Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

பூவே........... பூச் சூட வா ...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பூவே........... பூச் சூட வா ...

மலர்களிலே பல நிறம் கண்டேன்

மாலையாகும் திறன் கண்டேன்

பூஜைக்கு போகும் சில ,கண்டேன்

மலர் வளையமாகும் சில கண்டேன்

கண்ணீரில் மிதக்கும் சில கண்டேன்

மாடியில் வாடும் சில கண்டேன்

மாலையில் மலரும் சில கண்டேன்

காலையில் மலரும் பல கண்டேன்

நிறம் உள்ளவை பல கண்டேன் ,

முட்களின் நடுவே சில கண்டேன்

நறு மணம் உள்ளவை பல கண்டேன்

பால்போன்ற வெண்மையும் கண்டேன்

வண்டு மொய்க்கும் சில தேன் உள்ளவை .

மொட்டாகி மலராகி கருக்கூட்டி காயாகி

கனிந்து பழமாகி ,பலன் கொடுத்ததும்

மீண்டும் விதையாகி பூமிக்கு செல்லும்.

மலர்களிலே இத்தனை வகை என்றால்

மனிதமலர் கள் எத்தனை வகை ?...........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"அன்றாடம் நாம் காணும் பல் மனித மலர்களை மலருக்கு ஒப்புமை செய்து கவி தந்த நிலாமதி" உங்கள் கவிகளின் ஆழங்களை ஒருமுறை தொட முயல்கின்றேன், அவை என் கைகளுக்கு கிட்டுமா...? நன்றி கவிதை பிரமிக்க வைக்கிறது. இப்படியான குறியீட்டுக் கவிதைகளை இறுதியா பாரதியின் படைப்புக்கயில் கண்ட ஞாபகம்...!

"அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை

அதை அங்கோர் காட்டிடை பொந்தினில் வைத்தேன்

வெந்து தணிந்தது காடு..."

Link to comment
Share on other sites

பூவே..பூச் சூடவா எண்டு எல்லா மலர்களையும் உங்கள் கவிதையில் சூடிய விதம் வாசணை நிரம்பியதாக மலர்கிறது வாழ்த்துக்கள் நிலா(மதி) அக்கா.. <_<

மலர்கள் பல வகை

மலர்ந்து சிரிக்கிறது

மனிதனும் பலவகை

மலர்ந்து அழுகிறது..!! :huh:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

நிலாமதி

நல்லாக தான் பூக்களை காணுறியள்

இதையும் கொஞ்சம் காணுங்கோ <_<

thண்ணீரில் மிதக்கும் சில கண்டேன்

saாடியில் வாடும் சில கண்டேன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.