-
Tell a friend
-
Topics
-
Posts
-
By கிருபன் · பதியப்பட்டது
ரமழான் பண்டிகையை முன்னிட்டு வெளியான நிரூபம் ! “கஞ்சி ” வழங்க தடை ! மேலும் 30 விதிமுறைகள் (எம்.மனோசித்ரா) ரமழான் பண்டிகையினைக் கொண்டாடும் போது முஸ்லிம் பள்ளிவாசல்களில் கடைபிடிக்க வேண்டிய 30 சுகாதார பாதுகாப்பு விதிமுறைகள் அடங்கிய சுற்று நிரூபம் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவினால் இந்த சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமை பள்ளிவாசல்களில் 18 வயதுக்கு மேற்பட்டோர் மாத்திரமே வழிபாடுகளுக்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு பள்ளிவாசல் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் அளவுக்கதிகமானோர் கூடுவதற்கு இடமளிக்கப்படக் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வழிபாடுகளின் போது நிச்சயம் தனிநபர் இடைவெளி பேணப்பட வேண்டும். சமூக இடைவெளியைக் கருத்திற் கொண்டு 100 பேரைவிடக் குறைவானோரே அனுமதிக்கப்படவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நோன்பு காலங்களில் வழங்கப்படும் 'கஞ்சி' இம்முறை வழங்கப்படக் கூடாது. அத்தோடு பள்ளிவாசலுக்கு வருகை தருபவர்பளுக்கு அடிப்படை சுகாதார விதிமுறைகளை பின்பற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதோடு , ஊழியர்களும்அவற்றை கடைபிடிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/103776 -
By கிருபன் · பதியப்பட்டது
தமிழ் புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்தார் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தமிழ், கேரளா, பெங்காலி, நேபாளி உள்ளிட்ட பல்வேறு தரப்பு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். தமிழ் புத்தாண்டு (சித்திரை 1) இன்று கொண்டாடப்படுகிறது. இலங்கை, இந்தியாவின் தமிழகம் மட்டுமின்றி கேரளாவில் விஷூ வருடப்பிறப்பு கொண்டாடப்படுகிறது. அதேபோல், இந்தியா முழுவதும் பல்வேறு மொழி பேசும் சமூகங்கள் அவரவர் மொழிகளில் தங்கள் பாரம்பரிய புத்தாண்டை கொண்டாடுகின்றனர். இதேபோல், இலங்கை மட்டுமின்றி தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பல தரப்பட்ட சமூகங்களும் அவரவர் மொழிகளில் புத்தாண்டை கொண்டாடுகின்றனர். இந்நிலையில், தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசியாவில் புத்தாண்டு கொண்டாடும் தமிழ், கேரளா உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில், வைஷாகி, நவராத்திரி, சாங்ரன் மற்றும் வரும் வாரத்தில் புத்தாண்டு கொண்டாடும் தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய சமூக மக்களுக்கு நானும் ஜில்லும் (பைடனின் மனைவி) வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். இனிய பெங்காலி, கம்போடியன், லியோ, மியான்மரிஸ், நேபாளி, சின்ஹலிசி, தமிழ், தாய் (தாய்லாந்து), விஷூ புத்தாண்டு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/103771 -
By தமிழ் சிறி · பதியப்பட்டது
ஐரோப்பாக் கண்டத்தை சேர்ந்த... ஒரேயொரு பௌத்த மதக் குடியரசு கல்மீக்கியா பற்றி பலர் அறியாத தகவல்கள். Kalai Marx உலகத் தமிழர் பேரவை -நண்பர்கள் / World Tamil Forum ஐ விரும்பும் நண்பர்கள் -
கந்தையாண்ணை நீங்கள் பேராண்மை திரைப்படம் இன்னமும் பார்காவிட்டால் ஒருமுறை எடுத்துப் பார்க்கவும், அந்தப் படக்கதைதான் உங்கள் பின்னூட்டத்தில் ஓடுதண்ணை.😩
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.