Jump to content

தமிழகச் சினிமாவைப் பார்த்தே தமிழீழ விடுதலைப் போராட்டம் நடக்கிறது.


Recommended Posts

தமிழகச் சினிமாவைப் பார்த்தே தமிழீழ விடுதலைப் போராட்டம் நடக்கிறது.

- சாந்தி ரமேஷ் வவுனியன் -

'ஈழத்தழிழர்களின் வலியை பதிவு செய்வேன்" பருத்திவீரன் இயக்குனர் அமீர் ஆவேசம் என அண்மையில் செய்திகள் படித்தோhம். அமீரின் ஆவேசம் என்ன என்பது பற்றி அவரது உரையைக் கேட்டபின் பின்தான் உண்மை உறைத்தது. ஒரு உண்மையான கலைஞனின் ஆதங்கம் அமீரின் உரையில் வெளிப்பட்டிருக்கிறதேயன்றி அது ஆவேசமல்ல. யதார்த்த வாழ்வை பிரதிபலித்த பருத்தீவீரனை நுணுநுணுக கவிதையாகப் பதிந்திருக்கும் அமீரின் கவிதைக் கண்களுக்குள் உப்புச்சப்பில்லாத எதையோ சினிமா என்று டென்மார்க்கிலிருந்து தமிழகம் சென்று பணத்தை விசிறி பாடல்காட்சிப் படம் காட்டியிருக்கிறார் கி.செ.துரையென்கின்ற கி.செல்லத்துரை.

சினிமா என்ற பெயரில் பல லட்சம் டெனிஷ் குரோணர்களை ஏற்கனவே 'பூ(ஈ)க்கள்" என்று கத்;தியும் துவக்கும் காட்டி எமது தொலைக்காட்சிகளும் தென்னிந்தியப் பெரும்பான்மைப் படங்கள் போடும் கனவுலக ஆட்டத்தையுமே புதுமையான பூக்கள் என்று பெயரிட்டு கொசுக்களைப் படம் காட்டிய கி.செல்லத்துரை அவர்கள் திரும்பவும் பல லட்சம் டெனிஷ் குரோணர்களை கொட்டி தனது மகனை கதாநாயகனாக்கி 'இளம்புயல்" என்ற பெயரில் திரைப்படம் என்று ஒன்றைத் தயாரித்திருக்கின்றார்.

இப்படத்தின் பாடல் வெளியீட்டினை சென்னையில் நிகழ்த்தியுமிருக்கிறார். எம்மவர் சினிமா என இதற்குப் பெயரிட்டு எம்மவர்களுக்கான சினிமா இதுதான் என தமிழகத்தில் போய் நின்று வீரவிளக்கம் கொடுத்திருக்கிறார். இந்த உரையைக் கேட்கின்ற ஒவ்வொரு ஈழத்தவனும் நாக்கைப்பிடுங்கி (இவர்களுக்காக நாக்கைப் பிடுங்குவது அதிகம்தான்) சாகலாம் போலத்தானிருக்கும். இல்லை எங்கள் கால்களில் இருப்பதைக் கழற்றி எங்கள் முகத்தில் நாங்களே அடிக்கத் தான் தோன்றுகிறது.

போதாமைக்கு ஈழத்தழிழர் இங்கிருந்தே (அதாவது இந்தியாவிலிருந்தே) ஈழத்துக்குப் போனோம் , இங்கிருந்து போர்வீரர்களாகப் போனவர்களின் வம்சமே இன்று போராடுகின்றது என அருளுரை வழங்கியிருக்கிறார். ஈழத்தமிழினம் இலங்கையின் பூர்வீகக்குடிகள் என்பதும் எங்களுக்கான தனித்துவம் பண்பாடு கலாசாரம் மொழி உள்ளது என்பதும் எமது பூர்வீக நிலத்தை கொள்ளையிடும் சிங்களர்களுடன் நடக்கும் தமிழீழ விடுதலைப்போரின் வலிகளும் துயர்களும் டென்மார்க் வந்ததுடன் கி.செல்லத்துரைக்கு மறந்துவிட்டதா அல்லது ஞாபகப்பதிவில் மங்கிவிட்டதா ? சிங்கள இராணுவத்தின் கொலைப்பட்டியலில் குடும்பத்திலிருந்து 6பேரை கொடுத்துவிட்டு டென்மார்க் போனேன் என உருக்க உரை வழங்கியவருக்கு உண்மையில் ஈழத்தமிழரின் ஊற்று எங்கே தோற்று எங்கேயென்பது புரியாமல் கேவலக்கெட்ட ஒரு சினிமாவுக்காக எங்கள் இன மானத்தையே தமிழகத்தி;ல் போய் நின்று விற்றுவிட்ட வெங்காயச் சினிமா இயக்குனர் திலகம் கி.செ.துரையென்றால் மிகையில்லை. குடும்பத்தில் ஆறுபேரை இலங்கை இராணுவத்திற்கு பலி கொடுத்தவருக்கு அந்த வலியிருந்திருப்பின் இப்படியான வார்த்தைகளைச் சொல்ல மனம் ஒப்புமா ? யாரோ சிந்தும் குருதியில் தங்களை வளர்க்கும் துரோகத்தை கி.செல்லத்துரையால் தான் செய்ய முடியும்.

அதுமட்டுமல்ல தமிழ்சினிமாவில் இருக்கின்றவர்கள் இலங்கையிலே ஓர் இனப்போர் ஏன் நடக்கின்றது என்று கேட்டால் அதற்கு சிங்கள அரசு காரணமல்ல அதற்கு தமிழ் சினிமாதான் காரணம் என்பதைத் தமிழகத்தில் இருக்கின்ற சினிமாக்கலைஞர்கள் அறிந்திருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. என்கிறார் இந்த அறிவுசீவி. தமிழகத்தில் உள்ள தமிழ் உணர்வாளர்கள் உட்பட சினிமாத்துறை சார்ந்த எம்மில் நேசமுள்ளவர்கள் ஈழத்தமிழினம் அதன் போராட்டம் என்ன என்பதைப் புரிந்து எங்களுக்கான பலம் தமிழகத்தில் பெருகியிருக்கிறது. இந்நிலையில் தனது சுய விளம்பரத்துக்காகவும் சொந்த இலாபத்துக்காகவும் கதையளக்கும் இவரிடமிருந்து ஈழத்தமிழர்களோ தமிழகத் தமிழர்களோ கற்க எதுவுமில்லை.

தமிழக சினிமாவைப் பார்த்துத்தான் தமிழீழ விடுதலைப்போராட்டமே நடப்பதாக ஒரு மாயையான கனவை தமிழகக் கலைஞர்கள் மத்தியில் உரைத்த கி.செல்லத்துரையின் உதவாத சினிமாவை உலகம் முழுவதிலும் புறக்கணிக்கப் போகின்றது தமிழினம். இதுவரை தமிழீழ விடுதலைப்போரில் இறந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட உயிர்களின் தியாகங்களும் இந்த விளக்கம் கெட்ட கி.செ.துரை காற்றாய்,கடலாய்,பெயர் சொல்லாமல் ஊர் சொல்லாமல் உயர்ந்த லட்சியத்துக்காய் தங்கள் இளைய உயிர்களை உதிர்த்த மாவீரர்களின் தியாகங்களெல்லாம் வெங்காயச் சினிமாவின் தாக்கம் என்கிறாரா ? தமிழக சினிமாக்களில் தலைவர்களின் பின்னால் நூறுபேர் நின்று தலைவர் வாழ்க தலைவர் வாழ்க என கி.செல்லத்துரைக்கும் கோஷம் போடுவார்கள் என்று எண்ணியோ என்னவோ சிவாஜி கணேசனின் 'மலர்களைப்போல் தங்கை உறங்குகிறாள்" பாடலில் பாதிப்பு கி.செல்லத்துரையை தலையில் முடியைக் கூட உதிர்த்துவிட்டதாக உணர்ச்சி விழிம்பில் நின்று துடித்திருக்கிறார். அப்போ சினிமாவைப் பார்த்துத்தான் தங்கைக்கு வாழ்வமைத்துக் கொடுத்தாரா ? அப்போ சுய சிந்தனையே இவரிடம் இல்லையா ? எல்லாம் சினிமாவின் வழிநடநத்தல்தானா ? தன்னை ஒரு தமிழ் ஆசிரியானாக கலைஞனாக அறிமுகமாக்கிய மனிதரின் மூளை மண்டலமே சினிமாவின் இயக்குதலா ?

