• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
thamilvanan

கொஞ்சம் சிரிங்க

Recommended Posts

சர்தார்ஜி : (முகம் பார்க்கும் கண்ணாடியை வைத்துக் கொண்டு) இந்த "முகம்" நான் அடிக்கடி பாக்கறேன், ஆனா யாருன்னுதான் தெரிய மாட்டேங்குது

சர்தார்ஜி 2 (கண்ணாடியை அவரிடம் இருந்து பிடுங்கி பார்த்து விட்டு) : சீ இது கூடவா தெரியல்ல. அது நான் தான். :P

Share this post


Link to post
Share on other sites

ஒருவர்: இந்த சீசன்ல நிறைய கல்யாணத் துக்கு போயிட்டு வந்திருப்பீங்க போலிருக்கே?

மற்றவர்: எதை வச்சு இவ்வளவு சரியாகச் சொன்னீங்க?

ஒருவர்: உங்க வீட்டு வாசல்ல கிடக்கிற பல ஜோடி புது செருப்புக்களை வச்சுத்தான்!

Share this post


Link to post
Share on other sites

அவர்: உனக்கும் அந்த ஓட்டல் முதலாளிக்கும் பத்து வருஷகால நட்பு விரிசல் விழாமல் இருக்குதே... என்ன காரணம்?

இவர்: அவர் ஓட்டலில் நான் சாப்பிடாமல் இருக்கிறதுதான்!

Share this post


Link to post
Share on other sites

அந்த காரிலை வந்து கழுகுபிடிக்கிறது அவற்ரை மச்சான் டங் ஊரிலை கள்ளகோழி பிடிச்சவர் இப்ப வசதி வந்ததாலை காரிலை வந்து கழுகு பிடிக்கிறார் :P

என்னவோய்ய் சைக்கிள் காப்பில லொறி ஓட்டுறமாதிரி இருக்கு.. :evil: அரசியல் வாதிகள் எண்டா அப்படித்தான்.. அரசியல் வாதி ஆகிறதுக்கு (இந்தியா, இலங்கை, பாகிஸ்த்தான்) களவு, கொலை, மேலும் பல அடிப்படை காரணங்கள்... :idea: :wink:

Share this post


Link to post
Share on other sites

பெண் 1: "உன் மாமியாரை 'பட்டாசு வெடிக்கறதுக்கு வாங்க அத்தை'னு ரொம்பவும் பணிவா கூப்பிடுறியேஇ என்ன விஷயம்?"

பெண் 2: "நான் வெச்சிருக்கிறது பட்டாசு இல்லைஇ நிஜமான அணுகுண்டு!"

Share this post


Link to post
Share on other sites

மாமா: "மாப்ளே போன தீபாவளிக்கு தங்கச் சங்கிலி வாங்கித் தந்தேன். இந்தத் தீபாவளிக்கு உங்களுக்கு என்ன வேணும்?"

:D

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

பட்டணத்தைப் பார்க்க பட்டிக்காட்டு பெருசு ஒண்ணு வந்திருந்தது. லிஃப்ட் வசதியுள்ள ஒர பெரிய கட்டிடத்தைப் பார்த்து, அப்படியே மலைச்சுப் போய் நின்னது.

ஒரு வயதான அம்மா, குடையை மடக்கி எடுத்துட்டு, லிஃப்டில் ஏறி மேலே போனதை அது பார்த்தது. கொஞ்ச நேரத்துல லிஃப்ட் கீழே வந்தது. அதிலிருந்து 18 வயது பெண் ஒரத்தி கையில மடித்தக் குடையோட வெளியே இறங்கி வந்தாங்க.

உடனே பட்டிக்காட்டுப் பெருசு, ஓஹோ... கிழவிகளை இந்த மிஷினில் ஏற்றினால், குமரிகளாக மாற்றி விடும்போலத் தெரியுதே. இது முன்னமேயே தெரியாமப் போயுடுச்சே. தெரிஞ்சிருந்தா சம்சாரத்தையும் அழைச்சிட்டு வந்திருக்கலாமேன்னு ஜொள்ளு விட்டுச்சாம்.

