Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

இப்படியும் மனிதர்கள் ............


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியும் மனிதர்கள் ................

வழக்கம் போல புலம் பெயர்ந்த ஒரு பெண்ணின் கதை இது .

அழகான கிராமிய மனம் கொண்ட ஒரு சிறு ஊர் ,அதில் இன்பமாக வாழ்ந்த ஒரு குடும்பத்தில் மூன்று ஆண்களிடையே ஒரு பெண் பருவ வயது அடைந்ததும் திரு மணம் எனும் பொன் விலங்கு பூட்டி வாழ்க்கை எனும் காலடி வைத்த போது ,கொண்டவனின் கோலம் ,கண்டு உறவுகள் மனங்கள் கலங்கின . ...வருடங்களும் ஓட ,இரு ஆண் பிள்ளை களின் தந்தை ஆனான் . அரபூ நாட்டில் வேலை பார்த்தவன் ,பல தில்லு முல்லுகளால் ,இடை நிறுத்த பட்டு சொந்த ஊர் வந்தான் ...

குடிஉம்... குடித்தனமுமாக ..வாழும் காலத்தில் ,வேலை இன்றி இருந்தான் ..அவளது l சக உறவுகள் புலத்தில் இருந்து உதவி செய்து ..போக்கு வரத்து செய்யும் வாகனம் எடுத்து கொடுத்தார்கள் ...செய் நன்றி மறந்து ..எனக்கு ... என்ன குறை ..தூக்கி விட ஆட் பலம்... உண்டு என்று ...இறுமாப்பு வேறு ...புலத்தில் தும்படியில் தான் சக உறவுகள் கை கொடுத்தன என்பது வேறு விடயம். என் செய்வது தங்கை ஆயிற்றே ....என்று .,,

அவன் முன்னேறிய ... பாடு இல்லை .காசு புழங்க ,குடியும் அதிகம் , நண்பர்களும் சேர்ந்து கொண்டார்கள் . ..கொண்டவளும் பேசா மடந்தை ஆனாள். ...மீண்டும் மீண்டும் ..பணம் .தேவை ...வாய்ப்பு இருந்தும் அவனுக்கு வாழ வழி தெரியவில்லை . ஒரு வாறாக புலம் பெயரவும் உதவி செய்தார்கள்.... வந்தவன் ஒழுங்காக இருந்தானா?...அதுவும் இல்லை ..

.வந்த கடன் ...குடும்ப பிரிவு ...வாய் திறந்தால் பொய் தான் மணக்கும் ...புழுகு வேறு ...ஒரு வாறு ...அரச தயவால் ...குடும்பம் வந்தது . மீண்டும் உதவி ...உதவி...எத்தனை... மட்டும் .வந்தவள் தன் திறமையால் ஒரு வேலை தேடி .. ..குடும்பம் தலை எடுத்து வரும் ...நாளில் ..நாய் வால்... போன்று ..வேதாளம் ...மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதை .

அலுமாரிக்குடி ,...கள்ள குடி . ஜூஸ் கேன் ... இல் ஜூஸ் இக்கு பதில் ... விஸ்கி ...சூது வாது... தெரியாத மனிவி ...அவள் சக உறவுகளும் கை விட்டன ...அவனுக்கு இது நல்ல வாய்ப்பு . காரில் குடி ...ஒளித்து குடி , கைது, மறியல் ,,வைத்திய சாலை , புனர் வாழ்வு ...எஅதுவுமே .. சரிவர இல்லை ...எல்லாம் ......மன கோலம் ...

பிள்ளைகளுக்காக.... என்றாலும் ..நாட்டில் எத்தனை அவலங்கள் ...பசி ..பட்டினி...இது ஒரு திருந்தாத ஜென்மம் .இருந்த என்ன லாபம் ...தற்போது ..வீட்டில் ...கை நடுக்கம் ...மறதி ...

அவள் ,....வேலைக்கு ... போகிறாள் ....இவர்களும் மனிதர்களா?....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீங்கள் சரியான அல்பமாய் இருக்கிறீங்கள் பிரியன்.....மணமகளுக்கு ஒரு 18ல் இருந்து 20 க்குள் என்று மாற்றி விண்ணப்பிக்கவும்.......!  😁 கணிதம் :  62 - 18 = 44.....!                      18 - 62 = ? 😴.....!
    • உடல்நலம்: காற்று மாசு குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை -'நினைத்ததைவிட மோசம்' 16 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP   படக்குறிப்பு, காற்று மாசின் மோசமான தாக்கம் அதிகமுள்ள உலக நாடுகளில் இந்தியாவும் ஒன்று தாங்கள் முன்பு கருதியதை விட காற்று மாசுபாடு மிகவும் அபாயகரமானதாக இருக்கிறது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. மேலும் காற்றை மாசுபடுத்தும் நைட்ரஜன் டை ஆக்ஸைட் போன்ற நச்சுப் பொருட்களின் அதிகபட்ச பாதுகாப்பு அளவை குறைத்துள்ளது. காற்று மாசுபாடு தொடர்புடைய நோய்களால் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 70 லட்சம் பேர் தங்கள் வாழ வேண்டிய காலத்துக்கு முன்பே இறப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. நடுத்தர மற்றும் ஏழை நாடுகள் தங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு மரபுசார் எரிபொருட்களை நம்பியுள்ளதால், அவர்கள்தான் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். புகைப் பிடித்தல் மற்றும் ஆரோக்கியமற்ற உணவை உட்கொள்வது போன்ற பிரச்னைகளுக்கு நிகராக காற்று மாசுபாட்டை வைத்திருக்கிறது உலக சுகாதார அமைப்பு. வரும் நவம்பர் மாதம் COP26 உச்சி மாநாடு நடக்கவுள்ளது. அதற்குள், 194 உறுப்பு நாடுகளையும் தங்களின் நச்சுக் காற்று உமிழ்வைக் குறைக்க வலியுறுத்தியுள்ளது உலக சுகாதார அமைப்பு. மேலும் பருவநிலை மாற்றம் தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளது. புதன்கிழமை