வயது முதிர மனித உடலிலும் மனத்திலும் மாற்றங்கள் நிகழ்வது போல முடியுதிர்வும் இயற்கை. ஆனால் புலம் பெயர் நாடுகளில் இளவயதிலே நரையும் வழுக்கையும் பலருக்கு வந்துவிடுகிறது. காரணம் எமது இளைஞர்கள் ஒன்று இரண்டு மூன்று வேலைகளென்று செய்து உழைத்து தங்கள் தலைகளை விமான ஓடுபாதை நிலைக்கு வர வைத்துவிடுகிறார்கள். இப்படியான உழைப்பாழிகளின் பணத்தை இந்த மனிதர் தனது உதவாச் சினமாவுக்கு முதலீடாகவும் மாற்றுகிறார்.

ஈழத்தில் எத்தனையே தேவைகள் நிறைந்து கிடக்கிறது. நாளும் பசியிலும் குண்டுவீச்சு விமானங்களின் தாக்குதலிலும் ஆட்லறி வீச்சுகளிலும் பிணங்களாக எம்மினம் நாளும் சாகிறது. அந்த மண்ணுக்காக அந்த மக்களுக்காக இந்தப் பணத்தை உதவினால் எத்தனையே நல்லவை எங்கள் மண்ணில் நடக்கும். மனமிருப்போரிடம் பணமில்லை பணமிருப்போனிடம் கொடுக்கும் மனமில்லை. வீணாக தனது குடும்ப விளம்பரத்துக்காக எத்தனை கோடிகளையும் செலவு செய்யத் தயாராக இந்த ஈழத்தமிழன். (ஈழத்தமிழருக்கே இழிவு)

அமீர் போன்றவர்கள் தமிழகசினிமாவை கதாநாயகப்பிடியிலிருந்து மீட்க போராட ஈழத்தவர்களின் பெயரைச் சொல்லி ஒரு சதத்துக்கும் பயனில்லாத ஓடிப்பிடித்து விளையாடும் கனவுப்படம் காட்டும் கி.செல்லத்துரை அமீர் போன்ற இயக்குனர்களுக்கு உதவினால் கூட குறைந்த செலவில் நிறைந்தவொரு சினிமாவை தருவார்கள். நல்லதொரு சினிமாவுக்கான தளமாக தனது பொருளாதார வளத்தை பயன்படுத்தினால் எம்மவர்களே சிறந்த சினிமாவை எடுப்பார்கள்.

ஈழத்து இளைஞன் சோமிதரன் அண்மையில் மிகுந்த பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் 'எரியும் நினைவுகள்" என்ற ஆவணப்படத்தைத் தந்திருக்கிறான். சோமிதரன் செய்திருப்பது ஈழத்தமிழனத்தின் ஒரு வரலாற்று ஆவணம். யாழ் நூலக எரிப்பின் நினைவுகளை எவ்வளவோ சிரமங்களுக்கு மத்தியில் ஆவணமாக்க அரும்பாடுபட்டு உழைத்திருக்கிறான். ஆயினும் இந்த இளைஞனது முயற்சிக்கு வீணாக இறைக்கும் பணத்தில் ஒரு பங்கைக் கொடுத்து உதவியிருப்பின் 'எரியும் நினைவுகள்" போல எத்தனையோ நினைவுகளை சோமிதரனும் சோமிதரன் போன்ற திறமையாளர்களும் தருவார்கள்.

மிகுந்த நெருக்கடிக்குள் சிறந்த தொழில்நுட்ப வசதியற்ற வன்னிக்குள்ளிருந்து வெளியான போராளிக்கலைஞர்களின் திரைப்படங்கள் எத்தனையோ அவையே எங்கள் ஈழத்து சினிமாவின் ஊற்றான ஆணிவேர்கள். இவையெல்லாம் தமிழக சினிமாவிலிருந்து பிறந்தவையல்ல எங்கள் கலை எங்கள் கண்களுக்குள்ளிருந்து எங்கள் மனிதர்களுக்குள்ளிருந்து பிறந்தவை. இதை விலைபேச டென்மார்க்கிலிருந்து புறப்பட்டு ஈழத்தமிழர் போராட்டமானது இந்தியா சினிhவிலிருந்து பிறந்ததென கதைவிடும் கி.செல்லத்துரையின் 'இளம் புயல்" தமிழர் வாழும் எந்த தேசத்திலும் திரையிட அனுமதிக்கக் கூடாது. தமிழர்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும். 30 ஆண்டுக்கு மேலாக ஈழத்தமிழர் படும் துயரை ஒற்றை வரிக்குள் ஒளித்து எங்கள் வாழ்வின் வலியை சாதாரண சினிமாவுக்கு ஒப்பாக்கிய இந்த கி.செல்லத்துரையின் இரண்டாவது படமான 'இளம் புயல்" அனைத்துத் தமிழர்களும் புறந்தள்ளி சிறந்த படைப்புக்களை ஊக்குவிக்க வேண்டும்.

இறுதியாக , பணத்துக்காக தமிழகக்கலைஞர்களின் தமிழக சினிமா உலகின் படைப்புக்களை திருடி வலைப்பதிவேற்றி பல்லாயிரம் டெனிஸ்குரோணர்களை இலாபமாகப் பெறுகிறார் கி.செல்லத்துரை. இவரது மேற்பார்வையில் இயங்கும் பல இணையத்தளங்கள் திரைக்கு வந்ததும் வராததுமாக திரைப்படங்களை திருடி தனது சுய வருவாயைப் பெருக்கிக் கொள்கின்ற பெருச்சாளி. இத்தகைய இழிவான தொழில் செய்யும் கி.செல்லத்துரை மீதும் அவரது குழு மீதும் தமிழக சினிமாவுலகம் நடவடிக்கையெடுக்க வேண்டும். ஒரு திரைப்படத்தை எவ்வளவோ செலவுகளின் மத்தியில் தமிழகத் தயாரிப்பாளர்கள் வெளியிட வீட்டுக்குள் இணைய இணைப்பும் இணைய வழங்கலுக்கான வசதியையும் பெற்று உங்கள் முதுகிலேயே சவாரி செய்யும் இந்தத் துரோகத்தனத்தை இந்தியத் திரையுலகம் இனங்காண வேண்டும்.

இறுதியாக ஈழத்தமிழர்கள் இத்தகைய வெளியிடுகளைப் புறக்கணிப்போம். சிறந்த படைப்புக்களை வரவேற்போம். ஈழம் தமிழகம் என்று பிரித்துப் பார்க்காமல் தமிழகத்திலிருந்து வெளிவரும் சிறந்த சினிமாக்களையும் வரவேற்போம். பருத்திவீரனைத் தந்த அமீர் , ஆணிவேரைத் தந்த ஜான் போன்ற இயக்குனர்களை வரவேற்போம். 'பூக்கள்" 'இளம்புயல்" என்று ஆக்களை ஏமாற்றும் கி.செல்லத்துரையிடமிருந்து சிறந்த படைப்புக்கள் கிடைக்குமாயின் அதை ஊக்குவிக்கவும் தயாராகவுள்ளோம். கி.செல்லத்துரை நீங்கள் தயாரா ? அல்லது இந்த விமர்சனத்திற்கு எதிர்ப்பாட்டுப்பாட உங்கள் பிழைகளை மறைக்க புனைபெயர்களைத் தேடுவீர்களா ? அல்லது பூக்கள் நாயகர்களை அனுப்பி துப்பாக்கியால் சுடுவீர்களா ? எதுவாயினும் வாருங்கள். கருத்தை கருத்தால் வெல்வோம். சிறந்த கலைப்படையல்களைப் படைப்போம்.

Link to comment
Share on other sites

  • Replies 61
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யார் இந்த கி.செ. அலைகள் எண்டொரு இணையத்தளம் நடத்திக்கொண்டு பூக்கள் எண்டொரு படத்தை எடுத்து நாறடிச்சஅதே ஆளா?? ஆளாளுக்கு போராட்டத்தை வைச்சு வயிறு வளக்கினம் அதிலை துரையும் சேந்து வளக்க தொடங்கியிருக்கிறார். ஆனாலும் இந்திய தமிழ் சினிமாவை பாத்துத்தான் ஈழப் போராட்டம் தொடங்கினது என்று இந்தளவுக்கு ஈழப்போராட்டத்தை இழிவுபடுத்தியிருக்கக்கூடாத

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆச்சரியமாக இருக்கிறது. கூடவே வெப்பத்துடன் நீண்டதொரு பெருமூச்சு.

