Jump to content

உறவும் வரும் பகையும் .வரும் .....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உறவும் வரும் பகையும் .வரும் .....

பூமிப்பந்து தன் வேலையை செவனே செய்து கொண்டு இருக்க மணித்துளிகள் நாட்களாகி அவை வாரந் களாகி மாதங்களாகி வருடங்களும் பதினைந்தை தாண்டி விட்டது .ஈழத்தின் ஒரு தீவகதொகுதியில் ஆசைகொரு மகனும் ஆசைகொரு மகளுமாக சின்னையா குடும்பம் வாழ்ந்து வந்தது

காலம் கடமையை செய்ய மகள் நிதிலாவும் மகன் நிரோஷனும் பருவ வயதை அடைந்தனர்

.மகன் பட்ட படிப்புக்காக தலைநகரம் செல்ல மகள் நித்திலா தையல் ,சமையல் டிப்ளோமா ,என்று ஒரு குடும்ப பாங்கான பெண்ணாக வளர்ந்து கொண்டு வந்தாள்

.தையல் வகுப்புக்கு போகும் வழியில் ரேடியோ கடை . அதில் போவோர் வருவோரை கவரும் பாடல் இசைத்து கொண்டே இருக்கும் . அதன் சொந்த காரன் தான் ஆதவன் . இளைஞனுக்கு உரிய அத்தனை அம்சங்களுடனும் இருந்த அவன் தோகை மயிலான நிதிலாவை கவனித்து கொண்டே வந்தான்

. பாடல்களில் பிரியமான அவளுக்கு பாடலாலே காதல் தூது விட்டான் .

காலங்களும் உருண்டு ஓடின .அவனுக்காக அவளும் அவளுக்காக அவனும் , என்று ஆகி ஊரிலும் கதை பரவி விட்டது . இதற்கிடையில் அவளுக்கு மாமன் மகனும் வெளி நாடில் இருந்து வந்து விட்ட்ருந்தான் . சின்னையா மனிவி இடம் அண்ணர் மாணிக்கம் கலியாண பேச்சை தொடங்கினார் .

ஒன்றுக்குள் ஒன்றுஆக உறவும் நீடிக்கும் . வரும் கார்த்திகை மாசம் நாள் பார்க்கலாம் என்று இரு வீடாரும் முடிவாகியது. நிதிலாவுக்கு நெஞ்சிலே ஆதவனும் ,பாசத்திலே பெற்றோருமாக ,நித்திரை அற்ற இரவுகளாக நாட்கள் ஓடின ,ஒரு நாள் ஆதவன் நிதிலாவிடம் முடிவாக என்ன சொல்கிறாய் ,உன் மனம் கொண்டவன் நான் ,எனை மறந்து மச்சானுடன் வாழ முடியுமா? உன் தாய் தந்தையர் எது வரை ,? உன்னை வற்புறுத்தவில்லை உனக்கு இதயம் ஒன்று இறந்தால் என்னுடன் வா என்று தன் முடிவை தெரிவித்து விட்டான் . .

.நித்திலா என்ன செய்வாள் ?....( நாளை தொடரும் )...

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

உறவும் வரும் பகையும் .வரும் .....

..... ,ஒரு நாள் ஆதவன் நிதிலாவிடம் முடிவாக என்ன சொல்கிறாய் ,உன் மனம் கொண்டவன் நான் ,எனை மறந்து மச்சானுடன் வாழ முடியுமா? உன் தாய் தந்தையர் எது வரை ,? உன்னை வற்புறுத்தவில்லை உனக்கு இதயம் ஒன்று இறந்தால் என்னுடன் வா என்று தன் முடிவை தெரிவித்து விட்டான் . .

.நித்திலா என்ன செய்வாள் ?....( நாளை தொடரும் )...

நிலாமதி நித்திலா என்ன சொன்னா நமக்கென்ன...? நீங்களா இருந்தா என்ன சொல்லுவீங்க அதைச் சொல்லுங்க முதல்ல...?

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

:lol::D நிலாமதி அக்கா உன்மையான கதையா அல்லது அனுபவகதையா

என்று சொல்லுங்கள் ?

பாவம் ஆதவன்

Link to post
Share on other sites

என்ன சொன்னாள் என நீங்களே சொல்லுங்க.. ;)

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலாமதி உங்கள் கதையில் இடம்பிடித்துவிட எழுத்துகளுக்குள் சண்டை போல்... சண்டைபிடித்து தாமே முந்திவிட சொற்களும் மாறிவிட்டன.... சற்று அவதானித்துக் கொள்ளுங்கள்.....

நாளைக்காக காத்திருக்கிறோம்........

Link to post
Share on other sites

அட...பொறுத்த இடத்தில கதையை நிற்பாட்டி போட்டியள்..நிலா(மதி) அக்கா :lol: ..சரி மிச்சத்தையும் எழுதுங்கோ வாசிக்க ஆவலா இருக்கிறன்.. :lol:

ஆனா எனக்கு இன்னொரு சந்தேகம்...ஒரு ஆள பார்த்தவுடன காதல் வந்திடுமா..??.. :D (நானும் எத்தனையோ பேரை பார்க்கிறன் எனக்கு அப்படி ஒரு இலவும் நடக்கல)..அப்படின்னா எப்படி தான் காதல் வருது..இப்ப ஒரே நேரத்தில பல பேரோட காதல் வந்தா என்ன செய்யிறது :lol: ஒருத்தரும் என்னை ஏசாதையுங்கோ நிசமா எனக்கு உது எல்லாம் விளங்கள ஒருக்கா விளங்கபடுத்திறியளோ..??.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சங்கிலியன் தங்கள் நாசூக்கான பிழை சுட்டி காடலுக்கு நன்றி முயற்சிக்கிறேன் . .

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அனைவருக்கும் .......

கதை வாசித்து கருத்து பகிர்ந்த முரளி,தூய,ஜம்மு பேபி,முனிவர் ,இதயநிலா ,பிரபா நன்றி.

நான் ஒரு தேர்ச்சி பெற்ற கதை ஆசிரியை அல்ல .என்னால் முடிந்த

,எழுத முயற்சிக்கும் ஒரு தமிழ் மகள். தட்டி கொடுப்பும் பண்பான தவறு சுட்டி காட்டுதலும்

,கருத்து பகிர்வும் என்னை மேலும் ஊக்கப் படுத்தும் .நன்றி

நட்புடன் நிலாமதி , ,

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.