Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

அம்மா அம்மா எந்தன் ஆருயிரே ....


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

அம்மா அம்மா எந்தன் ஆருயிரே நீயும் நானும் என்றும் ஓர் உயிராக

பத்து மாத பந்தத்தில் இனத்தோடு ஆறாவதாய் ,பெற்ற இந்த உயிர்

அரக்கரின் நுழைவால் சிதறியோடி அடைக்கலம் புகுந்த கோவில்

உனக்கு எயமனின் பாச கயிறுஎனும் செல் விழும் இடம் என்று அறிந்திலேன் .

உன் கடை குட்டியுடன் நீயும் என் குஞ்சுகளுடன் நானும் சிதறியோடிய

அந்த நாள் பசி, பட்டினி ,யுடன் நான் இருந்தாலும் ,என் குஞ்சுக்கு

மாப்பால் பருக்க கெஞ்சி நான் சுடு நீர் வைத்து பால் கொடுக்க ,

பிஞ்சு என் முகம் பார்த்து முறைத்து ,அடம் பிடிக்க ,

அம்மம்மாவின் கோமதியின் பசுப்பாலுக்கு ஏங்க ....நான் பட்ட துய்ர்கொஞ்சமா ?

ஓடியும் நடந்தும் . பதுங்கியும் நானும் என் குஞ்சுகளும் ,என் மாமா மாமியும்

தள்ளாத அவர் வயதில் தடுமாறி நின்றதும் ,என்னவன் புலம் பெயர்வில் ,

உயிர் போக உண்ணா நோன்பு இருந்தும் ,என் துணையும் ,பெற்றாரும்

என்ன கதியோ என்று ,ஏங்கியதும் .இன்று போல் இருக்கிறது..... பறந்தது

இரு பத்து வருடங்கள் . இறந்த செய்தி கூட ஏழு நாள் பின் தான்

உன் பெட்டியிலும் முழிக்க வில்லை ,என் சொட்டு கண்ணீரும் உன் உடலில் படவில்லை

மேலுலகம் போய்விட்டாய் ,மண் கொண்டு போனாலும் மலர் கொண்டு வருவேன்

என் தமிழ் ஈழ மண்ணுக்கு ............... மீதி எழுத முடியவில்லை ........

(..என் தாய் இறந்த தினம் 24 ஆவணி ..)...

