Jump to content

அன்புள்ள கறுப்பி நாயே


Recommended Posts

அன்புள்ள கறுப்பி நாயே

இந்தவார ஒரு பேப்பரிற்காக

Sanstitre.jpg

தொடர்ந்து என்ரை கதையையே எழுதிக் கொண்டு வாறதாலை இந்தமுறை ஒரு நாய்க்கதை எழுதப்போறன்.எல்லாம் ஒண்டுதான் எண்டு முணுமுணுக்காமல் படியுங்கோ ஏணெண்டால் இது 80 களிலை ஊரிலை நான் வளர்த்த நாயின்ரை கதைதான். நாங்கள் வளர்த்த நாய் வயசு போய் செத்துப்போயிருந்த நேரம் என்ரை நண்பன் இருள்அழகனின்ரை வீட்டு நாய் நாலைஞ்சு குட்டிபோட்டிருந்தது.நான் அதிலை ஒரு நரைநிற கடுவன் ஒண்டையும் கறுப்பு பெட்டைக்குட்டி ஒண்டையும் தூக்கிக் கொண்டு வந்திட்டன்.இப்ப அதுகளுக்கு பேர் வைக்க வேணுமெல்லோ??.வீட்டிலை ஆளாளுக்கு ஒவ்வொரு பெயரை சொல்லிச்சினம். அதே நேரம் என்ரை தங்கச்சி நாயளின்ரை நிறத்தையே பெயராவைப்பம் எண்டிட்டு நரையனுக்கு பிறவ்ணி எண்டும் கறுப்பு குட்டிக்கு பிளக்கி எண்டும் வைப்பம் எண்டாள்.அவளின்ரை யோசினை எனக்கு பிடிச்சிருந்தாலும் நாங்கள் ஆர் தமிழரல்லோ அதாலை எனக்கு இங்கிலிசிலை பேர் வைக்கிறது பிடிக்கேல்லை அதை அப்பிடியே தமிழிலையே நரையன் எண்டும் கறுப்பி எண்டும் பேர் வைச்சு பக்கத்து வீடு இருள்அழகனின்ரை வீடு எண்டதாலை தாய் நாய் தேடிவந்து குட்டியை கவ்விக்கொண்டு போகாமல் இருக்க அதுளை எங்கடை வீட்டு தண்ணித்தொட்டிக்குள்ளை வைச்சு பால்குடுத்து வளத்தன்.இரண்டும் நல்லா வளந்து சாப்பிட தொடங்கத்தான் நரையனுக்கு ஏதோ ஒரு வருத்தம் பிடிச்சிட்டுது.என்னத்தை சாப்பிட்டாலும் மெலிஞ்படிதான் இருந்திச்சிது. ஆனால் கறுப்பி மினுமினுவெண்டு கொழுத்து வளந்துகொண்டிருந்தது. நரையனுக்கு சாப்பாடு பால் எல்லாம் கூடுதலாய்குடுத்தும் பாத்தன் ஆனால் ஒரு பிரயோசனமும் இல்லை. அந்தநேரம் நரையனை அமெரிக்காவுக்கு கொண்டுபோய் வைத்தியம் பாக்கிற அளவுக்கு என்னட்டை வசதி இல்லாததாலை பக்கத்திலை சண்டிலிப்பாயிலை இருந்த அரசாங்க மிருக வைத்திரிட்டை கொண்டு போய் காட்டினன்.அங்கை சுமணா எண்டு எனக்கு தெரிஞ்ச அக்கா ஒராள்தான் வைத்தியராய் இருந்தவா.

