Jump to content

இது பெரியாரின் வெற்றி! என்கிறது ஆனந்த விகடன்!

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது பெரியாரின் வெற்றி! என்கிறது ஆனந்த விகடன்!

சின்னகுத்தூசி

photo-04.jpg

தந்தை பெரியார் அவர்கள் பெரியார் திடலில் நல்லடக்கம் செய்யப்பட்டபோது அப்போதும் முதல்வராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள், தந்தை பெரியார் அவர்கள் தமது வாழ்நாளின் இறுதியில் அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகர் ஆக்க வேண்டும் என்று விரும்பினார்; அதற்காகப் போராட்டம் நடத்த வேண்டும் என்றும் பிரகடனம் வெளியிட்டிருந்தார். இன்று அவரது விருப்பம் நிறைவேற்றி வைக்கப்படாத நிலையில் நாம் அவரை அடக்கம் செய்கிறோம். பெரியாரின் நெஞ்சில் ஒரு முள் போல அந்த நிறைவேற்றப்படாத அறிவிப்போடு சேர்த்து அவரை நாம் அடக்கம் செய்கிறோம்

என்று கண்களில் நீர் பனிக்க துக்கம் தொண்டையை அடைக்க தழுதழுத்த குரலில் கூறினார்.

2006ல் தி.மு.கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றபின் மளமளவென்ற பெரியார் கொள்கைகள் பலவற்றை திராவிடர் இயக்கக் கொள்கைகள் பலவற்றை நிறைவேற்றி வைப்பதில் தீவிரம் காட்டினார் கலைஞர். அதனையொட்டி பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளாக அவர் காலத்திலேயே நிறைவேற்றப்படாமல் போய்விட்ட அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அவரது இறுதி ஆசையை சட்டமாக்கினார். சட்டமாக்கியதோடு நின்றுவிடவில்லை. அவர் திருவண்ணாமலை, பழநி, மதுரை, திருச்செந்தூர், திருவரங்கம், திருவல்லிக்கேணி ஆகிய ஆறு இடங்களில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை அமைத்துத் தந்தார். இந்தப் பள்ளிகளில் தலித்துகள் உள்ளிட்ட அனைத்துச் சாதிகளைச் சேர்ந்த பெற்றோரும் தங்களது பிள்ளைகளைச் சேர்க்க ஆர்வம் காட்டினர்.

இன்று தமிழகத்தின் பல்வேறு கோயில் களிலும் அர்ச்சகர்களாக இருக்கும் எத்தனை பேருக்கு அர்ச்சனைக்குரிய மந்திரங்கள் முழுமையாகத் தெரியும் என்பது சந்தேகத்துக் குரியதே! எத்தனை பேர் முறையாக இதற்காக சிறந்த குருக்களிடம் பயிற்சி பெற்றவர்கள் என்பதும் கேள்விக்குரியதே.

ஆனால் கலைஞர் அரசு உருவாக்கிய அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில், கோயிலின் அமைப்பு முறைகள், வேதங்கள், ஜோதிடம், அர்ச்சனை செய்யும் முறை, ஆகமங்கள், கிரந்தம், திருக்குறள், பன்னிரு திருமறைகள், சைவத் தமிழ் இலக்கியங்கள், தேவாரம், திருவாசகம் போன்றவை கற்பிக்கப்பட்டு, பயிற்சியும் அளிக்கப்படுகிறது!

ஒரு சாதியினர் மட்டுமே அர்ச்சகர் ஆகமுடியும் என்ற உயர்சாதி ஆதிக்கத்தின் அடிப்படையில் அர்ச்சகர்கள் ஆனவர்கள், மன்னனுக்குப் பிறகு அவரது மகன் மன்னன் ஆவது போல பரம்பரை பாத்தியதையின் பெயரால் முறையான பயிற்சியோ சமயப் பற்றோ அது தொடர்பான விஷய ஞானமோ இல்லாமலே, ஆட்டமேடிக் அர்ச்சகர்களாக வாய்ப்புப் பெற்று தங்களுக்குத் தெரிந்த அளவில் மந்திரம் சொல்லி அர்ச்சித்து வந்தார்கள். பொதுமக்களும் தங்களுக்குப் புரியாத சமஸ்கிருத மொழியில் அர்ச்சனை நடத்தப்படுவதால் கண்ணை மூடிக் கொண்டு கண்மூடித்தனமாக நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே வழிபட்டு வந்தார்கள்.

