Jump to content

பெண்களும், மன அழுத்தமும்................

Recommended Posts

பெண்களும், மன அழுத்தமும்................

Women, Tension, tamil, Relax

ஒரு பெண்ணை சதாகாலமும் கணவனோ அல்லது சார்ந்திருக்கும் எவரோ திட்டிக்கொண்டே இருந்தால் என்ன நிகழும் ?. அவள் மிக மிகக் கொடிய மன அழுத்த நோய்க்குள் விழுவாள் என்கின்றது சமீபத்திய ஆய்வு ஒன்று.

மன அழுத்த நோயால் பாதிக்கப்படுபவர்களில் எழுபத்து ஐந்து விழுக்காடு மக்கள் பெண்கள் என்பது வெறுமனே புள்ளி விவரங்களைப் பார்த்து கடந்து செல்வதற்கானது அல்ல. அது நமது சமூகத்தின் மீதும், நமது கலாச்சாரக் கட்டமைப்புகளின் மீது கேள்விகளை எழுப்புவதற்கானது.

சமூகக் கட்டமைப்புகள் இன்னும் பெண்ணை முழுமையாய் அவளுடைய கோபத்தை வெளிக்காட்ட அனுமதிக்கவில்லை என்பதே உண்மை. அப்படி தனக்குள்ளேயே அடக்கப்படும் கோபம் மன அழுத்தத்தின் அடிப்படைக் காரணியாகி விடுகிறது.

ஒரு ஆண் தனது மன அழுத்தத்தை கோபத்தின் மூலமாகவோ, அல்லது தனக்கு விருப்பமான ஏதோ ஒரு வழியில் வெளியேற்றி விடுகின்றான். பெண்களுக்கு அத்தகைய வாய்ப்பு மிகக் குறைவாகவே வழங்கப்படுகிறது.

அவள் பெண் என்று கற்காலச் சமூகம் கட்டி வைத்த கோட்டைகளைத் தாண்ட முடியாமல், அதே அட்டவணைக்குள் தான் வாழ வேண்டி இருக்கிறது. இத்தகைய வரையறைகளைத் தாண்டும் போது ஆண்களால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. இதுவும் சமீப காலமாக அதிகரித்து வரும் மண முறிவுக்கு ஒரு முக்கியக் காரணம் என்கிறார் சென்னையைச் சேர்ந்த மனநோய் மருத்துவர் ஒருவர்.

தனக்குள்ளேயே வெடித்துத் தன்னை அழிக்கும் மனக் கண்ணி வெடி ஒரு ரகமான மன அழுத்தத்தைப் பெண்களுக்குத் தருகிறது என்றால், தொழில் அழுத்தம், பணி சுமை, சுதந்திரமின்மை என பல செயல்கள் வெளியிலிருந்து தாக்குகின்றன.

பெண்களின் மன அழுத்தத்திற்கு உடலியல் ரீதியாகவும் காரணங்களும் பல உள்ளன. பெண்களுடைய ஹார்மோன்களின் சமநிலை ஆண்களைப் போல இருப்பதில்லை, வெகு விரைவிலேயே அதிக மாற்றத்தை அது சந்திக்கிறது. இயற்கை பெண்ணுக்கு அளித்திருக்கும் மாதவிலக்கு சுழற்சிகள் இதன் முக்கிய காரணமாய் இருக்கின்றன.

தான் பெண்ணாய் பிறந்து விட்டோமே எனும் சுய பச்சாதாபம் பல பெண்களுடைய வாழ்க்கையில் மன அழுத்தத்தைக் கொண்டு வருகின்றதாம். அதற்குக் காரணம் சமூகத்தில் ஒரு ஆணுக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரமும், சுதந்திரமும் பெண்ணுக்குத் தரப்படவில்லை என்பதும், அதை எடுக்க முயலும்போது அவள் முரட்டுத் தனமான கருத்துக்களால் முடக்கப்படுகிறாள் என்பதுமே.

நேரடியான மன அழுத்தம் பெரும்பாலும் மனம் சம்பந்தப்பட்டது. நம் மீது திணிக்கப்படுபவையோ, நம்மால் உருவாக்கப்படுபவையோ உள்ளுக்குள் உருவாக்கும் அழுத்தம் அது.

மகிழ்ச்சியாய் இருக்க முடியாத மன நிலை இத்தகைய மன அழுத்தத்தின் ஒரு முகம். ஆனந்தமாய் சுற்றுலா செல்லலாம் என அழைத்தாலும் சலனமில்லாமல் பதிலளிக்கும் மனம் அழுத்தத்தின் படிகளில் அமர்ந்திருக்கிறது என்பதை உணர வேண்டும்.

மறை முகமாய் தாக்கும் மன அழுத்தம் உடல் வலிகளின் காரணமாக வரக் கூடும் என்கின்றனர் மருத்துவர்கள். குறிப்பாக முதுகுவலி, கழுத்துவலி, வயிற்று வலி என வரும் வலிகள் இரவுத் தூக்கத்தைக் கெடுக்கின்றன. நிம்மதியற்ற சூழலையும், பல உபாதைகளையும் தந்து கூடவே மன அழுத்தத்துக்கும் விதையிடுகின்றன.

பெண்களுக்கு இத்தகைய மன அழுத்தம் வருவதற்கு அவர்களுடைய உடல் பலவீனமும் ஒரு முக்கிய காரணமாகி விடுகிறது.

ஒன்று மட்டும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். எந்த ஒரு மன அழுத்தத்தையும் எந்த ஒரு மருந்தும் முழுமையாய் குணமாக்கி விட முடியாது.

நம்மைச் சார்ந்து வாழும் சகோதரிகளின் மன அழுத்தத்திற்கான விதை நம் வார்த்தைகளிலிருந்தோ, செயல்களிலிருந்தோ விழுந்து விடாமல் கவனமாய் இருப்பது ஆண்களின் கடமை.

பெண்களும் சமூகம் என்பது ஆண்கள் மட்டுமான அமைப்பல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். காற்றடித்தால் மூடிக் கொள்ளும் தொட்டாச்சிணுங்கி மனப்பான்மையிலிருந்து தைரியமாக சமூகத்தின் வீதிகளில் பழமை வாதிகளின் எதிர்ப்புகளுக்குப் பலியாகாமல் நிமிர்ந்து நிற்க வேண்டும்.

புரிதலும், அன்பு புரிதலும் கொண்ட, தேவையற்ற அழுத்தளுக்கு இடம் தராத, சின்ன சுவர்க்கங்களாக குடும்பங்கள் விளங்கினால், மன அழுத்தம் விடைபெற்றோடும் என்பதில் ஐயமேதும் இல்லை.

(Source:- http://xavi.wordpress.com)

Link to comment
Share on other sites

எங்கள் சமூகம் திருந்துமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உது ஒரு பக்கம் என்றால்.. உந்த மன அழுத்தம் பிடிச்ச பெண்களால ஆண்களுக்கும் எல்லோ மன அழுத்தம். அதால தான் ஆண்களுக்கு இதய நோய்.. நீரிழிவு நோய் அதிகம் ஏற்படுகிறது. பெண்களுக்கு இதய தாக்கு (Heart attack) வாறது குறைவு.. ஆண்களை விட..!

அதிக மன அழுத்தம் ஆண்களில் நீரிழிவு நோயை ஊக்குவிக்கிறது.

http://kuruvikal.blogspot.com/2008/07/blog-post_28.html

என்ன நெடுக்ஸ் இப்பிடி " உந்த மன அழுத்தம் பிடிச்ச பெண்கள்" என்கிறீர்கள்? அவர்கள் பாவமில்லையா? பெண்களுக்கு இதய தாக்கு குறைவு தான்...ஆண்களை விட. அது ஆண்களின் உடல் சார்ந்தது என்றும் ஒரு அறிக்கையில் வாசித்தேன். முழுதாக என்றில்லை. ஆண்கள் சில மாத்திரைகளை பாவித்தே இதய நோயை வர வைக்கிறார்கள். அதுவும் உடலுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என அறிந்தும் வேறொன்றுக்காக அதை பாவித்து சிலர் வாங்கி கொள்கிறார்கள். அப்படியும் இருக்கிறதல்லவா? சரி அதை பற்றி நான் பேச விரும்பல.

பெண்களுக்கு மன அழுத்தம்,மிக்கிரைன் எல்லாமே ஆண்களை விட அதிகம் தான். வெளி நாட்டில் நீங்கள் ஒரு விசயம் கவனிக்கலயா? ஊரை விட இங்கு தான் மன அழுத்தம் கூட. தமிழர் கூடும் இடமொன்றுக்கு போனால் அங்கு நான் எத்தனையோ விதமான பெண்களை அவதானித்திருக்கிறேன். நன்றாக கதைப்பார்கள். நான் போல பகிடி விட்டால் சிரிக்காமல் ( உண்மையாகவே சிரிக்க கூடிய பகிடி என்றாலும்) எங்கயோ பார்த்துண்டு ம்ம் ம்ம் எண்டுவாங்க. இதுவா இன்னும் எத்தனை. நிறைய பெண்கள் நான் இந்த 8 வருட வெளிநாட்டு வாழ்க்கையில் அவர்களின் பழக்க வழக்கங்கள்,கதைமுறை மாறி இருப்பதை கண்டிருக்கேன்.

சில ஆண்களால் தங்கள் நம்பிக்கையை இழந்து பலவீனப்பட்டு இப்படி ஆகி விடுகிறார்கள். :unsure::lol:

மன அழுத்தம் பெண்களை தற்கொலை வரை கொண்டு செல்கிறது!!!!

சில ஆண்களால் தங்கள் நம்பிக்கையை இழந்து பலவீனப்பட்டு இப்படி ஆகி விடுகிறார்கள். :o:(

மன அழுத்தம் பெண்களை தற்கொலை வரை கொண்டு செல்கிறது!!!!

