Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

அஜீவன் உடனான தீபம் தொலைக்காட்சியின் நேர்காணல்

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

திரு நெடுக்காலபோவான்,

உங்கள் வினாக்களுக்குப் பதில்கள் கிடைத்துள்ளனவா?

Link to post
Share on other sites
 • Replies 181
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறவுகள்

"தேச துரோகச் சஞ்சிகை" தேசத்துடன் பணி செய்யலாம்... தமிழ் மக்களை தமிழ் மக்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திற சிங்கள திரைத்துறை பற்றி பேசலாம்.. ஆனால் தங்களை வாழ வைக்கும்... தமிழன் என்ற அடையாளப்படுத்தலுக்கான தமிழர் தாயகம் பற்றி ஒரு வரி பேச முடியாது...???!

அஜீவன் படைப்புக்களை செய்து.. தேசத்துக்கும் சிங்கள மக்களுக்கும் வழங்கிக் கொண்டு அங்கு சம்பளம் பெற்றுக் கொண்டா இருக்கிறார்..??!

மக்களை நோக்கி படைப்புக்களை தரும் போது.. மக்களை நோக்கி விமர்சனங்களை எழுப்பும் போது மக்களும் பதில் கேள்வி கேட்கவே செய்வர்..??! தாயகக் கலைஞர்கள் திறமையற்றவர்கள்.. சும்மா வீடியோக் கடைக்காரர்கள்.. சாமத்தியவீடும்.. கலியாண வீடும் தான் கவர் பண்ணத் தெரியும்.. இப்படியான தாயகம் நோக்கிய.. பார்வைகள்.. அல்லது தன்னைத் தவிர வேறு எவனுக்கும் திறமை இல்லை என்ற பார்வை.. முன் வைக்கப்படுகின்ற போது... திறமையான படைப்புக்களைக் கண்ட மக்களிடமிருந்தும் கேள்விகள் எழவே செய்யும்..!

தமிழர் தாயகம் மக்கள் பற்றி தாயகப் படைப்புக்களைப் பற்றிப் பேசுவது.. சிறீலங்காவூடு சிங்களவர்களோட உறவாட தடையாகும் என்றால்.. சிங்கள மக்கள் பற்றிப் பேசுவது.. சிங்களப் படைப்புக்கள் பற்றிப் பேசுவது.. ஏன் தமிழர்களால் துரோகம் என்று நோக்க முடியாது..????! சிறீலங்காவுக்கு பயம். தமிழர்களுக்கு பயமில்லை அப்படியா..???!

கலைஞன் என்பவனுக்கு அர்சுணனுக்கு கிளி போல.. மக்களின் மனிதாபிமானம் தான் முன் நிற்க வேண்டும். பக்கம்சார்ந்து செயற்படுபவர்கள் உண்மைக் கலைஞர்களாக இனங்காணத் தகுதியற்றவர்கள். மக்களின் மனிதாபிமானத் தேவைகளை.. அவர்களின் அபிலாசைகளைப் பேச சம்பளம் எதிர்பார்ப்பவர்கள்.. கலைஞர்களா.. அதுவும் சமூக அக்கறையுள்ள கலைஞர்களா..???!

முன்னரெல்லாம் தமிழ் மக்களின் பிரச்சனைகளை மேடையில் பாடமறுத்த கொழும்பு தமிழ் இசைக்கலைஞர்கள்.. ரகுநாதன்.. பிச்சையப்பா.. போன்றவர்கள் இன்று தமிழ் மக்களின் பிரச்சனைகளை புகலிடத்தில் பாடல்களாகப் பாடியுள்ளனர். அவர்கள் கொழும்பில் வாழவில்லையா..???!

சிங்களச் சிறைகளில் வாடும் எம் இளையவர்களுக்காக. சிங்கள் தேசத்தில் கடத்தப்படும் எம்மக்களுக்காக.. எத்தனையோ குரல்கள் ஈழத்தில் இருந்து எழுகின்றன.. அவர்கள் சிறீலங்கா அரசின் மத்தியில் வாழவில்லையா..??!

தாயக தமிழ் மக்கள் பற்றி படைப்புக்களைப் படைத்தால் பிரச்சனை.. பேசினால் பிரச்சனை என்றால்.. அதையே சொல்லலாமே ஒரு படைப்பில். சிங்கள அரசின் ஊடக சுதந்திரத்தைப் பற்றி சொல்லலாமே உலகுக்கு...???! ஏன் சொல்கிறார்கள் இல்லை..???! ஆனால் சிங்கள திரைப்பட வரலாற்றை தமிழ்கள் மத்தியில் பேச முடிகிறது..???! தமிழ் மக்கள் கூடிய சுதந்திரத்தை அளிக்கிறார்கள் சிங்களவர்களை விட என்பதாகத்தாகதானே இது பார்க்கப்பட வேண்டும். :D:rolleyes:

போராளிகளைப் பற்றிப் பேசச் சொல்லவில்லை. தமிழ் மக்களைப் பற்றிப் பேசுங்கள். மக்களின் உணர்வுகளைப் பற்றிப் பேசுங்கள்.. அவர்களின் அபிலாசைகளைப் பற்றிப் பேசுங்கள் சுமைகளைப் பற்றிப் பேசுங்கள். சிங்கள மக்கள் சுனாமியால் பாதிக்கப்பட்ட போது விரிந்த கமராக்கள்.. தாயகத் தமிழ் மக்களுக்காக விரிவதில்லை.. காணாமல் போகும் உறவுகளுக்காக விரிவதில்லை.. தொண்டர் அமைப்புக்களில் இருந்து கொல்லப்பட்ட அப்பாவிகளுக்காக விரிவதில்லை.. சிறைகளில் மடியும் இளம் குருத்துகளுக்காக விரிவதில்லை... பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி வாழ்வைத் தொலைத்து நிற்கும் சகோதரிகளுக்காக விரிவதில்லை.. ஆனால் புகலிடத்தில் உள்ள இளைஞர்களை மட்டும் மையப்படுத்திக் கொள்கிறது.. அதைத் தவிர..???! :o

முரளி நீங்கள் ஏதோ தேவைகளுக்காக.. இப்போ நியாயத்தின் எல்லையைக் கடந்து.. தேவையற்ற கருத்துக்களை முன் வைக்கிறீர்கள் என்பது மட்டும் புலப்படுகிறது. :icon_idea:

இங்கே புலத்தில் திரைப்படம் எடுப்பது குறித்து பேசுவோர்

எல்லோரும் இணையுங்கள்

நான் என்ன செய்ய வேண்டும் என்று

சொல்லுங்கள்

அதை நிச்சயம் செய்ய நான் தயார்!

அதை முதலில் செய்து விட்டு அடுத்ததை பேசுவோம்.

இதோ என் பயணங்கள் சில மட்டும்:

http://www.yarl.com/forum3/index.php?showt...40&start=40

http://thesamnet.co.uk/?p=1162

http://yemkaykumar.blogspot.com/2005/05/blog-post.html

http://pksivakumar.blogspot.com/2006/05/blog-post_30.html

http://www.thamilworld.com/forum/index.php...f=18&t=4456

எனது சுவிஸ் திரைத் துறையின் முதல் பதிவு ஜெர்மன் குறும்படம்:

http://www.youtube.com/watch?v=4jYfbfQ4R-o

முதல் ஜெர்மன் முழு நீளப்படத்தின் இறுதிப் பகுதி மட்டும்:

http://www.youtube.com/watch?v=gRLx9u9TAFQ

(இதன் அனைத்து பகுதியும் அதே கவிபில்ம்ஸ் யூடியூப்பில் உண்டு)

மியுஸிக் கிளிப்ஸ்:

சுவிஸ் உதைபந்தாட்ட குழுவுக்காக:

நடிகனாக:

சில வருடங்களுக்கு முன் என் வீடும் கலையகமும் முற்றாக தீக்கியைாக்கப்பட்ட போது

சுவிஸ் மக்களே எனக்கு உதவினார்கள். இதோ தொலைக்காட்சி செய்தியில்:

ஏதாவது தமிழ் ஊடகம் செய்ததா? இல்லையே?

இவை யதார்த்தம்................

