Jump to content

சிரித்து சிந்திக்க ...


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

சிரித்து சிந்திக்க ....

புலம் பெயர் நாடுக்கு வந்த ஆரம்ப காலம். நானும் ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாக கொண்டவர்களுக்கு ஒரு ஆங்கில வகுப்புகு செல்ல வேண்டி இருந்தது .இடமும் ப்புதுசு ,வெள்ளை தோல் ,கருப்பு தோல், சீன கரீபியன் ,என்று . பல நாடு மக்களும் வந்திருந்தனர் .எங்கள் இனத்திலும் வயது வேறுபாடின்றி சிலர.் .வழக்கமாக நண்ப்பியுடன் போகும் நான் அன்று தனிய

,சற்று நேரத்துடன் .வகுப்புக்கு சென்று விட்டேன் .

வாயிலில் ஒரு கறுப்பன்,வாட்ட சாட்ட மாணவன் . ,(ஏதும் படையில் இருந்திருப்பான் ) எனக்காக காத்திருப்பது போல ,கையை நீடிய வாறு (hand shake )"போட்டுடா வாயா" என்று சிரித்தான் (பொத்தடா வாயை)எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை சிரித்து சமாளித்து வகுப்பில் இருந்துவிட்டேன் . சற்று தொலைவில் எங்கள் சில "வெங்காயங்கள் "சிரித்து கொண்டு நின்றார்கள் .

பின்பு தான் விளங்கியது. காலை வணக்கத்தை அப்படி சொல்லி கொடுத்து இருக்கிறார்கள் .... என்று. இப்படியுமா? ...

....அட நான்தானா ?கிடைத்தேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • மனோன்மணி அம்பாள் உவந்த மகத்துவம் மிகு கணித ஆசான் நல்லையா சேர் நல்லையா சேர் எப்படி எல்லாம் எம்மை ஆட்கொண்டார் என எண்ணுகையில்  ‘‘கணந்தோறும் தோன்றும் வியப்புக்கள்’’ என சுப்பிரமணிய பாரதியார் பாஞ்சாலி சபதத்தில் உரைத்த பாடலை முதலில் ஒப்புவிக்கத் தோன்றுகின்றது. ‘‘கணந்தோறும் வியப்புக்கள் புதிய தோன்றும்; கணந்தோறும் வெவ்வேறு கனவு தோன்றும்; கணந்தோறும் நவநவமாய் களிப்புத் தோன்றும்; கருதிடவும் சொல்லிடவும் எளிதோ? ஆங்கே, கணந்தோறும் ஒருபுதிய வண்ணங் காட்டிக் காளிபரா சக்திஅருள் களிக்குங் கோலம் கணந்தோறும் அவள்பிறப்பாள் என்று மேலோர் கருதுவதன் விளக்கத்தை இங்குக் காண்பாய்.” எல்லோருக்கும் பிரியமான நல்லையா சேர் வடமராட்சியில் கொம்மாந்துறையில் கோவில் கொண்டு உறையும் அன்னை மனோன்மணி அம்பாள் உவந்த மகத்துவம் மிக்க கணித ஆசான் என்றால் மிகையாகாது. அவரிடம் நாம் கற்கும் போது கணந்தோறும் வியப்புகள் புதியன தோன்றும் வண்ணம் அடுக்கடுக்காகக் கணித எண்ணக்கருக்களையும், புதிர்களையும், பயிற்சிகளையும் அதிசயக்கத்தக்க ஆர்வத்தை தூண்டும் வகையில், எம்மவரின் சிந்தையில் நிலைபெறும் வகையில் சேர் ஒப்புவிப்பதைக் கண்டு நவநவமாய்க் களிப்போம். பயிற்சி வினாக்களுக்கான விடைகளை மாணவர்கள் முயன்ற பின் நல்லையா  சேர் பலவிதமான முறைகளில் விடைகளைப் பெறும் வழிகளை ஒப்புவித்து புதிய வண்ணங்கள் காட்டி மகிழ்விப்பார். இவ்வாறாக கணந்தோறும் புதிய விடயங்களைக் கற்பித்து எமது ஆர்வத்தைத் தூண்டி நல்லையா சேர் மகிழ்வுறும் கோலம், கணந்தோறும் சேர் புதிய பிறப்பெடுத்து வருவது போன்ற அதிசயமான ஆற்றல் மிகுந்த ஆசானாக எம்மைப் பிரமிக்க வைக்கும். இலங்கை