அவாவும் நரையனை பிடிச்சுப்பாத்திட்டு சாப்பாட்டோடை கலந்து குடு எண்டுசில விற்றமின் குளிசையளை எழுதித்தந்து விட்டார். நானும் அந்த விற்மின் குழிசையளையும் வாங்கி குடுத்தும் பாத்தன் ஒரு மாற்றமும் இல்லை.ஆனால் நரையனுக்கு எந்த நேரமும் சாப்பாடு தேவைப்பட்டது. சாப்பாட்டோடை யாரையாவது கண்டாலே காணும் உடைனை அவதிப்பட்டு அவைக்கு மேலை பாய்ஞ்சு பறிச்சுப்போடும். ஒருக்கால் சோறு போடப்போன அம்மாவை சோறு போடமுதலே அவதிப்பட்டு சோத்தோடை சேத்து அம்மாவின்ரை கையையும் கடிச்சுப்போட்டுது. அதுமட்டுமில்லை சாப்பாட்டுக்காக பக்கத்து வீடுகளுக்குள்ளையும் நுளையத் தொடங்க நரையனை எந்த நேரமும் கட்டிப்போட்டிட்டு சாப்பாட்டை தட்டிலை போட்டு தூர நிண்டு தட்டை தள்ளிவிட வேண்டிய நிலைமைக்கு வந்திட்டுது. ஆனால் அது எந்த நேரமும் சாப்பாட்டுக்கு அவதிப்படுறதாலை அதுக்கு அவதி எண்டிற பட்டத்தை குடுத்துஎல்லாரும் அவதி நரையன் எண்டு கூப்பிடத் தொடங்கிட்டினம்.சாப்பாடு போட்டு அலுத்துப்போன அம்மாவோ என்னட்டை" டேய் இந்த நாயைக் கட்டி சாப்பாடு போட்டநேரம் ஒரு யானையை கட்டிசாப்பாடு போட்டிருக்கலாம் பேசாமல் எங்கையாவது கொண்டு போய் விட்டிட்டுவாடா "எண்டு சொன்னாலும் எனக்கு நரையனை விடமனசு வரேல்லை. ஆனால் நரையனுக்கோ வலை ஆட்டக்கூட பலமில்லாமல் மெலிஞ்சு போய்விட்டது.அதை திருப்பவும் தூக்கிக் கொண்டு மிருகவைத்தியர் சுமணாக்காவிட்டை போனன்.அவாவும் நரையனைப்பாத்திட்டு அம்மா சொன்மாதிரியே எங்கையாவது கொண்டுபோய் விடு எண்டு சொல்லவும் எனக்கு வந்த கோபத்திலை அவாவைப் பாத்து " நீங்கள் உண்மையா மிருகவைத்தியர் தானோ இல்லாட்டி கொழும்பிலை போய் கோழி வளப்புப் பற்றி படிச்சுப்போட்டு இஞ்சைவந்து மிருக வைத்தியர் எண்டுசொல்லிக் கொண்டு திரியிறீங்களோ எண்டு கேட்டிட்டன்.அவாவும் கோவத்தோடை தம்பி இந்த வருத்தத்துக்கு யாழ்ப்பாணத்திலை மருந்துவசதி இல்லை கொழும்பிலைதான் அதுவும் ஸ்பெசலாய் சொல்லி எடுப்பிக்கவேணும் வேணுமெண்டால் மருந்து ஊசிமருந்துகளின்ரை பேரை எழுதித்தாறன் கொழும்பிலை போய் வாங்கிக் கொண்டு வா. நான் அந்த ஊசியளை போட்டு விடுறன் எண்டு சொல்லி ஒரு கடுதாசியிலை விறுவிறெண்டு கொஞ்ச மருந்துகளின்ரை பேரை கிறுக்கி கையிலை தந்துபோட்டு இனி உன்ரை நாயோடை இஞ்சை வாறதெண்டால் இந்த மருந்துகளோடை வா இல்லாட்டி இந்தப் பக்கம் வராதை எண்டு சொல்லி அனுப்பி "இல்லை" கலைச்சு விட்டிட்டா.அந்தநேரம் மனுசருக்கு வருத்தம் வந்தாலே விக்சை தடவிப்போட்டு கொத்தமல்லியை அவிச்சு குடிச்சுப்போட்டு போத்து மூடிக்கொண்டு படுத்திடுவினம்.இதுக்கை நான் என்ரை நாய் நரையனுக்கு கொழும்பிலை இருந்து மருந்து எடுத்து ஊசி போட்டு இதெல்லாம் நடக்கிற காரியமோ ?? எண்டு நினைச்சபடி வீட்டை போறதுக்கு சண்டிலிப்பாய் சந்தியை கடக்கேக்குள்ளைதான் அவரின்ரை ஞாபகம் வந்திச்சுது.