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அஜீவன் நீங்கள் ஒரு ஊகத்தின் அடிப்படையில் மேற்குறிப்பிட்ட கருத்தில் பலவற்றை எழுதி இருக்கிறீர்கள். அதற்கு நான் பதிலளிக்க வேண்டியவன் அல்ல.

***

அதைவிடுத்து தலைப்புக்கு சம்பந்தப்பட்ட விடயத்துக்கு வருகிறேன்..

தாயக் கலைஞர்களைப் பற்றி நீங்கள் உங்கள் பேட்டியில் குறிப்பிட்டதற்கு அமைவாகவே தாயக் கலைஞர்களின் படைப்புக்கள் பற்றி சரிவர அறியமுடியவில்லை என்றால் அவர்களைப் பற்றிக் கதைப்பதை விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும் அல்லது அவர்களுக்கு முன்மாதிரியா இருந்து தாயகம் பற்றிய படைப்புக்களை செய்து தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளேன். அதில் எந்த சுயமுரண்பாடுகளும் இல்லை. நீங்கள் அதை தெளிவுற உள்வாங்கவில்லை என்பதைத் தவிர அங்கு இரட்டை முகமுள்ளதாக காட்ட முனைவது தவறு.

நீங்கள்.. தாயத்தில் மக்கள் பற்றிப் பேசுவதே பயம் எங்கிறீர்கள்... பூசா.. வெலிக்கடை என்று மிரட்டுகிறீர்கள். ஆனா தாயகத்தில் இருந்து ஏன் தென்னிலங்கையில் இருந்து வெளிவரும் பத்திரிகைகளில் கூட தாயக மக்களின் அவலங்களைச் சொல்லும் விடயங்கள் வருகின்றன தான். சிறைகளில் வாடும் இளைஞர்களின் யுவதிகளின் விடயங்கள் வெளிவருகின்றன தான். அவை சிறீலங்காவின் ஊடக சுதந்திரத்தைச் சார்ந்து வரவில்லை.. அங்குள்ள துணிச்சல் மிக்க எழுத்தாளர்களால்.. மக்கள் நலனுக்காக உழைப்பவர்களால் அவை வெளிக்கொணரப்படுகின்றன.

தாயகம் பற்றித்தான் உங்களால் தாயகத்தில் இருந்தும் புகலிடத்தில் இருந்தும் செயற்பட முடியவில்லை. பயம் பீதி எங்கிறீர்கள். ஆனால் புகலிடத்தில் இருந்தும் தாயகத்தில் இருந்தும் செயற்படும் தாயகம் சார்ந்த மக்களின் உணர்வுகளை.. புலம்பெயர் மக்களிடம் தாயகம் பற்றிய அறிதலைச் செய்யும் கலைஞர்களையும் விமர்சிக்கிறீர்களே. அது எந்த வகையில் நியாயம். கலியாண வீட்டில கமரா பிடிக்கிறவனுக்கு என்ன தெரியும் எனும் நீங்கள்.. அவர்களுக்கு தாயகம் சார்ந்த படைப்புகளைச் செய்து காட்டி ஏன் முன்மாதிரியாக இருக்கக் கூடாது என்று தான் வினவுகின்றேன். அதற்கு பீதி பயம் என்று பதிலளிக்கிறீர்கள். பீதி பயமின்றிச் செய்பவனை தரமற்றவன் என்று விமர்சிக்கிறீர்கள்..??! :o:rolleyes:

தாயகம் பற்றி படைக்கத்தான் பயம் பீதி. ஆனால் சிங்கள படத்துறை பற்றி பேச பீதி.. இல்லையா.. அதற்காக ஏன் தமிழர்கள் உங்களை அடிப்பார்கள் என்று பீதி கொள்ளவில்லை..??! இதுதான் முரண்பாடாக இருக்கிறது அஜீவன் அவர்களே.

உங்களின் கருத்துப்படி.. நான் முன்னர் வினவிய கேள்விகளுக்குப் பதில்..

பயம் பீதி காரணமாக என்னால் தாயக மக்கள் பற்றிப் படைப்புக்கள் செய்ய முடியாது என்று சொல்கிறீர்கள். ஆனால் தமிழர்களுக்கு பயப்பிடாமல் சிங்களவர்கள் பற்றிய படைப்பைச் செய்யலாம் எங்கிறீர்கள்.

நான் கேட்டிருந்தேன்.. யாழ் கள கவிஞர்களைக் கொண்டு ஏன் புகலிடத்தில் இருந்து கொண்டு ஒரு மக்கள் எழுச்சிக்கான ஒளி ஒலிப் படைப்பை செய்யக் கூடாது என்று. அதற்கு நீங்கள் என்னை துணைக்கு அழைக்கிறீர்கள். இங்கு உணர்வு மிக்க கவிதைகளைப் படித்தவன் என்ற வகையில் அதைக் கேட்டேன். எனக்கு கமரா இயக்க வராது. இயக்க முடிந்தால் நான் ஏன் உங்கள் போன்றவர்களிடம் இதைச் செய் அதைச் செய்ய என்று சொல்லிக் கொண்டு நிற்கப் போகிறேன். நீங்கள் எனக்காகச் செய்ய வேண்டும் என்பதல்ல எதிர்பார்ப்பு. உங்களுக்குள் இன உணர்விருந்து அதன் பால் அது செய்யப்பட வேண்டும் என்பதுதான் எதிர்பார்ப்பு.

புகலிடத்தில் உள்ள தமிழர்களுக்காக படைப்புக்களைப் படைக்கும் தாங்கள்.. ஏன் அவர்களின் தாயக உணர்வுகளை மட்டும் புறக்கணிக்க வேண்டும் என்ற கேள்வியின் உந்துதலே அக்கோரிக்கையை விடுக்க வைத்தது..!

மற்றும்படி.. உங்களின் செவ்விக்கு வெளியில் நீங்கள் ஏலவே படைத்த படைப்புக்கள் பற்றிய விமர்சனங்களை நான் இங்கு செய்ய முயலவில்லை என்பதை குறித்துக் கொள்ளுங்கள். எனது கருத்துக்களில் இரட்டைத் தன்மையோ தனிநபர் தாக்குதலோ இருப்பதாக நான் கருதவில்லை. உங்களைப் போன்று இன்னொரு கலைஞர் இங்கு வந்து கருத்து எழுதுபவராக இருந்து இவ்வாறான ஒரு செவ்வியில் தாயக் கலைஞர்கள் மற்றும் தாயகப் படைப்புக்களை செய்பவர்கள் குறித்து மட்டம் தட்டிக் குறிப்பிடின்.. அவர்களிடமும் நான் இக்கேள்விகளைக் கேட்பேன்.

யாழ் களம் சார்ந்து நிகழ்ச்சித் திட்டங்களைச் செய்ய முன் வர வேண்டும் என்று கோருவது நீங்கள் இங்கு கள உறவாக உறவாடி வருவதால் தான். அதுமட்டுமன்றி நீங்கள் கலைத்துறை சார்ந்து இருப்பதால் தான். நாமும் கலைத்துறை சார்ந்து இருப்பின்.. உங்களோடு ஒத்துழைக்கக் கூடிய பொதுத்தன்மைகள் உங்களிடம் இருப்பது இனங்காணப்படின்.. உங்களோடு சேர்ந்து செயற்பட எத்தயக்கமும் இன்றி முன்வர முடிவு செய்வோம். ஆனால் நான் கலைத்துறை சார்ந்தவன் அல்ல..!

ஒரு ரசிகன் கலைத்துறையில் இருந்து கொண்டுதான் கலையை படைப்பை ரசிக்க வேண்டும் என்பதோ.. கலைஞனிடம் அவனின் விமர்சனங்கள் தொடர்பில் கேள்விகளை கேட்க வேண்டும் என்பதோ அவசியமில்லை என்று நினைக்கிறேன்.

