Jump to content

அகன்றது முடியரசு-குடியரசானது நேபாளம்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

காத்மாண்டு: கடந்த 239 ஆண்டுகளாக நிலவி வந்த மன்னராட்சி நேபாளத்தில் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. நேற்று முதல் நேபாளம் குடியரசு நாடாக பிரகடனப்படுத்தப்பட்டது.

இமயமலைத் தொடரில் அமைந்துள்ள குட்டி நாடான நேபாளம், உலகின் ஒரே இந்து நாடாக அறியப்பட்டது. மன்னராட்சி நடந்து வந்த நேபாளத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெரும் போராட்டம் வெடித்தது. மாவோயிஸ்ட்டுகள் தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தின் விளைவாக அங்கு ஜனநாயகம் மலர்ந்தது.

ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்ட மாவோயிஸ்ட்டுகள் தேர்தலில் பங்கேற்றனர். ஆட்சியையும் பிடித்துள்ளனர்.

நேற்று நேபாள நாடாளுமன்றத்தின் (தேசிய அரசியல் நிர்ணய சபை) முதல் கூட்டம் நடந்தது. எம்.பிக்கள் பதவியேற்றுக் கொண்டனர். இக்கூட்டத்தில் மன்னராட்சியை முடிவுக்கு கொண்டு வருவதாக பிரகடனம் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து மன்னர் ஞானேந்திரா, அரண்மனையை விட்டு குடும்பத்துடன் வெளியேற 15 நாள் அவகாசம் கொடுத்து தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

மன்னராட்சியை முடிவுக்கு கொண்டு வரும் தீர்மானத்திற்கு ஆதரவாக 560 பேரும், எதிராக 4 பேரும் வாக்களித்தனர். நேற்றைய கூட்டத்தில் மொத்தம் உள்ள 601 உறுப்பினர்களில் 565 பேர் கலந்து கொண்டனர். இன்னும் 26 நியமன உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

மன்னராட்சியை முடிவுக்கு கொண்டு வந்து, குடியரசாக நேபாளம் பிரகடனம் செய்யப்பட்டதை தலைநகர் காத்மாண்டுவில் பொதுமக்கள் நடனமாடியும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். தலைநகர் மட்டுமல்லாது நாட்டின் இதர பகுதிகளிலும் மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

தீர்மானத்தை பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலா சார்பில் உள்துறை அமைச்சர் கிருஷ்ண பிரசாத் சிதாவுலா கொண்டு வந்தார்.

இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்மானம் மூலம் நேபாளத்தில் மன்னராட்சி முடிவுக்கு வந்துள்ளது. நேபாளத்தின் கடைசி மன்னர் பெயர் ஞானேந்திராவுக்குக் கிடைத்துள்ளது.