பெண்களுக்குள்ள பேராசைதான் அவர்களின் இந்த நிலைக்குக் காரணம். அதனால் தான் அவர்களின் கணவன்மாருக்கும் பிரச்சனை.. மன அழுத்தம். :wub:

நான் ஆண்களில் இதயத்தாக்குக்கு இவர்கள் மட்டும் தான் காரணம் என்று சொல்லவில்லை. ஆண்களில் இதயத்தாக்கு அதிகரிக்க இவர்களும் ஒரு காரணம் என்று தான் குறிப்பிடுகிறேன். அதில் தவறு இருக்கிறதா..??! :unsure::lol:

Link to comment
Share on other sites

அட..அப்படியோ..!!..மனம் எண்டு ஒன்று இருந்தால் தானே மன அழுத்தம் வாறதிற்கு..(முடியலப்பா)..உவைக்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அட..அப்படியோ..!!..மனம் எண்டு ஒன்று இருந்தால் தானே மன அழுத்தம் வாறதிற்கு..(முடியலப்பா)..உவைக்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்மு பேராண்டிக்கு ஒரு ஓப் போடுங்கோ. அப்படியே பெண்களின் மூளைக்குள்ள உள்ளதை ஸ்கான் செய்து போட்டிருக்காப்பா..!

உவையள் எப்போது மற்றவனோட தங்களை ஓப்பிடுறதை விட போகீனமோ அப்ப..குடும்பமும் சந்தோஷமாக இருக்கும் பாருங்கோ...அதுவரைக்கும்....

இது 100% உண்மை...!

ஆனால் பெண்கள் திருந்துவார்கள் என்று எதிர்பார்க்கிறது.. அதைவிட முட்டாள் தனம். கற்பனையில மட்டும் தான் ஆண்களுக்கு பெண்களை அவங்க விரும்பிற வடிவில பார்க்க முடியும். அதனால் தான் ஆண் எல்லாம் பெண்ணை தன் கற்பனை வடிவில்.. அப்பாவித்தனமா கண்டு.. ரசிச்சு... பாடி கவிஞன் ஆனான். எந்தப் பெண்ணாவது கற்பனையில் கூட ஒரு ஆணை நல்லா பார்த்திருக்காளா..???! கிடையாது. :lol:

ஆனால்.. ஒப்பிட்டுப் பார்த்திருப்பாள் அடுத்தவனா இவனா இன்னொருத்தனா உயர்த்தி என்று. ஆண் பெண்ணை ஒப்பிடும் போது கூட இன்னொரு பெண்ணோட ஒப்பிடமாட்டான். தனது மனதுக்குப் பிடித்த இயற்கையோடுதான் ஒப்பிடுவான்.. ஆண்கள்... நேரடியாக பல பெண்களைத் தேடி வாழ.. பெண்கள் அவங்க எண்ணத்தில் பல ஆண்களைச் சுமக்கிறதுதான் காரணம்..! அதுதான் அவைக்கு மன அழுத்தம் வரவும் காரணம்..! :lol::lol:

Link to comment
Share on other sites

ஜம்மு பேராண்டிக்கு ஒரு ஓப் போடுங்கோ. அப்படியே பெண்களின் மூளைக்குள்ள உள்ளதை ஸ்கான் செய்து போட்டிருக்காப்பா..!

இது 100% உண்மை...!

ஆனால் பெண்கள் திருந்துவார்கள் என்று எதிர்பார்க்கிறது.. அதைவிட முட்டாள் தனம். கற்பனையில மட்டும் தான் ஆண்களுக்கு பெண்களை அவங்க விரும்பிற வடிவில பார்க்க முடியும். அதனால் தான் ஆண் எல்லாம் பெண்ணை தன் கற்பனை வடிவில்.. அப்பாவித்தனமா கண்டு.. ரசிச்சு... பாடி கவிஞன் ஆனான். எந்தப் பெண்ணாவது கற்பனையில் கூட ஒரு ஆணை நல்லா பார்த்திருக்காளா..???! கிடையாது. :lol:

ஆனால்.. ஒப்பிட்டுப் பார்த்திருப்பாள் அடுத்தவனா இவனா இன்னொருத்தனா உயர்த்தி என்று. ஆண் பெண்ணை ஒப்பிடும் போது கூட இன்னொரு பெண்ணோட ஒப்பிடமாட்டான். தனது மனதுக்குப் பிடித்த இயற்கையோடுதான் ஒப்பிடுவான்.. ஆண்கள்... நேரடியாக பல பெண்களைத் தேடி வாழ.. பெண்கள் அவங்க எண்ணத்தில் பல ஆண்களைச் சுமக்கிறதுதான் காரணம்..! அதுதான் அவைக்கு மன அழுத்தம் வரவும் காரணம்..! :lol::lol:

பெண்கள் திருந்துவது இருக்கட்டும். முதலில் பெண்களைப்பற்றி குறை கூறிக் கொண்டு திரியும் நீங்கள் திருந்துங்கள். ஆண்களுக்கு வேறு வேலையே இல்லையா? கற்பனையில் ரசித்தவையாம் .பாட்டு பாடினவையாம். அத்தோடு தங்களைப் போல் பெண்களையும் வேலை வெட்டி இல்லாமால் அவர்களை நினைத்து ரசித்து பாட்டு எழுதாட்டாம். அதுவும் அப்பாவித்தனமாக கற்பனையில் எழுதினவையாம். அப்போ ஆண்களுக்கு சுயபுத்தியே இல்லையா? வேண்டாத கற்பனைகளை தங்களகவே வளர்த்து விட்டு பின்பு தங்களுக்கு வரும் மனைவி இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைப்பதை எந்த வகை மனநோயில் சேர்ப்பது? முதலில் கற்பனைகளை விட்டு வரும் மனைவியை ஒரு சாதரண மனிஐியாக நடத்த பாருங்கள். புலம்பெயர் நாடுகளில் பெண்களுக்கு இணையாக ஆண்களுக்கும் மன அழுத்தம் வருகுதுங்கோ. அவர்களும் தற்கொலை அது இது என்று செய்யினம். அப்போ அவர்களும் பல பெண்களை மனதில் சுமக்கின்றது தான் காரணமோ?

மன அழுத்தம் என்பது ஆண்களை மனதில் சுமக்கின்றபடியால் மட்டும் வருவதில்லை நெடுக்ஸ். உங்களை மாதிரி இணையத்தில் கருத்துக்கள் என்ற ரீதியில் கொட்டுகின்ற குப்பைகளை பார்த்தாலும் மன அழுத்தம் வரத்தான் செய்யும்.

Link to comment
Share on other sites

அட..அப்படியோ..!!..மனம் எண்டு ஒன்று இருந்தால் தானே மன அழுத்தம் வாறதிற்கு..(முடியலப்பா)..உவைக்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரமாவின் கருத்து களை வரவேற்கிறேன் . மன அழுத்தம் ஆண் பெண் இருவரையும்

தாக்கும் பாருங்கோ .எல்லாபென்களும் ஒரே மாதிரியில்லை .எல்லா ஆண்களும்

ஒரே மாதிரி இல்லை அவரவர் சூழ்நிலை , வாழ்கை நிலை , ஏற்படும்

அனுபவம் என்பதை பொருத்தது. வாழ்கை அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் திருந்துவது இருக்கட்டும். முதலில் பெண்களைப்பற்றி குறை கூறிக் கொண்டு திரியும் நீங்கள் திருந்துங்கள். ஆண்களுக்கு வேறு வேலையே இல்லையா? கற்பனையில் ரசித்தவையாம் .பாட்டு பாடினவையாம். அத்தோடு தங்களைப் போல் பெண்களையும் வேலை வெட்டி இல்லாமால் அவர்களை நினைத்து ரசித்து பாட்டு எழுதாட்டாம். அதுவும் அப்பாவித்தனமாக கற்பனையில் எழுதினவையாம். அப்போ ஆண்களுக்கு சுயபுத்தியே இல்லையா? வேண்டாத கற்பனைகளை தங்களகவே வளர்த்து விட்டு பின்பு தங்களுக்கு வரும் மனைவி இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைப்பதை எந்த வகை மனநோயில் சேர்ப்பது? முதலில் கற்பனைகளை விட்டு வரும் மனைவியை ஒரு சாதரண மனிஐியாக நடத்த பாருங்கள். புலம்பெயர் நாடுகளில் பெண்களுக்கு இணையாக ஆண்களுக்கும் மன அழுத்தம் வருகுதுங்கோ. அவர்களும் தற்கொலை அது இது என்று செய்யினம். அப்போ அவர்களும் பல பெண்களை மனதில் சுமக்கின்றது தான் காரணமோ?

மன அழுத்தம் என்பது ஆண்களை மனதில் சுமக்கின்றபடியால் மட்டும் வருவதில்லை நெடுக்ஸ். உங்களை மாதிரி இணையத்தில் கருத்துக்கள் என்ற ரீதியில் கொட்டுகின்ற குப்பைகளை பார்த்தாலும் மன அழுத்தம் வரத்தான் செய்யும்.

வணக்கம்.உங்களை மிக நீண்ட நாட்களின் பின் கோபம் கொப்பளிக்கும் கருத்தோடு சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி.

பெரும்பாலான ஆண்கள் பெண்களைப் பற்றி நியாயமான ஆசைகளைத்தான் வைச்சிருக்கிறாங்க. ஒரு மனிதன் இன்னொரு மனிதனை புரிஞ்சுக்கனும் என்ற தன்மை கூட இல்லாமல் இருக்கிற பெண்களை எப்படி மனிசிகள் என்று நடத்த முடியும்.

ஆண்களின் மன அழுத்தத்துக்கு உள்ள காரணிகளில் பெண்களின் பங்களிப்புத்தான் அதிகம் எனலாம். ஆனால் பெண்களின் மன அழுத்தப் பிரச்சனைக்கு அவங்களே தான் அதிகம் காரணம்..!

கருத்துக்களத்தில் குப்பை கொட்ட முடியாது. அதை குப்பைக் கூடையில் அல்லது பையில் தான் கொட்ட முடியும். இந்த எளிமையான உண்மையைக் கூட பெண்கள் மனசு புரிய முற்படாத போது.. எப்படி.. ஒரு ஆணைப் புரிஞ்சு கொள்வார்கள் பெண்கள். ஆனால் ஒரு ஆண் தங்களைப் புரிஞ்சு கொண்டு நடத்துக்கனும் என்று எதிர்பார்க்கிறார்களாம். வேடிக்கையாக இருக்கிறது.