***

மற்றும்படி.. படைப்போடு சார்ந்து படத்துறை சார்ந்து பேசுவோம். மக்களின் தேவைகளை உணர்ந்து செயற்படுவோம். தாயகம் சார்ந்து எந்த சிறிய முயற்சியைச் செய்யினும்.. எல்லோரின் முயற்சிகளையும் பாராட்டவும் ஊக்குவிக்கவும் வேண்டும். ஒரு போராளி கையில் கமராவோடு.. களத்தைப் படம் பிடிக்கிறான்.. அதை மக்கள் முன் கொண்டு வருகிறான் என்றால்.. அவன் முழு கமரா தொழில்நுட்பம் அறிஞ்சவனா.. டிப்பிளோமா பட்டம் பெற்றவனா இருக்க வேண்டும் அப்போதுதான் அவனின் திறமை பாராட்டப்பட முடியும் என்ற நிலை இருக்கக் கூடாது. அவனின் துணிச்சல் திறமை இனங்காணப்பட்டு வளர்க்கப்படுவது வேறு.. மட்டம் தட்டப்படுவது வேறு. இதை ஒரு சக கலைஞனாக எனி மேலும் செய்யாதீர்கள்.. என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன். :icon_idea:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அஜீவன் நீங்கள் ஒரு ஊகத்தின் அடிப்படையில் மேற்குறிப்பிட்ட கருத்தில் பலவற்றை எழுதி இருக்கிறீர்கள். அதற்கு நான் பதிலளிக்க வேண்டியவன் அல்ல.

நான் உங்கள் கருத்துக்களை மட்டுமல்ல.. எல்லோருடைய கருத்துக்களையும் வாசித்து வருபவன் என்ற ரீதியில் எனக்கு உங்களைப் பற்றி கருத்துக்கள உறவாகவே தெரியும். மற்றும்படி குருவி என்று நீங்கள் குறிப்பிடுபவருக்கும் உங்களுக்கிடையேயும் கருத்துக்களத்தில் நடந்த கருத்துப் பரிமாற்றங்கள் குறித்து நான் பேச வேண்டிய அவசியமில்லை. அது இத்தலைப்புக்குரிய விடயம் அல்ல.

அதுமட்டுமன்றி எனக்கும் குருவி என்று நீங்கள் குறிப்பிடுபவருக்கும் இடையில் எந்தத் தொடர்பும் இல்லை. அப்படி இருப்பதாக இருந்தால் நீங்கள் அதை ஆதாரம் சகிதம் இங்கு முன் வைத்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்ல முனைய வேண்டும். ஊகங்களின் அடிப்படையில் கருத்தெழுத கருத்துக்கள விதி அனுமதிக்காது. அப்படி ஊகிப்பதானால் நானும் உங்களைப் பற்றி எனது கற்பனைக்கு அமைய பலவற்றை ஊகித்து எழுத முடியும்.

அதைவிடுத்து தலைப்புக்கு சம்பந்தப்பட்ட விடயத்துக்கு வருகிறேன்..

தாயக் கலைஞர்களைப் பற்றி நீங்கள் உங்கள் பேட்டியில் குறிப்பிட்டதற்கு அமைவாகவே தாயக் கலைஞர்களின் படைப்புக்கள் பற்றி சரிவர அறியமுடியவில்லை என்றால் அவர்களைப் பற்றிக் கதைப்பதை விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும் அல்லது அவர்களுக்கு முன்மாதிரியா இருந்து தாயகம் பற்றிய படைப்புக்களை செய்து தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளேன். அதில் எந்த சுயமுரண்பாடுகளும் இல்லை. நீங்கள் அதை தெளிவுற உள்வாங்கவில்லை என்பதைத் தவிர அங்கு இரட்டை முகமுள்ளதாக காட்ட முனைவது தவறு.

நீங்கள்.. தாயத்தில் மக்கள் பற்றிப் பேசுவதே பயம் எங்கிறீர்கள்... பூசா.. வெலிக்கடை என்று மிரட்டுகிறீர்கள். ஆனா தாயகத்தில் இருந்து ஏன் தென்னிலங்கையில் இருந்து வெளிவரும் பத்திரிகைகளில் கூட தாயக மக்களின் அவலங்களைச் சொல்லும் விடயங்கள் வருகின்றன தான். சிறைகளில் வாடும் இளைஞர்களின் யுவதிகளின் விடயங்கள் வெளிவருகின்றன தான். அவை சிறீலங்காவின் ஊடக சுதந்திரத்தைச் சார்ந்து வரவில்லை.. அங்குள்ள துணிச்சல் மிக்க எழுத்தாளர்களால்.. மக்கள் நலனுக்காக உழைப்பவர்களால் அவை வெளிக்கொணரப்படுகின்றன.

தாயகம் பற்றித்தான் உங்களால் தாயகத்தில் இருந்தும் புகலிடத்தில் இருந்தும் செயற்பட முடியவில்லை. பயம் பீதி எங்கிறீர்கள். ஆனால் புகலிடத்தில் இருந்தும் தாயகமத்தில் இருந்தும் செயற்படும் தாயம் சார்ந்த மக்களின் உணர்வுகளை.. புலம்பெயர் மக்களிடம் தாயகம் பற்றிய அறிதலைச் செய்யும் கலைஞர்களையும் விமர்சிக்கிறீர்களே. அது எந்த வகையில் நியாயம். கலியாண வீட்டில கமரா பிடிக்கிறவனுக்கு என்ன தெரியும் எனும் நீங்கள்.. அவர்களுக்கு தாயகம் சார்ந்த படைப்புகளைச் செய்து காட்டி ஏன் முன்மாதிரியாக இருக்கக் கூடாது என்று தான் வினவுகின்றேன். அதற்கு பீதி பயம் எங்கிறீர்கள்.

தாயகம் பற்றி படைக்கத்தான் பயம் பீதி. ஆனால் சிங்கள படத்துறை பற்றி பேச பீதி.. இல்லையா.. அதற்காக ஏன் தமிழர்கள் உங்களை அடிப்பார்கள் என்று பீதி கொள்ளவில்லை..??! இதுதான் முரண்பாடாக இருக்கிறது அஜீவன் அவர்களே.

உங்களின் கருத்துப்படி.. நான் முன்னர் வினவிய கேள்விகளுக்குப் பதில்..

பயம் பீதி காரணமாக என்னால் தாயக மக்கள் பற்றிப் படைப்புக்கள் செய்ய முடியாது என்று சொல்கிறீர்கள். ஆனால் தமிழர்களுக்கு பயப்பிடாமல் சிங்களவர்கள் பற்றிய படைப்பைச் செய்யலாம் எங்கிறீர்கள்.

நான் கேட்டிருந்தேன்.. யாழ் கள கவிஞர்களைக் கொண்டு ஏன் புகலிடத்தில் இருந்து கொண்டு ஒரு மக்கள் எழுச்சிக்கான ஒளி ஒலிப் படைப்பை செய்யக் கூடாது என்று. அதற்கு நீங்கள் என்னை அழைக்கிறீர்கள். இங்கு உணர்வு மிக்க கவிதைகளைப் படித்தவன் என்ற வககயில் அதைக் கேட்டேன். எனக்கு கமரா இயக்க வராது. இயக்க முடிந்தால் நான் ஏன் உங்கள் போன்றவர்களிடம் இதைச் செய் அதைச் செய்ய என்று சொல்லிக் கொண்டு நிற்கப் போகிறேன். நீங்கள் எனக்காகச் செய்ய வேண்டும் என்பதல்ல எதிர்பார்ப்பு. உங்களுக்குள் இன உணர்விருந்து அதன் பால் அது செய்யப்பட வேண்டும் என்பதுதான் எதிர்பார்ப்பு.

புகலிடத்தில் உள்ள தமிழர்களுக்காக படைப்புக்களைப் படைக்கும் தாங்கள்.. ஏன் அவர்களின் தாயக உணர்வுகளை மட்டும் புறக்கணிக்க வேண்டும் என்ற கேள்வியின் உந்துதலே அக்கோரிக்கையை விடுக்க வைத்தது..!

