Jump to content

வவுனிக்குளத்தில் பாரிய மும்முனை முன்நகர்வு முறியடிப்பு: 30 படையினர் பலி- 60 பேர் படுகாயம்- உடலங்கள் உட்பட படைப்பொருட்கள் மீட்பு


Recommended Posts

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாலையடியில் பாரிய முறியடிப்புத் தாக்குதல்-முப்பது படையினர் பலி - பல கனரக ஆயுதங்கள் கைப்பற்றப்படுள்ளன.

- புலிகளின் குரல்

Link to post
Share on other sites
 • Replies 58
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

வவுனிக்குளத்தில் பாரிய மும்முனை முன்நகர்வு முறியடிப்பு: 30 படையினர் பலி- 60 பேர் படுகாயம்- உடலங்கள் உட்பட படைப்பொருட்கள் மீட்பு

[வெள்ளிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2008, 09:45 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

வவுனிக்குளத்தில் உள்ள பாலையடிப் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பாரிய அளவிலான மும்முனை முன்நகர்வு நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளின் தீவிர தாக்குதலால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில், 30-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 60-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

முல்லைத்தீவு மேற்கு வவுனிக்குளத்தில் உள்ள பாலையடிப் பகுதியில் இருந்து மும்முனைகளில் இன்று வெள்ளிக்கிழமை காலை 6:00 மணியளவில் படையினர் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடனும் எம்.ஜ-24 ரக உலங்குவானூர்தியின் பீரங்கித்தாக்குதலுடனும் முன்நகர்வு நடவடிக்கையை மேற்கொண்டனர்

மல்லாவியை வல்வளைப்புச் செய்யும் நோக்கில் மும்முனைகளில் படையினர் மேற்கொண்ட முன்னகர்வினை முறியடிக்கும் தாக்குதலை இன்றிரவு 7:00 மணிவரை விடுதலைப் புலிகள் தொடர்ச்சியாக மேற்கொண்டனர்.

விடுதலைப் புலிகளின் முறியடிப்புத் தாக்குலை அடுத்து பாரிய உயிரிழப்பு- படைக்கல இழப்புச் சேதங்களுடன் படையினர் பின்வாங்கி ஓடிவிட்டனர்.

இம்முறியடிப்புத் தாக்குதலில் 30-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 60-க்கும் அதிகமான படையினர் படுகாயமடைந்துள்ளனர்.

படையினரின் 'லான்ட்றோவர்' ஊர்தி உட்பட பெருமளவிலான படைக்கலங்கள், படைப்பொருட்கள் படையினரின் உடலங்கள் ஆகியன விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

புதினம்

Link to post
Share on other sites

புலிகளின் இந்த முறியடிப்புத் தாக்குதல் படையினரின் வல்வளைப்பு நடவடிக்கைகளிற்கு இனிமேல் இடம்கொடுக்கப்படமாட்டாது என்பதை எடுத்துக் காட்டுகிறது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அதுமட்டுமல்ல

எமது மண்ணில் நீ நிற்கமுடியாது என்பதையும் முன்னகர்ந்த அணியின் சிதைவுடன் உணரப்பட்டிருக்கும்..........................

.

Link to post
Share on other sites

சிங்களமும் தாம் வாங்கிக் கட்டியுள்ளதை ஓரளவிற்கு ஒத்துக்கொண்டுள்ளது.

இதோ பாதுகாப்பு அமைச்சின் செய்தி:

Heavy clashes erupts in Wanni, troops encounter stiff resistance from terrorists

Heavy clashes have flared up in the South of Tunukkai and South of Mallavi areas since this morning (August 1), said the defence sources in the Vavuniya - Mannar battlefront.

According to the sources, troops of 57 division continuing their advance towards the strategically vital Tunukkai town and Mallavi town have come under stiff resistance from LTTE terrorists struggling to hold their strongholds. Terrorists have lobbed hundreds of mortars in order to slowdown the advancing soldiers. However, troops have effectively overpowered the terror attack and taken the situation under control, the sources added.