இயற்கையை ரசிக்கிறதும்.. கற்பனை செய்வதும் மனிதருக்கு இயல்பு. அதைக் கூட பெண்கள் கொண்டிருக்கவில்லை.. ஆனால்.. அடுத்த ஆணைப் பற்றி இன்னொரு ஆணை வைச்சுக் கொண்டு அல்லது அடுத்த பெண்ணைப் பற்றி சிந்திக்க பொறாமை வளர்க்க...நேரம் இருக்கிறது அவர்களுக்கு..??! :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆண்களின் மன அழுத்தத்துக்கு உள்ள காரணிகளில் பெண்களின் பங்களிப்புத்தான் அதிகம் எனலாம். ஆனால் பெண்களின் மன அழுத்தப் பிரச்சனைக்கு அவங்களே தான் அதிகம் காரணம்..!

அதெப்படி கூறுகின்றீர்கள். இதற்கு ஏதும் சான்று கொண்டுள்ளீர்களா? ஆண்களின் மன அழுத்தங்களுக்கு ஆண்கள் காரணமாக இருக்க முடியாதா? தங்களுடைய பிரச்சனைகளை அடுத்தவர் தலையில் போடுகின்ற ஆண்கள் போட்டுக் கொள்கின்றார்களோ?

கருத்துக்களத்தில் குப்பை கொட்ட முடியாது. அதை குப்பைக் கூடையில் அல்லது பையில் தான் கொட்ட முடியும். இந்த எளிமையான உண்மையைக் கூட பெண்கள் மனசு புரிய முற்படாத போது.. எப்படி.. ஒரு ஆணைப் புரிஞ்சு கொள்வார்கள் பெண்கள். ஆனால் ஒரு ஆண் தங்களைப் புரிஞ்சு கொண்டு நடத்துக்கனும் என்று எதிர்பார்க்கிறார்களாம். வேடிக்கையாக இருக்கிறது.

அருமையான தத்துவம். ஆனால் குப்பை என்பது வேண்டாத பொருள் என்ற உள்அர்த்தம் கொண்டது. வெறுமனே பெண்களையே அர்ததமின்றிச் சாடுவதும் குப்பையில் தான் அடங்கும். குப்பை என்பதன் உள் அர்த்தமே புரியாத ஆண்கள், குடும்பத்தில் நடக்கின்ற பிரச்சனையையும், தேவைகளையு;ம எப்படிப் புரிந்து கொள்வார்கள். இதனால் தான் பல குடும்பங்களில் ஆண்களின் புரிதல் குறைவால் சண்டைகள் ஏற்படுகின்றன.

இயற்கையை ரசிக்கிறதும்.. கற்பனை செய்வதும் மனிதருக்கு இயல்பு. அதைக் கூட பெண்கள் கொண்டிருக்கவில்லை.. ஆனால்.. அடுத்த ஆணைப் பற்றி இன்னொரு ஆணை வைச்சுக் கொண்டு அல்லது அடுத்த பெண்ணைப் பற்றி சிந்திக்க பொறாமை வளர்க்க...நேரம் இருக்கிறது அவர்களுக்கு..??!

இயற்கை என்பதை இரசியுங்கள். ஆனால் ஒரு பெண்ணின் அங்கத்தை ஒரு கோணத்தில் இரசிப்பது என்பது எவ்வளவு கீழ்த்தரமானது. அதே இரசிப்பை உங்களால் நியாயம் செய்திட முடியாது எனில், அப்படி இரசிப்பை உங்களின் தாயிடமோ, சகோதரங்களிடமோ செய்திட முடியாது.

ஒரு பெண்ணைச் சுற்றி 4 பசங்கள் அலைவதும், பிறகு சுடுபட்டுச் சாவதும் புலத்தில் நடக்கின்ற இளைஞர்களின் பிரச்சனை. அது பலருக்கும் தெரியும். இது கூட ஒரு வி த ஆண்களின் மனநோயே

Link to comment
Share on other sites

உங்களுடன் முன்பு ஒரு முறையும் கருத்தாடியாதக ஞாபகம் இல்லை. ஆனாலும் என்னை கணநாட்களுக்கு பிறகு சந்திப்பதாக சொல்கின்றீர்கள்? :rolleyes:

சரி உங்கள் கருத்துக்கே வாருகின்றேன். ஆண்கள் பெண்கள் மீது நியாமான ஆசை (?)வைத்திருக்கின்றார்கள் என்று சொல்கின்றீர்கள். ஆனால் ஒவ்வொரு பெண்ணின் குணங்கள் அவர்களின் வளர்ப்பு முறை சூழ்நிலை ஆகியவற்றில் மாறுபாடுகின்றது என்ற உண்மையை ஏன் இந்த ஆண்களால் புரிந்து கொள்ள முடியமால் இருக்கின்றது? ஆணோ பெண்ணோ தங்களின் வாழ்க்கை துணையின் குணங்களை கொண்டு அவர்களுக்காக தங்களை மாற்ற வேண்டிய இடத்தில் மாற்றி அனுசரித்து போவது தான் வாழ்க்கை. நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ்க்கை நடத்த வேண்டும் என்றால் இது தான் உண்மையான வழி. அதை விட்டு பெண்கள் எங்கள் நிம்மதியை குலைத்துவிட்டார்கள் என்று புலம்பி கொண்டு திரிவது மடத்தனம்.

ஐச்சோ உங்கள் கருத்தை பார்க்கையில் சிரிப்பதா? அழுவதா? என்று தெரியலை. ஆண்களின் மன அழுத்தத்துக்கு பெண்கள் தான் காரணம் என்றால் அதே பங்களிப்பு பெண்களுக்கும் ஆண்களால் வந்து சேருகின்றது என்றா உண்மையை நீங்கள் ஏத்துத்தான் ஆகணும். ஒரு குறுகிய வட்டத்தில் நின்று குறுகிய மானப்பான்மையுடன் சிந்திக்கமால் இன்றைய காலகட்டத்தில் நாட்டில் நடப்பவற்றை அவதானியுங்கள்.

பெண்களை ஆண்கள் ஏமாற்றி விட்டு ஓடுவது எல்லாம் மலையேறி விட்டதா? வேலைக்கு போகமால் கடன் வாங்கி வந்து குடித்து மனைவியை மட்டுமன்றி பிறந்த குழந்தைகளையும் அடி உதை அத்தோடு பட்டினி என வாட்டி எடுக்கும் கணவர்மார்கள் எல்லாம் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா? ஊரிலிருக்கும் மனைவிக்கு ஏதோ சாட்டுக்கு கொஞ்ச பணம் அனுப்பிவிட்டு இங்குள்ள நாடுகளில் மற்ற இனப் பெண்களுடன் கூடி குலாவி கொண்டிருக்கும் ஆண்கள் எல்லாம் உண்மையானவர்களா? அங்கு கடன் வாங்கி மகனை வெளிநாட்டுக்கு அனுப்பி எப்ப பணம் அனுப்புவான் சாப்பாட்டுக்கு இல்லாவிட்டாலும் வட்டிக் காசை என்றாலும் கட்டலாம் என்று ஏங்கி பெற்றோர்கள் ஏங்கி கொண்டிருக்க இங்கு வந்து தங்கள் உடை நடை எல்லாவற்றையும் மாத்தி கும்பல்களுடன் கோவிந்தா என்று திரியும் ஆண்கள் எந்த வகை? (இன்னும் இருக்கு )அப்பாவி பெண்களை குழந்தைகள் வயது போனவர்கள் என்றா பகுபாடு இன்றி கற்பழித்தும் கொன்று குவிக்கும் இலங்கை இராணுவத்தில் மட்டுமன்றி மற்ற நாட்டு இராணுவம் என்றா போர்வையில் இருக்கும் ஆண்கள் எல்லாம் உங்கள் பார்வையில் அப்பாவிகளா? இவற்றால் ஒன்றாலும் பெண்களுக்கு மனஅழுத்தம் வாராதா?

கருத்துக்களத்தில் குப்பை கொட்டமுடியாது தான். ஆனால் குப்பை தனமான கருத்துக்களை நிறையவே கொட்டலாம். அதற்கு வலைஞன் வந்து பூட்டு போடும் வரை கொட்டிக் கொண்டே இருக்கலாம். இங்கு கருத்து எழுதியது நான் மட்டும் தான். என்னுடைய கருத்தை மட்டும் வைத்துக் கொண்டு மற்ற பெண்களையும் கற்பனை செய்வீர்கள் என்றால் அது உங்களுடைய முட்டாள் தனம் என்று தான் சொல்லுவேன்.

நெடுக்ஸ் இயற்கையை ரசிப்பதும் கற்பனை செய்யும் தன்மை பெண்களுக்கும் இருக்கு. வீட்டில் இருக்கும் சிறு குப்பைகளை கூட அகற்றி வீட்டை அழகாகவும் சுத்தமாகவும் வைத்திருந்து அவற்றை ரசிக்க முடியாதவர்கள் வெளியில் இயற்கையை இரசிக்கின்றார்களாம். வீட்டில் பூங்கான்று வளர்ப்பதில் இருந்து வீட்டை அழகாக வைத்திருப்பதில் பெண்கள் தான் முன்னிடத்தில் இருந்து வருகின்றார்கள். அதை விட்டு றோட்டில் தன்னுடைய பாட்டில் வளர்ந்து கொண்டிருக்கும் மரங்கள் செடிகளை ரசிக்கட்டாம். நித்தம் நித்தம் குடித்து விட்டு அடித்து துன்புறுத்தும் கண்வர்மார்கள் இருக்கும் வீட்டில் அந்த பெண்ணுக்கு கட்டாயம் அடுத்த ஆணின் நினைப்பு வரும் என்பது தான் வேடிக்கையாக இருக்கு.

Link to comment
Share on other sites

மன அழுத்தத்தை குறைப்பதற்கான சில எளிய வழிமுறைகள்!

இன்றைய அவசர உலகத்தில், இயந்திரத்தனமாக இயங்கிக் கொண்டிருக்கும் மனிதர்கள் மத்தியில், மன அழுத்தம் என்பது சாதாரண விடயமாகிக் கொண்டு வருகிறது. நமது தேகத்தின் நிலை (posture),

பழக்க வழக்கங்கள் (habits), எண்ணங்கள் (thoughts), நடத்தை (behavior) போன்றவற்றில் ஏற்படுத்தும் மாற்றங்களால் மன அழுத்தத்தை தொடர்ந்து நீண்ட காலத்தில் குறைக்க முடியும். இங்கே மன அழுத்தத்தை விரைவாக குறைப்பதற்கான எட்டு எளிய முறைகள் தரப்பட்டு இருக்கின்றன.