மற்றும்படி.. உங்களின் செவ்விக்கு வெளியில் நீங்கள் ஏலவே படைத்த படைப்புக்கள் பற்றிய விமர்சனங்களை நான் இங்கு செய்ய முயலவில்லை என்பதை குறித்துக் கொள்ளுங்கள். எனது கருத்துக்களில் இரட்டைத் தன்மையோ தனிநபர் தாக்குதலோ இருப்பதாக நான் கருதவில்லை. உங்களைப் போன்ற இன்னொரு கலைஞர் இங்கு வந்து கருத்து எழுதுபவராக இருந்து இவ்வாறான ஒரு செவ்வியில் தாயக் கலைஞர்கள் மற்றும் தாயகப் படைப்புக்களை செய்பவர்கள் குறித்துக் குறிப்பிடின்.. அவர்களிடமும் நான் இக்கேள்விகளைக் கேட்பேன்.

யாழ் களம் சார்ந்து நிகழ்ச்சித் திட்டங்களைச் செய்ய முன் வர வேண்டும் என்று கோருவது நீங்கள் இங்கு கள உறவாக உறவாடி வருவதால் தான். அதுமட்டுமன்றி நீங்கள் கலைத்துறை சார்ந்து இருப்பதால் தான். நாமும் கலைத்துறை சார்ந்து இருப்பின்.. உங்களோடு ஒத்துழைக்கக் கூடிய பொதுத்தன்மைகள் உங்களிடம் இருப்பது இனங்காணப்படின்.. உங்களோடு சேர்ந்து செயற்பட எத்தயக்கமும் இன்றி முன்வர முடிவு செய்வோம். ஆனால் நான் கலைத்துறை சார்ந்தவன் அல்ல..! ஒரு ரசிகன் கலைத்துறையில் இருந்து கொண்டுதான் கலையை படைப்பை ரசிக்க வேண்டும் என்பதோ.. கலைஞனிடம் அவனின் விமர்சனங்கள் தொடர்பில் கேள்விகளை கேட்க வேண்டும் என்பதோ அவசியமில்லை என்று நினைக்கிறேன்.

இந்த உண்மைக்குள் நின்று கொண்டுதான் உங்கள் கருத்துக்கள் வெளி வந்திருக்க வேண்டும். ஆனால் நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு.. குருவி.. நெடுக்ஸ் என்று பெண்கள் வெளியேற்றம்.. ஆண்கள் வெளியேற்றம்.. குருவி மீது தடைகள்.. நெடுக்ஸின் மீது தண்டனைகள் என்று ஒரு கலைஞனுக்குரிய பண்போடு கருத்துப் பகர முனையவில்லை.

ஒவ்வொருவரின் வெளியேற்றத்துக்குப் பின்னும் அவரவரின் சுய நடவடிக்கைகள் காரணமாக இருக்க முடியுமே தவிர நெடுக்ஸால் ஒருவர் வெளியேறினார்.. அல்லது அஜீவனால் ஒருவர் வெளியேறினார் என்று குற்றம் சாட்ட முடியாது. கருத்துச் சுதந்திரத்தை நீங்களோ நானோ அடுத்தவரில் தடுக்கவில்லை. அவர்கள் தங்கள் எதிர்க்கருத்துக்களை அல்லது கருத்துக்களைச் சொல்ல இங்கு இடமுள்ள போது ஏன் ஓட வேண்டும். அதற்கு அவசியமில்லையே. எனவே நெடுக்ஸ் சார்ந்து வைக்கப்பட்ட உங்களின் குற்றச்சாட்டுக்கள் ஆதார அடிப்படைகள் அற்றவை.. இங்கு பகரப்படும் கருத்துக்களை உங்கள் மீதான தனிநபர் வெறுப்பின் அடிப்படை என்று நீங்கள் காட்டி உங்கள் முன் வைக்கப்பட்ட செவ்வி சார்ந்த கேள்விகளை நீங்கள் மலினப்படுத்த முற்படுகிறீர்கள் என்றே நான் நோக்குகிறேன்.

மற்றும்படி.. படைப்போடு சார்ந்து பேசுவோம். மக்களின் தேவைகளை உணர்ந்து செயற்படுவோம். தாயகம் எல்லோரின் முயற்சிகளையும் பாராட்டவும் ஊக்குவிக்கவும் வேண்டும். ஒரு போராளி கையில் கமராவோடு.. களத்தைப் படம் பிடிக்கிறான்.. மக்கள் முன் கொண்டு வருகிறான் என்றால்.. அவன் முழு கமரா தொழில்நுட்பம் அறிஞ்சவனா.. டிப்பிளோமா பட்டம் பெற்றவனா இருக்க வேண்டும் அப்போதுதான் அவனின் திறமை பாராட்டப்பட முடியும் என்ற நிலை இருக்கக் கூடாது. அவனின் திறமை இனங்காணப்பட்டு வளர்க்கப்படுவது வேறு.. மட்டம் தட்டப்படுவது வேறு. இதை ஒரு சக கலைஞனாக எனி மேலும் செய்யாதீர்கள்..! :icon_idea:

இதற்கு பதில் தேவையில்லை

செயல்படுவோம்

அப்போது

நீங்கள் யார்

நான் யார்

பிரச்சனைகள் என்ன என்பது புரியும்.

காகிதத்தில் நிலா பார்ப்பதும்

விண்ணுக்கு போய் நிலா பார்ப்பதும்

வெவ்வேறானவை!

உங்கள் கருத்துகள் தனிமனித தாக்குதலேயன்றி வேறில்லை.

எனவே அதே ஆயுதத்தை அடுத்தவனும் எடுப்பார் என்பதை மறக்க வேண்டாம்.

இதையெல்லாம் விடுங்கள்

அவை முடிந்து போனவை

இனி நடக்க வேண்டியதை யோசிப்போம்.

எனக்கு தமிழர்களை ஒழுங்கு செய்ய

தமிழர் கலாச்சாரம் பற்றி தெரியாது.

தெரியாமல் வளர்ந்து விட்டேன்.

நீங்கள் எனக்கோ

அல்லது எமக்கோ வழி காட்டுங்கள்

நான் வரத் தயார்!

நீங்கள் ஒரு படைப்புக்கான ஆரம்ப படிகளை தொடருங்கள்

நான் உங்களோடு இருப்பேன்.

அதை வார்த்தைகளால் இல்லை

செயலால் செய்யுங்க!

நான் செய்த தவறு

உங்களால் திருத்தப்படும்!

யாழ்கள உறவுகளே நெடுக்ஸ் அவர்களுக்கு

உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

தயவுடன் உங்கள் மேலான கருத்துகளை எழுதுங்கள்!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதோ பயணங்களில் மட்டும் என்று

பல விடயங்களை தந்து உள்ளீர்கள். இது வரை தவற விட்டதை அறியக் கூடியதா இருக்கிறது

இப்படியான விவாதங்கள் நடைபெறுவதும் ஓரளவுக்கு நன்மைக்கே

அஜீவனுக்கு நன்றிகள்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்துகள் தனிமனித தாக்குதலேயன்றி வேறில்லை.

எனவே அதே ஆயுதத்தை அடுத்தவனும் எடுப்பார் என்பதை மறக்க வேண்டாம்.

நான் இதுவரைக்கும் அந்த ஆயுதத்தைப் பாவிக்கவில்லை. பாவிக்க முடியாமலும் இல்லை..! பாவித்திருந்தால் கருத்துக்கள் இங்கு நிலைக்காது..! :icon_idea:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நான் இதுவரைக்கும் அந்த ஆயுதத்தைப் பாவிக்கவில்லை. பாவிக்க முடியாமலும் இல்லை..! பாவித்திருந்தால் கருத்துக்கள் இங்கு நிலைக்காது..! :icon_idea:

இதையெல்லாம் விடுங்கள்

அவை முடிந்து போனவை

இனி நடக்க வேண்டியதை யோசிப்போம்.

எனக்கு தமிழர்களை ஒழுங்கு செய்ய

தமிழர் கலாச்சாரம் பற்றி தெரியாது.

தெரியாமல் வளர்ந்து விட்டேன்.

நீங்கள் எனக்கோ

அல்லது எமக்கோ வழி காட்டுங்கள்

நான் வரத் தயார்!

நீங்கள் ஒரு படைப்புக்கான ஆரம்ப படிகளை தொடருங்கள்

நான் உங்களோடு இருப்பேன்.

அதை வார்த்தைகளால் இல்லை

செயலால் செய்யுங்க!

நான் செய்த தவறு

உங்களால் திருத்தப்படும்!