அவர்தான் சண்டிலிப்பாய் சீரணி நாகம்மாள்(நாகபூசணியம்மன்) கோயிலடியிலை இருக்கிற சாமியார்.இவரைப் பற்றி ஒரு தனிப் பதிவே எழுதலாம் ஆனால் இப்ப அவரைப் பற்றின கொஞ்ச விளக்கத்தோடை கதையை தொடருறன். இவர் குள்ளமாய் பெரிய வண்டியோடை இடுப்பிலை காவி. நடு மண்டையிலை அள்ளிமுடிஞ்ச சடாமுடி . நாலைஞ்சு ஊருத்திராச்சம் மாலை சிவப்புக் கண்களோடை சின்னப்பிள்ளையள் பாத்தால் பயப்பிடுற ஒரு தோற்றம். இவர் கன காலம் இமயமலையிலை போய் தவமிருந்திட்டு வந்தவர் எண்டு ஊரிலை கதைப்பினம். ஆனால் உண்மையிலை இமய மலையிலைதான் போய் தவமிருந்தாரோ இல்லாட்டி திருகோணமலையிலை போய் கொஞ்சக்காலம் ஆரும் சொந்தக் காரர் வீட்டிலை நிண்டிட்டு வந்தாரோ எண்டு உண்மை பொய் தெரியாது.ஆனால் எங்களுக்கு சின்னிலை ஏதாவது காச்சல் வருத்தம் வந்தால் அப்பா எங்களை அந்தச்சாமியாரிட்டை கூட்டிக்கொண்டு போனல் அவரும் விபூதியை மந்திரிச்சு பூசிப்போட்டு கையிலை ஒரு நூலும் கட்டிவிடுவார்.அதுக்காக மருந்து எடுக்காமல் விடுறதில்லை மருந்தும் எடுக்கிறதுதான். எங்களை மாதிரி ஊரிலையும் கனபேர் அவரிலை நம்பிக்கை.சரி சாமியாராவது என்ரை நரையனை கைவிட மாட்டாரெண்டு நினைச்சு அவரிட்டைப்போய் நரையனைக் காட்டி விசயத்தை சொன்னன் அவரும் யோசிச்சுப்போட்டு கொஞ்ச விபூதியை எடுத்து ஏதோ முணுமுணுத்துப் போட்டு நரையனுக்கு மேலை எறிஞ்சுபோட்டு போ எல்லாம் சரி வருமெண்டு அனுப்பிவிட்டார்.நானும் வீட்டை போய் நரையனை சங்கிலியிலை கட்டாமல் அப்பிடியே விட்டிட்டன். அடுத்தநாள் காத்தாலை நரையன் வீட்டு மரவள்ளித் தோட்டத்துக்கை செத்துப்போய் கிடந்திச்சிது.கவலையோடை அதை எடுத்து வளவுக்குள்ளை தாட்டுப்போட்டு அந்த இடத்திலை ஒரு நெல்லி மரத்தையும் நட்டுட்டுப்போட்டு அதோடை நரையனின்ரை கதையும் முடிஞ்சு போச்சுது. என்னடா கறுப்பி நாயே எண்டு தலைப்பை போட்டிட்டு நரையனைப்பற்றி எழுதிக்கொண்டிருக்கிறன் எண்டுதானே நினைக்கிறீங்கள். இனி கறுப்பிக்கு வாறன்.

