Jump to content

நல்லூர் கந்தன் கொடியேற்றத்தில் பெருந்திரளான மக்கள் பங்கேற்பு!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலண்டனில் பொங்குதமிழில் ஒன்றுகூடினவர்களே சும்மா யாழ்க் கதையும், ஊர் கதையும் கதைக்கத் தான் போனதாக எண்ணுகின்றபோது, யாழ்ப்பாண மக்கள், சிங்கள இராணுவத்தின் ஆயுதங்களால் மிரட்டப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் எழுந்து கொள் என்று சொல்வது வெறும் விதண்டாவாதமாகும். தவிரவும் இவ்வாறான நிகழ்சசி ஒருங்கிணைப்பார்கள் என்ற சந்தேகத்தின்பேரில் தான் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி அதிபர் உற்பட்ட பலரைச் சிறிலங்கா இராணுவம் சுட்டுக் கொன்றது.

சுதந்திரமான இடத்தில் வசிப்பவர்கள் முதலில் ஒன்றுகூடுவதை விட்டு, அவர்களுக்கு ஏன் புத்தி சொல்ல வேண்டும். இன்று புலிகள் தடை செய்யப்பட்டதற்கெதிராக புலத்தில் எத்தனைபேர் கிளம்பியிருக்கின்றார்கள். தடைகளில் தாங்கள் மாட்டுப்படக்கூடாது என்பதற்காக வெளியில் சம்பந்தமே இல்லாதவர்கள் போல நடிப்பவர்கள் பலர்.

புலிகள் மீதான உலகமட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட தடைகள் தமீழம் பற்றிய அங்கிகாரம் பெறுவதற்கான ஒரு தடைக்கல்லாகவும், அதைத் தாண்டுவதற்கும் போராட வேண்டி வரும் என்பதைப் புலத் தமிழர்களும் அறிய வேண்டும்

நீங்கள் உங்கள் கற்பனைக்கு கருத்து எழுதுவதை தவிர்த்துக் கொண்டு உபயோகமாக ஏதாவது சொல்ல இருந்தால் சொல்லுங்கள்.

நாம் ஒரு முக்கிய நிகழ்வை பகிஸ்கரிப்பதன் மூலம் அரசின் போலி முகத்தை வெளி உலகுக்கு காட்ட முடிவதோடு மக்களின் போராட்ட விழிப்புணர்வையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்த வாய்ப்பை உருவாக்கும் என்றுதான் இதனைக் கோருகின்றோம்.

பகிஸ்கரித்துவிட்டு வீட்டில் இருந்து.. தமிழீழமே நமக.. அரோகரா தமிழீழம் என்று சொல்லிக் கொண்டிருக்கச் சொல்லவில்லை.

நாம் அடிப்படையில் மக்களின் மதச் சுதந்திரத்தை அங்கீகரிக்கும் அதேவேளை.. அதை கூட மதிக்காத எதிரி இன்று தன்னை நல்லவனாக உலகுக்கு அடையாளம் காட்ட மதத்தைப் பாவிப்பதை.. முறியடிக்க ஒரு காரணியாகவே இதைச் செய்யச் சொல்கிறோம்.

ஒருவேளை நல்லூரில் குண்டாம் என்று ஒரு பீதியைக் கிளப்பிவிட்டாலே அரைவாசிச் சனம் போகாது. நான் நினைக்கிறேன் 1988 இல் இந்திய இராணுவம் நிலை கொண்டிருந்த போது இப்படி ஒரு நிகழ்வு நடந்து இந்தியா நல்லூரை மையப்படுத்தி செய்து கொண்டிருந்த பிரச்சாரத்தை முறியடிக்க முனையப்பட்டது என்று. அப்போ நாம் பள்ளிப் பிள்ளைகள் என்பதால் அது பற்றிய முழு விபரத்தையும் அறியக் கிடைக்கவில்லை..! :(

இராணுவம் முடக்கப்பட என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.

ஆனால் இன்றைய யாழ் நிலை என்ன?

அது மிக மோசமான காலம் என்று நான் படித்திருக்கிறேன். 1983 நிகழ்வுக்குப் பின்னர் இராணுவம் கண்டபடி மக்களை சுட்டுப்படுகொலை செய்து கொண்டும்.. பிடித்து பூசா வெலிகடை என்று அனுப்பிக் கொண்டிருந்த காலம் என்பதை பழைய பத்திரிகைகள் அடங்கிய ஒரு கண்காட்சி நிகழ்வில் படித்து அறிந்து கொண்டிருக்கிறேன். பாடசாலை மாணவர்கள் கூட கடத்தி சுட்டுக் கொல்லப்பட்ட காலத்தில்.. மக்கள் பகிஸ்கரிப்பு.. ஹர்த்தால்.. செய்து.. தங்கள் எதிர்ப்பை அரசுக்கும்.. அதன் படைச் செயற்பாட்டுக்கும் எதிராக காட்டினார்கள் என்று வரலாறு சொல்கிறது. ஆனால்.. இன்று..????! தினக்கொலைகளுக்கு மத்தியிலும்.. மக்கள் மெளனிகளாக..???! சந்திரசிறியை தலைவராகக் கொண்டு அவரின் மேற்பார்வையின் கீழ் நல்லூரில் அரோகராப் போடுகிறார்களாம் எங்கிறது அரசு..! :D:D

Link to comment
Share on other sites

  • Replies 111
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் சொல்ல விளைவது துப்பாக்கிகளின் மத்தியில் வாழ்கின்ற மக்களை விட, தூப்பாக்கியில்லாத ஒரு இடத்தில் வாழ்கின்ற மக்களுக்குத் தான் அதிக பொறுப்பு இருக்கின்றது என்பi. பிரசவலியில் துடிப்பவளைப் போய்ச் சமைக்கச் சொல்லுவது போலத் தான் யாழ்ப்பாண மக்கள் தொடர்பாக உங்களின் வேண்டுதல் இருக்கின்றது.

புலத்துக்கு தமிழர்கள் ஓடியது, எதற்காக என்பதற்குக் கூடச் சிறிலங்கா அரசு ஒரு பிரச்சாரத்தைக் கொண்டிருக்கின்றதே

இப்படி ஆளாளுக்கு ஒரு சாட்டைச் சொல்லி மக்களை சுயமாகப் போராட சிந்திக்க முடியாமல் செய்யுங்கள். அப்புறம் இராணுவம் கொல்கிறது.. குதறுகிறது.. என்று போஸ்ரர்களோடு.. ஊரூரா அலையுங்கள்..! பார்ப்பவர்கள்... வெளிநாட்டவர்கள்.. களத்தில் உள்ள மக்கள் அப்படி நடப்பதாக அரசுக்கு எதிராக் குரல் எழுப்பவில்லை.. புகலிடத்தில் உள்ளவை மட்டும் புலிகள் தூண்டி கிளம்புகிறார்கள் என்று சொல்லிக் கொண்டு சாந்தப்பட்டுக் கொள்கிறார்கள். அரசும் தனது இனப்படுகொலையை 30 ஆண்டுகளாக செய்து கொள்ள அதுவே வசதியாகவும் போய்விட்டது.