யாழ்கள உறவுகளே நெடுக்ஸ் அவர்களுக்கு

உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

தயவுடன் உங்கள் மேலான கருத்துகளை எழுதுங்கள்!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

யாழ்களம் சில முக்கிய பகுதிகளை தணிக்கை செய்துள்ளது.

நன்றி!

அனைத்தையும் தூக்கி விடுங்கள்!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இதையெல்லாம் விடுங்கள்

அவை முடிந்து போனவை

இனி நடக்க வேண்டியதை யோசிப்போம்.

எனக்கு தமிழர்களை ஒழுங்கு செய்ய

தமிழர் கலாச்சாரம் பற்றி தெரியாது.

தெரியாமல் வளர்ந்து விட்டேன்.

நீங்கள் எனக்கோ

அல்லது எமக்கோ வழி காட்டுங்கள்

நான் வரத் தயார்!

நீங்கள் ஒரு படைப்புக்கான ஆரம்ப படிகளை தொடருங்கள்

நான் உங்களோடு இருப்பேன்.

அதை வார்த்தைகளால் இல்லை

செயலால் செய்யுங்க!

நான் செய்த தவறு

உங்களால் திருத்தப்படும்!

யாழ்கள உறவுகளே நெடுக்ஸ் அவர்களுக்கு

உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

தயவுடன் உங்கள் மேலான கருத்துகளை எழுதுங்கள்!

எனது விருப்பங்களில் ஒன்று சிறீலங்காச் சிறைகளுள் வாடும் எமது இளம் சமூகத்தின் உண்மை நிலை என்ன.. என்பதை வெளி உலகுக்குச் சொல்ல வேண்டும் என்பது.

உதாரணத்துக்கு தமிழர் தாயகத்தில் போர் அழுத்தங்கள் மத்தியில் கல்வி கற்கும் ஒரு மாணவன்.. பொருளாதார நெருக்கடியில் வாழ்ந்து படித்துப் பரீட்சையில் சித்தி பெற்று கொழும்புக்கு வரும் ஒரு மாணவன்.. சந்தேகத்தின் பெயரில் கைதாகி படுகின்ற சித்திரவதைகள்.. அதற்கு மனிதாபிமானப் பார்வையை செலுத்தாத உலகம் என்று ஒரு குறும்படத்தை உருவாக்கி தமிழ் சிங்களம் ஆங்கிலம் மற்றும் சில முக்கிய ஐரோப்பிய மொழிகளில் சப் ரைற்றில் இட்டு.. யாழ் களம் சார்பாக உருவாக்கி வெளியிட வேண்டும் என்பது.

இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்லுங்கள். முடிந்ததைச் செய்கிறேன்..!

இது ஒன்றும் அரசியலோ.. புலி சார்ந்ததோ அல்ல. ஜனநாயக அரசு என்று கூறிக்கொள்ளும் அரசு அதன் பிரஜைகள் மீது நடத்தும் கொடூரத்தைச் சொல்லும் விடயமாகவும்.. அந்தப் பிரஜை சொந்த மண்ணில் அனுபவிக்கும் கொடூரத்தை வெளிக்கொணர்வதாகவும் அமைய வேண்டும். பல உண்மைச் சம்பவங்கள் உள்ளன.

இவ்வாறான குறும்படங்களை பல்கலைக்கழக மாணவர்கள் மட்டங்களில் கொண்டு செல்லக் கூடிய வகைக்கு தயாரிக்க வேண்டும். அமெரிக்க படைகள் கியூபத்தீவில் வைத்துள்ள சிறைச்சாலைகளில் செய்யும் மனித உரிமை மீறல்களைச் சொல்ல வந்தவை போன்று இவையும் உலகின் விழிகளைத் திறக்கக் கூடிய வகையில் வெளி வர வேண்டும். :icon_idea:

நெடுக்கு

அதைச் செய்யவில்லை, இதைச் செய்யவில்லை என்று குற்றஞ் சாட்டிய நீங்களே, தற்போது நான் என்ன செய்ய வேண்டுமென்ற கேள்வியுடன் நிற்கின்றீர்கள். அஜீவன் சொல்லியது போல் நீங்கள் அவருடன் சேர்ந்து தாயகம் சென்று எப்படி சிறீலங்காச் சிறைகளுள் வாடும் எமது இளம் சமூகத்தின் உண்மை நிலையை வெளிக்கொணர விரும்புகின்றீர்களோ, அப்படி அந்தப் படைப்பை உருவாக்குங்கள். ஒரு விடயத்தை சொல்வதைவிட செய்வதில் நேரடியாக ஈடுபடும் போது தான் அதன் கஸ்டநஸ்டங்களைப் புரிந்து கொள்ள முடியும். உங்கள் சிந்தனை செயலாக்கம் பெற எனது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

நன்றி வசம்பு

நெடுக்ஸின் கனவு நனவாக ஒத்துழையுங்கள்

உங்கள் எண்ணம் நனவாக

நீங்கள் முதன்மை வகிப்பதே சிறப்பு!

கதையை எழுதி

ஏனைய விடயங்களை பாருங்கள்!

நான் என்ன செய்ய வேண்டும்

என்று சொல்லுங்கள்.........

என்னால் முடிந்த விதத்தில் உதவுகிறேன்.

மற்றவற்றை விபரியுங்கள்............

வாழ்த்துகள்!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு..

அதைச் செய்யவில்லை, இதைச் செய்யவில்லை என்று குற்றஞ் சாட்டிய நீங்களே, தற்போது நான் என்ன செய்ய வேண்டுமென்ற கேள்வியுடன் நிற்கின்றீர்கள். அஜீவன் சொல்லியது போல் நீங்கள் அவருடன் சேர்ந்து தாயகம் சென்று எப்படி சிறீலங்காச் சிறைகளுள் வாடும் எமது இளம் சமூகத்தின் உண்மை நிலையை வெளிக்கொணர விரும்புகின்றீர்களோ, அப்படி அந்தப் படைப்பை உருவாக்குங்கள். ஒரு விடயத்தை சொல்வதைவிட செய்வதில் நேரடியாக ஈடுபடும் போது தான் அதன் கஸ்டநஸ்டங்களைப் புரிந்து கொள்ள முடியும். உங்கள் சிந்தனை செயலாக்கம் பெற எனது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

நான் ஏலவே எனது கருத்தில் சொல்லி இருக்கிறேன். நான் படைப்பை ரசிக்கும் ரசிகன். திரைப்படக் கலைஞனோ.. அல்லது அத்துறை சார்ந்தவனோ அல்ல. எனது நண்பர்களும் அத்துறை சார்ந்தவர்கள் அல்ல. அப்படி இருக்கும் போது எனது எண்ணக்கருவை குறும்படமாக என்னால் ஆக்க முடியும் என்று நான் ஒற்றைக்காலில் நிற்கமாட்டேன். சாத்தியமான வழிமுறைகளையே தேடுவேன். அந்த வகையில் தான் அஜீவன் கேட்டதற்கு இணங்க நான் ஒரு அரசியல்.. குறிப்பாக புலி சாரா ஒரு எண்ணக்கருவை முன் வைத்தேன். அதைச் செய்ய முன்வருவீங்கன்னு பார்த்தா.. பட்டுப்பாரு.. அப்பதான் திருந்துவா என்று சபித்துவிட்டு.. கழுவிற தண்ணில நழுவிற மீன் போல.. நிற்கும் போது..???! எப்படி எனது எண்ணக்கரு உருப்பெறும். நான் எனக்கு வேளை வரும் போது வேறு யாரேனும் கொண்டு செய்ய முயல்கிறேன். உங்கள் சபிப்புடன் கூடிய வாழ்த்துக்கு நன்றி. :icon_idea:

