Jump to content

ஈரமான ரோஜாவே


Recommended Posts

ஈரமான ரோஜாவே

roseds3.jpg

மலரே!

தென்றல் தேடிய முகவரி நீ.

முகவரி மாறிய தென்றலின்

முதல் வரியும் நீ.

தென்றல் தீண்டிட

நீ மலர்ந்தாய்

தென்றல் உன்னைத்

தொட்ட போது

நீ நிலை தடுமாறினாய்

தென்றல் சுமந்த நீரால்

நீ நனைந்தாய்.

தென்றல் உன்னை

அணைத்தபோதும்

நீ ஏனோ

தலை குனிந்தாய்.

மழை கழுவிய

மலரே

உன் வாசம் போனதாய்

வருந்தாதே

வாழ்வு முடிந்ததாய்

புலம்பாதே

மலர் தழுவிய என்னில்

சுவாசமாய்

உன் வாசம்

இன்று நான் மண்னோடு

உன் வாசம் மீண்டும் காற்றோடு

நாளை நீ என்னோடு

உன் வாசம் அதே காற்றோடு

கலங்காதே

உனக்கும் எனக்கும் மட்டுமல்ல

உலகிற்கே இதுதான் நியதி

Link to comment
Share on other sites

வெண்ணி...

கவிதை படிக்கும்போது....

தென்றல் ஒரு ஆணாக....

மலர் ஒரு பெண்ணாக... பார்க்கமுடிந்தாலும்...

காற்றுக்கு புயல்.. சூறாவளி போன்ற பன்முகங்கள் உண்டு...

பூக்களில் வண்டை இதழ்களால் கொன்றுவிடும் பூக்களும் உண்டு..

வண்டு நாடாத.. தேன் கொடுக்காத பூக்களும் உண்டு...

கவிதை தென்றல்..வாழ்வில் கிடைக்குமா?...

கவதையின் மலர்கள் வாழ்வில் கிட்டுமா...

உங்கள் கவிதையை

தேன் தேன்..தேன்

நானும் ரசித்தேன் :lol:

வெண்ணிலா நன்றி

Link to comment
Share on other sites

நல்ல கவிதை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈரமான ரோஜவைதந்த வெண்ணிலாவுக்கு நன்றி

Link to comment
Share on other sites

வெண்ணிலா அக்காவின் "ஈரமான ரோஜா"...வை பறிக்க ஆசை..ரோஜாவிற்கு கண்ணீர் வந்திடுமோ எண்டு நினைக்கையில் பறிக்க முடியவில்லை... :lol:

ரோஜா அழகு எண்டு தான் இதுவரை நினைத்திருந்தேன் ரோஜாவில் ஈரம் பட்டால் அது பேரழகு எண்டு இப்போது தான் அறிந்தேன்..வாழ்த்துக்கள் நிலா அக்கா.. :lol:

காற்றோடு காற்றாக்கி விட்ட

உன் வாசத்தை

காற்றில் தேடுகிறேன்

காற்றும் காட்ட

மறுக்கிறது.. :icon_mrgreen:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் வெண்ணிலா

கவிதை நன்றாக உள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம் வாசங்கள் மாறுவதில்லை.மாறவும் கூடாது.நன்று நிலா.

Link to comment
Share on other sites

வெண்ணி...

கவிதை படிக்கும்போது....

தென்றல் ஒரு ஆணாக....

மலர் ஒரு பெண்ணாக... பார்க்கமுடிந்தாலும்...

காற்றுக்கு புயல்.. சூறாவளி போன்ற பன்முகங்கள் உண்டு...

பூக்களில் வண்டை இதழ்களால் கொன்றுவிடும் பூக்களும் உண்டு..

வண்டு நாடாத.. தேன் கொடுக்காத பூக்களும் உண்டு...

கவிதை தென்றல்..வாழ்வில் கிடைக்குமா?...

கவதையின் மலர்கள் வாழ்வில் கிட்டுமா...

உங்கள் கவிதையை

தேன் தேன்..தேன்

நானும் ரசித்தேன் :o

வெண்ணிலா நன்றி

சொல்லுங்கோ விகடகவி... வெண்ணி என கூப்பிட்டியளோ :lol::lol:

கவிதை படிக்கும் போது............