According to the available information, several soldiers have been killed and others suffered wounds due to the enemy mortar fire. The terrorists too have suffered serious damages. The battle is still on, the latest reports said.

More information will follow..

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

***

வெகுநாளாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு தாக்குதல். இப்போதுதான் காலம் கணிந்திருக்கிறது என்று நினைக்கிறேன். நல்லதுதான். களமாடிய வீரர்களுக்கு நன்றிகள்.

இனி யாழ்க் களம் சுறுசுறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இந்த மாதம் எமக்கு வெற்றியாக ஆரம்பித்திருக்கின்றது.இனி என்றுமே எமக்கு வெற்றி செய்திகளாக இருக்கட்டும்.களமாடிய வீரர்களுக்கு வாழ்த்துக்கள்

Link to post
Share on other sites

30 SLA killed, offensive thwarted - LTTE

[TamilNet, Saturday, 02 August 2008, 01:59 GMT]

Liberation Tigers of Tamileelam officials in Vanni told TamilNet that their defensive formations at Mallaavi thwarted Friday a three-pronged Sri Lanka Army (SLA) offensive, which was launched from Vavunikku'lam and Paalaiyadi targeting Mallaavi. At least 30 SLA soldiers were killed and more than 60 troopers sustained injuries in an intense fighting, according to the Tigers. An SLA troop carrier rushed to transport the casualties was seized by the Tigers.

The SLA attempted to break the LTTE defence with the support of helicopter gunships and intense artillery and Multi-Barrel Rocket Launcher (MBRL) fire while engaging the ground forces on three fronts.

The fighting broke out at 5:30 a.m. and lasted till 7:00 p.m. when the SLA was pushed back.

The Sri Lankan soldiers have left behind arms and ammunitions, the Tigers said.

LTTE officials did not provide details on their casualties.

Mallaavi is the fourth largest town in LTTE controlled Vanni.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

:lol: மின்னல்,

இந்தச் செய்தி பற்றிய மேலதிக தகவல்கள் எந்தத் தளத்திலும் இணைக்கப்படவில்லை. ராணுவமும் தமது தரப்பில் பலர் கொல்லப்பட்டும் காயமடைந்து உள்ளார்கள் என்று மட்டுமே சொல்லியிருக்கிறது. மேலும் இன்னும் சமர் நடந்து வருவதாகவே சொல்லுகிறது.

கைப்பற்றப்பட்ட ஆயுத தளபாடங்களில் ஒரு துருப்புக்காவியும் அடங்குவதாக சொல்லப்பட்டிருக்கு.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஓகோ செய்தி கொஞ்சம் தூக்கலாத் தான் இருக்கு ! அதாவது மாதப் பிறப்பன்றே அல்லோலகல்லோ படவேண்டியihப் போச்சு ! அதுவும் இந்திய பிரதமர் வறநாள் பாத்து பிரகண்டமாப் போச்சு !

அதற்காக எல்லோரும் இந்தா வன்னியை புடிக்கிறன் என்ர கட்டியிருக்கிற வேட்டியை கழட்டி கொடி ஏத்துறன் என்ற மகிந்தவின்ர கனவெல்லாம் கலைஞ்சு போட்டுது என்று நினைக்காதையுங்கோ !

ஏன் என்றால் கொண்டு போன துருப்புக்காவியையும் பறி கொடுத்து போட்டு நிற்கினம் !

இன்னும் வெறிபுடிச்சு முன்னேறப் போயினம் !

சில வேளைகளில் மல்லாவி கூட இயக்கத்தால் விட்டு இழப்பின்றி பின்வாங்கி பின்பு தமது தந்திரத்திற்கு ஏற்ப தாக்குதலிற்கு வரும் வரை உள்வர விடப்படலாம் !