வெளியிடப்பட்ட புதிய வழிகாட்டுதலில், பி எம் 2.5 நுண்துகள்களின் அதிகபட்சம் சுவாசிக்கத்தக்க அளவு பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நுண் துகள்கள் மின்சார உற்பத்திக்காக எரிபொருட்கள் எரிக்கப்படுவதாலும், வீடுகளில் வெப்பமூட்டும் அமைப்புகளாலும், வாகனங்களின் இன்ஜின்களாலும் உருவாகின்றன. உங்கள் உணவு ஊட்டச்சத்து மிக்கதா என அறிவது எப்படி? காற்று மாசு மிகுந்த டெல்லியில் குழந்தைகளுக்கு ஆஸ்துமா ஏற்படும் ஆபத்து அதிகம்: ஆய்வு "தற்போது முன்மொழியப்பட்டிருக்கும் வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுக்கு காற்று மாசுபாடுகள் குறைக்கப்பட்டால், பி எம் 2.5 நுண் துகள்களால் ஏற்படும் மரணங்களில் கிட்டத்தட்ட 80 சதவீதத்தைத் தவிர்க்கலாம்" என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இதோடு பி எம் 10 என்கிற நுண் துகள்களின் பரிந்துரைக்கப்பட்டுள்ள அதிகபட்சம் சுவாசிக்கத்தக்க அளவும் 25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. காற்று மாசுபாட்டுக்கும் இதய நோய் மற்றும் மாரடைப்புக்கும் தொடர்புள்ளது. குழந்தைகள் மத்தியில் காற்று மாசுபாடு நுரையீரலின் வளர்ச்சியைக் குறைத்து, ஆஸ்துமாவை அதிகப்படுத்தும். "காற்றின் தரத்தை உயர்த்துவது பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும். நச்சுக் காற்று உமிழ்வைக் குறைப்பது காற்றின் தரத்தை உயர்த்தும்" என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. சுற்றுசூழல் பகுப்பாய்வாளர் ரோஜர் ஹரபினின் பகுப்பாய்வு ஒவ்வொரு தசாப்தத்திலும் மெல்ல பாதுகாப்பான மாசுபாட்டு அளவு குறைக்கப்பட்டு வருகிறது. பட மூலாதாரம்,REUTERS இதய நோய் மற்றும் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு இது செய்தியாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் இந்த நச்சுப் பொருட்கள் மற்றும் வாயுக்கள் முன்பு கருதியதை விட குறைந்த வயதிலேயே மக்களை பாதிக்கக் கூடியதாக இருக்கிறது. மிக ஆபத்தான மாசுபாட்டை ஏற்படுத்தும் பொருட்கள் எவ்வளவு இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்திருப்பதை விட, பிரிட்டனின் சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது நான்கு மடங்கு அதிகம். கண்ணுக்குத் தெரியாத மிகச் சிறிய துகள்களை, நுரையீரலுக்குள் இழுத்து சுவாசிப்பதை நிறுத்துவது தான் மிகப் பெரிய பிரச்னை. அதை நிறுத்துவது மிகவும் கடினம். வாகனங்கள் மற்றும் வெப்பமூட்டும் அமைப்புகளிலால் காற்று மாசுபடுகிறது. ஆனால் மனிதர்களை பாதிக்கும் நுண் துகள்கள் மற்ற சில வழிகள் மூலமாகவும் காற்றில் கலக்கின்றன அல்லது வேதிப் பொருட்களோடு வேதிவினை ஏற்படும் போது காற்றில் உருவாகிறது. பெயின்ட்கள், சுத்தம் செய்யும் திரவங்கள், சால்வென்ட்கள், வாகனங்களின் டயர்கள், பிரேக் பாகங்கள் போன்றவைகள் நுண் துகள்களின் தோற்றுவாய்களாக இருக்கின்றன. எனவே மின்சார வாகனங்கள் கூட ஒரு கச்சிதமான தீர்வைக் கொடுக்க முடியாது. நீங்கள் நகரத்தில் வாழ்கிறீர்கள் என்றால், என்னதான் முயற்சி செய்தாலும் மாசுபாட்டிலிருந்து தப்பிப்பது மிகவும் கடினம். https://www.bbc.com/tamil/science-58662495
    • தமிழர் வரலாறு: கேரள, கர்நாடக பகுதிகளில் நடக்கவுள்ள தமிழ்நாடு அரசின் தொல்லியல் ஆய்வு முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,KERALA COUNCIL FOR HISTORICAL RESEARCH தமிழ்நாடு தொல்லியல் துறை தமிழ்நாட்டிற்கு வெளியில் வேறு மாநிலங்களில் உள்ள பாலூர், வேங்கி, தலக்காடு போன்ற இடங்களில் தொல்லியல் ஆய்வுகளை நடத்தப்போவதாக தெரிவித்துள்ளது. பாலூர், வேங்கி ஆகிய இடங்களின் குறித்து முந்தைய கட்டுரையில் பார்த்துவிட்ட நிலையில், தலக்காடு, பட்டனம் ஆகிய இடங்களின் பின்னணி குறித்து இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். கர்நாடக மாநிலத்தின் தலக்காடு தலக்காடு, கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து சுமார் 45 கி.மீ. தூரத்தில் காவிரியின் இடது கரையில் அமைந்திருக்கிறது. தற்போது பாலைவனத்தைப் போலக் காட்சியளிக்கும் தலக்காட்டில் ஒரு காலத்தில் 30க்கும் மேற்பட்ட கோயில்கள் இருந்தன. இவற்றில் பெரும்பகுதி தற்போது மணலில் மூழ்கிவிட்டன. தலக்காடு கங்க வம்ச மன்னர்களின் தலைநகரமாக இருந்த பிரதேசம். 