மனிதரின் வயது ஐம்பதுகளைக் கடக்கும்போது சிறுபிராய மனதில் வீழ்ந்த ஆழ்மனதின் ஏக்கங்களை நனவாக்கும் பகீரத முயற்சிகளில் ஈடுபடுதல் இயல்பானதுதான். கிசெது சினிமா நாயகர்களின் கனவுலகில் சிக்குண்டவராக சிறுபிராயத்தில் இருந்திருக்கிறார். சினிமாவூடாகவே தமிழ்நாட்டையும் இந்தியாவையும் அறிந்திருக்கிறார். அக்காலத்தில் வாழ்ந்த இளையோரில் அதிகமானவர்கள் இவர்போலவே ஈழத்தில் காணப்பட்டிருந்தனர். இதை யாழ்நகரில் சினிமா வெளியிடப்பட்ட திரையரங்குகளில் பலரும் பார்த்திருக்கக்கூடும். இந்தத் திரைநாயக-நாயகிகளைத் தொட்டுப்பார்ப்பதற்காக தமிழ்நாடு சென்றுவந்தவர்களையும் நம்மில் பலர் அறிந்திருக்கக்கூடும்.

ஆனாலும் எழுச்சியுற்ற பெரியார்வழி திராவிடச் சிந்தனையின் பின்னாக வேறொருவகை ஈடுபாடு தமிழகம்-ஈழத்துடன் உயிர்ப்புடன் கிளம்பியிருந்தது. இந்த உறவு இன்றுவரையில் இறுக்கமானதாகத் தொடர்கிறது.

முன்னையது கனவுலகச் சலனங்களாகப் பின்னப்பட்டது. இரண்டாவது, மானிட நேசிப்பால் யதார்த்த இருப்பால் பின்னப்பட்டது.

ஆசிரியராக அறியப்பட்ட கிசெது அவர்கள் முதல் வகைப்பிரிவினராக தன்னை வெளிக்காட்டியிருக்கிறார். அதுவும் 2008இல்.

திரையில் சலனப்பிம்பமாக சினிமா அறிமுகமாகி மக்களின் பெரும் கவனத்தைப் பெற்றிருந்த அக்காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து சினிமாவில் நடிக்கவந்திருந்த அழைப்பை நிராகரிதவர் ஈழத்து மேடைநாடக அரங்கில் தடம்பதித்த கலையரசு சொர்ணலிங்கம் அவர்கள்.

'நமக்கென்றோர் நலியாக்கலையுடையோம்" என்று உரத்துக் கவிபடைத்தான் ஈழத்து மகாகவி.

'எட்டுத்திக்கும் சென்று கலைச்செல்வம் கொணர்ந்திடுவீர்" என விழித்தான் சென்ற நூற்றாண்டுக் கவி பாரதி.

கலை என்பது காலம் கடந்தும் பயணிக்கும் மாபெரும் சொத்து, ஒருகாலகட்டத்தை வேறொரு காலகட்டத்திற்குப் புரியவைக்கும் பதிவு. வெறும் பொழுது போக்குக்கானதல்ல.

புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களின் அனுபவங்கள் காலம் கடந்தும் செல்லக்கூடிய பொக்கிசங்கள். உலகத்தின் மானிட மனட்சாட்சியை உலுக்கக்கூடியவை.

இவற்றை திறம்பட பதிவுசெய்யக்கூடிய படைப்பாளிகளை அதுவும் உத்வேகமுடைய இளையோரை நாடி இருக்கிறது இன்றைய தமிழ்பேசும் உலகு.

இன்று 'வணக்கம், நன்றி, சுகமா.... " போன்ற வார்ததைகளை பல்லின வாய்களிலிருந்து வெளிப்படுவதைக்காண்கிறோம்.ஈழ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்வது இந்த...................................சொல்லுங்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோடம்பாக்கம் சினிமாவில் வரும் கர்பிணித் தாய்மாரைப் பார்த்துத்தான் ஈழத்தாய்மார் குழந்தைபெறக் கற்றுக்கொண்டார்கள் என்று சொல்லாமல் விட்டாரே கி.செ.துரையார்.

அறுபது வந்தால் அறளைபெயரும் என்பார்கள் ஆனால் அதற்கு முன்னரே கி.செ.துரைக்கு அறளை பெயர்ந்து விட்டதோ எனச் சந்தேகிக்க வேண்டி உள்ளது.

நுணலும் தன்வாயால் கெடும் என்ற பழமொழிக்கேற்ப தான் குட்டு வாங்கியது மட்டுமல்லாமல் புலம்பெயர்தோர் சினிமாவிற்கான முயற்சியாளர் அனைவருக்கும் இழுக்கு ஏற்படுத்தும் வகையில் கி.செ.துரை நடந்து கொண்டது நம்மால் புறந்தள்ளக் கூடியதல்ல.

தனது நிகழ்ச்சிக்கு விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனையும், இயக்குநர் அமீரையும் அழைக்க இந்த கி.செ.துரை என்ன புலுடாக்களை எல்லாம் அவிழ்த்துவிட்டாரோ. நாம் அறியோம். ஆனால் அவை வெளிவரும்.

தனது மகனுக்காக தந்தையான கி.செ.துரையின் திருகுதாளங்களைப் பார்த்தால் குடும்ப வாரிசுகளுக்கு முடிசூட்ட தமிழ்நாட்டு முதல்வர் ஆடும் ஆட்டங்கள் அனைத்தும் தூசுதான்.

கி.செ.துரை போன்றோரின் கபடத்தனங்களை உரித்துக்காட்டுவோர் புகழ் ஓங்கட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகச் சினிமாவைப் பார்த்தே தமிழீழ விடுதலைப் போராட்டம் நடக்கிறது.

ஈழப்போராட்டத்தை வைச்சுத்தான் உந்த சினிமா இப்போ நடக்கிறது

Link to comment
Share on other sites

சாந்தியின் பதிவிற்கு நன்றி.

ஆனால் உங்கள் பதிவில் தந்த குறிப்பிட்ட விடயங்கள் வெளிவந்த இணைப்புக்களையும் தந்தீர்களானால் அவற்றினை நாமும் பார்த்து விமர்சிக்க உதவியாகவிருக்கும்.

Link to comment
Share on other sites

தலைப்பை பார்த்துத்தான் உள்ள வந்தன்.... சினிமாவுக்குள் ஈழத்தை இழுத்ததால்...வந்தேன். கவனம் கவனமாக இருக்கணும்... நாமும் இந்த யாழும் இல்லைண்டா... எம்மையே எமாத்துடுவாங்க... எம்மையே எண்டா.... எம்போல் இணைய.... ஈழத்தகவல் அறியாத... அந்த ரீவி.... சினிமா... படத்திலையே வாழும்.... ஈழ அன்றாட கூலிவேலையும் தான் வாழ்க்கை... இது என இருக்கும் ஈழத்தமிழர்கள் பாடு... கடவுளே....... :unsure::lol::o:lol::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவரிட உரையை நானும் கேட்டனான். எனக்கு வாயில தூசனம்தான் வந்தது. அதை எழுதக் கூடெதென்டு விட்டுட்டன்.

ஐயோ.. தமிழக இயக்குனர்கள் எங்கடை வலியை பதிவு செய்யவில்லையே.. என்று அழுகிற ஆட்களுக்கு ஒண்டு சொல்லுறன் - எங்கடை -------------- வலியை பதிவு செய்யாமல் பாட்டும் கூத்துமெண்ட மூன்றாம்தர (தமிழ்சினிமாவை விட கேவலம். ) கழிசறைப் படங்களை எடுத்துக் கொண்டு.. அடுத்தவனைப் பார்த்து ஐயோ எங்களை பற்றி ஒரு படம் எடன் எண்டு சொல்லுற ஒரு மண்ணாங்கட்டி உரிமையும் எங்களுக்கு இல்லை.

ஆளும் அவரின்ரை இளிச்ச வாயும்.. ரத்தத்துக்குள்ளை வாரிக் கொண்டு போன தன்ர மகனை வளர்த்து கதாநாயகனாக்கினவராம். ம்.. வல்வெட்டித்துறை மக்கள் ஆரோ அரசன்ர காலத்தில வந்து குடியேறினவை எண்டும் சொல்லுறார்.

இப்பிடியான படங்கள் வந்த வேகத்திலேயே தோல்வியடைந்து போட்ட காசுமிழந்து போக வாழ்த்துகிறேன்.

