லிஸ்ட் எல்லாம் தேவையில்லை Fifty Shades of Grey (3 புத்தகங்கள்) வாசித்தால் அல்லது அதை படமாக கூட எடுத்துள்ளார்கள். அதைப்பார்த்தால் கூட இந்த மாதிரியான முறைகள் உள்ளது தெரியும்.
பிகு: சில வருடங்களுக்கு முன் யாழ்ப்பாண ஆஸ்பத்திரியில் இப்படி ஒரு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணைபற்றி அறிந்து கொண்டேன். மிகவும் மனவருத்தத்தையும் கோபத்தையும் வரவழைத்த சம்பவம். சுயவிருப்பின்றி, கணவன் என்ற காரணத்திற்காக பொறுத்துக்கொண்ட பெண்ணிற்காக பரிதாபம் கொள்வதா? பாலியல் கல்வியை, உளவியலை பேச தயங்கும் சமூகமாக இன்றமும் இருப்பதை நினைத்து வேதனைப்படுவதா?
பஸ் தரிப்பு நிலைய புனரமைப்பு பணிகளுக்கு பில்லியன் கணக்கில் காசு புரழுதென்றால் நம்பமுடியுமா? சரி இவர் யார் இது எல்லாம் செய்வதற்கு? மந்திரியா நாடாளுமன்றத்தில் பிரதிநிதியா எங்கோ ஊழல் நடக்கப் போவது என்பது மட்டும் உறுதி.
மன்னிக்கவும் உங்களில் அநேகர் BDSM, S&M இதர உறவு முறைகளை பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை அல்லது இங்கே எழுத தயங்குகிறீர்கள் என நினக்கிறேன்.
இது ஒருவகை பாலியல் வாழ்க்கை முறை. டொம் (ஆண் ஆதிக்கம் செய்வது), டொமே (பெண் ஆதிக்கம் செய்வது) சப்மிசிவ் (அடங்கும் நிலையினர்), சிலேவ் (அடிமைகள்), சிலேவ் ஓனர் - என பலவகைகள் உண்டு. தவிர கையிற்றால் கட்டுவது, முதல் பலவகை துன்புறுத்தல்களிலும், துன்புறுத்தபடுவதிலும் இன்பம் அடையும் வகையினரும் உளனர்.
இந்த லிஸ்டை வாசித்தீர்கள் என்றால் தலை கிறுகிறுக்கும், பெல்டால் விளாசினால், ஊசியால் குத்தினால் மட்டுமே எனக்குத் திருப்தி என்பது முதல் குழந்தைகள் கட்டும் நேப்பியை கட்டி என்னை குழந்தை போல் சீராட்டினாலே எனக்குத் திருப்தி என்போர் வரை ஒவ்வொரு வகை.
கழுத்தை நெரித்தல், மூச்சு திணறி மயங்கும் நிலைவரை போதல் இதில் இன்னொரு வகை.
இவை எல்லாம் இருவரினதும் சுயவிருப்பிலேயே நடக்கும். சேவ் வேட்ஸ் எனும் முறை உண்டு. ஒருவர் எல்லையைதாண்டினால், அந்த சொல்லை பாவித்தால் உடனே நிறுத்த வேண்டும். ( சேவ் வேர்ட்ஸ் தேவையில்லை, என்னை நீ என்னவும் செய்யலாம் என்ற நிலையில் உள்ளோரும் உள்ளனர்).
இது இணைய பாலியல் தள பரவலால் வந்ததா? என்றால் இல்லை. முன்பே இருந்தது. இவற்றிற்கென பிரத்தியேக கிளப் எல்லாம் கூட இருக்கிறது.
ஆனால் எல்லாவற்றையும் ஜனரஞ்சக படுத்தியது போல இதையும் இணையம் ஜனரஞ்சக படுத்திவிட்டது.
அதை பார்த்து, ஆர்வப்பட்டு இதில் இறங்கிவிட்டு, அல்லது என் குழாமில் உள்ளவர்கள் செய்கிறார்கள் என தாமும் இறங்கிவிட்டு, அசெளகரியப்படுபவர்களே இந்த கட்டுரையில் எழுதப்படுபவர்கள்.
பிகு: அண்மையில் ஒரு இளம் இங்கிலாந்து பெண் அவர் நியூசிலாந்தில் சந்தித்த இப்படியான ஒரு வன்-துணையால் கழுத்தை நெருக்கி கொல்லப்பட்டார். அது ஒரு கொலை என தீர்ப்பாகியது.
கரணம் தப்பினால் மரணம் -ஆனால் அந்த திரில்தான் சிலருக்கு பிடிக்கிறது.