ஓஓஹோ இபப்டியோ விளக்கம் கொண்டியள். எனக்கென்னமோ உங்கள் விளக்கம் போல் என் கவிதையில் விளக்கம் அமையவில்லை என தோணுது.

அதுசரி என்ன குழப்புறீங்க விகடகவி......

"வண்டு நாடாத.. தேன் கொடுக்காத பூக்களும் உண்டு..."

இவ்வரிகளை ஏற்றுக்கொள்கின்ற போதிலும்......

"பூக்களில் வண்டை இதழ்களால் கொன்றுவிடும் பூக்களும் உண்டு.."

உதுக்கு ஒரு பூ சொல்லுங்கோ விகடகவி. அதுக்காக மங்கையர் என சொல்லுறேல்லை சொல்லிட்டேன். :o

:unsure: தேன்...தேன்...தேன்...

நானும் ரசித்தேன்......................... :lol: ரசிக்காமல் ருசியுங்கோ

நன்றிகள் விகடகவி...

நல்ல கவிதை..

ஈரமான ரோஜவைதந்த வெண்ணிலாவுக்கு நன்றி

:o நன்றிகள். தூயா & நிலாமதி

Link to comment
Share on other sites

வெண்ணிலா அக்காவின் "ஈரமான ரோஜா"...வை பறிக்க ஆசை..ரோஜாவிற்கு கண்ணீர் வந்திடுமோ எண்டு நினைக்கையில் பறிக்க முடியவில்லை... :o

ரோஜா அழகு எண்டு தான் இதுவரை நினைத்திருந்தேன் ரோஜாவில் ஈரம் பட்டால் அது பேரழகு எண்டு இப்போது தான் அறிந்தேன்..வாழ்த்துக்கள் நிலா அக்கா.. :lol:

காற்றோடு காற்றாக்கி விட்ட

உன் வாசத்தை

காற்றில் தேடுகிறேன்

காற்றும் காட்ட

மறுக்கிறது.. :lol:

அப்ப நான் வரட்டா!!

:lol::o பிச்சுப்போடுவன் பிச்சு. எப்பவும் நிலாக்காவோடை தான் அவருக்கு,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ஜம்மு ஈரமான ரோஜாவை பறிக்கும்போது ரோஜா அழுதோ இல்லையோ,... நிலாக்கா.................... :o:unsure:

ரோஜா அழகுதான் குளிச்சால் இன்னமும் அழகு என தெரியாதோ பேபி. அச்சோ பேபி இப்பவும் பேபியாகவே இருக்குது பாவம்.

(காற்றை கண்ணுக்கே தெரியாது...இதுலை வேறை காற்றில் வாசத்தை தேடுதாம் பேபி.................. ஜம்மு......... :lol:

காற்றில் வாசத்தை

தேடாதே

காற்றை சுவாசித்துப்பார்

றோஜாவின் நறுமணம்

உன் நாசியை துளைக்கும் :o

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் வெண்ணிலா

கவிதை நன்றாக உள்ளது

ம்ம்ம் வாசங்கள் மாறுவதில்லை.மாறவும் கூடாது.நன்று நிலா.

:lol: நன்றிகள் முனிவர் & சஜீவன் அண்ணா

சஜீ அண்ணா பூக்களின் வாசங்கள் மாறுவதில்லையோ..... மாறுமே ஏன்னா முதல் நாள் இருக்கும் வாசம் போல மறுநாள் இருக்காதே. அதுதான் இயற்கை :lol:

Link to comment
Share on other sites

வெண்ணீ!...

ஆதியும் மூளையை பிய்ச்சுப் பிய்ச்சு பாத்தன் எல்லாம் முக்கோணமாத் தெரியுது..... :lol:

:o:lol: அச்சோ பலவிதமான கவிதைகள் படைக்கும் ஆதிக்கே இந்நிலமையா? சரி கவிதையின் பொருளை சொல்லவோ? :lol: கொஞ்சம் தாமதமாக சொல்லுறேனே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெண்ணிலா வெண்ணிலா திருடிப்புட்டாய் பாட்டு பாடினான். கவிதை நல்லா இருக்குது . ஏன் கோகுலத்தில இருக்கிற ரோஜாவை பறிச்சிட்டிங்கள் :lol: ? ஜம்மு தேடிட்டு இருக்கிறார் தான் யாருக்கோ கொடுக்க வைத்திருந்த ரோஜாவை காணவில்லை என்று :lol: .