பலஸ்தீன மக்களைப் பாருங்கள்.. அவர்கள் எவரும் தூண்டாமலே களத்தில் குதித்து அதி வலுவான இஸ்ரேலியப்படைகளுக்கு எதிராக கற்களாலும்.. பொல்லுகளாலும் போராடியதே அதிகம். நீங்கள் அந்தளவும் செய்ய வேண்டாம். எல்லோரும் ஒத்து வீட்டுக்குள் இருங்கள்.. அது போதும். :(

Link to comment
Share on other sites

தம்மேல் நம்பிகை வைத்து மன உறுதியுடன் செயலாற்ற முடியாதவர்கள் தான் கடவுள் மேல் நம்பிக்கை வைப்பவர்கள்.எங்களைக் கடவுள் தான் காப்பற்ற வேணும், நாங்கள் விரதம் இருந்து கோவிலுக்குச் சென்று கடவுளுக்கு நேர்த்தி வைத்து உண்டியலில் காசு போட்டால் கடவுள் எங்களைக் காப்பார் என்னும் நம்பிக்கை இருக்கும் வரையும், அந்த நம்பிக்கையைப் பாவித்து தம்மை வளர்த்துக் கொள்ளும் கோவில் முதலாளிகளும் இருக்கும் வரை இது தான் நடக்கும்.

கோவில் சொத்துக்களைப் பெருக்குவது தான் கோவில் நிர்வாகத்தின் நோக்கம், மக்களுக்குச் சேவை ஆற்றுவதோ உதவுவதோ புலத்தில் இருக்கும் கோவில் முதலாளிகளுக்கோ நல்லூர் முதலாளிக்கோ நோக்கம் அல்ல.

நெடுக்கலபோவான் கோவில்லுச் செல்ல வேண்டாம் என்றோ கும்பிட வேண்டாம் என்றோ கூறவில்லை.திருவிழா என்னும் ஒரு விழா இந்தத் தருணத்தில் தேவையா தேவையா என்று தான் கேட்கிறர்.அதைக் கூட ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் தான் மதம் என்னும் நம்பிக்கை ஆள வேருன்றி இருக்கிறது.இந்த நம்பிக்கை உடையாமால் தமிழர்கள் போரிட முடியாது என்பதையே இது காட்டுகிறது.காலம் காலமாக மதத்தைக் கொண்டே தமிழர்கள் மந்தைகள் ஆக்கப்பட்டனர்.அது தான் இன்றும் தொடர்கிறது.

இராணுவ அடக்குமுறையின் கீழ் போராட முடியாவிட்டால் ஆகக் குறைந்தது திருவிழாவை நடத்தாது அல்லது கலந்து கொள்ளாது இருந்திருக்கலாம்.ஆனால் அவ்வாறான எண்ணம் எவருக்கும் வராததற்கான அடிப்படைக் காரணம் மதத்தின் மீதும் கடவுள் மேதும் இருக்கும் குருட்டு நம்பிக்கை தான்.அந்த நம்பிக்கையைத் தான் எதிரி தனது பிரச்சாரத்துக்குச் சாதகமாகப் பாவிக்கிறான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமா. அதே மக்களுக்குச் சொல்லுகின்ற உங்களின் அறிவுரைக்குத் தான், நானும் உங்களுக்குப் பதிலுக்கு அறிவுரை சொல்கின்றேன். ஆனால் நீங்களும் அதே போன்ற ஒரு சாட்டைத் தூக்கிக் கொண்டு திரிகின்றீர்கள். வெறுமனே பொங்குதமிழில் சனத்தைக் கூட்டிக் காட்டினால் தமிழீழம் கையில் கிடைக்கும் என்பது தான் உங்களின் நினைப்பு.

அல்லது மக்களை ஒன்றுதிரட்டவும், ஏதோ வகையில் தங்களின் உணர்வுகளைக் காட்ட முனையும் இளையோர் அமைப்பு, தமிழ் காங்கிரஸ் தொடர்பாக குற்றம் குறை கண்டு கேவலம் செய்து கொண்டிருப்பீர்கள்.

நீங்கள் சொன்னால் அறிவுரை, நாங்கள் சொன்னால் நொண்டிச் சாட்டோ?? நல்ல வரைவிலக்கணம் நண்பரே!

நீங்கள் பொங்கு தமிழைப் பற்றி தவறாக விளங்கி வைச்சுக் கொண்டு அதுதான் அதற்கான காரணம் என்பது மிகத்தவறான செயல்.

பொங்கு தமிழ் என்பது தமிழ் மக்களின் தேசிய எழுச்சியின் பின்னால்.. அவர்களின் தார்மீக அரசியல் உரிமைக்கான போராட்டத்தின் பின்னால்.. மக்கள் பெருமளவில் இருக்கிறார்கள் என்பதை வெளி உலகுக்கு காட்டவே அது செய்யப்படுகிறது. தமிழீழத்தை மீட்டுத்தரும் என்ற தேவைக்கல்ல செய்யப்படுவது. மக்களின் ஆதரவோடு.. மக்களின் அபிலாசைக்காகவே போராட்டம் என்பதை சர்வதேச அரங்கிற்கு சொல்லவே அது. அடிப்படையில் அது தமிழீழம் என்பது மக்கள் கோரிக்கை.. ஒரு குழுவினதல்ல என்ற உண்மையை வெளிக்காட்ட நிறுவ செய்யப்படுகிறதே தவிர பொங்கு தமிழில் கூடிவிட்டால் தமிழீழம் கைகளில் தரப்படும் என்று எதிர்பார்ப்பது அல்ல.. அதன் இலக்கு.

இதை ஏலவே பொங்கு தமிழை உருவாக்கியவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதுமட்டுமன்றி பொங்கு தமிழ் வெளி உலகுக்கு மக்களின் ஒருமித்த நிலைப்பாட்டைக் காட்டுவது மட்டுமன்றி தமிழ் மக்களிடையே புதிய சந்ததிக்கும் அந்த நிலைப்பாட்டின் தார்மீக எண்ணங்களை இனங்காட்டுவதாகவும் அது இப்போ உலகெங்கும் அமைகிறது. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா போங்கப்பா நான் சமாதான காலத்தில் 1 வருடம் ஊரில் போய் குடும்பம் நடத்தினனான்.நான் ஒரு வருடம் எனது குடும்பம் 2 வருடம் அங்கு குப்பை கொட்டியது.எனதுஊர் வாழ்க்கையின் அனுபவத்தில் யாழ் மக்களின்(ஒட்டுமத்த யாழ்மக்கள் இல்லை)எண்ண ஓட்டத்தை இங்கு பதிந்தால் நீஙகள் சில வேளை அதிர்ந்து போய்விடுவீர்கள் :(

Link to comment
Share on other sites

நாம் ஒரு முக்கிய நிகழ்வை பகிஸ்கரிப்பதன் மூலம் அரசின் போலி முகத்தை வெளி உலகுக்கு காட்ட முடிவதோடு மக்களின் போராட்ட விழிப்புணர்வையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்த வாய்ப்பை உருவாக்கும் என்றுதான் இதனைக் கோருகின்றோம்

நாம் அடிப்படையில் மக்களின் மதச் சுதந்திரத்தை அங்கீகரிக்கும் அதேவேளை.. அதை கூட மதிக்காத எதிரி இன்று தன்னை நல்லவனாக உலகுக்கு அடையாளம் காட்ட மதத்தைப் பாவிப்பதை.. முறியடிக்க ஒரு காரணியாகவே இதைச் செய்யச் சொல்கிறோம்.

