Jump to content

குட்டிமணியின் கண்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

(செப்டம்பர் திங்கள் 1997 ஆம் ஆண்டு, 'Tamil Tribune' எனும் இதழில் பேராசிரியர் தஞ்சை நலங்கிள்ளி அவர்கள் எழுதிய "Eyes Of Kuttimani" என்ற ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம்)

குட்டிமணியின் கண்கள்

kuttimanivg7.jpg

"எனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற ஒருவருக்குப் பொருத்துங்கள். நான் பார்க்க முடியாத தமிழீழத்தை என் கண்களாவது பார்க்கட்டும்." - குட்டிமணி

விடுதலை விலைமதிப்பற்றது. நாளை மலரப் போகும் தமிழீழத்திற்காக ஆயிரமாயிரம் வீரர்களும் வீராங்கனைகளும் தங்கள் இன்னுயிர்களை விடுதலை வேள்விக்கு காணிக்கையாக்கிக் கொண்டார்கள். தனது எதிர்காலத் தலைமுறை எந்த வித அடக்குமுறைகளும் அற்று உரிமையுடனும் சுதந்திரத்துடனும் வாழ்வதற்காக தன்னை அழித்துக் கொண்டவர்தான் குட்டிமணி என்று அழைக்கப்படும் திரு செல்வராசா யோகச்சந்திரன்.

ஈழத் தமிழர்களின் இன்னல்கள் நிரந்தரமாகக் களையப் படவேண்டுமென்றால் தனித் தமிழீழம்தான் நிரந்தரத் தீர்வாக அமையும் என்பதில் மிக உறுதியாக இருந்தவர் குட்டிமணி. அந்த விடுதலை வீரரை 08-05 1981 அன்று சிங்களக் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிங்கள நீதிமன்றம் அவருக்கு மரணதன்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. தீர்ப்பளித்த நீதிபதி குட்டிமணியின் இறுதி ஆசையைக் கேட்டபோது, அதற்கு குட்டிமணி கூறிய பதில் அவரது உள்ளக் கிடக்கையையும் விடுதலைமேல் அவர் கொண்டிருந்த தீராத பற்றையும் உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது.

"எனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற ஒருவருக்குப் பொருத்துங்கள். நான் பார்க்க முடியாத தமிழீழத்தை என் கண்களாவது பார்க்கட்டும்."

இதுதான் அந்த விடுதலை வீரரின் கடைசி ஆசை. அதற்குப் பின் அவர் வெலிக்கடைச் சிறையில் அடைக்கப் பட்டார். அந்தச் சிறையில் ஏற்கனவே பல சிங்களக் கைதிகளும் தமிழ்க் கைதிகளும் இருந்தனர். சிங்களக் கைதிகள் கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு போன்ற குற்றங்களுக்காக சிறை வைக்கப்பட்டிருந்தனர். தமிழர்கள் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக சிறை வைக்கப் பட்டிருந்தனர். இனமோதல்களை தவிர்ப்பதற்காக தமிழ்க் கைதிகளும் சிங்களக் கைதிகளும் வெவ்வேறு சிறைகளில் அடைத்து வைக்கப் பட்டிருந்தனர். குட்டிமணி 34 தமிழ்க் கைதிகளுடன் அடைத்து வைக்கப் பட்டிருந்தார். 1983 ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக மிகப் பெரிய இனக் கலவரம் மூண்டது. யூலை மாதம் 24 ஆம் திகதி தொடங்கிய அந்தக் கலவரம் பல வாரங்கள் தொடர்ந்தது. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப் பட்டார்கள். பலர் உயிரோடு கொழுத்தப் பட்டனர். தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப் பட்டனர். பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் சொத்துக்கள் சூறையாடப் பட்டன. அப்போது ஆளுங்கட்சியாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சி (U.N.P.) கலவரத்தை அடக்காமல் கை கட்டி வேடிக்கை பார்த்ததுமில்லாமல் கலவரத்தை மேலும் தூண்டும் வேலைகளிலும் இறங்கியது.