சுதந்திரம் அடையும். காலத்தையண்டி 1945 ஆம் ஆண்டில் ஒரு விவசாயக் குடும்பத்தில் நல்லையா சேர் பிறந்தார். சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்தில் விஞ்ஞானம் மற்றும் கணிதக் கல்வி என்பன மேட்டுக் குடியினருக்கே பெரும்பாலும் உரித்தானதாகவே இருந்தது. எமது பிரதேசத்தின் கணித ஜாம்பவனாகத் திகழ்ந்த நல்லையா சேர், தில்லையம்பலம் சேர், வேலாயுதம் சேர் ஆகியோர் சமகாலத்தில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியில் கல்வி பயின்று கணித ஆசான் ஏபிரகாம் மாஸ்டரின் வழிகாட்டலில் கணிதத் துறையில் தேர்ச்சி பெற்று பேரதெனியா பல்கலைக்கழகம் சென்று தம்மை மேம்படுத்தி எம்போன்ற மாணவச் செல்வங்கட்கெல்லாம் குருவாயிருந்து வாழும் வழிகாட்டி ஒளி விளக்காகத் திகழ்ந்தார்கள். நானும் எனும் சகோதரர்களும் நல்லையா சேரிற்கு பெரிதும் நன்றியுடையவர்களாக  இருக்கின்றோம். எனது மூத்த சகோதரர் பொறியியலாளர் திரு.சிறிஸ்கந்தராசா முதல் ஏனைய நான்கு சகோதரர்களும் தூய கணிதம், பிரயோக கணிதம் ஆகிய இரண்டு பாடங்களையும் நல்லையா சேரிடம் கற்று சிறப்புப் பயிற்சி பெற்று உயர்நிலைப் பட்டங்களைப் பெற்றுக் கொண்டோம். நாம் எல்லோரும் பொறியியலாளராகவும் கணிதப் போராசிரியராகவும் சிறப்புப் பெற்று சீலமாக வாழ சீரருள் புரிந்த நல்லையா சேர் அவர்களை எமது ஆதவனாக போற்றித் துதிக்கின்றோம். நல்லையா சேரின் கணிதக் கற்பித்தலின் ஆரம்பம் 1966-67 களில் கரணவாய் தாமோதர வித்தியாலயத்தில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் அப்போதைய மாணவர்களுக்கான (எனது மூத்த சகோதரர் உட்பட) வழிகாட்டல் கற்பித்தலாக அமைந்தது. இதனாலோ என்னவோ கரணவாய் நல்லையா சேரின் பிரியமான இடமாகவும் அவரின் பல வாழ்நாள் நண்பர்களைக் கொண்ட இடமாகவும் விளங்குகின்றது. நல்லையா சேரின் ஐம்பது வருடங்களாக (அரை நூற்றாண்டு) பிரணமித்த கணிதக் கற்பித்தல் 2015ஆம் ஆண்டு முடிவுறும் வகையில் எமது கரணவாய் பிரதேசம் உட்பட வடமராட்சியின் பல எண்ணற்ற பல மாணவர்கள் கணித பாடத்தில் தேர்ச்சி பெற்று  சாதனையாளர்களாகவும்,   பொறியியலாளர்களாகவும், துறைசார் விற்பன்னர்களாகவும், கணித ஆசிரியர்களாகவும் பிரகாசிக்க வழிசமைத்தது. நல்லையா சேரின் சேவையால் வடமராட்சிப் பிரதேசம் வியப்புறும் வகையில் உயர்தரப் பரீட்சையில் கணித பாடத்தில் தொடர்ந்து மேன்மை அடைவுச் சுட்டிகளைப் பெற்று இலங்கைத் தீவின் மூளை என்ற கூற்றை மேலும் உன்னதமாக்கியது. நல்லையா சேரின் பிறந்த ஊரான கொம்மாந்தறைக்கு ஒரு புதிய விலாசமாக சேர் அமைந்தார் என்பது மிகையாகாது. சேரின் பழைய மாணர்கள் தமது விடுமுறைக்காலங்களில் சேரை சந்தித்து நல்லாசிகளைப் பெற்றுக்கொள்ள அவரின் கொம்மாந்தறை வீட்டுக்கு சென்ற வண்ணமிருப்பார்ககள்.  