நானாவது ஒரு எண்ணக்கருவைத் தந்தன். நீங்கள்..????! அந்த சிறையில் வாடும் பாவப்பட்ட ஜென்மங்களுக்கு.. செய்ய வேண்டியதை.. பாரு பட்டுப்பாறு என்று சொல்லுறீங்க வம்பண்ணன்..! தகுமா இது..! :o:rolleyes:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நான் ஏலவே எனது கருத்தில் சொல்லி இருக்கிறேன். நான் படைப்பை ரசிக்கும் ரசிகன். திரைப்படக் கலைஞனோ.. அல்லது அத்துறை சார்ந்தவனோ அல்ல. எனது நண்பர்களும் அத்துறை சார்ந்தவர்கள் அல்ல. அப்படி இருக்கும் போது எனது எண்ணக்கருவை குறும்படமாக என்னால் ஆக்க முடியும் என்று நான் ஒற்றைக்காலில் நிற்கமாட்டேன். சாத்தியமான வழிமுறைகளையே தேடுவேன். அந்த வகையில் தான் அஜீவன் கேட்டதற்கு இணங்க நான் ஒரு அரசியல்.. குறிப்பாக புலி சாரா ஒரு எண்ணக்கருவை முன் வைத்தேன். அதைச் செய்ய முன்வருவீங்கன்னு பார்த்தா.. பட்டுப்பாரு.. அப்பதான் திருந்துவா என்று சபித்துவிட்டு.. கழுவிற தண்ணில நழுவிற மீன் போல.. நிற்கும் போது..???! எப்படி எனது எண்ணக்கரு உருப்பெறும். நான் எனக்கு வேளை வரும் போது வேறு யாரேனும் கொண்டு செய்ய முயல்கிறேன். உங்கள் சபிப்புடன் கூடிய வாழ்த்துக்கு நன்றி. :o

நானாவது ஒரு எண்ணக்கருவைத் தந்தன். நீங்கள்..????! அந்த சிறையில் வாடும் பாவப்பட்ட ஜென்மங்களுக்கு.. செய்ய வேண்டியதை.. பாரு பட்டுப்பாறு என்று சொல்லுறீங்க வம்பண்ணன்..! தகுமா இது..! :D:D

நெடுக்கு

நான் சபிக்கவில்லை. உங்கள் சிந்தனைகள் செயலாக்கம் பெறவேண்டுமென வாழ்த்தினேன். நாங்கள் ஏதாவது நடந்த சம்பவங்களை எழுதினால் அது உண்மையோ, பொய்யோ, இட்டுக்கட்டப்பட்டதோ என்று நீங்கள் கேலியாக எழுதுவது போல் நான் எழுதவில்லை. நான் ஒரு நாடகாசிரியருக்கு நடந்ததை எழுதியபோது கேலியாக்கினீர்கள். முடிந்தால் இங்கு வாருங்கள் அந்நாடகாசிரியரையும், அவர் அனுப்பி திரும்பி வந்த அந்தக் கதையை திருப்பி அனுப்பியவர்களின் கடிதத்துடன் உங்களுக்குக் காட்டுகின்றேன். பின்பு அதற்கும் ஏதாவது சொல்ல நினைக்க மாட்டீர்கள் தானே?? :icon_idea::rolleyes:

ஒரு குறும்படம் இப்படித் தயாரிக்க வேண்டுமென்ற எண்ணம் உங்களுக்கு இருக்கின்றது. அது போதும். அதற்கு குறும்படத் தயாரிப்பில் அனுபவமுள்ளவர்கள் தான் தயாரிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. உங்கள் எண்ணங்களை கூட இருந்து அஜீவனிடம் சொன்னால் அவர் அதை நீங்கள் விரும்பியபடி செய்து தருவார். மற்றும்படி இருந்த இடத்திலிருந்து கொண்டு ஐடியாக்களை எடுத்து விடுவது எல்லாருக்கும் முடிந்த ஒன்றே. அதில் எந்த பலனும் ஏற்படப் போவதில்லை. :):D

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
:icon_idea:இப்போ பந்து நெடுக்கின் கைகளுக்குள் தான் இருக்கின்்றது :rolleyes:
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

:rolleyes:இப்போ பந்து நெடுக்கின் கைகளுக்குள் தான் இருக்கின்்றது :o

உங்களின் கதைப் பார்த்தா.. நடிகன், நடிகை, உடை, பின்னணி, கதை, வசனம், இசை, இயக்கம் எல்லாம் நெடுக்ஸ். ஒளிப்பதிவு மற்றும் எடிற்றிங் மட்டும் அஜீவன் என்று சொல்லுறாப் போல இருக்குது. இதிலும் இன்னும் கொஞ்சக் காலத்தில நானே ஒளிப்பதிவையும் எடிற்றிங்கையும் பற்றி தெரிஞ்சு கொண்டு.. எல்லாத்தையும் பண்ணிடுறனே..! :D

அஜீவன்..

இதில் கள உறவுகள் பகிர்ந்து கொண்ட சிறீலங்காச் சிறை அனுபவங்கள் உண்மைக் கதைகளாக உள்ளன.. இதை விட இப்படி ஒரு ஆக்கத்துக்கு இன்னும் கதை தேவை என்றால் அது நிஜத்தை பிரதிபலிப்பதே முக்கியம். அந்த வகையில் யாழ் களத்தில் சிறை அனுபவங்களைக் கோரி.. அதிலிருந்து தேவையான விடயங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்பது எனது அபிப்பிராயம். கற்பனைக் கதைகளைக் காட்டினும் உண்மை அனுபவங்கள் கூடிய தாக்கத்தை தரவல்லன. :icon_idea:

http://www.yarl.com/forum3/index.php?showt...=19439&st=0

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உங்களின் கதைப் பார்த்தா.. நடிகன், நடிகை, உடை, பின்னணி, கதை, வசனம், இசை, இயக்கம் எல்லாம் நெடுக்ஸ். ஒளிப்பதிவு மற்றும் எடிற்றிங் மட்டும் அஜீவன் என்று சொல்லுறாப் போல இருக்குது. இதிலும் இன்னும் கொஞ்சக் காலத்தில நானே ஒளிப்பதிவையும் எடிற்றிங்கையும் பற்றி தெரிஞ்சு கொண்டு.. எல்லாத்தையும் பண்ணிடுறனே..! :rolleyes:

அஜீவன்..

இதில் கள உறவுகள் பகிர்ந்து கொண்ட சிறீலங்காச் சிறை அனுபவங்கள் உண்மைக் கதைகளாக உள்ளன.. இதை விட இப்படி ஒரு ஆக்கத்துக்கு இன்னும் கதை தேவை என்றால் அது நிஜத்தை பிரதிபலிப்பதே முக்கியம். அந்த வகையில் யாழ் களத்தில் சிறை அனுபவங்களைக் கோரி.. அதிலிருந்து தேவையான விடயங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்பது எனது அபிப்பிராயம். கற்பனைக் கதைகளைக் காட்டினும் உண்மை அனுபவங்கள் கூடிய தாக்கத்தை தரவல்லன. :icon_idea:

http://www.yarl.com/forum3/index.php?showt...=19439&st=0

நெடுக்கு

எனது விருப்பங்களில் ஒன்று சிறீலங்காச் சிறைகளுள் வாடும் எமது இளம் சமூகத்தின் உண்மை நிலை என்ன?? இது தான் உங்கள் விடயம் இதற்கு நீங்கள் மேலே சொன்ன எதுவும் தேவையில்லை. இது பாதிக்கப்பட்டவர்களிடம்் இருந்்து உண்மைகளை எடுத்து வெளியுலகிற்கு தெரிவிக்கும் விடயமே. இதற்கு ஏன் கதை வசனம் நடிக நடிகைகள் மேக்கப்?? நீங்கள் இது எப்படி வர வேண்டுமென்ற விடயத்தை அவருக்குச் சொல்லுங்கள் அவர் மிகுதி எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார். அப்பப்போ எடுத்ததை நீங்கள் அருகில் இருந்து பார்த்து அபிப்பிராயங்களைக் கூறும் போது மேலும் அவர் மெருகேற்றித் தருவார்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இந்தக்கலகம் நன்மையில் முடியும் போல இருக்கு.

கதாசிரியரின் பணி.. கதையைக் கொடுக்கிறதுதான். படைத்தை இயக்குறதல்ல வசம்பண்ணன்..! ஒளிப்பதிவு.. எடிற்றிங்.. இயக்கம் எல்லாம் ஓரளவு தொடர்புள்ள வேலைகள்..! :icon_idea:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எனது விருப்பங்களில் ஒன்று சிறீலங்காச் சிறைகளுள் வாடும் எமது இளம் சமூகத்தின் உண்மை நிலை என்ன.. என்பதை வெளி உலகுக்குச் சொல்ல வேண்டும் என்பது.