1. கோபத்தை கட்டுப்படுத்துதல்

அற்பமான, முக்கியத்துவமில்லாத, மிகச் சாதாரணமான விடயத்தையிட்டு சில சமயம் நமக்கு கோபம் வருவதுண்டு. அந்த கோபம் அவசியமற்றது என்பது புரிந்தே இருந்தாலும் நாம் அந்த கோபத்தை கட்டுப்படுத்தாமல் சில சமயங்களில் வெளிப்படுத்துகிறோம். அப்படி சந்தர்ப்பங்கள் ஏற்படும்போது, நாம் கோபப்பட்டு நமது சக்தியை விரயம் செய்யும் அளவுக்கு அந்த விடயம் தகுதியற்றது என்று மனதிற்கு உணரவைத்து, அந்த கோபத்தை வர விடாமல் தடுங்கள். சக்திவாய்ந்த, கோபத்தை அடக்கியாளும் முயற்சி மன அழுத்தத்தை குறைப்பதற்கு மிகச் சிறந்த, உண்மையான வழியாகும்.

2. சுவாசம்

மெதுவாகவும், ஆழமாகவும் மூச்சை உள்ளிழுத்து விடுவது மன அழுத்தத்தை குறைக்கும். உங்களது மன அழுத்தம் அதிகரிக்கப்போகும் அடுத்த சந்தர்ப்பத்தில், மிக ஆழமாக மூன்று தடவைகள் மூச்சை உள்ளிழுத்து, மெதுவாக மூச்சை வெளியேற்றுங்கள். உங்களுக்கு சில நிமிடங்கள் கிடைக்குமாயின், இந்த சுவாசிக்கும் பயிற்சியை தியானம் போல் செய்து பாருங்கள்.

3. மெதுவாக பேசுங்கள்

மன அழுத்தம் ஏற்படும்போது, நாம் மிக விரைவாகவும், சத்தமாகவும் பேச ஆரம்பிக்கிறோம். உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதுபோல் தோன்றினால், உடனே உங்கள் பேச்சை வழமையை விட மெதுவாக்கிக் கொள்ளுங்கள். அப்போது, நீங்கள் தெளிவாக சிந்திக்க ஆரம்பிப்பதுடன், மன அழுத்தத்தை தரும் அந்த சூழ்நிலையை நியாயமாகவும், கட்டுப்பாட்டுடனும் எதிர்கொள்ளத் தயாராவதை உணர்வீர்கள்.

4. நேரத்தை பயன்தரும் வகையில் கையாளுதல்

நீங்கள் ஒத்திப்போட்டு வரும் வேலைகளில் ஏதாவது ஒரு வேலையை தெரிவு செய்து உடனடியாக நடைமுறைப்படுத்துங்கள். உங்களை இழுத்தடித்து வந்த பொறுப்புக்களில் ஒன்றையேனும் நிறைவேற்றிய திருப்தி, உங்களுக்கு புதிய சக்தியையும் உற்சாகத்தையும் தருவதுடன், உங்கள் மன அழுத்தத்தை குறைக்கும்.

5. சுத்தமான காற்றை சுவாசியுங்கள்

ஒவ்வொரு நாளும் சில நிமிடங்களேனும் வெளியே வந்து சுத்தமான காற்றை சுவாசியுங்கள்.

6. பசி, உலர்வை தவிருங்கள்

நிறைய திரவ ஆகாரத்தை உட்கொள்வதனால் உலர்வை தவிர்ப்பதுடன், நேரத்துக்கு சிறிய அளவிலேனும் உணவருந்துவதன் மூலம் பசியைத் தவிருங்கள். பசியும், உலர் நிலையும் நீங்கள் உணர்வதற்கு முன்னரே ஒரு ஆக்கிரமிப்பு மனோநிலையையும், மனவிசாரம், கவலையையும் தூண்டும் சக்தி உள்ளவையாக கருதப்படுகிறது.

7. தேகநிலை சோதிப்பு (quick posture check)

இடையிடையே விரைவான ஒரு தேகநிலை சோதிப்பை மேற்கொள்ளுங்கள். தலையையும், தோள்களையும் நேராக நிலை நிறுத்தி, வளைந்திருக்கும், மந்தமான நிலையை தவிருங்கள். வளைந்த நிலையில் தசைகளில் ஏற்படும் இழுவிசை அல்லது இறுக்கமானது மன அழுத்தத்தை கூட்டுகிறது.

8. நாளின் முடிவில் உற்சாகமேற்படுத்தல்

ஒவ்வொரு நாளின் முடிவிலும், உங்களுக்கு உற்சாகம் தரக்கூடிய எதையாவது ஒன்றையாவது, சில நிமிடங்களாவது செய்யுங்கள். எல்லா சிந்தனைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு, சில நிமிட நேர ஓய்வான குளியல், அல்லது அரை மணி நேர அமைதியான வாசிப்பு, அல்லது கண்ணை மூடியபடி சில நிமிடங்களேனும் அமைதியாக இசையை ரசித்தல்... இப்படி எதையாவது செய்யுங்கள். அந்த நேரத்தில் மறுநாள் செய்ய வேண்டிய வேலைகளையோ, அல்லது அன்று நடந்து முடிந்த விடயங்களைப் பற்றியோ யோசிக்காதீர்கள். உங்கள் வேலை பற்றியோ, வீட்டில் செய்ய இருக்கும் வேலைகள் பற்றியோ, குடும்ப பிரச்சனைகள் பற்றியோ, எதைப் பற்றியுமே அந்த சில நிமிடங்களாவது நினைப்பதை தவிர்த்து விடுங்கள்.

அப்படி செய்வீர்களேயானால், அழுத்தம் நிறைந்த அடுத்த நாளைச் சந்திக்க உற்சாகமாக தயாராகி விடுவீர்கள்.

http://www.tamilamutham.net/home/index.php...21&Itemid=9

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுடன் முன்பு ஒரு முறையும் கருத்தாடியாதக ஞாபகம் இல்லை. ஆனாலும் என்னை கணநாட்களுக்கு பிறகு சந்திப்பதாக சொல்கின்றீர்கள்? :)

நீங்கள் என்னுடன் வாதம் செய்த களங்கள் பல. நீங்கள் ஒரு நீண்ட ஓய்வுக்குள் உண்மையை மறைக்க முற்படுகிறீர்கள் என்று நினைக்கிறேன்..! ஆதாரத்தைத் தேடித் தருகிறேன்.

பெண்கள் தங்களை ஆண்கள் புரிஞ்சு கொள்ள வேணும் என்று நினைக்கிற அளவுக்கு அவர்கள் ஆண்களைப் புரிஞ்சு கொள்வதில் ஈடுபாடு காட்டுவதில்லை. இக்காரணங்களால் தான் பல ஆண்கள் வழிதவறிப் போகின்றனர். பெற்றோரோடு இருக்கும் போது எவ்வளவோ நல்ல பிள்ளைகளாக இருக்கும் ஆண்கள்.. காதலிச்ச பிறகோ.. திருமணமான பிறகோ ஏன் கெட்டுப் போகிறார்கள். மன அழுத்தத்துக்கு இலக்காகிறார்கள். அவர்களைச் சார்ந்த பெண்கள்.. அவர்களைப் புரிந்து கொண்டு நடப்பதாலா..??!

ஒரு மகன் வெளிநாட்டுக்கு வந்து விட்டால் அவனை காசுழைக்கும் இயந்திரமாகப் பார்க்கும் தாய் மாரும்.. தவறுதான் செய்கின்றனர். வெளிநாட்டுக்கு வந்துவிட்டதால் அவனை காசு மரமாகப் பார்க்கும் மனைவி பிள்ளைகள் கூட அவனைப் பொறுத்தவரை புரிந்து கொள்ளாத உறவுகளாகத்தான் இருக்கின்றனர்.

ஏன் அதிகம் போவான்.. கூடக் காதலிக்கிற ஒரு பெண் கூட தன் காதலனின் நிலையை உணராமல்.. தனது நிலை சார்ந்து மட்டும் சிந்தித்து.. முடிவெடுக்கிற படியால் தான் பல காதலர்கள் பிரிந்து போகின்றனர். இதனால் மன உழைச்சல்களும் மன அழுத்தங்களும்.. சந்தோசமான வாழ்க்கையையே சூனியமாக்கி விடுகிறது.

நான் அவதானித்த அளவில் ஆண்களை பல பெண்கள் பல காரணங்களை கற்பனைகளைக் காட்டி பயமுறுத்தி தமக்கு பணிய வைத்து விடுகின்றனர். ஆனால் பல பெண்கள் ஆண்களின் உணர்வுகள்.. நிலைகளை உணர்ந்து கொள்பவர்களாக இல்லை.

உங்களின் கருத்திலேயே.. வெளிநாட்டுக்கு புலம்பெயரும் ஒரு இளைஞனின் உள்ளக் கிடக்கையில் எழக் கூடிய உணர்வுகளைப் புரிந்து கொள்ளக் கூடிய பக்குவம் கூட இருக்கவில்லை. மாறாக அவனை குற்றம்சாட்டி பெண்களைக் காப்பாற்ற நினைக்கிறீர்கள். மொழி அறிவின்று.. ஒரு சேதத்துக்குள் அகதியாக வரும் ஒரு இளைஞன்... எந்த ஆதார அடிப்படையும் இன்றி வாழ்க்கையை ஆரம்பிக்கின்ற போது படுகின்ற வேதனைகளை உணர்வுகளை நீங்கள் புரிய முற்பட்டிருப்பின் இவ்வாறான கண்மூடித்தனமான கருத்துக்களை விதைக்கமாட்டீர்கள். இவைதான் சமூகக் குப்பைகள்.. விதண்டாவாதங்கள்..!