11ஆம் நூற்றாண்டுவாக்கில் மேலைக் கங்கர்கள் சோழர்களிடம் தோற்றுப்போயினர். அப்போதிலிருந்து இந்தப் பகுதி ராஜராஜபுரம் என்று அழைக்கப்பட்டது. இதற்கு ஒரு நூற்றாண்டிற்குப் பிறகு, ஹொய்சாள மன்னனான விஷ்ணுவர்தன சோழர்களை மைசூர் பிரதேசத்திலிருந்து விரட்டியடித்தான். முந்தைய பகுதி:தமிழ்நாடு தொல்லியல் துறை வெளிநாடுகளில், வெளி மாநிலங்களில் அகழாய்வு செய்ய விரும்புவது ஏன்? இதற்குப் பிறகு தலக்காடு பகுதியில் ஏழு சிறு நகரங்களும் ஐந்து மடங்களும் ஸ்தாபிக்கப்பட்டன. காவிரியின் எதிர்ப்புறத்தில் மலிங்கி என்ற சிறு நகரம் இருந்தது. 14ஆம் நூற்றாண்டுவரை இந்தப் பகுதி ஹொய்சாளர்களிடம் இருந்தது. பிறகு விஜயநகரப் பேரரசிற்கு உட்பட்ட சிற்றரசர்கள் வசம் வந்தது. மைசூரை ஆண்ட உடையார்கள் 1630ல் இதனை கைப்பற்றினர். இப்படி அந்தப் பகுதி மைசூர் மன்னர்களால் கைப்பற்றப்பட்டது குறித்தும் அதனால் ஏற்பட்ட சாபம் குறித்தும் ஒரு கதை இப்பகுதியில் பேசப்படுகிறது. தலக்காட்டின் சாபம் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் விஜயநகரப் பேரரசின் பிரதிநிதியாக திருமலை ராயன் என்ற மன்னன் ஆண்டுவந்தார். அவருக்கு குணப்படுத்த முடியாத நோய் ஏற்படவே, தலக்காட்டில் இருந்த வைத்தீஸ்வரன் கோயிலுக்கு வேண்டிக்கொள்ள சென்றார். அவருடைய இரண்டாவது மனைவியான அலமேலம்மாள் ஸ்ரீரங்கப் பட்டனத்தில் இருந்தபடி, நாட்டை நிர்வாகம் செய்துவந்தாள். ஆனால், சீக்கிரத்திலேயே கணவன் இறக்கப்போகிறான் என்பது தெரியவந்தது. இதனால், ஆட்சிப் பொறுப்பை மைசூரை ஆண்ட உடையார்களிடம் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு தலக்காட்டிற்குப் புறப்பட்டார் அலமேலம்மாள். கீழடி நாகரிகம்: "இந்திய வரலாறு தமிழ்நாட்டிலிருந்து எழுதப்பட வேண்டும்" - மு.க. ஸ்டாலின் கீழடி நாகரிகம் 2600 ஆண்டுகள் பழமையானது - வியப்பூட்டும் அகழ்வாய்வு முடிவுகள் ஆனால், ராணியிடம் இருந்த நகைகளைப் பறிக்க விரும்பிய மைசூர் மன்னன், அதனைப் பறிக்க ஒரு சிறிய படையை தலக்காட்டிற்கு அனுப்புகிறார். இதையடுத்து நகைகளோடு காவிரியாற்றிற்குள் இறங்கும் அலமேலம்மாள், நகைகளை நதிக்குள் தூக்கி எறிகிறார். தானும் அதில் மூழ்கி இறந்துபோகிறார். உயிர் பிரிவதற்கு முன்பாக ஒரு சாபமிடுகிறார். அந்த சாபம் இதுதான்: "தலக்காடு மண்ணோடு மண்ணாகட்டும், மலிங்கி சுழலில் மூழ்கட்டும், மைசூர் அரசர்களுக்கு பிள்ளையில்லாமல் போகட்டும்". இதற்குப் பிறகு இரண்டு விசித்திர சம்பவங்கள் உண்மையிலேயே நடந்தன. ஒன்று, பல நூற்றாண்டுகளாக துடிப்பு மிக்க நகரமாக இருந்த தலக்காட்டில் பல மீட்டர் உயரத்திற்கு மணல் சேர ஆரம்பித்தது. அதற்குப் பிறகு, உடையார் வம்ச அரசர்களுக்கு பட்டத்திற்கு வரும் வகையில் குழந்தைகளே பிறக்கவில்லை. சமீபத்தில் இறந்த ஸ்ரீ கந்ததத்த உடையார் வரை வாரிசு இல்லாமலேயே இறந்தார்கள் (ஆனால், இப்போதைய மகாராஜாவுக்கு குழந்தை பிறந்திருக்கிறது). 17ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு இந்தப் பகுதியில் மணல் சேர்வது தொடர்ந்து அதிகரித்துவருகிறது. ஒவ்வோர் ஆண்டும் 9-10 அடி உயரத்திற்கு மணல் சேர்ந்து வருவதால், மக்கள் இந்தப் பகுதியைவிட்டு தொடர்ந்து வெளியேற வேண்டியிருக்கிறது. முப்பதுக்கும் மேற்பட்ட கோயில்கள் மணலுக்கடியில் மூழ்கியிருக்கும் நிலையில், கீர்த்தி நாராயணா கோயில் மட்டும் அகழாய்வு செய்து மீட்கப்பட்டுள்ளது. 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஆனந்தேஸ்வரா மற்றும் கௌரி சங்கரா கோவில்கள் மீட்டெடுக்கப்பட்டன. பாதாளேஸ்வரா கோயிலின் சுற்றுச் சுவர்களில் சில கல்வெட்டுகள் தென்பட்டன. இதில் ஒரு கல்வெட்டு கங்கர்கள் காலத்தைச் சேர்ந்த கன்னடக் கல்வெட்டு. மற்ற கல்வெட்டுகள் தமிழில் இருந்தன. கௌரிசங்கரா கோயிலில் உள்ள கல்வெட்டு, அந்தக் கோயிலானது சிக்கதேவராய உடையார் காலத்தில் கட்டப்பட்டதைத் தெரிவிக்கிறது. YouTube பதிவை கடந்து செல்ல, 1 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம் YouTube பதிவின் முடிவு, 1 "கங்கர்கள் ஓசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி வரை ஆட்சிசெய்தார்கள். கங்கர்கள் கால கல்வெட்டுகள் கிருஷ்ணகிரியில்கூட கிடைக்கின்றன. ஒரு காலத்தில் மாண்டியா பகுதி தமிழ்நாட்டைச் சேர்ந்த பகுதிதான். தலக்காட்டிற்கும் சோழர்களுக்கும் தொடர்பு இருக்கிறது. ஆகவே அப்பகுதியில் அகழ்வாராய்ச்சி செய்ய தமிழக தொல்லியல் துறை விரும்புகிறது" என்கிறார் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை பேராசிரியரும் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையுடன் இணைந்து செயல்படுபவருமான பேராசிரியர் கே. ராஜன். பட்டனம் (முசிறி) பட மூலாதாரம்,KERALA COUNCIL FOR HISTORICAL RESEARCH கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு சிறிய கிராமம்தான் பட்டனம். இந்தப் பகுதியில் நீண்ட காலமாகவே, பல்வேறு பணிகளுக்காக நிலத்தைத் தொண்டும்போது மேலடுக்கிலேயே பெரிய அளவில் ஓடுகள் போன்றவை கிடைத்துவந்ததையடுத்து இந்தப் பகுதி ஒரு தொல்லியல் தளமாக அடையாளம் காணப்பட்டது. இந்த இடத்தில் வரலாற்று ஆய்வுக்கான கேரளா கவுன்சில் (கேசிஎச்ஆர்) 2007ல் இருந்து 2020வரை பத்து முறை தொல்லியல் ஆய்வுகளை நடத்தியுள்ளது. பதினொன்றாவது ஆய்வு இந்த மாதத் துவக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கி.