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

உங்களின் அம்மாவின் நினைவுகளை பகிர்ந்த்து ஆறுதல் அடையும் அக்கா நிலாமதி

உங்கள் அம்மாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திகிறேன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • டோக்யோ ஒலிம்பிக்: ஸ்கேட்போர்டிங்கில் தங்கப் பதக்கம் வென்ற 13 வயது வீராங்கனை   பட மூலாதாரம்,GETTY IMAGES   படக்குறிப்பு, மோம்ஜி நிஷியா டோக்யோ ஒலிம்பிக் போட்டியில் முதன்முறையாக பெண்கள் ஸ்ட்ரீட் ஸ்கேட்போர்டிங்கில் ( Street Skateboarding) தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் ஜப்பானின் மோம்ஜி நிஷியா. "நான் வெற்றி பெறுவேன் என்று எதிர்பாக்கவில்லை. ஆனால் என்னை சுற்றியிருந்தவர்கள் எனக்கு உற்சாகமூட்டினர். நான் வெற்றி பெற்றதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி" என்கிறார் அந்த 13 வயது வீராங்கனை. ஸ்கேட்போர்டிங் இந்த ஒலிம்பிக் போட்டியில்தான் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவேதான் ஒலிம்பிக் வரலாற்றின் முக்கிய பக்கங்களில் இடம்பெறுகிறார் நிஷியா. "ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெறுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் இளம் வீராங்கனை என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி" என்கிறார் நிஷியா.     இந்த போட்டியில் 13 வயது பிரேசில் வீராங்கனை ரேய்சா லீல் வெள்ளிப் பதக்கமும், ஜப்பானின் 16 வயது ஃபனா நகாயாமா வெண்கலப் பதக்கமும் வென்றனர். பட மூலாதாரம்,EZRA SHAW / GETTY IMAGES   படக்குறிப்பு, ரேய்சா லீல் -நிஷியா- ஃபனா நகாயாமா எதிர்காலத்தின் நிகழ்காலம் இதற்கு முன்பு ஒலிம்பிக் போட்டியில் குறைந்த வயதில் பதக்கம் வென்றவர் என்ற பெருமை மர்ஜோரி ஜெஸ்ட்ரிங்கிடம் இருந்தது. ஸ்பிரிங்போர்ட் விளையாட்டிற்காக 1936ஆம் ஆண்டு பெர்லினில் நடைபெற்ற போட்டியில் பதக்கம் வென்ற இவருக்கு வயது 13 வருடம் 267 நாட்கள் அதாவது நிஷியாவை காட்டிலும் 63 தினங்கள் இளையவர். ஆண்களுக்கான ஸ்ட்ரீட் ஸ்கேட்போர்டிங்கில் ஜப்பானை சேர்ந்த 22 வயது யூடூ ஹோரிகோம் தங்கப் பதக்கம் வென்றார். தனது அண்ணனால் இந்த விளையாட்டுக்கு கவர்ந்திழுக்கப்பட்ட போது நிஷியாவுக்கு வயது ஐந்து. வெள்ளிப் பதக்கம் வென்ற 13 வயது ரேசா லீலும் சளைத்தவர் அல்ல. "இது எனது கனவு. எனது தந்தையின் கனவு என்பதை நான் உணர்ந்தேன்" என்றார் அவர். பெண்களால் ஸ்கேட்போர்டிங்கில் ஈடுபட முடியாது என்று கூறுபவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு பதலளித்த ரேய்சா, "விளையாட்டை பொறுத்தவரை ஆண் பெண் என்ற பேதம் இருக்ககூடாது. ஸ்கேட்போர்டிங் என்பது அனைவருக்குமானது" என்றார். ஒலிம்பிக்கில் சாதனை படைக்கவிருக்கும் பிற இளம் வீரர்கள் ஜெஸ்ட்ரிங்கின் சாதனையை இதே ஒலிம்பிக் போட்டியில் முறியடிக்க மேலும் ஒரு சந்தர்ப்பம் உள்ளது. ஆம்.. பார்க் ஸ்கேட் போர்டிங்கில் பிரிட்டனை சேர்ந்த ஸ்கை ப்ரவுன் பங்கு பெறுகிறார். இந்த போட்டி ஆகஸ்டு 4ஆம் தேதி நடைபெறும். இவருக்கு வயது 13 வருடம் 28 நாட்கள். ஜப்பானின் கோகோனா ஹிராகி இதே போட்டியில் பங்கேற்கவுள்ளார். இவருக்கு வயது 12 வருடம் 343 நாட்கள். இவர் இந்த ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் இரண்டாவது இளம் வீராங்கனை ஆவார். பட மூலாதாரம்,STEPH CHAMBERS / GETTY IMAGES   படக்குறிப்பு, சிரியாவின் வீராங்கனை ஹென் சா இருக்கும் வீரர்களில் குறைந்த வயது சிரியாவை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீராங்கனை ஹென் சாசாவுக்கு. இவருக்கு 12 வயது. இவர் ஆஸ்டிரியாவை சேர்ந்த லியூ ஜியாவிடம் சனிக்கிழமையன்று நடைபெற்ற போட்டியில் தோல்வியுற்றார். இவர்களை அடுத்து பிரிட்டனை சேர்ந்த இரண்டையர் ஜிம்நாஸ்டிக் வீராங்கனைகள் ஜேசிகா மற்றும் ஜெனிஃபர் காடிரோவுக்கு 16 வயது. சீனாவை சேர்ந்த 14 வயது குவாங் ஹாங் சான் 10மீட்டர் டைவிங் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். கனடாவை சேர்ந்த 14 வயது மெக்இன்டோஷ் 400மீட்டர் ஸ்ஃப்ரீ ஸ்டைல் போட்டியில் கனடா நீச்சல் வரலாற்றில் ஒரு புதிய சாதனையை படைத்தார். அமெரிக்காவை சேர்ந்த 15 வயது நீச்சல் கேட்டி க்ரிம்ஸும் களத்தில் உள்ளார். https://www.bbc.com/tamil/sport-57974249
  • யாரையோ குறிவைத்து வீசுவதுபோல் தெரிகிறதே,  தங்களைத்தானோ?
  • வந்தேன்,வந்தேன்,பள்ளிக்கூடத்தில் வகுப்பாசிரியர் பெயரை வாசிக்கும் பொழுது இப்படித்தான் சொல்லுவோம்.
  • வருமான வரித்துறையும் தன் பங்குக்கு விசாரணையை தொடங்கினால் எல்லாம் தானாய் வெளிவந்திடப் போகுது. ஆனால் இது பலரையும் பாதிக்கும் என்பதால் எதிர்ப்பு கிளம்பும்.   
  • கொரோனா பதட்டம், சம்பந்தப்பட்ட இருவரின் யோசிக்கும் தன்மையை பாதித்து விட்டது. சரியான திட்டமிடல் இல்லாமல் செய்யும் வேலை எதுவும் இப்படித்தான் முடியும். வேலை ஆரம்பிப்பதற்கு முன் ஒவ்வொருவரின் வேலை பொறுப்பு பற்றி கலந்துரையாடி, ஒவ்வொருவரும் தமக்குரிய வழிநடத்தல் முறையை பின்பற்றியிருந்தால் இப்படியான அனாவசிய தவறுகளை தடுக்கலாம்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.