கலைஞர் அரசு அர்ச்சகர்களுக்கு உரிய தகுதிகளோடு திறமை மிக்க அர்ச்சகர்களை உருவாக்கித் தந்திருக்கிறது.

அதுமட்டுமா?

இந்தப் பள்ளிகளில் படிக்கும் பலரும் பட்டதாரிகளாகவும், ஜோதிடம், இசை, சிற்பக்கலை என ஒவ்வொரு துறையில் தேர்ந்தவராகவும் உள்ளனர் என்று ஆனந்தவிகடன் (25.6.2008) ஏடு பெருமையோடு குறிப்பிடும் அளவுக்கு இந்தப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பல்துறை வித்தகர்களாகவுமிருக்கிறார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமூக சிந்தனையோடு எடுக்கப்பட்ட முடிவு,இதுவரைகாலமும் சமயத்தின் துணை கொன்டு உருவாக்கப்பட்ட சம்ய வகுப்புவாதத்தின் மூலம் சமூக ஒற்றுமை சிதரடிக்கப்பட்டமைக்கு ஓர் முடிவு வரும் என நம்புவோமாக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளே இல்லை என்ற ஈ வெ ராமசாமி, கடவுள் தொண்டாற்ற இப்படி ஒரு மாற்றத்தை மக்களிடம் வேண்டியதாகச் சொல்லி அரசியல் ஆதரவு தேடிக் கொள்வதிலும்.. மற்றவர்களை முட்டாள்கள் ஆக்குவதிலும்..

ஈ வே ராமசாமியை விட பாரதி கண்ட கனவு பலித்திருக்கிறது என்பது சாலப் பொருந்தும்.

கடவுளை நம்பும் அல்லது கடவுள் நம்பிக்கையுள்ள சமூகத்தில் உள்ள அனைத்து மக்களும் ஒரே எண்ண ஓட்டத்தோடு இறை பணியில் கலக்க முற்பட்டுள்ளனர் என்று சொல்வதே சிறப்பானது.

இதற்குள்ளும் "சாதி" என்ற பதப்பிரயோகத்தை உபயோகித்து.. மக்களை சாதிய சமூகங்களாக பிரித்து இனங்காட்டி உசுப்பேற்றி விடுற வேலைகளை விகடன் செய்யாமல் தவிர்த்திருப்பின் இக்கட்டுரை வரவேற்கத்தக்கதாக இருந்திருக்கும்.

மற்றும்படி... அனைத்து மக்களுக்கும் அவரவர் விரும்பும் வடிவில் இறை தொண்டாற்ற அல்லது இறை பணி செய்ய உள்ள உரிமை மீளப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க ஒன்று. இதற்காக விட்டுக்கொடுப்புகளோடு அக்கறைகளோடு புரிந்துணர்வுகளோடு ஒற்றுமையோடு செயற்பட்ட அனைத்து மக்களுக்கும் நன்றி பாராட்ட வேண்டும். :icon_mrgreen:

Link to comment
Share on other sites

இதற்காக விட்டுக்கொடுப்புகளோடு அக்கறைகளோடு புரிந்துணர்வுகளோடு ஒற்றுமையோடு செயற்பட்ட அனைத்து மக்களுக்கும் நன்றி பாராட்ட வேண்டும். :wub:

யாறையுக்கண்ணா நன்றி சொல்லுறீங்கள்? அந்த விட்டுக்கொடுப்புச் செய்தவர்கள் யாரெண்டு சொன்னா நங்களும் தெரிஞ்சுக்கிறம்.

அது சரி. அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகராகலாம் எண்ட சட்டத்தைக் கொண்டு வந்த கலைஞர் கருணாநிதிக்கு நன்றி சொல்லலாமா வேண்டாமா?

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்!!!

மேன்மைகொள் கிறிஸ்தவ நீதி விளங்குக உலகமெல்லாம்.

மேன்மைகொள் புத்த நீதி விளங்குக உலகமெல்லாம்.

மேன்மைகொள் இசுலாமிய நீதி விளங்குக உலகமெல்லாம். இப்படியும் சொல்லாம்தானே அண்ணை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி. அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகராகலாம் எண்ட சட்டத்தைக் கொண்டு வந்த கலைஞர் கருணாநிதிக்கு நன்றி சொல்லலாமா வேண்டாமா?