கறுப்பிதான் வீட்டிலை செல்லப் பிள்ளை அதோடை நல்ல புத்திசாலி நாங்கள் கதைக்கிறதெல்லாம் பெரும்பாலும் அதுக்கு விளங்கும் சொல்லுறதை செய்யும்.நாங்கள் பள்ளிக் கூடம் போகேக்கை சைக்கிளுக்கு பின்னாலையே பிரதான வீதி வரைக்கும் ஓடியந்து நாங்கள் மறையும் வரைக்கும் அங்கை நிண்டு பாத்திட்டு வீட்டை ஓடிடும். ஆனால் ஒருநாள் கூட பிரதான வீதிக்கு வராது.அதே மாதிரி மத்தியானம் நாங்கள் பள்ளியாலை வீட்டை வாற நேரத்துக்கு சரியாய் ஒழுங்கை முகப்பிலை வந்து காவல் நிக்கும்.எங்களிலை உள்ள பாசம் மட்டுமில்லை பள்ளிக் கூடத்திலை தாற விசுக்கோத்திலை நாங்கள் கறுப்பிக்கெண்டு கொஞ்சம் கொண்டு வருவம். கறுப்பிக்கு அதை அந்தரத்திலை எறிய அது பாய்ஞ்சு பிடிச்சு சாப்பிட்டபடி பின்னாலை ஓடிவரும்.நான் சாப்பிட்டிட்டு முத்தத்திலை இருக்கிற வேப்பமரத்துக்குக் கீழை உள்ள வாங்கிலை கொஞ்சநேரம் ஒரு குட்டி நித்திரை போடுவன் கறுப்பியும் வந்து வாங்குக்கு கீழை படுத்திடும் நான் நித்திரையான நேரம் வீட்டுக்காரரைத் தவிர வேறை ஒருத்தரும் எனக்குக் கிட்ட வரமுடியாது.அப்பிடி யாரும் வந்தால் பல்லைக் காட்டி உறுமி ஒரு எச்சரிக்கை விடும் அதுக்கு மேலையும் கிட்ட வந்தால் அவ்வளவுதான் அது எங்கை பாஞ்சு எதைக்கவ்வும் எண்டு தெரியாது.நான் வீட்டை விட்டு வெளியேறி இருந்த காலங்களிலை வீட்டுக்கு கடிதம் எழுதேக்குள்ளை கறுப்பியை வடிவாய் கவனியுங்கோ எண்டு ஒரு வசனம் எழுதத் தவறுறேல்லை. அதே மாதிரி நான் வீட்டை போற நாட்களிலை என்னைக் கண்டதும் கறுப்பி எனக்கு மேலை பாய்ஞ்சு எனக்கு நோகாமல் செல்லமாய் உடம்பெல்லாம் கடிச்சு விழையாடும்.இந்தியனாமி காலத்திலை எங்கடை ஊரிலை சண்டை நடக்கேக்குள்ளை பலஊர்நாய்கள் வெடி மற்றது குண்டுச் சத்தத்துக்கு திக்குத் திசை தெரியாமல் ஊரை விட்டே ஓடியிருந்ததுகள். எங்கடை வீட்டிலையும் எல்லாரும் அகதிகளாய் கோயில்லை போய் இருந்த நேரமும் கறுப்பி வீட்டிலையேதான் படுத்திருந்தது. பிறகு இந்தியனாமி எல்லா இடமும் பிடிச்சால் பிறகு எங்கடை ஊரிலை ஒருத்தன் இந்தியனாமியோடை சேந்து போராட்டத்துக்கு ஆதரவு குடுத்த மற்றது போராளிகளின்ரை வீட்டுக்காரர் எல்லாருக்கும் பிரச்சனையள் குடுத்துக்கொண்டிருந்தவன். அவன் ஒருநாள் அம்மாவும் தங்கச்சியும் தனிய வீட்டிலை இருந்தநேரம் ஆமியொடை எங்கடை வீட்டையும் வந்து ஆயுதம் இருக்கு செக் பண்ணப்போறம் எண்டிட்டு தங்கச்சியின்ரை கையைப் பிடிச்சு இழுக்க இதைப் பாத்த கறுப்பி பாய்ஞ்சு அவனைக்கடிச்சு குதற தொடங்க இந்தியனாமி ஒருத்தன் துவக்காலை கறுப்பிக்கு அடிக்க இன்னொரு ஆமியின்ரை துவக்கு குண்டுகள் கறுப்பியை துளைக்க கறுப்பி சுருண்டு விழுந்ததாம். அதோடை அவங்கள் போட்டாங்கள் எண்டு சில நாளுக்கு வீட்டை போன என்னட்டை தங்கச்சி அழுதபடி சொல்லிப்போட்டு வளவுக்குள்ளை ஒரு இடத்தைக் காட்டி இஞ்சைதான் கறுப்பியை தாட்டிட்டு அதிலை ஒரு மாங்கண்டு நட்டிருக்கிறன் எண்டாள்.

