Jump to content

நினைவு இருக்கிறதா ?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு இருக்கிறதா ?

உனக்காக ஒருத்தி ,காத்திருந்தாள் , உனக்கு எழுதிய கடிதம் ,உன் அசட்டையினால்

பாடசாலை அதிபரிடம் பிடிபட்டு ,அசம்ப்ளியியில் தலை கவிழ்ந்து நின்றது ,

பஸ் வண்டியால் இறங்கி நீ மழையில் நனைவாய் என்று குடையுடன் காத்திருந்தது ,

உன்னை ஒரு நாள் காணவிட்டால் தோழி மூலம் கடிதம் சேர்ப்பது . நீ பந்து விளையாடிய

போது ,தோழியருடன் உனக்காக கர கோசம் செய்தது ,பாட சாலை இல்ல விளையாடில்

,உனக்காக நண்பிகளுடன் தோரணம் செய்து தந்தது. காலிலே காயம் பட்ட போது

என் துப்பட்டாவில் ,கிழித்து தந்தது . ரசாயயான கூடத்தில் பதிவை தவற விட்டு

,மறுநாள் நீ தேடிய போது ,இரு நாள் தேட விட்டு ,மறு நாள் நான் தந்தது .

ன் லேடி பைக் காற்று போனதும் ,அதை நான் உருட்ட கூடாதென்று

நீ வாங்கி சென்று காற்றடித்து தந்ததும் . நீ புலம் பெயர போவதை எண்ணி

நான் கலங்க ,உறுதி தந்து சென்றதும் .......,பல பிரச்சனை களுக்கு மத்தியிலும்

,உன்னிடம் நான் வந்ததும் , திருமண விழாவில் உன் புலத்து நண்பர்களிடம்

,சொல்லி எனை ,முகம் சிவக்க வைத்ததும் ....உனக்காக நானும் எனக்காக நீயும்

,நமக்காக என்று ஆனதும் என் பிள்ளைகள் ,படிபிற்காக தூர தேசம் சென்ற பின் ..

.......நினைத்து பார்கிறேன்

என் நெஞ்சம் இனிக்கிறது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு இருக்கிறதா ?

உனக்காக ஒருத்தி ,காத்திருந்தாள் , உனக்கு எழுதிய கடிதம் ,உன் அசட்டையினால்

பாடசாலை அதிபரிடம் பிடிபட்டு ,அசம்ப்ளியியில் தலை கவிழ்ந்து நின்றது ,

பஸ் வண்டியால் இறங்கி நீ மழையில் நனைவாய் என்று குடையுடன் காத்திருந்தது ,

உன்னை ஒரு நாள் காணவிட்டால் தோழி மூலம் கடிதம் சேர்ப்பது . நீ பந்து விளையாடிய

போது ,தோழியருடன் உனக்காக கர கோசம் செய்தது ,பாட சாலை இல்ல விளையாடில்

,உனக்காக நண்பிகளுடன் தோரணம் செய்து தந்தது. காலிலே காயம் பட்ட போது

என் துப்பட்டாவில் ,கிழித்து தந்தது . ரசாயயான கூடத்தில் பதிவை தவற விட்டு

என் நெஞ்சம் இனிக்கிறது .

உங்கள் அழகான நினைவுகளை ,பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவம் அழகு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனியவள் , புத்தன் ,இருவருக்கும் என் நினைவுகளில் சங்கமித்து கருத்து பகிர்வுக்கு நன்றி . .

Link to comment
Share on other sites

காதலில் வெற்றி பெற்று வாழும் வாழ்கை இருக்குதே நினைதாலே இனிக்கும்

ஆனால்

அந்த காதல் தோல்வி அடையுமானால் அந்த நினைவுகள் ஏதோ ஒரு வகையில் உறுத்தி கொண்டிருக்கும் நெஞ்சை

நன்றி நிலா மதி அக்கா

Link to comment
Share on other sites

நினைவு இருக்கிறதா..தா..??...என கவி வடித்து என் நினைவுகளை கூட..ட கண் முன் கொண்டு வந்த நிலா(மதி) அக்காவிற்கு வாழ்த்துக்கள்..ள்.. <_<

நினைவுகளை நினைத்து பார்க்கையில் இனிக்கும்..மு அநுபவிக்கையில் கசக்கும் என்ன..ன நிலாமதி அக்கா..கா.. :lol:

அப்ப நான் வரட்டா!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பண்டைய தென்ஈழத்தில், (இலங்கை) இருந்த மகா நாககுல இராச்சியத்தில் சிவவழிபாடு! பண்டைய தென்னிலங்கையில் இருந்த மகா நாககுல இராச்சியத் தின் சுவடுகளைத் தேடிச் சென்றேன். 2300 வருடங்களுக்கு முன்பு மகாநாகன் எனும் நாகமன்னன் அமைத்த இரு இராச்சியங்களில் ஒன்றே மகாநாககுல எனும் இராச்சியமாகும்.   பராக்கிரமபாகுவின், தமிழ்த் தளபதியான... ரக்கா கங்குகநாதன் என்பவன் 1000 ஆண்டுகளுக்கு முன்பு சுகலா எனும் அரசியிடம் இருந்து இந்த இராச்சியத்தைக் கைப்பற்றி சிலகாலம் ஆட்சி செய்து வந்தான் எனும் குறிப்பும் உள்ளது. எனவே பிற்காலத்தில் இது ரக்கா நுவர (ரக்கா நகரம் ) எனப் பெயர் பெற்றது. அதுவே பின்பு ரம்பா நுவர எனத் திரிபடைந்தது.   அம்பாந்தோட்டை நகரின் வடக்கில்... 12 கி.மீ தூரத்தில் இந்த இராச்சியத்தின் இடிபாடுகள் காணப்படுகின்றன. வன நதி எனும் வளவ கங்கை. கொஸ்வத்து ஆறு ஆகியவற்றால் சூழப்பட்ட ஓர் தீவின் நடுவில் 250 ஏக்கர் பரப்பளவில் இந்த பண்டைய நகரம் அமைந்து ள்ளது.   இங்குள்ள பௌத்த விகாரையின் பின்பக்கம் இருக்கும் காட்டுப் பகுதியில் இதன் இடிபாடுகள் அதிகளவில் காணப்படுகின்றன.   நாகவழிபாட்டில் ஈடுபாடு கொண்ட மகாநாக மன்னனின் நகரில் நாக வழிபாட்டின் சுவடுகளைத் தேடிச் சென்றேன். அப்படிப்பட்ட சுவடுகள் எதுவும் அங்கு கிடைக்கவில்லை. ஆனால் அது சிவபூமி யாக இருந்தது.   இங்கிருந்த காட்டுப்பகுதியில் இருந்த இடிபாடுகளின் மத்தியில்.. மொத்தமாக 7 சிவலிங்கங்களைக் கண்டேன். மிகப்பழமையான சிதைந்த லிங்கங்கள் மூன்று. பழமை வாய்ந்த தாரா லிங்கங்கள் மூன்று. பழமையான நாகலிங்கம் ஒன்று. பழமையான ஆவுடையார் ஒன்று. இவை எல்லாமே 1500 வருடங்களுக்கு முற்பட்டவை.   3000 ஆண்டுகளுக்கு முன்பு திருமூலர் குறிப்பிட்ட சிவபூமியின் பண்டைய சுவடுகள்... தென்னிலங்கையில் தான் உள்ளன. ஆம். இதுதான் சிவபூமி.   என்.கே.எஸ்.திருச்செல்வம் வரலாற்று ஆய்வாளர் ஈழம்(இலங்கை)   அம்பாந்தோட்டை இலங்கையின் தென் மாகாணத்தின்... அம்பாந்தோட்டை மாவட்டத்தில் இலங்கையின் தெற்கு கரையோரம் அமைந்துள்ள... நகரசபை ஆகும். இது அம்பாந்தோட்டை மாவட்டத்தின் தலைநகரமுமாகும்.   புவியியலும் காலநிலையும் அம்பாந்தோட்டை கரையோரச் சமவெளி என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 0-15 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 27 பாகை செல்சியஸ் ஆகும். இலங்கையின் இரண்டு பருவபெயர்ச்சிக் காற்றுகளிலும் மழைவீழ்ச்சியைப்  பெறாத அம்பாந்தோட்டை குறைவரல் வலயத்தில் அமைந்துள்ளது.  1950 மி.மீ.   வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியைப் பெறுகின்றது.   மக்கள் இது சிங்களவர்களை பெரும்பான்மையாக கொண்ட ஒரு நகரசபை ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பானமையினர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராவர். 2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டின் மக்களின அடிப்படையிலான மொத்த மக்கள் தொகையில், மொத்தம்-46777 இதில், சிங்களவர்-37839 தமிழர்-805 இந்திய வம்சாவழி-54 இஸ்லாமியர்-2830 பரங்கியர்-52   2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில் மத அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் வருமாறு: மொத்தம்-46777 இதில், பௌத்தர் -37769 சைவம்-590 இஸ்லாம்-8092 கத்தோலிக்கம்-169 ஏனைய கிறிஸாதவம்-141 ஏனையவர்-16   இதிலிருந்து இந்த அம்பாந்தோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்... தமிழர்கள், காலம் காலமாக சைவ சமயத்தோடு பாரம்பரியமாக வாழ்ந்த பகுதிகள், இன்று கை நழுவி... சிங்கள பௌத்த குடியேற்றங்கள் மூலம், சிங்களவர் தேசமாக போன பரிதாபம்.   https://m.facebook.com/story.php?story_fbid=424281546189401&id=100058226779513 https://www.facebook.com/110874614371759/posts/445613364231214/ வேரடி தேடுவோம்.
    • 50 நாளில்... 74 வருட அரசியலின், முகமூடியை கழட்டிய,  காலிமுகத்திடல் போராட்டம்.
    • தேசபந்து தென்னகோனின்... தொலைபேசி இதுவரை, கைப்பற்றப்படவில்லை: சாட்சியங்கள் அனைத்தையும் அழிக்க கால அவகாசம்? சட்டமா அதிபர் பணிப்புரை வழங்கி 5 நாட்கள் கடந்தும் தேசபந்து தென்னகோனின் தொலைபேசியை இதுவரை சி.ஐ.டியினர் கைப்பற்றவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. அவரது தொலைபேசியைக் கைப்பற்றி பகுப்பாய்வை மேற்கொள்ள சட்டமா அதிபர் கடந்த 23 ஆம் திகதி சி.ஐ.டியினருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார். ஆனால் ஐந்து நாட்களாகியும் அவரிடம் இருந்து தொலைபேசியை பெற்றுக்கொள்ள சி.ஐ.டி. எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. ஈஸ்டர் தாக்குதலில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன செய்தது போல் சாட்சியங்களை அழிக்க நேரம் கொடுக்கப்படுகின்றது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. https://athavannews.com/2022/1284258
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.