மு. ஆயிரமாவது ஆண்டிலிருந்து இந்த இடத்தில் மக்கள் வசித்ததற்கான தொல்லியல் பொருட்கள் இங்கிருந்து கிடைத்துள்ளது. கி.மு. 3 மூன்றாம் நூற்றாண்டில் இருந்து கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுவரை இந்தப் பகுதி மிகவும் துடிப்பு மிக்க பகுதியாக இருந்திருக்கிறது. பட மூலாதாரம்,KERALA COUNCIL FOR HISTORICAL RESEARCH பாமா என்ற தனியார் அமைப்பு 2006 முதல் 2016 வரை பட்டினம் பகுதியில் ஆய்வு நடத்தியுள்ளது. இந்த ஆய்வில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் சேகரிக்கப்பட்டன. வீடுகளில் கூரை அமைக்க பயன்படுத்தப்பட்ட ஓடுகள் கிடைத்தன. சுமார் ஏழுரை கிலோ மிளகும் கிடைத்தது. சுமார் பத்து ஓடுகளில் தமிழி எழுத்துகள் கிடைத்தன. ஒரு பானை ஓட்டில் ஊர் பா வே ஓ என்றும் ஒரு பானை ஓட்டில் அமண என்ற எழுத்துகளும் கிடைத்திருக்கின்றன. சங்ககால சேர நாட்டு துறைமுகமான முசிறயின் ஒரு பகுதியாகவே பட்டணம் இருக்குமென தமிழக தொல்லியலாளர்கள் கருதுகின்றனர். "சங்க இலக்கியங்களில் வரும் பேரியாறு என்பது தற்போதைய பெரியாற்றைத்தான் குறிக்கிறது. ஆகவே இந்த இடம் தமிழ்நாட்டோடு தொடர்புடைய இடம்தான். தமிழர்களின் தொடர்புகள் எங்கெங்கு இருந்திருக்குமோ, அந்ததந்த இடங்களிலெல்லாம் அகழாய்வு செய்வது தமிழ்நாடு தொல்லியல் துறையின் நோக்கமாக இருக்கிறது" என்கிறார் கே. ராஜன். வேறு மாநிலங்களில் இருக்கும் தொல்லியல் களங்களில் அகழாய்வை மாநிலத் தொல்லியல் துறை நேரடியாக செய்யாது என்றே தெரிகிறது. அங்குள்ள தொல்லியல் சார்ந்த அமைப்புகள், பல்கலைக்கழக தொல்லியல் துறைகள் ஆகியவற்றுடன் இணைந்தே இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். இதன் முடிவுகள் மாநிலத் தொல்லியல் துறையால் வெளியிடப்படும். https://www.bbc.com/tamil/india-58657621
    • எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் (பகுதி – 7) September 4, 2021   — அ. வரதராஜா பெருமாள் —          ஒய்யாரக் கொண்டையில் தாழம்பூ  உள்ளே நிறைந்திருப்பது ஈரும் பேனும்.  இலங்கையின் பொருளாதாரத்தை தென்னாசியாவிலேயே சிறந்த பொருளாதாரம் என இன்னமும் வெளிநாடுகளின் பொருளியலாளர்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையர்களும் அப்படியே பெருமையாகக் கருதிக் கொள்கிறார்கள். ஆனால் உண்மையில் இலங்கையின் பொருளாதாரம் அனைத்து அடிப்படை அம்சங்களிலும் காத்திரமான வலிமைகளாடு இருக்கின்றதா அல்லது மாறாக இங்கு பொருளாதாரத்தின் பிரதான கூறுகளெல்லாம் புற்று நோய்க் குறிகளோடு உள்ளனவா என்பதே கேள்வியாகும்.  இலங்கையின் பொருளாதாரம் தற்போது எதிர்நோக்கி வரும் நெருக்கடிகளை பலரும் கொரோணாவோடு தொடர்பு படுத்தியே புரிந்து கொள்கின்றனர். அரசாங்கமும் அப்படியானதொரு பிரமையையே மக்களுக்கு வழங்கி வருகின்றது. முன்னர் உள்நாட்டு யுத்தம் முடிந்து விட்டால் நாடு செழிப்படைந்து விடும் என்றார்கள்: இன்று கொரோணாவுக்கு முடிவு கட்டி விட்டால் நாடு மீண்டும் முன்னேற்றப்பாதையில் வீறு நடை போடத் தொடங்கி விடும் என்கிறார்கள். ஆனால், இலங்கையின் பொருளாதாரம் தனது சுய பலமாக உள்ள வளங்களைக் கொண்டு சரியான சுயாதீனமான பாதையில் சுயசார்புத் தளங்களைக் கட்டியெழுப்பத் தவறியமை இன்று நேற்றல்ல சுதந்திரம் பெற்ற காலம் தொட்டே தொடர்கதையாக உள்ளதை இக்கட்டுரை முன்னர் பல இடங்களில் சுட்டிக் காட்டியுள்ளது.   அரச படைகளுக்கும் புலிகளுக்கும் இடையிலான யுத்தம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவும் உலக அமைப்புக்கள் பலவும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் புனர்வாழ்வுக்கும் யுத்த அழிவுகளை புனரமைப்பு செய்வதற்காகவும் அள்ளிக் கொடுத்த கொடைகளையும் மிகப் பெருந்தொகை கடனுதவிகளையும் கொண்டு நடத்திய பொருளாதார நடவடிக்கைகளை கூட்டிப் பெருக்கி யுத்தத்தின் பின்னர் நாட்டின் பொருளாதாரம் 30 சதவீதம், 35 சதவீதம் என பாய்ச்சலில் முன்னேறிச் செல்வதாக கணக்குக் காட்டியது அரசாங்கம். ஆனால் அது 2010ம் ஆண்டு தொடங்கிய அந்தப் பாய்ச்சல் அடுத்த ஆண்டுகளில் இறங்கு முகமாகி 2014ம் ஆண்டோடு நாட்டின் பொருளாதாரமானது களைத்துப் போன மாடுகள் இழுக்கும் வண்டி போல் முன்னோக்கி நகர மறுத்தது மட்டுமல்லாது, பின்னோக்கி அடி நகரும் போக்கில் அமையத் தொடங்கியது. 