ஏன்டாப்பா வசதியும் வாய்ப்பும் உள்ள நீங்களே உங்கடை வலியை பதிவு செய்யாமல் வௌளைக் காரியை கதாநாயகியா போட்டு ஆட்டம் காட்டுறியள். இந்த லட்சனத்தில அமீர் வந்து பதிவு செய்யணுமே.. ? (இலங்கை தமிழ் பெண்களை எங்கடை ஆட்கள் பெரும்பாலும் கதாநாயகியாக போடுவதில்லை. கலாசாரமாம். கண்டறியாத... )

உந்தப் படம் தோத்து துண்டைக் காணம் துணிய காணம் எண்டு அப்பனும் மகனும் ஓடினால்தான்... உது மாதிரியான செக்ஸ் படங்கள் வாறது நிக்கும். ஓ..

Link to comment
Share on other sites

சாந்தியின் பதிவிற்கு நன்றி.

ஆனால் உங்கள் பதிவில் தந்த குறிப்பிட்ட விடயங்கள் வெளிவந்த இணைப்புக்களையும் தந்தீர்களானால் அவற்றினை நாமும் பார்த்து விமர்சிக்க உதவியாகவிருக்கும்.

[url="http://www.tubetamil.com/view_video.php?vi...30870060538746e

வசம்பு இந்த லிங்கில் போய் மேலதிகமான விபரங்களை கேளுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முகம் தெரியாத செ.துரை தன் தனிப்பட்ட சினிமா ஆசையை ஒரு படப்மெடுப்பதன்மூலம் தணித்திருக்கலாம்

ஒரு படம் எடுத்தால் நான் ஏன் கொதியில கத்தப் போறன்..?

இந்த மனுசன் என்ன எடுக்கிறார் என பார்த்துதான் கதைக்கிறியளோ

Link to comment
Share on other sites

டென்மார்க்கில் வாழ்ந்தும் தமிழ் கலைஞர்களால் பூக்கள் என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த பதினெட்டு ஆண்டுகளாக டேனிஸ் மக்கள் மத்தியிலும் ஐரோப்பாவில் வாழும் தமிழ் மக்கள் மத்தியிலும் வாழ்ந்து கலைப்பணியாற்றும் கலைஞர்களின் படைப்பு இதுவாகும். உலக நாடக விழாக்கள் உள்ளிட சர்வதேச நாடக அரங்குகளில் பங்கேற்ற கலைஞர்கள், தொழில்நுட்பவியலாளர், கணினி கலைஞர்கள் இணைந்து பணியாற்றுகிறார்கள். இதன் கதை திரைக்கதை இயக்கம் ஆகிய பணிகளை கி.செ.துரை ஏற்றுள்ளார். இவர் 100 மேடை நாடகங்களை மேடையேற்றிய அனுபவமுடையவர். அமெரிக்கா முதல் ஜப்பான் வரை உலகின் பல மொழிகள் அடங்கிய நாடகக் கலைஞர்கள் பங்கேற்ற உலக நாடக விழாவில் வெற்றிபெற்ற யாத்திரை என்ற நாடகத்தை தயாரித்தவர். அத்துடன் பல நாவல்கள், இசைப்பேழைகள், இணையப்பக்க உருவாக்கம் என்று பல்வேறு தளங்களில் பணியாற்றி இம்முயற்சியில் இறங்கியுள்ளார். கடந்த ஆண்டு மொத்தம் 100 கலைஞர்கள் நடித்த உயிரோவியங்கள் நாடகத்தை இங்கிலாந்து, டென்மார்க் ஆகிய இடங்களில் மேடையேற்றியவராவார். கலைமணி, கலைமாமணி, கலைப்பெரு வேந்தன், கலைக்காவலன் போன்ற பட்டங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டவராவார். இந்தத் திரைப்படத்திற்கான இசையமைப்பை எஸ். வஸந்த் கவனிக்கிறார். இவர் சமீபத்தில் இளமை இனிமை புதுமை என்ற இசைத்தட்டை வெளியிட்டு பெரும் பாராட்டைப் பெற்றவர். ஐரோப்பிய, கீழைத்தேச இசையை உயர் கல்வியில் கற்கும் மாணவனாவார். படத்தொகுப்பையும் படப்பிடிப்பையும் இணைய வடிவமைப்பாளர் அலைகள் ரவிசங்கர் பொறுப்பேற்றுள்ளார். காட்சி உருவாக்கத்தில் இவருடைய தொழில் நுட்ப தயாரிப்புக்கள் டேனிஸ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்புப் பெற்றுள்ளன. இப்போது தமிழ் மக்களுக்கான திரையில் அவர் பணியாற்ற முற்பட்டுள்ளார்.

சுமார் 200 மேற்பட்ட புலம் பெயர் தமிழ் கலைஞர்கள் இத்திரைப்படத்தில் பங்கேற்கிறார்கள். டென்மார்க், இங்கிலாந்து, நோர்வே, சுவீடன், சுவிற்லாந்து, ஜேர்மனி ஆகிய நாடுகளில் படப்பிடிப்புக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுவரை தயாரான பகுதிகளை ஆய்வு செய்த பிரபல ஸ்கன்டிநேவிய திரைப்பட தர நிர்ணய நிறுவனம் இப்படத்தின் ஒளிப்பதிவு, எடிட்டிங், ஒலியமைப்பு யாவும் சர்வதேச தரத்தில் இருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. தமிழ் புத்தாண்டுக்கு வெளியிட திட்டமிட்டு பணியாற்றுகிறார்கள். தற்போது காலநிலை பனி மழையாகக் கொட்டிக் கொண்டிருக்கும் நிலையிலும் படப்பிடிப்புக்கள் தொடர்ந்து நடக்கின்றன. இதில் தமிழ், பொஸ்னிய, துருக்கி, டேனிஸ் ஆப்கானிஸ்தான், சோமாலிய நாடுகளின் நடிகர்கள் நடிக்கிறார்கள். இது முழு நீள தமிழ் படமாகும். உலகம் பூராவும் வாழும் தமிழ் மக்களிடையே வெளியிட எத்தனிக்கப்படும் இப்படம் தமிழை மிக இலாவகமாகக் கையாழுகிறது. தமிழை எப்படிக் கையாழுவது என்ற கேள்விக்கான பதிலாகவும் இது வெளிவரவுள்ளது.

பல கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்ட ஐரோப்பாவின் அழகிய காட்சிகளை எல்லாம் உள்ளடக்கி வெளிவருகிறது. வெறும் அறைகளுக்குள் திரைப்படத்தை அடக்கி வைக்காமல் ஒவ்வொரு காட்சியும் ஒரு அழகான வர்ணப் புகைப்படம்போல உருவாகிவருகிறது. திரைப்படம் கமேராவால் பிடிக்கப்படுவதல்ல அது ஒவ்வொரு செ.மீ. ஆக செய்யப்படுவது என்ற புரிதலில் உருவாக்கப்பட்டு வருகிறது. புத்தம் புதிய அதிசக்தி வாய்ந்த கணினிகளில் தமிழ் கணினி விற்பனர்கள் இதை உருவாக்கி வருகிறார்கள்.

மொத்தம் 300 அற்புதமான லொக்கேஷன்களில் கதை நடைபெறுகிறது. இதுவரை வந்த தமிழ்ப் படங்களில் பாடல்களுக்குள் மட்டும் வரும் ஐரோப்பா இத்திரைப்பட மூலம் கதைக்குள்ளும் விரவிவரப் போகிறது. இதுவரை தயாரான காட்சிகளைப் பார்த்த தொழில் நுட்பக் கலைஞர்கள் நம்மாலும் முடியும் என்ற காலத்திற்குள் இலங்கைத் தமிழ் திரைப்படமொன்று கால் பதித்திருக்கிறதென்று தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் பிரபல இயக்குநர் ஒருவர் இப்படத்தை தமிழகத்தில் பிலம் சேம்பரில் பதிவு செய்து வெளியிட ஏற்பாடுகள் செய்து வருகிறார். இப்படியான புதிய முயற்சிகள் தமிழகத்திலும் வெளியாவதே எதிர்கால வெற்றிக்கு சிறப்பாக அமையும். புலம் பெயர் தமிழரும், தமிழக கலைஞரும் இணைந்து திரைப்படங்களை தயாரிக்கும் புதிய காலம் பூப்பதற்கும் இத்தகைய முயற்சிகள் கைகொடுக்கலாம். இளம் கலைஞர்கள் பட்டாளம் நம்பிக்கையுடன் பணியாற்றி வருகிறது. சினிமா வர்த்தகத்தில் இலங்கைத் தமிழ் மக்களின் திரைப்படங்களும் உலகளாவிய பயணம் செய்வதற்கான ஏற்பாடு இதுவாகும்.

http://www.yarl.com/forum/index.php?showto...p;mode=threaded

Link to comment
Share on other sites

ஓகஸ்ட் 19, 2005

அடுத்த மேற்கு ஆபிரிக்கா இலங்கையா ? -கி.செ.துரை

-சூரியன்-

இந்த நிகழ்வு சென்ற மாதம் நடைபெற்றது.