.

உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்!

மிகப்பெரிய செயல்கள், சாதனைகள் இவை எல்லாவற்றிற்கும் தியாகங்கள் அவசியம். ஒரு இனத்தின் விடுதலைக்கும் அப்படித்தான்.

தமிழா! தேங்காய் உடைப்பதும் தேர் இழுப்பதும் உன் கலாச்சாரமாய் இருக்கலாம் !

உனக்கு மகிழ்ச்சியும் தெம்பும் தருவதாக கூட இருக்கலாம் !

ஆனால் நீ உடைத்த தேங்காயில் இருந்து காய்ச்சிய எண்ணையை வைத்தே

எதிரி உன் வீட்டை கொளுத்துவான் என்றால்,

அப்போது தேங்காய் உடைப்பதை தவிர்ப்பதே புத்திசாலித்தனம் !

இல்லை நீ அடித்த தேங்காயை வைத்தே

எதிரி உன் வீட்டை எரித்ததும்

ஐயோ ஐயோ என்று அழுது புலம்பினால்

உன்னை விட முட்டாள் வேறு யார்?

Link to comment
Share on other sites

புலம் பெயர்ந்த நாடுகளில் இருப்போர் சிவாஜியைப் புறக்கணிக்கப் போகவேன்டும் என்று ஊடகங்களில் கதைத்தார்கள். சிவாஜியைப் புறக்கணிக்க முடியவில்லை. அங்குள்ள சனத்தைப்பற்றிக் கதைக்க வந்திட்டினம். சிலர் சொல்லினம் இம்முறை மடு தேவாலயத்தில் திருவிழா நடக்கேலா. அவ்ர்கள் புறக்ககணித்தார்கள். ஏன நல்லூரில் புறக்கணிக்கவில்லை என்று. 96ல் யாழ்ப்பாணத்தில் மக்கள் இடம்பெயரும் போது, மடுவிலா திருவிழாவை ஏன் புறக்கணிக்கவில்லை. சென்ற வருடம் வாகரை,சம்பூர், மூதூரில் இடம்பெயரும் போது ஏன் மடுவில் திருவிழாவைப் புறக்கணிக்கவில்லை. அட இப்பவும் வற்றாப்பளை அம்மன கோவில வருடாந்தத திருவிழா நடக்கிறது தானே. அதுகளாவது ஊரில கெடுபிடிகள் மத்தியில் காலத்தைப் போக்கினம். எதோ கடவுள் இருக்கிறார், ஆமியிட்ட காப்பாற்று என்று பயத்தில் கும்பிடப் போனால், ஊரில் இருக்கப் பயந்து துண்டைக்காணோம், துணியக்கணோம் என்று வெளினாட்டுக்கு ஒடித்தப்பிய எங்கட புலம் பெயர்ந்த சனங்கள், அங்குள்ளவர்களைப் பார்த்து ஏன் அங்கே போறிங்கள்?. இங்க போறியள் என்றதும், ஏன் இன்னும் புலிகள் தாக்கவில்லை என்று கேப்பதும் நல்லாய் இருக்கிறதா?. அங்குள்ள மக்களுக்கும், தேசியத்தலவருக்கும், போராளிகளுக்கும் தெரியும் என்ன செய்ய வேணும் என்று, நீங்கள் சொல்லத்தேவையில்லை . அப்ப நான் போகட்டா

சிவகுமரன் நீங்கள் நாம் இங்கு முன்வைக்கும் கருத்தை முதலில் ஒருமுறை சரியாக வாசியுங்கள்.. பரபரக்க முதல்.

இன்றைய சூழ்நிலையில் தனது கட்டுப்பாட்டுக்குள் மனிதப் பேரவலங்களை இன அழிப்புக்களை நிகழ்த்துகின்ற ஒரு இராணுவத்தின் மேற்பார்வையின் கீழ் அதன் கட்டளைத் தளபதியின் கட்டளைக்கு உட்பட்டு திருவிழாச் செய்யும் நிலையில் தாம் உள்ளதை.. மக்கள் தங்கள் மீதான இராணுவ அடக்குமுறைகளை அதன் வெவ்வேறு வடிவங்களை வெளிச்சொல்ல வேண்டிய தருணத்தில்.. இராணுவம் தன்னை மக்களின் ஒத்துழைப்பாளன் என்ற போர்வையில் உலகுக்கு உத்தமன் என்று காட்ட நடந்து கொள்வதை.. மக்கள் இராணுவத்தால் படும் துன்பத்தை வெளிப்படுத்த இராணுவம் வலிந்து காட்ட முனையும் இந்த ஒத்துழைப்பைப் போலி என்று வெளி உலகுக்கு நிரூபிக்கவாவது இத்திருவிழாவை புறக்கணிக்க மக்கள் தமக்காக முன் வர வேண்டும் என்பதுதான் கோரிக்கை.

புகலிடத்தில் சிவாஜியை புறக்கணிப்பதாலோ.. விடுவதாலோ.. சிறீலங்காப் படைகளின் இன அடக்குமுறையின் நிகழ்கால வடிவத்தை சொல்லிவிட முடியுமா..??! வற்றாப்பளை அம்மன் ஆலயத்தில் திருவிழாவை வன்னி மக்கள் புறக்கணிப்பதற்கு அது என்ன இராணுவக் கட்டுப்பாட்டிலா இருக்கிறது. அதுமட்டுமன்றி அந்த மக்கள் அரசுக்கும் அரச படைகளுக்கும் எதிராக ஆர்ப்பாட்டங்களை.. போராட்டங்களை நடத்தக் கூடிய தெளிவான சூழல் அங்கிருக்கிறது. அப்படி இருக்க.. ஏன் அங்கு கோவில்களைப் புறக்கணிக்க வேண்டும். அது அவசியமில்லை. ஆனால் யாழ் குடா உட்பட்ட இராணுவக் கட்டுப்பாட்டிடங்களில்.. இராணுவத்தின் அட்டூழியங்களை சகித்துக் கொண்டு.. இராணுவத்தின் அடக்குமுறைக்கு ஒடுங்கிக் கொண்டு.. இராணுவம் தன்னை நல்லவனாகக் காட்ட நடத்தும் திருவிழாக்களை ஒரு கணம் புறக்கணிப்பதால்.. மக்கள் இராணுவத்துக்கு எதிரான தமது தெளிவான நிலைப்பாட்டை உலகுக்குச் சொல்ல முடியும். அங்கு ஆர்ப்பாடங்களையோ.. கூட்டங்களையோ மக்கள் இராணுவத்துக்கு எதிராக நடத்தக் கூடிய சூழல் இல்லை..!