2018ல் மெதுவாக பின்னோக்கி நகரத் தொடங்கிய பொருளாதாரத்தை கொரோணா நோயின் பாதிப்புகள் 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் மேலும் மோசமாக பின்தள்ளிக் கொண்டிருக்கின்றது.   பலமான சுய தளங்களை இலங்கையின் பொருளாதாரம் கொண்டிருந்தால் இவ்வளவு தூரம் மீள முடியா அளவுக்கு ஆழமான பொருளாதார பின்னடைவுகளைகளை அடைந்திருக்க மாட்டாது. இலங்கையின் அண்டை நாடுகளும் மிக அதிக அளவில் கொரோணா நோயின் பாதிப்புக்கு உள்ளானவைதான். ஆனால் அவை ஒரு சில மாதங்களுக்கு உள்ளேயே தமது பொருளாதாரத்தை சுதாகரித்துக் கொண்டன.   2009ம் ஆண்டு முடிவில் 2000 டொலர்களாக இருந்த தலாநபர் தேசிய வருமானம் 2010ன் முடிவில் 2750 டொலராகவும் (டொலர் கணக்கில் ஓராண்டில் 35 சதவீத வளர்ச்சி), 2013 இறுதி வரையான அடுத்த மூன்று ஆண்டுகளின் முடிவில் 3610 டொலராகவும் (அதாவது மூன்று ஆண்டுகளில் மொத்தமாக 31 சதவீத வளர்ச்சி), அதாவது யுத்தம் முடிந்து 4 ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 70 சதவீதத்துக்கு மேல் வளர்ச்சியடைந்ததாக கணக்குப் பார்க்கப்பட்டது. இதை வைத்துத் தான் அப்போது ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்சா அவர்கள் இலங்கையை ஆசியாவின் அதிசயமாக்கி விட்டதாக பெருமிதத்தோடு பிரகடனம் செய்தார். ஆனால் இந்த வளர்ச்சி வீதம் அவருடைய ஆட்சியிலேயே 2014ல் 5.8 சதவீமாக இறங்கி விட்டது.  2015ல் மைத்திரி – ரணில் கூட்டாட்சியானது, இந்தா இலங்கையின் பொருளாதாரத்தை யாரும் நினைத்துப் பாரக்க முடியா வேகத்தில் முன்னேற்றிச் செல்லப் போகிறோம் என்று அரசு கட்டில் ஏறினர். அவர்களுக்கு ஆதரவான நாடுகளெல்லாம் அவர்கள் சாதிக்கட்டும் என அள்ளு கொள்ளையாக கடன்களை வழங்கினார்கள் ஆனால் 2015ன் முடிவில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி டொலர் கணக்கில் வெறுமனே அரை சதவீத அதிகரிப்பையும் 2016ன் முடிவில் 1 சதவீத அதிகரிப்பையுமே காட்டி அதே தேக்க நிலையிலிருந்து அசையாமலேயே நின்றது.  2017ல் இலங்கையர்களின் தலாநபர் தேசிய வருமானம் 4000 டொலர்களைத் தாண்டி விட்டதாக பெருமையடித்தார்கள். ஆனால் உண்மையென்ன 2017ல் டொலர் கணக்கில் தலாநபர் வருமானம் வெறுமனே 90 டொலர்களால் மட்டுமே அதிகரித்தது. அதாவது 2.2 சதவீதம் மட்டுமே அதிகரித்தது. 2015ம் ஆண்டு ஆரம்பத்தில் மைத்திரி – ரணில் ஆட்சி தொடங்கிய பொழுது 3821 டொலர்களாக இருந்த இலங்கையின் தலாநபர் வருமானம் கூட்டாட்சி 2019ல் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் அதே நிலையிலேயே இருந்தது. நான்கு ஆண்டு நல்லாட்சி நிறைவேறி விட்டது – ஈஸ்டர் நாள் தாக்குதலும் நடைபெறவில்லை அப்போதும் கூட இலங்கையின் தேசிய வருமானத்தில் எந்த ஏற்றமும் ஏற்படவில்லை.  2019ம் ஆண்டின் ஈஸ்டர் தாக்குதல் இலங்கையின் உல்லாசப் பயணத்துறை மூலமான அந்நிய செலாவணி வருமானத்தை பெரிதும் பாதித்தது எனினும் இலங்கையின் தலாநபர் வருமானத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.      2009ம் ஆண்டிலிருந்து 2019ம் ஆண்டு வரையான தலாநபர் வருமானம் அமெரிக்க டொலர் கணக்கில்  ஆண்டுகள்  தலாநபர் தேசிய வருமானம் அமெரிக்க டொலரில்  மஹிந்த ஆட்சியில்    2009  2057  2010  2744  2011  3129  2012  3351  2013  3610  2014  3821  மைத்திரி-ரணில் ஆட்சியில்    2015  3842  2016  3886  2017  4077  2018  4057  2019  3852  ஆனால், இதே காலகட்டத்தில் வெளிநாடுகளிடமிருந்து பெற்ற கடன் சுமைகளோ மலை போல் உயர்ந்தன. 2005ம் ஆண்டு 11.8 பில்லியன் டொலர்களாக இருந்த வெளிநாட்டுக் கடன், மஹிந்த ராஜபக்சவின் முதலாவது ஆட்சிக் கால முடிவாகிய 2010ல் இரண்டு மடங்குக்கு மேல் அதிகரித்து 21.7 பில்லியன் டொலர்களானது. அது மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது ஆட்சிக்கால முடிவாகிய 2014 இறுதியில் மேலும் இரண்டு மடங்காக அதிகரித்து 42.2 பில்லியன் டொலர்களாகியது.   