கொழும்பு புறக்கோட்டையில் வியாபாரம் அமோகமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. பொருட்களை வாங்கும் யாருக்குமே அவற்றின் உண்மை விலை தெரியாது. ஆளுக்கு ஒரு விலையில் பொருட்கள் விற்பனையாகின.

அங்கு கடைவைத்திருந்த ஒரு சிங்கள வாலிபரிடம் பயணப்பை ஒன்றை ஒருவர் விலை கேட்டார். வாலிபர் இரண்டாயிரம் ரூபா விலை சொல்ல இவர் நானூறு ரூபா கேட்டார்.

அதற்கு பதில் தந்த சிங்கள இளைஞன், இவ்வளவு தூரம் நீங்கள் விலையைக் குறைத்தால் என்னால் ஒன்றுமே செய்ய இயலாது. நானும் துப்பாக்கி எடுத்து கூலிக்கு ஆட்களைக் கொல்லும் தொழிலுக்குத்தான் போக வேண்டிவரும். மனச்சாட்சிக்குப் பயந்துதான் நான் இப்படி வெய்யிலில் நின்று வியாபாரம் செய்கிறேன் என்றார்.

அந்த இளைஞரின் குரல் நேர்மையானது என்பதால் அந்த நபர் 2500 ரூபா கொடுத்து அந்த பயணப்பையை வாங்கினார். இலங்கைத் தீவு எங்கே போகிறது என்பதை அறிய விரும்புவோர்க்கு அந்த இளைஞர் கூறிய கருத்து நாளை நடப்பதைக் காட்டும் பளிங்குபோல பல செய்திகளைச் சொல்லுகிறது.

வரும் 2010 ல் இலங்கை எப்படியிருக்கும் என்று சிந்திப்போர்க்கு திரைப்படம் போல அது பல காட்சிகளைக் காட்டும். நாட்டை முன்னேற்ற எந்தவொரு பணியையும் முன்னெடுக்க முடியாத நெருக்குவாரம் உருவாகும், வெளிநாட்டு முதலீடுகள் தடைப்படும், பொருளாதாரம் ஸ்தம்பிதமடைந்து வங்குரோத்து நிலையை அடையும், இன்று மேற்கு ஆபிரிக்க நைஞர் நாடு அடைந்துள்ள பட்டினிச்சாவு அவலம்தான் நமது நாட்டிலும் தரிசனமாகும் என்று படிப்படியாக எண்ணங்கள் விரிவடையும்.

எண்ணங்களை ஒரு புறம் வைத்துவிட்டு, நைஞர் போன்ற நாடுகள் எவ்வாறு இப்படியான நிலையை அடைந்தன என்று முதலில் சிந்திக்க வேண்டும். அந்த நாடுகள் பின்வரும் பாதாளப் படிகளால் இறங்கியே இன்றைய அவலப் புள்ளியைத் தொட்டன. முதலாவது தொடர்ச்சியான உள்நாட்டுப் போர். இரண்டாவது போரினால் மக்கள் செயலூக்கமற்று அகதிக் கூடாரங்களில் ஒதுங்க, வெளிநாடுகள் போடும் நிவாரணமே அவர்களின் வாழ்வாக மாறியது. மூன்றாவது நிவாரணங்களுக்கான காத்திருப்பு வாழ்வாகி, இறுதியில் பட்டினியிலும், பாண்டு நோயிலும் சமுதாயம் சிக்குண்டது.

இந்த நிகழ்வுகள் அங்கு நிகழும்போதே சம காலத்தில் மேலும் பல பக்க விளைவுகள் உருவாகின. ஒன்று கூலிக்குக் கொலை செய்வது, இரண்டு திருட்டுக்காக கொலை செய்வது, மூன்று போதை வஸ்த்து, நான்கு சிறுவரைப் பாலியல் வக்கிரத்திற்கு பலியாக்குவது போன்ற காரியங்கள் கிளை நதிபோல ஓடிச் சென்றன. இவைகள் பெருவாரியாக நடைபெற்று இப்போது அவைகளையும் நடாத்த வழியின்றி, நடாத்தினாலும் பயனின்றி மேற்கு ஆபிரிக்காவின் வறுமைக்கோடு பூஜ்ஜிய மட்டத்தையும் தாண்டிப் போய்விட்டது. இதுதான் மேற்கு ஆபிரிக்க வறுமையின் பொதுவான கதை. சில ஆண்டுகளுக்கு முன்னர் இதே மேற்கு ஆபிரிக்காவின் கடைத்தெருக்களில் கேட்டுக் கொண்டிருந்த அதே வாசகத்தைத்தான் இப்போது புறக்கோட்டையில் நின்ற சிங்கள இளைஞரும் பேசியிருக்கிறார்.

இந்த அபாயமான தொனிகள் சிங்கள ஆட்சியாளருக்கு தெரியாது, ஏதோ நமக்குத்தான் எல்லாம் தெரிந்துவிட்டது என்று நாம் நினைத்துவிடக்கூடாது. அவர்களுக்கும் இது தெரியும், ஆனாலும் அவர்களிடம் வேறுவழியில்லை. நதி பாதாளத்தை நோக்கிப் போனாலும் அதை எதிர்த்து படகை வலிக்க முடியாமல் எல்லாவற்றையும் கைவிட்டுவிட்டு நதியோடு நதியாகப் போய்க் கொண்டிருக்கிறார்கள்.

இடையில் சுனாமி வந்தது -

பெருமளவு உதவிகள் நாட்டை நோக்கி வந்தன. உண்மையில் அந்த உதவிகளல்ல, சிறீலங்கா அரசுக்கு சர்வதேச நாடுகள் வைத்த பரீட்சை என்றுதான் கூறவேண்டும். கிடைத்த உதவிகளை சரியான முறையில் ஊழல் இன்றிப் பகிர்ந்தளிப்பது ஓர் ஆட்சிக்கலை. சிறீலங்கா அரசுக்கு அது தெரியவில்லை, துறைமுகங்களில் உதவிகள் தேங்கிக் கிடக்க என்ன செய்வதென்று தெரியாமல் அது தலையைச் சொறிந்தது. எட்டு மாதங்களுக்குப் பிறகு சுனாமிக்கட்டமைப்பு பற்றி பேசத் தொடங்கியிருக்கிறது.

நாம் பாடுபடாமல் யாரோ தர்மத்திற்கு கொடுத்த உதவிகளையே பகிர்ந்தளிக்க இயலாதவர்கள் அதிகாரத்தைப் பகிர்ந்து, போரினால் உண்டான அழிவுகளை மீளக் கட்டியமைக்கும் பணிகளை எப்படி முன்னெடுப்பார்கள் ? இது இன்னொரு கேள்வியாகும்.

இப்படி ஒன்றன் மேல் ஒன்றாக பல கேள்விகள் -

நேற்று முன்தினம் நைஞர் நாட்டு அதிபர் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் நைஞரில் வறுமை இல்லை என்றார். பின் அதற்கான காரணத்தை போசாக்கின் தலையில் போட்டு நிறைவு செய்தார். ஆனால் அவருடைய கருத்தில் ஒரு உண்மை இருக்கிறது, சர்வதேச உதவிகளை உரிய இடங்களுக்கு ஊழல் இல்லாமல் பாயச் செயதால் அவர் கூறியதுபோல நைஞர் வறுமை இல்லாத நாடுதான். ஆனால் அவரால் அது முடியவில்லை. நைஞர் மட்டுமா அனைத்து மேற்கு ஆபிரிக்க நாடுகளின் நிலையும் இதுதான். பற்றாமையை விட, கிடைத்த வளங்களைப் பிரித்தளிக்கும் கலையை அடியோடு தெரியாதிருப்பதே அவர்களின் பட்டினி மரணங்களுக்கு அடிப்படைக் காரணமாகும்.

