-
Tell a friend
-
Topics
-
Posts
-
By goshan_che · Posted
ஐயா, பச்சை பச்சை என லஜ்ஜை இல்லாமல் பிச்சை புகும் எச்சை குணம் அறவே அற்றவர் பாஞ்ச் அவர் கருத்தில் தெறிக்கும் பன்ஞ்ச் என்பதை நான் அறிவேன். ஆனாலும், பாஞ்சின் கருத்தில் நான் கொண்ட இச்சை, கொடுக்க வேண்டியது மனம் பச்சை நிர்வாகம் என் ஆசைக்கு கட்டியது கச்சை. ஆகையால் வரிகளில் எழுதினேன் என் கருத்தை. பிகு நன்றி - டி ஆர் 🤣 -
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 1, ஆனி, 2007 இரு துணைப்படைக் கூலி குழுக்களிடையே மோதல் - அறுவர் பலி அம்பாறை மாவட்டத்தில் முச்சக்கர வண்டிகளில் பயணம் செய்துகொண்டிருந்த துணைப்படைக் கூலிகள் மீது போட்டித் துணைப்படைக் கூலிகள் மறைந்திருந்து நடத்திய தாக்குதலில் அறுவர் கொல்லப்பட்டிருப்பதாகச் செய்தி வந்திருக்கிறது. அம்பாறையிலிருந்து பொத்துவில் நோக்கி இரு முச்சக்கரவண்டிகளில் பயணம் செய்துகொண்டிருந்த கருணா துணைப்படைக் கூலிகள் மீது இன்ஸ்பெக்டர் ஏற்றம் பகுதியில் வைத்து போட்டித் துணைப்படைக் குழுவான பிள்ளையான் குழு மறைந்திருந்து தாக்கியதில் ஆறு கருணா துணைப்படைக் கூலிகள் கொல்லப்பட்டிருக்கின்றனர். அண்மைய நாட்களில் கருணா பிள்ளையான் ஆகிய துணைப்படைக் கூலிகளின் தலைவர்களுக்கிடையே நடந்துவரும் மோதலினையடுத்து, பொலொன்னறுவை மாவட்டத்தில் பிள்ளையான் எனும் ராணுவப் புலநாய்வுத்துறையால் வழிநடத்தப்படும் கூலியின் குழுவினரில் 8 பேரை கருணா துணைப்படைக் கூலிகள் கடத்திச் சென்று கொன்றிருந்தனர். இதற்குப் பழிவாங்கும் முகமாகவே கருணா துணைப்படைக் கூலிகள் மீது பிள்ளையானின் அடியாட்கள் இத்தாக்குதலை மேற்கொண்டதாகத் தெரியவருகிறது. கொல்லப்பட்ட தமது சகாக்களில் மூவரின் உடல்களைத் தூக்கிக் கொண்டு தப்பியோடிய கருணா துணைப்படைக் கூலிகள் ஏனைய மூவரையும் விட்டுவிட்டுச் சென்றதாகவும், பின்னர் பொலிஸார் அந்த மூவரின் உடல்களை கோமாரி வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்த 3 கருணா துணைப்படைக் கூலிகள் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
-
நாம் இன்றுவாழும் உலகம் உருவாகி அதில் தோன்றிய உயிரினங்கள் எழுப்பிய சத்தங்களுடன், இன்று எழும் சத்தங்களும் காற்றோடு கலந்து தங்கிக் காற்றோடு அலைகிறதாம், அவை என்றுமே காற்றைவிட்டு அகன்று அழியாது எனவும், காற்றில் கலந்திருந்தாலும், அவை கலைந்து இருப்பதால், அது தெளிவின்றிப் பேரிரைச்சலாக எங்கள் காதுகளில் கேட்பதாகவும் படித்த ஞாபகம் உண்டு. சத்தங்களை ஒன்றிணைத்து அறியும் வல்லமை உடையவர்கள் தோன்றும்போது கற்காலத்திற்கு அப்பாலும் நாம் வாழும் பூமிபற்றி அறியமுடியும் என்று அதில் தெரிவித்திருந்தார்கள். படித்த ஞாபகம் உள்ளதே தவிர, அது எந்தப் புத்தகம், யாருடைய வெளியீடு என்பது ஞாபகமில்லை.🤔