இதே இராணுவம் கடந்த 30 ஆண்டுகளில் எத்தனை தடவை நல்லூர் உட்பட கோவில்கள் மீது வேண்டும் என்றே குண்டுத்தாக்குதல் நடத்தி இருக்கிறது. 1990இல் திருவிழாக் காலத்தில் நல்லூர் தேரடி.. வையிரவர் கோவிலடி உட்பட்ட பகுதிகள் சேதமாகும் வண்ணம்.. இராணுவம் அதன் விமானப்படை கொண்டு தாக்குதல் நடத்தியது. அதன் பின்னர் எத்தனை தடவைகள் இதே இராணுவம் கோவில்கள்.. தேவாலயங்களில் தஞ்சம் அடைந்த மக்களை குண்டு வீசியும் சுட்டும் கொன்றது. இன்று அதே இராணுவம்.. அதன் கட்டளைத் தளபதியின் மேற்பார்வையின் கீழ் திருவிழா நடத்துவதாகச் சொல்லிக் கொள்கிறது.

1990-95 வரை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் குடா நாடு இருந்த போது விடுதலைப்புலிகள் அறிவித்தார்களா.. குடா நாட்டு திருவிழாக்கள்.. தலைவரின் மேற்பார்வையின் கீழ் விடுதலைப்புலிகளின் பாதுகாப்பின் கீழ் நடத்தப்படுகிறது என்று. இல்லையே. மக்களின் மதச் சுதந்திரத்தில் இராணுவத்துக்கு தலையீடு செய்ய வேண்டிய அவசியமில்லை.

ஆனால் சந்திரசிறி என்ற தற்போதைய யாழ் குடா தளபதியின் நேற்றைய அறிக்கையின் படி இராணுவமே இந்தத் திருவிழாவை முன்னின்று மக்களின் பேராதரவோடு நடத்திக் கொள்வதாகக் காட்டிக் கொள்வதன் நோக்கம்.. உங்களுக்கு புரிகிறதா..??!

சிவாஜியை புறக்கணிப்பதையும்.. வற்றாப்பளையில் திருவிழாவையும் பற்றிக் கதைக்கின்ற நீங்கள்.. இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் நடக்கும் கொடூரங்களை வெளி உலகுக்கு சொல்ல உள்ள சந்தர்ப்பங்கள் நழுவுவது பற்றி கொஞ்சம் கூட கவலை கொள்ளவில்லை என்பது வருத்தத்துக்குரிய ஒன்று.

அடிப்படையில் நான் எந்தச் சினிமாவையும் தியேட்டர்களின் போய் பார்ப்பவன் அல்ல. நான் எனது சிறுவயது முதலே சினிமாவை புறக்கணிக்க ஆரம்பித்தவன். 1990ல் விடுதலைப்புலிகள் மக்கள் விரோத, சமூக விரோத சினிமா (எல்லாச் சினிமாப்படங்கள் மீதும் அல்ல) மீது போராட்ட தேவை கருதி தடை கொண்டு வந்த போது அதை எனக்காகக் கொண்டு வந்தது போல உணர்ந்து வரவேற்றவன். ஆனால் அத்தடையால் சினிமா பார்க்க முடியாது என்று கொழும்புக்கு ஓடி வந்தவர்களை நான் நங்கு அறிவேன்.

இன்றும் எந்த பிற அழுத்தங்களுக்கும் விளக்கங்களுக்கும் இடமின்றி.. சினிமாவை தியேட்டர்களில் போய் பார்ப்பதை தவிர்த்தே வருகின்றேன். அதுமட்டுமன்றி நானாகத் தேடி இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்று படங்களைப் பார்ப்பதும் இல்லை..! என்னைப் போலவே மக்களும் இருக்க வேண்டும் என்பதல்ல எனது நிலைப்பாடு.

மக்கள் தமக்குரிய பொதுவான ஒரு எதிரியை சரியான வழியில் உலகுக்கு அடையாளம் காட்ட உள்ள சந்தர்ப்பங்களை தவற விடக் கூடாது என்பதற்காகவே இக்கருத்துப் பகிர்வை செய்து கொண்டிருகிறோம். எனவே சரியாக அதை விளங்கிக் கொண்டு கருத்துக்களை முன் வைக்க முயலுங்கள்.

மடுவை வைத்து தமிழர் தேசத்தின் மீதான சிங்கள இராணுவத்தின் ஆக்கிரமிப்பை மக்கள் ஆதரவுக்கான ஒரு நிகழ்வே அது என்று அரசு காட்ட முனைவதை தடுக்க என்று சம்பந்தப்பட்ட தரப்புக்கள் உணர்ந்து செயற்படுகின்றனர். உண்மையில் அது வரவேற்கப்பட வேண்டிய விடயம். உயிருக்கு உத்தரவாதம் அற்ற நிலையிலும்.. அவர்கள் அதனைச் செய்கின்றனர். ஏற்கனவே கிளைமோர்கள் வைத்து மதப் போதகர்களைக் கொன்ற அரசு.. நாளை புலிகளின் பெயரால் ஒரு கிளைமோரை வைத்து முக்கிய இராணுவத்தின் அரசின் நலனுக்கு முட்டுக்கட்டை போடும் மதப் போதகர்களைக் கொல்லலாம். அது தெரிந்திருந்தும்.. இராணுவத்தின் நிகழ்ச்சித் திட்டத்துக்கும்.. பொய் பரப்புரைக்கும் இடமளிக்காது.. அவர்கள் செயற்பட முனைவது வரவேற்கத்தக்க ஒன்றே.

இராணுவத்தின் மதம் சார் மக்களின் சுதந்திரத்துக்குள் உள்ள அரசியல் தலையீட்டை மக்கள் கடுமையாகக் கண்டிப்பதோடு.. இராணுவத்தின் உண்மை நோக்கங்களை அனைத்துலக சமூகத்துக்கு இனங்காட்ட முன் வர வேண்டும். அப்போதுதான் தமிழ் மக்களின் போராட்டம் மீதான நியாயத்தன்மைக்கு இன்னும் இன்னும் பலம் அதிகரிக்கும்..! :(

Link to comment
Share on other sites

புதியவன்.. யாழ் குடா நாட்டு மக்கள் ஒன்று திரண்டு பகிஸ்கரித்தால் படையினரால் எதுவும் செய்ய முடியாது. அப்படிக் கொல்ல வேண்டும் என்றால் 3 இலட்சம் பேரையும் கொல்ல வேண்டும். 3 இலட்சம் பேரை ஒரு 40 ஆயிரம் சிங்களவன் மேய்க்கிறான்.. மேய்பட்டுக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை..!

