Jump to content

ரசமாலை ஒரு வித மாலையோ?


Recommended Posts

அப்படித்தான் முதன் முதல் கேள்விப்பட்ட போது எனக்கு தோன்றியது. உங்களில் எத்தனை பேருக்கு இந்த இனிப்பு பற்றி தெரிந்திருக்கும் என தெரியவில்லை. இது இந்திய இனிப்பு என்பதால் தமிழ்நாட்டு உறவுகள் பலருக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். ஈழத்து உறவுகளுக்கு? இறுதியாக அறிந்து கொண்டது நானாக கூட இருக்கலாம். தற்போதைய பிரச்சனை அது அல்ல. பெயரே சரியாக தெரியாத இனிப்பை நான் செய்தது தான் பெரும் பிரச்சனை.

இந்தியாவில் எந்த ஊரில் இருந்து வந்தது என அறிந்து கொள்ள முயன்ற போது கிடைத்த தகவலையும் செய்முறை எனும் சோதனைக்குள் செல்ல மென்னர் பார்க்கலாம்.

Rasmalai originated somewhere in the coastal parts of the Indian states of Orissa, West Bengal and Bihar.

rasamalai.jpg

இந்த பதிவை எனது நெடுங்கால யாழ் நண்பர், சகோதரர் திரு.கந்தப்பு அவர்களுக்காக சமர்ப்பிக்கின்றேன். இன்று தனது பிறந்த நாளை கொண்டாடும் கந்தப்பு மகிழ்வான வாழ்வை வாழ வாழ்த்துகின்றேன். என்னுடைய எழுத்துக்களை தொடர்ந்து படித்து, பாராட்டி வருவதோடு நிற்காமல், சில நாட்கள் எழுதாமல் இருக்கும் போது என்னை மிரட்டி எழுத வைக்கும் கந்தப்புவிற்காக இந்த ரசமாலை. 3 வருடங்களாக எனது உடாங் சம்பல் பற்றி புகழ்பாடும் கந்தப்பு இனி ரசமாலை புகழும் பாடுவார் என நம்புகின்றேன். கிகிகிகிகி

இனிமேல் சோதனை...அதாவது செய்முறை:

பால் 1 லீட்டர்

சீனி 500 கி

பன்னீர் 250 கி

குங்குமபூ கொஞ்சமாக

பாதாம் பருப்பு சிறிதாக வெட்டியது 3 தே.க

பிஸ்டாஜ்ஸிஜோஸ் சிறிதாக வெட்டியது 3 தே.க

ஏலக்காய் தூள் 1/2 தே.க

1. ஒரு பாத்திரத்தில் 250 கிராம் சீனியையும்,நீரும் சேர்த்து குறைந்த வெப்பத்தில் கொதிக்க வையுங்கள்.

2. இன்னோர் பாத்திரத்தில் பாலையும், மீதியிருக்கும் சீனியையும் கலந்து குறைந்த வெப்பத்தில் கொதிக்க வைக்கவும். பால் கொதித்து அரைவாசி ஆகும் வரை அடுப்பில் இருந்து இறக்க வேண்டாம்.

3. பால் பாதியானதும் அதில் ஏலக்காய் பொடி, வெட்டிய பருப்புகள் மற்றும் குங்குமப்பூ சேர்த்து நன்றாக கலக்கி அடுப்பில் இருந்து இறக்குங்கள்.

4. பன்னீரை எடுத்து சிறு உருண்டைகளாக்கி சற்று அமத்தினால் சரியான வடிவம் கிடைத்துவிடும்.

5. இவ்வுருண்டைகளை கொதித்து கொண்டிருக்கும் சீனியில் போட்டு 10 நிமிடங்களுக்கு அவித்து எடுங்க. அவிக்கும் போது பாத்திரம் மூடியிருக்க வேண்டும்.

6. 10 நிமிடத்தில் பன்னீரை வெளியே எடுத்து வையுங்க. சீனிகரைசல் வடிவதற்கு சிறிது நேரம் குடுங்கள்.

7. ஏற்கனவே கொதிக்க வைத்த பாலில் பன்னீர் உருண்டைகளை போட்டு மேலும் 4-5 நிமிடங்களுக்கு கொதிக்க வையுங்கள்.

8. 4-5 நிமிடங்களின் பின்னர் அடுப்பில் இருந்து இறக்கி, ஆறவிடுங்க. சிலர் சிறிது சூடாக இருக்கும் போது சாப்பிடுவார்களாம். பெரும்பாலானோர் சூடு ஆறியதும் 5 மணித்தியாலங்களுக்கு குளிர்சாதன பெட்டியில் வைத்த பின்னர் சாப்பிடுவார்களாம். எது எப்படியோ கஸ்டபட்டு செய்ததை சாப்பிட்டால் சரி தான்.