கதாசிரியரின் பணி.. கதையைக் கொடுக்கிறதுதான். படைத்தை இயக்குறதல்ல வசம்பண்ணன்..! ஒளிப்பதிவு.. எடிற்றிங்.. இயக்கம் எல்லாம் ஓரளவு தொடர்புள்ள வேலைகள்..! :o

இது கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள கைதிகளின் செவ்விகள் மூலம் நடந்த உண்மைகளை வெயியுலகிற்கு கொண்டு வருவது. இதில் நீங்கள் என்ன கதை எழுத வேண்டி இருக்கு. ஏதாவது நீங்கள் இட்டுக்கட்டி எழுத வெளிக்கிட்டால் பிறகு உண்மைகளும் பொய்யாகவல்லவா போய்விடும்!! :icon_idea::rolleyes:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள மூத்த பதிவாளர்களின் ஒருங்கிணைப்பில் வெளிவரவிருக்கும் படைப்பு

சிறையில் வாடும் இளம் செம்மல்கள்

தாயகத்தில் பேரினவாத யுத்தக் கெடுபிடிகளிற்குள் சிக்குண்டு சிறைப்பிடிக்கப்பட்டு பயங்கரவாத இனவாத அரசின் ஆறுதலான அரச இயந்திரத்தின் நடைமுறையில் சிக்கி சிறைவாழும் இளஞ்சமுதாயத்தினரின் உண்மை நிலையை வெளிக்கொணரும் படைப்பு

எங்கிருந்தாலும் இணையத்தின் மூலம் இணைந்து எம்மால் முடியும் என எடுத்துக்காட்ட இதுவொரு சந்தர்ப்பம்.

எண்ணம்:

இதை விட இப்படி ஒரு ஆக்கத்துக்கு இன்னும் கதை தேவை என்றால் அது நிஜத்தை பிரதிபலிப்பதே முக்கியம். அந்த வகையில் யாழ் களத்தில் சிறை அனுபவங்களைக் கோரி.. அதிலிருந்து தேவையான விடயங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்பது எனது அபிப்பிராயம்.

எழுத்து:

ரெண்டு வசனத்தில ஆ, ஊ என்று கத்திவிட்டு வெற்றிக்கிண்ணங்களை (?) பெற்றுச்செல்கின்றார்கள். இவர்கள்தான் எதிர்கால சமூகத்தை வழிநடாத்தப்போகின்றார்களாம். நாம் உருப்பட்ட மாதிரித்தான். சிரிப்பாக இருக்கின்றது.

செய்தி திரட்டல்:

குறும்படம் பற்றிய விளக்கம் அழகு.

உங்கள் பேட்டி பலருக்கு குறும்படம் எடுக்கக்கூடிய ஆர்வத்தினை ஏற்படுத்தியிருக்கும்.

பயிற்சிப் பட்டறைக்கு இலவசமாய் உதவி செய்ய நினைக்கும் பண்பும் சிறப்பு.

செவ்வி:

இது கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள கைதிகளின் செவ்விகள் மூலம் நடந்த உண்மைகளை வெயியுலகிற்கு கொண்டு வருவது

ஒளிப்பதிவு:

நான் என்ன செய்ய வேண்டும்

என்று சொல்லுங்கள்.........

என்னால் முடிந்த விதத்தில் உதவுகிறேன்

நெறியாழ்கை:

நான் தமிழன் என்ற வகையில் தமிழ் தேசிய உணர்வு எனக்குள் எப்போதும் உள்ளது. அது எனது எழுத்தில் வருவது நான் தமிழ் தேசியவாதி என்ற அடையாளப்படுத்தலுக்கல்ல. தமிழன் என்ற எனது பிறப்புரிமை சார்ந்து அது வருகிறது.
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இது கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள கைதிகளின் செவ்விகள் மூலம் நடந்த உண்மைகளை வெயியுலகிற்கு கொண்டு வருவது. இதில் நீங்கள் என்ன கதை எழுத வேண்டி இருக்கு. ஏதாவது நீங்கள் இட்டுக்கட்டி எழுத வெளிக்கிட்டால் பிறகு உண்மைகளும் பொய்யாகவல்லவா போய்விடும்!! :icon_idea::rolleyes:

அப்படி என்றீங்க.. அப்ப சரி.

எனி நாங்கள் யாழ் களத்தினூடு தகவல் திரட்டுவம்.

சிறீலங்கா சிறைகள் பற்றிய புகைப்படங்கள் அல்லது வரைபடங்கள் பற்றிய தகவலைத் தரக்கூடியவங்க தந்துதுவினால் காட்சிகளை அமைக்கிறத்துக்கு இலகுவாக இருக்கும். சிறீலங்காச் சிறைகள் பற்றிய வீடியோ பதிவுகள்.. செய்திகளில் காண்பிக்கப்பட்ட வீடியோ பதிவுகள் இருப்பினும் தந்துதவலாம். அவற்றை காட்சியமைப்பில் சேர்த்துக் கொள்ள வசதியாக இருக்கும்.

இதைப்பற்றி ஒளிப்பதிவு மற்றும் எடிற்றிங் செய்யும் அஜீவன் அண்ணாவிடம் இருந்தும் அபிப்பிராயங்கள் மற்றும் கோரிக்கைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

அதுமட்டுமன்றி சிறீலங்காச் சிறை அனுபவங்கள் மற்றும் பொருளாதாரத் தடையின் மத்தியில், போரின் மத்தியில் எழுந்த அச்ச மனநிலையில் கல்வி கற்க பட்ட அனுபவங்கள்.. இழப்புக்கள் பற்றிய அனுபவங்களையும் கள உறவுகள் மற்றும் வாசகர்கள் பகிர்ந்து கொண்டால் சிறப்பாக இருக்கும்..! குறிப்பாக நிகழ்வுகளுக்கான திகதியிட்டு உண்மை அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதே பெரிதும் வரவேற்கப்படுகிறது.

ஏலவே சில கள உறவுகள் இது பற்றிய பதிவுகளைச் செய்துள்ளனர். நானும் ஒரு இந்தியப்படை கால சிறை வாழ்வு பற்றிய வாசித்த கதை ஒன்றை இணைத்திருக்கிறேன். அப்படியான தகவல்களையும் திரட்டித்தாருங்கள்.

குறிப்பாக வட தமிழீழம் அல்லது தென் தமிழீழத்தில் இருந்து சிறீலங்காவுக்கு கல்வி கற்க வந்து மாணவன் என்ற அத்தாட்சி இருந்தும் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு சிறைகளில் சித்திரவதைகளை சந்தித்தவர்களின் இன்னும் சந்திப்பவர்களின் அனுபவங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

எமது மக்களின் இளம் சந்ததி ஒன்று சிறீலங்காச் சிறைகளில் சித்திரவதைகளூடு ஒரு வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறது. அது அடிப்படை மனித உரிமைகளைக் கூட அனுபவிக்க முடியாமல் நிற்கிறது. பல அச்சுறுத்தல்கள்.. சக சிங்கள காடைக் கைதிகளால் படும் வேதனைகள் சித்திரவதைகள், சிறை அதிகாரிகளின் இனத்துவ ரீதியான சித்திரவதைகள் என்பன உட்பட உங்கள் அனுபவங்களை எம்மோடு பகிர்ந்து கொள்வது எதிர்பார்க்கப்படுகிறது. உங்கள் பெயர் முகவரி குறிப்பிடத் தேவையில்லை. ஆனால் சம்பவங்கள் நடந்த திகதிகள், இடங்கள் மற்றும் அதிகாரிகளின் பெயர்களைக் குறிப்பிட்டால் நன்று.