இதை ஏன் சொல்லுறன் எண்டால்பாருங்கோ ! இப்ப அடிவேண்டின உடனே வந்து சந்தோசத்தில துள்ளிக் குதிக்கிற நாங்கள் நாளைக்கு சில இடங்கள் பறி போனாலும் குழம்பாமல் மற்றாக்களையும் குழப்பல் இருக்கவேணும் !.

Link to post
Share on other sites

:lol: மின்னல்,

இந்தச் செய்தி பற்றிய மேலதிக தகவல்கள் எந்தத் தளத்திலும் இணைக்கப்படவில்லை. ராணுவமும் தமது தரப்பில் பலர் கொல்லப்பட்டும் காயமடைந்து உள்ளார்கள் என்று மட்டுமே சொல்லியிருக்கிறது. மேலும் இன்னும் சமர் நடந்து வருவதாகவே சொல்லுகிறது.

கைப்பற்றப்பட்ட ஆயுத தளபாடங்களில் ஒரு துருப்புக்காவியும் அடங்குவதாக சொல்லப்பட்டிருக்கு.

ஓம் ரகுநாதன், நேற்றிரவு புலிகள் வெளியிட்ட தகவல் மட்டும்தான் இதுவரை ஊடகங்களில் வந்திருக்கிறது. இது பற்றிய மேலதிக விபரங்கள் எதனையும் புலிகள் வெளியிடவில்லை.

சண்டை தொடர்வதாக படைத்தரப்பு தெரிவித்திருந்து. எனினும் படை நடவடிக்கை முறியடிக்கப்பட்டதாக புலிகள் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு 7.00 வரை முறியடிப்புத் தாக்குதல் நடைபெற்றதாக புலிகள் தெரிவித்திருந்தனர். கைப்பற்றப்பட்ட சடலங்கள் மற்றும் ஆயுத தளபாடங்களின் முழுமையான விபரங்கள் அப்பகுதியில் கிளியரிங் முடிந்த பின்னர் புலிகளால் வெளியிடப்படலாம்.

என்னதான் இருந்தாலும் ஓகஸ்டில் புலிகளின் கதையை முடிக்கிறன் எண்ட எங்கடை பொன்ஸ் மாமாவிற்கு ஓகஸ்ட் முதல் நாளே புலிகள் முகத்திலை குத்தி ரத்தம் வளிய விட்டிருக்கிறதைப்பற்றி என்ன சொல்ல..

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சரியாக இருக்கும் மின்னல்,

நிச்சயம் புலிகள் கள விபரங்களை வெளியிடுவார்கள். அப்போதுதான் நடைபெற்ற சமரின் தீவிரம் தெரியும். புலிகளின் இறுதி அனுமதிக் கோட்டுக்கு மிக அருகில் ராணுவம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன். இதனால் இனி ராணுவம் முன்னேறவே முடியாது என்று சொல்ல வரவில்லை, ஆனால் இதுவரை முன்னேறியது போலல்லாமல் கடினமாக அது இருக்கப்போகிறது, குறைந்தது புலிகள் இன்னொருமுறை தந்திரோபாய பின்னகர்வை மேற்கொள்ளும்வரையிலுமாவது ராணுவம் கடும் இழப்பைச் சந்திக்கலாம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பாலையடியில் பாரிய முறியடிப்புத் தாக்குதல்-முப்பது படையினர் பலி - பல கனரக ஆயுதங்கள் கைப்பற்றப்படுள்ளன.

- புலிகளின் குரல்

இது உண்மையா நாரதா ?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

:lol: உண்மைதான் சிறி,

ராணுவமும், தங்கட பாதுகாப்பு அமைச்சின்ர இணையத்தளத்தில தங்கட ஆக்கள் பலர் கொல்லப்பட்டும் காயப்பட்டும் உள்ளனர் எண்டு கன காலத்துக்குப் பிறகு உண்மை சொல்லியிருக்கினம் எண்டால் அடியின்ர அகோரம் விளங்குதுதானே? ஆனால் எத்தினை எண்டு மட்டும் தெரியாதாம்! எண்ணிக்கொண்டிருக்கினம் போல?!!!!!