சேரின் மனைவியாரும் பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளும் வீடு நாடிச் செல்வோரை இனிதே உபசரிப்பார்கள். நல்லைய சேர் ஒரு சிறந்த  குருவிற்கான எல்லா அம்சங்களையும் கொண்டிருந்தார். சேரின் தோற்றம் மிகவும் கம்பீரமானது. காண்பவரின் கவனத்தை ஈர்த்திருக்கவல்லது. அவரது வார்த்தை (அல்லது மொழி) எமக்கெல்லாம் மந்திரமூலமாக  சொற்சுவை பொருட்சுவை பொருந்தியதாக மனதை அலைய விடாமல் நிறைபெறச் செய்யும். அவரது கிருபையும் நல்லாசிகளும் எம்போன்ற பல் சந்ததி மாணவர்களை சான்றோர்களாக்கியது. நல்லையா சேரின் அறிவிலும் ஆளுமையிலும் பரிவிலும் அவரது மாணவர்கள் மயங்க நின்றனர். மாணவர்களின் அன்பில் சேர் மயங்கி நின்றார் என்பதே பொருந்தும். நல்லையா சேரின் உயர்விலும் உன்னத கற்பித்தல் பணியிலும் பின்புலமாக நின்ற துணை அவரது அன்புக்குரிய  பாரியார் செல்லப்பாக்கியம் அம்மையார் என்றால் மிகையாகாது. சேர் மணமுடித்த காலத்திலிருந்து அரச தொழிலை நாடாது சுயதொழிலாக கணிதம் கற்பிப்பதை மேற்கொண்ட வேளையில் அவர்களின் ஊரான கொம்மாந்தறைக்கே உரித்தான வெங்காயச் செய்கையினை அவரது பாரியார் தலைமையில் மேற்கொண்டு கடுமையான உழைப்பாளிகளாக திகழ்ந்தார். நல்லையா சேர் தம்பதியியனர் நீண்ட இல்லற வாழ்வில் சிறப்புடன்  பிள்ளைகளைப் பெற்றெடுத்து வளர்த்து பேணிப் பாதுகாத்து பேரப்பிள்ளைகளையும் கண்டு, மகிழ்வுடன் உற்றார் உறவினருக்கும் உதவியான இருந்தனர். நல்லையா சேர் தன்னைத் தொழில் ரீதியாக முற்றாக அர்ப்பணிக்கவும் செல்லபாக்கியம் அம்மையார் ஒரு மனைவியாக, அன்னையாக, பாட்டியாக காலத்தால் ஆற்றிவந்தமை போற்றுதற்குரியது. அதேவேளை சேரின் அன்புக்குரிய நான்கு பிள்ளைகளின் அவரின் ஏகபுத்திரி செல்வி பவானி எம்மக்களிற்கெல்லாம் விடுதலை வேண்டி ஒரு வீர மகளீராக மிளிர்ந்து தன்னையயே ஆகுதியாக்கினார். மறுமைக்கு நீங்கிய பிரிவுச் சுமையை சேருடன் செல்லபாக்கியம் அம்மையாரும் கனத்த இதயத்துடன் சுமந்துகொண்டு தனது ஏனைய பிள்ளைகளினதும் எம்போன்ற மாணவர்களினதும் நலன்களை மேம்படுத்த வேண்டும் என்ற விருப்புடன் வாழ்நாள் முழுவதும் கல்விப் பணியிலும், சமூகப் பணியிலும் ஈடுபடுத்தி வாழ்ந்து வந்தனர். இன்றைய அறிவுலகு விஞ்ஞான அடிப்பமையிலான ஒழுங்குபடுத்தப்பட்டு பேணப்படும் அறிவுடமை விஞ்ஞானம் எனப்படலாம். அறிவுடமையை ஒழுங்குபடுத்தி உதவும் மொழி அல்லது கருவியாக கணிதம் அமைகிறது. மேலும் இன்னொரு வகையில் கூறுவதாயின் எந்தவொரு விடயத்தையும் ஆழமான முறையில் புரிந்துகொள்ள முயலும்போது கணிதம் ஒரு கருவியாகத் துணைபுரிகிறது. வைரத்தை வைரத்தால் தான் வெட்ட முடியும். அதே போல் கணிதத்தையும் தர்க்க ரீதியான முறைமைகளினால் தான் கையாளமுடியும். நல்லையா சேர் கணிதப் பாடத்தை உயர்தர மாணவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் கற்பித்து இன்புற முடிந்தமைக்கு வைராக்கியமும், தெளிந்த சிந்தனையும், தர்க்க முறைகளிலிருந்த தேர்ச்சியும், மாணவர்களின் மீதான மெச்சத்தக்க அன்பும், விந்தையான கணித நுட்பங்களை  எளிதான முறையில் ஒப்புவிக்கும் திறனும் அவரின் மூலதன உரிமங்கள் ஆயின. முடிவாக. நல்லையா சேர் கொம்மாந்தறையில் உறையும் மனோன்மணி அம்பாள் உவந்த கணிதப் பெருந்தகை.