-
By Maruthankerny · Posted
தற்போது இருக்கும் ஆதார அடிப்படைகள் பிரகாரம் நீங்கள் கூறுவது சரியானது ஆனால் இப்போது இருக்கும் ஆதாரங்கள் முழு மனித இனத்தை ஆய்வறியும் அளவுக்கு போதுமானதாக இல்லை ... அப்படி இருந்து இருந்தால் கீழடி பற்றி மண்ணை கிளாராமலே நாங்கள் அறிந்திருக்க வேண்டும். ஒவ்வரு இடமும் எதோ ஒரு புதிய தகவல் வந்துகொண்டுதான் இருக்கிறது. தவிர சீனா பகுதிகளில் மேற்கு நாடுகளின் ஆய்வுகள் மிக மிக குறைவு அங்கு என்ன எல்லாம் புதைந்து கிடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்தார் என்ற வரலாறு மாறுவது என்பது எளிதானது அல்ல. எகிப்த்து பிரமிட்டுக்களும் மாயன்களின் பிரமிட்டுகளும் ஒரே நேர் கோட்டில் இருப்பது தற்செயலா? தாய் செயலா? என்பதை படிப்பவர்கள் மட்டுமே அறிந்துகொண்டு இருக்கிறார்கள். மற்றவர்களுக்கு கொலம்பஸ் அமெரிக்காவை கண்டு பிடித்த்தில் இருந்து வரலாறு தொடங்குகிறது -
இந்தவகை கண்டுபிடிப்பாளர்கள் முக்கியமான ஒரு நுட்பம் உள்ளதாக வாசித்தேன். அது, big picture view. ஒரு முழுமையான bird eye view இருந்தால் மட்டுமே கண்டு பிடிப்புகள் சாத்தியமாகலாம். எது, எது, எவ்வாறு... ஒரு பெரிய puzzle இல் பொருந்திக் கொள்கிறது என்பதே big picture view. இந்த இடத்தில திருகினால், அங்கே.. உதைக்கும், அல்லது இவ்வாறான விளைவுகள் உண்டாகும் என்னும் பரந்த பார்வை. அது வாசிப்பதன் மூலம் சாத்தியமாகலாம். இந்த சுவிச்சை போட்டால், அங்க தண்ணி பாயும் எண்டு தெரியாமலே அதை தொட்டு, இப்ப பார் என்ன நடந்திருக்கெண்டு... போ, போய் ... அடியை வாங்கி கட்டு என்பார்களே இது big picture view ன் எதிர் நிலை. சில சிறந்த வைத்திய நிபுணர்கள் இத்தகைய வியூ கொண்டதால் தான் மருந்துகளை சரியாக கொடுத்து, கைராசி மருத்துவர் என்கிறோம். இதை கொடுத்தால், அது நடக்கும்... ஆனால் இவருக்கு இன்ன கொம்பிலிகேஷன் இருப்பதால் பேதி வரும்... அதாலை, ஒரு முறை கொடுத்து, நிறுத்தி.... நிலைமை பார்த்து, இதை கொடுங்கள்.... அந்த ரியாக்ஷன் இல்லாவிடில், இதனையே மீண்டும் கொண்டுங்கள் என்று தாதிகளுக்கு எழுதி வைப்பதும் big picture view தான். என்னுடன் ஒரு இந்திய IT காரர் வேலை செய்தார்.... அவரே எனக்கு, கணக்கியலில் இருந்து IT பாய உந்துதலாக இருந்தார். டேட்டாபேஸில் எதாவது கேட்டால், இரண்டு நிமிடம் கண்ணை மூடிக்கொண்டு இருந்து விட்டு, சில sql கோடிங் எழுதுவார். எங்கோயோ இருந்து, லபக் என்று தரவுகள் வந்து விழும். இதுவும் big picture view தான். இதனையே, big picture view இல்லாத வேறு ஒருவராயின், திருப்பி, திருப்பி எழுதி, அரைமணி நேரம் எடுத்துக் கொள்வார்கள். அரசியலில், இதுவே, மகிந்தா , ரணில் அரசியலுக்கு இடையே உள்ள வித்தியாசம்.
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.