்கே எந்த மூலத்திலிருந்து தோன்றியது என்பதற்கு இன்னும் விடைகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

உயிரின் அடிப்படை மூலங்களான டி என் ஏ, ஆர் ஏன் ஏ போன்றவற்றை செயற்கை முறையில் தொகுக்கலாமாயினும் அவற்றில் உயிரைப் புகுத்தும் பொறிமுறைகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

தற்போதைய விஞ்ஞானம் குளோனிங் முறைகளின் மூலம் ஓருயிரிலிருந்து பிறிதோர் உயிரை உருவாக்கக் கூடியவரையிலேயே முன்னேறியுள்ளது. வெறும் சட்ப் பொருட்களை அதாவது மூலகங்களைக் கொண்டு உயிரொன்றை உருவாக்கக்கூடிய அளவுக்கு விஞ்ஞானம் வளரவில்லை வளரப் போவதுமில்லை

நான் இறைவனுக்குச் சொல்ல வேண்டிய பதிலை நீங்கள் சொல்லி விட்டீர்கள், நன்றி கரு.

//வெறும் சட்ப் பொருட்களை அதாவது மூலகங்களைக் கொண்டு உயிரொன்றை உருவாக்கக்கூடிய அளவுக்கு விஞ்ஞானம் வளரவில்லை//

இது சரியனதே.

//வளரப் போவதுமில்லை//

இங்கே தான் பிழை விடுகிறீர்கள்.எதிர்காலத்தைப

Link to comment
Share on other sites

மரபணுப் பொறியியலில் ,செயற்கை உயிரியல் Synthetic Biology என்னும் துறை இப்போது வளர்ந்து வருகிறது.

இதன் மூலம் செயற்கையாக உயிரிகளை உருவாக முடியும் என்று சொல்கிறார்கள்.

மேலும் வாசிக்க,

http://www.machineslikeus.com/cms/worlds-f...m-creation.html

Scientists and industrialists in the controversial new field of synthetic biology (building life-forms from scratch) are meeting in Zurich, Switzerland this week amidst claims that the world’s first entirely human-made organism may be only weeks away from creation. Swiss and international civil society groups are calling for swift action to control this technology but the scientists themselves are advancing pre-emptive proposals to evade regulation. As scientists meet in Zurich, the UK’s Royal Society and the Swiss government announce plans to investigate synthetic biology.

Synthetic Biology 3.0

An international scientific congress, Synthetic Biology 3.0, is meeting in Zurich from 24-27 June to discuss the latest advances in Synthetic Biology -- the new field of extreme genetic engineering that attempts to build synthetic life forms. Synthetic biologists contend that all the parts of life can be made synthetically (that is, by chemistry) and then engineered together in the laboratory to produce “living machines” -- fully working organisms programmed for particular tasks. Some are being designed for intentional environmental release. Today there are about a dozen synthetic biology companies worldwide plus almost 70 commercial ‘gene foundries’ that manufacture designer DNA molecules for industrial use. The first commercial products using synthetic biology (e.g., a textile fiber by DuPont) are about to enter the market and there are concerns that dangerous pathogens, such as smallpox or Ebola virus, could now be constructed as bioweapons. Because synthetic biology goes far beyond the genetic engineering techniques previously used to develop genetically modified food and drugs, no laws have yet been developed that address its safety, security and societal risks.

“Once more a new technology is storming ahead with no government or international body able to regulate or control it,” says biologist Florianne Koechlin from SAG (the Swiss Working Group on Gene Technology). “Once more we hear from the scientific community, supported by industry and the military, that they have life under control and will soon be able to construct it. But life is more than the sum of its parts.” Koechlin is a member of the Swiss government-appointed ethics body that will investigate the implications of synthetic biology later this year.

Synthetic Biology 3.Ownership?

The task of framing new laws became more urgent earlier this month when ETC Group, an international civil society organisation, uncovered the first-ever patent application on a fully synthetic life form produced via synthetic biology. US patent application no. 20070122826, entitled “Minimal bacterial genome,” claims monopoly ownership of a “free-living organism that can grow and replicate” whose genome (full genetic information) has been built entirely through mechanical means. Craig Venter, whose scientific institute filed the patent application, has since told Business Week that his team is only weeks or months away from having built such a synthetic organism, dubbed Mycoplasma laboratorium (nicknamed ‘Synthia’ by ETC Group)[1]. If they succeed it will mark a break with evolution as we know it.

Craig Venter himself has a long history of mixing cutting-edge science with commercial exploitation. He led the private part of the human genome-sequencing project, selling human genetic data to pharmaceutical companies as he went. Once again he has announced that he hopes to cash in on a new science, boasting that his new synthetic creation could be the first trillion-dollar organism[2]. Just last week he inked an investment deal with oil company BP that brought the commercial value of his start-up company, Synthetic Genomics, Inc., to US$300 million[3]. Civil society critics are concerned that, using broad patents, Venter may carve out a monopoly position as the ‘Microbesoft’ of synthetic biology.

“In the last year synthetic biologists have really climbed into bed with big business,” explains Jim Thomas of the ETC Group. “With BP, Cargill and DuPont setting their sights on synbio, the corporate agenda is starting to drive this powerful technology. Society should be concerned about whose interests will get ignored or even trampled on.”