சிலநாளுக்குப் பிறகு அந்த அவனை யாரோ மனிப்பாய் சந்தியிலை வைச்சு சுட்டு அவன் செத்துப்போனான் எண்டு ஊர்சனம் கதைச்சிச்சினம்.கறுப்பியின் ஆத்மாவேதான் அவனைப்பழிவாங்கியிருக்க வேண்டும் எண்டு நினைச்சன். இந்த வருசமும் அந்த மாமரம் நல்லாய் சிலுத்து காச்சிருக்கு ஆனால் சாப்பிடத்தான் நீங்கள் இலலையெண்டு அம்மா சொன்னா .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக நல்ல பதிவு சாத்திரி. நீங்கள் நகைச் சுவையாக எழுதினாலும் இறுதியில் மனம் கனக்கின்றது. தொடர்ந்து இது போன்ற நிகழ்வுகளை எங்களுக்குத் தாருங்கள்.

Link to comment
Share on other sites

அச்சச்சோ தலைப்பை பார்த்துவிட்டு நம்ம கறுப்பி அக்காவோ என நினைச்சு ஓடி வந்தால்............அட நாய்க்கதை.

நல்லாக எழுதி இருக்கிறியள். நரையனும் கறுப்பியும் பாவம். நகைச்சுவையாக எழுதிவிட்டு இறுதியில் நரையனுக்கும் கறுப்பியுக்கும் இப்படி ஒரு நிலைமை ஆகிவிட்டதுவே.....

Link to comment
Share on other sites

நல்ல கதை சாத்திரி. இந்தியன் ஆமி வருகிறான் என்றால் கறுப்பி, நரையன் போன்றவர்களின் குரலே மாறிவிடும்.அதன் மூலம் ஆமி எங்கோ வருகிறான் என்று கண்டுபிடித்து விடலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியன் ஆமிக்கு ஈழத்தில் முதலெதிரி.. ஈழத்து நாய்கள் தான்.

அதுகள் இந்தியன் ஆமிக்கு மட்டும் தான் குலைக்குங்கள். பொடியங்கள் போனா பேசாம படுத்திருக்குங்கள். அதற்கு இருக்கிற அறிவு கூட சில மனிசரட்டக் கிடையாது. அதுகள் பொடியளைப் பற்றி ஆமிக்குப் போட்டுக் கொடுக்குங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலேயே நாய்களுடன் நட்பு வைத்திருப்பென்பது அலாதியான ஒரு அனுபவம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தநேரம் நரையனை அமெரிக்காவுக்கு கொண்டுபோய் வைத்தியம் பாக்கிற அளவுக்கு என்னட்டை வசதி இல்லாததாலை பக்கத்திலை சண்டிலிப்பாயிலை இருந்த அரசாங்க மிருக வைத்திரிட்டை கொண்டு போய் காட்டினன்.

உங்களுடைய மிருகநேயம் பாரட்டுக்குரியது சாத்திரியார்.

