உங்கள் முதலாவது கருத்தில் மிகத் தெளிவாக எழுதியிருந்தீர்கள்.
சரி அகதிகள் வந்ததால் நாடு பாழாகி விட்டது என்பது சுத்தமான மேற்குலக தீவிர வலதுசாரிக் கருத்து அல்லவா ? அகதியாக வந்த நாம் இன்னொரு அகதியை மேற்குலக நிலையிலிருந்து விமர்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
யாரிடைய தரத்தையும் நாம் தீர்மானிக்க முடியாது. ஏனெனில் நாம் நாடற்றவர்கள். நாடுள்ளவன் தயவு காட்டி அனுமதிக்கும் இடத்தில்.. அவனுக்கு இடைஞ்சல் இல்லாமல் எவன் ஒருவனால்.. அந்த நாட்டின் வளர்ச்சிக்காகப் பங்களிக்க முடியுதோ அவன் சிறந்த குடிமகன்/ள்.. அல்லது குடிவரவாளன்/ள்.
ஆனால்.. நோர்வே உள்ளிட்ட நாடுகளில்.. சொந்த நாட்டு மக்களிடம் வெறுப்பைச் சம்பாதிக்கக் கூடிய அளவில் நடந்து கொள்பவர்களில்.. இந்த கூட்டத்தினர் அதிகம். குறிப்பாக.. ஒரு காலத்தில் நோர்வேயில் போட்ட பொருள் போட்ட இடத்தில் கிடக்கும். இப்ப போடப்படும் பொருள் தங்களுக்கே சொந்தமென்று திருடிச் செல்ல ஆட்கள் இருக்கினம். இது நிச்சமாக எமக்குப் புதிதல்ல. ஆனால்.. நோர்வே வாழ் அதிக மக்களுக்கு புதிது.. மனக்கிலேசமானது. இப்படி இன்னோரென்ன நிகழ்வுகள்.. அவர்களின் மகிழ்ச்சியைக் குறைத்திருக்கலாம்.
எப்பவுமே.. எமது பழக்கம் வழக்கத்திற்கு ஒவ்வாது இருக்க விரும்பும் இன்னொரு வீட்டாரின் வருகையையே அதிகம் சமாளிக்க முடியாத எம் நிலையில் இருந்து.. இந்த குடியேற்றக்காரர்களை அனுமதிக்கும் நாடுகளைப் பார்க்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு நாம் ஆற்றும் கைங்கரியம் விளங்கும். இது தமிழர்கள்.. கறுப்பர்கள்.. அல்பேனியர்கள்.. லுதுவேனியர்கள்.. போலந்துக்காரர்கள்.. ஹிந்தியர்கள்.. பாகிஸ்தானியர்கள்.. சோமாலியர்கள்.. உட்பட எல்லோருக்கும் பொருந்தும்.
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.