இந்தக் கலவரத்தின் தீ வெலிக் கடைச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிங்களக் கைதிகளையும் பற்றிக் கொண்டது. சிறைக் காப்பாளர்கள் அந்தச் சிங்களக் கைதிகளின் இனவெறிக்கு தீனி போடும் வகையில் தமிழ்க் கைதிகள் அடைத்து வைக்கப் பட்டிருந்த சிறைக் கதவுகளைத் திறந்து விட்டனர். கத்தி, வாள் மற்றும் பல கூரிய ஆயதங்களுடன் தமிழ்க் கைதிகளின் அறைகளுக்குள் நுழைந்து அவர்களை வெட்டி வீழ்த்தினர். குட்டிமணியின் கடைசி ஆசையை ஏற்கனவே கேள்விப் பட்டிருந்த அந்தச் சிங்களக் கைதிகள் அவரை வெட்டிப் படுகொலை செய்தது மட்டுமல்ல அவரது கண்களைத் தோண்டி எடுத்து அதை தங்களது கால்களால் நசுக்கி அழித்தனர். குட்டிமணியோடு சேர்த்து படுகொலை செய்யப் பட்ட 35 தமிழ்க் கைதிகளின் உடல்களை வெளியில் எடுத்துச் சென்று சிறைச் சாலை முற்றத்தில் இருந்த புத்தர் சிலைக்கு முன்னால் போட்டு விட்டு ஆனந்தக் கூத்தாடினர்.

குட்டிமணி மட்டுமல்ல அவரது கண்கள் கூட தமிழீழத்தைப் பார்த்துவிடக்கூடாது என்பதில் வெறியாக இருந்தனர் அந்தச் சிங்களக் கைதிகள். அந்த விடுதலை வீரரின் இறுதி ஆசையை நிறைவேறாமல் செய்தனர். குட்டிமணி மட்டுமல்ல பல்லாயிக்கணக்கான பெண்களும் ஆண்களும் தங்கள் உயிரினும் மேலாக நேசித்த அந்தத் தமிழீழத் தனியரசைக் காணும் முன்பே போர்க்களத்தில் தங்கள் உயிர்களைக் காணிக்கையாக்கிக் கொண்டனர். இவர்கள் எதைக் கேட்டார்கள்? உரிமைகள் மறுக்கப்பட்ட தங்கள் இனத்துக்காக விலங்கிலும் கேவலமாக நடத்தப்பட்ட தங்கள் மக்களுக்காக நீதியையும் நியாயத்தையும் அமைதியையும் விடுதலையையும் கேட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி எத்தனை கொடூர சம்பவங்கள் எமது தாயக விடுதலைப் போராட்டத்தில் நடந்தேறியுள்ளன. இன்னும் எத்தனையோ துயரங்கள்? மனம் அப்படியே ஒரு நொடுயில் ... : (

இந்தக் கலவரத்தின் தீ வெலிக் கடைச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிங்களக் கைதிகளையும் பற்றிக் கொண்டது. சிறைக் காப்பாளர்கள் அந்தச் சிங்களக் கைதிகளின் இனவெறிக்கு தீனி போடும் வகையில் தமிழக் கைதிகள் அடைத்து வைக்கப் பட்டிருந்த சிறைக் கதவுகளைத் திறந்து விட்டனர். கத்தி, வாள் மற்றும் பல கூரிய ஆயதங்களுடன் தமிழ்க் கைதிகளின் அறைகளுக்குள் நுழைந்து அவர்களை வெட்டி வீழ்த்தினர். குட்டிமணியின் கடைசி ஆசையை ஏற்கனவே கேள்விப் பட்டிருந்த அந்தச் சிங்களக் கைதிகள் அவரை வெட்டிப் படுகொலை செய்தது மட்டுமல்ல அவரது கண்ணைத் தோண்டி எடுத்து அதை தங்களது கால்களால் நசுக்கி அழித்தனர். குட்டிமணியோடு சேர்த்து படுகொலை செய்யப் பட்ட 35 தமிழ்க் கைதிகளின் உடல்களை வெளியில் எடுத்துச் சென்று சிறைச் சாலை முற்றத்தில் இருந்த புத்தர் சிலைக்கு முன்னால் போட்டு விட்டு ஆனந்தக் கூத்தாடினர்.