2015ம் ஜனவரியில் ஆட்சியை அமைத்த மைத்திரி – ரணில் கூட்டாட்சியானது 2019ம் ஆண்டு அவர்களது ஆட்சி முடிவடைந்த ஐந்தாண்டு காலத்தில் இலங்கையின் வெளிநாட்டுக் கடனை 56 பில்லியன் டொலர்களாக உயர்த்தி சாதனை புரிந்தாலும் 2019ம் ஆண்டில் அட்சிக்கு ராஜபக்சாக்கள் மேலும் கடன்களை வாங்குவதற்காக நாடு நாடாக பெரும் முயற்சிகளை மேற்கொள்கிறார்கள் ஆனால், அவர்களின் வெளிநாட்டு உறவுக் கொள்கையும், கொரோணாத் தொற்றின் பாதிப்பும் ஒருங்கு சேர்ந்து அவர்களுக்கு வெளிநாடுகளிடமிருந்து கடன்கள் கிடைக்கும் வாய்ப்புகளை வெகுவாக குறைத்துள்ளன. ஆனால், ஏற்கனவே வாங்கிய கடன்களை திருப்பிக் கொடுக்க வேண்டிய சுமைகளால் ராஜபக்சாக்கள் திணறிப் போயிருக்கிறார்கள்.  மேற்கூறப்பட்டுள்ள ஒப்பீட்டு விபரங்கள் எதனைக் காட்டுகிற தென்றால் இலங்கையின் பொருளாதாரம் தற்போது எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்கு அடிப்படையான நோய்கள் ஈஸ்டர் நாள் பயங்கரவாதத் தாக்குதல்கள் மற்றும் கொரோணா நோயின் பாதிப்புக்கள் ஆகியவற்றிற்கு முன்னரே பீடித்து விட்டன என்பதனையே.  எந்தக் கோணம் நோக்கினாலும், இலங்கையின் பொருளாதார அமைப்பில் கோணல்களே தெரிகின்றன.  குறைவிருத்தியான உள்ளுர் உற்பத்தி மற்றும் வர்த்தகக் கட்டமைப்புகள்: குறிப்பாகக் கூறினால் உள்ளுர் உற்பத்திகளை நோக்கிய தேசிய பொருளாதார வளர்ச்சி மற்றும் அவையொட்டிய வர்த்தக வளச்சிக்கு மாறாக இலங்கையில் இறக்குமதிகளை மையமாகக் கொண்ட வகையாக வல்லமை கொண்ட நாடுகளோடு கட்டி இணைக்கப்பட்ட தரகு முதலாளித்துவ வளர்ச்சியே ஊக்குவிக்கப்பட்டுள்ளது. உள்ளுர் உற்பத்தி முயற்சிகள் அனைத்தும் அவற்றோடு பின்னிப் பிணைக்கப்பட்டவையாகவே உள்ளன.;  உழைப்பு வளத்தின் பயன்பாட்டிலும் சரி,அது தொடர்பான கல்வி மற்றும் ஆக்கத் திறன் ஊட்டல்களின் கட்டமைப்பிலும் சரி சுதந்திரம் பெற்று 73 ஆண்டுகள் கடந்தும் இன்னமும் காலனித்துவ கால பாரம்பரியத்திலிருந்து மாற்றம் பெற்ற முன்னேற்றங்கள் எதுவும் இலங்கையின் கட்டமைப்பில் ஏற்படுத்தப்படவில்லை.  ஏற்றுமதி வர்த்தகத்தில் தேயிலை, றப்பர், தெங்குப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள் என ஒரு சில பண்டங்களில் மட்டுமே தங்கியிருக்கிறது என்ற விமர்சனங்கள் இலங்கையின் ஏற்றுமதி பொருளாதாரம் பற்றி 1970கள் வரை பரவலாக இருந்தது. 1977ல் ஆட்சியமைத்த ஜே.ஆர். ஜெயவர்த்தனா அரசாங்கம் அறிமுகப்படுத்திய திறந்த தாராள பொருளாதாரமானது தயாரித்த ஆடைகள், இரத்தினக் கற்கள் ஆகிய வேறு ஒரு சில ஏற்றுமதிப் பொருட்களை அறிமுகப்படுத்தியதற்கு அப்பால் வேறேந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. ஏற்றுமதி வருமானத்தில் அரைவாசிக்கு மேல் வருமானம் தருவதாகக் கூறப்படும் ஆடை ஏற்றுமதிகள் ஒரு சில மேலைத் தேச நாடுகளின் கருணையிலேயே தங்கியிருப்பது அனைவரும் அறிந்த விடயமே. தேயிலைக்காவது பன்முகமான நாடுகளின் கோரிக்கையுண்டு. ஆனால்,  ஏற்றுமதிகளைப் பொறுத்தவரையில் அமெரிக்காவும் ஒரு சில ஐரோப்பிய நாடுகளும் கதவை மூடினால் ஆடைத் தொழில் இங்கு படுத்து நித்திரை கொள்ள வேண்டியததான்.   தென்னாவிலேயே சிறந்த பொருளாதாரம் கொண்டதாக சொல்லப்படுகின்ற இலங்கையின் விவசாயத் துறையை நோக்கினாலும் சரி அல்லது ஆக்க உற்பத்தித் துறையை நோக்கினாலும் சரி உற்பத்தித் திறன் விடயத்தில் பாராட்டக்கூடியதாகவோ அல்லது திருப்திப்படக் கூடியதாகவோ இல்லை. நாடு முழுவதுவும் நரம்புகள் போல் நாலா பக்கமும் ஓடும் நதிகளையும், வளமான நிலங்களையும், சாதகமான காலநிலைகளையும் கொண்ட நாடு இலங்கை. இங்கு கிட்டத்தட்ட 60 சதவீத உழைப்பு சக்தி உணவுப் பண்டங்களின் உற்பத்தியிலும், அவற்றின் வர்த்தகத்திலும், அவற்றோடு தொடர்பான சேவைகளிலும் ஈடுபடுத்தப்படுகின்றது. இவ்வாறான இலங்கையின் விவசாயத்தை, 60 சதவீதத்துக்கு மேல் வானம் பார்த்த விவசாய நிலங்களைக் கொண்ட அண்டை நாடான இந்தியாவோடு ஒப்பிட்டோமானால் இங்கு விவசாயத் துறையில் நெல் உற்பத்தியைத் தவிர ஏனையவற்றில் முன்னேறுவதற்கு இன்னமும் எவ்வளவு தூரம் உள்ளதென்பது தெளிவாகும்.   நிலத்தின் நெல் விளைச்சல் திறன் 2019FAO                   கிலோகிராமில் ஒரு ஹெக்டேயருக்கு (அதாவது இரண்டரை ஏக்கர்களுக்கு)    இந்தியா  இலங்கை  நெல்  4057  4795  மரவள்ளிக் கிழங்கு  30527  13650  உருளைக் கிழங்கு  23097  18712  தக்காளி  24337  13276  கரும்பு  80104  50390  கத்தரிக்காய்  17441  13654  பச்சை மிளகாய்  8273  5626  அன்னாசி  16452  9718  இவ்வாறாக இலங்கையின் பொருளாதாரத்தினுடைய ஒவ்வொரு கூறுகளையம் நுணுக்கமாக நோக்கினால் பாராட்டத்தக்கதாக அல்லது எதிர்காலம் பற்றிய நம்பிக்கைகளைத் தரத்தக்கதாக இலங்கைப் பொருளாதாரத்தின் எந்தப் பாகங்கள் உள்ளன எனும் விடயம் சரியான விடைகளற்று கேள்விகளாலேயே நிரம்பியிருக்கிறது.     