முதலில் ஆணோ பெண்ணோ.. ஒரு மனிதனுக்குரிய சூழலில் அவனைப் புரிந்து கொள்ள முனைய வேண்டும். அப்போதுதான் அவன் செய்வதில் உள்ள தவறுகளுக்கான சரியான காரணத்தை இனங்காண முடியும். வெறுமனவே ஒருவன் குடிக்கிறான்.. அடிக்கிறான் என்று ஒரு பக்கத்தின் மீது மட்டும் குற்றம் சுமத்துவது தவறு. அதற்கான பின்னணிகள்.. அந்த மன நிலையை உருவாக்கியது யார்... என்னென்ன விடயங்கள் என்றுதான் நோக்க வேண்டும்.

நான் கண்டிக்கிறேன்.. வெளிநாடு வந்த தந்தை.. அசைலம் அடித்து.. காசு உழைத்து.. ஊருக்கு அனுப்பி.. பின்னர் நிரந்தர விசா வாங்கி.. தன்னையும் பிள்ளைகளையும் கூப்பிட வேண்டும் என்று ஆசைப்படும் மனைவி.. அந்த ஆண் இவ்வளவையும் செய்ய சந்திக்க வேண்டிய சூழல்கள் ஆபத்துக்கள் மன அழுத்தங்கள் என்பன பற்றி சிந்திக்கிறாளா. ஏன் பிள்ளைகள் சிந்திக்கின்றனவா... கிடையாது.

ஆனால் எல்லாம் ஆன பின்னர் நீங்கள் என்ன செய்தீர்கள்.. ஊரில அடுத்தவன் செய்யாதையா செய்துவிட்டீர்கள் என்ற ஒரு ஏளனக் கேள்வி.. இன்னும் அவனிடமே எதிர்பார்ப்புக்கள்..??! இவைதான்.. இன்றைய பெண்களில் பலரின் நிலை.

ஏன் வேலைக்குப் போகும் படித்த பெண்கள் கூட கணவனை காசால் அளவிடலாம்.. கட்டுப்படுத்தலாம்.. தன் தொழிலால் அவனை அடக்கலாம் என்று நினைக்கிறார்களே தவிர.. என் காலில் நான் நிற்கிறேன் என்று சொல்ல முன் நிற்கிறார்களே தவிர.. அந்த ஆண் அவளிடம் எதிர்பார்க்கும் அன்பை.. பாசத்தை.. அரவணைப்பை... கொடுக்க முனைகிறார்களா.. என்றால் இல்லை என்பதே கண்கூடு. இப்படியான நிலையில் பெண்களின்.. மன அழுத்தம் மட்டுமன்றி அவர்கள் சார்ந்த ஆண்களின் மன அழுத்தமும் அதிகரிக்குமே தவிர குறையாது.

தவறு விடும் பெண்கள்.. தன் தவறை மறைக்க தன் துணையிடம் தவறைத் தேடும் நிலையில் இருக்கிறார்கள்.. அல்லது அதையே காரணமாக்கி.. இன்னொருவனோடு தொத்துகிறார்கள்.. இப்படிப்பட்ட பெண்களால்.. தமது தவறையே கண்டு திருத்த முயலாது.. தொடர்ந்து தவறு செய்ய நினைக்கும் பெண்களால்.. எவருக்கு மன அழுத்தம் ஏற்படாது..??!

உலகில் எந்தப் பெண் ஒரு ஆணிடம் கோபத்தை வெளிப்படுத்தாது அன்பை மட்டும் வெளிப்படுத்தி நம்பிக்கையை வெளிப்படுத்தி வாழ்ந்திருக்கிறாள்... அப்படி செய்து விட்டு வந்து சொல்லுங்கள்.. அப்படியான எத்தனை பெண்களுக்கு ஆண்களால் பிரச்சனை என்று..??! :rolleyes:

அம்மா என்ற பெயரிலும்.. மனைவி என்ற பெயரிலும்.. பெண் பிள்ளைகள் என்ற பெயரிலும்.. ஆண்களை வறுத்தெடுக்கும்.. பெண்கள்.. முதலில் சிந்தியுங்கள்..??! கணவன் என்ன கஸ்டப்பட்டாலும்.. தனக்கும் பிள்ளைகளுக்கும் காசு அனுப்பனும்.. தாம் ஆடம்பரமா வாழனும் என்று நினைக்கிற பெண்கள் தான்.. தமிழ் பெண்கள் உட்பட உலகில் உள்ள பல பெண்கள்..! இவர்களால் தான் ஆண்களுக்கு மனதில் மட்டுமல்ல.. உடலிலும் பிரச்சனை.. அதனால் தான் ஆண்களின் சராசரி ஆயுள் கூட குறைந்து போகிறது..! இதனை எத்தனை பெண்கள் உணர்கிறார்கள். தன்னைப் போல தனது துணையின் மீதும் எத்தனை பெண்கள் 100% கவனம் எடுக்கின்றனர். அவனின் கஸ்டத்தில் கூட இருக்கின்றனர்.. 0.0001% கூட இருக்காது. அம்மா என்ற உறவு கூட ஒரு கட்டத்தில் கைவிட்டு விடுகிற நிலைதான் ஆண்களைப் பொறுத்தவரை..! :):o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன அழுத்தத்தை குறைப்பதற்கான சில எளிய வழிமுறைகள்!

இன்றைய அவசர உலகத்தில், இயந்திரத்தனமாக இயங்கிக் கொண்டிருக்கும் மனிதர்கள் மத்தியில், மன அழுத்தம் என்பது சாதாரண விடயமாகிக் கொண்டு வருகிறது. நமது தேகத்தின் நிலை (posture),

பழக்க வழக்கங்கள் (habits), எண்ணங்கள் (thoughts), நடத்தை (behavior) போன்றவற்றில் ஏற்படுத்தும் மாற்றங்களால் மன அழுத்தத்தை தொடர்ந்து நீண்ட காலத்தில் குறைக்க முடியும். இங்கே மன அழுத்தத்தை விரைவாக குறைப்பதற்கான எட்டு எளிய முறைகள் தரப்பட்டு இருக்கின்றன.

1. கோபத்தை கட்டுப்படுத்துதல்

அற்பமான, முக்கியத்துவமில்லாத, மிகச் சாதாரணமான விடயத்தையிட்டு சில சமயம் நமக்கு கோபம் வருவதுண்டு. அந்த கோபம் அவசியமற்றது என்பது புரிந்தே இருந்தாலும் நாம் அந்த கோபத்தை கட்டுப்படுத்தாமல் சில சமயங்களில் வெளிப்படுத்துகிறோம். அப்படி சந்தர்ப்பங்கள் ஏற்படும்போது, நாம் கோபப்பட்டு நமது சக்தியை விரயம் செய்யும் அளவுக்கு அந்த விடயம் தகுதியற்றது என்று மனதிற்கு உணரவைத்து, அந்த கோபத்தை வர விடாமல் தடுங்கள். சக்திவாய்ந்த, கோபத்தை அடக்கியாளும் முயற்சி மன அழுத்தத்தை குறைப்பதற்கு மிகச் சிறந்த, உண்மையான வழியாகும்.

2. சுவாசம்

மெதுவாகவும், ஆழமாகவும் மூச்சை உள்ளிழுத்து விடுவது மன அழுத்தத்தை குறைக்கும். உங்களது மன அழுத்தம் அதிகரிக்கப்போகும் அடுத்த சந்தர்ப்பத்தில், மிக ஆழமாக மூன்று தடவைகள் மூச்சை உள்ளிழுத்து, மெதுவாக மூச்சை வெளியேற்றுங்கள். உங்களுக்கு சில நிமிடங்கள் கிடைக்குமாயின், இந்த சுவாசிக்கும் பயிற்சியை தியானம் போல் செய்து பாருங்கள்.

3. மெதுவாக பேசுங்கள்

மன அழுத்தம் ஏற்படும்போது, நாம் மிக விரைவாகவும், சத்தமாகவும் பேச ஆரம்பிக்கிறோம். உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதுபோல் தோன்றினால், உடனே உங்கள் பேச்சை வழமையை விட மெதுவாக்கிக் கொள்ளுங்கள். அப்போது, நீங்கள் தெளிவாக சிந்திக்க ஆரம்பிப்பதுடன், மன அழுத்தத்தை தரும் அந்த சூழ்நிலையை நியாயமாகவும், கட்டுப்பாட்டுடனும் எதிர்கொள்ளத் தயாராவதை உணர்வீர்கள்.

4. நேரத்தை பயன்தரும் வகையில் கையாளுதல்

நீங்கள் ஒத்திப்போட்டு வரும் வேலைகளில் ஏதாவது ஒரு வேலையை தெரிவு செய்து உடனடியாக நடைமுறைப்படுத்துங்கள். உங்களை இழுத்தடித்து வந்த பொறுப்புக்களில் ஒன்றையேனும் நிறைவேற்றிய திருப்தி, உங்களுக்கு புதிய சக்தியையும் உற்சாகத்தையும் தருவதுடன், உங்கள் மன அழுத்தத்தை குறைக்கும்.

5. சுத்தமான காற்றை சுவாசியுங்கள்

ஒவ்வொரு நாளும் சில நிமிடங்களேனும் வெளியே வந்து சுத்தமான காற்றை சுவாசியுங்கள்.

6. பசி, உலர்வை தவிருங்கள்

நிறைய திரவ ஆகாரத்தை உட்கொள்வதனால் உலர்வை தவிர்ப்பதுடன், நேரத்துக்கு சிறிய அளவிலேனும் உணவருந்துவதன் மூலம் பசியைத் தவிருங்கள். பசியும், உலர் நிலையும் நீங்கள் உணர்வதற்கு முன்னரே ஒரு ஆக்கிரமிப்பு மனோநிலையையும், மனவிசாரம், கவலையையும் தூண்டும் சக்தி உள்ளவையாக கருதப்படுகிறது.

7. தேகநிலை சோதிப்பு (quick posture check)

இடையிடையே விரைவான ஒரு தேகநிலை சோதிப்பை மேற்கொள்ளுங்கள். தலையையும், தோள்களையும் நேராக நிலை நிறுத்தி, வளைந்திருக்கும், மந்தமான நிலையை தவிருங்கள். வளைந்த நிலையில் தசைகளில் ஏற்படும் இழுவிசை அல்லது இறுக்கமானது மன அழுத்தத்தை கூட்டுகிறது.