குட்டிமணி மட்டுமல்ல அவரது கண்கள் கூட தமிழீழத்தைப் பார்த்துவிடக்கூடாது என்பதில் வெறியாக இருந்தனர் அந்தச் சிங்களக் கைதிகள். அந்த விடுதலை வீரரின் இறுதி ஆசையை நிறைவேறாமல் செய்தனர். குட்டிமணி மட்டுமல்ல பல்லாயிக்கணக்கான பெண்களும் ஆண்களும் தங்கள் உயிரினும் மேலாக நேசித்த அந்தத் தமிழீழத் தனியரசைக் காணும் முன்பே போர்க்களத்தில் தங்கள் உயிர்களைக் காணிக்கையாக்கிக் கொண்டனர். இவர்கள் எதைக் கேட்டார்கள்? உரிமைகள் மறுக்கப்பட்ட தங்கள் இனத்துக்காக விலங்கிலும் கேவலமாக நடத்தப்பட்ட தங்கள் மக்களுக்காக நீதியையும் நியாயத்தையும் அமைதியையும் விடுதலையையும் கேட்டார்கள்.

Link to comment
Share on other sites

இரு தசாப்தங்கள் கடந்தும் தொடரும் இன அழிப்பு! -தேசியன்-

உலகம் இன்று வரை திறந்துபார்க்காத `இறைமையுள்ள இலங்கை' என்ற பேரினவாத புத்தகத்துக்குள் மூடிக்கட்டப்பட்டுள்ள `தமிழின அழிப்பு' படலத்துக்குள்ளிலிருந்து மிகத் துல்லியமாக வெளியில் தெரிகிறது `83 ஜூலை' என்கிற கறுப்புப் பக்கம். தமிழர் தாயகம் உள்ளிட்ட இலங்கைத் தீவின் அனைத்துப் பகுதிகளிலும் அதாவது தமிழர்கள் இறைமையற்று வாழ்கின்ற பிரதேசங்களில் தொடர்ச்சியாக அப்பாவி தமிழ் மக்கள் பேரினவாத குண்டர்களாலும் அரச படைகளாலும் கொன்றொழிக்கப்பட்டும் சித்திரவதை செய்யப்பட்டும் வருகின்றனர். இருந்த போதிலும் `கறுப்பு ஜூலை' யே அதிகம் பேசப்படும் விடயமாகவுள்ளது. `83 இனக்கலவரம்' என அழைக்கப்படுகின்ற போதிலும் உண்மையில் இலங்கையில் இன்றுவரை இனக்கலவரம் என்கிற நிகழ்வு இடம்பெறவில்லை. மாறாக பேரினவாதிகளால் நன்கு திட்டமிடப்பட்டு தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகளே வரலாற்றில் பதியப்பட்டுள்ளன.

1956 இல் சிங்கள அடக்குமுறையினோர் அடையாளமாக கொண்டு வரப்பட்ட தனிச் சிங்களச்சட்டத்தை எதிர்த்து அமைதி வழிச் சத்தியாகக் கிரகத்தை தமிழர்கள் பாராளுமன்றத்துக்கு முன்பாக நடத்திய போது காடையர்களை கட்டவிழ்த்து விட்ட சிங்கள அரச பயங்கரவாதம் தமது இன அழிப்பு படலத்தை முழு அளவில் தொடங்கியது.