:D:D:D

Share this post


Link to post
Share on other sites

சர்தார்ஜி : (முகம் பார்க்கும் கண்ணாடியை வைத்துக் கொண்டு) இந்த "முகம்" நான் அடிக்கடி பாக்கறேன், ஆனா யாருன்னுதான் தெரிய மாட்டேங்குது

சர்தார்ஜி 2 (கண்ணாடியை அவரிடம் இருந்து பிடுங்கி பார்த்து விட்டு) : சீ இது கூடவா தெரியல்ல. அது நான் தான். :P

:D:D:D

Share this post


Link to post
Share on other sites

ரொம்ப லொள்ளுப்பா.. சின்னாச்சியோடை சின்னப்பு போக போறார் அங்கை.. அல்லா சின்னப்பு தான் அந்த பெரிசோ,,,,,

பட்டணத்தைப் பார்க்க பட்டிக்காட்டு பெருசு ஒண்ணு வந்திருந்தது. லிஃப்ட் வசதியுள்ள ஒர பெரிய கட்டிடத்தைப் பார்த்து, அப்படியே மலைச்சுப் போய் நின்னது.

ஒரு வயதான அம்மா, குடையை மடக்கி எடுத்துட்டு, லிஃப்டில் ஏறி மேலே போனதை அது பார்த்தது. கொஞ்ச நேரத்துல லிஃப்ட் கீழே வந்தது. அதிலிருந்து 18 வயது பெண் ஒரத்தி கையில மடித்தக் குடையோட வெளியே இறங்கி வந்தாங்க.

உடனே பட்டிக்காட்டுப் பெருசு, ஓஹோ... கிழவிகளை இந்த மிஷினில் ஏற்றினால், குமரிகளாக மாற்றி விடும்போலத் தெரியுதே. இது முன்னமேயே தெரியாமப் போயுடுச்சே. தெரிஞ்சிருந்தா சம்சாரத்தையும் அழைச்சிட்டு வந்திருக்கலாமேன்னு ஜொள்ளு விட்டுச்சாம்.

Share this post


Link to post
Share on other sites

என்ன நக்கலா கவிதன் அண்ணா :evil: சின்னாச்சிதான் சின்னப்புவை பொறுத்தவரை உலக அழகியாம் ( ஆனா சின்னப்புவுக்கு கண் கொஞ்சம் நல்லாத்தெரியாது) :D:D:D

Share this post


Link to post
Share on other sites

ஆனா சின்னப்புவுக்கு கண் கொஞ்சம் நல்லாத்தெரியாது)

நக்கலா நித்தி.. சின்னாச்சி அழகு தான். நம்மட ஆச்சியாச்சே :wink:

Share this post


Link to post
Share on other sites

கணவன் : ஹலோ, பார்வதியா?

மனைவி : ஆமாங்க! நான் தான் பேசறேன். சரி என்ன விஷயம்னு சொல்லுங்க!

கணவன் : நாசமா போச்சு! நீ இன்னுமா சினிமாவுக்கு போகலை. நீ போன பிறகு வீட்டுக்கு வந்து கொஞ்ச நேரம் நிம்மதியா இருக்கலாம்னு பார்த்தேன்.

Share this post


Link to post
Share on other sites

சுரேஷ் : பிறந்த நாள் அன்றைக்கு குழந்தைய தலைவர்கிட்டே கொடுத்து ஆசீர்வாதம் பண்ணச் சொன்னேன்.

ரமேஷ் : ஆங்....அப்புறம்...?

சுரேஷ் : வீட்டுக்கு வந்து தொட்டில்ல படுக்கப் போட்ட குழந்தை எழுந்திருக்கவே மாட்டேங்குது!