இது உங்களை போலவே உள்ளே இன்னும் இருந்து துன்புறும் உறவுகளின் உண்மை நிலையை வெளி உலகுக்குக் கொணரும் ஒரு வாய்ப்புக்காக பயன்படுத்தப்பட வாய்ப்பைக் கொண்டிருக்கிறது.. உலகின் கண்களுக்கு எமது இளம் சந்ததியினரின் வேதனைகளைக் கொண்டு செல்ல இதன் கீழ் உதவும் படி உங்களை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

கள உறவுகள் அனைவரும் இதற்காக முயற்சிக்க வேண்டும். இது ஒரு யாழ் கள உறவுகளின் கூட்டு முயற்சி. நெடுக்காலபோவன் என்ற தனிமனிதனுடையதல்ல. எமது இனத்தின் இளம் சந்ததியொன்று சிங்களச் சிறைகளுக்குள் அடிப்படை மனித உரிமைகளும் இன்றி சரியான சட்ட நடவடிக்கைகளும் இன்றி வாடுவது குறித்து இது அமைகிறது.

தாயகத்தில் உள்ள பத்திரிகைகளிலும் இது தொடர்பில் விளம்பரங்களைச் செய்து சிறையில் வாடும் உறவுகளின் நேரடிக் கடிதங்களைப் பெற்றுத் தரினும் அவை எமக்கு உதவியாக இருக்கும்.

அதற்கு ஊடகவியலாளர் பணி செய்யும் யாழ் கள உறவுகளின் ஒத்துழைப்பும் எதிர்பார்க்கப்படுகிறது.

மாணவர்கள் உங்கள் உங்கள் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் அல்லது சிறீலங்காவில் இருந்து வந்த மாணவர்களிடம் இப்படியான சிறை அனுபவங்கள் பற்றிய குறிப்புக்களைப் பெற்றுத் தர முடியுமாயின் யாழ் களத்தை ஊடகமாகப் பயன்படுத்தி அதைச் செய்யும் படியும் கேட்டுக் கொள்கின்றோம்.

இதற்கு நீங்கள் அளிக்கும் ஒத்துழைப்பிலேயே நாலு சுவருக்குள் அடைப்பட்டுக் கிடந்து சித்திரவதைப்படும் எமது இனத்தின் இளம் சந்ததியின் உண்மை நிலைப்பாடுகளை வெளி உலகுக்குக் கொண்டு வந்து அவர்களுக்கு தேவையான அடிப்படை உரிமைகளும்.. துரிதமான சட்ட நடவடிக்கைகளூடு விடுதலையையும் பெற்றுத் தர எம்மால் ஏதேனும் உந்துதலை செய்யக் கூடிய நிலையை உலகில் ஏற்படுத்த முடியும்.

அமெரிக்காவுக்கு அளிக்கப்பட்ட அழுத்ததின் மத்தியிலேயே அமெரிக்க அரசு கியூபத்தீவில் இருந்த தீவிரவாத சந்தேக நபர்கள் பற்றிய விசாரணைகளைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இதே போன்ற ஒரு விளைவை எமது உறவுகளுக்கும் பெற்றுக் கொடுக்க எம்மாலான நடவடிக்கைகளைச் செய்ய அனைவரும் முன் வர வேண்டும். இது அதற்கான ஒரு ஆரம்ப முயற்சியாக அமைய யாழ் களம் அத்திவாரம் இடுவதாக இருக்கட்டும்.

-------------------------------------------

Major Guantanamo setback for Bush

Foreign suspects held in Guantanamo Bay have the right to challenge their detention in US civilian courts, the US Supreme Court has ruled.

_44741752_-71.jpg

Guantanamo's Camp Delta compound has housed prisoners since 2002

This is the Bush administration's third setback at the highest US court since 2004 over its treatment of prisoners who are being held indefinitely and without charge at the base in Cuba.

http://news.bbc.co.uk/1/hi/world/americas/7451139.stm

-------------------------

Human rights campaigners are doubtful that the prisoners will get a fair trial through the tribunal system.

The Red Cross is the only outside organisation allowed to visit the prisoners and draw up a register of them.

There are accusations of mistreatment and even torture of detainees in the camp.

United Nations investigators have called for the closure of the prison which Amnesty International campaigners have compared to a Soviet labour camp.

Even the UK, a strong American ally, has asked for the camp to close, saying it fuels Islamic radicalism.

http://news.bbc.co.uk/1/hi/world/americas/6080644.stm

http://news.bbc.co.uk/1/hi/world/americas/7413181.stm

ஏன் நாம் இப்படியான ஒரு நிலையை சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் கவனத்தை எமது இளம் சிறைக்கைதிகள் விடயத்திலும் ஈர்த்து சிறீலங்கா அரசு.. அவர்களுக்கு பொதுமன்னிப்பு அளிக்கவோ அல்லது துரித சட்ட நடவடிக்கை எடுக்கவோ வற்புறுத்த முடியாது..??!

-------------------------------------------------

நன்றி.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

என்ன இணையவன் திரிவுபடுத்தி மேலே எழுதப்பட்டுள்ள கருத்தைவிட்டுட்டு அதற்கு பதிலாக எழுதப்பட்ட கருத்தை தூக்கி இருக்கிறீங்கள்? :icon_idea: தனிநபர் தாக்குதல் என்பது நேரடியாக அல்லாமல் வேறு வழிகளில் மேற்கொள்ளப்படமுடியுமா? :rolleyes: இதைவிட மிகநன்றாக மேற்கோள் காட்டி என்னால் எழுதமுடியும். அப்போதும் பேசாமல் இருப்பீங்களா? :o

எண்ணம்:இதை விட இப்படி ஒரு ஆக்கத்துக்கு இன்னும் கதை தேவை என்றால் அது நிஜத்தை பிரதிபலிப்பதே முக்கியம். அந்த வகையில் யாழ் களத்தில் சிறை அனுபவங்களைக் கோரி.. அதிலிருந்து தேவையான விடயங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்பது எனது அபிப்பிராயம்.

எழுத்து: ஒண்டுக்கு வருகிது

செய்தி திரட்டல்:

செவ்வி:

ஒளிப்பதிவு:

நெறியாழ்கை:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா சிறைகள் பற்றிய புகைப்படங்கள் அல்லது வரைபடங்கள் பற்றிய தகவலைத் தரக்கூடியவங்க தந்துதுவினால் காட்சிகளை அமைக்கிறத்துக்கு இலகுவாக இருக்கும். சிறீலங்காச் சிறைகள் பற்றிய வீடியோ பதிவுகள்.. செய்திகளில் காண்பிக்கப்பட்ட வீடியோ பதிவுகள் இருப்பினும் தந்துதவலாம். அவற்றை காட்சியமைப்பில் சேர்த்துக் கொள்ள வசதியாக இருக்கும்.

ஒளவையார மற்றும் முரளி

நெடுக்கு சிறை அனுபவங்களை செட் போட்டு எடுக்கப் போறாராம்.(சிலநேரம் அவரிணைத்த குவாட்டனமோ சிறை பற்றிய படத்தை செட் என்று நினைத்தாரோ என்னவோ). எனவே கலை, காட்சியமைப்பு போன்ற விடயங்களுமல்லோ சேர்க்க வேண்டும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஒளவையார மற்றும் முரளி

நெடுக்கு சிறை அனுபவங்களை செட் போட்டு எடுக்கப் போறாராம்.(சிலநேரம் அவரிணைத்த குவாட்டனமோ சிறை பற்றிய படத்தை செட் என்று நினைத்தாரோ என்னவோ). எனவே கலை, காட்சியமைப்பு போன்ற விடயங்களுமல்லோ சேர்க்க வேண்டும்.

எந்த ஒரு சித்திரவதை கூடம் நடத்தும் அரசும் அவற்றை பார்க்க அனுமதிக்காது என்பது வெளிப்படையான விடயம். சாத்தியமான வழிகளில் சொல்ல வரும் விடயத்தைச் சொல்ல வேண்டுமே தவிர... விடயத்தை இணைத்த எனக்கே பாடம் கற்பிக்க விளைவது உபயோகமானதாகவன்று உபத்திரபமானதாகவே இருக்கிறது வசம்பண்ணை. உங்களுக்கு இது சரிப்பட்டு வரக் கூடாது என்பதே சரிப்பட்டு வரனும் என்பதை விட அதிகம் இருக்கிறது போல..! :(:D

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

Guest
This topic is now closed to further replies.

 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.