1956 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட முழு அளவிலான இன அழிப்பு 1958, 1961, 1977, 1979, 1981 என தொடர்ந்து 1983 இல் உக்கிரமடைந்தது. 2006 ஆம் ஆண்டு வரை அரச பயங்கரவாதம் தனது இரும்புக் கரங்களை இறுகப்பிடித்துள்ள போதும் நாகரிகம் பேசும் உலகம் மௌனம் காத்துவருகின்றது. மேற்குறிப்பிட்ட ஆண்டுகளில் தமிழர்கள் வகைதொகையின்றி கொல்லப்பட்டமையாலேயே இவ்வாண்டுகள் வரலாற்றில் பதியப்பட்டுள்ளன. குடும்பம் குடும்பமாக சுட்டுக் கொல்லப்படுதல், இளைஞர்களை கண்டபடி வெட்டிக் கொலை செய்தல் போன்றவை அன்றும் சரி இன்றும் சரி தொடர்கின்றன. சுருக்கமாக சொன்னால் தமக்கு இறைமையில்லாத பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கு தினமும் கறுப்பு ஜூலையே.

வலிகளை பதிவு செய்யும் ஆற்றல் வார்த்தைகளுக்கு இல்லை. இந்த ஆற்றல் இருக்குமாயின் உலகம் தமிழர்களுக்காகவே குரல் கொடுத்திருக்கும். 83 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் திகதி யாழ்ப்பாணம் பலாலி வீதி, திருநெல்வேலியில் இலங்கை இராணுவத்தின் வாகனம் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலக்கண்ணி வெடித்தாக்குதலுக்கு இலக்காகியது. 13 படையினர் கொல்லப்பட்டனர். யாழ்ப்பாணத்தில் சிங்களப் படைகள் பெண்கள் மீது மேற்கொண்ட வல்லுறவுகளுக்கு பதிலடியாகவே இத் தாக்குதல் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. மறுநாள் 24 ஆம் திகதி சிங்கள காடையர்கள் அப்பாவித் தமிழ் மக்கள் மீது கைவைக்கிறது " இவங்களை அடித்தால் எவன் கேட்பது" என்ற துணிவில் கொழும்பு, கண்டி, மாத்தளை, நுவரெலியா, பதுளை உள்ளிட்ட தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் ஆட்சியாளர்களின் ஆசீர்வாதத்துடன் தமது ரவுடித்தனத்தை காட்டியது சிங்கள இனவாதம்.