போன காலங்கள் போகட்டும்.. நிகழ் காலத்தில் இதைச் செய்தால்.. நிறைய விடயங்களை வெளி உலகுக்குக் கொணர முடிந்திருக்கும்.. ஆனால்.. முருகனுக்கு அரோகரோ போடுறதோட.. சந்திரசிறிக்கு.. தோப்புக்கரணம் போடுறதைச் செய்வதால்.. மக்களின் துயரங்கள் தீருமா..??! தீர்ந்தால் புண்ணியம் பாருங்கோ..???! :lol::lol:

Link to comment
Share on other sites

அண்ணன் இதைப் போல தான் 2005 இன் இறுதிப் பகுதியில் புலிகளால் வைக்கபட்ட கூட்டங்களிலும் பேசப்படட்டது அதாவது குடாநாட்டில வாழுகின்ற 6 இலட்டசம் மக்களும் இணைந்து அல்லது சிறு சிறு குழுக்காளாக இணைந்து இராணுவ முகாம்களை சிறிது சிறிதாக தாக்குவதன் முலமாக இராணுவம் 1986 ஆண்டு நிலைக்கு கொண்டு செல்லப்படும் அதன் பின்பு இராணுவ விநியோகங்கள் அல்லது நடமாட்டங்கள் என்ப நிறுத்தப்பட்டுவிடும் அல்லது எதிரி முகாமிற்குள்ளேயே முடங்கி விடுவான் பின்பு புலிகள் இலகுவாக நுழைந்து ஏனைய பகுதிகளை கைப்பற்றி விடமுடியும் என்று கூறப்பட்டது

( தென்மராட்சி அரசியல் பொறுப்பாளர் 2005 ஆண்டு )

ஆனால் பாருங்கோ நடந்த தெல்லாதம் 2005 ஆண்டின் இறுதியில் இருந்து 2006 வரை நடப்பற்றவற்கு எதிரி பழி தீhக்க வெளிக்கிட்ட பொழுது மாறித்; தான் நடந்தது சனம் தான் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத நிலை அது மட்டுமல்ல வீட்டுக்குள் இருப்பவர்களையே மிக இலகுவாக இலக்கு வைத்து விடுகின்றனர் என்பது எவருக்குமே மறுத்திட முடியாத துன்பமான உண்மை.

எல்லாவற்றையும் தவிர யாழில் வாழுகின்ற மக்கள் இன்று கொஞ்சம் கொஞ்சமாக வெளிNயி வருகின்ற நிலையில் மீண்டும் இவ்வாறான நிலை ஏற்படுமாயின் அங்குள்ள மக்களிற்கு என்ன நடக்கும் என்பதை சிறிது சிந்தித்து பாருங்கள்.

அத்துடன் ஓரு விடயத்தை குறிபிடவிரும்புகின்றேன்

தென்மராட்சியின் ஓர குறிப்பிட்ட இடம் எப்பொழுதுமே புலிகளிற்கு ஆதரவான அல்லது எகடந்த காலங்களில் போராளிகளிற்கு அனைத்து விதத்திலும் உதவிய ஊரின் நிலையை சிறிது விளக்க வீரும்புகின்றேன்.

1987 - 1997 ஆண்டு வரை குடாநாட்டில நின்று செயற்பட்ட புலிகளிற்கு தங்குமிடம் கொடுத்து உணவு கொடுத்து பராமரிக்கும் ஊhத் என்ற காரணத்தில் இந்திய .ராணுவம் ஆயினும் சரி இலங்கை இராணுவம் ஆயினும் 1000 மேற்பட்டவர்களின் சுற்றி வளைப்பின் பின்பு தான் தேடுதல் அல்லது தனிநபர் கைதுகள் நடைபெறுவது வழமை மட்டுமல்ல அதனோடு இணைந்த பயமும் கூட அதாவது பெரும் ஆயத்தங்களுடன் செல்லாவட்டால் அங்கு இராணுவத்திற்கு பாரிய பெரியழப்பு ஏற்பட்டு விடும் என்ற அனுபவ வாயிலாக பெற்றுக் கொண்ட இராணுவங்கள் சுற்றி வளைப்பின் பின்பு தான் தனிநபர் கைதாவது நடைபெறும்.

ஆனால் இன்று நிலைமை படுமோசமாக மாறிவிட்டது பாருங்கோ! அதாவது வெறும் இரண்டு இராணுவத்தினர் மட்டும் வந்து கைது செய்ய வேண்டிய நபரை கைது வெயவதும் அல்லது இலக்கு வைப்பதும் அல்லது அடையாள அட்டைய பறித்து செல்வதும் மிக மிக சாதாரண விடயமாகிவிட்டது என்hது என்னால் கூட அந்த கதையை நம்பிட முடியாவில்லை ஏன் எனில் அவ்வளவு இராணுவத்திற்கு சிம் சொற்பனாமாக இருந்த புலிகளிற்கு உதவிய ஊர் என்று பெயர் எடுத்த ஊர்களிற்'கு இன்றைய இவ்வாறான நிலமைகள் துன்பமானவை தான் இதை ஏன் கூறுகின்றே; என்றால்

சமாதான காலத்தின் பின்பு யாழில் ஏற்பட்;ட நிகழ்வுகளளின் தரவுகளின் அடிப்படையில் மிக இலகுவாக பலரை இராணுவத்தினரால் இலக்கு வைத்து கொலை வெய்ய முடிந்திருக்கின்றது அதற்காக கொலை செய்யப்பட்டடிருப்வர்களில் எவருமே புலிகளில்லை என்று கூறவரவில்லை ஆனால் இராணுவத்தினரால் புலிகளின் செயற்பாடுகளை முற்று முழுதாக முடக்கி விட்டனர் என்று கூறவும் வரவில்லை .

அவறற்pல் பெரும்பாலும் பலியாகி இருப்பது மக்களே அத்துடன் இழப்புக்கள் இன்றி எவற்றையும் பெற்றிட முடியாது என நினைப்பதும் புரிகின்றது உண்மை தான் ஆனால் இழப்புக்களை தவிர்பது நல்லது அல்ல என்று எவரும் கூறவில்லையே !

ஆனாலும் நீங்கள் குறிபிபடுவது போல மக்களால் இன்றைய யாழ் நிலமையில் தமது வேலை சம்பந்தமாகவே ஆர்ப்பாட்டம் அல்லது எதிர்ப்பு கூட்டங்களைNயு நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் மக்களிற்கு புரட்சிகள் செய்மு; பொழுது கிடைக்க கூடிய பரிசு என்ன என்பதை புரிவீர்கள் என நம்புகின்றேன்.