வடமராட்சி மண்ணின் மைந்தர்கள் உயரப்பறந்திட சேர் ஆற்றிய  அரை நூற்றாண்டுக்கு மேலான சீரிய சேவை போற்றுதலுக்கும் மதிப்புக்குமுரியது. சேர் தனது இறுதிக் காலத்தை இடர் இன்றி கழித்திட அரும்பணி செய்த துணைவியார் மூத்த மகன் வசீகரன், பேரப்பிள்ளைகள் ஆகியோர் புண்ணியவான்கள். நல்லையா சேரின் அடியினைப் பின்பற்றி கணிதத் துறையில் நானும் பல மேன்மைகளைப் பெற்று ஒரு கணிதப் பேராசிரியராக உயர்வுற தனது நல்லாசிகளை என்றும் வழங்கிவந்த எனது பிரியமான ஆசானின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனின் அருளாசியை வேண்டி அமைகிறேன். சாந்தி! சாந்தி!! சாந்தி!! பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா, கணிதப் பேராசிரியர், துணைவேந்தர்  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம்   https://www.facebook.com/100008121166242/posts/3305141126433227/?d=n
  • இவ்வளவுக்கும் இவர் தலைமை ஆசிரியராம். உந்த அடி வாங்கிப் போட்டு, பெடியளை… எப்பிடி, மேய்க்கப் போறார் எண்டு தெரியவில்லை
  • யாழ் நூலக எரிப்பு, ஆறா வடு! – 41 வது ஆண்டு நினைவேந்தல் பேர்லினில் கவனயீர்ப்பு கண்காட்சி. Posted on May 26, 2022 by சமர்வீரன்  85 0 யாழ் நூலக எரிப்பு, அடையாள அழிப்பின் ஆறா வடு! – யாழ் பொது நூலக எரிப்பின் 41 வது ஆண்டு நினைவேந்தலாக பேர்லினில் கவனயீர்ப்பு கண்காட்சி “ஒரு இனத்தை அழிக்க முன் அதன் வேர்களை அழி” என்பார்கள். அந்த இனத்தின் அடிப்படை ஆதாரங்களையும், மூலங்களையும் அழிப்பது என்பது இன அழித்தொழிப்புக்கான முன்நிபந்தனையாகக் கொள்வார்கள். உலக வரலாறு முழுவதும் இத்தகைய போக்கைக் காண முடியும். யூதர்களின் மீது இன அழிப்பை மேற்கொண்டபோது ஹிட்லர் தனது நாசிப் படைகளை ஏவி யூதர்களின் படைப்புகளைத் தேடித் தேடி அழித்த செய்தியை நாமறிவோம். நூல்களை எரிக்கின்ற கொடுமையை, நாசிகள் எப்போதுமே புரிந்து வந்திருக்கிறார்கள். 1930களில் யூத மக்களின் நூல்களை வீதியோரங்களில் பகிரங்கமாக நாசிக்கள் எரித்து வந்தனர். 1933ஆம் ஆண்டு மே மாதம் 10ஆம் திகதியன்று ஹிட்லரின் பிரச்சார அமைச்சரான கோயபல்சின் உத்தரவின் பிரகாரம் பெர்லின் நூல்நிலையத்திற்குச் சென்ற நாசிகள் அங்கிருந்த சகல நூல்களையும் எரித்தார்கள். ஒரே ஒரு வித்தியாசம் தான்! இலங்கையில் சிங்கள நாசிகள் செய்ததுபோல, அவர்கள் பேர்லின் நூல் நிலையத்தை எரிக்கவில்லை. அதன் வழியில் யாழ் நூலக எரிப்பும் 1981ம் ஆண்டு ஜூன் முதலாம் திகதி சிங்கள காடையர்களால் தீக்கிரையாக்கப்பட்ட அனுபவமும் தமிழ் மக்களுக்கு உண்டு. உலகம் முழுவதும் பாசிஸ்டுகள் இன அழிப்பின் வடிவமாகவே எதிர் இனத்தின் பண்பாட்டம்சங்களையும், வரலாற்றையும், வரலாற்று சுவடுகளையும், கலாசார விழுமியங்களையும், இன அடையாளத்துக்கான அடிப்படை ஆதாரங்கள் அனைத்தையும் சின்னாபின்னபடுத்துவத்தையும் ஒரு வழிமுறையாகவே கொண்டிருக்கிறது. இதனை ஒரு போர் யுக்தியாகவே கைகொள்கின்றார்கள். வரலாற்றை அழிப்பது, சிதைப்பது, மறைப்பது, மறுப்பது என்கிற நிலைகளில் இன அழிப்பாளர்களின் வியூகங்கள் அமைந்துவிடுகின்றன. இலங்கையில் தமிழ் மக்களின் மீதான அழித்தொழிப்பும் இந்த வடிவங்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. யாழ் பொது நூலக எரிப்பு என்பது ஈழத்தமிழர்கள் மீது சிங்கள பேரினவாத அரசு மேற்கொண்ட இனவழிப்பில் முக்கிய நிகழ்வாகும். .