Vasampu

" கணினி " - ஆணா... பெண்ணா..?

Recommended Posts

" கணினி " - ஆணா... பெண்ணா..?

ஆசிரியைக்கு உண்மையிலேயே விடை தெரியவில்லை.. எனவே மாணவர்கள் தனியாகவும், மாணவிகள் தனியாகவும் கூடிப்பேசி இதற்கு முடிவு காணுமாறு அறிவுறுத்தினார்..........

மாணவிகள் கணினி ஆண்பால்தான் என்ற முடிவுக்கு வந்தார்கள்... அதற்கு அவர்கள் சொன்ன காரணங்கள் இதோ...

1) அதுக்கு எதையும் சுலபமா புரிய வைக்க முடியாது..

2) உருவாக்கினவனைத் தவிர வேறே யாருக்கும் அதோட நடைமுறையை புரிஞ்சிக்க முடியாது..

3) நாம ஏதாவது தப்பு பண்ணா மனசுலேயே வச்சிருந்து நேரம் பார்த்து மானத்தை வாங்கும்..

4) எந்த நேரத்துல புகையும்.... எந்த நேரத்துல மயங்கும்ன்னு சொல்லவே முடியாது..

5) நம்ம கிட்ட இருக்கறதைவிட அடுத்தவங்க வச்சிருக்கறது நல்லா வேலை செய்யறது மாதிரி தோணும்...!

மாணவர்களோ கணிணி பெண்பால்தான்னு சாதிச்சாங்க.. அதுக்கு ஆதாரமா அவங்க சொன்னது இதோ...

1) எப்பவுமே அடுத்த கணிணியோட ஒத்துப் போகவே போகாது..

2) எட்ட இருந்து பார்க்க கவர்ச்சிகரமா இருக்கும்.. ஆனா கிட்டபோனாதான் அதோட வண்டவாளம் தெரியும்..

3) நிறைய ஸ்டோர் பண்ணி வச்சிருக்கும்... ஆனா எப்படி பயன்படுத்தணும்ன்னு அதுக்கு தெரியாது..

4) பிரச்சினையை குறைக்கறத்துக்காக கண்டுபிடிக்கப்பட்டவை... ஆனா பெரும்பாலான சமயங்கள்ல அதுகளேதான் பிரச்சினையே..

5) அதை சொந்தமாக்கிக்கிட்ட பிறகுதான் நமக்கு புரியும்.. அடடா இன்னும் கொஞ்சம் பொறுமையா இருந்திருந்தா இதைவிட அருமையான மாடல் கிடைச்சிருக்குமேன்னு...!

நண்பரொருவர் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பியது.

Share this post


Link to post
Share on other sites

5) அதை சொந்தமாக்கிக்கிட்ட பிறகுதான் நமக்கு புரியும்.. அடடா இன்னும் கொஞ்சம் பொறுமையா இருந்திருந்தா இதைவிட அருமையான மாடல் கிடைச்சிருக்குமேன்னு...!

உந்த வசனத்தை நான் கனகாலமாய் மனதுக்கை வைச்சுக்கொண்டிருந்தனான் :)

Share this post


Link to post
Share on other sites

வா ...........சம்பு ....மன் னிக்கவும் , வசம்பு அண்ணா .

கணணி ஆணா?? பெண்ணா ??..நல்ல பதில் .

அது ஆண்கள் பாவிக்கும் பொது பெண்ணாகவும்

பெண்கள் பாவிக்கும் பொது ஆணாகவும் இருக்கும்

.இதில் இருந்து என்ன தெரிகிறது . அவனவன் பாவனையில்தான் என்று ...

நன்றி வணக்கம் .நிலாமதி

Share this post


Link to post
Share on other sites

2) எட்ட இருந்து பார்க்க கவர்ச்சிகரமா இருக்கும்.. ஆனா கிட்டபோனாதான் அதோட வண்டவாளம் தெரியும்..

5) அதை சொந்தமாக்கிக்கிட்ட பிறகுதான் நமக்கு புரியும்.. அடடா இன்னும் கொஞ்சம் பொறுமையா இருந்திருந்தா இதைவிட அருமையான மாடல் கிடைச்சிருக்குமேன்னு...!

மாணவர்களின் தேர்வு.. யதார்த்தமானதா இருக்குதே..! :lol::)

Edited by nedukkalapoovan

Share this post


Link to post
Share on other sites

நம்ம கிட்ட இருக்கறதைவிட அடுத்தவங்க வச்சிருக்கறது நல்லா வேலை செய்யறது மாதிரி தோணும்...!