Synthetic biology 3.oh no here we go again...

A year ago (at Synthetic Biology 2.0 in Berkeley, California) scientists attempted to advance a plan for self-governance of the field, seen by critics as a ruse to head off future regulation. Those plans were quietly dropped after 38 civil society organisations signed an open letter calling on the scientists to abandon the scheme and pursue a wider, more inclusive dialogue with society. No such dialogue has been forthcoming. This year the same proposals have largely been repackaged, and published in the June issue of Nature Biotechnology [4]. The recycled governance proposal, authored by members of a new trade body, The International Consortium for Polynucleotide Synthesis, along with scientist-entrepreneurs and employees of the US FBI (Federal Bureau of Investigation), focuses exclusively on biowarfare concerns. It presents a framework where the industry body shares best practices and screening software to identify synthetic DNA that could be of interest to bioterrorists. In addition, the authors recommend a requirement that all buyers of synthesized DNA reveal their name, home institution and offer any biosafety information relevant to the sequences they are ordering. The authors feel satisfied that this “path forward” is sufficient to top-up existing biosafety laws. Critics disagree.

“Of the proposed framework’s fourteen authors, all but four [who are FBI employees] declared competing financial interests. We believe the authors’ own investment in the success of the technology cannot help but overwhelm their capacity for self-criticism,” argues Kathy Jo Wetter of ETC Group. “It is bad enough that this new industry is already claiming exclusive ownership on artificial life forms; they should not be allowed to make up artificial governance frameworks, too.”

Countdown to a synthetic lifeform

11 July 2007

NewScientist.com news service

Peter Aldhous

Synthetic life could be just around the corner - depending on what you mean by "synthetic".

Last week, genomics pioneer Craig Venter announced that his team has passed an important milestone in its efforts to create a bacterial cell whose genome is entirely synthetic - constructed chemically from the building blocks of DNA. Venter claims this goal could be achieved within months

http://www.newscientist.com/channel/life/m...=mg19526114.000

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்பரே! தாங்கள் போட்டிருந்த சிந்தற்றிக் பயோலொஜி தொடர்பான கட்டுரையை ஒரு தடவை வாசித்துப் பார்த்தேன். அந்தத்துறையில் வணிகம் சார்ந்த முனைப்புகளே அதிகம் உள்ளன போலத் தெரிகிறது.

ராமர்பிள்ளை மூலிகையில் பெற்றோல் செய்து காட்ட முனைந்தபோது அதில் உண்மையான பெற்றோலைக் கலந்ததால் பிடிபட்டுப் போனாராம்.

அதே வகையான பேய்க்காட்டலை இந்த விஞஞானிகள் கூட்டமும் செய்து உலகை ஏமாற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

டி என் ஏ, ஆர் என் ஏ உயிர் மூலங்களின் அடிப்படையான அடினீன் குவானின் சைற்றோசீன் போன்ற மூலக் கூறுகளுக்கு தன்னுணர்வு உண்டென்றும், அவற்றில் பெரிய மூலக்கூறு சிறிய மூலக்கூற்றை விழுங்க முனையும்போது சிறிய மூலக்கூறு தப்பி விலக முயற்சிப்பதைக் காணக் கூடியதாக இருந்ததென்றும்

இதுவே தன்னுணர்வின் அடிப்படையாக இருக்கலாமென்றும் இலங்கையைச் சேர்ந்த பொன்னம் பெருமா போன்ற விஞ்ஞானிகள் ஆராய்ந்து கண்டார்களென்று நான் முன்பொருமுறை எங்கோ வாசித்திருக்கிறேன்.

கேள்வி என்னவென்றால் இந்தத் தன்னுணர்வு அந்த மூலக்கூறுகளில் எப்படியுருவானது அந்த உணர்வை அம்மூலக்கூற்றுச் சேர்க்கையில் பதிய வைக்கும் சக்தி எது என்பதே. அணுக்களினுள்ளே இந்தத் தன்னுணர்வு பதிக்கப்பட்டுள்ளது என்றால் அதற்கான மூலமென்ன.

உயிரை மனிதன் ஆக்கிவிட்டாலும் கூட இந்தக் கேள்வி நிச்சயம் இருக்கும்.

அதனால் சூனியத்திலிருந்து தன்னுணர்வுள்ள ஓர் அணுவை விஞ்ஞானம் ஆக்கும் வரை இதற்கான பதிலை நாம் பெறமுடியாது. அப்படி முடியுமானால் ஒர் எதிர்ப் பிரபஞ்சத்தையே மனிதன் ஆக்கிவிடமுடியும்.

அதன்பிறகும் கூடச் சுயம் எங்கிருந்து வந்தது என்பதை மனிதன் கேட்டுக் கொண்டேயிருப்பான். அதனால்தான் சொல்லுகிறேன் அறிவினால் இது முடியப் போகும் காரியமில்லை. மிகுதியை நான் இங்கு எழுதவில்லை. எழுதினால் அந்தத் தொங்கலைத்தான் நீங்கள் பிடித்துக் கொள்ளுவீர்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.