Link to post
Share on other sites

சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பிற்கான ஊடக நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த மோதல்களின் போது 11 படையினர் கொல்லப்பட்டும் 20பேர் காயமடைந்துமுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியில் இருக்கும் மகா ஆச்சரியம் என்னவென்றால் இந்த மோதல்களில் கொல்லப்பட்டதாகப் படையினர் தெரிவிக்கும் புலிகளின் எண்ணிகை 09. அதாவது படையினரின் சாவைவிட புலிகளின் சாவு குறைவு என்று எப்போதுமில்லாதவாறு படைத்தரப்பு தெரிவித்திருக்கிறது.

இதோ அந்தச் செய்தி

Nine terrorists killed and 27 injured in heavy fighting in Mallavi area

2 Aug 2008 - 10:17

MULLAITIVU: Nine (09) LTTE terrorists were killed and 27 were reported injured during confrontations on Friday (01) in the MALLAVI area, MULLAITIVU while eleven (11) soldiers were killed and 20 soldiers were also reported wounded in action during the confrontations in the same area on Friday (01).

A soldier was also reported killed due to terrorist mortar fire around 8.50 on Friday morning in the area of MALLAVI South .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

:lol: அடிடா சக்கை எண்டானாம். அவையே பதினொண்டு எண்டு சொல்லீனம் எண்டால் இழப்பு இன்னும் பெரிசா இருக்கும்போல கிடக்கு.

பொன்ஸு மாமா, உனக்கு இனி சங்குதாண்டி.....!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

:lol: உண்மைதான் சிறி,

ராணுவமும், தங்கட பாதுகாப்பு அமைச்சின்ர இணையத்தளத்தில தங்கட ஆக்கள் பலர் கொல்லப்பட்டும் காயப்பட்டும் உள்ளனர் எண்டு கன காலத்துக்குப் பிறகு உண்மை சொல்லியிருக்கினம் எண்டால் அடியின்ர அகோரம் விளங்குதுதானே? ஆனால் எத்தினை எண்டு மட்டும் தெரியாதாம்! எண்ணிக்கொண்டிருக்கினம் போல?!!!!!

சந்தோசம் ரகுநாதன் ,

நேற்று தான் ஆடி அமாவசைக்கு விரதம் பிடித்தேன் . கை மேல் பலன் கிடைத்து விட்டது . :)

Link to post
Share on other sites

எல்லாக் களங்களும் தமக்குச் சாதகமானவை என்ற தப்பெண்ணம் மாறிவிடும். கிளிநொச்சி எல்லையில் புகுந்தவர்களுக்கும் பாடம் புகட்டுவார்கள் புலிகள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு துளிதான்... இன்னும் எத்தனையோ வெற்றிகள் விட்டுக்கொடுப்புக்கள் இருக்கு...

ஏனெண்டா களயதார்த்தம் அப்பிடித்தான் இருக்கு.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனி எல்லாரும் நான் விரதம் இருந்தனான், நான் யாழ்க் களத்தில ஆலோசனை சொன்னானான் எண்டு வெற்றிக்கு உரிமைகொண்டாடுவியள்.ஒரு சமர் என்பது படைத் தரப்புக்குச் சாதமாகாவும் இருக்கலாம் புலிகளுக்கு சாதமாகாவும் இருக்கலாம்.இறுதி வெற்றியைத் தீர்மானிப்பது இராணுவ அரசியல் இராஜதந்திர மூலோபாயமே.ஆகவே ஒரு சமரின் வெற்றியைக் கண்டு துள்ளிக் குதிப்பதையும் தோல்வியைக் கண்டு துவண்டு போவதையும் மாற்றிக் கொண்டு.போராட்டத்திற்க்கு நாம் ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும் அரசியல் ரீதியாகா நாங்கள் எவ்வாறு எம்மைத்த் தயார் செய்ய வேண்டும்.என்ன தடை வந்தாலும் போராடுவதில் எவ்வாறு நாம் தொடர்ந்து நம்பிக்கை வைத்து புலிகளின் பின்னால் அணி திரள்வது பற்றிச் சிந்திப்போம்.

