Jump to content

"அது ஒரு வசந்த காலம் .............".


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

"அது ஒரு வசந்த காலம் .............".

துள்ளித்திரிந்த பருவம் ...கொஞ்சம் அடங்கி .....

பத்தாம் வகுப்பு இறுதி வருட சோதினைக்கு தயார் படுத்தும் காலம்.

பாட சாலை முடிந்து (துஷன்) பிரத்தியேக வகுப்புக்கு போவதுண்டு .

முதல் தடவை ஏழு பாடம் ,கணிதம் தவிர சித்தியடைந்தேன்

.கணிதம் கோட்டை விட்டதால் ,வீட்டில் அனுமதி பெற்று ,

அயல் கிராமத்துக்கு படிக்க போவதுண்டு . காலை ஏழு மணிக்கு ஒரு வகுப்பு...

.மாலையில் எட்டரைக்கு பாடசாலை ..பின் ஐந்து மணிக்கு மறு துஷன் வகுப்பு .

இப்படியாக பாடசாலையும் டுஷன் வகுப்புமாக இருந்த காலம் .

.காலை பரபரப்பில் ஒரு பாண் துண்டு கடியுடன் போவதுண்டு . மதிய " சாப்பாடு "

அமுதம் போல் இருக்கும் . நான் மாமிச பிரியன் (சைவம் ) இறங்காது

.எனக்காக அம்மா அதி காலையில் எழுந்து ,பொறித்த கத்தரிக்காயும் றால் கருவாடும்

போட்டு ஒரு கறி வைத்து தருவா? சில சமயம் பாது காப்பு அற்ற வகுப்பு அறையில்

மத்திய உணவை காகம் கொண்டு போனதும் உண்டு...அந்த அளவு இந்த சாப்பாட்டு

ராமனுக்கு போதாது. ஆனாலும் இல்லாமல் முடியாது.

ஒரு தடவை டுஷன் வாத்தியார் படிப்பில் .பத்தும் பத்தாமலும் என்பதற்கு விளக்கமாக

(மதியான சாப்பாடு) போல என்று சொன்னார் .

.படிப்புடன் ..கண்களும் சுழன்றன . ஒரு மாணவி அழகான , அலை போன்ற கூந்தலுடன்

வருவா . அவ மீது ஒரு கண் .எல்லோருக்கும் ..முன்னும் பின்னும் திரிவோம் .

.மற்ற அயல் பாடசாலை பையன்கள் கண் போடாதபடி .....அவவின்

சைக்கில் காற்று போனால் கடையில் காற்று அடித்து கொடுப்பதுண்டு

.அதற்கு அவ மீது காதல் என்று சொல்ல முடியாது ஆனால் அவள் மீது கவனம் .

ஒரு நாள் வராவிடால் மனம் தேடும் ...இது காதலா ?....

.வாத்தியாருக்கு வகுப்புகளை தவற விடுவது பிடிக்காது . வாத்தியார் சொல்வார் ...

.நீ ..செத்தால் அல்லது உன் வீட்டில் சாவீடு என்றால் வகுப்புக்கு வராமல் இருக்கலாம் .என்று

அப்படி கண்டிப்பானவர் . அவர் காசுக்காக மட்டும் இல்லை .,சித்தி அடைதல் .

.என்ற கவனமுடனும் படிப்பித்து இறுதியில் எனக்கு அதி திறமை டி சித்தி கிடைத்தது .

வகுப்பில் பதினைந்து பேர் ஐந்து பேருக்கு மட்டும் சி தரம் . மற்ற ஒன்பது பேருக்கும் டீ தரம்

.ஒருவன் மட்டும் எஸ் .இப்படியாக.......... என் கள உறவுகளுடன் பகிர்ந்து கொண்ட

" அந்த வசந்த காலம் " தேன் போன்றது .

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சத்தியமா எனக்கு ஒன்னும் விளங்கவில்லை. கதை ஒழுங்கு எங்கேயோ குழும்பிவிட்டது போல். பார்த்து திருத்துங்கள். எழுத்துப்பிழைகளும் அதிகம்

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.