இதை ஏற்கனவே எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னர் பாரதி செய்து காட்டி விட்ட போதும்.. அத்தனை ஆண்டுகளுக்கும் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் இன்று தங்கள் அரசியல் அந்திம வேளையில்.. சில சட்டங்களை இயற்றுகிறார்கள்.. நல்லதே நடக்கட்டும்.

இப்படியே சாதிச் சங்கங்கள் இருக்க முடியாது.. சாதிக் கட்சிகள் இருக்க முடியாது.. சாதி வகுப்புக்கள் இருக்க முடியாது.. சாதிச் சான்றிதழ்கள் அரசு உடமையாக இருக்க முடியாது.. சாதி ரீதியான ஒடுக்கீடுகள் நிறுத்தப்பட்டு.. கல்வி பொருளாதார ரீதியான பின்னடைவுகளைக் கண்டுள்ள மக்கள் அவற்றின் கீழ் வகைப்படுத்தப்பட்டு (உ+ம்: மேற்குநாடுகளில் அரச உதவி சலுகைகள் பெறும் மக்கள் போல..!) ஏனைய மக்களுக்குடன் நிகராக கல்வி பொருளாதார வளர்ச்சி பெறவும் நாட்டின் வளர்ச்சியில் பங்கெடுக்கவும் சமூகத்தின் வளர்ச்சியில் பங்கெடுக்கவும் இவர்கள் சட்டங்களை இயற்றத் தயாராகவா இருக்கின்றனரா..????!

வெறும்.. ஒன்றிரண்டு.. பிராமண சமூகத்தை நோக்கி பழிவாங்குதல் போன்ற நடவடிக்கைகளை ஒரு அரசுத் தலைமை செய்து கொண்டிருக்காது.. உருப்படியாக தமிழகத்தில் நல்ல மாற்றங்களைக் கொண்டு வர பல சட்ட வழிமுறைகள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி ஆராயவும்.. அமுல்படுத்தவும் இவர்கள் இதய சுத்தியுடன் செயற்படுவார்களா..??! நிச்சயம் இல்லை. சாதிகள் இல்லையே.. பிரிவினைகள் எங்கே.. அரசியல் எங்கே.. இவர்களுக்கான கதிரைகள் எங்கே..??! :wub:

Link to comment
Share on other sites

வெறும்.. ஒன்றிரண்டு.. பிராமண சமூகத்தை நோக்கி பழிவாங்குதல் போன்ற நடவடிக்கைகளை ஒரு அரசுத் தலைமை செய்து கொண்டிருக்காது..

அனைத்து சமூகத்தவரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் பிராமணருக்கு எதிரானதா? அப்போ நீங்கள் இதை எதிர்க்கிறீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து சமூகத்தவரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் பிராமணருக்கு எதிரானதா? அப்போ நீங்கள் இதை எதிர்க்கிறீர்களா?

இந்த குறிப்பிட்ட முடிவு பிராமண சமூகத்துக்கு எதிரானதாகக் கொள்ள முடியாது. ஆனால் தமிழகத்தின் தற்போதைய தலைமையில் உள்ளவர்கள்.. வைக்கும் விமர்சனங்கள் பிராமண சமூகத்தைக் குறி வைப்பது ஒன்றும் உலகம் அறியாத சங்கதியல்ல. அது ஏற்புடையதல்ல..! :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் படித்து அர்ச்சகராகும் தகுதியைப் பெற்றாலும் அர்ச்சகர்களாகத் nதாழில் பார்க்க எத்தனை கோயில்கள் அனுமதிக்கும். அனேக கோயில்கள் தனியார் சொத்து. அவர்கள் வைத்ததுதான் சட்டம்.

அர்ச்சகர் பதவிகளுக்குத் தகுதியானவர்களை விண்ணப்பிக்கவைத்து நேர்முகப் பரீட்சையின்மூலம் தெரிவு செய்து பதவி வழங்க முற்படும்போது தற்போதுள்ள சாதிப் பிரச்சiனையைப் போலப் பத்து மடங்கு அதிகமாக லஞ்சம் ஊழல் அரசியல் செல்வாக்குப் போன்ற பிரச்சனைகள் வந்து புகுந்கொள்ளும். இதற்கெல்லாம் தீர்வுகாணவேண்டும்.

கடவுளுக்கே லஞசம் கொடுத்துத்தான் அர்ச்சகர் பதவி பெறவேண்டுமென்னும் சீரழிந்த நிலையுருவாகாமல் அந்த விடயத்திலும் கலைஞர் கவனமெடுப்பாராயிருந்தால் மட்டுமே பாரதிகண்ட கனவும் பெரியார் கண்ட கனவும் நிறைவேற வாய்ப்புக்கள் உள்ளன.