மல்லாவி போட்டுதா மன்னார் போட்டுதா என்பதல்ல முக்கியமானது எமது இறுதி இலக்கை அடைவதேஎ முக்கியமானது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இனி எல்லாரும் நான் விரதம் இருந்தனான், நான் யாழ்க் களத்தில ஆலோசனை சொன்னானான் எண்டு வெற்றிக்கு உரிமைகொண்டாடுவியள்.ஒரு சமர் என்பது படைத் தரப்புக்குச் சாதமாகாவும் இருக்கலாம் புலிகளுக்கு சாதமாகாவும் இருக்கலாம்.இறுதி வெற்றியைத் தீர்மானிப்பது இராணுவ அரசியல் இராஜதந்திர மூலோபாயமே.ஆகவே ஒரு சமரின் வெற்றியைக் கண்டு துள்ளிக் குதிப்பதையும் தோல்வியைக் கண்டு துவண்டு போவதையும் மாற்றிக் கொண்டு.போராட்டத்திற்க்கு நாம் ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும் அரசியல் ரீதியாகா நாங்கள் எவ்வாறு எம்மைத்த் தயார் செய்ய வேண்டும்.என்ன தடை வந்தாலும் போராடுவதில் எவ்வாறு நாம் தொடர்ந்து நம்பிக்கை வைத்து புலிகளின் பின்னால் அணி திரள்வது பற்றிச் சிந்திப்போம்.

மல்லாவி போட்டுதா மன்னார் போட்டுதா என்பதல்ல முக்கியமானது எமது இறுதி இலக்கை அடைவதேஎ முக்கியமானது.

நாரதரே , நான் விரதம் இருந்தது இறந்த பெற்றோருக்காக

அதே நாழில் இந்த முறியடிப்பும் வெற்றிகரமாக முடிவடைந்ததை இட்டு தான் எனது சந்தோசத்தை வெளிப்படுத்தினேன் .

இங்கே யாருடைய ஆலோசனையும் எனக்கு வேண்டாம் .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சந்தோசம் ரகுநாதன் ,

நேற்று தான் ஆடி அமாவசைக்கு விரதம் பிடித்தேன் . கை மேல் பலன் கிடைத்து விட்டது . :lol:

அதுசரி

நீங்கள் ஆடிஅமாவாசை விரதம் பிடித்ததற்கும்............

அடிவிழுந்ததற்கும்...............என்ன சம்பந்தம்...........

அங்கே போராடிய போராளிகளில் எத்தனைபேர் ஆடிஅமாவாசை விரதம் பிடிக்காமல் போராடினார்களோ?????

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்தக் கப்பை தூக்கினால் என்ன போகேக்க வைச்சுபோட்டுத்தானே போறாங்கள் நாணயஸ்தன்கள்!

வந்த செலவுகள் வரவேற்புச் செலவுகள் எல்லாவற்றுக்கும் கணக்கு கொடுத்துவிட்டும்தானே போறாங்கள்!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அதுசரி

நீங்கள் ஆடிஅமாவாசை விரதம் பிடித்ததற்கும்............

அடிவிழுந்ததற்கும்...............என்ன சம்பந்தம்...........

அங்கே போராடிய போராளிகளில் எத்தனைபேர் ஆடிஅமாவாசை விரதம் பிடிக்காமல் போராடினார்களோ?????

உங்களுக்கும் ஆடி அமாவசை வந்தால்..........

அதைப்பற்றி அறிவீர்கள் .

Link to post
Share on other sites

இப்ப என்ன சொல்ல வருகின்னம்...?? இந்த பகுதிகளுக்கை யாரும் கருத்து எழுத கூடாதா.? இல்லை அழுமூஞ்சியாக இருக்க வேண்டுமா...??

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.