8. நாளின் முடிவில் உற்சாகமேற்படுத்தல்

ஒவ்வொரு நாளின் முடிவிலும், உங்களுக்கு உற்சாகம் தரக்கூடிய எதையாவது ஒன்றையாவது, சில நிமிடங்களாவது செய்யுங்கள். எல்லா சிந்தனைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு, சில நிமிட நேர ஓய்வான குளியல், அல்லது அரை மணி நேர அமைதியான வாசிப்பு, அல்லது கண்ணை மூடியபடி சில நிமிடங்களேனும் அமைதியாக இசையை ரசித்தல்... இப்படி எதையாவது செய்யுங்கள். அந்த நேரத்தில் மறுநாள் செய்ய வேண்டிய வேலைகளையோ, அல்லது அன்று நடந்து முடிந்த விடயங்களைப் பற்றியோ யோசிக்காதீர்கள். உங்கள் வேலை பற்றியோ, வீட்டில் செய்ய இருக்கும் வேலைகள் பற்றியோ, குடும்ப பிரச்சனைகள் பற்றியோ, எதைப் பற்றியுமே அந்த சில நிமிடங்களாவது நினைப்பதை தவிர்த்து விடுங்கள்.

அப்படி செய்வீர்களேயானால், அழுத்தம் நிறைந்த அடுத்த நாளைச் சந்திக்க உற்சாகமாக தயாராகி விடுவீர்கள்.

நெடுக்கு சாமி! மேலை இருக்கிற அவ்வளத்தையும் ஒழுங்காய் வாசிச்சனீங்களோ?ஏனெண்டால் உங்களுக்கும் நொடிக்குநொடி வயது கூடிக்கொண்டெல்லே போகுது :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு சாமி! மேலை இருக்கிற அவ்வளத்தையும் ஒழுங்காய் வாசிச்சனீங்களோ?ஏனெண்டால் உங்களுக்கும் நொடிக்குநொடி வயது கூடிக்கொண்டெல்லே போகுது :rolleyes:

இருந்தாலும் இன்னும் நிறைய இருக்குது. :o

உதவிடப் பிரயோசனமான தகவல்கள் எங்களிடம் இருக்கு.. கு.சா. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருந்தாலும் இன்னும் நிறைய இருக்குது. :)

உதவிடப் பிரயோசனமான தகவல்கள் எங்களிடம் இருக்கு.. கு.சா. :)

அதிலை நாலைஞ்சை இஞ்சையும் இழுத்து விடுறது :o போற வழிக்கு புண்ணியம் கிடைக்குமெல்லே :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிலை நாலைஞ்சை இஞ்சையும் இழுத்து விடுறது :o போற வழிக்கு புண்ணியம் கிடைக்குமெல்லே :rolleyes:

சுலபமான வழிசொல்கிறேன்.. தியானமும் யோகமும் மிக நல்லவை..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுலபமான வழிசொல்கிறேன்.. தியானமும் யோகமும் மிக நல்லவை..! :o

நான் யோகாசனம் செய்யேக்க என்ரை மனுசி சீரியல் பாத்து என்னையல்லே வெறுப்பேத்துறாள் பாவி :)

இனி நான் என்ன காட்டுப்பக்கமே யோகசனம் தியானம் செய்ய போறது :rolleyes:

Link to comment
Share on other sites

நெடுக்ஸ் உங்களுடன் வாதம் செய்த உண்மையை மறைப்பதால் எனக்கு எவ்வித லாபமும் இல்லை. ஆனால் எனக்கு அப்படியாக ஞாபகம் இல்லை. அதைத்தான் சொன்னேன். ஆனால் உங்களைப் போலவே வாதம் புரியும் குருவிகளுடன் நன்றாக வாதம் செய்து இருக்கின்றேன். அது நன்றாக ஞாபகம் இருக்கின்றது. :o

உங்களின் கருத்துப்படி கலியாணம் ஆகும் முன் ஆண்கள் எல்லோரும் ரொம்ப நல்லவர்களாக இருக்கின்றார்களா? :rolleyes: கலியாணம் ஆனவுடன் தான் மாறிவிடுகின்றர்களா? ஏன் நெடுக்ஸ் உங்கள் குடும்பத்தில் இருக்கும் பெண்கள் யாருமே உங்கள் குடும்ப ஆண்களை புரிந்து கொள்வதில்லையா? காதலித்த பிறகோ திருமணம் ஆன பிறகோ ஆண்கள் மன அழுத்தத்திற்கு ஆளாவதற்கு முக்கிய காரணம் ஆணாதிக்கம். பெண்கள் தங்களை அண்டியே வாழ வேண்டும் என்றா வெறியில் தான் அப்படி மாறிவிடுகின்றார்கள் என்றா உண்மை பாவம் அப்பாவியான உங்களுக்கு புரியவில்லை போல.

தாயகத்தில் இருக்கும் பெற்றோர்கள் ஒரு மகனையோ மகளையோ வட்டிக்கு பணம் எடுத்து வெளிநாட்டு அனுப்புவதன் நோக்கமே பணம் சம்பாதிக்கத்தான். தனது குடும்ப நிலையை உணர்ந்து தான் அவர்களும் இவ்விடம் வருகின்றார்கள். வந்தவுடன் தான் பெற்றோர்களும் அவர்கள் பாடும் கஷ்டத்தை மறந்து தெருவோரங்களில் கட்டாக்காலிகளாக திரிகின்றார்கள். அங்கும் ஒரு தாயையே குற்றம் சாட்டி எழுதும் கருத்து ரொம்ப நன்றகவே இருக்கின்றது.

ஏன் நெடுக்ஸ் எத்தனை பெண்கள் காதலிக்கின்ற ஆண்களின் மோகப் பேச்சில் மயங்கி அவனுடன் வெளியில் சென்று படும் ஆசிங்கள் எல்லாம் உங்கள் லண்டன் மாநகரில் நடப்பது இல்லையா? பெண்கள் தங்கள் நிலை உணராமட்டார்கள் என்றால் ஏன் இவர்கள் அப்படியான பெண்களை காதலிக்க வேண்டும்? பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கும் மட்டும் பொறுமையுடன் காத்திருக்க வேண்டியது தானே.

.முதலே சொல்லிவிட்டேன் நெடுக்ஸ். நீங்கள் ஒரு குறுகிய வட்டத்திற்குள் நின்று நீங்கள் அவதானித்தவர்களை பற்றி தான் கதைக்கின்றீர்கள். வெளியில் நடப்பவற்றையும் கொஞ்சம் பாருங்கள்.

உங்கள் கருத்துக்களை வாசிக்க சிரிப்பாக இருக்கு. வெளிநாடு வந்து மொழி அறிவின்றி உங்கள் ஆண் இனம் தவிக்குதாம். இங்கு வந்தவுடன் எந்த மதுவாகை சிறந்தது எந்த பாடசாலையில் எந்த பிகர் படிக்குது எங்கு எல்லாம் இரவு விடுதிகள் இருக்கு என்று அறிந்து அவ்விடம் எல்லாம் அலைந்து திரியும் உங்கள் ஆணினம் குடும்ப கஷ்டத்தை மட்டும் நினைக்கையில் மொழி உதைக்குதோ?

இல்லை தெரியமால் தான் கேட்கின்றேன். வெளிநாடுகளுக்கு வந்து எமது உற்றார் உறவினார்கள் எல்லாம் ஆங்கிலமோ மற்றைய மொழியில் சிறிலாங்காவில் இருக்கும்போதே டிப்பிளோமா பட்டம் பெற்று இங்கு வந்து கஷ்டப்படமால் இருந்து எங்களையெல்லாம் இவ்விடம் அழைத்து இருக்கின்றார்கள். ஒரு சாதரணமானவர் வேறொரு நாட்டிற்கு வந்து புதிதாக வாழ்க்கை தொடங்குவது என்பது எவ்வளவு கஷ்டம் என்பது நாமும் எமது அனுபவத்தில் கண்டு இருக்கின்றோம். நாங்கள் ஒன்றும் இங்கையே பிறந்து வளர்ந்து விடவில்லை. நாமும் தாயகத்தில் இருந்து அகதி என்ற போர்வையில் தான் இங்கு வந்து படித்து வேலை செய்கின்றோம்.

விதண்டாவாதங்கள் புரிவது நெடுக்ஸா? ரமாவா? என்று இங்கு கருத்துக்களை வாசிக்கும் எல்லோருக்கும் புரியும்.

இதற்கு மேலும் உங்களுக்கு பதில் கருத்து எழுதினால் சத்தியமாக எனக்கு மன அழுத்தம் வந்துவிடும்.

என்னைப் பொறுத்தவரையில் ஆணோ பெண்ணோ மன அழுத்தத்திற்கு ஆளாகியிருப்பின் தங்களுக்குள்ளையே பிரச்சனைகளை மூடி வைக்கமால் தகுந்த உதவியை நாடுவதே நன்று. மன அழுத்தம் என்பது சிறு சிறு காரணங்களுக்காக உண்டாயிருப்பினும் ஒரு காலகட்டத்தில் அக்காரணங்களையே நீங்கள் நினைத்து பாா்க்க முடியாமால் ஆக்கிவிடும். புலம்பெயர் நாடுகளில் நிறைய உதவிகள் இலவச முறையில் பெற்றுக் கொள்ள முடியும்.

ஆகவே ஆணா பெண்ணா என்று பட்டிமன்றம் வைப்பதை விட்டு உபயோகமான அந்நாடுகளுக்குரிய தகவல்களை இணைத்தால் வாசிப்பவர்கள் பயனடைவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதலித்த பிறகோ திருமணம் ஆன பிறகோ ஆண்கள் மன அழுத்தத்திற்கு ஆளாவதற்கு முக்கிய காரணம் ஆணாதிக்கம். பெண்கள் தங்களை அண்டியே வாழ வேண்டும் என்றா வெறியில் தான் அப்படி மாறிவிடுகின்றார்கள் என்றா உண்மை பாவம் அப்பாவியான உங்களுக்கு புரியவில்லை போல.