நன்றி தற்ஸ் தமிழ்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • *அஜினோமோட்டோ எப்படி ஒரு உணவின் சுவையை கூட்டுகிறது?* *அது உடலுக்கு தீங்கு விளைவிப்பதாக ஏன் கூறப்படுகிறது?* அஜினோமோட்டோ என்னும் ஒரு சுவை கூட்டும் உப்பு... அதை சர்க்கரை என்றும் சொல்லலாம்...! பொதுவாக எல்லா சீன வகை உணவுகளில், சுவை கூட்ட சேர்க்கப்படும் இந்த அஜினோமோட்டோ பற்றி, நாம் என்ன அறிந்து வைத்திருக்கிறோம் என்றால்...   அது லைட்டா தூவி விட்டால், டேஸ்ட் இல்லாத உணவு கூட ருசிக்கும். ஆனால் அதிகமாக யூஸ் பண்ணினால் முடி கொட்டும் அவ்வளவு தான் என்று... ஆனால் உண்மையில் இதன் வரலாற்றை அறிந்தால்?   அஜினமோட்டோ என்பது நாம் நினைப்பது போல, அது ஒரு கடல் உப்பின் பெயரல்ல... அது ஒரு கம்பெனியின் பெயர் , ஜப்பானில் 1917 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் பெயரே அதன் பொருளுக்கும் ஒட்டிக்கொண்டது..   உண்மையில் இந்த உப்பின் பெயர் Monosodium glutamate ( MSG ) என்பதாகும், இதனை மருத்துவ உலகில் slow killer என்கிறார்கள்.. ஜப்பான் தலைநகர் டோக்கியோ, சிவோவை தலைமையிடமாக கொண்டு, கிகுனே இகெடா என்பவரால், 1917ல் இந்த அஜினோமோட்டோ தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டது,   அப்போது கடல் படுகைகளில் வளரும் ஒரு பூஞ்சை மற்றும் பாசி செடி ( Seaweed ) வகைகளில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வகை உப்பு தான் monosodium ஆகும். முதலில் அது தயாரிக்கப்பட்ட விதம் என்னவோ உயர் தரமானதாக இருந்தது.   ஆனால் 1917இல் அமெரிக்க நிறுவனத்துடன் கைகோர்த்து, வியாபார நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தொழில்சாலையில் , Glutamate என்னும் செயற்கை அமிலத்தையும், அந்த monosodium உப்போடு கலந்துவிட்டு வியாபாரத்தை அதிகப்படுத்தினர்..   Glutamate என்பது ஒரு அடிமைப்படுத்தும் காரியமாகும்.. ஒரு முறை உண்டால், மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும் போதை பொருள் போன்றதொரு சுவையூக்கி ஆகும்.. முதலில் இந்த glutamate ஐ உபயோகித்து, Artificial Sweetener என்னும் Aspartame ஐ தயாரித்து வந்தனர்.   பிறகு இதன் அபாயமறிந்து, அமெரிக்காவில் தடை செய்துவிட்டனர். ஆனால் அதன் மறுரூபமே இந்த அஜினோமோட்டோ உப்பாகும். இன்றைய அவசர உலக சமையல் குறிப்புகளில், தவறாமல் இடம்பெறும் இந்த அஜினோமோட்டோ உப்பை, பயன்படுத்தாத நாடுகளே இல்லை எனலாம்.. சாலையோர கடைகள் தொடங்கி, மல்டி குஷன் ரெஸ்டாரண்ட் வரை.. சென்னை முதல் நியூயார்க் வரை என எல்லா உணவகங்களிலும், இதனை ருசிகூட்ட பயன்படுத்தாதவர்கள் இல்லை..   முன்பெல்லாம் சைனீஸ் வகை உணவுகளில் தான், அஜினோமோட்டோ தூவப்படும் என்ற மாயை போய், தமிழகத்து ரசம் வரை இதை தூவ ஆரம்பித்துவிட்டார்கள்...   அது நாம் விரும்பியும், விரும்பாமலும் நம் நாவை அந்த சுவைக்கு அடிமைப்படுத்துகிறது, குறிப்பாக குழந்தைகள்... அவர்கள் உண்ணும் பாக்கெட் சிப்ஸ், கிரீம் பிஸ்கட், சாதாரண பிஸ்கட், நூடுல்ஸ், இன்ஸ்டன்ட் சூப், மசாலா ஐட்டங்கள், டின்னில் வரும் மீன், சிக்கன்,ரெடிமேட் சப்பாத்தி, பரோட்டா, சமோசா,பப்ஸ், சாஸ் வகைகள், சோயா பொருட்கள், சாக்லேட்கள், KFC, Pizza , Maggi மற்றும் சில குளிர்பானங்கள் என எல்லாத்திலும் அஜினோமோட்டோ என்னும் MSG slow killer உண்டு,   *உண்பதால் வரும் பக்க விளைவுகள்:-* 1. ஆணோ பெண்ணோ இருபாலருக்கும் முடி கொட்டுவது உறுதி   2. Glutamate இரத்தத்தில் இன்சுலின் அளவை அதிகப்படுத்துவதால், அதிகமான பசி எடுக்கிறது. நாம் உணவை அடிக்கடி உண்ண உண்ண ஊளைச்சதை போடுகிறது, பிறகு அதை குறைப்பது மிக கடினம்.. உடல் எடை கூடினால், தானாக சுகரும் இதய நோயும் இலவசமாக வரும்.   3. குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு, இந்த அஜினோமோட்டோ கொடிய விஷமாகும்.. ஐந்து வயது குழந்தைக்கும் தீராத தலைவலியை உருவாக்கும் தன்மை கொண்டது.   4. நரம்பு மண்டலத்தில் அதீத உற்சாகத்தை உருவாக்கி, பிறகு பயங்கரமான பலஹீனத்தை உண்டாக்கி விடும்.   5. இருதய நோய்களாக அதிபயங்கர துடிப்பும் சில நேரம் வலியும் உருவாக்கும்.   6. முகத்தில் எந்நேரமும் ஒரு எரிச்சல் இருப்பது போலவே சிலர் உணருவார்கள், அரிப்பும் தோன்றும், சிலரது முகம் கருத்திருக்கும்.   7. வழக்கமாக இரத்த கொதிப்பு, தைராய்டு, நீரிழிவு, ஆஸ்துமா, உணவு ஒவ்வாமை , அதீத வியர்வை சுரப்பியால் உண்டாகும் Dehydration என்னும் நீர்ச்சத்து குறைதல், கண்களில் ரெட்டினா குறைபாடு எல்லாம் உருவாக அஜினோமோட்டோ காரணியாகிறது.   8. இவை எல்லாம் ஒரு நாள், நம்மை புற்றுநோயிடம் இழுத்துச்செல்லும்..   அஜினோமோட்டோவை தவிர்ப்போம். Joseph Anthony Raj
  • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  • 7 விக்கெட் இழப்புக்கு 511 ஓட்டங்களுடன் துடுப்பாட்டத்தை நிறுத்தியது அவுஸ்திரேலியா By SETHU 09 DEC, 2022 | 05:29 PM மேற்கிந்தியத் தீவுகளுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின்  ஆவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 511 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் துடுப்பாட்டத்தை நிறுத்திக் கொண்டது. அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் நேற்று ஆரம்பமான இப்போட்டியில் ட்ரேவிஸ் ஹெட் 175 ஓட்டங்களைக் குவித்தார். டெஸ்ட் போட்டியொன்றில் அவர் பெற்ற 5 ஆவது சதம் இது என்பதுடன், ஓர் இன்னிங்ஸில் அவர் பெற்ற ஆகக்கூடுதலான ஓட்ட எண்ணிக்கையும் இதுவாகும்.  மார்னஸ் லபுஸ்சேன் 163 ஓட்டங்களைக் குவித்தார்.  உஸ்மான் கவாஜா 62 ஓட்டங்களையும் அலெக்ஸ் கெறி ஆட்டமிழக்காமல் 41 ஓட்டங்களையும் பெற்றனர். மேற்கிந்திய பந்துவீச்சாளர்களில் டெவோன் தோமஸ் 53 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அல்ஸாரி ஜோசப் 107 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். போட்டியின் 2 ஆவது நாளான இன்று தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த மேற்கிந்திய அணி இன்றைய ஆட்டமுடிவின்போது 4 விக்கெட் இழப்புக்கு 102 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.  https://www.virakesari.lk/article/142681
  • அறிமுகப்போட்டியில் ஏழு விக்கெட்களை வீழ்த்தி பாக்கிஸ்தானின் இளம் சுழல்பந்து வீச்சாளர் சாதனை By RAJEEBAN 09 DEC, 2022 | 04:39 PM   பாக்கிஸ்தானின் இளம் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அஹமட்  தனது முதலாவது டெஸ்ட் போட்டியில் ஏழு விக்கெட்களை வீழ்த்தி கிரிக்கெட் உலகின் கவனத்தை தனது பக்கம் ஈர்த்துள்ளார். முல்தானில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில்  அப்ரார் அஹமட் 114 ஓட்டங்களை கொடுத்து ஏழு விக்கெட்களை வீழ்த்தினார். நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 281 ஓட்டங்களிற்கு தனது அனைத்து விக்கெட்களையும் இழந்தது. தனது முதலாவது ஓவரின் ஐந்தாவது பந்தில் தனது முதல் டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்திய பாக்கிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளர் ஒரு சந்தர்ப்பத்தில் வீழ்ந்த அனைத்து விக்கெட்களையும்( ஏழு) கைப்பற்றியிருந்தார். https://www.virakesari.lk/article/142668
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.