வீதியால் சென்று கொண்டிருந்தவர்கள் இடையில் மறிக்கப்பட்டு கண்ட துண்டமாக வெட்டிக் கொல்லப்பட்டனர். வாகனங்களுக்குள் வைத்து பெற்றோல் ஊற்றி உயிருடன் எரிக்கப்பட்டனர். தமிழரின் வீடுகளுக்குள் புகுந்து வயது வேறுபாடின்றி குழந்தைகள், முதியவர்கள், பெண்களென அடித்தும் வெட்டியும் சித்திரவதை செய்து கொன்றனர். வீட்டோடே பல குடும்பங்களுக்கு `கொள்ளி' வைத்து தமது அதிகாரமமதையை காட்டினர். தமிழர்களின் கடைகள் சூறையாடப்பட்ட பின்னர் எரித்து சாம்பலாக்கப்பட்டன. பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டனர். அது மாத்திரமின்றி வெலிக்கடைச் சிறையிலிருந்த தமிழ்க் கைதிகள் சிறைக்குள் வைத்தே குத்தியும் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டனர். 24 ஆம் திகதி தொடங்கிய இந்த இன அழிப்பு பல நாட்களாக தொடர்ந்தது. தமிழன் தேடித் தேடி அழிக்கப்பட்டான். `இறைமையுள்ள இலங்கை' எனக் கூறிக்கொள்ளும் உலகம் அந்த இலங்கைக்குள் தமிழன் இறைமையற்று கேட்பார் யாருமின்றி கொல்லப்படுவதை நேரில் கண்டது. 83 ஜூலை இன அழிப்பின் போது கொல்லப்பட்டவர்கள் குறித்தோ சொத்து இழப்புகள் குறித்தோ இதுவரை தெளிவான கணக்கெடுப்புகள் நடைபெறவில்லை. பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் இந்த இன வெறியாட்டத்தில் உயிரிழந்தனர். தமிழர்களை புழுக்களை விட மிகக்கேவலமாக நடத்தப்பட்டதற்கு அப்போது ஆட்சியிலிருந்த ஐ.தே. க. ஆசீர்வாதம் வழங்கியது. 24 ஆம் திகதி இன அழிப்பு கட்டவிழ்த்து விடப்படுவதற்கு 2 கிழமைகளுக்கு முன்னரே அப்பொழுது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகவிருந்து ஜே.ஆர். ஜயவர்தன `ரெலிகிறாப்' என்ற லண்டன் நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்திருந்தார். "வடக்கே அதிகளவான அழுத்தங்களை கொடுக்கும் போது சிங்கள மக்கள் மகிழ்ச்சியடைவார்கள். தமிழர்களை தவிக்கவிடும் போது சிங்கள மக்கள் சந்தோஷப்படுவார்கள்" ஜே.ஆரின் இந்த தமிழர் விரோத கருத்து சிங்கள காடையர்களுக்கு மிகப் பெரிய துணிவை கொடுத்தது. தமிழர்கள் வீதிகளிலும் வீடுகளிலும் அநியாயமாக கொல்லப்படுவதற்கு ஜே.ஆரின் இந்த இனவாத கருத்தே காரணமென கூறப்படுவது உண்மையே. 25 ஆம் திகதி தான் கண்ட இனவெறியாட்டத்தை இப்படிக் கூறினார். பெயர் குறிப்பிடவிரும்பாத ஒருவர்;

" காலை 6.30 மணி பஸ்ஸில் சென்று கொண்டிருந்தேன் . நுகேகொடை சந்தியையடைந்த போது கத்திகள், கோடாரிகளுடன் காடையர் கும்பல்கள் வாகனங்களை மறித்து தமிழர்களை தேடிக் கொண்டிருந்தன. காடையர்கள் எமது பஸ்ஸை நோக்கி வந்து தமிழன் எவனும் இருக்கிறானா என நடத்துநரை கேட்டனர். இதோ எனக்கு முன்னால் இருப்பவர் தமிழ்பெண் தான் என உற்சாகமாக கூறினார் அந்த நடத்துநர். பயந்துபோன அந்த பெண் தனது குங்கும பொட்டை அழித்தார். பஸ்ஸுக்குள் ஏறியகாடையர்கள் போத்தலொன்றை உடைத்து அவரின் வயிற்றில் குத்தினர். இரத்தம் சீறிப்பாய்ந்தது. அத்துடன் விட்டுவிட வில்லை ஜன்னலுக்குள்ளால் அவவை தூக்கி வெளியில் எறிந்தனர். எல்லோரும் பஸ்ஸை விட்டு இறங்கிவிட்டனர். நான் பின்பக்கத்தால இறங்கி விட்டேன். பின்னர் அந்த பெண் மீது ஒரு சிங்கள காடையன் பெற்றோல் ஊற்றினான். அங்கு கூடியிருந்த சிங்களவர்கள் ஆடிப்பாடினார்கள். மற்றொருவன் நெருப்பை பற்றவைத்தான். சம்பவம் நடந்துகொண்டிருந்தபோது பிக்குகள் அப்பகுதியால் சென்று கொண்டிருந்தனர். ஒரு தமிழன் கூடத் தப்பக்கூடாது என பிக்கு ஒருவர் கத்தினான். உடனே நான் பின்பக்கமாக ஓட முடிவெடுத்தேன்" என்றார் . ஒன்றல்ல இரண்டல்ல.. அன்று தமிழனுக்கு ஏற்பட்ட வலி 23 ஆண்டுகள் ஓடிவிட்டபோதும் தொடர்கின்றது.