எவ்வளவு உதவிகளை வழங்கினாலும் பட்டினியால் மரணிப்போர் தொகை குறைவடையாமலே இருக்கக் காரணமென்ன ? இதுபற்றி நீண்டகாலமாக சிந்தித்த மேலைநாடுகள் ஒரு நாள் உண்மையைக் கண்டு பிடித்தன. உதவிகள் உரியவருக்கு போய்ச் சேராமையே அங்குள்ள அடிப்படைப் பிரச்சனை என்பதையும் கண்டு கொண்டன. அதைச் சீர் செய்ய ஒரு வலையாக்க வேலைத்திட்டம் இருக்கிறது. அதை அமுல் செய்ய வேண்டுமென உதவி வழங்கும் நாடுகள் கோரின. ஆனால் அதனால் தமக்கு இலாபம் இல்லை என்பதால் ஆபிரிக்க அரசுகள் அதற்கு உடன்படவில்லை. இந்த நிலையில் வேறு வழியின்றி ஆபிரிக்க ஏழைகளை மேலை நாடுகள் இப்போது மெல்ல மறக்க ஆரம்பித்துவிட்டன. ஆபிரிக்காவில் மட்டுமா பாலஸ்தீனத்திலும் அதுதான் நடைபெற்றது. யாசீர் அரபாத் சிறந்த தலைவராக இருந்தும், உதவிகளை பகிர்ந்தளிப்பதில் அவருடைய ஆட்சியும் திறமை குன்றிய ஒன்றாகவே இருந்தது.

மேற்கு ஆபிரிக்க நாடுகளின் வறிய மரணத்திற்கு பகிர்ந்தளிப்பதில் ஊழலும், பகிர்ந்தளிக்கத் தெரியாமையும், பெருந் தொகையான மக்கள் உழைப்பின்றி உதவிகளுக்காக காத்திருந்து வாழ்ந்த வாழ்வுமே பிரதான காரணங்களாகும். இப்படி நைஞர் போல வறிய நிலைக்கு ஒரு நாடு போனால் போனதுதான் பின் அதை எந்த விலை கொடுத்தும் பழைய நிலைக்குக் மீட்டுவர இயலாது. எனவேதான் நாம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கிறது.

இலங்கை மக்களின் வாழ்வு சுனாமிக்குப் பின்னர் பெரு மந்தமான நிலையில் உள்ளது. உதவிகள் வரும் என்ற காத்திருப்பில் வாழ்வு கரைகிறது. எந்தவிதமான சுய செயற்பாடுகளுமற்று நிவாரணத்திற்காகவும், வெளிநாட்டு உதவிகளுக்காகவும் காத்திருப்பதும், வெளிநாட்டில் இருந்து உறவுகள் அனுப்பும் பணத்தில் வாழ்வதும் காத்திருப்பின் அடையாளங்களாகும். இப்படியான நிகழ்வு மிகவும் ஆபத்தானது. காத்திருத்தல் என்பது சமுதாய வாழ்வின் கழுத்தை முறிப்பது போல ஓர் ஆபத்தான பகுதி.

இது குறித்து புலம் பெயர் தமிழ் மக்கள் கூடுதல் கவனமெடுத்து சிந்திக்க வேண்டும். அரசுகளின் செயல்களையும் போட்டி பொறாமைகளையும் கேள்விப்பட்டு சோர்ந்து விடாமல் தாயகத்தில் இருக்கும் உங்கள் உறவுகளுக்கு உண்மைகளை எடுத்துரைக்க வேண்டும். அவர்களுக்கு வெறுமனே பணத்தை அனுப்பி சேம்பேறிகளாக்கக் கூடாது. அவர்களை செயற்பாடுள்ள மனிதர்களாக மாற்றும் பணிகளையும் முடுக்கிவிட வேண்டும்.

ஐரோப்பாவின் பொருளாதாரப் போக்கு புலம் பெயர் மக்கள் முன்னரைப்போல பணத்தைக் கொடுக்கும் அளவுக்கு செழிப்பாக அமையவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்தின் வருகையால் பெரும் வேலையில்லாத் திண்டாட்டமும், பொருளாதார மந்தமும் அருவமாக வளர ஆரம்பித்துள்ளன. இந்த எதிர்மறை நிலை உறவுகளுக்கு உதவிகளை வழங்க இயலாத நிலையை உங்களுக்கு ஏற்படுத்தலாம். எனவேதான் சகல விடயங்களையும் ஆழ அகலமாகச் சீர் தூக்கி ஒவ்வொருவரும் தாயகத்தில் உள்ள உங்கள் உறவுகளை செம்மையாக வழி நடாத்த வேண்டும். வெறும் நுகர்வோராக இல்லாமல் செயற்பாட்டுத் திறனுள்ளவர்களாக உங்கள் உறவுகளை உருவாக்க வேண்டும்.

நீங்கள் யார் யாருக்கெல்லாம் உதவுகிறீர்கள் என்று பட்டியலிடுங்கள். அந்த உதவியால் ஏதாவது சிறு அளவிலாவது உற்பத்தி நடைபெறுகிறதா என்றும் எண்ணிப்பாருங்கள்.

http://www.webtamilan.com/politics/2005/08...2505788147.html

Link to comment
Share on other sites

நுணாவிலான் கி.செல்லத்துரை என்ற கலைஞனின் திறமைகளை யாரும் இங்கு குறைத்து மதிப்பிடவில்லை. தமிழகத்தில் போய் நின்று தனது சொந்தத்திரைப்படத்தை வெளியிட்டுவிட்டு வந்திருந்தால் யாரும் அவரது திறனை ஆராயமாட்டோம். ஈழவிடுதலைப்போராட்டத்தை இந்திய சினீமாவுடன் ஒப்பாக்கியதுதான் மேற்படி கட்டுரை வரவேண்டியிருந்தது.

கவிமணி கலாமணி பட்டங்களை எந்த இடத்திலும் குறைக்கவுமில்லை இழிக்கவுமில்லை.

கி.செல்லத்துரை அவர்களின் உரையைக் கேட்டுவிட்டு உங்கள் கருத்தை வையுங்கள்.

http://www.tubetamil.com/view_video.php?vi...30870060538746e

பூக்களையும் புயல்களையும் பயனுள்ளதாய் தரட்டும். யாரும் தடையில்லை. வேண்டிய ஆதரவை நாமும் வளங்குவோம்

Link to comment
Share on other sites

சாந்தி

இணைப்புக்கள் வழங்கியமைக்கு நன்றிகள். அதுபோல் உரிய பதிவுகளையும் இணைத்தமைக்கு நுணாவிலானுக்கும் நன்றிகள்.

நீங்கள் இணைத்த இணைப்பில் 8 பகுதிகளாக இருந்தவை அனைத்தையும் இதுவரை பார்த்து முடித்தேன். இணைப்புக்களில் சிலது ஒரு நேரம் வேலை செய்கின்றது, ஒரு நேரம் வேலை செய்யவில்லை. அதனால் தொடர்ந்து முயற்சி செய்து எல்லாவற்றையும் பார்த்து முடித்தேன்.

உண்மையில் நீங்கள் அவசரப்பட்டு விட்டீர்கள். துரை அவர்கள் எமது போராட்ட எழுச்சிக் குணம் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி போன்றவர்களின் வசனங்களினாலும் எம்ஜிஆர், சிவாஜி போன்றவர்களின் நடிப்பைப் பார்த்து ஏற்பட்டதேயொழிய, சிங்கள அரசினால் அல்ல என்று இந்திய தமிழ்ச் சினிமா பற்றி பாராட்டாகச் சொல்ல முனைந்திருக்கின்றார். மற்றும்படி விடுதலைப் போராளிகளையோ, விடுதலைப் போராட்டத்தையோ எந்த இடத்திலும் இழிவாக அவர் சொல்ல வரவில்லை. பூனைக்குட்டி இன்னொரு பக்கத்தில் அவசரப்பட்டது போன்று, நீங்களும் இங்கு அவசரப்பட்டது வியப்பளிக்கின்றது. நான் அறிந்தவரை டென்மார்க் தமிழ் மக்களால் பெரிதும் மதிக்கப் படுபவராக துரை அவர்கள் இருக்கின்றார். அப்படிப்பட்ட ஒரு கலைஞரை வெறும் அரசியல் சாயம் பூசி கேவலப்படுத்த முயல்வது முறையல்ல. நீங்கள் தெரிந்து செய்தீர்களோ அல்லது தெரியாமல் செய்தீர்களோ எனக்குத் தெரியாது?? ஆனால் உங்களிடமிருந்து இப்படியான மலிவான செயல்களை நான் எதிர் பார்க்கவில்லை. இந்நிகழ்ச்சியில் தொல் திருமாவளவன் அவர்கள் குறிப்பிட்டது போல் "பேனா பிடிப்பவர்கள் முதலில் தாம் என்ன எழுதப் போகின்றோமென்பதை மனச்சாட்சியோடு யோசித்துவிட்டு எழுதுவதே சாலச் சிறந்தது".