தாயகத்தில் இருக்கும் பெற்றோர்கள் ஒரு மகனையோ மகளையோ வட்டிக்கு பணம் எடுத்து வெளிநாட்டு அனுப்புவதன் நோக்கமே பணம் சம்பாதிக்கத்தான். தனது குடும்ப நிலையை உணர்ந்து தான் அவர்களும் இவ்விடம் வருகின்றார்கள். வந்தவுடன் தான் பெற்றோர்களும் அவர்கள் பாடும் கஷ்டத்தை மறந்து தெருவோரங்களில் கட்டாக்காலிகளாக திரிகின்றார்கள். அங்கும் ஒரு தாயையே குற்றம் சாட்டி எழுதும் கருத்து ரொம்ப நன்றகவே இருக்கின்றது.

ஏன் நெடுக்ஸ் எத்தனை பெண்கள் காதலிக்கின்ற ஆண்களின் மோகப் பேச்சில் மயங்கி அவனுடன் வெளியில் சென்று படும் ஆசிங்கள் எல்லாம் உங்கள் லண்டன் மாநகரில் நடப்பது இல்லையா? பெண்கள் தங்கள் நிலை உணராமட்டார்கள் என்றால் ஏன் இவர்கள் அப்படியான பெண்களை காதலிக்க வேண்டும்? பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கும் மட்டும் பொறுமையுடன் காத்திருக்க வேண்டியது தானே.

முதலே சொல்லிவிட்டேன் நெடுக்ஸ். நீங்கள் ஒரு குறுகிய வட்டத்திற்குள் நின்று நீங்கள் அவதானித்தவர்களை பற்றி தான் கதைக்கின்றீர்கள். வெளியில் நடப்பவற்றையும் கொஞ்சம் பாருங்கள்.

உங்கள் கருத்துக்களை வாசிக்க சிரிப்பாக இருக்கு. வெளிநாடு வந்து மொழி அறிவின்றி உங்கள் ஆண் இனம் தவிக்குதாம். இங்கு வந்தவுடன் எந்த மதுவாகை சிறந்தது எந்த பாடசாலையில் எந்த பிகர் படிக்குது எங்கு எல்லாம் இரவு விடுதிகள் இருக்கு என்று அறிந்து அவ்விடம் எல்லாம் அலைந்து திரியும் உங்கள் ஆணினம் குடும்ப கஷ்டத்தை மட்டும் நினைக்கையில் மொழி உதைக்குதோ?

இல்லை தெரியமால் தான் கேட்கின்றேன். வெளிநாடுகளுக்கு வந்து எமது உற்றார் உறவினார்கள் எல்லாம் ஆங்கிலமோ மற்றைய மொழியில் சிறிலாங்காவில் இருக்கும்போதே டிப்பிளோமா பட்டம் பெற்று இங்கு வந்து கஷ்டப்படமால் இருந்து எங்களையெல்லாம் இவ்விடம் அழைத்து இருக்கின்றார்கள். ஒரு சாதரணமானவர் வேறொரு நாட்டிற்கு வந்து புதிதாக வாழ்க்கை தொடங்குவது என்பது எவ்வளவு கஷ்டம் என்பது நாமும் எமது அனுபவத்தில் கண்டு இருக்கின்றோம். நாங்கள் ஒன்றும் இங்கையே பிறந்து வளர்ந்து விடவில்லை. நாமும் தாயகத்தில் இருந்து அகதி என்ற போர்வையில் தான் இங்கு வந்து படித்து வேலை செய்கின்றோம்.

விதண்டாவாதங்கள் புரிவது நெடுக்ஸா? ரமாவா? என்று இங்கு கருத்துக்களை வாசிக்கும் எல்லோருக்கும் புரியும்.

இதற்கு மேலும் உங்களுக்கு பதில் கருத்து எழுதினால் சத்தியமாக எனக்கு மன அழுத்தம் வந்துவிடும்.

என்னைப் பொறுத்தவரையில் ஆணோ பெண்ணோ மன அழுத்தத்திற்கு ஆளாகியிருப்பின் தங்களுக்குள்ளையே பிரச்சனைகளை மூடி வைக்கமால் தகுந்த உதவியை நாடுவதே நன்று. மன அழுத்தம் என்பது சிறு சிறு காரணங்களுக்காக உண்டாயிருப்பினும் ஒரு காலகட்டத்தில் அக்காரணங்களையே நீங்கள் நினைத்து பாா்க்க முடியாமால் ஆக்கிவிடும். புலம்பெயர் நாடுகளில் நிறைய உதவிகள் இலவச முறையில் பெற்றுக் கொள்ள முடியும்.

ஆகவே ஆணா பெண்ணா என்று பட்டிமன்றம் வைப்பதை விட்டு உபயோகமான அந்நாடுகளுக்குரிய தகவல்களை இணைத்தால் வாசிப்பவர்கள் பயனடைவர்கள்.

நீங்களும் மூக்கி என்பவரும் என்னுடன் செய்த வாதங்கள் இருக்கின்றன.

இன்றைய ஆண்களின் மன அழுத்தத்துக்கு பெண்ணாதிக்கமும்.. தான் என்ற பெண்களின் சுயநலப் போக்கும்.. அன்பு செலுத்தா மனித இயல்பற்ற பெண்களின் நடத்தையும்.. கண்டவனோடும் கண்டதும் செய்யலாம் என்ற மிருகத்தனமான சிந்தனையும் முக்கியமானவை.. என்பதை உலகமே அறியும்..!

இப்போ எல்லாம் பிரிட்டனில் உள்ள பெண்கள்.. கணவனை விட்டிட்டு.. தனிய இருந்தால்.. கூடின அரச உதவிப்பணம் கிடைக்கும் என்பதற்காகவே கணவன் மீது அன்பு செலுத்துவதை எல்லாம் பொருட்டாக எடுப்பதில்லை. அண்மையில் கூட பிரிட்டன்.. நீடித்த குடும்ப வாழ்வை ஊக்குவிக்க குடும்பமாக வாழ்பவர்களுக்கு அதிகரித்த உதவிச் சலுகைகள் அறிவிப்பது குறித்து ஆராய்ந்திருக்கிறது. ஏன் பெற்ற பிள்ளைகளைக் கூட தங்களின் சுயநலத்துக்காக வீதியில் அலைய விட்டிட்டு.. பல ஆண்களின் பின்னால் உடல் சுகம்.. பொருட்சுகம் தேடும் நிலையில் தான் பெண்கள். அதனால் குழந்தைகளை பராமரிக்க தமக்குள்ள இயற்கைத்தனமான பொறுப்பைக் கூட இன்றைய பெண்கள் சுயநலத்தால் இழந்து மன அழுத்தத்தோடு வாழ முனைகின்றனர். அதற்கு அவர்களின் தவறான சிந்தனைப் போக்கே காரணம் அன்றி.. ஆண்கள் அல்ல..!

நீங்கள் வசதியாக பெண்களின் பக்கம் உள்ள அவர்கள் செய்யும் அனைத்துக் கோமாளித்தனங்களையும் மனித சிந்தனையற்ற மனிதாபிமானமற்ற அன்பற்ற செயற்பாடுகளையும் மறைத்துவிட்டு நெடுக்ஸ்.. நீங்கள் அரை வட்டத்துக்க நிக்கிறீங்க... நாங்க முழுவட்டத்துக்க நிற்கிறம் என்பதில் எந்த அர்த்தமும் இல்லை.

நீங்கள் தான் உங்களையே மட்டும் மையப்படுத்தி கருத்து எழுதுகிறீர்கள். நான் என்னை மட்டும் மையப்படுத்திக் கொண்டால் இங்கு கருத்தெழுத ஏதும் இருக்காது. என்னைப் பொறுத்தவரை எனக்கு பெண்களால் எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனால் நான் சார்ந்த சமூகம் காணும் பாதிப்புப் பெரியது..! அதையேதான் இங்கு சொல்லிக் கொண்டிருக்கிறேன்..!

ஒரு இளைஞனை வட்டிக்கு காசு எடுத்து வெளிநாட்டுக்கு காசுழைக்க அனுப்பும் தாய்.. அந்த இளைஞன் தனிமைப்பட்ட சூழலில் உணரக் கூடிய உணர்வுகள்.. மற்றும் அவனுக்கான அன்பு அரவணைப்பு.. அவனுக்கான வழிகாட்டல் பற்றி சிந்திக்கிறாளா..???! இதையே ஒரு பெண் பிள்ளையை அனுப்புவது என்றால்.. அவளின் கற்புத்தொடங்கி.. அவள் உடல் அலுப்பு வரை கவனம் செலுத்துகிறார்கள். ஆண் அடுத்தவைக்காக உழைக்கப் பிறந்தவன். பெண் உழைத்தாலும் தன்ர சுயநலத்தை மட்டும் கவனிக்கப் பிறந்தவள்.. இதுதான் உங்கள் நியாயமான கருத்தா..??!

ஈழத்தில் இருந்து எத்தனை தாய்மார் தங்கள் பெண் பிள்ளைகளை வட்டிக்கு காசெடுத்து வெளிநாட்டுக்கு உழைக்க அனுப்பினர்..???! வந்த தகப்பனோ.. அண்ணணோ.. தம்பியோ.. மகனோ தனிமைச் சூழலுக்குள் சிக்கித் தவித்து.. பணம் புரட்டி.. உடலால் வருந்தி.. பட்ட துன்பங்கள் அறிவார்களா.. அந்தப் பெண்கள். ஊரில் அவர்கள் செய்யும் தான்தோன்றித்தனமான செலவுகளே இதைச் சொல்கிறது.

நானே கண்டிருக்கிறேன்.. கொழும்பில் மாம்பழம் வாங்குவம் என்று போனால்.. எம்மவர்கள் ஆட்டோவில் வந்து 20 ரூபா மாம்பழத்துக்கு 50 ரூபா கொடுத்து வாங்கிப் போகிறார்கள். 5 ரூபாவில் பயணிக்கும் தூரத்தை 50 ரூபா செலவில் பயணிக்கிறார்கள். இது என்னைச் சுற்றிய நெருங்கிய உறவுகளிடத்தில் அல்ல நடக்கிறது. நான் வாழும் சமூகத்தில் நடக்கிறது.