குறிப்புகள்:

1. கொதிக்கும் சீனி கலவைக்கு எப்போதும் மதிப்பு குடுங்கள்.

2. சீனிகரைசலில் அவித்த பன்னீரே சுவையாக இருக்கும். வீட்டில் அண்ணன், தம்பி இருந்தால் சற்று கவனமாக இருக்கவும். பாலில் போடா முன்னரே பாதி பன்னீரை நான் இழந்துவிட்டேன்.

3. பால், சீனி என பயங்கரமா இருக்கு. அடிக்கடி செய்து சாப்பிடாதிங்கள்.

-சுவையருவியில்

-தூயாவின்ட சமையல்கட்டில்

Link to comment
Share on other sites

பொன்னையா நன்றிகள்..:D

Link to comment
Share on other sites

நான் சாப்பிடமாட்டேன். புத்தன் அல்லது யமுனா முதலில் சாப்பிட்டுப் பார்த்தபின்பு, அவர்களுக்கு எதுவும் நடக்காது விட்டால் நான் சாப்பிடுவேன்.

Link to comment
Share on other sites

நான் சாப்பிடமாட்டேன். புத்தன் அல்லது யமுனா முதலில் சாப்பிட்டுப் பார்த்தபின்பு, அவர்களுக்கு எதுவும் நடக்காது விட்டால் நான் சாப்பிடுவேன்.

தூயா மனதிற்குள் "ஆகா கந்தப்புவும் உசாராகிட்டாரே"

Link to comment
Share on other sites

உப்பிடி எத்தனை பேரைப் பார்த்திருக்கிறேன்

இத்தனை பேரை பார்த்து எப்படி உடாங் சம்பலுக்கு பலியானீர்கள் கந்தப்பு? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்தனை பேரை பார்த்து எப்படி உடாங் சம்பலுக்கு பலியானீர்கள் கந்தப்பு? :D

அப்பு கண்ணை மூடிக்கொன்று பார்த்திருப்பார் :):D:lol:

Link to comment
Share on other sites

கந்தப்புக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

தூயா, இது ரஸ்மலாய் என்று சொல்லப்படும். உங்களுக்கும் தெரிந்திருக்கும், ஆனால் காலை வாருகிறீர்கள் என்று நினைக்கிறேன்.

பார்த்து இங்க உள்ள தாத்தாக்கள் ரசமாலை வேணும் என்டு கடை கடையா ஏறி இறங்கப்போகினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் ஈஸ் சொல்வது தான் சரி .ஆங்கில் உச்சரிப்பிலும் அது தான்,........ ரஸ் மலாய் ,,,,,,,,,பார்கவே வாய் ஊறுகிறது ....ஆனால் எனக்கு நினைத்தாலும் சாப்பிட முடியாது . சர்க்கரை ......கள்ளமாக ருசி பார்கவா?

Link to comment
Share on other sites

ஆமாம் ஈஸ் சொல்வது தான் சரி .ஆங்கில் உச்சரிப்பிலும் அது தான்,........ ரஸ் மலாய் ,,,,,,,,,பார்கவே வாய் ஊறுகிறது ....ஆனால் எனக்கு நினைத்தாலும் சாப்பிட முடியாது . சர்க்கரை ......கள்ளமாக ருசி பார்கவா?

கள்ளமாவா? எங்களையும் உங்கள் வீட்டில் கண்டிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள் :)

கந்தப்புக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

தூயா, இது ரஸ்மலாய் என்று சொல்லப்படும். உங்களுக்கும் தெரிந்திருக்கும், ஆனால் காலை வாருகிறீர்கள் என்று நினைக்கிறேன்.

பார்த்து இங்க உள்ள தாத்தாக்கள் ரசமாலை வேணும் என்டு கடை கடையா ஏறி இறங்கப்போகினம்.

ம்ம் உண்மை..

இதை ரசமலாய் என்றும் அழைக்கின்றார்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயா செயன்முறைக்கு நன்றிகள் :lol: . இப்ப கொஞ்சநாளா தூயா போடுற சமையல் குறிப்புக்கு எல்லாம் பொன்னையா ஒளிப்பட விளக்கம் போடுறாரே :):wub: நன்றி பொன்னையா :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயா செயன்முறைக்கு நன்றிகள் :o . இப்ப கொஞ்சநாளா தூயா போடுற சமையல் குறிப்புக்கு எல்லாம் பொன்னையா ஒளிப்பட விளக்கம் போடுறாரே <_<:lol: நன்றி பொன்னையா :lol:

பொன்னையா அண்ணையின் கோபத்துக்கு ஆளாகப்போகின்றீர்கள் சுப்பர் :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.