எண் சாண் உடம்புக்கு தலையே பிரதானம்  அதேபோல ஒரு நாட்டின் தேசிய பொருளாதார முன்னேற்றத்துக்கான முகாமைத்துவ தலைமைப் பொறுப்பு அரசுக்கே உரியதாகும். நாட்டின் தேசிய பொருளாதாரம் சிறப்பாக நிர்வகிக்கப்படுவதற்கு ஆட்சியாளர்கள் அரசாங்கத்தின் நிதி நிர்வாகத்தை சரியாக முகாமைத்துவம் செய்தல் வேண்டும். ஆனால் அரசாங்கம் அரசின் நிதி நிர்வாகத்தை முகாமைத்துவம் செய்வதிலேயே கோட்டை விட்டு விட்டு நிற்கிறது.    நாட்டின் தேசிய பொருளாதார நிர்வாகமும் அரசாங்கத்தின் நிதி நிர்வாகமும் சரியாக முகாமைத்துவம் செய்யப்பட்டால் ஒன்றையொன்று உந்தி முன்னேற்றுபவையாகும். ஆனால் முகாமைத்துவம் பிழையானால் ஒன்றுக்கொன்று பாதகமான தாக்கங்களை  விளைவிப்பவையாகும். அதாவது அரசாங்க நிதி நிர்வாகத்தை சரியாக முகாமைத்துவம் செய்யவில்லையென்றால் ஆட்சியாளர்களால் நாட்டின் தேசிய பொருளாதாரத்தை முன்னேற்றகரமான முறையில் செயற்படுத்த முடியாது என்பதே அர்த்தமாகும். எனவே இங்கு இலங்கையின் தேசிய பொருளாதாரத்தின் பல்வேறு கூறுகளையும் பரிசோதிக்கையில் அரசாங்கத்தின் நிதி நிர்வாகம் தொடர்பான பிரதானமான அம்சங்கள் எவ்வாறாக உள்ளன என்பது பற்றிய தெளிவான புரிதலும் அவசியமாகும்.   அரச நிதி நிர்வாகம் என்பது அரசாங்கம் அரசுக்கான வருமானங்களை பொது மக்களுக்கு பெரும் சுமைகளை ஏற்படுத்தாமல், போதிய அளவு முழுமையாகத் திரட்டுதல் மற்றும் அரசாங்கத்தின் செலவுகளை முறையாக சிறந்த முறையில் மேற்கொள்ளுதல் தொடர்பானதாகும். அந்த வகையில் இலங்கை அரசின் நிதி நிர்வாகத்தை ஆட்சியாளர்கள் எந்தளவு தூரம் முறையாக, சரியாக, சிறப்பாக மேற்கொள்கிறார்கள் என கேள்வி எழுப்பி நோக்கினால், ஆட்சியிலிருக்கும் அரசாங்கத்தைச் சார்ந்தவர்களையும் மற்றும் அரசாங்கத்தை வக்காலத்து வாங்கியே ஆக வேண்டும் என்றிருப்பவர்களையும்; தவிர வேறொவ்வருவரும் கடுமையான விமர்சனங்களைக் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள் என்பது மிகத் தெளிவாகவே உள்ளது. இவ்விடயத்தில் எதிர்கட்சிகள் சார்ந்தவர்கள் மற்றும் எதிர்க் கட்சிகள் சார்பாக வக்காலத்து வாங்குபவர்களை ஒரு புறம் ஒதுக்கி விட்டுப் பார்த்தாலும் உண்மையில் நடுநிலையானவர்கள் மற்றும் பாரபட்சமற்ற சமூக அக்கறை கொண்டவர்கள் எவரும் இங்கு அரசாங்கத்தின் அரச நிதி நிர்வாகம் தொடர்பில் ஓரளவுக்குக் கூட திருப்தியடைய முடியவில்லை என்பதே உண்மையாகும். இங்கு அரசாங்கம் என்பது இப்போது ஆட்சியிலுள்ள அரசாங்கத்தை மட்டும் குறிக்க வில்லை. கடந்த காலங்களில் ஆட்சிக் கட்டிலில்லிருந்த அனைத்து அரசாங்கங்களையும் உள்ளடக்கியே குறிக்க வேண்டியுள்ளது.  சுயமான வளங்களைக் கொண்டு சுயசார்பு பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முனையாது வெளிநாட்டு மூலதனங்களுக்காக நாட்டைத் திறந்து தாராளமயமாக்கி கடைசியில் வெளிநாட்டுக் கடன்களில்லாமல் அரசாங்கத்தை நிர்வகிக்க முடியாது என்ற நிலைக்குக் கொண்டு வந்த அரசாங்கங்கள் அனைத்தும் அரசாங்க நிதி நிர்வாகம் இன்றைய சீரழிவு நிலைக்கு வருவதற்கு பொறுப்பானவையாகும்.   அரச நிதி நிர்வாகம் தொடர்பாக அடுத்த தொடர்களால் சற்று விபரமாக நோக்கலாம்.  (அடுத்து தொடரும் பகுதி – 8)  https://arangamnews.com/?p=6138  
    • புலம்பெயர் புலி அமைப்புகள் வேறு ; புலம்பெயர் தமிழர்கள் என்பது வேறு ; பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்த தவறும் இல்லை - ஆளுந்தரப்பு (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) புலம்பெயர் புலி அமைப்புகள் என்பது வேறு, புலம்பெயர் தமிழர்கள் என்பது வேறு, எனினும்  தமிழ் புலம்பெயர்  அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதிலோ புலம்பெயர் விடுதலைப்புலிகள் அமைப்புடன் பேசுவதிலோ எந்த தவறும் இல்லை. நாட்டை ஐக்கியம் மற்றும் அபிவிருத்தியில் சகலரும் ஒன்றிணைந்து பயணிக்க முடியும் என ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் சபையில் கூறுகின்றனர். நாட்டில் சகல பிரச்சினைகளையும் தீர்க்கும் வேலைத்திட்டங்களை உள்ளக பொறிமுறை மூலமாக தீர்க்க புலம்பெயர் தமிழர் அமைப்புகளுக்கு  ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். ஐக்கியமாக பயணிக்கவே நாம் முயட்சிக்கின்றோம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது கூட்டத்தொடரில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரினால்  இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள வாய்மூல அறிக்கையில் உள்ளடக்க விடயங்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு பிரேரணையில் உரையாற்றும் போதே அவர்கள் இதனை கூறினார், இது குறித்து ஆளுந்தரப்பு உறுப்பினர் சாந்த பண்டார விவாதத்தில் உரையாற்றுகையில், நாட்டின் உள்ளக பிரச்சினைகளை தீர்க்க புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்த கருத்து தொடர்பில் பல விமர்சனக்கருத்துக்கள் எழுந்துள்ளன. புலம்பெயர் தமிழர்கள் என்பது வேறு, புலம்பெயர் தமிழ் புலி அமைப்புகள் வேறு என்பதை முதலில் சகலரும் விளங்கிக்கொள்ள வேண்டும். புலம்பெயர் தமிழ் அமைப்புகள் எவ்வாறு உருவாகியது. 