விபரமான மாணவிகள் போல :)

எந்த நேரத்துல புகையும்.... எந்த நேரத்துல மயங்கும்ன்னு சொல்லவே முடியாது..
அது அவர்களுக்கே தெரியாது. மன்னிக்கவும். :lol:

அதை சொந்தமாக்கிக்கிட்ட பிறகுதான் நமக்கு புரியும்.. அடடா இன்னும் கொஞ்சம் பொறுமையா இருந்திருந்தா இதைவிட அருமையான மாடல் கிடைச்சிருக்குமேன்னு...!
:lol:

Share this post


Link to post
Share on other sites

ஓளவையின் பதில் தமிழ் சார்ந்தது. சிரிப்பை வரவழைக்காது....எனவே பொறுத்தருள்க.

"அள்","ஆள்", "இ" விகுதி கொண்டவைகள் பொதுவாக பெண்பாற் பெயர்கள் என வகைப்படுத்தப்படும்.

எனவே பெண்.

ஆனால் கணினி அஃறிணையே அதற்கேது ஆண், பெண் பேதம்..... :)

Share this post


Link to post
Share on other sites

ஓளவையின் பதில் தமிழ் சார்ந்தது. சிரிப்பை வரவழைக்காது....எனவே பொறுத்தருள்க.

"அள்","ஆள்", "இ" விகுதி கொண்டவைகள் பொதுவாக பெண்பாற் பெயர்கள் என வகைப்படுத்தப்படும்.

எனவே பெண்.

ஆனால் கணினி அஃறிணையே அதற்கேது ஆண், பெண் பேதம்..... :)

அட நீங்கள் ஒன்று இங்கு சுவிசில் கதிரை, மேசை, வாங்கு, சட்டை எல்லாவற்றிற்குமே ஆண்பால், பெண்பால் படிப்பிக்கிறாங்க. இதிலை நீங்க போய் அஃறிணை, உயர்திணை பேசுறீங்க.

உ+ம்: இங்கு ஜேர்மன் மொழியில் கணினியை எழுதினால் der Computer என்று வரும். அதை ஆண்பாலாக பாவித்து எழுதுவதாலேயே der வருகின்றது.

Share this post


Link to post
Share on other sites

திரு. வசம்பு,

நான் தமிழின் மரபினைக் குறிப்பிட்டேன். :)

ஆங்கிலத்தில் பூமி (பல உ+ம் இருக்கின்றன) யினை பெண்பாலாக She இனைப் பாவிப்பார்கள்.

நாடு உம் அவ்வாறே...

என்ன வசம்பு அவர்கள் மேசை கதிரை சட்டைகளை பாலின ரீதியாகப் பகுப்பது தமிழிலா அல்லது ஆங்கிலத்திலா அல்லது வேறொரு ஐரோப்பிய மொழியிலா? :lol:

Share this post


Link to post
Share on other sites

ஒளவையார்

நாங்களும் பூமியை பூமாதேவியென்றும், எமது பிறந்த நாட்டை தாய்நாடு என்று தானே கூறுகின்றோம். அவை பொதுவானவை. ஆனால் இங்கு ஜேர்மன் மொழியில் கதிரை, மேசை, வாங்கு, சட்டை எல்லாவற்றிற்குமே ஆண்பால், பெண்பால் படிப்பிக்கிறாங்க.

நான் இங்கு சுவிசில் என எழுதி உதாரணமாக der Computer என்று எழுதியதால் அது ஜேர்மன் மொழி என நீங்கள் புரிந்திருப்பீர்கள் என நினைத்தேன்.

Share this post


Link to post
Share on other sites

பிரெஞ்சு மொழியிலும் எல்லாவற்றிற்கும் ஆண்பால் பெண்பால் உண்டு.

கணணி ஆண்பால். 'எனது கணணி பழுதடைந்து விட்டான்' என்றும் சொல்லலாம்.

'அது பழுதடைந்து விட்டது' என்றும் சொல்லலாம்.

'கணணிகள் பழுதடைந்து விட்டான்கள்' என்றும் எழுதலாம்.

பெரும்பாலான பொருட்கணின் பாலைத் தீர்மானிப்பது அவற்றின் கடைசி எழுத்துத்தான். 'E' என்ற எழுத்தில் முடியும் பெரும்பாலனவை பெண்பால். '...ION' என்று முடிவனவும் பெண்பால்.

