Jump to content

ராமசாமி .................வாரானா?.................


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ராமசாமி .................வாரானா?.................

அது ஒரு பள்ளிகூட பருவம் ....வீட்டிலிருந்து .......

...பாடசாலை செல்ல மூன்று கிலோ மீட்டர் நடக்க வீண்டும் .

நானும் எனது நண்பி கலைவாணி உம் சேர்ந்தே போவம் ..

போகும் வழியில் ..வீதிகள் ...வீடுகளில் உள்ள மா மரத்தில்

கண் போகும் ..ஒரு பணக்கார வீட்டில் ...நிறைய மா மரங்கள்

வகைக்கு ஒன்றாக ..நட்டு ..காய்த்து... குலுங்கும் காலம் ..

அவர்கள் வீட்டுக்கு ... காவலாக ஒரு வேலைக்காரன் .....ராமசாமி ..

.சில சமயம் ..அவனை கண்டு கேட்டால் ..ஆளுக்கு ஒன்று பிடுங்கி

தருவான். ..மத்தபடி ..கள்ள மாங்காய் ..தான் . ஒரு நாள் என் நண்பி

துணிந்து மதிலால் பாய்ந்து ...நிலம் முட்ட ..இருந்த காய்களில் சிலதை

பிடுங்கி கொண்டு இருக்கும் போது .......ராமசாமி பார்த்து விட்டான் .

.ஒரே ஓட்டம் ...யாரது ..அதிபரிடம் வருகிறன் ..என்று கத்தியபடி வந்தான்.

..வியர்க்க வியர்க்க ,அங்கு ...எடுத்த ஓட்டம் .......... பள்ளியில் போய் தான் நின்றது .

காய்களை ..நண்பிகளுக்கு ..கொடுத்து விட்டோம் ..எப்படி ..

சாப்பிட மனம் வரும் . இதயம் வேகமாக அடித்து ... கொண்டே ..இருந்தது .

ஒரே வாயில் ... கதவை பார்த்த படி ..ராமசாமி வருவானா?..........முறைப்பாடு

செய்வானா என்று ...பாடமும் ஏறவில்லை ..பள்ளிகூடம் முடியும் வரை ...

..ராமசாமி ......வாரானா?...........

.இறுதி வரை .. நாம் கும்பிட்டது வீண் போகவில்லை (ராமசாமி வரவேயில்லை ).

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கும்பிட்ட தெய்வம் கைவிடவில்லை பாதீங்களோ..எல்லாம் அவன் செயல் அவனின்றி மாங்காயும் களவெடுக்க முடியாது

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.