1983 ஆம் ஆண்டு ஜே.ஆர் ஜெயவர்தன நாட்டை ஆட்சி செய்த காலத்தில் ஏற்பட்ட கருப்பு ஜூலை கலவரத்தில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பாரிய அநியாயங்கள் காரணமாக, வரலாற்றில் அழிக்கவே முடியாத அந்த சம்பவத்தினால் இந்த நாட்டில் வாழ்ந்த கற்ற தமிழ்  சமூகத்தினர், பொருளாதார ரீதியில் பலமாக இருந்தவர்கள், வியாபாரிகள் சகலருக்கும் இந்த நாட்டை விட்டு வெளியேற நேர்ந்தது. தமிழ் மக்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறினர். ஆரம்பத்தில் இந்த நாட்டில் தமிழ் வைத்தியர்கள் அதிகளவில் இருந்தனர், பாகுபாடு இல்லாது அவர்களின் சேவை எம் அனைவருக்கும் கிடைத்தது. அவ்வாறு இருக்கையில் முக்கியமான ஒரு தரப்பை இந்த நாட்டை விட்டு விரட்டியடித்தனர். அவர்களே சர்வதேச தளத்தில் புலம்பெயர் அமைப்புகளை உருவாக்கினர். இன்று ஒரு பக்கம் விடுதலைப்புலிகள் அமைப்புகள் உள்ளன, மறுபக்கம் புலம்பெயர் தமிழர் அமைப்புகள் உள்ளனர். தமிழ் புலம்பெயர்  அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்த தவறும் இல்லை. புலம்பெயர் விடுதலைப்புலிகள் அமைப்புடன் பேசுவதிலும் எந்த தவறும் இல்லை. பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு நீண்ட காலம் கடந்துவிட்டது. தற்போது வரையிலும் 12 ஆயிரத்திற்கு அதிகமான முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்தவர்களுக்கு புனர்வாழ்வு வழங்கப்பட்டு அவர்களுக்கு தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்திக்கொடுத்து சமூக மயப்படுத்தியுள்ளோம். இது குறித்து ஏன் எவரும் பேசுவதில்லை. சிறையில் உள்ள பல தமிழ் கைதிகளை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. இது குறித்து எதிர்கட்சிகள் விமர்சனங்களை முன்வைக்கலாம் தவறில்லை,. ஆனால் சர்வதேசத்திடம் செல்லும் வேளையில் நாம் இலங்கையர்கள் என்ற எண்ணத்துடன் பயணிக்க வேண்டும் . இலங்கை இராச்சியத்தில் எதிர்க்கட்சிகளும் உள்ளன. ஆகவே இதனை விளங்கிக்கொண்டு செயற்பட வேண்டும. சர்வதேச மனித உரிமைகள் குறித்த பிரச்சினைகளில் ஒன்றாக செயற்பட வேண்டும்.  சிறைச்சாலையில் இடம்பெற்ற  சம்பவத்தை இனவாத பிரச்சினையாக மாற்ற முயற்சிக்க வேண்டாம் எனவும் அவர் கூறினார். வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய இதன்போது உரையாற்றுகையில், அரசாங்கத்தின் கொள்கைகள் குறித்த வாக்குவாதங்கள் இடம்பெற்றுக்கொண்டுள்ளன. முன்னைய ஆட்சியில் இதே கொள்கை முன்னெடுக்கப்பட்ட வேளையில் ஆதரித்தவர்கள் இன்று அதனை எதிர்ப்பது ஏன் என தெரியவில்லை. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை குறித்து ஆரோக்கியமான விடயங்களையும் முன்வைத்துள்ளார் . நாம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை அவர் ஆதரித்துள்ளார். உள்ளக பொறிமுறையில் அவருக்கு திருப்தி ஏற்பட்டுள்ளது. நாம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் குறித்து இலங்கையில் உள்ள தூதரகங்கள், ஜெனிவா, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் கலந்துரையாடி வருகின்றோம். பொறுப்புக்கூறல், மனித உரிமைகள், நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து தெளிவான நிலைப்பாடுகளை முன்வைத்துள்ளோம். உள்ளக பொறிமுறை மூலமாக இதனை நாம் முன்னெடுக்க தயாராக உள்ளோம். இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளை 15 நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஆதரித்துள்ளன. சர்வதேச தரப்பில் உயரிய மட்ட பேச்சுவார்த்தைகளை இப்போதும் ஜனாதிபதியும் வெளிவிவகார அமைச்சரும் முன்னெடுத்து வருகின்றனர். நாட்டில் சகல பிரச்சினைகளையும் தீர்க்கும் வேலைத்திட்டங்களை உள்ளக பொறிமுறை மூலமாக தீர்க்க புலம்பெயர் தமிழர் அமைப்புகளுக்கு  ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். ஐக்கியமாக பயணிக்கவே நாம் முயட்சிக்கின்றோம். சவால்களை வெற்றிகொள்ள சகல விதத்திலும் முயட்சிக்கின்றோம் என்றார்.    https://www.virakesari.lk/article/113870  
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.