Link to comment
Share on other sites

:lol::lol: பிச்சுப்போடுவன் பிச்சு. எப்பவும் நிலாக்காவோடை தான் அவருக்கு,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ஜம்மு ஈரமான ரோஜாவை பறிக்கும்போது ரோஜா அழுதோ இல்லையோ,... நிலாக்கா....................

ரோஜா அழகுதான் குளிச்சால் இன்னமும் அழகு என தெரியாதோ பேபி. அச்சோ பேபி இப்பவும் பேபியாகவே இருக்குது பாவம்.

(காற்றை கண்ணுக்கே தெரியாது...இதுலை வேறை காற்றில் வாசத்தை தேடுதாம் பேபி.................. ஜம்மு......... :o

காற்றில் வாசத்தை

தேடாதே

காற்றை சுவாசித்துப்பார்

றோஜாவின் நறுமணம்

உன் நாசியை துளைக்கும்

அச்சோ..அந்த ரோஜாவை போல தான் ஜம்மு பேபியும்..பிய்க்க கூடாது நிலா அக்கா :D ..பாவம் அல்லோ..(இது எப்படி இருக்கு??)...ஓ ஈரமான ரோஜாவை பறிக்கும் போது தாங்கள் அழுவியளோ..??..ஏன்.. :o

யாருக்கு தெரியும் அந்த வானிலவின் கண்ணீர் தான் ரோஜா ஈரமானதிற்கு காரணமோ..??..ரோஜாவின் கண்ணீரை துடைக்க வண்டு வரும்..ஆனால் வானிலவின் கண்ணீரை துடைக்க..(முடியலையே)..கொஞ்சம் "ஓவரா" போயிட்டமோ.. :D

இப்ப மட்டும் இல்ல எப்பவுமே நான் பேபி தான்..(அப்ப தான் ரோஜாவின் இதழகளை கொய்ந்து விட்டு அழுது சமாளிக்களாம்). :o .இது எல்லாம் சொல்லி தரவா வேண்டும் எனக்கு..ம்ம்..காற்று கண்ணிற்கு தெரியாது என்பது உண்மை ஆனால்..அது சுமந்து வரும் வாசணையை முகரமுடியும் தானே..?? :o

காற்றில் பல வாசம்

அதில் ஏது

ரோஜாவின்

வாசம்..??

அறிந்த போது

ரோஜா நிலத்தில்..!! :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

மலரே!

தென்றல் தேடிய முகவரி நீ.

முகவரி மாறிய தென்றலின்

முதல் வரியும் நீ.

ஒரு மழைத்துளி சொல்லுது தென்றல் வந்து ரோஜாவே உன்னைத்தான் தேடுது. உன்னை சந்தித்தபோது அது தான் தென்றல் என்பதையே மறந்துட்டுது.

தென்றல் தீண்டிட

நீ மலர்ந்தாய்

தென்றல் உன்னைத்

தொட்ட போது

நீ நிலை தடுமாறினாய்

தென்றல் உன்னை மலர வைக்கின்றது. அபப்டி இருந்தும் மலர்ந்த பின் தென்றல் தொட்டபோது ஆடுது. (தடுமாறுதல்)

தென்றல் சுமந்த நீரால்

நீ நனைந்தாய்.

தென்றல் உன்னை

அணைத்தபோதும்

நீ ஏனோ

தலை குனிந்தாய்.