Link to comment
Share on other sites

ஈழத்து வாழ்க்கை அனுபவங்களை சுவையாகவும் நகைச்சுவையாகவும் எழுதியுள்ளீர்கள். கடந்தகால நிகழ்வுகளை நினைவூட்டுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் சாப்பிட்டிட்டு முத்தத்திலை இருக்கிற வேப்பமரத்துக்குக் கீழை உள்ள வாங்கிலை கொஞ்சநேரம் ஒரு குட்டி நித்திரை போடுவன் கறுப்பியும் வந்து வாங்குக்கு கீழை படுத்திடும் நான் நித்திரையான நேரம் வீட்டுக்காரரைத் தவிர வேறை ஒருத்தரும் எனக்குக் கிட்ட வரமுடியாது.அப்பிடி யாரும் வந்தால் பல்லைக் காட்டி உறுமி ஒரு எச்சரிக்கை விடும் அதுக்கு மேலையும் கிட்ட வந்தால் அவ்வளவுதான் அது எங்கை பாஞ்சு எதைக்கவ்வும் எண்டு தெரியாது.நான் வீட்டை விட்டு வெளியேறி இருந்த காலங்களிலை வீட்டுக்கு கடிதம் எழுதேக்குள்ளை கறுப்பியை வடிவாய் கவனியுங்கோ எண்டு ஒரு வசனம் எழுதத் தவறுறேல்லை. அதே மாதிரி நான் வீட்டை போற நாட்களிலை என்னைக் கண்டதும் கறுப்பி எனக்கு மேலை பாய்ஞ்சு எனக்கு நோகாமல் செல்லமாய் உடம்பெல்லாம் கடிச்சு விழையாடும்.

எங்கடை சாத்திரிக்கு இந்த வாழ்க்கை எப்ப திரும்பி வரும்? :D நல்ல கதை சாத்திரியார் :blink:

Link to comment
Share on other sites

கதைக்கு கருத்து சொன்ன இளங்கோ லெண்ணிலா நுணாவிலானிற்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

இந்தியன் ஆமிக்கு ஈழத்தில் முதலெதிரி.. ஈழத்து நாய்கள் தான்.

அதுகள் இந்தியன் ஆமிக்கு மட்டும் தான் குலைக்குங்கள். பொடியங்கள் போனா பேசாம படுத்திருக்குங்கள். அதற்கு இருக்கிற அறிவு கூட சில மனிசரட்டக் கிடையாது. அதுகள் பொடியளைப் பற்றி ஆமிக்குப் போட்டுக் கொடுக்குங்கள்..!

உண்மைதான் நெடுக்கு இந்தியனாமிக்கு முதல் எதிரிகள் எங்கள் ஈழத்து நாய்கள்தான் அதுக்காகவே பல நாய்கள் சுட்டுகொல்லப்பட்டது. இந்தியனாமி சில மீற்றறர் தூரத்திலை வரேக்குள்ளையே நாய்கள் ஆவேசத்தோடை குலைக்கத் தொடங்கிடும் . அப்பவே பதுங்கியிருக்கிற போராளிகள் ஊசாராயிடுவினம். அது மட்டுமில்லை நுளம்புகடியிலை இருந்து தங்களை பாதுகாக்க இந்தியனாமி ஒரு வித எண்ணெயை உடம்பிலை தடவுறவை அந்த நாத்தமே இந்தியனாமி வருகினம் எண்டு காட்டிக்குடுத்திடும் :huh:

Link to comment
Share on other sites

நன்றிகள்சயீவன் மற்றும் இணையவன் இந்த இந்தியனாமி காலத்தைப்பற்றி நிறையவே எழுதலாம் அதற்கான காலங்கள் வரட்டும் பாப்பம் :huh:

அந்தநேரம் நரையனை அமெரிக்காவுக்கு கொண்டுபோய் வைத்தியம் பாக்கிற அளவுக்கு என்னட்டை வசதி இல்லாததாலை பக்கத்திலை சண்டிலிப்பாயிலை இருந்த அரசாங்க மிருக வைத்திரிட்டை கொண்டு போய் காட்டினன்.

உங்களுடைய மிருகநேயம் பாரட்டுக்குரியது சாத்திரியார்.

நன்றி தமிழ் சிரி :(

Link to comment
Share on other sites

எங்கடை சாத்திரிக்கு இந்த வாழ்க்கை எப்ப திரும்பி வரும்? :D நல்ல கதை சாத்திரியார் :(

கு.சா இப்ப இஞ்சை எங்கை வேப்பமரம் நிக்கிது அதாலை நான் வேப்பமரம் எண்டு ஒரு கடுதாசியிலை எழுதி முகட்டிலை கட்டித்தூக்கிப்போட்டு 'fan) மின்விசிறியை போட்டிட்டு அதுக்கு கீழைபடுக்கிறனான். :huh:

Link to comment
Share on other sites

அந்தநேரம் நரையனை அமெரிக்காவுக்கு கொண்டுபோய் வைத்தியம் பாக்கிற அளவுக்கு என்னட்டை வசதி இல்லாததாலை பக்கத்திலை சண்டிலிப்பாயிலை இருந்த அரசாங்க மிருக வைத்திரிட்டை கொண்டு போய் காட்டினன்.அங்கை சுமணா எண்டு எனக்கு தெரிஞ்ச அக்கா ஒராள்தான் வைத்தியராய் இருந்தவா.