இவ்விடயத்தில் விடயங்களை இணைப்போர் மட்டுமல்லாது, அதனைத் தொடர்ந்து கருத்துக்களை வைப்போரும் விடயத்தினை நிதானமாக நன்கு ஆராய்நது தமது கருத்துக்களை வைப்பதும் நல்லது. கருத்துக்களை வைத்து விட்டு, ஐயோ நாம் தவறாக எண்ணி கருத்தை எழுதிவிட்டோமென்று பின்பு யோசிப்பதில் என்ன பயன்.

இங்கு சிலர் வேண்டுமென்றே பொய்யான தகவல்களை மற்றவர்களை உசுப்பேற்ற எந்தவித ஆதாரங்களுமின்றி இணைத்துவிட்டுச் செல்கின்றார்கள். ஆதாரமாக தமது இணையத்தள முகவரியை போடுகின்றார்கள். இதைவிடக் கேவலம் சிலர் புதினம், தறஸ்தமிழ் போன்ற இணையத்தளங்களில் இருந்து செய்திகளைச் சுட்டுப் போட்டுவிட்டு தமது நிருபர் என்று ஒரு பெயரையும் எமுதிவிடுவது. அதனை நிர்வாகமும் ஒரு தலைப்பட்சமாக விட்டு வைக்கின்றது. அதனை பார்த்துவிட்டு எத்தனை பேர் உண்மைத் தன்மையை யோசிக்காது கருத்துக்கள் வைத்திருக்கின்றார்கள் என்பதற்கு ஒரு இணைப்பையும் இணைக்கின்றேன். படித்துப் பாருங்கள்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=41172&hl=

Link to comment
Share on other sites

யாராவது சாந்தி இணைத்த இணைப்பைப் பார்க்க விரும்பினால் இணைப்பிலுள்ள 8 பகுதிகளையும் பார்க்க வேண்டிய அவசியமில்லை. 7வது 8வது பகுதிகளைப் பார்த்தாலே போதும். 7வது பகுதியில் பாடகர் மாணிக்க விநாயகம் அவர்களைத் தொடர்ந்து, துரை அவர்கள் உரை தொடங்குகின்றது. அவரின் உரை பகுதி 8 வரை உள்ளது.

Link to comment
Share on other sites

வசம்பண்ணா உங்கள் நேர்மையான விமர்சனத்துக்கு நன்றி. ***

சாந்தி அவர்களின் கட்டுரைக்கு நிதானமாக கருத்தெழுத நினைத்தேன். செ.துரை அவர்கள் கூறியதில் சில உண்மைகள் உண்டு ஈழத்தமிழரும் பல நூற்றாண்டுகளுக்கு இந்தியாவில் இருந்து சென்றவர்களாகவே இருக்கவேண்டும். அது விஜயன் செல்வதற்கு முன்னர் நடை பெற்றிருக்கின்றது.

மற்றையது நமது தேசியத்தலைவரே ஒரு நேர்காணலில் இயற்கை எனது வழிகாட்டி வீரபாண்டிய கட்ட பொம்மன் கப்பலோட்டிய தமிழன் போன்ற திரைப்படங்கள் தன்னுடைய விடுதலை உணர்வை வளர்த்ததாக. தனக்கு சோழர்களின் வீரம் பிடித்தாகவும் கடல்புறா போன்ற நூல்கள் மூலம் சோழர்களின் வீரத்தை அறிந்ததாகவும் அதனால் புலிச்சின்னத்தை தான் தேர்ந்தெடுத்ததாகவும்..

சாந்தி அக்கா உங்களுக்கு செ துரையில் தனிப்பட்ட கோபங்கள் இல்லாவிடின் உங்கள் தவறை உணர்ந்து உங்கள் கருத்தை களத்தில் வைப்பிர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி எழுதியதைத் தான் வசம்பு இணைப்பை பார்த்து மீளவும் உறுதி செய்திருக்கிறார். இதில் என்ன தவறு கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது? தென்னிந்திய சினிமா கொடுத்த உணர்ச்சி வேகம் தமிழர் போராட்டத்திற்கு குறிப்பிடத்தக்க வேகமூட்டியது என்ற கருத்து துரை அவர்களின் சொந்தக்கருத்து மட்டுமே. ஒரு பாரிய பங்களிப்பு நடந்திருந்தால் அதை யாராவது "நாடகமும் அரங்கியலும்" மாணவர்கள் இக்கணம் ஆய்வு செய்து ஒரு முதுகலைப் பட்டம் வாங்கிப் போயிருப்பார்கள். தமிழர் போராட்டத்திற்கு உந்துதல் தரும் வலுவான காரணங்கள் எவ்வளவோ இருக்க ஒரு கற்பனை உலகோடு முடிச்சுப் போட்டது தேவையில்லாத ஒரு "முகஸ்துதி" மட்டுமே! போதாக் குறைக்கு தலைவரின் கருத்தைக் கொண்டு வந்து முண்டு வேறு கொடுக்கிறார்கள். தலைவரோ அவர் தளபதிகளோ, நிஜமாக நடந்த போராட்ட வரலாறுகளிடம் தான் அதிகம் ஈர்க்கப் பட்டிருக்கிறார்கள். அரசியல் வாதிகளின் மேடை வசன வீச்சுகள், சினிமாக் காரர்களின் கற்பனைகள் பால் அல்ல!

Link to comment
Share on other sites

வசம்பண்ணா உங்கள் நேர்மையான விமர்சனத்துக்கு நன்றி. ***

சாந்தி அவர்களின் கட்டுரைக்கு நிதானமாக கருத்தெழுத நினைத்தேன். செ.துரை அவர்கள் கூறியதில் சில உண்மைகள் உண்டு ஈழத்தமிழரும் பல நூற்றாண்டுகளுக்கு இந்தியாவில் இருந்து சென்றவர்களாகவே இருக்கவேண்டும். அது விஜயன் செல்வதற்கு முன்னர் நடை பெற்றிருக்கின்றது.

மற்றையது நமது தேசியத்தலைவரே ஒரு நேர்காணலில் இயற்கை எனது வழிகாட்டி வீரபாண்டிய கட்ட பொம்மன் கப்பலோட்டிய தமிழன் போன்ற திரைப்படங்கள் தன்னுடைய விடுதலை உணர்வை வளர்த்ததாக. தனக்கு சோழர்களின் வீரம் பிடித்தாகவும் கடல்புறா போன்ற நூல்கள் மூலம் சோழர்களின் வீரத்தை அறிந்ததாகவும் அதனால் புலிச்சின்னத்தை தான் தேர்ந்தெடுத்ததாகவும்..

சாந்தி அக்கா உங்களுக்கு செ துரையில் தனிப்பட்ட கோபங்கள் இல்லாவிடின் உங்கள் தவறை உணர்ந்து உங்கள் கருத்தை களத்தில் வைப்பிர்களா?

சோழன்

உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள். மேலும் நிச்சயமாக சாந்தி வேண்டுமென்று இவ்விடயத்தை செய்திருப்பதாக நான் நம்பவில்லை. தவறாக அவ விளங்கியிருக்கலாம்.

மேலும் இராவணனே ஒரு தமிழன் என்று வரலாறுகள் கூறுகின்றன. அப்படியானால் அவன் ஆட்சியிலிருந்த மக்களும் தமிழர்கள் தானே?? அப்படியிருக்க இந்தியாவிலிருந்து தான் இலங்கைக்கு தமிழர்கள் வந்தார்கள் என்பதும், ஒரு ஊகமாக வேண்டுமானால் எடுக்கலாமே தவிர திடமாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் மகாவம்சத்தில் விஜயனும் அவனது 400 தோழர்கள் வருகையும், அதன் பின் அவன் குவேனியை மணந்து அவளைக் கைவிட்டு, திரும்பவும் தென் இந்தியாவிலிருந்தே விஜயனுக்கும் அவனது 400 தோழர்களுக்கும் மணமகள்கள் வந்ததாகச் சொல்லப்படுகின்றதே!! அவர்களின் வாரிசுகள் தான் தற்போதைய பெரும்பாண்மையான சிங்களவர்கள். அப்படிப் பார்த்தால் சிங்கள இனத்தை விட அதிகமான உருத்துரிமை தமிழர்களுக்கு உண்டல்லவா?? எனவே எவர் எப்போது இலங்கைக்கு வந்தார் என்ற விவாதங்களை விடுத்து, எல்லா மக்களும் சம உரிமையுடன் வாழ வழி வகுக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