Link to comment
Share on other sites

சுடலை வெட்டியான் வேலைக்கும், மலம் அள்ளும் வேலைக்கும் எல்லா சாதியினரும் செய்ய வேண்டும் எண்ற கட்டாய சட்டம் வேண்டும்.

Link to comment
Share on other sites

எந்த கோயில்கள் எல்லாம் தனியார் சொத்து என்று கரு நினைக்கிறீர்கள் ....

தமிழகத்தில் பெரும்பான்மையான (பிராமணர் அர்ச்சகராக இருக்கும் ) கோயில்கள் எல்லாமே அரசு அற நிலையத்துறையின் கீழ் தான் வருகிறது ....தனியார் கோயில்கள் களில் 90 % பிற சாதியினரே அர்ச்சகர்களாக உள்ளனர்....

நல்லவன்ரோ கெட்டவரோ ஒரு சில நல்ல சட்டங்கள் இயற்றினால் சிலருக்கு ஏன் பொறுக்க முடியவில்லை???

பாரதி கனவு கண்டால் என்ன அதை பெரியாரோ அல்லது கருணா நிதியோ காணக்கூடாதா???

எல்லோரும் படித்து அர்ச்சகராகும் தகுதியைப் பெற்றாலும் அர்ச்சகர்களாகத் nதாழில் பார்க்க எத்தனை கோயில்கள் அனுமதிக்கும். அனேக கோயில்கள் தனியார் சொத்து. அவர்கள் வைத்ததுதான் சட்டம்.

அர்ச்சகர் பதவிகளுக்குத் தகுதியானவர்களை விண்ணப்பிக்கவைத்து நேர்முகப் பரீட்சையின்மூலம் தெரிவு செய்து பதவி வழங்க முற்படும்போது தற்போதுள்ள சாதிப் பிரச்சiனையைப் போலப் பத்து மடங்கு அதிகமாக லஞ்சம் ஊழல் அரசியல் செல்வாக்குப் போன்ற பிரச்சனைகள் வந்து புகுந்கொள்ளும். இதற்கெல்லாம் தீர்வுகாணவேண்டும்.

கடவுளுக்கே லஞசம் கொடுத்துத்தான் அர்ச்சகர் பதவி பெறவேண்டுமென்னும் சீரழிந்த நிலையுருவாகாமல் அந்த விடயத்திலும் கலைஞர் கவனமெடுப்பாராயிருந்தால் மட்டுமே பாரதிகண்ட கனவும் பெரியார் கண்ட கனவும் நிறைவேற வாய்ப்புக்கள் உள்ளன.

Link to comment
Share on other sites

தமிழக வரலாறு சரியாக தெரியவில்லையோ அய்யா ....

இந்த ச்சட்டம் அந்திம வேளையில் இயற்றப்படவில்லை 67 ஆம் ஆண்டு .... தி.மு.க பதவிக்கு வந்ததும் இயற்றப்பட்டு ... உடனே 7 பிராமணர்கள் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கால் ...இந்திய அரசியலமைப்பு ச்சட்டத்திற்கு புறம்பானதாக நிராகரிக்கப்பட்டது 1 பாரதி கண்ட கனவை பல நூறு அவர் சார்ந்த சமூக மக்களால் இந்த நிலை ஏற்பட்டது உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான்

இதை ஏற்கனவே எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னர் பாரதி செய்து காட்டி விட்ட போதும்.. அத்தனை ஆண்டுகளுக்கும் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் இன்று தங்கள் அரசியல் அந்திம வேளையில்.. சில சட்டங்களை இயற்றுகிறார்கள்.. நல்லதே நடக்கட்டும்.

இப்படியே சாதிச் சங்கங்கள் இருக்க முடியாது.. சாதிக் கட்சிகள் இருக்க முடியாது.. சாதி வகுப்புக்கள் இருக்க முடியாது.. சாதிச் சான்றிதழ்கள் அரசு உடமையாக இருக்க முடியாது.. சாதி ரீதியான ஒடுக்கீடுகள் நிறுத்தப்பட்டு.. கல்வி பொருளாதார ரீதியான பின்னடைவுகளைக் கண்டுள்ள மக்கள் அவற்றின் கீழ் வகைப்படுத்தப்பட்டு (உ+ம்: மேற்குநாடுகளில் அரச உதவி சலுகைகள் பெறும் மக்கள் போல..!) ஏனைய மக்களுக்குடன் நிகராக கல்வி பொருளாதார வளர்ச்சி பெறவும் நாட்டின் வளர்ச்சியில் பங்கெடுக்கவும் சமூகத்தின் வளர்ச்சியில் பங்கெடுக்கவும் இவர்கள் சட்டங்களை இயற்றத் தயாராகவா இருக்கின்றனரா..????!