வெளிநாட்டுக்கு வாருங்கள்.. பெண்கள் அணிந்திருக்கும் நகைகளைப் பாருங்கள். இன்று தங்கத்தின் விலை 120 பவுண். ஒவ்வொரு பெண்ணின் கழுத்திலும் கையிலும் காலிலும் 50 பவுண் நகை தொங்குகிறது. இத்தனைக்கு இவர்கள் வேலைக்குக் கூட ஒழுங்காப் போறதில்லை. ஒரு கோவில் திருவிழாவுக்கு போங்கள். அங்கு உங்கள் பெண்ணினம் அணிந்து கொண்டிருக்கும் ஆடம்பரக் கோலத்தை காணுங்கள். உழைக்கும் பெண்கள் கூட இத்தனைக்கு அணியமாட்டார்கள்..! உயர் பதவியில் உள்ள வெள்ளையினப் பெண்கள்.. ஒரு வீடு வாங்கவே துடியாய் துடிக்கிறார்கள்.. ஆனால்.. எம் பெண்கள்..???! இதெல்லாம் யார் உழைப்பில் வருகிறது. இவர்களா ஆணின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவனுக்கு நகையல்ல.. அன்பும்.. அரவணைப்புமே தான் காட்ட வேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்போதுதான் அவனும் அன்பைக் காட்டுவான் என்று நினைக்கிறார்கள். இல்லையே..!

வெளிநாட்டுக்குப் போய்.. காரில் போகலாம்.. நகை போடலாம்.. அப்பப்ப தேவைக்கு குட்டி போடலாம்.. வயிறாற உண்ணலாம்.. என்றுதான் அநேகம் பெண்கள் இங்கு வருகிறார்கள்.

எனி வாற பெண்களில் அவை இளம் பெண்கள் என்றால்.. பள்ளி போவார்கள்.. அங்கு காணாததைக் கண்டவுடன.. தலை முடியை நீட்டுவார்கள்.. பறக்க விடுவார்கள்.. பின்னர் புதர்களுக்குள்ளும்.. கார்களுக்குள்ளும்.. பீசா கட்களுக்குள்ளும்... குச்சுமுச்சு மூட்டி விளையாடுவார்கள்..! சும்மா நிற்கிற பையனைக் கூட கையைப் பிடித்து இழுத்துச் சென்று தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய நினைக்கிற இளம் பெண்களே இன்று அதிகம். உசுப்பேத்தி ஒரு ஆணைக் கெடுத்துவிட்டு... அலுத்து விட்டதும்.. தூக்கி எறிந்துவிட்டு இன்னொருத்தனிடம் அதே விளையாட்டைத் தொடரும் அயோக்கியத்தனமான நிலைதான் இன்றைய புலம்பெயர் இளம் பெண்களிடம் அதிகரித்திருக்கிறது..! இல்லை என்று உங்களால் சாதிக்க முடியுமா..???! அல்லது அவைதான் உங்கள் பார்வையில் பெண் விடுதலையோ.. ஆணாதிக்கத்துக்கு எதிரான நடவடிக்கையோ..??! :):o

இவர்களால்.. எப்படி மன அமைதி கிடைக்கும். அவர்களுக்கும் மன அமைதியில்லை.. அவர்களைச் சார்ந்தோருக்கும் மன அமைதியில்லை.

அதுமட்டுமா இன்றைய வீதிவன்முறைகளில் பெரும்பாலானவைக்குக் காரணமே பெண்கள் தான். ஒருவனோடு சுற்றித் திரிவது.. அனுபவிக்கும் மட்டும் அனுபவிச்சிட்டு.. அவனிடம் குறைகண்டுவிட்டு.. இன்னொருத்தன் கூட தொத்திக்கிறது. பின்னர் சண்டைகளை மூட்டி விடுறது. ஆண்கள் அடிபட்டு... குத்துப்பட்டு.. அழிய வேண்டியதை வேடிக்கை பார்க்க வேண்டியது. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் யார். இந்தப் பரதேசிகளாக அலையும் பெண்களே..! இல்லை என்பீர்களா..??! இன்று இந்தப் பரதேசிப் பெண்களின் நிலையே உலகில் அதிகரித்து வருகிறது. அதனால் தான்.. மன அழுத்தங்களும் அதிகரித்து வருகிறது.

ஒரு குடும்ப வாழ்வு சிறக்க வேண்டின்.. ஒரு பெண்.. உண்மையான தாய்மை உணர்வோடு.. அனைவர் மீதும் அன்பை.. பாசத்தை.. நேசத்தை.. பரிவை.. அக்கறையைக் காட்ட வேண்டும். அப்போதுதான்.. அந்த உணர்வுகளுக்கான அர்த்தம் எல்லோராலும் உணரப்படும். அவர்களும் பிரதிபலனாக அவற்றைக் காட்ட நினைப்பர். ஒரு ஆண் எவ்வளவுதான் அன்பைக் காட்டினாலும்.. அதை சந்தேகிக்கிற நிலையில் கூட பெண்கள் இருக்கிறார்கள். ஒரு ஆண் மனிதாபிமானமாகக் கூட ஒரு உதவியைச் செய்தால்.. இவன் எதுக்கு செய்யுறான்.. ஒருவேளை எனது உடல் மீது ஆசை வைக்கிறானோ.. இல்ல எனது வேலை.. உழைப்பு மீது ஆசை வைக்கிறானோ.. என்று நினைக்கும் நிலைதான் இன்று பெண்கள் இடத்தில். இது எப்படி புரிந்துணர்வுக்கு இட்டுச் செல்லும்..! அயோக்கியத்தனமான சிந்தனைகள் அவளை மட்டுமன்றி அவளை நாடி வருபவர்களையும் அப்படியே மாற்றும்.

நாம் ஒழுக்கமாக இருக்கனும் என்று நினைத்தால் அதனை எவராலும் தகர்க்க முடியாது. அதற்குரிய வகையில் நாம் நடந்து கொள்ள வேண்டும். அதைச் செய்யத் தவறிவிட்டு.. அடுத்தவன் மீது சந்தேகப் பார்வைகளை வீசுவதும்.. குறைபிடிப்பதும்.. அல்ல.. புரிந்துணர்வு. இன்றைய இளம் பெண்கள் செய்வது மேற்கூறியதையே என்பதை.. உங்கள் வாதத்தில் இருந்து தெளிவாக உணர முடிகிறது. இந்த நிலையில்.. மன அழுத்தம் எகிறாமல். பணியுமா.. உலகில் மனிதரிடத்தில்..??!

ஏன் இந்தப் பிரச்சனைகள் இன்றைய நவீன உலகில் அதிகரித்து வருகின்றன.. ஏன் அன்றைய சமூகங்களில் இந்தளவுக்கு இவை இருக்கவில்லை..! இதற்கு முதற்காரணம்.. பெண்களின் சமூக.. குடும்பப் பொறுப்பற்ற நடத்தைகள்.. அதிகரித்திருப்பதே. அதை ஆணாதிக்கக்கு எதிரான பெண் விடுதலை என்ற பெயரில் அவர்கள் செய்வதாகச் சொல்லிக் கொள்ளலாம்.. ஆனால் அவர்கள் அப்படிச் சொல்லிக் கொண்டே பெண்ணாதிக்க.. நிலையை சமூகத்தில் மனிதாபிமான எல்லைக்கு அப்பால் நிலை நிறுத்த விளைகின்றனர்..! இது வாதமல்ல.. இதுவே இன்றைய யதார்த்தம். :):rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் யோகாசனம் செய்யேக்க என்ரை மனுசி சீரியல் பாத்து என்னையல்லே வெறுப்பேத்துறாள் பாவி :)

இனி நான் என்ன காட்டுப்பக்கமே யோகசனம் தியானம் செய்ய போறது :rolleyes:

அதையேன் கேட்கிறீங்க.. மனிசன்காரன் வேலையால களைச்சு விழுந்து வர.. மனைவிமார் சீரியலில் சித்திரா கணவனை கைவிட்டுவிட்டதால்.. அவன் படும் வேதனைக்காக அழுது கொண்டிருப்பார்கள். சொந்தக் கணவனுக்கு உதவி செய்யுற மனப்பான்மை கூட அங்கு எழுவதில்லை பல பெண்களுக்கு. சொந்தக் கணவனின் துயருக்காக அழ வேண்டாம்.. புரிஞ்சு கொள்ளுங்கள் என்றால் அது பெண் விடுதலைக்கு இழுக்காம்.. அதை வெறுப்பார்களாம்..! :):o

ஒரு வீட்டில்.. இரண்டு மூன்று பெண்கள். சன் ரீவியில்... சிவசக்தி என்றொரு நாடகம் போகிறதாம். அதில் ஒரு பெண் கணவனை இழந்ததால் குழந்தைகளை பராமரிக்க முடியாமல் தத்துக் கொடுத்தாளாம். அதற்காக சீரியல் பார்த்த பெண்கள் அழுது கொட்டினார்களாம்.

அடுத்த நாள் சீரியல் தொடங்கும் வரை.. தொலைபேசியில் சீரியல் சம்பவங்கள் தொடர்பில்.. ஒரு மணி நேர சம்பாசணை செய்கிறார்கள் என்றால் பாருங்களேன். அதே வீட்டில்.. அவர்களின் சொந்த மகள் கணவனையோ அல்லது காதலனையோ பிரிந்து வாழ்ந்து கொண்டிருப்பாள். அவளுக்காக அழக் கூட அவர்களுக்கு நேரம் இருக்காது..! ஏன்.. சொந்த மண்ணில் போர் நிகழ்கிறது.. அந்த மக்களுக்கு உதவ வேண்டும் என்று ஒரு சொல் பேசியது கூடக் கிடையாது.. ஆனால் சீரியலில் தத்துக் கொடுக்கும் பிள்ளைக்கு தாங்கள் என்றால் உதவுவினமாம்.. என்று கதையளப்புகள். என்னே வேடிக்கை மனிதர்களாகி இருக்கிறார்கள்.. பெண்கள்.

பெண்கள் உலகமே நரகமடா என்ற கவிஞனின் வார்த்தைகள் உண்மையோ என்ற அளவுக்கு புலம்பெயர் நாடுகளில் எம் பெண்கள் நடந்து கொள்கிறார்கள். தங்களின் சுயத்தைக் கூட மறந்து...! :):)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லோருமே இப்படி என்று சொல்லுவது சரியில்லை தாத்தா??? :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.