சும்மா போங்கப்பா நான் சமாதான காலத்தில் 1 வருடம் ஊரில் போய் குடும்பம் நடத்தினனான்.நான் ஒரு வருடம் எனது குடும்பம் 2 வருடம் அங்கு குப்பை கொட்டியது.எனதுஊர் வாழ்க்கையின் அனுபவத்தில் யாழ் மக்களின்(ஒட்டுமத்த யாழ்மக்கள் இல்லை)எண்ண ஓட்டத்தை இங்கு பதிந்தால் நீஙகள் சில வேளை அதிர்ந்து போய்விடுவீர்கள் :lol:
Link to comment
Share on other sites

உண்மை தான் பாருங்கோ ஆனால் சொன்னால் உண்மைக் எப்பொழுதும் கசப்பானவை தான் என்று சொல்லிவினம் அல்லது யாழ் நிர்வாகத்தினர் கருத்தை மறு நிமிடமே தூக்கிவனம்; தமிழ்தேசியத்திற்கு எதிரானது என்று ஆனால் பாருங்கோ சொறிலங்காவின்ர ஓரு ஓன்று பெட்டை வேலையில்லாமல் எங்கையோ போய் தன்ர உடுப்புகளை கழட்டி அரை குறை நின்றால் அந்த செய்திகளை மட்டும் யாராவது 10 மணித்தியாலத்திற்கு பின்பு நிவ்வாகத்திற்கு சொன்னால் மாதத்திரம் தூக்கிவினம் அது வரைக்கும் தமிழ் தேசியத்திற்கு அந்த செய்தி எந்த விதத்தில தூக்கி நிற்கிது என்று விடுகினமோ தெரியாது ???

நிர்வாகத்தார் என்னிலை கோவிக்க கூடாது உண்மையை தான் சொன்னான் இல்லை என்று சொல்ல மாட்டியள் என்று நினைக்கிறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் குடா மட்டுமல்ல.. தமிழர் தாயகம் எங்கும் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வாழும் மக்களுக்கு இராணுவத்தால் பிரச்சனைகள் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்திய இராணுவ காலத்தில் சில முதியவர்கள் ஒரு வாதத்தை முன் வைத்துத் திரிந்தார்கள். புலிகள் வந்து சொறியிறதாலதான் இராணுவம் தாக்குதென்று.

ஆனால் நான் அறிவேன்.. இந்திய இராணுவத்தின் செயற்பாடுகள்.. குறிப்பாக பெண்கள் மீதான வன்முறைகள்.. புலிகள் குறித்த பகுதிகளின் நடமாடுகிறார்கள் என்று அறிந்த பகுதிகளில் குறைவாக இருந்தமையை.

ஒரு அந்நிய இராணுவம்.. இரண்டு முக்கிய விடயங்களை கருத்தில் எடுத்து மக்களோடு நிலை கொள்ளும். சிறீலங்கா இராணுவத்தைப் பொறுத்தவரை.. மக்களின் இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்துவதாகக் காட்டிக் கொண்டு தனது இருப்பை உறுதி செய்து கொண்டு... இன அழிப்பை மக்கள் உணரா வண்ணம் முன்னெடுத்து சிங்கள மேலாண்மையை நிறுவுவதே அதன் இரட்டைக் கொள்கை.

புலிகள் இராணுவ இலக்குகளை தாக்குகின்ற போது.. இராணுவம் புலிகளைத் தான் தேடித் தாக்க வேண்டும். மக்களை அல்ல. கொழும்பில் புலிகள் ஒரு தாக்குதல் நடத்தினால்.. சிறீலங்கா இராணுவம் கண்மூடித்தனமான பதில் தாக்குதலை சிங்களவர்கள் பாதிப்படையும் வண்ணம் தாக்குமா..??! நிச்சயமாக இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை எனலாம்.

அவ்வளவுக்கு சிங்களவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்றிருக்கிற நியாயமான அக்கறை தமிழர்களிடத்தில் சிங்களப்படைக்கு இல்லை என்பதுவே போதும் அது தமிழ் மக்கள் மீது இனப்படுகொலையை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது என்பதைக் காட்ட. ஆனால் இன்னும் தமிழர்களில் ஒரு பகுதியினர்.. குறிப்பாக விடுதலைப்புலிகளின் சில செயற்பாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள்.. ஒட்டுக்குழுக்களைச் சேர்ந்தவர்கள்.. இராணுவத்தின் இருப்பை தங்கள் வயிற்றுப்பிழைப்புக்காக பயன்படுத்துபவர்கள்.. சிறீலங்கா அரச விசுவாசிகள்.. இராணுவத்தின் இன அழிப்புத் தந்திரங்களை அறியாதவர்களாக தம்மைக் காட்டிக் கொண்டு பிழைப்பு நடத்திக் கொண்டுதான் இருக்கின்றனர்.

அவர்களைப் பற்றிய கவலை மக்களுக்கு அவசியமில்லை. எமக்கு எமது நிலம் இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்தும்.. சிங்கள அரசின் பேரினவாதத் திணிப்பில் இருந்தும்.. சிங்கள மேலாதிக்கத்தில் இருந்தும் விடுவிக்கப்படுவதும்.. எமது நிலத்தை நாமே ஆளும் உரிமை பெறுவதுமே இலக்காக இருக்கிறது.

ஆமி வருவதும்... கரண்ட் தாறதும்.. சினிமாக் கொட்டகை திறக்கிறதும்.. கோவில் திருவிழா நடத்திறதும்.. பஸ் விடுறதும்.. கடை திறக்கிறதும்... கிரிக்கெட் போட்டி நடத்திறதும் அல்ல.. இலக்கு.

எதிரி மக்களிடம் தான் நெருங்கி இருப்பதாக காட்ட வேண்டிய சூழலில் இவற்றை எல்லாம் வலிந்து செய்வான். காரணம் அவனுக்கு மக்கள் உணரா வண்ணம் ஒரு இன அழிப்பைச் செய்ய வேண்டும். வெளி உலகம் உணரா வண்ணம் ஒரு இன அழிப்பை செய்ய வேண்டும். சிங்கள ஆதிக்கத்தை முழு இலங்கையிலும் நிறுவ வேண்டும் என்பதே இலக்கு. அவன் தனது இலக்கு நோக்கிச் செல்ல எவ்வாறான தந்திரங்களை உபயோகிக்கிறானோ.. அதனை அறிவது மட்டுமன்றி அவற்றைப் பற்றிய அறிவூட்டல்களோடு அவற்றை தந்திரமான வழிகளில் தமிழ் மக்களும் முறியடிக்க வேண்டும்.

பிச்சை போட அதில் உண்டு வாழ்ந்து முடிப்பேன் என்பவனுக்கு நாடும் தேவையில்லை வீடும் தேவையில்லை.. தெருவே போதும். அந்த நிலையில் எம்மவரிலும் பலர் இருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கும் அறிவூட்டி.. நாடும் வீடும்.. தேவை என்பதை உணர்த்தவும்.. அவர்களாக அதைத் தேடவும் செய்ய முற்படும் போது... எமது போராட்டத்தின் வழி மக்களை இயக்க இன்னொரு தரப்பு இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் நிற்கத் தேவையில்லை. மக்களே தாமாக அமைதியாக இருந்து கொண்டு திட்டங்களைத் தீட்டி எதிரிக்கு நெருக்குவாரம் கொடுக்கக் கூடிய வழிவகைகளில் எல்லாம் செயற்பட முயல்வார்கள். மக்களை போராட்டத்தின் வழி சுயமாக செயற்பட இட்டு வருவது இன்றைய நிலையில் முக்கியமான ஒன்று..!