தென்றலில் வந்த தண்ணீர் பட்டு ரோஜா நனைக்கின்றது. நனைந்தபோது அது தலைகுனிகின்றது....(பாரமோ வெட்கமோ) :wub:

மழை கழுவிய

மலரே

உன் வாசம் போனதாய்

வருந்தாதே

வாழ்வு முடிந்ததாய்

புலம்பாதே

ரோஜாவின் நீர் பட்டதால் வாசம்போனதாய் வருந்தாமல் வாழ்வு முடிந்தது என புலம்பாமல் இருக்க சொல்ல்லுறம் :lol: ஏனெனில்

மலர் தழுவிய என்னில்

சுவாசமாய்

உன் வாசம்

அம்மழைத்துளி பட்ட ரோஜாவின் வாசம் மழைத்துளியில் கலந்து அந்நீரின் சுவாசமாக உள்ளது

இன்று நான் மண்னோடு

உன் வாசம் மீண்டும் காற்றோடு

அம்மழைத்துளி நிலத்தில் விழுது. ஆனால் ரோஜாவின் வாசம் மீண்டும் தென்றலோடு கலக்குது

நாளை நீ என்னோடு

உன் வாசம் அதே காற்றோடு

நாளை ரோஜாவும் நிலத்தில் உதிர்ந்து விழுந்துடும். ஆனாலும் வாசம் தென்றலோடு :lol:

கலங்காதே

உனக்கும் எனக்கும் மட்டுமல்ல

உலகிற்கே இதுதான் நியதி

உதுதான் விளக்கம் ஆதீ............... :huh::huh:

Link to comment
Share on other sites

நல்ல காலம் திருக்குறளோட நிப்பாட்டி போட்டார் திருவள்ளுவர்..அவரே உரையும் எழுதியிருந்தால் இப்படி நிறைய குழப்பம் வந்திருக்கும் போல.. :huh:

Link to comment
Share on other sites

நல்ல கவிதை வெண்ணிலா.

அதுசரி என்ன குழப்புறீங்க விகடகவி......

"வண்டு நாடாத.. தேன் கொடுக்காத பூக்களும் உண்டு..."

இவ்வரிகளை ஏற்றுக்கொள்கின்ற போதிலும்......

"பூக்களில் வண்டை இதழ்களால் கொன்றுவிடும் பூக்களும் உண்டு.."

உதுக்கு ஒரு பூ சொல்லுங்கோ விகடகவி. அதுக்காக மங்கையர் என சொல்லுறேல்லை சொல்லிட்டேன். :huh:

சிறுவயதில் நெப்பந்திஸ் என்று ஒரு தாவரம் வண்டு/பூச்சிகளை மடக்கி பிடித்து உண்ணும் என்று கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் அதன் பூ தான் இந்த வேலையை செய்யுதா தெரியாது.

Link to comment
Share on other sites

நல்ல காலம் திருக்குறளோட நிப்பாட்டி போட்டார் திருவள்ளுவர்..அவரே உரையும் எழுதியிருந்தால் இப்படி நிறைய குழப்பம் வந்திருக்கும் போல.. :lol:

:lol::lol: நாமளும் திருக்குறளோடை :lol: சீ கவிதையோடை நிப்பாட்டி இருக்கலாம். நமக்கும் திருவள்ளுவர் என பெயர் வந்தாலும் என்றுதான் பொருளையும் எழுதிட்டமாக்கும் :lol:

Link to comment
Share on other sites

நல்ல கவிதை வெண்ணிலா.

சிறுவயதில் நெப்பந்திஸ் என்று ஒரு தாவரம் வண்டு/பூச்சிகளை மடக்கி பிடித்து உண்ணும் என்று கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் அதன் பூ தான் இந்த வேலையை செய்யுதா தெரியாது.

:lol: நன்றிகள்

ஆமாம் நானும் கேள்விப்பட்டேன் இப்பதான் நினைவுக்கு வருது என்றா பாருங்கோவன். நன்றிகள் தகவலுக்கு :lol:

வெண்ணிலா வெண்ணிலா திருடிப்புட்டாய் பாட்டு பாடினான். கவிதை நல்லா இருக்குது . ஏன் கோகுலத்தில இருக்கிற ரோஜாவை பறிச்சிட்டிங்கள் :lol: ? ஜம்மு தேடிட்டு இருக்கிறார் தான் யாருக்கோ கொடுக்க வைத்திருந்த ரோஜாவை காணவில்லை என்று :lol: .

:lol: ஓ நல்லா தான் பாட்டு பாடுறியள் சுப்பண்ணௌ

நாங்க அங்கை எல்லாம் ரோஜாவை பறிக்கலை என ஜம்முவுக்கு நல்லாவே தெரியுமே :D

Link to comment
Share on other sites

  • 4 years later...
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை வெண்ணிலா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.