உண்மையை சொல்லுங்கோ சாத்து. நீங்கள் நரையனை காட்டத்தான் சண்டிலிப்பாய் மிருக வைத்திய சாலைக்கு போனனீங்களோ இல்லை சுமணா அக்காவை பாக்க போனனீங்களோ...??

Link to comment
Share on other sites

உண்மையை சொல்லுங்கோ சாத்து. நீங்கள் நரையனை காட்டத்தான் சண்டிலிப்பாய் மிருக வைத்திய சாலைக்கு போனனீங்களோ இல்லை சுமணா அக்காவை பாக்க போனனீங்களோ...??

:huh::(தயா உண்மையை சொன்னால் சுமணாக்கா நல்லதொரு மாட்டு வைத்தியர். அந்த மிருக வைத்திய சாலையிலை இங்கு மாடுகள் சினைப்படுத்தப்படும் எண்டு ஒரு விளம்பரம் இருந்தது அதாலை பெரிய பிரச்சனையெல்லாம் வந்தது அதையெல்லாம் இங்கை எழுதினால் வெட்டுத்தான் :D

Link to comment
Share on other sites

:huh::(தயா உண்மையை சொன்னால் சுமணாக்கா நல்லதொரு மாட்டு வைத்தியர். அந்த மிருக வைத்திய சாலையிலை இங்கு மாடுகள் சினைப்படுத்தப்படும் எண்டு ஒரு விளம்பரம் இருந்தது அதாலை பெரிய பிரச்சனையெல்லாம் வந்தது அதையெல்லாம் இங்கை எழுதினால் வெட்டுத்தான் :D

கதை அருமை சாத்து...! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய ஆமி எங்களுக்கு செய்த கொடுமையும் அதற்கு நாங்கள் கொடுத்த விலையும் கொஞ்ச நஞ்சமல்ல.

நினைத்தாலே நெஞ்சு கனக்கிறது

இப்பவும் பிரிவினைக்கும் இவர்கள் தான் பின்புலம் என்பது எனது கருத்து

Link to comment
Share on other sites

ஊரிலை மிஞ்சிற சோத்தைத் திண்டிட்டு வாலாட்டிக் கொண்டும் காவல் தொழில் செய்து கொண்டும் திரியுங்கள். இங்கை நாய்க்குச் சாப்பாடு வாங்கிறதெண்டால் இன்னொரு வேலைக்குப் போக வேணும். :D

Link to comment
Share on other sites

தொடர்ந்தும் உங்கன்ட கதையை எழுதி வாரேன் என்டு போட்டு :D ...திருப்பியும் உங்க கதையை தானே எழுதி இருக்கிறியள் சாத்திரி அங்கிள்.. :lol: (நான் சும்மா பகிடிக்கு கோவித்து போடாதையுங்கோ :) )....அட...அட உங்க வீட்டு நாய் கூட தமிழ் நாயா அது சரி..(இப்படி எத்தனை பேர் கிளம்பிட்டியள்??).. :D

அட கடசியா அழ வைத்திட்டியள் போங்கோ..நரையனிற்காக அழுறதா கறுப்பிக்காக அழுறதா இல்ல கதையை எழுதின சாத்திரி அங்கிளிற்காக அழுறதா நேக்கு தெரியலையே ^_^ ..ம்ம் ஈழத்தில உள்ள ஒவ்வொரு நாய்களுக்கும் பின்னாலையும் இப்படி ஒரு "பிளாஸ்பக்" இருக்கு என்டு நீங்க சொல்லி தான் தெரியுது தொடர்ந்து இப்படியா நாய் கதைகளை நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்... :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