வெறும்.. ஒன்றிரண்டு.. பிராமண சமூகத்தை நோக்கி பழிவாங்குதல் போன்ற நடவடிக்கைகளை ஒரு அரசுத் தலைமை செய்து கொண்டிருக்காது.. உருப்படியாக தமிழகத்தில் நல்ல மாற்றங்களைக் கொண்டு வர பல சட்ட வழிமுறைகள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி ஆராயவும்.. அமுல்படுத்தவும் இவர்கள் இதய சுத்தியுடன் செயற்படுவார்களா..??! நிச்சயம் இல்லை. சாதிகள் இல்லையே.. பிரிவினைகள் எங்கே.. அரசியல் எங்கே.. இவர்களுக்கான கதிரைகள் எங்கே..??! :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக வரலாறு சரியாக தெரியவில்லையோ அய்யா ....

இந்த ச்சட்டம் அந்திம வேளையில் இயற்றப்படவில்லை 67 ஆம் ஆண்டு .... தி.மு.க பதவிக்கு வந்ததும் இயற்றப்பட்டு ... உடனே 7 பிராமணர்கள் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கால் ...இந்திய அரசியலமைப்பு ச்சட்டத்திற்கு புறம்பானதாக நிராகரிக்கப்பட்டது 1 பாரதி கண்ட கனவை பல நூறு அவர் சார்ந்த சமூக மக்களால் இந்த நிலை ஏற்பட்டது உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான்

சட்டம் ஒன்றை இயற்றுவது முக்கியமல்ல வேலவன். அதை அமுலாக்கிற கடப்பாட்டை இயற்றுபவர்கள் கொண்டிருக்கும் போதுதான் அது சட்டமாகிறது. 67 இல் எழுத வேண்டிய கட்டுரையை 2008 இல் விகடன் எழுத வேண்டி வருகிறது என்றால்.. அதன் பின்னால் இருந்த காரண கர்த்தாக்களில்.. அந்திம ஞானம் பெற்ற அரசியல்வாதிகளும் அடங்குவர் என்பதை உங்களால் மறுதலிக்க முடியுமா..??! :o

Link to comment
Share on other sites

சகோதரா ... இந்தியாவில் மா நில அரசு இயற்றும் சட்டங்கள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மீறாத வகையில் இருக்க வேண்டும் .... அப்படி மீறும்படி இருந்தால் அந்த சட்டத்தை உச்ச நீதிமன்றம் செல்லாது என்று அறிவித்து விடும்.

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் எல்லா இந்தியர்களும் சமம் என்று சொல்லப்பட்டு எல்லோருக்கும் எல்லா உரிமையும் உண்டு யார் வேண்டுமானாலும் சனாதிபதியாகலாம் .. என்று கூறப்பட்டதோடு.

கோவில்களில் அர்ச்சகராவதற்கு பிராமணர்களுக்கு மட்டுமே உரிமை உண்டு என்றும் எழுதப்பட்டுள்ளது... இதை காரணம் காட்டி 7 உயர் பதவி பிராமணர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகி தமிழக அரசு சட்டத்தை செல்லாததாக்கி விட்டனர்..

இப்போது புரிகிறதா ஏன் தாமதம் என்று....

சட்டம் ஒன்றை இயற்றுவது முக்கியமல்ல வேலவன். அதை அமுலாக்கிற கடப்பாட்டை இயற்றுபவர்கள் கொண்டிருக்கும் போதுதான் அது சட்டமாகிறது. 67 இல் எழுத வேண்டிய கட்டுரையை 2008 இல் விகடன் எழுத வேண்டி வருகிறது என்றால்.. அதன் பின்னால் இருந்த காரண கர்த்தாக்களில்.. அந்திம ஞானம் பெற்ற அரசியல்வாதிகளும் அடங்குவர் என்பதை உங்களால் மறுதலிக்க முடியுமா..??! :o
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.