இது தவிர, சேவல் வந்தான் என்றும் கோழி வந்தாள் என்றும் எழுதலாம்.

Share this post


Link to post
Share on other sites

கணினி பெண்பால் எனென்றால்

பெண்களின் பெயர்கள் சில அமுதினி,குமுதினி, சாலினி, மயூரினி, சேந்தினி

ஆண்களின் பெயர்கள் அமுதன்,குமுதன்,சாலன்,மயூரன், சேந்தன்

ஆகவே கணினி பெண்பால், கணினன் ஆண்பால் :)

Edited by கந்தப்பு

Share this post


Link to post
Share on other sites

இரு பகுதியினரும் நல்ல முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இரண்டு பகுதியுமே HARDWARE ஐ வைத்துத்தான் முடிவெடுத்துள்ளார்கள். :):lol:

Share this post


Link to post
Share on other sites

3) நாம ஏதாவது தப்பு பண்ணா மனசுலேயே வச்சிருந்து நேரம் பார்த்து மானத்தை வாங்கும்..

:) சரியான கணிப்பு

Share this post


Link to post
Share on other sites

கணினி பெண்பால் எனென்றால்

பெண்களின் பெயர்கள் சில அமுதினி,குமுதினி, சாலினி, மயூரினி, சேந்தினி

ஆண்களின் பெயர்கள் அமுதன்,குமுதன்,சாலன்,மயூரன், சேந்தன்

ஆகவே கணினி பெண்பால், கணினன் ஆண்பால் :lol:

உங்கள் கருத்து தவறு. காரணம் கணினி என்பது மனிதர் என்பது போல பொதுவான பெயரே தவிர குறிப்பிட்ட ஒரு கணினியைக் குறிப்பதல்ல. :lol:

:lol: அடக் கடவுளே

ஏனங்கோ கடவுளைக் கூப்பிடுறீங்கோ. மாணவர்கள் உண்மையைப் போட்டுடைச்சிட்டாங்கள் என்றா?? :):)

Share this post


Link to post
Share on other sites

[ஏனங்கோ கடவுளைக் கூப்பிடுறீங்கோ. மாணவர்கள் உண்மையைப் போட்டுடைச்சிட்டாங்கள் என்றா?? :):lol:

உந்த லொள்ளுத்தானே வேண்டாம்கிறது. :lol:

அது என்ன மாணவர்கள் சொன்னது சரி என்டுறியள்.

மாணவிகள் சொன்னது பிழை என்டுறீங்களா?? :lol:

Share this post


Link to post
Share on other sites

எந்தக் கணணியும் நல்ல கணணிதான் கடைக்கு வருகையிலே.பின் நல்லதாவதும் கெட்டதாவதும் பாவிப்பவர் கைகிளிலே. :icon_idea::unsure:

Share this post


Link to post
Share on other sites

5) நம்ம கிட்ட இருக்கறதைவிட அடுத்தவங்க வச்சிருக்கறது நல்லா வேலை செய்யறது மாதிரி தோணும்...!

உந்த லொள்ளுத்தானே வேண்டாம்கிறது. <_<

அது என்ன மாணவர்கள் சொன்னது சரி என்டுறியள்.

மாணவிகள் சொன்னது பிழை என்டுறீங்களா?? :(

ஓ! அப்ப மேலே உந்த மாணவிகள் சொன்னது போல் நீங்களும் யோசிப்பீங்களோ ரசிகை அக்கோய்!! கொஞ்சம் கவனம் அக்கோய்!!! :):):)

Edited by vettri-vel

Share this post


Link to post
Share on other sites

எந்தக் கணணியும் நல்ல கணணிதான் கடைக்கு வருகையிலே.பின் நல்லதாவதும் கெட்டதாவதும் பாவிப்பவர் கைகிளிலே. :rolleyes::wub:

அதுசரிதான். கணணி கடைக்கு வந்ததாலும் அதுதான் ஜனனி கடைக்கு வந்தாலும் அதுதான். :)

Share this post


Link to post
Share on other sites

அதுசரிதான். கணணி கடைக்கு வந்ததாலும் அதுதான் ஜனனி கடைக்கு வந்தாலும் அதுதான். :(

அட சொல்லவேயில்லை. :lol: யாருங்கோ அந்த :wub: ஜனனி :o ??

Share this post


Link to post
Share on other sites

அடப்பாவமே

கணனியையாவது அதுபாட்டுக்கு இருக்க விடமாட்டாங்க போல..

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now