வெலிக்கடை படுகொலைகள்.

83 ஜூலை 25 ஆம், 27 ஆம் திகதிகளில் வெலிக்கடை சிறையில் இடம்பெற்ற படுகொலைகள் பற்றி அப்பொழுது சிறையிலிருந்தவரும் காந்திய இயக்கத் தலைவருமான எஸ்.வி. டேவிட் பின்வருமாறு கூறுகிறார்.

கண்ணைத்தோண்டி இரத்தம் குடித்த காடையன்

`25 ஆம் திகதி சிங்கள கைதிகள் சிறையின் சப்வெல் பிரிவிலிருந்து 35 தமிழ் அரசியல் கைதிகளை படுகொலை செய்தனர். இதில் குட்டிமணி ஜெகன், தங்கத்துரை ஆகியோரும் அடங்குவர். குட்டிமணியின் கண்கள் காடையன் ஒருவனால் தோண்டப்பட்டதுடன் சீறிப்பாய்ந்த குருதியை கூட குடித்தான். திருப்பி கேட்க யாருமின்றி கொல்லப்பட்ட 35 அப்பாவிகளினதும் சடலங்களையும் வெலிக்கடை சிறையிலுள்ள கௌதம புத்தரின் சிலைக்கு முன்னால் கொண்டு குவித்தனர்". மறுநாள் 26 ஆம் திகதி சிறை மயானாக அமைதியாகவிருந்தது. 9 பேரை முதலாவது மாடிக்கு மாற்றினார்கள். ஏனைய 28 பேரைக் கீழ்ப்பகுதிக்கு கொண்டு சென்றனர். 27 ஆம் திகதி பிற்பகல் 2.30 மணியிருக்கு அவலக்குரல்கள் கீழ்ப்பகுதியில் கேட்கின்றன. 40 சிங்கள கைதிகள் கோடரிகள் கம்பிகளுடன் அன்றைய தினம் அடாவடித்தனம் செய்தனர். வெலிக்கடையில் இந்த இரு நாட்களிலும் இடம்பெற்ற படுகொலைகளில் மொத்தமாக 57 பேர் கொல்லப்பட்டனர். 23 ஆண்டுகளுக்கு முன்னர் இக்கொடூரங்கள் இடம்பெற்றதை வரலாறு பதிவு செய்திருக்கின்றது. இதேபோன்ற கொடூரங்கள் 2006 இலும் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

2006 திருமலை இன அழிப்பு

கடந்த ஏப்ரல் 12 ஆம் திகதி திருகோணமலை நகரில் சிங்கள இனவெறியர்களின் அடாவடித்தனம் 83 இனைப் போல தமிழர்கள் மீது நேரடியாக ஏவிவிடப்பட்டது. குண்டு ஒன்று பிற்பகல் 3.30 மணியளவில், புது வருடத்திற்கு மக்கள் பொருட்களை வாங்கிக்கொண்டிருந்த வேளையில் வெடித்தது. கண்மூடித்திறப்பதற்கிடையில் சிங்கள காடையர்கள் திருமலை நகர வீதிகளில் கட்டாக்காலியாக அலைந்து தமிழர்கள்மீது தாக்குதல் நடத்தினர். இதன்பொழுது பலர் கொல்லப்பட்டனர். இந்த அழிப்பில் சிங்களப் பெண்களும் பங்குபற்றியிருந்ததாக நேரில் கண்டோர் தெரிவித்தனர். 12 ஆம் திகதி ஆரம்பித்த இவ்வின அழிப்பு ஒரு வாரத்துக்கு மேலாக ஆங்காங்கே நடைபெற்றது. புதுவருட பிறப்பான 14 ஆம் திகதி திருகோணமலை கன்னியா - சிவயோகபுரம் நடேசர் கோவில் எரிக்கப்பட்டதுடன் அங்கு பஜனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மூதாட்டியொருவரும் சிங்கள காடையர்களால் வெட்டிக்கொல்லப்பட்டார். (இக்கோவில் 83 ஆம் ஆண்டும் தாக்குதலுக்கு இலக்கானது) இராணுவத்தினரும் பொலிஸாரும் கைகட்டிப் பார்த்துக்கொண்டிருக்க இடம்பெற்ற இச் சம்பவத்தின் போது காடையர்கள் கட்டை காற்சட்டையுடனும் இராணுவத்தினர் அணியும் பனியனுடனும் வந்ததாக கிராமவாசிகள் தெரிவித்தனர்.