Share this post


Link to post
Share on other sites
:D :P :D

Share this post


Link to post
Share on other sites

பெரியகட்டிலாப் போட்டால் சிலவேளை எழுந்திருக்கும்

அடுத்ததிற்கு மாற :D :P :D

Share this post


Link to post
Share on other sites

சினிமா தியேட்டருக்கும் ஆபரேஷன் தியேட்டருக்கும் என்ன வித்தியாசம் ?

சினிமா தியேட்டருல டிக்கெட் வாங்கிண்டு உள்ள போகணும், ஆபரேஷன் தியேட்டருல உள்ள போய் டிக்கெட் வாங்கணும் !

Share this post


Link to post
Share on other sites
:D :D :D

Share this post


Link to post
Share on other sites

நபர் 1: எப்பா அந்த குரங்கு என்னமா குட்டிகரணம் போடுது..

நபர் 2: அதில் என்னப்பா பெரிய அதிசயம்..இங்கப் பாரு ஒரு குரங்கு என்னமா குறுஞ்செய்தி படிக்குது... :wink: :D

Share this post


Link to post
Share on other sites

:roll:

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • யாழ் மத்திய கல்லூரிக்கும் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் இடையிலான வருடாந்த கிறிக்கற் போட்டியில், ஒரு இன்னிங்ஸ்  4 விக்கற்றுகள் மற்றும் 130 மேலதிக ஓட்டங்களால் யாழ் மத்திய கல்லூரி வெற்றியீட்டியது.. நாணயச் சுழற்சியில் துடுப்பெடுத்தாடலை தெரிவு செய்த சென். பற்றிக்ஸ் அணியினர் 40 ஓவர்களில் சகல விக்கற்றுகளையும் இழந்து 78 ஓட்டங்களை பெற்றிருந்தனர். அணி சார்பாக விளையாடிய வீரர் அருள்ராஜ் அதிகப்படியாக 21 ஓட்டங்களை பெற்றிருந்தார். களத்தடுப்பில் இருந்த மத்திய கல்லூரி அணியின் சார்பில் விதுசனின் பந்து வீச்சில் 4 விக்கற்றுகளையும் இயலரசனிடம்  3 விக்கற்றுகளையும் நிதுசன் மற்றும் வியாஸ்காந்த்திடம் தலா  ஒவொவொரு விக்கற்றுகளையும் இழந்திருந்தனர்.   பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மத்திய கல்லூரி 68 ஒவர்களில் 6 விக்கற் இழப்பிற்கு 308 ஓட்டங்களைப் பெற்று முதலாவது இன்னிங்ஸ்சை இடை நிறுத்தினர்.அணியின் சார்பாக துடுப்பெடுத்தாடிய சஞ்சயன் 105 ஓட்டங்களையும்  அணியின் தலைவர் வியாஸ்காந்த் ஆட்டம் இழக்காமல் 100 ஓட்டங்களையும் இயலரசன் 45 மற்றும் நிதுசன் 27 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.   இரண்டாவது இன்னிங்ஸ்சில் துடுப்பெடுத்தாடிய சென் பற்றிக்ஸ் கல்லூரி 35 ஓவர்கள் 5 பந்துகளில் சகல விக்கட்டுகளையும் இழந்து 100 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டனர்.   முடிவில் யாழ் மத்திய கல்லூரி ஒரு இன்னிங்ஸ் 4 விக்கட்டுகள் மற்றும் 130 ஓட்டங்களால் சென். பற்றிக்ஸ் கல்லூரியை தோற்கடித்து வெற்றிவாகை சூடினர்.   