நாசி படைகளால் யூத மக்களின் நூல்கள் எரிக்கப்பட்ட வரலாற்று வளாகத்தில்(Bebelplatz ) எதிர்வரும் 31.05.2022 அன்று மதியம் 17:30முதல் 19 மணிவரை யாழ் பொது நூலக எரிப்பின் 41 வது ஆண்டு நினைவேந்தலாக பேர்லினில் கண்காட்சி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. மொழி என்பது அதைப் பேசும் ஒரு இனக் குழுமத்தின் தனித்துவமான பண்பாட்டையும் / அடையாளத்தையும் குறித்து நிற்கிறது.அதைப் பேணுவதுதான் இந்த நாளின் முதன்மை நோக்கமும் / முக்கியத்துவமும் கூட. ‘ஒரு இனத்தை அழிக்கப் போகிறாயா? முதலில் அவர்களின் மொழியை அழி’ என்ற இன அழிப்புச் சூத்திரத்திற்கு அமைவாகத்தான் இன அழிப்பு அரசு அன்று தனிச் சிங்களச் சட்டத்தைக் கொண்டு வந்தது.பின்பு தரப்படுத்தல் / யாழ் பொது நூலக எரிப்பு/ முள்ளிவாய்க்கால் தொடக்கம் இன்று வரை மொழி அதன் இலக்காகவே இருந்து வருகிறது.இனம்/மொழி/நிலம்/பண்பாடு என்ற அடிப்படையிலேயே முள்ளிவாய்க்கால் இன அழிப்பு அமைந்திருந்தது.. ஆனால் இன்றும் இலங்கைத் தீவில் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் ஒரு பகுதியாக தமிழ் மொழி இலக்கு வைக்கப்பட்டு எமது அடையாளமும்/ தனித்துவமும்/ பண்பாடும் அழிக்கப்பட்டு வருகிறது. எனவே நாம் ஒவ்வொருவரும்தான் தாய்மொழியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதை அனைத்து வழிகளிலும் கட்டிக் காத்து இன அழிப்பிலிருந்து எமது மண்ணையும் மொழியையும் மீட்டெடுக்க வேண்டும். இக் கண்காட்சியை வேற்றின மக்கள் மட்டும் அல்ல பேர்லினில் பிறந்து வளர்ந்து வரும் ஒவ்வொரு தமிழ் சிறார்களும் பார்வையிட வேண்டும். அந்தவகையில் அச் சிறார்களுக்கான விளக்கங்களும் தமிழ் இளையோர் அமைப்பினால் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழே எங்கள் உயிர் மூச்சு!. யாழ் நூலக எரிப்பு, ஆறா வடு! – 41 வது ஆண்டு நினைவேந்தல் பேர்லினில் கவனயீர்ப்பு கண்காட்சி. – குறியீடு (kuriyeedu.com)  
  • இந்த கொதியில பள்ளிக்கூடம் போய், பொடி, பெட்டயலை, துவம்சம் செய்திருப்பார்... இப்பத்தான் விளங்குது... சில வாத்திமார், ஏன் ஆவேசமா நிப்பார்கள் என்று...  🤭
  • பேர்லினில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள் மே 18 நினைவேந்தல் நிகழ்வில் தமிழ்நாட்டை சேர்ந்த அவ்ரினா ஜோஸ் எழுத்தாளர் & முனைவர் பட்ட ஆய்வாளர் லைப்சிக் பல்கலைக்கழகம் Video Player   பேர்லினில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள் மே 18 நினைவேந்தல் நிகழ்வில்-அவ்ரினா ஜோஸ். – குறியீடு (kuriyeedu.com) 01:39   06:0
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.