அந்த வகையில் தான் எதிரி முக்கியப்படுத்தும்.. மக்களை நெருங்கி வருவதாகக் காட்டப் பயன்படுத்தப்படும்.. அவனின் போலி நெருக்கத்தை அடையாளப்படுத்த உதவும்.. இவ்வாறான திருவிழாக்களைப் புறக்கணிப்பது.. எதிரிக்கு அடியாகவும்.. உலகுக்கு செய்தியாகவும் போய்ச் சேரும். இதனால் மக்களுக்கு பெரிய இழப்புக்கள் ஏற்படப் போவதில்லை. எல்லோரும் ஒருங்கிணைந்து அமைதியாக ரகசியமாக இயங்குகின்ற போது.. எதிரி இலகுவாக அவர்களை இனங்காணவோ அடக்கவோ முடியாது. ஆனால் சிறு குழுக்களாக வெளிப்படையாக.. இயங்குகின்ற போது.. எதிரி அவர்களைத் தனிமைப்படுத்தி இனங்கண்டு அழிக்க முடியும். எதிரிக்கு தகவல் கொடுப்பவனுக்கும் அது இலகுவான செயலாகிவிடும்.

எதிரியின் தந்திரங்களுக்கு ஏற்ப தமிழ் மக்களும் தந்திரங்களை மாற்றாது விடின்.. இலங்கைத் தீவில் தமிழினத்தின் சுதந்திர வாழ்வு என்பது கனவாகவே இருக்கும். சிங்கள மேலாண்மைக்குள் தான் தமிழர்களின் வாழ்வு அமையும்..! அதுவல்ல எமது 30 வருடகாலத்துக்கும் மேலான தியாகங்கள் நிறைந்த போராட்டத்தின் இலக்கு..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் முதலிலேயே குறிப்பிட்டேன்

உங்கள ஆதங்கம் புரிகிறது என்று..........

ஆனால் மக்களை அங்க போகாதே.......இங்க போகாதே ............என்று சொல்லி................

கடைசியாக கோயிலுக்கும் போகாதே............???????????என்று..........????????????

நன்றாக இல்லை என்பதே என் கருத்து

மற்றது பொங்கு தமிழ் பற்றி எனக்கு விளக்கம் தேவைப்படவில்லை

மன்னிக்கவும்

நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள்......

நாட்டில் மக்கள் நல்ல திருப்பங்களை கொண்டுவர கூடாது.... நாட்டின் எதிர் காலத்திற்காக மக்கள் உழைக்கவே கூடாது. மாடுகள் போல் மக்களும் ஏதோ தானோ என்று அலைய வேண்டும்... இதோ உங்களுடைய கருத்து???

Link to comment
Share on other sites

ஆமி வருவதும்... கரண்ட் தாறதும்.. சினிமாக் கொட்டகை திறக்கிறதும்.. கோவில் திருவிழா நடத்திறதும்.. பஸ் விடுறதும்.. கடை திறக்கிறதும்... கிரிக்கெட் போட்டி நடத்திறதும் அல்ல.. இலக்கு.

:

Link to comment
Share on other sites

அண்ணன் என்னண்ணை தீடிரென்று இப்படிச் சொல்லிறியள் உங்கட கதையை பாhத்ததா ஆமி யாழ்யாணத்திற்கு வந்தாப்பிறகு தான் சனங்கள் மின்சாரத்தையும் பேருந்து வண்டியையும் சினிமாவையும் கடை திறக்கிறதும் கடைசியாய் கோவி;ல்ல புசை நடத்துறதும் ஆமி வந்ததிற்கு பிறகு என்று சொல்லி ஏன் இப்பிடி வரலாற்றை தவறாக மாற்ற முயற்சிக்கின்றீர்கள் இது எம்மை hநமே கேவலய்படுத்துவதாக தெரியவில்லையா ??? அதாவது எல்லாவற்றையும் ஆமி தான் கொண்டு வந்து தான் என்ற நிலையை நீங்கள் தான் உங்கள் கருத்தின் ஊடாக விதைக்க விரும்புகின்றீர்களோ தெரியவில்லை .

உங்கள் கருத்துப்படி பார்த்தால் வன்னயிலும் சினிமா கொட்டைகள் உள்ளன கடைகள் திறக்கடுகின்றன பேருந்துகள் ஓடுகின்றன கோவில்களில் புசைகள் நடைபெறுகின்றன ஆகவே வன்னியில் புலிகளின் கட:ப்பாட்டுப் பகுதியிலும் இவைகள் நடைபெறுவதனால் அவை அனைத்தும் அரச படைகளினதும் ஓட்டுக்குழுகளினதும் வேலை என்கீறிர்களா ???

தவறு செய்து கருத்தை பதியுங்கள் அதனை நான் வரவேற்றுகின்றேன் அதற்காக வரலாற்றை தவறாக எழுதாதிர்கள் பின்பு இளம் சமுதாயம் நினைக்கலாம் ஆமியினால் தான் நாங்கள் கோயிலைக் கூட கண்டுடோம் என்று .

எதிரியின் தந்திரங்களுக்கு ஏற்ப தமிழ் மக்களும் தந்திரங்களை மாற்றாது விடின்.. இலங்கைத் தீவில் தமிழினத்தின் சுதந்திர வாழ்வு என்பது கனவாகவே இருக்கும். :lol:
Link to comment
Share on other sites

என்னத்துக்கு அண்ணன் கோவிலையும் ஆமியையும் சிண்டு முடியிறியள் என்று விளங்கவில்லை ஆலயங்கள் எம்மவரது இதற'குள் ஏன் ஆமி மற்றும் ஓட்டுக்குழு இணைக்கின்றீர்களோ தெரியவில்லை அத்துடன் உங்கள் கருத்துப்படி அதாவது இராணுவம் யாழை கைப்பற்றுவதற்கு முன்பு யாழில் கோவில்களில் புசைகள் நடக்கவில்லை மக்கள் கலந்து கொள்ளவில்லையா ???

