Jump to content

சிரித்து சிந்திக்க ...


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

சிரித்து சிந்திக்க ....

புலம் பெயர் நாடுக்கு வந்த ஆரம்ப காலம். நானும் ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாக கொண்டவர்களுக்கு ஒரு ஆங்கில வகுப்புகு செல்ல வேண்டி இருந்தது .இடமும் ப்புதுசு ,வெள்ளை தோல் ,கருப்பு தோல், சீன கரீபியன் ,என்று . பல நாடு மக்களும் வந்திருந்தனர் .எங்கள் இனத்திலும் வயது வேறுபாடின்றி சிலர.் .வழக்கமாக நண்ப்பியுடன் போகும் நான் அன்று தனிய

,சற்று நேரத்துடன் .வகுப்புக்கு சென்று விட்டேன் .

வாயிலில் ஒரு கறுப்பன்,வாட்ட சாட்ட மாணவன் . ,(ஏதும் படையில் இருந்திருப்பான் ) எனக்காக காத்திருப்பது போல ,கையை நீடிய வாறு (hand shake )"போட்டுடா வாயா" என்று சிரித்தான் (பொத்தடா வாயை)எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை சிரித்து சமாளித்து வகுப்பில் இருந்துவிட்டேன் . சற்று தொலைவில் எங்கள் சில "வெங்காயங்கள் "சிரித்து கொண்டு நின்றார்கள் .

பின்பு தான் விளங்கியது. காலை வணக்கத்தை அப்படி சொல்லி கொடுத்து இருக்கிறார்கள் .... என்று. இப்படியுமா? ...

....அட நான்தானா ?கிடைத்தேன்.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • அதொன்றுமில்லை சுவைப்பிரியன்.......நானறிந்த காலத்தில் இங்கு நிறைய கருத்துக்கள் பதிந்தவர்கள்.....தற்சமயம் அவர்களின் வருகை குறைந்து போனாலும் அவர்களின் பெயர் கண்ணில் படும்போது வாழ்த்து சொல்வது நல்லதுதானே......அவர்களுக்கும் என்னென்ன வேலைப் பளுக்களோ யார் கண்டது.....ஆனாலும் இந்தத் துறைமுகத்தில் இறங்கியவர்கள் பின் எங்கிருந்தாலும் ஒருதரம் எட்டிப் பார்ப்பார்கள். அந்த நம்பிக்கைதான்.....!   👍
  • தமிழ்நாட்டில் வாக்கு செலுத்தும் உரிமை உள்ள நூறு சதவிகிக மக்களில் 65 முதல் 70% மக்கள் மட்டுமே வாக்கு செலுத்துகின்றனர்... ஓரளவு வாக்குரிமையை புரிந்தவர்களிடம் பாஜக உள்ளே புகுந்து இந்துத்துவத்தை புகுத்திவிடும் என்ற ஆயுதத்தை பயன்படுத்துகிறது திராவிடம்... இது வாக்கு செலுத்துபவர்களில் குறைந்த அளவே உள்ளது... நடுத்தர வர்க்கத்தினரும் வறுமை கோட்டுக்கு கீழுள்ள மக்களிடம் பணத்தை வைத்து விளையாடுகிறது திராவிடம்... இதை தான் மக்களின் அறியாமை என்றேன்... டல்பன் மக்கள் தான் தேர்வு செய்து விட்டனரே என்ற கருத்திற்கு அடிப்படையாக வைத்து எழுதிய கருத்தாகும்... நான் சீமானை தவிர்த்து யாரை அடிப்படையாக வைத்து தமிழ்நாட்டில் இயங்க வேண்டும் என்பதற்கு சம்பந்தமே இல்லாமல் பதிலளித்தார்... சரி அதற்கு பதிலளிப்போம் என்றால் மறுபடியும் சம்பந்தமே இல்லாமல் வேறு பதிலளிக்கிறார்... இப்பொழுது விவாதம் எதை நோக்கி போகிறது என்றே எனக்கு தெரியவில்லை...
  • இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி சாந்தி.........!   💐
  • நா.தனுஜா இலங்கையிலிருந்து சீனாவிற்கு மீனுற்பத்தி மற்றும் கடலுணவுப்பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு, சீன சுங்கத்தின் பொது நிர்வாகப்பிரிவினால் அங்கீகாரமளிக்கப்பட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட சுகாதார சான்றிதழை ஏற்றுமதியாளர்கள் பெற்றிருக்கவேண்டும் என்று சீனத்தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கையின் மீன் உற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான புதுப்பிக்கப்பட்ட சுகாதாரத் தரச்சான்றிதழுக்கு சீன சுங்கத்தின் பொது நிர்வாகப்பிரிவு அங்கீகாரமளித்திருக்கிறது. இதன்மூலம் அனுமதியளிக்கப்பட்ட மீனுற்பத்திகள் மற்றும் கடலுணவுப்பொருட்கள் சீனாவின் போட்டிச் சந்தைக்குள் நுழைவதற்கும் இலங்கையின் வணிகங்கள் அவற்றின் உற்பத்தியை மேலும் விரிவாக்குவதற்கும் வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக இலங்கையிலுள்ள சீனத்தூதரகம் தெரிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதியிலிருந்து மீனுற்பத்தி மற்றம் கடலுணவுப்பொருட்களை சீனாவிற்கு ஏற்றுமதி செய்யும் இலங்கை ஏற்றுமதியாளர்கள், அவர்களது உற்பத்திப்பொருட்களின் பெயர்களுடன் புதுப்பிக்கப்பட்ட சுகாதாரச் சான்றிதழையும் சீன சுங்கப்பிரிவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தூதரகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சீனாவிற்கு இலங்கையின் மீனுற்பத்தி - சீனத்தூதரகம் அறிவித்துள்ளது என்ன ? | Virakesari.lk
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.