Jump to content

சின்ன சின்ன ......ஆசை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சின்ன சின்ன ......ஆசை

வானத்து நிலவை பிடித்துவிட ஆசை

முகில் மீது சவாரி செய்ய ஆசை

பூங் காற்று போல உலகம் சுத்தும் ஆசை

மழைத்துளியை மாறி தாகம் தீர்க்க ஆசை

சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை ......

தமிழ் ஈழ மண்ணில் பிறந்து விட ஆசை

வானத்தில் சிட்டாய் பறந்துவர ஆசை

அன்னையின் மடியில் தூங்கி விட ஆசை

முற்றத்து மண்ணில் விளையாட ஆசை

துள்ளிவரும் மானை பிடித்து விட ஆசை

சவர்க்கார குமிழி பிடித்து வர ஆசை

நீலக்கடல் நீரில் நீந்தி குளிக்க ஆசை

படித்த பள்ளி எண்ணி நினனவு மீட்க ஆசை

பனைமர நுங்கும் ,பழமும்தின்ன ஆசை

மாமரம் ஏறி காய் பறிக்க ஆசை

முக்கனியும் சுவைக்க மீளவும் ஆசை ...........

************ தலைவனின் மண்ணை முத்தமிட ஆசை **********

Link to comment
Share on other sites

முற்றத்து மண்ணில் விளையாட ஆசை

முத்தான தலைவனின் மண்ணை முத்தமிட ஆசை

ம் ஆசைகள் பலவிதம் அவற்றில் இது ஓருவிதம்.

வாழ்த்துக்கள். . . தொடரட்டும்.. .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் பரணீ.............

வாசித்து வாழ்த்துக்கள் தந்தமைக்கு நன்றி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சின்ன சின்ன ......ஆசை

வானத்து நிலவை பிடித்துவிட ஆசை

முகில் மீது சவாரி செய்ய ஆசை

பிள்ள நிலாமதி இது உங்களுக்கு சின்ன சின்ன ஆசையா ? <_< அப்ப உங்களுக்கு பெரிய ஆசை எது? கவிதை நன்றாக இருக்கு வாழ்த்துக்கள் . <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சுப்பு ..

உங்கள் பெரிய ஆசை எது ? அது தான் சொல்லிவிட்டேனே ..

"தலைவனின் மண்ணை முத்தமிட ஆசை "தலைவனின் ஆட்சியில்

மண்ணை , தமிழ் ஈழத்தை . ,அடைந்து வாழ ஆசை .நன்றிகள் சுப்பண்ணை...

நிலாமதி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் சுப்பு ..

உங்கள் பெரிய ஆசை எது ? அது தான் சொல்லிவிட்டேனே ..

"தலைவனின் மண்ணை முத்தமிட ஆசை "தலைவனின் ஆட்சியில்

மண்ணை , தமிழ் ஈழத்தை . ,அடைந்து வாழ ஆசை .நன்றிகள் சுப்பண்ணை...

நிலாமதி

மிக நல்ல ஆசை இந்த ஆசைதான் எல்லா தமிழர்களுக்கும் இருக்கு. உங்களது எங்களது ஆசைகள் நிறைவேறும் காலம் வெகு தூரமில்லை. நம்பிக்கையுடன் இருங்கள்.

Link to comment
Share on other sites

நிலாமதி கவிதை நல்லா இருக்கு.....! இயற்கையை இவ்வளவுக்கு நேசிக்கும் உங்களின் பூரிப்புக்கு எனது வாழ்துக்கள்...

உங்கள் ஆசைகளில் ஆபத்து இருப்பது போல் தெரிகிறதே... கொஞ்சம் குறைத்துக்கொள்ளுங்கள்....

Link to comment
Share on other sites

நிலாமதி,

ஆசைகள் எல்லாம் சரி தான்...

//

மாமரம் ஏறி காய் பறிக்க ஆசை

................

//

பறிக்கிறது தான் பறிக்கிறீங்க... பழமா பறிச்சா என்ன? :) (அட யார் இந்த அதி புத்திசாலி என்று கேட்கவேண்டாம்...)

எனக்கும் ஒரு ஆசை உண்டு நிலாமதி...

நீங்கள் எழுதும் கவிதைகள் பாடல் எதையும் நினைவு படுத்தாமல் இருக்கணும் என்று...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.