மற்றும் இன்னும் ஓன்றைக் குறிப்பிட விரும்புகின்றேன் 95 ஆம் ஆண்டு " தமிழீழ ஆடிவேல் " என்ற ஓன்றை யாழ்பாணத்து மக்கள் கொண்டாடியது நினைவிருக்கின்றதா ??? அல்லது ஆலய உற்சவ நாட்களில் போராளிகளால் ஆலய சுழலில் விடுதலை பற்றிய மற்றும் போராட்டம் பற்றிய எண்ணக்கருக்கள் ஆலயச் சுழலில் வைத்து பிரசாரப்படத்தப்படவில்லையா ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன் என்னண்ணை தீடிரென்று இப்படிச் சொல்லிறியள் உங்கட கதையை பாhத்ததா ஆமி யாழ்யாணத்திற்கு வந்தாப்பிறகு தான் சனங்கள் மின்சாரத்தையும் பேருந்து வண்டியையும் சினிமாவையும் கடை திறக்கிறதும் கடைசியாய் கோவி;ல்ல புசை நடத்துறதும் ஆமி வந்ததிற்கு பிறகு என்று சொல்லி ஏன் இப்பிடி வரலாற்றை தவறாக மாற்ற முயற்சிக்கின்றீர்கள் இது எம்மை hநமே கேவலய்படுத்துவதாக தெரியவில்லையா ??? அதாவது எல்லாவற்றையும் ஆமி தான் கொண்டு வந்து தான் என்ற நிலையை நீங்கள் தான் உங்கள் கருத்தின் ஊடாக விதைக்க விரும்புகின்றீர்களோ தெரியவில்லை .

உங்கள் கருத்துப்படி பார்த்தால் வன்னயிலும் சினிமா கொட்டைகள் உள்ளன கடைகள் திறக்கடுகின்றன பேருந்துகள் ஓடுகின்றன கோவில்களில் புசைகள் நடைபெறுகின்றன ஆகவே வன்னியில் புலிகளின் கட:ப்பாட்டுப் பகுதியிலும் இவைகள் நடைபெறுவதனால் அவை அனைத்தும் அரச படைகளினதும் ஓட்டுக்குழுகளினதும் வேலை என்கீறிர்களா ???

தவறு செய்து கருத்தை பதியுங்கள் அதனை நான் வரவேற்றுகின்றேன் அதற்காக வரலாற்றை தவறாக எழுதாதிர்கள் பின்பு இளம் சமுதாயம் நினைக்கலாம் ஆமியினால் தான் நாங்கள் கோயிலைக் கூட கண்டுடோம் என்று .

அப்படியே பின்னோக்கி சூரியக் கதிர் 2 நடவடிக்கைக்குப் பின்னர்.. நடந்தவற்றையும்.. இராணுவத்தை உற்சாகமாக வரவேற்றதையும்.. பஸ்.. கரண்ட்.. சினிமா கேட்டதையும்.. மறக்கத் தயார் இல்லை. அதுவும் யாழ் குடாநாட்டு மக்களில் ஒரு சிலர் செய்த சாதனைதான்..!

அதற்கான விலையை அவர்கள் செம்மணியில் கொடுத்துவிட்டார்கள்..! இப்போ.. சந்திரசிறி பிரச்சாரம் செய்ய திருவிழாக் கொண்டாடுகிறார்கள்.. அதற்கும் நிச்சயம் விலை கொடுப்பார்கள். :lol::lol:

Link to comment
Share on other sites

ஆலய உற்சவ நாட்களில் போராளிகளால் ஆலய சுழலில் விடுதலை பற்றிய மற்றும் போராட்டம் பற்றிய எண்ணக்கருக்கள் ஆலயச் சுழலில் வைத்து பிரசாரப்படத்தப்படவில்லையா ???

அப்ப ஏன் இராணுவம் பிரசாரப்படுத்த கூடாது????????? அப்படிதானே??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே பின்னோக்கி சூரியக் கதிர் 2 நடவடிக்கைக்குப் பின்னர்.. நடந்தவற்றையும்.. இராணுவத்தை உற்சாகமாக வரவேற்றதையும்.. பஸ்.. கரண்ட்.. சினிமா கேட்டதையும்.. மறக்கத் தயார் இல்லை. அதுவும் யாழ் குடாநாட்டு மக்களில் ஒரு சிலர் செய்த சாதனைதான்..!

அதற்கான விலையை அவர்கள் செம்மணியில் கொடுத்துவிட்டார்கள்..! இப்போ.. சந்திரசிறி பிரச்சாரம் செய்ய திருவிழாக் கொண்டாடுகிறார்கள்.. அதற்கும் நிச்சயம் விலை கொடுப்பார்கள். :lol::lol:

இது கொஞ்சம் மாறி வரவேண்டும்.இ்ராணுவம்தான் மக்களை வரவேற்றது. :lol:

அண்ண்னை சும்மா சொல்ல கூடாது..

புலிகள் சொன்னார்கள் என்றதுக்காவே ஒரு இரவில் யாழை விட்டு வெளியேறினார்கள்..

வடமராச்சி தென்மராச்சியில் மக்கள் இடம் பெயர்ந்து நின்றார்கள் எப்படியும் யாழ்ப்பாணம் மீட்டு விடுவார்கள் என்று ஆனால் கடைசியில் தென்பராச்சி பக்கத்தால ஆர்மி வர தொடங்க சனத்துக்கு போறதுக்கும் வழி இல்லை 96 ஏப்பிரல் வரை காவல் இருந்த சனத்தை அப்பவே வன்னிக்கு போக சொல்லி இருந்தால் வடமராச்சி தென்மராச்சி ச்அனமும் இலகுவில் போய் இருக்கும் ஆனால் கடைசியில் கிளாலி போட்டும் ஓடவில்லை ஒடுறதுக்கு ஆக்களும் இல்லை( யாழ்ப்பான வர்த்தகர்களின் சில சமான்கள் தான் யாரும் இலலாத அனாதைகள் போக கரையில் இருந்தன( 2000 3000 சையிக்கில் , பிஸ்கேட் பெட்டிகள்)... இபப்டி வழி இலலமல் தான் சாவகச்சேரியில் முதல் முதலாக குறிப்பிட்ட சில மக்கள் இராணுவ கட்டுப்பாட்டட நோக்கி போக வேண்டி வந்த்து மற்றும் படி இராணுவத்தின் மீது காதலால் இல்லை...........

உண்மை தான் சசி ! உண்மையிலே அந்த நேரத்தில் வலழகாமத்தை விட்டு ஓரு இரவில் கடும் மழைக்குள் எவ்வாறு புலிகளை நம்பி மக்கள வெளியேறினார்களோ அதோபோல தென்மராட்சியில் வடமராட்சியில் இருந்து வெளியேறி இருப்பார்கள் ஆனால் தரைத் தொடர்பு எதுவும் அற்ற நிலையில் அது நடைபெறாது விட்டது ஆனாலும் சில பேரிற்கு இவற்றின் உண்மைகள் புரிவது அல்லது புரிய மறுப்பது புரியவி;ல்லை ஆனாலும் அவர்கள் மக்கள் இராணுவக் கட்டுப்பாட்;குள் வந்த பின்பும் புலிகளிற்கு உதவி போராளிகளை அணைத்து காத்தார்கள் என்பதை இலகுவாகவே மறந்து விடுகின்றனர்.

இது கொஞ்சம் மாறி வரவேண்டும்.இ்ராணுவம்தான் மக்களை வரவேற்றது. :lol:
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.