சாந்தி எழுதியதைத் தான் வசம்பு இணைப்பை பார்த்து மீளவும் உறுதி செய்திருக்கிறார். இதில் என்ன தவறு கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது? தென்னிந்திய சினிமா கொடுத்த உணர்ச்சி வேகம் தமிழர் போராட்டத்திற்கு குறிப்பிடத்தக்க வேகமூட்டியது என்ற கருத்து துரை அவர்களின் சொந்தக்கருத்து மட்டுமே. ஒரு பாரிய பங்களிப்பு நடந்திருந்தால் அதை யாராவது "நாடகமும் அரங்கியலும்" மாணவர்கள் இக்கணம் ஆய்வு செய்து ஒரு முதுகலைப் பட்டம் வாங்கிப் போயிருப்பார்கள். தமிழர் போராட்டத்திற்கு உந்துதல் தரும் வலுவான காரணங்கள் எவ்வளவோ இருக்க ஒரு கற்பனை உலகோடு முடிச்சுப் போட்டது தேவையில்லாத ஒரு "முகஸ்துதி" மட்டுமே! போதாக் குறைக்கு தலைவரின் கருத்தைக் கொண்டு வந்து முண்டு வேறு கொடுக்கிறார்கள். தலைவரோ அவர் தளபதிகளோ, நிஜமாக நடந்த போராட்ட வரலாறுகளிடம் தான் அதிகம் ஈர்க்கப் பட்டிருக்கிறார்கள். அரசியல் வாதிகளின் மேடை வசன வீச்சுகள், சினிமாக் காரர்களின் கற்பனைகள் பால் அல்ல!

உங்களுக்கு நான் தெரிவித்திருக்கும் கருத்தும், சாந்தி எழுதியிருப்பதும் ஒன்றாகவா தெரிகின்றது?? :wub: ஒரு சினிமா மேடையில் சினிமாத் தனமாகத் தான் பேசலாம். அதில் துரை செய்ததில் எவ்வித தவறும் இல்லை.

இவ்வளவு சொல்லும் நீங்கள் இயக்குனர் சீமானுக்கு தம்பி படமா முதல்ப்படம்?? தம்பி படம் வெளிவரும் போது தானே அவருக்கு இலங்கைத் தமிழ் மக்களின் துயரம் தெரிந்தது. ஏன் அதற்கு முதல் அவர் வெளிநாட்டிலா இருந்தார். அதுபோல் இயக்குனர் அமீர் அவர்களுக்கு நமது துயரங்கள் இந்தியாவிலிருக்கும் போது புரியவில்லை. ஆனால் பல்லாயிரக் கணக்கான கிலோ மீட்டர்கள் பறந்து பேர்லின் வந்த பின் தான் புரிந்தது என்று சொன்னால் எல்லோரும் நம்பி விடுவீர்கள். எல்லாம் விளம்பரம் செய்யும் வியாபாரத் தந்திரங்கள் என்பது எவருக்குமே புரியாது தான்!! :lol::lol:

ஆனால் நம்மவர் ஒருவர் கலைத்தறையில் ஏதாவது செய்ய முற்பட்டால், அதை எப்படியாவது அரசியலாக்கி உண்டு இல்லையெனப் பண்ணிவிடுவீர்கள். இது தான் நம்மினத்தின் சாபக்கேடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந் நிகழ்ச்சிக்கு முக்கியமானவரின் ஒரு சில வார்த்தை பரிமாற்றம் தவறுதலாகி விட்டதென நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

இந் நிகழ்ச்சிக்கு முக்கியமானவரின் ஒரு சில வார்த்தை பரிமாற்றம் தவறுதலாகி விட்டதென நினைக்கின்றேன்.

:wub:சொல்லு சூழ்ச்சி பண்ணீற்றுதெண்டு சொல்ல வாறியளோ?? :lol:

Link to comment
Share on other sites

//இலங்கையிலே ஒரு இனப்போர் ஏன் நடக்கின்றது என்று கேட்டால் அதற்கு சிங்கள அரசு காரணமல்ல தமிழ்சினிமாதான் காரணம் என்பதை தமிழகத்தில் இருக்கின்ற தமிழ் சினிமா கலைஞர்கள் அறிந்திருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை.//

தமிழ்சினிமா காரணம் என்பதும் சிங்கள அரசு காரணமில்லை என்பதும் மிகப்பிழையான ஒரு கருத்தே. இது உற்சாக மிகுதியோ வார்த்தை பிறழ்வோ எதுவோ திருத்தப்படவேண்டிய ஒன்றே. போராட்டத்திற்கு தமிழர் வீர வரலாற்றை சொல்லும் சில திரைப்படங்களில் இருந்து சில உந்து சக்திகள் கிடைத்தது என்ற ஒரு கருத்தை தான் சொல்லவந்தார் என்று ஊகிக்க முடியாதளவுக்கு சிங்கள அரசு காரணமில்லை என்பது இடக்கு முடக்கான ஒரு நிலை. இவ்வாறான தவறுகள் எதிர்காலத்தில் ஏற்படாது என்று நம்புவோம்.

Link to comment
Share on other sites

QUOTE(குமாரசாமி @ Jul 28 2008, 07:25 PM)

இந் நிகழ்ச்சிக்கு முக்கியமானவரின் ஒரு சில வார்த்தை பரிமாற்றம் தவறுதலாகி விட்டதென நினைக்கின்றேன்.

:lol:சொல்லு சூழ்ச்சி பண்ணீற்றுதெண்டு சொல்ல வாறியளோ?? :D

என்வோ நடக்கிறது.... அன்று தொட்டு இன்றுவரை யாழ் இணயத்தில்.... சில செய்திகளை... விமர்சனங்களை.... இங்கு உள்ளமுக்கய கள உறவுகள் கருத்தாடும்போது.... புலத்தில்.... நாம் அரிதாக உள்ள நேரத்தில்... வந்து உடனே உள்வாங்குகிறோம்.... :wub::) இது யாழில் நிடுகலும் தொடர்ந்தால்... எல்லாருக்கும் பிரச்சனைதான்.... :lol: இதில் இருந்து தீர்வுகாண்பதும் குதிரைக்கு கொம்பு முழைத்தமாதிரித்தான் ... :lol::( நன்றி :D

Link to comment
Share on other sites

தமிழ்சினிமா காரணம் என்பதும் சிங்கள அரசு காரணமில்லை என்பதும் மிகப்பிழையான ஒரு கருத்தே. இது உற்சாக மிகுதியோ வார்த்தை பிறழ்வோ எதுவோ திருத்தப்படவேண்டிய ஒன்றே. போராட்டத்திற்கு தமிழர் வீர வரலாற்றை சொல்லும் சில திரைப்படங்களில் இருந்து சில உந்து சக்திகள் கிடைத்தது என்ற ஒரு கருத்தை தான் சொல்லவந்தார் என்று ஊகிக்க முடியாதளவுக்கு சிங்கள அரசு காரணமில்லை என்பது இடக்கு முடக்கான ஒரு நிலை. இவ்வாறான தவறுகள் எதிர்காலத்தில் ஏற்படாது என்று நம்புவோம்.

//தமிழ் சினிமாவில் இருப்பவர்கள் இலங்கையிலே ஒரு இனப்போர் ஏன் நடக்கின்றது என்று கேட்டால் அதற்கு சிங்கள அரசு காரணமல்ல தமிழ்சினிமாதான் காரணம் என்பதை தமிழகத்தில் இருக்கின்ற தமிழ் சினிமா கலைஞர்கள் அறிந்திருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை.//

நீங்கள் இணைத்திருக்கும் உரையின் தொடக்கம் தமிழ் சினிமாவில் இருப்பவர்கள் என்று தான் ஆரம்பிக்கின்றது. இதேபோல் இதனைத் தொடர்ந்து வருவனவற்றையும் கேட்டால் எல்லோருக்கும் புரியும். நீங்கள் ஒலிப்பதிவை கேட்கவில்லையென்றே எண்ணுகின்றேன். முடிந்தால் முழுவதையும் (பகுதி 7 மற்றும் பகுதி 8) கேட்டுப் பாருங்கள். தவறுகள் ஏற்படும் போது சுட்டிக் காட்டுவது தவறில்லை. நிச்சயமாக தவறுகள் திருத்தப் பட வேண்டும். ஆனால் ஒரு கலைஞனை முளையியேயே கிள்ளி விடுவது போல் விமர்சிக்க முயல்வது முட்டாள்த் தனமானது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.