வடக்கின் சமர் (Battle of North) என்று வர்ணிக்கப்படும் யாழ் மத்திய கல்லூரிக்கும் யாழ் பரியோவான் (St.Johns)கல்லூரிக்கும் இடையிலான 114வது மாபெரும் துடுப்பாட்ட போட்டிக்குஇன்னும் சில தினங்களே உள்ள நிலையிலும் இவ்வருடம் இரு கல்லூரிகளின் அணியினரும் மிகப் பலமாக இருக்கும் நிலையிலும் வெற்றி தோல்வி பற்றி யாராலும் ஊகிக்க முடியாத நிலை உள்ளதாக கிறிக்கற் விளையாட்டில் ஆர்வமுள்ள மக்களின் கருத்தாக உள்ளது.    
  • 😃உண்மை. தேங்காய் சம்பலுடன் சாப்பிடுவதன் சுவைக்கு இலங்கை பாணுக்கு நிகர் இல்லை.
  • இப்போதெல்லாம் புலம்பெயர்ந்த தமிழர்கள் எதிர்கொள்ளும் பெரிய சவால் அல்லது பிரச்சனை என்றால் அது தம் பிள்ளைகளுக்குத் திருமணம் பேசுவதுதான். பிள்ளைகள் படிக்கும் காலங்களில் ஒருத்தனையும் நிமிர்ந்தும் பார்க்கக் கூடாது. படி படி என்று கூறிவிட்டு அவர்களும் எமது அதீத கட்டுப்பாட்டால் ஆண்பிள்ளைகளுடன் அதிகம் பலரது விட்டுவிட்டு அல்லது பழகினாலும் காதல் கீதல் என்று போகாது ஒதுங்கிவிடுவார்கள். பிள்ளைகள் படித்து முடித்து நல்ல வேலை சம்பளம் என்று சுதந்திரமாய் இருக்கவாரம்பித்ததும் திருமணம் பேச ஆரம்பித்துவிடுவர். சில பிள்ளைகள் மிக அன்பாக வெளியுலகம் அதிகம் தெரியாதவர்களாகவும் புலம்பெயர் நாடுகளில் இருக்கின்றனர். சிலர் தன்னம்பிக்கை அதிகம் உள்ள பிள்ளைகள் பலர் இப்போது ஐரோப்பிய நாடுகளில் முப்பத்தைந்து நாற்பது வயதில் கூட திருமணமாகாது பெற்றோருடன் அல்லது தனியாக வாழ்கின்றனர். இக்காலத்தில் பெண்ணுக்கு அறிவு விருத்தியாவதற்கு முன்னர்  21,24 வயதினுள் காதலித்தவனையோ அல்லது பசியோ திருமணம் செய்து  கொடுத்தால் ஓரளவு சம்மதித்துத் திருமணம் செய்கின்றனர். அதற்கும் நூற்றெட்டுப் பிரச்சனைகள். ஆனால்வயது 25 தாண்டியதும் நல்ல தம் சொந்தக் காலில் நிற்கும் பெண்கள் பலர் திருமணம் செய்ய ஆசை கொள்வதில்லை. குழந்தை பெறுவதற்குத் தானே திருமணம் செய்வது, உங்கள் நாட்டில் தான் கட் டாயம் திருமணம் செய்யவேண்டும், இத்தனை வயதுக்குள் திருமணம் செய்யவேண்டும், எமக்குத் தேவையானபோது செய்துகொள்கிறோம், எமக்குப்பிடித்தவரை நாமே தேடிக்கொள்கிறோம், எங்கள் ஆண்களில் எம்மை வைத்து வாழும் திறன் இல்லாதவர்கள் தான் பலர், பெருந்தமை கொண்டவராக இருக்கவேண்டும், அழகாய்க் கம்பீரமாய் இருக்கவேண்டும், தம்மிலும் படித்தவனாய் இருக்கவேண்டும், கறுப்பு மணமகனாக இருக்கவேண்டும், சொந்த வீடு உள்ளவனாய் இருக்கவேண்டும்  என்பது மட்டுமன்றி இன்னும்பல எதிர்பார்ப்புகளும் விருப்புவெறுப்புக்களும் பெண் பிள்ளைகளுக்கு இருக்கின்றன. ஆண்களைப் பொறுத்தவரை அழகான