மணிவாசகன் நன்றிகள் ஜம்மு அதுதான் கதை தொடக்கத்திலேயே சொல்லிப்போட்டனே நாய்க்கதை என்ரை கதை இரண்டும் ஒண்டுதானெண்டு :icon_mrgreen::wub:

Link to comment
Share on other sites

மணிவாசகன் நன்றிகள் ஜம்மு அதுதான் கதை தொடக்கத்திலேயே சொல்லிப்போட்டனே நாய்க்கதை என்ரை கதை இரண்டும் ஒண்டுதானெண்டு :):D

இந்த கதையிலை இருள் அழகன் இல்லாதது ஒரு பெரிய குறைதான்...!

Link to comment
Share on other sites

யாழ் உறவுகளிற்கு வணக்கம் இந்தக் கதை உண்மையிலேயே நான் வளர்த்த கறுப்பி என்கிற நாயின் நினைவுகளைத்தான் பதிவாக்கினேன். யாழில் இந்தக் கதையை இணைத்தபின்னர் கறுப்பி நாயே என்கிற தலைப்பு சிலர் மனதைப் புண்படுத்தலாம் எனவே தலைப்பினை மாற்றி விடும்படி தனி மடலில் கேட்டிருந்தனர். இந்தக் கதை ஒரு பேப்பரிற்காக எழுதியபடியால் பேப்பரிலும் இதே தலைப்பில்தான் கதை வெளியாகியிருந்தது. அஙகையும் ஏதோ பிரச்சனையாம். எனவே யாழ் உறவுகள் வெறும் தலைப்பை மட்டும் பார்த்து விட்டு விபரம் புரியாமல் மனதை போட்டுக் குளப்பிக் கொள்கிறவர்கள் அல்ல என நினைக்கிறேன். அப்படி யார் மனதையாவது இந்தக் கதை நோகடித்திருப்பின் அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் நன்றி.

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் கறுப்பி நாயின் கதையினை வாசித்தேன். நரையன் இறந்ததை வாசிக்கும் போது சாதாரண சம்பவம் போல இருந்தது. ஆனால் இந்திய அமைதிப்படையினால் சுட்டுக் கொல்லப்பட்ட கறுப்பி நாயின் முடிவினை வாசிக்கும் போது உண்மையில் எனக்கு கவலை ஏற்பட்டது. நன்றியுள்ள பிராணி என்பதை பல இடங்களில் கறுப்பி போன்ற நாய்கள் எமது மண்ணிலே நிறுபித்து இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துன்பியல் நிகழ்வுதான்! அதனால் கதை நன்றாயுள்ளது எனசொல்லவே மனம் வரவில்லை.

தொடருங்கள், நன்றி சாத்திரி!!!

Link to comment
Share on other sites

எங்கள் வீட்டிலும் செல்லப்பிராணியாக நாய் ஒன்றை வளர்த்தோம். பலாலிக்கு அருகில் எனது ஊர் இருப்பதினால் , அவசர அவசரமாக இடம்பெயர்ந்தோம். இடம் பெயரும் போது நாயைக் கூட்டிக் கொண்டு செல்ல முடியவில்லை. ஒன்றை வருடங்களுக்கு பிறகு, இந்திய அமைதிப்படை வந்தபின்பு ஏற்பட்ட தற்கால அமைதியின் போது மறுபடியும் எங்களது வீட்டுக்கு வந்தோம். எங்களுடன் வந்த ஊந்துருளியின் சத்தத்தைக் கேட்டு வாலை ஆட்டிக் கொண்டு எங்களை நோக்கி ஒடி வந்தது. மீண்டும் எங்களைச் சந்தித்ததில் அதற்கு மகிழ்ச்சி. அக்கம் பக்கத்தில் வெடிக்கும் பொங்கல், தீவாளி வெடிகளுக்கு பயத்தில் ஒடி ஒளியும் எங்களது நாய், தூரத்தில் இந்திய இராணுவம் சுட்ட சூட்டுச் சத்தத்துக்கு பயந்து ஒடி அதிர்ச்சியில் உயிரை விட்டது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.