மலையகத்தில் வெறியாட்டம்

கடந்த 28 ஆம் திகதி எஹிலியகொடை - பம்பேகமதோட்டத்தில் சிங்களவர்களின் அடாவடித்தனம் அரங்கேறியது. சிங்களவர் ஒருவர் தாக்கப்பட்டதும் அவரை தமிழர்கள் தான் தாக்கியதாக கூறி திட்டமிட்ட முறையில் தமிழர்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டதுடன் அவர்களின் பெறுமதியான உடைமைகள் அடித்து நொருக்கப்பட்டு சூறையாடப்பட்டன. இரு நாட்களாக சிறுவர்கள், பெண்களென்ற வேறுபாடின்றி காட்டுக்குள்ளேயே தங்கியிருக்க வேண்டிய நிலை அப்பாவித் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டது.

ஜே.வி.பி., ஹெலஉறுமயவின் எச்சரிக்கை

பேரினவாதிகளின் திட்டமிட்ட முறையிலான அராஜகம் தொடர்கின்ற நிலையில் மீண்டும் `1983 ஜூலை' யைப் போன்ற பாரிய இன அழிப்பு கொழும்பிலோ அல்லது தமிழர்கள் இறைமையற்று வாழும் பகுதிகளிலோ ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் கலந்த கேள்விகள் எழுந்துள்ளது. 83 இல் ஜே.ஆரின் வக்கிர வார்த்தைகள் வெளிப்பட்டது போல தற்போது பல வாய்கள் தமிழர் விரோத கருத்துகளை வெளியிட்டுவருகின்றனர். குறிப்பாக ஜே.வி.பி, ஹெலஉறுமய ஆகிய தீவிரவாத கட்சிகள் தமிழர்களை உரக்க எச்சரிக்கின்றன. அண்மையில் கொழும்பு மாநகர சபை முன்றிலில் நடைபெற்ற கூட்டத்தில் ஜே.வி.பி தலைவர் சோமவன்ச அமரசிங்க, `தமிழீழம் கிடைத்தால் வெள்ளவத்தை, தெஹிவளைப் பகுதிகளில் தொடர்மாடிகளை வாங்கி குடியிருக்கும் தமிழர்கள் வட கிழக்குக்கு செல்ல வேண்டி வரும் என எச்சரித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் ஹெல உறுமயவின் கொள்கை வகுப்பாளர் எனக் கூறப்படும் சம்பிக ரணவக்க என்பவர் `யாழ்ப்பாணத்திலுள்ள 40 ஆயிரம் படையினர் பெட்டியில் வந்தால் கொழும்பிலுள்ள இலட்சக்கணக்கான தமிழர்கள் பெட்டியில் போகவேண்டி வரும்' என கருத்து வெளியிட்டிருக்கிறார். கருத்துவெளியிட்ட விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன். சம்பிக்க ரணவக்கவின் கருத்தை பொறுமையுடன் ஆராய வேண்டுமென கூறியிருந்தார்.

தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் மக்கள் உளவு நடவடிக்கை

கடந்த ஜூலை 16 ஆம் திகதி தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் என்ற அமைப்பு கொழும்பிலுள்ள ஆட்டோ சாரதிகளுக்கான ஒன்று கூடலை நடத்தியது. அதாவது, இராணுவத்தின் புலனாய்வுத்துறை சீரழிந்துவிட்டது நீங்கள் தான் புலனாய்வு வேலைகளில் ஈடுபட்டு சந்தேகத்துக்கிடமான தமிழர்களை பிடித்துத்தர வேண்டுமென ஆட்டோசாரதிகளை அந்த அமைப்பு கேட்டுள்ளது. இக் கூட்டத்தில் கொழும்பின் பாதுகாப்புக்கு பொறுப்பான பொலிஸ், இராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர். அப்பாவித் தமிழ் மக்களிடம் பணம், நகை பறிக்கும், ஆட்களை கடத்தும் ஆட்டோச் சாரதிகளின் கைகளில் (நேர்மையானவர்கள் மன்னித்துக்கொள்ளுங்கள்) கொழும்பிலுள்ள சந்தேகத்துக்கிடமான தமிழர்களை பிடித்துக் தாருங்கள் எனக் கோருவது சிறுபான்மையினத்தவர் குறித்த எந்தவித அக்கறையுமில்லாமல் மேற்கொள்ளப்படும் இனவாத நடவடிக்கையே. இந்த ஆட்டோ புலனாய்வுப் படை என்னவெல்லாம் செய்யப்போகின்றதோ அச்சம் கொழும்பிலுள்ள தமிழர்கள் மத்தியில் காணப்படுகின்றது. 1983 ஆம் ஆண்டைப் போல மீண்டுமோர் பாரிய இன அழிப்பை முன்னெடுப்பதற்கு அரச பயங்கரவாதம் இந்தப்படையை பயன்படுத்தக் கூடிய சூழலும் உள்ளது. இலங்கையின் அரச பயங்கரவாதம் தமிழனை நாட்டைவிட்டு துரத்துவது தனது மூதாதையரின் மடமைத்தனத்தை தொடர்ந்து முன்னெடுப்பதில் முனைப்பாகவே இருக்கின்றது என்பது தற்போது கொழும்பில் வெளிவருகின்ற கருத்துகளும் , ஏற்பாடுகளும் தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றன. இதற்கு தமிழினம் என்ன செய்யப்போகின்றது?

http://www.tamilflame.com/Site/articles.ph...&ucat=&

Link to comment
Share on other sites

இதை எல்லாம் வாசிக்கும் போது இரத்தம்கொதிக்கிறது.இன்று வரை தமிழனுக்கு இதே நிலை தொடர்கிறது. ஆனா அதே சிங்களவனுக்கு எதாவது என்றால் இங்கு சிலர் வக்காளத்து வேண்டி வருவினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கறுப்பு ஆடியின் மீள்விபரணக் காணொளி:

தமிழில்: http://www.vakthaa.tv/play.php?vid=1444

சிங்களத்தில்: http://www.vakthaa.tv/play.php?vid=1439

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழனின் இரத்த ஆறு என்றுதான் உறையுமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனிமேல் ஒரு தமிழன் இப்படியான இன அழிப்புக்களில் கொல்லப்பட்டால் விகிதாசாரத்துக்கு ஏற்ப 8 சிங்களவர்கள் கொல்லப்படவேண்டும் அப்பொழுதுதான் நாம் எமது இருப்பை உறுதி செய்துகொள்ளமுடியும். இதற்காக சிலபேர் இங்கு என்னை மனிதாபிமானம் இல்லாதவன் இனத்துவேசம் பிடித்தவன் என்று கூறினாலும் நான் கவலைப்படப்போவதில்லை.

Link to comment
Share on other sites

என்ன எழுத என்றே தெரியவில்லை நிறைய எழுத வேண்டும் போல இருந்தும் :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன எழுத என்றே தெரியவில்லை நிறைய எழுத வேண்டும் போல இருந்தும் :rolleyes:

என்ன செய்வது

சில ஆள்காட்டிகளும்

தேச துரோகிகளும் இருக்கும் போது

சுப்பண்ண சரியே

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.