கொடியிடையுடன் இருக்கும் பெண், நன்றாய் படித்த பெண் -( தான் படிக்காது ரோட்டில் திரிந்தாலும் ), நல்ல சீதனம் தரக்கூடிய பெண், தனக்கு வயது முப்பதோ நாற்பதோ அதுபற்றிப் பிரச்சனையில்லை. பெண் பத்து வயது குறைந்தவராகக்க்கூட இருக்கலாம், ஆடையின் அளவு 12 ஆக இருக்கவேண்டும், நன்றாகப் படித்த பெண்ணென்றாலும் தன்னிலும் அதிகம் சம்பளம் எடுக்கக் கூடாது இப்படிப் பல. ஆணும் பெண்ணும் நன்றாகப் படித்த இருவருக்குத் திருமணம் பேசும்போதும் ஆணின் பெற்றோர் சீதனம் கேட்பதனால், இருவரும் பேசிப்பழகிப் பின்தான் திருமணம் என்று பல திருமணங்கள் குளம்பியுள்ளன. இந்தச் சாதியில், இந்த ஊரவர் வேண்டாம் அல்லது வேண்டும்,  பெண் அணிந்திருந்த ஆடை சரியில்லை, அடக்க ஒடுக்கமாக இல்லை, ஒரே ஒரு பிள்ளை என்றால் பாருங்கோ, ஆணுக்குப் பெண் சகோதரிகள் இருக்கக் கூடாது,  ஆண்கள் நாகரீகமாக அணியவில்லை, பெண் clubbing  போவதனால், ஆண் நண்பர்களுக்கு கன்னதத்தில் முத்தம் கொடுப்பதனால் இப்படிச் சொல்லிக்கொண்டேபோகலாம். பெண்கள் மனதில் ஆணை நம்பி வாழத்தேவையின்றி தன்காலில் நிற்கும் குணமும், புலம்பெயர் நாடுகளில் ஆண்  இன்றித் தனியாக வாழக்கூடிய பாதுகாப்பு உள்ளமை, தானே தனியாகச் சொத்துக்களை வாங்கவும் பிரச்சனைகளைக் கையாளவும் முடியும் என்னும் நம்பிக்கை, ஆண்கள் பெரும்பாலும் பெற்றோரை நம்பி அதாவது ஆடைகள் துவைப்பது முதல் உணவு சமைப்பது வரை தாயை நம்பி இருப்பதனால் பல விடயங்களில் முதிர்வு இன்மை, கலாச்சார மாற்றம், குழந்தைகள் பெறத் தேவை இல்லை என்னும் எண்ணம் இப்படிப்பை பலவும் காரணிகளாக இருந்து பழமுதிர் கண்ணிகளை உருவாக்கியுள்ளன. பாவம் பெற்றோர்கள் கோவில்கோவிலாக ஏறி இறங்கி, தரகர்மார்களுக்கும் திருமண சேவைகளுக்கும் பணம் இறைத்து, பொருத்தம் பார்த்துப் பார்த்து சாதகங்கள் கிழிந்தநிலையில் மாப்பிளை வீட்டார் கூறும் எல்லாவற்றுக்கும் தலையாட்டி முக்கியமாய் இன்னும் மக்களுக்கு ஒண்டும் பாக்கேல்லையோ?? ஏதும் தோஷம் இருக்கோ ?? ஆரையெண்டாலும் கட்டிக்க குடுங்கோ என்னும் அறிவுரை கேட்டு, பிள்ளை எப்பிடியும் கட்டினால் போதும் என்று எல்லாத்தையும் சகிச்சு, யாரையும் உங்களுக்குத் பிடிச்சிருந்தால் சொல்லுங்கோ என்று ஏலாக் கட்டத்தில் சொல்லி பிள்ளைகள் வேற்று நாட்டவரை முடிக்கப்போறன் என்றாலும் வேறுவழியின்றி தம் துக்கத்தையெல்லாம் உள்ளே வைத்துப் பூட்டி திருமணமும் செய்து வைக்கின்றனர். இப்படி நடக்கும் திருமணங்கள் மகிழ்வாகத் தொடர்கின்றனவா ?? என்ற கேள்விக்கான விடை அடுத்த பகுதியில்............ தொடரும் .........  
  • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்...